Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்28Points46808Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்11Points9976Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்10Points23926Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்10Points34974Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/26/21 in Posts
-
அன்புள்ள அம்மா....
17 pointsஅன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......17 points
-
பயணம்???
5 pointsஎனது முறை வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம் ஆனால் பயணம் முடியும்வரை எந்த காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள் விமானத்துக்குள் வந்ததும் எனது இருப்பிடத்தை தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கவில்லை காரணம் எனது சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ எவருமில்லை (ஒன்று விட்டு ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.) விமானம் பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும் தருகிறார்கள் எல்லோரும் Mask யை களட்டியதால் நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு மணித்தியாலப்பயணம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கவும் சரியாக இருக்கிறது. அடுத்த பரிசோதனைகளை சந்திக்கணுமே என மனம் சொல்கிறது 14 நாள் உள்ளே போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம் தள்ளுகிறது விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன் வெளியே வரும்வரை எந்த பரிசோதனையும் இல்லை. மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக பார்க்கிறார்) நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது சொல்லை கேட்பதில்லை என பஞ்ச் டயலாக்கை விட்டு விட்டு அம்மாட்ட போ என்கிறேன். நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம் ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல் என்று சொல்லியிருந்தேன்) போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி வருகிறது என்ன மகன் நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே என? இதோ 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றபடி சில நிமிடங்களில் கதவை தட்டுகிறோம். மருமகன் விலத்தி என்னை தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக ஓடிவந்து முத்தம் தந்து வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே இல்லை அதிலும் இன்றைய சூழ்நிலையில் எப்படி சாத்தியம் என ??? குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை திறக்க புறப்படுகிறார். நாங்கள் பேசத்தொடங்குகுின்றோம் ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா? ஆமாக்கா இப்பத்தான் வரணும் சாப்பிட என்ன வேணும் எங்க எங்க போகணும்? இது அக்கா இன்றிலிருந்து நீங்க சமைக்கவேண்டாம் முடிந்தவரை வெளியில் உணவகங்களில் சாப்பிடலாம் மற்றும்படி உங்களுக்கு எங்கெல்லாம் போகணுமோ சொல்லுங்க அங்கெல்லாம் போகலாம் எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ பார்க்கவேண்டிய இடமோ என்று ஏதும் இல்லை என்னை யாரும் பார்க்க விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து என்னை சந்திக்கட்டும். அதன்படி காலையில் எழும்பி தேனீர் காலைச்சாப்பாடு முடிய கால் போனபோக்கில் நடந்தோம் மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம் என்ற படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை) வேறு எவரிடமும் கார் திறப்பு கொடுக்காதவர் நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார். அவருக்கு போக விரும்பிய அவருக்கு பிடித்தவர்கள் வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி வந்திருக்கிறார் தம்பி வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தும் போதே என் அக்காவின் முகத்தில் பேரானந்தத்தை கண்டேன். அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும் உங்களை தேடி வரும் தம்பி. அக்கா தம்பி பாசத்துக்கு எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள். பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா மைதானத்துக்கு வந்து விடுவார் இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம் அப்பொழுதும் நான் களைப்பதை பார்த்தே அவர் இன்றைக்கு காணும் என நிறுத்துவார் இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார் தம்பி நீ சின்னனாக இருக்கும்போது உன்னுடன் விளையாடி இருக்கமாட்டன் அது தான் காலம் எம்மை மீண்டும் ஒன்றாக விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்) விளையாடி முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்) எனக்கும் சில பயிற்சிகள் சொல்லித்தருவார். பொழுது பட வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு இரவிரவாக நித்திரை கொள்ளும்வரை அந்தக்கால கதைகள் உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம் தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ தூங்கி விடுவாய் எனக்கு அந்த தூக்கம் தானே பிரச்சினை என்பார் அது தான் எனது சொத்து அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன் இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி அணைத்து நன்றி தம்பி என்றார் எதுக்கு தம்பிக்கு நன்றி அக்கா என்றேன் இந்த 10 நாட்களும் என்னுள் ஒரு அபாரபலம் இருந்ததை உணர்ந்தேன் என்றார் எனக்கும் போக விருப்பமில்லை அக்கா எங்கள் பெற்றோர் இவ்வளவு இடைவெளி விடாது எம்மை பெற்றிருந்தால் நானும் பென்சனில் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம் சொல்கிறது என்னை .இங்கே விமானம் ஏற விடக்கூடாது. ஒரு மாதம் யாரும் எங்கேயும் நகரமுடியாது என்று என்னை திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து அக்காவுடன் நிற்கணும் என. காரில் போய்க்கொண்டிருக்கும்போது மருமகன் கேட்கிறான் இன்றைய சூழ்நிலையில் இங்க வரப்போகும் முடிவு பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள் ஆனாலும் வந்திருக்கிறீர்கள் இந்த முடிவை நீங்க எடுப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்குமென்று எனது உள் மனசு சொல்லுது மாமா தெரிஞ்சு கொள்ளலாமா என்று கேட்டான் கோவிட் 19 தொடங்கி அது மெல்ல மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது தனிமை அக்காவை வாட்டி இருக்கணும் ஒரு நாள் தொலைபேசியில் சொன்னார் தம்பி இதென்ன வாழ்க்கை செத்திடலாம் போலிருக்கடா என்று. அன்றைக்கு ரிக்கற் போட்டேன் ஏனெனில் செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அதற்காகத்தான் வந்தேன் என்றேன் அவனது கண்கள் கலங்கியிருந்தன. விமான நிலையத்தில் எந்த பிரச்சினையுமில்லை. பயணம் தொடர்கிறது....5 points
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்3 points
-
அன்புள்ள அம்மா....
3 pointsமனைவி மீது அளவில்லாத பாசம்.. பிள்ளைகள் மீது அதை விட பாசம்... பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்... ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.3 points
-
பயணம்???
2 pointsபுரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்2 points
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
2 points2 points
- பயணம்???
2 pointsவயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும். தம்பி ஜாக்கிரதை.2 points- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣1 point- யாழ் எனும் கைத்தடி..
1 pointஅன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.1 point- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄1 point- அன்புள்ள அம்மா....
1 pointதான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்... தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய் உள்ளம். பெற்ற பிள்ளை எந்த வயதாகினும் "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என அம்மா சொல்லுவார்.1 point- அன்புள்ள அம்மா....
1 pointநாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும். நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣1 point- அன்புள்ள அம்மா....
1 pointநல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்1 point- பயணம்???
1 pointஇங்கே கண பேர் உறவுகள் உயிரோடு இருக்கும் போது கணக்கெடுப்பதில்லை ....இறந்த பின் ஓலமிட்டு செத்த வீட்டை பெரிசாய் செய்வீனம் ...தொடருங்கள் விசுகு அண்ணா1 point- யாழ் எனும் கைத்தடி..
1 pointசத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா. பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது. கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே. மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.1 point- பயணம்???
1 pointவிசுகர் Busy Man ஆனாலும் இந்த கொரோனா காலத்தில போய் சொந்தத்தை வளைர்த்து விட்டிருக்கார் மனுசன் வாழ்த்துக்கள்1 point- யாழ் எனும் கைத்தடி..
1 point- பயணம்???
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- அன்புள்ள அம்மா....
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointஇவர் மிக அருமையாக பனீர் கறி செய்கிறார்.....நீங்களும் செய்து சாப்பிடலாம்......! 👍1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- சுதந்திரம் எம் சுவாசம்.
1 pointஎனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப் பாருங்கள்...! தன்னை யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...! ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து கொண்டேயிருக்கும்...! இறுதி முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!1 point- பயணம்???
1 pointஎமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...! உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..! அடுத்த தலை முறைகளுக்குள் இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..! தொடருங்கள் விசுகர்...!1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு.. வரவேண்டும் நபியே தருணம்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்.... கலைஞனுக்கு கண்டதெல்லாம் கலை...1 point- யாழ் எனும் கைத்தடி..
1 pointநானும் அதை கவனித்தேன் அண்ணா. நான் நினைக்கிறேன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது அல்லது சுயநல அரசியல்களுக்கு முட்டுக்கொடுக்காதிருப்பது இன்றைய உலகில் சபிக்கப்பட்டதாக இருக்கலாம் இருக்கிறது. நமது கொள்கைகளுக்கு வயதாகி விட்டது என்பதை வேறு மாதிரி சொல்ல வந்து அது முடியாததால் வருத்தம் அடைகிறார்கள் போலும்1 point- சுதந்திரம் எம் சுவாசம்.
1 pointஅருமை அண்ணா. நல்லவற்றை விதைப்போம் எம் கண் முன்னே நடந்த வரலாற்றை சொல்லி செல்வோம். அவரவர் தத்தமது புத்திக்கேற்ப எடுத்துக் கொள்ள இது ஒன்றும் புத்தக கதை அல்லவே.1 point- பயணம்???
1 point- யாழ் எனும் கைத்தடி..
1 point- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல. ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர் வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள். சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். முற்றும் கற்பனையும் உண்மையும் சேர்த்து நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு1 point- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀1 point- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே.1 point- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
1 point- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கவிதை அழகு👍, நன்றி பகிர்வுக்கு உதயகுமார். கொரோணா வந்து ஆபிஸில் இருந்து நித்தா கொள்ளும் அமைதி போச்சு😴, வீட்டில் மனைவியின் தொன தொனப்பு தாங்க முடியவில்லை😪1 point- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள் மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாயவிம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம். மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து. நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. தொடரும்1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அண்மையில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. எனக்குப் பிடித்திருந்தது. சுவி அண்ணா ஏற்கனவே இப்பாடலை இணைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.1 point- சுதந்திரம் எம் சுவாசம்.
1 pointவீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.1 point- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு காலத்தில், ஒரு நாளுக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் யாழுக்கு வந்த காலமும் இருந்தது குசா அண்ணா. வீடு வாசலில் எத்தனை திட்டு நையாண்டி எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன். இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அத்துடன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். இங்கு வந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. அடுத்தது கள உறவுகளின் சுய ஆக்கங்களை தேடி படிப்பேன் ஆனால் அதுவும் குறைந்து விட்டது. ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன். 😁1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point - பயணம்???
Important Information
By using this site, you agree to our Terms of Use.