Leaderboard
-
அக்னியஷ்த்ரா
கருத்துக்கள உறவுகள்12Points1962Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்9Points23926Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46808Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points88014Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/01/21 in all areas
-
இன்னொரு அம்மா
2 pointsமாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..2 points
-
ஆண்டகைக்கு அஞ்சலி.!
2 pointsவண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-2 points
-
பாவத்தின் சம்பளம்
1 pointமீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்1 point
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!1 point
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.1 point
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
சைவப்பிரியர்களுக்கு தனியாகவும், அசைவபிரியர்களுக்கு தக்னியாகவும் மலசல கூடம் கட்டி. சைப்பிரியர்களின் பசளையை பயிர்களுக்கும்,அசைவப்பிரியர்களின் பசலையை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் 🤣1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 point2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2006 ஆடி மாதத்திலிருந்து தனது ராணுவ நண்பர்களுடன் மக்கள் மத்தியில் பகிரங்கமாக உலாவரத் தொடங்கியது கருணா குழு.இக்குழு தனது ஆயுததாரிகளின் பிரசன்னத்தை மட்டக்களப்பு எல்லைகளைத் தாண்டி பொலொன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தைவரை விஸ்த்தரித்தது. அத்துடன் தனது அரசியல்ப் பிரிவு என்று சொல்லிக்கொண்ட தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் எனும் அமைப்பை கிழக்கின் பலவிடங்களிலும் திறக்க ஆரம்பித்தது. ஆனால், இந்த அரசியல் அலுவலகங்களிலிருந்துதான் கருணா குழு கடத்தல்களை நடத்தியிருந்தது. மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கருணா குழுவின் கடத்தல்கள் தலைவிரித்தாடத் தொடங்கிய நாட்களுக்கு சற்று முன்னரே நகரில் தனது அரசியல் அலுவலகத்தினை அது திறந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. திருகோணமலை மாவட்டத்திலும் இதேவகையான யுத்தியையே கருணா குழு கைக்கொண்டது. திருகோணமலை நகர்ப்பகுதியில் கருணாவால் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே நகர்ப்பகுதியில் இருந்து குறைந்தது 20 சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றிருக்கிறது. 2006, புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி செங்கலடியில் , சித்தாண்டி ராணுவ முகாமிற்கு அருகாமையில் கருணாவினால் அரசியல் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அவ் அலுவலகம் திறக்கப்பட்டு நாளிலேயே அப்பகுதியில் 12 சிறுவர்களை கருணா குழு கடத்திச் சென்றிருந்தது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பகுதியில் கருணா குழுவின் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்ட நாட்களிலேயே கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி, ஆவணி புரட்டாதி ஆகிய மாதங்களில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் மட்டக்களப்பு நகரில் உலாவருவதனை உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அவதானித்துள்ளனர். மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தபோது கருணா குழுவினரின் பலமான பிரசன்னத்தை கண்ணுற்றதாகத் தெரிவித்திரிக்கிறார்கள். கருணா குழுவின் பெயர்ப் பலகைகளும், பதாதைகளும் நகர வீதிகளிலும், தெருக்கோடிகளிலும் பரவலாகக் காணப்பட்டதாக இவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். நகரின் பெரும்பாலான ராணுவ மற்றும் பொலீஸ் சோதனைச் சாவடிகளில் ராணுவத்தினருடன் ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்களும் பகிரங்கமாகவே மக்களை சோதனைசெய்வது மற்றும் தடுத்துவைப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் முறையிட்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அரச ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தறுவாயில், இப்பகுதிகளில் கருணா குழு அருகருகே அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளினூடாக சிறுவர்களை ராணுவத்தினரின் அனுமதியின்றிக் கடத்திச் செல்வதென்பது இயலாத காரியம் என்று மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். புரட்டாதி மாதமளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், மாங்கேணி, சந்திவெளி, செங்கலடி, வாழைச்சேனை, மண்முனை (வடக்கு மற்றும் தென்மேற்கு) போரதீவுபற்று, கோரளைப்பற்று ( வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), காத்தான்குடி, ஏறாவூர் நகர்ப்பகுதி, மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பல பகுதிகளில் கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த கிராமங்கள் ராணுவ பொலீஸ் முகாம்களுக்கு மிக அண்மையிலும், ஒவ்வொரு கிராமத்திற்குமிடையிலான வழிநெடுகிலும் ராணுவச் சோதனைச் சாவடிகள் தொடர்ச்சியாக இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கருணா குழுவினரால் சிறுவர்களும் பதின்ம வயதினரும் வீடுகள், வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது வீதிகள் மற்றும் திருமண நிகழ்வுகள் ஆகிய பல இடங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக வாகரைப் பகுதியில் அரச ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உயிரைக் காப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அகதிகளாகக் குடியேறியிருந்த முகாம்களிலிருந்து பல சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றதாக முறைப்பாடுகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் பதியப்பட்டிருந்தன. இவ்வாறு கடத்தப்பட்ட சிறார்களில் பலர் கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் போர் நடவடிக்கைகளில் கருணாவினால் ஈடுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைத் தேடி கரபோல பகுதியில் கருணா அமைத்திருந்த முகாமிற்கு வந்திருந்த அச்சிறுவனின் தந்தை தனது மகன் மோதலில் காயமுற்றுக் கிடப்பதை கண்ணுற்றிருக்கிறார். "அவனது காதும், கால்களும் நெருப்பில் எரிந்து கறுப்பாக இருந்தன. மோதல் ஒன்றின்போது தனக்கருகில் குண்டொன்று வெடித்ததாகவும் தனது நண்பன் தனக்கருகிலேயே இறந்துவிட்டதாகவும் தான் காயப்பட்டதாகவும் அவன் என்னிடம் கூறினான்" என்று அத் தந்தை தெரிவிக்கிறார்.1 point
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointசந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே கந்தன் என்றென்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ? தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கில் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றில் பெருமாளே! கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointநெஞ்சமே நீ விழித்தெழு - 2 வீணையே நீ விழித்தெழு -2 யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம் -2 1. ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே 2. வானமட்டும் உயந்தது தான் அவரது நல்லிரக்கம் மேகமட்டும் உயந்தது தான் அவரது சொல்லுறுதி - எனவே . என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் - 2 பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2) - என்னை... 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாசம் பொங்க அழைக்கின்றேன் பார் (2) உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாறவா (2) - என்னை... 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி ரக்ஷிக்க பிதா என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய் (2) - என்னை... என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 point2006 இல் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிவந்த கருணாவின் பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக தனது துணை ராணுவக் குழுவில் சேர்த்தது தொடர்பான விரிவான தகவல்கள் பாகம் 1 : 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2004 இல் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி ராணுவத்துடன் சேர்ந்துகொண்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பரவலாக பல இடங்களிலும் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கையில் அவரது குழு இறங்கியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நாட்களில் செயற்பட்டுவந்த உள்ளூர் மற்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்துப்படி கருணா குழு மட்டக்களப்புச் சிறுவர்களை பொலொன்னறுவை மாவட்டத்தில் வேலை செய்வதற்கு எங்களுடன் வாருங்கள் என்று பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும், இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் ஒருபோதுமே தமது வீடுகளுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஜூன் மாதமளவில் கருணா குழுவால் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துக் காணப்பட்டதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என்றும், இவர்களுள் 23 சிறுவர்கள் ஒரு நாளில் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ஒருநாளில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்கள் இரு கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இச்சிறுவர்களின் குடும்பங்களை செவ்விகண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். இச்சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தமது பிள்ளைகளை விட்டுவிடுமாறு தாம் கருணா குழு ஆயுததாரிகளைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், அவர்களை இழுத்துச் சென்றுவிட்டதாகவும், பின்னர் கருணாவின் முகாம்களுக்கு தாம் தமது பிள்ளைகளைத் தேடிச் சென்றவேளை தமது பிள்ளைகள் கருணா குழு ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இன்னும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் காலையில் தமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை ராணுவம் 7 சிறார்களை இழுத்துச் சென்று அவர்களது புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வேறு விபரங்களையும் பதிவுசெய்துவிட்டு திருப்பியனுப்பியதாகவும், அதே நாள் இரவுவேளையில் தமது வீடுகளுக்கு வந்த கருணா குழு ஆயுததாரிகள் அப்பிள்ளைகளை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். கருணா குழுவிற்கு சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் இலங்கைராணுவமும் ஈடுபடுகிறதா என்னும் கடுமையான சந்தேகத்தினை இம்மாதிரியான சம்பவங்கள் உருவாக்கிவருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்னொரு கிராமத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெற்றோருடன் பேசியதில் இன்னும் சில தகவல்களை சேகரித்துவைத்திருக்கிறது. அப்பெற்றோரின் கருத்துப்படி தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட நாளில் தமது கிராமத்திற்கு ராணுவத்தினரின் சீருடையில் வந்த 15 கருணா குழு ஆயுததாரிகள் தமது பிள்ளைகளை கிராமத்திலிருக்கும் கடையொன்றின் முன்றலுக்கு இழுத்துச்சென்று சில மணிநேரம் அவர்களை வைத்திருந்து பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கருணா குழு ஆயுததாரிகள்தான் என்று உறுதிபடக் கூறும் பெற்றோர்கள், தாம் தமது பிள்ளைகளைத் தேடி கருணா குழுவின் முகாமிற்குச் சென்றதபோது இதே கடத்தற்காரர்கள் அங்கே நின்றிருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அருகில் நின்ற இராணுவத்தினரை இப்பெற்றோர்கள் வேண்டிக்கொண்டபோதிலும், ராணுவம் அவர்களை அசட்டை செய்து கருணா குழுவுடன் அலவலாவிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லப்பட்ட கருணா குழுவின் சிறுவர்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளையடுத்து ஐநா வின் சிறுவர்களுக்கான அமைப்பு வெளியிட்டிருந்த பொது வேண்டுகோளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த வேண்டுகோளில், "சிறுவர்களைக் கடத்துவதையும், கட்டாய ராணுவப் பயிற்சிக்கும் இழுத்துச்செல்வதையும் கருணா குழு நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் அக்குழு விடுவிக்கவேண்டும் " என்றும் கேட்டிருந்தது. அத்துடன் இக்கடத்தல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிறுவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும் என்றும் அது அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. ஐ நா வின் இந்த அறிக்கை சாதகமான நிலையினை சில நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது. இவ்வறிக்கையினையடுத்து கருணா குழுவின் சிறுவர் கடத்தல்கள் சற்றுக் குறைந்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ஒரு சில வாரங்களிலேயே கருணா குழு மீண்டும் தனது பலவந்த சிறுவர் கடத்தல்களை தீவிரமாக்கியிருந்தது. புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆரம்பித்த மோதல்களை தனது கடத்தல்களுக்குச் சாதகமாகப் பாவித்த கருணா 2006 ஜூலை மாதத்தில பல சிறுவர்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம்வரையான 5 மாத காலத்தில் கருணாகுழுவினரால் குறைந்தது 200 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருணா துணைராணுவக் குழுவிடம் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மர்கள் 48 பேர் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இதுதொடர்பான முறைப்பாடொன்றினைக் கொடுத்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. தமது பிள்ளைகள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை உடனடியாகத் தேடி மீட்டுத்தருமாறும் கோரப்பட்ட இவ்வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. ஐந்து மாதங்களின் பின்னர் கண்துடைப்பிற்காக ராணுவ அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு, இத்தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, "கருணா குழு என்று குறிப்பிட வேண்டாம், இனந்தெரியாத குழு என்று குறிப்பிடுங்கள்" என்று வற்புறுத்தியதாக இத்தாய்மார்கள் தெரிவித்திருக்கின்றனர். தொடரும்1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பாவத்தின் சம்பளம்
1 pointசப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை, அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை. இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது, இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின் மூலையில் முனகல் சத்தம் அதிகமாக கேட்க தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது, "இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில் மயங்கிருவான் " எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர் இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன் வைத்தியரை நோக்கி சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர், அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார், "டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் , ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல" என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர். சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன். நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?" என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று தலையை ஆட்டினர், சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான் அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும் அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர் 1962, இலங்கை கிழக்கு மாகாணம் வில் ......காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள் தங்களது முழு இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார், அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது. (தொடரும் )1 point- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
எதையும் சரியாக கணக்கிட முடியாது ... இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள். இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "நான் இந்த நாட்டில், சாதாரண கல்வித்தரத்தினைக் கொண்ட சாதாரண குடிமகன்.என்னைப்பொறுத்தவரை இந்த நாட்டின் சமூகவியல், சமூக விழுமியங்கள் தொடர்பாக தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை, குறிப்பாக இந்த நாட்டின் நீதித்துறை பற்றி மிகவும் குழப்பகரமான பார்வையே எனக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சார விடுதிகளில் தொழில்புரியும் பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைதுசெய்து இழுத்துச் செல்லும் பொலீஸார் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதள்ளி, அப்பாவிகளை வலிந்து கடத்திச் சென்று காணாமலாக்கிய ஆயுததாரியான கருணாவை கைதுசெய்யாது, அவரைப் பாதுகாத்து, கெளரவப்படுத்தி அன்புடன் "சேர்" என்று அழைக்கக் காரணமென்ன? " "இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கெதிராக கொடுமைகளை நிகழ்த்திவரும் சட்டத்திற்கும் மேலான அரச ராணுவத்தை ஒருவர் நீதியின் முன்னால் நிறுத்துவதென்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. போர் வெற்றி நாயகர்களாக அலங்கரிக்கப்பட்டு, கடவுள்களுக்குச் சமமாக பூசிக்கப்படும் இந்த வெற்றி நாயகர்கள் தமிழினத்திற்கெதிராகச் செய்த அக்கிரமங்கள் எல்லாம் "விடுதலைப் புலிகளை அழித்தல் எனும் முக்கிய நோக்கத்திற்காக" பெரும்பான்மையினச் சிங்களவர்களால் "அவசியமான நடவடிக்கைகள் தான்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது". "கடந்த காலங்களில் இந்தக் கருணா அம்மாண் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு நிகராக சிங்களவர்களையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றுவரை சிங்களத் தலைமைகள் இவருக்கெதிராக நடவடிக்கை எதனையும் எடுக்க விரும்பவில்லையே, அது ஏன்? கருணாவுக்கெதிராகக் எடுக்கும் நடவடிக்கைகள் சங்கிலித் தொடர்போல மீண்டும் தமது காலடியிலேயே வந்து நிற்கும் என்கிற பயம் இருக்கிறதா அவர்களுக்கு ? இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள ராணுவ வீரர்கள் கடவுள்களுக்குச் சமமானவர்கள் என்றால் கருணா அம்மாண் கடவுளுக்கும் மேலானவர் என்பதுதானே?" "மைத்திரி ரணில் நல்லிணக்க அரசாங்கத்தில்க்கூட இந்த நிலைமை மாறும் என்று நான் நம்பவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன, இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இலங்கையின் மக்களுக்கெதிராக மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. இத்தனை தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் பின்னரும்கூட தான் கொடுத்த நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது". "இந்த அக்கிரமங்களைச் செய்தது யாரென்று எங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எமக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நாம் பாசாங்குசெய்துகொண்டு ஏதோவொருநாள் விசாரணைகள் நடைபெறும் என்று எங்களை நாங்களே எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறோம்? இன்றுவரை காணாமல்ப்போன தமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பித் தவமிருக்கும் அந்த அப்பாவித் தாய்மார்களையா? அல்லது மனிதவுரிமைகளுக்காக வேலைசெய்வதாகக் கூறும் அமைப்புக்களையா? அல்லது எமது குடும்பத்தில் எவருக்கு இந்த அக்கிரமங்கள் நிகழும்வரை எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடும் மனோநிலைக்கு வந்துவிட்டோமா? "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எமது சக இன மக்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை புரிந்து, கடத்திச்சென்று காணாமலாக்கிய ஒரு இரத்தவெறிபிடித்த கயவனை இன்னும் "சேர், ஐய்யா" என்று அழைத்து மகிழப்போகிறோம்?" ஆங்கில மூலம் : வி. கந்தைய்யா1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை?1 point- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
சிறி அந்த இடத்தில் நல்ல தென்னம்பிள்ளை வைத்துவிட்டால் காய்த்து குலுங்கும். பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து பொறாமைப்படுவான்.1 point- பாவத்தின் சம்பளம்
1 pointகாலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை , கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும் பொறுப்பான சபை முதல்வரிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம் சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார், 1962, ஏப்ரல் 26 மதியம் 1 மணி சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர், வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம் அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார். சிறிது நேரத்தில் இதயத்தை கையால் பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின் தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர் அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் எல்லோரும் இரவு 7:00 மணிக்கே பாடசாலைக்குள் ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர். நேரம் 11:45 இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான் ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு புதர்களின் பின் மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது. நேரம் 12:40 நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர் நேரம் 1:05 மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான் ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும் அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது. "டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்" "உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள் ரெண்டுபேரும் வந்தம் " "டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?" "விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் " அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம் அந்த கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன் அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது. டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர் (தொடரும் )1 point- பாவத்தின் சம்பளம்
1 pointஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில் உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும், ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான் மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு ,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது . சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " , ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' இது அவன் :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' ஐடியாமணி : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ" அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது " ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா" இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம் " தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 1952, இலங்கை கிழக்கு மாகாணம் வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார், பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம் நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர் ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுதேசியாக இந்திய சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான் இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும் நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும், பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர், (தொடரும்)1 point- பாவத்தின் சம்பளம்
1 pointசபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார், பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது 2003, கிழக்கு மாகாணம் 'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம் 100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது, முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும் வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான் நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர் திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர் நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும் புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர் நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன (தொடரும் )1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆடி 2017 தமிழர் தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட இனரீதியான சிதைப்பிற்கு எதிராகச் செயற்படும் சமூக ஆர்வலர்களை கொல்லும் ராணுவ புலநாய்வுத்துறையினரும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும், அவர்களைக் காத்து நிற்கும் சிங்கள நீதித்துறையும், காவல்த்துறையும் இலங்கையில் தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளும் போட்டியில், தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கொலையினையும் அவர்களின் தாயகம் மீதான இனரீதியிலான சிதைப்பினையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு வரும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் போக்கினை தனக்குச் சாதகமாக பாவித்துவரும் சிங்கள இனவாத அரசு , தனது கருவிகளான ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், அவர்களினால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுக்களினையும் தமது குற்றங்களிலிருந்து தொடர்ச்சியாகக் காப்பற்றியே வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்ச் சமூகம் தனது தாயகம் சிதைக்கப்படுவதற்கு எதிராக , அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர்களின் தன்னலமற்ற முயற்சியினையே வேண்டிநிற்கின்றது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், அரச ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல்கொடுத்துவரும் தனி நபர்களைத் தனது துணைராணுவக் கொலைக் குழுக்கள் மூலம் முதலில் அச்சுருத்தியும், பின்னர் கொன்றும் தனது தடைகளை அரசு அகற்றி வருகிறது. அழிக்கப்படும் தமது தாயகத்திற்காக உதவியின்றிப் போராடிவரும் ஒரு சில தன்னார்வ சேவையாளர்களைக் கூட கொன்று தமது எஜமான விசுவாசத்தினைக் காட்ட இப்பகுதிகளில் இயங்கிவரும் தமிழ் ராணுவத் துணைக் குழுக்கள் பின்னிற்பதில்லை என்பது தமிழினத்தின் சாபமேயன்றி வேறில்லை. ஆனாலும், தமிழர்களின் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் அரசின் திட்டமிட்ட தாக்குதல்களும் படுகொலைகளும் அரச நீதித்துறையினராலும், காவல்த்துறையினராலும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வருவதும், சர்வதேசத்தில் சிங்கள அரசுக்கான தாராள அனுமதியும் இவ்வாறான படுகொலைகளையும் தாக்குதல்களையும் மேலும் மேலும் தங்குதடையின்றி செயற்படுத்த வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ மனிதவுரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் இதுபற்றிக் கூறுகையில், 2007 ஆம் ஆண்டின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா - பிள்ளையான் கொலைக் குழுக்களாலும், அரச ராணுவப் புலநாய்வுத்துதுறையினராலும், காவல்த்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றி முன்வைக்கப்பட்ட எந்த முறைப்பாடுகள் மீதும் நடவடிக்கைகளைனை எடுப்பதற்கு சிங்கள காவல்த்துறையும், நீதித்துறையும் மறுத்தே வருகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். கேதீஸ்வரன் தேவராஜா 2010, மார்கழி 31 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் துணைராணுவக் கொலைப்படையான டக்கிளஸ் ஆயுதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திற்கு முரணனான மணல் அகழ்வினை வெளிப்படுத்தியமைக்காக டக்கிளஸினால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் கேதீஸ்வரன் தேவராஜா. கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட நாள் 26, வைகாசி 2014 மதிசாயன் சச்சிதானந்தம் , படுகொலை செய்யப்பட்ட நாள் 25, வைகாசி 2015 பொலீஸாரினால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஷன் சுகந்தராஜா மற்றும் கஜன் நடராஜா, கொல்லப்பட்ட நாள் 20, ஐப்பசி 2016 யோகராஜா தினேஷ், கொல்லப்பட்ட நாள் 8, ஆடி 2017 மட்டக்களப்பு மனிதவுரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் தான்னார்வத் தொண்டர்கள் மீதான படுகொலைகளை ஒத்ததாகவே கிழக்கில் அரச ராணுவத் துணைக்குழுக்களால் நடத்தப்படும் படுகொலைகளும் காணப்படுகின்றன என்று கூறுகிறார்கள். 43 வயதுடைய மண்டூர் சமூக நல சேவகர் மதிசாயன் சச்சிதானந்தம் கருணா துணைக் கொலைப்படையினரால் கொல்லப்பட்டு 26 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ள காவல்த்துறை மறுத்து வருகிறது. தனது கிராமமான மண்டூர் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிதிமுறைகேடுகள் மற்றும் கருணாவினால் அமைக்கப்படவிருந்த ஆற்றையன்றிய விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிப் பேசியதால் அவர் கருணா கொலைக்குழுவால் கொல்லப்பட்டார். பொலீஸாரால் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு துணைராணுவக் குழு உறுப்பினர்களும் அப்போது பதவியிலிருந்த துணையமைச்சர் ஒருவரின் அழுத்தத்தினாலும், அவருக்கு ஆளும்வர்க்கத்துடன் இருந்த தொடர்புகளினாலும் விடுவிக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்திருந்தனர். இவ்வாறே 13 மாதங்களுக்கு முன்னர், குடும்பிமலைப் பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்குப் பாதுகாப்பளிக்க அமைக்கப்பட்ட ராணுவ முகாமிலிருது செய்ற்பட்டு வந்த ஐந்து ராணுவத்தினர் மரங்களை வெட்டி தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு விற்றுவருவதை அறிந்து அவர்களை விசாரித்த கிராம சேவகர் சண்முகம் குருவை இழுத்துச்சென்று, கடுமையாகத் தாக்கி வாழைச்சேனை வைத்தியசாலையில் எறிந்துவிட்டுச் சென்ற நிகழ்வும் நடந்திருந்தது. தாக்கப்பட்ட கிராம சேவகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே தனக்கு நடந்த விடயத்தை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய் என்று ராணுவப் புலநாய்வுத்துறையினரால் மிரட்டப்பட்டதும், இவ்வதிகாரிக்கு தகவல் வழங்கிய மாவீரர் குடும்பத்தை கருணா கொலைக்குழு "மீதமிருக்கும் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொவோம்" என்று மிரட்டியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குடா வீதி தளவாயிலும், ஏறாவூர்ப் பகுதி சவுக்கடியிலும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து வெளியாருக்கு விற்கமுயன்ற கொழும்பின் அரசில் துணையமைச்சராகவிருந்த ஒருவரின் முயற்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அமைச்சின் இயக்குநர் விமலராஜ் நேசகுமார் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட ஆயுததாரிகளால் சுடப்பட்டு கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பொலீஸார் இந்த தாக்குதல்பற்றி நடவடிக்கை எதனையும் எடுக்க மறுத்துவருவதாகவும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆளும் வர்க்கத்துடன் இருக்கும் மநெருக்கமே இதற்குக் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவை தமிழர் தாயகத்தில் தமிழ் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஒரு சில சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. இவைபோன்ற பல சம்பவங்கள் முறையிடப்படாமலேயே விடப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் சாதாரண உடையில் வரும் ஆயுததாரிகள், இலக்கத் தககடற்ற வாகனங்களில் பலரைக் கடத்திச் செல்வதாகவும், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், சட்டத்திற்குப் புறம்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கொல்லப்படுவதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த மனிதவுரிமை மீறல்கள்பற்றிப் பேசினால் குடும்பங்களைக் கொன்றுவிடப்போவதாகவும் பலர் அச்சுருத்துப்பட்டுவருவதாகவும் கூறுகின்றனர். தமிழர் தாயகத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் ராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களின் அக்கிரமங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்தில் நிலவும் நிலைமை உதவிவருவதாகவும், இதன்மூலம் அவர்கள் தமது குற்றங்களிலிருந்து இலகுவாகத் தப்பிவிடுவதாகவும் அந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இதே பாணியிலான வன்முறைகள் யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அரச சார்பு ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், அரசின் செல்வாக்கு இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்க முயலும் அரசும் காவல்த்துறையும், இவ்விசாரணைகளை நாட்டிற்கு வெளியேயான அமைப்பொன்றிடம் கொடுத்த்தன் மூலம், இந்த விசாரணைகளை திசைதிருப்பி மக்களின் மனங்களிலிருந்து அகற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் வசித்துவந்த முன்னாள் தமிழீழக் காவல்த்துறை அதிகாரியான நகுலேஸ்வரன் தனது பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அரச ராணுவத்தாலும், கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலங்கள் தொடர்பாக தொடர்ச்சியாகப் பேசிவந்ததற்காக நகுலேஸ்வரன் 2014 ஆம் ஆண்டு கார்த்திகை 12 அன்று அரச புலநாய்வுத்துறை ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக சிலரை மன்னார் காவல்த்துறை கைதுசெய்தபோதும், அரசின் ஆதரவுடன் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம், சிங்களக் குடியேற்றக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மரக்கடத்தல், மணற்கொள்ளை மற்றும் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் இயங்கிவரும் அரச ஆதரவுடனான துணைராணுவக் குழுக்களுக்கும் பங்கிருக்கின்றதென்று மக்கள் கூறுகின்றனர்.1 point- பாவத்தின் சம்பளம்
1 pointஇருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்1 point- பாவத்தின் சம்பளம்
1 pointவில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )1 point- பாவத்தின் சம்பளம்
1 pointபெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள் இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால் சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை" என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ 12:49 மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர் எங்கள் பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால் பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது, ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார் பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப, அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்)1 point- பாவத்தின் சம்பளம்
1 pointவிழா இனிதே நிறைவுற்ற மகிழ்ச்சியில் இராவுணவு அருந்திக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினரின் நிசப்தத்தை குலைத்தது வில்லியின் குரல். அம்மா நான் துறவியாகலாம் என்று நினைக்கிறேன் எடுத்தவுடனே தடால் என்று விடயத்தை போட்டுடைத்துவிட்டு தன் தாயின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார் வில்லி , சோபியாவிற்கோ வில்லி சொல்லியது தெளிவாக கேட்கவில்லை தெளிவாக கேட்கவில்லை என்பதை விட கேட்டவிடயத்தை ஜீரணிக்க மூளை நேரம் கேட்டுக்கொண்டிருந்தது. விறைத்துப்போய் நிமிர்ந்த சோபியா மீண்டும் கேட்டாள் என்ன சொன்னாய் வில்லி....?, துறவியாகி ஆசியாவிற்கு சொல்லப்போகிறேன் எவ்வித சலனமுமில்லாத முகத்திலிருந்து தெளிவான தீர்க்கமான பதில், சில நிமிடங்களுக்கு முன் மகிழ்ச்சி ததும்ப காட்சியளித்த சோபியாவின் வீடு சில நிமிட இடைவெளிகளில் ஒரு இழவு வீடு போல மாறிவிட்டது,சோபாவில் அழுது வீங்கிய கண்ணுடன் சோபியா அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவளது கையை பிடித்து தனது மடியில் வைத்துக்கொண்டிருந்தாள் அவளது தங்கை ,கையினால் நெற்றியை தாங்கிக்கொண்டு உட்கார்த்திருந்த தங்கையின் கணவர் , இரண்டு கைகளையும் தனது ஜாக்கெட் பைக்குள் விட்டவாறு யன்னல் வழியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த வில்லியை நோக்கி கேட்டார், என்னப்பா சொல்கிறாய் இந்த சொத்து ,ஆஸ்த்தி, அந்தஸ்த்து இவையெல்லாவற்றையும் விட்டு ஒரு துறவியாக போகப்போகிறாயா ...? வில்லியிடமிருந்து ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் வந்தது , ஆம் அப்படியென்றால் இதையெல்லாம் யார்நிர்வாகிப்பது, அம்மா பார்த்துக்கொள்வார் கூடவே நீங்களும் இருக்கிறீர்கள், தம்பி பராயமடைந்ததும் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். வில்லியிடம் பேசிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் தெரியும் அவனது பிடிவாதக்குணம், அவனை மாற்ற முனைவது விழலுக்கிறைத்த நீர், அவன் போக்கிலேயே விட்டுவிடுவது தான் சரி என்ற முடிவிற்கு வந்து சோபியாவையும் தேற்றி சமாதானப்படுத்தினர், உரோமன் கத்தோலிக்க மதத்தில் அதிக பற்றுடைய சோபியாவும் இது கடவுளின் சித்தம் என்று ஒரு கட்டத்தில் தன்னை தானே தேற்றிக்கொண்டாள். அன்றிலிருந்து இரண்டு வாரத்தில் ஹார்லெம் என்னுமிடத்திலிருந்த அன்புச்சகோதரகள் சபையின் குருமடத்திற்கு தனது மூன்று வருட இறையியல் படிப்பிற்கு சென்றுவிட்டார் வில்லி 2003, இலங்கை கிழக்கு மாகாணம் மணடபத்தினுள் நுழைந்த சுலக்சன் கருமமே கண்ணாக தனது படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை ஓரமாக வைத்து விட்டு மேசைகளை இழுத்து ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தான், இவனது கண்ணோ வழமை போலவே அந்த மண்டபம் முழுவதும் கொழுவிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் மீது ஓடிக்கொண்டிருந்தது, பாப்பரசர் முதல் பாடசாலையின் பழைய ஆண்/பெண் அதிபர்கள், ரெக்டர்கள் என்று வரிசை வரிசையாக மூன்று நிரைகளில் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன, அதில் ஒரு புகைப்படம் மட்டும் இவனுக்கு பிடித்த புகைப்படம் முதல் நிரையில் ஐந்தாவதாக இருக்கும், வித்தியாசமானதும் கூட மற்றைய புகைப்படங்களில் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு எடுத்து என்லார்ஜ் பண்ணியதுபோல் நெஞ்சுப்பகுதியுடன் சிரித்துக்கொண்டிருக்க இந்த புகைப்படத்தில் இருப்பவர் மட்டும் முழு தோற்றத்தில் ஒய்யாரமாக ஒரு தூணில் சாய்ந்திருந்து போஸ் கொடுப்பர், அவரது இடது காலிற்கருகில் ஒருகூடைப்பந்தும் இருக்கும் அதுவும் அந்த புகைப்படத்தில் பதிவாகியிருந்தது, அந்த மண்டபத்திற்குள் ஒரு அரைமணி நேரத்தில் சுற்றி இருக்கும் எல்லா புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டு வரும் ஒருவரிடம் இவற்றில் உங்களுக்கு பிடித்தது எதுவென்று கேட்டால் எந்தத்தயக்கமும் இன்றி காட்டும் புகைப்படம் அதுவாகத்தான் இருக்கும், சிறுவயதிலிருந்தே அடிக்கடி அந்தப்புகைப்படத்தை பார்த்து அதனுடன் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது இந்த ஈர்ப்பு ஏற்பட இன்னுமொரு காரணமும் இருந்தது, அது அவனது கல்லூரியின் வெள்ளிவிழா சஞ்சிகையான "தீபம்" மூலம் ஏற்பட்டது. தீபத்தின் மூன்றாவது வெளியீட்டில் இந்த புகைப்படத்தில் நிற்பவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு இளவயது புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது, அதில் அவர் தன் குடும்பத்துடன் நிற்பது, கூடைப்பந்து பயிற்சியளிப்பது , கல்லூரியின் முதலாவது கூடைப்பந்து அணியுடன் நிற்பது மட்டுமல்லாது ஒரு புகைப்படத்தில் வெள்ளை நிற இயந்திரம் ஒன்றை இயக்குவது போலவும் இருந்தது. இப்படி எல்லாவற்றையும் மனதிற்குள் அசைபோட்ட அவன் மீண்டும் அந்த புகைப்படத்தின் கீழுள்ள பெயரை வாசித்துக்கொண்டான்...அந்தப்பெயர் Rev.Bro Wilheim Henricus Eijkman D.S.L Rector 1956-1962 (தொடரும் )1 point- பாவத்தின் சம்பளம்
1 pointடமார் என்று ஒரு ஓசை இருவருக்கும் பின்புறமிருந்து , திடுக்கிட்டு இருவரும் திரும்பிப்பார்க்க பாடசாலை இரவுநேர காவலாளி, பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தின் உடைந்து இற்றுப்போய்விட்ட கதவினை திறக்க முயன்று கீழே விழுந்துவிட்ட கதவினை தூக்க பகீரதப்பிராயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார், சுலக்சனும்,அவனும் உடனே ஓடிப்போய் கைலாகு கொடுத்து தூக்கிவிட காவலாளியோ "தம்பிகள் வழமையாக மேடையில் தானே படுக்கிற நீங்கள், இண்டைக்கு மழை வரும்போல கிடக்கு அதுதான் அதிபர் மணடபத்தை திறந்து விட சொன்னவர் நீங்கள் படிச்சு முடிச்சுட்டு மண்டபத்திற்குள்ளேயே படுங்கோ என்று சொல்லிவிட்டு , தம்பிகள் வழமை போலவே கூடைப்பந்து மைதானம் தாண்டி இரவையில் போகாதீங்கோ கட்டாக்காலி நாய்கள் பின்பக்க வேலியால் உள்ள வரும், இருட்டில் வெருண்டு கடிச்சுப்போடும் எனக்கும் இரண்டு தடவை கடிச்சு இருக்கு அதனால் நான் என்ன சத்தம் கேட்டாலும் அங்காலை போறதில்லை நீங்களும் போகாதீங்கோ" என்று விட்டு தன்னுடைய டோர்ச்விளக்கினை ஒருதடவை சரிசெய்து பார்த்துக்கொண்டார் , நாங்கள் எதுக்கண்ணை அங்காலே போகப்போறம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் வந்தவனுடைய கண் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது 1943, ஆம்ஸ்டர்டாம் 15 நிமிடத்தில் தயாராகிவந்து தாயின் முன் நின்றார் வில்லி, தனது மகனின் மிடுக்கினை பார்த்து சோபியா பெருமிதமடைந்ததுடன் மட்டுமல்லாது இன்று தனது சந்ததியின் முதல் பட்டதாரியை கண்டுகளிக்கப்போகும் சந்தோஷத்துடன் வில்லியின் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பசகிதம் தயாராகி தங்கள் மகிழுந்தில் அமர்ந்தனர் , இன்றுடன் தனதுமகன் தன் குடும்ப பாரத்தை சுமக்க தயாராகிவிடுவான், தகப்பனுடைய வியாபாரத்தையும்,பரம்பரை சொத்துக்களையும் அவன் முகாமைசெய்யும் காலம் நெருங்கிக்கொண்டுவருகிறது என்று பெருமிதத்தில் பூரித்துப்போயிருந்த சோபியாவின் மௌனத்தை வில்லியின் குரல் கலைத்தது, "அம்மா" "ஆம் மகனே " "இன்று உங்களது கனவில் ஒன்றை நிறைவேற்ற போகிறேன் " "எனக்கு தெரியும் நீ ஒரு சிறந்த மகன், பொதுநலம் கொண்டவன்,மற்றவர்களின் கஷ்ட்டம் காண சகியாதவன் உன்னை ஒரு சிறந்த மனிதனாக வளர்த்ததில் என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் " "அம்மா எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும் " "சொல் மகனே உனக்கு என்ன வேண்டும் " "பட்டமளிப்பு விழா முடிந்ததும் கேட்கிறேன்" சோபியா இருந்த பூரிப்பில் அவன் சொன்ன வாக்கியங்களை அவள் உள்வாங்கியதாக தெரியவில்லை (தொடரும் )1 point- பாவத்தின் சம்பளம்
1 pointசைக்கிளை திருப்பிய வில்லிக்கு எந்தவொரு ஆச்சரியமும் தராமல் தனது இருகைகளையும் இடுப்பின் இருபுறமும் குத்தியவாறு முறைத்துக்கொண்டிருந்தார் அவரது தாயார் சீமாட்டி சோபியா (Sophia Eijkman), கணவனை இழந்தபின்னும் தனது பிள்ளைகளை தனியாக நின்று கண்டிப்புடன் கவனமாக வளர்த்த அந்தத்தாயின் நிற்கும் தோரணையே வில்லிக்கு இன்றைக்கு நமக்கு சகட்டுமேனிக்கு அர்ச்சனை ஆரம்பம் தான் என்று சொல்லாமல் சொல்லியது, இது எதனையும் அறியாமல் ஓடிவந்து வில்லியின் மீது ஏறிப்பாய்ந்து தனது நாவினால் அவரது உடலில் வழியும் வியர்வயை துடைத்துக்கொண்டிருந்தது வில்லியின் செல்ல நாய் டியூக். அப்படியே கதவோரத்தில் அண்ணன் வாங்கிக்கட்டப்போவதை வேடிக்கை பார்க்க வில்லியின் தங்கையும் தம்பியும் தயார்நிலையில் இருந்தனர், தாயின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தனது பார்வையை தாழ்த்திக்கொண்டு மெதுவாக நழுவி தாண்டிப்போக நினைத்த வில்லியை தடுத்துநிறுத்தியது தாயின் கை , அவரிடமிருந்து வந்த ஒரே ஒரு கேள்வி இன்று என்ன நாள்...? வில்லியோ எனக்கு தெரியும் அம்மா மன்னித்துவிடுங்கள், தயாரிடமிருந்து வந்த பதில் சரி போ சீக்கிரம் தயாராகு, தலை குனிந்தவாறு வில்லி மாடியேறி தனது அறைக்கு சென்றுவிட அண்ணன் வாங்கிக்கட்டுவான் வேடிக்கை பார்க்கலாம் என்று வந்த வில்லியின் தங்கையும், தம்பியும் ஏமாற்றத்தில் வந்த வழியே திரும்பி அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர் 2003, இலங்கை கிழக்கு மாகாணம் சைக் ...என்ன இதுக்குத்தான் உந்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவை தூக்கினோமோ, படிக்கிறன்,படிக்கிறன் உந்த கோதாரிபுடிச்ச இன்னோர்கானிக்கும் , தொழிற்படும் தாவரமும் முடியுதே இல்ல, இண்டைக்கு எப்படியாவது மிச்சம் இருக்கும் துண்டுகளை சப்பி துப்பி முடிச்சிடனும் ,என்று சைக்கிளை பலமாக மிதிக்கிறான் அவன், எப்படியும் நம்ப கம்பைன் ஸ்டடி அணி இண்டைக்கும் வரும் சேர்ந்து படிச்சு முடித்திடலாம் என்று நினைத்துக்கொண்டு இரண்டாவது மிதி மிதிக்கும் போது தொலைவில் அந்த பரிச்சயமான உருவம், இரவு 7:30 மணிக்கே அடையாளம் காணுமளவு பருத்த உருவம், இந்த உருவத்தை இரவு 12:00 மணிக்கும் அடையாளம் கண்டுவிடலாம், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் இவனோட சைசுக்கு ஆளே இருக்காது என்று மனத்திற்குள் கலாய்த்துவிட்டு தனது உற்ற நண்பன் சுலக்சனை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் அவன், நண்பனும் அவனது பங்கிற்கு படித்துவிட்டு தூங்க தலையணை, படுக்கைவிரிப்புகள் சகிதம் புத்தகங்களையும் சுமந்துகொண்டு இவனை நோக்கி நடந்து வருகிறான். அணியில் இவர்கள் இருவர் மட்டுமல்ல மொத்தமாக ஐவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவு நேரத்தில் அவர்கள் படிக்கும் பாடசாலையில் தங்கியிருந்து படிப்பது வழக்கம், அவ்வாறு தங்கியிருந்து படிக்க பாடசாலை அதிபரும் அனுமதி வழங்கியிருந்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு பாடசாலைக்குள் நுழைந்தனர், மச்சி இண்டைக்கு மத்த பார்ட்டி வருமோ தெரியாது நாம ரெண்டுபேரும் ஆரம்பிப்போம் வா என்று இருவரும் மெதுவாக புத்தகங்களை திறந்து சுலக்சன் பௌதீகவியலை படிக்க ஆரம்பிக்க, இவனோ இரசாயனவியலை திறந்து மெதுவாக பக்கத்தை புரட்டினான்...... அப்போது (தொடரும்)1 point- பாவத்தின் சம்பளம்
1 point1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
0 points - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.