Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38777
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/10/22 in all areas

  1. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  2. நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…! சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!
  3. இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் கடி” என்கிறேன். மகள் நம்பாமல் “எனக்கு ஒன்றும் கடிக்கவில்லையே. உங்களுக்குச் சும்மா நினைப்பு” என்றுவிட்டு படுக்க, நானும் வேறு வழியின்றித் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் பார்த்தால் கால்களில் முதுகில் எல்லாம் தடித்தபடி இருக்க, மூட்டைப் பூச்சிகள்தான் கடித்திருக்கு என்று முடிவெடுத்து மகளுக்குக் காட்ட, “எனது கட்டிலில் ஒன்றும் கடிக்கவில்லை. இன்று நீங்கள் நான் படுத்த கட்டிலில் படுங்கள். நான் உங்கள் கட்டிலில் படுக்கிறேன்” என்று கூற, கடி வாங்கினால்தான் தெரியும் என்று மனதில் நினைத்தாலும் சிலநேரம் மகளுக்கு இளரத்தம். கடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஓடியது. அந்தன்றும் சுற்றிப் பார்த்த களைப்புடன் வந்து கட்டில் மாறிப் படுக்கிறோம். காலையில் அலாம் அடிக்கும் மட்டும் நான் எழும்பவே இல்லை. “என்ன நல்ல நித்திரை போல” என்று மகள் கேட்க, நக்கலாகக் கேட்கிறாளோ என நினைத்து “ஓம் நல்ல நின்மதியான நித்திரை” என்றேன். இரவு முழுதும் “ஒரே மூட்டைக் கடி” என்று அவள் சொல்ல எனக்குள் மகிழ்ச்சியில் விளக்குகள் எரிகின்றன. காலையில் வரவேற்புப் பெண்ணிடம் சென்று முறையிட்டு வேறு அறை வேண்டும் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடமே அதேபோன்ற வேறு அறை ஒன்றும் தந்துவிட்டார்கள். அதன்பின் மூட்டை கடிக்காவிட்டாலும் எங்கள் உடைகள், பயணப் பொதிகளுடன் மூட்டையும் வந்துவிடுமோ என்னும் பயம் எனக்கு இருந்துகொண்டே வந்ததில் லண்டன் திரும்பிய பிறகு எல்லா ஆடைகளையும் துவைத்துக் காயவைத்து சூட்கேசை வெயிலில் காயவைத்துப் பின்னர் உள்ளே எடுத்து வைத்தபின் தான் நின்மதி வந்தது. ஒரு மூன்று மாதம் போயிருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது முதுகில் மூட்டை கடிப்பது போல ஒரு உணர்வு. சிலநேரம் எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தபின் கடியே இல்லை. அடுத்த நாளும் அப்பிடித்தான். என்னடா கோதாரி காசு குடுத்து கம்போடியா போய் இதையும் கொண்டவந்து சேர்த்தாச்சோ என்னும் நினைப்பு எழ, சீச்சீ இருக்காது என்று மனம் சமாதானம் கொள்ள, உடன ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பம் என்று விட்டால்……. ஒரு வாரம் எந்தவித அசுமாத்தமும் இல்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு இடத்தில் கடி. கடித்த இடம் கடுப்பது போல் இருந்து மீண்டும் காலையில் மறந்துபோக, எனக்கு அந்த மூட்டைப் பூச்சி தினமும் கடித்துக் கரைச்சல் தரவில்லைத் தானே. இருந்திட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்ததும் எனக்குள் ஒருவித நின்மதி பரவ ஆரம்பிக்க, எப்ப அது கடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் அளவுக்கு எனக்கு அதைப் பிடித்துப்போய் விட்டது என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்தப் பெரிய உடலில் வாரம் ஒருதடவை அது இரத்தம் குடிப்பதால் என்ன கெட்டுவிட்டது என்னும் அளவுக்கு என மனம் வந்துவிட்டது. ஒரு இரண்டு மூன்று மாதானக்கள் செல்ல “உங்களுக்கு ஏதும் கடிக்கிதோ” என்று மனிசனிட்டைக் கேட்க, “உன்னை மீறி என்னட்டை எது வரப்போகுது, அதோடை ஏன்ர ரத்தம் நல்ல சுத்தம்” என்ற நக்கல் வேறு. ஒரே ஒரு மூட்டை தான் ஒட்டிக்கொண்டு வந்திட்டிது. நல்லகாலம் என்ற ஒரு ஆறுதல். இரண்டு வந்திருந்தாலே பெருகியிருக்கும். ஒண்டே ஒண்டு எண்டதாலதான் தப்பிச்சன் என மனதைத் தேற்றிய படி இருக்க, அடுத்த வாரம் கால் பகுதியில் கடி. முதுகில் கடிக்காததால் இவர்தான் இரே இடம் அலுத்துப்போய் இடம்பெயர்ந்திருக்கிறார் என்று நம்பியபடி நானும் என்பாட்டில் இருக்க, ஒரு ஆண்டு கோவிட் குழப்பங்களும் பயமும், பயமுறுத்தும் செய்திகளுமாய் இருக்க, அதுவும் மனிசனின் கட்டிலுக்கு இடம்மாறிச்சிதோ என்னவோ நானும் மூட்டை இருக்கிறதையே மறந்துபோனன். இன்னும் வரும்
  4. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
  5. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
  6. நான் என்னும் வாசிச்சு முடிக்கேல்ல . பெட்டை யுனிக்கும் ,பெடியன் திரும்ப படிக்க போறதோடேயும் நிக்குறன்
  7. இன்னும் கதையை வாசிக்கவில்லை அண்ணா மேலோட்டமாக கதைக்கு வந்த கருத்துக்களை மட்டும் பார்த்தேன் புல்லரித்துப்போகும் அளவுக்கு வசிட்டர்களின் வாழ்த்துக்களும் இருக்கிறது படிக்கணும் படித்து விட்டு விரைவில் கருத்திடுகின்றேன்
  8. ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 50 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?.. "முதலில் செல்வது எனது மனைவி." "என்ன ஆயிற்று அவருக்கு?" எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது., இரண்டாவது பிணம்?" அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது., உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?" அதற்கு அவர் சொன்னார், வரிசையில் போய் நில்லுங்கள்...
  9. பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!
  10. மாட்டு வண்டிலில்.... "டீசல்" வாங்கப் போன யாழ்ப்பாணத்தான். அதுகும்... எத்தனை லீற்றர், தெரியுமா?
  11. உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்
  12. வீட்டுக்குள் இப்படியெல்லாம் இருக்குமா.......! 👍
  13. நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்.. நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள..
  14. யாரடா மனிதன் இங்கே.......! 😁
  15. கடன்சா, உண்மையான பெறுமதியில் (Equity) முதலிடுவதை தவறு என கூறவில்லை என நினைக்கிறேன். உண்மையான பெறுமதியை எவ்வாறு அறிவது? உதாரணமாக அவுஸ்ரேலிய வீட்டு விலைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னிலிருந்து 2014 வரை அதன் வளர்ச்சி விகிதம் சராசரியாக 10 ஆண்டில் வீட்டின் விலை இரட்டிப்பாகிறது என கூறுகிறார்கள். அதாவது ஆண்டு ஒன்றிற்கு 10% வளர்ச்சி மாதிரியுள்ளது ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றிற்கு 7 % கூட்டு வட்டியே இவ்வகையான 10 வருடத்தில் வீட்டின் விலை இரட்டிப்பாவதற்கு காரணம், இது வீட்டு தேய்மானம், பண வீக்கம் உள்ளடங்கலாக (7% முன்பு கணித்தாக நினைவிலுள்ளது). உங்கள் கருத்து போல வீடு காணி முதலீடு நல்ல முதலீடுதான். ஆனால் தற்போது சிட்னியில் வீட்டின் விலை அதிகரிப்பு ஆண்டொன்றிற்கு 33% வீதம் என்றால் 7% விகிதத்திற்கும் 33% இற்குமிடையே உள்ள இடைவெளி சிந்திக்க வைக்கின்றது. https://www.abc.net.au/news/2022-01-27/sydney-median-house-price-increases-but-growth-expected-to-slow/100785706 வீட்டு விலை அதிகரிப்பானது வருமான அதிகரிப்பை விட அதிகம். இது கடனை அதிகரிகத்து ஒரு தளம்பல் நிலையை உருவாக்கும். இந்த வருமான அதிகரிப்பு குறைவாக இருப்பது பெரும்பான்மையான அடிமட்ட வருமானம் பெறுபவர்களையே அதிகம் பாதிக்கும். உதாரணமாக அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் வருமான வேறுபாட்டை பின்வருமாறு கூறுகிறார்கள். முதல் 10% மானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தை தமதாக்கி கொள்கிறார்கள், அதாவது மிகுதி 90% மான மக்கள் மிகுதி 50% வருமானத்தை தமக்கிடையே ப்கிர்கிறார்கள், 10% = 50% 1% = 24% 0.1% = 12% 0.01% = 6% அது இவ்வாறு செல்லும். 2007 ஆம் ஆண்டளவில் 15000 அமெரிக்கர்களின் வருமானம் 700 பில்லியன், இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு ஆண்டிற்குரிய மொத பொருளாதார வளர்ச்சியினை விட 9 மடங்கு அதிகமாகும். வருமான வித்தியாசமிருந்தால் அதனால் என்ன பாதிப்பு? நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது அதனூடே அனைவரது வருமானமும் அதிகரிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் அந்த அதிகரித்த வளர்ச்சி தாம் எடுத்து கொண்டால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கடன் விகிதம் அதிகரிக்கும். இந்த வீட்டு விலை வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்பும் குறைந்த பட்சமாவது இடைவெளி குறைவாக இல்லாவிட்டால் நிலமை என்னவாகும்? 1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது. சாதாரண மக்களின் மீது அவர்கள் வாங்கும் பொருதள் முதல் அவர்கள் உழைப்பு வரை வரி விதிக்கும் அரசுகள், வரி மூலம் வருமான மீள்வினியோகம் என்று சொல்கிறது, அவ்வாறிருந்தால் ஏன் இவ்வாறான பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பொருளாதர சரிவை உருவாக்க வேண்டும்? JP மோர்கனை King maker என்றே கூறுவார்கள்.
  16. ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.
  17. பார்வை ஒன்றே போதுமே...........( 10 ). முத்துவும் சாமிநாதனும் அந்தக் கடை முதலாளி குடுத்த பாதணிகளை சிறப்பாகத் திருத்தி பொலீஸ் போட்டு எடுத்துக்கொண்டு தங்களது வீட்டுக்கு போகும் வழியில் கடை முதலாளி கண்ணப்பரின் வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு முற்றத்து வாங்கில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த கண்ணப்பர் இவர்களைக் கண்டதும் வாங்கோ வாங்கோ என்ன இண்டைக்கே செய்து கொண்டு வந்து விட்டீர்கள் என்று முகமன் கூறி வரவேற்கிறார். முத்துவும் பாதணிகளின் பையை அங்கிருந்த திண்ணையில் வைத்துவிட்டு நிமிர அவர் மனைவி அங்கு வந்து முத்துவை நலம் விசாரித்துக் கொண்டே நன்றாக செய்திருக்கிறாய் முத்து என்று பாராட்டுகிறாள். பின்பு நீங்கள் கதைத்துக் கொண்டு இருங்கோ உங்களுக்கும் தேத்தண்ணி போட்டு எடுத்துக் கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். கண்ணப்பரும் என்ன முத்து நீயும் அக்காவும் படித்து பட்டங்களும் பெற்று விட்டீர்கள் என்று அறிந்தேன்.இப்ப என்ன செய்கிறாய். ஓம் ஐயா நான் வியாபாரம் சம்பந்தமான படிப்பும், அக்கா வக்கீல் படிப்பும் படித்திருக்கிறோம்.இந்த வருடம்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனி யாரோடாவது கூட்டாக சேர்ந்து செய்வதா அல்லது சொந்தமாக செய்வதா என்று யோசிக்கிறேன்.அப்படியா நல்லது, இதையெல்லாம் பார்க்க உனது அப்பா இல்லை என்பது வேதனையாக இருக்கு. அன்று நடந்த அந்தச் சண்டையில் அவர் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் இன்றைக்கு நான் உயிரோடு இல்லை என்று சொல்லி சிறிது நேரம் மௌனத்தில் மூழ்கிறார். அப்போது சாமிநாதன் அவரைப் பார்த்து ஐயா நான் ஒன்று கேட்கலாமா என்று வினாவ அவரும் ம்....என்று தலையை மட்டும் அசைக்கிறார். நீங்கள் உங்கள் கடையை விக்கப் போறதாய் கேள்விப்பட்டேன் அதுதான் என்று இழுக்க ....கண்ணப்பரும் ஓம் ....வியாபாரமும் முந்தியைப்போல இல்லை. எங்களுக்கும் வயசாயிட்டுது. மகளும் தன்னோடு வந்து இருக்கச்சொல்லி ஒரே ஆக்கினை. அவளுக்கும் இனி கலியாணம் காட்சி என்று இருக்குது. அதுதான் நகரத்துக்கு போய் அவளோடு இருப்பம் என்று யோசிக்கிறம் என்கிறார். சாமிநாதனும் நீங்கள் உங்களின் விலையை சொன்னால் ஆரும் விசாரித்தால் நாங்கள் சொல்லலாம் என்கிறார்.நான் ஒரு இருபது லட்சம் விலை வைத்திருக்கிறேன். கடை மேல் மாடி எல்லாம் போன வருடம்தான் கட்டியது. உங்களுக்கு தெரியும்தானே....ஏன் நீங்கள் யாராவது எடுக்கப் போறீங்களோ என்று கேட்கிறார். தற்சமயம் எங்களிடம் அவ்வளவு பணமில்லை.வாங்கிறதெண்டாலும் தோட்டம் வீடு எல்லாம் ஈடு வைத்துதான் வாங்க வேண்டும். இவர்களும் இன்னும் சிறுபிள்ளைகளாகத்தான் இருக்கினம். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது வழி காட்டி விட்டால் உங்கள் நண்பரின் குடும்பமும் தலைநிமிர்ந்து விடும் என்று பார்க்கிறேன். கண்ணப்பர் முத்துவைப் பார்த்து, முத்து நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, முத்துவும் நீங்கள் எல்லாம் பெரியவர்கள். மேலும் நீங்கள் நிர்கதியாய் நின்ற எங்களுக்கு செய்த உதவியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.அம்மா அப்பப்ப இதைக் கதைக்கும்போது இப்பவும் கண்கலங்கி விடுவா. அக்காவும் படிப்பு முடிச்சு இப்ப பிரக்டீஸ் செய்கிறா என்று சொல்கிறார். சரி கொடுக்கல் வாங்கல் என்று வரும்போது நாளைக்கு இதால ஒரு பிரச்சினையும் வரக்கூடாது. உறவோ நட்போ எதையும் "அறப்பேசி உறக் கொள்ள வேண்டும்" நான் நேராகவே விசயத்துக்கு வாறன் நீங்கள் என்ற படியால் ஒரு பதினைந்து லட்சம் தந்தால் போதுமென்கிறார்.சாமிநாதனும் ஒரு மாதம் தவணை கேட்க அவரும் சரி என்று ஒப்புக் கொள்கிறார். பின் அவர்கள் இருவரும் தேநீரைக் குடித்து விட்டு வீட்டிக்குப் போகிறார்கள். அப்போது கதவருகில் நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணப்பரின் மனைவி வெளியே வந்து அவரருகில் கதிரையில் இருந்து கொண்டு, என்னங்க நான் ஒண்டு சொல்லவா என்று கேட்கிறாள். ம்...சொல்லு என்று அவர் சொல்லவும், வந்து உந்தப்பிள்ளை முத்துவும் எங்கட மகள் எல்லாரும் சின்னனில இருந்து ஒன்றாய் விளையாடித்திருந்த பிள்ளைகள். பொடியனும் நல்ல ஒழுக்கமாய் இருக்கிறான். எங்கட மகளுக்கு இவரைக் கேட்டு மகேஸ்வரியிடம் கதைப்பமே. நான் அதை யோசிக்காமல் இருப்பனே....ஆனால் அந்தப்பக்கத்தில சில பிரச்சினைகள் இருக்கு. என்னதான் நண்பனின் குடும்பம் என்றாலும் இப்ப முன்பின் தெரியாத ஒரு ஆளோட மகேஸ்வரி ஒரே வீட்டிலேயே வாழுறா. அதோட முத்துவுக்கு தமக்கை இருக்கிறாள். அவளின் திருமணத்துக்கு பிறகுதான் இவருக்கு வழி பிறக்கும். எதுக்கும் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்க்கலாம். நானும் அந்த ஆளைப் பற்றி விசாரித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல அவளும் அதுவும் சரிதான் என்று சொல்லிவிட்டு தேத்தண்ணி குடித்த போணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். சாமிநாதனும் முத்துவும் வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே மகேஸ்வரி இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.இப்பொழுதெல்லாம் அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். கை கால்களில் மருதாணி மலர்ந்திருக்கிறது அவளது மனம்போல. அவர்களும் வீட்டுக்கு வந்ததும் முத்து அவளிடம் அன்று நடந்ததெல்லாவற்றையும் சொல்கிறான்.சித்ரா எல்லோருக்கும் பனங் கற்கண்டுடன் தேனீர் கொண்டுவந்து தருகிறாள். அதைத் தொடர்ந்து எல்லோருமாய் ஆலோசிக்கின்றார்கள்............! பார்ப்போம் இனி..........! ✍️
  18. அன்புள்ள சுமேரியரே மூட்டைப் பூச்சியினால் நீங்கள் படும் சிரமத்தை வடிவேலு அவர்களும் யாழில் படித்துவிட்டு, ஒரு நவீன மெசினை உருவாக்கிப் பாவம் அவர் படும் பாட்டைப் பாருங்கள்.
  19. நல்லதொரு கற்பனை கலையை இறைவன் உங்களுக்கு தந்திருக்கின்றார், தொடருங்கள் சுவி👍
  20. குறைந்த செலவில் குளிர்ச்சியான வீடு......கட்டை குத்து முறை......! 👍
  21. விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை அதிகரித்தால் அதன் விறபனை குறையும். ஆனால் அசையா சொத்துக்களான முதலீடுகள் (Asset) நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக வீடு, பங்கு போன்றவை விலை அதிகரிக்க அதற்கான கேள்வி அதிகரிக்கும் அதற்கு காரணம் முதலீட்டு செலவுகளின் எதிர்பார்ப்பே எதிர்காலத்தில் வாங்கிய விலையினை விட அதிக விலைக்கு விற்கலாம் என்பதாகும். இதனால் தான் இப்படியான முதலீடுகள் உண்மையான விலைகளை விட அதிகளவான விலையினை ஏற்படுத்துகிறது (Bubbles) வரலாற்றில் பல வகையான நீர் குமிழிகள் (Bubbles) உருவாகியிருக்கின்றன என கூறுகிறார்கள். ருலிப், தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட் போன்றவையை உதாரணமாக சொல்கிறார்கள். https://www.investopedia.com/terms/d/dutch_tulip_bulb_market_bubble.asp இந்த நீர் குமிழிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக்கூறுகிறார்கள். ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும். ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. முதலீடுகளில் மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போது இவ்வாறான துயரம் நிகழுகிறது.
  22. யார் தீர்க்கதரிசி.? யாழ்ப்பாண மில்க் ஒயிற் சவர்க்கார வரலாறு.!.👌
  23. ஒரு காலத்திலை என்ரை நித்திரையை கெடுத்த கெட்ட பாட்டு...😍 ஒரு காவியம் அரங்கேறும் நேரம் ஒரு காவியம் அரங்கேறும் நேரம் மழை தூவுதே இதமாகுதே மழை தூவுதே இதமாகுதே ஒரு காவியம்… காமன் கலை நூறு காணும் இரு தேகம் காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம் காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம் காட்டு நதி வேகம் காதல் மனம் போகும் மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம் போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம் ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி போதை வரும் போது காணும் நிலை மீதி பவள மணித் தேரில் பருவம் அரங்கேற மெழுகுதிரி போல கரைந்து விளையாட ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று சேர்ந்ததே நன்று…..
  24. விலேஜ் விஞ்ஞானி மிகவும் எளிமையான தானியங்கிக் கதவு.......! 👍
  25. தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகளின் நினைவலைகள் | நெகிழும் விவசாயி | தமிழ் தேசியன்
  26. இறைபக்தி என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் தனிப்பட்ட உரிமையும் கூட அதை நக்கல் நையாண்டி பண்ணுவதும் ஒருவித தனியுரிமை மீறலாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.