Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points87997Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்13Points46808Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்11Points33600Posts -
நீர்வேலியான்
கருத்துக்கள உறவுகள்9Points538Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/29/22 in all areas
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.4 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது.. ஏடி எம் வங்கிகள் முடங்கி உள்ளன.. கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் வேலை செய்யாததால் சாதாரண அன்றாடம் காச்சி ரஷ்ய மக்கள்தான் தம் வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்த முடியாமல் துன்பப்படுபவர்கள்.. ரஷ்ய பக்கத்து செய்திகளை பேஸ்புக்கும், ட்விட்டரும் சென்சார் செய்து வெளியிடுகின்றன.. யூடியுப் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கி உள்ளது.. ரஷ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்து விட்டது.. ஆக முதலாளித்துவம், உலகமயமாக்கல் என இந்த கம்பனிகள் பேசினாலும் இவை உலகமயான கம்பனிகளாக செயல்படவில்லை. ..அமெரிக்க கம்பனிகளாக தான் செயல்பட்டுள்ளன. வாடிக்கையாளர் சேவையே உயிர்மூச்சு என பேசி ஆசைகாட்டி வங்கி அட்டைகளை விற்ற மேற்குலக கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகித்து நம்பி வாங்கிய போருடன் சம்பந்தப்படாத சாதாரண அப்பாவி வாடிக்கையாளர்களை வங்கியில் பணம் எடுக்கவிடாமல் முடக்கியுள்ளது மேற்குலகு… ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இருக்கும் பிரச்சனையில் நீங்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்... நீங்கள் ரஷ்ய அரசியல்வாதிகளை அவர்களின் சொத்துக்களை தடை செய்யுங்கள் ஆனால் பாவம் அன்றாடங்காச்சி ரஷ்ய மக்கள் என்ன செய்தார்கள்..? நாளை உங்கள் நாடு (அது எதுவாக இருப்பினும்) அங்கு வசிக்கும் சாதாரண மக்களை கொல்லப்போகும் அதன் பொருளாதாரத்தை இந்த முதலாளித்துவ நாடுகளால் எந்த காரணத்தை காட்டியும் முடக்க முடியும் அதற்கு பெயர் ஜனநாயகம்.. முக்கியமான பிரச்சனைகளில் இப்படி இவை செயல்படுவது நியாயம் என ரஞ்சித் வகையறாக்களை போல சப்பை கட்டு கட்டலாம். ஆனால் நாளை இலங்கையில் ஒரு பிரச்சனை என சொல்லி உங்கள் உறவுகள் கிரடிட் கார்டை முடக்கி உங்கள் உறவுகளை பணம் எடுக்கவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு 90% ஆக சரிந்தால் எப்படி இருக்கும்..? சீனா பேஸ்புக்கையும், ட்விட்டரையும், யூடியூபையும்,...ஏன் கூகிளை கூட தன் நாட்டில் தடுத்தது எத்தனை தொலைநோக்கான விசயம் என இப்போது தெரிகிறது.. கருத்து சுதந்திரம் என அலறும் இந்த மேற்குலகும் அதன் நிறுவனங்களும் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கியது எவ்வகை சுதந்திரம் என தெரியவில்லை.. தப்பு நடக்கும் இடமெல்லாம் ஆஜராகி தட்டிகேட்கும் உத்தமர்கள் என்றால் நாளை எதாவது பிரச்சனை என்றால் அமெரிக்காவில் அல்லது ஜரோப்பாவில் ஆஸ்ற்றேலியாவில் கனடாவில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டை முடக்கும் தைரியம் இவர்களுக்கு உள்ளதா? அவர்களின் செய்திச்சேவைகளை முடக்குவார்களா..? பொருளாதாரத்தை முடக்குவார்களா? நிச்சயம் செய்யமாட்டார்கள். இதுதான் இவர்கள் பேசும் கருத்து சுதந்திரம்.. மேற்குலகுக்கு முட்டு குடுப்பவர்களின் எஜமானர்கள் பேசும் ஜனநாயகம்.. இங்கு யாழில் இவர்களை ஆதரிக்கும் ரஞ்சித் சசிவர்ணம் நீர்வேலியான் போன்றவர்கள் மாற்றுகருத்து எழுதும் எம்போன்றவர்களை இங்கு எதுவும் எழுதாதே வெளியபோ என்று மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்.. தமக்கு எதிரான கருத்துக்களை ஜீரணிக்க திராணி அற்றவர்கள்.. இதுதான் மேற்குலகை ஆதரிக்கும் வெள்ளைத்தோல் மோக அடிமைகள் பேசும் ஜனநாயகம்.. எஜமானார்கள் எவ்வழியோ அவர்கள் அடிமைகளும் அவ்வழியே..4 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
யாழுக்கான ஆக்கம் சரிதான். அதற்காக எல்லா ஆக்கங்களுக்கும் தொடருங்கள் அல்லது வாழ்த்துக்கள் என்று சும்மா போய் விட முடியாது. ஜேர்மனியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் உக்ரேனின் உண்மை முகமும் அவர்களின் கள்ளத்தன அரசியலும் இந்தியாவை விட ஊழல்களும் நிறைந்த நாடு அது. சகல உரிமைகளுடனும் வாழும் மக்கள் உள்ள நாடு அது. ஆனால் ரஷ்ய மொழி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கவும் அவர்கள் பின்னிற்பதில்லை. எந்தவொரு உரிமையுமில்லாத ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் அழிவையும் சகல உரிமைகளுடன் வாழும் உக்ரேனின் அழிவையும் ஒப்பிடுவது முழுமையான விசமத்தனம்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- புட்டினும் புதுமாத்தளனும்
2 pointsகாலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட். மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான். பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய? எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான். இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான். ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். எங்கட ஊரில? நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்? எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான். 1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான். மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான். ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம். ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான். அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள். நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான். ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும். சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது. தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை. குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், உடான்ஸ் சாமியார் (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)2 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஷ்யா தன் பிராந்திய அரசியலுக்காக/பாதுகாப்பிற்காக இந்த யுத்தத்தை செய்கின்றது.இது எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ரஷ்யா பலமுறை உக்ரேனுக்கு எச்சரித்தும் உக்ரேன் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் சேர்ந்து ரஷ்யாவை எள்ளி நகையாடிய வண்ணமே இருந்தது.அதியுச்சமாக இன்றைய உக்ரேன் சனாதிபதியின் வாய் வீரங்கள் தான் ரஷ்யாவை மேலும் சினப்பட வைத்தது. பிராந்திய அரசியல் எவ்வளவு முக்கியமானது. எமது தேசியத்தலைவர் அவர்கள் ஒரு மாவீரர் உரையின் போது பிராந்திய அரசியலில் இந்திய முக்கியத்துவம் பற்றி கூறினார். இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக நாம் எதையும் செய்யமாட்டோம் என கூறியதாகவும் ஞாபகம்.இந்தியா எமது அயல் நாடு அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்தார். முள்ளிவாய்க்கால் அழிவின் போது எம் இனத்திற்கு யாருமே உதவவில்லை. ஆயதங்களை மௌனித்து விட்டோம் என கூறிய பின்னரும் நிர்கதியாக நின்ற இனத்தை அடியோடு சரித்து அழித்தார்கள்.அதற்கு இன்றுவரை கூட நீதி கிடக்கவில்லை. எமக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என கூறப்பட்டாலும் அதே இந்தியா முள்ளிவாய்க்கால் அழிவை முன்னின்று செய்தது துரோகத்திலும் துரோகம். சரி அதன் பின் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் எதுவுமே இதுவரை இல்லை.அங்கிருக்கும் ஈழத்து அகதிகளைக்கூட அவர்களால் சரிவர கவனிக்க முடியவில்லை. உக்ரேனில் அப்படியா நடக்கின்றது? மேற்குலகு ஏட்டிக்கு போட்டியாக தடுப்பு ஆயுதங்களை கொடுக்கின்றார்கள். மேற்குலக மக்கள் பணம் பொருள் உக்ரேன் மக்களுக்காக சேகரிக்கின்றார்கள்.அண்டை நாடுகளுக்கு புலம் பெயரும் மக்களுக்கு உக்ரேன் என்ற பெயர் சொன்னாலே போதுமானது. தங்கள் பாதி வீட்டை எவ்வித கேள்விகளுமின்றி தங்க கொடுக்கின்றார்கள். உக்ரேன் சனாதிபதியுடன் நாள்தோறும் மேற்குலக தலைவர்கள் தொடர்புகொண்டு ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்கள்.அதை விட உக்ரேனில் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டியெழுப்புவது பற்றி இப்போதே மேற்குலகு சிந்திக்க ஆரம்பித்து விட்டது. இது இப்படியிருக்க...... மரியோபுல் இரண்டாம் முள்ளிவாய்க்கால் என எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? சிரியாவின் அலெப்போ(Aleppo) அழிவுக்கு வராத கண்கலங்கல்களும் வியாக்கியானங்களும் மரியோபுல் அழிவிற்கு மட்டும் வருகின்றதென்றால் மேற்குலகின் இரட்டை வேடத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எதோடு எதை கொண்டு வந்து ஒப்பிடுவது என்பதற்கும் ஒரு நீதி நியாயம் வேண்டும்.2 points- சிரிக்க மட்டும் வாங்க
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
2 pointsயாரு ஆங்கிலத்தில எழுத சொன்னது..நான் வந்து சாமத்தில போணுக்கு என்னாச்சு என்று தட்டிக் கொண்டிருக்கிறன்..✍️🤭2 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஊர் ஊராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, அங்கே எதிர்க்காமல் நழுவிய கூட்டமைப்பினர் இதுதான் இவர்களின் இரட்டைவேடம். Eelapriyan Balan2 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித், எல்லா பக்கத்தாலும் வரும் distractionஇற்கு மத்தியில் இப்பிடி ஒருங்கிணைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும், நிறுத்தாமல் நீங்கள் நினைத்ததை தொடர்ந்து எழுதி முடியங்கள் ஒருவர் தான் நினைத்ததை, அவருக்கு சரியென்று பட்டதை எழுதுகிறார். அதற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.2 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
விஷமப் பிரச்சாரம் 7 : நேட்டோவின் திமிரான விரிவாக்கத்தினால் ரஸ்ஸியா இன்று எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே தன்னைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ரஸ்ஸியா எடுத்து வருகிறது. எந்தவொரு நாடோ அல்லது நாடுகளின் கூட்டமைப்போ ரஸ்ஸியாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தினைக் கொண்டு இயங்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனும் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கப்போவதாக உறுதிமொழி அளித்தே வருகிறார்கள். நாம் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் தான் ரஸ்ஸியா என்பது நிலப்பரப்பில் உலகின் பெரிய ஒரு நாடு என்பதும், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டிருக்கிறதென்பதும், உலகின் மிகப்பெரிய ராணுவத்தையும், மற்றைய எல்லா நாடுகளையும் விட மிக அதிகளவான அணுவாயுதங்கலையும் கொண்டிருக்கிறது என்பதும். ஆகவே, ரஸ்ஸியா என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களால் இலகுவாக அச்சுருத்தப்படக் கூடிய நாடு என்று எவராவது எண்ணினால் அது வேடிக்கையானதும், அறிவற்ற நிலைப்பாடும் ஆகும் என்பதே உண்மை. சரி, நாம் பூகோள ரீதியில் இதை அணுகினால்க் கூட, ரஸ்ஸியாவின் மொத்த எல்லையின் சுற்றளவில் வெறும் 6 வீதமான நீளத்தையே நேட்டோ உறுப்புரிமை நாடுகளுடன் அது பகிர்ந்துகொள்கிறது. ரஸ்ஸியாவைச் சுற்றியிருக்கும் எதிரிகள் என்று ரஸ்ஸியா குறிப்பிடும் 14 நாடுகளில் 5 நாடுகள் மாத்திரமே நேட்டோவில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் எல்லைகளைத்தான் ரஸ்ஸியா வெறும் 6 வீதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆகவே, ரஸ்ஸியா தனது பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதென்றால், நிச்சயமாக ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தால் அதனைச் செய்யத் தேவையில்லை. ஜனநாயக ரீதியில் , பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எடுக்க பல வேறு வழிகள் இருக்கின்றன. பல சர்வதேச அமைப்புக்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்று யுத்தத்தைத் தவிர்த்து சுமூகமான முறையில் பேசித் தீர்க்கக் கூடிய பல வழிமுறைகள் இருக்கின்றன. ரஸ்ஸியாவுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணுவதற்கென்று, ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்ஸியா தொடர்பான தனது கொள்கையில் தனியான ஐந்து சட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. தொடர்பாடல்களைப் பேணுவதற்கு தேவையான பல்வேறு உடன்படிக்கை முறைகளும், பேச்சுவார்த்தை நடைமுறைகளும் சர்வதேச தொடர்பாடல் முறைகளில் இருக்கின்றன. எவை எப்படி இருப்பினும், ஒரு இறைமையுள்ள நாடான உக்ரேன் தனது கொள்கைகளைத் தீர்மானிப்பது தொடர்பாகவும், தனது நண்பர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் பூரணமான சுதந்த்திரத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பூகோள உறுதிப்பாடு மீதான வீட்டொ அதிகாரத்தினை ரஸ்ஸிய கொண்டிருக்கிறது என்ற புட்டின்னினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு அடிப்படையில் தவறானது, சட்டத்திற்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நடைமுறைகளுக்கும் முரணானது.2 points- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
2 pointsஅதன்பின்னர் ஒருநாள் வைத்தியாரிடம் தொலைபேசியில் கதைப்பதற்கான நேரத்தை பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க அழைப்பு வருக்கிறது. அந்த வைத்தியர் மிக இயல்பாக என்னுடன் கதைப்பார். “உமக்கு என்ன பிரச்சனை? “எனக்கு கொஞ்ச நாட்களாக சரியான கடி” “சிறீலங்கா அல்லது இந்தியா போய் வந்தீரா? தலையெல்லாம் பேனோ?” “எனக்கு ஏன் பேன் வருது? அதோடை உந்தக் கோவிட்டுக்குள்ளை நான் ஏன் போகப்போறன் அங்கை எல்லாம்?” “பேன் இல்லை எண்டால் அப்ப எங்க கடி?” நான் 2019 கம்போடியா போனபோது ................................................. .......தொடங்கி எல்லாம் சொல்லி முடிச்சன். “உமக்கு ஏதும் ஒவ்வாமை இருக்கோ? “இல்லை” “இதுக்கு முதல் அதுக்கான டெஸ்ட் செய்தனீரே?” “எதுக்கும் ஒருக்கா அதையும் செய்து பார்ப்பம்.” “ஆனால் அவங்கள் வந்து போன பிறகு எனக்கு ஒரு கடியும் இல்லை.” “அப்ப என்னத்துக்கு எனக்கு அப்பொயின்ற்மென்ட் வச்சநீர்” “இவ்வளவு நாளும் ஏன் எனக்குக் கடி இருந்தது எண்டு தெரிய வேணுமெல்லோ” “இது வடிவாத் தெரியுதுதானே உம்மட நினைப்பு என்று. சிலநேரம் தற்காலிகமா ஏதாவது ஒவ்வாமை கூட உமக்கு வந்திருக்கலாம். உந்த சோப், வோசிங் பவுடர் இதுகளுக்கும் கடிக்கும். றால் நண்டு நல்லாச் சாப்பிடுறநீரோ?” “ஓம் அது நல்லாப் பிடிக்கும்” “சிலபேருக்கு அது கனக்கச் சாப்பிட்டாலும் கடிக்கும். “இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.” “என்னைப் பயித்தியம் ஆக்கப் போறியளோ? எனக்கு நல்லா நித்திரை வருது. ஆளை விடுங்கோ” “நீரா வைத்தியத்துக்கு வந்திட்டு நீரே மருந்தையும் சொல்லுறீர். சரி அப்ப ஒரு மாதம் பாரும். கடிக்காட்டில் சரி. திரும்பவும் கடிக்கிறபோல இருந்தால் வாரும்.” அதோட எல்லாம் முடிஞ்சுது।2 points- புட்டினும் புதுமாத்தளனும்
2 pointsஉக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, தன்னை வெல்ல வைக்கச் சொல்லி... வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க வைத்து விட்டு.. அழுது கொண்டு இருக்கிறான். 😂2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு நீங்கள் மட்டும் திரும்ப வருவீர்களாக்கும்😫2 points- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
1 pointஅதெல்லாம் குடும்ப இரகசியம். உப்பிடிப் பப்பிளிக்கில வச்சுக் கேட்கப்படாது😀 உங்களிலும் பாக்கவோ ????😀 நீங்கள் சொல்லுறது உண்மைதான். உந்தச் சனத்தின்ர தொல்லை தாங்க முடியாமல் எழுதி முடிச்சது. அந்த டொக்டருக்கு என் கதை நல்லாப் பிடிக்கும். நான் என்ன செய்ய?? 😀😂 நானும் அதைத்தான் யோசிக்க நீங்களே சொல்லியாச்சு 😂1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது உண்மை. American deep State பற்றிய கேந்திர சிந்தனைவியலாளர்களின் சிந்தனை போக்கும் ஏறத்தாழ இது போன்றது John Mearsheimar இந்த வீடியோ வீடியோகளை youtube இல் பார்க்கலாம். இது அண்மைக்கால வீடியோ: https://www.youtube.com/watch?v=8mCzbiF5TmQ இந்த யுத்தத்துக்கு, இன்னொரு மறைமுக, முக்கிய காரணம், பூமி வெப்பம் அடைதல் (global warming). காரணம், ஆர்டிக் உருகுகிறது, ஆர்டிக் சர்வதேச கப்பல் ப்பதையாக மாற தொடங்கிவிட்டது, ஆர்டிக் இல் உள்ள பெருமளவு வளங்கலாய் எப்படி பகிர்வது என்பதில் போட்டி. அனால், ரஷ்யா ஐ பொறுத்தவரையில், எந்தவொரு மனித பிரசன்னமும் தாக்கு பிடிக்க முடியயாத, நீண்ட வட எல்லை, மற்றவர்களுக்கு, முக்கியமாக மேற்கின் ஆயுத பல பிரசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா வுக்கு இது அதனது இருப்புக்கு கேந்திர தன்மையான அச்சுறத்தலும், ஆபத்தும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, நேட்டோ கொடுத்த வாக்குறுதியான, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பால்டிக் நாடுகளுக்கு நேட்டோ பரவாது, என்பதை கடைபிடித்து இருந்தால், ரஷ்யா இவ்வளவு தீவிரவமாக இருந்திருக்காது. சொறி சிங்களம் இறைமையை கொண்டுள்ள அரசு கொண்டுள்ளதாயினும், மனித உரிமை சபையில் உப்புச் சாப்பிலா தீர்மானத்தை கொண்டுவருவதத்திற்கு, மேற்கு நாடுகள் ஹிந்தியை எதிர்க்க கூடாது என்ற நிலையில், ரஷ்யா அதன் இருப்புக்கு வரும் கேந்திர அச்சறுத்தலை வாளாது பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உங்கள் கட்டுரையை விமச்சிக்க வேண்டாம் என்று கூறுங்கள். அத்துடன் யாரும் கட்டுரையை விமர்சிக்கப்போவதில்லை. நீங்களும் மற்றும் பலரும், எல்லோரும் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும். 🙏1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நீங்கள் ஆதாரம் எதனையும் கொடுக்க்வில்லை. பிழைகளை, பக்கச்சார்பை சுட்டிக்காட்டுவது ஆத்திரத்தில் அல்ல. அது பிழை என்பதாலே. உங்களால்தான் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் ஆக்கத்தை இதுவரை எவருமே குப்பை என்று கூறவில்லை. ஆனால் தவறுகளைச் சுட்டிக்காட்டும் கருத்துக்களை நீங்கள்தான் குப்பை என்று கூறுகிறீர்கள். வேருபாடு புரிகிற்தா ? உண்மையைக் கூறுங்கள் ரஞ்சித்தின் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து வருகிறீர்களா ? வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலுடன் இதனை ஒப்பிடுவது நீதியானதுதானா ?1 point- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
1 pointஇவருக்கு கிட்டடியிலை நடு ரோட்டிலை வைச்சு மொங்கு மொங்கு எண்டு மொங்கப்படும்..↓↓↓😁1 point- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
1 pointஅந்த மனிசன்தான் சுமேரியரிடம் நசுங்கித் தவிக்கும் மூட்டைப் பூச்சியோ...??🤔😭1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அரபுநாடுகள் ரஷ்யாவை விட மிகப்பெரியது.. வளமானவை.. ஆனால் அவற்றைத்தான் அமெரிக்கா தலைமையில் மேற்குலகு ஒன்று சேர்ந்து ஒவ்வொன்றாக அழித்து ஒழித்து ஒடுக்கி வருகிறது.. இன்று அரபுதேசங்கள் நாளை ரஷ்யா அதன் பின் சீனா தேவைப்பட்டால் இந்தியாவைக்கூட… வாஸ்கொடகாமா காலத்தில் இருந்தே கீழைதேச தேசங்களை அடக்கியும் ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் சீரழித்தும் வரலாற்றை ஒவ்வொரு முறையும் மேற்குலகுதான் எழுதுகிறது.. இப்பொழுது ஜனநாயகம் பேசிக்கொண்டுபோய் ஆக்கிரமித்து பொருளாதாரத்தின் மூலம் அடிமைப்படுத்துகிறார்கள்.. அதற்கு வெட்கமே இல்லாமல் கீழைத்தேசத்தில் இருந்து போன அடிமைகள் முட்டுக்குடுக்கின்றனர்.. ஒவ்வொரு முறையும் காக்கைவன்னியர்கள் கீழைத்தேசத்தில் இருப்பதால்தான் அவர்கள் எம்மை அடிமை ஆக்கமுடிகிறது..1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
சிலரின் விசமத்தனமான கருத்துக்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும்போது, அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. ஆகவே அவர்கள் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல குப்பைகளை இங்கே அள்ளி வந்து கொட்டுகிறார்கள், இது எனது சொந்த ஆக்கம் என்று தெரிந்தும். நானும் என்னால் முடிந்தளவிற்கு அவற்றை பெருக்கி, எரித்து வருகிறேன், பார்க்கலாம்.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்ட சில வாரங்களின் பின்னர் இந்த அழிவு யுத்தம்பற்றி சர்வதேசமெங்கிலும் இருந்து சுமார் 150 வரலாற்று ஆசிரியர்கள் கூட்டாக ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்கள். இனவழிப்பு, நாசிசம் மற்றும் இரண்டாம் உலக யுத்த வரலாறு ஆகியவற்றுடன் மிகுந்த பரீட்சயமுள்ள இந்த வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது, " உக்ரேனியர்களை நாஜிகளாக வர்ணித்து ரஸ்ஸிய அதிபர் புட்டின் செய்துவரும் விஷமப் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது, யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது, கடுமையான தாக்கங்களை மக்களிடையே ஏற்படுத்தக்கூடியது. மிகவும் அருவருக்கத்தக்க, ஏற்றுக்கொள்ள முடியாத, மனதளவில் பலரைக் காயப்படுத்தக் கூடிய தன்மையினைக் கொண்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜிகளால் பாதிக்கப்பட்ட பல மில்லியன் மக்களின் மனங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியதுடன், நாஜிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடி மடிந்த லட்சக்கணக்கான வீரர்களினதும் புனிதத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கைங்கரியத்தையும் கொண்டது" முன்னாள் ரஸ்ஸிய அமைச்சரான சேர்கி மார்க்கோவ் புட்டினின் நாஜிப் புலம்பல் பற்றிக் குறிப்பிடும்போது, "உக்ரேனியர்கள் நாஜிகளுக்கு எதிரானவர்கள். நாஜிகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆகவே யாராவது உக்ரேன் நாஜிக்களால் ஆளப்படுகிறது என்றோ அல்லது தம்மை நாஜிகளிடமிருந்து காப்பாற்றும்படி உக்ரேனியர்கள் ரஸ்ஸியாவிடம் கேட்கிறார்கள் என்றோ கூறுவது சுத்த் முட்டாள்த்தனமானது" என்று கூறுகிரார். இறுதியாக, எந்த நாஜீக்கள் உக்ரேனை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று ரஸ்ஸியா புலம்புகிறதோ, அந்த நாட்டின் தலைவரும், யூத இனத்தவருமான உக்ரேனின் ஜனாதிபதி வொலொடொமிர் செலென்ஸ்கி ரஸ்ஸியாவின் "நாஜிப் புலம்பல்கள்" பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "ஏறத்தாள ஐந்து வாரங்களாகியும், ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் அவர்கள் தேடும் நாஜிக்களையோ அல்லது போதைக்கு அடிமையான தலைவர்களையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலவேளை, ரஸ்ஸியப்படை உக்ரேனில் நுழையும்போது மலர்ச் செண்டுகளுடன் தம்மை வறவேற்பார்கள் என்று புட்டின் கூறிய உக்ரேனியப் பெண்களை இன்னும் அவர்கள் தேடுவது போல அந்த நாஜிக்களையும் அவர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் " என்று கூறியிருக்கிறார். அவர்கள் தேடும் விடைகள் எனது திரியெங்கும் பரவியே கிடக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு தேடுவதால் சிலருக்கு அவை தெரிவதில்லை. சிலவேளை கண்களைத் திறந்து பார்க்க அவர்கள் விரும்புவதில்லை போலும். தமது இணையத் தளங்களுக்குச் செய்தி சேர்க்கவும், விபரம் திரட்டவும் சிலர் கேள்வி கேட்கலாம். அதற்காக எனது நேரத்தை நான் மண்ணாக்க விரும்பவில்லை. திரியுடன் தொடர்புடையது என்பதற்காக மட்டும் சில விளக்கங்களை முன்வைக்கவேண்டியதாயிற்று.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அசோவ் எனும் சொல்லே பலருக்கு நாஜிச் சொல்லாகத் தெரிவது அதிசயம் தான். ஆனால் அசோவ் எனும் பெயர் இப்படையணிக்குக் கிடைத்ததற்குக் காரணம் இருக்கிறது. இன்று ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றான அழித்தொழிப்பு ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் மரியோபுல்லில் இருக்கும் "தி சீ ஒப் அசோவ்" அதாவது அசோவ் கடற்கரையில் இப்படையணியின் தலைமையகம் இருப்பதாலேயே இப்படையணிக்கு அசோவ் படையணி என்கிற பெயர் இடப்பட்டிருக்கிறது. 2014 இல் ரஸ்ஸிய படை நடவடிக்கையினை எதிர்கொண்டு வெற்றியீட்டிய இப்படையணியே இன்றும் மரியோபுல்லில் ரஸ்ஸிய தாக்குதலை எதிர்கொண்டு போராடி வருகிறது. ஆனால், இந்த சிறிய படைப்பிரிவை முன்வைத்து பேசும் ரஸ்ஸியா, முழு உக்ரேனுன் நாஜிகளால் ஆளப்படுவதாகக் கூறுகிறது. உக்ரேனை ஆக்கிரமித்து நிற்கும் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சர் ஐ நா வில் பேசும்போது , மரியோபுல்லில் ரஸ்ஸிய ஏவுகணையால் தாக்கியழிக்கப்பட்ட மகப்பேற்று மருத்துவமனை அசோவ் பட்டாலியனின் முகாம் என்று கூறியதோடு, ரஸ்ஸிய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 300 அப்பாவிகள் கொல்லப்பட்ட மரியோபுல் திரையரங்கின்மீது அசோவே தாக்குதல் நடத்தியதாக பொய்யுரைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அசோவ் படைப்பிரிவிலிருக்கும் சிலரது நாஜிச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தி, உக்ரேன் நாஜிகளால் ஆளப்படுகிறது என்றும், அது ரஸ்ஸியர்களை அழிக்கிறது என்று கூறும் புட்டின் செய்ய நினைப்பதெல்லாம் இரண்டாம் உலகயுத்தத்தில் நாஜிகளால் ரஸ்ஸியர்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் அழிவுகளையும் மீண்டும் அவர்கள் முன் கொண்டுவந்து, ரஸ்ஸியர்களின் உணர்வுகளை உசுப்பேற்றி உக்ரேனை ரஸ்ஸியாவின் எதிரியாகக் காட்டுவதுதான்.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
யாழின் ஆக்கத்துக்காக ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சிரிக்க கொஞ்சம் சிந்திக்க கொஞ்சம்... மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான். இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள். *தத்துவம்:* *பெண்கள் வாயை மூடி கொண்டு இருந்தாலே பாதி செலவு குறைந்துவிடும்...!1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு (2) பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு (2)1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரங்கள் வெளியுலகில் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து, உக்ரேன் அழிவதை நியாயப்படுத்தும் பலர் ரஸ்ஸியாவுக்கு வெளியே இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் ஈழத்தமிழருக்குள்ளேயே பெரும்பகுதியினர் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்தும், புட்டினை ஒரு மாபெரும் வீரனாகப் போற்றியும், உக்ரேன் அழிக்கப்படுவதை கைகொட்டி ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக வலையூடகங்களில் எழுதிவரும் ரஸ்ஸிய ஆதரவு, உக்ரேன் அழிவு நிலைப்பாடுகளும், முன்வைத்துவரும் கேள்விகளும் எந்த அடிப்படியில் முன்வைக்கப்படுகின்றன என்பது ஒன்றும் ரகசியல்மல்லவே? ஆகவே நான் தடை செய்யப்பட்ட ரஸ்ஸிய ஊதுகுழல்களைத் தேடிப் பயணித்து , அதன் விஷமப் பிரச்சாரங்களை தோண்டியெடுக்கத் தேவையில்லை, தாராளமாகவே அவை கிடைக்கப்பெறுகின்றன. மரியோபுல் அவலம் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் ஆளாளுக்கு கேள்வி கேட்டு அலைக்கழிக்கிரார்கள் யுவர் ஆனர். பரவாயில்லை, நானும் எழுத நினைத்த ஒருவிடயம் தான், இங்கே இன்னொருவரும் கேட்டிருக்கிறார், ஆகவே இதனையும் விளக்கிவிட்டு, என் பாதையில் செல்லலாம் என்று நினைக்கிறேன்.1 point- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இவ்வளவு நேட்டோ( Nato)படை ரஸ்யாவை சுற்றி உள்ளது போல் ரேட்டோ(Rato) எனும் படை அமெரிக்காவை சுற்றி இருந்தால் என்ன நடக்கும்??1 point- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
1 point- நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 20221 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- புட்டினும் புதுமாத்தளனும்
1 pointகாலம்: டிசம்பர் 2027 இடம்: பிராங்பேர்ட், ஜெர்மன் அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் படான்ஸ் எழுதிக்கொள்வது. உனது மடல் கிடைத்தது. உடான்ஸ் சொன்னது ஒண்டையும் நம்பாத.. பூரா கற்பனை.. மச்சான் இப்ப நிலைமை அமெரிக்காவிலையும் அமெரிக்காவுக்கு வால்பிடிச்ச யுகேயிலும்தான் ரெம்ப மோசமடா… ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்தை உணர்ந்து உசாராகி ரஷ்யாவுக்கு கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டது.. ஆனா நம்ப யூகே வாயைக்குடுத்து சூ*ல சூடு வாங்கி இருக்கு… ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்.. எங்கட சனம் கொஞ்சம் இங்க யுகே இன்னும் கொஞ்சம் கனடால இருந்து வெளிக்கிட்டு ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அகதியளா வந்து கொண்டு இருக்கு... நல்லா வாழ்ந்த குடும்பங்கள்… இப்ப பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நோர்வே எண்டு அரசாங்கம் குடுத்த முகாம்களில் ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் யூகேயிலயும் அமெரிக்காலயும் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது.. ஜரோப்பிய ஒன்றியம் உக்ரேனைப்போல அமெரிக்காவை நம்பி முட்டாள்தனமா இருக்காமல் பின்விளைகளை சிந்திச்சு சமயோசிதமா செயற்பட்டதால அங்க இருக்கிற சனம்கள் சந்தோசமா நிம்மதியா இருக்குதுகள்.. நானும் இப்ப ஜெர்மனில அகதியா வந்து இருக்கிறன்.. ஊரில இருந்து யூகேக்கு அகதியா வந்து பிரிட்டிஸ் சிட்டிசன் ஆகி கெத்தா இருந்தனான்.. இப்ப மறுபடியும் ஜெர்மனுக்கு அகதியா போய் இருக்கிறன்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் எண்டுறது.. ஜேர்மன் நோர்வே பிரான்ஸ் சுவிஸ் எண்டு இரட்டை சிற்றிசன் வச்சிருந்தவை இப்ப அங்கபோய் நிம்மதியா வேலை செய்து கொண்டு இருக்கினம்.. இவன் மோடன் பொறிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து யுகேயை பிரிச்சதால விசாஇல்லாம இங்க ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கேலா.. அதால நானும் அகதி எண்டு பதிஞ்சுபோண்டு இருக்கிறன்.. எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். சிங்களவனிட்ட இவ்வளவு அடிவேண்டியும் இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேனில சிறுபான்மை ரஷ்யா சனத்தின்ர அழிவைக்கூட அப்படி ஒண்டுமே இல்லை அப்படி ஒரு அழிவே அங்க நடக்கேல்ல எண்டு எழுதின்னான்.. அமெரிக்கா நேட்டோ நாலுபக்கமும் ரஷ்யாவை சுத்திவளைச்சு ஈரான் ஈராக் லிபியா சிரியா எண்டு பலநாடுகளில் செய்ததை ரஷ்யாக்கு உக்ரேனை வச்சு செய்ய நிண்டதை மனசாட்சியை பூட்டி வச்சிட்டு சரியெண்டு சொல்லி மேற்குக்கு முட்டு குடுத்தனான்.. இப்ப ரஷ்யாக்காரன் அடிபோட்டு அழிவெண்டா என்ன எண்டு மறுபடி எனக்கு காட்டுறான்.. இப்பவும் நான் திருந்தாட்டி நான் மனுசனே இல்ல… உக்ரேனை ரஷ்யா சிறுபான்மை இனமக்களை போட்டு வெளுத்த நேரம், ரஷ்யாவில் இருந்து எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு உதவ ரஷ்யமொழிபேசும் இரத்தங்கள் எல்லாம் தம் சகோதர ஒரே மொழிபேசும் இரத்தங்களுக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது… எங்கட தமிழ்மொழிபேசும் இரத்த உறவுகள் உலகத்தமிழர்கள்..? மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோக அடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான். இங்கு பரம்பரையா வாழுற வெள்ளைக்காரனே தங்கட அரசுகள் ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் எண்டு உலகம்பூரா செய்யும் அநியாயங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்போது வெள்ளைக்காற இனவாதிக்கே வாந்தி வாற அளவுக்கு மேற்குலகின் அநியாயங்களுக்கு முட்டுகுடுத்து எழுதுகிறார்கள்டா மச்சான்.. நாங்கள் ஒடுக்கப்படும் இனத்து மக்கள் எண்டால், உலகம் எங்கும் ஏழைநாடுகளை ஒடுக்கும் மேற்குலகுக்கு எப்படி மச்சான் முட்டு குடுக்க முடியும்..? எங்கள் சுயநலனுக்காக எப்படி மச்சான் மேற்குலகின் அநியாயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுகுடுப்பது..? ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை… சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், படான்ஸ்.. (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரைன் இந்தப்பகுதியில் விடுதலைக்காகப்போராடும் மக்களை கிளர்ச்சியாளர்கள் எண்டு சொல்லி குண்டுவீசி தாக்குது.. இலங்கை அரசும் இதைக்கூறித்தான் எம்மீது குண்டுவீசியது.. அப்படி பார்க்கபோனால் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு ரஷ்யா என்னும் வல்லரசுக்கும் மேற்குலக வல்லரசுகளால் ஆயுதம் வழங்கி பின்னின்று அனுப்பப்படும் உக்ரேனிய வல்லரசுக்கும் நடக்கும் யுத்தத்துக்கு அல்ல, நடுவில் கிடந்து நசுங்கி உக்ரேனிய படைகளிடம் செல்லடிவாங்கி சாகும் சிறுபான்மை ரஷ்யமக்களுக்காகவும் உக்கிரைன் படையினரின் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்துக்கிடக்கும் அவர்களின் நகரங்களுக்காகவும்தான் நாம் முள்ளிவாய்க்கால் ஒப்பீட்டு கட்டுரை எழுதவேண்டும்.. ஏனெனில் மேற்குலகின் அனைத்து ஊடகங்களாலும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ள அப்பாவி மக்கள் அவர்கள்.. ஒட்டுமொத்த உலகாலும் கைவிடப்பட்டவர்கள்.. உக்கிரைனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் யாழ்கள உறுப்பினர்கள் இந்த மக்களைப்பற்றி ஒருவார்த்தைகூட எழுதி யாமறியோம்.. அதிகாரம் உள்ளவர்களின் பக்கம் சாய்ந்து அவர்களின் சூவைத்துடைப்பது இந்தியாவில் பார்ப்பணர்களுக்குதான் கைவந்த கலை.. அது நமக்கு எதுக்கு..1 point- புட்டினும் புதுமாத்தளனும்
1 pointஉக்ரேனிலிருந்து ஆண்கள் வெளியேற அனுமதியில்லை. எழுந்தமானத்திலை எல்லாத்தையும் எடுத்து விடப்படாது. 🤣1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தலைப்பே உள்ளடக்கம் எப்படி அமையப் போகிறது என்று செப்பிவிட்டது. எம்மீதான இன அழிப்புப் போரில் நேரடிப் பங்களிப்பு செய்த உக்ரைன்.. எம் மக்கள் மீது எரிகுண்டு எனும்.. பொஸ்பரஸ் குண்டு வீசியவர்கள்..இன்று தங்கள் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதாகச் சொல்லி மேற்கு நாடுகளிடம் பல்வேறு இராணுவ உதவிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு ஊடகங்களும் உக்ரைனின் டொன்பாஸ் (DONBAS) ரஷ்சிய மொழி பேசும் மக்களின் இன அழிப்பை மறைத்தும் குறைத்தும் பேசி வருகின்றன. நாமும் அதற்கு இசைவது போல் பக்கச் சார்புக் கட்டுரைகள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பொருண்மிய தடையும்.. தொடர் குண்டு வீச்சும் நடத்தி மக்களை வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்த போது இதே மேற்குலக ஊடகங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்கள் விடுவிப்பு என்றும் புலிகள் மனிதக் கேடயமாக மக்களை பாவிப்பதாகவும் உச்சரித்தன. இன்று ரஷ்சியா அப்படிச் செய்வதாக உக்ரைன் சொல்லும் போது... ரஷ்சியா குண்டு வீசி மக்களை தன் பக்கம் இழுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இது மேற்குலகின் இரட்டை வேடத்தனத்திற்கு நல்ல உதாரணமும் கூட. அப்படியான மேற்குலக செய்தி ஆதிக்கங்களின் அடிப்படையில்.. எமது மக்களின் வலியை இழப்பை அழிவை தவறான ஒப்பிடலுக்குள் கொண்டு செல்வது எம் மக்களின் வலியை இழப்பை மலினப்படுத்தும்.. அவர்களின் நீதிக்கான குரலை ஓரங்கட்டுவதுமாகிவிடும். உக்ரைன் - ரஷ்சிய போரின் உள்..வெளி நோக்கம் வேறானது. எமக்கு தெரியாத பலதும் அதற்குள் உண்டு. ஆனால்.. எம் மக்கள் மீது எம் மண்மீதும் திணிக்கப்பட்ட போர் மற்றும் இனவழிப்பை தெளிவாகத் தெரிந்திருந்தும்.. அதனை புலிகளோடு சேர்த்து கேள்விக்குட்படுத்தியவர்கள்.. உக்ரைனுக்கு வெள்ளையடிப்பது ஏனோ..??! எம் மக்களைப் பொறுத்த வரை.. உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் தமிழின அழிப்பிலான பங்களிப்பு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் பங்களிப்பில் இருந்தும் சற்றும் குறைந்ததல்ல.1 point- புட்டினும் புதுமாத்தளனும்
1 pointஉடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால், இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியபோல் நகரத்தை.... புட்டினின், ரஷ்ய ராணுவம் இவ்வளவு சல்லடை போட்டு தாக்கியும்... ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற நாடு முழுக்க நடந்த போரில், 1000`ற்கு குறைவான மக்கள் இறந்துள்ளதை நினைக்கும் போது, புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது, அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍 இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது. ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது. ரஞ்சித் நெடுக்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரே தவிர அவரையோ யாரையுமே கருத்தெழுதக் கூடாது என்று நீங்கள் சொல்லது மிகவும் தவறு. இது கோவிலில் நடக்கும் அன்னதானம் மாதிரி.யார்யார் சாப்பிட வேண்டும் எம்மால் உத்தரவிட முடியாது. வணக்கம் கோசான் இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர். ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது. நன்றி.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- மனிதாபிமானப் பன்னாடை
1 pointஅருமையான கவிதை புங்கை. 👍🏽 முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- புட்டினும் புதுமாத்தளனும்