Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87993
    Posts
  2. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10720
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53011
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/22 in all areas

  1. பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் துலங்கி நிற்பது. எனவே தமிழ்ச் சமூகத்தில் அதன் சிறப்பிடத்தைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் இது தொடர்பில் உடனே நம் எண்ணத்திரையில் ஓடுவது சிலப்பதிகாரக் காட்சி - மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை. தன்னுடன் புலந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுத்த மடலில், "குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது" என்கிறாள். 'குரவர் பணி அன்றியும் - மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு எனக் கொள்வது பொருத்தம்) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தது மட்டுமல்லாது, குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக தாங்கள் ஊரை விட்டுச் செல்லும் அளவிற்கு என் பிழை யாது என்பது அறியேன் (என் பிழைப்பு அறியாது)' என்கிறாள் மாதவி. மாதவியின் மூலமாக இளங்கோவடிகள் குரவர் பணியைத் தலையாயதாய் வைத்தமை இங்கு போற்றி உணரத்தக்கது. ஊழல் மலிந்த சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாளர்கள் ஒளிர்வதை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் சமூகத்தைச் செப்பனிட வழிவகுக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதுபோலவே, முதியோர் இல்லங்களை நிரப்பும் காலகட்டத்தில் பெற்றோரைப் பேணும் பிள்ளைகளையும், அதற்கான தகைமையும் புரிதலும் உள்ள பெற்றோரையும் நாம் கடந்து செல்லுகையில் சற்று நிதானித்து அவர்களையும் பதிவிடுதல் சமூக நன்மைக்கு வழிகோலும் எனும் எண்ணவோட்டமே இக்கட்டுரை. உறவுமுறையில் எனக்குச் சற்று தூரத்து உறவாக இருப்பினும் மனதளவில் நெருக்கமானவர்கள் நம் கதைமாந்தர். திரு. தாயுமானசுந்தரம் - திருமதி. விஜயகோமதி (கோமதி என்று சுருங்கி, பின்னர் கோமா என்றே இளம்பிராயத்திலிருந்து அழைக்கப்பட்டார்) தம்பதியரின் திருநிறைச்செல்வன் நாராயணன் என்ற சங்கர். வைணவமும் சைவமும் தனது ஒரே பெயரில் வாய்க்கப் பெற்றவன். சங்கரநாராயணன் என்று வைத்திருக்கலாமே என்று நாம் கேட்பதற்கு அவனது பெற்றோர் இப்போது இல்லை. உறவு முறையில் அவன் எனக்கு மைத்துனன். அவனது சகதர்மிணி ஜெயகோமதி. நிஜத்தைக் கதையாய் வடிப்பவர்கள் கதைமாந்தர் பெயர்களை எழுதுவதில்லை. அடியேன் அவர்களது பெயர்களை எழுத முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர்கள் என்பதேயாம். தாய்-தந்தை, மகன்-மருமகள் என்று ஒரே வீட்டில் இரண்டு கச்சிதமான தம்பதியர் அமைந்தால் அவ்வீடு கோயிலன்றி வேறென்ன ? கதையின் திறப்புக் களத்திலேயே திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். நம்மைச் சுற்றிய உலகில் ஆங்காங்கே நாம் காணும் பொறுமையின் சிகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அவரிடம் மாணாக்கராய் இருந்திருக்க வேண்டும். அவரது இல்லத்தரசியார் திருமதி. விஜயகோமதி அன்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவர்களது அக்காவின் மகளைக் கட்டிய மருமகனுக்கு அண்ணன் (இப்போதே கண்ணைக் கட்டுகிறதா ?) என்றபோதிலும், நானும் என் மனைவியும் எப்போதோ அவர்கள் இல்லத்திற்குச் சென்ற போதெல்லாம் அவர்களது சொந்த மருமகன் - மகள் போல அங்கு நடத்தப்பட்டது இயக்குனர் விக்ரமன் பட சென்டிமென்ட் போல எவருக்கும் தோன்றலாம். மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்புக்கு இது சான்று பகர்வது. "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" எனும் பாரதியின் வரிகளுக்குச் சான்று வேண்டுமா? இதோ - நான்கைந்து பூனைகள் திருமதி. விஜயகோமதி அவர்களைச் சுற்றி வரும். "ஏய், இங்கே உட்காரு ! தோசை ஆறினதும் உனக்குத் தருவேன்" என்று சொன்னவுடன் அந்தப் பூனையும் அவர்கள் சுட்டிய இடத்தில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்ளும். எந்தப் பூனைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் ரசித்துச் சொல்லும்போது நம்மில் சிலருக்குச் சற்று அதிகப்படியாகத் தோன்றலாம். அவர்கள் வீட்டில் உள்ள அந்த ஒரே நாயை 'தம்பி' என்று அழைப்பதும், அந்த நாய் பூனைகளிடம் தன் இனத்துக்கே உரிய சேட்டைகளைச் செய்யாமல் சாந்தமாய் இருப்பதும் எங்கேயோ எப்போதோ வாசித்ததைப் போன்ற பிரமிப்பு. இவ்வளவிற்கும் செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பம் என்றில்லை. மனதளவில் அளப்பரிய செல்வம் வாய்த்த நடுத்தரவர்க்கம். "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்" என்ற பாரதியின் வரிகளையே "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் தானே எனும் உண்மை அறிதல் வேணும்" என்று மாற்றும் துணிவு திருமதி. விஜயகோமதி அவர்களைப் பார்த்த பின் எனக்கு ஏற்பட்டது. அறுபது வயதைத் தொட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து தலையில் அடிபட வேண்டும் என்பதில்லை. ஆனால் திருமதி. விஜயகோமதி அவர்களுக்கு நேர்ந்தது. உயிருடன் நினைவற்ற நிலைக்குச் சென்றார்கள். "கோமா" என்று வாஞ்சையுடன் உற்றார்- உறவினரால் அழைக்கப்பட்டவர்கள் 'கோமா' நிலைக்குச் சென்றது இந்த நிஜக்கதையில் ஒரு அவலச்சுவை. அவர்களது குடும்பத்தின் நல்ல நண்பரான மருத்துவர் உயர்திரு. மங்களா இரவீந்திரன் அவர்கள் தம் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சிறிது காலம் பேணி, அந்த நிலையிலேயே இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் திருமதி. விஜயகோமதி அவர்கள் குடும்பத்தாரிடம் (அந்த மூன்று பேர்தான்) ஒப்படைக்கப்பட்டார். எப்போதும் அவர்களின் சேவைக்கானவராய் மருத்துவ நண்பர் விளங்கினார். தெய்வாதீனமாக இந்நிலையிலிருந்து சிலர் தேறியுள்ளது கடலில் அவர்களுக்கான கட்டுமரம். மகன் சங்கர் பெரிய வருமானம் தரும் பணியில் இல்லாவிட்டாலும், சிறிய நிரந்தர வருமானமும் அலைச்சலும் உள்ள பணியில் இருந்தான். கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்களின் சுமாரான ஓய்வூதியமும் உண்டு. மாமியாரை முழுநேரமும் வீட்டில் இருந்து கவனிக்க ஏதுவாக மருமகள் ஜெயகோமதி தான் பார்த்துக் கொண்டிருந்த சிறியதொரு வருமானம் தரும் வேலையை உதறினாள். கண்திறந்து சுற்றுமுற்றும் கவனிக்கும் அளவு திருமதி. விஜயகோமதி அவர்களின் உடல்நிலையில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. வேளாவேளைக்கு எந்தக் குறையும் இல்லாமல் திரவ உணவு மட்டுமே. கண்ணசைவும் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களுமே அவருக்கான மொழியாக மாறின. தனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் மகள் போலவே தன்னைப் பாவித்த மாமியாரைத் தன் மகளாகவே மருமகள் கவனித்தாள். வேலைக்குச் சென்ற தனக்குக் காலையில் எழுந்து சமையல் செய்து, தலை வாரிவிட்டுப் பேணிய மாமியாரைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து தலை வாரி, நெற்றியில் திலகமிட்டுப் பேணிப் பாதுகாத்தாள். மாமியாரே மகள் ஆகப்போவதாலோ என்னவோ, அவளுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அவர்களுக்கு வரும் சிறிய ஓய்வூதியத்தை எல்லாம் மீறி இயன்ற வசதிகளை எல்லாம் செய்து பேணினான் பெறற்கரிய பேறான பெற்ற மகன் சங்கர். படுக்கைப் புண்கள் (Bedsores) ஏற்படக் கூடாது என்பதற்காக நீர் அடைத்த மெத்தை (Water bed), கோடைக்காலத்திற்காக குளிர் மின்சாதனம் (air conditioner) என்று தான் பார்த்திராத விஷயங்களைக்கூட ஈன்று புறந்தந்த தன் தாய்க்காகச் செய்திருந்தான் அத்தனயன். அதுவும் தாய்க்குக் குளிர் அதிகமானால் அவளால் சொல்லக்கூட முடியாதே என்று எண்ணிப் பக்கத்து அறையில் குளிர் சாதனத்தை வைத்தான். ஊழிக்காலம் வரை தன் தாயை வாழவைக்கும் முனைப்பு அதில் தெரிந்தது. தாயின் கண் எதிரே சுவற்றில் பெரிய LED TV யை மாட்டியிருந்தான். அதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு முழுமையான நினைவு வந்து விடாதா என்ற ஏக்கம் போலும். வடிவேலு காமெடியைப் பார்க்கையில் தாயின் முகமலர்ச்சியைக் கண்டு அபரிமிதமான ஆனந்தம். இந்த நிலையில் இருப்பவரைக் கூட தன் உடல்மொழியால் மகிழ்விக்க முடியும் என்று அறிந்தால் வடிவேலுக்கே அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். மற்றபடி திருமதி. விஜயகோமதி அவர்களால் வளர்க்கப்பட்ட அக்கா மகளும் எனது தம்பியான மருமகனும் வார இறுதி நாட்களில் தவறாத ஒரு கடமையாக அவர்களைப் பார்க்கச் சென்று கவனித்ததால் அவ்விருவரும் அவர்கள் நினைவில் நின்றார்கள். திருமதி. விஜயகோமதி அவர்களின் இந்நிலைக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளில் கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் இரத்த சோகையினால் (anemia), திடீரென்று காலமானார்கள். அவர்கள் நோயுற்றிருந்தாலும் படுக்கையில் விழாததால், தந்தைக்குப் பணி செய்யும் வாய்ப்பு மகனுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மறைந்தது மனைவிக்கு புரிந்தது போல் தெரியவில்லை. அவ்வப்போது யாரையோ தேடும் கண் அசைவையும் முக பாவனையையும் வைத்து அவர் கணவரைத் தேடுகிறார் என்பது முழு உணர்வுடன் வாழும் நம் கற்பனை. வழக்கம் போல் தனக்கு நெற்றிப் பொட்டு வைக்காமல் அவள் மட்டும் வைத்திருக்கிறாள் என்று மருமகளை மிரட்சியுடன் பார்ப்பதாய் மகன்-மருமகளின் கற்பனை. எனவே விதவையான பின்பும் உலக வழக்கு ஒழித்து திருமதி. விஜயகோமதிக்கு நெற்றிக் குங்குமம் இட்டு, தலையில் தவறாது பூச்சூடி விட்டாள் மகள் ஒத்த மருமகள். மேலும் அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் கணவர் மறைந்திருக்க வாய்ப்பில்லையே ! சுமார் ஐந்தரை ஆண்டுகள் வேறு எவருக்கும் பெரும் போராட்டமாய் இருந்திருக்கும் வாழ்வை எந்தப் போராட்டமும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்து ஒரு அமைதியான இரவில் நிறைவு செய்தார் திருமதி. விஜயகோமதி. மகன், மருமகள் இருவரிடமும் போராட்டத்திற்கான எவ்விதச் சோர்வும் தெரியவில்லை. போராளிகள் சோர்வடைவது இல்லை. தோல்வி அடைவதும் இல்லை. சாதாரணமாக செல்வந்தர் வீட்டில் கூட இத்தனைக் காலம் படுக்கையில் கிடந்தவர் உடல் சுருங்கி, முகம் முற்றிலுமாக மாறிப் போகவே வாய்ப்பு உண்டு. ஆனால் இவரோ நல்ல நினைவுடன் வாழும் போது இருந்த தோற்றத்தை விட நல்ல ஆரோக்கியமான தோற்றப்பொலிவுடனேயே மரணித்தார். திரவ உணவாக இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ளவையே அளிக்கப்பட்டதால் இருக்கலாம். எல்லாப் புகழும் மகன், மருமகள் இருவருக்குமே. இந்த ஐந்தரை வருடங்களும் படுக்கையிலேயே வாழ்ந்ததற்குப் பதிலாக அப்போதே அவர்கள் மரணித்து இருந்தால் நல்ல சாவாக இருந்திருக்குமே என்பது நம்மில் பெரும்பான்மையான பாமரர்களின் பொதுப்புத்தி. திருமதி விஜயகோமதியின் அன்புசார் பெருவாழ்விற்கு அவரது மக்களால் இத்தனைக் காலம் சீராட்டப்பட்டது அவ்வாழ்க்கைக்கான மரியாதை. அவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. அம்மேதகு அன்னைக்கு இவர்கள் ஆற்றிய பாசப் பிணைப்புடனான தொண்டு இவர்களுக்கான பெரும்பேறு. தாயும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றிய உலகத்திற்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்த பாடத்தின் கால அளவு ஐந்தரை ஆண்டு. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னர் மைத்துனன் சங்கரின் நடவடிக்கைகளை வைத்துப் பொதுவாக நான் சொல்வதுண்டு, "அவன் எனக்கு வாய்த்த, வயதில் குறைந்த ஒன்றிரண்டு குருநாதர்களில் ஒருவன்" என்று. அத்தை என்று எனக்கு உறவு முறையாக அமைந்த திருமதி. விஜயகோமதி அவர்களுக்கான சேவைக்குப் பின், சங்கரும் அவனது துணைவியும் என் போன்றோருக்கு சிவ-பார்வதியாக, நாராயணன்-நாராயணியாகவே காட்சி தருகிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவன் மானிடத்தில்தானே இறையைத் தேட முடியும் ? எனவே எனது 'எஞ்சாமி' பட்டியலில் இனி இவர்களும் உண்டு.
  2. முதலில் கதிகலங்கவைத்த செய்தியினூடாக யாழ்களத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த பதிவாளராகிவிட்ட தமிழ்சிறியவர்களுக்குப் பாராட்டு. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஜம்பவான்களெனத் தமக்குத் தாமே நாமம் சூட்டியவர்களின் வண்டவாளமும் வாய்வீச்சும் தண்டவாளத்தில் ஏறித் தடாலடியாகக் கடலுள் வீழ்ந்த நிலை ஒன்று. அதேவேளை ஊடகங்கள் தனது பணியைத் தனது மக்களது நலன்கருதி செயற்பட்டால் எவளவு மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இரண்டு. யாழ்க்களமானது அனைத்துலகிலும் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாகவும் அமைந்துள்ளது மூன்று. இதனை நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோக முடியாதென்பதையும் மனம்கொள்ளல் நன்று. கருத்துகளிலே பகிரும் விடயங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்றில்லையானபோதும், இனமாக ஒரு பொதுமைப்பண்பியலைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துவதாவே தோன்றுகிறது. எனவே இனநலன் சார்ந்து பதியப்படும் பதிவுகள் உற்றுநோக்கி உறவுகளை வளர்த்தெடுக்கும் புள்ளிகளாக அமைய வேண்டுமென்பதே எனது பார்வையாகும். மொழியால் ஒன்றித்து, மதங்களோடு ஒத்திசைவாக அணுகி எமது அவலத்தைக் களைந்து தமிழீழத்தை மீட்டெடுகச் சிந்திக்கும் பொறுப்புணர்வோடு, யாழ் களத்தின் நோக்கத்தை மெய்நிலையாக்கிட இந்தச் செய்தித்திரியும் சுட்டுகிறது. அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.
  4. காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட். மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான். பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய? எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான். இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான். ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். எங்கட ஊரில? நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்? எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான். 1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான். மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான். ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம். ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான். அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள். நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான். ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும். சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது. தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை. குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், உடான்ஸ் சாமியார் (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)
  5. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  6. நேற்று இரவே தடை விழுந்திட்டுது. நாமலைப் போல விசயம் தெரிஞ்சவை VPN பாவிச்சு சமூக வலைத்தளங்களை பாவிச்சவை!
  7. ஆம்.. அந்தச் சந்தில் தான் கோவிட்-19 தாண்டி நாட்டுக்குள் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்படும். அதை வழங்க மூடிய கூட்டுக்குள் ஒருவர் எல்லா சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றிக் கொண்டு.. குந்தி இருந்தார். அவரிடம்.. நான் ஏற்கனவே பெற்றிருந்த லொக்கேட்டர் கியு ஆர் கோட் டை காட்டி.. அதன் பின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு.. ஒரு அனுமதித் துண்டு சுகாதார அமைச்சின் இலச்சனை பொறித்து தரப்பட்டிச்சு. அதுதான் கோவிட்டுக்குள் நாட்டுக்குள் சென்று வர அனுமதிக்கும் பத்திரம். அது இன்றேல்.. நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை. ஒருவாறு உந்தச் செக்கிங் எல்லாம் முடிச்சு வெளில வந்தால்.. வழமையான நெருக்குவாரமோ.. தொந்தரவோ டியுடிபிறில இல்லை. வாங்க வந்து வாங்குங்க.. என்று ஆக்களுக்கு பின்னால் துரத்துவது முற்றாக இல்லாமல் போயிருப்பது கண்டு வியந்தேன். எல்லாரும் ஒழுங்காக மாஸ்க் அணிந்து அவரவர் வணிக நிலையங்களுக்கு முன் நிற்கிறார்கள் அவ்வளவும் தான். லண்டனில் கூட இந்த ஒழுங்கை காண முடியாது. சிலது மாஸ்க் போடும்.. ஆனால் மூக்கு கீழ். அப்படி எல்லாம்.. அங்கு இருக்கவில்லை. அப்படியே நடந்து.. லக்கேஷ் பொறுக்க வேண்டிய இடத்துக்கு வந்தால்.. போட்டர்கள் தொந்தரவு வெகுவாக குறைச்சிருந்திச்சு. ஆனாலும்..... போட்டர் ஒருத்தன் வந்து.. உதவி தேவையா என்று கேட்டதோடு.. பதிலை எதிர்பார்க்காமலேயே.... ரொலியை தள்ளிக்கிட்டு வந்து நின்றான். கெல்ப் பண்ணுவதாக சொல்லிக்கிட்டே நின்றான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் செய்தான். பிறகு திடீர் என்று உங்கள் லக்கேஷின் நிறமென்ன.. அதில என்ன அடையாளம் போட்டிருக்கு.. என்ன அட்ரஸ் எழுதி இருக்கென்று விபரம் கேட்டான். நமக்கு இவங்கட தில்லாலங்கடி ஏலவே தெரிந்திருந்தால்.. சொல்லவேயில்லை. பிறகு எல்லாத்தையும் விட்டிட்டு லக்கேஷ் தள்ளி வரும் பெலிட்டின் உள்பக்கம் போனான்... வந்தான். ஆனால்.. நான் எதுவுமே அவனுக்கு சொல்லாததால்.. அவனின் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை. நைசாக கழன்று நகர்ந்து சென்று விட்டான். போக முன் பவுன்ஸ் பவுன்ஸ் என்று கெஞ்சிவிட்டுத்தான் சென்றான். எப்படியோ.. விமானங்கள் வரும் நேரம்.. வகை.. நாடுகளை வைச்சு.. இவர் இங்கிருந்து தான் வருகிறார் என்று மோப்பம் பிடிப்பதில்.. போட்டர்கள் செமக் கில்லாடிகளாகவே இருக்கிறாய்ங்க. ஒருவாறு விமான நிலையத்துக்குள் இருந்து வெளிய வந்து பிக் அப் பொயின்றில் நின்றால்.. அங்கு விமானப்படை ஆட்கள் ஒரு சிலர் நின்றாங்கள். அவங்கள்.. இப்ப எல்லாம்.. ரி56 வைத்திருப்பதில்லை. காமாண்டோ.. வகை சிறிய துப்பாக்கிகள் தான் வைச்சிருக்காங்கள். உடைகளும் அமெரிக்க துருப்புக்களின் தரத்துக்கு உயர்ந்திருக்குது. உதுக்கெல்லாம் காசிருக்குது.. என்று நினைச்சுக் கொண்டே அவங்களை கடந்து சென்று காத்திருந்தால்.. காத்திருப்பின் போது நிகழ்ந்தது என்ன..... தொடரும்..
  8. சுப சோமசுந்தரம் அவர்களே... உங்கள் கடந்த கால எழுத்துலத்தை, எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  9. இத்தனை நாட்களாக நாங்களும் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இனியும் இதைத் தான் செய்ய போகிறோம். ஏதாவது ஒரு செய்தி வந்தால் உண்மை பொய் தெரியாது.ஆனாலும் உடனே காப்பி பேஸ்ட் அலுவல் முடிந்தது. ஏற்கனவே சமூகவலைத் தளங்கள் இலங்கையில் முடக்கியாச்சாம். @ஏராளன் கொஞ்சநாள் இங்கு வரலை என்றால் யாழும் வேலை செய்யலை.
  10. இந்த பயம் எனக்கும் இருக்கு சாமியார். வேண்டும் என்றால் திரியை வெளியார் பார்வைக்கு தெரியாதவாறு மூடி வைக்கலாம்
  11. இதுவும் ஒரு டுபாக்கூர் செய்திபோல்தான் இருக்கிறது.....அடுத்தவருட ipl க்கு இப்பவே தன்னை தயார் செய்கிறாராம் கிறிஸ்கெய்ல்.இந்த யூ டியூப் காரரை நினைக்க விரட்டி விரட்டி ......ஹா......ஹா........! 😂
  12. அட நம்ம கொழும்பான இது வாழ்த்துக்கள் என் கதை ஒன்றும் கரண்ட் கட்டாகிறதால அப்படியே இடையே நிற்கிறது கொழும்ஸ்
  13. ஏப்பிரல் முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது... லங்கா ஸ்ரீ, தமிழ் நியூஸ், ஜே. வி.பி நியூஸ், தமிழ் பேஜ், ரமோ நியூஸ், தமிழ் வின், முகநூல், வாட்ஸப் குழுமம், ருவிற்றர், யூ ரியூப், கிளப் ஹவுஸ், டெய்லி மிரர் நிருபர், இந்திய தூதரகம்... என்று, பலரையும்.. நேற்று அலற விட்டுள்ளது. 🤣 எமக்குத் தெரியாமல் வேறு... தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்தப் பதிவை பார்த்து, அரசிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் என்று, நம்புகின்றோம். 🙂 ஆக... இதனால், ஏப்பிரல் முதலாம் திகதியை... நாம் எல்லோரும்... சிரித்து கொண்டாடி உள்ளது, மகிழ்ச்சியை தருகின்றது. 😁 என்றாலும்... இதன் மூலம், சிரமத்தை சந்தித்த யாழ். உறவுகளிடம் நண்பர்கள் என்ற முறையில், மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். 🙏 இந்த செய்தியை பார்த்து, ஊரில் இருந்து... தொலை பேசி எடுத்து... விசாரித்த உறவுகளுக்காக மிகவும் வருந்துகின்றேன். 🥲 இந்தச் செய்தியை... ஊர்ஜிதப் படுத்தாமல், தமது செய்தி போல், வெட்டி ஒட்டிய... மற்றைய இணையத் தளங்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களுடன், ஹாப்பி... "ஏப்பிரல் ஃபூல்" வாழ்த்துக்கள். 🤣 இந்தத் திரியை... கலகலப்பாக கொண்டு சென்ற, யாழ்.கள உறவுகளுக்கு... சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏
  14. நன்றாக உள்ளது, கொழும்பான்…! தொடர்ந்தும் எழுதுங்கள்…!
  15. உங்களது கை தேர்ந்த எழுத்து நடை ...தொடருங்கள் கொழும்பான்
  16. அன்று பிறந்த தனிக்காட்டு ராசா, கொழும்பான் அவர்களுடன் இன்று பிறந்த யாயினி அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  17. யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
  18. சகோதரி யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  19. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.