Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7051
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14676
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    4042
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/20/24 in all areas

  1. இப்படிப் பட்ட வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன் கந்தையர்😎. இந்த புதிய பார்வையின் படி பார்த்தால் முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முன்னரோ இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன்றது என்று எங்கும் முறையிட முடியாது என்கிறீர்கள்? புலிகளுக்கு சாப்பாடு போட்டவன், நகை/காசு கொடுத்தவன், ஆஸ்பத்திரியில் நின்று காயப்பட்டவனைப் பார்த்தவன், வாயால் புலிகளை மெச்சியவன், எழுதியவன் எல்லாரும் சீருடை போடாத புலி வீரர்கள், அவர்களைக் கொன்றதை எப்படி சிங்களவன் அப்பாவிகளைக் கொன்றான் என்பதாம்? (தென்பகுதியில், இப்படி புலிகளின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த பலர் காணாமல் போயிருக்கின்றனர், அதே நேரம் இன்னும் பலர் கைதாகி, சிறை சென்று தண்டனை அனுபவித்து மீண்டும் வெளியே வந்து வாழ்கின்றனர் - அப்ப சிங்களவரின் சிஸ்ரம் புலிகளின் சிஸ்ரத்தை விட டீசன்ட் என்கிறீர்கள்! அப்படியா?)
  2. இவர்கள் இருவரும் தான் ........அதாவது,......வந்து,....புலிகள் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் இப்போது அவர்கள் அரசாங்கத்தின் அணைப்பிலிருப்பதால். ....அந்த 600. .. 700 பொலிஸாரையும். கொன்றது போர் குற்றம் இல்லை என்ன குழப்பாமாக இருக்கிறாதா ??? 🤣
  3. இனத்திற்கு இந்தியாவோடு சேர்ந்தும் (அமிர்தலிங்கம்) சிங்களத்தோடு சேர்ந்தும் (நீலன்) சவக்குழி குழிதோண்டியோருக்கு புலிகள் சவக்குழி தோண்டினர். இனத்தை சிதைக்க நினைத்தவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர் - என்றெல்லாம் எழுத ஏலும். ஆனால் அது வேண்டாம். நீலன், நீலன் என்று ஒப்பரி வைக்கிறீர்கள்... அந்த நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த ஒரு நல்ல விடையத்தை தானுமோ எழுதுங்கோவன், பாப்பம். குபீர்... உங்களுக்கு நீங்களே வெள்ளைப் பெயின்ரை வாளியோட தூக்கி ஊத்துங்கோ.... அப்பதான் சரியா இருக்கும்😂
  4. தங்கள் வேகமாய் கார் ஒட்டுகிறார்களாம்......என்ன ஒன்று ஹான்ட் பிரேக்கை அவர்களும் பார்க்கேல்ல படம் எடுத்த மேதாவியும் பார்க்கவில்லை.......! 😂
  5. அதாவது இத்தனை வருட அனுபவங்கள் பாடங்கள் பாதிப்புக்கள் தராத முடிவை யாழ் களத்தில் பேசப்படும் அல்லது தட்டப்படும் பேப்பர் அனுபவங்கள் தந்து விட்டன?? அவிக்கவும் இடம் பொருள் ஏவல் இருக்கு. அது யாழ் போன்ற தளங்களில் கடினம். கவனம் அரசியல் மேடைகளில் மைக்குக்கு பக்கத்தில் உட்கார்ந்து விடவேண்டாம். அவ்வளவு தான்.
  6. எப்படி வசி தரவுகள் கூட ஒருவரின் சுயமுடிவில் தான் சரியா பிழையா என்று தீர்மானிக்கப் பட முடியும் என்கிறீர்கள்? தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது! இவை தரவுகள்-data. இதை விட ஏதாவது தரவுகள் இருக்கின்றனவா, உங்கள் கருத்திற்கு பலம் சேர்க்க? அபிப்பிராயங்களுக்கும் (opinion), தரவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?
  7. அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும் கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது. போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.
  8. இந்தியா, அனுராவின் வாக்குகளை குறைக்கதான் அங்கு அழைத்தார்களோ தெரியவில்லை... விமல் வீரவம்சா மற்றும் கம்பன்போல போன்றவர்களுக்கு இதனால் கொஞ்ச வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்.. இந்திய விரோத போக்கு சிங்கள மக்களிடம் 80% உண்டு இதை உடைப்பது சரியான கடினம்... சிறிலங்காவில் ...இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய சமுகங்கள் பெளத்த சிங்களவர்கள் 80% கிறிஸ்தவ சிங்களவர்கள் 80% முஸ்லீம் மக்கள் ..100% இந்துக்கள் வட கிழக்கு 50% கிறிஸ்தவ தமிழர்கள் 50% மலையக மக்களின் ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்....அது தான் இந்தியா அவர்களை அதிகம் நம்பியிருக்கு ....
  9. யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்
  10. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  11. இப்ப யார் போர் குற்றம் செய்தது ? விளங்குது தலை .
  12. எனக்கு எந்த குழப்பமுமில்லை ....தமிழர் விடுதலை கூட்டணியின் தீர்மானம் தமிழ் ஈழம் அதனை ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவோம் என்பதும் தீர்மாத்ததும் அவர்கள் தான் இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை செய்யவில்லை ஏமாற்றிக் கொண்டார்கள் யாரை தமிழ் மக்களை வாக்கு போட்ட தமிழ் மக்களை இளைஞர்கள் ஆயுதப்போராட்டம். செய்த போது இவர்கள் அரசாங்கத்துடன் இணைத்து செயல்பட்டது எதற்காக?? பதில் தரவும். ஆயுதமேந்தவிடினும். ஒதுங்கி இருந்து இருக்கலாம் இளைஞர்களுக்கு ஆதரவுடன் பேசி ஊக்கப்படுத்தியிருக்கலாம். சர்வதேசத்துக்கு இளைஞர்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து விளக்கியிருக்கலாம் செய்தார்களா ?? இல்லையல்லவா?? இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியின் மேல் உள்ள ஆசை காரணமாக பேசிய போலி வேஷச பேச்சுக்களை உண்மை என்று நம்பி உள்ள தூய்மையுடனும் விசுவாசமாகவும் கழுத்தில் சாயனைட்டு குப்பிகளுடன். போரிட்டது பிழை தான் ...... ஒன்றல்ல இரணடுயல்ல 40 ஆயிரம் இளைஞர்கள் விரும்பி உயிரை கொடுத்து உள்ளார்கள் .....இது எல்லாம் பெரிய விடயமில்லை இந்த சீருடை அணியதா இலங்கை இராணுவம் நீலன். அமிர்........பற்றி தான் ரொம்பவும் கவலைப்படுகிறேன் நான் குழப்பமின்றியும். தெளிவாகவும் இருக்கிறேன் 🤣😂 மேலே எழுதியது பிடிக்காதவர்கள் குழப்பமடையலாம்.
  13. தமிழர்களின் இறையாண்மையைக் கருத்திலெடுக்காது சிறிலங்காவின் இறையாண்மையைக் காப்பாற்றிய அமெரிக்காவுக்கு சரியான செருப்படி. செருப்படிகள் மற்றைய நாடுகளுக்கும் காத்திருக்கின்றன.
  14. உங்கனட் வீர வசனங்களை தமிழன் கேட்டு கொண்டிருப்பான்...பாவம் அவனது வாழ்க்கை பிரச்சனை....அமெரிக்கா ,இந்தியா ,சீனா கேட்க மாட்டினம் கண்டியளோ .... பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுவது இலகுவானது...ஆனால் நிஜத்தில் அமெரிக்கா உங்களது நாட்டின் உளவுத்துறையினுள்ளே நன்றாகவே ஊடுருவியுள்ளனர்....மக்களை ஏமாற்ற இப்படியான வீரவசனம் தேவை....தமிழனை அழிக்கவும் இறயாண்மை என கத்தினீர்கள். அமெரிக்கா உதவி செய்தது.தற்பொழுது அமெரிக்கா உங்களது இறையாண்மைக்கு ஆப்பு வைக்கிறது ...என குரல் ... இனிவரும் காலங்களில் சிறிய நாடுகள் பெரிய நாடுகளை தங்களது பூலோக அமைவிடத்தை வைத்து பேரம் பேசுவதை இல்லாமல் பண்ண பெரிய நாடுகள் தீயாக வேலை செய்கின்றனர்... சிறிலங்கா,மாலைதீவு போன்ற நாடுகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து அவர்கள் முற்று முழுவதுமாக பெரிய நாடுகளை தங்கி நிற்கும் நிலமை வரும்.....இறையாண்மை,எல்லைகள் எல்லாம் கேள்வி குறியாகும்.... விமான நிலையம்,துறைமுகம்,மத்திய வங்கி,படைகள் யாவும் ஆட்டம் காணும் பொழுது ....இறையாண்மையை வைத்து கிரிபத் சாப்பிடவே வக்கு இல்லாமல் போகும்...
  15. புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்? என்ன "சிரிக்க சிறக்க" பகுதியில் எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்களா? உங்கள் குழப்பமான அலம்பல் உங்களுக்கே புரிகிறதா😂? இப்படிப் பட்ட தீவிர தேசியர்கள் "அப்பன் குதிருக்குள்" இல்லை என்று புலிகளைக் காட்டிக் கொடுக்கும் முழுமையான கூழ்முட்டை கேசுகள்! இப்படிப் பட்டோருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அமரர் விவேக் கொமெடி பார்த்த அளவு சிரிப்பு வரும்😂!
  16. நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இரண்டு.........! 😂
  17. அழைப்பில் அலாதி ஆனந்தம் கதையாசிரியர்: வளர்கவி கதை வகை: ஒரு பக்கக் கதை கதைத்தொகுப்பு: குடும்பம் கதைப்பதிவு: February 19, 2024 பார்வையிட்டோர்: 448 நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம். என்வீட்டிற்கு வந்தவர் ‘கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு. ‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’ என்றேன். ‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில் மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்! உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார். ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது. சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய் அமைந்தது. எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார். நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து கொள்வதில்லை. காரணம்… அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில் தானே வருகிறது?! வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது. https://www.sirukathaigal.com/ஒரு-பக்கக்-கதை/அழைப்பில்-அலாதி-ஆனந்தம்/
  18. Polappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.
  19. பாடலும் இசையும் வரிகளும் நெஞ்சைப் பிழிகின்றது......! 😢 👍 நன்றி ஏராளன் ........!
  20. நான் அப்படி நினைக்கவில்லை ஈழப்பிரியன்
  21. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க திட்டம்.????
  22. முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினச் சுத்திகரிப்பு கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களும், கொக்கிளாய் ‍ நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களும் முல்லைத்தீவு மாவட்டம் மீது அரசினதும் மக்களினதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. இத்தாக்குதல்களில் 120 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இதற்குப் பழிவாங்கலாக இராணுவமும் சிங்களக் குடியேற்றக்காரர்களும் நடத்திய பழிவாங்கல்த் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு தென்னமரவாடி, அமரவயல் ஆகிய புராதனத் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் நிரந்தரமாகவே சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல்ப் படுகொலைகள் மார்கழி மாதத்திலும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. போராளி அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி வவுனியா இராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருந்த 21 தமிழ் இளைஞர்களை மார்கழி 1 ஆம் திகதி வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது இராணுவம். இராணுவக் காவலில் இருந்து தப்பிச் செல்ல எத்தனித்தபோதே தாம் அவர்களைக் கொன்றதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கு மேலதிகமாக டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளுக்கு அருகில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த 12 இளைஞர்களையும் இராணுவம் சுட்டுக் கொன்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒதியாமலை எனும் புராதனத் தமிழ்க் கிராமத்திற்கு மார்கழி முதாலாம் திகதி இரவு சென்ற 35 இலிருந்து 40 பேர் அடங்கிய பதவிய இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் , மலைக்காடு கோவில்ப் பகுதியில் அன்றிரவைக் கழித்து, பொழுது புலரும் வேளையில் ஒதியாமலைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயது முதல் 35 வயதுவரையான ஆண்களைக் கைதுசெய்தனர். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில் இளைஞர்களைக் கைதுசெய்தபோது அவர்களது குடும்பங்களின் முன்னிலையிலேயே அவர்களைக் கடுமையாகத் தாக்கத்தொடங்கியிருக்கின்றனர் இராணுவத்தினர். பின்னர் அவ்விளைஞர்கள், கைகள் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் சிலரை 25 சிறீ 6511 எனும் இலக்கத் தகடு உடைய உழவு இயந்திரத்தில் ஏற்றி கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இராணுவத்தினர். இவ்விளைஞர்களுடன் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்களையும் இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் 27 பேர் மிகக்கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததுள்ளதோடு இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு மிகக் கிட்டத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே உழவு இயந்திரத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களை ஏற்றிய இராணுவத்தினர் கிராமத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று தீமூட்டியிருக்கின்றனர். மீதமாயிருந்த ஐந்து 60 வயது ஆண்களினதும் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் டொலர் பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. பாதி எரிந்த் நிலையிலிருந்த சடலங்களில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே கொல்லப்பட்டவர்கள் ஒதியாமலையில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது தெரியவந்திருந்தது. இக்கிராமத்திலிருந்து அன்று மட்டும் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட குறைந்தது 32 ஆண்களின் விபரங்களை சர்வதேச மன்னிப்புச் சபையிடம் உறவினர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒதியாமலையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய படுகொலைகள் புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. மார்கழி 4 ஆம் திகதி பதவியா பகுதியில் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை புலிகள் நடத்தினர். இத்தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்ட, பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கிய இராணுவத்தினர் அப்பகுதியில் வசித்து வந்த குறைந்தது 90 தமிழர்களை அன்று சுட்டுப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும், சிறுவர்களும் முதியவர்களும் அடங்கும். காமிணி திசாநாயக்க‌ மாதுரு ஓயாவில் தான் நடத்த முயன்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தின் தோல்வியையடுத்து தனது நேரம் வரும்வரை காத்திருந்த காமிணி, தனக்கான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருப்பதாக எண்ணினார். நிவிட்டிகலையில் மார்கழி 3 ஆம் திகதி, பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர் நாட்டின் ஒற்றையாட்சி யாப்பினைக் காத்துக்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்துவிட்டதாக அவர் அறைகூவல் விடுத்தார். "நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும், பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காக்க வரும்படி அரசிடம் இருந்து அழைப்பு வந்தால், தமது கைகளில் கிடைக்கும் எந்தவொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு சண்டைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் . அந்த ஆயுதம் கத்தியாகவோ, மண்வெட்டியாகவோ அல்லது இரும்புப் பொல்லாகவோ கூட இருக்கலாம். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட்டாலன்றி இந்த நாட்டையும் மக்களையும் காப்பதென்பது சாத்தியமாகாது" என்று கூறினார். காமிணியின் புதிய அவதாரத்தால் தான் பிந்தள்ளிவிடக்கூடாது என்று அஞ்சிய லலித் அதுலத் முதலி, போராளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். மார்கழி 8 ஆம் திகதி வட மாகாணம் முழுவதையும் 42 மணிநேர ஊரடங்குச் சட்டத்திற்குள் கொண்டுவந்து , அப்பகுதியெங்கும் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையினை அவர் ஆரம்பித்தார். கிராமம் கீராமமாக சுற்றிவளைத்த இராணுவத்தினரும் பொலீஸாரும், வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பல இளைஞர்கள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மொத்தமாக 3,000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களுள் 800 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். தேடுதல் நடவடிக்கைகளின்போது பத்து இளைஞர்களை இராணுவம் கொன்றிருந்தது என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் அறிக்கை கூறியது. தமிழர்களுக்கெதிரான உணர்வுகள் சிங்களப் பகுதிகளில் மீண்டும் மூர்க்கமாகத் தூண்டிவிடப்பட்டது. இரத்திணபுரியில் இயங்கிவந்த தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளைச் சிங்களவர்கள் எரித்தனர். ஹட்டன் நகரிலும் இரு தமிழ்க் கடைகள் எரியூட்டப்பட்டன. மலையகத்தின் பல நகரங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், பெருமளவிலானவர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகினர். கறுப்பு நீல நிறங்களில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் திருகோணமலை நகரில் தோன்றியிருந்தன. "தமிழ் ஈழம் கேட்பவர்கள் துரோகிகள்" என்று ஒரு சுவரொட்டி கூறியது. "அனைத்துத் துரோகிகளையும் திருகோணமலையினை விட்டுத் துரத்துவோம்" என்று இன்னொரு சுவரொட்டி கூறியது. "சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைபார்க்க முடியாது என்றால், தமிழர்கள் திருகோணமலையில் வேலை பார்ப்பது எப்படி?" என்று கேள்வியெழுப்பியது இன்னொரு சுவரொட்டி. வலி ஓயாவிலிருந்து தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்துவந்த அதேவேளை, தமிழர்கள் மீதான படுகொலைகளும் அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. மார்கழி 6 ஆம் திகதி தமிழரின் பூர்வீகக் கிராமமான திரியாயில் 24 மணிநேர ஊரடங்கினை இராணுவம் அமுல்ப்படுத்தியது.அக்கிராமத்தில் வசித்து வந்த 1399 குடும்பங்களையும் விளையாட்டு மைதானம் ஒன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் இராணுவம் அறிவித்தது. இராணுவ அறிவிப்பை ஏற்று மைதானத்தில் கூடிய பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை இராணுவம் மேற்கொண்டது. கடுங்காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதேவகையான தாக்குதல்கள் வேறு தமிழ்க் கிராமங்களிலும் நடைபெற்றன. பெரியகுளத்தில் 20 இளைஞர்களைக் கைதுசெய்த இராணுவம் அவர்களை வீதியோரத்தில் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. 1984 ஆம் ஆண்டு மார்கழி முதல் 1985 ஆம் ஆண்டு தை வரையான காலப்பகுதியில் பின்வரும் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டனர். கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கணுக்கேணி, உத்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில். போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலும் அரசாங்கம் தொடர்ந்து நடத்தி வந்தது. மார்கழி 12 ஆம் திகதி செய்தியாளருக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர், யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குச் சற்று வெளியே அமைந்திருந்த கைதடிப் பகுதியில் குறைந்தது 200 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகக் கூறினார். ஆனால், கைதுசெய்யப்பட்ட அனைவரும் தனியார் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்களே என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு அறிவித்திருந்தது. மன்னாரின் ஜீவோதயம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதிரியார் ஜெயராஜசிங்கத்தின் நினைவுத் தூபி 2003 மறுநாள், மார்கழி 13 ஆம் திகதி மெதடிஸ்த்த திருச்சபையினைச் சேர்ந்த பாதிரியார் என்.ஜெயராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டர் வண்டி மன்னாரின் முருங்கன் பகுதியூடாகச் செல்லும்போது இராணுவச் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ஜெயராஜசிங்கம், அவரது சாரதி அப்துள் காதர் சுலைமான் மற்றும் முருங்கன் பொலீஸ் நிலையத்தில் கொன்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த ஜேசுதாசன் ரோச் ஆகிய மூவரினதும் உடல்கள் பாதி எரிந்த நிலையில் பாதிரியாரின் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. ஐந்து நாட்களுக்குப் பின்னர், மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜீப் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பொலீசாரும் அவர்களது சாரதியும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். மறுநாள், மார்கழி 19 ஆம் திகதி இரு அதிகாரிகளும் இரு சிப்பாய்களுமாக நான்கு இராணுவத்தினர் பதவியாவில் கண்ணிவெடியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டனர். பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவம் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. அதேநாள் புல்மோட்டைப் பகுதியில் இரு இராணுவத்தினர்கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் இன்னும் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். மார்கழி 8 இலிருந்து 10 வரையான நாட்களில் தான் வட மாகாணத்தில் முடுக்கிவிட்ட தேடுதல் வேட்டை நடவடிக்கைகள் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நிறுத்தப் போதுமானவை அல்ல என்பதை உணர்ந்த லலித் இன்னுமொரு தேடுதல் நடவடிக்கையினை மார்கழி 19 ஆம் திகதி ஆரம்பித்தார். இராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் சுமார் ஆயிரம் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டனர். தனது இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமட்டாங்கள் முடக்கப்பட்டு வருகின்றமையினால், தாம் இனிமேல் ரொக்கெட் தாக்குதலிலும், சிறியரக எறிகணைத் தாக்குதல்களிலும், குண்டுவீச்சிலும் ஈடுபடப்போவதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சண்டை மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது. பொதுமக்களின் மரணங்கள் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்தன. கார்த்திகை மாதத்தின் இறுதிப்பகுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியிருந்தது. இராணுவத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த புதியவகைத் தாக்குதல்கள் போராளிகளையும் அத்தாக்குதல்களில் ஈடுபட உந்தியிருந்தது என்று என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசிய சில அதிகாரிகள் தெரிவித்தனர். லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் இயன் ஜக் இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்களுக்குச் சென்றுவந்தார். 1984 ஆம் ஆண்டு மார்கழி 16 ஆம் திகதி அவர் எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. "உண்மையாகச் சொல்வதானால், இலங்கை இராணுவம் தனது சொந்த நாட்டிற்குள்ளேயே முற்றுகைக்கு உள்ளக்கப்பட்டு, மண்மூட்டைகளுக்கும், முட்கம்பிகளுக்கும் பின்னால் மறைந்து நடுங்கிக்கொண்டு நிற்கிறது" என்று எழுதினார்.
  23. இலங்கை ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை - கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதியின் இணையத்தளத்தில் வெளியிட கோரிக்கை Published By: RAJEEBAN 20 FEB, 2024 | 10:44 AM இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத அளவிற்கு தாண்டியுள்ளது எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழுவை அரசாங்கம் உருவாக்கவுள்ளது உண்மை மற்றும் ஐக்கியம் நல்லிணக்கம் ஆணைக்குழு எனப்படும் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது எனவும் உண்மை நீதிக்கான சர்வதேச திட்டம் தெரிவித்துள்ளது. எனினும் நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னமும் சாத்தியமாகத விடயங்களாவே காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ஐடிஜேபி இதன் பின்னர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உத்தேச நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்து 37 சிவில்சமூக அமைப்புகளும் 19 சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் அவர்கள் கடந்தகால ஆணைக்குழுக்களின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களை அரசாங்கங்ம் பகிரங்கப்படுத்த தவறியதை சுட்டிக்காட்டுகின்றனர் புதிய ஆணைக்குழுவிற்கு போதிய அதிகாரங்கள் இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் பொருத்தமான நீதிப்பொறிமுறை இன்மை கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியமையையும் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் ஒரு, அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல. இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது. சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது. ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதே எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும். நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, பட்லந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும் தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும். இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176832
  24. Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்
  25. உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு. அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.
  26. இலங்கைத் தமிழரை அழித்ததோடு இந்திரா காங்கிரசும் வீழ்ந்தது. அதிலிருந்து இன்னமும் எழும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மையான வெற்றியுடன் மோடி வருவார்.
  27. பல வருடங்களுக்கு முன் "மித்திரன்" பத்திரிக்கை என்று நினைக்கிறேன் அதில் "அழிவின் எல்லையில் 65 நாட்கள்" என்னும் ஒரு கட்டுரைத் தொடர் வந்தது.......அதிலே விமான விபத்தில் எங்கோ விழுந்தவர்கள் தாம் உயிர் வாழ்வதற்காக இறந்தவர்களை சாப்பிட்டு கடைசியில் சிலர் தப்பித் பிழைத்து வந்ததாக படித்த ஞாபகம்......!
  28. படகில் வெடிமருந்தைக் கொண்டுசென்று இலக்கின் மீது மோதியிடிக்கும் தொழினுட்பம் இரண்டம் உலகப்போரில் தான் ஆரம்பமானது. அதை முதன் முதல் வேற்றிகரமாக பாவித்தவர்கள் இத்தாலியர்கள் (https://en.wikipedia.org/wiki/MT_explosive_motorboat) - அடைப்படை அறிதலுக்கு பாவிக்கவும். (புலிகள் தாமாக புதுப்புனைந்தது/வடிவமைத்தது "சாச்சர்" (Suicide vest/belt/jacket or whaterver) மட்டுமே) அதே!
  29. தாழப் பறந்து ரேடாரில் இருந்து தப்புவதெல்லாம் இஸ்ரேல் 60 களில் பயன்படுத்திய நுட்பம், அதை புலிகள் பின்பற்றினர், இப்ப உக்ரைன் பின்பற்றுகிறது. இது "தமிழ் தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் தோற்றுவாய்" என்ற உருட்டல் போல அல்லவா இருக்கிறது?
  30. உண்மை சம்பவத்தை மிகவும் அருமையாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் ...நன்றிகள்
  31. உப்படி எதிர்கருத்காளர்களை உசுப்பேதினால் பிறகு நானும் எழுதி அதிக பச்சைகளை பெற்று விடுவேன் ...
  32. இது ஒரு நிர்வாகப் பதவி. பெண், ஆண், இடைப்பாலினர் ஆகிய எவரும் தகுதி இருந்தால் வழங்கப் பட வேண்டிய பதவி. இதில் "கலாச்சார விழுமியம் காக்க" அவர் பெண்கள் பாடசாலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். அதென்னப்பா ஆண்கள் பாடசாலையின் "கலாச்சார விழுமியம்" 😂?
  33. எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
  34. செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும். மேலதிக தகவல் பி.பி.சி யில்: இது வரை 160 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதில் 57% பி.ஜே.பிக்கு, வெறும் 10% தான் எதிர் கட்சியான காங்கிரசுக்கு போயிருக்கிறது. பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!
  35. @vasee இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில் பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது. இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்? சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள். நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது. அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள் இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று தோற்றியதன் மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள். தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி போட்டு அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
  36. வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்? பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!). காரண காரியத் (cause and effect) தொடர்பை கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!
  37. என்ன கொண்வூயுஸ் ஆகிட்டியல் பெருமாள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கு போய் எம.ஜீ.ஆரின் படம் பார்த்திட்டு வாரவயலாம்.. இனி வரும் காலங்களில் இந்தியா ரூபாவை தான் இறையாண்மையுள்ள சிறிலங்கா உப யோகப்படுத்தும் நிலமை வரலாம்.. சிறிலங்கணுக்கு விசா தேவையில்லை இந்தியாவுக்கு செல்ல... கால போக்கில் இந்திய கடவுச்சீட்டு சிறிலங்கனுக்கு வழங்கலாம்...
  38. செய்யப்படட தவறுகளுடன் இந்த மாபெரும் தவறையும் செய்து விடடார்கள். நல்ல ஒரு நேர்மையான , நீதியான , மற்றவர்களால் மதிக்கப்படட ஒரு தலைவரை கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம். 😭
  39. Packiyanathan Sasikumar derStponos031l5hc071i f58c3a206288m13g38hcm8hg545036h9a0m09a · முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.* அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை *என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
  40. Variety of images Lakshmi Venkatesan · · முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது. "இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் . நான் இறந்து விட்டால்... என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை. எனவே எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன். வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." இப்படிக்கு மீனாள் ராமசாமி. என்று எழுதி இருந்தது. சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 'யார் இந்த மீனாள் ராமசாமி? ' என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். ஆனால், வேலைப் பளு காரணமாக முடியவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை... 'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. சின்ன கட்டிடம்... வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். "நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” என்று கேட்டார். “ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார். விவரங்களைச் சொன்னார். “அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம்... உட்காருங்க. ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று இருக்கையைக் காண்பித்தார். “ஒன்றும் வேண்டாம் தண்ணீர் மட்டும் கொடுங்கள்” தண்ணீர் கொடுத்தபடியே, “நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்... ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் . பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும். கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை... எனவே, அதிகம் செலவுகள் இல்லை. அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம். வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” என்று விபரமாகச் சொல்லி முடித்தார். இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது. “இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். “சரிங்க ஐயா, உங்களைப் பார்க்க வந்தேன். வேறு விஷயம் இல்லை... கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர். சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது . அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது . வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் “நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் " என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கு கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக் கொண்டார்கள். பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள். “கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “ என்று கேட்டார் மானேஜர். “இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்” “இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” என்று சொன்னார். மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். மாதங்கள் போனது. கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை. காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள். மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். அதே கல்லாப்பெட்டி . எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை. உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். மேனேஜருக்கு புரிந்து விட்டது. விசாரித்ததில்... அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி. “உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும் “என்று சொன்னார். “நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். “இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன். அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். “சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள். இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது... *இந்த உலகம் எப்படி பட்டது * என்று... எதையும் பெறுவதை விட... *கொடுப்பதில் தான்... * *ஆனந்தம்,* *அமைதி,* *திருப்தி* *நிம்மதி* உள்ளது. இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான். நன்றி! Singaravelu Balasubramaniyan
  41. 👸🥰 தமிழ் மனைவிகள் vs தமிழ் கணவர்கள்😘🤵 · Rejoindre Velocity S · · நீதிபதி தன் மனைவியிடம் சொன்னார், "என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்தபோதும் பிறகு நீதிபதியாக வந்தபோதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை, அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது" மனைவி கேட்டார்:- அப்படி என்ன வழக்கு சொல்லுங்கள்!! அதற்கு நீதிபதி சொன்னார்:- வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால், "என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது, எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்!! உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன், இவர் உங்களின் தந்தையா.?? என்று கேட்டேன்!! அதற்கு அவர்:- ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார்!! அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன், உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்.?? ஏன் அப்படி கொடுப்பதில்லை.?? அதற்கு அவர் (மகன்) சொன்னார்:- ஐயா, அவர் பணக்காரர். அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது. அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அதனால்தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை. இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது!! நான் முதியவரிடம் கேட்டேன். உங்களுக்கு பணம் உள்ளது, மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது, வரவை விட உங்களின் செலவு குறைவாகத்தானே இருக்கிறது.?? என்று கேட்டேன்!! அதற்கு அந்த பெரியவர்:- ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது. இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும். அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து, குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்!! நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து, ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்!! நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து, உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த முதியவர் சொன்னார், எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன். நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம், மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார்...... Voir la traduction
  42. இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும் என்பது போல?? உங்களை தூக்க போகிறார்கள் கவனம் ராசா.
  43. ஒரு வீட்டிற்கு 18 சனல் வைத்திருக்கிற குடும்பத்துக்கு பிழைப்பு வேணுமே...வெளிநாட்டு உழைப்பை நம்பியிருந்த காலம்போய் ..விரைவில் யூடியூப் வருமானத்தை...நம்பியிருக்கும் ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது...படிப்புமில்லை ஒன்றுமீல்லை..பகிடி என்னவென்றால் தாய் தந்தையரின் லவ் ஸ்ட்டோரியை பிள்ளைகள் சூழைவிருந்து படமாக்குகினம்...இதனை வெளிநாட்டு ரசிகர் கூட்டம் ரசித்து லைக்கு போடுகினம்...கனடா விசிட்டர் விசாவில் பல யூடியூப்பர்கள் வந்துவீட்டினம்..ஒரு கோக்கு கான் ரோட்டில் கிடந்தாலே ..ஒரு வீடீயோ வருகுது...இன்னும் என்னவெல்லாமோ வரும்...
  44. இங்கும் சில குளறபடிகள் நடக்கிறதாக அறியக் கூடியதாகவும் இருந்தது.இறந்தவரின் அஸ்த்தியை வைத்துக் கொண்டே இன்னும் அஸ்த்தி வரவில்லை. நீங்கள் கடசியாக எங்கே கொண்டு போய் ஈமைக்கிரியை செய்தீர்களோ அந்த மண்டபக்காரரிடம் போய் கேழுங்கள் என்று சொல்லும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.இறந்து பொடியான பின் எந்த அடையாளத்தை வைத்து நாம் உரிமை கொண்டாட முடியும்.என்ன இந்த யாயினி இப்படி எல்லாம் எழுதுறா என்று நினைக்க கூடாது.நானும் வருடம் தோறும் இறப்புக்களை சந்தித்துக் கொண்டே வருகிறேன்.கடந்த 3 1/2 ஆண்டுகளுக்குள் அம்மா, அண்ணா, அப்பா, என்று 3 பேர் போய் விட்டார்கள்.மன அமைதிக்காக ஏதோ ஒன்றை செய்து விட்டு போகிறோம்.🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.