Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 02/21/24 in all areas
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂? அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள். சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!4 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை. ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது. புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் (சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்) ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994 ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி 2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா? மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்? நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும். அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள் புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள். உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.3 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகள் பாகம்… 1 1. தமிழரசு கட்சி கிராமங்களில் கட்சி கிளைகளை நிறுவதாது தவறு 2,.தமிழரசு கட்சி நகரங்களின் கிள் இல்லாதது தவறு 3,..தமிழரசு கட்சிக்கு மாநகரங்கில். கிளைகள் இல்லாதது தவறு 4,.1,2,3. உள்ளவர்கள் இணைந்து மாகாணத்தில் கிளை. அமைக்காதது தவறு 5, .....மாகாண கிளைகளை இணைத்து நாடு தழுவிய கிளை இல்லை என்பது தவறு 6, 1948 இல். இருந்த எண்ணிக்கையில் பொது சபை உறுப்பினர்கள் இருக்கிறது தவறு 7,..இந்த பொது சபை உறுப்பினர்களை. தலைவர் பதவிக்கு போட்டு இடும் தலைவர்கள் நியமிப்பது தவறு 8,...அதே பொது சபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு. செய்வது தவறு 9.....தேர்தல் நேரங்களில் மட்டுமே கட்சி கூட்டம் நடத்துவது தவறு 10, ...இந்த தவறுகளை நான் தவறு. என்று சுட்டி காட்டி எழுதியது தவறு பாகம்… ஒன்று இத்துடன் நிறைவு பெறுகிறது 🤣🙏🤣3 points
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
Madam இப்படி பொங்குகிறார். ஒரு சட்டத்தை அமுலாக்க பிக்குகளிடம் ஆசீர்வாதத்துக்கு போகிறார்கள் நாட்டு தலைவர்கள்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பச்சை முடிந்து விட்டது இந்த திரியில் யார் திசைமாறி கூட்டமாக இருப்பதை பாருங்கள் அவர்கள் எண்ணப்படி நடக்கவில்லை அதனால் புலிகளை இழுத்து தாங்கள்தான் நீதிபதி போல் எப்போதோ அழிந்து போன புலிகள் மீது போர்குற்றம் சொல்கிறார்கள் இவர்கள் யார் புலிகளை குற்றம் சொல்ல ?2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்! இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை - ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது. ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம். பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு!2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை எந்த இனமும் 100% மனித பண்புகளுடன் வாழவில்லை...இதை புரிந்து கொள்ளாத படியால் தான் இந்த கருத்துக்கள் வருகின்றனர்... நேற்று ஹாமாஸின் உயர்மட்ட பேச்சாளர் நைஜீரியாவில் ஒர் பேட்டியில் சொல்கின்றார் ஒக்டம்பர் 7 ஆம் திகதி தாங்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் ஒர் இராணுவ நடவடிக்கை என்று.... இதை எமது போராளிகள் செய்தால் பயங்கரவாதம் என அவர்கள் இல்லாத பொழுதும் பக்கம் பக்கமாக விமர்சனம் வைப்பார்கள் .....ஆனால் பலஸ்தீனருக்காக பக்கம் பக்கமாக நியாயபடுத்தல்கள் .... ஏன் தோண்டுகிறார்கள் ,நோண்டுகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி...ஏதாவது பலன் ? விட்ட தவறிலிருந்து பாடம் கற்க வேணும் என பாடம் எடுப்பினம்...2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தற்போது புலி எதிர்ப்பு கருத்து வைத்தால் அல்லது சொந்த இனத்தை கெக்கே பிக்கே என்று நக்கல் அடித்தால் குழுவாக வந்து பச்சை போடுகிறார்கள் இந்த திரியே சாட்சி .2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆 இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த உத்தியோகஸ்தர்களே. “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”, என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார். கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது. கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சனநாயகம்தான் திறம் என்பார்கள். மேற்கின் கொள்கைகள்தான் better என்று கூறுவர. மேற்கிலேயே வசிப்பார்கள். ஆனால் மேற்கால் வெறுக்கப்படும், நாகரீக சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத அரசியல் தனிமனிதப் ப்டுகொலைகளை வரவேற்பார்கள். போற்றுவார்கள். வாழ்த்துவார்கள். ஆனால் தனிமனிதப் ப்டுகொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மட்டுமல்ல, அவை எமக்குத் தீங்கானவை எனக் கூறுவோரை துரோகி என முத்திரை குத்துவர். ஒண்ணுமே புரியல உல்கத்துல. 😩2 points- இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
சுரண்டுவது வேறு , கொள்ளையடிப்பது வேறு. இந்திய மீனவர்கள் இப்போது கடத்தி கொள்ளையர்களாக மாறி விடடார்கள். கொள்ளையடித்தல் மட்டும் பரவாயில்லை அங்குள்ள மீன் உட்பதியாகும் பாறைகளெல்லாவற்றையும் அடியோடு நாசமாகி விட்டு செல்லுகிறார்கள். அவர்களது பகுதியில் மீன்கள் இல்லாமல் போவதட்கு முக்கிய காரணமே இதுதான். இலங்கை கடட்படை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்படி எழுதினால் துரோகி படடம் கிடைத்தாலும் கிடைக்கும்.2 points- அதிசயக்குதிரை
2 pointsஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்... நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ??? குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...! நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!??? குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே... ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... காலம் ஓடியது..... என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.... அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்... என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்... என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா? அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்... என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... . . . நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை, நன்மைக்காக கொண்டுவரப்பட்ட தாக அறியபடுகின்ற இத்திட்டம் சிங்களத்தின் இனவாதத்திற்கு மறைமுகமாகவும் உதவியது. அதாவது, தமிழர் தாயகத்தில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தை இது மேலும் துரிதப்படுத்தியது எனலாம். எப்படியெனில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டதால் பெருந்தோட்ட முதலாளிகள் முதல் நிலதாரிகளின் மேலதிக நிலங்கள் வரை அரச மயப்படுத்தப்பட்டன என்பதெல்லாம் யாவருமறிந்தது. இத்தால் அரை-நிலப்பிரபுத்துவ விளைச்சல் சமூகத்தில் இருந்து உழைப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; சுதந்திரமான கமக்காரர்களாக மாறினர். இவர்கள் கமம் செய்வதற்கு நிலங்கள் வழங்கப்பட்டன. பலருக்கு எங்கே வழங்கப்பட்டன? தமிழீழத்தின் எல்லை ஊர்களில்..... அங்கிருந்த ஆட்களற்ற பெரும்பாலான காணிகளுக்குள் இவர்கள் குடியேற்றப்பட்டனர். இதுவும் சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்காக பாவிக்கப்பட்டது! (இந்தியாவிலும் இலங்கையிலும் இத்திட்டம் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது)2 points- யாழில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்!
200 பேர் பயணிக்கும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம்! 20 FEB, 2024 | 07:55 PM இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது. அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என மஹாசென் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176908 படகா? கப்பலா?!1 point- நடனங்கள்.
1 point1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அரசியல் வன்முறை இல்லாத ஒர் சமுகம் உலகம் பூராவும் இருக்க வேண்டும் என்பது எனது தெரிவு மட்டுமல்ல சகல மனிதர்களின் விருப்பம் .....அதை தான் மக்கள் விரும்புகின்றனர் .... மக்கள் மீது அரசியல் வன்முறைகள் திணிக்கப்படுகிறது ...காலம் காலமாக ...... இன்று நாம் ஒல்லாந்தர்கள் படையெடுத்தார்கள் போத்துகீசர் படையெடுத்தார்கள்,மக்களை கொன்று வீடுகளை இடித்தழித்தார்கள்,சோழர்கள் படையெடுத்து வந்து அட்டுழியங்கள் செய்தார்கள் இதை எல்லாம் நாங்கள் கடந்த 75 வருடங்களுக்கு முதலிருந்து பேசவே இல்லை ....அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டோம்....அவர்கள் செய்ததும் அரசியல் வன்முறையே.. போராளிகள் என்ற போர்வையில் செய்த வன்முறைகளை நாம் காலம் காலமாக கடந்து வந்துள்ளோம் ...காவியும் செல்கின்றோம் ...சிவப்பு சிந்தனையாளர்கள் செய்த அரசியல் வன்முறைகளை புரட்சியாளர்கள் என்ற முத்திரை குத்தி இன்றும் எடுத்து செல்லப்படுகிறது வன்முறைகள் அற்ற சமுகம் உலகத்தில் மலரட்டும் ....என்ற கற்பனையில் நான் ... இனிவரும் காலங்களில் மத நம்பிக்கையின் அடிப்படையில் போர் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்....அது வன்முறை கலந்த ஒன்றாக உலகை ஆட்டிப்படைக்கும்.....1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகள் பாகம், .......2 1, தமிழர் விடுதலை கூட்டணி இலங்கையில் தமிழருக்கு பிரச்சனைகளுண்டு என்றது தவறு 2,. தமிழர் விடுதலை கூட்டணி தனி தமிழ் ஈழம் என்று தீர்மானம் நிறைவேற்றியது தவறு 3. .... தமிழ் ஈழம் பெறும் வழி ஆயுதம் ஏந்தி போராடுவது என்ற தீர்மானம் தவறு 4 .....தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சியைப். பெற்றுக் கொள்ளாமலிருந்தது தவறு 5,.......இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் நின்று போராடாமல் விட்டது தவறு 6,......புலிகள் இளைஞர்களை திரட்டி ஆயுதப்பயிற்சியைக் கொடுத்தது தவறு 7,. .புலிகள் போராடியது தவறு 8,.. ....இராணுவ முகாமைத் தாக்கி அளித்து ஆயுதங்களை கைப்பற்றியது தவறு 9........அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்தது தவறு 10. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டது தவறு 11,.......ஆயுதங்களைக் போட்டு விட்டு சரண் அடையாமால் போரிட்டது தவறு 12,....இனவழிப்பு. போர் குற்றம் என்று முறையீடுவது தவறு 13,. ......ஒரே விடயத்தை எல்லா திரிகளிலும். எழுதுவது தவறு 14,....... இலங்கையர்களை தமிழர்கள் என்பது மிக தவறு இரண்டாவது பகுதி நிறைவு 🤣🙏1 point- எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
காலனித்துவ காலத்தில் பல மலையாளிகள் குடியெறி இன்று அவர்கள் சிறிலங்கா பிரஜைகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றனர்...இந்து மலையாளிகள் தமிழ் மொழி பேசி இந்துக்களாக மாறி உள்ளனர்..முஸ்லீம் மலையாளிகள் இஸ்லாமியர்கள் என்ற அடையாலத்துடன் வாழ்கின்றனர்,கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசி தம்மை சிங்கள மேட்டுக்குடியினருடன் இரண்டர கலந்து சிஙள்வராக மாறிவிட்டனர்....பொருளாதாரத்தில் பின்னடைந்த ,கல்வி அறிவு குறைந்த மலையாளிகள் நீர் கொழும்பு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு இன்று தீவிர சிங்கள தேசிய பற்றாளர்களாக வாழ்கின்றனர் ... சிறிலங்கா காலணித்து காலத்தில் மிகவும் செல்வ செழிப்புடன் இருந்துள்ளது ..இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது...எனவே இந்தியாவிலிருந்து சிலர் தொழில் மற்றும் வியாபரம் செய்ய வந்து குடியுரிமை பெற்று விட்டனர்... இதில் பகிடி என்னவென்றால் சிங்களவர்கள் நினைப்பது போல தமிழர்கள் தான் குடியேற்ற வாசிகள் என்று...ஆனால் அவர்களுடன் நின்று சிங்கள தேசியம் பேசும் பலர் இந்தியாவிலிருந்து வந்த மக்கள் கூட்டமும் அடங்கும் என்பதையும் மறந்து விட்டனர்..1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- Akshika Kandeepan - Kristie Greev Award Winner(தியா-நிகேயின் மகள்)
1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளை போற்றுகிறோம் என்றபடி இங்கே அவர்களது தவறுகளை மட்டும் கண்டு பிடித்து வறுத்து மகிழ்கிறீர்கள். தமிழரது போராட்டத்தின் தியாகம் உறுதி கொடுத்த விலை தெரிந்த எந்த தமிழரும் அதை தோண்டார் நோண்டார். தலைவர் சொன்னது தான். தமிழரை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். நான் சொல்வது இங்கே புலிகளை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். டொட்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்க வேற. அவர் தான் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்க போகும் தலைவர். அதிலும் ஆயுதப் போராட்டத்தில் நடந்த தவறுகளை தவிர்க்க விரும்புகிறார் என்றால் என்ன போராட்டம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதற்கு இங்கே யாழ் களத்தில் கூட அவருடன் சேர்ந்து தவறுகளை தேடி இவருடன் குத்தி முறியும் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் ஆதரவில்லை என்பது தான் நிஜம்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- அர்வி: அரபி எழுத்து, தமிழ் உச்சரிப்பு - அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி, மீட்டெடுக்கப்பட்ட வரலாறு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கமலா தியாகராஜன் பதவி, பிபிசி டிராவல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார். அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார். சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா? எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என. தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும். பட மூலாதாரம்,AHAMED ZUBAIR படக்குறிப்பு, அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது. வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன. வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார். "ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார். "இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார். தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள். "பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார். அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு. பட மூலாதாரம்,MAHMOOD KOORIA படக்குறிப்பு, அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். 40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது. அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர். "தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர். அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார். அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது. குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார். "வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர். அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார். "நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன) முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள் பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI படக்குறிப்பு, 1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார் காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார். "பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார். "முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார். இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார். "எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார். "அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார். வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் . மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார். இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார். "இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் தான் உங்களால் காணமுடியவில்லை. ----------- கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது ] அதில் இருந்து நடந்தது படு கொலை அது தவறு என்பது ஏற்றுகொள்கிறார்கள்.1 point- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
1 pointகாகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அதுபோல்தான்.1 point- இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
13 ஐ அமுல்ப் படுத்துமாறு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இலங்கைக்கு சுகமளிக்கும் மசாஜ் போல் இருப்பதால் 13 ஐ அமுல்ப்படுத்தி அந்த மசாஜ் சுகத்தை இலங்கை இரக்க விரும்பவில்லைப் போலும். 😂1 point- இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
அதாவது இந்தியாவுக்கு அடி இருக்குதென்று சொல்ல வருகிறீர்கள். இருந்தாலும் இந்தியாவிடம் இருந்து வாங்கின கடன் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு அந்த நிலைமை வராது. இருந்தாலும் அடி இருக்கின்றது.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்: 1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர். 2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள். இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது. எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இனத்திற்கு இந்தியாவோடு சேர்ந்தும் (அமிர்தலிங்கம்) சிங்களத்தோடு சேர்ந்தும் (நீலன்) சவக்குழி குழிதோண்டியோருக்கு புலிகள் சவக்குழி தோண்டினர். இனத்தை சிதைக்க நினைத்தவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர் - என்றெல்லாம் எழுத ஏலும். ஆனால் அது வேண்டாம். நீலன், நீலன் என்று ஒப்பரி வைக்கிறீர்கள்... அந்த நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த ஒரு நல்ல விடையத்தை தானுமோ எழுதுங்கோவன், பாப்பம். குபீர்... உங்களுக்கு நீங்களே வெள்ளைப் பெயின்ரை வாளியோட தூக்கி ஊத்துங்கோ.... அப்பதான் சரியா இருக்கும்😂1 point- இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
உங்கனட் வீர வசனங்களை தமிழன் கேட்டு கொண்டிருப்பான்...பாவம் அவனது வாழ்க்கை பிரச்சனை....அமெரிக்கா ,இந்தியா ,சீனா கேட்க மாட்டினம் கண்டியளோ .... பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுவது இலகுவானது...ஆனால் நிஜத்தில் அமெரிக்கா உங்களது நாட்டின் உளவுத்துறையினுள்ளே நன்றாகவே ஊடுருவியுள்ளனர்....மக்களை ஏமாற்ற இப்படியான வீரவசனம் தேவை....தமிழனை அழிக்கவும் இறயாண்மை என கத்தினீர்கள். அமெரிக்கா உதவி செய்தது.தற்பொழுது அமெரிக்கா உங்களது இறையாண்மைக்கு ஆப்பு வைக்கிறது ...என குரல் ... இனிவரும் காலங்களில் சிறிய நாடுகள் பெரிய நாடுகளை தங்களது பூலோக அமைவிடத்தை வைத்து பேரம் பேசுவதை இல்லாமல் பண்ண பெரிய நாடுகள் தீயாக வேலை செய்கின்றனர்... சிறிலங்கா,மாலைதீவு போன்ற நாடுகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து அவர்கள் முற்று முழுவதுமாக பெரிய நாடுகளை தங்கி நிற்கும் நிலமை வரும்.....இறையாண்மை,எல்லைகள் எல்லாம் கேள்வி குறியாகும்.... விமான நிலையம்,துறைமுகம்,மத்திய வங்கி,படைகள் யாவும் ஆட்டம் காணும் பொழுது ....இறையாண்மையை வைத்து கிரிபத் சாப்பிடவே வக்கு இல்லாமல் போகும்...1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்? என்ன "சிரிக்க சிறக்க" பகுதியில் எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்களா? உங்கள் குழப்பமான அலம்பல் உங்களுக்கே புரிகிறதா😂? இப்படிப் பட்ட தீவிர தேசியர்கள் "அப்பன் குதிருக்குள்" இல்லை என்று புலிகளைக் காட்டிக் கொடுக்கும் முழுமையான கூழ்முட்டை கேசுகள்! இப்படிப் பட்டோருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அமரர் விவேக் கொமெடி பார்த்த அளவு சிரிப்பு வரும்😂!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அண்மையில் ஒரு zoom உரையாடல் கேட்டேன். அதில் இவ்வாறான பல அரசியல் படுகொலைகளைப் பற்றியும் ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப்பொலிசார் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசப்பட்டது. அதில் கலந்து ஐரோப்பாவில் இருந்து கலந்து கொண்ட தேசிய பற்றாளர் ஒருவர் கொலைகளை நியாயப்படுத்தி பேசினார். கொல்லப்பட்ட துரோகிகள் எல்லோரும் துரோகிகள் என்றும் எனவே கொல்லப்பட வேண்டியவர்களே என்று கூற குறுக்கிட்ட கலந்துரையாடலின் நெறியாளர் சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் தமிழர் தரப்பில் இதைக் கூற முடியுமா என்று கேட்க, பதட்டப்பட்ட தேசியபற்றாளர் இந்த விடயங்கள் எல்லாம் சர்வதேச விசாணைக்குட்படுத்த முடியாது. அது தமிழ்மக்களின் விவகாரம். முள்ளிவாய்க்கால் விடயத்தை மட்டுமே சர்வதேச விசாரணை செய்யலாம் என்று பதிலளித்தார். கோத்தபாயவுக்கும் அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointதங்கள் வேகமாய் கார் ஒட்டுகிறார்களாம்......என்ன ஒன்று ஹான்ட் பிரேக்கை அவர்களும் பார்க்கேல்ல படம் எடுத்த மேதாவியும் பார்க்கவில்லை.......! 😂1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- யாழ்ப்பாணத்தில் பஞ்சகர்மா சிகிச்சை
யாழ்ப்பாணம் வந்து விட்டது சித்தமருத்துவ Spa 💆♀️ / Panchakarma Treatment / Tamil bros தொடர்பு இலக்கம் :- +94765245100 Viber, whatsapp1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உச்சநிலவரம்பு சட்டத்தைக் காட்டி சட்டத்தரணி தென்னந்தோப்புக் காணியில் ஒரு பகுதியை சுருட்டிவிட்டார்! இப்படியான சுத்துமாத்து தமிழ் சட்டவாளர்களிடம் உச்சநில வரம்புக்கு மேலாகவே காணிகள் இருந்திருக்கும்.! மேலும் இந்த சட்டத்தைக் கொண்டுவந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தமது காணிகளையும் இழந்தார் என்று அறிந்திருக்கின்றேன். காணிச் சீர்திருத்தச் சட்டம் விவசாயத்தை நவீனப்படுத்த தடையாகத்தான் இருக்கின்றது. 25 ஏக்கர் வயல்காணி அல்லது 50 ஏக்கர் தோட்டக்காணி என்பது பெரும் இயந்திரங்களை வைத்து விவசாயம் செய்ய உதவாது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்1 point- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.1 point- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
சொல்லி வேலையில்லை....இந்த லட்சணத்தில் எங்கன்ட யூ டியுப் விண்ணர்கள் .... யாழ் கலாச்சாரம் முற்றவெளியில் காற்றில பறந்து போச்சு என வீடியோக்களை எடுத்து விடுயினம்..1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?" நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்! இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?