Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    14676
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    4043
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7053
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/22/24 in all areas

  1. நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர். தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர். அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை. இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது. சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய https://noolaham.net/project/36/3532/3532.pdf
  2. நீலமானின் மாயப்பொதிகள் மேலே கொடுக்கப்பட்டிருப்பது நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதி (அரசமைப்பு திருத்த வரைபுகள்) . இதே பொதி பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000) பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்). ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் அலுவல்சார் சிறிலங்கா அரச முன்மொழிவாகவே 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களில் - 1997ம் ஆண்டு - மிச்ச நல்லதுகளையும் இழந்து போனது. 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாடினார். ஆனால் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் நிராகரித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). உந்தப் மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான"😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே யாழில் 800+ தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்பவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! வெற்றுக் காகித சட்டங்களாதலால்தான் நீலன் அனுதாபி ஒருவரிடம் தெளிவாக கேட்டேன், "நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த நல்லதுகளை எழுதுமாறு", இணையத்தில் தேடிப்பார்க்கத் தெரியாததாலன்று... பி.கு.: கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் மலிவான தனிமனித தாக்குதலை செய்து கம்பு சுற்றுவோருக்கு இனிமேல் மறுமொழி தரப்படாது. (இந்த விடையங்கள் எல்லாம் யாழ்கள நீலன் அனுதாபிகளுக்கு தெரியாது. புலி மீது சேற்றை வாரியிறைக்க நான் முந்தி நீ முந்தி என்று மட்டும் நிற்பினம். நீலமான் அனுதாபிகளே, "உடனுழைப்பாளர்" என்றால் "துரோகி" அல்ல. இருந்தாலும் சட்டிக்குள் தலையைவிட்டு வலிந்து பொருள் கொள்ளுங்கள்! )
  3. அப்போ ஏன் சிங்கள அரசு போர்க்குற்ற விசாரணைக்கு பின்னடிக்கிறது. நீங்களே புள்ளிகள்(points) எடுத்து கொடுக்கிறீர்கள். சிங்களவர்கள் யாரும் கோத்தபய இனப்படுகொலை செய்துள்ளார் என்பதை எங்காவது வாசித்துள்ளீர்களா??
  4. யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு” புலிகளின். வழியில் குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது இது அவர்களின் சட்டம்
  5. தீர்வுகளை வழங்காமல் இருக்க புலிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் ....துவாரகா,பொட்டர்,தலைவர் வருகினம் என்று சொல்வது போல இதுவும் ஒன்று என கடந்து செல்ல வேணும் .... புலிகளினால் நல்லிணக்கம் கெட்டு விட்டது அதை சரி செய்ய ஒன்று பட்ட இலங்கையில் சமாதானம்,சாந்தி போன்றவற்றை நிலை நாட்ட வேண்டும்..
  6. நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம். இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள்.
  7. ஒரே விடயத்தை பத்து இடத்தில் வேறு வேறு வடிவத்தில் எழுதினால் சூப்பர் கருத்தாளர்கள் என்று பெயர் வரும் என்று யாரோ அறிவாளிகள் உங்களுக்கு சொல்லி போட்டார்ங்கள் போல் உள்ளது 😀
  8. உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு. இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது! சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!
  9. நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன் ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும் நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒரு கிராம சபைக்கு கூட சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் ஈழம். தான் தீர்வு இனி பேசி பயனில்லை’ ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி என்று அறிவிக்க முதல் நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போராடிக்கொண்டு இருக்கும் போது சீமாட்டி சந்திரிக்கா நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது தீர்வு எழுதுகிறார் யாருக்கு??? ஆயுதமேத்திய ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள் தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை இது அரசியல் மருத்துவம் இல்லை தயவுசெய்து இதை வாசித்து குழப்பமடையவேண்டாம் தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம் இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான்
  10. அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅
  11. எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது. IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177023 அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள். லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.
  12. இவர் எழுதியது ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால் அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான் காரணம் போராடுவோர் இல்லை தீர்வு திட்டங்கள் எழுதுவது தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும் இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும் அதுவும் இனி பேசி பலனில்லை தமிழ் ஈழம் தான் முடிவு அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான் என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு மேலும் போராடியவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே
  13. இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள். மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது. நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
  14. 😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்! இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை - ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது. ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம். பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு!
  15. எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே?? தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.
  16. இது 100% தமிழர் விடுதலை கூட்டணியின் பிழை நான் இலங்கையில் நேரடியாக கண்டும் உள்ளேன் இனி பேசி பயனில்லை’ மொக்கையாக தெரியவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் போராட்டம் தான் வழி இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் பயிற்சி எடுக்கவில்லை மொக்கையாக தெரியவில்லை களத்தில் நிற்கவில்லை மொக்கையாக தெரியவில்லை போராடியவர்களுடன் நிற்க முடியவில்லை மொக்கையாக தெரியவில்லை இவர்கள் இல்லையென்றால் இளைஞர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தி இருக்க மாட்டார்கள் இளைஞர்களை மூட்டாள்கள். ஆக்கிய காரணம் தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் இளைஞர்கள் இலக்கு தமிழ் ஈழம் இவர்கள் வாழ்க்கை பாராளுமன்றத்தை அனுபவிப்பது ஆயுதப் போராட்டம் என்று இவர்கள் சொன்னதன் கருத்துகள் என்ன??
  17. எனக்கு அது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுசதியாக இருக்கும் போல தெரிகின்றது 🤣
  18. இல்லை இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம் அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள். 2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்
  19. புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄
  20. சரியாக சொன்னீர்கள் அந்த ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதால் மிச்சம் இருக்கும் தமிழ் மக்களும் தப்பித்தார்கள் என்று தமிழ் மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பை எழுதினால் kill first, explain later" என்று எழுதக் கூடிய மன நிலை படைத்தவர்களே. இங்கு இப்படி கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதை இவர்கள் வசிக்கும் நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகைகளுக்கு எழுத முடியுமா? இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன்.
  21. Mohanathasan Vinasithamby · பிரான்சில் வளர்நிலை 7 இல், தமிழ் கற்றுவரும் மாணவி ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார். ஆசிரியர், எங்களுடைய அம்மா, அப்பாவிற்கு பெரிதாகப் பிரெஞ்சு மொழி தெரியாது… ஆனால் எங்களை நன்றாகப் படிப்பிக்கவேணும், நல்ல முறையில் எங்களை வளர்க்கவேணும் என்று எப்படியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கினம்? நான் யோசிச்சு பார்க்கும் போது ஆச்சரியாமாக இருக்குது என்று அந்த மாணவி சொன்னார். நான் சொன்னேன். எனக்கு ஆச்சரியமாக இல்லை! உங்கள் பெற்றோர்களுக்கு பிரெஞ்சு மொழி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரான்ஸ் வரும் போது வெறுங்கையோடு வரவில்லை. மிகப்பெறுமதியான தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் தங்களோடு எடுத்துக்கொண்டுதான் வந்தார்கள். கல்வியின் அருமையை தமிழர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் பிறரிடம் கையேந்தக்கூடாது தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் தமிழ், பிச்சை புகினும் கற்கை நன்றே என்று விதிவிலக்கையும் சொல்லிக் கொடுத்திருக்குது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிக் கொடுக்குது. வாழ்வுக்கு அறநெறியை எடுத்துச் சொல்லும் திருக்குறளை தமிழர் வாழ்கையோடு அனுபவபூர்வமாக கற்றுவருபவர்கள். அதனால் எப்படிச் சிறப்பாக தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றேன். தமிழ் என்பது வெறுமனே ஒரு மொழியல்ல; அது தமிழரின் வாழ்வு, எம் மூதாதையரின் உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் சுமந்து வந்து எங்களுக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றது. இன்று பெப்ரவரி 21. சர்வதேச தாய்மொழிதினம். தமிழாலேயே சிந்திக்கின்றோம், கருத்தினைப் பகிர்கின்றோம், தமிழாலேயே தாலாட்டி சீராட்டி வளர்ந்தோம். தமிழை மறவாதிருப்போம். தமிழே எம் அடையாளம். Voir la traduction
  22. உண்மை யொன்றை அற்புதமாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்... எனதுசந்தேகம் எப்பவோ உதித்துவிட்டது..
  23. தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  24. தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  25. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் தமிழ் சிறியை நோய்நொடி இல்லாமல் நுhறாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.
  26. இனவழிப்பு, போர குற்றம் என்று சர்வதேச சமுகத்திடம் நீதி கேட்டுக்கொண்டே அநீதியான அக்கிரமமான இவ்வாறான கொலைகளை கயமைத்தனமாக நியாயப்படுத்தி எக்காளமாக பேசுவதைப் பார்ககும் ஒரு வேளை நாடும் போது நாடும் அதிகாரமும் கிடைத்திருந்தால்……………. இயற்கைக்கே பொறுக்கவில்லைப் போலும்.
  27. மேலே உள்ளது ஒரு செய்தியா அல்லது வெறும் காழ்புணர்வினால் எழுதப்பட்ட வசை பாடலா? சுமந்திரன் மற்றயவர்களை போல ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவரின் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி மற்றய கள்ளர்கள் எல்லாம் தப்பிக்கும் உத்தியே இந்தக் கட்டுரை. சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழரின் போராட்டம் பூச்சிய நிலைக்கு கீழே பல மடங்கு ஆழத்திற்கு சென்று விட்டது.
  28. நீலன் தமிழருக்கு செய்த நல்லதுகளை எழுதுங்கள் என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். சட்டிக்குள் ஒன்றுமே இல்லாததால் வாதப்பிழைப்பிற்கு என் மீது எத்தனை தனிமனித தாக்குதல்கள் அகப்பையிலிருந்து வருகின்றன.😆😆 1) எப்படியேனும் என் மீது பிழை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு "வலிந்து பொருள் கோடல்". வேறொன்றுமில்லை.😂 2) ஏதோ அல்ல, இவர்கள் தீவுக்குள் இருந்து தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட துடித்துக்கொண்டிருந்தார்கள், அதனால் அங்கேயே இருந்து தப்பியோடாமல் தேசத்தின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள் காலத்திற்கேற்ற முடிவுகளை எடுத்துக் கொன்றார்கள். அம்முடிவுகளை - தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டு விடுதலைப் போராளிகள் செய்தவற்றில் பிழைபிடிக்கும் உங்களின் மெத்தனத்திற்கு எதிர்ப்புக்காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. உங்கள் வாயாலையே என்ன நன்மை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றுவிட்டீர்கள். பேந்தேன் மினக்கட்டு வெள்ளையடிக்கிறியள், உங்கள் ஆட்களுடன் சேர்ந்து? புலிகள் மீது சேறடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதனை செய்கிறீர்கள். 3) அறிவேன். அதனால் தான் "சரியான அவதானமாக" கையாள்கிறேன். 4) நன்றி ---------------------- கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாததால் மலிவான தனிமனிதத் தாக்குதல்கள் வாதாட்டமாகியுள்ளன. மொத்தத்தில் உங்கள் தராதரத்திற்கு அளவாக மலிவாக எழுதியுள்ளீர்கள்... அம்புட்டுத்தான்.
  29. உண்மை. இருந்தாலும் அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மத தலைவர்கள் மத கடமைகளுடன் இருந்திருந்தால் நாட்டில் இந பிரச்சினையும் எப்போதோ தீர்ந்திருக்கும். அதாவது காவிகள் வீதிக்கு இரங்கி அரசியல் செய்யவிடடாள் மக்களும் வீதிக்கு இறங்க மாடடார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு இறங்கு முன்னர் அவர்களிடம் மண்டியிடுகிறார்கள்.
  30. பல யூ டியுப் இப்ப அழத்தொடங்கி விட்டனர் ...சேர் பண்ணுங்கோ ,சப்ரைஸ் பன்ணுங்கோ என்று.....சிலர் நன்றாக செய்கின்றனர் ...இதெல்லாம் நிரந்தர வருமானம் கிடைக்க கூடியவை அல்ல....
  31. வழக்கம் போல, ஆதவனும் வீரகேசரியும் ஆங்கிலத்தில் வந்த செய்திகள் / தகவல்களை அரை குறையாக புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டுள்ளனர். இந்த பின்விளைவுகள் அரிதானதாகவே நிகழ்கின்றது. ஒரு இலட்சம் பேரில் 50 இற்கும் குறைவானவர்களுக்கே ஏற்படுகின்றது. இந்த எண்ணிக்கை தடுப்பூசிகளால் தவிர்க்கப்பட மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. உலகில் இதுவரைக்கும் 13.5 billion கொவிட் தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன. உலக சனத்தொகை யில் 71 வீதமானோர் ஆகக் குறைந்தது ஒரு கொவிட் தடுப்பூசியையாவது போட்டுள்ளனர். ஆனால் இதன் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது மிகக் குறைவு. உலகில் எதிர்மறையான் பின் விளைவுகள் எவருக்குமே ஏற்படாத தடுப்பூசி அல்லது மருந்து என்ற ஒன்று இல்லை. அப்படியான உணவுப் பொருள் கூட இல்லை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் வந்த செய்தி: https://www.forbes.com/sites/ariannajohnson/2024/02/19/covid-vaccines-linked-to-small-increase-in-heart-and-brain-disorders-study-finds-but-risk-from-infection-is-far-higher/
  32. மடம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவேன் என அடம் பிடித்தால் நாம் என்ன செய்ய....
  33. இந்த விடயத்தில் மக்களை மோதவிட்டு மக்கள் புரட்சி ...என சீன் காட்டாமல் ....சம்பந்த பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்....கடற்படை சுட்டு தள்ளாமல்.... அவர்களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும் ....கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் உள்ளே வருகின்றது ,மீன் தொழிலாளர்கள் உள்ளே வருகின்றனர் என்றால் முப்படைகள் பொலிஸ் எல்லாம் என்ன செய்கின்றனர்...தமிழர்களை அழிக்கவா? துரோகி பட்டமும் ஒர் கெளரவ பட்டமாக வெகு விரைவில் அறிவிப்பார்கள் ...ஆகவே அதை பார்த்து பயப்பட வேண்டாம்..
  34. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் } (3) ஆண் : பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்…. இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஆண் : உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான் ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ… இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ….. ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ…. ஆண் : வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ .......! --- ஒரு பொய்யாவது சொல் கண்ணே---
  35. சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂? அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள். சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!
  36. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  37. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணா .......! 💐
  38. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா…!
  39. சீலா மீன் குழம்பு.........எளிமையான முறையில், அசத்தல் சுவையில்......! 😁
  40. கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.
  41. 5:30 மணியளவில் பாசையூரை அடைந்தோம். ஆட்டோச் சாரதியை வீதியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிஸ்ட்டர் அன்ராவை பார்க்க கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம். எங்களை விருந்தினரை வரவேற்கும் அறையில் அமரச் சொல்லிவிட்டு அவரை சில நிமிடங்களின் பின்னர் அழைத்து வந்தார்கள். என்னுடன் வந்த மற்றைய இரு சித்திகளும்கூட சிஸ்ட்டர் அன்ராவை பல மாதங்களுக்குப் பிறகுதான் காண்கிறார்கள். ஆகவே, அவருடன் இருந்து பேச ஆரம்பித்தோம். ஒவ்வொருவராக எங்களிடம் விபரங்களைக் கேட்கத் தொடங்கினார் அவர். சில விடயங்களைப் பற்றிப் பேசியபோது அவருக்கு அதுகுறித்த நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, முதன்முறையாகக் கேள்விப்படுவதுபோல‌ நாம் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர பேச்சில் ஈடுபடும் ஆர்வம் நேரம் செல்லச் செல்ல குறைவடைவது தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னுடன் வந்த சித்திமாருடன் நான் பேசிக்கொள்ள சிஸ்ட்டர் அன்ரா அமைதியாக எங்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அமைதியாகவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை. எனக்குப் புரிந்தது. அவரால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை. சரி, அவருக்கு இனிச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிவிட்டு, "உங்களை நாளைக்கு வந்து சந்திக்கலாமா?" என்று கேட்டேன். "ஏன், இண்டைக்குத்தானே வந்தனீர், ஏன் நாளைக்கும்?" என்று அவர் கேட்கவும், "அவன் நாளண்டைக்கு அவுஸ்த்திரேலியாவுக்குப் போயிடுவான் , இனி எப்ப வாறானோ தெரியாது. வந்து ஒருக்கால் பயணம் சொல்லிப்போட்டுப் போகட்டுமன், ஏன் வேணாம் எண்டுறீங்கள்?" என்று ஒரு சித்தி கூறவும், "அப்ப சரி, பின்னேரம் 5 மணிக்குப்பிறகு வாருமன்" என்று சொன்னார். அவரது நிலை எனக்குப்புரிந்தது. கன்னியாஸ்த்திரியாக இருந்த காலத்தில் க.பொ.த சாதாரண‌ தரம் வரை கணித ஆசிரியராக பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். கற்பித்தல் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். மத நிகழ்வுகள், மக்கள் பணிகள், உளநலச் சேவைகள் என்று மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியவர்.தேசியத்தின்பால் மிகுந்த பற்றுக்கொண்ட அவர் வன்னியில் போயிருந்து பல கிராமங்களில் புலிகளின் மருத்துவப் பிரிவு மற்றும் பொதுமக்கள் மனோவியல் சேவைகள் போன்றவற்றில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். சி - 90 எனப்படும் மோட்டார் சைக்கிளில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம்வரும் அவர் தன்னால் நடக்க இயலாது போகும்வரை சமூகத் தொண்டில் ஈடுபட்டவர். 2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏ- 9 பாதை திறப்பு நிகழ்விற்காக இவரும் சென்றிருந்தார். ஆக, சமூகத்திற்காக இடைவிடாது தொண்டாற்றி, பலருக்கும் உதவிய தன்னால் இன்று தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதென்பது கவலையளிப்பதாகவே எனக்குப் பட்டது. தனது சாதாரண கடமைகளைச் செய்யவே இன்னொருவரின் உதவி தேவைப்படும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீழ்ந்து ஏற்பட்ட காயத்தினையடுத்து பிறரின் உதவியுடனேயே கட்டிலில் அமரவும், எழுந்துகொள்ளவும், சக்கர நாற்காலியில் தன்னை ஏற்றி இறக்கவும் முடிகிறது என்றகிவிட்டபோது, தன்னைப் பார்க்க வருபவர்களை அடிக்கடி வரவேண்டாம் என்று அவர் கோருகிறார் என்பதும் புரிந்தது. ஆகவேதான் இன்று மாலையும் வந்துவிட்டு நாளையும் வரப்போகிறேன் என்று நான் சொன்னபோது அவரை அறியாமல் "ஏன்" என்று கேட்டுவிட்டார் என்பதையும் புரிந்துகொண்டேன், ஆகவே, முடிந்தால் வருகிறேன், இல்லையென்றால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம். வெளியில் இன்னமும் மழை பெய்துகொண்டிருந்தது. எமக்காகக் காத்துநின்ற ஓட்டோச் சாரதியுடன் மீண்டும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே ஆரியகுளம் நோக்கிப் பயணமானோம். ஆரியகுளத்தை அடைந்ததும் சித்திமார் இருவருக்கும் பயணம் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு கண்ணாதிட்டியில் அஅமைந்திருக்கும் மைத்துனர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. நாளை வன்னிநோக்கிய பயணம் என்று மனம் சொல்லிக்கொண்டது.
  42. வல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்த‌நாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.
  43. யாழ்ப்பாணம் வந்து சித்தியைப் பார்ப்பது என்று முடிவெடுத்த கணத்திலேயே இன்னொரு விடயத்தையும் நிச்சயம் செய்யவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியிருந்தேன். அதுதான் வன்னிக்குச் செல்வது. குறிப்பாக பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பூடாக 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே சென்று முள்ளிவாய்க்காலை அடைவது. அங்கிருந்து வட்டுவாகல் பாலத்தினூடாகச் சென்று முல்லைத்தீவு நகரை பார்ப்பது. இந்த விடயம் குறித்து வீட்டில் பேசியிருந்தால் நிச்சயம் எனது பயணம் தடைப்பட்டிருக்கும். ஆகவே, இதுகுறித்து மூச்சு விடுவதையே தவிர்த்திருந்தேன். ஆனால் தவறாது மைத்துனரிடம் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு இப்பயணத்தை ஒழுங்குபடுத்துமாறு கேட்டிருந்தேன். அவரும் தனக்குத் தெரிந்த வான் சாரதியொருவரை ஒழுங்கு செய்து தனது வேலைக்கும் லீவு போட்டுவிட்டதாக அறிவித்தார். கரவெட்டியில் எனது தாயருக்குக் கொடுக்கப்பட்ட சீதன வீடொன்று இருந்தது. அதனை எனது சித்தியொருவர் வாங்கிக்கொண்டார். ஆனாலும், அவ்வீடு எப்போதும் எனக்கு அம்மம்மாவினதும் அம்மாவினதும் வீடுதான். சித்தியும் என்னைத் தனது மகன்களில் ஒருவராக நடத்திவந்தார். ஆகவே இலங்கை வரும்போது அவரையும் பார்த்துவிட விரும்பினேன். அவருக்கும் வயது 70 ஐக் கடந்திருந்தது. அவ்வாறே எனது தாயாரின் இன்னொரு தங்கையும் கரவெட்டியில் இருந்தார். அவரையும் பார்த்துவிட நினைத்தேன். இனிமேல் எப்போது வரக்கிடைக்கப்போகின்றதோ? அல்லது அவர்களுக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என்கிற கேள்விகள் மனதில் எழ, அவர்களைப் பார்த்துவிட கரவெட்டிக்குச் செல்ல ஆயத்தமானேன். மைத்துனர் வீட்டிற்குச் சென்று, சித்திமாருக்குக் கொடுப்பதற்கென்று கொண்டுவந்த சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு கண்ணாதிட்டி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் அரச போக்குவரத்து நிலையத்திற்குச் சென்று, நெல்லியடியூடாக பருத்தித்துறை செல்லும் 750 ஆம் இலக்க பேரூந்து தரித்துநிற்கும் பகுதிக்குச் சென்றேன். காலை வெய்யிலே கொழுத்த ஆரம்பித்திருந்தது. 1980 களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த அதே பேரூந்துத் தரிப்பிட நிலையக் கட்டடம், அழுக்காக, சிறிய இடிபாடுகளுடன் காணப்பட்டது. பஸ்நிலையச் சுற்றாடல் குண்டும் குழியுமாக, மழைநீர் தேங்கிச் சேறாகிக் கிடந்தது. 40 வருடங்களுக்கு மேலாகியும் அப்பகுதி மாறவில்லை. ஒரே வித்தியாசம் மணிக்குரல் விளம்பர சபையின் பாட்டுக்களும் ரேலங்கியின் கணீரென்ற குரலும் இல்லாததுதான் என்று தோன்றியது. ஒரு அரை மணித்தியாலம் அங்கு நின்றிருப்பேன். பருத்தித்துறை செல்லும் பேரூந்து வரவேயில்லை. நண்பன் தொலைபேசியில் வந்தான், "எங்கயடா நிக்கிறாய், பஸ்ஸில ஏறீட்டியோ?" என்று கேட்க, "இன்னும் இல்லை, பஸ் ஸ்டாண்டில நிக்கிறன்" என்று சொல்ல. "மச்சான், சி.டி.பி பஸ் பெரிசா ஓடாது, மினிபஸ்ஸ் ஸ்டாண்டுக்குப் போனியெண்டால் பஸ் கிடைக்கும்" என்று கூறினான். அதன்படியே செய்தேன். அரச பேரூந்து நிற்கு சாலைக்கு வெளியே தனியார் பஸ் நிறுத்துமிடத்தில் மினிபஸ் ஒன்றிலிருந்து , "பருத்தித்துறை, பருத்தித்துறை" என்று கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஏறி அமர்ந்துகொண்டேன். இறுதியாக யாழ்ப்பாணத்தில் மினிபஸ் ஒன்றில் ஏறியது 1986 இல் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் இருந்த காலத்தில் பாடசாலை பஸ்ஸைத் தவறவிட்டு விட்டால் யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து கச்சேரி நோக்கிச் செல்லும் மினிபஸ்ஸில் ஏறிக்கொள்வோம். அக்காலத்திற்குப் பிறகு மீண்டும் ஏறியிருப்பது இன்றுதான், ஏறத்தாள 37 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியில் வேண்டுமென்றே மெதுவாக ஓட்டிச் சென்றார் சாரதி. போகும் வழிநெடுகிலும் மக்களைக் கூவி அழைத்து ஏற்றிக்கொண்டார் நடத்துனர். வயோதிபர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு வயதினரும் ஆங்காங்கே ஏறி இறங்கிக்கொண்டார்கள். நடத்துனர் இளவயதுக்காரர், ஓரளவிற்கு கண்ணியமாகவே பயணிகளுடன் நடந்துகொண்டார். இருமுறை வீதியின் அருகாக அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களுக்கு அருகில் வாகனத்தை மெதுவாக நிறுத்தி உண்டியலில் பணம் போட்டுவிட்டு வணங்கினார். இந்து, கிறிஸ்த்தவம் என்று அவர் வேறுபாடு காட்டவில்லை. இருபாலையினைத் தாண்டியதும் வாகனம் வேகமெடுத்தது. ஆசுர வேகம். பின்னால் அரச பேரூந்து வந்திருக்கலாம். அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவர் திடீரென்று தூக்கத்தால் விளித்துக்கொண்டவர்போல செலுத்திக்கொண்டுபோனார். அச்சுவேலிச் சந்தியப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வண்டி அச்சுவேலியை விடுத்து ஆவரங்கால் ஊடாக வல்லை வெளி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. வல்லைவெளி பற்றி ஒரு சிறிய அனுபவம் இருக்கிறது. உங்களுக்குச் சலிப்பில்லாமல் இரத்திணச் சுருக்கமாக (சும்மாதான்) சொல்லிவிடுகிறேன். பாடசாலை விடுமுறைநாட்களில் தெல்லிப்பழைக்கோ அல்லது கரவெட்டிக்கோ போவது வழமை. அவ்வாறே 1987 ஆம் ஆண்டு ஆடியில் வாரவிடுமுறை ஒன்றிற்காக கரவெட்டியில் அமைந்திருக்கும் அம்மமாவின் வீட்டிற்குத் தம்பியுடன் சைக்கிள் சென்றிருந்தேன். அன்றிரவு நாம் உறங்கிக்கொண்டிருக்கையில் வானத்தில் மின்னல் வெட்டியது போன்ற வெளிச்சமும் அதனைத் தொடர்ந்து பாரிய வெடியோசையும் கேட்டது. சத்தம் கேட்டுப் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்துவிடவே தெருக்களில் மக்கள் கூடிநின்று அங்கலாய்ப்புடன் பேசுவது கேட்டது. எவருக்கும் நடந்தது என்னவென்று அப்போது தெரியாது. காலை விடிந்தவுடன் சித்தி என்னையும் தம்பியையும் உடனேயே கோண்டாவிலுக்குச் சென்றுவிடடுமாறு கூறினார். "கொப்பர் கொல்லப்போறார், இஞ்ச என்ன நடக்கப்போகுதோ தெரியாது, வெளிக்கிடுங்கோ" என்று கூறவும், நானும் தம்பியும் அவசரமாக புறப்பட்டுவிட்டோம். நாவலர் மடத்திலிருந்து வல்லை வெளிநோக்கிப் போகும் சாலையில் எம்மைத்தவிர வேறு எவரையும் அந்தக் காலை வேளையில் காண முடியவில்லை. மனதில் பயம் தொற்றிக்கொள்ள, வேகமாக சைக்கிளை உதைந்துகொண்டு போய்க்கொண்டிருந்தோம். மூத்தவிநாயகர் கோயிலடி, குஞ்சர் கடையடி, வல்லை வெளியின் ஆரம்பம் என்று வீதியின் எந்தப்பக்கத்திலும் சனநடமாட்டம் இருக்கவில்லை. சிறிதுதூரம் வல்லை வெளியில் ஓடியிருப்போம், வீதியின் வலதுபக்க வெளியில் ஒரு சில நூறு மீட்டர்களுக்கப்பால் வரிசையில் இராணுவம் கரவெட்டி நோக்கி தொண்டைமானாறு பகுதியிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்தது. எம்மை நிச்சயம் கண்டிருப்பார்கள், நினைத்திருந்தால் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் சுடவில்லை, மெதுவாக சைக்கிளை விட்டுக் கீழிறங்கி உருட்டத் தொடங்கினோம். பின்னால் வந்த வயோதிபர் ஒருவர், "தம்பியவை உதில நிக்காதேயுங்கோ, ஏறி ஓடுங்கோ. எப்ப சுடத் தொடங்குவாங்களோ தெரியாது" என்று சொல்லிக்கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைப் பிந்தொடர்ந்து நாமும் வேகமாக சைக்கிளில் ஏறி மீண்டும் ஓடத் தொடங்கினோம். வல்லைவெளி என்கிற பெயர் கேட்கும்போதெல்லாம் நினைவிற்கு வருவது இந்தச் சம்பவமும் சந்நிதிக் கோயில் தேர் எரிப்பும் தான்.
  44. மாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது. 10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில‌ மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது. காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது. மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.