Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7138
    Posts
  2. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33047
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88820
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3670
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/24/24 in all areas

  1. இந்த தீர்வுதிட்டத்தினை யார் வேணுமென்றாலும் தயாரிக்கலாம் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், நீலன் தயாரிக்காவிட்டால் வேறு ஒருவர் தயாரித்திருப்பார். ஏற்கனவே தீர்வுதிட்டம் தயாரித்துவிட்டாகிவிட்டது அதன் பின் கொல்வதால் என்ன இலாபம், அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை). இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
  2. ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்! உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன! (விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)
  3. யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிய விளக்கத்துடன் இணைந்தபின் கருத்தினை / பதிவினை எவ்வாறு வைப்பது என்பது பற்றிய விளக்கம்.
  4. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS Foundation Trust Tamil Heritage Month is an exciting opportunity to celebrate the invaluable contributions of Tamil Biomedical Scientists and laboratory professionals. Tamil is a Dravidian language that's been around for over 2000 years, spoken in places like Sri Lanka, Southern India, Singapore, and by diaspora Tamils. This month offers a unique occasion to embrace our rich cultural heritage and acknowledge the exceptional work of those who operate at the heart of healthcare. This celebration recognises our past and helps shape a more inclusive and promising future for Biomedical Scientists. Sonia Justinsuthakaran, Biomedical Scientist, Blood Transfusion & Haematology, Charing Cross Hospital Tamil Heritage Month to me is a way to mark the existence of the Tamil language, culture and people. As one of the oldest languages in the world, I think it is important to remember how special our mother-tongue is and to share a little bit of our culture wherever we go. Whether it's with our colleagues at work, our partner or our children, we have to make sure that with a rich culture like Tamil, we have to keep it alive for as long as we can and enable our future to do so too. Alagammai Nachiappan, Biomedical Scientist, Biochemistry, Royal Sussex County Hospital. I work as a Biomedical Scientist in clinical biochemistry at University Hospital Sussex NHS Trust. I am an Indian Tamil who has migrated to the UK and am very pleased to witness Tamil Heritage Month being celebrated at the IBMS. From a young age, I developed a passion for Tamil by reading Thirukural, which describes the art of living sensibly, and poems by Bharathiyar. One of my favourite poems by Bharathiyar is “achamillai achamillai,” which asserts that an individual should not fear under any circumstances. My passion for Tamil has played a key role in my growth and development, contributing to my successful life. Mathumitha Kumareshan, Final year student - Coventry University Tamil Heritage Month holds great meaning for me as it is a moment to celebrate the rich history, culture, resilience, and strength of Tamil communities worldwide. It serves to foster a sense of unity and belonging within the global Tamil diaspora. Moreover, this month allows us to reflect on and appreciate the diverse contributions of Tamils, showcasing the enduring spirit that unites us across borders. https://www.ibms.org/resources/news/tamil-heritage-month-2024/
  5. ஒரு காலத்தில் பருப்பு ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்த ஹிந்தியா.. ஆசியாவின்.. சிலிக்கான் வலி கனவில்.. இன்று பருப்புக்கு கையேந்தும் நிலையிலும்.. ஐ ரி ஆக்களை உற்பத்தி செய்து.. அந்நிய நாடுகளுக்கு ஓட விடும் நிலையிலும் நிற்கிறது. நல்ல முன்னேற்றம்.
  6. நாரதர் வேலை பார்க்கும்... சுமந்திரன் என்று, கருத்தோவியம் வந்துள்ளது. 😂 🤣
  7. நாரதர் வேலை பார்க்கும்... சுமந்திரன் என்று, கருத்தோவியம் வந்துள்ளது. 😂 🤣
  8. இவ்வளவு பிரச்சினை போய்கொண்டு இருக்கு ......இதெல்லாம் அந்த சிங்கங்களுக்கு தெரியுமா........! 😂
  9. நல்ல கேள்வி,..காரணம் எனக்கு தெரியாது இருந்தாலும் மரணத்தண்டனை பிழை என்று நான் சொல்லப் போவதில்லை,.....காரணம் 1980 ஆண்டிலிருந்து இப்படி பல மரணத் தண்டனைகள நிறைவேற்றப்பட்டுள்ளது அவை எவற்றையும். நான் பிழை என்று சொன்னதில்லை” அதற்கான விளக்கங்களை எழுதி வைக்கப்பட்டிருந்தது அவை சரியான விளக்கங்கள் அனேகமாக காட்டி கொடுப்புகள் ...இலங்கை இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கியது எனது பேரனார் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் நன்றாக ஆங்கிலம் சிங்களம் பேசுவார் அவருக்கு புலிகளை துளியும். பிடிக்காது இந்தியா இராணுவம் வந்திருந்த சமயம் 1987 ஆண்டு வலிய. இந்தியா இராணுவ முகாமுக்கு சென்று புலிகளின். நகர்வுகள் பற்றி தகவல்கள் வழங்கி வந்தார் சிறிது காலத்தில் புலிகளுக்கு தெரிந்து விட்டது அவருக்கு கொடுத்த தண்டனை மரண தண்டனை இவருக்கு ஏன் இந்த வேலை என்று தான் நாங்கள் கதைத்தோம். நீலனுக்கும் அமிருக்கும். மட்டும் தண்டனை வழங்கவில்லை பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன நீலனும் அமிரும. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனி நபர்கள் இல்லை கட்சியின் தலைவர்கள் 1,..இனி பேசி பயனில்லை’ 2,.தமிழ் ஈழம் தான் தீர்வு 3,ஆயதப் போராட்டம் தான் அதற்கான ஒரே வழி 4,..ஆயுதத்தை தொட்டு கூட பார்க்கவில்லை 5,.இவர்களின் பேச்சை நம்பி இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள் 6,..ஏன் ஆதரிக்கவில்லை இலங்கை அரசுடன் ஓட்டி உறவாடத் தொடங்கி விட்டார்கள் இளைஞர்களின் ஆயுதம் களையவேண்டும் என்பதற்காக 7,...ஆயுதப் போர் நடக்கும் போது நீலன். பொதி,.வரைவு வரைய முடியாது அதற்கு இளைஞர்கள் அனுமதி வேண்டும் 8,.இரண்டு தடவைகள் ஒப்பந்தம் எழுதி ஏமாற்றப்பட்டுள்ளோம் 9,..நீலன. பீரிஸ் சாந்திரிக்கா ....நினைத்தவுடன். தீர்வு வழங்க முடியாது பாராளுமன்றம் அங்கீகாரம் வேண்டும் அங்கே நிச்சயம் நிராகரிக்கப்படும். ஆகவே இந்த பொதி.....இந்த சதி,.இளைஞர்களின் ஆயுதங்களை களைய மட்டுமே 10,..புலிகள் கொலை செய்தது பற்றி வரும் காலச்சந்ததிக்கு சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை ஆனால் அவர்கள் செய்த அனைத்து விடயங்களையும் பேசுங்கள் சொல்லி கொடுங்கள் தனிய. கொலையை பற்றி மட்டும் ஏன். பேசுகிறீர்கள். 11,..இல்லாத அவர்களை பற்றி பொல்லாத கதைகளை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள் போகின்ற வழிக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 🤣🤣 நான் எவரையும் ஆதரிப்பவனில்லை
  10. நன்றி கபிதான். தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை). இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன். இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.
  11. இதைத் தான் நாங்களும் சொல்லுகிறோம் புலிகளின் ,மற்றும் ஏனைய இயக்கங்களின் கொலைகளை மீண்டும் மீண்டும் பேசாமல் தொடர்வோம் எமது நிலத்தையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய செயல்களில்.... இன்று பல நல்ல திட்டங்களை தனிநபர்கள் முன் வந்து செய்கின்றனர் ...யாரும் எதிர் பார்க்காத திட்டங்கள் ..பொதுவாக யாழ்ப்பாணத்தார் "நப்பி" மற்றவர்களுக்கு ஒன்று கொடுக்க மாட்டான் என்ற கருத்து பரவலாக இருந்தது ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கும்வகையில் பல யாழ்ப்பாணத்தவர்கள் செயல் படுகின்றனர் ...
  12. வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா? முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன். இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது. அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி? முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும். இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன: 1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும். 2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது. எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.
  13. அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் யாழுக்கு வர ஒரு தூர நோக்குண்டு. அதற்கு முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து சொல்லணும். ஆனால் அதற்கான பரிசுகள் புலிகள் மீதான சேறப்புத்தான் என்றால் அது நான் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமாகி விடும். இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு. குடும்பம் மற்றும் உறவுகளுக்கு சில இழப்புகள் வருத்தம் தரும் என்பதைவிட அது ஒரு இனத்தையே அழித்து விடும் என்றே நான் பார்ப்பதுண்டு. இந்த களை பிடுங்குதலுக்கு என் குடும்பமும் இலக்காகி இருக்கிறது. புலிகள் அப்படி தான் தன் குடும்பத்தையே பலி கொடுத்தும் புலிகளை பாதுகாத்த பலரை எனக்கு தெரியும். அதேபோல் தன் குடும்பமே அழியப் போகிறது என்று தெரிந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணித்த புலிகள் பல நூறு. மற்றும் படி உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பால் முழு உயிருக்கும் ஆபத்து வரும் என்றால் அதை எடுத்து விடுவதற்கு இன்றும் ஆதரவானவன். எனவே தயவு செய்து கடந்த காலங்களை கிளறி சேறடிக்காது இன்று என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். எம்மால் முடிந்ததை செய்யலாம். நன்றி.
  14. CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு
  15. வீரகேசரியின் ஒப்பீட்டில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. ஸ்ரெல்த் வகை அதிவேக வெடிமருந்து கடற்கலங்களை களத்தில் வடிவமைத்து வெற்றிகரமாகப் பாவித்த பெருமை புலிகளையே சாரும். அந்த வடிவமைப்பு சிங்களத்தால் போரின் பிற்பாடு விற்கப்பட்டிருக்கலாம். உக்ரைனிடமும் அது போய் சேர்ந்திருக்கும். ஏனெனில்.. தமிழினப் படுகொலையில்.. உக்ரைன் கூட்டுக் கொலையாளிகளில் ஒன்று. நேரடியாக களத்தில் சிங்களப் படைகளோடு நின்ற நாடுகளில் ஒன்று. எங்கள் வரலாற்றை நாமே மறைக்க முற்படும் போது.. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியான். நாம் பாவிக்கும் போது பயங்கரவாதம்.. உக்ரைன் பாவிக்கும் போது.. ஆகோ ஓகோ. எம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து எவரும் வரத்தேவையில்லை. நம்மாக்களே போதும். புலமை வித்துவத்தை காட்டுறன் என்ற போர்வையில் சொந்த இனத்தை சிறுமைப்படுத்திச் சீரழிக்க. அது சோள வரலாறு தொடங்கி புலிகள் வரை இதே தான் கதி.
  16. வீரகேசரி தனது வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து அதற்கேற்ப வியாபாரம் செய்கிறது.
  17. நன்றி, இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை) நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம். இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.
  18. அக்கா உங்களுடைய ஈமெயிலும் பாஸ்வேர்ட்டும் தெரிந்தால் புதிய போனிலும் தொடர்பு எண்களும் பெயரும் தானாவே வருமே?!
  19. இதில் அவிப்பது யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள். 100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......
  20. முற்றவெளி மந்திரம் sudumanalFebruary 18, 2023 யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது. சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன். எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை. அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள். இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று. அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான். இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள். பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு. அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம். இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம். சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும். ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது. திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும். யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான். இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது. ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை. முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை! https://sudumanal.com/2024/02/18/முற்றவெளி-மந்திரம்/#more-5984
  21. சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை... இது தான் வரலாறா??? புலிகள் அப்படி செய்தார்களா??
  22. 🤣உண்மை வரலாறு? எது, வசி எழுதியதா?? ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். யாழுக்கு வெளியே , ஒரு 10 பேரைத் தெரிவு செய்து இந்த "உண்மை வரலாற்றை" ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். உங்களை எப்படிப் பார்வை பார்க்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இங்கே வந்து சொல்லுங்கள். நீங்கள் கிட்டத் தட்ட ஒரு பிரம்மை (delusional) நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதுக்காக? ஒரு "மாசில்லாத அமைப்பாக புலிகள் இருந்தனர்" என்று காட்டும் ஒரு பயனற்ற முயற்சிக்காக. இந்தப் பிரம்மையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்கிறீர்கள்! அனேகமாக, புலிகளின் நல்ல பக்கத்தைக் கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை, இந்தப் பிரம்மையினால் ஏற்படப் போகிறது!
  23. போதமும் காணாத போதம் – 19 ஆதா ஆடையுற்பத்தி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியேற இரவு ஏழு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தாள். உந்துருளியில் வந்து சேர்ந்தான் சமிந்த. ஏறியிருந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். சமிந்தவின் சீருடையில் கமழ்ந்த வாசனை நாசியை அரித்தது. லேசாக மழை துமித்தது. சமிந்தவின் தோளில் நாடி நிறுத்தி நெருக்கியிருந்தாள். அறிவியல் நகரிலிருந்து மாங்குளம் நோக்கி உந்துருளி மெல்ல விரைந்தது. ஆதாவுக்கு அப்போழ்து சுகமாயிருந்தது. இராணுவத்தினனோடு நெருக்கமாக அமர்ந்து ஆதா செல்வதை எதிர்த்திசையில் வந்த வைத்தியலிங்கம் கண்டார். அன்றிரவே “இவளொரு பட்டை வேசை. ஆர்மிக்காரங்களோட படுத்து சீவியத்தைப் போக்கிறாள்” ஆதாவின் வீட்டின் முன்பாக நின்று வைத்தியலிங்கம் வெறிபிடித்துக் கத்தினார். அவரோடு கூடியிருந்தவர்களும் பக்கப்பாட்டு பாடினார்கள். அவளுடைய வீட்டின் கூரையில் கற்கள் வீசினர். நாய்கள் குரைத்தன. பதிலுக்கு எதுவும் செய்யாமல் நகத்திற்கு வண்ணப் பூச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஆதா. சமிந்த அவளைத் தொடர்பு கொண்டான். அடுத்தமாதம் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, அவளையும் வருமாறு அழைத்தான். வெளியே நாய்களின் குரைப்பொலி இன்னும் அடங்கவில்லை. ஆதாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பார்க்கலாமெனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள். அதிகாலையில் எழுந்து மதியத்திற்கும் சேர்த்து சமைத்து, வேலைக்கு புறப்படுகையில் காலை எட்டு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டமும் நடையுமானாள். வைத்தியலிங்கம் தனது வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆதாவை அவர் பெயர் சொல்லியழைத்தார். அவள் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள். வைத்தியலிங்கம் கொதித்து வெருண்டார். “எடியே வேசை நில்லடி. உன்ர சாமானில அவ்வளவு கொழுப்போடி” என்றார். ஆதாவுக்குள் குருதியின் ஓட்டம் கலவரப்பட்டது. இறந்தகாலத்தின் நிழல் விழுத்திய சூரியோதயமென அவ்வளவு கம்பீரமான ஒளிக்கதிர்கள் திடுமென நிலமெங்கும் விரவியது. அழியாத காயத்தின் கண்களில் நீசப்படை எதிர்த்த வனத்திமிர். எதுவும் மிச்சமற்றவளின் சலிப்புடன் வைத்தியலிங்கத்தை நோக்கி வந்தாள். நெடும்பொழுதின் புயலென ஓருதையில் கீழே வீழ்த்தினாள். மல்லாந்து விழுந்த அவனின் நெஞ்சில் கால்கள் விரித்து அமர்ந்தாள். குரல்வளையில் உயிரின் மின்சொடுக்கு ஏறியிறங்கித் தவித்தது. கூந்தல் விரிந்த ஆதாவின் கைகள் நெரித்த குரல்வளையில் ஒருநொடி அசைவின்மை. “பிழைத்துப் போ மானங்கெட்டவனே” என்ற கட்டளையில் இருமிக்கொண்டெழுந்தது வைத்தியலிங்கத்தின் உடல். “எப்ப பார்த்தாலும் ஒருத்தியை வேசை, தாசையெண்டால் தாங்குவாளோ. உவன் வைத்திக்கு இன்னும் எப்பன் கூடவா அடி கிடைச்சிருக்க வேணும்” மாடன் சொன்னதும் சூழவிருந்தவர்கள் கைதட்டம் கொட்டிச் சிரித்தனர். “அவளென்ன, வைத்தியலிங்கத்தின்ர நோஞ்சான் மனிசியே. இயக்கத்தில கொமாண்டோ ரெய்னிங் எடுத்தவள். பெரிய சண்டைக் காயெல்லே” மாடன் மீண்டுமுரைத்தான். அவள் எழுந்து மிகவேகமாக நடந்தாள். வேலைக்குப் போகப்பிடிக்காமல் பிரதான வீதியிலிருக்கும் வாதா மரத்தின் கீழே அமர்ந்திருந்து சமிந்தவைத் தொடர்பு கொண்டாள். நிர்வாக வேலையொன்றுக்காக முல்லைத்தீவுச் செல்ல ஆயத்தமாவதாகச் சொன்னான். கூடவருவதாக அவள் சொன்னாள். சமிந்த சிலநொடிகள் தயங்கி யோசித்தான் போலும்! ஆதாவுக்கு விளங்கியது. “சரி நீ போய்விட்டு வேகமாகத் திரும்பி வா. நான் காத்திருக்கிறேன்” என்றாள். இலைகள் உதிர்ந்தன. வீதியில் வாகனங்களின் மூர்க்க இரைச்சல். நிலத்தின் அடியில் வேட்கைச் சுவடுகளின் நடப்பொலிகள் அலைந்து ஓயமறுக்கும் சப்தத்தை கேட்டுத்துடித்தாள். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்றநாள் ஆசிர்வதிக்கப்படாதிருப்பதாக! உமக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்ததென்று என் தாய்க்கும், தகப்பனுக்கும் நற்செய்தி அறிவித்து அவர்களை மிகவும் சந்தோசப்படுத்தினவர்கள் சபிக்கப்படக்கடவர். என் தாயார் எனக்குப் பிரேதக் குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கும்படியாய் கர்ப்பத்திலே நான் கொலை செய்யப்படாமற் போனதென்ன? என்று கலங்கினாள். ஒளியுள்ள ஒரு மேகம் அவள் மேல் நிழலிட்டது. யுத்தம் சூதாடிக் கழிந்த சபையில் மிச்சம் வைக்கப்பட்ட கிருஷ்ணை. விடுதலை யாகத்தின் தீயில் தோன்றியவளின் முன்பாக எல்லாச் சிறுமைகளும் சாம்பலாகும். கருக்கலின் பாதையில் சமிந்த வருவது தெரிந்தது. விம்மிக் கசியும் தனது விழிகளைத் துடைத்து பெருமூச்செறிந்தாள். ஆவேசமாகச் சுழன்று வீசிய காற்றில் புழுதி கிளம்பியது. தூசெழுந்த வெளியில் வாதையின் சிலுவை சுமந்து நின்றாள் ஆதா! சமிந்த யுத்தக் களத்தில் பெரிய அனுபவம் கொண்டவனல்ல. ஆனாலும் இறுதியாக நடந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறான். புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளோடு நடந்த மோதலில் காயப்பட்டுமிருக்கிறான். ஆதாவுக்கும் அவனுக்குமிடையே காதல் பிறந்த தொடக்க நாட்களில் இருவரும் தங்களுடைய போர்முனை அனுபவங்களை கதைப்பது வழக்கமாயிருந்தது. *** ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்று திரும்பிய மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கிற்று. இருவரும் தொப்பலாக நனைந்து வீடு திரும்பினர். அவளை வீட்டில் இறக்கிவிட்டு இராணுவ முகாமிற்கு செல்ல ஆயத்தமானான் சமிந்த. ஆனால் அவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தாள். சமிந்த வேண்டாமென மறுத்தான். தன்னால் ஆதாவுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாதென எண்ணினான். பொழியும் தூரவானின் பொருள் விளங்கிய காதலின் பாலிப்பு. சமிந்தவின் தலையைத் துவட்டிவிட்டு ஆடைகளை மாற்றுமாறு பணித்தாள். ஏற்கனவே அவனுக்கு வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்தாள். சுகநாதம் சூடிக்கொண்ட கூந்தலாய் அப்பொழுது குளிர்ந்தும் உலரத்தொடங்கியது. சமிந்த ஆடையை மாற்றும் போதுதான் முதுகிலிருந்த காயத்தழும்பைக் கண்டாள். “சமிந்த, இதுதான் புதுக்குடியிருப்பு காயமா?” என்று தழும்பைத் தொட்டுக் கேட்டாள். அவன் ஓமெனத் தலையசைத்து, உங்களுடைய “பசீலன் ஷெல்தான்” சொல்லிச் சிரித்தான். “நீங்கள், எங்களைக் கொல்ல இஸ்ரேல், இந்தியாண்டு ஓடியோடி ஆயுதம் சேர்க்க, நாங்கள் மட்டும் பனை மட்டையை வைச்சு உங்களைச் சுட ஏலுமோ. அதுக்குத் தான் இதுமாதிரியான ஏற்பாடுகள் எல்லாம். எங்கட ஒரு பசீலன் ஷெல்லுக்கு முன்னால உங்கட ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் சிறிசு தான்” ஆதா சொன்னாள். “பட்ட எனக்கு நோவு தெரியும். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சமிந்த. இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து தேத்தண்ணி அருந்தினர். அரியதரமிரண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “கொஞ்சம் இனிப்புக் குறைந்து போய்விட்டது, அடுத்த தடவை சரியாய் செய்வேன்” என்றாள். மழை குறையவேயில்லை. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமிந்தவின் உந்துருளியைப் பார்த்துச் சென்ற சிலர், அந்த மழையிலும் விடுப்புக் கதைத்துக் கொண்டு போயினர். வெளியிலொரு வெளியிருப்பதை வீட்டினுள் இருந்த இருவரும் மறந்தனர். ஆதா தன்னுடைய போர்முனை அனுபவங்களின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து தடவைகளுக்கு மேலாக களத்தில் விழுப்புண் அடைந்ததை அறையதிரும் வண்ணமுரைத்தாள். இனியும் என் நிலத்திற்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன். புகையிட்டு வேட்டையாடும் தேனடை போல பொஸ்பரஸ்களால் இரையாக்கப்பட்ட உடல்களின் மீந்த துண்டு நான். ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் ஓடிச் சிதறிப்போன என் தேசம் யாராலும் கடந்து போகாதவண்ணமாக பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது. என் காயங்களின் மீது நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவையொருநாள் அதிகாலை வானில் விடியலோடு ஒளிரும் என்றாள். சமிந்த அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். பேரூழின் அவயங்கள் நதிமறந்து நீந்தத்தொடங்கின. ஆதாவின் மேனி திறந்தது. தீயின் சண்டமாருதம் இறங்கி அமர திடுமென மழை விட்டது. ஆதாவின் வீட்டுப்படலையை தட்டும் சத்தம் கேட்டு விழிப்புச் சீவியது. ஆதா ஆடைகளை சரிசெய்தபடி கதவைத் திறந்து வெளியேறினாள். வாடியுதிர்ந்த முகத்தோடு பிச்சை கேட்டு நின்றாள் சிறுமியொருத்தி. அவளுடைய தந்தை இரண்டு காலுமற்று முச்சக்கர சைக்கிளிலிருந்தார். தன்னிடமிருந்த காசையும், சமிந்தவிடமிருந்த காசையும் வாங்கி வீட்டிலிருந்த உணவுப் பொருட்களையும் கட்டிக்கொடுத்தாள். “மலர்களை ஏந்திநின்று புன்னகைக்க வேண்டிய இந்தச் சிறுமியின் கையில் திருவோட்டைக் கொடுத்து, பிச்சை கேட்க வைத்தது யுத்தம்தான். நீ அதனை உணர்கிறாயா சமிந்த?” ஒத்துக்கொள்வதைப் போல தலையாட்டினான் அவன். *** இன்றைக்கு காலையில் வைத்தியலிங்கத்தை அடித்ததை சமிந்தவிடம் சொன்னாள். முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பிய களைப்பிலிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கலக்கமாயிருந்தது. அவன் உயிருக்கு ஏதும் தொந்தரவில்லையே என்று கேட்டான். செல்லமாக அவனுடைய காதைப்பிடித்து திருகி “என்னைப் பார்த்தால் கொலைகாரி மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள். “இல்லையா பின்ன. ஒருநாள், நீ எத்தனை ஆர்மிய சுட்டுக்கொன்றிருப்பாய் என்று கேட்ட போது, நானூறுக்கும் மேலே இருக்கும் என்றாயே” “ஓம். ஆனாலும் இந்த எண்ணிக்கையில் இப்போது ஒன்று அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றாள். “இனியுமா!” “ஓம், இப்ப நினைச்சாலும் – இந்தக் கணமே நானூற்று ஒன்றாய் ஆக்குவேன்” என்று விளையாட்டாக அவனது குரல் வளையைப் பிடிக்கப்போனாள். சமிந்த அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவர் உயிருனுள்ளும் ஊர்ந்து தொங்கும் மதுரக் குலையிலிருந்து ஏந்தவியலாதபடிக்கு துளிகளின் சொட்டுதல். விரல்கள் நெய்யும் துணியென உடல்கள் விரிந்தமை பெரிய ஆறுதலாயிருந்தது. காலாதீதத்தின் நறுமணம் உதடுகுவித்து இருவரையும் முத்தமிட்டது. கனவில் தளிர்த்துப் பெருகும் சுடர் செடியைப் போல சமிந்தவின் சரீரத்தில் நீண்டிருந்தாள் ஆதா. அவர்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளுமிடமிது. எவரின் வருகையும் நிகழாத துரவடி. தண்ணீரும் மரங்களும் சாட்சியாய் நாணமுற்று பார்க்க கூடினர். ஆதாவின் சரீரத்துக் காயத்தழும்புகள் போரின் கொம்புகள். மொழியின் தொன்ம எழுத்துக்கள். வயிற்றைக் குறுக்கறுத்து கொழுத்த நீளமெழுகுப் புழுவெனத் திரண்டிருக்கும் தழும்பின் மீது சமிந்த கைகளைப் பதிந்தான். கற்பாறையின் தகிப்பு. விசுக்கென கைகளை மீட்டான். “என்ன! தாங்கமுடியாதபடி சுடுகுதோ” ஆதா கேட்டாள். “ஓம் ஏன் இப்பிடிச் சுடுகுது” என்றான். “இது என்ர கடைசிக் காயம். இரணைப்பாலையில நடந்த சண்டையில வந்தது. மிச்ச எல்லாக் காயத்துக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுக்கு எதுவும் இல்லை. எல்லாமும் தலைகீழானதற்கு பிறகு, கனவும் பசியுமாக தியாகத்தின் முன்னே பலிகொடுத்த குருதியூற்று இங்கிருந்துதான் பீறிட்டது.” என்றாள். சமிந்த அந்தக் காயத்தின் மீது முத்தம் ஈன்றான். இருவரில் பெருகும் கண்ணீரால் சரீரங்கள் சிலும்பின. உலை மூண்டு கொதித்தது. பட்டயங்களும், துப்பாக்கிகளும், ஆட்லறிகளும், வன்புணர்வுகளும், பெருங்கொடுமைகளும், போரும், போராட்டமும், மிலேச்சத்தனங்களும் இருளில் நின்று மிரண்டு பார்த்தன. கூடலின் முயக்கவொலியில் அலையோசை கனன்று பெருங்கடல் தாகித்தது. “நீயும் நானும் காதலிப்பதை உன்னுடைய ஊரவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வைத்தியலிங்கம் மாதிரியானவர்கள் கடுமையான வசவுகளால் உன்னைத் திட்டுகிறார்கள். எனக்காக நீ எவ்வளவு துன்பப்படுகிறாய் என்று நினைத்தால் பெருந்துயரமாய் இருக்கிறது” சமிந்த சொன்னான். “துயரப்படு. சனங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எங்களை வன்புணர்ந்து கொன்று புதைத்த வன்கவர் வெறிப்படையைச் சேர்ந்தவன் நீ. அவர்கள் சந்தேகப்படுவார்கள். எதிர்ப்பார்கள். உன் பொருட்டு என்னையும் விலக்குவார்கள். அது சரியானதுதான்” “இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் ஏன் காதலித்தோம் ஆதா!” “படபடக்காதே. காதலிப்பதற்கு நெருக்கடிகள் அவசியமானவைதான். நீயும் நானும் வாழ்ந்து முடியும் வரை நெருக்கடிகள் நீளும் பெலன்கொண்டவை. அதற்காக…அழிந்து போன போரின் தனிமையை நீ விட்டுச் செல்வாயா, சொல்!” “போரின் தனிமையா?” நீ புணர்ந்து பருகிய தழும்பின் நறுமணம் சுரந்த உன்னுடைய ஆதா போரின் தனிமையல்லாமல், வைத்தியலிங்கம் சொன்னதைப் போல வேசையில்லை என்பது உனக்குத் தெரியாதா! “ஆதா!” என் தனிமையின் வெறுமை எரியட்டும். அதன் சடசடப்பொலியில் எறிகணைகள் வீழ்ந்து தோன்றிய பள்ளங்கள் தூர்ந்து போகட்டும். என் கடைசிக்காயத்தின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகும் வரை இயங்கி முயங்குவோம் என்றாள். ஆதா!….எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்கிறது. “எனக்கும் கேட்கிறது. ஆனால் நாம் எதிரும் புதிருமாய் போரில் மிஞ்சியவர்கள். இனிமேலும் காயப்படமாட்டோம் பயப்பிடாதே” என்ற ஆதாவின் வார்த்தைகள் நிலத்திற்கு ஆசுவசமாய் இருந்தது. https://akaramuthalvan.com/?p=1787
  24. நாங்கள் பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கண்க்கு எடுப்பார்கள்?? மேலும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத நாங்கள் எப்படி வாக்கு அள்ளிக்க முடியும்?? வெளிநாட்டில் இறந்துபோனவர்களையும் பதிய வேண்டுமா?? மாகாண சபை தேர்தல் வைக்க பணம் இல்லை ஆனால் இப்படி ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் அற்ற தேவையில்லாத வேலைகள் செய்ய பணம் உண்டு இன்னும் சில மாதங்களில் ஒரு யூரோ 500 ருபாய் வரலாம்” 🤣🤣
  25. தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல் Published By: VISHNU 24 FEB, 2024 | 07:21 AM மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியதால் தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரார் நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனின் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா தலைமையில் இன்று அண்ணமார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. https://www.virakesari.lk/article/177162
  26. சில வேளைகளில் தமிழர்களை விட சிங்களவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முன்னர் யாழில் லயனல் பெர்னாண்டோ என்னும் சிங்கள அரச அதிபர் இருந்தார். அவரை அங்கிருந்து மாற்றலாகி செல்வதட்கு அங்குள்ள மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களால் மிகவும் நேசிக்க படடார். எனவே எல்லோரையும் எடுத்தவுடன் இனவாதி, கெடடவர், துரோகி என்று சொல்ல கூடாது. எப்படி இருந்தாலும் அவர் அங்கு போட்டியிட வேண்டும், தெரிவு செய்யப்பட வேண்டும், பேரவை முடிவு செய்ய வேண்டும் போன்ற பல படிகள் உண்டு. அங்குள்ளவர்கள் அவர் தகுதியானவர் என்று கருதினால் யாரும் எதுவும் செய்ய முடியாது.
  27. எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு போன்றன இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு” அதற்கு முதல் அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை இன்று வரை பொதி தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை நன்றி வணக்கம் 🙏
  28. வழமையாக சுமத்திரன்,சம்பந்தர் பெயர்கள் தான் தமிழரசு கட்சி என்றவுடன் கடந்த 15 வருடங்களாக பிரபலமாக இருந்தது ... அவர்களின் பெயர்கள் இன்றி தமிழரசு கட்சியின் அறிக்கை இன்று வெளிவருவது நல்லது என நம்புவோம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே சுமத்திரன் சம்பந்தர் வீட்டை போய் அழப் போகிறார்..
  29. மிகச் சிறந்த கருத்து ஜஸ்ரின். இக்கொலைகளைச் செய்த புலிகள் இல்லாத போது இவற்றை பேசுவதால் என்ன பிரயோசனம் என்று ஒரு உறவு கேட்டார். இந்த அரசியல் கொலைகள் தேசியப் பெருமை என்று எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்படலாம் என்பது மிக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. எனவே தான் இவை அத்தனையும் எமது வரலாற்றின் தவறான பக்கங்கள் என்பதை எமது அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அவசியம் உள்ளது.
  30. 1- நான் புலிகள் தவறே செய்யவில்லை என்று எங்கும் சொல்லவில்லை. 2 - எனக்கு சிலவற்றில் சந்தேகம் இருக்கிறது என்றும் எழுதியுள்ளேன். மற்றும் படி மேலே நீங்கள் எழுதிய பலவற்றுடன் முரண்பாடு இல்லை. நன்றி ஜயா நேரத்திற்கு. (உங்களின் நேரத்தின் பெறுமதி அறிவேன். )
  31. ஆயுதப் போராட்டம் எந்த நன்மைகளையும் தராது அழிவுகளை மட்டுமே தந்தது என்பதைக் கண்முன்னே பார்தத பிறகும் இனியும் அப்படி போராடுவோம் என்று சொல்பவன் புறப்படுபவன் ஒரு லூசனக தான் இருக்கமுடியும் கந்தையர். 😂
  32. எவ்வளவு வேலைகள் மிக அவசரமாக மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த கணக்கெடுப்பை விழுந்தடித்து செய்வதின் அவசியம் என்ன?
  33. உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!!
  34. போனை தண்ணீர் படாமல் பாதுகாப்பது தான் சிறந்த வழி .... ( என் போன் தண்ணீர்பட்டு தொடர்பு எண்களை இழந்து படட துன்பம் வேறு கதை ) 😃
  35. உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி குசா 🤣 உங்களின் இந்தக் கேள்வியினூடாக நான் புரிந்துகொள்வது,... "தாங்கள் ஆகக் குறைந்தது 40-45 வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டுத் தப்பியோடிவிட்டீர்கள்." ஆயுதம் தாங்கிய எல்லா இயக்கங்களும் துப்பாக்கிக் குண்டு மூலம்தான் தீர்ப்பெழுதினார்கள். இது உங்களுக்குத் தெரியாதென்றால் தங்களின் போராட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.