Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    88820
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3125
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    20351
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/08/24 in all areas

  1. நான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்
  2. இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும் என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாய மனமும் சாய இனி இன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
  3. பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
  4. எம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர். நேற்றும் இங்கு நடைபாதையில் கொஞ்சம் வயதான ஒரு தம்பதியினரை பார்த்தேன். இந்தியர்கள் போன்றிருந்தனர், இந்த இடத்திற்கு புதியவர்கள். 'ஹலோ...' என்று சொல்லி புன்னகைத்தேன். அவர்கள் முகங்களை திருப்பிக்கொண்டு போய்விட்டனர். என்ன ஆனாலும், நாங்கள் ஹலோ என்று சொல்லி புன்னகைக்க வேண்டுமாம். அது எங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லதாம்............. என்ன, 'இப்படியே எந்த நேரமும் எல்லாரையும் பார்த்து ஈ என்று சிரித்தால் உங்களை பைத்தியம் என்று நினைக்க போயினம்' என்ற ஒரு குறிப்பு பக்கத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கும்.......🤣🤣
  5. நிச்சயமாக புத்தன், அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை. அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான சிங்கள அரசியலால் சிறிதளவாயினும் கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு, அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள், இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள். நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள். இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர் தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின் நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள். நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன். அவர்கள் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள். இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.
  6. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
  7. பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று. 😂 🤣
  8. அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!
  9. சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும் தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும். இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை முதலில் தமிழில் போடு மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார். அவர் சொல்வது சரியாகவே படுகிறது. அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.
  10. மொழி எங்கு தாழ்த்தப்படுகின்றதோ அங்கு கவனமும் கண்ணும் செலுத்தப்பட வேண்டியது அவசியம். யாழ்களத்தில் கூட தமிழ் மொழி தான் முதலிடம். நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன் என்றாலும் ஏன் யாழ்களத்தில் மூழ்கியிருக்கின்றேன் என்றால் புரிந்தவர்களுக்கு புரியும். தமிழை விற்கும் வியாபாரிகளுக்குபுரியாது. மற்றும் படி சீமான் அரசியல் அவர்/ அவர் கொள்கை சம்பந்தப்பட்டது. அதை விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.
  11. கஞ்சாவை மேற்கு நாடுகள் சட்ட பூர்வமாக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன: 1. கஞ்சாவில் இருக்கும் பதார்த்தங்கள் (THC etc.) அடிமைப் படுத்தும் வீரியம் (addiction) ஏனைய போதை வஸ்துக்களை விட மிகக் குறைவு. 2. கஞ்சாவினால் ஏற்படும் நீண்டகால உடலாரோக்கியப் பாதிப்பும் ஏனைய போதைகளோடு ஒப்பிடும் போது குறைவு. 3. சட்டங்களை மீறி இலகுவாக கஞ்சா விளைவிக்கப் பட்டு, தாராளமாகப் புளங்குகின்றது street drug வடிவில். இது கறுப்புச் சந்தை, வயது குறைந்தோர் கூட இதனால் நுகர வாய்ப்பிருக்கிறது. 4. இதையே அரச கட்டுப் பாட்டில் கொண்டு வந்து நுகர அனுமதித்தால், வயது குறைந்தோர் நுகராமல் கட்டுப் படுத்துவது இலகுவாக இருக்கும் (கறுப்புச் சந்தையின் மவுசு குறைந்தால்) 5. இவ்வளவு உப்புச் சப்பற்ற கஞ்சாவைக் கட்டுப் படுத்தும் முயற்சி, நிதி என்பன ஏனைய போதை வஸ்துக்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தலாம்! overdose மரணங்களைத் தடுக்கலாம்!
  12. நீங்க‌ள் எழுதின‌தில் உட‌ன் பாடு இல்லை நீங்க‌ள் அறியாத‌தை எழுதுகிறேன் மூத்த‌வ‌ரே............போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் நாடு மழை வெள்ளத்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது...........அண்ண‌ன் சீமான் தொட்டு க‌ட்சி பிள்ளைக‌ள் ம‌க்க‌ள் சேவ்வை செய்தார்க‌ள் அவ‌ர்க‌ளின் நேர‌ம் அதோடையே போச்சு சென்னைய‌ தாண்டி ப‌ல‌ ஊர்க‌ளில் ம‌க்க‌ளுக்கு த‌ங்க‌ளால் முடிந்த உத‌வியை செய்தார்க‌ள்...................க‌ட்சி விடைய‌த்தில் தேர்த‌ல் ஆனைய‌ம் தான் பெரும் பிழை அல்ல‌து த‌வ‌று செய்து இருக்கின‌ம்...............க‌ர்நாடாக‌வில் ஏதோ ஒரு தேர்த‌லில் போட்டியிட்டு அவ‌ர் வாங்கின‌ ஓட்டு 100க்கும் குறைவு..............அவ‌ர் 7அல்ல‌து 8மானில‌த்தில் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் நிக்கிறார் இந்த‌ முறை ஹா ஹா .............த‌மிழ் நாட்டில் அவ‌ருக்கு என்று கட்சி அலுவலகமும் கிடையாது 40 தொகுதியில் வேட்பாள‌ர்க‌ளும் இல்லை😁😁😁😁😁...........இது தான் அந்த‌ க‌ட்சியின் நிலை😜............அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கி த‌மிழ் நாட்டின் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியின் சின்ன‌த்தை அவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌து முறைகேடு😡.................உந்த‌ ச‌ங்கி ம‌ங்கிய‌ல் திட்ட‌ம் போட்டு க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்த‌தால் அண்ண‌ன் சீமானுக்கு முன்பை விட‌ ஆத‌ர‌வு கூடிட்டு போகுது🙏🙏🙏..................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைப்ப‌தே இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் தான்............குடும்ப‌ம் குடும்ப‌மாய் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ருக்கு சொல்லி அப்ப‌டியே காட்டுத் தீ போல் ப‌ர‌வுது த‌மிழ‌க‌ம் எங்கும்................ விஜேப்பி , திமுக்கா இவ‌ர்க‌ளின் ஜ‌டிம் காசுக்காக‌ வேலை செய்கின‌ம்..........நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் இன‌த்துக்கா இணைய‌த்தில் இணைந்து இருக்கினம்................முன்னேர்க‌ள் இர‌ட்டை இழைக்கும் உத‌ய‌ சூரிய‌னுக்கும் ஓட்டு போட்ட‌ கால‌ம் மாறும்..............இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளிட‌ம் சில்ல‌றை காசு எடுப‌டாது.................இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தால் க‌ட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்ப்ப‌து முக‌ நூல் ரிவிட்ட‌ர் யூடுப்...................இப்ப‌வே எங்க‌ட‌ ஜ‌ரிம் மிக‌ ப‌ல‌மாய் இருக்கு............கால‌ போக்கில் நாம் த‌மிழ‌ர் ஜ‌ரிம்ம‌ அடிக்க‌ யாராலும் முடியாது................. படையை பெருக்கு தடையை நொறுக்கு............. வாழ்க பிரபாகரன் நாமம் 🙏🥰 வாழ்க‌ சீமான் 🙏💪 ந‌ன்றி 🙏
  13. சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருந்தா எப்படி? இரண்டு தட்டுதட்டி இது தாண்டா இந்தியா என்று காட்ட வேண்டாமோ? யே யே,...யே நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.
  14. Election வருகிறது அல்லவா, தென்நாடு எங்கேனும் குண்டு வெடிக்கலாம், பாகிஸ்தான் ஊடுருவலாம், கல்வான் பள்ளத்தாக்கு போன்று வேறேனும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்தியா அடிவாங்கலாம், காஸ்மீரில் குண்டு வெடிக்கலாம் அல்லது சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கலாம், அதன் தொடர்ச்சியாக, அப்படியே மோடி நெஞ்சைப் பிளந்து இராமனைக் காட்டும் அனுமானாக நோஞ்சான் இந்தியாவிற்கு காட்டப்படுவார். தேர்தலிலும் வெல்ல வைக்கப்படுவார் 😁
  15. ராஜ்நாத் சிங் அவர்கள் இந்இராணுவத்தின் மேல் ஏதோ கோபம் இருக்கு. அதுதான் சீனனிடம் போட்டுக் கொடுக்கிறார். 🤣
  16. போதைப்பொருள் மருத்துவத்திற்காக பாவிப்பதை தவிர்த்து வேறு எதற்கும் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து. எங்கை ஒருக்கால் இழுத்து பாப்பம் எண்டு போட்டு ஒரு இழுவை இழுக்க வெளிக்கிட்டால்.....தொடர்ந்து இழுக்க வேண்டி வரும் கந்தையர்.😂
  17. நிச்சயமாக இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை....எங்களின் தேசிய செயல்பாடு அவர்களின் கால் தூசுக்கு சமன் ....சில வருடங்களுக்கு முன் யாழ் இந்து மாணவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினர் எங்கயோ பார்த்த ஞாபகம்...சிங்கள பொலிசாரிடம் தமிழில் சொல்லுங்கோ என்று கேட்கும் துணிவு இருக்கின்றது அந்த இளைஞர்களுக்கு ....
  18. தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
  19. ஆயுதங்களோடு இருந்த ராணுவ வீரர்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை? எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்தியா-சீனா துருப்புகளுக்கு இடையே நடத்த கைகலப்பு சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் "இந்திய துருப்புக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை" என்று தெரிவித்தார். ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில், " உண்மைகளை நேராகப் பெறுவோம். எல்லைப் பணியில் உள்ள வீரர்கள் ஆயுதங்களை எப்போதும் ஏந்தி செல்கின்றன. குறிப்பாக இந்திய நிலையில் இருந்து வெளியேறும்போது. ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த வீரர்களும் ஆயுதங்கள் வைத்திருந்தனர். எல்லை மோதல்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நீண்டகால நடைமுறை (1996 & 2005 ஒப்பந்தங்களின்படி) உள்ளது" என்று பதிவு செய்தார். 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த நெறிமுறைகளை ஜெய்சங்கர் குறிப்பிடுகிறார். 1996 வருட ஒப்பந்தம் இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை உறுதி செய்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றியது. 1996 வருட ஒப்பந்தத்தின் பிரிவு VI (1)ன் கீழ், "இந்தியா-சீனா எல்லைகட்டுப்பாட்டு கோட்டின் இரண்டு கிலோமீட்டர் வரம்புக்குள் ... இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு , உயிரியல் சீரழிவு, அபாயகரமான இரசாயனம், குண்டு வெடிப்பு போன்ற ஆபத்து விளைவிக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஈடுபட கூடாது. இருப்பினும், வழக்கமான எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படும் சிறியரக துப்பாக்கிகளுக்கு இந்த தடை பொருந்தாது ”என்று 1996 ஒப்பந்தத்தின் பிரிவு VI (1) கூறுகிறது. எவ்வாறாயினும், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளா பிரிவு VI (4) தற்போதைய சூழலில் மிகவும் பொருந்த கூடியாதாக உள்ளது: பிரிவு VI (4)ல் “ எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் நிலைமை அதிகரிப்பதைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். பதட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் இராஜதந்திர பிரிவு மூலம் உடனடி ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிரிவு X (1) ல், “ இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் ஏற்படும் பொதுவான புரிதல் சார்ந்து, தற்போதைய ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தப்படும். இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் செயல்முறையை ஒப்புக்கொள்கின்றன ” என்று தெரிவிக்கப்பட்டது. 2005 வருட ஒப்பந்தத்தின் பிரிவு 1 இல்,“இரு தரப்பினரும் எல்லைத் தொடர்பான கேள்வியை அமைதியான மற்றும் நட்புரீதியான ஆலோசனைகள் மூலம் தீர்ப்பார்கள். எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 2013 ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பும் அதன் இராணுவ திறனை மற்றொன்றுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று தெரிவித்தது. இருப்பினும், மேற்கூறிய ஒப்பந்த விதிகள், கடந்த திங்களன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலுக்கு நேரடியாக பொருந்தாது. கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பேசிய இராணுவ அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் மோதிய பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் வெடிமருந்து உட்பட ஆயுதங்களுடன் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினர். துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தாலும், தற்செயலான துப்பாக்கிச் சூடு (அ) தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக ஆயுதத்தின் முனைகள் தரையை நோக்கி இருக்கும்" என்று தெரிவித்தனர். இந்த நடைமுறைகள் குறிப்பிட்ட காலத்தில் உருவானது. உதாரணமாக,1962 வருடத்திற்குப் பிறகு லடாக்கில் உள்ள சீன-இந்தியா எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதில்லை. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு தீர்வின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தகைய சூழலில், துப்பாக்கிச் சூடு அல்லாத பிற ஆயுதங்கலைப் பயன்படுத்த ராணுவப் படையினர் பழகிவிட்டனர். முந்தைய காலங்களில் பாறை கற்கள், மட்டைகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திருந்தாலும் யாரும் இறக்கவில்லை. எவ்வாறாயினும், இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மூர்க்கத்தனம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த மே 5/6 அன்று பாங்காங் த்சோ ஏரிக்கரையில் நடந்த மோதலின் போது 70 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் காயமடைந்தனர். சமீபத்தில், இந்திய இராணுவம் கூட லடாக் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள தனது வீரர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கூட்டத்தை கலைக்கும் பாதுகாப்பு கருவிகள் வழங்க கட்டளையிட்டதாக சில தகவல்கள் தெரிவிகின்றன. மணிநேரங்களாக நீடித்த ஒரு மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து ஏன் எந்த அதிகாரியும் நினைக்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட பல பகுதிகளில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பீரங்கித் தாக்குதல்கள் கூட நியாயப்படுத்தப்பட்டிருக்கும் என்று சில இராணுவ வீரர்கள் வாதிட்டனர். இருப்பினும், இந்திய மற்றும் சீன வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் ஆட்களில் ஒருவரைத் தாக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் கடினம் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது https://tamil.indianexpress.com/india/why-not-open-fire-even-soldiers-on-lac-were-carrying-arms-200727/
  20. மயிலாடட்டும் நாங்கள் வாசிக்கிறோம் ( ரசிக்கிறோம்) சுவி ஐயாவின் கதைகளில் ஒரு "சுவை " இருக்கும். தொடருங்கள் . இதனை நானும் வழிமொழிகின்றேன் அய்யனே
  21. அப்பப்ப ஏதாவது சொல்லி விடுகிறீர்கள்.
  22. 2020 இல் எடுத்த படமெங்கே? தடை செய்து விட்டார்களோ?
  23. ரீச்சரம்மா வீட்டிலே பேரப்பிள்ளைகள் விளையாடிய பின்பு கூட்டிஅள்ளி வைத்து பழகிவிட்டீர்கள் போல இருக்கிறது.
  24. Home Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க. உங்க குறையை அவர் தீர்ப்பார். எமது வீட்டிலும் இதே பிரச்சனை.
  25. அன்றாட நிகழ்வை , கால மாற்றத்தை கவி வரியாக சொல்ல முயன்று இருக்கிறீர்கள் .இடை வெளியை சற்று கவனியுங்கள். முயற்சிக்கு பாராட்டு .
  26. வீடு வேலை வேலை வீடு இது தானே அண்ணா குடும்ப தலைவன் என்று இதுவரை.... இனியாவது போகமுதல் என்றாலும்...? கேள்வி கொஞ்சம் ஆரம்பித்ததும். 🤣 அதே... 😅
  27. அப்புறம் ஏனக்கா பார்ட்டி?
  28. இதை நீங்கள் முதலே எனக்கு சொல்லியிருக்க வேண்டும். நான் ஒரு அளவோடு நின்றிருப்பேன்.............🤣🤣 @Justin பதியும் பல கருத்துகளையும், விளக்கங்களையும் வாசித்திருக்கின்றேன். மிக அதிகமாக வாசிப்பவர் என்றே நினைத்திருந்தேன், அது சரிதான்.....👍👍
  29. ஆமாம் உங்கள் கருத்துகள் சரியானது .....சீமான் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்த வேண்டும் ..... தமிழ்நாட்டு மக்கள் இலங்கையில் தமிழ் தலைவர்கள் உணர்ச்சிகளை தூண்டும் வீதமாகப் பேசியதன். பலனை நேரில் கண்டு உள்ளார்கள் வாத்தியார் எம்ஜிஆர். உணர்ச்சியை தூண்டும் வீதமாக பேசுவதில்லை அதே வழிமுறைகளை சீமான் பின்பற்றுவது நல்லது ...தமிழ் நாட்டின் மக்கள் கல்வி அறிவில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் எனவே… நடைமுறை சாத்தியம் இல்லாத விடயங்களை பேசக்கூடாது”
  30. யாயினி & அல்வாயன் இது நான் எழுதிய பதிவு அல்ல. “உண்மை உரைகல்” என்பவர் முகநூலில் பதிந்த பதிவை இங்கே இணைத்துள்ளேன். கட்டுரையின் அடியில் அவரின் பெயரையும் இணைத்துள்ளேன். தவறான புரிதல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்.
  31. நிச்சயமாக உத்தரவாதம் இல்லை. ஆனால், வயது குறைந்த பாவனையாளருக்கு யார் விற்கிறார்கள் என்று பார்த்தால் சட்ட விரோத விற்பனையாளர்கள் தான். இவர்களுக்கு இலாபம் இல்லாமல் அரசே சட்டத்திற்குட்படுத்தி பிசினசை எடுத்துக் கொண்டால், இவர்கள் வேறு எதையாவது விற்கப் போய் விடுவார்கள், எனவே பள்ளிகளுக்குள் கஞ்சா வருவது குறையலாம். இதை உறுதி செய்யும் தரவுகள் இன்னும் அமெரிக்காவில் இல்லை, ஆனால் தியரிப் படி இது சாத்தியம். கஞ்சாவை தினசரி எடுத்துக் கொண்டால் நிச்சயம் மூளையின் செல்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில், மூளையில் இருக்கும் உயிரியல் பாதைகளைத் தான் கஞ்சாவில் இருக்கும் cannabinoids பதார்த்தம் பாவித்து உச்சம் தருகிறது. வித்தியாசம் என்னவெனில், ஏனைய தீவிர போதைவஸ்துக்களான opioids போல overdose மரணங்கள் கஞ்சாவினால் நிகழ்வதில்லை, அடிமைப் படுத்தும் இயலுமையும் குறைவு. மற்றபடி எந்த போதையும் (அல்கஹோல், கஞ்சா, இணையம்..) வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது உண்மை!
  32. காலமானார் என்பதுதான் பொருத்தமான சொல்லாக இருக்கும்.
  33. ஈழ‌ ப‌ற்று மொழி ப‌ற்று இத‌னால் தான் யாழில் நாம் இணைந்தோம்..............ஈழ‌ம் ப‌ற்றி இனி யாழில் எழுத‌ பெரிதாக‌ ஒன்றும் இல்லை.............இடை சுக‌ம் ப‌ழ‌கின‌ உற‌வுக‌ளுக்காக‌ யாழை எட்டி பார்ப்பேன் உங்க‌ளின் எழுத்தை விரும்பி வாசிப்ப‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ர் க‌ள்ளுக் கொட்டில் தாத்தா.............. அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம‌ அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌து த‌வ‌று.............சின்ன‌த்தை த‌க்க‌ வைக்காத‌வ‌ர் எப்ப‌டி அதை செய்வார் இதை செய்வார் என்று எழுதுவ‌து முட்டாள் த‌ன‌ம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி என்று தெரிந்த‌ பிற‌க்கும் அநீதி இழைக்கப்பட்டவர் ப‌க்க‌ம் நிக்காம‌ தேவை இல்லாம‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் ந‌க்க‌ல் பானியில் எழுதுவ‌து ச‌ரியே இல்லை யுவ‌ர் ஆன‌ர்.................
  34. ஜேர்மனி செய்தது சரியானது காரணம் ஐரோப்பா ஒன்றியம் ஒரு நாடு போன்றது பக்கத்து நாடு அங்கீகாரம்…………………… வழங்கி இருக்கும் போது ஜேர்மன் தடை செய்து எந்தவொரு பிரயோஜனமுமில்லை மற்றும் கோப்பி தேனீர் கூட போதை உண்டு ...அளவுடன் பாவிக்கலாம் தடை செய்த நாடுகளில் களவாக பாவிக்கிறார்கள் தடை செய்ய உடன். பாவிக்கவில்லை என்று கருத்து இல்லை 1, விசா இல்லாமல் ஒரு நாட்டில் வாசிக்ககூடாது,......வாசிக்கிறார்கள் 2. ..வேலை அனுமதிப்பத்திரமின்றி வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 3,... பதிவு இல்லாமல் வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 4, வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் ........பிழையான. கணக்கு காட்டி குறைந்த வரி காட்டுகிறார்கள் 5,....நான் பாவிப்பது இல்லை சட்டம் வந்து விட்டது பாவிக்கலாம். பாவிக்க போகிறேனா. ? இல்லையே?? 6, களவாக. செய்வதில் ஒரு சுகம் மகிழ்ச்சி உண்டு ......தடைகளை மீற. ஒரு ஆர்வம் இருக்கும் அனுமதி அலுப்பை தரலாம்,...எனவே… ..கஞ்சா பாவனையாளர்கள் குறையலாம்🤣🙏
  35. ஒவ்வொரு மாதமும் அடி வேணுமா?? சீனா சிங்களவனை ஆதரிக்காமால். தமிழனை ஆதரித்து இருக்கலாம் இந்தியா அடக்க ஒடுக்கமாக. இருந்து இருக்கும்
  36. இன்றும் கசிப்புக்கு வரவேற்பு இருக்கும் இடங்களில் இதை சொல்லி அடி வாங்கமுடியுமா?
  37. இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம். நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப் சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂 (குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂
  38. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். என் கண்ணுக்கு தெரிந்த உருவங்களை வைத்தே நான் அப்படி வகை பிரித்திருந்தேன். இதை தெளிவுபடுத்த சரியான ஒரு ஆள் இருக்கின்றார். என் நண்பன் தான். மிக நீண்ட நாட்களின் முன் இங்கு மிருக வைத்தியதுறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நூறு நூறு வெள்ளெலிகளாக நண்பனும், நண்பனின் பேராசிரியரும் வாங்குவார்கள். ஏதோ செய்வார்கள். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அப்பவே நண்பனுக்கும், அவனின் பேராசிரியருக்கும் தகராறாகி, அவன் வேறு எங்கோ போய் விட்டான். இப்ப எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை. அவனுக்கு நியூ யோர்க் தோதான இடமாக இருக்கும் போல............. 😀😀
  39. நாய்களை பிடிச்சு கருத்தடை செய்யுங்கோ ....இதுக்கும் எங்கன்ட ஆலோசனையா உங்களுக்கு தேவைப்படுகிறது....எங்களுக்கு நேரம் இல்லை
  40. https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும். ஆனால் தமிழ் வேண்டாம்.
  41. நாங்க சின்னப் பிள்ளையா.. நேரா.. சீமான் அண்ணாவை கேட்டுக்கிறம். உங்க கருத்தைக் கேட்கனுன்ன அவசியமில்லை தானே.
  42. இந்தக் காணொளி யுரியுப்பரும் எமது ஆதங்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார். அதனை நேரடியாக சொறீலங்கா விமானப்படையிடம்.. கேள்வியும் ஆக்கி இருந்தார். சொறீலங்கா விமானப்படை பேச்சு ஆள்.. தாங்கள் யுத்த விமானங்களை கொண்டு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. சொறீலங்கா விமானப்படைக்குள் கூட ஒரு சிறிய புரிதல் இருந்திருக்குது.. இந்த நிகழ்வை இந்த மண்ணில் வேறுவிதமாகக் கையாளனுன்னு. அதுதான் அந்த மண்ணில் ஏற்படுத்திய வலிகளுக்கான ஒரு சிறிய மாற்றமாக இருக்கலாம்.
  43. முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு. மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம்.
  44. முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை . 1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் . 3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .
  45. அருகில் உள்ள நாட்டில் (Netherland)கஞ்சாவுக்கான அனுமதி நீண்ட காலத்துக்கு முன் உள்ளது. ஜேர்மனி கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதனை தான் கனடாவும் சொல்லி சட்டபூர்வமாக்கியது. இதன் வருமானம் அனைத்தும் ( சிகரட், மதுபானம் உட்பட) அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.