Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்19Points3055Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்14Points20018Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46783Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/12/24 in all areas
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
8 pointsஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.8 points
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.7 points
-
அன்றுபோல் இன்று இல்லையே!
6 pointsஅன்றுபோல் இன்று இல்லையே! *************************************** அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம் அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும் அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும் ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும் உழைப்போர் வியர்வையில் வளரும் சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும் பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும். வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும் தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும் கடலும் காற்றும் மீன்களும்,இறாலும் இயற்கை மாறாத மாரியும்,கோடையும் இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும் இனிக்க இனிக்க பேசிடும் தமிழும் கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும் குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும். உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும் உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும் பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும் பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும் பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும் பண்பும் அடக்கமும் மரியாதைச் சொற்களும் பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும் நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும். ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும் வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும் தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும் தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும் கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும் கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும் சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம் பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ? -பசுவூர்க்கோபி.6 points
-
வாசலும் வீடும்
6 pointsநேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீழாக எவ்வளவு புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் பூந்தொட்டிகள் தொங்கும் செடிகள் கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் வாசலில் அவசரத்தில் பார்த்தால் அநேக வாசல்களும் அழகே நிதானத்தில் பார்த்தால் பல வாசல்களும் ஒன்றே என்றும் எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் வெகுசில வாசல்கள் பயத்தை தருகின்றன தனித்தவர்களும் துணிந்தவர்களும் அதன் உள்ளே வாழ்கின்றனர் எப்போதும் கரப்பான் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் வேரோடி வெடித்து கவனம் இன்றி கைவிடப்பட்ட சில வாசல்கள் ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது இன்னொன்று அகலிகையுடன் கல்லாகி இன்று வரை உயிர் கொடுக்கப் போகும் ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது வாசல் தாண்டி வீடுகளுக்குள் மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் வாழ்கின்றனர் பிரிகின்றனர் குப்பை ஆகின்றன வீடுகள்.6 points
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெருமாள், யாழில் வந்த செய்தி இது: அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி மட்டும் உயிரிழந்த சம்பவமும் எம் சமூகத்துக்குள் 2022 இல் நிகழ்ந்தது. இப்படியான கொலைகள் எல்லா சமூகத்த்துக்குள்ளும் நிகழ்பவை. இதை இனம் சார்ந்த ஒரு செயலாக நிறம் தீட்ட முடியாது. ஆனாலும், இப்படியான விடயங்கள் தமிழ் சமூகத்துக்குள் நிகழும் போது, அதனை "தமிழர்கள் பயங்கரவாதிகள், எனவேதான் இப்படியான செயல்களை செய்கின்றனர்" என்று சிங்கள ஊடகங்கள், மற்றும் சமூகவலைத்தளத்தில் இயங்கும் சிங்கள தீவிர இனவாதிகள் எழுதியதையும், இனியும் எழுதுவார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் அந்த இனத்தால் தன்னுடன் இருக்கும் ஒரு இனத்தை இனப்படுகொலை செய்து விட்டு, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இருக்க முடிகின்றது. என்னால் 2 மாதக் குழந்தையையும் படுகொலை செய்ததை, சிங்களவர்களுக்கு எதிராக எழுதுவதன் மூலம் எம் இனத்துக்கு சாதகமாக எழுதுகின்றேன் என்ற கோணத்தில் சிங்கள இனவெறியர்களைப் போல் எழுத முடியாது. அவ்வாறு எழுதினால் அந்த சிங்கள இனவெறியாளர்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.5 points
-
வெறுப்பு!
4 pointsவெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.4 points
-
வாழ்ந்து பார்க்க வேண்டும்
4 points27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் துணையாக இருந்தது அவளதுபெரிய வெள்ளை நிறமான ‘மலைக்கா’ என்ற நாய் மட்டுமே! கிளவ்டியா, எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். புத்தக வாசிப்புகளில் கலந்து கொள்வாள். அவள் நடன வகுப்பும் நடத்திக் கொண்டிருந்தாள். சிறார்களுக்கு படிப்பும் சொல்லித் தந்தாள். யேர்மனியில் மட்டுமல்ல பிறேஸிலில் நடைபெறும் கார்னிவெல், களியாட்ட விழாக்களில் எல்லாம் ஆர்வத்துடன் பங்கேற்பாள். தான் பங்குபற்றும் நிகழ்வுகளின் படங்களை மறக்காமல் முகநூலிலும் பதிந்து நண்பர்கள் தெரிந்தவர்களுடன் மகிழ்ந்திருப்பாள். “எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள்?” “உங்களைக் கைது செய்யிறதுக்கு மட்டுமல்ல, உங்களின்ரை வீட்டைச் சோதனை செய்யிறதுக்கும் எங்களுக்கு அரச சட்டத்தரணி அனுமதி தந்திருக்கிறார்” கிளவ்டியாவின் புருவம் மேல் ஏறி கீழ் இறங்கியது. “நான் நினைக்கிறன், நீங்கள் விலாசம் மாறி வந்திருக்கிறீங்கள் எண்டு” “இல்லையே. செபஸ்ரியான் வீதி, இலக்கம் 73, ஐந்தாம் மாடி, கிளவ்டியா பெர்னாடி எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது” கிளவ்டியாவை, பொலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது, அவளது கையில் விலங்கு மாட்டிய பொலீஸ் அதிகாரி அவளிடம் கேட்டார், “ உங்களுக்கு டேனிலா கிளெட்டைத் தெரியுமோ? முப்பது வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று. இடதுசாரித் தீவிரக் கொள்கையைக் கொண்ட செம்படை அமைப்பு (Red Army Faction) யேர்மனிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக, கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என செம்படையின் செயற்பாடுகள் தொடர்ந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 1977இன் பிற்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தை யேர்மனியின் 'இலையுதிர் காலம்' என்று யேர்மனியில் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் செம்படை அமைப்பில்தான் டேனிலா கிளெட் இருந்தாள். அவளது தாயார் ஒரு பல் வைத்தியர். போதுமான வருமானம். நிறைந்த வாழ்க்கை. டேனிலா கேட்பவை எல்லாம் வீட்டில் கிடைத்தன. ஆனாலும் அவள் விரும்பியது ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை - அது எல்லோருக்குமான ‘சம உரிமை’. அதற்காகத்தான் படிப்பு, குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் தன்னை செம்படையில் இணைத்துக் கொண்டாள். 20 ஏப்ரல் 1998 அன்று, ஜெர்மனிய மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட எட்டுப் பக்கங்கள் அடங்கிய செய்தி ஒன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் மூலம் வந்திருந்தது. அதில் செம்படை கலைக்கப்பட்டுவிட்டதாக RAF இன் இலச்சினையுடன் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் பிறகு யேர்மனி, தனது இளவேனிற் காலத்தை அனுபவிக்க ஆரம்பித்தது. ஜூலை 30, 1999இல் ஒரு கோடை காலத்தில் செம்படையின் சில நடவடிக்கைகள், அவர்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டின. அந்த வருடத்தில், டியூஸ்பேர்க் நகரத்தில் நடந்த ஒரு கொள்ளையில் செம்படை உறுப்பினர்களான, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட், ஆகிய மூன்று பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை இடப்பட்டதாக பொலீஸ் அறிக்கை வெளிவந்தது. யேர்மனியப் பொலீஸாரால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்கவும் முடியவில்லை, அந்த மூன்று பேர்களையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அந்தக் கொள்ளைக்குப் பிறகு, நீண்ட காலமாக எந்தவிதமான சம்பவங்களிலும் RAF அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த எவரும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதாகத் தகவல்களும் வெளிவரவில்லை. 2016, மே மாதம் 25ந்திகதி, மீண்டும் ஒரு பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தைத் தாக்கி 400,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழும் செம்படை உறுப்பினர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இந்த முறையிலான கொள்ளைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவானது. இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதற்காக, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட் ஆகிய மூவரைப் பற்றிய புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு தகவல் தருவோருக்கு 150,000 யூரோக்கள் தருவதாக யேர்மனியப் பொலீஸ் திணைக்களம் அறிவித்தது. பலன் கிடைக்கவில்லை. ஆனால் கொள்ளைகள் தொடர்ந்து இடம்பெறவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. PimEyes, இரண்டு போலந்து நாட்டு அறிவியல் பட்டதாரிகளால், 2017 இல் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள். PimEyes மென்பொருளில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் கூட, சில விநாடிகளிலே அந்தப் படத்தில் உள்ளவரின், கண்ணின் குழிகள், கன்னத்தின் எலும்புகளின் உயரம், வாயின் பக்கங்கள் போன்றவற்றை அளவிட்டு அவரையோ, அல்லது அவரை மிக ஒத்த புகைப்படங்களையோ வெளிக் கொணர்ந்து விடும். இன்று அநேகமானவர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், PimEyes மென்பொருள் இலகுவாக செயற்பட அது வாய்ப்பாக அமைகிறது. தங்களது ஆபாசப் படங்களையும், தேவையில்லாத சில புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த மென்பொருளைப் பலர் பயன்படுத்துகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர், ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்ன், தற்செயலாக தேடப்படுபவர் பட்டியலில் இருந்த டேனிலா கிளெட்டின் படத்தைக் கண்டு, PimEyes மென்பொருளில் அதைத் தரவிட, அது முகநூலில் இருந்த டேனிலா கிளெட்டின் பல புகைப்படங்களை வெளிக் கொணர்ந்தது. ஆனால் அவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிளவ்டியா பெர்னாடியின் புகைப்படங்களாக இருந்தன. பொந்துக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, வெளியே வந்து, தான் எடுத்த படத்தை முகநூலில் போட்டு ஆடப் போய் மாட்டிக் கொண்டது. ‘பதுங்கி வாழ்வார்கள்’ என்று பொலிஸார் நிலத்தடியில் தேடிக் கொண்டிருக்க அவர்கள் வெளி உலகில் சர்வசாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். கிளவ்டியா பெர்னாடி, “ எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள் ?” என்று கேட்டதற்கு பொலீஸார் பதில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும். கிளவ்டியா பெர்னாடி வீட்டில் இருந்து கைப்பற்றப் பொருட்களின் பட்டியல், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள், பெருமளவு பணம், 1200 கிராம் தங்கம் என நீண்டு கொண்டிருக்கிறது. நாட்டை, பெயரை மற்றினாலும் கைரேகையை மாற்ற ஒருவரால் முடியாதுதானே. பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு யேர்மனி முழுதும் தேடப்பட்ட ஒருவர், யேர்மனியின் தலை நகரமான பேர்லினில் அதுவும் பலர் வந்து பார்த்துப் போகும் பிரபலமான இடத்தில் மிகச் சாதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனியில், 65 வயதில் ஓய்வூதியம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளவ்டியா பெர்னாடி என்கின்ற டேனிலா கிளெட்டின், 65 வயதில் சிறைக்குப் போகிறார். பொலீஸ் திணைக்களம் அறிவித்ததன்படி ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்னுக்கு 150,000 யூரோக்கள் கிடைக்கத்தானே வேண்டும். 'எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக் இருவரும் பேர்லினில்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்' என்று ஒவ்வொரு நாளும் காலையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.4 points
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
4 pointsஇது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன். இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம். மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.4 points
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
நான்கு வருடங்களின் முன் ஊர் போயிருந்தேன். என்னுடைய சில உறவினர்களின் பிள்ளைகள் இதை எனக்கு நேரடியாகவே சொன்னார்கள்: நாங்கள் வெளிநாடு போகப் போகின்றோம் அல்லது கப்பலுக்கு போகப் போகின்றோம். எவ்வளவு தான் படித்தாலும் என்ன சம்பளம் இங்கு கிடைத்து விடப் போகின்றது என்றனர். கப்பல் வாழ்க்கை கடுமையானது மட்டும் இல்லை, அது நாடாறு மாதம், காடாறு மாத வாழ்க்கை. அதில் உள்ள சிரமங்களையும் விலாவாரியாகச் சொன்னேன். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போகலாம் என்றும் சொன்னேன். ஒவ்வொருவரும் நெருப்பு உண்மையிலேயே சுடும் என்று அவர்களே தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக இருக்கின்றனர்.3 points
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை! இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?3 points
-
மயிலம்மா.
3 pointsமயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.3 points
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!3 points
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
அது உண்மைதான். நீங்கள் சொன்ன விடயங்கள் தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ஆயுத முனை நடைமுறைகள் இல்லாததின் விளைவுகளை எம் மண்ணில் கூட கண்ணெதிரே பார்க்கக்கூடியதாகவே உள்ளது. எந்த இனம் மண் சார்ந்தவர்களுக்கு எந்த ஆயுதத்தை தூக்க வேண்டுமோ அதை தூக்கியே ஆகவேண்டும். சட்டம் ஒரு ஆயுதம் இல்லையேல் பிரம்பு இன்னொரு ஆயுதம். உவங்கள் சண்டை பிடிக்காமல் இருந்திருந்தால் எங்கடை பிரச்சனையும் உவ்வளவு அழிவுகளும் வந்திருக்காது எண்டு சொல்லுற ஜாம்பவான்கள் இன்றும் வீதிவலம் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். 😂3 points
-
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல் 1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய பாகத்தை திரு மனோகரன் கார்த்திக் வெளியிடவில்லை.3 points
-
அப்பா உள்ளே இருப்பது நீதானா?
2 pointsயாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்2 points
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு பலர் சென்றனர்.. நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன். அது ஒரு கனாக்காலம்.2 points
-
ஆணுக்கு கை கொடுத்த பெண்
2 pointsமருத்துவமனையில்,மயக்கத்தில் இருந்து விழித்த ராஜ்குமாருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியாவில் நாங்கோலி(Nangloi) நகரில் வசிக்கும் ராஜ்குமாருடைய இரண்டு கைகளும் அகற்றப்பட்டிருந்தன. மிகவும் மோசமான நிலையில் அவரது இரண்டு கைகளும் சிதைந்த நிலையில் இருந்ததால் அவற்றை அகற்றவேண்டி இருந்ததாக வைத்தியசாலையில் அறிவித்தார்கள். 2020ஆம் ஆண்டு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தே ராஜ்குமாரின் இந்த நிலமைக்குக் காரணம். பெயின்றிங் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்த ராஜ்குமாருக்கு கைகள் போனதால், அவரது வாழ்வே அவருக்குப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருந்தது. போதாததற்கு அவரது அன்றாடத் தேவைகளுக்கும் அவர் யாரையேனும் எதிர்பார்க்க வேண்டிய சூழலும் சேர்ந்து கொண்டது. அவருக்குச் செயற்கைக் கைகளைப் பொருத்துவதாயின் அதற்கான செலவுகளைத் தர அவரிடம் பணம் இல்லை. வேறு யாருடையதாவது கைகளைப் பொருத்தலாமென்றால், அதைத் தருவதற்கு ம் யாரும் இல்லை. போதாதற்கு அப்படிப் பொருத்துவதற்கு இந்திய ச் சட்டத்தில் அனுமதியும் இல்லை. தனது இரண்டு கைகளையும் இழந்த கவலையோடு அவர் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளையில், 2024இல், மருத்துவமனை ஒன்றிலிருந்து எதிர்பாராத அந்தத் தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது. “உங்களுக்கு இரண்டு கைகளையும் பொருத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்ற இனிப்பான செய்தியை அது சொன்னது. 2024இல் இந்திய மருத்துவச் சட்டங்களில் மாறுதல்கள் வந்தன. அது ராஜ்குமாருக்கு அனுசரணையானது. கல்லூரி ஒன்றின் முன்னாள் பெண் அதிபர் மீனா மேத்தா, தனது இறப்புக்குப் பின்னர் தனது உடல் உறுப்புகளை தானமாக எழுதி வைத்திருந்தார். அவரின் இறப்பு ராஜ்குமாருக்குக் கை கொடுத்தது. இரண்டு கைகளும் பொருத்தப்பட்டால் ராஜ்குமாரால் மீண்டும் பெயின்ற் அடிப்பதற்கு கைகளில் தூரிகைகளை எடுக்க முடியுமா? அது சாத்தியமாகுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் சத்திரசிகிச்சை செய்து கைகளைப் பொருத்துவது என்று முடிவாயிற்று. புது டெல்லியில் உள்ள சேர் கங்கா ராம் வைத்தியசாலையில் ஜனவரி 19ந்திகதி நடந்த பன்னிரண்டு மணி நேர சத்திர சிகிச்சையில், மீனா மேத்தாவின் இரண்டு கைகளும் ஜெயக்குமாருக்குப் பொருத்தப்பட்டன. ஜெயக்குமார் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். கைகளை இயக்குவதற்கான பயிற்சிகளை இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிறார். நரம்புகள், தசைநார்கள், தசைகள் எல்லாம் பொருந்தி மறுபடி ஜெயக்குமார் தனது கைகளில் தூரிகைகளை எடுத்துக் கொள்வாரா?2 points
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
2 pointsகடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.2 points
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
கடற்படை ....கடலில் வாள்வெட்டு நடந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள் ...தரையில் வாள்வெட்டை தடுப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை ...2 points
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
படத்தில் அவரின் கையசைவில் தெரியவில்லையா ..இன்னும் கொடுக்கவில்லையென்று2 points
-
வாசலும் வீடும்
2 pointsஅடுக்கு மாடிகளில் இருந்த போது ரொம்பவும் தொல்லை தந்தது. கரப்பான் சாப்பிட்டு மிச்சம் தான் நாங்க சாப்பிடலாம் என்ன மாதிரி இருந்தது.2 points
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கபிதன், இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை. மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.2 points
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பது இன்னும் நாம் இனவாதச் சிங்களவர்களின் தரத்திற்கு இறங்கி விடவில்லையென்று நிரூபிக்கிறது.2 points
-
அன்றுபோல் இன்று இல்லையே!
2 pointsஅன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நாடெங்கும் மதில்கள் இல்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நடைவெளி இடைவெளி நூறிருந்ததே நாலுமணிப் பூவிருந்ததே நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே நன்றி உடையார்.2 points
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே. இவ்வாறான சம்பவங்கள் இனம், பால், வயது வேறுபாறுகளை கடந்தவை பெரும்பாலான சாதாரண மன நிலை உள்ள மக்கள் இதனைப் புரிந்து கொள்வர். இனவாதிகள் அவர்கள் எந்த இனத்தில் இருந்தாலும் தமக்குள் உள்ள இனவாத வக்கிரத்துடன் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பர்.2 points
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
2 pointsஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை. பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் : 'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.2 points
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
2 pointsநீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம். நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர். வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.2 points
-
ஒரே பெயர், தோற்றம் மற்றும் குடும்ப பின்னணி… விமான நிலையத்தில் அனைவரையும் கிறுகிறுக்க வைத்த இருவர்
1 pointமார்க் கார்லண்ட் (58) உடன், மார்க் கார்லண்ட் (62) லண்டன் விமான நிலையத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர், ஒரே பெயருடன், ஒரே விமானத்தில் பயணிக்க வந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 58 வயதான மார்க் கார்லண்ட் என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள மார்க், தற்போது தனியாக வசித்து வருகிறார். தாய்லாந்து நாட்டிற்கு அடிக்கடி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் திகதி தாய்லாந்து செல்வதற்காக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய ஊழியர்கள், அவர் ஏற்கனவே செக் இன் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றவர் எவ்வாறு வெளியே இருக்கிறார் எனவும் குழம்பியுள்ளனர். அப்போது அதே விமானத்தில் மற்றொரு மார்க் கார்லண்ட் என்பவர் பயணிப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை வெளியே வருமாறு பணியாளர்கள் அழைத்துள்ளனர். வெளியே வந்த மார்க் கார்லாண்டை கண்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மார்க் கார்லண்ட் என அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல் இருந்ததோடு, இருவரும் தங்களது தலையை மொட்டை அடித்திருந்ததும் தெரிய வந்தது. விசாரணை நடத்திய போது, ஏற்கனவே விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற மார்க் கார்லண்ட் 62 வயதானவர் என்ற வித்தியாசம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட போது, இருவருமே லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தது தெரிய வந்தது. பல ஆண்டுகளாகவே இருவரும் தாய்லாந்துக்கு அடிக்கடி பயணித்து வந்ததும் தெரிய வந்தது. இதைவிட ஆச்சரியமாக, இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு சம்பவம், இருவருமே திருமணம் ஆகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையானதும், தற்போது மனைவியை விட்டு தனியாக வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது பாஸ்போர்ட்டுகளையும் சரிபார்த்த அதிகாரிகள் இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்தனர். இருவரும் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து தாய்லாந்துக்கு பயணம் செய்தனர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை எனவும், முதல் முறையாக இந்த குழப்பம் நேர்ந்து தாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. https://thinakkural.lk/article/2953131 point
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
ஓஓஓ அது தான் கோத்தபையன் தலைவராக இருந்த போது பக்கத்தில் கடற்படை முகாம் இருந்தும் தரையில்த் தானே நடக்கிறது என்று காலைவாரி விட்டார்களோ?1 point
-
வாசலும் வீடும்
1 pointநான் இருக்கும் தென் கலிபோர்னியா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் காலநிலை மிதமானது, கொஞ்சம் வறட்சியானது, குளிர் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இங்கு எல்லா விதமான உயிரினங்களும் வருடம் முழுவதும் எங்களுடன் சேர்ந்து வாழும். புதிதாக ஏதும் ஒன்று வந்தால், அதற்கு சைனீஸ் என்ற அடைமொழி கிடைக்கும். ஒரு தடவை நுளம்பு வகை ஒன்று புதிதாக இங்கு வந்தது, அதை 'சைனீஸ் நுளம்பு' என்று இங்கு அழைத்தனர். இது தண்ணீர் இல்லாமலேயே வாழும், முட்டைகள் போடும், குஞ்சுகள் பொரிக்கும்!! கோவிட் வைரஸிற்கு சைனீஸ் வைரஸ் என்று பெயர் சூட்டியது போல.1 point
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
1 pointஇல்லை அய்யா. அதனால் தான் ஜெயமோகனுடையதை போன்றே உங்களுடைய சிந்திக்க வைத்த கருத்துக்களும் இங்கே கிடைத்தது.நன்றி. 96 என்கின்ற படம் பற்றி யாழ்களத்தில் சாந்திஅக்கா வேறு ஒரு திரியில் சொன்ன போது அது ஒருக்கா பார்க்க தான் வேண்டும் என்று அந்த படம் பற்றி நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விசாரணை செய்தேன். அது மிகவும் நீண்ட படம் நீ பொறுமையாக பார்க்க மாட்டாய் boring ம் என்றனர். சில தமிழர்கள் அதை கமிழ் காதல் காவியமாக சொல்வதாகவும் தெரிவித்தனர்.1 point
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புலி வாந்தி கூட்டத்துக்கு National Post தான் தஞ்சம் . எலி வடையை கவ்வியது போல் எப்போதோ நடந்ததை 2௦1௦ ல் நடந்த செய்தியை காவிக்கொண்டு இந்த செய்தி யாழில் இருமுறை இணைக்கபட்டு உள்ளது . அதுவா உதராணம் ? இரண்டு சம்பவமும் ஒன்றா ? லங்கா ஸ்ரீ சுமத்திரனின் உண்மை முகத்தை எழுதுவதால் இணைக்க வேண்டி உள்ளது மற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- எரிவாயு தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு யாழில் கண்டுபிடிப்பு!
இப்படியான தொழில்நுட்பங்கள் வீட்டுக்கு வீடு வந்தால் பல வாழ்வாதார பிரச்சனைகள் தீர்ந்து விடும்.1 point- தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
வியாழேந்திரன் தமிழர்கள் கல்வியால் ஆண்ட சரித்திரம் பற்றி நிறையவே அறிந்திருக்கின்றார்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை ஏற்றுக்கொண்ட நாடுகள் ஏன் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை?1 point- தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இங்கு, அமெரிக்காவில், அப்படி நான் காணவில்லை. நான் இருக்கும் சிறு நகரத்தில் கொரிய இன மக்களே பெரும்பான்மை. மொத்தமாகப் பார்த்தால் அவர்களே முன்னால் வருகின்றனர். அதன் பின்னர் வெள்ளையின அமெரிக்கர்களும், சீனர்கள், இந்தியர்கள் என்று வரிசை போகின்றது. உள்ளூர் பாடசாலை மட்டத்தில் மொத்தப் பெறுபேறுகள் ஏறத்தாழ இந்த வரிசையிலேயே இருக்கின்றது. கொரிய மக்களின் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் முன்னால் எவராலும், சீனர்கள் உட்பட, நிற்க முடியாது. உலகில் உள்ள சமூகங்களின், இனங்களின் சராசரி IQ என்றொரு தரவு இருக்கின்றது. ஆனால், அதையும் மீறி, அமையும் சந்தர்ப்பங்களும், சூழலும், தொடர் முயற்சி மற்றும் பயிற்சிகள் இந்தக் கல்வி அமைப்பிலும், பரீட்சை முடிவுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே என் அனுபவம்.1 point- தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில் இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது? முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள் கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் . இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு . கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் . இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு கடல் மீன்வள கொள்ளையை ஒப்புதல் வாக்கு மூலம் கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .1 point- மயிலம்மா.
1 pointமயிலம்மாவுக்கு அடிக்கடி பாவடையை காலாலே கழட்டுறதும், கட்டுறதும் பெரும் வேலையாய் போச்சு. ‘மாதவிப் பெண்ணாள் தோகை விரித்தாள்’ அந்தமாதிரி1 point- எரிவாயு தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு யாழில் கண்டுபிடிப்பு!
இந்த முறையை எமது கிராம முதியோர் சங்கத்தில் சமைத்து வழங்கும் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா என சிந்திக்கிறேன். விறகுக்கான செலவு ஒரு பக்கம் அதனால் ஏற்படும் புகையால் கட்டிடம் முழுவதும் புகையடித்துள்ளது.1 point- வெறுப்பு!
1 pointஅருமையான கவிதை...........👍👍 ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் முன் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது. புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.1 point- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள். இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள். @இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.1 point- ஜோசுவா மர தேசிய பூங்கா.
1 pointபாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!1 point- மரணம்
1 pointஅவனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க, அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம் ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன். அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன்.1 point - எரிவாயு தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு யாழில் கண்டுபிடிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.