Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்11Points20018Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்8Points15791Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3057Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/21/24 in all areas
-
கனடாவில் கார் களவு.
4 pointsஇங்கு மனிதர்களை நாய் காவல் காப்பது இல்லை. நாய்களைத் தான் மனிதர்கள் காவல் காக்கின்றனர். உயர் ரக நாயினம் என்றால், அதைக் களவெடுப்பதற்கு என்றே திருட்டுக் கும்பல்கள் உண்டு இங்கு. பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருந்து, அவர் திருடர் ஒருவரை சுட்டுவிட்டால், கொலை வழக்கு பதிந்து சுட்டவரை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்.4 points
-
கனடாவில் கார் களவு.
4 pointsபழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ. இங்கே ஒரு சுற்று சுற்றி வந்தால் உண்மையான படத்தையே போடலாம்.4 points
-
கனடாவில் கார் களவு.
4 pointsபிரச்சனை என்னவென்றால் வாகனக் காப்பீடு இப்பிடி கார் களவு போகும் இடங்களில் வாழ்பவர்களுக்கு வருடா வருடம் கூடிக்கொண்டு போகின்றது. மாசம் $10000 சம்பாதித்தாலும் வாழ்வு என்னவோ வறுமைக் கோட்டுக்கு சற்று மேல்.. அவ்வளவு தான் கனடா வாழ்வு!!😭😭😭4 points
-
கொஞ்சம் ரசிக்க
3 points3 points
- மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்
இப்போது எமது காலம் மாதிரி இல்லை. தொலைக்காட்சியில் கற்கை ஊடக பிரிவுகள் உள்ளன. நன்றாக கற்பிக்கின்றார்கள். இணையம் மூலம் காணொளிகள் மூலம் கற்றக்கூடிய பல வசதிகள் உள்ளன. ஆகக்குறைந்தது வகுப்பு நேரங்களில் குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் இந்த காணொளிகளை வகுப்பு நேரங்களில் மாணவர்கள் பார்த்து கல்வி கற்ற ஏற்பாடு செய்யலாம்.3 points- கனடாவில் கார் களவு.
3 pointsபோன வருஷம் recreation center க்கு ஜிம் க்கு போயிருந்த பொழுது எனது உடைகள் கைப்பை பர்ஸ் உள்ளிட்டவற்றை ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் ஜிம்முக்கு போனேன், இரவு 11 மணி அப்படி வந்து திறந்து பார்த்தபொழுது பர்சை காணவில்லை. உடனே வீட்டுக்கு ஓடி வந்து வங்கிக் கணக்கை திறந்து பார்த்தால் 200 டாலர்ஸ் வரை கிரெடிட் கார்டில் இருந்து போயிருந்தது, உடனே வங்கிக்கு அழைப்பை எடுத்து என்னுடைய வங்கி அட்டைகளை deactivate செய்துவிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். இத்தனைக்கும் என்னுடைய அனைத்து அடையாள அட்டைகள், வாகன சாரதி பத்திரம், $300தாள் காசு, என எல்லாமே போய்விட்டன, அடுத்த நாள் வேலைக்கு போக முடியவில்லை. இழந்த பத்திரங்களைப் பெற பெற ஒரு பத்து நாள் ஆனது. ஒரு மாதம் கழித்து களவு செய்திருந்தவனை பிடித்திருந்தார்கள் போலீசார். களவு செய்தவன் ஒரு 15 வயது சோமாலியன். பெயர் முஹமட். சில மாதங்களுக்கு முன்னர் இளம் வயது குற்றவாளிகளை சீர்திருத்தம் அமைப்பொன்று மேற்படி நபர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் அவரை என்னை வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் வந்து சந்திப்பதற்கு எனக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்று? மறுபுறத்தில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த பெண்ணோ அந்த குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் எந்த பணமும் தர முடியாது என்றும் சொன்னார். இந்த விஷயத்தை வீட்டில் மனுஷியிடம் சொன்ன பொழுது என்னை கடிந்து கொண்டு என்னைப் போய் அவனை சந்திக்கும்படி சொல்லப்பட்டது. நான் போகவில்லை இரண்டு காரணங்கள் ஒன்று :சொந்த ஊர் சோமாலியா இரண்டாவது காரணம் :பெயரோ முகமட் இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்ன?3 points- கனடாவில் கார் களவு.
3 pointsஅமெரிக்காவிலும் பதின்ம வயதுக் காரர்களை வைத்து குற்றக் கும்பல்கள் இப்படி இயங்கி வருகின்றன. துறைமுகங்கள் அதிகம் இருக்கும் கிழக்கு, தென் கிழக்கு, மேற்குக் கரைகளை ஒட்டிய நகரங்கள் தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, கிழக்குக் கரையின், நியூ ஜேர்சியில் திருடப் படும் வாகனங்கள் எலிசபெத் துறைமுகமூடாக (Sea Port) ஆபிரிக்க நாடுகளுக்குக் கடத்தப் படுவதாக சொல்கிறார்கள். சுங்கப் பரிசோதனை, பாதுகாப்பெல்லாம் இறுக்கமான ஒரு அமெரிக்க துறைமுகத்தினுள் இருப்போரின் ஒத்துழைப்பின்றி இதைச் செய்ய முடியுமென நான் நம்பவில்லை. கனடாவை விட அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்க இங்கே துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அண்மையில், வாசிங்ரன் டி.சி யின் புறநகரப் பகுதியில், அதிகாலை சத்தம் கேட்டு விழித்த ஒரு வீட்டுக் காரர், தனது கைத்துப்பாக்கியோடு வெளியே போய்ப் பார்த்த போது, அவரது காருக்கு அருகில் ஒருவரைக் கண்டிருக்கிறார். உடனே வெடி தான், காருக்கு அருகில் நின்றவர் மரணமானார். மரணித்தவர் 15 வயது சிறுவன். ஆதாரங்களைப் பரிசோதித்த காவல் துறை, சுட்ட வீட்டுக் காரரை கைது செய்யக் கூட இல்லை. அதிகாலை 3 மணிக்கு, தன் 15 வயது மகன் வீட்டில் இருக்கிறானா என்று தேடிப் பார்க்க துப்பில்லாத பெற்றோர், சுட்டவரைக் கைது செய்யும் படி ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் ஓரளவுக்கு அமெரிக்காவில் கனடா போன்ற நிலை வராமல் வைத்திருக்கின்றன.3 points- கனடாவில் கார் களவு.
3 pointsஇந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. மது, உணவு முடிய 11:30 ஆகி விட்டது. பனியும் சுமாராக கொட்டி விட்டது. "சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார் startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞 அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.3 points- கனடாவில் கார் களவு.
2 pointsகனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.2 points- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்2 points- சர்வதேச விசாரணை மூலமான அர்த்தமுள்ள நீதியின் ஊடாக இலங்கையின் கறைபடிந்த கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும் - பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
இது இந்தியாவின் பிராந்தியம் அதிலும் தமிழ் மக்கள் அவர்களின் அடிமைகள் ஆகையால் நீங்கள் என்ன நீதி நியாயம் கதைத்தாலும் இந்தியா நினைத்தால் தான் தீர்வு .... சோமாலிய கடற்கொள்ளையர்களை சிறை பிடிக்க தெரிந்த இந்த இந்தியாவுக்கு தனது எல்லையில் நடை பெறும் போதைபொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை2 points- கனடாவில் கார் களவு.
2 pointsதிருடர்களை ஒன்றும் செய்ய முடியாது.......என்னுடைய வண்டி, மகன் மகளுடைய வண்டிகள் என்று எல்லாவற்றிலும் களவு குடுத்து போலீசிலும் பதிந்து ஒன்றும் நடக்கவில்லை.......அப்படியே வீட்டிலும்.......பக்கத்தில் கடை, போய் ரெண்டு சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் வீடெல்லாம் உடைச்சிருக்கு......வீட்டிலேயே ட்ராவலிங் பாக் எடுத்து பிள்ளைகளின் வாட்ச்சுகள் மடிக்கணனிகள் உண்டியல்கள், சாமான்கள் என்று கொண்டு போயிட்டார்கள்......அதுவும் போலீசில் பதிந்ததுதான்.......பிரயோசனமில்லை..... இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது .......நீங்கள் பரிசுக்குள் பத்து கி.மீ பிரயாணம் செய்தால் குறைந்தது இருபது பிச்சை எடுப்பவர்களையாவது சந்திகளில் சந்தித்து இருப்பீர்கள்......இதற்காகவே காரில் தண்ணீரும், பிஸ்கட் பெட்டிகளும் வைத்திருக்க வேண்டி இருக்குது (மனம் கேட்குதில்லை காசு குடுத்துக் கட்டாது)..........இவை எனது அனுபவங்கள்......மற்றும்படி சொல்வதென்றால் சொல்லி மாளாது ........!2 points- வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அமெரிக்க, கனடிய பல்கலைக்கழக அனுமதி தொடர்பான நிகழ்வு - உடனடி அனுமதி கொடுக்கப்படும்.
வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அமெரிக்க, கனடிய பல்கலைக்கழக அனுமதி தொடர்பான நிகழ்வு - உடனடி அனுமதி கொடுக்கப்படும். வழக்கமாக கொழும்பில் நடாத்தப்படும் இவ்வாறான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கருத்தரங்கு / நிகழ்வுக்கு வடக்கு கிழக்கை சார்ந்த மாணவர்கள் சமூகமளிப்பது குறைவு என்பதால், இம்முறை நேரடியாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர். சரியான தகமைகள் உள்ளவர்களுக்கு உடனடியாகவே அனுதிக்குரிய உறுதிப்பத்திரம் கொடுப்பார்களாம். ஆங்கிலத்தில் இருக்கும் இச் செய்தியை அப்படியே இங்கு போடுவதன் காரணம் ஊரில் உள்ள தகமைகள் கொண்ட உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருப்பின், அவர்களுக்கு தெரியப்படுத்த வசதியாக இருக்கும் என்பதால். முடிந்தால், அப்படியானவர்களுக்கு அறியத் தாருங்கள். ---------------------- Students in North, East to get Spot Admissions to study in UK, Canada & Germany Colombo, March 21 (Daily Mirror) - The International Centre for Foreign Studies (ICFS) is set to host a special spot admissions program for students, especially in the North and East provinces, who aspire to pursue higher education opportunities in countries such as Canada, the United Kingdom and Germany for the upcoming September 2024 intake. Chathurika Dissanayake, the CEO of ICFS Education Center said they plan to host a special two-day program called 'Project Education Yalpanan' on March 30 and 31 at the Jetwing Hotel in Jaffna, free of charge. "There have been many overseas university representatives coming to Colombo, and there are numerous education events and exhibitions happening in and around Colombo. However, these types of events often do not reach Jaffna. We understand that there are many talented, qualified students in Jaffna who are capable of seeking these overseas opportunities," she said. The Spot Admissions program allows students to participate in a specialized event where they can secure their offer letters within 30 to 40 minutes. "We have joined hands with York St John University in the UK, and we will be accompanied by the country manager, Mrs. Bhagya Perera on both days. Students seeking study opportunities in the UK can visit us on March 30 and 31 in Jaffna and leave with an offer letter in hand," Dissanayake said. "Getting an offer letter from a university is usually a lengthy process, taking weeks or even months. However, during the program, we have arranged for students to receive an offer letter from York St. John University within a few minutes. All students need to do is bring their documents, including passport, academic records and service letters, to ensure they leave with an offer letter for the upcoming intake," she explained. She said Canada is also a preferred destination for many students in the North and East due to family ties. "ICFS is delighted to introduce a loan opportunity for postgraduate students in Jaffna for the first time," she said. "We are introducing a loan facility that covers the full cost of studies in Canada. This makes studying in Canada achievable without making it just a dream. The assessment for the loan will be based purely on academic criteria and employability after graduation. No guarantors or properties are required for security; it is purely based on academic achievements," the CEO said. ICFS has also identified Germany as a preferred destination for students. "Germany offers scholarships for students with higher academic achievements. Even for university courses in Germany, students can make a minimum payment of 3000 euros and pay the balance in installments. We will have an information session dedicated to Germany as well," added Dissanayake. "All students interested in studying in Germany, whether undergraduate or postgraduate, can meet us at Jetwing Jaffna on March 30 and 31 from 9 a.m. onwards," she said. She said that ICFS is committed to bringing more opportunities to the North and East under the education initiative 'Yalpanam.' https://www.dailymirror.lk/breaking-news/Students-in-North-East-to-get-Spot-Admissions-to-study-in-UK-Canada-Germany/108-2793272 points- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது காரணம் மேற்குலகினை ஆதரிப்பவர்கள் மேற்குலகில். வாழக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும் அப்போது அது விசுவாசம் இல்லை ஆனால் மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும். இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது நிறுவப்படாதா விதி உருவானது அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்2 points- கனடாவில் கார் களவு.
2 pointsஜேர்மனியிலையும் முந்தி உப்பிடி கார்க்களவுகள் எக்கச்சக்கமாய் நடந்தது. இப்பவும் கார் உள்ளுக்குள் இருக்கும் முக்கிய உதிரி பாகங்களை திருடுகின்றார்கள். இருந்தாலும் முந்திய மாதிரி இல்லாமல் கார்க்களவை கட்டுப்படுத்தி விட்டார்கள். இங்கே கார்க்களவுக்கு பிரபலமானவர்கள் ஆரெண்டால் போலந்துகாரர்,உக்ரேன்காரர்,ரஷ்யக்காரர்,ருமேனியா பல்கேரியா ஆக்கள் தான் 🤣2 points- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?2 points- கனடாவில் கார் களவு.
2 pointsCar thefts have escalated to “national crisis” levels, according to the Insurance Bureau of Canada, an industry group, which said insurers paid out a record 1.2 billion Canadian dollars, or about $890 million, in theft claims in 2022. For victims, it's a dizzying, and sometimes traumatizing, experience.Feb 25, 2024 https://www.nytimes.com/2024/02/24/world/canada/toronto-car-theft-epidemic.html#:~:text=Car thefts have escalated to,in theft claims in 2022.&text=For victims%2C it's a dizzying%2C and sometimes traumatizing%2C experience. ஆபிரிக்காவில் கனேடிய /வட அமெரிக்க வாகனங்கள். 😉2 points- சிறந்த நடுவர்
2 pointsஅன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்டியர் அதைக் கேட்டு நாளை உடைத்து அனுப்புகிறோம் அவர்கள் உயிர் மட்டும் விடுவோம் இது சத்தியம் என்றார்கள் இன்று முடிக்கப் போகின்றார்கள் சபதத்தை சத்தியமா நடுவருக்கு எந்தச் சங்கதியும் தெரியாது விசிலடித்ததும் விரைந்தது பந்து வந்த பந்தை விட்டிட்டு பந்தோடு வந்தவனின் காலில் ஒரே போடு விழுந்தவன் வலியோடு நடுவே பார்த்தான் நடுவர் வெளியே பார்த்தார் முதல் பந்திலேயே முழுவதும் தெரிந்துவிட்டது நடுவருக்கு முந்தியும் பல தடவைகள் இந்த நடுவர் பின்பக்கம் இருக்கும் கோவிலடியால் ஓடியிருக்கிறார் கறுப்புச் சட்டையுடன் படார் படார் படார் விழுந்து எழும்பி ஓடி விழுந்தனர் சந்தியில் வாய்விட்டவர்கள் ஓடினால் அடி ஒதுங்கினாலும் அடி விசிலை விழுங்கி விட்டார் மெத்தப் படித்த நடுவர் சண்டியர்கள் ஆளடிக்க சவலைகள் பந்தடிக்க பத்து நிமிடம் இன்னும் இருக்க சவலைகள் ஒன்று சண்டியர் பூஜ்யம் சண்டியர்கள் கூடிப்பிரிந்தனர் கிளைமாக்ஸ் ரெடி இப்ப பார்த்து இரண்டு பேர்கள் முட்டுப்பட இதுவரை அடிக்காத விசிலை மறந்து அடித்தார் சிறந்த நடுவர் பொறி பறக்க நாலு சண்டியர்கள் பாய்ந்தனர் நடுவரைச் சுற்றி நடுவர் நாக்குக் குளறி திக்கித் திணற படார் என்று ஒரே அடி இந்த முறை நடுவருக்கு தலையில் அடியோடு கோவிலுக்கு ஓடி கடற்கரைக்கு ஓடி கரையால் ஓடி அன்றும் தப்பினார் சிறந்த நடுவர் உயிரோடு.2 points- கனடாவில் கார் களவு.
2 pointsகனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀 ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀 கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀2 points- மயிலம்மா.
1 pointஉ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔 கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏1 point- கனடாவில் கார் களவு.
1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
75 களிலேயே வட துருவத்தில் இருக்கும் Norway இலங்கையில் கால்பதிக்கிறது. நாம்? ☹️1 point- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து நன்றாக இருக்கட்டுமே...1 point- அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
இலங்கையையும். இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து விடுங்கள்” இல்லை என்றால் இலங்கை முழுவதும் சீனா வசமாகும். அதாவது சீனா ஆகி விடும் இலங்கை மக்களும் தமிழர்கள் சிங்களவர்கள். வேறுபாடுகளின்றி ஆதரிக்கக்கூடும். எனவே… காலதாமதமின்றி செயல் படவும். 😀1 point- சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
அமெரிக்கர், சீனர்,இந்தியர்,ரஸ்யர்....இப்படி உலகத்தில் உள்ள எல்லோரும் உங்கன்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றனர் ...தமிழன் வாழ்ந்தால் பிரச்சனை ...75 வருடமா அர்சியல் செய்ய நீங்கள் எடுத்த ஆயுதம் இன்னும் தொடர்கிறது1 point- கனடாவில் கார் களவு.
1 pointஅயலவர் ஒருவர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அன்று என்னுடன் வேலை செய்தவரும் கூட. 'ஏனப்பா நீ ஒரு துப்பாக்கி வாங்கக் கூடாது?' என்று ஒரு தடவை கேட்டார். அவரிடம் துப்பாக்கி இருந்தது. 'நீங்கள் தான் எல்லோரும் நல்லா சுடுவீர்களே' என்று இன்னும் மேலாலும் சொன்னார். அந்தளவிற்கு எல்லாம் எனக்கு துணிவில்லை என்று சொல்லி சமாளித்துவிட்டேன். உண்மையிலும் துணிவும் இல்லை. ஒரு துப்பாக்கியால் காவல் காக்கும் அளவிற்கு வீட்டிற்குள் என்ன பொருள் இருக்கிறது என்றும் தெரியவில்லை. அயலவர் வீட்டிற்கு ஒரு திருடன் ஒரு நாள் சொல்லி வைத்தது போலவே வந்தான். அயலவர் மேலே இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திருடன் மேலே போக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அவ்வளவு தான் நடந்தது, கிளிண்ட் ஈஸ்ட்வூட் படங்களில் வருவது போன்று எதுவும் நடக்கவேயில்லை. திருட வந்தவர் திருடிக் கொண்டு போய்விட்டார்..........😀1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
அட கந்தையர் நீங்களும் இதுக்குள்ளையே நிக்கிறியள்? 🤣 அது சரி எப்ப தொடக்கம் உந்த விதியள் எல்லாம் சட்டத்துக்கு வருதாம்? 😎1 point- கனடாவில் கார் களவு.
1 pointவாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம். பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மனிதப் பேரழிவு தொடர்பான தனது அதிருப்தியை மேற்கு இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் செயல். அத்துடன் வட அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடு. ஆனாலும் இது ஒரு கண்துடைப்பு வேலை மட்டுமே……1 point- கொஞ்சம் ரசிக்க
1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம் இரண்டாம் பட்சம்.....1 point- கனடாவில் கார் களவு.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது - ரஜீவ் காந்தி மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச் செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார். ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித் குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார். ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985 லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை. லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார். "லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.1 point- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
யார் குத்தினாலும்..அரிசி ஆமால் சரி....இருக்கவே இருக்குது..புலப்பெயர்வுக்கு கனடா...1 point- என் இந்தியப் பயணம்
1 pointசிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
முற்ற விட்டால் தானே? 🤪. தெரியவில்லை என்பது நல்ல பதில்,....சும்மா எல்லாம் தெரிந்தவன் என்று படம் காட்டுதல் கூடாது1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது. இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂1 point- இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
சரியான ஆளிடம் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தொடங்கி அதிகாரம் அற்ற சீமான் கட்சிகள் வரை இலங்கை கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு மீனவர்களால் நடத்தபடும் கடற்கொள்ளையை தமது அரசியல் நலனுக்காக ஆதரிப்பவர்களாக தான் உள்ளனர். நான் முதலமைச்சரானால் இலங்கைக்கு களவு எடுக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்பி வைப்பேன் என்று சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். தமிழ்நாட்டு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மது குடித்து குடித்தே இறப்போம் என்று நினைத்து விட்டனரோ ☹️1 point- இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
சீமான் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் விடயங்களில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும், வைகோ, திருமாளவன், திருமுருகன் காந்தி, களஞ்சியம், ராமதாஸ் ஆகியோர் கூட, இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டினம். அவ்வளவு ஏன், போலிகாவின் அண்ணண் காசியானந்தன் எனும் இளைஞன் கூட இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டார்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointவீட்டில வடை சுட்டாலே உள்ள பேப்பருகளால சுத்தி ஏறி நின்று மிதுத்து போட்டு தான் தாறாங்கள். இது தேவையா?1 point- இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
இதுவரை இந்தக் கதையின் 19 அத்தியாயங்களை வாசித்து முடித்துள்ளேன். நிறையக் கருத்துக்களை அகரமுதல்வன் சொல்ல முற்பட்டாலும் யதார்த்தம் தாண்டிப் பல இடங்களில் கட்டுக் கதைகளைத் தாராளமாக அள்ளி வீசுகின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவரின் முன்னைய பல சிறுகதைகளையும் நான் வாசித்துள்ளேன் பல கதைகளில், தமிழகத்துக்கு குடிபெயர்ந்த ஈழப் பெண்கள் இழிவான பல சித்தரிப்புகளுடன் எழுதியுள்ளதைக் கண்டுள்ளேன். தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துள்ள பல ஈழத்து எழுத்தாளர்கள் பல கட்டுக் கதைகளை உண்மைபோல் எழுதித் தள்ளி ஜெ.மோ போன்ற புண்ணியவான்களிடம் பாராட்டைப் பெற முயல்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஒருவகையில் இலக்கியத் தற்கொலை, நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றிய, நாம் கடந்து வந்த பாதை பற்றிய தவறான புரிதலை மற்றைய மக்களிடம் கொண்டு செல்லத் தூண்டுகிறது/துணை புரிகின்றது என்பது எனது தாழ்மையான கருத்து.1 point- கருத்து படங்கள்
1 point1 point- என் இந்தியப் பயணம்
1 pointஎனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்1 point- முடிவிலி
1 pointமுடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇதுவும் நல்லா தான் இருக்கு. முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம். நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.1 point- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
1 pointகோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா... மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் மண்னை கட் பண்ணுங்கோடா கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல் மண்ணை வெட்டுங் கோடா...1 point- முடிவிலி
1 point🤣🤣..... இங்கு சப்வேயில் சாண்ட்விச் வாங்கப் போனால், உள்ளே என்ன என்ன போட வேண்டும் என்று கேட்பார்கள். எதைப் போடுவது, எதை விடுவது என்று தெரியாது, ஆதலால் எல்லாத்தையும் போடுங்கோ என்று சொல்லி விடுவது வழக்கம். அதே போலவே இந்தப் படம் பார்க்கிற பழக்கமும். எல்லாப் படத்தையும் பார்க்க முயற்சி செய்வது, பிறகு ஏன் தான் இதைப் பார்த்தோமோ என்று என்னை நானே நொந்து கொள்வது.....1 point - மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.