Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3057
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/24/24 in all areas

  1. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
  2. இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். எல்லாம் $$$$ ற்காக.. சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣
  3. ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே. நன்றி
  4. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
  5. பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
  6. இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .
  7. பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?
  8. உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......! 😁
  9. அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள். ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும் புட்டின் பெருந்தலைவர் என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!
  10. எண் சாண் உடம்படியோ.. ஏழிரண்டு வாயிலடி.. பஞ்சாயக் காரரைவர்.. பட்டணமும் தானிரெண்டு.. அஞ்சாமற் பேசுகிறாய்.. ஆக்கினைகுத் தான் பயந்து.. நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா.. நிலை கடந்து வாடுறண்டி.
  11. ஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது. செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என் கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர். ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள். போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது. அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை. வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர். அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால் கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம். எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு. அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான். ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம். இனி தாஜ்மகால் வரும்
  12. சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....
  13. Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!
  14. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி". இசைத்துறையில் அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ? பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார். சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை : "(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. (2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். (3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது. (4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும். (5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும். (6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது. (7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான். (8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ? (9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை. மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்". இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் ! https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk
  15. த‌மிழ் நாடு முன்னேற‌ இன்னும் நிறைய‌ இருக்கு..............த‌மிழ் நாட்டை அபிவிருத்தி செய்ய‌னும்.........அதுக்கு காசு தேவை..............ப‌ல‌ கோடி கோடிய‌ ஊழ‌ல் செய்து காசு பூரா அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீட்டில் வெளி நாட்டு வ‌ங்கிய‌லிட‌ம் இருக்கும் போது த‌மிழ் நாடு எப்ப‌டி முன்னேற்றத்தை காணும்...........எத்த‌னையோ ம‌க்க‌ள் த‌மிழ் நாட்டில் வீடு வாச‌ல் இல்லாம‌ ம‌ர‌த்த‌டிக்கு கீழ‌ ச‌மைச்சு அதே இட‌த்தில் தூங்கி வாழ்க்கைய‌ ஓட்டுதுக‌ள்.................. 1967க‌ளில் இருந்து இதுவ‌ரை திராவிட‌ம் த‌மிழ‌ர்க‌ளை ஏமாற்றி பிழைச்ச‌து.............ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டையும் சுத்தி பாருங்கோ எத்த‌ன‌ இட‌ங்க‌ளில் மின்சார‌ம் இல்லை என்று............இதெல்லாம் ஆட்சியாள‌ர்க‌ள் ம‌ன‌ம் வைச்சா சில‌ மாத‌ங்க‌ளில் செய்து முடிக்க‌லாம்................திராவிட‌ அர‌சிய‌ல் மாபியா கும்ப‌லுக்கு ப‌ண‌ம் பண‌ம் இது தான் அவ‌ங்ளுக்கு முக்கிய‌ம்..............ஈழ‌த்தை அழிக்க‌ துணை போன‌தே திமுக்கா அதே ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ளை க‌ஞ்சா என்ற‌ போதையில் மித‌க்க‌ விடுவ‌தே திமுக்கா திருட்டு கும்ப‌ல்................
  16. கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குல மக்கள் சேர்ந்தது முக்குலத்தோர். இவர்களை தேவர்கள் என்றும் சொல்கின்றனர். ஒரு காலத்தில் போர் வீரர்களாக இருந்த குடிகள். இன்றும் இவர்களில் பலர் இந்தப் பெருமையுடன் வாழ்கின்றனர். மதுரை, தேனீ, இன்னும் சில தென் மாவட்டங்களில் இவர்கள் செறிவாக வாழ்கின்றனர். நடிகர் சிவாஜி கணேசன் கள்ளர் என்னும் குலத்தை சேர்ந்தவர் என்று தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக வின் கோட்டை இவர்கள். ஆனால் இன்று அதிமுக கொங்கு நாட்டவரான (கவுண்டர்கள்) ஈபிஎஸ் வசம் போன பின், இவர்கள் அதிமுக விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே பொதுவான ஊகம்.
  17. சீமான் இந்தத் தேர்தலில் தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.
  18. அவர்கள் படிக்கட்டும். உணர்வுடன் இருக்கட்டும். அரசியலைக் கற்கட்டும். Uni போகும்போது இவர்களுக்கான நேரம் வரும். அதுவரை இவர்கள் பொறுமை காக்க வேண்டும். எங்களவர்கள் அவர்களை பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போதும். எல்லாம் சுமூகமாகவே நடக்கும்.
  19. சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்?? ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை.
  20. படங்கள் பலதை இடமின்றி அழித்துவிட்டேன்.
  21. அதுக்குத் தான் AAA இருக்குதே? 15 டாலருடன் ஒரு வருட அனுமதிப் பத்திரம்.
  22. ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ? பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை. ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
  23. இந்தக் காணொளியில் முதல் பேச தொடங்குபவர் எமது உறவினரும் ஊராவருமாவர். இணைப்புக்கு நன்றி நுணா.
  24. ஆரம்பத்திலேயே, இவர்களுடைய வருகை பொருத்தமான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். முதற்கோணல் முற்றும் கோணல் என்று குறிப்பிட்டது இதற்காகத்தான்.
  25. அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????
  26. க‌ம‌ல் பேசின‌ பேச்சு என்ன‌ தொலைக் காட்சியை டாச் ல‌யிட்டால் உடைத்து போட்டு சொன்ன‌ வார்த்தை என்ன‌ ஹா ஹா.............இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளால் தான் இலைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அர‌சில் ஒரு சாக்க‌டை என்று ஒதுங்குதுக‌ள்😁.....................
  27. எல்லோருமே அழகிகள்தான் சந்தேகமில்லை.........! 😁 ஒரு சந்தேகம்: மணமானவர்களும் மறுமணத்திற்காகவும் வந்திருப்பார்களோ .......! 😴 இணைப்புக்கு நன்றி ஏராளன் ........!
  28. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
  29. இராஜதந்திரம் என்பது பலம் பொருந்திய எதிரலாளியை வேறுவழிகளை தேடுவதே தற்போதையை கால கட்டத்துக்கு சுகமானது என்று யாழ் புதிய சாணக்கிய கூட்டம் சொல்லியுள்ளது போல் உள்ளது .
  30. ஆமாம். "இது சிங்கள பௌத்த நாடு" என ஆர்ப்பரித்து உங்களை அரச கட்டிலேற்றிய அந்த சிங்கள பௌத்தமே உங்களை கைவிட்டது விரட்டியது என்பதுதான் உண்மை. அது தவிர, போருக்கு முன் போர் ஆடைகளை அணியும் போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும்போதே வீரத்தையும் அதன் சிறப்பையும் பேச வேண்டும் என்பது உங்கள் அரசியலில் உண்மையாயிற்று. அது சரி... மிகப்பலம் வாய்ந்த விடுதலைப்புலிகளை அழித்த உங்களுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டத்தை அடக்கி ஆட்சியை தக்க வைக்க உங்களால் முடியவில்லை? எழுதியதுதான் எழுதினீர்கள், உங்களுக்கு விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய சர்வதேச சக்திகள் ஏன் உங்களுக்கு எதிராக திரும்பியது எனவும் விவரிக்கலாமே. ஆர்ப்பாட்டம் செய்து விரட்டியவர்களுக்கு தெரியும், தாம் யார், ஏன் அதை செய்தோம் என்பது, உங்களுக்கு விளங்காத மாதிரி கதை எழுதி மகிழுங்கள். போனதடவை தமிழ் கிறிஸ்தவர்களை கொன்று பதவியேறி பாதியில் இறங்கினீர்கள், இனியொரு இன, மத கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாமென கனவு காணாதீர்கள். அது உங்கள் கடந்தகால அரசியலையே கேள்விக்குறியாக்கி விடும். புத்தகம் வெளியிட்டு அனுதாபத்தை தேடி காலத்தை வீணாக்குவதை விடுத்து சிறை செல்லாமல் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல சட்டத்தரணியை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவரும் வழியைப் பாருங்கள், இல்லையேல் அதை நீங்கள் இழக்க நேரிடும். எல்லா இழப்பையும் உங்களால் தாங்க இயலுமா என்பது தெரியவில்லை, அடுத்தவருக்கு இழப்பை ஏற்படுத்தி மகிழ்ந்தவர்களல்லவா நீங்கள்!
  31. கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா பஞ்சி பிடித்த சோம்பேறி சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது . அந்த நாட்டில் முக்கிய சிங்கள அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை ................................
  32. சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀
  33. வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான் எப்போதும் தலை வணங்குபவன். ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும்.
  34. ரொமேஷ் பண்டாரியின் பிடிவாதமும், யாழ்ப்பாண பொலீஸ் நிலையத் தாக்குதலும் ரஜீவ் காந்தி கடைப்பிடிக்க ஆரம்பித்த "நல்ல அயலான்" கொள்கையின்படி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்களவர்கள் விமர்சித்த பார்த்தசாரதி ஓரங்கட்டப்பட்டு புதிய வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார். ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்ட ரஜீவ், நேரடிப் பேச்சுக்களுக்கு முன்னர் உயர் அதிகாரியொருவரை கொழும்பிற்கு அனுப்புமாறு ஜெயார் கேட்டுக்கொண்டமையினைத் தான் வர‌வேற்பதாகவும், அதன்படி தனது புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை இனப்பிரச்சினைக்கான தீர்வுகுறித்த ஆரம்ப கட்டப் பேச்சுக்களை நடாத்த‌ தான் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். பண்டாரிக்கு வழங்கப்பட்ட பணி இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுதான். கொழும்பிற்கு வந்து ஜெயவர்த்தனவுடனும் அவருடைய அமைச்சர்களுடனும் பேசி, கள நிலவரம் தொடர்பான விடயங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். செளமியமூர்த்தி தொண்டைமான் பங்குனி 25 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த பண்டாரி ஜெயவர்த்தன, லலித், காமிணி, ரொனி டி மெல், தொண்டைமான் மற்றும் தேவநாயகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பண்டாரியுடனான சந்திப்பின் பின்னர் தொண்டைமானுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "இந்த மனிதனுக்கு எதுவுமே புரியவில்லை. நிரந்தரமான தீர்வொன்றிற்கு வடக்கும் கிழக்கும் இணைவது அத்தியாவசியமானது என்று நான் கூறியபோது, இணைப்பு அவசியமில்லை என்று என்னிடமே கூறுகிறார். ஜெயவர்த்தன முன்வைக்கும் மாவட்ட சபைகளைப் போதுமான தீர்வென்று வாதாடிய பண்டாரி, இச்சபைகளுக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களூடாக தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வாதாடுகிறார். இங்குள்ள பிரச்சினையின் ஆளம் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று அவரது முகத்திற்கு நேரே கூறினேன்" என்று தொண்டைமான் ஆத்திரத்துடன் கூறினார். கொழும்பு விஜயத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை பண்டாரி சந்தித்தார். தன்னிடம் பேசிய பண்டாரி "ஜெயவர்த்தன மீது நம்பிக்கை வையுங்கள், புதிய பேச்சுவார்த்தைகளில் திறந்த மனதுடன் பங்குபற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டதாக அமிர்தலிங்கம் என்னிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்திடம் பேசிய பண்டாரி, போராளி அமைப்புக்களுடன் இந்தியா விரைவில் பேசும் என்றும், பேச்சுவார்த்தைகளில் அவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்றும் இந்தியாவால் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். "ஜெயவர்த்தனவை நம்பாதீர்கள் என்று நாம் அவரிடம் மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டோம், ஆனால் எமது கோரிக்கைகள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பண்டாரி குறித்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லி திரும்பியதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பண்டாரி, "இலங்கையில் நடக்கும் போர் வெகுவிரையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு பேச்சுவார்த்தைகள் உடனே ஆரம்பிக்கப்படும்" என்று கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையினை மிக இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற மாய விம்பத்தை ரஜீவிடம் அவர் அழகாக முன்வைத்தார். பண்டாரி தனக்கு வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து சித்திரை 10 ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் பேசிய ரஜீவ், "சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது" என்று உற்சாகமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் தூதர் சத்வாலுக்கு விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது. அங்கு பேசிய தொண்டைமான், ரஜீவின் பேச்சிற்குப் பதிலடியாக, "சுரங்கப்பாதையோ முடிவின்றி நீண்டு செல்கிறது, வெளிச்சத்தைக் காண்பதற்குப் பதிலாக, இருளே சூழ்ந்து வருகிறது" என்று கூறினார். பண்டாரியின் கொழும்பு விஜயத்தினையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய ரஜீவும் அவரது ஆலோசகர்களும் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டதன்படி இரு நாட்டு எல்லைகளுடாகவும் நடைபெற்று வந்த போராளிகளின் போக்குவரத்தினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழ்நாட்டிலிருந்து யாழ்க்குடா நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற‌ அதிவேகப் படகு ஒன்றை இந்தியக் கரையோர ரோந்துப் படையினர் கைப்பற்றினர். அப்படகில் இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கிர்ணேட்டுக்கள் என்பன காணப்பட்டதுடன், அப்படகில் பயணித்துக்கொண்டிருந்த சீருடை தரித்த இரு ஈ.பி.ஆர்.எப்.எப் போராளிகளும் இந்தியர்களால் கைதுசெய்யப்பட்டனர். இச்செய்தியை தமக்குச் சாதகமாகப் பாவித்த இலங்கையரசும், ஊடகங்களும், இந்தியா போராளிகளை முடக்க ஆரம்பித்து விட்டதாகவும், இதன் மூலம் பயங்கரவாதச் செயல்கள் குறைவடைந்து வருவதாகவும் பேசத் தொடங்கின. போராளிகளை முடக்க இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து லங்கா கார்டியனின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவுக்கு ரஜீவ் காந்தி பங்குனி மாதத்தின் இறுதி வாரத்தில் வழங்கிய செவ்வியில், "நாம் அவர்களை முடக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறோம், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளைத் தணித்து சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கவே எத்தனிக்கிறோம்" என்று கூறியதன் மூலம் தனது அரசு போராளிகளை முடக்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். மகாவலி ஆற்றின் விக்டோரியா அணைக்கட்டினைத் திறந்துவைக்கும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சர், காமிணி திசாநாயக்க, ஜெயவர்த்தன மற்றும் லலித் - சித்திரை 11, 1985 பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், சித்திரையின் ஆரம்பத்திலும் போராளிகளின் தாக்குதல்கள்கள் எதுவும் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சரின் வருகையின்போது யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையம் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தும் ஏற்பாடுகளில் பிரபாகரன் இறங்கியிருந்தமையாகும். இலங்கையின் விசேட பொலீஸ் அதிரடிப்படைக்கான பயிற்சிகளை வழங்க கீனி மீனி கூலிகளை இங்கிலாந்து அரசே இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்திருந்ததுடன், தொடர்புகளையும் ஏற்படுத்தி, பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்தது. சித்திரை 10 ஆம் திகதி இரவு, தளபதி கிட்டு தலைமையில் 200 புலிப் போராளிகள் நான்கு மினிபஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் ஆகியவற்றின் மூலம் யாழ்நகரிற்குள் பிரவேசித்தார்கள். பொலீஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்த யாழ்ப்பாணக் கோட்டையின் முற்பகுதியைத் தவிர்த்து, பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகளை அரைவட்ட வடிவில் சூழ்ந்து நிலையெடுத்துக்கொண்டார்கள். அருகில் இருந்த தொலைத்தொடர்பு பரிவர்த்தனை மையத்திற்குச் சென்ற போராளிகள் அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தனர். இன்னொரு குழுவினர் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் இருந்த இலங்கை மின்சாரச் சபைக்குச் சென்று மின்சாரத்தினைத் துண்டித்தனர். நகர் முழுவதும் இருளில் மூழ்கிக்கொள்ள, இரவு 9:45 மணியாகியிருந்தது. நகரை இருள் சூழ்ந்து கொண்டதே தாக்குதலை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையாக இருந்திருக்க வேண்டும். உடனடியாக பொலீஸ் நிலையம் மீதும், அருகிலிருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரின் அலுவலகம் மீதும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். சுமார் 100 பொலீஸார் நிலை கொண்டிருந்த பொலீஸ் நிலையம் மீது மோட்டார்கள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள் மற்றும் எறிகுண்டுகளைப் பயன்படுத்திப் புலிகள் தாக்கினர். சுமார் 3 மணிநேரம் நடந்த தாக்குதலில் நான்கு பொலீஸார் கொல்லப்பட, இருவர் ஆயுதங்களுடன் புலிகளிடம் சரணடைய, மீதமானோர் அருகிலிருந்த கோட்டை இராணுவ முகாமிற்குள் ஓடிச்சென்று தஞ்சமடைந்தனர். கட்டிடத்திற்குள் நுழைந்த புலிகள் அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியபின், கட்டடத்திற்குக் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த குருநகர் இராணுவ முகாமிற்கு பொலீஸ் நிலையம் தாக்கப்படுவது தெரிந்திருந்தும், தாக்குதலை முறியடிக்க இராணுவத்தினரை அனுப்ப விரும்பவில்லை. தமது முகாமும் தக்கப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கான நிலையெடுத்து அவர்கள் முகாமிலேயே காத்திருந்தனர். பொலீஸ் நிலையத்தைத் தக்கவைக்க இராணுவம் முயலும் பட்சத்தில் அந்த முயற்சியைத் தோற்கடிக்க புலிகளும் தமது அணிகளை அப்பகுதியில் நிறுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் நோக்கிச் செல்லும் வீதிகளில் அமைந்திருந்த மதகுகளைத் தகர்த்து, வீதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததுடன், யாழ்நகர் முழுவதும் புலிகளின் கண்காணிப்பின் கீழ் அன்றிரவு கொண்டுவரப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 35 உப இயந்திரத் துப்பாக்கிகள் (எஸ்.எம்.ஜி), 80 தானியங்கித் துப்பாக்கிகள் (சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை), ஒரு கிர்ணேட் உந்துகணைச் செலுத்தி, 175 கிர்ணேட்டுக்கள், 100 புகைக்குண்டுகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த புலிகளின் அலுவலகம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. அவர்கள் விடுத்த அறிக்கையில், "இந்தப் பிரதேசத்தின் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நவீன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன, இவ்வாறான குண்டுச் சத்தத்தினை இப்பகுதி இதற்கு முன்னர் கேட்டதில்லை" என்று கூறப்பட்டிருந்தது. ஜெயாரினால் எதுவுமே பேச முடியவில்லை. மாக்கிரெட் தட்சரை அவமதிக்கவே புலிகள் இதனைச் செய்தார்கள் என்றும், தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தச் செய்வதன் மூலம் அவர்களைப் போராளிகளை நோக்கித் தள்ளவே இதனைச் செய்தார்கள் என்றும் அவர் கூறினார். ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கைக்குப் பதிலாகவும், ஜெயவர்த்தனவின் தமிழ் மக்களின் மீதான படுகொலைகளுக்கு பதிலடியாகவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போராளிகள், தமக்குள் ஒருமித்த முன்னணி ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டிலும் இறங்கினார்கள்.
  35. ‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்) — அகரன் — அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன். அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள். பின்பு ஓர் ஆண்டு‌க்குள் அவள் இறந்து போனாள்‌. அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல் தன் கல்வியை பிற்போட்டுவிட்டு, தான்‌ நேசித்தவளுக்காக வாழ்ந்த அந்தப்பிரெஞ்சு நண்பனை எனக்கு தெரியும். அவனது அன்பும், அறனும் உலகுடன் பெறினும் கொள்ளமுடியாது. நீலக்கண்களையும் சிவந்த புன்னகையையும், மாசறு அன்பும்கொண்ட‌ அந்த இருபத்திமூன்று வயதான மார்க்கோ என்றதோழி வன்சோன் என்ற என் நண்பனின் நினைவில் மட்டுமல்ல என் நினைவில் இருந்தும் அழிக்க முடியாத உயிர். குணா கவியழகனின் ‘கடைசிக்கட்டில்’ என்ற அவரது ஆறாவது நாவலை ஐந்து ஆண்டுகளின் பின்னர் எழுதியிருக்கிறார். “எதிர்” வெளியீடாக இந்த ஆண்டு சனவரியில் வந்திருந்தது. தூக்கம் முறிந்துபோன ஓர் அதிகாலை நான்கு மணிக்கு நாவலை படிக்க ஆரம்பித்தேன். புத்தக முக அட்டையின் உருவம் என்னை யுத்தம் பற்றிய ஓர் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் முன்முடிவைத் தந்திருந்தது. என் மன ஏற்பாடும் அப்படித்தான் இருந்தது. 2009 க்கு பின்னர் யுத்தச்சிறையில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து எழுத்தின் மூலம் காலத்தை பதிவு செய்பவர்கள் அரிதிலும் அரிது. அவர் எழுதிய முதல் இரண்டு நாவல்களும் போரியல் நாவல்வகைக்குள் அடக்கலாம். மீதி மூன்று நாவல்களும் போர்க்கால நாவல்கள். கடைசிக்கட்டில், முழுமையாக மின்சக்தியில் இயங்கும் “ரெஸ்லா” வண்டியைப்போல் சத்தம் இல்லாமல் ஆரம்பித்து வேகமாக நகர்ந்தது. யாழ்ப்பாண வைத்திய சாலையின் பத்தாம் இலக்க விடுதியே கதைக்களம். அவ்விடுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விடுதி. அங்கு மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மார்க் அன்ரனி என்பவரது காதல் கதைதான் கடைசிக்கட்டில்‌. ஐந்தாம் கட்டில் மாணிக்கவாசகம் ; அவரைப் பார்க்க வரும் மகள் வஞ்சி, அவள் அம்மா. ஆறாம் கட்டில் பரமசோதியார், கடைசிக் கட்டில் ஒற்றக்கை நாகையா, தாதி மேனகா, முதலாம் கட்டில் மூக்கன் என்ற முகிலன், வைத்தியர் வண்ணன், அதிகாரத்தை விரும்பும் கனகாம்பிகை தாதி, உடல் நோயோடு கரவுநோயும் கொண்ட இராமதாசன். இவர்களை, இந்த மனிதச்சித்திரங்களால் அரசியல்முகபாடங்களற்ற எளிய மக்களின் கதையை குணா எழுதி இருக்கிறார். வஞ்சியின் குடும்பம் யுத்தத்தில் இருந்து மீண்டு ‌வன்னியில் வாழ்கிறது. வஞ்சியின் அண்ணா யுத்தச்சிறையில் இருக்கிறார். வஞ்சியின் வருமானத்தில் நகரும் குடும்பம். மார்க் யாழ்ப்பாணதத்தில் உள்ள சிற்றூரில் இருந்து அரசாங்க வேலைக்குச் செல்லும் முதல் மகன். வஞ்சியின் தந்தை புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்க வரும் வஞ்சிக்காக அவள் தந்தையில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வது எவ்வளவு உண்மையோ அதேயளவு எல்லோருக்கும் உதவுவதுமாக, பணிபுரியும் இனிய இதயத்தை மார்க் வைத்திருக்கிறான். இங்கு வருபவர்கள் படிப்படியாக இறக்கும் விதி அவர்கள் கட்டிலில் இருக்கிறது. அங்கு இருப்பவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கதை இருக்கிறது. பிள்ளைகள் எல்லோரும்‌ வெளிநாடுகளில் இருந்தும் யாரும்வந்து பார்க்காத ஏக்கத்திலேயே பரமசோதி இறந்தபோது அவர் தலைமாட்டில் ஒர் கடிதம் கண்டெடுக்கப்பட்டுகிறது. அக்கடிதம் புலம்பெயர்ந்து வாழும் எல்லோரும் படிக்கவேண்டியது. மனிதர்கள் எவ்வளவு இயந்திரமாகவும் பகட்டோடும்‌ இருக்கிறார்கள்‌ என்பதை பரமசோதியின் கதைகூறும். நாகையா இறந்தபோது மூக்கனும், மார்க்கும் அழும்காட்சிகள் இந்த மனிதர்கள் எத்தனை அன்பு தோய்ந்தவர்கள் என்று ஏங்க வைக்கும். வஞ்சியின்‌ அப்பாவை வீட்டில் வைத்து பார்க்குமாறு கண்ணன் வைத்தியர் அனுப்புவதற்கும் நஞ்சு கலந்தகாரணம் உண்டு. காதலின் அத்தனை வண்ணங்களையும் காட்டிய வஞ்சி, வீடு தேடிப்போனவனை வீட்டுக்குள் இருந்தபடி அவனைப் பார்க்காது… அவள் தாயார் மொழியில் ‘தம்பி என்னதான் இருந்தாலும் ….நீங்கள் பிழையா நினைச்சிட்டீங்கபோல.. உங்களுக்கு எல்லாந் தெரியும்..’ என்ற வார்த்தைகளுக்குள் நாவலின் சொல்லப்படாத நாவல் உள்ளது. அது அத்தனை கொடியவிஷத்தை வீசக்கூடிய மரம். அதை மனங்களிடம் வீசுவதை முறையாக குணா கவியழகன் செய்துள்ளார். நாகையா மூலம் அன்பு பற்றிய தத்துவ விசாரனை, மூக்கன் என்ற முகிலன் என்ற இனிய இளைஞனின் பாத்திரங்கள் நாவலின் உயிரை கொண்டோடுகின்றன. அழகியலான சொல்லாடல்களை பல இடங்களில் எழுதியுள்ளார். • ‘ஒவ்வொரு நாளும் குளிக்கும் மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்’ • ஈவதால் மேலுலகம் இல்லை எனினும் ஈபவன் வள்ளல். • அவளின் சப்பாத்து ஒலி ஒவ்வொருவர்இதயத்துடிப்புப்போல ஆகிவிட்டிருந்தது. • வண்ணங்கள் பூத்த வாழ்வெனும் கனாக்காடு. • பணத்துக்காகவும் புகழுக்காகவும் உழைத்தவர்கள் கடைசிக் கட்டிலுக்கு வரும்போது அதை இன்னும்‌ அனுபவிக்காமல் போக விரும்பாத மனதோடு அவஸ்தையுற்றார்கள் ; உறவைச் சம்பாதித்தவர்கள் வாழ்வை அனுபவித்து முடித்த பாங்கில் பதட்டமின்றி மரணத்தை எதிர் கொண்டார்கள். • இருட்டு எங்களை பார்த்தபடி இருந்தது. தன் வாழ்நாளில் அதிகம் யுத்தகாலங்களில் வாழ்ந்தாலும் அதற்கு மாற்றாக ஒரு கதையை எழுதியதில் குணா கவியழகன் தன் எழுத்தை வலுவாக்குகிறார். தமிழில் மிகச்சிறந்த போரியல் நாவல் இன்னும் எழுதப்படவில்லை. அதற்கான காலம் கரைந்துகொண்டு‌ இருக்கிறது. அழகி மார்க்கோவிற்கு மரணம் புற்று நோய் என்ற பெயரில் இருபத்தி நான்கு வயதில் வந்தது. அவள் உருகி.. உருகி உருமாறி மறைந்ததை இரண்டு கண்களிலும் வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட மனிதர்களின் கடைசிக்கட்டிலை வேகமாக உள்வாங்கிக்கொண்டேன். மதியம் உணவருந்தும் முன்னர் நாவலின் 232 பக்கங்களையும் படித்து முடித்தேன். என் மனதில் மார்க்கோ, வன்சோனின் கன்னங்களை வருடிமுத்தமிடும் காட்சி அப்படியே இருக்கிறது. அது காலத்தால் கரைக்க முடியாத காட்சி. https://arangamnews.com/?p=10559
  36. அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள்.
  37. Power comes with responsibility. நீங்கள் விரும்பியபடி எதையும் கதைக்கலாம், எழுதலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு nobody. அதாவது மிகச் சாதாரண மனிதன். எத்தகைய பொறுப்புக்களிலும் இல்லை. விசுகரின் நிலை அப்படி அல்ல. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்கு பொறுப்பு இருக்கிறது. அது காலம் முழுவதும் தொடரும்.
  38. நெருப்பு மட்டுமல்ல, உண்மையும் சுடும். தங்களுக்குச் சுட்டது நெருப்பல்ல, உண்மை. தாங்கள் யார், எத்தகைய பொறுப்பில் இருந்தீர்கள், உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் கடமையும் என்ன என்று உணர்ந்திருப்பீர்களானால் பொறுப்பில்லாமல் எழுதமாட்டீர்கள். இனிமேலாவது பொறுப்புடன் கருத்தை வெளியிடுங்கள். எங்களுக்கு இல்லாத கூடுதல் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பிகு. -1 இதைப்பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. -1 போடுவதற்கான காரணம் என்ன என்று அறிய விரும்புவது இயல்பு. அம்புட்டுதே.
  39. US warned Russia about imminent terrorist attack in March — White House The US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts, and shared with Russian authorities, spokesperson for the White House National Security Council Adrienne Watson said WASHINGTON, March 23. /TASS/. In March, the United States shared information with Russian authorities about a terrorist attack being planned in Moscow, spokesperson for the White House National Security Council Adrienne Watson told Reuters. "Earlier this month, the US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts - which prompted the State Department to issue a public advisory to Americans in Russia. The US government also shared this information with Russian authorities in accordance with its longstanding ‘duty to warn’ policy," Watson said. A terrorist attack was carried out at the Crocus City Hall music venue in the city of Krasnogorsk near Moscow on Friday evening. Unidentified gunmen armed with assault rifles went on a shooting spree. An explosion rocked the building, starting a fire. The special services are conducting a search operation. Moscow Mayor Sergey Sobyanin canceled all mass events in the capital in the next two days, and a number of other Russian regions followed suit. https://tass.com/world/1764563 MFA comments on US embassy’s warning about "terrorist attack threats" in Russia Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks MOSCOW, February 21. /TASS/. Russian Foreign Ministry Spokeswoman Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks in public places in Moscow and St. Petersburg as well as along the Russian-Ukrainian border to their Russian colleagues. "My question to the U.S. embassy in Moscow: Did you transfer the relevant data to your Russian colleagues via our partnership channels? If no - how should we understand all this?" she wrote in her Telegram channel on Sunday. On Sunday, the US embassy in Moscow has warned American nationals about alleged threats of terror attacks in public places in Moscow and St. Petersburg, as well as in areas near the Russian-Ukrainian border. "According to media sources, there have been threats of attacks against shopping centers, railway and metro stations, and other public gathering places in major urban areas, including Moscow and St. Petersburg as well as in areas of heightened tension along the Russian border with Ukraine," the embassy said in a press statement on its official website without giving links on specific publications. https://tass.com/politics/1406777 பிரான்சிலும் ஐரோப்பிய நகரங்களிலும், வட அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடும் குண்டு வெடிப்பும் நடைபெற்றதை தாங்கள் இன்னும் மறக்கவில்லை என நினைக்கிறேன். கொலைகளை குரூரமாக இரசிக்கும் ஆட்கள்தான் விபு களின் தூண்களாக ஐரோப்பாவில் வலம் வந்திருக்கின்றனர் என்பது கசப்பாக இருக்கிறது. ☹️
  40. எந்த ஆதாரமும் இல்லாத எழுந்தமான கருத்து.
  41. இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை பாலசிங்கத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் பார்த்தசாரதியினால் கூறப்பட்டதற்கமைய, இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ரஜீவ் காந்தி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த விளக்கங்களைப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு வழங்கினார்கள். இச்சந்திப்புக்கள் பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில், ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர், சென்னையிலும், இந்துக்களின் புனித தலமாகிய காசியிலும் இடம்பெற்றிருந்தன. ரோ அமைப்பின் தலைவரான கிரிஷ் சந்திர சக்சேனா சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநரான எம்.கே.நாராயணன் (2009 இல் இனக்கொலையினை நடத்திய அதே நாராயணன் தான்) காசி சந்திப்பை நடத்தினார். கிரிஷ் சந்திர சக்சேனா இந்தச் சந்திப்புக் குறித்த தகவல்களை போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் இரகசிய இடமொன்றில் நடந்த இச்சந்திப்பில் தானும் பிரபாகரனும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். உயரமான உடற்கட்டமைப்பும், மாநிறமும் கொண்ட சக்சேனா அதிகாரம் மிக்க தொனியில் தம்முடன் பேசியதாக பாலசிங்கம் கூறுகிறார். அது கலந்துரையாடல் போன்று இருக்கவில்லை, மாறாக எமக்குக் கட்டளையிடுவது போன்றே இருந்தது என்று பாலசிங்கம் எழுதுகிறார். இந்திரா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஆரம்பத்தில் விளக்கிய சக்சேனா, பின்னர் ரஜீவின் அரசாங்கத்தில் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசினார். இந்திராவின் காலத்தில், தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்காக ஜெயார் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளை இலங்கைக்குள் கொண்டுவந்தபோது இந்தியா சர்வதேச அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டி வந்தது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இனக்கொலைக்கு நிகரான குணவியல்புகளைக் கொண்டிருந்ததோடு, லட்சக்கணக்கான தமிழ் அகதிகள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரவும் காரணமாகியது என்று சக்சேனா கூறினார். இதனால் தமிழ்நாட்டில் பாரிய உணர்வலைகள் உருவாகி இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் நிலையும் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இதனாலேயே இந்தியா இவ்விவகாரத்தில் தலையிட வேண்டிய தேவை உருவாகியது என்று அவர் மேலும் கூறினார். பாலசிங்கத்திடமும் பிரபாகனிடமும் பேசிய சக்சேனா. இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது, சமாதானத்தை மீள உருவாக்குவது, இனங்களுக்கிடையிலான இணக்கப்பட்டினை ஊக்குவிப்பது என்பவற்றுடன், மிக முக்கியமாக பிராந்தியத்தில் உறுதிப்பாட்டினை உருவாக்குவதுதான் என்று கூறினார். மேலும், தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், அரச இராணுவத்தின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்தவுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் எந்த செயற்பாட்டிற்கும் இந்திரா காந்தி உங்களுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று அவர்களைப் பார்த்து மேலும் கூறினார் சக்சேனா. இராணுவ ரீதியில் தீர்வொன்றினை ஏற்படுத்த நினைத்த ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதனூடாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு உந்துவதற்காகவே உங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்குள்ளும் பல பிரிவினைவாதப் போராட்டங்களை தாம் முகம்கொடுத்து வரும் வேளையில், இலங்கையில் பிரிவினைக்கு இந்தியா உதவுவதென்பது, உள்நாட்டில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், இந்தியா தமிழ்ப் போராளிகளின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். பின்னர் ரஜீவ் காந்தி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்குவதில் ஈடுபட்டார் சக்சேனா, இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு எழுதுகிறார், "பிரபாகரனைப் பார்த்துக்கொண்டே தனது குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினார் சக்சேனா. "நீங்கள் இந்தியாவினது நிலைப்பாட்டினை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்வத்கைத் தவிர வேறு வழியில்லை" என்று கட்டளையிடுமாற்போல் அவர் பேசினார். இந்தியாவின் புதிய பிரதமர் அயல் நாடுகளுடன், குறிப்பாக இலங்கையுடன் சிநேகபூர்வமான உறவினை ஏற்படுத்தவே விரும்புகிறார். இலங்கையில் சமாதானத்தையும், சுமூகமான சூழ்நிலையினையும் உருவாக்க அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து புதிய சமாதானச் செயற்பாடுகளை ஆரம்பிக்க அவர் உறுதி பூண்டிருக்கிறார். ஆகவே, தமிழ் போராளி அமைப்புக்கள் தமது ஆயுதப் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டு இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன், இலங்கை அரசாங்க‌த்துடன் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும் காலம் விரைந்து உருவாகி வருகிறது என்று கூறிவிட்டு கூட்டத்திலிருந்து எழுந்து சென்றார், அத்துடன் அந்தச் சந்திப்பும் முடிவிற்கு வந்தது" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார். ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து அறிந்துகொண்டபோது பிரபாகரன் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அடையவில்லை என்று பாலசிங்கம் கூறுகிறார். "ஜெயவர்த்தன தொடர்பான ரஜீவ் காந்தியின் கணிப்பு அடிப்படையிலேயே மிகவும் தவறானது என்று பிரபாகரன் கூறினார். இந்தியா அழுத்தம் கொடுத்த போர்நிறுத்தம் குறித்து பிரபாகரன் அதிருப்தியடைந்தார், இந்தியா அவசரப்பட்டு எடுத்த முடிவு என்று அதனை வர்ணித்தார். அரச இராணுவத்தின் போரிடும் வலு பலவீனப்படுத்தப்பட்டு, அவர்களின் போரிடும் மநோநிலை சிதைவடையப்பட்டாலன்றி ஜெயவர்த்தன ஒருபோதும் தமிழருக்கான நீதியினைத் தரப்போவதில்லை" என்று பிரபாகரன் கூறினார். 1985 இலிருந்து 2009 வரை தமிழர்களின் இனவழிப்பில் நேரடியாகப் பங்காற்றிய எம்.கே.நாராயணன் அவ்வாறே காசியில் இடம்பெற்ற சந்த்திப்பில் கலந்துகொண்ட புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநர் எம்.கே.நாராயணனும், ரஜீவ் காந்தியின் புதிய வெளியூரவுக் கொள்கையினை விளக்கியதோடு, அரசியல் ரீதியிலான சமரசப் பேச்சுக்களூடாக தீர்வினைக் காணும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அனைத்து போராளி அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், நாடுகளுக்கிடை யிலான பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ரஜீவ் காந்தி புதுமையான யோசனைகளைக் கொண்டிருக்கிறார் என்றும் நாராயணன் தம்மிடம் கூறியதாக பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பிரபாகரனிடமும், பாலசிங்கத்திடமும் பேசிய நாராயணன், தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானமும், அமைதியும் கொண்ட வலயமாகவும், பிறச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத பிராந்தியமாகவும் உருவாக்க ரஜீவ் காந்தி முயல்கிறார் என்று கூறினார். ரஜீவின் தலைமையில், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில், இந்தியா, புதிய ஒழுங்கினையும், அமைதியையும், நாடுகளுக்கிடையே சிநேகபூர்வமான உறவினை உருவாக்குவதன் மூலம் அடைந்துகொள்ள முயல்கிறது என்றும் அவர் கூறினார். ரஜீவின் இச்சிந்தனையூடாக இனப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வொன்றினை உருவாக்க சமாதானப் பேசுக்களை ஆரம்பிக்க இந்தியா விளைகிறது என்று நாராயணன் கூறினார். ஆகவே தமிழர்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களிடமிருந்தும், குறிப்பாக தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்பினை இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் தொடர்பாக பிரபாகரனின் கருத்தை அறிந்துகொள்ள நாராயணன் முயன்றபோது, பிரபாகரன் பின்வரும் விடயங்களைக் கூறினார், 1. அரச அடக்குமுறையே தமிழர்களின் ஆயுதப் போரட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. 2. புலிகள் ஆயுத மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனால், தமிழர்களின் இருப்பையும், அவர்களின் அடையாளத்தையும் காத்துக்கொள்ள வேறு வழியின்றியே ஆயுதத்தினைக் கைகளில் எடுத்திருக்கிறார்கள். 3. நீதியும், சமத்துவமானதுமான தீர்வொன்றினை சமாதான வழிமுறைகள் மூலம் இந்தியா பெற்றுக்கொடுக்கத் தயாராக இருந்தால் தமிழ் மக்கள் அதனை நன்றியுடன் வரவேற்பார்கள். 4. மீண்டுவர முடியாத இனவாதச் சிந்தனைகளில் அமிழ்ந்துபோய் இருக்கும் சிங்கள அரசியல்த் தலைமைகள் குறித்து பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்களின் மனங்களில் இருக்கிறது. 5. ஜெயவர்த்தன தொடர்பாக ரஜீவ் காந்தி கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்தும் தமிழர்கள் மிகுந்த சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். என்று கூறியதோடு, தமிழர்களின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜீவ் காந்தியைத் தள்ளிவிடும் கைங்கரியங்களில் ஜெயவர்த்தனவின் குள்ளநரித்தினம் இறங்கியிருக்கிறது என்றும் நாராயணனிடம் பிரபாகரன் தெரிவித்தார்.
  42. உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼 எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்...... இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா? திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽
  43. பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை இது தான் உண்மை . ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த மண்ணில் இடம் எது .... வாழ்கை என்பது வியாபாரம் வருவதும் போவதும் செலவாகும். .....போனால் போகட்டும் போடா........... )
  44. படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை. இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.
  45. முன்னோர்கள் முன்னேற்பாடாக பலப்பல காரியங்களைச் செய்து வந்துள்ளனர்.......... இப்போது உள்ளதுபோல் ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்களில் கட்டிடங்கள் கட்டும் கலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை........! 😁
  46. பவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.
  47. நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.