Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3061
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46788
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7051
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2954
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/30/24 in all areas

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை. தவிர மட்டுறுத்துனர்களும் மட்டுறுத்தலுக்கு பெரும் நேரம் தொடர்ந்தும் செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது. வெகுவிரைவில் இந்தியாவில் தேர்தல் வருகின்றது. முன் போலவே யாழ் இணையம் தமிழக மண்ணில் தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு கட்சி சார்ந்து சார்பானதான அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதேவேளை ஈழத்தமிழர்களை தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்ப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம். காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருவது எமக்குத் தெரிந்ததே. தற்போது கூட இருக்கும் சில தமிழர்களாலும் மாவீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் தவறான தகவல் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுவதுடன் அவை உண்மை என்று நிரூபிக்க கடும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதையும் அவதானத்துடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவைகளுக்கு துணைபோகாது நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது. மேலும் எமது மக்களின் நேர்மையான போராட்டங்களுக்கு ஒன்றுபட்டு எமது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றோம். யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இந்த 26வருடத்தில் இன்னும் புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். யாழ் இணையப் பாவனையாளர்கள் உங்களைச் சார்ந்தோருக்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வையுங்கள். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  2. வெற்றிலைத் தட்டம் இல்லாத வீடுகளே அன்று இல்லை எனலாம். இளம் பச்சை நிற கொழும்பு வெற்றிலை, ஊர்ப் பாக்கு, கும்பகோணம் ரோஸ் கலர் சுண்ணாம்பு தட்டத்தில் சுற்றிவர இருக்கும். அப்படியே ஒரு பாக்குவெட்டியும் தட்டின் நடுவில் இருக்கும். சீவல் பாக்கு பலருக்கும் பிடிப்பதில்லை. தாங்களே சீவி எடுத்தால் தான் திருப்தி. பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா? ********************************* பாக்குவெட்டி --------------------- எங்கள் வீட்டில் ஒரு பாக்குவெட்டி இருந்தது நான் பிறக்கு முன்னேயே அது அங்கே இருந்தது ஒரு தட்டத்தில் எப்போதும் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு சுற்றி வர நல்ல ஒரு கண்டுபிடிப்பு சரசரவென்று பாக்கைச் சீவும் இது விரலை எப்போது சீவும் என்று நினைப்பேன் அப்பா ஆச்சி வந்தவர்கள் எவர் விரலையும் அது சீவவே இல்லை நான் ஒரு போதும் முயலவில்லை இன்று ஒரு செய்தி இலங்கையில் படுத்திருந்த கணவனை பாக்குவெட்டியால் வெட்டினார் மனைவி என்று நீங்கள் சரியாகவே வாசித்திருப்பீர்கள் சந்தேகமே இல்லை துண்டு இரண்டங்குலமாம் விரலை மட்டும் தான் இது வெட்டக் கூடும் என்று யோசித்திருந்தேன் செய்தியை பார்க்கும் வரை என்ன ஒரு கண்டுபிடிப்பு.
  3. (குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.
  4. "புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண். இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை!
  5. ஜேர்மனியில் எங்கு பார்த்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருப்பதை காணலாம். அத விட வெட்ட வெளியெங்கும் சோலார் தகடுகள் காட்சியளிக்கும். இருந்தாலும் மின்சார கட்டணம் குறைவதற்கு பதிலாக 5 மடங்கு விலை கூடியிருக்கின்றது. உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.
  6. எமது ஊர்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தஸ்சு புஸ்சு ஆபீஸர்மார் நான் சொன்ன கருத்து பொருந்தாது. நான் அறிய / நான் உட்பட மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு தான் வளர்ந்தோம்.நவநாகரீக உணவுகள் உண்ணவில்லை. நவநாகரீக நோய்கள் வரவில்லை. பசிக்காமல் உண்ணவில்லை. ஆனால் பசியாற உண்டோம்.உடல் களைக்க வேலை செய்தோம். வியர்வை மணக்க வேலை செய்தோம். நோய்கள் அண்டவில்லை.பசுமதியை கண்டறியோம். வெள்ளை பச்சை அரியை கண்டால் விலகி ஓடினோம். ஆனால் இன்று.....? இன்றைய மானிடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு ஐயோ குத்துது குடையுது என்றால் 24 மணி நேரமும் கதவை திறந்து வைத்திருப்பான் தானே அந்த வைத்தியன்....😎
  7. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 வணக்கம், இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும். கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டி நடாத்துபவரைப் தவிர்த்து குறைந்தது பத்து பேராவது பங்குபற்றினால் மாத்திரமே போட்டி நடாத்தப்படும்! ஐபிஎல் 2024 போட்டிகள் பற்றிய விபரங்கள் 17வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2024 சீசன் மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டி சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings BATTERS: Ruturaj Gaikwad (c), Aravelly Avanish, Devon Conway, MS Dhoni, Ajinkya Rahane, Shaik Rasheed, Sameer Rizvi ALLROUNDERS: Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Ravindra Jadeja, Ajay Mandal, Daryl Mitchell, Rachin Ravindra, Mitchell Santner, Nishant Sindhu BOWLERS: Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Mustafizur Rahman, Matheesha Pathirana, Simarjeet Singh, Prashant Solanki, Shardul Thakur, Maheesh Theekshana 2. Delhi Capitals BATTERS: Rishabh Pant (c), Abishek Porel, Ricky Bhui, Swastik Chikara, Yash Dhull, Jake Fraser-McGurk, Shai Hope, Kumar Kushagra, Prithvi Shaw, Tristan Stubbs, David Warner ALLROUNDERS: Lalit Yadav, Mitchell Marsh, Axar Patel, Sumit Kumar BOWLERS: Khaleel Ahmed, Praveen Dubey, Kuldeep Yadav, Mukesh Kumar, Anrich Nortje, Vicky Ostwal, Rasikh Salam, Jhye Richardson, Ishant Sharma 3. Gujarat Titans BATTERS: Shubman Gill (c), David Miller, Wriddhiman Saha, Sai Sudharsan, M Shahrukh Khan, BR Sharath, Matthew Wade, Kane Williamson ALLROUNDERS: Azmatullah Omarzai, Abhinav Manohar, Rashid Khan, Vijay Shankar, Manav Suthar, Rahul Tewatia BOWLERS: Spencer Johnson, Kartik Tyagi, Josh Little, Sushant Mishra, Darshan Nalkande, Noor Ahmad, Sai Kishore, Mohit Sharma, Jayant Yadav, Umesh Yadav 4. Kolkata Knight Riders BATTERS: Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Angkrish Raghuvanshi, Rahmanullah Gurbaz, Ramandeep Singh, Nitish Rana, Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh ALLROUNDERS: Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, BOWLERS: Vaibhav Arora, Dushmantha Chameera, AM Ghazanfar, Harshit Rana, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Sakib Hussain 5. Lucknow Super Giants BATTERS: KL Rahul (c), Ayush Badoni, Quinton de Kock, Devdutt Padikkal, Nicholas Pooran, Ashton Turner ALLROUNDERS: Krishnappa Gowtham, Deepak Hooda, Arshin Kulkarni, Prerak Mankad, Kyle Mayers, Krunal Pandya, Marcus Stoinis BOWLERS: Arshad Khan, Matt Henry, Shamar Joseph, Amit Mishra, Mohsin Khan, Naveen-ul-Haq, Ravi Bishnoi, Shivam Mavi, Manimaran Siddharth, Mayank Yadav, Yash Thakur, Yudhvir Singh 6. Mumbai Indians BATTERS: Tim David, Ishan Kishan, Naman Dhir, Shivalik Sharma, Rohit Sharma, Vishnu Vinod, Nehal Wadhera, Suryakumar Yadav ALLROUNDERS: Hardik Pandya (c), Dewald Brevis, Piyush Chawla, Shreyas Gopal, Anshul Kamboj, Mohammad Nabi, Shams Mulani, Romario Shepherd, Tilak Varma BOWLERS: Jasprit Bumrah, Gerald Coetzee, Kumar Kartikeya, Akash Madhwal, Kwena Maphaka, Arjun Tendulkar, Nuwan Thushara, Luke Wood 7. Punjab Kings BATTERS: Shikhar Dhawan (c), Jonny Bairstow, , Harpreet Singh, Prabhsimran Singh, Rilee Rossouw, Jitesh Sharma ALLROUNDERS: Sam Curran, Rishi Dhawan, Liam Livingstone, Ashutosh Sharma, Shashank Singh, Shivam Singh, Sikandar Raza, Atharva Taide, Chris Woakes BOWLERS: Arshdeep Singh, Rahul Chahar, Nathan Ellis, Harpreet Brar, Vidwath Kaverappa, Harshal Patel, Kagiso Rabada, Prince Choudhary, Vishwanath Singh, Tanay Thyagarajan 8. Rajasthan Royals BATTERS: Sanju Samson (c), Jos Buttler, Shubham Dubey, Shimron Hetmyer, Yashasvi Jaiswal, Dhruv Jurel, Tom Kohler-Cadmore, Riyan Parag, Rovman Powell, Kunal Singh Rathore ALLROUNDERS: Abid Mushtaq, Ravichandran Ashwin, Donovan Ferreira, Tanush Kotian BOWLERS: Avesh Khan, Trent Boult, Nandre Burger, Yuzvendra Chahal, Navdeep Saini, Sandeep Sharma, Kuldeep Sen 9. Royal Challengers Bangalore BATTERS: Faf du Plessis (c), Anuj Rawat, Saurav Chauhan, Dinesh Karthik, Virat Kohli, Rajat Patidar ALLROUNDERS: Akash Deep, Manoj Bhandage, Tom Curran, Cameron Green, Will Jacks, Mahipal Lomror, Glenn Maxwell, Suyash Prabhudessai BOWLERS: Mayank Dagar, Lockie Ferguson, Alzarri Joseph, Mohammed Siraj, Rajan Kumar, Himanshu Sharma, Karn Sharma, Swapnil Singh, Reece Topley, Vijaykumar Vyshak, Yash Dayal 10. Sunrisers Hyderabad BATTERS: Abdul Samad, Mayank Agarwal, Anmolpreet Singh, Travis Head, Heinrich Klaasen, Aiden Markram, Rahul Tripathi, Upendra Yadav ALLROUNDERS: Abhishek Sharma, Wanindu Hasaranga, Marco Jansen, Nitish Kumar Reddy, Glenn Phillips, Sanvir Singh, Shahbaz Ahmed, Washington Sundar BOWLERS: Pat Cummins (c), Akash Singh, Fazalhaq Farooqi, Bhuvneshwar Kumar, Mayank Markande, T Natarajan, Jhathavedh Subramanyan, Umran Malik, Jaydev Unadkat போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Rank Team M W L T N/R PTS Net RR 1 Gujarat Titans (Q) 14 10 4 0 0 20 0.809 2 Chennai Super Kings (Q) 14 8 5 0 1 17 0.652 3 Lucknow Super Giants (Q) 14 8 5 0 1 17 0.284 4 Mumbai Indians (Q) 14 8 6 0 0 16 -0.044 5 Rajasthan Royals 14 7 7 0 0 14 0.148 6 Royal Challengers Bangalore 14 7 7 0 0 14 0.135 7 Kolkata Knight Riders 14 6 7 0 0 12 -0.239 8 Punjab Kings 14 6 8 0 0 12 -0.304 9 Delhi Capitals 14 5 8 0 0 10 -0.808 10 Sunrisers Hyderabad 14 4 10 0 0 8 -0.590 Most runs[edit] Main article: Orange Cap Player Team Mat Inns Runs High score Shubman Gill Gujarat Titans 17 17 890 129 Faf du Plessis Royal Challengers Bangalore 14 14 730 84 Devon Conway Chennai Super Kings 16 15 672 92* Virat Kohli Royal Challengers Bangalore 14 14 639 101* Yashasvi Jaiswal Rajasthan Royals 14 14 625 124 Source: IPLT20.com Most wickets[edit] Main article: Purple Cap Player Team Mat Inns Wkts BBI Mohammed Shami Gujarat Titans 17 17 28 4/11 Mohit Sharma Gujarat Titans 14 14 27 5/10 Rashid Khan Gujarat Titans 17 17 4/30 Piyush Chawla Mumbai Indians 16 16 22 3/22 Yuzvendra Chahal Rajasthan Royals 14 14 21 4/17 Source: IPLT20.com End of season awards[edit] Player Team Award Prize David Warner Delhi Capitals Team fairplay award ₹10 lakh (US$13,000) Mohammed Shami Gujarat Titans Purple cap (most wickets) ₹10 lakh (US$13,000) Rashid Khan Gujarat Titans Catch of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Gamechanger of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Most fours ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Player of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Orange cap (most runs) ₹10 lakh (US$13,000) Yashasvi Jaiswal Rajasthan Royals Emerging player of the season ₹10 lakh (US$13,000) Faf du Plessis Royal Challengers Bangalore Most sixes ₹10 lakh (US$13,000) and trophy Faf du Plessis Royal Challengers Bangalore Longest six ₹10 lakh (US$13,000) and trophy Glenn Maxwell Royal Challengers Bangalore Super striker ₹10 lakh (US$13,000), trophy and a car கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம். அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா? எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசியின் வகைகள் என்னென்ன? தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது. தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான். அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ். அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் . இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது? தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. "ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே." "இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்புகவுனி அரிசி கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன? சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார். மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது. பட மூலாதாரம்,AATHICHOODI படக்குறிப்பு, மருத்துவர் மருதராஜ் செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று. இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ். அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும். இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன? தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும். மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர். “இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும் காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா? பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும். இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன. இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்” ரேஷன் அரிசி நல்லதா? பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ். “மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர். எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ். எந்த அரிசியை தேர்வு செய்வது? இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.” “அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o
  9. முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. https://thinakkural.lk/article/297642 அறிவியல் வளர்ச்சி?!!
  10. புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு போராடியது உங்கள் பிரச்சனை. அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள். உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள். அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற சுய நல கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும். உங்கள் சீமானுக்கு அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது.
  11. எதுவாக இருந்தாலும் சீமானே தன் வாயால் கெட்டாலும் சீமானும் நாம் தமிழரும் இனி தமிழகத்தில் தவிர்க்கப்படமுடியாதவர்கள் தான் திராவிடக்கட்சிகள் தேய்வதும் நாம் தமிழர் வளர்வதும் இனி தொடரும்... (தமிழக மக்கள் சிலவற்றை பெரிது படுத்துவதில்லை) ஒரு தமிழனாக இதை நான் சாதகமாகத்தான் பார்ப்பேன் பார்க்கணும்
  12. அதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂
  13. காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!
  14. இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது. இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது. முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி. பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர். அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு. இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது. இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள். ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட். நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா? இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது. இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர். ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது. நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள். இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை, சி எஸ் கே யை ஆதரிக்கிறனர். நன்றி வசி, நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள். இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.
  15. ஆப்ரிக்காவில் ஒரு இஸ்லாமீய அறிஞர் அண்ணா அவர்கள், பெண்குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை தைத்துவிடவேண்டும் அப்போதான் ஆண்களுக்கு நிறைவான சுகத்தை கொடுப்பா என்று அறிவித்து உலக அளவில் பரபரப்பானது. பின்பு இந்தியாவிலிருந்துவிட்டு மலாசியாவுக்கு ஓடிபோய் வாழும் மற்றொரு மத அறிஞர் திலகம் மதத்துக்காக எதுவும் பண்ணிட்டு சொர்க்கத்துகு போனால் அங்கே 62 கன்னிகள் கிடைக்கும் என்றார், அப்போகூட சொர்க்கத்தில் எது முக்கியம் எதை எதிர்பார்க்கிறார்கள் இந்த அறிஞர் கூட்டம் என்பது சில்லிட வைக்கிறது. இன்னொரு அறிஞர் பெண்கள் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்றே அர்த்தம் என்றார், பெண்பிள்ளைகள் இப்போதெல்லாம் 10, 11 வயதில்கூட பூப்பெய்துகிறார்கள் என்பது தற்கால நடைமுறை. பின்பு தலீபான் அறிஞர் கூட்டம் பெண்களுக்கு பிரசவம் பெண்களே பார்க்கவேண்டும் என்று புனித சட்டம் போட்டார்கள், ஆனால் பெண்கள் படிக்க கூடாது என்றும் சட்டம் போட்டார்கள், படிக்காமல் எப்படி டாக்டராகி பிரசவம் பார்ப்பதென்று கடைசிவரை அந்த அறிஞர் கூட்டம் சொல்லவேயில்லை. மத அறிவில் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொரு அறிஞர் கூட்டம் இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே கடைதெருவுக்கு கூட போக கூடாது என்று சொல்லியிருந்தார் ஆனால் இஸ்லாமிய ஆண்கள் ஐரோப்பா அமெரிக்கா என்று போய் பணத்தை அள்ளியிறைத்து பெண்கள் மத்தியிலேயே பொழுது போக்கிட்டு ஊர் திரும்புவார்கள். கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்ககூடாது என்று அறிஞர்கள் அலுமாரியை அவ்டி காரை மூடி வைச்சமாதிரி எத்தனை டிகிரி வெய்யில் என்றாலும் வெப்பத்தை உறிஞ்சி வைத்திருக்கும் கருப்பு துணியால் முழுவதும் மூடி செல்லவேண்டுமென்று சொல்வார்கள் , ஆனால் ஆண்கள் மனைவிக்கு மட்டும் காட்டவேண்டியதை மத்த மதக்காரர் எவர் கிடைப்பா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கணவனுடன் போகும் பெண்களைகூட பார்த்து ஜொள்ளுவிட்டு அலைவார்கள். மொத்தத்தில் அண்ணனோட சிந்தனைகளும் செயல்களும் பெண்ணை பற்றியே சுற்றிவரும். அதையெல்லாம் கூட மன்னிக்கலாம் ஆனால் எல்லாத்தையும் பண்ணிப்பிபோட்டு இறுதியாக ஒரு வரி சொல்வார்கள் பாருங்கள். அதை தாங்கிக்கொள்ள இன்னொரு இதயம் இறைவனிடம் கேட்டு வாங்க வேண்டும் ’எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் பெண்களை மதிக்க கற்று கொடுத்திருகிறது’
  16. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை அளவாக சாப்பிடலாம் என்று சொல்லியிருப்பது அருமை.........👍 இவர்களில் பலர் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் சோறு சாப்பிடுகின்றனர், மதியமும் இரவும். அதுவே மாசத்து மிகுதியால் வரும் சில நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகின்றது. சோற்றுடன் இவர்கள் சேர்க்கும் காய்களும் (அப்படித்தான் மரக்கறிகளை சொல்கின்றனர்) குறைவே. எங்கள் அளவிற்கு இவர்கள் மீன் சாப்பிடுவதும் இல்லை. இப்பொழுது வசதி உள்ளவர்கள் ராகி (குரக்கன்), கம்பு என்று சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். இது நெடுங்காலம் நீடிக்குமா என்று தெரியவில்லை.
  17. அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.
  18. கட்சி சேர...
  19. ✅ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் பழைய இந்திய பிரதமரிடம் நீங்கள் இந்திய‌ ப‌டையை பாக்கிஸ்தானுடன் போரிட அனுப்பகிறீர்களா அல்ல‌து நான் என‌து பொலிஸ்சை அனுப்ப‌வா என்று கேட்டதாக பையன்26 முன்பு எனக்கும் சொல்லியிருந்தவர். அந்த முத‌ல‌மைச்ச‌ர் அப்படி உண்மையில் சொல்லியிருந்தால் அது சீமான் பாணியிலான வெறும் வாய் சவால். அவரால் அனுப்பவும் முடியாது. அனுப்பினால் வங்காள பொலிஸ்சார் வேலையைவிட்டே ஓடிவிடுவார்கள். இந்தியா தொடர்புடைய விடயங்கள் நடந்தவை தெரியபடுத்தி நீங்கள் நல்ல விளக்கம் அளித்து வருகிறீர்கள் 👍
  20. ஏனய்யா செந்தமிழன் சீமான் அண்ணா மேல் இந்த முனிவு? பொதுவாக எல்லாத் தமிழ்ப் பெற்றோரினதும் அவா என்னவெனில் தம் பிள்ளைகள் இங்லிஷ் படித்து அமெரிக்கன் ஸ்டைலில் பேசவேண்டும் என்பதே! செந்தமிழன் முதல்வரானால் இதற்கான ஆவனசெய்வதில் என்ன தவறு இருக்கப்போகின்றது?! அதற்கான முதற்படியாகவே தன் மகன் மாவீரனை இங்லிஷ் மீடியத்தில் படிக்கவைத்துள்ளார் செந்தமிழன் அண்ணா.
  21. கவிதை எழுதிய ஆட்கள் நிறைய பேர் இருப்பீர்கள் என்பதால் (பெண்களுக்கு)😂
  22. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
  23. போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் ஆரம்பத்தில் 70 புள்ளிகள் வழங்கப்படும்! அதிகபட்ச புள்ளிகள் 148 வீரர்களின் பெயர்களை ஆங்கிலத்திலும், அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 26 மே 2024 அன்று சென்னையில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  24. செர்னோபில் அணு உலை விபத்து சகல வழிகளிலும் தனித்துவமானது. உலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டது, யுரேனிய குச்சிகளை மூடி மேலே இருந்த கொங்கிரீட் சிம்னி தூளாகியது. ஓர் வால்வு சரியாக வேலை செய்யாமையால் ஏற்பட்டது. இதோ போன்ற ஒரு நிலை 1979 இல் பென்சில்வேனியாவின் 3-Mile Island என்ற இடத்தில் இருந்த அமெரிக்க அணு உலையிலும் ஏற்பட இருந்து, சரியான தொழில் நுட்ப வழிகாட்டல் இருந்தமையால் பேரனர்த்தம் தவிர்க்கப் பட்டது. பகிடி என்னவென்றால், செர்னோபில் அணு உலை வெடித்து மத்திய ஐரோப்பா வரை காற்றில் கதிர் வீச்சு மூலகங்கள் அதிகரித்ததை ஏனைய நாடுகள் கண்டு கொண்டன. சோவியத் அரசோ, தொழிலாளர் தின பேரணியை செர்னோபிலில் மக்களை வைத்து கட்டாயமாக நடத்தி முடித்த பின்னர் தான் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
  25. பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும் அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால், ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன். நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது.
  26. 🤣...... முதலில் வீட்டிற்குள்ளேயே சுரங்கம் வெட்டினார். பின்னர் குழாய் மூலம் அனுப்பினார். அடுத்தது என்னவென்று அறிய ஆவலாக இருக்கின்றது.........😀 கிரியேட்டிவிட்டி, கிரியேட்டிவிட்டி என்று வேலை இடத்தில் அடிக்கடி சொல்வார்கள். அதாவது எங்களுக்கு கிரியேட்டிவிட்டி வேணுமாம். இந்த நபருக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்குது...😀
  27. கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக அவ்வூர் மக்கள் அதன் ஆபத்து கருதியே அவ்வளவு போராடினார்கள். உதயகுமார் என்னும் ஒரு பேராசிரியர் என்று ஞாபகம். அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் இருந்தார். அவர் தமிழ்நாடு திரும்பி, இந்தப் போராட்டத்தில் முன்னால் நின்றார். அந்த அணு உலையில் விபத்து ஏதும் ஏற்பட்டால், இலங்கையின் கடற்கரை பக்கம் கூட பாதிக்கப்படும். ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தின் தாக்கம், 38 வருடங்களின் பின், இன்றும் வீரியம் குறையாமலேயே இருக்கின்றது. ரஷ்யா - உக்ரேன் போரிலும் அந்த இடத்தை தொடாமல் விட்டே வைத்திருக்கின்றார்கள். அங்கிருக்கும் சில விலங்குகள் மிக அதிகமான கதிர் வீச்சுக்கு எப்படி இயல்பாகி வாழ்கின்றன என்ற விவரணம் இங்கு போன வாரம் ஒரு தொலைக்காட்சியில் போனது. கூடங்குளத்திலும் ரஷ்யாவின் இதே தொழில்நுட்பமே என்று சொன்னார்கள். சூரிய ஒளி மின்கலங்கள் இங்கு இப்பொழுது கூரை ஓடுகளின் வடிவிலும் வந்துவிட்டன. என் அயலவர் ஒருவர் அதைப் போட்டிருக்கின்றார். இங்கு இந்த வருடம் சரியான மழை. சூரிய மின்கல ஓடுகள் போட்ட பின், அவரின் வீட்டில் மழை நீர் ஒழுகத் தொடங்கி, இப்பொழுது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவில் இருந்து திரும்பவும் நல்ல மழை.........😌
  28. இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. அதற்கு அடுத்து திருமாவளவன். அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்?
  29. நல்லவேளை தேர்தலில் நிண்டதே வெற்றிதான் என சொல்லவில்லை🤣. தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சீட் அளவை வைத்துத்தான். இல்லாவிடில் காந்தி, பெரியார், கிங், தலைவர் போல தேர்தலுக்கு அப்பால் பட்ட இயக்கம் நடத்த வேண்டும். ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து. இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான். இப்படி பேச்சாற்றலை நம்பி அமிர்தலிங்கம் பின்னால் போன நீங்கள் ஊர் நாசமாக ஜேர்மனிக்கு ஓடி தப்பி விட்டீர்கள். தலைவர்களை சரியாக தேர்ந்த தமிழ்நாட்டு மக்கள், திக்கு வாய் தலைவர்களை வைத்துக்கொண்டே, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரெண்டாவதாக எழும்பி நிற்கிறார்கள்.
  30. 30 MAR, 2024 | 11:55 AM யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று சனிக்கிழமை (30) யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி ஆரம்பமானது . இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். குறித்த ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி மகாத்மா காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியுடாக வந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வந்து நிறைவடைந்தது. https://www.virakesari.lk/article/180013
  31. இது ஒரு பிழையான. கருத்து,....வங்களா முதல்வர் சொன்னது உண்மை தான் ...படைகள் அனுப்பப்பட்டதுக்கு காரணம் அது இல்லை ..இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பி தான் போரிட்டது இந்தியா மத்திய அரசு விரும்பவில்லை என்றால் போர் நடந்து இருக்காது பங்களாதேஷ் மக்கள் சுதந்திரத்துக்காகப் போரை இந்தியா செய்யவில்லை இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தியா போரிட்டது ஆனால் சொல்லப்பட்டது பங்களாதேஷ்க்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது இந்தியா என்று சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா உடன் போரிட்டுயுள்ளன. இந்தியா பகுதிகளை கைப்பற்றி தங்களது நிலம்,.. பகுதி.என உரிமை கொண்டாடுகின்றன. எனவே… சீனா பாகிஸ்தான்,..நாடுகளை பலவீனமாக்க இந்தியா உதவும் ...அது இந்தியாக்கு பாதுகாப்பு ஆகும் பங்களாதேஷ் உருவாக்கியது இந்தியாவின் பாதுகாப்பு உறுதி படுத்துவதற்காக மாறாக வங்களா முதல்வர் விரும்பி இல்லை இந்தியா மாநிலங்கள் பக்கத்து மாநிலத்துக்குக்கே தங்களுடைய பாதுகாப்பு படைய,.பொலிஸ்காரர்களை அனுப்ப முடியாது ....எப்படி மற்ற நாட்டுக்கு அனுப்பலாம் பழ நெடுமாறன். பல தடவையாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது கூட்டத்துடன். போக முயற்சிகள் செய்தவர்கள் தமிழ்நாடு பொலிஸார் மறித்து விட்டார்கள் .....இல்லையென்றால் தமிழ்நாடு அரசு கலைக்கப்படும். இந்த செயலை இந்தியா விரும்புவதில்லை கருணாநிதி பதவியில் இருக்கும் போது புலிகளுடன். நல்ல உறவை போணினார். அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது காரணம் இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பவில்லை இலங்கை இந்தியா உடன் ஒருபோதும் போர் நடத்தவில்லை நடத்தவும் மாட்டாது இந்தியா பகுதிகளையும் கைப்பற்றாது ஆகவே இந்தியா இலங்கையுடன் போரிடாது தேவையில்லை இந்திராகாந்தி தமிழ் ஈழம் அமைக்க உதவப்போவதில்லை அனுமதிக்க முடியாது என்று இலங்கைக்கும் தமிழ் தலைவர்களுக்கும். சொல்லி விட்டார் இதோ நிலைப்பாடு தான் ராஜிவ் உம். இந்தியா படைகள் இலங்கைக்கு வந்தது நாட்டை பிரிந்து தமிழ் ஈழம் அமைக்க இல்லை அமைதியை நிலைநாட்டி .. போரை நிறுத்தி ஆயுதங்களை களைந்து ஒரு தீர்வை அமுல் படுத்துவதற்காக
  32. உற‌வே ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சியை பிடித்த‌ திராவிட‌ம் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ஹிந்தி ந‌ல்லா க‌தைக்கும் ந‌ப‌ர் இருக்கிறார்............திராவிட‌ம் தான் த‌மிழை அழிக்குது ஸ்டாலின் ஜ‌யாவுக்கும் அவ‌ரின் ம‌க‌னுக்கும் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் த‌மிழ் வாசிக்க‌ தெரியாது இந்த‌க் கூட்ட‌ம் தான் மொழி போர் செய்து நாட்டை நாச‌ம் ஆக்கின‌வ‌ர்க‌ள் இவைக்கு என்ன‌ சொல்ல‌ போறீங்க‌ள் உற‌வே..............சீமான் ஆட்சிக்கு வ‌ந்து சொன்ன‌தை செய்யாட்டி விம‌ர்சிக்க‌லாம் ஆனால் இப்ப‌ ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒழுங்காய் த‌மிழை வாசிக்க‌ சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு சீமானை விம‌ர்சிப்போம் எல்லாரும் சேர்ந்து ஓக்கே😍🥰........................
  33. எனது உறவினர் இந்தியாவில் உள்ளார், இலங்கையிலும் இவ்வாறு குப்பைகளை மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பதாலால் குறிப்பிட்டேன்.
  34. சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ஊர் உல‌க‌த்துக்கு தெரியும் இது நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதி..............ஊர் பேர் தெரியாத‌ ஒரு க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் வாக்கு போட்ட‌ சின்ன‌த்தை வேறு ஒரு க‌ட்சிக்கு ம‌றைமுக‌மாய் திட்ட‌ம் போட்டு கொடுத்த‌ சின்ன‌ம் விவ‌சாயி இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம்..............விடுத‌லை சிறுத்தை க‌ட்சி ஓட்டை த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்குவ‌துக்கு வீஜேப்பி போட்ட‌ திட்ட‌ம் அதுக்கு தேர்த‌ல் ஆனைய‌ம் உட‌ந்தை.............வ‌ட‌ நாட்டில் இதை விட‌ மோச‌ம்...............இது உண்மையில் தேர்த‌லா தேர்த‌ல் என்ற‌ பெய‌ரில் ந‌ட‌த்தும் கேலி கூத்தா.....................
  35. ஓஹோ.....வெண்ணிலாவே எந்நாளும் வெண்ணிலாவே........! 😍
  36. அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள் போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள் அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது 'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள் கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார் அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர் தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  37. அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன?
  38. முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  39. அதிர்ஷ்ட லாபச் சீட்டு ----------------------------------- மீண்டும் ஒரு பில்லியன் டாலர்கள் இன்று இங்கு ஒரு அதிர்ஷ்ட லாபச் சீட்டிற்கு கிடைத்திருக்கின்றது. மெகா மில்லியன் மற்றும் பவர் லொட்டோ என்னும் இரண்டு பெரிய குலுக்கல்கள் வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ தடவைகள் இங்கு நடக்கும். அதை விட பல மாநிலங்களின் விதவிதமான சீட்டுகளும், குலுக்கல்களும். மொத்தத்தில் இங்கு இவை ஆயிரக் கணக்கில் வரும் என்று நினைக்கின்றேன். எல்லாம் குலுக்கல்கள் என்றில்லை, பல சுரண்டும் வகையையும் சேர்ந்தவை. மெகா மற்றும் பவர் குலுக்கல்கள் பரிசு சில மில்லியன்கள் என்று ஆரம்பித்து, எவருக்கும் பெரும் பரிசு விழாமல், ஆயிரம் மில்லியன்களையும் (ஒரு பில்லியன்) தாண்டிப் போவன. ஒரு சீட்டின் விலை ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் (மட்டுமே....). வேலையில், நண்பர்கள் வட்டத்தில், விளையாட்டுக் குழுமங்களில் என்று குழுக்களாக சேர்ந்து இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுகளை வாங்குவார்கள். முக்கியமாக பெரும் பரிசு பில்லியன் டாலர்களை அணுகும் போது, எல்லோரும் 'போனால் மயிர், வந்தால் மலை....' என்று ஓரணியில் திரள்வார்கள். அப்படியே குழுக்களாக வாங்கிக் கொண்டு, தனித்தனியாகவும் வாங்கிக் கொள்வார்கள். குழுக்களில் அதிர்ஷ்டம் கெட்டவர் யாராவது இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் முற்காப்பு யோசனை போல. நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை. ஏனென்ற காரணம் கடைசியில் இருக்கின்றது. குழுக்களுடன் சேராமல், சீட்டு வாங்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். வேலையில் இருக்கும் குழு சொல்லும் பரிசு விழுந்தால் அவர்கள் எல்லோரும் இந்த வேலையை விட்டுவிட்டுப் போய் விடுவார்களாம். நான் தனியே வேலை செய்ய வேண்டி வருமாம். நண்பர்கள் குழு சொல்லும் நான் இப்படியே இருக்க அவர்கள் மட்டும் பல மில்லியன்களுக்கு அதிபதிகள் ஆவது அவர்களுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று. விளையாட்டுக் குழுக்கள் அவர்கள் வென்றால் நாங்கள் வழமையாக ஆடும் மைதானங்களுக்கு அதன் பிறகு வரவே மாட்டார்களாம். என் அதிர்ஷடமோ என்னவோ, இவர்களில் ஒருவருக்கு கூட இன்னமும் சொல்லும் படியாக ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பரிசு விழுவதற்கான நிகழ்தகவு நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைவு என்று கலைமாமணி, முதுமாமணி, பெருமாமணி என்று எவருக்கு நான் சொல்ல ஆரம்பித்தாலும், 'ஆனாலும் யாருக்கோ பரிசு விழுகிறது தானே....' என்ற ஒற்றையடி மட்டையடியாக என் மேல் விழுகின்றது. படிப்பும், வாழ்க்கையும் ரயில் தண்டவாளங்கள் போல, ஒன்று இன்னொன்றுடன் இணையவே மாட்டாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் போல. இந்தப் பரிசு விழுவதை விட, மின்னல் தாக்கி இறப்பதற்கு பதினைந்து மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. இந்தப் பரிசு விழுகுதோ இல்லையோ, உலகில் மின்னல் தாக்கி தினமும் பலர் போய்க் கொண்டிருக்கின்றார்கள். மின்னல் தங்களை தாக்கவே மாட்டாது என்று நினைப்பவர்கள், பெரும் பரிசு மட்டும் தங்களுக்கு விழும் என்று நம்புவது கொஞ்சம் வேடிக்கையானதுதான். எது என்னவோ, சீட்டு எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு பரிசு விழும் என்று நம்பியே எடுக்கின்றனர். சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன். பிற் குறிப்பு: 1. இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகள் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும். 2. பல நிகழ்விற்கான நிகழ்தகவுகள் கீழே இருக்கின்றது. பெரும் பரிசு விழ முன், ஒரு தேனீ குத்தி போய்ச் சேருவதற்கு ஐம்பது மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது: Winning Mega Millions: 302,575,350 to 1 Winning Powerball: 292,201,338 to 1 Being eaten by a shark: 264 million to 1 Being struck by lightning twice: 19 million to 1 Becoming U.S. president: 32.6 million to 1 Dying in a plane crash: 11 million to 1 Being hit by debris from a plane: 10 million to 1 Being killed by a bee sting: 6.5 million to 1 Being attacked by a shark: 5 million to 1 Being attacked by a grizzly bear: 2.7 million to 1 Becoming a movie star: 1.5 million to 1 Being struck by lightning: 960,000 to 1 Winning an Olympic medal: 662,000 to 1 Hitting a hole-in-one in golf: 12,500 to 1 Winning an Oscar: 11,500 to 1 Bowling a perfect 300 game: 11,500 to 1 Being injured by a toilet: 10,000 to 1
  40. தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
  41. கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......! 👍
  42. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
  43. எண்ணமே ஏன் உன்னால… உள்ள புகுந்தது தன்னால… கண்ணமே என் கண்ணால… வெந்து செவந்து புண்ணாக…
  44. ஈழத்துக் கலைஞர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.