Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்16Points19134Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்13Points34974Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46793Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/08/24 in Posts
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.4 points
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
டாக்டர் கார்த்திகேயன் MBBS டாக்டர் தான், ஆனால் பூண்டு மருத்துவம் பற்றிய அவரது கருத்துக்கள் மனிதர்களில் நிகழ்த்தப் பட்ட ஆய்வு ஆதாரங்கள் அற்றவை. Cochrane library என்ற ஒரு தளம் இருக்கிறது. இது வரை பூண்டின் ஆரோக்கிய குணங்கள் பற்றி செய்த ஆய்வுகளை மீள ஆய்ந்து (systemic review) தந்த முடிவுகள் கீழே இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் கண்டு பயனடைக: https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD007653.pub2/full (இதய நலன் - ஆதாரம் இல்லை) https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD006206.pub3/full (சளிக் காய்ச்சல் - ஆதாரம் இல்லை) எனவே, யூ ரியூப் வியாபாரத்திற்காக நிஜ டாக்டர் வந்து நீங்கள் கேட்க விரும்புவதைச் சொன்னாலும் நம்ப வேண்டிய அவசியமில்லை, நீங்களே தேடிப் பார்க்கலாம், தரவு சரி பார்க்கலாம்!3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி சகோ அந்த வீடியோவை முதலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு மரியாதையுடன் தங்கச்சி தலைவர் மற்றும் ஈழம் பற்றி பைசுவதை தவிருங்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவா என்னடா பெரிய கொம்பா என்ன எனக்கு அப்படி இப்படி என்று வம்பை ஆரம்பிக்கிறார். அப்பொழுதும் அந்த உங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர் படத்தை எடுத்து விடு தங்கச்சி என்று தான் சொல்கிறார்கள். இங்கே மரியாதை கௌரவம் பண்புகள் பற்றி பேசுபவர்களுக்கு தெரியாது இவாவின் இந்த அடாவடித்தனத்தை இன்று கேட்காமல் விட்டால் ல சப்பலில் இனி எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூருவதற்கு ஏன் மாவீரர் நாளுக்கே அக்காவின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டி வரும் என்பது.3 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஏற்கனவே பத்துப் பக்கம் வந்து விட்டது. இனி வருவதெல்லாம் போனஸ். 👍2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
வணக்கம் நொச்சி, இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார்.2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்? சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம்.2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ, 1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை 2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும். 3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள். 4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும். 5. பயங்கரவாதிகள் என்கிற நாமம். 6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது நல்லதே. அங்கே இவற்றிற்கான விடை கிடைக்கும். போன வருடம் என்று நினைக்கிறேன். பிரெஞ்சு ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பிரெஞ்சு மக்களும் ஊடகங்களும் அதற்கு கொடுத்த பெயர். இது அவருக்கான பிரெஞ்சு மக்களின் அறை என்று. எனவே பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியையே அடிக்க முடியும். ஆனால் ஏன் எதற்கு நேரம் சந்தர்ப்பம் என்று இருக்கிறது.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன். சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......! 😂 (விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு.2 points- "அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை"
2 points"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை" ["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.] பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ, பின் ஒன்று சேர்ந்து விளையாட. சித்திரைப் புதுவருட தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும். கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும், இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub] கள் நண்பர்களை சந்திக்க உதவுவது போல அது தொடர்ந்து இருந்தது. எம்மை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது ."நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை இது நினைவூட்டும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை . "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது. நாம் சிறுவராக இருந்த போது அங்கு நாம் விளையாடுவது உண்டு. 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல, நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட. நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் - பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே! பொதுவாக யாழ்ப்பாண நகர்,யாழ் கோட்டை, சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown." எனவும் கூறலாம். இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது. யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள். கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி, நல்லூர், கந்தர்மடம், .. இப்படி வட்டாரம், இடக்குறிப்பையும் சேர்த்து கூறுவார்கள். இது ஒரு நல்ல பண்பாடு. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம். பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது.இன்னல், துன்பம் வரும் போது,யாழ்ப்பான மக்கள்,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் . "யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை,பல்கலைக்கழக மாணவன். யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது' 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்ட தென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல திரிபு அடைந்து யாழ்ப்பாணம் [Yarlpaanam]- யாப்பாணம்- ஜப்பாணம்- ஜப்பணம் - ஜவ்வணம் [Jaffanam]- ஜவ்ண [Jaffna] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன். யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இருக்கும் மதகு, தெரு கம்பம் இவைதான் எங்களின் பாராளுமன்றம்! இதுவே எங்களின் வெள்ளை மாளிகை!! இறுதியாக, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய ஒரு பாடலை முடிவுரையாக இங்கு தருகிறேன். "சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும் பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப் படிமேல் வணங்கு பவர்க்கு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- "தாத்தாவும் பேரனும்"
2 points"தாத்தாவும் பேரனும்" குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள் என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒரே ஓய்வில்லாது இருக்கிறார்கள். ஆக பாட்டன் பாட்டி தான் பொதுவாக அவர்களுடன் பொழுது போக்கக் கூடியவர்களாக இருப்பதே ஆகும். இப்படியான சூழ்நிலையில் தான், நான் ஓய்வு பெற்றதும் என் மகள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைப்புவிட்டார். என் மகளின் வீடு லண்டனுக்கு வெளியே உள்ள, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் [Hertfordshire] என்ற ஊரில் உள்ள வெலின் கார்டன் சிட்டி [welwyn garden city] என்ற ஒரு சிறு கிராமம் ஒன்றில் இருந்தது. அங்கு தொண்ணுற்று ஐந்து வீதத்துக்கும் மேற்பட்டோர்கள் பிரித்தானியா வெள்ளை இனத்தவர்கள் ஆவார்கள். ஆகவே எனக்கு தொடக்கத்தில் நண்பர்கள் என ஒருவரும் சேரவில்லை. எனக்கு நண்பர்கள் என்றால் என் இரு பேரன்கள் மட்டுமே! ஒரு சனிக்கிழமை, சின்ன பேரன், அவருக்கு வயது சில மாதங்களே, தாயுடன் இருக்க, பெரிய பேரனுடன், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து போய், அதன் அருகில் உள்ள ஒரு குளத்திற்கு வந்தோம். அந்த குளத்தில் பல சிறுவர்கள் தொலைமுறைக் கட்டுப்பாட்டு மூலம் படகுககளை [remote-controlled boats] இயக்கி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். என் பேரனும் நாமும் அவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, அங்கு இருந்த வாங்கு ஒன்றில் நாம் இருவரும் அமர்ந்தோம். கொஞ்சநேரம் போக, பேரன் என்னிடம் தாத்தா வீட்டுக்கு போய் எமது விளையாட்டு படகை எடுத்து வருவமோ என்று கேட்டார். இனி நாம் வீடு போய் திரும்பி வர நேரம் போகும் என்பதாலும், நான் என்னுடன், பேரனுடன் பொழுது போக்க காகிதம், கத்தரிக்கோல் & வண்ண எழுதுகோல்கள் எடுத்துக்கொண்டு வந்ததால், ஒரு காகித படகு செய்து அதற்கு வண்ணம் பூசி, குளத்தில் விட்டு அவருக்கு ஒரு புது உற்சாகம் ஊட்ட எண்ணினேன். முதலில் அதை மறுத்து, இது உங்க ஊருக்குத்தான் சரி என்று பேரன் அடம்பிடித்தாலும், நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய, அதில் அவருக்கு ஒரு ஆர்வமே வந்துவிட்டது. நான் அந்த காகித ஓடத்தை மேலும் நன்கு அழகுபடுத்த அங்கு மரங்களில் இருந்து விழுந்த ஓர் இரு சுள்ளிகளையும் சில புல்லுகளையும் ஓர் இரு பூக்களையும் பொறுக்கி வரும்படி பேரனிடம் கூறினேன். அவனும் மிக மகிழ்வாக துள்ளி ஓடி எடுக்க தொடங்கினார். நானும் மு.கருணா நிதியின் 'மறக்க முடியுமா ?' பாடலை எனக்குள் முணுமுணுக்க தொடங்கினேன் 'காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்' அப்படி எம் படகு ஒருக்காவும் கவுலாது, அவன் என் பேரன், கட்டாயம் வெற்றி வீரனாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில், திடீரென ஒரே ஆரவாரத்தைக் கேட்டு திரும்பி பார்த்தேன், என் பேரனுடன், அங்கு விளையாடிக் கொண்டு இருந்த மற்ற வெள்ளை சிறுவர்களும் நான் செய்வதை பார்க்க கூட்டமாக தங்கள் மூத்தோர்களுடன் சுற்றி நின்றார்கள். எல்லோருக்கும் இது அதிசயமாகவும் உற்சாகமாகவும் இருந்தததை உணர்ந்தேன் நான் அவர்களுக்கு எப்படி செய்வது, அழகு படுத்துவது என்று விளங்கப் படுத்திக் கொண்டு, பேரன் கொண்டு வந்தவற்றை இணைத்து ஒரு செயல் விளக்மே [demonstration] செய்து காட்டினேன். எல்லோரும் கை தட்ட, பேரன் அந்த தொலை முறைக் கட்டுப் பாட்டு மூலம் இயங்கும் படகுகளுடன் ஓரளவு போட்டி போல் தண்ணீரில் விட்டார். முதலில் எம் காகித படகு கொஞ்சம் தத்தளித்தாலும், அங்கு வீசிய இளம் காற்று துணை சேர அது ஆடி ஆடி அழகாக குளத்தில் பயணிக்க தொடங்கியது. மேலும் கொஞ்ச நேரம் போக, மற்றவர்களின் மின்கலம் [battery], தம் தம் வலுவை இழக்க அவர்களின் விளையாட்டு படகுகள் ஓய்வுக்கு வந்துவிட்டன. ஆமாம் 'கொண்டாட்டம் போட்டு கொடிகளும் ஏற்றி படகை ஓட்டி மகிழ வைத்தது காலமும் போக நேரமும் வர வலு இழந்து சோகம் செய்தான்' என்றாகி விட்டது! சங்ககாலத்தில் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing), முன்படகு (canoeing] பாய்மர படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்ததாக அறிகிறோம். படகை அன்று புணை என்றும் அழைத்தனர். எம் காகித படைக்கும் காற்றால் இயங்கும் ஒரு பாய்மர படகு என்று சொல்லலாம். அது இயற்கை சக்தியில் இயங்குவதே. ஆகவே பேரனின் காகித படகு மட்டும் நிமிர்ந்து நின்று இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது!. இப்ப எல்லா சிறுவர்களின் கவனமும் பேரனின் படகில் மட்டுமே. பேரன் இப்ப பெரிய வீரன் போல [hero] புன்முறுவலுடன் அவர்களின் மத்தியில் நின்று துள்ளிக் கொண்டு நின்றான்!! 'கதைப்பதைக் கேட்க ஆட்களும் இல்லை நட்பு வழங்க யாருமே இல்லை' என்று இருந்த எனக்கு, அன்று முதல் பல நண்பர்களும் வளர தொடங்கின!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேலோட்டமாக பார்த்தால் இப்படி தான் எனக்கும் இருந்தது. ஆனால் இதன் அத்திவாரம் ஆரம்பம் தமிழர்களுக்கு, புலிகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கும் போது தொடங்கி விட்டது. ஆமாம் சிங்களத்திற்கு ஆக்கிரமிப்பு பைத்தியம், பௌத்த விகாரைகள் முளைப்பது மலச்சிக்கல், சிங்களம் தமிழர்கள் மேல் போடும் சட்டங்கள் மலம்....... இப்படியே சொல்லி சொல்லி விலகி ஓடலாம். ஆனால் எல்லோராலும் அது முடியாது அல்லவா ?? அப்படியான ஒரு சிலரால் தானே உலகம் மாற்றம் கண்டது. காணும்2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் I காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு படம் 1 - நுழைவு வாயில். 2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்). 3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட். 4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு. 5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).2 points- உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
1 point- ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
உள்ளதை சொல்ல வேணுமெண்டால் ஊரிலையெல்லாம் மருத்துவம் பாத்து முருக்கம் இலையோ இல்லை வேலியிலை படர்ந்த செடி கொடிகளையோ மக்கள் தேடித்தேடி சாப்பிடவில்லை. எல்லாம் அன்றைய வாழ்க்கை நிலையும்,பொருளாதார நிலையும் ஆகுமே தவிர வேறொரு காரணமுமில்லை. 😂 பத்து மரங்கள் வளர்க்க சொல்லுங்கள். 😎1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.1 point- "பாசம்"
1 point"பாசம்" எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை. ஏன் - பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவதுகேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும். அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது. பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "பாசத்தை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய பாசம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. திருமணத்துக்கு முன் இருந்த அவனின் போக்கு இப்ப மாறத் தொடங்கி, நாம் இதுவரை புரியாததை ஒவ்வொன்றாக அளந்து காட்ட தொடங்கியது. பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் அவசியமாகிறது. அதுமாட்டு அல்ல, தன்னலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. பாசம்கூட அதற்கு விதிவிலக்கல்ல!! ஆனால், பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும் அளவிற்கும் அதுபோகும் என்பது நாம் நினைக்கவே இல்லை. பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறைக்கும் என்பது உண்மைதான் ! தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான் நான் கடைசியாக அவனை பார்த்தேன். தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" இப்ப என்னை பாடையில் கிடத்திவிட்டார்கள். எனக்கு இன்று இறுதிச்சடங்காம். நான் தீயில் சங்கமிக்கும் பொழுது, நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது, மகனை ஒருமுறை பார்க்க தேடிப் பார்த்தேன். உறக்கம் துறந்த பாசங்களை கண்டேன். அவர்களுக்கிடையில் உரிமை காட்டிட வந்த மகனையும் கண்டேன்!! கடைசியாக என் மகனிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், என் பெயரை மறக்க வேண்டாம், என் பெயர் எம் அடையாளம், எங்கள் இருப்பு, இனத்தின் வாழ்வு!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ஒரு கிலோ விளாம்பழம்
1 point- ஒரு கிலோ விளாம்பழம்
1 point👍... இவர் 80 களில் தான் அங்கிருந்தார் என்று நினைக்கின்றேன். 🙏...... உங்களின் பெயரிலேயே காடு இருக்கின்றது. அந்த திரை விமர்சனத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நொச்சி இலையை அவித்து குளிப்பார்கள் ஏதோ ஒன்றிற்கு. சிறு வயதில் அதை தேடி போனதாக ஒரு ஞாபகம்...1 point- ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
ஓமண்ணை, முருங்கக்காய் கிலோ 800 போகுது. முதல் நாள் 2.5 கிலோ 1500 ரூபாவிற்கு விற்றது, இரண்டாவது 4.5 கிலோவில் அரை கிலோ கழித்து 4கிலோ 2400ரூபாவிற்கு விற்றது.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அதே...1 point- வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
பாவம் தரம் 2 படிக்கும் மாணவர் தானே இன்னும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் எவ்வளவு வயதுகளை அந்தப பிள்ளை கடந்து செல்ல வேண்டும்.பொறுமையாக கற்றுக் கொடுக்கும் பக்குமற்ற ஆசிரியர்கள் எதற்காக ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள்...😒1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1 point- மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
1 pointஎன் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்1 point- யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
இந்தமாதிரியான முதலீடுகள் தமிழ் பகுதியில் வரவேண்டும்.1 point- யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
வந்தது தினேஷ் “பாண்டியன்” என்ற வகையில் ஒரு அமைதி.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள். நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும். ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள். இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள். ஓம். நான் மேலே சொல்லி உள்ள விளக்கம்தான். கெத்துத்தான் தலைவா.1 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார். ஒரு குடுவையை எடுத்து கொண்டு கிளம்புங்கள்🤣.1 point- 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி தமிழ்த்திறன் 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்படியெதுவும் கண்ணியத்துடன் நடக்க வேண்டிய கட்டாயமில்லை. என்ன தான் குறைந்து விடும் கண்ணியத்தை இழந்தால்? அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கும், ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கும் கொடுத்த அதே முத்திரையைக் கொடுப்பர். கல்வி, வேலை, சமூகப் பதவிகளில் தமிழ் வழிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் இப்போதிருப்பதை விடக் குறையும். ஒரு தலை முறை கழித்து அந்த தமிழ் வழி வந்த பிள்ளைகள் ஏழைகளாக சமூகத்தின் ஓரங்களில் வாழ்ந்து விட்டுப் போவர். எனவே உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் குறையாது, நாம் இருவரும் புதைந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்😎!1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
கிட்டத்தட்ட 1950 முதல் இலங்கையில் இவ்வளவு இனக்கலவரங்கள், சிங்கள அத்துமீறல்கள்,அடாத்தான குடியேற்றங்கள், உரிமை பகிர்வில்லா வாழ்க்கை, புலம்பெயர்ந்த வாழ்க்கை,போர்காலத்தில் உள்ள பக்குவங்கள்,முள்ளிவாய்க்கால் அழிவு என பல அனுபவங்களை பார்த்த இனம் ஈழத்தமிழினம். இப்படியிருந்தும்......இதுவரை யாருமே நிரந்தர முடிவு சொல்லவுமில்லை. தீர்வு தரவுமில்லை. எனது கேள்வி என்னவென்றால்....? இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டுமா?1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உண்மை, இரண்டுதரப்பும் பிரபாகரனை அவமானப் படுத்தியிருக்கிறார்கள்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சம்பந்தப்பட்டவர்கள் அந்த பெண்ணை உணர்ச்சி மிகுதியால் தாக்கிவிட்டதாகவே தெரிகின்றது. ஆனால் பல காணொளிகளில் போரட்டங்களை கொச்சப்படுத்தி தூசனங்களால் அந்த பெண் பேசும் போது பல இடங்களில் அப்படி பேச வேண்டாம் என மன்றாட்டமாக கேட்டதையும் உன்னிப்பாக கவனித்தவர்கள் அவதானித்திருக்கலாம். அந்த சிறிய தாக்குதல் சரியென நினைப்பவர்களுக்கு அது சரியாகத்தான் இருக்கும். பிழையென நினைப்பவர்களுக்கு அது பிழையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் அரசியல் போராட்டத்திலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி இதுவரைகாலமும் புனிதர்களாக இருந்து எதை சாதித்தார்கள். உலக அரசியல் என்று பார்த்தால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டு கொடியைக்கூட ஆர்ப்பாட்டங்களில் எரித்து கேவலப்படுத்தியவர்கள் இல்லை என நினைக்கின்றேன். அந்தை காணொளிய வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம். ஈழத்தமிழர் வரலாற்றில் இப்படியான சம்பவங்கள் முன்னர் நடந்ததுண்டா?1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எதிரியை விட நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான். அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!1 point- உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் ஒருவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல், தொடர் இருமல், ஜலதோஷம்” என்றால் உடனே ஒரு மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டுக் கொண்டால் சரியாகிவிடும் என்று சொல்வோம். ஆனால் அதே நபர் “எனக்கு மனநிலை சரியில்லை” என்று கூறினால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்? உடல்நிலை சார்ந்த பிரச்னைகள், அவை உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட இயல்பாகக் கடந்து செல்லும் சமூகம், ஒருவருக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று சொன்னால் அவரை பல அடிகள் தள்ளியே வைக்கிறது. இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி என்னும் மருத்துவ இதழ் (Indian Journal of Psychiatry) மனநலப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 47% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என நம்புகின்றனர், மேலும் 60% பேர் மனநோயைத் தனிப்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மன அழுத்தம் (stress) அல்லது மனச்சோர்வு (Depression) போன்ற வார்த்தைகள் இப்போது பொதுவான வார்த்தைகளாக மாறிவிட்டன. ஆனால் அவற்றைத் தீவிர மனநலப் பிரச்னைகளாக யாரும் கருதுவதில்லை. பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சுற்றுலா சென்றால் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் அல்லது நல்ல பிரியாணி சாப்பிட்டால் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் மன அழுத்தம் சரியாகிவிடும் எனப் பலரும் மருத்துவர்களாக மாறி கருத்து கூறுகின்றனர். இதில் எந்தளவு உண்மையுள்ளது? உண்மையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்றால் என்ன? எப்போது ஒருவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்? மன அழுத்தம் (Stress) Vs மனச்சோர்வு (Depression) பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் (International Journal of Mental Health Systems) ஆய்வின்படி, 13-17 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 7.3% பேர் குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். “இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக் கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கத் திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். ஆனால் மனச்சோர்வு நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடியது,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “தூக்கமின்மை, எப்போதும் ஒரு சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், தனது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவது ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள். இவை ஒருவருக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவர் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சில பரிசோதனைகள் மூலம் ஒருவர் மனச்சோர்வின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்,” என்கிறார் ராஜலக்ஷ்மி. ‘மது, புகை, சுற்றுலா, மனச்சோர்வுக்கு தீர்வல்ல’ பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகமானோர் மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் ஒன்று என நினைக்கிறார்கள், ஆனால் நாள்பட்ட மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்றும், அத்தகைய மனச்சோர்வு உடையவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்றும் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பிரச்னைகள் குறித்து இருந்த விழிப்புணர்வைவிட இப்போது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வும் புரிதலும் இருக்கிறது. ஏனென்றால் மனச்சோர்வு என்ற வார்த்தையை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல பலரும் தயங்குகிறார்கள். ஏதோ பெரிய பிரச்னை வந்தால் மட்டும்தான் மருத்துவரிடம் செல்வது பலரின் வழக்கம், அதுவும் மனநலம் சார்ந்த பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம். அன்றாட வாழ்வில் மன அழுத்தம் அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இதற்கு ஒரு பிரியாணி சாப்பிட்டால், புகைப் பிடித்தால் அல்லது மது அருந்தினால் சரியாகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள். சிலர் தனியாக அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தீர்வுகள். சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதே மன அழுத்தம் நாளடைவில் மனச்சோர்வாக மாறும்போது, இந்த தற்காலிக தீர்வுகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அப்போதும் மருத்துவ உதவியை நாடாமல் இருப்பது மிகவும் ஆபத்து. எனவே எப்படி உடல்நலப் பிரச்னைகள் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோமோ, அது போல நாள்பட்ட மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. ‘மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்’ படக்குறிப்பு, உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “மன அழுத்தத்தை மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தொடர் மன அழுத்தத்தால் பல உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். செரிமானக் கோளாறுகள் முதல் இதய நோய், பக்கவாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. தொடர்ந்து பேசிய அவர், “மனச்சோர்வை எடுத்துக்கொண்டால், அது நேரடியாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் மனச்சோர்வு பிரச்னை உடையவர்கள் எப்போதும் ஒரு சோக உணர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எதிலும் ஆர்வமிருக்காது, உணவைக்கூட பெரிதாக விரும்பி உண்ண மாட்டார்கள், எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள். இது குற்ற உணர்விற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட இதற்குக் காரணம் நான்தான் எனப் பழி போட்டுக்கொள்வார்கள். இறுதியில் தற்கொலை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருநாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. பல நாட்கள் அவர்கள் மனச்சோர்வால் அவதிப்பட்டிருப்பார்கள். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் அல்லது சொல்ல யாரும் இல்லாமல், அந்த முடிவை எடுத்திருப்பார்கள். எனவே மன அழுத்தம், மனச்சோர்வு இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கான உதவியை நாட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மனநல மருத்துவரை அணுகுவதில் உள்ள தயக்கம். படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. “இப்போது பிரபலங்கள்கூட தங்களது மனநலப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பணம் இருந்தால் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு வராது என்பது பொய், யாருக்கு வேண்டுமானாலும் அது வரலாம். எனவே சமூகம் என்ன சொல்லும் எனத் தயங்காமல் மனநல சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது சாதாரண ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மத நம்பிக்கைகளும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர். “ஒருவருக்கு மனநலப் பிரச்னை என்றால் அவரை ஏதேனும் கோவிலுக்கோ அல்லது தர்காவுக்கோ அழைத்துச் செல்வது இன்னும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. கல்வி மற்றும் தொடர் விழிப்புணர்வு மூலமாகத்தான் இதை மாற்ற முடியும்.” யோகா, தியானம் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குப் பலரும் யோகா மற்றும் தியான முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து உளவியலாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டபோது, “யோகா மற்றும் தியானம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனச்சோர்விற்கு அது தீர்வா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை," என்கிறார். "முன்பு சொன்னது போல, இதுவும் ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும். இதுபோல மருத்துவ உதவியை நாடாமல், தற்காலிக தீர்வுகளையே நாடிக்கொண்டிருந்தால் அது மனச்சோர்வை தீவிரமாக்கும்." நாள்பட்ட மனச்சோர்வு இருப்பவர்கள், மனநல மருத்துவரை அணுகவில்லை என்றால் தங்கள் இயல்பான குணத்தை நிரந்தரமாக இழந்து விடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார். "ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் எழுவதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இத்தகைய தற்காலிக தீர்வுகள் உதவாது எனப் புரிந்துகொண்டு அவர்கள் தவறான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள்,” என எச்சரிக்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. மனநல சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநல சிகிச்சை என்றால் அதற்கு அதிகம் செலவாகும் அல்லது மேல்தட்டு மக்களுக்கான ஒன்று என்ற பிம்பம் உள்ளது. ஆனால், மாவட்ட மனநலத் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் தமிழக அரசு பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக இத்தகைய வசதிகளை தாலுகா வாரியாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா. அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவத்திற்கு எனத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது, மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “என்னைச் சுற்றி எதுவும் சரியில்லை, உலகமே என்னை மட்டும் ஏமாற்றுகிறது, எனக்கு எதிர்காலம் கிடையாது, இதெல்லாம் மனச் சோர்வு இருப்பவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்கள். இவ்வாறு இருப்பவர்கள் பல நல்ல வாய்ப்புகளை, மனிதர்களை வாழ்வில் இழந்து விடுவார்கள். நாம் நினைப்பதைவிடப் பல மோசமான விளைவுகள் மனநலப் பிரச்னைகளால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் நெருங்கியவர்களுக்கோ அத்தகைய பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள். அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைக் கண்டிப்பாக உணர்வீர்கள்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. https://www.bbc.com/tamil/articles/c4njn530j54o1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி ரஞ்சித் இணைப்பிற்கு, அந்த பெண்மணி செய்ததை விட அவரை தாக்கியவர்கள்தான் மாவிரர்களையும், விடுதலை போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
👍.... உண்மையில் அவர் ஒரு அற்புதம் தான். நான் அவருக்கு இன்ஸ்ரக்டராக இருந்திருக்கின்றேன். எதையும் விளங்கிச் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார். பொதுவாக பலர் முந்தைய வருடங்களில் இருந்து பிரதி எடுத்து வேலையை முடித்து விட்டு போய் விடுவார்கள்.....😀 மேலே படித்து முடித்து விட்டு நாட்டிற்கு திரும்பிப் போன வெகு சிலர்களில் அவரும் ஒருவர்...🙏1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice.1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இனவாத சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதை நாகரீகமாக எழுதுவது என்று எப்போதில் இருந்து மாற்றம் பெற்றது ?1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.