Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்19Points19134Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்19Points46791Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8907Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/10/24 in all areas
-
ஆமையும் தமிழனும்....
10 pointsஇவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.10 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச ஊடகங்கள் எல்லாம் நூறு வீதம் உண்மையை சொல்லிக்கொண்டுதானே திரியுது?5 points
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
3 pointsசூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)3 points
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
3 points"மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே.3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவரை பற்றியும் அவரது போராளிகள் பற்றியும் எதிரியான சிங்கள ராணுவ தளபதியே மிக சிறந்த சான்றிதழை கொடுத்துவிட்டார் . இதட்கு மேலே என்ன வேண்டும். இந்த மாதிரியான ஈனமானவர்களை அடிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது.3 points
-
குரு தட்சணை
3 points(குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூலி. ஒரு ஏழு வயதுப் பையனிடம் ஏது காசு? ஆனாலும் ஏதோ ஒரு வழியில் அவன் அந்தக் காசை அடிக்கடி சேர்த்து விடுவான். இங்கு வேறு எவரும் அவனின் அம்மாச்சிக்கு சுருட்டோ அல்லது பணிஸோ வாங்கிக் கொடுப்பது இல்லை. அம்மாச்சியின் கதைகளை வேறு எவரும் கேட்பதும் இல்லை. ஆனால் சுடு சோறும், சிவப்பு மீன் குழம்புக்கும் அடுத்த படியாக அம்மாச்சி சொல்லும் கதைகளே அவனுக்கு இந்த உலகத்தின் உன்னதங்களாக இருந்தன. அவனின் அம்மாவும், அம்மாச்சியும் அவ்வளவாக கதைப்பது இல்லை. வெளியில் கொட்டும் மழையின் நடுவில், அம்மாச்சியின் அனுமார் இலங்கையை எரித்துக் கொண்டிருந்தார். அசோகவனம் தவிர்ந்து இலங்காபுரி முழுவதும் அனுமாரின் வால் நீண்டு, அது நீண்டு தொடும் இடம் எல்லாம் பற்றி எரிந்தது. இலங்காபுரியில் பச்சை வாழைகள் எங்களூர் சிவன் கோவிலில் வருடம் ஒரு தடவை எரிக்கப்படும் சொக்கப்பனை போல் கொழுந்து விட்டு எரிந்தன. பெரும் தீயிலிருந்து பறக்கும் சாம்பல்கள் வானத்தை மூடியது, கடல் நிறம் மாறியது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டே போனார். அவன் பயத்தில் அம்மாச்சியுடன் ஒட்டி, மெதுவாக அவரின் சேலைத் தொங்கலுக்குள் போய்க் கொண்டிருந்தான். அம்மாச்சிக்கு ஆயிரம் கதைகள் தெரியும். சில கதைகளை உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சொல்வார். பருத்தித்துறை சந்தையில் தான் வியாபாரம் செய்ததாக அம்மாச்சி சொல்லியிருக்கின்றார். பல நாட்களில் அவரின் வியாபாரம் முடிய இருட்டி விடும். சிலர் ஒன்றாகச் சேர்ந்து பருத்தித்துறையிலிருந்து எங்களூரிற்கு அந்த இருட்டில் நடந்தே வருவார்களாம். வழியில் சில சுடலைகளை தாண்டியே அவர்கள் வரவேண்டும். ஒரு தடவை, முழு அமாவாசை, அம்மாச்சியும் மற்றவர்களும் நடந்து ஊர் எல்லை வரை வந்து விட்டனர். அம்மாச்சி எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று, 'சுந்தரி, சுருட்டுக்கு நெருப்பு இருக்குதா?' என்று அவரின் பின்னால் இருந்து ஒரு குரல். அம்மாச்சி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே ஒரு உருவம். அதன் ஒரு கை நீண்டிருக்கின்றது. நீண்டிருக்கும் கை முழுவதும் நெருப்பு சுவாலைகளாக எரிகின்றது. அதன் முகம் முழுவதும் எரிகின்றது. அம்மாச்சி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். பின்னர் பல ஆங்கிலப் படங்கள், தமிழ்ப் படங்களில் இப்படியான காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். ஆனால், இவர்களுக்கு எத்தனையோ வருடங்களிற்கு முன்னேயே அவனின் அம்மாச்சி இந்தக் காட்சியை, ஒரு அழுக்கு சேலையையே எப்போதும் கட்டிக் கொண்டு, தன்னந்தனி ஆளாக, உருவாக்கி இருந்தார். அம்மாச்சி என்ன படித்தார் என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அம்மாச்சி படிக்கவேயில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் போனதில்லை என்று அவனின் மாமா சொல்லுவார். அம்மாச்சிக்கு பல பிள்ளைகள் பிறந்தாலும், உயிர் தப்பி இருப்பவர்கள் அம்மாவும், அம்மாவின் தம்பியான மாமாவும் மட்டுமே. அம்மாச்சி எதையும் வாசித்தும் அவன் பார்த்ததில்லை. ஆனால், அம்மாச்சி தான் பள்ளிக்கூடம் போனதாகவும், முதலாம் வகுப்பு முடித்ததாகவும் சொல்வார். அம்மாச்சியின் மகாபாரதத்தில், 'அம்மா, கனி ஒன்று கொண்டு வந்திருக்கின்றோம்...' என்று பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியிடம் சொல்கின்றனர். 'ஐவரும் அதை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்..' என்று குந்திதேவி உள்ளிருந்து பதிலுரைக்கின்றார். தாயின் சொல்லை மீற முடியாததால், அவ்வாறே பாஞ்சாலி ஐவரினதும் மனைவி ஆகின்றார் என்று அம்மாச்சி தன் காவியத்தில் ஒரு நியாயம் சொன்னார். பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், கூனன் கதைகள் என்று அம்மாச்சியின் உலகம் பெரியது. அம்மாச்சி சொன்ன சில கதைகளை பின்னர் அவன் எங்கும் பார்த்ததே இல்லை. அம்மாச்சிக்கு அவரின் அம்மாச்சி சொல்லியிருப்பார் போல. அம்மா ஒரு கதையும் சொல்லவில்லை, அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை. சில காலத்தின் பின், அம்மாச்சி அவனின் மாமா வீட்டிற்கு போய் விட்டார். இனிமேல் மாமாவுடனேயே அம்மாச்சி இருக்கப் போகின்றார் என்று அவனின் அம்மா சொன்னார். மாமா பக்கத்து ஊரில் இருந்தார். மாமா எப்போதாவது அவனின் வீட்டிற்கு வருவார். அவன் மாமாவின் வீட்டிற்கு போவது மிக அரிது. மாமாவிற்கும் பல பிள்ளைகள். ஒரு வருடம் ஓடினது. அம்மாச்சிக்கு உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. ஒரு நாள் அம்மா அம்மாச்சியை பார்க்க அவனின் மாமா வீட்டிற்கு போனார். ஒருவாறு இவனும் அம்மாவுடன் சேர்ந்து மாமா வீட்டிற்கு போனான். அம்மாச்சி படுத்திருந்தார். கண் மூடி இருந்தது. மெல்லிய அணுங்கல்கள் அம்மாச்சியிடம் இருந்து வந்து கொண்டிருந்தன. 'அம்மாச்சி, நான் வந்திருக்கின்றேன்' என்றான். அம்மாச்சி கண்ணைத் திறந்து, மெதுவாக எழும்ப முயன்றார். இவன் பின்பக்கமாக கைகளில் மறைத்து வைத்திருந்த சுருட்டையும், பணிஸையும் அம்மாச்சியின் முன் நீட்டினான். அப்படியே எழும்பின அவனின் அம்மாச்சி அதை கையில் வாங்கிக் கொண்டே, இங்கு எவரும் அவரிடம் கதை கேட்பதில்லை என்றார். சுருட்டும், பணிஸும் கூட ஒருவரும் வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொன்னார். 'இரு, நான் உனக்கு ஒரு கதை சொல்கின்றேன்.' 'இல்லை அம்மாச்சி, கதை ஒன்றும் வேண்டாம்' என்றான் அவன்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் IV கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது. ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣. 👆🏼துறைமுக நகர் நுழைவுவாயில் அருகே. உள்நுழையும் போது👆🏼 👆🏼து.மு.ந வில் இருந்து கொழும்பு ஆகாய-கோடு (skyline). 👆🏼பாலம், நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை 👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.3 points- தேனும் விஷமும்
2 pointsதேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச அபிப்பிராயம் 2009க்கு பின்னர் எதை என்னத்தை ஈழத்தமிழர் விடயத்தில் கீறி கிழித்தத்து?2 points- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/australia-women-under-19s-vs-england-women-under-19s-2nd-match-1427799/full-scorecard2 points- தேனும் விஷமும்
2 pointsநன்றி. உங்கள் எழுத்தும், சிந்தனையும் அபாரம். வேலைபளுவின் மத்தியிலும் சுண்டி இழுக்கிறது. குவாலிட்டி மட்டும் அல்ல குவாண்டிட்யும் பிரமிக்க வைக்கிறது. ஒருமுறை @Justinஜெயமோகனை தமிழின் prolific writer என அழைத்தார். அதே போல் நீங்கள் யாழின் புரோலிபிக் எழுத்தாளர். எப்படி சச்சின் ரன் அடிப்பதை மட்டுமே குறியாக கொண்டு விளையாடுவாரோ அப்படி அற்புதமாக, அசுர வேகத்தில் எழுதுகிறீர்கள். இதே போல் எப்போதும் தொடரவும்🙏.2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பேசாலாம் பேசினால் மரத்தை வெட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கு எடுப்புக்கு விடுவார்கள் 🤣😀இலங்கை எதிர்க்கும் .....எங்கே புத்தரின் சிலைகள் வைப்பது என்று தெரியாமல் போய் விடும் குறிப்பு,...தலை. கவனம்2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்? சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம்.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.2 points- ஆமையும் தமிழனும்....
1 pointபர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம் தேசம் காப்போம்.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன். தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள். பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன. குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள். இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள். விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ?1 point- காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
https://www.virakesari.lk/article/180883 ரஸ்யாக்காரன் சொன்னானோ ,சீனா சொன்னானோ? Nicaragua ( Sandinistas) இவையின்ற ஆட்களும் புரட்சிகர படை வைத்திருந்தவையள் அல்லோ? நண்பேன்டா... கொள்கை .... எங்கன்ட சிவப்புகச்சை போராளிகளும் உவையளின்ட போராட்டத்தை பற்றி பாடங்கள் எடுத்து கொண்டு திரிஞ்சவையல் அல்லோ...79/80 களில் ... மீண்டும் உலகம் அமேரிக்கா எகாதிபத்தியம்...ரஸ்யா ,சீனா கம்னியுசம் என்ற பாதையில் செல்ல போகிறதா.. இந்த சைக்கிள் கப்பில இஸ்லாமிய தீவிரவாதம் தனது இலக்கை நோக்கி நகருகிறது போல...1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சுருக்கமாக நச்சென்று தலையில் ஒன்றரை டன் வெயிட்டில் குட்டு நன்றி ரஞ்சித் .1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது. தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா?1 point- கருத்து படங்கள்
1 point1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படத்தில் இருப்பதுதான் சிலோன் ஆலிவ் எனப்படும் வெரளு. பச்சை காய் அம்பரில்லா. முன்பு சிங்கள இடங்களில் பள்ளிக்கு வெளியால் வைத்து விற்பார்கள். எமது பகுதியில் இல்லை என நினைக்கிறேன். @பெருமாள் 👆🏼 பதில் உங்கள் கேள்விக்கு.1 point- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார் Published By: VISHNU 10 APR, 2024 | 08:09 PM (நெவில் அன்தனி) எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்ததை ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன் என வீரகேசரிக்கு 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி வீராங்கனை அமுருதா சுரேன்குமார் தெரிவித்தார். இலங்கையில் இன்னொரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தனது தந்தையிடம் கோரவுள்ளதாகவும் சகலதுறை வீராங்கனையான அமுருதா குறிப்பிட்டார். காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் மும்முனை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போதே அமு என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் அமுருதா தனது கருத்தை வெளியிட்டார். கேள்வி: தந்தை கிரிக்கெட் விளையாடியதால் நீங்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்களா? பதில் (அமுருதா): 'எனது பெற்றோர் இருவருமே கிரிக்கெட்டின்பால் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எனது தந்தை (சுரேன்குமார்) இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி இருந்தார். எனது தாயார் (லோஜினி) இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியதுடன் வலைபந்தாட்டத்திலும் ஈடுபட்டார். அவர்கள் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமுமே என்னை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது. 'நான் ஆறு வயதாக இருந்தபோது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சிறு பராயத்தில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தேன். எனக்கு 7 வயதானபோது நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்தேன். அங்குதான் எனது கிரிக்கெட் வளர்ச்சி அடையத் தொடங்கியது. படிப்படியாக எனது கிரிக்கெட் ஆற்றல் முன்னேற்றம் அடைந்தது. எனக்கு 16 வயதானபோது சன்ரைசர்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அணியில் விiளாயாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் மிட்ல்செக்ஸ் அணிக்காக பிராந்திய கிரிக்கெட் விளையாடியதுடன் இப்போது இசெக்ஸ் அணிக்காக விiளையாடுகிறேன். இவை அனைத்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததுடன், என்னிடம் இருந்த கிரிக்கெட் ஆர்வம், பேரார்வமாக மாறியது.' கேள்வி: 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடக் கிடைத்தைப் பற்றி என்ன கூற விரும்பகிறீர்கள்? பதில் : 'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையை வெளிப்படுத்தி வந்ததன் பலனாக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சிக் குழாத்தில் என்னை இணைத்துக் கொண்டனர். இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை முன்னிட்டே இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டது. அப்போது, இலங்கைக்கு பயணம் செய்து இங்கிலாந்து யுவதிகள் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயல்பாகவே புகுந்துகொண்டது. 'ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுடான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு விளையாடக் கிடைத்தது. அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏனேனில் எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக் கிடைத்ததை நான் ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். 'இங்கிலாந்திலிருந்து வருகை தந்த எனது பெற்றொரும் இளைய சகோதரிகளும் அந்தப் போட்டியை நேரடியாக கண்டு களித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள எமது உறவினர்கள் சிலரும் அந்தப் போட்டியைக் கண்டு களித்தனர். காலியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு எனது தந்தையின் சகாக்கள் சிலர் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன்.' கேள்வி: இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியதன் மூலம் என்ன அனுபவத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்? பதில்: 'இலங்கையில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் விளையாடக் கிடைத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கடும் உஷ்ணத்துக்கு மத்தியிலும் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் விளையாடுவது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் விளையாடியதன் மூலம் மறக்க முடியாத சிறந்த அனுவங்களை நானும் எனது சக வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டோம். போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எங்களது கிரிக்கெட் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகுகிறது. நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம் . இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை என்னால் மறக்க முடியாது.' கேள்வி: இலங்கையின் இளம் வீராங்கனைகளுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்? பதில்: 'இலங்கை யுவதிகளிடம் திறமை இருக்கிறது. மனதை தளரவிடாமல் விடா முயற்சியுடன் தொடர்ந்து விளையாடினால் உயரிய நிலையை அடைய முடியும். அவர்கள் ஒருநாள் அதனை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்.' கேள்வி: உங்களது எதிர்கால இலட்சியம் என்ன? பதில்: 'எல்லா இளையோரையும் போன்று இங்கிலாந்து தேசிய மகளிர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த இலக்கை அடைய நான் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். அத்துடன் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனது பெற்றோர், பயிற்றுநர் ஆகியோரின் ஆசியுடன் அந்த இலக்கை அடைந்தே தீருவேன்.' அமுருதாவின் தந்தை எஸ். சுரேன்குமார், வடக்கின் கிரிக்கெட் சமரில் துடுப்பாட்டத்துக்கான சாதனையை நிலைநாட்டியவராவார். 1990இல் நடைபெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பரி. யோவான் அணி சார்பாக சுரேன்குமார் குவித்த 145 ஓட்டங்களே வடக்கின் சமரில் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இன்றும் இருந்துவருகிறது. அமுருதாவின் இளைய சகோதரிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/1809361 point- ஆமையும் தமிழனும்....
1 pointஎல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால் இது👆 யாரும் நினைத்தே பார்க்க முடியாத படைப்பு, வாய்ப்பேயில்லை! வேற மட்டம்!😂1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் V சொர்கத்தின் சுவை, taste of paradise கெக்கிராவையில் ஒரு சிங்கள சாப்பாடு👆🏼. கொழும்பு புதுக்கடை தெருவோர “சவன்”. 👆🏼யாழ்பாணத்தில் தினேஷ் வெதுப்பகத்தில். 👆🏼ஏறாவூர் கடையில் பாலாண்டி. ————- 👇கொழும்பு வெள்ளவத்தை யாழ் உணவகம். பம்பலபிட்டியவில் மட்டு நகர் முறையில் பாடும்மீன் உணவகம். காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇. கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
என் அம்மா ******** என்று ஒருவர் அடித்தது உங்களுக்கு புலிகள் அடித்ததாக தெரிகிறது என்றால் எப்படியாவது புலிகள் மீது பழியை போட்டு விடத் துடிக்கும் வேண்டாப்பெண்டாட்டி கதை தானே தவிர வேறு எதுவும் இல்லை. ஆடு ஏன் நனைகின்றது என்ற நரியின் கவலை இங்கே எல்லோருக்கும் தெரியும்1 point- குரு தட்சணை
1 pointஇரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........! 😴 நன்றி ரசோதரன்........!1 point- தேனும் விஷமும்
1 pointநாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......! 😂1 point- பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!
ஆமா ...இப்பிடி கயிரிளுத்தால் நாடு அந்த மாதிரி இருக்குமா ? அதுசரி ஒங்களுட ன் முன்னம் நோம்புக்கஞ்சி ...சாப்பிட்டிருப்பாங்களே... நீங்க கயிறு இழுக்கலையா...அந்த டைம் நாடு எப்புடி இருக்குமின்னும் சொல்லு😃ங்க..1 point- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
உங்கள் வேண்டுகோளை மேலே உள்ள சுட்டியை அழுத்தி அதற்குள் வையுங்கள்.1 point- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
நானும் கிரகணம் வெளிய போக கூடாது என்று இவருடன் வீட்டுக்குள் இருந்தோம். மணி மூன்ரே கால் ஆகியதும் மழை இருட்டுபோல தொடங்கியது சற்று நேரத்தில் வீதி விளக்கெல்லாம் ஒளிரத்தொடங்கியது ஜன்னலால் எட்டிப்பார்க்க ஒருத்தி போன் மூலம் படம் எடுகிறர் ".உம்மையெல்லோ வெளியில பார்க்க வேண்டாம்" என்று சொன்னனான் என்று ஏச்சு வாங்கினேன். சிலநிமிடங்கள் செல்ல மீண்டும் லைட் அணைந்து வெளிச்சமாகியது.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎 ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது. எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஇதயம் பலவீனமானவர்கள் கர்பிணிப்பெண்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் .......! 😴1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இந்த ரெக்னிக்கை நானும் பாவிக்கவேணும். ஒருநாள் குளிக்காமல், தலையிழுக்காமல், ஷேவ் எடுக்காமல் விட்டால்கூட ஆடுஜீவிதம் பிரித்விராஜின் மூன்றாவது கோலத்தில் வந்துவிடலாம்😆1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வணக்கம் அண்ணை, பெரு மூச்செண்டு இல்லை ஆனா பெடியலின் மைண்ட் செட் விளங்குது இல்லை. நீங்க சொன்ன மாதிரி வள்ளத்தில போய் படம்பாத்திட்டு சாமான் ஏத்திக்கொண்டு வந்த ஆக்கள் இருக்கினம். இதை விட ஒருபடி மேலே போய் இக்கரையிலும் அக்கரையிலும் மனிசி பிள்ளைகள் என்று குடும்பம் நடத்தியவர்களும் இருந்தார்கள்1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை. நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய் மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எங்குதான் சிதறி ஓடினாலும் நாம் ஒருங்கிணையும் கோடு இதுதான் ....1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ, 1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை 2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும். 3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள். 4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும். 5. பயங்கரவாதிகள் என்கிற நாமம். 6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice.1 point- மழைப் பாடல்கள்
1 pointமழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்? காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.1 point - வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.