Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்15Points19134Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3061Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38770Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/11/24 in all areas
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.7 points
-
சிவப்புக்கல்
4 points(குறுங்கதை - அறிவியல் புனைவு) சிவப்புக்கல் -------------------- 'அம்மா.....' 'என்ன பிள்ளை.... போக வேணுமா?' அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 'ம்ம்.......' என்று இழுத்தான் அவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகியிருந்தது. அன்றைய இரவும் அவன் படுக்கையை ஈரமாக்கியிருந்தான். இதுவரை அவனின் அம்மா எதற்கும் சிறிதளவும் முகம் சுழித்தது இல்லை. ஒரே பிள்ளை, நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்தவன் என்று தங்கள் பிள்ளையை ஒரு தாம்பாளத்தில் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மாவும், அப்பாவும். அவனின் படுக்கையை ஈரமாக்கும் பழக்கம் பற்றி அம்மாவோ அல்லது அப்பாவோ உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது வேறொரு ஊரில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் அவனைக் கூட்டிச் சென்றனர். அந்த வைத்தியர் இது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை, இந்தப் பழக்கம் இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவாகவே நின்று விடும் என்று சொன்னார். இரவு நித்திரைக்கு போகும் முன் ஒரு தடவை கழிவறைக்கு போய் வருவது, இரவில் நேரம் பிந்தி எதையும் குடிப்பதை தவிர்ப்பது என்று சில ஆலோசனைகளையும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னார் அந்த மருத்துவர். மருந்துகளோ அல்லது வேறு சிகிச்சைகளோ வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் விட்டார். முக்கியமாக இந்த விடயம் அவன் மனதில் ஒரு குற்றமாக பதிந்து, அதனால் எதிர்காலத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேறு எதுவும் உளச் சிக்கல்களோ வருவது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற ஆலோசனையையும் சொல்லியிருந்தார். அம்மாவும், அப்பாவும் வேறு எவருடனும் இதைப் பற்றி கதைக்காமல் இருந்ததற்கு அயலூர் வைத்தியரின் இந்த அறிவுரையும் ஒரு காரணம். ஊரில் பலருக்கும், கிட்டத்தட்ட எல்லோருக்கும், ஏதோ ஒரு பட்டபெயர் இருந்தது. ஒருவர் இல்லாத நேரத்தில் அந்த நபரைப் பற்றிய கதை ஏதும் வந்தால், அவரின் பட்டப் பெயரை சொல்லிக் கதைப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். பல பட்டப் பெயர்கள் அந்தந்த ஆட்களின் உடலில் இருக்கும் குறைபாடுகளை குறிப்பன. இது பிழையென்று கருதும் அளவிற்கு இதை ஒரு பெரிய விடயமாக அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. வேறு சில பட்டப் பெயர்கள், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தவுடன், சிரிப்பை உண்டாக்கும். ஒருவரின் பட்டப் பெயர் - 11 மணி. அந்த நபர் இரவு 11 மணிக்கு இன்னும் ஒரு வீட்டின் கதவை அடிக்கடி தட்டினாராம், அதனால் அவரை '11 மணி' என்றே எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள். அவனின் பெற்றோர்கள் இப்படியான ஒரு பட்டப் பெயர் தங்களின் ஒரே மகனுக்கு வந்து விடக் கூடாது என்ற இன்னொரு காரணத்திற்காகவும் இந்த விடயம் பற்றி எவருடனும் கதைப்பதில்லை. ஆனாலும் அந்த வைத்தியர் சொன்னதிற்கு அடுத்த வருடமும், அவனின் ஒன்பது வயதில், அவனிடமிருந்து அந்தப் பழக்கம் போய் விடவில்லை. இன்னொரு ஊரில் ஒரு கோவில் இருக்கிறது என்றும், அங்கே போய் ஒரு நேர்த்திக் கடன் வைத்தால் நினைப்பது கிட்டும் என்றும் யாரோ வேறு ஏதோ ஒரு விடயத்தில் சொன்னதைக் கேட்டு, அவனின் அம்மாவும், அப்பாவும் அவனை அங்கு கூட்டிச் சென்றனர். அந்தக் கோவில் ஒரு பெரும் ஆலமரத்தின் உள்ளே இருந்தது. ஓங்கி அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் சில கிளைகள் பூமியை தொட்டும் தொடாமலும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளே கோவிலுக்குள் செல்லும் வாசல்கள். கோவில் என்பது தகரத்தால் கூரை போடப்பட்ட ஒரு சிறு மேடை மட்டுமே. மேடையின் நடுவில் கடும் சிவப்பு நிறத்திலான சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையின் தலை ஒரு பாம்பின் தலை போன்றும், உடல் பல கைகள் உடைய ஒரு மனித உடல் போன்றும் இருந்தது. அதை ஒரு பாம்பு தெய்வம் என்றே அங்கே உள்ளவர்கள் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கும்பிட்டு, சில தடவைகள் அந்தச் சிறு மேடையை சுற்றி வந்த பின், அங்கு பூசாரி போன்று இருந்த ஒருவர் அவனின் அம்மாவிடமும், அப்பாவிடமும் ஒரு சிவப்பு நிற துணித் துண்டைக் கொடுத்தார். அதை அவர்கள் ஆல மரத்தின் ஒரு சிறு கிளையில் சுற்றி, இறுக்கமான ஒரு முடிச்சு போட்டனர். பாம்புக் கோவிலில் நேர்த்தி வைத்து இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. சில நாட்களில் நடு இரவில் முழித்து எழுந்து அம்மாவை கூட்டிச் செல்லும் அவன், வேறு பல நாட்களில், இன்னும் அவனை அறியாமல், பழைய பழக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தான். சில காலை வேளைகளில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அம்மாவின் முகத்தில் வந்து போவதை அவன் பார்த்தான். தன்னாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவனுக்குள்ளும் இருந்தது. பின்னர், திடீரென சில நாட்களாக அவன் நடு இரவில் எழும்புவது இல்லை, அவனின் பழக்கமும் முற்றாக நின்று போனது. 'பிள்ளை, நீ இப்ப இரவில் எழும்புவதில்லை...' என்றார் அம்மா ஒரு நாள் காலையில். 'நீங்கள் அன்று கொடுத்த கல்லை நான் என்னுடனேயே வைச்சிருக்கிறன், அம்மா.' முகத்தில் திகைப்புடன், 'நான் எப்ப உனக்கு கல்லு கொடுத்தேன்...?' என்று அவனையே கூர்ந்து பார்த்தார் அவனின் அம்மா. 'அது தான், சரியாக இரண்டு கிழமைக்கு முன், இரவு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போனீர்கள். அன்று இரவு ஒரே வெளிச்சமாக இருந்தது. சந்திரன் எங்கட வீட்டிற்கு கொஞ்சம் கிட்ட வந்து பெரிதாக இருந்தது.' இரண்டு கிழமைக்கு முன் முழு அமாவாசை நாளே என்று அவனின் அம்மா திடுக்கிட்டார். 'அன்று கல்லை கொடுத்து நான் என்ன சொன்னேன், பிள்ளை?' 'இந்தக் கல்லை என்னுடன் வைத்திருக்கச் சொன்னீர்கள். இது என்னோட இருந்தால் என் பயமும், பழக்கமும் போயிடும் என்றும் சொன்னீர்கள்.' அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக அவனின் அம்மாவிற்கு நினைவில் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கவும் முடியாது என்றவர், 'எங்க, அந்தக் கல்லை எடு பார்ப்பம்...' என்றார். அவனுடைய காற்சாட்டைப் பையிலிருந்து அவன் ஒரு கல்லை எடுத்தான். அழுத்தமான, உருண்டையான அந்தக் கல் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது.4 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இந்த சம்பவம் நடக்கும் முன்னர், இந்த பெண்மணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் படித்த பாடசாலைகளின் வகுப்பு நண்பர்களின் வட்ஸ் அப் குழுமங்களிலும் எவரும் இவர் பற்றி எந்தவொரு காணொளியையும் இணைத்தது இல்லை. பொதுவாக ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெறும் குழுமங்களாக இவை இருந்தன. ஆனால், இந்த முட்டாள்களின் உணர்ச்சிவசப்பட்ட செயலால், இச் சம்பவம் பற்றி வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப் பெண்ணின் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். யார் என்றே தெரியாமல் இருந்த ஒருவருக்கு, சின்ன வேலை வெட்டி இல்லாமல், இணையத்தில் குப்பைகளை மட்டும் மேய்கின்றவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பெண் இன்று எம் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு தெரிந்த பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். என்று @கிருபன்எழுதியிருந்தார் இந்த திரியில். இன்று இந்த மலத்தை எல்லாரும், சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் முகர்ந்து பார்த்து விட்டு, தாம் மட்டும் நாற்றத்தை ரசிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர். இதனால் இங்கு வெற்றியடைந்தது அந்த மலம் தான்.3 points
-
ஆமையும் தமிழனும்....
3 pointsபத்திரிகைச் செய்தி 1 தமிழர் பாசறைப் பத்திரிகை 10.04.4354 திங்கட்கிழமை. தமிழ் பெருங்குடிகளின் தொன்மை, அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே. அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தமிழர் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார். இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின் குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க, அதை மக்கள் தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார். எமது பெரும்பாட்டன் கோஷானின் குறிப்புகளை இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ முயன்று வருவதாகவும், அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான தகவல்களை, “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர், கோஷானின் குறிப்புகளைப் பாதுகாக்க அதனை PDF ஆக பிரதியெடுத்து தமது வரவேற்பறையில் தொங்க விட்டு, தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார். அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன் தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை கண்டு பிடித்த ஒரு தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப, அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி, என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார். உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின் முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது. பத்திரிகை 2 அறிவுச்சுடர் பத்திரிகை 14.04.4354 வெள்ளிக்கிழமை “தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல் வெளியிட்ட தகவல்களை சரிபார்தத தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி 21 ம் நூற்றண்டில் வாழ்ந்த கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில் நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர் வீட்டுக்கு முன்னால் திரண்ட தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அவர ஒரு வந்தேறி என்பதையும் வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார். வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள் பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பத்திரிகைச்செய்தி 3 பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச் செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த கட்சித் தலைவர் இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். (பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)3 points
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம்
சோமசுந்தரனார் அவர்கள் இன்பத்துப்பாலின் சிறந்த கவிநயங்களை கூர்நோக்கால் சிறப்புறக் காட்டி, நம்மையெல்லாம் மகிழ்விக்கும்போது, பேரின்பத்துப்பாலில் அதற்கிணையான கவித்துவப் படைப்பு ஒன்று அரைகுறையாக நினைவில் விக்க, அது எதுவென நினைவுகூர, ஓரிரு நாட்கள் ஆயின. சோமசுந்தரனார் போன்ற இலக்கியச் சுவைஞரின் கட்டுரைக்கு, பொருத்தமான பின்னூட்டம் எழுத, மீளவாசிப்பும், மறுவாசிப்பும் தேவைப்படுகிறது. அன்னார் சிறப்புறக் காட்டிய "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" - குறள் 1091 "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" - குறள் 1099 ஆகிய இரு குறள்களிலிருந்து பிறந்த கவிதையே "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" என்னும் சீவக சிந்தாமணி பாடல். (இச் சுவைக்கு இணையான கவித்துவம் கொண்டதோர் படைப்பு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை விடுதிகண்டாய்" என்று தொடங்கும் 46வது பாடல். இப்பாடலின் பேரின்பத்துக் கவித்துவத்தை விளக்கப் புகுந்தேன். அதுவே ஒரு பெரிய கட்டுரையாக விரிந்ததால், ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, தனியாகப் பதிவிடுகின்றேன். அக்கட்டுரை, சோமசுந்தரனாருக்கு சமர்ப்பணம். நிற்க. ) சோம சுந்தரனாரின் இலக்கியக் கட்டுரை, எனது கட்டுரைக்கு ஊக்கியாக அமைந்ததுபோல், திருத்தக்கத்தேவரின் சீவகசிந்தாமணி காப்பியம், சேக்கிழாரின் பெரியபுராணம் காப்பியத்துக்கு ஊக்கியாக அமைந்த வரலாறை இங்கு பதிவு செய்து, எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவரின் கவியின்பத்தில் மயங்கி, எந்நேரமும், சீவசிந்தாமணி இலக்கியச்சுவையின்பத்தில் மூழ்கிக் கிடந்தான் குலோத்துங்கச் சோழன் மாமன்னன் அநபாயன். எங்கே சோழநாட்டை மீண்டும் சமணம் ஆட்கொண்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் மூழ்கியிருந்த சோழநாட்டு முதலமைச்சர் அருண்மொழித்தேவர், அநபாயன் மன்னனுக்கு சைவ அருளாளர்கள் 63 நாயன்மார்கள் குறித்து கவித்துவமாக எடுத்துரைக்க, அவர்கள் வரலாற்றை காவியமாகப் படைக்க முதலமைச்சர் அருண்மொழித்தேவரையே வேண்டினான் சோழ மன்னன். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் பிறந்த வரலாறு இதுதான். சீவகசிந்தாமணிக்கும், கம்பராமாயணத்துக்கும் இணையான கவித்துவம் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் இயற்றிய அருண்மொழித் தேவருக்கு "சேக்கிழார்" என்ற திருநாமம் சூட்டினான் சோழன்.3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன். நாமும் அணுகவில்லை. தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா? ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை.3 points
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
தோல்வியின் பின்னர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது அல்லது கட்சியில் பெரும் மாற்றங்களை கொண்டு வருவன என்பன நல்ல முன்னுதாரணங்கள். வெளிநாட்டு சதிகள், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள், கள்ள வாக்குகள் என்று சில ஒரே மாதிரியான காரணங்களை சொல்லி, தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதமாகவே இருக்கும் தலைவர்களும், தொண்டர்களும் தான் இன்று அதிகம்.2 points
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
தேர்தலும் குடுக்கல் வாங்கல் இன்றி நேர்மையாய் நடந்திருக்குது போல.......! 😁2 points
-
மிஸோக்களுடன் சில நாள்கள்…
2 pointsமிஸோக்களுடன் சில நாள்கள்… ராமச்சந்திர குஹா மிஸோரம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சில நாள்கள் இருந்தேன். அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட அங்கு நேரில் சென்றதில்லை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. முதலில் விமானம் மூலம் அசாம் தலைநகரம் குவாஹாட்டியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பிரமிக்க வைக்கும், பிரம்மபுத்திரா நதியின் அழகை ரசித்தேன். அங்குள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகாத்மா காந்திஜியின் போதனைகள் குறித்துப் பேசினேன். அடுத்து அய்ஜால் செல்லும் விமானத்தில் ஏறியதும் ஓர இருக்கையை விரும்பிக் கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் உயரக் கிளம்பியதும் மெல்லிய பஞ்சுப் பொதிகளாய் உடன் வந்த வெண் மேகங்களையும், மலைச் சிகரங்களை உரசிவிடுவதைப் போல சென்ற விமானியின் சாகசத்தையும் ரசித்தபடியே அய்ஜாலில் இறங்கினேன். விமான நிலையத்தில் ‘உள் எல்லை அனுமதி’ படிவத்தைப் பூர்த்திசெய்தேன், பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசின் தொன்மையான இந்த வழக்கம், இந்தியக் குடிமக்களிடம் இன்றும் பின்பற்றப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு கிராமங்களையும் வயல்வெளிகளையும் பார்த்து ரசிக்க ரயில் பயணம்தான் விமானப் பயணத்தைவிட சிறந்தது. ஆனால், காரில் செல்வது அதைவிடச் சிறந்தது. லெங்புய் விமான நிலையத்திலிருந்து மாநிலத் தலைநகர் அய்ஜால் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது; மாநிலத்தின் நிலப்பரப்பைக் கண்டு ரசிக்கவும் மக்களுடைய வாழ்க்கை நிலையை ஓரளவு ஊகிக்கவும் அது போதுமானது. மலைக் குன்றுகளின் அமைப்பு, ஒரு காலத்தில் நாங்கள் வசித்த உத்தர பிரதேச மலை மாவட்டத்தை (இப்போது உத்தராகண்டில் இருக்கிறது) நினைவுபடுத்தியது. அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். அகலம் குறைவான சாலைகளும் வளைந்து வளைந்து செல்லும் அவற்றின் பாங்கும், அருகிலேயே வேகமாகப் பாயும் நீரோடைகளும் சிறுவயதுக் காட்சிகளை நினைவுபடுத்தின. இங்கு மரம்-செடி-கொடிகள் தோற்றத்தில் வேறு மாதிரியானவை. ஏராளமாக மூங்கில் வளர்ந்திருந்தது, கணிசமான அளவில் இலையுதிர் காட்டு மரங்கள் வளர்ந்திருந்தன. உத்தராகண்டில் ஊசியிலைக் காட்டு மரங்கள்தான் அதிகம். மக்கள்தொகையும் இங்கு அடர்த்தியாக இல்லை, மக்கள் வசிக்குமிடங்களும் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன. கடைசியாகச் சொன்னது தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தலைநகர் அய்ஜாலில் குன்றின் ஒவ்வொரு அடுக்கிலும் அடுத்தடுத்து வீடுகளைக் கட்டியிருந்தார்கள்; அது உடனே நைனிதால், முசௌரி நகரங்களை நினைவூட்டியது. வாகனப் போக்குவரத்து மிக ஒழுங்குடன், வட இந்திய மாநிலங்களைப் போல அல்லாமல் இருந்தது. வாகன ஓட்டிகள் அவரவருக்குரிய சாலை தடத்திலேயே இருந்தனர், நெரிசல் நீங்கி வாகனங்கள் நகரும்வரை பொறுமையாகக் காத்திருந்தனர். வலப்புறமாக எட்டிப் பார்த்து கிடைக்கும் இடைவெளியில் நுழைந்து மற்ற வாகனங்களும் மேற்கொண்டு நகர முடியாமல் பாதையை அடைக்கவில்லை. மகளிர் மேம்பாடு அய்ஜாலில் பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். மாநிலத்திலேயே மிகவும் பழையதான அந்தக் கல்லூரி 1958இல் தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆண்-பெண் பேதமின்றி கலந்தே உட்கார்ந்திருந்தார்கள். உத்தர பிரதேசத்தின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களிலும், கேரளத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களிலும் இப்படிக் காண முடியாது. அந்தப் பகுதிகளிலும் கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். அங்கெல்லாம் பொறியியல் கல்லூரிகளில்கூட ஆண் – பெண் சேர்ந்து உட்காருவதை ஊக்குவிப்பதில்லை. அந்த வகையில், பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியானது மிஸோரம் மாநிலத்தின் பண்பாட்டை அப்படியே பிரதிபலித்தது. பெண்கள் இங்கு வீதிகளில் நடக்கும்போதும், கடைகளில் பொருள்களை வாங்கும்போதும், கடைகளில் காபி குடிக்கும்போதும் உடன் பயிலும், அல்லது வேலை செய்யும் ஆடவர்களுடன் சர்வ சாதாரணமாக கலந்தே செல்கின்றனர். மாநிலத்தில் மகளிர் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம். இதை மாநிலம் தொடர்பான புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் எழுத்தறிவில் அனைத்திந்திய அளவில் மிஸோரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 60% மகளிர், வீடுகளில் அடைந்துவிடாமல் வேலைக்குச் செல்கின்றனர். இது அனைத்திந்திய சராசரியான 30% என்ற அளவைப் போல இரண்டு மடங்கு. பிற மாநிலங்களைவிட அதிக ஊதியம் - அதிக பொறுப்பு மிக்க பணிகளில் மிஜோரம் மகளிர் இருப்பது கூடுதல் சிறப்பு. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மேலாளர்கள் ஆகிய பொறுப்புகளில் மிஸோரம் மாநிலப் பெண்கள் 70.9% என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. சிக்கிம் 48.2%, மணிப்பூர் 45.1% அடுத்துவருகின்றன. மென்மையாக ஒரு முன்னேற்றம் புவியியல்ரீதியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மிஸோக்களின் சமூக முன்னேற்றம் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது. அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த பல்லாண்டு ஆயுத மோதல்களின் சுவடே தெரியாதபடி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படை மூலம் வானத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு கலவரத்தை ஒரு காலத்தில் ஒடுக்கிய மாநிலமா இது என்று வியக்க வைக்கும் அளவுக்கு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) என்ற தீவிரவாத அமைப்பு இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதம் கொண்டு 1966இல் போரிட்டது. அந்தப் போராட்டத்துக்கு லால்டெங்கா தலைமை தாங்கினார். 1966க்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மிஸோ மலைப் பிரதேசம் முழுவதும் உணவு தானிய விளைச்சல் இல்லாமல் உணவுப் பற்றாக்குறையில் சிக்கியது. அதனால் மக்கள் பட்டினி கிடந்து செத்தனர். அன்றைக்கு தில்லியை ஆண்ட ஆட்சியாளர்கள் இதைப் போக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவில்லை. இனி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதால் பயனில்லை என்று முடிவெடுத்த லால்டெங்கா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் ராணுவ அரசுடன் கைகோத்து, இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளித்தது. கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) எல்லைக்குள் மிஸோ இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன. நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சி தரப்பட்டது. இதில் 1966 பிப்ரவரியில் எம்என்எஃப் தீவிரவாதிகள், அரசு அலுவலகங்களைத் தாக்கியதுடன் தகவல் தொடர்பையும் துண்டித்தனர். சுதந்திரமான மிஸோ குடியரசை நிறுவிவிட்டதாக அறிவித்தனர். லுங்லெ என்ற சிறு நகரைக்கூட கைப்பற்றிவிட்டனர். அடுத்து அய்ஜாலை நோக்கி முன்னேறத் தொடங்கினர். உடனே இந்திய அரசு தரைப்படைப் பிரிவுகளை அங்கு அனுப்பியதுடன் விமானப் படையையும் கலவரத்தை ஒடுக்குவதற்கு ஈடுபடுத்தியது. இப்படித்தான் மிஸோரம் மீது, விமானத் தாக்குதலை நடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு சுமார் இருபதாண்டுக் காலம் தீவிரவாதிகளும் அரசுப் படைகளும் மோதிக்கொண்டிருந்தன. அதற்குப் பிறகு ஏற்பட்ட சுமுக உடன்பாட்டுக்குப் பிறகு லால்டெங்கா, சுதந்திர மிஸோ குடியரசின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆவதற்குப் பதிலாக - மாநில முதல்வரானார். மிஸோக்களின் சமூக ஒற்றுமை அய்ஜாலில் என்னுடைய பேச்சைக் கேட்க வந்த இளைஞர்களின் தாத்தா - பாட்டிகள் அல்லது அப்பா அம்மாக்கள் கடுமையான அந்தக் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள்; மிஸோ தேசியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் சிக்கித் தவித்திருப்பார்கள், அல்லது உயிரைக் காத்துக்கொள்ள காடுகளில் தஞ்சம் புகுந்திருப்பார்கள், நிம்மதியற்ற வாழ்க்கையை நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள். சமாதானம் ஏற்பட்ட பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பியதுடன் மாநிலத்தின் அமைதி, வளர்ச்சிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது. அது அவர்களுடைய துணிவையும் அறிவுக்கூர்மையையும் காட்டுகிறது. அரசுப் படைகளின் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் பழிவாங்கும் உணர்வை வளர்த்துக்கொள்வார்கள். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது தனிப்பட்ட முறையில் இழப்புகளையும் சோதனைகளையும் அனுபவித்தவர்களில் பலரும் ஜெர்மானியர்களின் இன ஒழிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களும் இப்படிப் பழிக்குப் பழி வாங்கத் துடித்தது வரலாறு. ஆனால், மிஸோக்கள் துயரப்படும் பிற மக்கள் மீது இரக்கப்பட்டார்கள். அதனாலேயே மியான்மரிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு உணவு, உடை தந்து உபசரிக்கிறார்கள். மிஸோக்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள், பௌத்தர்களும் உண்டு. மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடிய குகிக்களுக்கும் மிஸோரம் மக்கள் புகலிடம் தந்து காத்தனர், இந்த வகையில் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டிய கடமையை அவர்கள் நிறைவேற்றினார்கள். மிஸோ மக்களுடைய இந்த சமூக ஒற்றுமை உணர்வுக்கு முக்கிய காரணம் அவர்கள் விவசாயம் செய்வதற்கான விளைநிலங்களைப் பெற கையாளும் ‘ஜூம்’ என்ற பாரம்பரிய சமூக முறைதான் என்று ‘கிராஸ்ரூட்ஸ் ஆப்ஷன்ஸ்’ என்ற பருவ இதழ் கட்டுரை தெரிவிக்கிறது. ‘ஜூம்’ என்பது வேறொன்றுமில்லை மலைப் பிரதேசங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிக்கு, ஏற்கெனவே வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை எரித்து, அந்தச் சாம்பலையே அந்த மண்ணுக்கு எருவாக்கி, பிறகு அதில் சாகுபடி செய்வது. காலப்போக்கில் அந்த மண்ணில் விளைச்சல் குறைந்தால் வேறிடத்துக்குச் சென்று அங்கு தாவரங்களை எரித்து அதை விளைநிலம் ஆக்குவார்கள். இப்படிச் செய்யும்போது அவர்களுக்குள் சமூக ஒற்றுமை வலுப்படும். அது அப்படியே மரபில் ஊறிவிட்டது. அதுவே மிஸோக்களின் சமூகப் பண்பாடாகிவிட்டது. ‘லாமங்கைய்னா’ என்று மிஸோ மொழியில் அதைச் சொல்கிறார்கள். ‘அடக்கமான சேவை’ என்பது அதன் பொருள். ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சமுதாயக் கடமை என்று மிஸோக்கள் கருதுகின்றனர். மிஸோக்களிடம் நாம் கற்க வேண்டும்! வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் நுழைவதற்கு முன்னாலேயே மிஸோக்களிடம் இந்தச் சமுதாயப் பண்பு நிலவியது. கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த உணர்வை அப்படியே ஆதரித்து ஊக்குவித்தன. இப்படி சுயநலம் பாராமல் உதவுவதும்கூட மிதமிஞ்சிய ‘தூய்மைவாத’மாக உருவெடுத்தது. மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் உள்ளூரில் கிடைக்கும் நாட்டு மது வகைகளைக் குடிப்பது வழக்கம். தூய்மைவாதம் காரணமாகவும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தங்களை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அரசால் அந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இது பழங்குடிகளின் கோபத்தைக் கிளறிவிட்டது. அவர்கள் சட்டத்தை மீறி, நாட்டு மதுவகைகளைத் தொடர்ந்து குடித்தனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் கடத்தி விற்பதும் அதிகரித்தது. மக்கள் உள்ளூர் சரக்கைச் சாப்பிட்டாலும் எவருக்கும் தொல்லை தராமல் அமைதியாகப் போய்விடுவதே வழக்கமாக இருந்தது. மதுவிலக்கை அமல்படுத்தியதுடன் காவல் துறையை விட்டு மிரட்டுவது, வீடுகளில் நுழைந்து சோதிப்பது என்பது போன்ற செயல்கள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தின. மதுவிலக்கு அமல் காரணமாக மாநில அரசுகளுக்கு மதுபானங்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அந்த வரி வருவாயைக் கொண்டு மாநிலத்தின் சேதமுற்ற சாலைகளைப் புதிதாகப் போட்டிருக்கலாம். மிஸோரத்தை அதன் வரலாற்றுப் புத்தகங்கள் வாயிலாகவும் வெளிநாடு வாழ் மிஸோக்களைச் சந்தித்தன் மூலமாகவும் அறிந்திருந்த எனக்கு, நேரில் பார்த்தது அம்மாநிலம் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டிவிட்டது. ஆனால், தில்லியில் ஆள்வோரிடம் - பிற வட கிழக்கு மாநிலங்களைப் போலவே மிஸோரமும், அதிக கவனம் பெறவில்லை. வட கிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகள் கிடையாது என்பதால் ஒன்றிய அரசை ஆள்வோர் அந்த மாநிலங்களின் தேவைகளைப் புறக்கணிப்பதுடன், ஏதோ தங்கள் அருளால்தான் அந்த மாநிலங்கள் பிழைப்பதைப் போல நடந்துகொள்கின்றனர். இருந்தாலும் பிரதான நிலப்பகுதியில் வாழ்வோர் மிஸோரம் மக்களிடமிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்வது எப்படி, தோல்வியிலிருந்தும் மனச் சோர்விலிருந்தும் மீள்வது எப்படி, சாதி பேதமில்லாமல் சமமாக அனைவரையும் நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். மிஸோக்களைப் போல பெண்களைச் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்; இசையையும் வாழ்க்கையையும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும். https://www.arunchol.com/ramachandra-guha-article-on-a-spirit-that-shines2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம். அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை!2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்….. இந்த திரியை பார்த்தாலே தெரியவில்லை….வளைச்சு, வளைச்சு கதைக்க மட்டுமே செய்வோம் என்பது…. பிரான்சில் இல்லாத தமிழ் அமைப்புக்களா? லா சப்பல் எங்கள் கையில்… அடுத்த தலைமுறை பெரிய…பெரிய பதவிகளில்….. என்ன பிரயோசனம்…. எமக்கு எது முக்கியம்? இவரின் பேச்சை நிறுத்தணும். அடித்தது எமக்கு மனச்சாந்தியை தந்தது… ஆனால் இவரின் வாயை அடைத்ததா? அடித்தவர்கள் கடைநிலை மக்கள் - அடிப்பது ஒன்றே அவர்கள் வசமுள்ள ஆயுதம். ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.2 points- கருத்து படங்கள்
2 points2 points- பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:
1 pointபிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு: சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் 6 நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு. எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் யங்கரமான பிரச்சினைகளைக் கொண் தொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது. யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்கு கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள். நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண் டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர். பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களிலிருக்கவில்லை. எங்கள் தாய்நிலத்தைப் பாதுகாப்பதற்கான போதிய அறிவு எம்மத்தியிலுள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப்பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார். https://newuthayan.com/article/பிறப்புரிமையான_சுதந்திரத்தை_எவரும்_எழுதித்தர_வேண்டியதில்லை!1 point- சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கடலூரில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.. இவர் பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று ஜோதிடர் கூறினார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kili-sodhidar-arrested-for-claiming-thangarbachan-victory-in-cuddalore-constituency-anbumani-ramado-597117.html 🤣🤣...........1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
விளங்கி கொண்டேன் உறவே.1 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சாரி பெருசு, இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை. 😁1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான் மைக் சின்னம் ஒதுக்கியதே திட்டமிட்ட சதி மைக் கில் பலவகை உண்டு சிலது தடி போலவும் உண்டு அந்த படத்தை தடி போல் ஒன்றை வோட்டு மிசினில் படமாய் போட்டால் அவ்வளவுதான் கதை இவ்வளவு காலமும் நடந்த தேர்தல்களில் நாம் தமிழர் பெரிதாக கவனிக்கபடவில்லை இம்முறை இவ்வளவு தடைகளை தாண்டி வெற்றி .........................1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம். பொது வெளியில், வெளிப்படையாக சொல்லப் பட்ட காரணத்தைப் பற்றித் தான் நாம் கருத்துரைக்க முடியும். அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும் பக்கங்கள் 710 முதல் 716" இல் புலிகளின் அமெரிக்கா மீதான ஏமாற்றம் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து, புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி! அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.1 point- தேனும் விஷமும்
1 point'அவன் சும்மாவே ஆடுவான், இதில நீங்கள் சலங்கை வேற கட்டி விடுகிறீர்கள்....' என்று ஒரு வழக்கு இருக்கின்றது......🤣1 point- சங்கரி சந்திரன் எழுதிய Chai Time at Cinnamon Gardens
Chai Time at Cinnamon Gardens - தெய்வீகன் ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் இந்துவின் வெளியான முழுமையான கட்டுரை) காலனித்துவ ஆக்கிரமிப்பின் வழியாக உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தியதன் வழி உருவான நவ - ஆஸ்திரேலியா என்ற பெருந்தேசம் எழுபதுகள்வரை நிறவாதப் பெரும் திமிரோடு தன்னை உலக அரங்கில் பெருமையோடு முன்நிறுத்திய நாடாகும். அதன்பின்னர், உருவான சில கனிவான மாற்றங்கள், அரசாட்சியில் மெல்லிய ஜனநாயக விழுமியங்களைத் தூவத்தொடங்கியது. ஆட்சிப் பீடத்தில் ஒட்டியிருக்கும் பழைய கறைகளை கழுவிக்கொள்வதற்கு, நவ-ஆஸ்திரேலிய தேசமானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல புண்ணியங்களைச் செய்து, ஜனநாயகத்தின் வழி பல பூஜை - புனஸ்காரங்களை நடத்திவருகிறது. ஒருபடி மேலே சென்று, ஜனநாயகம் என்றால் என்ன தெரியுமா? மக்கள் உரிமை என்றால் எவ்வளவு புனிதமானது தெரியுமா என்று ஏனைய நாடுகளுக்கே பாடங்களைச் சொல்லித்தருகிறது. ஆனால், நவ-ஆஸ்திரேலியாவின் இந்த மாற்றம் உண்மையிலேயே ஆத்மார்த்தமானதா? பெரும்பான்மை ஆஸ்திரேலியர்களின் மனதில், ஜனநாயகப் பண்பும் மக்களாட்சியின் மாண்பும் நீக்கமற நிலைக்கவேண்டும் என்ற தூய சிந்தனையுடன் கூடியதா? ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த - Miles Franklin - இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிக்கொண்டுள்ள சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens என்ற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்கனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி என்ற கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டத்துறையில் கற்றுத் தேர்ந்து, தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். தற்போது, தலைநகர் கன்பராவில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளோடு வசிக்கிறார். Chai Time at Cinnamon Gardens அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல். Chai Time at Cinnamon Gardens நாவலின் மூலம் சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கிய கேள்வி - "இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு? அதனை யார் தீர்மானிப்பது" எழுபதுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரத்தொடங்கிய பல நாட்டவர்களினதும் வரவால், ஆஸ்திரேலிய தேசம் புதிய பரிணாமத்தை எட்டத்தொடங்கியது. அதன்பிறகுதான், ஆஸ்திரேலியா பல் கலாச்சார விழுமியங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் பரந்துபட்ட பண்பாட்டு ஞானத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறி வந்த சமூகங்களின் குற்ற உணர்வு - எல்லா மேலைத்தேய நாடுகளைப்போலவும் - ஆஸ்திரேலியாவுக்கு வசதியான அதிகாரத்தினை கையளித்தது. போகப்போக வரலாற்று ரீதியாகப் புதிய வடிவங்களிலான திமிர்களை அரசுக்கு உருவாக்கியது. அந்தத் தேசிய இறுமாப்பின் வழியாக பல கொடூரமான குடிவரவுக் கொள்கைகள் எழுந்து, காலப்போக்கில் அவை சட்டங்களாகவும் மாறின. அந்த வகையில், வேறு நாடுகளிலிருந்து வந்து குடியுரிமை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ஆஸ்திரேலியா இன்றுவரை அறைகூவிக்கொண்டிருக்கும் தேசிய முழக்கம்தான் "இந்த நாட்டில் நல்ல ஆஸ்திரேலியனாக இரு" (Be an Australian) சங்கரி தனது நாவலில், நவ-ஆஸ்திரேலியா பெருமையாகப் பீற்றிக்கொள்கின்ற இந்த அறைகூவலை கிழித்துத் தொங்கப்போட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா தனது பெருமைகளாகப் பேணிவைத்திருக்கும் பல்வேறு பாவனை விழுமியங்களையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்துகின்ற இந்த நாவலை நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் யாரும் பதிப்பிக்க முன்வரப்போவதில்லை என்று தான் முன்னமே எண்ணிக்கொண்டதால், நாவலை முழுமையாக தான் நினைத்தபடி எழுதுவதில் எந்த மனத்தடையும் இருக்கவில்லை என்று நாவல் எழுதிய அனுபவம் குறித்துக் குறிப்பிடும்போது சங்கரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சிட்னிக்கு வருகின்ற கணவனும் (ஸாகிர்) மனைவியும் (மாயா) தங்கள் வயதை ஒத்த முதியவர்களுக்கென, வயோதிபர் இல்லமொன்றை நடத்துகிறார்கள். அங்கு தங்குவதற்காக வருகின்ற பல்வேறு நாட்டு முதியவர்களின் ஊடாகவும் ஆஸ்திரேலிய தேசம் என்பது அவர்களுக்கு உண்மையில் எப்படிப்பட்ட புகலிடமாக அடைக்கலம் அளித்திருக்கிறது என்பதை விரித்துச் சொல்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர் என்று நவ-ஆஸ்திரேலியர்களால் போற்றப்படுகின்ற கப்டன் குக் என்பவரது உருவச்சிலை, இந்த வயோதிபர் இல்ல வளாகத்தில் முன்னர் இருந்திருக்கிறது. அந்தச் சிலையை ஒருநாள், ஸாகிர் அகற்றிவிடுகிறார். அதனைப் பெருங்குற்றமாக அடையாளம் கண்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது அப்பகுதி கவுன்ஸில். இந்தச் சம்பவத்திலிருந்து Chai Time at Cinnamon Gardens நாவல் முற்றிலுமான ஒரு அரசியல் பிரதியாக - ஆஸ்திரேலிய அரசின் போலியான ஜனநாயகப் பெருமிதங்களை சவாலுடன் எதிர்க்கின்ற - வரலாற்று உண்மைகளை மீள ஞாபகமூட்டுகின்ற நூலாக - உருமாறிக்கொள்கிறது. ஆஸ்திரேலிய நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்தரப்படுத்தி விரித்துச் சொல்லும் இந்த நாவல், வரலாற்று ரீதியாக ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் முகங்கொடுத்த பேரவலங்களைத்தான் சிறிலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்துள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோர்த்துச் சொல்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவினை பின் தள்ளிவிட்டு, ஆஸ்திரேலிய வரலாறு என்பது கப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலிய சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்ஸத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்று தனது பூர்வீக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்தினை ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார். நவ-ஆஸ்திரேலிய நிறவாதமெனப்படுவது மிகவும் நுட்பமானது. சாமர்த்தியமாக சனங்களுக்குள் நுழைத்து, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சமன் செய்யக்கூடியது. அந்தவகையில், சட்டங்களை முன்வைத்து சனங்களைப் பயம்காட்டுவது என்பது அந்நிய நாடுகள் அனைத்திற்கும் சம்பிரதாயமான சாகசங்களில் ஒன்று. ஆனால், சங்கரி தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி என்ற காரணத்தினால், நாவலின் முக்கிய இடங்களில், அஞ்சலி என்ற பாத்திரத்தின் வழியாக, ஒரு சட்டத்தரணியாகவே மாறிவிடுகிறார். தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சட்டங்களுக்குள் சடைந்து வைத்திருக்கும் அரசின் லாவகங்களை, தனது தர்க்கங்களால் உடைக்கிறார். முற்று முழுதாக ஒரு அரசியல் நாவலென்றாலும், இலங்கைக் குடும்பமொன்றின் அன்றாட ஆஸ்திரேலிய வாழ்வின் வழியாக, புலம்பெயரிகள் மீதான நுட்பமான தனது அவதானிப்புக்களை சங்கரி சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். சன் டி.வியுடன் லயித்திருக்கும் சிட்னி வயோதிபர் இல்லமொன்றின் அன்றாடங்கள் எப்படியான - புதிரான - நிகழ்வுகளால் - உரையாடல்களால் - துயரங்களால் - எதிர்பார்ப்புக்களால் நிறைந்துகிடக்கிறது என்பதை பல இடங்களில் அங்கதச்சுவையோடு எழுதியிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசினைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி - அதன் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்ற - எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீண்டகாலமாகக் குடிவரவு அமைச்சின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி, தடுப்பிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை No Friend But the Mountains என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019 ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட, அவர் தடுப்பிலிருந்து விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரியின் Chai Time at Cinnamon Gardens நாவல், வெறுமனே ஆஸ்திரேலிய அரசின் பல்வேறுபட்ட முரண்பாடான குடிவரவு அணுகுமுறைகளை - அடிப்படை அரசியல் சிந்தாந்தங்களை - பாவனை ஆட்சிமுறையை - கேள்விக்கு உட்படுத்துவது என்பதற்கு அப்பால், சங்கரி என்ற புலம்பெயர்வின் எந்த வலியையும் அனுபவித்திராத ஒரு எழுத்தாளர், மிகக்கூர்மையான அரசியல் பிரதியொன்றை எவ்வாறு எழுதுவதற்கு களத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற பின்னணியையும் - தேவையையும்கூட - வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Michelle de Kretser என்ற பெண்மணி 2013 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டுகளில் இதே Miles Franklin விருதினை வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.theivigan.co/post/100051 point- ஆமையும் தமிழனும்....
1 pointஅருமை அருமை, அதுவும் அந்த தூய்மைவாத கட்சி தலைவர் கடைசியில் அடித்த அந்தர் பல்டி. டிரேட் மார்க் 😀. இப்படி fact check பண்ணி குட்டை உடைக்கிறார் எண்டா….. அது அவரேதான்…சந்தேகமில்லை😀 இந்த செய்திகளில் உள்ளவை உலகில் மிக நம்பகமான ஊடகமான “டிங் டொங்” இல் விரைவாக வீடியோவாய் வந்து லைக்குகளை அள்ளும் என நினைக்கிறேன்😃.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது.. ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.1 point- வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
1 pointமுதலாவது கை அறுப்பவர் ? பிரெசெண்ட் சேர் 🤣1 point- சிவப்புக்கல்
1 pointஅந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......! 😁 நல்லாயிருக்கு கதை.......!1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உங்களின் மனநிலைதான் எனக்கும். ஆனால் வயது நாற்பதின் நடுப்பகுதியை விட்டு விலக ஆரம்பித்திருப்பதால் அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கவாவது முனைகிறேன். ஒவ்வொரு முறையும் உணர்வதுதான் ஆனால் இந்த முறை இதை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தேன்👇. என்ன மாயமோ தெரியவில்லை, அங்கே போனதும் சிறு, சிறு உடல் உபாதைகள், நோவுகள் எல்லாம் காற்றாய் பறந்து விடுகிறன. உடல் சோர்வதில்லை, மூட்டு வலிப்பதில்லை, தடிமன் காய்ச்சல் கூட மிக அரிதே. அதே போல் கும்பகர்ண விருந்து சாப்பிட்டாலும் கூட ரத்த சீனியின் அளவை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது. Feeling healthy என்பார்களே இது ஊரில் நிச்சயம் ஒரு மடங்கால் கூடுகிறது. இது தனியே கொலிடே மனநிலை மட்டும் இல்லை என நினைக்கிறேன். ஏதோ ஒரு பெளதீக மாற்றமும் உள்ளது. சூரிய ஒளி/வைட்டமின் டி யாக இருக்கலாம். இவ்வாறு, ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.1 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
விடாக்கண்டன் இந்த இடத்தை விட்டு அரக்கிற பிளான் இல்லை போலை கிடக்கு....🤣1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது ☹️1 point- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)1 point- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
அய்யனே..அஞ்சப்பரில் நிற்பதாகப் பார்த்தேன்..அப்ப நீங்கள் அந்தப் பக்கம்..காலையிலை பார்த்தால் கிட்ட நிற்பதாக..அட ஆளப்பிடிச்சு..இசுபைசியில் ஒரு பிரேக்பாஸ்ட்..லிங்கத்தில் 2 மாலுபணிசும்,ஒரு இசுபெசல் ஐஸ்கிறீமும்,பூரணியில் பருத்தித்துறைவடையும் வாங்கித்தர யோசித்தேன்...கிரகண லீவு எடுத்தபடியால்..முதலாளி .. வாவா..உடனை வாவென்றூ நிக்கிறான்...போகாவிட்டால் கதை கந்தல்..இதாலை கந்தையரை...காய் வெட்ட வேண்டி வந்திட்டுது...உங்களுக்கு ஜேர்மன் பக்கத்திலைதானே மீளவும் வருவியள்..தானே .. சந்திப்போம்...மு.கு..இந்த கடை மூன்றும் எனக்கு நடைத்தூரம்... உங்கள் வருகைக்கு நன்றி கந்தையர்...சந்திப்போம்..1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஅநுராதபுரத் தாக்குதல் பெளத்தர்களின் போயா தினமான, 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி காலை, விக்டர் தலைமையில் புறப்பட்ட 14 சீருடை தரித்த புலிகள், புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டியொன்றைக் கடத்தினார்கள். பின்னர், கிறீஸ்த்துவிற்கு முன் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்த்துவிற்குப் பின் 10 ஆம் நூற்றாண்டுவரை சிங்கள பெளத்தர்களின் புராதன தலைநகராக விளங்கிய அநுராதபுரம் நகரின் மத்தியில் அமைந்திருந்த பிரதான பேரூந்துத் தரிப்பிடத்திற்குச் அதனை ஓட்டிச் சென்றார்கள். பேரூந்துத் தரிப்பிடத்தில் காத்துநின்ற பயணிகள் மீது தாம் கொண்டுவந்த இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் சரமாரியாகச் சுட்டபோது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக சுமார் நூறு பொதுமக்கள் இறந்துவீழ்ந்தார்கள். பின்னர் உலக பெளத்தர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளரசு மரம் அமைந்திருந்த பகுதிநோக்கி அவர்கள் சென்றார்கள். பெளத்த மதத்தை ஆரம்பித்த புத்தர் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கூறப்படும் வெள்ளரசு மரத்தின் கிளையினை ஊன்றியே இந்த வெள்ளரசு மரமும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதால் இம்மரமும் பெளத்தர்களால் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறீஸ்த்துவிற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னனின் மகளான சங்கமித்தையே இந்த வெள்ளரசுக் கிளையினை இலங்கைக்குக் கொண்டுவந்ததாக சிங்கள பெளத்தர்கள் கூறுகிறார்கள். அப்பகுதியில் இருந்த சிங்கள பெளத்த குருக்கள், பெண் குருக்கள், வெள்ளையுடையணிந்த சாதாரண பெளத்தர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் வில்பத்து வனப்பகுதி நோக்கிச் சென்ற தாக்குதல் அணி, போகும் வழியில் இருந்த பொலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியவாறே சென்றது. வில்பத்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வன இலாகா முகாம் மீது புலிகளின் தாக்குதல் அணி நடத்திய தாக்குதலில் நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் கொல்லப்பட்டார்கள். அன்று மட்டும் புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 148 ஆகும். தாக்குதலையடுத்து உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புலிகளைத் தேடி வேட்டையாட விசேட பொலீஸ் கொமாண்டோக்களை அரசு வரவழைத்தது. ஆனால், அவர்கள் வருவதற்கிடையில் தாக்குதல் அணி அங்கிருந்து அகன்று சென்றிருந்தது. அநுராதபுரம் விமானப்படை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற உலங்குவானூர்தியொன்று வில்பத்துக் காட்டுப் பகுதியூடாக புலிகளின் பஸ் வண்டி சென்றுகொண்டிருப்பதை அவதானித்துவிட்டு அதன்மீது தாக்குதல் நடத்தியது. உடனடியாக பஸ்ஸை விட்டிறங்கிய புலிகள் உலங்குவானூர்தி மீது திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். புலிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணத்தில் பிறந்து துப்பாக்கி இயக்குனரான விமானப்படை சார்ஜன்ட் ஹத்த கபுராலகே ஜயரட்ண என்பவர் காலிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்தார். அதனையடுத்து உலங்குவானூர்தி திரும்பிச் சென்றது. காயமடைந்த விமானப்படை வீரர் இன்றும் வாழ்கிறார் (2005). தாக்குதலில் ஒரு கையினையும், காலையும் இழந்த அவரை அன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி ஜயவர்த்தன இஸ்ரேலுக்கு அனுப்பி செயற்கைப் பாகங்களை அவருக்குப் பெற்றுக்கொடுத்தார். அநுராதபுரம் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் கொழும்பை வந்தடைந்தபோது நான் லேக் ஹவுஸ் காரியாலயத்தில் இருந்தேன். சிங்கள பெளத்தர்கள் இச்செய்தியைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார்கள். தமிழர்கள், தம்மீது சிங்களவர்களால் பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சியபோதும் அப்படி நடக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்களால் தூண்டப்பட்டால் ஒழிய சாதாரணச் சிங்களவர்கள் தம்மை கொல்லப்போவதில்லை என்பதை தமிழர்கள் அன்று புரிந்துகொண்டார்கள். நான் உடனடியாக டொரிங்டன் சதுக்கத்தில் இருந்த எனது தொடர்மாடி வீட்டிற்குச் சென்றேன். 1983 ஆம் ஆண்டில் எனது வீடு எரியூட்டப்பட்டதையடுத்து நாம் டொரிங்டனில்த்தான் வாழ்ந்துவருகிறோம். தாக்குதல் குறித்த செய்தி வந்தபோது, வீட்டில் மகன் மட்டும் தனியாக இருந்தமையினால், அவரது பாதுகாப்புக் குறித்த கவலையுடன் நான் வீட்டிற்குக் கிளம்பினேன். நான் எனது வீடிருக்கும் பகுதியை அடைந்தபோது, பொலீஸ் ரோந்து வண்டியொன்று அப்பகுதிக்கு வந்தது. நான் மகனிடம், "பயப்படாதே, இனிமேல் அவர்கள் வன்முறைகளில் இறங்கமாட்டார்கள். அரசாங்கம் இனிமேல் அவர்களைத் தூண்டாது" என்று கூறினேன். சிங்கள மக்கள் அமைதிகாத்து வருவதை தொடர்ச்சியாக சிங்களப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதிவந்தன. சிங்கள மக்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்றும் அவை எழுதின. ஆனால், அந்த கருத்துத் தவறானது என்பதை தமிழர்கள் அறிவார்கள். இம்முறை ஜெயவர்த்தன சிங்களவர்களைத் தூண்டிவிடவில்லை, அதனாலேயே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை. சிங்களக் காடையர்களை தூண்டிவிட்டு தமிழர் மீது தாக்குதல் நடத்தினால், தமிழ்ப் போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் இறங்குவார்கள் என்கிற அச்சம் ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. அதனாலேயே சிங்களவர்களைத் தூண்டிவிடுவதை அவர் இம்முறை தவிர்த்திருந்தார். வழமைபோல சிங்கள ஊடகங்கள் நடப்பதை உணர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை உணர மறுத்துவிட்டன. தொண்டைமான் இதனை ஒரு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1983 இல் நடத்தப்பட்டது சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பழிவாங்கற் தாக்குதல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அது, ஜெயவர்த்தனவினால் நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று அவர் கூறினார். அனிட்டா பிரதாப்புடனான செவ்வியில் பிரபாகரனும் இதனையே கூறியிருந்தார். அநுராதபுரத் தாக்குதலையடுத்து ஜெயார் நிலைகுலைந்துபோனார். லலித்தோ கடுமையான அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் நம்பிக்கையினை இத்தாக்குதல் சேதப்படுத்தப்போவதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதல் உட்பட, வடக்குக் கிழக்கில் பரவலாக போராளிகளால் நடத்தப்பட்ட வந்த தாக்குதல்களின் பின்னால் இந்தியாவின் ரோ இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். சிங்கள ஊடகங்களில் தமது சந்தேகங்களை அவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்து வந்தார்கள்.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பார்த்தேன், ரசித்தேன், 10/10 எடுத்தே😎. பிறகு பெடியன் அங்கிள் எண்டெல்லே கூப்பிடுவான்🤣. நல்லா கேளுங்க எசமான்…அவர் எல்லாரும் தன்னை போல் மல்டி பில்லியனர் என நினைக்கிறார்🤣.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
என்ன கந்தையர் விசயம் தெரியாமல் கதைக்கிறியள்´? 😂 காசு மரம் இஞ்சை தானே நிக்குது 😎1 point- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
அம்மு சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார். ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான். @வாலி உங்கள் கவனத்துக்கும். நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் @MEERA1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாடை மேனி பனிவாடைக் காற்றில் நீராட வந்தோமடி.........! 😍1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
உண்மையிலேயே மிகவும் அருமையான மனிதர், எனக்கும் instructorஆக இருந்தவர், நீங்களும் நானும் ஒரே காலத்தில் அங்கே இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்கு அவர் வேறு விரிவுரையாளர்களுடன் வந்தபோது ஒன்று கூடல் ஒன்று வைத்தோம்1 point- கருத்து படங்கள்
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
நான் அறிந்தவரை அவர் ஒரு உண்மையான நேர்மையானவர் . பேராதனை பொறியியல் பீடத்தில் நான் படித்த காலத்தில் அவர் உதவி விரிவுரையாளராக இருந்தவர். முதுமாணி படிப்புக்காக ஆயத்த நிலையில் இருந்த தருணம். அவர் வருவது சாலச்சிறந்தது .1 point- 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி தமிழ்த்திறன் 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
👍........ இவர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பொழுது நன்றாகவே செயற்பட்டார் என்று நினைக்கின்றேன். சமூக ஊடகங்களில் சிறு சலசலப்புகள் ஒன்றோ, இரண்டோ வந்திருந்தன. மற்றபடி நான் வேறு எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஒரு தடவை இவரும், அங்கு பணியாற்றும் சில விரிவுரையாளர்களும் இங்கு அமெரிக்கா வந்து சில சந்திப்புகளை நடத்தினர். நானும் பங்குபற்றியிருக்கின்றேன். பின்னர் ஒரு தடவை நாங்கள் சில பேர்கள் கிளிநொச்சி போயிருக்கின்றோம். உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.1 point- மயிலம்மா.
1 pointநான் நேற்றிரவு எதிர்பாராமல் "ஆடு ஜீவிதம்" படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது......இங்கு நான் படத்தை விமர்சிக்க வரவில்லை......இதில் வரும் ஒரு காட்சி.....! அமலாபால் தன் வீட்டின் முற்றத்தில் இருந்த கிடுகுகளால் மறைத்து கட்டியிருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருப்பார்.....அங்கு வரும் அவரது கணவன் பிருத்விராஜ் அவரை அப்படியே ஈரப் பாவாடையுடன் தூக்கி வந்து, வீட்டின் அருகே ஒரு பெரிய ஆறு ஓடுகின்றது அந்த ஆற்றில் வீசுவார் பின் தானும் குதித்து அமலாபாலுடன் உல்லாசமாய் நீந்துவர்......இக் காட்சி எந்த விரசமுமின்றி அழகாக நயமாக படமாக்கப் பட்டிருக்கு......அதை எழுத்தில் வர்ணிப்பதாயின் அப்படியே மயிலம்மாவும் வாமனும் நீராடுவதை வாசிக்கவும்...... இந்தப் படம் இப்போதுதான் வந்தது......சில வாரங்களுக்கு முன்பே மயிலம்மாவில் இதுபோன்று நான் எழுதியிருந்தேன்....... இவை எதேச்சையாக நடப்பது அவ்வளவுதான்.......!1 point- தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
தமன்னா காவோலை தா…காவோலை தா என்றுதானே கேட்டவா? ஏன் மரத்தையே வெட்டி கொடுத்துள்ளார்கள்🤣. பிந்திய செய்தி வெட்டிய மரம் எட்டுக்கோடிக்கு ஏலம் போனது🤣1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........... 17. பின்பு மயிலம்மாவும் கனகமும் சுந்துவும் வந்து அவர்களின் அறைக் கதவைத் தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். கதிரையில் அஞ்சலா இருக்கிறாள். மயிலம்மா அவள் தோளில் கை வைத்து நீ பிள்ளை ஒன்றுக்கும் யோசிக்காதை, பயப்படாமல் இரு என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து இப்பவே இரவாகப் போகுது இனி எது செய்யிறதெண்டாலும் நாளைக்குத்தான் பார்க்கலாம். நான் போய் உங்களுக்கு சாப்பாடும் தேநீரும் எடுத்துக் கொண்டு வாறன் எண்டு கிளம்ப அவளைத் தடுத்த வாமன் அவங்கள் எல்லா இடங்களிலும் எங்களைத் தேடிக்கொண்டு திரிகிறாங்கள். அதனால் இன்றிரவே நாங்கள் தாலி கட்டி கலியாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். அப்ப கனகத்தின் புருஷன் வந்து நடந்தது நடந்து போச்சு, அவன் சொல்லுறதுதான் சரி அதெல்லாம் செய்யலாம் என்கிறார். கனகமும் அங்கபார் அவற்ர உசாரை என்று சொல்கிறாள். பின்பு வாமன் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எடுத்து அரசு விதானைக்கு விஷயத்தை சொல்லி அண்ணா என்ர நண்பன் சுந்து அங்க வருவான். உங்கட காரில் அவனோடு சென்று அஞ்சாலாவின் பெற்றோரையும் என் பெற்றோரையும் கூட்டிக்கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வர முடியுமோ என்று கேட்க மறுமுனையில் இருந்து சரியடா நான் எல்லாவற்றையும் கவனிக்கிறன். நீ சுந்துவை அனுப்பு. நீங்கள் அங்கேயே கவனமாய் இருங்கோ வெளில வரவேண்டாம் என்று சொல்கிறார். சுந்துவும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்கிறான். இங்கே கோமளம், வீட்டு முற்றத்தையும் கோயில் முற்றத்தையும் கூட்டி சாணி தெளித்து கோலங்கள் போடுகிறாள். அப்போது விதானையாருடன் காரில் இருவரது பெற்றோர்களும், பின்னால் சைக்கிளில் சுந்துவும் வந்து இறங்குகின்றார்கள். இவர்களை இறக்கி விட்டுட்டு விதானையார் காரை எடுத்துக் கொண்டு வலு வேகமாய் செல்கிறார். மற்றப்பக்கம் கனகத்தின் புருசனும் இவங்கட நண்பர்களுமாய் சேர்ந்து ஆங்காங்கே மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சாறு சேவல்களைப் புடுங்கிக் கொண்டு வந்து அடித்து கறிசோறு சமைக்கின்றார்கள். மயிலம்மாவும் அன்று அஞ்சலா குடுத்து விட்ட சாராயப்போத்தல்களை அவர்களிடம் குடுத்து கெதியாய் சமையுங்கோ, இன்னும் என்னென்ன பிரச்சினை நடக்கப் போகுதோ தெரியாது என்று சொல்லிவிட்டு போகிறாள். அயலில் உள்ளவர்கள் அரசல் புரசலாய் விசயம் கேள்விப்பட்டு தங்கள் தங்கள் வீடுகளில் இருந்த கறி சாமான்களுடன் வந்து வேலைகள் செய்கிறார்கள். பூவனமும் புருசனுடன் காரில் வந்து இறங்குகிறாள். அவளும் கோமளத்துடன் சேர்ந்து அஞ்சலாவை மணப்பெண்ணாய் கூந்தலில் மலர் மாலைகள் மற்றும் சடைநாகம் எல்லாம் சூட்டி அலங்கரிக்கிறார்கள். வேறு சிலர் அம்மனுக்கும் மணமக்களுக்கும் மலர்களைச் சேகரித்து மாலைகள் கட்டுகிறார்கள். பூவனத்தின் புருசனும் வாமனின் தந்தையும் கோயிலைக் கழுவி விட சுந்து சென்று ஐயரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வருகிறான். வாமனின் தாய் அவன் தங்களுக்குத் தந்த வேட்டி சேலைகளை பூவனத்திடம் குடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு உடுத்தி விடத் தருகிறாள். ஐயரும் அம்மனுக்கும் பட்டுசேலை உடுத்தி அருகில் இருக்கும் விநாயகர், முருகனுக்கும் புதுப் பட்டுடுத்தி அலங்கரித்திருக்கிறார். அந்நேரம் அரசு விதானையாரும் காரில் வந்து இறங்குகிறார். பெண்கள் தேவாரம் பாடிக்கொண்டிருக்க எல்லோரும் மலர்தூவி வாழ்த்த கோவில் மணி ஒலிக்க ஐயர் மந்திரம் சொல்லி அம்மனின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக் குடுக்க வாமன் அஞ்சாலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான். அப்போது ஒரு காரில் வைத்தியின் மனைவியும், மூத்த மகனும் வந்து இறங்குகிறார்கள். அவர்களுக்கு விதானையார் நடந்தவற்றை கூறியிருந்தார். வந்தவர்கள் தாலி கட்டுவதைக் கண்டதும் அங்கிருந்த தட்டில் இருந்த மலர்களை எடுத்து தூவி ஆசீர்வதிக்கிறார். சற்று நேரம் கழித்து பின்னால் வெள்ளை வானும் ஒரு மோட்டார் சைக்கிளும் வந்து நிக்கின்றது. வானில் இருந்து யோகிபாபு இறங்கி வருகின்றான். அவனுக்கு அங்கு தனது சித்திக்கு திருமணம் நடக்கிறதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கு. வந்தவர்களைக் கண்டு எல்லோரும் திகைத்து நிக்க மயிலம்மா முன் வந்து வைத்தியின் மனைவியிடம் அம்மா நீங்கள் பெரியவங்கள் பிள்ளைகளை மன்னிக்க வேணும். ஏனடி மயிலு, இதெல்லாம் என்ன நடுநிசியில் திடீர் திருமணம் என்று கேட்கிறாள்...... எல்லாம் உங்கள் சின்னமகனால்தான் இப்படி நடக்கிறது என்று மயிலம்மா சொல்கிறாள். அவள் யோகிபாபுவின் பக்கம் திரும்பி எடேய் சின்னவனே என்னடா இது என்று கேட்க, எனக்கு ஒன்றும் தெரியாதம்மா இந்தக் கல்யாணம் எனக்கும் திகைப்பாத்தான் இருக்கு என்று சொல்கிறான். அப்போது அஞ்சலா முன் வந்து இவர் பொய் சொல்கிறார் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டுபோய் தனது நண்பனுக்கு கட்டி வைக்கிறதுக்காக இன்று முழுதும் என் வீட்டுக்கு முன்னால் நூறுதரம் அந்த வானில் அங்கும் இங்குமாய் திரிஞ்சவர். நான் பயத்துடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தனான். அதோ அந்த வெள்ளை வான்தான், இப்பவும் அதுக்குள் ஆட்கள் இருக்கினம் வேணுமென்றால் போய்ப் பாருங்கள் என்கிறாள். மூத்த மகன் தம்பியைப் பார்த்து என்னடா வேலை இது.....அப்பாக்குத்தான் அறிவில்லை எண்டால் உனக்கு அறிவு எங்க போச்சுது. அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமா மடையாஎன்று ஏசிப்போட்டு டேய் யாரங்கே வானுக்குள்ளே இறங்கி வாங்கடா இங்கே என்று கத்த அதில் இருந்து நாலுபேர் கை கட்டிக்க கொண்டு முன்னால் வந்து நிக்கிறார்கள்.......! 🦚 மயில் ஆடும் .......... 17.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு......... 16. பின் சுந்து வாமனைப் பார்த்து நீ ஏதோ கவலையுடன் இருக்கிறதுபோல் தெரியுது. என்னடா விஷயம்...... அதடா வந்து அஞ்சலைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவனுக்கு சொல்கிறான். சரியடா .....அது அவர்களின் குடும்பப் பிரச்சினை.....அதுக்கேன் நீ கவலைப் படுகிறாய்..... அதில்லையடா ஏனோ மனசு கேட்க மாட்டேன் என்கிறது அதுதான்..... சரி நான் உன்னை ஒன்று கேட்கிறேன் நல்லா யோசித்துப் பதில் சொல்லு......நீ அஞ்சலையை விரும்புறியா...... அதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியல்லையடா..... சரி இதுக்கு பதில் சொல்லு.....அவளைக் கலியாணம் செய்ய உனக்கு விருப்பமா..... ....ம்.....செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது.....ஆனால் அவர்களும் சம்மதிப்பினமோ தெரியாது..... சரி பக்கத்தில்தானே வீடு, வா போய் கதைத்துப் பார்க்கலாம்.....இருவரும் அஞ்சலை வீட்டுக்கு வருகிறார்கள்....... அவர்கள் வரும் வழியில் அவர்களைக் கடந்து ஒரு வெள்ளை வானும் கூட ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் (அவ்வூருக்கு அறிமுகமில்லாதவர்கள்) குறுக்கும் நெடுக்குமாய் போய் வருகிறார்கள். வானில் சாரதிக்கு பக்கத்து ஆசனத்தில் வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான். ஒவ்வொரு முறையும் இவர்களைக் கடக்கும்போது வாகனத்தை மெதுவாக செலுத்தி நன்றாகப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு முன் வந்து நிக்க நாயும் மெதுவாகக் குரைத்துக் கொண்டு வாலாட்டுகின்றது. அதன் அருகில் அஞ்சலையின் அப்பா நிக்கிறார். அவர் உள்ளே பார்த்து மகளைக் கூப்பிட அவளும் ஜன்னலைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து இவர்களை அழைத்துக் கொண்டு போகிறாள். அப்பாடா நல்ல காலம் இப்ப நீங்கள் வந்தது..... ஏன் ஏதும் பிரச்சினையோ என்று வாமன் கேட்கிறான்..... ஓம்....அப்படித்தான் தெரியுது.....ஒரு வெள்ளை வானில் அவன் அடிக்கடி அங்கும் இங்குமாய் போய் வருகிறான். அதோடு இரண்டுபேர் மோட்டார் சைக்கிளிலும் .....அங்க மெதுவாய் திரும்பிப் பாருங்கோ என்கிறாள். அப்போது அந்த வான் மெதுவாக வீட்டை நோட்டம் விட்டபடி கடந்து போகிறது..... சுந்து சொல்கிறான் இப்ப நாங்கள் வரும்போது கூட இவங்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்த்துக் கொண்டு போனவங்கள். வாமனுக்குப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிடாதையுங்கோ நாங்கள் வந்திட்டமெல்லோ இனி நாங்கள் பார்த்துக் கொள்ளுறம் என்கிறான். சுந்து வெளியே சென்று கேட்டடியில் நின்று கொண்டு வாமுவை ஜாடையால் அழைத்து நீ போய் அவவிடம் கேளடா அல்லது நான் போய்க் கேட்கவா என்று சொல்ல .... இருடா நானே போய்க் கேட்கிறேன் என்று சொல்லி அவளிடம் வருகிறான். வந்தவன் அவள் கையைப் பிடித்து மா மரத்தின் பின்னால் அழைத்துச் சென்று, அஞ்சலா இது இந்த நேரத்தில் கேட்பது சரியோ எனக்குத் தெரியாது ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தெரிகிறது. உங்களுக்கு என்னைக் கலியாணம் செய்ய சம்மதமா யோசித்து சொல்லுங்கோ...... என்னடா திடுதிப்பென்று இப்படிக் கேட்கிறாய்.... நீங்கள் இல்லையென்று சொன்னாலும் பரவாயில்லை......ஆனால் யாராலும் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வர நான் விடமாட்டன்.....கொஞ்சம் யோசித்தவள் இரு வாறன் என்று போய் தந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து கதைத்து விட்டு வந்து ....ம்....சம்மதம் என்று சொல்கிறாள். அவளை அன்பு பொங்கப் பார்த்தவன் சுந்துவை அழைத்து கைகளால் "ஹார்ட்" காட்டி ....ம்......என்கிறான். கொஞ்ச நேரம் வெளியில் நின்று பார்க்கிறார்கள்.போன வானையும் ஆட்களையும் காணவில்லை. உடனே வாமன் அவளின் பெற்றோரை கவனமாய் இருங்கோ,கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளையும் கூட்டிக்கொண்டு பின் தோட்டத்தால் வேகமாய் நடந்து வர சுந்துவும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மூவருமாக வயலுக்குள்ளால் வெகுதூரம் வந்து ஒரு ஒழுங்கையையைப் பிடித்து, சுந்து மோட்டார் சைக்கிளை ஓட்ட அஞ்சலா நடுவில் இருக்க வாமன் பின்னால் ஏற வண்டி வேகமாய் வந்து மயிலம்மா வீட்டின் முன்னால் நிக்கிறது......... அங்கு முன் முற்றத்தில் இருந்து மயிலம்மா,கனகம் அவளின் புருஷன் மகள் கோமளம் எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பொடியளுடன் அஞ்சலாவைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள். சுந்து சென்று அவர்களுக்கு நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல வாமுவும் அஞ்சலையும் அவர்கள் வீட்டு முன் அலுவலக அறைக்குள் செல்கிறார்கள். சுந்து அவர்களிடம் வந்து அம்மா அவர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகினம். இப்ப அவர்களுக்கு வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபுவால்தான் பிரச்சினை. அதுதான் இங்கு கூட்டிக்கொண்டு வந்தனாங்கள் என்று சொல்கிறான்..... 🦚 மயில் ஆடும்......... 16.1 point - தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.