Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19134Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்8Points34974Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20019Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/18/24 in Posts
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.3 points
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG LSG MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.2 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..2 points
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
@தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣2 points
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
குமாரசாமி அண்ணை... நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂2 points
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இதற்கான சின்ன உதாரணம் Pearl harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான காணோளியை இணைக்கிறேன். பி. கு அனுமதி பெறாமலே😂2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி🙏🥰......................................1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். நன்றி1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் மிஸ்ரர் கட்டத்துரை🙏🥰...........................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀1 point- 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ரஸ்யரை விட துரைமார் கூடப்பேர் போயிருக்கினம். 2 வருடம் முன் ஊசிப்போன வடைக்கதை எல்லாம் பெரிய பலனை தராது. வேறு வகையில் முயற்சிக்க வேணும்🤣. லூசனுகள், UK Foreign Office க்கு என்ன தெரியும் ? நாம் 20+ வருடம் நாட்டுக்கு போகாத அனுபவத்தில் சொல்கிறோம். போய்டாதேங்கோ….நரகம்…நரகம்🤣 அதை நல்லூர் கந்தன் பொறுப்பில் விடுங்கள்🤣.1 point- கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......! 😂1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523 முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!1 point- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
1 point- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்: alua camp de mar நன்றி.1 point- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
1 point- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றிகள் அண்ணை நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.1 point- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று.1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஒரு கொத்து ரொட்டி இரண்டு லட்சமாம்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல, சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். 1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது. பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார். அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார். தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/1726641 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார். கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) KKR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) RR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) DC #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) SRH 4) மே 21, வெள்ளி 19:30 அகமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st place team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அகமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator MI 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) LSG 10) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbir Singh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH அக்கா வெற்றிகரமாக அதிஷ்டத்தை நம்பி இறங்கியுள்ளார். ஜட்ஜ் ஐயா எதோ பார்த்து புள்ளியை போடுங்க....😃 கீழே மிதிபட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடப்போறேனோ தெரியாது1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
முடிந்தளவு யாழில் இம்முறை எடுத்து வரும் தின்பண்டங்களை உற்பத்தியாளர்களிடமே வாங்கினேன். வெளிநாட்டுக்கு, எனக்கு என சொல்லியே வாங்கினேன். ஒருவர் கூட ஏய்க்கவில்லை. அதுவும் அந்த எள்ளுபாகு வித்த அம்மா, “சாப்பிட்டு பாருங்கோ, சாப்பிட்டு பாருங்கோ” என எனக்கும் ஆட்டோ ஓட்டியவருக்கும் சேர்த்து ஒரு பக்கெட்டையே இனாமாக தந்து விட்டார். நான் வங்கியதோ வெறும் 10 பக்கெட். இதில் இவர் இனி எங்கே இலாபம் பார்பது?(11க்கு விலை கொடுத்தேன்). போர் பலதை பறித்து கொண்டாலும் என் மக்களின் என் மக்களின் தன்மானத்தை, நாணயத்தை பறிக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா சமூகத்திலும் கறுபாடுகள் உண்டே. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. இதை இங்கே தூக்கி பிடிக்கும் புலம்பெயர் சமூகம் மட்டும் என்ன திறமா? இலண்டன் கடைகளில் விலை அடிக்காமல், நான் போனால் ஒரு விலையும், என் இளவயது மகன் போனால் கூடிய விலையும் பல தரம் அடித்துள்ளார்கள். எனது திரியில் கூட பதிந்தேன், எப்படி 80ரூபாய்க்கு ஊரில் மஞ்சள் கடலை வாங்கி அதை இங்கே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என.1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
பஞ் அண்ணா சொன்னது முற்றிலும் உண்மை இதை விட பலவிதமாய் யோசிச்சு காசு அடிக்கும் கூட்டம் இருக்கினம் / அப்படியான கூட்டம் கஸ்ரம் என்று சொல்லி கஞ்சா வேண்டுவதுக்கு பல பொய்களை அவுட்டு விடுங்கள் நம்மல மாதிரி ஏமாளியில் உண்மை நிலவரம் தெரியாம பார்கேட்டில் இருப்பதை எடுத்து கொடுத்து விடுவோம் பாவம் பார்த்து.......................1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ரைட்டு, சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣. பிகு 1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை. யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர். எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர். @MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே. 3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். “நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. பிகு:பிகு: மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும். காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.1 point- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ஒரு குட்டி ஸ்டோரி 50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- "உனக்கு தலை குனியும் !"
1 point"உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இது யாழ்ப்பாணத்தில் இல்லை. பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது. https://www.aloeus.com/devils-point-veravil/1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சின்ராசு - உந்த மத்தாப்பு கூட இல்லாமல் அதை போய் ஈரானிடம் வாங்கியதென்றால்- சின்ராசிட சீத்துவத்தை யோசிச்சி பாருங்க🤣. போகும்…..ஆனா தாக்காது🤣 பிற்குறிப்பு கூலிக்கு பிளைட் ஓட்டிய, அன்றைய ரஸ்ய சார்பு அரசால் அனுமதிக்க பட்ட உக்ரேன் விமானிகளுக்காக உக்ரேனை எதிர்தவர்களுக்கு: 1979-2024 வரை இலங்கையின் உற்ற தோழன் ஈரான். போரில் எண்ணை வாங்க காசு இல்லாமல் இலங்கை நிண்ட போதெல்லாம் - தேயிலைக்கு எண்ணை பண்டமாற்று செய்த நாடு. அதே போல் ஈரானின் மீதான பொருளாதார தடையை தமக்கு தேயிலை அனுப்ப விலக வேண்டும் என மேற்கிடம் பரிந்து பேசி, ஈரானுக்கு உதவிய நாடு இலங்கை.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இந்த லிங் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா @பாலபத்ர ஓணாண்டி 🤣🤣🤣 இஸ்ரேலில் ஒரு சிறுமிக்கு தலையில் சிராய்ப்பு காயம். அதை விட வேறொன்றும் இல்லை. இது தன் மக்கள் மத்தியில் நானும் ரவுடிதான் என காட்ட ஈரான் செய்த புஸ்வாண வேடிக்கை. ——- உண்மையில் தூதரகத்தை தாக்குவது மிக மோசமானதும், எதிர்பாராத பின்விளைவுகளை தரகூடியதும், சட்டமீறலுமாகும். ஆனால் இஸ்ரேல் தந்திரமாக உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி ஈரானிய முல்லா அடிப்படைவாத அரசு நீண்ட சிக்கலில் மாட்டியுள்ளது. @வாலி இதை பற்றி முன்னர் எழுதினார். ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இதுவரை நடந்தது புரொக்சி யுத்தம். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வைத்து ஈரானும், உரிமை கோராமல் இஸ்ரேலும் தாக்கி கொண்டன. உள்நாட்டில் ஏலவே பலர் எதிர்க்கும் ஈரானிய முல்லா அடிப்படைவாதம் - இஸ்ரேல் மீது கை வைத்தால், ஈரானில் தன் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து நேரடியாக இறங்குவதில்லை. ஆனால் மேற்கு, இஸ்ரேல் படிபடியாக முல்லாகளிடம் இருந்து ஈரானை மீட்பது (regime change) என்ற முடிவுக்கு வந்து, ஈரானை சீண்டி இந்த நிலையை உருவாக்கியுள்ளன. தூதரக தாக்குதல் ஈரானுக்கு ஒரு செக்மேட். பதிலடி கொடுக்காவிட்டால் - உள், வெளிநாட்டில் முல்லாக்கள் மீதான, பயம், மரியாதை போய் விடும். பதிலடி கொடுத்தால் - முல்லாக்கள் ஆட்சியையே ஆட்டம்காண வைக்க கூடிய போர் வரக்கூடும். ஆனால் நடந்தது என்ன? ஈரான் தாக்கியும், ஒரு பாதிப்பும் இல்லை. மொக்கேனப்பட்டதே மிச்சம். ஆனால் இனி இதை வைத்தே இஸ்ரேல் எழும்பி ஆடும். இது மட்டும் அல்ல, முதலில் ரஸ்யாவை உக்ரேனில் அரக்க முடியாமல் மாட்ட வைத்ததும் - சிரியா போல் இங்கேயும் ராஸ்யா தலையிடுவதை தடுக்க அல்லது தலையீட்டின் பாதிப்பை குறைக்க. இங்கே நடப்பது ஒரு 4D chess விளையாட்டு.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.1 point - வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.