Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்11Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points19125Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்8Points1487Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/21/24 in all areas
-
எலும்பு வலு இழப்பது ஏன்?
4 points50 வயதில் இருந்து, மிகக்கூடிய விழும் விபத்து நடப்பது, படிகளில், குறிப்பாக மாடிப் படிகளில் இறங்கும் போது (uk சராசரி வீடுகளுக்கு மாடி இருப்பதால், UK இல் அதிகம்). இதன் காரணம், இறங்கும் போது (அல்லது அதை ஒத்த அசைவில், உ.ம். துள்ளிச் செய்யும் Lunge உடற் பயிற்சியில், கீழ் சென்று நிலை எடுப்பது, மேல் எழும்புவதிலும் கடினம், அனால் செய்பவர்களுக்கு இதன் வேறுபாடுணர்வதில்லை, காரணம் சமநிலை பேணுவதில் உள்ள பழக்கமும், பயிற்சியும்), குறிப்பிட்ட ஒரு தசை நார் ஏறத்தாழ ஒரே நேரத்தில் குறுகிறது, நீள்கிறது. (ஆனால், நான் நினைக்கிறன், காலம் போக, இது 40 வயதில் இந்த மாடிப்படி இறங்கும்போது விழும் விபத்து பிரச்சனை தொடங்கும். ஏனெனில், இருப்பது (sitting), நவீன புகைத்தலாக மாறி வருகிறது. சில கம்பனிகள் இதை கவனத்தில் எடுத்து, நிற்கும் நேரத்தை கூட்ட கதிரைகள் , மேசையில், ஒன்று கூடும் இடங்களில் நீக்கி விட்டன, வேலை முறையையும் மாற்றி உள்ளன). அனால், 50 வயதில் இருந்து, படி இரங்கி ஏறுதல் மற்றும் கவனமும் அவசியம் , மற்றும் எல்லா அங்கங்களையும் கிரமமாக பாவிப்பது அவசியம். பாவிப்பதால் தான் மூளைக்கு தெரிகிறது, ஆம், குறிப்பிட்ட அங்கங்கள் பாவிக்கப்படுகிறது, அவற்றுடன் அதன் (மூளையின்) தொடர்பாடலை உற்சாகமாக வைத்து இருக்க வேண்டும் என்று. பாவிக்காவிட்டால்,மூளையுடன் அங்கங்களின் தொடர்பாடல் நலிவடைந்து, கிட்டத்தட்ட அங்கங்களின் அசைவுகளை மூளை தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்து, அங்க அசைவுகளை மூளை அணைத்து விடும் நிலைக்கு வருகிறது. அசைவுகள் குறையும் போது, படிப்படியாக, அங்கங்கள் கிட்டத்தட்ட துருப்பிடிக்கும் நிலையை அடைகின்றன. மற்றது, muscle mass (தசை திணிவு) குறைவடைதல், 50 இல் இருந்து, ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஆக குறைந்தது 10% ஆல் குறைகிறது. இதன விளைவு, வெகு இலகுவாக விழுவது, முறிவது போன்ற விளைவுகள். முக்கியமான பிரச்சனை, சாதாரண அசைவில் எல்லா தசை நார்களும் பங்கெடுப்பதில்லை, அல்லது பங்கெடுப்பது குறைவு. (உ.ம். வேறு பதிவில் சொல்லி இருக்கிறேன், வயிற்று, நெஞ்சு கோறை தசை நார்கள் பாவிப்பது மிக குறைவு (ஆனால், உண்மையில் பாவிக்க வேண்டும்). பலருக்கு அப்படி தசை நார்கள் இருப்பதாய் உணர்வதில்லை, அறிவதில்லை. மருத்துவ, உயிரியல் துறையில் இருப்பவர்களுக்கு தெரியும், ஆனால், பயிற்சி இல்லாமல் அவை பாவிக்கப்படுவது இயல்பாக வராது.) (எனவே, தர்க அடிப்படையில் பார்த்தல், muscle ஐ இயன்ற அளவு கட்டி எழுப்புவது 50 இல் இருந்து அவசியமாகிறது, அல்லது குறையும் வீதத்தை குறைப்பது. இதில் உடற்பயிற்சி பெரிய பங்கு வகிக்கிறது) முதல் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தாவிட்டாலும், 50 ஐ அண்மிக்கும் போது மிகுந்த கவனம் எடுத்து, இயன்ற அளவு, கிரமமாக உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் செய்ய வேண்டும். மற்றும் உடம்பை, உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் மூலம், இயன்ற அளவு, தொடர்ந்து இந்த அசைவு செய்ய முடியாது (கிட்டத்தட்ட சவால்) என்பதை அவ்வப்போது எதிர்கொள்ள வைக்க வேண்டும். இந்த பயிற்சி மூளைக்கும் பொருந்தும். ஏன் 50 களில் இது வீறுகொண்டு தொடங்குகிறது என்பதற்கு (ஏனெனில் உடம்பு சரிவு தொடங்குவது 30 க்கு பின்) வயது போகிறது, டெஸ்ட்ரோன் குறைகிறது, மாதவிடாய் நின்று விடுகிறது என்ற பொதுவிளக்கங்களை என்பதை தவிர வேறு விளக்கங்கள் நான் அறியவில்லை. (இயன்ற அளவு செய்தால் கிடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை).4 points
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்3 points
-
எலும்பு வலு இழப்பது ஏன்?
3 pointsஎலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு. காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு. என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி? முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis3 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல எமக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் நாம் தமிழரில் 💯 வீதம் எமது போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். எவரையும் பகைக்காது நாம் பயணிப்பதில் தான் எமது அடுத்த கட்டம் தங்கியுள்ளது.3 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமாகாவையும் ஈழப்போராட்டத்தையும் பிரிக்கமுடியாது.. எனக்கு நினைவு தெரிந்து தொண்ணுறுகளில் கிழமைக்கு ஒரு செய்தியாவது உதயனில் பாமாக ஈழத்தமிழருக்காக செய்யும் போராட்டம் பற்றி அல்லது ராமதாஸ் ஈழத்தமிழருக்காக பேசியது பற்றி செய்தி வரும்… இப்பொழுது நாம் தமிழர் செய்வதுபோல அந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் எமக்காக குரல் கொடுத்த சொந்தங்கள் அவர்கள்.. அந்த நன்றியை ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்ககூடாது..( இந்த வரிசையில் திராவிட இயக்கங்களும் வரும்)3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 வீரப் பையன்26 70 2 முதல்வன் 70 3 சுவி 70 4 ஏராளன் 70 5 நிலாமதி 70 6 அஹஸ்தியன் 70 7 ஈழப்பிரியன் 70 8 கல்யாணி 70 9 கந்தப்பு 70 10 கறுப்பி 70 11 எப்போதும் தமிழன் 70 12 வாதவூரான் 70 13 கிருபன் 70 14 நீர்வேலியான் 70 15 கோஷான் சே 70 16 நுணாவிலான் 70 17 புலவர் 70 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நிறைபெறும் ஞாயிறு 19 மே அன்று புள்ளிகள் வழங்கப்படும். சறுக்குமரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம் 😃2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
2 points
- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நானும் பங்குபற்றுகின்றேன். அநேகமாக முதல் இடத்தைப் பிடிப்பேன்😂2 points- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஏன் சகோ அப்படி நினைக்கிறீங்கள்.........................பாமகா கட்சியில் இருந்து மறைந்த ஜயா காடுவெட்டி குரு தமிழ் நாட்டில் இருந்த படியே யாருக்கும் தெரியாம பல நல்லதுகள் கடந்த காலங்களில் செய்து இருக்கிறார் எம் போராட்டத்துக்கு..................................................... வன்னியர்கள் தமிழகம் எங்கும் இருக்கிறார்கள்............................அண்ணன் வேல்முருகனை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா மீதியை அவரே சொல்லுவார் அல்லது ஜயா காடுவெட்டி குரு கூட இருந்தவர்களிடம் கேட்டு பாருங்கோ.......................ஜெயலலிதாவின் அடக்குமுறைய எதிர்த்து பாமகா 1993களில் தலைவருக்கு ஆதரவாய் பெரிய மாநாடு போட்டவை..........................ஜயா காடுவெட்டி குருவின் பேச்சை அதிக வன்னியர்கள் விரும்பி கேட்பினம்.....................இவர்களுடன் வீரப்பனுக்கும் நல்ல தொடர்வு அன்பு பாசம் இருந்தது அந்த கால கட்டத்தில்.....................வீரப்பனும் வன்னியர் தானே.................................ராஜிவ் கொலைக்கு பிறக்கு வன்னியர்கள் தான் எம் போராட்டத்துக்கு துணை நின்றவை............................. சிங்கள அரசு எத்தனை பொருட்களுக்கு தடை போட்டவை.........................அத்தனை பொருட்களும் தமிழ் நாட்டில் இருந்து கடல் வழியாக வந்து கொண்டு தான் இருந்தது.....................வன்னி தலைமைக்கும் இவர்களுக்குமான ரகசியம் உறவே................................2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அதே 1% தான். தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால். பிகு இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎 ————- @nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்2 points- "இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள்"
அன்பு நண்பர்களுக்கு: இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும், ஆனால் வெவ்வேறாக உள்ளன. உங்களின் விருப்பம் தெரிவித்தால், அவையை நான் இங்கு பதிய முயலுவேன் அல்லது லிங்க் தருவேன். நீங்கள் வாசித்து உங்கள் கருத்துக்கள் பதியும் பொழுது நானும் அதனுடன் சேர்ந்து வளர்ச்சியடைவதுடன் கட்டுரைகளும் மேலும் திருத்தப்பட்டு அழகு பெறுகிறது! நன்றி தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / 82 parts [இந்த தமிழ் கட்டுரையை உடனடியாக அல்லது எல்லோருக்கும் தேவையற்ற ஆழமான விபரங்களைத் தவிர்த்து 36 பகுதிகளாக சுருக்கி பதிவிடவுள்ளேன்] Origins of Tamils? [Where are Tamil people from?] / 82 parts "Scientific Contributions [or glories] of Ancient Tamils" / 16 parts தமிழரின் உணவு பழக்கங்கள் / 27 parts FOOD HABITS OF TAMILS / 27 parts 'Story or History of writing' / 25 parts 'எழுத்தின் கதை அல்லது வரலாறு' / 25 parts An analysis of history of Tamil religion / 20 parts "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / 20 parts "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / 30 parts நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] / 30 parts Superstitious Beliefs Of Tamils / 19 parts தமிழரின் நம்பிக்கைகள் [மூட நம்பிக்கைகள்] / 21 parts தை மாதம்{mid of January} ஒரு சிறப்பான மாதம்! / 04 parts Thai[mid of January]is a special month for Tamils! / 04 parts Jallikattu-An ancient Tamils bull taming sport / 02 parts ஜல்லிக்கட்டு-ஒரு வீரமிக்க பண்டைய தமிழர் விளையாட்டு! / 02 parts "பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்" / 06 parts "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / 04 parts Irrigation of Ancient Tamils, Mesopotamia to South India / 04 parts "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / 05 parts Do we need to celebrate Deepavali and Deify Rama as God? / 05 parts Heroes [Warriors] of Purananuru / 05 parts புறநானுற்று மா வீரர்கள் / Heroes [WARRIORS] of Purananuru / 05 parts FORGET GOD[RELIGION] FOR THE TIME BEING;AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” / 04 parts ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / 04 parts Is Saivism the same as Hinduism[vaidika-dharma ] or is it a different one? / 04 parts சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?அல்லது வேறா? / 04 parts இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / 12 parts Death & Its Beliefs of Tamils / 12 parts "தமிழ் புத்தாண்டு" / 02 parts "Tamil New Year" / 02 parts "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் / 02 parts "Crimes against humanity / 02 parts "முதுமையில் தனிமை" / 03 parts விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / 02 parts தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? / 02 parts கொரோனா வைரஸ் / வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ? / 04 parts கடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து / 04 parts "ஒருபால் திருமணம்" / 04 parts "same-sex marriages" / 04 parts உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / 10 parts "முதல் மற்றும் இரண்டாவது கொரோனா வைரஸ் அலைகள்" / 04 parts அன்றும் இன்றும் / 04 parts "பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்" / 03 parts "புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! / 02 parts "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / 10 parts "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"/ பல பண்டைய பாடல்களின் வரிகள் ஊடாக ஆகஸ்ட் 07,2016 நட்பு தினத்தில் ஒரு நட்புடன் கூடிய காதலுக்காக எங்கும் ஒரு இளம் பெண்ணின் சிறு கதை/ 05 parts "தோஷமும் விரதமும்" / 2 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை [Human vision] / 2 parts "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 4 parts "புறநானூற்று மாவீரர்கள்" / 8 parts 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / 10 parts "தமிழர்களின் பண்டைய நான்கு கல்கள்" / 08 parts மொழியின் தோற்றம்: மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? / 10 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை / 02 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / 03 parts "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / 05 parts "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை உறவே அவர்கள் ராஜுவ் கொலைக்கு பிறக்கு எங்கட போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்தவை அப்போது யாழ்ப்பாணம் எம்மவர் கட்டு பாட்டில் இருந்தது 1995ம் ஆண்டு சிங்கள இராணுவம் யாழ்பாணத்தை பிடித்த பிறக்கு தான் வன்னிக்கு அதிக மக்கள் இடம் பெயர்ந்து போனவை அதே அண்டு தான் என்ற அம்மாவும் இறந்தவா.......................அப்ப நான் சிறுவன் ஆம் நீங்கள் சொல்வது சரி பாமகா சாதி வெறியர்கள் ஆனால் அந்த கட்சியில் இருந்தவர்கள் எம் போராட்டத்துக்கு பல நன்மைகள் செய்தவை அரசியலில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் வேதனை அளிக்கும் அவர்களை பலர் கேலியும் கிண்டலும் செய்வது அதிகம்..................... 2002ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளுக்கு மருத்துவர் ஜயா காணொளி மூலம் வாழ்த்தினவர் அந்த காணொளிகள் 2009ஓட யூடுப்பில் இருந்து நீக்கப் பட்டு விட்டது 2012களில் அன்புமணி ஈழத்து இன அழிப்பை பற்றி ஜனாவில் பேசினவர் அவர்கள் செய்த நிறைய நல்லதுகள் இருக்கு அதை நாங்கள் எப்பவும் மறக்க கூடாது🙏🥰..............................1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 02 கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது. தென்னிந்தியா பூர்வீக கலாசாரம் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது. புராதான வரலாற்றுக்களிலும் கிராமிய கதைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டு காலமாக உறவுகள் இருந்து வந்தமை தெரிவிக்கப் பட்டுள்ளது. புராதான இலங்கையில் இராவணனும் இராட்சதர்களும் வசித்த வரலாறும் இயக்கர்கள், நாகர்கள் சீவித்த சரித்திரங்களும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கின்றன. எனவே, இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன் பின்னர் அப் பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas], இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5 ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப்படுத்தப் படுகிறது [nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க. இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala]. பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம். பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும் மணி மேகலையும் கூட யாழ் குடா நாட்டை நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டு பிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள் [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம். இதில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன் அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை எடுத்து காட்டாக அடுத்த பகுதியில் விளக்கத்துடன் தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்தும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும்1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4)7%-8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) ( தர்மபுரி, ஆரணி,தேனி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 32 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 point- பெயர் மாற்றங்கள்.
1 point1 point- "ஏமாற்றம்"
1 point"ஏமாற்றம்" நாம் எதிர் பார்த்தது போல ஒன்று நடைபெறவில்லை என்றால் எமக்கு ஒரு ஏமாற்ற உணர்வு தானாக தோன்றி விடுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதரிலும் எதோ ஒரு வேளையில் இப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. என்றாலும் அதன் வலிமை தாக்கம் வேறு படுகிறது. சில பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவை விரைவில் மறந்து விடப் படுகின்றன. ஆனால் சில, வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் கவலையையும் கோபத்தையும் கொடுத்தவாறே இருக்கிறது. நான் இந்த இரண்டையும் கண்டவன். "தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்!" நான் பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டு இருக்கும் காலம் அது. நான் பல வேலை நிறுவனங்களுக்கு மனுப்போட்டு நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன். படிக்கும் காலத்தில் நான் ஓரளவு சராசரி மாணவன். எனது மறுமொழியும் பரவாயில்லாமல் இருந்தது. ஆகவே நான் விரைவில் வேலையில் சேர்ந்து, எம் குடும்ப நிலையை உயர்த்துவேன் என திடமாக நம்பினேன். 'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்று யாரோ பாடியது காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் எந்த நேர்முகத் தேர்வுக்கும் இதுவரை வரவில்லை. அது என்னுள் எதோ ஒரு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. நானும் விடாமல் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிக நேர்த்தியாக உடையணிந்து, மகிழ்வாக நேரத்துடன் அங்கு சென்றேன். எனது முறை வர, மிக நிதானமாக புன்னகை தவழ அங்கு உள்ளே சென்றேன். நிறுவனத்தின் மேலாளர் எனக்கு வாழ்த்து கூறி கதிரையில் அமரும்படி பணிவாக வேண்டினார். நானும் பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறி பணிவுடன் அமர்ந்தேன். அதன் பின் அவர் எனது படிப்பு சம்பந்தமான சான்றுகளை பார்த்துவிட்டு, வேலையுடன் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்டார். எல்லாவற்றுக்கும் நான் உடன் உடன் பதில் கொடுத்தேன். என்றாலும் இறுதியில் அவர் தனது தலையை ஆட்டியபடி, உனக்கு செய்முறை அறிவு பத்தாது, ஆகவே இந்த வேலைக்கு இம்முறை உன்னை பரிசீலிக்க முடியாது என்று ஆறுதலாக, அமைதியாக கூறி கைவிரித்து விட்டார். எனக்கு மிகவும் கோபமாகவும் கவலையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தாலும், அதை வெளியே காட்டாமல், அந்த அறையில் இருந்து வெளியேறினேன். எப்படியாகினும், ஒரு மாதத்தின் பின் வந்த என் இரண்டாவது நேர்முகத் தேர்வில், அவர்கள் என்னை வேலைக்கு உடன் எடுத்ததுடன், முதல் ஆறு மாதம் பயிற்சி எந்திரவியலாளராக நியமித்து, எனக்கு தேவையான நடைமுறை அறிவு தந்து, என் துறையில் நான் உயரவும் வழிவகுத்தனர். அது மட்டும் அல்ல, மேலாதிக்கப் கடல் பொறியியல் பயிற்சிக்கு ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகம், ஜப்பானுக்கும் ஒரு ஆண்டு அனுப்பினார்கள். அதனால் முதல் ஏற்பட்ட ஏமாற்றம் தானாக மறைந்தே போய்விட்டது. "எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உடன் பிறப்புகள்! ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்!" ஜப்பான்னால் வந்தபின் எனக்கும் திருமணம் நடந்து, மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களாக மகிழ்வாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. நாமும் நாட்டின் சூழ்நிலையால், குடும்பத்துடன் லண்டன் போய், அங்கு நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்தோம். பிள்ளைகளும் நன்றாக படித்து, மூவரும் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் பெரும்பாலும் நாம் இருவருமே வீட்டில் இருந்தோம். மகன் வீட்டில் இருந்தே பல்கலைக்கழக படிப்பு தொடர்ந்தார். இரு மகளும் தூர இடத்தில் படிப்பதால், அங்கு விடுதியில் இருந்தனர். அப்படியான ஒரு நாளில் நானும் மனைவியும் கதைக்கும் பொழுது, அவர் பிள்ளைகள் ஓரளவு தமது உழைப்பில், வாழ்க்கையில் நிரந்தரம் ஆனதும், நாம் இருவரும் கொஞ்ச ஆண்டு, மீண்டும் யாழ்ப்பாணம் போய் இருக்கவேண்டும் என்று தன் ஆசையை கூறினார். அது எனக்கும் நல்லதாகவே பட்டது. நானும் ஆமோதித்து தலை ஆட்டினேன். அவரும் மிக மகிழ்வாக, இரவு சமையல் செய்ய எழுந்து போனார். அடுத்த நாள், வழமை போல் வேலைக்கு காரில் காலை போனார். அவர் பகுதி நேர வேலை. நான் முழுநேர வேலை, நானும் அவரைத் தொடர்ந்து வேலைக்கு போனேன். அன்று மதியம் திடீரென ஒரு அவசர அழைப்பு , என் வேலைத்தளத்துக்கு வந்தது. அதில் உங்க மனைவி மயக்கமுற்று, அவசரமாக மருத்துவ அவசர ஊர்தியில் வைத்திய சாலைக்கு கொண்டு போகிறோம் என அவரின் வேலைத்தளத்தில் இருந்து வந்தது. நானும் மகனும் உடனடியாக அங்கு போனோம். அவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து, இனி அதன் மறுமொழிகள் வர, தேவையான சிகிச்சை அளிப்போம் என்றார்கள். ஆனால் அந்த மறுமொழிகள் வரும் முன்பே, சில மணித்தியாலத்தில் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவர் கடைசி நேரத்தில் இரு மகளையும் கூட பார்க்கவில்லை. "ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதியதாய் இருக்கிறது. சில நேரம் நம்பிக்கையால் .. சில நேரம் அன்பால் .." அவரும் நானும் போட்ட திட்டம், கனவுகள் எல்லாம் எம் கண்ணீரில் கரைந்து ஒடத் தொடங்கின. எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்த அந்த உன்னத உள்ளத்தை, இறப்பு என்ற ஒன்று திடீரென வந்து அவளையும், எம்மையும் ஏமாற்றி விட்டது. அவர் இறந்த பின்பு தான், அவரின் பரிசோதனைகளின் மறுமொழி வந்தது. அது மூளையுறை அழற்சி (Meningitis) என்று தெரிய வந்தது. இத்தகு அழற்சி, தீ நுண்மங்களினாலோ, பாக்டீரியாக்களினாலோ, அல்லது பிற நுண்ணுயிரிகளினாலோ, அரிதாகச் சில மருந்துகளினாலோ உண்டாகலாம் என எமக்கு விளக்கம் தரப் பட்டது. மனைவியின், பிள்ளைகளின் தாயின் பிரிவு, எம்மையும் அவளையும் ஏமாற்றிய அந்த நுண்ணுயிரிகள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அது என்ன செய்யும்? இன்னும், 17 ஆண்டுகள் தாண்டியும் அந்த ஏமாற்றம் மறையவே இல்லை, அவளை நாம் எவருமே மறக்கவும் இல்லை. இப்ப பத்தாம் நினைவு ஆண்டில் பிறந்த பேத்தியின் பெயர், அவளின் பெயரே ! அவள் கனவுகள் இனி என்றுமே நிறைவேறப் போவதில்லை. ஆனால், அந்த அழகு பெயர் "ஜெயா", எம் உள்ளங்களில் என்றுமே எம்மை ஏமாற்றாமல் குடியிருக்கும்!! "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வைக் கொஞ்சம் நினைத்தேன் முட்டி மோதிய ஏமாற்றம் மறந்து காட்டாத வாழ்வைக் கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டிப் பொண்ணு புன்னகை சிந்தி பாட்டிக் கையை மெல்லப் பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டிப் படைத்த ஏமாற்றத்தை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டுத் திக்கும் துள்ளிக் குதித்தேன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
எம்மீது மட்டுமல்ல சிங்களவர் மீதும் திணிக்கப்பட்ட ஒன்றாகும். தொடருங்கள். கவனமாக இருங்கள். நன்றி.1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்? ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள். ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பெரியப்பா அப்படி நீங்கள் முதல் இடம் பிடிச்சா உங்களுக்கு பிடிச்ச அனைத்து ஜடங்களையும் டென்மார்க்கில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன் பாவிக்கும் போத்தல்கள் 1 விஸ்கி போத்தல் 5 2 விரான்டி போத்தல் 5 3 சிமினொவ் போத்தல் 5 4 வக்காடி போத்தல் 5 இவை அணைத்தையும் குடிக்கும் போது தொட்டு நக்க ஊர் ஊருவாய் போத்தல் 5 இவையாவும் அனுப்ப படும் முகவரியை தனி மடலில் அனுப்பி வைக்கவும்🤣😁😂...............................1 point- வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
🤣 மேலே “சேற்றை வாரி” இறைப்பதாக எழுதியது உங்களுக்கல்ல. கட்டுரையை பதிந்ததால் உங்களை quote பண்ணினேன். தவறாக விளங்கி கடுப்பாகி விட்டீர்கள் போலும். அரசியல் ஆய்வாளர்கள் மீது ஒரு போதும் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போதும் நிலாந்தன் சொல்வதால் இது உண்மை என நான் சொல்லவில்லை. நான் கண்டு வந்து எழுதியதை நிலாந்தனும் சொல்கிறார். ஆனால் எனக்கு செய்வது போல் அவரை இலகுவாக கடந்து போக முடியாது.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி சிறியர், உண்மையில் இந்தியத் தேர்தல் தொடர்பாக எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. அதைக் கவனிப்பதும் இல்லை. ஆனால் மத்தியில் BJP வரவேண்டும் என்பது என் விருப்பம். அதுதான் இந்தியாவின் உடைவை வேகப்படுத்தும். தென்னிந்தியாவில் ஊழல்கள் அற்ற மக்கள் நலன்பேணும் அரசுகள் வரவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் காசுக்கு வாக்களிக்க மாக்கள் தயாராக இருக்கும்போது எனது விருப்பம் நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகள் சிறிதும் இல்லை. ஆனால் ஒன்றைக் கூற முடியும். அதாகப்பட்டது பொதுசனங்களே,..... நாம் தமிழரின் வரவும் அவர்களின் செயற்பாடும் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வையும, அரசியல் தொடர்பான ஆர்வத்தையும் இளையோரிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. இது வரவேற்கத்தக்க விடயம். அவ்வளவுதான். 😁1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2 15) தயாநிதிமாறன் திமுக)-1 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3 18)ரி ஆர் பாலு ( திமுக)-1 19)எல் முருகன் (பிஜேபி)-4 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்)-1 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? ஆம் 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்று 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? தெரியாது 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? குறைந்தது மூன்று 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பத்து 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( 0 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 25 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 15 40) 9 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 3 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 0 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 01 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointபுளியோதரை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ....... இனி வரும் வெய்யில் காலத்துக்கு வாய்க்கு ருசியாகவும் பயணத்துக்கு செமையாகவும் இருக்கும் ......! 😂1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ் நாட்டில் கம்மினீயூஜ் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்ர முழு பைத்தியம் இருக்கு ஆனால் அது எப்ப பார்த்தாலும் திராவிடத்துக்கு முட்டு கொடுக்கும் ஜயா நல்லகண்ணுவை தோக்கடிச்சு பிஜேப்பி எச் ராஜாவை வெல்ல வைச்சதே திமுக்கா தான்....................இப்ப பாசிச பிஜேப்பியை எதிர்ப்பாம், இது தான் திமுக்காவின் இரட்டை வேடம் இந்த முறை பல வாட்காளர் பெயர் தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு இருக்கு நல்ல தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தல் , 2019களில் ஓட்டு போட்ட பலரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இல்லை இந்த முறை , இந்த தொழிநுட்பம் வளந்த காலத்திலே இவளவு குளறு படிகள் செய்கினம் என்றால் இனி வரும் காலங்களில் எவளவு குளறுபடிகள் செய்வினம் தேர்தல் என்ற பெயரில்.....................ஓம் ஓம் இந்தியா ஜனநாயக நாடு நூற்றுக்கு நூறு நேர்மையா தேர்தலை நடத்தும் நாடு யாழில் வேற இதுக்கு ஒரு தேர்தல் போட்டி😏.................................................................................1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கம்மினீயூஜ்ட்டுகள் ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்தன.மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் மம்மதவின் வருகையோடு அவர்களின் ஆட்சி முடிந்தது.கேரளாவில் இன்னும் ஆட்சியில் இருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல்விபச்சாரம் பண்ணுகின்றன. இப்பொழுது 1 வீதம் வாக்குக் கூட இல்லை. தமிழ்நாட்டில் நல்ல கண்ணு மட்டும் தான் ஓரு உண்மையான கம்மினியூஸட்டாக இருக்கிறார்.தமிழநாட்டிலிலும் ஏனைய இடங்களிலும் காங்கிரசோடு உறவு வைத்திருக்கும் கம்னியூஸட்டுகள் கேராளாவில் காங்கிரசுக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன் என்கிறது கர்நாடக காங்கிரஸ் தமிழ்நாட்டில் காங்கிரசோடு உறவு வைத்துக் கொள்கிறது. கம்னியூஸ்ட்டுகள் தங்கள் கொள்கைககைக் காற்றில் விட்டு பல காலமகி விட்டடு. உழுத்துப் போன கம்னியூச கொள்கை எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டுவதுதான் அவர்களது அரசியல் சிந்ததந்தம். நடைமுறையில் எதனையும் சாதிக்க மாட்டார்கள்.தாங்களதான் அறிவுஜவுவிகள் மற்றவர்கள் எல்லாம் முட்டாள் பயல்கள் என்ற எண்ணம்தான் அவர்களின் கொள்கை.1 point- கருத்து படங்கள்
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஊழல்.. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு.. ரவுடிசம்.. போலி வாக்குறுதிகள்.. பணப்பட்டுவாடா.. வெகுமதிகள்.. எதிர்கட்சி சின்னங்களை பறித்தல்.. வாக்கு இயந்திரத்தில் மோசடி.. வாக்காளர் நிரலில் மோசடி.. சொந்தக் கொள்கைகளை முன்னிறுத்தாது.. எதிர்கட்சிகளை வசைபாடும் பிரச்சாரங்கள்.. போலிக் கூட்டணிகள்.. என்று சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஹிந்திய தேர்தல்களில் எந்த சனநாயகத்தன்மையும் இல்லை... என்ற அடிப்படையில்.. அதனை அங்கீகரிக்கும் விதமான இப்போட்டிகளில் ஈடுபடும் எண்ணமில்லை. அதுசரி.. வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் வைக்கினம்.. அதையேன் நாடு பூரா ஒரே நாளில் வைச்சு அடுத்த நாளே முடிவுகளை வெளியிட முடியாது. சன நாயகம் பிறந்த அமெரிக்காவில் கூட.. தேர்தல் நடந்து மாதங்கள் ஆன பின் முடிவு அறிவிப்பு என்பது இல்லையே. முடிவுகளை மாதக்கணக்கிற்கு இழுத்தடிப்பது.. மோசடிகளுக்கு இன்னும் கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். தெரிவுக்கு நன்றி கோசான்.1 point- "இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள்"
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
தொடருங்கள்🙏. புத்தரின் நான்கு பேருண்மைகளை நான் மிக இலகுவாக, எளிமையாக: 1. துக்கம் உள்ளது 2. துக்கத்தின் வேர் ஆசை 3. ஆசையை துறந்தால் துக்கத்கில் இருந்து விடுபடலாம் 4. 3ஐ அடுத்த கட்டமாகிய கொல்லாமை, காரூண்யம், அன்பு என்பனவற்றுக்கு நகர்தினால் - பிறவி கடலின் சுழற்சியில் இருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடையலாம். இந்த புரிதல் சரிதானா? —————- எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 02 புத்தர் நிர்வாணம் அடைந்து ஒன்பது மாதத்தின் பின் காற்றினூடாக பறந்து இலங்கைக்கு வந்ததாகவும், அவரின் முக்கிய நோக்கம் அங்கு வாழும் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட மனிதர்களை [sub human] அகற்றி, இலங்கையை மனிதர்கள் வாழும் இடமாக மாற்றுவது என்கிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள், இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது. உதாரணமாக, 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையிற் நவீன மனித இனத்தினன்னாக [modern human] பலாங்கொடை மனிதன் இருக்கிறான். அவனுடைய எலும்புக்கூடு 1950 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல, 2900 ஆண்டுகள் அளவில், இரும்பு கால பண்பாடு, உதாரணமாக, குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake] உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயி [‘First Farmers in Global Perspective’] என்ற ஆய்வு குறிப்பில் பதிந்துள்ளார். அவ்வாறே பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] விஜயனுக்கு முன் இலங்கையில் விவசாயம் இருந்ததை உறுதி படுத்துகிறார். மேலும் ஹோமோசேபியன் [Homo sapiens] தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, அவை பிரிக்கப் படும் முன் நடந்தே வந்திருப்பார்கள் என்கிறார். இவை இரண்டு பக்கமும் காணப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் இருந்து உறுதியாக நிறுவப்பட்டும் உள்ளது. அது மட்டும் அல்ல, R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தமது ஆய்வு மூலம் சிங்களவர்கள் தென் இந்திய தமிழர் மற்றும் கேரளத்தவர்களுடன் [‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’]. ஒத்து போகிறார்கள் என்கிறார். மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம், பாடல் 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். எனவே, ராணியையும் மற்றவர்களுக்கு மனைவிமார்களையும் பெற, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதை என இன்று சிங்களவர்களால் கருதப்படும் விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கும், மற்றும் விஜயனுடன் சேர்ந்த சிங்கள இனத்தின் முதல் மூதாதையர்களான அவனது எழுநூறு கூட்டாளிகளும் தமிழ் மதுரை பெண்களையே மணந்து, அவர்களினூடாகவே, அதாவது தமிழ் பெண்களுடாகவே, சிங்கள வம்சத்தை விருத்திசெய்தனர் என கூறிய மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நாம் நன்றி செலுத்த வேண்டும். உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக கருதப்படும் விஜயன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, வட இலங்கையை நாகர் மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள், குவேனி என்ற இலங்கை பெண் ஒருத்தி நூல் நூற்றுக்கொண்டு அவனை வரவேற்கிறாள். அதாவது, மகாவம்சம் மூலமே, விஜயன் வருவதற்கு முன்பே, சிங்கள இனம் என்ற ஒன்று உலகில் தோன்ற முன்பே, இலங்கை ஒரு மன்னன் ஆட்சி என்ற கட்டமைப்புக்குள் நாகரிகம் அடைந்து விட்டது என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் அந்த நாகரிகத்தின் சூத்திரக்காரர்கள் யார் என்ற கேள்வி தானாகவே எழுகிறது ? இன்னும் ஒன்றையும் நான் இந்த அறிமுகத்தில் தெளிவு படுத்தவேண்டும். புத்தரின் முதல் இரண்டு இலங்கை வருகையிலும் அவர், தன்னுடைய கருணை, இரக்கம், அன்பு என்ற மனித தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு பயங்கரவாதி போல், இலங்கையின் பூர்வீக குடிகளின் மேல் தாக்கம் செய்ததை காண்கிறோம். அதிலும் முதலாவது வருகையில், பூர்வீக குடிகளை பயமுறுத்தி, அங்கிருந்து திரும்பி வராதபடி அகற்றி, விஜயனும் அவனது கூட்டாளிகளும் இலங்கையில் இலகுவாக குடியேற வழிவகுத்தார் என்கிறது. புத்தர் பிறந்து வளர்ந்த இந்தியாவில் புத்தரின் எந்த வரலாற்றிலும் இப்படியான குறிப்பு இல்லை என்பதுடன், அவரின் மேலான குணநலனும் முரணாக உள்ளது. இப்படியான கதையின் விளைவுகள் தான் இன்று இலங்கையில் தமிழர் படும் பல நெருக்கடிகளுக்கும் காரணமாகும். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படு கின்றன. இதை மனதில் பதித்து, மிக விரைவில் 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' என்ற எனது இந்த தொடர் கட்டுரையை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன். இது இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே இது அதில் புதைந்துள்ள உண்மைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே ஆகும். அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் முற்றுப்பெற்றது , இனி பகுதி: 01 தொடரும்1 point- எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?
எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன். ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம். தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது. அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம். சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன. இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள். அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும். விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன. கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது. நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது. விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு. https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
எங்கும் எதிலும் என்னை நினைத்து அழைப்பு விடுவதற்கும், காணாவிட்டால் தேடுவதற்கும் தளராமல் கருத்திடுவதற்கு ஊக்கம் தருவது எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி சிறியர்! நன்னிச்சோழனின் மனநிலையே எனதும், அதனால் இதில் ஈடுபட்டு போட்டியாளர்களுக்கு எரிச்சலை கிளப்பாமல் விலகிக்கொள்கிறேன்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பசங்களுக்கு மட்டுந்தான் அந்த வலி தெரியும்.......! 😢1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 2ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 34 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 - குமரி, திருநெல்வேலி1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
அதுதான் ஈரான் சனாதிபதி வாறரே...வரும்போது 2 கலன் பெற்றோல் கையுடன் கொண்டு வந்திட்டால் போச்சு..1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அது வயோதிபத்தில் வரும் எழுச்சி 😁1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். நன்றி1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) KKR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) RR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) DC #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) SRH 4) மே 21, வெள்ளி 19:30 அகமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st place team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அகமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator MI 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) LSG 10) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbir Singh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH அக்கா வெற்றிகரமாக அதிஷ்டத்தை நம்பி இறங்கியுள்ளார். ஜட்ஜ் ஐயா எதோ பார்த்து புள்ளியை போடுங்க....😃 கீழே மிதிபட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடப்போறேனோ தெரியாது1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம்.1 point- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
இறுதி காலத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்த இந்த வைகோ எனும் சந்தர்ப்பவாதி சொல்கிறார் இதை. தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத இந்த தலைவர் இன்று காசு அடிக்கும் கயவர் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.1 point - யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.