Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19123
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/29/24 in all areas

  1. நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவே இக்கட்டுரை. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கொரு இலாபமும் உண்டு. நான் ஆங்காங்கே எழுதியவற்றில் வெட்டி ஒட்டி, சில இடங்களில் மட்டும் சிறிது விளக்கம் தந்து மேனி நோகாமல் எழுதிச் செல்வதே அந்த லாபம். இந்த வெட்டி ஒட்டுதலைச் செய்பவன் அடியேன் மட்டுமே ! நான் குறிக்க வரும் புலவர் பெருமக்களில் எவரும் அவ்வாறு செய்யவில்லை. அச்சான்றோரில் ஒருவர் முன்மொழிய மற்றொருவர் வழிமொழிதல், ஒரு கருத்தை இருவர் கூறி மேன்மையுடன் செழிக்கச் செய்தல், இருவர் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து மானுடத்தின் எல்லையற்ற வாழ்வு சிறக்க அமுது எடுத்தல் எனும் உயரிய நோக்கங்கள் கொண்டவை அப்புலவர் தம் படைப்புலகம். எடுத்துக்காட்டுதலில் வரும் பாடல்களைத் தந்தோரில் முன்னவர் யார், வழிமொழிந்த பின்னவர் யார் என்று நாம் சொல்லவில்லை. காலச்சக்கரத்தில் சிக்கித் தொலைந்த அவ்விவரம் தொலைந்ததாகவே இருக்கட்டுமே ! நமது வரிசைப்படுத்தலில், முதலில் வரும் ஒன்று காலத்தால் முன்னது என்ற பொருள் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு பற்றி ஒன்றிரண்டு சொற்கள் - 'வால்' எனுஞ் சொல் சிறந்த, தூய எனும் பொருள் தருவது. வள்ளுவன் இறைவனை 'வாலறிவன்' எனக் குறிப்பது அங்ஙனமே. தமக்கு முன்னோரின் பொன் மொழியை வழிமொழியும் புலவரின் நூலறிவு ஒப்பற்ற சிறைப்புடைத்து என மொழிவதே இத்தலைப்பு. சங்ககாலம் சென்று முதலில் புறநானூறு பேசி நிற்போமே ! காக்கை பாடினியார் நற்செள்ளையார் தரும் புறநானூற்று பாடல் : "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) பாடற் குறிப்பு : போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான் எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது. பாடற் பொருள் : நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்). ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்த மற்றுமொரு தாயினை நம் கண்முன் நிறுத்துகிறார் பூங்கண் உத்திரையார் எனும் புறநானூற்றுப் புலவர் : "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே" (புறநானூறு 277) பொருள் விளக்கம் : மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற; வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய; முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி; ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே; வெதிரத்து - புதரில்; துயல்வரும் - அசைந்தாடும்; நோன் - வலிய; கழை - மூங்கில் கழியில்; வான் பெய - மழை பெய்யும் போது; தூங்கிய - தங்கிய; சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்). முதலில் நாம் குறித்த காக்கைபாடினியார் தாயின் வீரம் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனை இழந்த துயரத்தை உலகோர்க்குக் காட்டாத அளவு அத்தாய் நெஞ்சுரம் கொண்டு இருக்கலாம் அல்லது மகனை இழந்த தாயின் அவலம் சொல்லில் வடிக்கவொண்ணாததாகப் புலவர்க்குத் தோன்றியிருக்கலாம். பூங்கண் உத்திரையாருக்கோ அந்த அவலச் சுவையை உணர்வுபூர்வமாய் வடிக்கத் தோன்றியது. எது எப்படியோ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவத்தல் என்று ஒருவரிடம் தோன்றிய கோட்பாடு மற்றொருவரை ஈர்த்தது என்னவோ உண்மைதானே ! அஃது வள்ளுவனிடத்தும் வெளிப்பட்டு நிற்கிறதே ! "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம் : மக்கட்பேறு) சங்ககாலத்தில் (குறளோனின் சங்கமருவிய காலத்திலும் இருக்கலாம்) வீரனைக் குறித்த 'சான்றோன்', பிற்காலத்தில் (வள்ளுவத்திற்கு உரை தரப் போந்த காலம் எனக் கொள்ளலாம்) கற்றவனையும் கற்ற வழி நின்ற பண்பாளனையும் குறித்தது ஈண்டு குறிக்கத்தக்கது. பொருகளத்தில் போர் அறம் அறிந்து நிற்றலும், கல்விக் களத்தில் அறிவறிந்து நிற்றலும் சான்றாண்மையின் பாற் பட்டதில் வியப்பென்ன ! அடுத்து மணிவாசகரின் கோவை இலக்கியமான திருக்கோவையாரில் ஒரு பாடல். தலைவன்-தலைவி உடன்போக்கு சென்ற பின் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வது மரபு. அவ்வாறு செல்லுகையில் எதிரே அதே போல் உடன்போக்கு எனும் ஒழுக்கம் மேற்கொண்டு வரும் வேறொரு தலைவன்-தலைவி இணையரைத் தூரத்தே கண்டு தன் மக்கள்தானோ என முதலில் மயங்கி, அவர்கள் அருகில் வரவும் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள். "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". (திருக்கோவையார், பாடல் 244) உரையாடல் வருமாறு :- செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே ! எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன். எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக ! இக்காட்சியினைப் பதினோறாம் திருமுறையில் வரும் திருஏகம்பமுடையார் திருவந்தாதி பாடல் 73 ல் பட்டினத்தார் கூறக் கேட்கலாம் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" பொருள் : துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலை பெண்ணும்; உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற; கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்); தோன்றலும் - தலைவனும்; ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு; ஏகினரே - சென்றனரே; அணையத்தர் - அவ்வாறான; ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்; மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்; பிணையொத்த நோக்குடை - பெண்மானின் (மருண்ட பார்வையுடைய); பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக ! திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான். புறநானூறு கண்டோம்; கோவை எனும் சிற்றிலக்கியம் கண்டோம்; பக்தி இலக்கியத்தை விட்டு வைப்பானேன் ? இப்போது நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி : "ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்". (திருவெம்பாவை பாடல் 4) மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம். திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் : "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்" (திருப்பாவை பாடல் 15) பொருள் விளக்கம் :- துயிலெழுப்பும் பாவையர் கூற்று : எல்லே - 'அடி பெண்ணே, என்ன இது ?' எனக் கேட்பது போன்ற வழக்கு; இளங்கிளியே - கிளி போல் கொஞ்சுமொழி பேசும் இளம் பெண்ணே; இன்னமும் உறங்குதியோ - இன்னும் உறங்குகிறாயா ? துயிலெழுப்பப்படும் பாவையின் கூற்று : சில்லென்று அழையேன் - 'சில்' எனக் கூச்சலிட்டு அழையாதீர்; மின் நங்கைமீர் - மின்னல் போன்று ஒளிரும் தோழியரே; போதர்கின்றேன் - இதோ வருகின்றேன்; பாவையர் கூற்று : வல்லை - திறமையானவளே; பண்டே - முன்பிருந்தே; உன் கட்டுரைகள் - உன் உறுதிமொழிகளையும்; உன் வாயறிதும் - உன் பேச்சுத்திறனையும் யாம் அறிவோம்; பாவையின் கூற்று : வல்லீர்கள் நீங்கள் - நீங்களே (பேச்சுத்) திறனுடையவர்கள்; நானே தானாயிடுக - (நீங்கள் சொன்னவாறே) நான் (வாயாடியாக) இருந்து விட்டுப் போகிறேன்; பாவையர் கூற்று : ஒல்லை - விரைவாக; நீ போதாய் - நீ வருவாயாக; உனக்கென்ன வேறுடையை - உனக்கு (இப்போது) வேறு என்ன வேலை உண்டு ? பாவையின் கூற்று : எல்லாரும் போந்தாரோ - பாவையர் எல்லோரும் வந்து விட்டார்களா ? பாவையர் கூற்று : போந்தார் - வந்து விட்டனர்; போந்து எண்ணிக்கொள் - வந்து எண்ணிக்கொள்; வல் ஆனைக் கொன்றானை - வலிய யானையைக் கொன்றவனை; மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - பகைவரை, அவர்தம் அகந்தையை அழிக்க வல்லவனை; மாயனை - மாயச் செயல்கள் புரிபவனை (கண்ணனை); பாடேலோர் எம் பாவாய் - பாடுவாயாக எம் பாவையே ! திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை. இனி சில சங்கப் பாடல்களும் தொடர்புடைய குறள்களும் காணலாம். முதலில் நம் நினைவுக்கு வருவது நற்றிணையில் 355 ஆவது பாடலின் ஒரு பகுதி : "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " பொருள் : முன்பிருந்தே (தேர்ந்து தெளிந்த) நண்பர் கொடுப்பது நஞ்சாக இருந்தாலும் சிறந்த பண்பாளர் (நனி நாகரிகர்) அதனை உண்டு அமைவர். இங்கு 'நஞ்சினை உண்டு' என்பதை நேர்ப் பொருளாய் (Literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். 'உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றைத் தாம் தேர்ந்து தெளிந்த தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில், சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்று அமைதல்' எனப் பொருள் கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். மேற்கூறிய கருத்து அச்சு எடுத்தாற்போல் திருக்குறளில் கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில், "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என அமையக் காணலாம். நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவத்தில் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது. பெயப்படும் நஞ்சு என்னவோ ஒன்றுதான். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்துக் கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. பின்வரும் நற்றிணைப் பாடல் (19) அவ்வாறான அரிய பாடல் : "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" [வருவை ஆகிய சின்னாள் (சில நாள்) வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே)] அஃதாவது "சில நாட்களில் வருவாய் எனினும், அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே" என்பதாம். நற்றிணையில் தோழி கூற்றாக வரும் செய்தி வள்ளுவத்தில் தலைவி கூற்றாகவே வருகிறது : "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் 1151; அதிகாரம்: பிரிவாற்றாமை) சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடை பெற்றுத் தலைவியிடம் விடைபெற வருகிறான். "சில மாதங்களில் வந்து விடுவேனே, ஏன் கவலை கொள்கிறாய் ?" என ஏற்கனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், "ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல் !". பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு, மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற் சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். அடுத்து வரும் குறுந்தொகைப் பாடலில், "எப்பிறவியிலும் நீயே என் கணவனாய் அமைத்தல் வேண்டும்" என்று தன் காதலின் திறம் கூறுகிறாள் தலைவி: "இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே " (குறுந்தொகை பாடல் 49) வள்ளுவனின் திரைக்கதை கூட இதுவே. காட்சியமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்தான் : "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்" (குறள் 1315; அதிகாரம்: புலவி நுணுக்கம்) "இப்பிறவியில் பிரிய மாட்டோம் என நான் சொன்னதும் தலைவியின் கண்கள் குளமாயின" என்பதே தலைவன் கூற்று. அஃதாவது "ஏனைய பிறவிகளில் பிரிய நினைத்தாயோ ?" என்பதே தலைவியின் கண்ணீருக்கான ஏதுவாய் அமைந்தது. வள்ளுவனின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலு'க்கு மற்றுமொரு சான்று. இங்ஙனம் தமிழ்ச் சான்றோரின் நூலறிவிற்கான சான்றுகள் எண்ணிலடங்கா. நம் கட்டுரைக்கு எங்காவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே ! சரி, கட்டுரைக்குதானே முற்றுப்புள்ளி ! இதனை வாசித்தோர் தம் இலக்கிய வாசிப்பில் இத்தகைய முன்னோர் மொழிகளைக் கடந்து செல்லுகையில் ஒரு கணம் நின்று அசைபோட்டு இன்புறுவர்; மொழிக்கு மேலும் செறிவூட்டுவர்.
  2. மிகவும் அருமையான சங்ககாலப் பாடல்களும் சிறப்பான விளக்கங்களும் வாசிக்கும் போதே மனதினுள் ஒரு அமைதியும் சிறு புன்முறுவல் உண்டாகின்றது ஐயா ........! பாவையும் கோதையும் பல இடங்களில் சேர்ந்து பயணிப்பதை ஆழ்ந்து படிக்கையில் உணரலாம்.......இரண்டும் அதிகாலையில் நண்பர்களை துயிலெழுப்பி அழைத்துச் செல்வதால்.......! "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" இந்தக் குறளுக்கு ஏற்ற ஒரு சம்பவத்தை பேராசிரியை பர்வீன் சுல்தானா ஒரு பேச்சரங்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்..... மிகவும் எளிமையாக இருந்தது...... அதை கொஞ்சம் இங்கு குறிப்பிட விழைகின்றேன் பிழையாயின் பொறுத்தருள்க.....! இந்தக் குறளில் அவவுக்கு ஒரு சந்தேகம் ..... அதெப்படி வேண்டிய ஒருத்தர் நஞ்சைத் தந்தாலும் நாகரீகத்துக்காக அதை வாங்கி சாப்பிட்டு விட்டு சாக வேண்டுமா என்று......! அது தெளிவாகிறதுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமையுது.......அவருடைய சக ஆசிரியை ஒருத்தர் யார் எது கொடுத்தாலும் யாரிடமும் ஒன்றும் வாங்கி உண்ண மாட்டார் ...... அன்று அவர்கள் ஆசிரியர்களுடைய ஓய்வறையில் இருக்கும் போது ஒரு சிறுமி தனது பிறந்தநாளுக்கு இனிப்புகள் எல்லோருக்கும் குடுத்துக் கொண்டு வருகின்றா ....... பர்வீன் அவர்களிடமும் இனிப்புத் தர வந்தபொழுது இவவும் சற்று தூரத்தில் இருக்கும் அந்த ஆசிரியையைக் காட்டி நீ சென்று அவரிடம் இனிப்பைக் குடுத்தால் உனக்கு இந்தப் பொருளை பரிசாகத் தருகின்றேன் என்று சொல்கின்றார்.......அதை பார்த்ததும் அந்த சிறுமிக்கு அதன்மீது ஆசை வந்து அந்த ஆசிரியையிடம் சென்று இனிப்பைத் தர அவ மறுக்கிறா ....சிறுமியோ அவரிடம் வாங்க சொல்லி கெஞ்சுகின்றாள் துடர்ந்து ஆசிரியை மறுக்க சிறுமிக்கு இனி தனக்கு பரிசு கிடைக்காது என்னும் ஏக்கம் கோபமாக மாறுகின்றது, அழுகையும் வருகின்றது.......அந்த ஆசிரியையைப் பார்த்து கத்திவிட உடனே அந்த ஆசிரியை எழுந்து எனக்கு நீரிழிவு நோய் இருக்கு நான் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று சொல்லி சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்........! அப்போதுதான் ஆசிரியை பர்வீனுக்கு புரிந்ததாம் இனிப்பானபோதிலும் அது நீரிழிவு நோய்க்கு நஞ்சு ஆனாலும் நாகரீகம் கருதி சிறிது எடுக்கலாம் என்று........! (கொஞ்சம் "போரடித்து" விட்டேனோ பொறுத்தருள்க).....! 🙏
  3. முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார். பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம். நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதானமளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.) குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓ குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான். இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள். போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.) ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.) ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது... ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு. ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று பல வகைப்படும். ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும் கோபாலகிருஷ்ணன். Mantras and Miracles
  4. மிகவும் யோசிக்க வேண்டிய கோணம் இது. பொது வேட்பாளரை முன்னிலை படுத்துவதாகின்: 1. கிழக்கில் இருந்து ஒருவர் 2. அத்தனை தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவோடு இறங்கி 3. ஏன் இதை செய்கிறோம் என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்து சொன்னால் ஒருவேளை மக்கள் ஆதரிக்கலாம். எப்படியும் வெல்ல போவதில்லை - ஆகவே ஒரு மதம், பிரதேச சார்பற்ற, இதுவரை அரசியல் சார்பில்லாது இருந்த ஒரு சமூக சேவையாளரை நிறுத்தலாம். எமது கதிரை அரசியல்வாதிகளும் இதனால் பாதிப்படைவது குறைவு என்பதால் ஒத்து கொள்ள கூடும். மலையகமக்கள் - தவிகூ வில் இருந்து சேவல் பறந்த போதே அவர்கள், விதியும், வட-கிழக்கு தமிழர் விதியும் வேறாக பிரிந்து விட்டது. அப்படி அவர்களை தொண்டமான் பிரித்தது மிக சரியான முடிவும் கூட. நாம் தனிநாட்டை அடைந்தால் கூட - அவர்கள் இலங்கை பிரசைகள்தான். எனவே அவர்கள் தம் நலனை கணித்தே வாக்களிப்பர், வாக்களிக்க வேண்டும். மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் - 1970 களில் மலையக தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை 2024 வடகிழக்கு தமிழ் மக்கள் (தலைவர்கள் அல்ல) எடுத்துள்ளார்களா? என்பதே. அதாவது, இனப்பிரச்சனை, குடியேற்றம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாடு நாசமானால் நாம் எல்லாரும்தான் ஆப்பு அடிபடுவோம், எனவே ரணிலை (அல்லது அனுரவை) வெல்ல வைப்போம் என்ற மனநிலைக்கு வடகிழக்கு மக்கள் வந்து விட்டார்களா? இதை கணிப்பது மிக கஸ்டமாக இருக்கிறது. ஆனால் என் கருத்து 2005 இல் தமிழ்மக்களை பகிஸ்கரிக்குமாறு கேட்காமல் விட்டிருந்தால் ரணிலுக்கு பெருவாரியாக போட்டிருப்பர் என்பதே. அதே போல் ஒரு மனநிலை (அப்போ தீர்வை தருவார் என்ற மாய நம்பிக்கை, இப்போ நாட்டை மீட்கிறார் என்ற நம்பிக்கை) இப்போதும் மக்களிடம் இருந்தால், பொது தமிழ் வேட்பாளர் நீங்கள் சொல்வது போல் பொல்லை கொடுத்து அடிவாங்கும் வேலையாகலாம். முதலில் பாராளுமன்ற தேர்தல் வந்தாலாவது ஓரளவு மக்கள் எண்ண ஓட்டத்தை பிடிக்கலாம். இலங்கை அரசியலில் ஒரு paradigm shift (அடிகட்டுமான மாற்றம்) ஐ தரவல்ல பல நிகழ்வுகள் நடந்த பின் வரப்போகும் முதல் நாடளாவிய தேர்தல் இது. மக்கள், குறிப்பாக வடகிழக்கு மக்கள் நிலைப்பாட்டை நாடி பிடிப்பது, கிட்டதட்ட இயலாத காரியம்.
  5. பொலிஸ்காரர்: 120 ஐரோ தண்டப் பணமும், 3 புள்ளிகளும் உமக்கு கிடைக்கின்றது. வாகன சாரதி: அந்தப் புள்ளியை வைத்து நான் என்ன செய்ய? பொலிஸ்காரர்: இன்னும் ஐந்து புள்ளிகளை சேர்த்து, உமக்கு ஒரு சைக்கிள் வாங்கும். 😂
  6. புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷
  7. புகைக்கே 52 கோடி என்றால் தண்ணிக்கு எவ்வளவு வரும்?
  8. அறுபது வயது மாதிரி தெரியவில்லை. வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.
  9. யுத்த குற்றவாளி ரசியாவில். இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும்.
  10. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம் 15) தயாநிதிமாறன்(திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 3ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெறும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 3 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 15 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 1 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 35 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 19 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 9 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 போட்டி விதிகள் hh 1)june 3 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  11. சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர். நிற்க, சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள். சுருக்கமாக, புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக). படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.
  12. 29 APR, 2024 | 10:37 AM தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது. இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர். எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார். குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. https://www.virakesari.lk/article/182204
  13. சீமான் அவர்களின் அருமையான காட்சி.
  14. மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும் என்ற முடிவை எடுத்த மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். யார் இவர்: அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த அலெஜாண்ட்ரோ.. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்து வரும் இவர், அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெறும் முதல் பெண் இவர் ஆவார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த அழகி போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள் சப்போர்ட்டும் இவருக்கு தான் அதிகம் இருந்துள்ளதாம். அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே தனது இலக்காக வைத்துள்ளதாக அலெஜாண்ட்ரா தெரிவித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால் இந்தாண்டு செப். மாதம் மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியும். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார். கட்டுப்பாடு நீக்கம் இதற்கு முன்பு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற ரூல்ஸ் இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/300429
  15. புலம்பெயர் வியாபாரியின் முகவர் என சொல்லி கொண்ட ஒருவர், வெளிப்படையாக ரணில் வெல்ல வேண்டும், அதற்கு பொது தமிழ் வேட்பாளரை போட வேண்டும் என சொல்லியதாக நிலாந்தன் சொல்கிறார். இது வழமையான வாக்கை பிரிக்கும் கணக்கு என நினைக்கிறேன். நாட்டை மீட்க, ரணில்தான் பொருத்தமானவர் என positive காரணங்களுக்காக ரணிலுக்கு போடும் தமிழ் வாக்காளர் எப்படியும் ரணிலுக்குத்தான் போடுவர். ஆகவே ரணிலுக்கு வர கூடிய தமிழர் வாக்கை, பொது தமிழ் வேட்பாளர் குறைக்க வாய்ப்பு குறைவு. ஆனால் ரணில் எதிர் மனோநிலையில் இருக்கும் தமிழரை அனுர, சஜித் பக்கம் போக விடாமல் பொ.த.வே பக்கம் திருப்பினால் - ரணிலின் வாய்ப்பு கூடும். குறிப்பாக முடிவுகள் கிட்ட, கிட்டவாக இருந்தால்.
  16. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/11/1990 பக்கம்: 1 ஊர்காவலர் உதவியுடனேயே முஸ்லிம் மீளக் குடியேற்றமாம் கொழும்பு, நவ. 14 மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை ஊர்காவல் படையினாாக முதலில் அனுப்பிவிட்டே, அகதிகளாக இருக்கும் முஸ்லிம் மக்கள் சொந்த கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர். அமைச்சர் பெரேரா, புத்தளம் கற்பிட்டி பகுதிகளில் தங்கியுள்ள மன்னார் முஸ்லிம் அகதிகள் மத்தியில் பேசுகையிலேயே முன் கண்டவாறு கூறி உள்ளார். (இ-எ) *****
  17. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/11/1990 பக்கம்: 1, 4 17 வீதமான முஸ்லிம்களுக்கு 30 வீதத்தை நாம் கொடுக்க முன்வந்தோம்; அவர்கள் காட்டிக்கொடுத்தனர் மக்கள் முன்னணி செயலாளர் யோகி தெரிவிப்பு (கிளிநொச்சி) முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மக்கள் தொகையில் பதினேழு வீதம் மட்டுமுள்ள அவர்களுக்கு முப்பது வீதத்தை விட்டுக் கொடுப்பதாக அவர்களுடன் நல்ல முறையில் அணுகி பேச்சுவார்த்தை நடாத்தினோம். அப்படியிருந்தும் கிழக்கில் அவர்கள் செய்த துரோகத்தினால் நாம் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கிளிநொச்சியி லுள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிச் செயலாளர் திரு. யோகரட்ணம் யோகி கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. சீலன் தலைமையில் கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திரு. யோகி மேலும் பேசுகையில்: அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நாலாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருமலையிலிருந்து நான்கு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொத்துக்களை, உயிர்களை, கற்பை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். கொலை செய்யப்பட்ட நாலாயிரம் தமிழர்களில் இரண்டாயிரம் தமிழர்கள் முஸ்லிம்களாலும், மிகுதி இரண்டாயிரம் பேர் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர். தற்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தைக் கண்டுபயப்படுவதிலும் பார்க்க முஸ்லிம்களைக் கண்டே தமிழ் மக்கள் கூடுதலாகப் பயப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்திச் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அண்மையில் தமிழ்ப் பெண் ஒருத்தி முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்ட பின் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள். எமது இயக்கத்திலிருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இயக்கத்தை விட்டு ஓடி இராணுவத்துடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுப்பதிலும், எம்மை அழிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழருக்கு எதிராகச் செயற்படும் முஸ்லிம்களுக்கு அரசு சகல உதவிகளையும் செய்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டன. அப்போதும் முஸ்லிம்களோ, அன்றி அவர்களின் தலைவர்களோ அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடாத்த முன்வரவில்லை. போராட் டத்திற்குப் பதிலாக முஸ்லிம் தலைவர்கள் சிங்களக் கட்சிகளின் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தார்கள். இன்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களை கிழக்கு மாகாணத்தில் இல்லாது செய்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். பக்கம்: 1 புத்தளத்தில தமிழர் லொறிகள் முஸ்லிம்களால் கொள்ளை (கிளிநொச்சி) தமிழர்களின் லொறிகளை வழிமறிப்பதிலும், பணங்களைக் கொள்ளையடிப்பதிலும் தற்போது முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆயுதப்படையினரும் இம் முஸ்லிம்களுக்கு உதவியாகச் செயற்படுகிறார்களாம். யூரியா பசளையைக் கொள்வனவு செய்வதற்காகக் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு சென்ற லொறி ஒன்று முஸ்லிம்களால் வழிமறிக்கப்பட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் பசளை, கிருமிநாசினி முதலியவற்றை விற்பனை செய்யும் ஸ்தாபனம் ஒன்று சிளிநொச்சியில் பசளை, உரம் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் அப்பொருள்களைக் கொழும்பில் இருந்து கொண்டுவருவதற்காகச் சென்றதாம். மேற்படி ஸ்தாபன லொறி புத்தளத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாம். இது சம்பந்தமாகப் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம். (49) *****
  18. அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண்.
  19. கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3 ஆம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3 ஆம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3 ஆம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2 ஆம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2 ஆம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 2 ஆம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) முதலாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3 ஆம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2 ஆம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) முதலாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2 ஆம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2 ஆம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 7% - 8% 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 5 இலட்சத்துக்கும் கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1
  20. உண்மை தானே.வயது போன காலத்தில் அவர்கள் விருப்ப பட்டு சில உணவுகளைச் சாப்பிட்டாலும் செரிமானமில்லாது எவ்வளவு அவஸ்த்தைப்படுவார்கள் என்பதை அவ்விடத்தில் நேரிலிருந்து பார்ததால் தான் தெரியும்..மற்றப்படி சொல்லப் பேனால் வயோதிபர்களையோ அல்லது தாய் .தந்தையற்ற பிள்ளைகளையோ இந்த அன்னதானம் தந்தவர்களுக்காக நீங்களும் கும்பிடுங்கோ பிரார்த்தை செய்யுங்கோ என்று சொல்லி படம் எடுத்து பப்ளிக்கில் போட்டு சோ காட்டுவது எல்லாம் ஒரு வேண்டாத வேலை.உங்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டு அவற்றுக்கு எம்மால் முடிந்த உதவியை செய்து விட்டு போவதில் என்ன தவறு இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி சிறியண்ண..
  21. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  22. ,....1 ,2 ,3. 4. .......இப்படி தான் எடுக்க முடியும்
  23. நிச்சயமாக அது ஒரு இலக்கம் தான் ...அழகி போட்டியில் வயதுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறதா ?? இவர் எப்படி அதிக புள்ளிகள் பெற்றார்?? அழகுக்கும். வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை அது மனத்துடன். தொடர்புடையது நான் இளமையாக. இருக்கிறேன் என்ற உறுதியான எண்ணம் ஒரு வயோதிபனை இளைஞர் ஆக்கும் எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும் 😀
  24. பிறந்தநாள் வாழ்த்துகள் புரட்சி, வாழ்க வளத்துடன்.
  25. நுணா, இந்த இரண்டு பதில்களிற்கிடையிலும் முரண்பாடு உள்ளது. இதே போன்று, பங்கு கொண்ட சிலரது பதில்களுக்கிடையிலும் முரண்பாடுகள் இருக்கின்றன.
  26. Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry Brooks ??
  27. ஆமாம் 1991 முன்னர் முன்னேற்றம் இல்லை அகதிகள் அங்கு வாழவில்லை ...உதவி வழங்கினால் தானே வாழ முடியும் 1991 பின்னர் முன்னேற்றம் அதன் பிற்பாடு வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள் குடியேறியவர்கள்
  28. இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api
  29. தமிழருக்கு தீர்வு கிடைப்பதை திட்டமிடப்பட்ட வகையில் இல்லாமல் செய்வதை வைத்து சிங்களம் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்ய முடியாது இன்றைய எதிர்கால நாட்டின் நிலைமை வைத்து தான் சிங்களம் இன் புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் இலங்கைக்கு வரவில்லை என்றால் தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பவில்லை என்றால் சிங்களத்தின். புத்திசாலித்தனம் தெரியும் உலகில் முதலாவது பிச்சைகார நாடு இலங்கை ஆகத் தான் இருக்கும்
  30. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா....................................................
  31. தோனி போன்ற சீனியர்களை கையாளும் ருதுராஜின் உத்தி; ஹைதராபாத் அணியில் அம்பலமான பலவீனம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. கிட்டத்தட்ட அதே அளவு ரன்களைக் குவித்து அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனத்தை ஆர்சிபி “எக்ஸ்போஸ்” செய்துவிட்டு சென்றது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை பெற்ற 5 வெற்றிகளில் சேஸிங் செய்து பெற்ற வெற்றிகளைவிட முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து எதிரணியை திக்குமுக்காடவைத்து வெல்வதையே ஃபார்முலாவாக வைத்திருந்தது. முதல் முறையாக ஆர்சிபிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றபோது, சன்ரைசர்ஸ் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. இதை சிஎஸ்கே அணி இறுகப்பற்றிக் கொண்டு அதே உத்தியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி திடீரென உயர்வு பெற்று, 3வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 5வெற்றி 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு இணையாக 10 புள்ளிகளுடன் கொல்கத்தா, லக்னெள, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இதனால் முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 5 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் மைனசில் வைத்துள்ளது. மற்ற 4 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பாசிட்டிவாக இருக்கிறது. கொல்கத்தா-டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது என்பது தெரிந்துவிடும். தற்போது நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தா அணி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் சன்ரைசர்ஸ் நிகரரன்ரேட் மோசமாகக் குறைந்து, 0.075 ஆகச் சரிந்துள்ளது. 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டை குறைவாக சன்ரைசர்ஸ் வைத்துள்ளது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், இதே மைதானத்தில் 210 ரன்களை டிபெண்ட் செய்ய முடியாமல் லக்னெள அணியிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணியை டிபெண்ட் செய்து வென்றுள்ளது. ஆதலால் சிஎஸ்கே பந்துவீச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், பந்துவீச்சாளர்களிடையே ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியக் காரணம். அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்தகளில் 98 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கணக்கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல கெய்க்வாட்டுக்கு துணையாக டேரல் மிட்ஷெல் 32 பந்துகளில் அடித்த அரைசதம்(52), ஷிவம் துபே(39)ரன்கள் ஆகியவையும் ஸ்கோர் உயர்வுக்கு காரணம். கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் அமரவைக்கப்பட்ட மிட்ஷெல் நேற்று சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல ஷிவம் துபே, கெய்க்வாட் கூட்டணி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தவிர அணியில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரஹானே தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வருவதால், அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு ரவீந்திரா உள்ளேவரவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனியர் வீரர்களை கெய்க்வாட் எப்படிக் கையாளுகிறார்? வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ பனிப்பொழிவுக்கு மத்தியில் இந்த ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது கடினமானது. எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சேப்பாகத்தில் அதிகமான வெப்பம், ஈரப்பதமும் கூடுதலாக இருந்தது. நான் சதம் அடிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, அணியின் ஸ்கோரை 220 அதற்கு மேல் நகர்த்தவே திட்டமிட்டேன். கடந்த போட்டியில்கூட நான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை. சில ஷாட்களை நான் தவறவிட்டது எனக்கு வருத்தம். கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். தவறான பந்துகள் பல வீசினோம், பீல்டிங் சரியில்லை. ஆனால், தவறுகளைத் திருத்திக்கொண்டு, திட்டங்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். தேஷ்பாண்டே சிறப்பாகப் பந்துவீசினார், அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். குறிப்பாக இந்த ஈரப்பதமான சூழலில், சுழற்பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 25ரன்கள் மட்டுமே கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் பங்கு சிறப்பானது.” “'நான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவருமே மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். சீனியர் வீரர்களிடம் நேரில் சென்று இப்படி விளையாடுங்கள், இப்படி பந்துவீசுங்கள் எனக் கூற முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பின்னால் இருந்து கொள்கிறேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணி எப்படி வென்றது? லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகள் ஏதும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி செய்யாததே வெற்றிக்கு முக்கியக் காரணம். சன்ரைசர்ஸ் அணியில் எந்த பேட்டரையும் நங்கூரமிட வைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாய்னிஸைவிட ஆபத்தான பேட்டர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம், அபிஷேக் ஆகியோர் நிலைத்துவிட்டால் ஸ்கோர் எங்கோ சென்றுவிடும் என்பதால் இந்த பேட்டர்களை தனியாகக் கட்டம் கட்டி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். அடுத்தாக ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பதிரணா ஆகியோர் தங்களின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களை திணறவிட்டனர். பந்துவீச்சில் சரி செய்யப்பட்ட தவறுகள், ஆட்டத்தின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால், அந்தத் தவறுகள் நேற்று திருத்தப்பட்டு, கட்டுக்கோப்பான பீல்டிங் வீரர்களிடையே காண முடிந்தது. குறிப்பாக மிட்ஷெல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்சுகளைப் பிடித்து, ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த முகமது நபி சாதனையுடன் சமன் செய்தார். பெரிதாக எந்த பவுண்டரிகளையும் கோட்டைவிடாமல், கட்டுக்கோப்பாக பீல்டிங் செய்தது, மனரீதியாக சன்ரைசர்ஸ்பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது. பட மூலாதாரம்,SPORTZPICS மெருகேறிய தேஷ்பாண்டே பந்துவீச்சு சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாக காய்களை நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்குள் சென்றுவிட்டால் எந்த வீரரும் விளையாடுவிடுவார்கள், விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு. அதுபோல் அன்கேப்டு வீரர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் நேற்று பெரிய மாற்றம், துல்லியம், லைன்லென்த் காணப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஹெட் ,பவுண்டரியும், அடுத்த ஓவரில் சிக்ஸரும் விளாசினாலும் கவலைப்படவில்லை. ஸ்லோவர் பாலை வைடாக தேஷ்பாண்டே வீச, அதை அடிக்க முற்பட்டு ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அன்மோல்பிரித் சிங்கை வந்தவேகத்தில் தேஷ்பாண்டே வெளியேற்றினார். டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததைதப் போல், அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்து அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை தேஷ்பாண்டே அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், இந்த திறன் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லை, இந்த உத்தியை செயல்படுத்தவும் இல்லை. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் 3 பெரிய விக்கெட்டுகளை இழந்ததுமே மனரீதியாக நம்பிக்கை உடைந்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் பயணித்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் சிக்ஸர் அடித்தும், கெய்க்வாட் ஒரு சிக்ஸரும் விளாசினர். ரன்களை அதிகமாகச் சேர்க்க சிக்ஸர், பவுண்டரி அவசியம் என்பதை உணர்ந்து நேற்று மிட்ஷெல், கெய்க்வாட் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேட் செய்தனர். இதனால் சிஎஸ்கே அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. மிட்ஷெல்(52) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபோது, 13.3 ஓவர்களில் சிஎஸ்கே 126 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் பினிஷிங் பணியை ஷிவம் துபே சிறப்பாகச் செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் அணியினர் நேற்று டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், துபே தனது அதிரடியால் மிரட்டி 4 சிக்ஸர்களை விளாசி 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் களமிறங்கி, 2 பந்தகளில் ஒருபவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்து தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் என்ன? சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் வெளிப்பட்டதிலிருந்து தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சேஸிங்கில் தோற்று, இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் சேஸிங்கில் வீழ்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி மீது எழும் கேள்வி அவர்களின் சேஸிங் முறைதான். ஏனென்றால், இதுவரை டிபெண்ட் செய்து ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ், சேஸிங் செய்தும் ஒருவெற்றிதான் பெற்றுள்ளார்கள். முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை திணறவைத்து வெல்வதையே உத்தியாக சன்ரைசர்ஸ் இதுவரை செயல்படுத்திவந்தது. ஆனால், வலிமையான, பவர் ஹிட்டர் பேட்டர்கள் அணியில் இருந்தும், சேஸிங்கில் கோட்டைவிடுகிறது. அதிலும் தொடர்ந்து இரு ஆட்டங்களும் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ஆட்டமுறையை சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெட், அபிஷேக், கிளாசன், மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, அன்மோல் பிரித் சிங், அப்துல் சமது ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் தோல்வி அடைந்தது அந்த அணியின் அடுத்தக் கட்டநகர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. பந்துவீச்சில் நேற்று சன்சைர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதே தவிர சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நிதிஷ் ரெட்டிக்கு ஒரு ஓவர் வழங்கிய நிலையில் அப்படியே நிறுத்திக்கொண்டது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை பயன்படுத்திய அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை. https://www.bbc.com/tamil/articles/c0dexjmmzglo
  32. நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎
  33. மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
  34. இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.
  35. திம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா 1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி போராளிகளின் தலைவர்களுட‌ன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக‌த்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற‌ தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர். போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது. போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால் ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார். சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்) என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார். போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார். தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர‌ வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார். "உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார்.
  36. ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம். அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை. என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது. இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள். கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள். தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது. இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது. செய்தி இணைப்பு கீழே. https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp
  37. ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.
  38. முன்பும் ஒரு தடவை உங்கள் உணவு பற்றிய தேடலை மெச்சியுள்ளேன். இன்றைய பதிவுகளும் அதே ரகமே @Kadancha👍. ————— நேற்று கோஷான் எழுதியதை, இன்று உடான்ஸ்சாமியார் ஒளவையார் ஸ்டைலில் அருளியுள்ளார்…..👇 உறைப்புயர உப்புயரும்… உப்புயர அளுத்தமுயரும்…. அளுத்தமுயர உயிர் உயரும்… உயிர் உயர்ந்தால் மனுசி அழுவாள்🤣
  39. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் வாத்தியார் அண்ணா நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி க‌ணிச்ச‌தில் புள்ளிக‌ளை இழ‌க்க‌ நேரிடும் , பொய் என்றால் யூன் 4ம் திக‌தி பொறுத்து இருந்து பாருங்கோ😁..................................................
  40. போராளிகளின் கோரிக்கையினை மீண்டுமொருமுறை நிராகரித்த இந்தியாவும், அமிர்தலிங்கத்தை எச்சரித்த போராளிகளும் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும் பாலசிங்கம், ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அறிக்கையினையடுத்து இந்தியா மிகுந்த கோபம்கொண்டு காணப்பட்டதாகக் கூறுகிறார். இணைந்த அறிவிப்பில் போராளிகளால் கோரப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. ஆனால், பாலசிங்கத்துடன் பேசிய சந்திரசேகரன், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியா கவனமெடுக்கும் என்று கூறினார். மேலும், போராளிகளின் தலைவர்களுடன் திம்பு பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதற்காக தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். போராளிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி வந்தவுடன் உடனடியாக சந்திப்பொன்றினை அவர்கள் நடத்தினார்கள். முக்கியமான இரு விடயங்கள் அங்கே ஆராயப்பட்டன. முதலாவது, பேசப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகள். இதுகுறித்து தலைவர்களிடையே கருத்தொற்றுமை நிலவியது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு வந்திருப்பதுடன், திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டிலும் தெளிவாக பிரகடணப்படுத்தப்பட்டு இருந்தது. அவையாவன, 1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும். 2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பூர்வீக தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரிக்க வேண்டும். 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும். 4. இலங்கையைத் தமது நாடாகக் கொண்டு வாழும் அனைத்துத் தமிழருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு, அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப்பெறுதல் வேண்டும் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்தனர். அடுத்ததாக அவர்கள் ஆராய்ந்த விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமது முடிவுகளுக்கு இணங்கப் பண்ணுவது. ஆகவே, தாம் முன்வைக்கும் அடிப்படைகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்க்கக் கூடாது என்று அவர்களை எச்சரிப்பதென்று போராளிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். அமிர்தலிங்கம் ஏற்கனவே தில்லிக்குப் பயணமாகியிருந்தமையினால், சென்னையில் தங்கியிருந்த யோகேஸ்வரனிடம் இதுகுறித்து பேசுவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். அங்கு பேசிய சிறீ சபாரட்ணம், யோகேஸ்வரனை உடனேயே அங்கு அழைத்து, அவரிடம் நேரடியாக தமது எச்சரிக்கையினை வழங்கலாம் என்று கூறினார். ஏனையோரும் அதனை ஆமோதிக்கவே, பாலக்குமார் யோகேஸ்வரனுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். வி. யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் யோகேஸ்வரனுடன் பேசிய பாலக்குமார், "அண்ணை, என்னுடன் பிரபா, சிறீ மற்றும் நாபா ஆகியோர் இருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து அவசரமாக ஒரு விடயத்தைப் பேச அவர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார். யோகேஸ்வரனும் அவர்களைச் சந்திக்க சம்மதம் தெரிவித்ததுடன், "தங்கத்துரையும் என்னுடன் இருக்கிறார், அவரையும் அழைத்து வரவா?" என்று கேட்க, பாலக்குமாரும் அதற்குச் சம்மதித்தார். அங்கிருந்த ஏனையவர்களுடன் பேசிய பிரபாகரன், "உங்கள் எல்லோரையும் தம்பிகள் என்று வெகு இனிமையாக அழைத்து யோகேஸ்வரன் பேசுவார், அந்த நடிப்புகளுக்கெல்லாம் மயங்கிவிட வேண்டாம்" என்று கூறினார். "பாலா அண்ணை பேசட்டும், நாங்கள் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். அ. தங்கத்துரை, பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். "நாங்கள் பிந்திவிட்டோமா? இந்த இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாகிவிட்டது" என்று யோகேஸ்வரன் கூறினார். போராளிகளின் தலைவர்கள் எவருமே பதில் கூறாது மெளனம் காத்தனர். பாலசிங்கம், யோகேஸ்வரனையும், தங்கத்துரையினையும் ஆசனங்களில் அமரச் சொன்னார். அவர்கள் இருவரும் சிறீ சபாரடட்ணத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அமர்ந்து கொண்டனர். மேசையின் எதிர்ப்புறத்தே அமர்ந்திருந்த பாலசிங்கம், "உங்களை சொற்ப நேரத்திற்குள் வரவழைத்தமைக்காக வருந்துகிறோம். முதலாவது, நாங்கள் ஆயுத அமைப்புக்கள் அல்லவென்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் அரசியல் ‍- ஆயுத முன்னணியினர் ஆகும். நாம் போரிடுவதில் மட்டுமல்ல, அரசியல் பேரம்பேசலிலும் வல்லவர்கள். ஆகவே, எங்கள் சார்பாக வேறு எவரும் பேசத்தேவையில்லை" என்று தீர்க்கமான தொனியில் கூறினார். பாலசிங்கத்தின் முதலாவது பிரகடணமே யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், தமது தீர்மானங்கள் குறித்த நீளமான விளக்கத்தை பாலசிங்கம் வழ‌ங்கினார். ஒரே சுரத்தில் பேசிய பாலசிங்கம் பின்வருமாறு தனது பேச்சினை நிறைவு செய்தார், " நாம் முன்வைக்கும் தீர்மானங்களுக்கு மாற்றாக வேறு எந்தத் தீர்மானத்தையும் முன்வைக்கக் கூடாது என்று அமிர்தருக்குச் சொல்ல விரும்புகிறோம். நாம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே, இதனை ஆதரிக்க வேண்டும் என்று அமிருக்குச் சொல்லுங்கள். இதைவிட வேறு எதனையும் அவர் பேசக்கூடாது" என்று கூறி முடித்தார். பதிலளித்த யோகேஸ்வரன், ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களின் தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். "அமிர் அண்ணை உங்களின் தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டார். உங்களது தீர்மானமே எங்களது தீர்மானமும். எனது சத்தியத்தை நூற்றுக்கு நூறுவீதம் நீங்கள் நம்பலாம்" என்று அவர்களைப் பார்த்து அவர் கூறினார். பதிலளித்த பாலசிங்கம், "உங்களின் சத்தியத்தை நம்புவதும், நம்பாததும் தில்லியில் அமிர்தலிங்கம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதித்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, அவரை உடனேயே தொடர்புகொண்டு நாங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அப்போது, எதேச்சையாகப் பேசிய சிறீ சபாரட்ணம், "அண்ணை, அமிர் எங்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைத் திம்புவிலேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று யோகேஸ்வரனைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் கூறினார்.
  41. பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை). ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
  42. என்னையா வாசிக்கிறீங்க? 🤦‍♂️. உண்மையிலேயே எழுதுவதை கிரகிக்கும் ஆற்றல் இல்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா? அல்லது சிறிதரனுக்கு இன்னொரு திரியில் அடி விழ இங்கே காலை தூக்குகிறீர்களா? எனக்கும் மீராவுக்கும் இடையே கான்சர் ஊக்கிகள் பற்றி ஒரு காத்திரமான உரையாடல் இந்த திரியில் நடைபெற்றது. உறைப்பை பற்றி எழுதியது இன்னொரு கிளைக் கருத்து, அதை பற்றி இன்னும் இரு உறவுகளுடன் இன்னொரு சம்பாசணை போனது. இரெண்டையும் போட்டு குழப்பி அடித்து சாம்பாராக்கி….கடவுளே… இதுக்க ஏதோ நாங்கள்தான் முட்டு கொடுத்து இலங்கையில் இனப்பிரச்சனையை தூண்டுவதாக வேறு ஒரு கற்பனை🤣🤣🤣. ”சாமி, எங்க இருந்து சாமி வாறீங்க”🤣. ஆங்கிலத்தில் unhinged என்பார்கள். நீங்கள் எழுதுவது அப்படியாத்தான் உள்ளது. முன்னமும் பல கருத்தாள்ர்களிடம் ஏறுக்குமாறாக எழுதுவது உங்கள் வழக்கம் எனிலும், நான் கடந்த ஒரு மாதமாக பார்க்கிறேன்….ஏதோ சுவரை பார்த்து கதைக்கும் மனிதர்கள் போல….சம்பந்தமில்லாத விடயங்களை போட்டு குழப்பி, மிகை கற்பனை, மனப்பிராந்தியில் ஏதேதோ தொடர்பே இல்லாமல் எழுதுகிறீர்கள். தயவு செய்து இதில் கொஞ்சம் கவனம் எடுங்கள் (சீரியசாகவே எழுதுகிறேன்). ஏரியும் நெருப்பில் நானும் எண்ணை ஊற்ற விரும்பவில்லை. இனிமேல் முடிந்தளவு விலகி நடக்க் முயற்சிக்கிறேன்🙏.
  43. பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியாவிற்குக் கூட்டாக அறிவித்த போராளி அமைப்புக்கள் ஈழத்தேசிய விடுதலை முன்னணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை - 29 ஆனி 1985 இலங்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்தை அறிவித்தல் நான்கு முன்னணி விடுதலைப் போராட்ட அமைப்புகளான, ஈழத்தேசிய விடுதலை முன்னணியினராகிய‌ நாம், இலங்கையரச‌ படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான யுத்தநிறுத்த மீறல்களால் பூட்டானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம். எமது தாயகத்தில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்த நாம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அட்டூழியங்களைப் புரிந்து வருகிறது. எமது மக்கள் தொடர்ந்து இராணுவ வன்முறைகளுக்கு முகம்கொடுத்து, அரச பயங்கரவாதமும், அச்சமும், பாதுகாப்பின்மையும் எமது பூர்வீகத் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையில் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். எமது மக்களுக்கெதிரான இராணுவ அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இலங்கையரசு இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு ஏற்ப யுத்தநிறுத்தத்தினை சரியான முறையில் கடைப்பிடிப்போம் என்பதனை அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கவும், பேச்சுக்களின்போது உதவியினை நல்கவும், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கும் இந்தியாவை நன்றியுணர்வுடன் பாராட்டும் அதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துவிதமான ஆயுதச் செயற்பாடுகளையும் முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கையரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்புகிறோம். சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும் முகமாக நாம் சில நிபந்தனைகளையும் இத்தால் முன்வைக்கிறோம். பின்வரும் விடயங்களை இலங்கையரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், 1. இராணுவத்தை முகாம்களுக்குள் அழைத்துக்கொள்ளுதல் 2. வாகன நடமட்டாத்திற்கெதிரான தடையினை விலக்கிக் கொள்ளுதல். 3. அவசரகாலச் சட்டத்தினையும், ஊரடங்கு உத்தரவினையும் விலக்கிக் கொள்ளுதல். 4. கடற்கண்காணிப்பையும், தடைசெய்யப்பட்ட வலயங்களையும் விலக்கிக்கொள்ளுதல். 5. வடக்குக் கிழக்கில் ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல். 6. அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்தல். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 - 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையரசாங்கம் இனப்பிரச்சினையினைத் தீர்க்க நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தீர்க்கமான தீர்வொன்றினை அடிப்படையாக வைத்தே பேச்சுக்களில் நாம் பங்குபற்ற முடியும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தோம். தமிழரின் பிரச்சினைக்கான கெளரவமான தீர்வொன்றைத் தருவதாக கூறிக் காலங்காலமாக தமிழரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஏமாற்றிய வரலாற்றின் பின்னணியிலேயே நாம் அந்த நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது ஏமாற்றிய வரலாறே எம்முன்னால் இன்று இருக்கிறது. இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக எமது கோரிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இணங்கிய இலங்கையரசாங்கம், தற்போது எமது இணக்கப்பாடு இன்றியே ஒரு தலைப்பட்சமாக ஆவனி 18 ஆம் திகதியிலிருந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தபோதிலும், நாம் அந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்றுக்கொண்டு, இலங்கையரசாங்கம் பேச்சுக்களுக்கான சாதகமான சூழ்நிலையினை ஏறப்டுத்தும் என்கிற நம்பிக்கையில், நாமும் வன்முறைத் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து வருகிறோம். யுத்த நிறுத்த திட்டத்திற்கேற்ப, நாம் அதனை நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகையில், இலங்கையரசாங்கம் இடைவிடாது தனது இராணுவ அட்டூழியங்களை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு முரணாக, தமது முகாம்களை விட்டு வெளியே வந்து சோதனைகளிலும், தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இரவுவேளைகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலீஸாரும் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களிலும், தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பல அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மன்னார், முருங்கன் மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அகதிகள் யுத்த நிறுத்ததையடுத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பியவேளை அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி மீண்டும் விரட்டியடித்திருக்கிறது இராணுவம். தமது காணிகளில் இருந்து அறுவடைகளை எடுத்துக்கொள்ளச் சென்ற விவசாயிகள் கூட இராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் தான் கடற்கண்காணிப்பையும், கடற் தடையினையும் விலக்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் எமது மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொழிலுக்குச் செல்லவே அவர்கள் அஞ்சுகிறார்கள். அவசரகாலச் சட்ட விதிகளையும், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான‌ தடையினையும் விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளபொழுதிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைபோட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்குச் சட்டம் தற்போதும் இராணுவத்தினரால் அமுல்ப்படுத்தப்பட்டே வருகிறது. அத்துடன், இலங்கையின் பல்வேறு சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 2,000 இற்கும் அதிகமான தமிழ் அரசியல்க் கைதிகளை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை. மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டிருக்கும் மூர்க்கத்தனமானதும், போர்க்குணம் மிக்கதுமான அறிக்கையில், சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பிரகடணம் செய்திருக்கிறார். இதனூடாக, சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான யுத்த நிறுத்தத்தில் இதயசுத்தியுடன் ஈடுபட விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது. எமது வேண்டுகோளான தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் ஆலோசனைகளை பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக முன்வைய்யுங்கள் என்பதனை இலங்கையரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதற்குப் பதிலாக, பயனற்ற கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளும், பிரச்சினைகளை முன்கொண்டுவருவோம் என்கிற போர்வையில் முடிவில்லாத‌ வட்ட மேசை கூட்டங்களுக்குள்ளும் எம்மை இழுத்துவிட இலங்கையரசு முயன்று வருகிறது. அடுத்ததாக‌, உத்தேசப் பேச்சுவார்த்தைகளில், "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும், தமிழ் மக்களின் அரசியல்த் தலைமையாகவும் தம்மை தாமே வரிந்துகொண்டிருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டிற்கெதிரான எமது கருத்தினையும் இத்தால் பதிவுசெய்கிறோம். ஒரு அரசியல் அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையினையும், ஆதரவையும் இழந்திருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். யுத்த நிறுத்தத்தினை அமுல்ப்படுத்துகிறோம் என்று கூறிய பின்னரும் எம்மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அட்டூழியங்கள் குறித்து வாய்மூடி மெளனமாக இருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஈழத் தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் தற்போதைய செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான கெளரவமானதும், கண்ணியமானதுமான நிரந்தர அரசியல்த் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எமது முன்னைய அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம், அதனையே இப்போதும் நாம் கூறுகிறோம். இந்தியா, இலங்கையரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்ததை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அரசியல்க் குழு ‍- தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ‌ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் புரட்சிகர நிர்வாகக் குழு - ஈழப் புரட்சிகர முன்னணி
  44. யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்து போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் விளக்கமளித்த தலைமைகள் எமது இலட்சியத்தை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ‍- தலைவர் பிரபாகரன் போராளிகள் யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து வந்த நாட்களை தாம் எதற்காக யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை தமது போராளிகளுக்கு விளங்கப்படுத்துவதற்காகப் பாவித்தனர். "யுத்த நிறுத்தமும் திம்புப் பேச்சுவார்த்தையும்" என்ற தலைப்பில் ஈ.பி.ஆர்.எல் எப் அமைப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தது. உலகத்தையும், இந்தியாவையும் ஏமாற்றவென்று ஜெயார் அணிந்திருக்கும் போலிச் சமாதான முகத்திரையினைக் கிழிக்கவே ஈழத் தேசிய விடுதலை முன்னணி யுத்த நிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட இணங்கியிருப்பதாக அது தெரிவித்திருந்தது. டெலோ வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் ஜெயவர்த்தனவின் சமாதான நாடகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தவே தாம் இந்தியாவின் பேச்சுவார்த்தைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது. ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, புளொட் அமைப்பு, இலங்கையரசால் வெளியிடப்பட்டிருக்கும் தன்னிசையான யுத்த நிறுத்த அறிவிப்பு ஒரு அரசியல் நயவஞ்சகம் என்று வர்ணித்திருந்தது. தனது கையொப்பத்துடன் பிரபாகரன் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான எமது நிலைப்பாடு எனும் தலைப்பில் அது வெளியிடப்பட்டிருந்தது. "இந்த யுத்த நிறுத்தத்தின் மூலமும், பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் கெளரவமான நிரந்தரத் தீர்வு ஒன்று எட்டப்படும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 35 வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான கசப்பான பாடத்தினை நாம் கற்றிருக்கிறோம்". "நான் உங்களுக்குத் தர விரும்பும் உத்தரவாதம் என்னவென்றால், நாம் இந்த சமாதானப் பொறியில் அகப்பட்டு விட மாட்டோம் என்பதைத்தான். எமது பிரச்சினைக்குச் சாதகமான தீர்வொன்றினை இலங்கையரசாங்கம் ஒருபோதும் தரப்போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன். முதலாவதாக, இந்தியாவின் விருப்பத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சமஷ்ட்டி அடிப்படையில் அதிகாரங்களை வழங்குவதைக் கூட இலங்கையரசாங்கம் விரும்பவில்லை. இரண்டாவது, சமஷ்ட்டி அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினால் அவர்கள் நாட்டைப் பிரித்துவிடுவார்கள் என்கிற தவறான அபிப்பிராயத்தை சிங்கள மக்களின் மனங்களில் சிங்களத் தலைவர்கள் ஆளமாக விதைத்துவிட்டார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதனை நம்புகிறார்கள். மேலும், சிங்கள இனவாதிகள் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தனித் தமிழ்ப் பிராந்தியம் ஒன்று உருவாவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை". "ஆக, பழைய கள்ளான மாவட்ட சபைகளும், பிராந்திய சபைகளுமே சிங்கள அரசினால் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்படப் போகின்றன‌. இவ்வாறான வேகாத தீர்வுகளை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை". "நாம் ஒரு சுதந்திரம் மிக்க மக்கள் கூட்டமாக, கண்ணியமும் சுய கெளரவமும் கொண்டவர்களாக, சமாதானத்துடன் வாழ வேண்டுமானால், அது சுதந்திர தமிழ் ஈழ நாட்டில் மட்டும்தான் சாத்தியமாகும். நான் என் மக்களுக்கு உறுதிபடக் கூறிக்கொள்வது ஒன்றைத்தான், எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை நாம் அடைந்துகொள்ளும்வரை எமது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்". "மேலும், இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துவரும் அதேவேளை எமது இறுதி இலக்கான சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடையுமட்டும் நாம் ஓயப்போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்". "என்னிடம் இருக்கும் போராளிகளின் பலத்தையும், எமது போராளிகளிடத்தில் இருக்கும் இலட்சியம் மீதான ஓர்மத்தையும் கொண்டு நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சரியாகவே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் கூறமுடியும். தமிழ் மக்கள் தங்களின் ஆதரவினை எனக்குத் தொடர்ந்தும் வழங்கி வரும் பட்சத்தில் , நாம் எமது இலட்சியத்தை அடைவதை உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்றும் கூறிக்கொள்ள‌ விரும்புகிறேன்".
  45. யுத்த நிறுத்த ஆலோசனைகளில் இந்தியா விட்ட தவறுகளும், போராளிகளின் பரிந்துரைகளும் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கப்போவதாக லலித் அதுலத் முதலி வானொலியில் அறிவித்தபோது, தமது அரசாங்கம் எதுவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும், பயங்கரவாதிகளுடன் அரசு எந்தவித இணக்கப்பாட்டிற்குள்ளும் இதுகுறித்துச் செல்லத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார். லலித் அதுலத் முதலி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன மிகத் தந்திரமான பொறியினை வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவிற்கும், போராளிகளுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி, போராளிகளை சர்வதேசத்தில் வன்முறையில் ஆர்வம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதே ஜெயாரின் நோக்கம் என்று அவர் கூறினார். மேலும், ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை அறிவித்ததன் ஊடாக, போராளிகள் அதனை நிராகரிப்பார்கள் என்றும், தமது சொந்த நிபந்தனைகளை அமுல்ப்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள் என்றும், இதனூடாக இந்தியாவின் கோபத்திற்குப் போராளிகள் ஆளாகலாம் என்பதும் ஜெயாரின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் பிரபாகரன் கூறினார். "நாம் இந்தப் பொறியில் அகப்பட்டு விடக் கூடாது. நாம் கவனமாகவும், மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும். நாம் இந்தியா முயற்சிக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை அனுசரித்துச் செல்வோம், ஆனால் அதனுள் இருக்கும் குறைகளை அவ்வப்போது சுட்டிக் காட்டலாம். இந்தியாவின் விருப்பத்திற்கேற்ப யுத்த நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையினையும் ஏற்றுக்கொள்வதன் ஊடாக இந்தியாவின் அபிமானத்தை நாம் வெல்லலாம். அதேவேளை, இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் திட்டத்தினை ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் முயற்சிகளில் காணப்பட்ட மூன்று முக்கிய குறைகள் குறித்து இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டுவர அவர்கள் முடிவெடுத்தார்கள். அவையாவன, 1. தமிழ் மக்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்கின் எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினர், ஊர்காவல்ப்படையினர், ஆயுதம் தரித்த சிங்கள மக்கள் ஆகியோரின் தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஆலோசனைகளில் பகுதி 2 மற்றும் 3 ஆகியவை புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவைப்பது குறித்தும், அவைமீதான தாக்குதல்களை போராளிகள் நிறுத்தவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இராணுவத்தினர் தமது சோதனை நடவடிக்கைகளை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2. அதுவரை தமிழ் மக்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தினூடாகக் கிடைக்கப்பெற்ற வெற்றியான தமிழர் தாயகத்தின் சில பகுதிகளில் இயங்கிவந்த அரசின் பொலீஸ் நிலையங்களை அகற்றி, அரசின் சட்டம் ஒழுங்கினை தடுத்த முயற்சிகள் யுத்த நிறுத்தத்தின் ஊடாக முற்றாக இல்லாதொழிக்கப்ப‌ட்டிருக்கிறது. "போர்க்களத்தில் தாம் இழந்தவற்றை யுத்த நிறுத்தத்தின் ஊடாக மீளப் பெற்றுக்கொள்ளப் பார்க்கிறார்கள்" என்று பிரபாகரன் குறிப்பிட்டார். 3. யுத்த நிறுத்த ஆலோசனைகள் ஜெயாருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. யுத்த நிறுத்தத்தினையடுத்து வரவிருக்கும் அரசியல்த் தீர்விற்கான பேச்சுக்களை கால வரையின்றி இழுத்தடிப்பதனூடாக தனது இராணுவத்தை மீளக் கட்டியமைத்து இறுதி இராணுவத் தீர்விற்கான முஸ்த்தீபுகளில் அவர் ஈடுபட சந்தர்ப்பத்தை இந்தியாவின் ஆலோசனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழர்கள் சிங்கள அரசுகளுடன் செய்துவந்த அரசியல் பேச்சுவார்த்தைகளின் சரித்திரம் என்று ஒன்றிருக்கிறது. இவை எல்லாவற்றிலும் சிங்கள அரசுகள் நடந்துகொண்ட விதம் என்று ஒன்றிருக்கிறது. ஆகவே, இந்தியாவிடம் இதுகுறித்து விளக்கி, ஜெயவர்த்தன தனது அரசியல்த் தீர்வுகுறித்த ஆலோசனைகளை பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கவேண்டும் என்கிற அழுத்தத்தினை இந்தியா வழங்கவேண்டும் என்று கோருவது என்று பிரபாகரன் கூறினார். சந்திப்பின் முடிவில், இந்தியாவின் ஆலோசனைகளில் தாம் கண்டறிந்த தவறுகளை எழுத்துவடிவில் ஒரு அறிக்கையாகத் தயாரிக்கும்படி பாலசிங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின்னர் போராளிகளுக்கிடையே யுத்தநிறுத்தம் குறித்து உருவாகி வந்த அதிருப்தியினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். முதலாவதாக, தமது போராளிகளிடத்தில் தாம் தமிழ் ஈழம் எனும் இலட்சியத்தைக் கைவிடவில்லை என்று கூறுவதாக முடிவெடுத்தார்கள். அடுத்ததாக, யுத்த நிறுத்தத்தினையும், பேச்சுவார்த்தையினையும் சிங்கள அரசின் உண்மையான முகத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் தோலுரித்துக் காட்டவே தாம் பாவிக்கப்போவதாக போராளிகளிடத்தில் கூறுவது என்றும் முடிவெடுத்தார்கள். அன்டன் பாலசிங்கம் தயாரித்த அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, ஆனி 18, 1985 ஆம் திகதிக்கு அமுலிற்கு வரும் யுத்த நிறுத்த ஆலோசனைகள் தொடர்பான எமது இணைந்த அறிக்கை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினால் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படுகிறது தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தினைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனைகளை மிகவும் கவனமாக நாம் ஆராய்ந்திருக்கிறோம். யுத்த நிறுத்தத்தினை செயற்படுத்த இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகளையும், மத்தியஸ்த்தராக பங்கெடுக்க அது எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும், உத்தரவாதத்தினையும் பாராட்டும் அதேவேளை, தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கத் தேவையான சமாதானமான சூழ்நிலையினை உருவாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் யுத்தநிறுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதென்று எமது ஒருங்கிணைந்த அமைப்பு ஒத்துக்கொண்டு கையொப்பம் இடுகிறது. குறிப்பிடப்பட்ட காலத்திற்கு எமது ஆயுத நடவடிக்கைகளை நாம் நிறுத்திக்கொள்ளச் சம்மதம் தெரிவிக்கும் அதேவேளை, யுத்தநிறுத்த அலோசனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தமிழர்களை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லப்போகின்றது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். ஆகவே, இவற்றினை நிவர்த்திசெய்வதற்கான சில ஆலோசனைகளை நாம் முன்வைக்க விரும்புகிறோம். யுத்த நிறுத்த ஆலோசனைகளின் முதலாவது பகுதியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பகுதி 2 இல், போராளிகள் செய்யவேண்டியவை எனும் பகுதியில், "புதிய சிங்களக் குடியிருப்புக்களை அரசு நிறுத்திவைக்கும் அதேவேளை, இந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, வடக்குக் கிழக்கில் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ போராளிகள் நிறுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருக்கிறது. இங்கு எமக்கிருக்கும் கவலை என்னவெனில், யுத்த நிறுத்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தினரும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் நடத்தவிருக்கும் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையோ அல்லது அவ்வாறான தாக்குதல்கள் நடக்கமாட்டாது எனும் உத்தரவாதத்தையோ ஆலோசனைகள் வழங்கவில்லை என்பதுதான். இந்தியா முன்வைத்திருக்கும் ஆலோசனைகளில் இவைகுறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லையாயினும், இலங்கை இராணுவமும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிறுத்தவேண்டும் என்று இந்தியா இலங்கை அரசிடம் கோரவேண்டும் என்று நாம் பரிந்துரை செய்கிறோம். யுத்த நிறுத்தத்தின் முதலாவது கட்டத்தில் இவ்வாறான தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவது தொடருமாக இருந்தால் அவற்றினை மிகக் கடுமையான யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கருதவேண்டி வரும். பகுதி 2, பந்தி மூன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல்" எனும் ஆலோசனை குறித்த எமது கடுமையான அதிருப்தியினை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறோம். எமது நடவடிக்கைகளால் மூடப்பட்ட இந்த பொலீஸ் நிலையங்களின் ஊடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களைப் பாவித்து எம்மக்கள் மீதான "சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும்" நடவடிக்கைகளில் பொலீஸார் ஈடுபட்டிருந்தனர். எமது பிரதேசங்களில் அமுலாக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றான‌ சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் பரந்துபட்ட நிரந்தரமான அரசியல்த் தீர்வின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே ஒழிய கால வரையறைக்குட்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்றின் ஊடாக அல்ல என்பது எமது கருத்து. ஆகவே, இந்த ஆலோசனையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 இலிருந்து 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை இலங்கையரசு கட்டாயம் முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். எமது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட முடியும் என்பதனை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நீதியான தீர்விற்காக தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களுடன் காலங்காலமாக செய்த அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள அரசாங்களினாலேயே கைவிடப்பட்டு, தமிழர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகிறது. மேலும், இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வினை எட்டுவதைத் தடுக்கும் வகையில் பேச்சுக்களை காலவரையின்றி இழுத்தடிப்பதென்பது சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கைக்கொண்டு வரும் ஒரு அணுகுமுறை என்பதையும் இத்தருணத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆகவேதான், விளைவுகள் எதனையும் தராத இன்னொரு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் நாம் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்தால் ஒழிய, பகுதி 4 இல் குறிப்பிடப்பட்டதன்படி பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறோம். மேலும், யுத்த நிறுத்த காலத்தை எந்தவிதத்திலும் நீட்டிப்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். அடுத்ததாக, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழர் பிரதிகள் குறித்து குறிப்பிடும் போது, நான்கு பலம்பொறுந்திய போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பினை வெறுமனே, "ஆயுததாரிகள்" என்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை, "தமிழரின் அரசியல்த் தலைமை" என்றும் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான தரப்படுத்தல்கள் எமது மக்களின் நலனிலும், பாதுகாப்பிலும் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் எம்மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு, எமது மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் தலைமைகள் என்கிற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளையும் இவ்வாறான தரப்படுத்தல்கள் தடுத்துவிடும். இறுதியாக, யுத்த நிறுத்தத்தின் ஆரம்ப நாளான வைகாசி 18 இனை பிறிதொரு சாதகமான‌ நாளைக்குப் பிற்போடுமாறு கேட்டுக்கொள்கிறோம். யுத்த நிறுத்த ஆயத்தங்களைச் செய்வதற்கு எமக்கு இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே, ஆடி 1 ஆம் திகதி (1985) இனை யுத்த நிறுத்தத்திற்கான ஆரம்ப நாளாக நாம் பரிந்துரை செய்கிறோம். எமது பரிந்துரைகளும், எதிர்‍ ஆலோசனைகளும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம். இப்படிக்கு தலைவர்கள், ஈழத்தேசிய விடுதலை முன்னணி : பிரபாகரன், பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் இந்தியாவின் ரோவினூடாக‌ தமது அறிக்கையினை பாலசிங்கம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். வெளியுறவுத்துறையின் அறிவுருத்தலின் பெயரில், சில நாட்களின் பின்னர், ரோ அதிகாரி சந்திரசேகரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்டு போராளித் தலைவர்களின் அறிக்கை தொடர்பான இந்திய வெளியுறவுத்துறையின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். பாலசிங்கத்திடம் பேசிய சந்திரசேகரன், பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்கிற ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கோரிக்கை சாத்தியமற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதற்கான கோரிக்கையினை இந்திய வெளியுறவுத்துறை முற்றாக நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு வார காலமாக அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதென்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
  46. யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்.."ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?" இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.. ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்.. அவருக்கு பதிலில் திருப்தி இல்லை.. அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்".. அதிலும் அவருக்கு சம்மதமில்லை.. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது.. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.. அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்.. அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.. ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது.. அது கலாம் அவர்கள்.. " குட்..! இதுதான் உண்மையான பதில்.. அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு.. அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?.. கனிவான அன்பும், தளறாத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே.. அந்த நம்பிக்கை தானே அழகு" என்கிறார்.. அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது... இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் ஆணழகன் போட்டியில் நமது சங்க உறுப்பினர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை என்று ...!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.