Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19667Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points88820Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33807Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்7Points8975Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/29/24 in Posts
-
நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம்
4 pointsநூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவே இக்கட்டுரை. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கொரு இலாபமும் உண்டு. நான் ஆங்காங்கே எழுதியவற்றில் வெட்டி ஒட்டி, சில இடங்களில் மட்டும் சிறிது விளக்கம் தந்து மேனி நோகாமல் எழுதிச் செல்வதே அந்த லாபம். இந்த வெட்டி ஒட்டுதலைச் செய்பவன் அடியேன் மட்டுமே ! நான் குறிக்க வரும் புலவர் பெருமக்களில் எவரும் அவ்வாறு செய்யவில்லை. அச்சான்றோரில் ஒருவர் முன்மொழிய மற்றொருவர் வழிமொழிதல், ஒரு கருத்தை இருவர் கூறி மேன்மையுடன் செழிக்கச் செய்தல், இருவர் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து மானுடத்தின் எல்லையற்ற வாழ்வு சிறக்க அமுது எடுத்தல் எனும் உயரிய நோக்கங்கள் கொண்டவை அப்புலவர் தம் படைப்புலகம். எடுத்துக்காட்டுதலில் வரும் பாடல்களைத் தந்தோரில் முன்னவர் யார், வழிமொழிந்த பின்னவர் யார் என்று நாம் சொல்லவில்லை. காலச்சக்கரத்தில் சிக்கித் தொலைந்த அவ்விவரம் தொலைந்ததாகவே இருக்கட்டுமே ! நமது வரிசைப்படுத்தலில், முதலில் வரும் ஒன்று காலத்தால் முன்னது என்ற பொருள் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு பற்றி ஒன்றிரண்டு சொற்கள் - 'வால்' எனுஞ் சொல் சிறந்த, தூய எனும் பொருள் தருவது. வள்ளுவன் இறைவனை 'வாலறிவன்' எனக் குறிப்பது அங்ஙனமே. தமக்கு முன்னோரின் பொன் மொழியை வழிமொழியும் புலவரின் நூலறிவு ஒப்பற்ற சிறைப்புடைத்து என மொழிவதே இத்தலைப்பு. சங்ககாலம் சென்று முதலில் புறநானூறு பேசி நிற்போமே ! காக்கை பாடினியார் நற்செள்ளையார் தரும் புறநானூற்று பாடல் : "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) பாடற் குறிப்பு : போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான் எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது. பாடற் பொருள் : நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்). ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்த மற்றுமொரு தாயினை நம் கண்முன் நிறுத்துகிறார் பூங்கண் உத்திரையார் எனும் புறநானூற்றுப் புலவர் : "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே" (புறநானூறு 277) பொருள் விளக்கம் : மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற; வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய; முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி; ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே; வெதிரத்து - புதரில்; துயல்வரும் - அசைந்தாடும்; நோன் - வலிய; கழை - மூங்கில் கழியில்; வான் பெய - மழை பெய்யும் போது; தூங்கிய - தங்கிய; சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்). முதலில் நாம் குறித்த காக்கைபாடினியார் தாயின் வீரம் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனை இழந்த துயரத்தை உலகோர்க்குக் காட்டாத அளவு அத்தாய் நெஞ்சுரம் கொண்டு இருக்கலாம் அல்லது மகனை இழந்த தாயின் அவலம் சொல்லில் வடிக்கவொண்ணாததாகப் புலவர்க்குத் தோன்றியிருக்கலாம். பூங்கண் உத்திரையாருக்கோ அந்த அவலச் சுவையை உணர்வுபூர்வமாய் வடிக்கத் தோன்றியது. எது எப்படியோ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவத்தல் என்று ஒருவரிடம் தோன்றிய கோட்பாடு மற்றொருவரை ஈர்த்தது என்னவோ உண்மைதானே ! அஃது வள்ளுவனிடத்தும் வெளிப்பட்டு நிற்கிறதே ! "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம் : மக்கட்பேறு) சங்ககாலத்தில் (குறளோனின் சங்கமருவிய காலத்திலும் இருக்கலாம்) வீரனைக் குறித்த 'சான்றோன்', பிற்காலத்தில் (வள்ளுவத்திற்கு உரை தரப் போந்த காலம் எனக் கொள்ளலாம்) கற்றவனையும் கற்ற வழி நின்ற பண்பாளனையும் குறித்தது ஈண்டு குறிக்கத்தக்கது. பொருகளத்தில் போர் அறம் அறிந்து நிற்றலும், கல்விக் களத்தில் அறிவறிந்து நிற்றலும் சான்றாண்மையின் பாற் பட்டதில் வியப்பென்ன ! அடுத்து மணிவாசகரின் கோவை இலக்கியமான திருக்கோவையாரில் ஒரு பாடல். தலைவன்-தலைவி உடன்போக்கு சென்ற பின் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வது மரபு. அவ்வாறு செல்லுகையில் எதிரே அதே போல் உடன்போக்கு எனும் ஒழுக்கம் மேற்கொண்டு வரும் வேறொரு தலைவன்-தலைவி இணையரைத் தூரத்தே கண்டு தன் மக்கள்தானோ என முதலில் மயங்கி, அவர்கள் அருகில் வரவும் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள். "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". (திருக்கோவையார், பாடல் 244) உரையாடல் வருமாறு :- செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே ! எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன். எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக ! இக்காட்சியினைப் பதினோறாம் திருமுறையில் வரும் திருஏகம்பமுடையார் திருவந்தாதி பாடல் 73 ல் பட்டினத்தார் கூறக் கேட்கலாம் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" பொருள் : துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலை பெண்ணும்; உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற; கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்); தோன்றலும் - தலைவனும்; ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு; ஏகினரே - சென்றனரே; அணையத்தர் - அவ்வாறான; ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்; மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்; பிணையொத்த நோக்குடை - பெண்மானின் (மருண்ட பார்வையுடைய); பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக ! திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான். புறநானூறு கண்டோம்; கோவை எனும் சிற்றிலக்கியம் கண்டோம்; பக்தி இலக்கியத்தை விட்டு வைப்பானேன் ? இப்போது நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி : "ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்". (திருவெம்பாவை பாடல் 4) மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம். திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் : "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்" (திருப்பாவை பாடல் 15) பொருள் விளக்கம் :- துயிலெழுப்பும் பாவையர் கூற்று : எல்லே - 'அடி பெண்ணே, என்ன இது ?' எனக் கேட்பது போன்ற வழக்கு; இளங்கிளியே - கிளி போல் கொஞ்சுமொழி பேசும் இளம் பெண்ணே; இன்னமும் உறங்குதியோ - இன்னும் உறங்குகிறாயா ? துயிலெழுப்பப்படும் பாவையின் கூற்று : சில்லென்று அழையேன் - 'சில்' எனக் கூச்சலிட்டு அழையாதீர்; மின் நங்கைமீர் - மின்னல் போன்று ஒளிரும் தோழியரே; போதர்கின்றேன் - இதோ வருகின்றேன்; பாவையர் கூற்று : வல்லை - திறமையானவளே; பண்டே - முன்பிருந்தே; உன் கட்டுரைகள் - உன் உறுதிமொழிகளையும்; உன் வாயறிதும் - உன் பேச்சுத்திறனையும் யாம் அறிவோம்; பாவையின் கூற்று : வல்லீர்கள் நீங்கள் - நீங்களே (பேச்சுத்) திறனுடையவர்கள்; நானே தானாயிடுக - (நீங்கள் சொன்னவாறே) நான் (வாயாடியாக) இருந்து விட்டுப் போகிறேன்; பாவையர் கூற்று : ஒல்லை - விரைவாக; நீ போதாய் - நீ வருவாயாக; உனக்கென்ன வேறுடையை - உனக்கு (இப்போது) வேறு என்ன வேலை உண்டு ? பாவையின் கூற்று : எல்லாரும் போந்தாரோ - பாவையர் எல்லோரும் வந்து விட்டார்களா ? பாவையர் கூற்று : போந்தார் - வந்து விட்டனர்; போந்து எண்ணிக்கொள் - வந்து எண்ணிக்கொள்; வல் ஆனைக் கொன்றானை - வலிய யானையைக் கொன்றவனை; மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - பகைவரை, அவர்தம் அகந்தையை அழிக்க வல்லவனை; மாயனை - மாயச் செயல்கள் புரிபவனை (கண்ணனை); பாடேலோர் எம் பாவாய் - பாடுவாயாக எம் பாவையே ! திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை. இனி சில சங்கப் பாடல்களும் தொடர்புடைய குறள்களும் காணலாம். முதலில் நம் நினைவுக்கு வருவது நற்றிணையில் 355 ஆவது பாடலின் ஒரு பகுதி : "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " பொருள் : முன்பிருந்தே (தேர்ந்து தெளிந்த) நண்பர் கொடுப்பது நஞ்சாக இருந்தாலும் சிறந்த பண்பாளர் (நனி நாகரிகர்) அதனை உண்டு அமைவர். இங்கு 'நஞ்சினை உண்டு' என்பதை நேர்ப் பொருளாய் (Literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். 'உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றைத் தாம் தேர்ந்து தெளிந்த தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில், சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்று அமைதல்' எனப் பொருள் கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். மேற்கூறிய கருத்து அச்சு எடுத்தாற்போல் திருக்குறளில் கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில், "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என அமையக் காணலாம். நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவத்தில் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது. பெயப்படும் நஞ்சு என்னவோ ஒன்றுதான். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்துக் கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. பின்வரும் நற்றிணைப் பாடல் (19) அவ்வாறான அரிய பாடல் : "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" [வருவை ஆகிய சின்னாள் (சில நாள்) வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே)] அஃதாவது "சில நாட்களில் வருவாய் எனினும், அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே" என்பதாம். நற்றிணையில் தோழி கூற்றாக வரும் செய்தி வள்ளுவத்தில் தலைவி கூற்றாகவே வருகிறது : "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் 1151; அதிகாரம்: பிரிவாற்றாமை) சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடை பெற்றுத் தலைவியிடம் விடைபெற வருகிறான். "சில மாதங்களில் வந்து விடுவேனே, ஏன் கவலை கொள்கிறாய் ?" என ஏற்கனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், "ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல் !". பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு, மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற் சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். அடுத்து வரும் குறுந்தொகைப் பாடலில், "எப்பிறவியிலும் நீயே என் கணவனாய் அமைத்தல் வேண்டும்" என்று தன் காதலின் திறம் கூறுகிறாள் தலைவி: "இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே " (குறுந்தொகை பாடல் 49) வள்ளுவனின் திரைக்கதை கூட இதுவே. காட்சியமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்தான் : "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்" (குறள் 1315; அதிகாரம்: புலவி நுணுக்கம்) "இப்பிறவியில் பிரிய மாட்டோம் என நான் சொன்னதும் தலைவியின் கண்கள் குளமாயின" என்பதே தலைவன் கூற்று. அஃதாவது "ஏனைய பிறவிகளில் பிரிய நினைத்தாயோ ?" என்பதே தலைவியின் கண்ணீருக்கான ஏதுவாய் அமைந்தது. வள்ளுவனின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலு'க்கு மற்றுமொரு சான்று. இங்ஙனம் தமிழ்ச் சான்றோரின் நூலறிவிற்கான சான்றுகள் எண்ணிலடங்கா. நம் கட்டுரைக்கு எங்காவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே ! சரி, கட்டுரைக்குதானே முற்றுப்புள்ளி ! இதனை வாசித்தோர் தம் இலக்கிய வாசிப்பில் இத்தகைய முன்னோர் மொழிகளைக் கடந்து செல்லுகையில் ஒரு கணம் நின்று அசைபோட்டு இன்புறுவர்; மொழிக்கு மேலும் செறிவூட்டுவர்.4 points
-
நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம்
4 pointsமிகவும் அருமையான சங்ககாலப் பாடல்களும் சிறப்பான விளக்கங்களும் வாசிக்கும் போதே மனதினுள் ஒரு அமைதியும் சிறு புன்முறுவல் உண்டாகின்றது ஐயா ........! பாவையும் கோதையும் பல இடங்களில் சேர்ந்து பயணிப்பதை ஆழ்ந்து படிக்கையில் உணரலாம்.......இரண்டும் அதிகாலையில் நண்பர்களை துயிலெழுப்பி அழைத்துச் செல்வதால்.......! "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" இந்தக் குறளுக்கு ஏற்ற ஒரு சம்பவத்தை பேராசிரியை பர்வீன் சுல்தானா ஒரு பேச்சரங்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்..... மிகவும் எளிமையாக இருந்தது...... அதை கொஞ்சம் இங்கு குறிப்பிட விழைகின்றேன் பிழையாயின் பொறுத்தருள்க.....! இந்தக் குறளில் அவவுக்கு ஒரு சந்தேகம் ..... அதெப்படி வேண்டிய ஒருத்தர் நஞ்சைத் தந்தாலும் நாகரீகத்துக்காக அதை வாங்கி சாப்பிட்டு விட்டு சாக வேண்டுமா என்று......! அது தெளிவாகிறதுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமையுது.......அவருடைய சக ஆசிரியை ஒருத்தர் யார் எது கொடுத்தாலும் யாரிடமும் ஒன்றும் வாங்கி உண்ண மாட்டார் ...... அன்று அவர்கள் ஆசிரியர்களுடைய ஓய்வறையில் இருக்கும் போது ஒரு சிறுமி தனது பிறந்தநாளுக்கு இனிப்புகள் எல்லோருக்கும் குடுத்துக் கொண்டு வருகின்றா ....... பர்வீன் அவர்களிடமும் இனிப்புத் தர வந்தபொழுது இவவும் சற்று தூரத்தில் இருக்கும் அந்த ஆசிரியையைக் காட்டி நீ சென்று அவரிடம் இனிப்பைக் குடுத்தால் உனக்கு இந்தப் பொருளை பரிசாகத் தருகின்றேன் என்று சொல்கின்றார்.......அதை பார்த்ததும் அந்த சிறுமிக்கு அதன்மீது ஆசை வந்து அந்த ஆசிரியையிடம் சென்று இனிப்பைத் தர அவ மறுக்கிறா ....சிறுமியோ அவரிடம் வாங்க சொல்லி கெஞ்சுகின்றாள் துடர்ந்து ஆசிரியை மறுக்க சிறுமிக்கு இனி தனக்கு பரிசு கிடைக்காது என்னும் ஏக்கம் கோபமாக மாறுகின்றது, அழுகையும் வருகின்றது.......அந்த ஆசிரியையைப் பார்த்து கத்திவிட உடனே அந்த ஆசிரியை எழுந்து எனக்கு நீரிழிவு நோய் இருக்கு நான் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று சொல்லி சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்........! அப்போதுதான் ஆசிரியை பர்வீனுக்கு புரிந்ததாம் இனிப்பானபோதிலும் அது நீரிழிவு நோய்க்கு நஞ்சு ஆனாலும் நாகரீகம் கருதி சிறிது எடுக்கலாம் என்று........! (கொஞ்சம் "போரடித்து" விட்டேனோ பொறுத்தருள்க).....! 🙏4 points
-
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் செய்யப் போறீங்களா, ஒரு நிமிடம் இதை படியுங்கள்.
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார். பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம். நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதானமளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.) குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓ குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான். இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள். போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.) ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.) ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது... ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு. ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று பல வகைப்படும். ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும் கோபாலகிருஷ்ணன். Mantras and Miracles3 points
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
மிகவும் யோசிக்க வேண்டிய கோணம் இது. பொது வேட்பாளரை முன்னிலை படுத்துவதாகின்: 1. கிழக்கில் இருந்து ஒருவர் 2. அத்தனை தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவோடு இறங்கி 3. ஏன் இதை செய்கிறோம் என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்து சொன்னால் ஒருவேளை மக்கள் ஆதரிக்கலாம். எப்படியும் வெல்ல போவதில்லை - ஆகவே ஒரு மதம், பிரதேச சார்பற்ற, இதுவரை அரசியல் சார்பில்லாது இருந்த ஒரு சமூக சேவையாளரை நிறுத்தலாம். எமது கதிரை அரசியல்வாதிகளும் இதனால் பாதிப்படைவது குறைவு என்பதால் ஒத்து கொள்ள கூடும். மலையகமக்கள் - தவிகூ வில் இருந்து சேவல் பறந்த போதே அவர்கள், விதியும், வட-கிழக்கு தமிழர் விதியும் வேறாக பிரிந்து விட்டது. அப்படி அவர்களை தொண்டமான் பிரித்தது மிக சரியான முடிவும் கூட. நாம் தனிநாட்டை அடைந்தால் கூட - அவர்கள் இலங்கை பிரசைகள்தான். எனவே அவர்கள் தம் நலனை கணித்தே வாக்களிப்பர், வாக்களிக்க வேண்டும். மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் - 1970 களில் மலையக தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை 2024 வடகிழக்கு தமிழ் மக்கள் (தலைவர்கள் அல்ல) எடுத்துள்ளார்களா? என்பதே. அதாவது, இனப்பிரச்சனை, குடியேற்றம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாடு நாசமானால் நாம் எல்லாரும்தான் ஆப்பு அடிபடுவோம், எனவே ரணிலை (அல்லது அனுரவை) வெல்ல வைப்போம் என்ற மனநிலைக்கு வடகிழக்கு மக்கள் வந்து விட்டார்களா? இதை கணிப்பது மிக கஸ்டமாக இருக்கிறது. ஆனால் என் கருத்து 2005 இல் தமிழ்மக்களை பகிஸ்கரிக்குமாறு கேட்காமல் விட்டிருந்தால் ரணிலுக்கு பெருவாரியாக போட்டிருப்பர் என்பதே. அதே போல் ஒரு மனநிலை (அப்போ தீர்வை தருவார் என்ற மாய நம்பிக்கை, இப்போ நாட்டை மீட்கிறார் என்ற நம்பிக்கை) இப்போதும் மக்களிடம் இருந்தால், பொது தமிழ் வேட்பாளர் நீங்கள் சொல்வது போல் பொல்லை கொடுத்து அடிவாங்கும் வேலையாகலாம். முதலில் பாராளுமன்ற தேர்தல் வந்தாலாவது ஓரளவு மக்கள் எண்ண ஓட்டத்தை பிடிக்கலாம். இலங்கை அரசியலில் ஒரு paradigm shift (அடிகட்டுமான மாற்றம்) ஐ தரவல்ல பல நிகழ்வுகள் நடந்த பின் வரப்போகும் முதல் நாடளாவிய தேர்தல் இது. மக்கள், குறிப்பாக வடகிழக்கு மக்கள் நிலைப்பாட்டை நாடி பிடிப்பது, கிட்டதட்ட இயலாத காரியம்.3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொலிஸ்காரர்: 120 ஐரோ தண்டப் பணமும், 3 புள்ளிகளும் உமக்கு கிடைக்கின்றது. வாகன சாரதி: அந்தப் புள்ளியை வைத்து நான் என்ன செய்ய? பொலிஸ்காரர்: இன்னும் ஐந்து புள்ளிகளை சேர்த்து, உமக்கு ஒரு சைக்கிள் வாங்கும். 😂2 points
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷2 points
-
ஒரு நாளைக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காகச் செலவிடும் இலங்கை மக்கள்!
புகைக்கே 52 கோடி என்றால் தண்ணிக்கு எவ்வளவு வரும்?2 points
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
அறுபது வயது மாதிரி தெரியவில்லை. வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
யுத்த குற்றவாளி ரசியாவில். இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும்.2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம் 15) தயாநிதிமாறன்(திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 3ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெறும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 3 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 15 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 1 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 35 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 19 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 9 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 போட்டி விதிகள் hh 1)june 3 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்2 points- புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர். நிற்க, சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள். சுருக்கமாக, புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக). படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.2 points- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 point'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்; 1988 ஏப்ரல் 19ம் திகதி இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் (LTTE-Muslim Accord, the satanic force, பாகம்- 1, பக்கம்: 747); ஊர்காவல்படை மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****1 point- வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது. 2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மலைநாடு, ஆயுர்வேத சிகிச்சை, ரயில் பயணங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் பயணிகளுக்கு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியமான காலை உணவு என்பனவும் இலங்கையின் தனித்துவமான சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.jaffnamuslim.com/2024/04/5_28.html ளது.1 point- 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும் என்ற முடிவை எடுத்த மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். யார் இவர்: அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த அலெஜாண்ட்ரோ.. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்து வரும் இவர், அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெறும் முதல் பெண் இவர் ஆவார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த அழகி போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள் சப்போர்ட்டும் இவருக்கு தான் அதிகம் இருந்துள்ளதாம். அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே தனது இலக்காக வைத்துள்ளதாக அலெஜாண்ட்ரா தெரிவித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால் இந்தாண்டு செப். மாதம் மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியும். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார். கட்டுப்பாடு நீக்கம் இதற்கு முன்பு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற ரூல்ஸ் இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/3004291 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/11/1990 பக்கம்: 1, 4 17 வீதமான முஸ்லிம்களுக்கு 30 வீதத்தை நாம் கொடுக்க முன்வந்தோம்; அவர்கள் காட்டிக்கொடுத்தனர் மக்கள் முன்னணி செயலாளர் யோகி தெரிவிப்பு (கிளிநொச்சி) முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மக்கள் தொகையில் பதினேழு வீதம் மட்டுமுள்ள அவர்களுக்கு முப்பது வீதத்தை விட்டுக் கொடுப்பதாக அவர்களுடன் நல்ல முறையில் அணுகி பேச்சுவார்த்தை நடாத்தினோம். அப்படியிருந்தும் கிழக்கில் அவர்கள் செய்த துரோகத்தினால் நாம் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கிளிநொச்சியி லுள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிச் செயலாளர் திரு. யோகரட்ணம் யோகி கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. சீலன் தலைமையில் கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திரு. யோகி மேலும் பேசுகையில்: அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நாலாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருமலையிலிருந்து நான்கு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொத்துக்களை, உயிர்களை, கற்பை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். கொலை செய்யப்பட்ட நாலாயிரம் தமிழர்களில் இரண்டாயிரம் தமிழர்கள் முஸ்லிம்களாலும், மிகுதி இரண்டாயிரம் பேர் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர். தற்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தைக் கண்டுபயப்படுவதிலும் பார்க்க முஸ்லிம்களைக் கண்டே தமிழ் மக்கள் கூடுதலாகப் பயப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்திச் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அண்மையில் தமிழ்ப் பெண் ஒருத்தி முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்ட பின் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள். எமது இயக்கத்திலிருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இயக்கத்தை விட்டு ஓடி இராணுவத்துடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுப்பதிலும், எம்மை அழிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழருக்கு எதிராகச் செயற்படும் முஸ்லிம்களுக்கு அரசு சகல உதவிகளையும் செய்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டன. அப்போதும் முஸ்லிம்களோ, அன்றி அவர்களின் தலைவர்களோ அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடாத்த முன்வரவில்லை. போராட் டத்திற்குப் பதிலாக முஸ்லிம் தலைவர்கள் சிங்களக் கட்சிகளின் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தார்கள். இன்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களை கிழக்கு மாகாணத்தில் இல்லாது செய்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். பக்கம்: 1 புத்தளத்தில தமிழர் லொறிகள் முஸ்லிம்களால் கொள்ளை (கிளிநொச்சி) தமிழர்களின் லொறிகளை வழிமறிப்பதிலும், பணங்களைக் கொள்ளையடிப்பதிலும் தற்போது முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆயுதப்படையினரும் இம் முஸ்லிம்களுக்கு உதவியாகச் செயற்படுகிறார்களாம். யூரியா பசளையைக் கொள்வனவு செய்வதற்காகக் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு சென்ற லொறி ஒன்று முஸ்லிம்களால் வழிமறிக்கப்பட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் பசளை, கிருமிநாசினி முதலியவற்றை விற்பனை செய்யும் ஸ்தாபனம் ஒன்று சிளிநொச்சியில் பசளை, உரம் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் அப்பொருள்களைக் கொழும்பில் இருந்து கொண்டுவருவதற்காகச் சென்றதாம். மேற்படி ஸ்தாபன லொறி புத்தளத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாம். இது சம்பந்தமாகப் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம். (49) *****1 point- யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண்.1 point- இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா
பொறுங்கோ அடுத்த மாதம் நிலாந்தன் ஏதாவது எழுதுவார்.🖐️1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3 ஆம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3 ஆம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3 ஆம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2 ஆம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2 ஆம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 2 ஆம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) முதலாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3 ஆம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2 ஆம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) முதலாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2 ஆம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2 ஆம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 7% - 8% 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 5 இலட்சத்துக்கும் கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 11 point- யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
சிங்களவரும். தமிழரும். இலங்கையில் சம எண்ணிக்கையில் இருந்திருந்தால் சிங்களவர்கள். புத்திசாலிகள். என்ற பேச்சுக்கு இடம்மிருக்காது ஆகவே பெரும்பான்மை = புத்திசாலித்தனம் 🤣😀😂 இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அனேகமனேர். அகதிகள் இல்லை அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் வசிக்கும் நாட்டின் குடிமக்கள்1 point- 101 வயது மூதாட்டிக்கு குழந்தைக்கான பயணச்சீட்டைத் தரும் விமான நிறுவனம் - என்ன காரணம்?
கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவையான சம்பவத்தின்போது பிபிசி செய்தியாளரும் அங்கிருந்தார். பாட்ரிசியாவுக்கு குழந்தைகளுக்கான பயணச்சீட்டு பதிவு செய்திருந்தது, கேபின் குழுவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. "வயதான பெண்ணான என்னை சின்னக் குழந்தை என்று நினைத்தது வேடிக்கையாக உள்ளது" என்று சிரிக்கிறார் பாட்ரிசியா . இப்படி நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பயணச்சீட்டு பதிவு செய்த போதும் அதே தவறு நடந்ததாக கூறும் பாட்ரிசியா, “இதனால் எனக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும்” என்கிறார் நூறு வயதை கடந்த பாட்ரிசியா. உதாரணமாக, ஒரு பயணத்தின்போது நான் குழந்தை என்று விமான நிலைய ஊழியர்கள் நினைத்துக் கொண்டதால், முனையத்திற்குள் வயதானவர்களுக்கான வசதிகளை தயார்படுத்தவில்லை. சிரமங்களை எதிர்கொள்ளும் மூதாட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா சிகாகோவில் இருந்து மிச்சிகனில் உள்ள மார்க்வெட்டிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணித்த அதே விமானத்தில் பிபிசி-யின் நிருபரும் பயணித்தார். பாட்ரிசியா தனது மகள் கிரிஸுடன் வந்திருந்தார். "என் மகள் டிக்கெட்டுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தாள், விமான நிலையத்தில் உள்ள கணினி எனது பிறந்த தேதி 1922 ஆக இருக்காது, 2022 ஆக தான் இருக்கும் என அதுவாக கணித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது, ஒவ்வொரு முறையும் இந்த விமானத்தில் ஒரு குழந்தை பயணிக்கப் போகிறது என எதிர்பார்க்கிறார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர்" என்கின்றனர். பாட்ரிசியாவின் இருக்கை பெரியவர்களுக்கான டிக்கெட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், விமான நிலைய கணினியால் 1922 என்ற பிறந்த ஆண்டை கணக்கிட இயலவில்லை. காரணம் இந்த பிறந்த தேதியில் இதற்கு முன்னர் அதிக பயணிகளை கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே 1922 என்பதை ‘default’ ஆக 2022 என்று மாற்றிப் பதிவு செய்துவிட்டது.” ஓய்வு பெற்ற செவிலியரான பாட்ரிசியா, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தைப் பார்க்கவும் குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும் மிச்சிகன் செல்வது வழக்கம். கடந்த இரண்டு பயணத்தின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என் வயதை தவறாக பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ஊழியர்கள் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது. மேலும் பேசிய மூதாட்டி, ”நான் இந்த பிரச்னை சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முந்தைய விமான பயணத்தின் போது விமான நிலைய ஊழியர்கள் எனக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யாததால், மற்ற பயணிகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் நானும் எனது மகளும் விமானத்தின் உள்ளே காத்திருந்தோம். என் உண்மையான வயதை பதிவு செய்திருந்தால் என் மகள் கிரிஸுக்கும் அது உதவியாக இருந்திருக்கும். என் மகள், எங்கள் அனைத்துப் பைகளையும் தனி ஆளாக ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்குக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அடுத்த பயணம்... பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா தனது 97 வயது வரை தனியாக தான் பயணம் செய்தார். ஆனால் அதன் பிறகு அவரால் குடும்பத்தின் துணை இன்றி பயணிக்க முடியவில்லை. "எனக்கு கண் பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் நான் தனியாக பயணம் செய்ய விரும்பவில்லை," என்கிறார் பாட்ரிசியா. ”ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஒருபோதும் என் பயணங்களை தடுத்து நிறுத்தாது” என்று உறுதியாகக் கூறுகிறார் அவர். மேலும் இலையுதிர் காலத்தில் தனது அடுத்த விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவருக்கு 102 வயது ஆகி இருக்கும் - ஒருவேளை அடுத்த முறை விமான நிலைய கணினிகள் அவரின் உண்மையான வயதை பதிவு செய்யக்கூடும்! https://www.bbc.com/tamil/articles/c1d43d95kyxo1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
1. வெறுமனே தமிழர்களின் வாக்குகளை வைத்து இலங்கையில் சனாபதியாக வர முடியாது. 50 வீத வாக்குகள் பெற வேண்டும். 2. இலங்கை அரசியலமைப்பின் படி சிங்கள பெளத்த சமூகத்தை / இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சனாதிபதியாக முடியும். எனவே தமிழர் ஒருவர் சனாதியாவது நடைமுறை சாத்தியமற்றது.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும், தோழர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு... உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன். 🙏1 point- 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
தம்பி நுணாவில்! நான் என்ரை கண் டாக்குத்தரை மாத்தீட்டன். நீங்கள் எப்ப மாற்றுறதாய் உத்தேசம்? 🤣1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நுணா, இந்த இரண்டு பதில்களிற்கிடையிலும் முரண்பாடு உள்ளது. இதே போன்று, பங்கு கொண்ட சிலரது பதில்களுக்கிடையிலும் முரண்பாடுகள் இருக்கின்றன.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry Brooks ??1 point- வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api1 point- யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
தமிழருக்கு தீர்வு கிடைப்பதை திட்டமிடப்பட்ட வகையில் இல்லாமல் செய்வதை வைத்து சிங்களம் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்ய முடியாது இன்றைய எதிர்கால நாட்டின் நிலைமை வைத்து தான் சிங்களம் இன் புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் இலங்கைக்கு வரவில்லை என்றால் தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பவில்லை என்றால் சிங்களத்தின். புத்திசாலித்தனம் தெரியும் உலகில் முதலாவது பிச்சைகார நாடு இலங்கை ஆகத் தான் இருக்கும்1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....................................................1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
காலையில் சுவாஸ்டிகாவின் அறிக்கையை பார்த்ததும், நீங்கள் கருத்து எழுதுவீர்கள் என நினைத்தேன். அப்படியே ஆகிற்று🤣1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎1 point- புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
@விசுகு மன்னிக்க வேண்டும் அண்ணா… விருப்பு குறியை மாற்ற முடியவில்லை1 point- நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
வைகாசி 23ம் திகதி பூரண சந்திரன் தெரியும் வெசாக் தினம் வருது எண்டதை உங்களுக்கு சூசகமாய் இப்பவே சொல்லி வைக்கிறன்1 point- பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதிம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா 1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி போராளிகளின் தலைவர்களுடன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர். போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது. போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால் ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார். சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்) என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார். போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார். தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார். "உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார்.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம். அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை. என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது. இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள். கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள். தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது. இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது. செய்தி இணைப்பு கீழே. https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா நீங்கள் நாம் தமிழர் கட்சி பற்றி கணிச்சதில் புள்ளிகளை இழக்க நேரிடும் , பொய் என்றால் யூன் 4ம் திகதி பொறுத்து இருந்து பாருங்கோ😁..................................................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபோராளிகளின் கோரிக்கையினை மீண்டுமொருமுறை நிராகரித்த இந்தியாவும், அமிர்தலிங்கத்தை எச்சரித்த போராளிகளும் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும் பாலசிங்கம், ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அறிக்கையினையடுத்து இந்தியா மிகுந்த கோபம்கொண்டு காணப்பட்டதாகக் கூறுகிறார். இணைந்த அறிவிப்பில் போராளிகளால் கோரப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. ஆனால், பாலசிங்கத்துடன் பேசிய சந்திரசேகரன், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியா கவனமெடுக்கும் என்று கூறினார். மேலும், போராளிகளின் தலைவர்களுடன் திம்பு பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதற்காக தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். போராளிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி வந்தவுடன் உடனடியாக சந்திப்பொன்றினை அவர்கள் நடத்தினார்கள். முக்கியமான இரு விடயங்கள் அங்கே ஆராயப்பட்டன. முதலாவது, பேசப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகள். இதுகுறித்து தலைவர்களிடையே கருத்தொற்றுமை நிலவியது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு வந்திருப்பதுடன், திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டிலும் தெளிவாக பிரகடணப்படுத்தப்பட்டு இருந்தது. அவையாவன, 1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும். 2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பூர்வீக தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரிக்க வேண்டும். 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும். 4. இலங்கையைத் தமது நாடாகக் கொண்டு வாழும் அனைத்துத் தமிழருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு, அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப்பெறுதல் வேண்டும் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்தனர். அடுத்ததாக அவர்கள் ஆராய்ந்த விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமது முடிவுகளுக்கு இணங்கப் பண்ணுவது. ஆகவே, தாம் முன்வைக்கும் அடிப்படைகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்க்கக் கூடாது என்று அவர்களை எச்சரிப்பதென்று போராளிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். அமிர்தலிங்கம் ஏற்கனவே தில்லிக்குப் பயணமாகியிருந்தமையினால், சென்னையில் தங்கியிருந்த யோகேஸ்வரனிடம் இதுகுறித்து பேசுவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். அங்கு பேசிய சிறீ சபாரட்ணம், யோகேஸ்வரனை உடனேயே அங்கு அழைத்து, அவரிடம் நேரடியாக தமது எச்சரிக்கையினை வழங்கலாம் என்று கூறினார். ஏனையோரும் அதனை ஆமோதிக்கவே, பாலக்குமார் யோகேஸ்வரனுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். வி. யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் யோகேஸ்வரனுடன் பேசிய பாலக்குமார், "அண்ணை, என்னுடன் பிரபா, சிறீ மற்றும் நாபா ஆகியோர் இருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து அவசரமாக ஒரு விடயத்தைப் பேச அவர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார். யோகேஸ்வரனும் அவர்களைச் சந்திக்க சம்மதம் தெரிவித்ததுடன், "தங்கத்துரையும் என்னுடன் இருக்கிறார், அவரையும் அழைத்து வரவா?" என்று கேட்க, பாலக்குமாரும் அதற்குச் சம்மதித்தார். அங்கிருந்த ஏனையவர்களுடன் பேசிய பிரபாகரன், "உங்கள் எல்லோரையும் தம்பிகள் என்று வெகு இனிமையாக அழைத்து யோகேஸ்வரன் பேசுவார், அந்த நடிப்புகளுக்கெல்லாம் மயங்கிவிட வேண்டாம்" என்று கூறினார். "பாலா அண்ணை பேசட்டும், நாங்கள் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். அ. தங்கத்துரை, பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். "நாங்கள் பிந்திவிட்டோமா? இந்த இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாகிவிட்டது" என்று யோகேஸ்வரன் கூறினார். போராளிகளின் தலைவர்கள் எவருமே பதில் கூறாது மெளனம் காத்தனர். பாலசிங்கம், யோகேஸ்வரனையும், தங்கத்துரையினையும் ஆசனங்களில் அமரச் சொன்னார். அவர்கள் இருவரும் சிறீ சபாரடட்ணத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அமர்ந்து கொண்டனர். மேசையின் எதிர்ப்புறத்தே அமர்ந்திருந்த பாலசிங்கம், "உங்களை சொற்ப நேரத்திற்குள் வரவழைத்தமைக்காக வருந்துகிறோம். முதலாவது, நாங்கள் ஆயுத அமைப்புக்கள் அல்லவென்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் அரசியல் - ஆயுத முன்னணியினர் ஆகும். நாம் போரிடுவதில் மட்டுமல்ல, அரசியல் பேரம்பேசலிலும் வல்லவர்கள். ஆகவே, எங்கள் சார்பாக வேறு எவரும் பேசத்தேவையில்லை" என்று தீர்க்கமான தொனியில் கூறினார். பாலசிங்கத்தின் முதலாவது பிரகடணமே யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், தமது தீர்மானங்கள் குறித்த நீளமான விளக்கத்தை பாலசிங்கம் வழங்கினார். ஒரே சுரத்தில் பேசிய பாலசிங்கம் பின்வருமாறு தனது பேச்சினை நிறைவு செய்தார், " நாம் முன்வைக்கும் தீர்மானங்களுக்கு மாற்றாக வேறு எந்தத் தீர்மானத்தையும் முன்வைக்கக் கூடாது என்று அமிர்தருக்குச் சொல்ல விரும்புகிறோம். நாம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே, இதனை ஆதரிக்க வேண்டும் என்று அமிருக்குச் சொல்லுங்கள். இதைவிட வேறு எதனையும் அவர் பேசக்கூடாது" என்று கூறி முடித்தார். பதிலளித்த யோகேஸ்வரன், ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களின் தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். "அமிர் அண்ணை உங்களின் தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டார். உங்களது தீர்மானமே எங்களது தீர்மானமும். எனது சத்தியத்தை நூற்றுக்கு நூறுவீதம் நீங்கள் நம்பலாம்" என்று அவர்களைப் பார்த்து அவர் கூறினார். பதிலளித்த பாலசிங்கம், "உங்களின் சத்தியத்தை நம்புவதும், நம்பாததும் தில்லியில் அமிர்தலிங்கம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதித்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, அவரை உடனேயே தொடர்புகொண்டு நாங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அப்போது, எதேச்சையாகப் பேசிய சிறீ சபாரட்ணம், "அண்ணை, அமிர் எங்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைத் திம்புவிலேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று யோகேஸ்வரனைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் கூறினார்.1 point- இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை). ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் சிறீ சபாரட்ணமே தன்னைக் கொல்ல முயற்சிக்கக் கூடும் என்று கருதிய பிரபாகரன் திம்புப் பேச்சுக்களில் தாம் பங்கேற்பதற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தயக்கம் காட்டிவந்தவேளை, இந்தியாவுடனும், இலங்கையரசாங்கத்துடனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய நெருக்கமும், ஒத்துழைப்பும் அவர்களைச் சீற்றங்கொள்ள வைத்தது. இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல், ஜெயார் விரித்திருக்கும் சமாதானப் பொறிக்குள் இருந்து எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அதிகாரங்களற்ற மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்றினூடாக தீர்வொன்றினைக் காண்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய ஈடுபாடும், அக்கறையும் போராளிகளின் தலைவர்கள் மத்தியில் தம்மை தட்டிக்கழிக்கும் முன்னணியினரின் கைங்கரியம் எனும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. சந்திரிக்கா, விஜய குமாரதுங்க, ஒஸி அபயகுணசேகர, பத்மநாபா, கேதீஸ்வரன் - சூளைமேடு, சென்னை 1986 ஆனி 28 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் நடத்திய நீண்ட கலந்துரையாடல்களின்போது திம்புப் பேச்சுக்கள் தொடர்பான தமது நிலைப்பாடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வகிக்கப்போகும் பாகம் மற்றும் யுத்த நிறுத்தம் குறித்துப் பேசினர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதியில் மின்சாரம் அற்றுப்போகவே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் கேதீஸ்வரன் விளக்கொன்றைப் பற்றவைத்துக்கொண்டார். "அண்ணை, அதனை அணைத்துவிடுங்கள்" என்று பிரபாகரன் அவரைப் பார்த்துக் கூறினார். தான் எங்கே நின்றிருக்கிறார் என்பதை எவரும் அறைந்துவிடக் கூடாதென்பதில் அவர் உறுத்கியாகவிருந்தார். மின்சாரம் தடைப்பட்டவுடன், தனது இருக்கையிலிருந்து குத்தித்தெழுந்த பிரபாகரன், அருகிலிருந்து சுவரோரம் சென்று நின்றுகொண்டு, தனது கைத்துப்பாக்கியினைக் கையில் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பிந்நாட்களில் என்னிடம் பேசிய ரமேஷ், பிரபாகரன், சபாரட்ணத்தின் பின்னாலேயே நின்று கொண்டதாகவும், அன்று கூட்டத்தில் இருந்தவர்களில் சபாரட்ணம் மட்டுமே தன்னைக் கொல்ல எத்தனிக்கக் கூடும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே மின்சாரம் மீண்டும் கிடைத்தது. "இது சாதாரண மிந்துண்டிப்புப் போல இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பிரபாகரன் தனது இருக்கையில் மீண்டும் சென்று அமர்ந்துகொண்டார். புலிகளின் அலுவலகத்தில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கூடியபோது இடம்பெற்ற இன்னொரு மின்சாரத் துண்டிப்புக் குறித்தும் ரமேஷ் என்னிடம் விபரித்திருந்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன், அங்கிருந்த மின்பிறப்பாக்கி உடனடியாகவே இயங்கத் தொடங்கியது. "பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டவரல்ல, எந்தச் சூழ்நிலைக்கும் தன்னைத் தயாராக வைத்திருப்பதிலும் கவனம் கொண்டவர்" என்று ரமேஷ் மேலும் கூறினார். சிறீ சபாரட்ணம் ஆனி 28 ஆம் திகதி நடைபெற்ற ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் கூட்டத்தில், பிரபாகரனின் கருத்தின்படி, பேச்சுவார்த்தைகளில் இருந்து முடிந்தவரையில் விரைவாக வெளியேறிவிட வேண்டும் என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர். மேலும், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் மீது குற்றம் ஒன்றினைத் தம்மால் நிரூபிக்க முடியும் தறுவாயில், பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகவும் அவர்கள் முடிவெடுத்தனர். தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பிரபாகரன் தொடர்ச்சியாகவே கூறிவந்தார். ஆகவே, ஜெயவர்த்தனவின் தந்திரத்தை அவரது தந்திரத்தினாலேயே தாம் வீழ்த்தவேண்டும் என்றும் பிரபாகரன் ஏனைய தலைவர்களிடம் கூறினார். ஆகவே, பேச்சுக்களில் தாம் பங்கேற்கவியலாது என்பதை இந்தியாவிடம் தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்றினை அவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவிற்கு தாம் வழங்கவிருக்கும் ஒன்றிணைந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களைக் காரணமாக அவர்கள் காட்டியிருந்தனர். ஆகவே, பேச்சுவார்த்தை மேசையில், பங்களிப்பில்லாத ஒரு தரப்பாக மட்டுமே செயற்படப் போவதாகவும், பேச்சுக்களுக்கான அத்தியாவசிய அடிப்படையான ஒரு தரப்பு என்கிற காரணத்திற்காகவும், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழருக்கு நீதியான தீர்வொன்றினைத் தரப்போவதில்லையென்பதை உலகிற்குக் காட்டவுமே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதாகவும் இந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர். போராளிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுத்தமையே தமிழீழத்திற்கான அடிக்கல் என்று பிரபாகரன் ஏனையவர்களிடம் தெரிவித்தார். அன்றைய கூட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் திம்புப் பேச்சுக்களில் பங்குபற்றக் கூடாது என்றும் போராளிகள் முடிவெடுத்தனர். போராளிகளின் இணைந்த அறிக்கை பாலசிங்கத்தால் தயாரிக்கப்பட்டு சந்திரசேகரனூடாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇலங்கை இராணுவம் யுத்தநிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்க, அரசாங்கத்திற்கு கொழும்பில் நற்சான்று வழங்கிய தர்மலிங்கமும் ஆளாளசுந்தரமும் பிரபாகரன் தனது கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில், மக்களின் ஆதரவினை இழந்துவிட்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது முன்னைய அரைசியல்த் தலைமை எனும் பதவியினை மீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. சென்னையிலிருந்து அது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் சார்பாகவே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதான பாவனையுடன் கூறியிருந்தது. அறிக்கையின் ஒரு பகுதியில், "தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் அதேவேளை பேச்சுவார்த்தை மேசையில் "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும் தாம் செயற்படப்போவதாக" வும் அது கூறியிருந்தது. 1984 ஆம் ஆண்டு மார்கழியில் ஏற்பட்ட சர்வகட்சி மாநாட்டின் தோல்வியினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை இலங்கையரசாங்கமும், இந்தியாவும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தமையினால், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக தமக்கும் ஒரு வகிபாகம் கிடைத்திருப்பதாக முன்னணி எண்ணியது. பெரும்பாலான முன்னணியின் தலைவர்கள் சென்னைக்குத் தப்பிச் சென்றிருந்தவேளை, யாழ்ப்பாணத்தில் அப்போதுவரை தங்கியிருந்த முன்னாள் உடுவில்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்துடனும், கோப்பாய்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆளாளசுந்தரத்துடனும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம் கட்சியினை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று, அரசினதும் எதிர்க்கட்சியினதும் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அரசியல்த் தீர்வினை அடைவதற்கான அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்குமாறும் பணித்தார். வி தர்மலிங்கம் ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிற்குச் சென்றிருந்தவேளை புதிய இந்தியத் தூதுவர் டிக் ஷிட்டையும், யுத்த நிறுத்தம் குறித்தும், பேச்சுவார்த்தை குறித்தும் இலங்கையரசாங்கத்துடன் பேசுவதற்காக அப்போது கொழும்பிற்கு வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரியையும் சந்தித்துப் பேசினார்கள். ஆளாளசுந்தரம் பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கான இடமாக இந்தியா பரிந்துரை செய்திருந்த மலைகளைக் கொண்ட நாடான பூட்டானை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். மேலும், இந்தியா பரிந்துரை செய்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் நான்கு போராளி அமைப்புக்கள், புளொட் அமைப்பு மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆகியோர் பேச்சுக்களில் தமிழர் தரப்பாகக் கலந்துகொள்வதையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, ஒவ்வொரு போராளி அமைப்பும் இரு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறினார். அடுத்ததாக, பேச்சுவார்த்தையின் முதலாம் கட்டத்தின் ஆரம்ப நாளாக இந்தியா முன்வைத்த ஆடி 8 ஆம் திகதியினையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்துச் சென்ற பண்டாரி, அங்கு எம் ஜி ஆரையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும் சந்தித்துவிட்டுச் சென்றார். தாம் கொழும்பில் நின்றிருந்தவேளை அறிக்கையொன்றினை வெளியிட்ட ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும், அரசாங்கத்தின் தலைவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக தம்மிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், யுத்தநிறுத்தத்தினை நேர்மையாகவும், நீதியுடனும் கடைப்பிடிக்கப்போவதாக அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கை வெளிவந்துகொண்டிருந்தபோதே இராணுவத்தினரும், பொலீஸாரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டனர். யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்ததையடுத்து தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய திருகோணமலை மாவட்டத் தமிழர்கள் இராணுவத்தினரால் மீண்டும் அடித்து விரட்டப்பட்டனர். மேலும், மீனவர்களின் மீதான கடற்படையின் அடாவடித்தனங்களும் என்றும்போல தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்தன. ஆனால், இந்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எந்த கண்டிப்புகளும் இன்றி, யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கையரசாங்கம் நேர்மையுடன் செயற்படப்போவதாக தம்மிடம் உறுதியளித்திருக்கிறது என்று ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிலிருந்து வெளியிட்ட அறிக்கை கூறியது. அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னைக்கும் தில்லிக்கும் இடையே அடிக்கடி பறந்து இந்திய அதிகாரிகளுக்கும், இலங்கையதிகாரிகளுக்கும் இறுதித் தீர்விற்காக அரசியலமைப்பு ரீதியாகச் செய்யப்பட வேண்டிய மற்றங்கள் குறித்து உதவி வழங்கிக்கொண்டு வந்தனர். இந்தியாவின் பிரதம வழக்குரைஞர் கே. பரஸ்வரத்துடன் ஆனி மாதத்தில் ஜெயாரின் சகோதரன் H.W. ஜெயவர்த்தன நடத்திய பேச்சுக்களையடுத்து, ஒற்றையாட்சி யாப்பினைப் பாதிக்காத வகையில் மாவட்ட சபைகளை பலப்படுத்துவது குறித்த வேலைத்திட்டங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பரஸ்வரம் அமிர்தலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உகந்தவகையில் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் அமிர்தலிங்கமும் ஏனைய முன்னணியின் தலைவர்களும் அவருக்கு உதவினர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointயுத்த நிறுத்த ஆலோசனைகளில் இந்தியா விட்ட தவறுகளும், போராளிகளின் பரிந்துரைகளும் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கப்போவதாக லலித் அதுலத் முதலி வானொலியில் அறிவித்தபோது, தமது அரசாங்கம் எதுவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும், பயங்கரவாதிகளுடன் அரசு எந்தவித இணக்கப்பாட்டிற்குள்ளும் இதுகுறித்துச் செல்லத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார். லலித் அதுலத் முதலி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன மிகத் தந்திரமான பொறியினை வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவிற்கும், போராளிகளுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி, போராளிகளை சர்வதேசத்தில் வன்முறையில் ஆர்வம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதே ஜெயாரின் நோக்கம் என்று அவர் கூறினார். மேலும், ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை அறிவித்ததன் ஊடாக, போராளிகள் அதனை நிராகரிப்பார்கள் என்றும், தமது சொந்த நிபந்தனைகளை அமுல்ப்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள் என்றும், இதனூடாக இந்தியாவின் கோபத்திற்குப் போராளிகள் ஆளாகலாம் என்பதும் ஜெயாரின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் பிரபாகரன் கூறினார். "நாம் இந்தப் பொறியில் அகப்பட்டு விடக் கூடாது. நாம் கவனமாகவும், மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும். நாம் இந்தியா முயற்சிக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை அனுசரித்துச் செல்வோம், ஆனால் அதனுள் இருக்கும் குறைகளை அவ்வப்போது சுட்டிக் காட்டலாம். இந்தியாவின் விருப்பத்திற்கேற்ப யுத்த நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையினையும் ஏற்றுக்கொள்வதன் ஊடாக இந்தியாவின் அபிமானத்தை நாம் வெல்லலாம். அதேவேளை, இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் திட்டத்தினை ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் முயற்சிகளில் காணப்பட்ட மூன்று முக்கிய குறைகள் குறித்து இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டுவர அவர்கள் முடிவெடுத்தார்கள். அவையாவன, 1. தமிழ் மக்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்கின் எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினர், ஊர்காவல்ப்படையினர், ஆயுதம் தரித்த சிங்கள மக்கள் ஆகியோரின் தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஆலோசனைகளில் பகுதி 2 மற்றும் 3 ஆகியவை புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவைப்பது குறித்தும், அவைமீதான தாக்குதல்களை போராளிகள் நிறுத்தவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இராணுவத்தினர் தமது சோதனை நடவடிக்கைகளை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2. அதுவரை தமிழ் மக்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தினூடாகக் கிடைக்கப்பெற்ற வெற்றியான தமிழர் தாயகத்தின் சில பகுதிகளில் இயங்கிவந்த அரசின் பொலீஸ் நிலையங்களை அகற்றி, அரசின் சட்டம் ஒழுங்கினை தடுத்த முயற்சிகள் யுத்த நிறுத்தத்தின் ஊடாக முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிருக்கிறது. "போர்க்களத்தில் தாம் இழந்தவற்றை யுத்த நிறுத்தத்தின் ஊடாக மீளப் பெற்றுக்கொள்ளப் பார்க்கிறார்கள்" என்று பிரபாகரன் குறிப்பிட்டார். 3. யுத்த நிறுத்த ஆலோசனைகள் ஜெயாருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. யுத்த நிறுத்தத்தினையடுத்து வரவிருக்கும் அரசியல்த் தீர்விற்கான பேச்சுக்களை கால வரையின்றி இழுத்தடிப்பதனூடாக தனது இராணுவத்தை மீளக் கட்டியமைத்து இறுதி இராணுவத் தீர்விற்கான முஸ்த்தீபுகளில் அவர் ஈடுபட சந்தர்ப்பத்தை இந்தியாவின் ஆலோசனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழர்கள் சிங்கள அரசுகளுடன் செய்துவந்த அரசியல் பேச்சுவார்த்தைகளின் சரித்திரம் என்று ஒன்றிருக்கிறது. இவை எல்லாவற்றிலும் சிங்கள அரசுகள் நடந்துகொண்ட விதம் என்று ஒன்றிருக்கிறது. ஆகவே, இந்தியாவிடம் இதுகுறித்து விளக்கி, ஜெயவர்த்தன தனது அரசியல்த் தீர்வுகுறித்த ஆலோசனைகளை பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கவேண்டும் என்கிற அழுத்தத்தினை இந்தியா வழங்கவேண்டும் என்று கோருவது என்று பிரபாகரன் கூறினார். சந்திப்பின் முடிவில், இந்தியாவின் ஆலோசனைகளில் தாம் கண்டறிந்த தவறுகளை எழுத்துவடிவில் ஒரு அறிக்கையாகத் தயாரிக்கும்படி பாலசிங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின்னர் போராளிகளுக்கிடையே யுத்தநிறுத்தம் குறித்து உருவாகி வந்த அதிருப்தியினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். முதலாவதாக, தமது போராளிகளிடத்தில் தாம் தமிழ் ஈழம் எனும் இலட்சியத்தைக் கைவிடவில்லை என்று கூறுவதாக முடிவெடுத்தார்கள். அடுத்ததாக, யுத்த நிறுத்தத்தினையும், பேச்சுவார்த்தையினையும் சிங்கள அரசின் உண்மையான முகத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் தோலுரித்துக் காட்டவே தாம் பாவிக்கப்போவதாக போராளிகளிடத்தில் கூறுவது என்றும் முடிவெடுத்தார்கள். அன்டன் பாலசிங்கம் தயாரித்த அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, ஆனி 18, 1985 ஆம் திகதிக்கு அமுலிற்கு வரும் யுத்த நிறுத்த ஆலோசனைகள் தொடர்பான எமது இணைந்த அறிக்கை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினால் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படுகிறது தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தினைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனைகளை மிகவும் கவனமாக நாம் ஆராய்ந்திருக்கிறோம். யுத்த நிறுத்தத்தினை செயற்படுத்த இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகளையும், மத்தியஸ்த்தராக பங்கெடுக்க அது எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும், உத்தரவாதத்தினையும் பாராட்டும் அதேவேளை, தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கத் தேவையான சமாதானமான சூழ்நிலையினை உருவாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் யுத்தநிறுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதென்று எமது ஒருங்கிணைந்த அமைப்பு ஒத்துக்கொண்டு கையொப்பம் இடுகிறது. குறிப்பிடப்பட்ட காலத்திற்கு எமது ஆயுத நடவடிக்கைகளை நாம் நிறுத்திக்கொள்ளச் சம்மதம் தெரிவிக்கும் அதேவேளை, யுத்தநிறுத்த அலோசனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தமிழர்களை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லப்போகின்றது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். ஆகவே, இவற்றினை நிவர்த்திசெய்வதற்கான சில ஆலோசனைகளை நாம் முன்வைக்க விரும்புகிறோம். யுத்த நிறுத்த ஆலோசனைகளின் முதலாவது பகுதியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பகுதி 2 இல், போராளிகள் செய்யவேண்டியவை எனும் பகுதியில், "புதிய சிங்களக் குடியிருப்புக்களை அரசு நிறுத்திவைக்கும் அதேவேளை, இந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, வடக்குக் கிழக்கில் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ போராளிகள் நிறுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருக்கிறது. இங்கு எமக்கிருக்கும் கவலை என்னவெனில், யுத்த நிறுத்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தினரும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் நடத்தவிருக்கும் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையோ அல்லது அவ்வாறான தாக்குதல்கள் நடக்கமாட்டாது எனும் உத்தரவாதத்தையோ ஆலோசனைகள் வழங்கவில்லை என்பதுதான். இந்தியா முன்வைத்திருக்கும் ஆலோசனைகளில் இவைகுறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லையாயினும், இலங்கை இராணுவமும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிறுத்தவேண்டும் என்று இந்தியா இலங்கை அரசிடம் கோரவேண்டும் என்று நாம் பரிந்துரை செய்கிறோம். யுத்த நிறுத்தத்தின் முதலாவது கட்டத்தில் இவ்வாறான தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவது தொடருமாக இருந்தால் அவற்றினை மிகக் கடுமையான யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கருதவேண்டி வரும். பகுதி 2, பந்தி மூன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல்" எனும் ஆலோசனை குறித்த எமது கடுமையான அதிருப்தியினை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறோம். எமது நடவடிக்கைகளால் மூடப்பட்ட இந்த பொலீஸ் நிலையங்களின் ஊடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களைப் பாவித்து எம்மக்கள் மீதான "சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும்" நடவடிக்கைகளில் பொலீஸார் ஈடுபட்டிருந்தனர். எமது பிரதேசங்களில் அமுலாக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றான சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் பரந்துபட்ட நிரந்தரமான அரசியல்த் தீர்வின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே ஒழிய கால வரையறைக்குட்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்றின் ஊடாக அல்ல என்பது எமது கருத்து. ஆகவே, இந்த ஆலோசனையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 இலிருந்து 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை இலங்கையரசு கட்டாயம் முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். எமது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட முடியும் என்பதனை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நீதியான தீர்விற்காக தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களுடன் காலங்காலமாக செய்த அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள அரசாங்களினாலேயே கைவிடப்பட்டு, தமிழர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகிறது. மேலும், இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வினை எட்டுவதைத் தடுக்கும் வகையில் பேச்சுக்களை காலவரையின்றி இழுத்தடிப்பதென்பது சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கைக்கொண்டு வரும் ஒரு அணுகுமுறை என்பதையும் இத்தருணத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆகவேதான், விளைவுகள் எதனையும் தராத இன்னொரு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் நாம் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்தால் ஒழிய, பகுதி 4 இல் குறிப்பிடப்பட்டதன்படி பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறோம். மேலும், யுத்த நிறுத்த காலத்தை எந்தவிதத்திலும் நீட்டிப்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். அடுத்ததாக, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழர் பிரதிகள் குறித்து குறிப்பிடும் போது, நான்கு பலம்பொறுந்திய போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பினை வெறுமனே, "ஆயுததாரிகள்" என்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை, "தமிழரின் அரசியல்த் தலைமை" என்றும் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான தரப்படுத்தல்கள் எமது மக்களின் நலனிலும், பாதுகாப்பிலும் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் எம்மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு, எமது மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் தலைமைகள் என்கிற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளையும் இவ்வாறான தரப்படுத்தல்கள் தடுத்துவிடும். இறுதியாக, யுத்த நிறுத்தத்தின் ஆரம்ப நாளான வைகாசி 18 இனை பிறிதொரு சாதகமான நாளைக்குப் பிற்போடுமாறு கேட்டுக்கொள்கிறோம். யுத்த நிறுத்த ஆயத்தங்களைச் செய்வதற்கு எமக்கு இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே, ஆடி 1 ஆம் திகதி (1985) இனை யுத்த நிறுத்தத்திற்கான ஆரம்ப நாளாக நாம் பரிந்துரை செய்கிறோம். எமது பரிந்துரைகளும், எதிர் ஆலோசனைகளும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம். இப்படிக்கு தலைவர்கள், ஈழத்தேசிய விடுதலை முன்னணி : பிரபாகரன், பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் இந்தியாவின் ரோவினூடாக தமது அறிக்கையினை பாலசிங்கம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். வெளியுறவுத்துறையின் அறிவுருத்தலின் பெயரில், சில நாட்களின் பின்னர், ரோ அதிகாரி சந்திரசேகரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்டு போராளித் தலைவர்களின் அறிக்கை தொடர்பான இந்திய வெளியுறவுத்துறையின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். பாலசிங்கத்திடம் பேசிய சந்திரசேகரன், பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்கிற ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கோரிக்கை சாத்தியமற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதற்கான கோரிக்கையினை இந்திய வெளியுறவுத்துறை முற்றாக நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு வார காலமாக அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதென்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.1 point - ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.