Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/20/24 in all areas
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை.
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி5 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 நிலாமதி 70....... கிள்ளிப் பார்க்கிறேன் இது கனவா அல்லது நிஜமா என ? குருடன் .....யாருக்கோ அடிச்ச மாதிரி 😄😄4 points
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
3 points
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மூன்று புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். மூன்றாவதும் நான்காவதும் இடங்களை ஒருவருமே சரியாகக் கணிக்கவில்லை. எனவே அனைவருக்கும் மூன்றாம் இடத்திற்கான தலா இரண்டு புள்ளிகளும், நான்காம் இடத்திற்காக தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படும். மூன்றாவது கேள்விக்கான பதிலை @வீரப் பையன்26 மாத்திரமே சரியாகக் கணித்துள்ளதால், இரண்டு புள்ளிகள் கூட்டப்படும். மற்றையோருக்கு இரு புள்ளிகள் குறைக்கப்படும். மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டதன் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 70 2 அஹஸ்தியன் 68 3 வீரப் பையன்26 62 4 முதல்வன் 62 5 சுவி 62 6 ஏராளன் 62 7 கல்யாணி 62 8 கந்தப்பு 62 9 எப்போதும் தமிழன் 62 10 வாதவூரான் 62 11 கிருபன் 62 12 நீர்வேலியான் 62 13 நுணாவிலான் 62 14 புலவர் 62 15 ஈழப்பிரியன் 58 16 கோஷான் சே 58 17 கறுப்பி 543 points- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
மகளே மாஷா அமீனி, பெண்களின் பிறப்புறுப்பில் தன் கெளரவத்தை மறைத்து வைத்த இன்னொரு பேடி இறந்து விட்டான். உன் குரல்வளையை நெரித்த ஆணாதிக்க கரம் ஒன்று, இன்று ஏதோ ஒரு மலை இடுக்கில் அநாதையாய் தொங்கி கொண்டிருக்கிறதாம். உன் முடியை மொக்காடு போட்டு மறைக்க துடித்த மிருகம் ஒன்று, தன் அடித் துணியும் அகன்று அம்மணமாய் கிடந்ததாம் அதே மலை சரிவில். உன் உடலை வைத்து அரசியல் செய்தவரை, இன்று உரப் பையில் கூட்டி அள்ளுகிறார்களாம். சாவின் விளிம்பில் நீ சந்தித்த கொடுமைகளை, வானூர்தி வட்டம் கிறுக்கிய கணத்தில் அவர்கள் நினைத்திருப்பார்கள். இருபத்தினான்கு மணிதாண்டி, ஈ ஊர்ந்து நாறிப்போன உடல்கள், துண்டமாய் சிதறி தூவப்பட்ட சதைகள்…. தீர்ப்பு நாள் அன்று நீ அப்படியே மீள்வாய் மகளே! ஆனால் இவர்கள்? தெய்வம் அன்றே கொல்லும்.2 points- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இரங்கல் என்பது அந்த நாட்டுக்கு, அந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம். ஒரு கெட்ட தகப்பன் என்றாலும் அவரது இழப்பிற்கு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வது போல....2 points- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
உண்மை, ஏதோ தாம் புனிதர்கள்போலவும், தாமே பலஸ்தீனர்களுக்குத் தீர்ப்பெழுதுபவர்போல் கொன்றொழித்தவாறு தம்மை அசைக்கமுடியாது என்ற சியோனிசவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடிதான். அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில், 2018 முதல் ஒவ்வொரு வருடமும் மே 20ஆம் தேதி உலக தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, குறிப்பிட்ட ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காற்று மாசு போன்ற காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வெளவால்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகள் (Hummingbirds) போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் மனித நடவடிக்கைகளால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. உலக உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு என்ன? தேனீக்கள் இல்லையென்றால் என்னவாகும்? தேனீக்களை சார்ந்துள்ள உணவு உற்பத்தி பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் மொத்த விவசாய நிலத்தில் 35 சதவீத நிலங்கள், அதாவது மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களை நம்பியே உள்ளது. மகரந்தத் தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது மகரந்தச் சேர்க்கை நடக்கும். இதனால் தாவரங்கள் பல்கிப் பெருகும். 80% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்களே காரணம் என்கிறது ஐ.நா. அறிக்கை. தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்த தூள், அடுத்தடுத்த பூக்களின் மேல் அவை உட்காரும்போது பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்கு முக்கிய காரணம். பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்கின்றன என்றே சொல்லலாம். "தேனீக்கள் இல்லையென்றால் காய்கறிகள், எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் மட்டுமல்லாது பாதாம், வால்நட்டுகள், காபி, கோகோ பீன்கள், தக்காளி, ஆப்பிள் போன்ற பல பயிர்களில் மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்." என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது, உலகளவிலான உணவு உற்பத்திக்கும் தேனீக்கள் இன்றியமையாததாக உள்ளன. தேனீக்களின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES “தேனீக்கள் மட்டுமல்லாது பல பூச்சிகளையும் கூட மனிதர்கள் ஒரு உயிராகவே மதிப்பதில்லை. தேனீக்கள் என்பவை தேன் கொடுக்க மட்டும் தான் இந்த உலகத்தில் உள்ளன என்று தானே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார் கட்டுரையாளரும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருமான ஏ.சண்முகானந்தம். “இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. இன்னும் பல வகையான பூச்சி வகைகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்கள். அவற்றிலிருந்து பெறப்படும் தேனைக் கூட ஒரு இனிப்பூட்டியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தனியாக பேசலாம். ஆனால் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கைக்காக தான் மனிதர்கள் அதைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் இந்த தேனீக்கள் தான். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், தாவர இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். பின்னர் உணவு உற்பத்தி குறைந்து, மனித அழிவின் தொடக்கமாக அது இருக்கும்” என்கிறார் சண்முகானந்தம். பூக்களின் மகரந்தம் மற்றும் மதுரம் ஆகிய இரண்டும் தான் தேனீக்களின் உணவு என்றும், அப்போதைய பசிக்கு அதை அவை உணவாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார் சண்முகானந்தம். “குளிர் காலங்கள் மற்றும் பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தான் தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. பூக்கள் இருக்கும் இடத்தை அல்லது தேன் இருக்கும் திசையை தனது நடனத்தின் மூலம் அவை தெரியப்படுத்தும். உதாரணமாக தேனீக்கள் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் உணவு உள்ளது என்றும் அர்த்தம்” என்று கூறினார். தேனீக்களின் இந்த நடனம் குறித்து முதலில் ஆய்வு செய்து அதை விளக்கியவர் விலங்கின நடத்தையியல் நிபுணர் கார்ல் வான் ஃப்ரிஷ். பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக இவருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. படக்குறிப்பு,கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம். தொடர்ந்து பேசிய சண்முகானந்தம், “அதிக நறுமணமுள்ள, அழகான மல்லிகை, ரோஜா போன்ற பூக்களைத் தேடி தேனீக்கள் போவதில்லை. மாமரத்தின் பூக்கள், சூரிய காந்தி, எள், முருங்கை, குறிஞ்சி போன்றவற்றைத் தேடி தான் தேனீக்கள் அதிகம் செல்லும். எந்தப் பருவத்தில் எந்தப் பூக்கள் பூக்கும் என்பதையும் அவை அறிந்து வைத்திருக்கும். அதேபோல முகரும் திறன் கொண்டே பூக்கள் அல்லது உணவு எங்கு இருக்கிறது என்பதையும் அவை தெரிந்துகொள்ளும். தனித்துவமான பூக்களைக் கண்டறிந்து அவற்றிலிருந்து மட்டுமே தேன் எடுப்பது, அதைத் தனியாக சேகரிப்பது, தேர்ந்த பொறியியல் அறிவுடன் கூட்டைக் கட்டுவது என மிகவும் நுட்பமான உயிரினங்கள் இந்த தேனீக்கள். ஆனால் மனிதர்கள் இந்த தேனீக்களை மிகவும் சாதாரணமான பூச்சிகளாகப் பார்க்கிறார்கள். அதற்கு கொடுக்கு மட்டும் இல்லையென்றால் எளிதாக அவற்றை அழிக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்” என்று கூறுகிறார். தேனீக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தெந்த வழிகளில் மனிதர்களால் தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர். பெங்களூரில் உள்ள அசோகா அறக்கட்டளை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் ஈடுபடுகிறது. காலநிலை மாற்றம் “காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான பிரச்னை. காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் தேனீக்களின் வளர்சிதை மாற்ற விகிதமும் (Metabolic rate) அதிகரிக்கும். இதனால் வழக்கத்தை விட அதிக சக்தியை உணவைச் சேகரிப்பதில் தேனீக்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். தேனீக்கள் தாங்கள் சேகரிக்கும் தேனை தேனடையில் கொட்டிவிட்டு, அதன் நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தனது இறகைத் தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருக்கும். தேன் கூட்டின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் அவை இதைச் செய்யும். கூட்டில் வெப்பம் அதிகரிக்கும் போது அவை வாழ முடியாத சூழல் ஏற்படும். மேலும் காலநிலை மாற்றத்தால் பூக்கள் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக வசந்த காலத்தின் பூக்கள் முன்னதாகவே பூத்து விடும்போது, தேனீக்கள் அதைத் தவறவிடும். பின்னர் வசந்த காலத்தில் உணவின்றி மடிந்துபோகும்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். சூரியகாந்திச் செடியின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்கு அதிகம். சூரியகாந்தி பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை தீவிரமாக நடைபெற்றால் அதிக மகசூல் கிடைக்கும். கடந்தாண்டு தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், சூரியகாந்தி பயிரிடப்பட்டது. ஆனால் தேனீக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக செயற்கை முறை மகரந்த சேர்க்கையின் இரண்டு முறைகள் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய செயற்கை மகரந்தச் சேர்க்கை முறைகள் போதுமான பலனைத் தராது, பயிர்களின் மகசூல், தரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும் என்றும், பல்லுயிரிய சூழலியல் முறைமைக்கும் (Biodiversity) அது பெரிதாக பயனளிக்காது என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். படக்குறிப்பு,முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு “சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தேனீக்களை நேரடியாக கொல்லலாம் அல்லது அவற்றைக் கடுமையாக பலவீனப்படுத்தலாம். என்னைக் கேட்டால் தேனீக்களின் அழிவுக்கு அவைதான் முக்கிய காரணம் என்று சொல்வேன்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். தேனீக்களின் வாழ்விடங்களில் மாற்றம் “தேனீக்கள் விளைநிலங்களையும் பூக்களையும் தேடிச் செல்வது உணவுக்காகவும், மகரந்தச் சேர்க்கைக்காகவும் தான். விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது அவை உணவின்றி அழிவைச் சந்திக்கின்றன. தேனீக்களில் காட்டுத் தேனீ வகைகள் தான் அதிகம். சாதாரண தேனீக்களைப் போல அல்லாமல், காட்டுத் தேனீக்களுக்கு மிகப்பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படும்போது, அவை கூடுகள் கட்டும், உணவு சேகரிக்கும் பகுதிகளும் சேர்ந்தே அழிகின்றன. வெளிநாடுகளில் தேனீக்களுக்கு என்றே நகரங்களில் கூட மகரந்தப் பாதைகள், பூங்காக்களை உருவாக்குகிறார்கள். அதேபோல இங்கும் கொண்டுவரப்பட வேண்டும். கிராமங்களில் இருக்கும் சிறு வனங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார் முனைவர் பிரியதர்ஷனன். 'தேனீக்கள் சூழ் உலகு' பட மூலாதாரம்,GETTY IMAGES தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என எச்சரிக்கிறார் கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம். “இந்த உலகில் மனிதர்கள் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பரிணமித்து வாழ்ந்து வருபவை பூச்சிகள். இதை மனித இனம் உணர்ந்துகொண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும்போது தான் ‘நீடித்த நிலையான வளர்ச்சி’ சாத்தியப்படும். பூச்சிகள் மற்றும் தேனீக்கள் சூழ் உலகை உருவாக்க நம்மைச் சுற்றியுள்ள காடுகள், மரங்கள், தாவரங்கள் அடங்கிய பசுமை பரப்பை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்” என்று கூறுகிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c0338e398nko2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
இன்று World Bee Day என்று கூகிள் காட்டிக் கொண்டிருக்கின்றது. நல்ல ஒரு கட்டுரை. இப்பொழுது முருங்கை பூக்கும் காலம் இங்கே. நாள் பூரா தேனீக்கள் அந்த வெள்ளை வெள்ளைப் பூக்களிலேயே கிடக்கின்றன. பின்னர் குட்டி குட்டிப் பாம்புகள் போல பிஞ்சுகள் வெளியே வரும். அவை அப்படியே நீண்டு காயாகின்றன. தேனீக்கள் இல்லையேல் இவை இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. தேனீ தொடாமல் பூமியில் எதுவுமே இல்லை போல. காய்த்து நிற்கும் முருங்கை மரத்தை பார்த்து பக்கத்து வீட்டு அமெரிக்கர் இது என்ன என்று கேட்க, இது ஒரு வெஜிடபிள் என்று நான் சொன்னேன். 'இந்தப் பெரிய வெஜிடபிள் மரமா.......' என்பது போல அவர் கொடுத்த ஒரு ரியாக்ஷன் விலை மதிப்பற்றது..........😀 ஹைபிரிட் பூ மரங்களை வீட்டில் வளர்த்து தேனீக்களை ஏமாற்றிக் கொன்டிருக்கின்றோம் என்று சில வேளைகளில் தோன்றும். தேனீக்கள் அந்தப் பூக்களின் உள்ளே போய் உருண்டு பிரள்கின்றன. ஆனால் அங்கே எதுவும் இல்லை, அந்தப் பூக்கள் கிட்டத்தட்ட வெறும் கடதாசிகள்.2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
விளைச்சலை அதிகரிக்க பூச்சிநாசினிகளைப் பாவித்தார்கள். இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட விளைச்சல் குறைந்தது. இப்போது இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸில் தேனீ வளர்ப்பு பற்றி விளிப்புணர்வு செய்கிறார்கள். பரிஸில் நான் வேலை செய்யும் 5 மாடிக் கட்டடத்தின் உச்சியில் மொட்டைமாடியில் தேனீ வறர்க்கிறார்கள். வருடத்தில் இரண்டு தடவை இதிலிருந்து கிடைக்கும் தேனை அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்று பராமரிப்புச் செலவை ஈடு செய்கிறார்கள். எனக்கு இலவசமாக தேனீ வளர்ப்புப் பற்றிய செய்முறைப் பயிற்சி வழங்கினார்கள். இப்போது இங்கு தேனீக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆசியாவிலிருந்து வந்துள்ள தேனீ போல் தோற்றமுள்ள ஒரு வித குழவி ஆகும்.2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsஒடுகின்ற வண்டியோட ஒத்துமையா ரெண்டு மாடு ஒண்ணா விட்டு ஒன்று பிரிஞ்சா என்னவாகும் எண்ணிப் பாரு தென்ன மரம் ஜாதிக கொரு தேங்காய் காய்ப்பதில்லை கொல்லையில் வைச்ச முல்லை குலம் பார்த்து பூப்பதில்லை ஆயிரம் ஜென்மம் தாண்டி அன்பாலே ஒன்று கூடி சேர்வது காதல் தானே பிரிப்பது பாவம் தானே2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே? நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். சசி, அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி !2 points- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......? தேன் கூடுகள் போல வாழ்ந்த...... ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்? தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்? அறப்படித்த காட்டு மூளைச்சட்டாம்பிகள்.1 point- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இந்த நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு.. அணில் ஒரு நரி என்று அப்போதே சொன்னவர்கள்.1 point- இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி?
இரண்டாவது நல்லம்மா என நினைக்கின்றேன்... சரியா விசுகர்..1 point- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இந்த நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு..1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@கிருபன்ஐயா இருக்கிற புள்ளிகள் எல்லாத்தையும் குறைச்சு மைனஸில வந்திடுமோ?! இந்த புள்ளியிடும் முறை நீட் தேர்விற்கு புள்ளியிடும் முறையை ஒத்திருக்கிறது!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@கிருபன் புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது. ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?1 point- லெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..!
செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும். 1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர். எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர். அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது. இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி. 12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார். இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!! – நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!1 point- பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
யார் பயங்கரவாதி என்று இவர்களுக்கு புரியாத வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள் 1988/19891 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
போராளிகள் (விளக்கம் ஒன்றும் தெரியவில்லை) ~1985 லெப். கேணல் ராதா, கப்டன் வாசு, லெப். கேணல் விக்ரர் உள்ளிட்டோர் நிற்கின்றனர் லெப். கேணல் ராதா, மேஜர் கேடில்ஸ் உள்ளிட்டோர் நிற்கின்றனர்1 point- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஉலகத்தில் சிறந்தது காதல் ஓர் உருவமில்லாதது காதல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விலங்கிலும் அனுபவமாவது காதல் -- அதைப் பார்ப்பதில் அனைவர்க்கும் ஆவல்.......! 😍1 point- சிரிக்கலாம் வாங்க
1 point- தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை.
1 point- முள்ளிவாய்க்கால் மே 19
1 point- கருத்து படங்கள்
1 point1 point- பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு கோரப்பற்களும் வெளித்தெரியும். பொதுவேட்பாளர் தேவையில்லை என்று எக்காளமிடும் சம் சும் களுக்கே எல்லாம் வெளிச்சம். நன்றி1 point- தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
அய்யாவின்...கை நிக்கிற நிலையை நீங்கள் கவனிக்கேல்லையே1 point- தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
அந்தக் காலத்தில் பொட்டர் நடராசா என்று ஒருவர் இருந்தார். இவர் தந்தை செல்வா உரத்துப் பேச முடியாத போது அவரது பேச்சை உரத்துச் சொல்லும் வேலை பார்த்தவர்..! தந்தை ஒன்று சொல்ல இவர் வேறொன்று சொல்வார். சரித்திரம் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பொறுமையாக கேட்டு கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களை தமிழில் பிசகாமல் மொழிபெயர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள் ரஞ்சித். 🙏 நாங்களும் தான் சற்று தெரிந்து, தெளிந்து கொள்கிறோம் கப்பிதான் எமது தமிழ் தலைவர்கள் ராமநாதன் அருணாசலம் காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிடுங்கள் பார்ப்போம். அவர்களின் தவறுகள் பற்றி தெரிந்த உங்களுக்கு D.S சேனநாயக்கா போன்ற சிங்கள தலைமைகளின் "தேசாபிமானம்" பற்றியும் தெரிந்திருக்கும் என்றும் நம்புகிறேன்1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
வேதனை என்ன என்றால் ஈரான் அதிபருக்கு துணைக்கு போன இரண்டு கெலிகப்டரும் என்ன செய்தார்கள்........................... உடன தலைமைக்கு அறிவித்து இருக்கனும் அதிபர் வந்த வானுர்த்தி தொடர்வு துன்டிக்கப் பட்டு விட்டது என்று........................இதில் சதியும் இருக்கலாம் வெதர் சரி இல்லாம கீழ விழுந்தும் இருக்க கூடும் நாளைக்கு என்ன நடந்தது என்று தெரிய வரும்......................ஈரான் தொடர்ந்து முக்கியமானவர்களை இழந்திட்டு வருது கடந்து 5ஆண்டுகளில்.........................1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- வினா விடை
1 pointமுன்பு வாங்கிய கடனைத் தராமல் மீண்டும் வந்து கேட்கும்போது........ மொட்டைத் தலை கண்டும் முடிச்சாயம் விற்பனை செய்ய முயற்சித்தால் / பக்கத்து இருக்கையில் இருந்து பக்கோடா சாப்பிட்டால் ......! 😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முதலாவது கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள். நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 முதல்வன் 74 2 சுவி 74 3 ஏராளன் 74 4 நிலாமதி 74 5 அஹஸ்தியன் 74 6 கல்யாணி 74 7 கந்தப்பு 74 8 எப்போதும் தமிழன் 74 9 வாதவூரான் 74 10 கிருபன் 74 11 நீர்வேலியான் 74 12 நுணாவிலான் 74 13 புலவர் 74 14 வீரப் பையன்26 70 15 ஈழப்பிரியன் 70 16 கோஷான் சே 70 17 கறுப்பி 661 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில் CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK GT KKR RR முதல்வன் CSK KKR RR SRH சுவி CSK KKR RR SRH ஏராளன் CSK KKR RR SRH நிலாமதி CSK KKR RR SRH அஹஸ்தியன் CSK KKR RR SRH ஈழப்பிரியன் CSK KKR LSG RR கல்யாணி CSK KKR RR SRH கந்தப்பு CSK KKR RR SRH கறுப்பி CSK GT MI RR எப்போதும் தமிழன் CSK KKR RR SRH வாதவூரான் CSK KKR RR SRH கிருபன் CSK KKR RR SRH நீர்வேலியான் CSK KKR RR SRH கோஷான் சே CSK KKR LSG RR நுணாவிலான் CSK KKR RR SRH புலவர் CSK KKR RR SRH1 point- வினா விடை
1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில், சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முகங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்?1 point- வினா விடை
1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
சிங்களத்திற்காகவும் அழவேண்டிய காலம் விரைவில் வரும். இதில் வினோதம் என்னவென்றால், இந்திய பிராந்திய வல்லாதிக்கம், மேற்குலகின் ஆதிக்கம், சீனாவின் ஆதிக்கம் எல்லாவற்றையும் ஒருங்கே எதிர்த்த ஒரேயொரு இலங்கையன் பிரபாகரன் மட்டுமே. ஆனால், பிரபாகரனைக் கொன்ற சிங்களத்தின் நிலையோ இன்று " வேசி வீட்டு வெத்திலைத் தட்டம் " என்கிற நிலைக்கு வந்துவிட்டது. வருபவன் போபவன் எல்லோரும் கையை நனைக்கும் நிலைக்கு இலங்கை வந்துவிட்டது. 😥1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஅறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......! 😂1 point- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
வருடம் 2124, மே மாதம், 15ம் திகதி. இன்றைய தலைப்பு செய்திகள் 1. செவ்வாய் கிரகத்திற்கு உத்யோக பூர்வ விஜம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அமோக வரவேற்பு. 2. இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் அல்பேர்ட்டின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியது. பக்கிங்ஹம் அரண்மனை அதிர்ச்சி. 3. கியவை பிடித்தே தீருவோம். சூளுரைத்தார் ரஸ்ய அதிபர். 4. விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா ஐந்து வருடங்களால் நீடித்தது.1 point - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.