Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/20/24 in Posts
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை.
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி5 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 நிலாமதி 70....... கிள்ளிப் பார்க்கிறேன் இது கனவா அல்லது நிஜமா என ? குருடன் .....யாருக்கோ அடிச்ச மாதிரி 😄😄4 points
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
3 points
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மூன்று புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். மூன்றாவதும் நான்காவதும் இடங்களை ஒருவருமே சரியாகக் கணிக்கவில்லை. எனவே அனைவருக்கும் மூன்றாம் இடத்திற்கான தலா இரண்டு புள்ளிகளும், நான்காம் இடத்திற்காக தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படும். மூன்றாவது கேள்விக்கான பதிலை @வீரப் பையன்26 மாத்திரமே சரியாகக் கணித்துள்ளதால், இரண்டு புள்ளிகள் கூட்டப்படும். மற்றையோருக்கு இரு புள்ளிகள் குறைக்கப்படும். மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டதன் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 70 2 அஹஸ்தியன் 68 3 வீரப் பையன்26 62 4 முதல்வன் 62 5 சுவி 62 6 ஏராளன் 62 7 கல்யாணி 62 8 கந்தப்பு 62 9 எப்போதும் தமிழன் 62 10 வாதவூரான் 62 11 கிருபன் 62 12 நீர்வேலியான் 62 13 நுணாவிலான் 62 14 புலவர் 62 15 ஈழப்பிரியன் 58 16 கோஷான் சே 58 17 கறுப்பி 543 points- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
மகளே மாஷா அமீனி, பெண்களின் பிறப்புறுப்பில் தன் கெளரவத்தை மறைத்து வைத்த இன்னொரு பேடி இறந்து விட்டான். உன் குரல்வளையை நெரித்த ஆணாதிக்க கரம் ஒன்று, இன்று ஏதோ ஒரு மலை இடுக்கில் அநாதையாய் தொங்கி கொண்டிருக்கிறதாம். உன் முடியை மொக்காடு போட்டு மறைக்க துடித்த மிருகம் ஒன்று, தன் அடித் துணியும் அகன்று அம்மணமாய் கிடந்ததாம் அதே மலை சரிவில். உன் உடலை வைத்து அரசியல் செய்தவரை, இன்று உரப் பையில் கூட்டி அள்ளுகிறார்களாம். சாவின் விளிம்பில் நீ சந்தித்த கொடுமைகளை, வானூர்தி வட்டம் கிறுக்கிய கணத்தில் அவர்கள் நினைத்திருப்பார்கள். இருபத்தினான்கு மணிதாண்டி, ஈ ஊர்ந்து நாறிப்போன உடல்கள், துண்டமாய் சிதறி தூவப்பட்ட சதைகள்…. தீர்ப்பு நாள் அன்று நீ அப்படியே மீள்வாய் மகளே! ஆனால் இவர்கள்? தெய்வம் அன்றே கொல்லும்.2 points- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இரங்கல் என்பது அந்த நாட்டுக்கு, அந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம். ஒரு கெட்ட தகப்பன் என்றாலும் அவரது இழப்பிற்கு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வது போல....2 points- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
உண்மை, ஏதோ தாம் புனிதர்கள்போலவும், தாமே பலஸ்தீனர்களுக்குத் தீர்ப்பெழுதுபவர்போல் கொன்றொழித்தவாறு தம்மை அசைக்கமுடியாது என்ற சியோனிசவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடிதான். அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில், 2018 முதல் ஒவ்வொரு வருடமும் மே 20ஆம் தேதி உலக தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, குறிப்பிட்ட ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காற்று மாசு போன்ற காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வெளவால்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகள் (Hummingbirds) போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் மனித நடவடிக்கைகளால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. உலக உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு என்ன? தேனீக்கள் இல்லையென்றால் என்னவாகும்? தேனீக்களை சார்ந்துள்ள உணவு உற்பத்தி பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் மொத்த விவசாய நிலத்தில் 35 சதவீத நிலங்கள், அதாவது மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களை நம்பியே உள்ளது. மகரந்தத் தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது மகரந்தச் சேர்க்கை நடக்கும். இதனால் தாவரங்கள் பல்கிப் பெருகும். 80% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்களே காரணம் என்கிறது ஐ.நா. அறிக்கை. தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்த தூள், அடுத்தடுத்த பூக்களின் மேல் அவை உட்காரும்போது பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்கு முக்கிய காரணம். பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்கின்றன என்றே சொல்லலாம். "தேனீக்கள் இல்லையென்றால் காய்கறிகள், எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் மட்டுமல்லாது பாதாம், வால்நட்டுகள், காபி, கோகோ பீன்கள், தக்காளி, ஆப்பிள் போன்ற பல பயிர்களில் மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்." என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது, உலகளவிலான உணவு உற்பத்திக்கும் தேனீக்கள் இன்றியமையாததாக உள்ளன. தேனீக்களின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES “தேனீக்கள் மட்டுமல்லாது பல பூச்சிகளையும் கூட மனிதர்கள் ஒரு உயிராகவே மதிப்பதில்லை. தேனீக்கள் என்பவை தேன் கொடுக்க மட்டும் தான் இந்த உலகத்தில் உள்ளன என்று தானே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார் கட்டுரையாளரும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருமான ஏ.சண்முகானந்தம். “இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. இன்னும் பல வகையான பூச்சி வகைகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்கள். அவற்றிலிருந்து பெறப்படும் தேனைக் கூட ஒரு இனிப்பூட்டியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தனியாக பேசலாம். ஆனால் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கைக்காக தான் மனிதர்கள் அதைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் இந்த தேனீக்கள் தான். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், தாவர இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். பின்னர் உணவு உற்பத்தி குறைந்து, மனித அழிவின் தொடக்கமாக அது இருக்கும்” என்கிறார் சண்முகானந்தம். பூக்களின் மகரந்தம் மற்றும் மதுரம் ஆகிய இரண்டும் தான் தேனீக்களின் உணவு என்றும், அப்போதைய பசிக்கு அதை அவை உணவாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார் சண்முகானந்தம். “குளிர் காலங்கள் மற்றும் பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தான் தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. பூக்கள் இருக்கும் இடத்தை அல்லது தேன் இருக்கும் திசையை தனது நடனத்தின் மூலம் அவை தெரியப்படுத்தும். உதாரணமாக தேனீக்கள் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் உணவு உள்ளது என்றும் அர்த்தம்” என்று கூறினார். தேனீக்களின் இந்த நடனம் குறித்து முதலில் ஆய்வு செய்து அதை விளக்கியவர் விலங்கின நடத்தையியல் நிபுணர் கார்ல் வான் ஃப்ரிஷ். பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக இவருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. படக்குறிப்பு,கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம். தொடர்ந்து பேசிய சண்முகானந்தம், “அதிக நறுமணமுள்ள, அழகான மல்லிகை, ரோஜா போன்ற பூக்களைத் தேடி தேனீக்கள் போவதில்லை. மாமரத்தின் பூக்கள், சூரிய காந்தி, எள், முருங்கை, குறிஞ்சி போன்றவற்றைத் தேடி தான் தேனீக்கள் அதிகம் செல்லும். எந்தப் பருவத்தில் எந்தப் பூக்கள் பூக்கும் என்பதையும் அவை அறிந்து வைத்திருக்கும். அதேபோல முகரும் திறன் கொண்டே பூக்கள் அல்லது உணவு எங்கு இருக்கிறது என்பதையும் அவை தெரிந்துகொள்ளும். தனித்துவமான பூக்களைக் கண்டறிந்து அவற்றிலிருந்து மட்டுமே தேன் எடுப்பது, அதைத் தனியாக சேகரிப்பது, தேர்ந்த பொறியியல் அறிவுடன் கூட்டைக் கட்டுவது என மிகவும் நுட்பமான உயிரினங்கள் இந்த தேனீக்கள். ஆனால் மனிதர்கள் இந்த தேனீக்களை மிகவும் சாதாரணமான பூச்சிகளாகப் பார்க்கிறார்கள். அதற்கு கொடுக்கு மட்டும் இல்லையென்றால் எளிதாக அவற்றை அழிக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்” என்று கூறுகிறார். தேனீக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தெந்த வழிகளில் மனிதர்களால் தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர். பெங்களூரில் உள்ள அசோகா அறக்கட்டளை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் ஈடுபடுகிறது. காலநிலை மாற்றம் “காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான பிரச்னை. காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் தேனீக்களின் வளர்சிதை மாற்ற விகிதமும் (Metabolic rate) அதிகரிக்கும். இதனால் வழக்கத்தை விட அதிக சக்தியை உணவைச் சேகரிப்பதில் தேனீக்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். தேனீக்கள் தாங்கள் சேகரிக்கும் தேனை தேனடையில் கொட்டிவிட்டு, அதன் நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தனது இறகைத் தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருக்கும். தேன் கூட்டின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் அவை இதைச் செய்யும். கூட்டில் வெப்பம் அதிகரிக்கும் போது அவை வாழ முடியாத சூழல் ஏற்படும். மேலும் காலநிலை மாற்றத்தால் பூக்கள் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக வசந்த காலத்தின் பூக்கள் முன்னதாகவே பூத்து விடும்போது, தேனீக்கள் அதைத் தவறவிடும். பின்னர் வசந்த காலத்தில் உணவின்றி மடிந்துபோகும்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். சூரியகாந்திச் செடியின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்கு அதிகம். சூரியகாந்தி பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை தீவிரமாக நடைபெற்றால் அதிக மகசூல் கிடைக்கும். கடந்தாண்டு தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், சூரியகாந்தி பயிரிடப்பட்டது. ஆனால் தேனீக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக செயற்கை முறை மகரந்த சேர்க்கையின் இரண்டு முறைகள் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய செயற்கை மகரந்தச் சேர்க்கை முறைகள் போதுமான பலனைத் தராது, பயிர்களின் மகசூல், தரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும் என்றும், பல்லுயிரிய சூழலியல் முறைமைக்கும் (Biodiversity) அது பெரிதாக பயனளிக்காது என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். படக்குறிப்பு,முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு “சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தேனீக்களை நேரடியாக கொல்லலாம் அல்லது அவற்றைக் கடுமையாக பலவீனப்படுத்தலாம். என்னைக் கேட்டால் தேனீக்களின் அழிவுக்கு அவைதான் முக்கிய காரணம் என்று சொல்வேன்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன். தேனீக்களின் வாழ்விடங்களில் மாற்றம் “தேனீக்கள் விளைநிலங்களையும் பூக்களையும் தேடிச் செல்வது உணவுக்காகவும், மகரந்தச் சேர்க்கைக்காகவும் தான். விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது அவை உணவின்றி அழிவைச் சந்திக்கின்றன. தேனீக்களில் காட்டுத் தேனீ வகைகள் தான் அதிகம். சாதாரண தேனீக்களைப் போல அல்லாமல், காட்டுத் தேனீக்களுக்கு மிகப்பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படும்போது, அவை கூடுகள் கட்டும், உணவு சேகரிக்கும் பகுதிகளும் சேர்ந்தே அழிகின்றன. வெளிநாடுகளில் தேனீக்களுக்கு என்றே நகரங்களில் கூட மகரந்தப் பாதைகள், பூங்காக்களை உருவாக்குகிறார்கள். அதேபோல இங்கும் கொண்டுவரப்பட வேண்டும். கிராமங்களில் இருக்கும் சிறு வனங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார் முனைவர் பிரியதர்ஷனன். 'தேனீக்கள் சூழ் உலகு' பட மூலாதாரம்,GETTY IMAGES தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என எச்சரிக்கிறார் கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம். “இந்த உலகில் மனிதர்கள் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பரிணமித்து வாழ்ந்து வருபவை பூச்சிகள். இதை மனித இனம் உணர்ந்துகொண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும்போது தான் ‘நீடித்த நிலையான வளர்ச்சி’ சாத்தியப்படும். பூச்சிகள் மற்றும் தேனீக்கள் சூழ் உலகை உருவாக்க நம்மைச் சுற்றியுள்ள காடுகள், மரங்கள், தாவரங்கள் அடங்கிய பசுமை பரப்பை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்” என்று கூறுகிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c0338e398nko2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
இன்று World Bee Day என்று கூகிள் காட்டிக் கொண்டிருக்கின்றது. நல்ல ஒரு கட்டுரை. இப்பொழுது முருங்கை பூக்கும் காலம் இங்கே. நாள் பூரா தேனீக்கள் அந்த வெள்ளை வெள்ளைப் பூக்களிலேயே கிடக்கின்றன. பின்னர் குட்டி குட்டிப் பாம்புகள் போல பிஞ்சுகள் வெளியே வரும். அவை அப்படியே நீண்டு காயாகின்றன. தேனீக்கள் இல்லையேல் இவை இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. தேனீ தொடாமல் பூமியில் எதுவுமே இல்லை போல. காய்த்து நிற்கும் முருங்கை மரத்தை பார்த்து பக்கத்து வீட்டு அமெரிக்கர் இது என்ன என்று கேட்க, இது ஒரு வெஜிடபிள் என்று நான் சொன்னேன். 'இந்தப் பெரிய வெஜிடபிள் மரமா.......' என்பது போல அவர் கொடுத்த ஒரு ரியாக்ஷன் விலை மதிப்பற்றது..........😀 ஹைபிரிட் பூ மரங்களை வீட்டில் வளர்த்து தேனீக்களை ஏமாற்றிக் கொன்டிருக்கின்றோம் என்று சில வேளைகளில் தோன்றும். தேனீக்கள் அந்தப் பூக்களின் உள்ளே போய் உருண்டு பிரள்கின்றன. ஆனால் அங்கே எதுவும் இல்லை, அந்தப் பூக்கள் கிட்டத்தட்ட வெறும் கடதாசிகள்.2 points- பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
விளைச்சலை அதிகரிக்க பூச்சிநாசினிகளைப் பாவித்தார்கள். இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட விளைச்சல் குறைந்தது. இப்போது இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸில் தேனீ வளர்ப்பு பற்றி விளிப்புணர்வு செய்கிறார்கள். பரிஸில் நான் வேலை செய்யும் 5 மாடிக் கட்டடத்தின் உச்சியில் மொட்டைமாடியில் தேனீ வறர்க்கிறார்கள். வருடத்தில் இரண்டு தடவை இதிலிருந்து கிடைக்கும் தேனை அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்று பராமரிப்புச் செலவை ஈடு செய்கிறார்கள். எனக்கு இலவசமாக தேனீ வளர்ப்புப் பற்றிய செய்முறைப் பயிற்சி வழங்கினார்கள். இப்போது இங்கு தேனீக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆசியாவிலிருந்து வந்துள்ள தேனீ போல் தோற்றமுள்ள ஒரு வித குழவி ஆகும்.2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsஒடுகின்ற வண்டியோட ஒத்துமையா ரெண்டு மாடு ஒண்ணா விட்டு ஒன்று பிரிஞ்சா என்னவாகும் எண்ணிப் பாரு தென்ன மரம் ஜாதிக கொரு தேங்காய் காய்ப்பதில்லை கொல்லையில் வைச்ச முல்லை குலம் பார்த்து பூப்பதில்லை ஆயிரம் ஜென்மம் தாண்டி அன்பாலே ஒன்று கூடி சேர்வது காதல் தானே பிரிப்பது பாவம் தானே2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே? நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். சசி, அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி !2 points- இலங்கையில் நாளை துக்க தினம்!
1 pointஎனக்கு பிடிக்காத அரசியல் நாடாக இருந்தாலும்...... இலங்கையின் இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு.... கடன் பட்டு வாழ்ந்தாலும்/ பல குற்றங்களை வரலாற்று ரீதியாக செய்தாலும்.... தங்கள் கொள்கையில் கூனி குறுகாமல் நிமிர்ந்து நிற்கின்றார்கள். 👍🏼1 point- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
எல்லாம் ஒருவித நாடகம். மேற்குலகின் நாடகங்கள் தெரியாதவன் வாயில் என்றுமே மண்.😂1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோருக்கும் இனாமாக 70 புள்ளிகள் கிடைத்ததுதானே! மனிசருக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் சத்தமில்லாமல் வாங்குவினம்! ஆனால் ஒரு சதம் எடுத்தாலும் பிலாக்கணம் வைப்பினம்!😂 மைனஸுக்கு கிட்ட வரும்! ஆனால் கீழே போகாது! ஒருத்தராலும் சாத்திரம் பார்க்கமுடியாது! நடப்பதுதான் நடக்கும்!1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான். ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன்.1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
கோத்தா, மகிந்த ஆகியோர் பதவியில் இருக்கும் போது இறப்பு ஏற்பட்டிருந்தாலும் உலக நாடுகளின் தலைவர்கள் இரஙகலைத் தெரிவித்து இருப்பர். கிளாலி படுகொலைகள், ஜேவிபி காலத்தில் சிங்களவர்கள் மீது செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் பிரேமதாசா கொல்லப்பட்ட போது உலக தலைவர்கள் இப்படித் தான் நடந்து கொண்டனர்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்து தொடங்க வில்லை தானே 21 போட்டிக்கு பின்னைய புள்ளி விபரம் அது தான் பெரியப்பர் புது விதிமுறைய கையாளுகிறார்........................ நான் அவசரப் பட்டு குதிச்ச படியால் சில புள்ளிகள் எனக்கு கிடைக்காம போய் விட்டது ஆரம்பத்தில் நல்லா விளையாடின சென்னை கடசியில் பலருக்கு ஆப்பு வைச்சு விட்டது😁.....................................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@கிருபன் புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது. ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?1 point- பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
யார் பயங்கரவாதி என்று இவர்களுக்கு புரியாத வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை1 point- பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
இவ்ருதான் வடக்கு ..கிழக்கின்...10000 விகாரை அமைக்கும் திட்டத்தின் ...மூலதாரி...1 point- சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
கடந்த வருடம் இலங்கை போனபோது உறவினர் ஒருவர் இப்படி எடுத்ததாக சொன்னார்.அதனாலேயே நானும் சொன்னேன். தவறென்றால் வருந்துகிறேன்.1 point- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
மிகச் சிறப்பான நடவடிக்கை. நெரன்யாஹுவின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு, தனிமைப் படுத்தப் படும் நிலை வர வேண்டும். உள்நாட்டு அரசியலில் , கோத்தாவிற்குக் கொடுத்தது போல, "பதவி விலகினால், பேசாமல் இருக்க விடுகிறோம்" என்ற டீலை தீவிர வலதுசாரிகள் அல்லாத எதிர் தரப்பினர் கொடுத்து, ஆட்சியை மாற்றி, இராணுவ நடவடிக்கையை நிறுத்த வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்விடைகொடுத்த உத்தமரே உங்களை நாம் என்றும் மறவோம்! உயிருள்ளவரை மறவோம்!1 point- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
போரின் வீச்சு குறையலாம். ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும்.1 point- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இவர்களது பருப்பை சிறிலங்காவிலேயே அவிக்கமுடியவில்லை. பிறகெப்படி இஸ்ரேலில் சாத்தியம். அதேவேளை தாங்கள் கமாசை மட்டுமல்ல இஸ்ரேலரசையும் தண்டிக்கிறோம் என்று காட்டி, கமாசுக்கு ஒரு கிடுக்குப்பிடி போடுவதே நோக்கம்.1 point- இந்த ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க எலோன் மஸ்க் இலங்கை வருகை?
ஸ்டார்லிங்க் பல சர்ச்சைகளை உண்டக்கியதால் ஐரோப்பாவில் இதற்குக் கணிசமான எதிர்ப்பு உள்ளது. எலன் மஸ்க் தான் விரும்பினால் ஒரு நட்டில் ஸ்டார்லிங்க் மூலம் இணையச் சேவைகளைச் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும் என்று நிரூபித்திருந்தார். ஐரோப்பா சொந்தமாக IRIS² என்ற செய்மதி இணைய வழங்கலை உருவாக்கி வருகிறது. இதனால் ஸ்டார்லிங்க் ஐரோப்பாவில் காலூன்றுவது கடினம். உலகை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியின் இன்னொரு அங்கம் ஸ்டார்லிங்க்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்தப் போட்டிகளின் சுவாரஸ்யமே அதுதான் ....... இங்கு முதலாவது கடைசியாவது........ அனைவரும் பம்பலாக கலந்துரையாடுகின்றோம் அதுதான் சிறப்பு........! 😂1 point- பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு கோரப்பற்களும் வெளித்தெரியும். பொதுவேட்பாளர் தேவையில்லை என்று எக்காளமிடும் சம் சும் களுக்கே எல்லாம் வெளிச்சம். நன்றி1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
மகிழ்ச்சி! ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும். ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு 🤣1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில் CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK GT KKR RR முதல்வன் CSK KKR RR SRH சுவி CSK KKR RR SRH ஏராளன் CSK KKR RR SRH நிலாமதி CSK KKR RR SRH அஹஸ்தியன் CSK KKR RR SRH ஈழப்பிரியன் CSK KKR LSG RR கல்யாணி CSK KKR RR SRH கந்தப்பு CSK KKR RR SRH கறுப்பி CSK GT MI RR எப்போதும் தமிழன் CSK KKR RR SRH வாதவூரான் CSK KKR RR SRH கிருபன் CSK KKR RR SRH நீர்வேலியான் CSK KKR RR SRH கோஷான் சே CSK KKR LSG RR நுணாவிலான் CSK KKR RR SRH புலவர் CSK KKR RR SRH1 point- வினா விடை
1 point- வினா விடை
1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிருங்கள் என்றால் உனக்குத் தெரியாமலா கருத்துக் கூறுகிறாய் என்கிறீர்கள்? ஜின்னாவை விடுங்கள், தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளைப் பட்டியலிடுங்களேன், படிக்கலாம்.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது. தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார். நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது. இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை. இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம். மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால் அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே. பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம். இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது. அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம். மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்...........)1 point- கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
கோவேக்சின் தடுப்பூசி & பக்கவிளைவுகள் ஆய்வு குறித்த விளக்கம் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் முக்கிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு தீவிர தொற்றுகளைத் தவிர்த்து அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் பொருட்டு அவசர நிலையெனக் கருதி தடுப்பூசிகளைத் தயார் செய்தன. அமெரிக்கா - மாடர்னா மற்றும் ஃபைசர் ( கோமிர்நாட்டி) தடுப்பூசி ரஷ்யா - ஸ்புட்னிக் தடுப்பூசி சீனா - சைனோஃபார்ம் பிரிட்டன் - வேக்ஸ்செர்வியா இந்தியா - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கோவேக்சின் தொழில்நுட்பம் வைரஸை செயலிழக்கச் செய்து அதன் நோய் தொற்று உண்டாக்கும் ஆற்றலை இல்லாமல் செய்து உடலில் செலுத்துவதன் மூலம் நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவது கோவேக்சின் தடுப்பூசியின் தொழில்நுட்பமாகும். இது பழமையான காலத்தால் பரிசோதிக்கப்பட்ட குறைவான பக்கவிளைவுகளைக் கொண்ட தொழில்நுட்பமாகும். இந்த தடுப்பூசியை இந்திய அரசின் ஐசிஎம்ஆர் தொழில்நுட்பத்தை வழங்க அதைத் தயாரிக்கும் பொறுப்பை பாரத் பயோடெக் நிறுவனத்தார் ஏற்றனர். இந்தியாவில் இதுவரை 36 கோடி பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளில் ஏனைய கொரோனா தடுப்பூசிகளை வைத்து ஒப்பீடு செய்ததில் மிகக் குறைவான பக்கவிளைவுகள் மற்றும் மிகக் குறைவான தீவிர பக்க விளைவுகள் கொண்ட தடுப்பூசியாக கோவேக்சின் தேறி இருப்பது உண்மை. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வில் கோவேக்சினுக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக முடிவு வெளியிடப்பட்டு அது பரபரப்பாகி வருகிறது. இந்தக் கட்டுரையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் தரம் மற்றும் முறைகளை சீர்தூக்கிப் பார்ப்போம். மருத்துவ ஆய்வுகளைப் பொருத்தவரை சிறந்த தரம் கொண்டவை என்றும் ஆய்வின் முடிவு அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பது "இருபுறமும் மறைக்கப்பட்ட - ஆய்வில் கலந்து கொள்வோரிடத்தே பாரபட்சமின்றி சார்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆய்வுகளாகும். இதை DOUBLE BLINDED RANDOMISED CONTROL TRIALS என்போம். ஆய்வுகளில் பலம் குன்றியவை - OBSERVATIONAL STUDIES நோக்குற்குரிய ஆய்வுகள் இத்தகைய ஆய்வுகளில் நடக்கும் நிகழ்வுகளை நோக்க மட்டுமே முடியுமே அன்றி நிச்சயமாக எதனால் இவை நேர்ந்தன? என்பதை விளக்க இயலாது. மருத்துவ ஆய்வுகளை கூர்நோக்குவதில் பிரபலமான சொலவடை உண்டு.. OBSERVATIONS ARE NOT CAUSATIONS அதாவது ஆய்வில் நாம் கண்ட அத்தனை விசயங்களும் உண்மை ஆனால் அது எதனால் நடந்தது என்பதை கூற இயலாது என்பதால் அவற்றைக் காரணிகளாக அறிவிக்க இயலாது. இந்த ஆய்வும் ஒரு நோக்குற்குரிய ஆய்வு தான். இந்த ஆய்வு செய்யப்பட்ட விதம் :- கோவேக்சின் தடுப்பூசி பெற்றவர்கள் 926 பேரை அவர்கள் தடுப்பூசி பெற்ற நாளில் இருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அலைப்பேசி மூலம் அழைத்து அவர்களுக்கு நேர்ந்த அல்லது அவர்களுக்கு அப்போது இருக்கும் நோய் குறித்து கேட்டறியப்பட்டது. இதில் தோராயமாக 50% பேருக்கு அந்த வருடத்தில் சுவாசப் பாதை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 10.5% பேருக்கு தோல் சார்ந்த நோய்கள் 10.2% பேருக்கு பொதுவான நோய்கள் 5.8% பேருக்கு தசை வலி 5.5% பேருக்கு நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் 4.6% பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு 2.7% பேருக்கு கண் சார்ந்த நோய்கள் 0.6% பேருக்கு ஹைப்போதைராய்டிசம் 0.3% பேருக்கு பக்கவாதம் 0.1% பேருக்கு குல்லியன் பாரி சிண்ட்ரோம் எனும் நரம்பு மண்டலத்தை தாக்கி பக்கவாதம்/நரம்பு தளர்ச்சி ஏற்படுத்தும் நோய் வந்ததும் கண்டறியப்பட்டது. ஆயிரம் பேரில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது என்று பொருள். இதில் மேலே குறிப்பிட்ட நோய்கள் சாதாரணமாக தடுப்பூசி பெறாத மக்களுக்கும் அந்த வருடத்தில் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆய்வில் CONTROL என்று கூறப்படும் "தடுப்பூசி பெறாத மக்களையும் ஒரு சேர ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களிடத்தில் இத்தகைய நோய்கள் அந்த வருடத்தில் எந்த விகிதத்தில் உண்டாகின என்பதையும் அறிந்து வெளியிட வேண்டும். அப்போது தான் அது தரத்தில் சிறந்த ஆய்வு. இந்த ஆய்வில் கண்ட்ரோல் ஆர்ம் என்று கூறப்படும் தடுப்பூசி பெறாதவர்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மேலும் தடுப்பூசி பெற்ற ஒரு வருடத்திற்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டோரில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் மூன்று பேருக்கு நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது. ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நிகழ்ந்த மரணங்களை நேரடியாக தடுப்பூசிகளினால் தான் நிகழ்ந்தன என்று அறுதியிட்டு கூற இயலாது என்று ஆய்வை செய்தவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்த ஆய்வில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடம் கழித்து அழைப்பு வந்திருக்கும் "சார் இந்த ஒரு வருசத்துல உங்களுக்கு சளி இருமல் ஏற்பட்டுச்சா?" "ஆமா சார்.. ரெண்டு தடவ வந்துச்சு" "உடம்பு கை கால் வலி?" "இருந்துருக்கு சார்" உடனே ஆய்வாளர் தடுப்பூசி பெற்றவர்களில் அந்த ஒரு வருடத்தில் சளி இருமல் உடல் வலி ஏற்பட்டவர்கள் லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்து அதை தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்கலாம் என்று வெளியிடுவார். ஆனால் உண்மையில் தடுப்பூசி பெறாத உங்களின் நண்பருக்கும் அதே வருடத்தில் நான்குமுறை காய்ச்சல் சளி உடல் வலி ஏற்பட்டிருக்கலாம் அதை ஆய்வாளர் கணக்கில் கொள்ள மாட்டார் . மீண்டும் கூறுகிறேன் எந்த ஒரு விளைவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு அதே போல மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு மருந்தின் நன்மை தரும் விளைவை அதன் பக்கவிளைவுகளோடு சீர்தூக்கிப் பார்த்தே மருந்துகள் புலக்கத்துக்கு வருகின்றன. எனினும் மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருந்து அதன் மூலம் ஆதாயம் தேடி மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான ஒவ்வாமையை அதிகரிப்பதில் இது போன்ற ஆய்வுகள் முன்னிலை வகிக்கின்றன. இவ்வாறாக வலு குறைவான தரத்தில் குறைந்த கண்ட்ரோல் எனப்படும் தடுப்பூசி பெறாதவர்களையும் கணக்கில் சேர்க்காத ஆய்வாளரின் சார்புத்தன்மை கேள்விக்குறியான இந்த ஆய்வின் முடிவுகளை மக்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. கோவேக்சின் பெற்றுக் கொண்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://www.facebook.com/100002195571900/posts/7906446342771806/?mibextid=xfxF2i&rdid=Jq78XUuAfp0A7sQc1 point- வினா விடை
1 point- வினா விடை
1 pointஐ மீன் பல விசயங்களில் அமெரிக்கா தானும் தன் பாடும் சிவனே எண்டு இருந்தால் முக்காவாசி உலகும் அமைதியாக இருக்கும் எண்டது என்ரை நம்பிக்கை...🤣 கட்டாயம் பதில் சொல்லவும்.😎1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஅறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......! 😂1 point- தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள்
அம்மாவின் இந்த வேண்டுதலும் நிறைவேறட்டும்.1 point - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.