Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    3061
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/21/24 in all areas

  1. ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும். ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.
  2. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)
  3. நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல இருக்கின்றது ஈரான் மற்றும் சில நாடுகளின் நடவடிக்கைகள். எல்லாமே வெறும் பூச்சாண்டி ஆகத் தெரிகின்றது கடைசியில். ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்.] முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் 'எனக்குத் தெரிந்த ராஜீவ்' (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர் தற்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் குறித்து விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். 'The Rajiv I Knew' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம், ராஜீவ் காந்தி ஆட்சியின் காலகட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவுத் துறை கொள்கை முயற்சிகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத் ராஜ் ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகிறது. இதில் சர்ச்சைகள் என்ற பகுதியில் ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி விவகாரம், ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிராஸ்டாக் நடவடிக்கை, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட விவகாரம், போஃபர்ஸ் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஜெயவர்தனேவுடன் ராஜீவ் காந்தி யாரையும் ஆலோசிக்காமல் ராஜீவ் எடுத்த முடிவு இதில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார் மணிசங்கர் அய்யர். இந்திய அமைதி காக்கும் படையை அனுப்ப இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என்பது குறித்தும் ஒரு புதிய தகவலைச் சொல்கிறார் மணி சங்கர் அய்யர். "ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே," என்கிறது இந்த நூல். அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. "அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது," என்று கூறப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் இந்நூல் கூறுகிறது. "ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்," என்று மணி சங்கர் அய்யர் தனது புத்தகத்தில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார் கடற்படை வீரரால் தாக்கப்பட்ட ராஜீவ் இதுகுறித்து மேலும் பேசும் இந்த நூல், ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜீவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது, என்கிறது. "பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது," என்கிறது இப்புத்தகம். இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் தில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார். அந்த வீடியோ அதன்படியே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். "இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்திலிருந்தே ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆரம்பக் கட்டச் சேதங்களுக்குப் பிறகு, ராணுவம் சுதாரித்துக்கொண்டாலும் இது பேரழிவாகவே அமைந்தது. ஆரம்பத்தில், இந்திய அமைதி காக்கும் படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த வரவேற்பில் இணைந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்," என்கிறார் மணி சங்கர் அய்யர். "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும் இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றிருப்பதாக இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது," என்கிறார் மணி சங்கர் அய்யர். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எவ்விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ, வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை, என்கிறார். "அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து புலிகளுக்கும் அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டம் இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதி காக்கும்படை, தமிழ்ப் போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட - கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்னாமாக மாற்றியது," என்கிறார் மணி சங்கர் அய்யர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார் இந்தியா வந்த பிரபாகரன் ஒப்பந்தம் கையெழுத்தான வாரம் விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புது தில்லிக்கு அழைத்துவரப்பட்டதாகச் சொல்கிறது இந்நூல். அவரிடம் ஒப்பந்தத்தின் பிரதி அளிக்கப்பட்டபோதே, பிரச்சனை ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, எனவும் சொல்கிறது. "அவர் தில்லி அசோகா ஹோட்டலில் பலத்த காவலுக்கு இடையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, தன் சகாக்களிடம் கருத்துக்களைக் கேட்க விரும்பினார் அவர். விரைவிலேயே அந்த ஒப்பந்தம் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை பிரபாகரன் தெளிவுபடுத்தினார்," என்கிறது இப்புத்தகம். "பிரபாகரன் தங்கியிருந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் இதனை அவர் வெளிப்படையாகவே சொன்னார். அனிதா பிரதாப் பிரச்சனை உருவாவதை புரிந்துகொண்டார். ஆனால், இந்திய அரசக் கட்டமைப்பிலிருந்த யாருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட வசீகரத்திற்கு பிரபாகரன் பணிந்துவிடுவார் என நம்பினார்கள். ஆனால், தில்லியிலிருந்து எப்படித் தப்புவது என்பதைத்தான் பிரபாகரன் யோசித்துக்கொண்டிருந்தார்," என்று அப்போதிருந்த நிலைமையை விளக்குகிறார் மணி சங்கர் அய்யர். "பிரதமர் ராஜீவ் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவரது குடும்பத்துடனான விருந்தில் கலந்துகொள்ள பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு, தனது மகன் ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று புன்னகையுடன் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களிடம் `பிரபாகரன் ஒப்புக்கொண்டார். நான் அவரை நம்புகிறேன்` என்று பதிலளித்தார் ராஜீவ்," என்று இந்நூல் கூறுகிறது. இதுகுறித்து மேலும் விவரிக்கும் இந்தப் புத்தகம், பிரபாகரன் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி தேவையெனத் தெரிவித்ததாகச் சொல்கிறது. "அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், இறையாண்மையுள்ள தனி தேசமாக ஈழத்தை அடைவதிலும் பிரபாகரன் உறுதியாக இருந்தார். ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுதுமலையில் நிகழ்த்திய தனது பேச்சிலேயே ஒப்பந்தம் குறித்த முரண்பாட்டை பிரபாகரன் தெரிவித்தார். 'நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறோம். ஆனால், தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்' என்றார். பட மூலாதாரம்,JUGGERNAUT BOOKS விரைவிலேயே ஆயுதங்களை ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை புலிகள் இயக்கத்தினர் அறிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியப் படைகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்காக, ரேடியோ அலைவரிசையும் புலிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது (ஆனால், இப்படி அலைவரிசையை பகிர்ந்துகொண்டது பிறகு பிரச்சனையாகவே முடிந்தது)," என்று இந்த பனூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "திலீபனின் மரணம் ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதற்கிடையில், ஏகப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் புலேந்திரன், 16 புலிகள் இயக்கத்தினருடன் பாக் நீரிணை பகுதியில் கைதுசெய்யப்பட்டார். அவர்களைப் பார்க்கவும் உணவு அளிக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டனர். உணவு அளிக்கும் சாக்கில் அவர்களுக்கு சயனைடு அளிக்கப்பட்டது. அதனை அருந்தி 17 பேரும் உயிரிழந்தனர்," என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. "அவர்களது சடலங்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறைக்கு கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது. புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். மோதலைத் தவிர்ப்பதற்காக பிரபாகரனைச் சந்திக்க இந்திய தளபதிகள் முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. விரைவிலேயே இந்திய ரோந்து வாகனத்தைத் தாக்கிய புலிகள், ஐந்து கமாண்டோக்களை கொன்றனர். இரு தரப்புக்கும் இடையில் மோதல் துவங்கியது," என்கிறது இப்புத்தகம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மணி சங்கர் அய்யர் இந்தியப் படையின் திட்டத்தை அறிந்துகொண்ட புலிகள் இந்தப் பிரச்னை எப்படி வலுத்தது என்பதையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. "அக்டோபர் 5-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜெனரல் சுந்தர்ஜி, புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க 'ஆபரேஷன் பவன்' நடவடிக்கையை துவங்க உத்தரவிட்டார். இந்திய ராணுவம் மூன்று, நான்கு வாரங்களில் இதனை முடித்துவிடும் என்றார் சுந்தர்ஜி. இது மோசமான கணிப்பாக முடிந்தது. காரணம், இந்திய ராணுவத்தின் திட்டங்கள் முன்பே பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தன. காரணம், நிலைமை சுமுகமாக இருந்தபோது தனது தகவல் தொடர்பு அலைவரிசையை புலிகளுடன் இந்திய ராணுவம் பகிர்ந்துகொண்டிருந்ததுதான்," என்கிறது. "ஒரு முறை ஹெலிகாப்டரில் வந்திறங்கி, புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்க இந்தியப் படை திட்டமிட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அனைவரும் அங்கிருந்து தப்பியிருந்தனர். ஆரம்பத்தில் புலிகளை 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் சுற்றி வளைத்துவிடலாம் என இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், ஒருபோதும் அது நடக்கவில்லை," என்கிறது இந்நூல். அந்தத் தருணத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித், இந்தத் தோல்விக்கான காரணத்தை தனது பணி கொழும்பில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மணி சங்கர் அய்யர். அதாவது `தமிழ் ஈழம் மீதான பிரபாகரனின் பிடிப்பையும் திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனம், எதிர்த்து நிற்பதில் உறுதியான தன்மை, ஒற்றை நோக்குடைய தன்மை ஆகியவற்றை மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம், என்கிறார். "அதேபோல, இந்திய அமைதி காக்கும் படைக்குச் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக இறங்கிவருவதில் ஜெயவர்தனேவுக்கு இருந்த அரசியல் உறுதியையும் நேர்மைத்தன்மையையும் அதிகமாக மதிப்பிட்டுவிட்டோம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து புலிகளைத் தனியாக பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் ஈடுபாட்டை வரலாறு துல்லியமாக முடிவுசெய்யும். இந்திய, இலங்கை மக்களின் நலனுக்காக எவ்வித பிரதிபலனையும் தராத பணியை அவர் மேற்கொண்டார். அதற்கு அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்தார்," என்று இந்த நூலில் சொல்கிறாற் மணி சங்கர் அய்யர். `The Rajiv I Knew` புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/czqqwvygdw2o
  5. "மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படியான கோடைக் காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப் பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள். ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மை யாகவே தான் காணப்படும்; என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டை யுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்து விட்டான், இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்? நான் மனைவி மட்டுமே .. காதலி அல்ல .. என்கிறாள். அப்படி என்றால், யாரை, எப்படிப் பட்ட வரை, அவள் உண்மையாக காதலிக்க முடியும் என்கிறாள்? அதற்கும் சங்க பாடல், அகநானூறு விடை கூறுகிறது. இப்பாடல்கள் எல்லாம் கி.மு. காலத்துப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. இனி அகநானூறு 268 பார்ப்போம். "அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய காமம் கலந்த காதல் உண்டுஎனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; " இங்கு தலைவி தோழியை பார்த்து சொல்கிறாள்: "தோழி! நீ அறியாமல் பேசுகிறாய். யானையும் புலியும் சண்டையிட்டுக் கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும். அங்குப் பூக்கும் வேங்கை (Pterocarpus marsupium), குளவி (Patchouli) ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும். அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு. "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள். அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும் என்கிறாள். இன்னும் ஒரு தலைவி, அகநானூறு 332 இல், திருமணத்திற்குப் பின்னர் தோழியிடம் கூறுகிறாள் : "நின் புரை தக்க சாயலன் என, நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! " தோழி! “நாடன் [மன்னன், தலைவன்] உன் புரைமைக்குத் [உயர்ச்சி, பெருமை] தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாத படி அவன் என்னைத் தழுவினான். களவுக் காலத்தில் முதல்நாள் துய்த்த இன்பம் போல இன்றும் சிறந்து நிற்கின்றன." என்கிறாள். மற்றும் ஒரு சங்கத் தலைவி, அகநானூறு 361 இல், "வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழிபெரும் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...", அதாவது, "நெஞ்சே ! தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் [தழுவுதல்; புணர்தல்] முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் [அனுபவம்] காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை என்று அடித்து சொல்கிறாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. ஒரே ரபிளா கிடக்கு.....சரி கலந்துக்கிறன் 🤣
  7. எழுத்தாளர் சாரு ஒரு தடவை ஒரு படத்தை விமர்சித்து விட்டார், ஏதோ அஜித் அல்லது விஜய் படம் என்று நினைக்கின்றேன். சாரு 'இது என்ன கொடுமை, இந்தப் படங்களை எல்லாம் எப்படி ஒரு மனிதன் பார்க்கிறது, நான் மாடியிலிருந்தே குதித்து இருப்பேன்....' என்று அந்தப் படத்தை கறாராக கடுமையாக விமர்சித்து விட்டார். விட்டார்களா அந்த கதாநாயகனின் ரசிகர்கள்........ 'யாரடா சாரு, அவன் என்ன பெரிய இவனா...' என்று கேட்டு, சாரு வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப் போவதாக வெருட்டினார்கள். அதற்குப் பிறகு சாரு சினிமா விமர்சனமே இனி வேண்டாம் என்று ஓடி விட்டார். இங்கே யாழ் களத்திலும் சில விடயங்களில் ஒரு ரசிகர் மனநிலை இருக்கின்றது போல........என்னவோ போங்கள், பொழுது போகுது தானே........😀
  8. 🙏..... எப்பவும் அதே ஆச்சரியம் தான் - என்ன செய்தாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுகிறார்களே..........🤣.
  9. இலங்கையில் நிகழ்ந்தது / நுட்பமாக இன்றும் நடந்து கொண்டு இருப்பது இனப்படுகொலை அல்ல என்று பாலஸ்தீனர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது எந்தளவுக்கு சுய நலமானதோ, பக்கச்சார்பானதோ அதே அளவுக்குத் தான் இதுவும்.
  10. சிலரை சந்தோசப்படுத்த பெரிசாய் கஷ்டப்பட தேவை இல்லை. எங்கட கஷ்டங்களை சொன்னாலே போதும்......
  11. மகளே மாஷா அமீனி, பெண்களின் பிறப்புறுப்பில் தன் கெளரவத்தை மறைத்து வைத்த இன்னொரு பேடி இறந்து விட்டான். உன் குரல்வளையை நெரித்த ஆணாதிக்க கரம் ஒன்று, இன்று ஏதோ ஒரு மலை இடுக்கில் அநாதையாய் தொங்கி கொண்டிருக்கிறதாம். உன் முடியை மொக்காடு போட்டு மறைக்க துடித்த மிருகம் ஒன்று, தன் அடித் துணியும் அகன்று அம்மணமாய் கிடந்ததாம் அதே மலை சரிவில். உன் உடலை வைத்து அரசியல் செய்தவரை, இன்று உரப் பையில் கூட்டி அள்ளுகிறார்களாம். சாவின் விளிம்பில் நீ சந்தித்த கொடுமைகளை, வானூர்தி வட்டம் கிறுக்கிய கணத்தில் அவர்கள் நினைத்திருப்பார்கள். இருபத்தினான்கு மணிதாண்டி, ஈ ஊர்ந்து நாறிப்போன உடல்கள், துண்டமாய் சிதறி தூவப்பட்ட சதைகள்…. தீர்ப்பு நாள் அன்று நீ அப்படியே மீள்வாய் மகளே! ஆனால் இவர்கள்? தெய்வம் அன்றே கொல்லும்.
  12. உலகத்தில் சிறந்தது காதல் ஓர் உருவமில்லாதது காதல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விலங்கிலும் அனுபவமாவது காதல் -- அதைப் பார்ப்பதில் அனைவர்க்கும் ஆவல்.......! 😍
  13. அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.
  14. இரவில் அந்தப் பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் ஒன்றாகச் சேருவார்கள் என்று சொன்னார்கள். இடைக்கிடை போலீஸ் அங்கு போய் தேடுதல் நடத்துவார்களாம். அந்த இடத்தின் அமைப்பு, ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வயல் வெளி, அதன் பின்னால் பனங்கூடல் என்று இதற்கு வசதியாகவே இருக்கின்றது.
  15. இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்கள் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 67 2 அஹஸ்தியன் 65 3 கல்யாணி 65 4 நுணாவிலான் 65 5 புலவர் 65 6 வீரப் பையன்26 59 7 முதல்வன் 59 8 சுவி 59 9 ஏராளன் 59 10 கந்தப்பு 59 11 எப்போதும் தமிழன் 59 12 வாதவூரான் 59 13 கிருபன் 59 14 நீர்வேலியான் 59 15 ஈழப்பிரியன் 55 16 கோஷான் சே 55 17 கறுப்பி 51
  16. புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024 அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
  17. எனது 80களின் நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கிறீர்கள். எனது நண்பன் மோகன் (ஆர்ட்ஸ்) இப்பொழுது இல்லை. இந்திர விழாவுக்கு என்னை மோகன் அழைத்துப் போவான். அவன் மரணித்த போது நான் எழுதியதில் ஒரு பகுதி, ஐம்பது அறுபது அடிகள் அளவில் பெரியளவிலான படங்களை வர்ணங்கள் இல்லாமல் வர்ணக் காகிதங்களை மட்டும் பாவித்து உருவாக்குவதில் வல்வெட்டித்துறையில் வல்லுனர்கள் இருந்தார்கள். வல்வெட்டித்துறை அம்மன் கோவில் திருவிழா என்றால், நகரின் சந்தியில் இருந்து ஊரிக்காடு வரை ஒரு மைலுக்கு மேல் வீதியின் இரு பக்கங்களிலும் பெரியளவிலான படங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். 'வா எங்கள் நகரத்து இந்திர விழாவை வந்து பார்' என்று மோகன் என்னைப் பல தடவைகள் அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக அழைத்துப் போயிருக்கிறார். புராண, இலக்கியங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், கண்ணன், ராதை சிருங்காரக் காட்சிகள், கடவுள்கள் வரம் தரும் காட்சிகள் என்று ஏகப்பட்ட கட் அவுட்டுக்களை வைத்திருப்பார்கள். அதில் கண்டிப்பாக மோகனின் ஒரு படைப்பு இருக்கும். மோகனின் கட்டவுட்டுக்குப் பக்கத்தில் அவரது சிறுவயது ஓவிய ஆசிரியர் பாலா அவர்களது கட்டவுட்டும் இருக்கும். இதமான கடல் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கட்டவுட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனது குதூகலிக்கும். உயரமான கட்டவுட்டுக்களுக்கு முழு நிலவு ஒளி பாய்ச்ச வீதிகளின் இருபக்கங்களும் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப் லைற்றுக்கள் இரவைப் பகலாக்கி விட்டிருக்கும். பொதுவாக வல்வெட்டித்துறை திருவிழா என்றால் தங்க நகைகள் பளபளக்க தாரகைகளாக நங்கைகள் வலம் வருவார்கள். மோகன் என்னிடம் இந்த தங்கநகை விடயத்தை சொல்லி இருந்தார். தொழில் புரிவதற்கு ஆண்களுக்கு பணம் தேவைப்படுவதால் அநேகமானவர்களது தங்க நகைகள் நகரில் இருந்த மக்கள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கும் மாதத்தில் எப்படியோ பணத்தைப் புரட்டி நகைகளை வங்கியில் இருந்து எடுத்து தங்கள் அம்மன்களுக்கு போட்டு அழகு பார்ப்பார்கள். கவனிக்க, வல்வெட்டித்துறையில் பெண்களை அம்மன் என்று விழிக்கும் பழக்கம் உண்டு. அதுபோல் ஆண்களில் அம்மான்களும் உண்டு. திருவிழா முடிந்த கையோடு நகைகள் எல்லாம் மீண்டும் பதினொரு மாத நெடுந்தூக்கத்துக்காக மக்கள் வங்கிக்குள் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் போய்ச் சேர்ந்து விடும். படங்கள் இல்லாத பயணக் கட்டுரை. படங்கள் மனதில் வந்து போகின்றன
  18. நீங்கள் 53 முதல் 64 வரையான கேள்விகளுக்கு விளையாடவுள்ள அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்குறீர்கள். ஆனால் எந்த அணி வெற்றிபெறும் என்று குறிப்பிடவில்லை
  19. உண்மை தான் நிழலி. ஆனாலும் பெரும் தளமாக இருந்த தமிழ்நாட்டு ஆதரவை இழந்துவிட்டோம். இந்தளவுக்கு நிலமை மோசமாகி இருக்காது என்று எண்ணுகிறேன்.
  20. கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/302113
  21. தனக்கு தனக்கு என்றால், சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.
  22. கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 😁 ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது.
  23. தொடருங்கள் ரசோதரன்........தொடர் நன்றாகப் போகின்றது........மனைவியரின் ஒவ்வொரு சொல்லும் துண்டில் புழு போன்றது ......கவனம் தேவை.......! 😂
  24. இன்னும் 10 நாட்கள் உள்ளன! போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
  25. ஏலுமெண்டால் அமெரிக்கா வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்? அவன் ஹெலி கொடுக்கும்போதே அதனுள் TAG வச்சித்தான் கொடுத்தவன். அது விளங்காத இந்தக்கூட்டம் அவன் கொடுத்த இரவலை இவ்வளவு காலமும் பாவிச்சுக்கொண்டு, அவனுக்கே வாய்ச்சவால் விட்டுக்கொண்டு வந்தார்கள். இடம், பொருள், ஏவல் பார்த்திருந்து முடிச்சிட்டான்.
  26. நான் பொறியியலாளர் தான், மனைவியின் பிரிவின் பின், முதல் முதல் ஏதாவது ஒன்றில் மனதைக் கட்டுப்படுத்த தொடங்கியதே எழுத்து. அது தொடக்கத்தில் மிக மிக மந்தமாக, பல எழுத்துப் பிழைகளுடன் ஆரம்பித்து, மெல்ல மெல்ல இந்த நிலைக்கு 15 ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளது நன்றி உங்க கருத்துக்கும் ஊக்கத்துக்கும்
  27. வல்வெட்டித்துறையை படமின்றி கண் முன்னே கொண்டு வருகின்றீர்கால்...நன்றி ரசோ..தொடர்க உங்கள் தொடர் கதையை
  28. ஏலுமெண்டால் அமெரிக்கா வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்? அவைக்கு இந்தியா சீனாவை நினைச்சு பேய்ப்பயம். 😂
  29. ஈரான் இந்த விபத்து சம்பந்தமாக தங்களிடம் உதவி கோரியுள்ளதாக அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டுள்ளதாம். https://www.gmx.net/magazine/politik/us-regierung-iranische-fuehrung-absturz-hilfe-gebeten-39678672
  30. உலகில் பல்வேறு இனங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட குணாதியங்கள் கொண்டவை. ஈராக்/ லிபியாவை பொறுத்தவரை தடியுடன் ஆட்சி செய்ய வேண்டிய இனம். அதை சரியாகவே செய்தார்கள். ஜனநாய்கத்தை மேற்குலகு திணித்தின் மூலம் அந்த நாடுகளில் தினசரி இரத்தக்களரி. அதை விட அதே நாட்டவர்கள் நாகரீக மேற்குலகிற்கு அகதிகளாக படையெடுத்த பின்னரும் திருந்திய பாடில்லை....சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்.....கத்திக்குத்துகள் இன்னும் பல..... குற்றம் செய்தவன் மன்னிப்பு கேட்டாலும் நம்ம இனத்தில் உள்ளவர்கள் தம் கருத்து வெற்றிக்காக வாதாடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் தான் இன்று கஞ்சி குடித்துக்கொண்டிருக்கின்றோம்.
  31. ச‌ரியாக‌ இன்னும் 11 நாள் தான் இருக்கு அதுக்கிடையில் போட்டி ப‌திவை ப‌தியுங்கோ உற‌வுக‌ளே @suvy த‌லைவ‌ர் நீங்க‌ள் என‌து ப‌திவை பார்த்து உங்க‌ளுக்கு பிடிச்ச‌ அணிய‌ தெரிவு செய்யுங்கோ இந்தியா பின‌லில் வெல்லாது என்றால் 71 கேள்விக்கு கோப்பை தூக்கும் அணிய‌ தெரிவு செய்யுங்கோ இந்தியா கோப்பை வெல்லும் என்றால் 72 கேள்வியில் இந்தியாவின் பெய‌ரை போடுங்கோ..........................ஈசியா ப‌திய‌லாம்.......................................
  32. 🤣......... தென் பகுதியுடன் ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இடைக்கிடை வாறதுக்கும் இது தான் காரணம் என்று கண்டு பிடித்தும் விடுவா....😀
  33. அய்யா ..நான் இந்த நிகழ்வுக்கு போனேன்...இதில் ஒன்றும் வெட்டு ஒட்டு தெரியவில்லை... நல்லதொரு இளைஞன் ..இன உணர்வுடன் செயல் படுகிறார்...வாழ்த்துவோம் ..தூற்ற வேண்டாமே...இது அன்பான வேண்டுகோள்..
  34. நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான். ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன்.
  35. பக்கத்து மேசையில் இருந்து சாப்பிடும் போது பொச்சு பொச்சு என்று சத்தம் கேட்டால். சூப் குடிக்கும் போது சுர்ர்ர் என்று சத்தம் கேட்டால்.
  36. இரண்டும் இல்லை.🤭
  37. நான் குட்டை என்று சேட்டையாடா செய்தீங்கள் இருவரும்........அனுபவியுங்கடா, நான் வாறன்......! 😂
  38. வருகின்ற வெசாக் போயா தினத்தில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்வாரா...? மாட்டாரா...? 😂 🤣
  39. தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு கோரப்பற்களும் வெளித்தெரியும். பொதுவேட்பாளர் தேவையில்லை என்று எக்காளமிடும் சம் சும் களுக்கே எல்லாம் வெளிச்சம். நன்றி
  40. 1 நிலாமதி 70....... கிள்ளிப் பார்க்கிறேன் இது கனவா அல்லது நிஜமா என ? குருடன் .....யாருக்கோ அடிச்ச மாதிரி 😄😄
  41. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு 🤣
  42. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)
  43. நான் இந்தக் கதையில் கண்டது கில்லரின் மூலம் தலை வெட்டும் கொடூரமான முறை 1977 வரை பாவனையில் இருந்திருக்கிறது என்ற அதிர்ச்சியின் வெளிப்பாட்டைத் தான். ரெட் பன்ரி போன்ற கேஸ்களை சிறையில் வைத்துச் சாப்பாடு போடாமல் கொல்லத் தான் வேண்டும். ஆனால், அப்படிச் செய்யும் போது இன்னொரு ரெட் பன்ரியாக அரசும், சட்டத்துறையும் மாறக் கூடாதென நினைக்கிறேன். எனவே, குறைந்த வன்மம் கொண்ட, சித்திரவதை இல்லாத முறைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால், அரசுக்கு ஒரு moral high ground கிடைக்கும்.
  44. தெரியாது! 200 வருடங்களுக்கு முன்னர் 1 பில்லியன் மக்கள் இருந்த இந்தப் பூமியில் இப்போது 8 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள்! மனிதர்களாக வாழத் தகுதியற்ற மிருக குணம் உள்ளவர்களை மரணதண்டனை வழங்கிக் கொல்வதில் எனக்கு தடுமாற்றம் எதுவுமில்லை! பூமியில் மற்றவர்கள் நிம்மதியாக வாழ உதவும். கொஞ்சம் பாரமும் குறையும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.