Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்17Points38770Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19129Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46791Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3061Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/07/24 in all areas
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடையமுடியாமல் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கனடா வெல்லும் எனக் கணித்த @kalyani க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த ஏனைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை! பதின்மூன்றாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 கல்யாணி 18 14 வீரப் பையன்26 16 15 நிலாமதி 16 16 புலவர் 16 17 நுணாவிலான் 16 18 வாதவூரான் 16 19 கிருபன் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 146 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம் அம்பேத்கரிசம் போல் பிரபாகரனும் புலிகளும் அந்த சோரம்போகாத போராட்டம் மூலம் வாழ்ந்துகாட்டிவிட்டு போன தத்துவமும் இந்த உலகம் முழுதுக்குமானது.. நீங்கள் வெளிநாடுகளில் துரோகிப்பட்டம் கொடுக்கும் புலிகளை குத்தகைக்கு தாம் மட்டுமே எடுத்துவிட்டோம் என்பதுபோல் செயல்படும் புலிகளின் காசை ஆட்டையப்போட்டவர்கள் போல பேசுகிறீர்கள்.. அவர்களுக்கு பலம் சேர்ப்பதுபோல் இருக்கிறது புலிகளையும் அவர்கள் தத்துவத்தையும் யாரும் பேசக்கூடாது என்பது.. புலிகளையும் அவர்கள் கட்டமைத்து வாழ்ந்து காட்டிவிட்டுபோன அந்த தமிழ்தேசிய தத்துவமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நாம் இறந்த பின்னாலும் இன்னும் சில நூற்றாண்டுகளில் திராவிடம்போல் ஒரு பெரும் தத்துவமாக எழுச்சி பெறும்.. வரலாறு அதன் தடங்களில் காலம் சென்றாலும் உண்மைக்கும் அதன் வழி நின்று செய்யப்பட்ட தியாகங்களுக்கும் பெரும் பக்கங்களை அதன் வழிநெடுக ஒதுக்கி வைத்திருக்கிறது.. அவற்றை இன்றும் நாம் படித்து புளகாங்கிதம் அடைகிறோம்... அது போல் புலிகளின் போராட்டமும் தியாகமும் பேசப்படும்.. தமிழ் தேசியம் எழும்..5 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!4 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வணக்கம் சகோ இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்? உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது? பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம். அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது. உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு. தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி.4 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஆனால், சீமான் தம்பிகளும் (சில சமயங்களில் சீமானும்) ஆள்வது பற்றியா சொல்கிறார்கள்? பல தசாப்தங்கள் முன்பு ஒன்றாக இருந்த தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர் என்ற மொழி வாரி இனங்களில் இருந்து வந்த வம்சாவழியினர் "தமிழர்" அல்ல என்றும், அயல் மாநிலத்தவர் தொழில் தேடி வந்து குடியிருப்பதையும் கூட தன் பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள அல்லவா செய்கிறார்கள்? இது தமிழனை தமிழன் ஆள்தல் என்ற வகைக்குள் அல்ல வருகிறது. இது கடைந்தெடுத்த இனத்தூய்மை வாதம். அப்படி இனத்தூய்மை வாதம் பேசும் சீமானுக்கே மலையாள அடி இருக்கிறது என்கிறார்கள், மனைவி தெலுங்கர் வழி என்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறை இருக்க, இனத்தூய்மை வாதம் பேசி வாக்குக் கேட்கும் வரை, நா.த.க ஒரு முதன்மைக் கட்சியாக உருவாகாது என்பது தான் என் கருத்து. தற்போது ஈழவரிடையேயும் உருவாகிக் கொண்டிருக்கும் "கிறிஸ்தவன் தமிழனா" என்ற கேள்வியின் தோற்றுவாய் எங்கேயிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்? அதைக் கேட்கும் பலர் நாதக ஆதரவாளர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன். சிங்களம் - ஈழத்தமிழ் வேறு பிரச்சினை.அது மட்டுமன்றி தமிழ் நாட்டில் நா.த.க என்ற இனத்தூய்மை வாதக் கட்சி ஆண்டால் ஈழவருக்கு நன்மை கிடைக்கும் என்று உங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும் ஆதாரங்களற்றது.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 ஈழப்பிரியன் 22 இந்தா.... மலையாள மாந்திரீகம் படிக்கிறன்😎 சிங்கனை தொங்கலுக்கு இறக்கிறன்🙃3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது. நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை சனி (08 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 14) முதல் சுற்று குழு C : சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 19 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் நால்வர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பிரபா USA வாதவூரான் நந்தன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 15) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 19 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் நால்வர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பங்களாதேஷ் சுவி கிருபன் ரசோதரன் கோஷான் சே இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? 16) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA ஒரே ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் ஏனைய 22 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா சுவி புலவர் P.S.பிரபா நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் கந்தப்பு நந்தன் நீர்வேலியான் கோஷான் சே இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி கிருபன் அஹஸ்தியன் வாத்தியார் எப்போதும் தமிழன் கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ச்சா கனடா வென்று விட்ட்து .புகுந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்போம் என்று போட்ட நான். திசை மாறிப்போச்சே கன காலத்துக்கு பின் கிடைச்ச வெற்றியல்லவா அது தான் கால் நிலத்திலே நிற்குதில்லை .😁2 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வாழ்த்துக்கள் நாம்தமிழர்.. என்னைப்போன்று உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ்த்தேசியவாதிகளிற்கு இது உற்சாகம் தருகிறது..2 points
-
திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான்.
அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் என்னைப் போல விண்ணன் இல்லை! நானெண்டால் டக்கெண்டு “அடப்பேயா! என்ன விழல்க்கேள்வி கேட்கிறாய்! 10000 மைல் போற சாத்தான் மிஸைல்ஸை 500 மைலுக்குள்ள இருக்கிற உக்கிரேனுக்கு பாவிக்கிறதுக்கு ரஷ்யன் என்ன ஆட்டு மூளையே வச்சிருக்கிறான்! உக்கிரேனுக்கு அடிக்க சோவியத்கால டப்பாக் குண்டுகளுக்கு ரெக்கை கட்டி ஜிபிஎஸ் நவிகேசன் போட்டு அடிஅடியெண்டு அடிக்கிறான்! பத்தாதே?” எண்டு சொல்லியிருப்பன்👻2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜 நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.2 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
@Eppothum Thamizhan @விசுகு யாழ்களத்தில் ஏனைய உறவுகள், தமிழக வாக்காளர் போல் நீங்கள் மரமண்டைகள் இல்லை, ரொம்ப உர-மண்டைகள். ஆனாலும் பின் வருவதை ஏன் புரியமாட்டேன் என்கிறீர்கள். சீமான் தமிழரை தமிழன் ஆள வேண்டும் என சொல்வதை எதிர்க்க 2 காரணங்கள் முக்கியமானவை. 1. சீமானே ஒரு மலையாளி. அவர் மனைவி பாதி தெலுங்குகாரி - அவர் எப்படி இதை சொல்லலாம்? 2. சீமான் 600 வருடமாக தமிழ்நாட்டில் வாழ்வோரை தமிழர் இல்லை என ஆக்குகிறார். அதுவும் சாதி அடிப்படையில். தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும் என்றால் - முதலில் சீமான் 1. மொழி வழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அனைவரும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும். 2. இல்லை என்றால் மலையாளியாகிய தனக்கும் ஆளும் உரிமை இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.2 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் அவர்கள் நாம் தமிழர் என மேடைக்கு மேடை உரக்க கூறிக்கொண்டு,தலைவர் பிரபாகரனை தன் தலைவர்/ அண்ணன் என கூறிக்கொண்டும் புலிக்கொடியை ஏந்திக்கொண்டும் பயணித்து.... இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்த்தியிருக்கின்றார். அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை , சரியாக பதில் அளித்தவர்கள் - நிழலி, கிருபன், பிரபா ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 3 புள்ளிகள் 1 தொகுதி - 2 புள்ளிகள் 2 & 3 தொகுதிகள் - 1 புள்ளி 1)கோஷான் சே - 48 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 48 புள்ளிகள் 3)நிழலி - 47 புள்ளிகள் 4)கிருபன் - 47 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 43 புள்ளிகள் 6)பிரபா - 43 புள்ளிகள் 7)கந்தையா57 - 36 புள்ளிகள் 8)வாத்தியார் - 35 புள்ளிகள் 9)நுணாவிலான் - 35 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள் 11)சுவி - 27 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,40 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 28 கேள்விகளுக்கு (57 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
நாடுகடந்த அரசாங்கம் இதுவரையில் செய்ததென்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ருத்திரகுமாரைத் தவிர வேறு எவராவது இந்த அரசில் இருக்கிறார்களா என்றும் தெரியாது. இவர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் வாயிலாகத்தான் இப்படியொரு அமைப்பு இன்னமும் இருக்கிறதென்றே தெரிகிறது. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து இவர் கூறும் விடயங்களை நான் எதிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால், நானும் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பதைக் கொள்கையளவில் ஆதரிக்கிறேன். பலருக்கு தமிழ் வேட்பாளர் எனும் கருதுகோள் தேர்தல் அரசியல் அடிப்படையிலே மட்டும் அமைந்ததாகவே தெரிகிறது. ஏனென்றால், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் தமிழருக்கு அரசியலில் அல்லது தேர்தலில் வரப்போகும் ஒரு சிங்கள வேட்பாளரினூடான சலுகைகள் மட்டுமே தெரிகின்றன. ஆனால், தமிழ் வேட்பாளர் எனும் கொள்கை தேர்தல் அரசியலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளுடன், கருத்துக்களுடன், அபிலாஷைகளுடன் சம்பந்தப்பட்டது. அப்படி இல்லையென்றால், அதனை சம்பந்தப்படுத்துவது தமிழர்களின் அனைவரினதும் கடமையென்றே நான் நினைக்கிறேன். இத்தேர்தலை தமிழர்கள் தமது உண்மையான அபிலாஷைகளை, ஒற்றுமையினை, தமது அடையாளத்தை நிரூபிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாக கருதுவது அவசியம். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எந்தச் சிங்கள வேட்பாளர் வருவார், அல்லது எவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாதுபோய்விடும் என்று நாம் கவலைப்படுவது அநாவசியமானது. ஏனென்றால், நாம் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவது சிங்கள தேசத்தின் இன்னொரு சிங்கள பெளத்த இனவாதியைத் தலைவராக்குவதற்காக அல்ல. இந்தத் தெளிவு இருந்தால்ப் போதும்.2 points
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
விசுகு வணக்கம் எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும் ஏனெனில் அவர்கள் உரிமைக்காகவும் போராடவில்லை மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள் அப்படி இருக்கையில் வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம் ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது 🙏2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
23 P.S.பிரபா 14 It’s okay.. எனக்குப் பிடித்த number தானே2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 142 points
-
சாமி சிறீ பாஞ்
2 pointsஇன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏2 points
-
1944 நார்மண்டி படையெடுப்பின் போது நாஜிக்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை 'டி-டே' வீரர்களுடன் கொண்டாடினர். இங்கிலாந்து அரசர், அரசி மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோர் ஆண்டு நிறைவைக்குறிக்க புதன்கிழமை போர்ட்ஸ்மவுத்தில் நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) நடந்த விழாவில் கலந்துகொண்டனர். டி-டே (D Day) என்றால் என்ன? இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டி-டே என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துருப்புக்கள் 1944-ஆம் ஆண்டு 4 ஜூன் 6-ஆம் தேதி, வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் ஜெர்மன் படைகளைத் தாக்கின. டி-டே என்பது இதுவரையில் நடந்திராத மிகப்பெரிய கடல்வழி ராணுவ நடவடிக்கையாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கிழ் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்கான படையெடுப்பின் துவக்கத்தை அது குறிக்கிறது. இதன்போது பிரான்சின் நார்மண்டியில் உள்ள ஐந்து வெவ்வேறு கடற்கரைகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கின. ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீட்டப்பட்ட இதற்கான திட்டத்தில், டி-டேயாக ஜூன் 5-ஆம் தேதி முடிவுசெய்யப்பட்டிருந்தது. அமைதியான கடல், முழு நிலவு மற்றும் பொழுது விடியும்போது குறைந்த நீர் ஆகிய மூன்று சாதகமான நிலைமைகள் அந்தத் தேதியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் திடீர் புயல் காரணமாக 24 மணிநேரம் தாமதமாக டி- டே நடவடிக்கைகள் துவங்கின. "D" என்பது "Day" என்பதைக் குறிக்கிறது. டி-டே என்பது ஒரு நடவடிக்கையின் முதல் நாளைக் குறிக்கும் ராணுவச் சொல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒமாஹா கடற்கரை, நார்மண்டி 'டி-டே' அன்று என்ன நடந்தது? வான்வழித் துருப்புக்கள் அதிகாலையில் எதிரிகளின் எல்லையில் தரையிறங்கின. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் முக்கிய கடல்வழித் தாக்குதலுக்காக நார்மண்டி கடற்கரையில் கூடின. படையெடுப்பை எதிர்பார்த்திருந்தாலும் கூட நாஜி ஜெர்மனியின் ராணுவத் தலைவர்கள் இந்த ஆரம்ப தாக்குதல்களை 'ஒரு திசை திருப்பும் தந்திரம்’ என்றே கருதினர். தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் அரங்கேறிய ஏமாற்று திட்டம், தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதியில் முக்கியப் படையெடுப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்க வழிவகுத்தது. 'கோல்ட்’ என்ற குறியீட்டுப் பெயரில் அறியப்பட்ட இந்தக் கடற்கரையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் எதிர்ப்பின்றி காலூன்ற இது உதவியது. கனேடியப் படைகள் மற்றொரு கடற்கரையான 'ஜூனோ’-வில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. மற்றொரு ஆங்கிலேயப்படை 'ஸ்வோர்ட்’ கடற்கரையில் இறங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்மண்டி கடற்கரை அமெரிக்கப் படையால், மேற்குக் கடற்கரையான 'உட்டாவில்’, பெரிய உயிரிழப்புகள் இல்லாமல் தரையிறங்க முடிந்தது. ஆனால் அருகிலுள்ள ஒமாஹா கடற்கரையில் அமெரிக்கப் படை கடுமையான இழப்புகளைச் சந்தித்தது. ஜெர்மன் பாதுகாப்பு படை மீது கடற்படை நடத்திய சரமாரியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பலனளிக்கவில்லை. அமெரிக்கர்கள் ஜெர்மன் துருப்புகளின் ஒரு சிறப்புப் பிரிவை எதிர்த்துச் சண்டையிட வேண்டி வந்தது. நள்ளிரவுக்குப் பிறகு, மூன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வான்வழிப் பிரிவுகள், 23,000-க்கும் அதிகமான வீரர்கள், கடற்கரைப் பகுதிகளை கைபற்றப் புறப்பட்டனர். எண்ணற்ற கடற்படைக் கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள், 'பிக்காடில்லி சர்க்கஸ்' என்று பெயரிடப்பட்ட இடத்தில் கூடின. காலை 6:30 மணி முதல் கடற்படை குண்டுவீச்சின் மறைவின் கீழ் ஐந்து தாக்குதல் பிரிவுகள் கடற்கரைகளில் தரையிறங்கின. நாள் முழுவதும் துருப்புக்கள் கடற்கரைகளில் இறங்கிய வண்ணம் இருந்தன. நள்ளிரவுக்குள் நேச நாடுகளின் படைகள் அந்தக் கடற்கரைப் பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. பின்னர் கோல்ட், ஜூனோ, ஸ்வோர்ட் மற்றும் உட்டா ஆகிய கடற்கரைகளில் இருந்து உள்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கின. டி-டேயில் எத்தனை துருப்புக்கள் பங்கேற்றன, எத்தனை பேர் இறந்தனர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி-டே நாளில் மட்டும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையின் 4,400 துருப்புக்கள் இறந்தனர். சுமார் 9,000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர் 7,000 கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தம் 1,56,000 வீரர்கள் மற்றும் 10,000 வாகனங்கள், நார்மண்டியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடற்கரைகளைச் சென்றடைந்தன. ஜெர்மனியர்களிடம் இருந்ததைக் காட்டிலும் வலிமையான விமானப்படையும், கடற்படையும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்தன. இவற்றின் ஆதரவு இல்லாமல் இந்தத் தரையிறக்கம் சாத்தியமாகியிருக்காது. ஆனால் டி-டே நாளில் மட்டும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையின் 4,400 துருப்புக்கள் இறந்தனர். சுமார் 9,000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர். அன்றைய நாளில் மொத்த ஜெர்மன் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 4,000 முதல் 9,000 வீரர்கள் இறந்திருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேச நாட்டுப் படைகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான பிரெஞ்சு குடிமக்களும் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மொத்தம் 1,56,000 வீரர்கள் மற்றும் 10,000 வாகனங்கள், நார்மண்டியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடற்கரைகளைச் சென்றடைந்தன 'டி-டே'க்குப் பிறகு என்ன நடந்தது? டி-டேயின் முடிவில் நேச நாட்டுப் படைகள் பிரான்ஸில் காலூன்றினாலும் கூட அவர்கள் மீண்டும் கடலை நோக்கித் தள்ளப்படும் அபாயம் இருந்தது. ஜெர்மனியர்கள் தங்கள் படைகளை வலுப்படுத்துவதை விட வேகமாக அவர்கள் தங்கள் படைகளை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. நார்மண்டியின் குறுகிய பாதைகள் மற்றும் உறுதியாக பாதுகாக்கப்பட்ட நகரங்கள் வழியாக அவர்களது முன்னேற்றம் மெதுவாக இருந்தது. தங்கள் எதிரியை விட அதிக எண்ணிக்கையில் இருந்த நேச நாட்டுப்படைகள், வலுவான விமானப்படையின் ஆதரவுடன் எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்தது. ஆயினும் இந்தப் படைகள் பெரிய அளவிலான இழப்புகளையும் சந்தித்தன. 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் அவர்கள் பாரிஸை விடுவித்தனர். ஆயினும் பிரான்ஸை சென்றடைந்த 20 லட்சம் நேச நாட்டு துருப்புக்களில் சுமார் 10% பேர் இறந்தனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்மண்டியில் உள்ள அமெரிக்கன் கல்லறை பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,100 வயதான டி-டே வீரர்கள் பெர்னார்ட் மோர்கன் (இடது), மற்றும் ஜாக் மோர்டிமர், 2024ஆம் ஆண்டின் நினைவு விழாவில் கலந்துகொள்ள நார்மண்டிக்கு சென்றுள்ளனர். எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்? எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவருமே இப்போது தங்கள் 90 வயது முதல் 100 வயதுகளில் இருப்பார்கள். 100-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் டி-டே வீரர்கள் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. 23 பேர் நார்மண்டியில் நடக்கும் நினைவேந்தல்களில் பங்கேற்றனர். மேலும் 21 பேர் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள நேஷனல் மெமோரியல் ஆர்போரேட்டத்தில் நடந்த நினைவு நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று பிபிசியின் அரச மாளிகை செய்தியாளர் சீன் கோக்லேன் கூறுகிறார். இரண்டு டஜன் அமெரிக்க வீரர்கள் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்டனர் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டில் உள்ள அமெரிக்க கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க போர் நினைவுச்சின்னங்கள் ஆணையம் தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/ce440jgjd29o1 point
-
அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தால் மொட்டை அடித்து கொள்கிறேன் என மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்ட அக்கட்சியின் நிர்வாகி, அண்ணாமலை தோல்வியடைந்ததையடுத்து மொட்டையடித்து கொண்டு பஜாரில் வலம் வந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெயசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், அப்படி வெற்றி பெறவில்லையென்றால் என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார். வெற்றி பெறவில்லையென்றால் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என சவால் விட்டுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதையடுத்து மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்டிருந்த ஜெயசங்கர் நேற்று பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து கொண்டு பஜாரை வலம் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. https://www.dinakaran.com/loksabhaelections_annamalai_thoothukudi/ https://minnambalam.com/tamil-nadu/annamalai-defeat-bjp-worker-who-lost-in-the-key-and-got-shaved/1 point
-
அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்
மொட்டை அடித்துக் கொண்டு, பஜாரை சுற்றி வந்தாலும்…. பரபரப்பு ஏற்படுகின்றது. வினோத மக்கள் வாழும் நாடு இந்தியா. 😂1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்1 point
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஆ! நீங்கள் தமிழ் தேசியவாதியா? எப்ப எப்பவில் இருந்து? சொல்லவேயில்லை! இப்பதான் என் மரமண்டைக்கு புரியுது நீங்கள் எல்லாம் தமிழ் தேசியவாதி என்று மார் தட்டுவதால் தான் ஊர்ச் சனம் ஏன் தமிழ் தேசியம் என்றாலே வெறுப்பாக பார்க்குது என்று!1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அநேகமாக இந்த நாலு பேரும் மேலே போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தப் பிள்ளை ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுது........கனடா வென்றால், அங்கே எவரும் இரண்டு காலும் பூமியில் பட நிற்க மாட்டினம் போல..........🤣. ஃபோன் பக்கத்திலேயே இருக்குது, 'எப்படி அயர்லாந்திற்கு குடுத்தம்........' என்று இப்ப கூப்பிட்டுச் சொல்வார்கள்................1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா வெற்றி................................1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கல்யாணிக்கு இரண்டு புள்ளி 22 மூட்டை☹️...........................................1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணை இதுக்கு மேல அவர் உங்களோட இராணுவ ஆய்வுகளை பகிரமாட்டார்!1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அதே அப்படியே ரஸ்யாவும் இறங்கினா - யாழ்க்களம் பத்திகிட்டு எரியும் 🤣1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அன்பின் யாழ் இணையம்தனம், ஏன் நா***ரி என்ற சொல்லை நீக்கினீர்கள்? அது அப்படி ஒன்றும் மோசமான வார்த்தை இல்லையே? Penniless, வக்கத்தவன், என்பதன் உருது பதமான நாடாரி யில் இருந்து வரும் ஒரு திசைச்சொல். @நியானி1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அது கீ இல்லை! ஸீ! போட்டியில் வெல்லவேண்டுமென்றால் யதார்த்தம் புரியவேண்டும்! முகிலுக்குள் கால் பாவாமல் நடப்பவர்கள் கீழே தரையில் காலூன்ற விரும்பமாட்டார்கள்🤠1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இத்தால் சகலருமறிக அண்ணன் @goshan_che அவர்கள் அரசியலில் ஒரு __!, கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் __!!1 point
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம் webteam Published on: 18 Jan 2018, 9:41 am தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீர் கலகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு வீதிகளில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து சம்பந்தமான பதாகைகளை கன்னட மொழி சார்ந்த அமைப்பினர் கிழித்தெறிந்து ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ட்ரினிட்டி ரோட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழ்த்து பதாகைகள் வைத்திருந்தனர். அதற்கு எதிராக பலர் திடீர் கலகத்தில் ஈடுப்பட்டனர். சாலைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அடித்து கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைபோன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதமும் நடைபெற்றுள்ளது. தமிழ் பதாகைகளை பார்த்த சில கன்னட அமைப்பினர் அதனை அடித்து நொறுக்கி இருந்தனர். இதை போல சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்பிகளிடம் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை என அப்பகுதி வாசிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் கன்னட மொழி வெறியர்களின் இந்த வெறிச் செயல் சார்ந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. https://www.puthiyathalaimurai.com/india/there-has-been-a-sudden-rebellion-against-tamils-------in-karnataka- பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், சமீபத்தில் பரப்பப்பட்ட வதந்தியால் பேசுபொருளாகியுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து கடந்த சில காலமாக தமிழகத்தில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளைப் போலவே, மகாராஷ்டிராவில் 1970களில் தமிழர்களுக்கு எதிராகவு போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றன. அந்த வன்முறைகளைத் தொடர்ந்து தமிழகத்திற்குத் திரும்பி வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மகிழ்நன் " இப்போது நடந்துகொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சர்ச்சைகள் மிகவும் தவறானது," என்று பிபிசியிடம் கூறினார். 'மராட்டி மானோஸ்' பால் தாக்கரே, சிவசேனா கட்சியை உருவாக்கியபோது அவர் முன்வைத்த முதன்மை முழக்கம் 'மராட்டி மானோஸ்' (Marathi Manoos) தான். இதன் பொருள் 'மண்ணின் மைந்தர்கள்'. வேலைவாய்ப்புகளில், தென்னிந்தியர்களைவிட மகாராஷ்டிரா மாநிலத்தின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கிய பால் தாக்கரே இதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். இதையொட்டி சில வன்முறைகளும் நடந்தன. சிவசேனா என்ற அமைப்பின் அடிநாதமாக இந்த 'மராட்டி மானோஸ்' என்ற முழக்கம் இருந்தது. 1966ஆம் ஆண்டு அந்தக் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, இன்று வரை பல்வேறு கட்டங்களில் இந்த முழக்கம் மும்பையிலும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் ஒலிக்கிறது. மராட்டிய மக்களுக்காக அரசியல் களம் கண்ட பால் தாக்கரேவின் அரசியல் பயணம் அவரது தந்தையின் பயணத்தின் ஒரு நீட்சியாகவே இருந்தது. ‘தாராவி மும்பை தமிழர்களின் கோட்டை’ - நூற்றாண்டு பந்தத்தின் கதை என்ன?29 ஜூலை 2019 ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்10 பிப்ரவரி 2021 பாஜகவின் 'இந்துத்துவா' உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவத்தை ஓரங்கட்டி விட்டதா?30 ஜூன் 2022 சம்யுக்த மகாராஷ்டிரா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு வந்த காலம். 1950களில் மும்பை(அன்றைய பம்பாய்) தங்களுக்கு வேண்டும் என்று குஜராத்தும் மகாராஷ்டிராவும் போட்டியிட்டன. அப்போது இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்த 'சம்யுக்த மகாராஷ்டிரா' (ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா) இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் கேஷவ் தாக்கரேவும் ஒருவர். இவர் பிரபோதன்கர் தாக்கரே என்ற பெயரால் பிரபலமாக அடையாளம் காணப்பட்டார். இவரது மகன்தான் சிவசேனா அமைப்பின் நிறுவனரான பால் தாக்கரே. இது மட்டுமின்றி பிராமணர் அல்லாதோர் சங்கத்தின் நிர்வாகியாக ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டோருடன் பால் தாக்கரேவின் தந்தை பிரபோதன்கர் பணியாற்றியுள்ளார். இந்த அமைப்பு மூடநம்பிக்கை, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. வரதட்சணை வாங்கும் நபரின் வீட்டுக்கு முன்பாகச் சென்று கழுதையைக் கட்டி வைத்து போராடுவது எனப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் பால் தாக்கரேவின் தந்தை. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது மும்பையில் உள்ள பிராமணர்கள் தாக்கப்பட்டனர். பிரபோதன்கர் தங்கியிருந்த பகுதிக்கு போராட்டகாரார்கள் வந்தபோது அவர்களிடம், "நான் இருக்கும் இடத்தில் எப்படி பிராமணர்கள் இருக்க முடியும்? நான் அவர்களை ஏற்கெனவே விரட்டி அடித்துவிட்டேன்," என்று தெரிவித்தார். ஒரு கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய பால் தாக்கரே, அன்று எனது தந்தை பொய் சொல்லி பிராமணர்களைக் காப்பாற்றினார். என் தந்தை பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் போராடினார். தனிப்பட்ட பிராமணர்களுக்கு அவர் விரோதி அல்ல," என்று குறிப்பிட்டார். இதுபோன்ற அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்தான் பால் தாக்கரே. மர்மிக் இதழின் பிறப்பு பட மூலாதாரம்,SHIVSENA.ORG படக்குறிப்பு,1965ஆம் ஆண்டு மர்மிக் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரம் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டான (கேலிச் சித்திரம் வரையும் ஓவியக் கலைஞர்) பால் தாக்கரே, Free Press Journal என்ற ஆங்கில நாளிதழில் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் வேலையில் இருக்கிறார். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லட்சுமணன் உடன் இந்தப் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார் தாக்கரே. 1950களின் பிற்பகுதியில், தனது பத்திரிகை ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது வேலையை உதறி விடுகிறார் அவர். மும்பையை மகாராஷ்டிராவின் ஓர் அங்கமாக ஆக்காமல், யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற தனது நாளிதழிலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையைவிட்டு வெளியேறினார். பிறகு சொந்தமாக வார இதழ் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு, தனது சகோதரருடன் சேர்ந்து 'மர்மிக்' (marmik) என்ற வார இதழை 1960ஆம் ஆண்டில் தாக்கரே தொடங்கினார். மகாராஷ்டிராவின் பிரச்னைகளை கேலிச் சித்திரமாக வரைந்து அந்த இதழில் வெளியிட்டு வந்தார். தொடக்கத்தில் அந்த இதழுக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மர்மிக் இதழின் 'வெளிநபர்கள்' பரப்புரை பட மூலாதாரம்,SHIVSENA.ORG படக்குறிப்பு,தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை 'வெளிநபர்கள்' என்று விமர்சித்து மர்மிக் இதழில் வந்த கேலிச் சித்திரம் 1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மர்மிக் இதழின் கோணத்தை மாற்றியமைக்க உந்துதலாக இருந்தது. அந்த கணக்கெடுப்பில் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், மராட்டியர்கள் 41% பேரும், பிற மாநிலத்தவர்கள் 59% பேரும் இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 8% இருப்பது தெரிய வந்தது. அப்போது தனது வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மூலம் கிடைத்த பட்டியலை பால் தாக்கரே தனது மர்மிக் இதழில் வெளியிடுகிறார். அந்தப் பட்டியலில், மும்பை நகரத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் மராட்டியர்கள் எவ்வளவு பேர், பிற மாநிலத்தவர் எவ்வளவு பேர் என்ற விவரம் இருந்தது. மத்திய தர வர்க்கம்(Working Class) அதிகமுள்ள மும்பையின் பல அலுவலகங்கள், ஆலைகளில் 70% பணிகளில் தென்னிந்திய மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இருப்பதாக மர்மிக் கட்டுரை எழுதியது. மும்பை மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை 'வெளிநபர்கள்' (outsiders) எடுத்துக் கொள்வதாக பால் தாக்கரே குற்றம் சுமத்தி கேலிச் சித்திரங்களை வரைந்தார். தலைவலியான கம்யூனிஸ்ட் கட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES 1970களின் பிற்பகுதிகளில் இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலைமை மும்பையிலும் எதிரொலித்தது. ஆனால் அதேநேரத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. மும்பையைச் சுற்றி ஏராளமாக இருந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது. "தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருவது ஆலை முதலாளிகளுக்கு தலைவலியாக இருந்தது. இதை மடைமாற்ற பால் தாக்கரேவை ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். மராட்டியர்களுக்கு மும்பையில் வேலை கிடைக்கவில்லை என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்த பால் தாக்கரே இதை கையில் எடுத்துக் கொண்டு மராட்டி மானோஸ் என்ற முழக்கத்தை முன்வைத்தார்" என்று மும்பையில் வளர்ந்தவரும், பத்திரிகையாளருமான மகிழ்நன் தெரிவித்தார். வேலையில் சேரும் தென்னிந்தியர்களின் பட்டியலை பால் தாக்கரே தனது இதழில் தொடர்ந்து வெளியிட்டு, "உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மதராஸி தான் காரணம்" என்று மராட்டியர்களை நோக்கி எழுதுகிறார். "லாபத்திற்காக குறைந்த கூலிக்கு வருபவர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்," என்று கம்யூனிஸ்ட்கள் எதிர் பிரசாரம் செய்தனர். கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு சென்று தாக்கரேவும் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டங்களில், "மராட்டியர்கள் உணர்வுடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்று கூறி உங்களை சுரண்டுகின்றனர். நீ மராட்டி என்ற உணர்வே இல்லாமல் போக செய்கின்றனர். ஆலைகளில் முக்கிய பொறுப்புகளில் மராட்டியர்கள் இல்லாதவர்கள் பணியில் இருக்கிறார்கள். கீழ் மட்ட பணிகளில் மராட்டியர்களை பணியமர்த்துகின்றனர்" என்று தாக்கரே பரப்புரைகளை மேற்கொண்டதாக மகிழ்நன் கூறினார். ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரியத்தை குறைக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை. பட மூலாதாரம்,COMMUNISTPARTYOFINDIA.COM படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாயின் இறுதி ஊர்வலம் மதராஸிகளை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் சிவசேனா இயங்கி வந்தாலும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் விஷயத்தில் அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிரிகளாக இருந்தனர். 1967ஆம் ஆண்டு தனது மர்மிக் இதழில் கம்யூனிஸ்ட்களை ஒழிப்பது தான் தனது லட்சியம் என்று வெளிப்படையாக தாக்கரே அறிவித்தார். சிவசேனா ஆதரவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு, அவர்களின் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கினர். இந்த வன்முறையின் நீட்சியாக 1970ஆம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணா தேசாய் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவசேனாவின் ஆதரவாளர்கள். பால் தாக்கரே தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டார் என்று குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பால் தாக்கரே, “தேசாய் எனது போட்டியாளர், எதிரி அல்ல. அவரின் மரணத்தின் மூலம் எங்களுக்கு இடையே இருந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது,” என்று தெரிவித்தார். மராட்டியர்களை நோக்கி தீவிர பரப்புரை பட மூலாதாரம்,GETTY IMAGES வேலையில்லாமல் இருக்கும் மராட்டியர்களை ஒன்று திரட்ட பல கட்டுரைகளையும், கேலிச் சித்திரங்களையும் பால் தாக்கரே வரைந்தார். அதில் மிக முக்கியமான ஒன்று, ‘வாச்சா அனி தண்டா பஸா‘. ‘வாச்சா‘ என்றால் வாசி, ‘பஸா‘ என்றால் அமைதியாக அமரு என்று பொருள். "உனது வேலையை மதராஸி பறிக்கிறான். நீ வாசித்து விட்டு அமைதியாக இரு, உனக்கு தான் ரோஷம் இல்லையே என்ற பொருளில் இந்த தலைப்பின் கீழ் கேலிச் சித்திரங்களையும், மும்பையில் உய பதவிகளில் சேரும் பிற மாநிலத்தவர்களின் பட்டியலையும் பால் தாக்கரே தொடர்ச்சியாக வெளியிட்டார்" என்று மகிழ்நன் குறிப்பிட்டார். இதற்கு மும்பையில் வாழ்ந்த மராட்டி மக்கள் மத்தியில் ஆதரவு ஆலை எழுந்தது. அதனால் 'வாச்சா அனி உட்டா' என்ற பரப்புரையை தொடங்கினார். இதன் பொருள் 'வாசித்து, விழித்துக்கொள்' என்பதாகும். அது மட்டுமின்றி, வேலையில்லாமல் தவித்த சில மராட்டியர்களுக்கு ஆலைகளில் பியூன், உதவியாளர் உள்ளிட்ட பணிகளை தனது நட்பு வட்டாரம் மூலம் பெற்றுத் தருகிறார் பால் தாக்கரே. இதன்மூலம் மராட்டி மக்களின் கவனத்தையும், நம்பிக்கையையும் தாக்கரே பெறுகிறார். சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவு செய்யப்பட்டது எப்படி? - நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு19 பிப்ரவரி 2023 மகாராஷ்டிராவில் மோதி, அமித் ஷா சாதிக்க விரும்புவது என்ன?3 ஜூலை 2022 நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும்6 மார்ச் 2023 சிவசேனா உதயம் பட மூலாதாரம்,GETTY IMAGES தனது வார இதழில் வெளியான ஒரு தலைப்பு, மும்பையில் உள்ள மத்திய தர வர்க்க மராட்டியர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. 'கல்ச்சா மதராஸி தோடயாச் டிவ்சாத் துபாசி' (Kaalcha Madrashi, thodyach divsat tupashi) என்பது அந்த தலைப்பு. நேற்று வந்த மதராஸி சீக்கிரமாக பணக்காரன் ஆகிறான் என்பது இதன் பொருள். இது போன்ற தென்னிந்தியர்களுக்கு எதிரான கட்டுரைகளால் அவரது இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மர்மிக் இதழின் மூலம் கிடைத்த ஆதரவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்தார் பால் தாக்கரே. 1966ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியான அவரது மர்மிக் இதழில் ஒரு முக்கிய செய்தியை பால் தாக்கரே அறிவித்தார். அதில், "நாங்கள் விரைவில் சிவசேனா தொடங்கி, யண்டு குண்டுவை தாக்குவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். 'யண்டு குண்டு' என்பது தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் பேசும் தென்னிந்திய மக்களின் மொழியின் ஒலி, யண்டு குண்டு(yandu-gundus) என்பதை ஒத்து ஒலிக்கிறது என்று மராட்டிய மக்கள் குறிப்பிடுவர். மர்மிக் இதழில் அறிவித்தது போலவே, 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே. வன்முறைக்குள்ளான உடுப்பி உணவகம் சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு, 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மும்பையின் தாதர் சிவாஜி பூங்காவில் அந்த அமைப்பின் முதல் பேரணிக்கு தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். "சொந்த ஊரில் 'வெளிநபர்களால்' அவமானப்படும் சுயமரியாதைமிக்க ஒவ்வொரு மராட்டியனும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்" என்று தாக்கரே தனது பத்திரிகையின் மூலம் அறைகூவல் விடுத்திருந்தார். அந்தப் பேரணிக்கு எதிர்பாராத எண்ணிக்கையில் மும்பையின் நடுத்தர வர்க்கத்தினர் திரண்டு வந்திருந்தனர். "மும்பையின் தண்ணீர், மின்சாரம், நிலத்தை பயன்படுத்தும் ஆலைகளும், அலுவலகங்களும் மதராஸிகளுக்கு வேலையை கொடுக்கிறது. மராட்டிய மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுகிறார். நமது மண்ணில் நமக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை மதராஸிகள் தட்டி பறிக்கிறார்கள்," என்று அந்த கூட்டத்தில் வீரியமிக்க உரையை பால் தாக்கரே நிகழ்த்தினார். அந்த கூட்டம் முடிந்து திரும்பும் வழியில், மும்பையில் இருந்த உடுப்பி ஹோட்டலை சிவசேனாவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். அது முதல் அடிக்கடி தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் தாக்கப்படுவது நடந்தது. பல இடங்களில் தென்னிந்தியர்களின் உணவகங்கள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. "லுங்கி அணிந்து கருப்பு தோலுடன் இருக்கும் நபர்களை அடித்து விரட்டுங்கள்" என்று பல இடங்களில் சிவசேனாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 'ஐயர்', 'கணபதி','ஷெட்டி' என்ற பெயர் கொண்ட நபர்கள் தென்னிந்தியர்களாகக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். மும்பையின் பல இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், பாதுகாப்பு கருதி ஒரே பகுதிக்கு குடிபெயர்ந்து அருகருகே குழுக்களாக வாழத் தொடங்கினர். மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியும், பால் தாக்கரே வசித்த பாந்த்ரா பகுதியும் அருகருகே இருப்பதால் அடிக்கடி இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும். தென்னிந்திய மக்கள் மீது தாக்குதல் அதிகமாக நடக்கத் தொடங்கியதையடுத்து தமிழக மக்கள் தரப்பிலும் எதிர்த் தாக்குதலும் அரங்கேறியது. 1970களின் முற்பகுதியில், பிற்பகுதியில் இப்படி சிறியதும் பெரியதுமாக பல வன்முறைகள் நடந்தன. தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்ற வரதா பாய் என்ற வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், திரவியம் நாடார் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதலை நடத்தியதாக மகிழ்நன் தெரிவித்தார். "சிவசேனை அமைப்பின் ஆதரவாளர்களுடன் வரதராஜ முதலியாரின் ஆதரவாளர்களுக்கு அடிக்கடி கைகலப்பு ஏற்படும். இது தொடர்பாக மும்பையில் அப்போது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதுகளும் அரங்கேறின. ஓரிரு முறை இந்த கைகலப்பு இரண்டு தரப்பினரும் ஆயுதங்கள் கொண்டு மோதும் சண்டையாகவும் மாறியதுண்டு." இதில் பலர் கொல்லப்பட்டனர். பிழைப்பு தேடி மும்பைக்கு குடிபெயர்ந்த பல தமிழர்கள் இந்த வன்முறைக்குப் பயந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுமட்டுமின்றி வரதா பாய், திரவியம் நாடார் ஆகியோர், மும்பையில் தமிழ் மக்களுக்காக தமிழர் பேரவை ஒன்றைத் தொடங்கினர். இந்த அமைப்பு மூலமாக தமிழர்கள் நலன் சார்ந்து பள்ளி, கோயில் திருவிழா, மருத்துவ உதவி எனப் பல உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. புலம் பெயர் தமிழர்களின் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES மகாராஷ்டிரா மட்டுமல்லாது, பல இடங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தொழில் முடக்கப்படுவதும் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்னையில் கன்னட சலுவாலியா என்ற அமைப்பினரால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டு வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதேபோல மியான்மர்(அன்றைய பர்மா), இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பிழைப்புத் தேடித் தமிழர்கள் சென்ற போது ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாக அவர்கள் அங்கிருந்து ஒரு நாளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c2v199y3q15o1 point
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் சகோ இது நீண்ட பயணம். மற்ற கட்சிகளின் வாக்குகள் காவோலை வாக்குகள். நாம் தமிழர் வாக்குகள் குருத்தோலை வாக்குகள். இனி நாம் தமிழருக்கு மட்டுமே வளர்ச்சி. நன்றி.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)- 4ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி, கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன்,புலவர், நுணாவிலான், வாத்தியார், கந்தையா57 1)கோஷான் சே - 44 புள்ளிகள் 2)நிழலி - 44 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 44 புள்ளிகள் 4)கிருபன் - 42 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 40 புள்ளிகள் 6)பிரபா - 40 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள் 8)கந்தையா57- 34 புள்ளிகள் 9)நுணாவிலான் - 34 புள்ளிகள் 10)வாத்தியார் - 32 புள்ளிகள் 11)சுவி - 26 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 11, 13, 14, 15, 18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32, 33, 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 25 கேள்விகளுக்கு (50 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
தமிழ் பொது வேட்பாளர் என்பது இன்றய தேவை. அவரை பிடிக்காவிட்டாலும் கூறுகின்ற விடயம் சரிதானே. கஜேந்திரன் மாதிரி தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை தானே. கோமாளி மக்கள் முன்னணி தான். கண்டவுடன் ஒருவரை எதிர்க்காமல் சரியான விடயங்களை தெரிந்து அதன் வழி நகர்வதே இன்றய தேவை. புலிகள் முடிவெடுக்கின்ற மாதிரி யாரும் இப்ப செய்ய முடியாது. மலையும் மடுவும் ஒன்றல்ல. சாம் , சுமா, டாக்கி மாதிரி நக்கி பிழைக்க முடியாது.1 point
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இன்றைய இலங்கையில் அங்கே என்ன பிரச்சனை இருக்கின்றது? வயல் விளையவில்லையா? வெங்காயம் விளையவில்லையா? பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லையா? ரயில் ஓடவில்லையா? பஸ் ஓடவில்லையா? மழை பெய்யவில்லையா? வெய்யில் எறிக்கவில்லையா? மக்கள் பட்டினியால் சாகின்றார்களா? அது மட்டுமா? தியேட்டர்களில் சினிமா படங்கள் ஓடவில்லையா?1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா, கந்தையா57, வாத்தியார் 1)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 2)கோஷான் சே - 38 புள்ளிகள் 3)நிழலி - 38 புள்ளிகள் 4)கிருபன் - 36 புள்ளிகள் 5)பிரபா - 36 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 34 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 32 புள்ளிகள் 8)கந்தையா57- 28 புள்ளிகள் 9)நுணாவிலான் - 28 புள்ளிகள் 10)வாத்தியார் - 26 புள்ளிகள் 11)சுவி - 22 புள்ளிகள் 12)புலவர்- 20 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 13, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33,35க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 22 கேள்விகளுக்கு (44 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது.........1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும். நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது. கையோட கம்மாரிஸ். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் . உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது. முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள். தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣1 point
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்...........!1 point
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
அவர் உங்கள் உயிராக இருந்திருக்கிறார். அதனால்தான் ‘அ’ தொடங்கி ‘ஔ’ வரை உயிர் எழுத்துக்களில் கவிதை வடித்திருக்கிறீர்கள். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்ந்த இனிய நினைவுகள் உங்களின் கவலைகளின் சுமையைக் குறைக்கும் என நம்புகிறேன்.1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
- மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.