Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்15Points38756Posts -
வாத்தியார்
கருத்துக்கள உறவுகள்8Points11882Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3057Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/27/24 in Posts
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
6 pointsசெல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன். சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு. புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர். செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.6 points
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
இலங்கையில், முக்கியமாக தமிழர் தாயகத்தில், ஒரு காலத்தில் ஒம்பது என்றும் உஸ் என்றும் மிகவும் கொச்சையாக அழைக்கப்பட்டு, சமூகத்தில் இருந்து விலத்தப்பட்டு, முக்கியமாக மோசமான பாலியல் ரீதியிலான வன்முறைக்குள்ளாகும் சமூகமாக, தமக்குள் கூனிக் குறுகி இருந்த இந்த திருநங்கைகளும், திருநம்பிகளும் இன்று தம்மை இன்னார் தான் என்று இனம்காட்டி, மூன்றாம் பாலினத்தினராக தலை நிமிர்ந்து சமூகத்தின் முன் நிற்கின்றனர். மிகவும் பாரட்டப்பட வேண்டிய, சமத்துவத்தை நோக்கிய முயற்சி!6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் துடுப்பாட்டக் களத்தில் நிற்கமுடியாத அளவிற்கு தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சு அகோரமாக இருந்தது. ஒரே ஒருவர் பத்து ஓட்டங்களை எடுத்தார். மூன்றுபேர் ஓட்டம் எடுக்காமாலேயே ஆட்டமிழந்தனர். மிகுதிப்பேர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி உதிரியான 13 ஓட்டங்களுடன் 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 8.5 ஓவர்களில் குயின்ரன் டிகொக்கின் விக்கெட்டை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 4 கந்தப்பு 110 5 சுவி 108 6 கோஷான் சே 108 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 கிருபன் 99 12 நந்தன் 99 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 அஹஸ்தியன் 96 16 வாத்தியார் 95 17 நிலாமதி 93 18 P.S.பிரபா 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 786 points
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
முறுக்கு மீசையும் நீண்ட தாடியும் ஒரு குறியும் இருந்தால் கட்டாயம் அது ஒரு ஆண் இல்லை. அதே வேளை மீசை முளைத்த பெண்கள் எல்லோரும் ஆண்களும் அல்ல. அவர் ஆண்களை போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் அவருக்கு எதோ குறைகள் இருக்கின்றது என்று வாதாடுவது கொடுமை . மனிதன் தன்னை எப்படி உணர்கின்றானோ அப்படியே வாழ நினைப்பதில் தவறுகள் எதுவுமில்லையே. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது5 points
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
3 pointsஎங்கள் வீட்டிலும் ஒரு நாலுகால் ஜீவன் லூனா எனும் பெண் நாய் .....பதினோரு வருடங்களாக எங்க ளுடன் வாழ்கிறது . வீட்டிற்கு வருவோரை முதல் ஆளாகி வரவேற்கும். கீழ் தளத்தில் நின்றாலும் மகனின் கார் சத்தம் தெருமுனையில் வரும்போது மேலே ஓடிச்சென்று வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும். எந்த சாமத்தில் வந்தாலும் . ஒரு குண்டூசி சத்தம் கேடடாலும் அலெர்ட் ஆகி விடும். தெரியாதவர்களையும் கண்டு வாலாட்டும் தபாற்காரன் . ups காரன் என்பவர்களையும் கண்டு வரவேற்கும் ( கள்ளன் வந்தாலும் வரவேற்கும்) பிழை செய்தால்பம்மி கொண்டு நிற்கும். பேரப்பிள்ளைகள் வாலைப்பிடித்து இழுத்து என்ன சித்ரவதை செய்தலும் சகித்து கொள்ளும். பேத்தி சிறுவயதில் சிலசமயம் அதைக் கட்டிபிடித்துஉறங்கி விடுவாள் ...பாவம் தற்போதுகண் தெரியாமல் போய் விட்ட்து ஒருமாற்றுவழியும் இல்லையாம். சிலர் கருணைக் கொலைக்கு அனுப்ப சொன்னார்கள். மகன் அடிக்காத குறை அது தன்னுடனே இருக்கட்டும் என்பான் நடக்க முடியாவிலும் தூக்கி கொண்டு மேல் தளத்துக்கு வருவான். . குளிப்பாட்டி தனித் துவாய் வைத்து துடைத்து விடுவான். வித விதமாய் ஷாம்போ கால நகம் வெட்டிட கத்தரிகோல் மாதாந்த வருடாந்த check up எல்லாம் செய்வான். தட்டித்தடுமாறி நடக்கிறது ஆனால் உணவு வைக்கும் இடம் தண்ணீர்வைக்கும் இடம் மல ஜலத்துக்கு "சிக்னல்" என்பன மாறவில்லை. படியில் இறங்க ஸ்டெப்ஸ் என்று சொன்னால் நிதானமாக கால்வைக்கும். வாழும் வரை வாழட்டும். நன்றி உள்ள பாசக்கார ஜீவன்.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ICC மட்டுமா விதிகளை வைக்கின்றார்கள்? நாமளும் வைத்திருக்கின்றோம் அல்லவா!3 points
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
ரணில் சனாதிபதியாக இருக்கும் போதே, இவர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெற வேண்டும். ஏனென்றால்... அவருக்குத்தான் இந்தப் பிரச்சினைகளை அணுகும் விதம் நன்கு தெரியும். @விசுகு3 points
-
தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..?
முன்விளையாட்டுக்குப் போயிட்டினமாக்கும்😻3 points
-
10 வயது மாயா நீலகாந்தன்!!!
2 points10 வயது மாயா நீலகாந்தன் 10-Year-Old Guitarist Maya Neelakantan Performs "Last Resort" |2 points
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை ආදායම් ஆதாயம வருமானம் ஆதாயம் நயம் வணிகம் අක්කා அக்கா தமக்கை அக்கா தமக்கை உறவுமுறை අම්බලම அம்பலம தெருவோரத் தங்குமிடம் அம்பலம் பொதுவிடம் நாடோறும் ඇම්බැට්ටය எம்பெட்டய நாவிதன் அம்பட்டன் நாவிதன் வணிகம் ආණ්ඩුව ஆண்டுவ அரசாங்கம் ஆண்டான் தலைவர் நடப்பிக்கை ආප්ප ஆப்ப அப்பம் அப்பம் அப்பம் உணவு අරලිය அரலிய அரளி அரளி அரளி நிலைத்திணையியல் අවරිය அவரிய கருநீல நிலைத்திணை அவுரி கருநீல நிலைத்திணை நிலைத்திணையியல் චීත්තය (ச்)சீத்தய சீத்தை சீத்தை சீத்தை வணிகம் එදිරිය எதிரிய எதிர்ப்பு, பகைமை எதிரி போட்டியாளர், பகைவன் படை ඉඩම இடம தளம், நிலம் இடம் இடம், தளம் அமைப்பு ඊළ ஈழ ஈழை ஈழை ஈழை நாடோறும் ඉලක්කය இலக்கய குறி இலக்கு குறி படை ඉළන්දාරියා இழன்தாரியா இளைய மனிதன் இளந்தாரி இளைய மனிதன் நாடோறும் ඉළවුව இழவுவ இறப்பு, இறுதிச் சடங்கு இழவு இறப்பு நாடோறும் ඉරට්ට இரட்ட இரட்டை, இரட்டையெண் இரட்டை இரட்டை, இரட்டையெண் வணிகம் කඩල (க்)கடல கடலை கடலை கடலை உணவு කඩය (க்)கடய கடை கடை கடை வணிகம் කඩියාලම (க்)கடியாலம கடிவாளம் கடிவாளம் கடிவாளம் படை කංකාණියා (க்)கங்(க்)காணியா மேற்பார்வையாளர் கங்காணி கண்காணிப்பவர் நடப்பிக்கை කලඳ (க்)கல(ந்)த எடைக்கான சிறு அலகு கழஞ்சு 1.77 கிராம் எடை வணிகம் කලවම (க்)கலவம கலவை, கலப்பு கலவை கலவை நாடோறும் කාල (க்)கால காற்பங்கு கால் காற்பங்கு வணிகம் කළුදෑවා (க்)கழுதேவா கழுதை கழுதை கழுதை நாடோறும் කම්බිය (க்)கம்பிய கம்பி கம்பி கம்பி வணிகம் කාන්දම (க்)கான்தம காந்தம் காந்தம் காந்தம் வணிகம் කණ්ණාඩිය (க்)கண்ணாடிய கண்ணாடி, மூக்குக் கண்ணாடி கண்ணாடி கண்ணாடி, மூக்குக் கண்ணாடி நாடோறும் කප්පම (க்)கப்பம வரி கப்பம் வரி படை කප්පර (க்)கப்பர சிறு கப்பல் கப்பல் கப்பல் வணிகம் කැරපොත්තා (க்)கெர(ப்)பொத்தா கரப்பான் கரப்பான் கரப்பான் நாடோறும் කරවල (க்)கரவல உலர்ந்த மீன் கருவாடு உலர்ந்த மீன் உணவு කාසිය (க்)காசிய நாணயம் காசு சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் வணிகம் කට්ටුමරම් (க்)கட்டுமரம கட்டுமரம் கட்டுமரம் கட்டுமரம் வணிகம் කිට්ටු (க்)கிட்டு நெருக்கம், அருகே கிட்டு நெருக்கம், அருகே நாடோறும் කොඩිය (க்)கொடிய கொடி கொடி கொடி நடப்பிக்கை කොල්ලය (க்)கொல்லய கொள்ளை கொள்ளை கொள்ளை படை කොම්බුව (க்)கொம்புவ ෙஇன் பெயர் கொம்பு ளகரத்தின் பெயர் நாடோறும் කොණ්ඩය (க்)கொண்டய கொண்டை கொண்டை கொண்டை நாடோறும் කොත්තමල්ලි (க்)கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி நிலைத்திணையியல் කෝවිල (க்)கோவில இந்துக் கோயில் கோயில் கோயில் நாடோறும் කුඩය (க்)குடய குடை குடை குடை நாடோறும் කූඩය (க்)கூடய கூடை கூடை கூடை நாடோறும் කූඩුව (க்)கூடுவ கூடு, கூண்டு கூடு கூடு, சிறு பெட்டி நாடோறும் කුරුම්බා (க்)குரும்பா இளந்தேங்காய் குரும்பை இளந்தேங்காய் உணவு කුලිය (க்)குலிய வாடகை கூலி வாடகை நடப்பிக்கை මලය மலய மலைநாடு மலை வரை இடப்பெயர் මරක්කලය மரக்கலய படகு மரக்கலம் படகு மீன்பிடி මස්සිනා மஸ்சினா மச்சான் மச்சினன் மச்சான் உறவுமுறை මුදල முதல பணம் முதல் முதல் வணிகம் මුදලාලි முதலாலி வணிகர், கடையொன்றின் உரிமையாளர் முதலாளி வணிகர் வணிகம் මුදලි முதலி பெயரின் பகுதியொன்று முதலியார் குலப் பெயர் ஒன்று பெயர் මුරුංගා முருங்கா முருங்கை முருங்கை முருங்கை உணவு[1] නාඩගම நாடகம மேடை நாடகம் நாடகம் நாடகம், மேடை நாடகம் பண்பாடு නංගී நங்கீ தங்கை நங்கை இளம்பெண் உறவுமுறை ඕනෑ ஓனே வேண்டும் வேண்டும் வேண்டும் நாடோறும் ඔත්තේ ஒத்தே ஒற்றை எண் ஒற்றை ஒற்றை எண் வணிகம் පදක්කම (ப்)பதக்கம பதக்கம் பதக்கம் பதக்கம் நடப்பிக்கை පළිය (ப்)பழிய பழி பழி குற்ற உணர்வு, பழி படை පරිප්පු (ப்)பரிப்பு பருப்பு பருப்பு பருப்பு உணவு පත්තු කරනවා (ப்)பத்து (க்)கரனவா ஒளியூட்டு, தீ வை பற்று தீப்பிடி நாடோறும் පොරය (ப்)பொரய போர் போர் போர் படை පොරොන්දුව (ப்)பொரொன்துவ உடன்படிக்கை, உறுதிமொழி பொருந்து பொருந்து, உடன்படு நாடோறும் පොරොත්තුව (ப்)பொரொத்துவ தாழ்த்தல், காத்திருத்தல் பொறுத்து காத்திருத்தல் நாடோறும் සල්ලි சல்லி பணம் சல்லி நாணயம் வணிகம் සෙරෙප්පුව செரெப்புவ செருப்பு செருப்பு செருப்பு நாடோறும் සුරුට්ටුව சுருட்டுவ சுருட்டு சுருட்டு சுருட்டு நாடோறும் තක්කාලි (த்)தக்காலி தக்காளி தக்காளி தக்காளி உணவு තල්ලු කරනවා (த்)தல்லு (க்)கரனவா தள்ளு தள்ளு தள்ளு நாடோறும் තනි (த்)தனி தனி தனி தனி நாடோறும் තරම (த்)தரம அளவு, நிலை, எண்ணிக்கை தரம் தரம் வணிகம் තාත්තා (த்)தாத்தா தந்தை தாத்தா தாத்தா உறவுமுறை තට්ටු කරනවා (த்)தட்டு (க்)கரனவா தட்டு தட்டு தட்டு நாடோறும் උඩැක්කිය உடெக்கிய குறுகிய மேளமொன்று உடுக்கை குறுகிய மேளமொன்று நாடோறும் උදව්ව உதவ்வ உதவி உதவி உதவி நாடோறும் උලුක්කුව உலுக்குவ சுளுக்கு சுளுக்கு சுளுக்கு நாடோறும் උරුමය உருமய வழிவழி உரிமை, உரித்துடைமை உரிமை உரித்துடைமை, உரிமை நடப்பிக்கை වෙඩි තියනවා வெடி (த்)தியனவா சுடு வெடி சூடு, வெடி படை වෙරි வெரி குடித்த நிலை வெறி பித்து நாடோறும்ண2 points
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஐரோப்பா கண்டத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வித்தியாசங்கள் உள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் 27 நாடுகள் தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இவை இன்னும் விரிவாக்கமடையும். அந்தக்காலத்து சோவியத் ஒன்றியத்தின் உதைபந்தாட்ட அணியில் உக்கிரையின் வீரர்களும் இருந்தார்கள் . சோவியத் உடைந்த பின்னர் 1996 இலிருந்து உக்கிரையின் ஐரோப்பிய கிண்ணத்திற்கான விளையாட்டுக்களில் (தெரிவுப்போட்டிகள்) பங்குபற்றி வருகின்றது 2012 போலந்து மற்றும் உக்கிரையின் நாடுகளில் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான இறுதி விளையாட்டுக்கள் நடைபெற்றபோது முதல் சுற்றிலேயே வெளியேறியது2 points
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
2 pointsஇவ்வளவு நாள் இருந்தீர்களே இன்றைக்காகிலும் ஒரே ஒரு துண்டு பிஸ்கட் உங்கள் கையால் தந்து விட்டுப் போவீர்களா என்று கேட்டிருக்கும் .......! 😂2 points
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
2 pointsநாய்களை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவை உடனடியாகவே கண்டு பிடித்துவிடும்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
50 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள் பெற்றது . 5 முறை உலகக்கிண்ணத்தினை பெற்று இருக்கிறது . அவுஸ்திரேலியா. மக்ஸ்வெல் 50 ஓவர் போட்டியில்தான் 200 ஓட்டங்கள் பெற்று இருக்கிறார் 20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மட்டுமே வென்ற அணி அவுஸ்திரேலியா . கடைசியாக 2022 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் சூப்பர் 6 க்கு செல்லாமல் தோற்ற அணி அவுஸ்திரேலியா . இதுவரை நடை பெற்ற உலககிண்ணத்தினை அதிகபட்சம் இருமுறை வென்ற அணி இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் மட்டுமே . 50 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவுஸ்திரேலியா சாதனை படைத்தாலும் 20 20 கிண்ணப்போட்டிகளில் தோல்விகளை அதிகம் பெற்று இருக்கிறது . 2007 - அரை இறுதி போட்டி தெரிவு 2009 - சூப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படவில்லை 2010 - 2 மிடம் 2012 -அரை இறுதி 2014 - சூப்பர் 10 2016 - சூப்பர் 10 2021 - முதலிடம் 2022 - சூப்பர் 10 இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது .2 points- "மனித மனம் திருப்தி அடையாது"
1 point"மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரைத் தாழ்த்தாமல் வாழ முடியாது" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை" "பணக்காரன் மூட்டை முடிச்சு பதுக்குகிறான் பஞ்சம் பிடித்தவன் போல் அலைகிறான் பட்டினி கிடக்கிறான் சாதாரண மனிதன் பங்கிட்டு அதையும் கொடுத்துச் சாப்பிடுகிறான்" "உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம் உலோபியாக சேர்த்து வைப்பதை விட உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10105 திகதி: 13/10/2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன் திராய்க்கேணியில் மண்டை ஓடுகள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன மட்டக்களப்பு - பொத்துவில் வீதியில் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 57 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திராய்க்கேணி பெரியதம்பிரான் கோவிலின் ஆலய வளாகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வூர் வாசிகள் தூய்மை செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படிமப்புரவு: தமிழ்நெற் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 48 தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் இருக்கலாமென குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். ஒலுவில் மற்றும் பாலமுனை முஸ்லிம் ஊர்கள் முறையே திராய்க்கேணிக்கு வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளன. இரண்டாம் ஈழப் போரின் போது, திராய்க்கேணியில் வசிக்கும் தமிழர்களுக்கு முஸ்லிம் ஊர் மக்களிடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் வந்தன. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி, திராய்க்கேணிக்கு மேற்கே சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீகவாவி என்ற கிராமத்தில் இருந்து, ஒலிவில் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த ஒன்பது முஸ்லிம் பொதுமக்கள் சிங்கள குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்திகள் பரவியதாக கோட்டவாசிகள் தெரிவிக்கின்றனர். மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் திரைக்கேணிக்குள் நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் தமிழர்களை தாக்க ஆரம்பித்தனர். கோயிலில் தஞ்சம் புகுந்த ஊர் மக்கள் கத்திகள் மற்றும் பொல்லுகளால் கொல்லப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் சரோஜா என்ற 13 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து அருகில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் வீட்டை தீ வைத்து எரித்தனர். படிமப்புரவு: தமிழ்நெற் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் வரை நடந்த இந்த கொலைகளில் கோவில் வளாகத்தின் சுற்றாடலில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த இருபது பேரில் நால்வர் கல்முனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய மக்கள் சிறப்பு அதிரடிப்படையின் பாரவூர்திகளில் காரைதீவு அகதிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த அகதிகளில் பலர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். 46 வயதான சின்னத்தம்பி கார்த்திகேசு மற்றும் பிற குடியிருப்பாளர்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்வுகளை தமிழ்நெற் செய்தியாளரிடம் விளக்கமாக விரித்ததோடு ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்களையும் காண்பித்தனர். திராய்க்கேணி படுகொலைகள் தொடர்பில் உசாவல்களை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் ஊர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருகொண்டான், மகிழடித்தீவு, புல்லுமலை, வீரமுனை மற்றும் கிழக்கின் ஏனைய கோட்டங்களில் இருந்து தமிழர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் தொடர்பிலும் உசாவல் நடத்தப்பட வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் *****1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 113 4 கந்தப்பு 113 5 சுவி 111 6 குமாரசாமி 109 7 கோஷான் சே 108 8 நீர்வேலியான் 105 9 தமிழ் சிறி 102 10 கிருபன் 102 11 வீரப் பையன்26 100 12 எப்போதும் தமிழன் 100 13 நந்தன் 99 14 வாத்தியார் 98 15 வாதவூரான் 97 16 நிலாமதி 96 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இது இங்கிலாந்துக்கு வரமா சாபமா? செலவாக்கியா இங்கிலாந்துக்கு சாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த உலக்கோப்பை வரையும் அவர்கள் ஓரளவு நல்வ அணியாக இருந்தார்கள். இந்த முறை பல புதியவர்களை மாற்றிய பின் அவர்களின் விளையாட்டு படு மோசம். முதல் மட்சில் ஒரு கோல் அடித்தவுடன் பத்திரிகைகள் அடுத்த ரொனால்டோ .மெசி என்று அடுத்த மட் வரைக்கும் எழுதினார்கள். இப்போது காரித்துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை ஜேர்மனிக்கு சான்ஸ்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா? அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂 இனி இந்தியா பக்கம் சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியான்ட சுழல் பந்தில இங்லாந் காலி..................இந்தியா மூன்று சுழல் இங்லாந் இரண்டு சுழல் பந்து இந்த மைதானத்தில் சுழல் பந்துக்கு அடிப்பது சிரமம் வெற்றி இந்தியாவுக்கு தான்.................................... இந்த உலக கோப்பையோட இனி 20ஓவர் உலக கோப்பைக்கு கோலிய அணியில் சேர்க்க மாட்டினம் உலக கோப்பை தொடங்க முதலே அணியில் கோலி வேண்டாம் என்ர முடிவில் தான் இந்தியா தேர்வுக்குழு இருந்தது ஜபிஎல்ல அடிச்சு ஆட அதை வைச்சு அணியில் சேர்த்தார்கள் கோலியால் அணிக்கு ஒரு நன்மையும் இல்லை....................யேஸ்வால் இளம் அதிரடி ஆட்டக் காரர் கர்வியன் தீவில் முதல் விளையாட்டிலே செஞ்சரி அடிச்ச பெடியன்....................அடிச்சு ஆடக் கூடிய வீரர்களை கூப்பில உக்கார வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது...................................1 point- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
1 pointதெருப் பூனைகள்... தங்களை அண்டி வாழும் மனிதர்களுக்கு மாமிசத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். எங்கள் வீட்டு பல்கனியின் கீழுள்ள நிலத்தின் சிறு பகுதி மணல் பாங்கானது. அந்த இடத்தில் ஒரு பூனை வந்து.. அந்த மணலை கிளறி "உச்சா" போய், மூடி விட்டு போகும். அது எங்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. அது கள்ளப் பூனை என்றபடியால்.... அது வரும், போகும் நேரம் எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதனை எப்படி நிற்பாட்டுவது என்று அயலவரிடம் கேட்ட போது அதற்கு ஒரு மருந்து குளிசை கடையில் விற்பதாகவும், அதனை வாங்கி மண்ணில் தாட்டு விட்டால் அந்த மணத்திற்கு கிட்ட வராது என்றார். அதன் படியே மருந்தை வாங்கி மணலில் தாட்ட போது.. மூன்று மாதத்திற்கு பூனை வரவில்லை.🙂 பிறகு மெல்ல மெல்ல வரத் தொடங்கி விட்டது. மருந்தின் வீரியம் குறைந்தவுடன் பூனை வந்திருக்கலாம் என நினைக்கின்றேன். மருந்தும் கொஞ்சம் விலை அதிகம் என்ற படியால்... வேறு வழியால் இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்று எனது தமிழ் மூளையை கசக்கிப் பிழிந்தபோது ... அந்த மணலில் நெருக்கமான கண் உள்ள கம்பி வலையை தாட்டுப் பார்க்கலாம் என்ற யோசனை கிடைத்தது. அப்படியே செய்து பார்த்தால்... பூனை நிரந்தரமாக, "டாட்டா" காட்டி விட்டுப் போய் விட்டது. 😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
1 pointஎங்களுக்கு மீனைத் தின்றுவிட்டு முள்ளைப் போடுவதும் இறைச்சியைத் தின்றுவிட்டு எலும்பைப் போடுவதுமே பழக்கம். இதனாலேயே நாங்கள் போனதுமே நாய்க்கு தனியாக சாப்பாடு இருக்கிறது எதுவுமே கொடுக்க வேண்டாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார். மனைவியும் அலோர்ஜி என்று சத்திர சிகிச்சை வரை போனபடியால் நாய் பூனை மட்டுமல்ல இலைதுளிர்காலம் என்றாலும் வெளியே போகும்போது மூக்கை மூடி கனக்க அலுவல் பார்க்க வேண்டும். மகனுக்கு பிள்ளைகளுக்கு நாய் விருப்பம். நாய் வாங்கினால் இந்தப் பக்கம் வரமாட்டேன் என்று மனைவி பயமுறுத்தி வைத்துள்ளார்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விகடன் இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த அரையிறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே என்பது கிடையாது. ஆனால், வழக்கமான போட்டி நேரத்தை விட கூடுதலாக 250 நிமிடங்கள் இந்தப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 4 மணி நேரம் 10 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி கயானாவில் காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆக, மழை பெய்தாலும் ஒரு முழு நாளுக்கும் கூட காத்திருந்து போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். சரி, ஒரு வேளை மழை பெய்தால் ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்? கூடுதலாக 250 நிமிடங்கள் போட்டியை நடத்தக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா... அதனுடன் இன்னிங்ஸ் பிரேக்கிலிருந்து 5 நிமிடங்களை எடுத்துக் கொள்வார்கள். இப்போது மொத்தம் 255 நிமிடங்கள் கையில் இருக்கும். வழக்கமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு முதல் பந்து வீசப்பட்டிருக்க வேண்டும். மழை பெய்யும்பட்சத்தில் அந்த 255 நிமிடங்களையும் சேர்த்துக் கொண்டு இரவு 12:15 மணி வரை காத்திருப்பார்கள். அதற்குள் மழை நின்று பிட்ச் பந்துவீசத் தயாராகி முதல் பந்து 12:15 மணிக்குள் வீசப்படும் சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது. முழுமையாக 20 ஓவர் போட்டியே நடந்துவிடும். 12:15க்கும் மேல் மழை பெய்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு 4 நிமிடம் 25 நொடிகளுக்கும் ஒரு ஓவர் வீதம் குறைந்துகொண்டே வரும். அப்படிப் பார்த்தால் தோராயமாக 12:19 போட்டி தொடங்குகிறதெனில் 19 ஓவர் போட்டியாக நடக்கும். இப்படி ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் ஆட்டத்தில் குறைந்துக்கொண்டே வரும். இந்த அரையிறுதிப் போட்டியில் முடிவை எட்ட வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10 ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல் நேரமெல்லாம் எடுத்த பிறகும் 10 ஓவர் போட்டியை கூட நடத்தமுடியவில்லையெனில் சூப்பர் 8 சுற்றில் அதிகப் புள்ளிகள் எடுத்திருக்கும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும். அப்படி நடந்தால் அது இந்திய அணிக்குச் சாதகமாக முடியும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டி நடைக்காவிட்டால் சூப்பர் 8 இல் முதலிடம் பெற்ற அணி வெற்றி பெரும் என போட்டி விதியில் சொல்லப்பட்டிருக்கிறது The team that finished at the top of their Super Eight group advances. That means South Africa from the first semi-final, and India from the second.1 point- கொஞ்சம் ரசிக்க
1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
1 point- வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
ஏன் ராசா ஏன்?? என்னை இதற்குள் இழுத்து...,?🤣 ஆனால் இந்த மூன்றாவது பாலினம் என்ற சொல் யாருக்கும் உறுத்தல் இல்லாமல் இருக்கும்..1 point- மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
தனியார் பேரூந்துகளை விட அரச பேரூந்துகளும் பார ஊர்திகளும் வான்களும் ஏ 9 வீதியில் கண்மண் தெரியாமல் ஓடினம். பல தடவைகளில் பேரூந்துகளுக்கு சமீபமாக வந்து முந்திச் சொல்லினம்.. இது பார வாகனங்களை ஓடுபவர்களுக்கு சிரமத்தை அளிப்பதை தெளிவாக காண முடிகிறது. ஆக்களும் கண்ட இடத்திலும் வீதியை கடக்கினம். மேலும் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் அபாய விளக்கு எரிய விடப்படுவதில்லை. பல தடவைகளில் எல்லாத்தையும் நிற்பாட்டிட்டு தூங்கி விடுகிறார்கள். இது ஓட்டுனர்கள் ஆபத்தை புரிந்து கொண்டு செயற்பட கால அவகாசயத்தை அளிப்பதில்லை. தீர்வு: வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள்.. வேகக் கட்டுப்பாடு ஏ 9 வீதியில் மிக அவசியம். விதி மீறுபவர்கள் மீது காட்டமான உடனடி நடவடிக்கை அவசியம். வீதி ஓரத்தில் வாகனங்களை அத்தியாவசியம் தவிர நிறுத்த அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால்.. அதற்கான விதிகளை தீர்க்கமாக பின்பற்றப்பட வேண்டும். சரியான ஒளிர் தன்மை வாய்ந்த அறிகுறிகள் சரியான இடைவெளியில் வைக்கப்படுதல் வேண்டும். மக்கள் வீதிகளை கடக்கும் இடங்கள் குறியிடப்படுவதோடு.. குறைந்தது 150 மீட்டருக்கு முன்னரே ஓட்டுனர்கள் எச்சரிக்கை அறிவிப்பை தெளிவாகப் பெற குறியீடுகள் பொருந்தப்பட வேண்டும். வாகனங்கள் வீதி ஓரமாக.. நிறுத்தி வைக்கப்படும் போது... வீதியின் ஓரத்தில் இருந்து முற்றாக நீங்க நிறுத்தப்படுதல் அவசியம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். வாகனங்கள் பழுதின் போது வீதியில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால்.. எச்சரிக்கை குறியீடுகள் முன்.. பின் என்று குறைந்தது 150, 100 மீற்றர்கள் தூரம் வரை முன் நகர்த்தி வைக்கப்படுதல் அவசியம். மேலும் வாகனங்களுக்கு வெளியில் வீதியில்.. வீதி ஓரத்தில் நடமாடும் தேவை ஏற்பட்டால்.. ஒளிர் மேலங்கி அணியப்படுதல் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். இப்படியான விபத்துகளுக்கு வாகன ஓட்டுனர்கள் மட்டுமன்றி.. கால மாற்றம் வாகனங்களின் பாவனைப் பெருக்கத்திற்கு ஏற்ப வீதி விதிமுறைகளை மாற்றி அமைத்து அமுல்படுத்தாமை.. விபத்து தவிர்ப்பு முகாமைத்துவ அறிவின்மை போன்ற பல விடயங்கள் சொறீலங்கா வீதி பொலிஸ்துறைக்குள் குவிந்து கிடப்பதும்.. குற்றங்களை செய்துவிட்டு லஞ்சப் பணம் கொடுத்து தப்பிச் செல்லும் நடைமுறைகள் குவிந்து கிடப்பதும்.. இனப்பாகுபாட்டு விதி அமுலாக்கங்கள் என்று ஒரு சீரற்ற அமைப்பாக சொறீலங்கா பொலிஸ் இருப்பது முக்கிய காரணம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எந்த சாத்திரிப்சொன்னார் இங்லாந் பினலுக்கு போகும் என்று😁😛 இந்தியா இங்லாந்தை ஓட ஓட விரட்ட போகினம்................ பினல் தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எனக்கு என்னமோ தென் ஆபிரிக்கா கையில் தான் கோப்பை போகும் போல் தெரியுது🫤..........................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதே மைதானத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு 5 விக்கெட் இழப்புக்கு 6.3 ஓவரில் 30 ஓட்டங்களை பெற்றது. ஆனால் Rutherford இன் அபார ஆட்டத்தினால் 149 ஒட்டங்களை பெற்றது. இதே மைதானத்தில் உகண்டா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தானின் வெற்றி பந்து வீச்சாளர்களிலும் , ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களிலும்தான் தங்கியிருக்கிறது. Gurbaz மேற்கு இந்தியா , தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . இந்தியாவுக்கு எதிராக வெறும் 11 ஒட்டங்களை பெற்றார். ஆப்கானிஸ்தான் இந்த 3 நாடுகளிடம் மட்டுமே தோல்வியை தழுவியது1 point- கருத்து படங்கள்
1 point1 point- தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..?
தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் (Foreplay) என்கிற வார்த்தையை பல வருடங்களாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த ஓரிரண்டு வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஏன் அவசியம்; உறவின் உச்சக்கட்டத்துக்கும் இது அவசியமா என்பதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். ''ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டு. ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முக்கியமாகப் பிறப்புறுப்புகளில். இது வலியில்லாத, எரிச்சலில்லாத நல்ல தாம்பத்திய அனுபவத்தைக் கொடுக்கும். முக்கியமாக, ஃபோர்பிளேவுடன் ஆரம்பிக்கப்பட்ட உறவில் கணவன், மனைவி இருவருமே உச்சக்கட்டம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதனால், ஃபோர்பிளேவும் உங்கள் தாம்பத்தியத்தின் ஓர் அங்கமாக இருக்கட்டும்'' என்றவரிடம், ஃபோர்பிளே தொடர்பான வாசகர் ஒருவரின் கேள்வியை முன்வைத்தோம். வாசகரின் கேள்வி: எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. 3 மாதத்தில் மகள் இருக்கிறாள். என் மனைவி மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், உடலின் Anatomy பற்றியும் காமத்தை வெளிப்படையாக அணுகுவதையும் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர் இப்போது தாம்பத்திய உறவில் தனக்கு எது தேவை என்பதைக் கேட்டுப் பெறுகிறார். முன்விளையாட்டுகள் மூலம் தன்னை திருப்திப்படுத்தியும் கொள்கிறார். ஆனால், முதல் குழந்தை பிறந்ததிலிருந்து உறவுகொள்வதற்கு மிகவும் பயப்படுகிறார். ஏனென்று கேட்டால், `ரெண்டாவது குழந்தை உடனே நின்னுடுமோன்னு பயமா இருக்கு' என்கிறார். `சரி, நான் காண்டம் அணிந்துகொள்கிறேன்' என்றால், `அது எனக்கு அசெளகர்யமா இருக்கு' என்கிறார். மாதவிடாயைக் கணக்கிட்டு உறவுகொள்ளலாம் என்றாலும், அது அவருக்குப் புரியவில்லை. `சரி, நீயே ஏதாவதொரு கருத்தடை முறையை ஃபாலோ செய்யேன்' என்றாலும் சங்கடப்படுகிறார். வேறு வழி தெரியாமல், முன் விளையாட்டுகள் மூலம் என் மனைவியைத் திருப்திபடுத்தி வருகிறேன். `எனக்கு என்ன வழி' என்றால், `நீங்க மாஸ்டர்பேட் செஞ்சுக்கோங்க' என்கிறார். இதற்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை. மருத்துவரின் பதில்: செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது. `முன்விளையாட்டுகளிலேயே திருப்தியாகிவிடுகிறேன்' என்று உங்களுடைய மனைவி சொல்வது உண்மையாகவே இருக்கலாம். மார்புப்பகுதியைத் தூண்டி விடுவது, பிறப்புறுப்பைத் தூண்டி விடுவது போன்ற முன் விளையாட்டுகளிலேயே அவருக்கு உச்சக்கட்டம் நிகழ்ந்திருக்கலாம். Foreplay மற்றபடி, மருத்துவரீதியாக கர்ப்பத்தடை முறைகள் கண்டறியப்படாத காலத்தில் `கரு நின்று விடுமோ' என்று பயந்தால் அது நியாயம்தான். இன்றைக்கு இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் அணிகிற காண்டம் சரியில்லையென்றால், இயற்கையான உணர்வைத் தருகிற காண்டம் அணியலாம். அல்லது உங்கள் மனைவி, மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு முறையொன்றை ஃபாலோ செய்யலாம். குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன என்று உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனால், உங்கள் மனைவிக்குப் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற உணர்விருக்கிறதா, அதனால் உறவைத் தவிர்க்கிறாரா என்று கேளுங்கள். அதுதான் பிரச்னையென்றால், தேங்காய் எண்ணெயை ஆணுறுப்பின் நுனியில் தடவிக்கொள்ளுங்கள். எந்த வகையிலும் உங்கள் பிரச்னை தீரவில்லையென்றால், இருவரும் உளவியல் நிபுணரைச் சந்தியுங்கள். Dr. Asokan மேலேயுள்ள என்னுடைய பதிலைப் படிக்கும்போது, சிலருக்கு ஃபோர்பிளே மூலமே உச்சக்கட்டம் அடைய முடியுமா என்கிற கேள்வி எழலாம். `அடைய முடியும்' என்பதுதான் உண்மை. உச்சக்கட்டத்தைப் பொறுத்தவரை, வஜைனல் ஆர்கஸம், எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் என இரண்டு உண்டு . கணவன் - மனைவி பிறப்புறுப்புகள் இணைவது வஜைனல் ஆர்கஸம், பிறப்புறுப்பைத் தூண்டி விடுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம். சிக்மண்ட் ஃபிராய்டு, பிறப்புறுப்புகள் இணைகிற வஜைனல் ஆர்கஸம்தான் சிறந்தது என்று சொல்லியிருப்பார். ஆனால், அது சரியல்ல என்பதையும், வஜைனல் ஆர்கஸம் போலவே எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸமும் உச்சக்கட்ட இன்பத்தைத் தரும் என்பதையும் அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் உறுதியாக நிரூபித்துவிட்டன. ஆனால், ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். தாம்பத்திய உறவு என்பது ஃபலூடா ஐஸ்க்ரீம்போல. ஃபோர்பிளேவிலேயே திருப்தியடைந்துவிட்டேன் என்பது ஃபலூடாவின் மேலிருக்கும் ஒரு லேயரை சாப்பிட்டுவிட்டு திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்வதுபோல. ஃபலூடாவின் அத்தனை லேயர்களையும் ருசியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.'' தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..? | காமத்துக்கு மரியாதை - 178 | Marital relationship; Foreplay... which is more important..? - Vikatan1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
துடுப்பாட்டத்தில் முதல் ஐந்தில் இருவர் ஆப்கானிஸ்தான். பந்துவீச்சில் முதல் ஐந்தில் மூவர் ஆப்கானிஸ்தான். உண்மையில் சாதனைதான்!1 point- தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..?
1 point- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
1 pointரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’ - ஆப்கானிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது. டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை ஆண்டு கடின உழைப்பை வீணாக்கியது. இதுவரை ஐசிசி நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியைக் கூட தாண்டியதில்லை, ‘சோக்கர்ஸ்’ என்ற பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கடந்த 2014ம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பின் இதுவரை ஐசிசி சார்பில் எந்தஒரு கோப்பையையும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதில்லை. ஆனால், இந்த முறை லீக் போட்டி முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டரூபாவில் நேற்று(26ம்தேதி) நடந்த டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 56 ரன்களில் சுருண்டது. 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்ரிக்கா 67 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று(27ம்தேதி) இரவு நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இந்தியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி தென் ஆப்ரிக்காவுடன் கோப்பைக்காக மல்லுக்கட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். மறக்கமுடியாத பயணம் தென் ஆப்ரிக்க அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் 2024 டி20 உலகக் கோப்பை பயணம் மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல 50 ஆண்டுகளில் பல அணிகள் செய்த சாதனையை வெறும் 20 ஆண்டுகளில் செய்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிவரை வந்துள்ளது. 2010ம் ஆண்டு ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியும், அந்த அணி பல்வேறு ஜாம்பவான் அணிகளுக்கு அவ்வப்போது அளித்த அதிர்ச்சித் தோல்விகளும் தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை சொல்லிவந்தன. இந்த உலகக் கோப்பை பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். வரும் காலத்தில் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ஆப்கானிஸ்தான் விடைபெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் தீர்மானித்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்திலேயே தெரிய வந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் அனல் தெறிக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மைதானம் வருவதும், அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் குர்பாஸ், சந்தித்த முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த குல்புதீன் நயீப்(9), இப்ராஹிம் ஜாத்ரன்(2), முகமது நபி(0),கரோடே(2) என பவர்ப்ளே ஓவருக்குள் ரபாடா, நோர்க்கியா, யான்சென் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை சரிந்தது. பவர்ப்ளே முடிவில் 23ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்த பதற்றம், ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற குழப்பம் பேட்டர்கள் முகத்தில் தெரிந்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து 11.5 ஓவர்களில் 56 ரன்களில் ஆட்டத்தை முடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும். உலகக் கோப்பையில் மிகக்குறைவு ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்ஜாய்(10) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தார். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னிலும் 3 பேட்டர்கள் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும். தென் ஆப்ரிக்கத் தரப்பில் யான்சென் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். ரபாடா, நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளையும், ஷம்சி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். எளிதான வெற்றி 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் களமிறங்கினர். ஃபரூக்கி வீசிய 2வது ஓவரில் டீகாக் 5 ரன்னில் கிளீன் போல்டாகினார். ஆனால், ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மார்க்ரம் 23 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES எங்கே தவறு செய்தோம்? - ரஷித் கான் கூறியது என்ன? போட்டி முடிந்த பிறகு பேசிய ரஷித் கான், "ஒரு அணியாக இது எங்களுக்கு கடினமான இரவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதைவிட சிறப்பாக ஆடியிருக்க முடியும். நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. முஜீப் காயம் அடைந்ததால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பந்துவீச்சில் நிலைத்தன்மையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த போட்டியில் பெரிய ஆட்டத்தில் வெல்வது... ஆம் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டவர்கள்.” என்றார். நல்லவேளையாக இதைச் செய்யவில்லை - தென்னாப்பிரிக்க கேப்டன் கூறியது என்ன? “இது ஒரு பெரிய கூட்டு முயற்சி” என்றார் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம். “நாங்கள் டாஸில் தோற்றது எங்களது அதிர்ஷ்டம். இல்லையென்றால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம்.” என்று அவர் கூறினார். “இதற்கு முன்பு நாங்கள் அங்கு (இறுதிப் போட்டி) சென்றதில்லை, ஆனால் நிறைய நம்பிக்கை இருக்கிறது.” என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/cjl62z4242po1 point- அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
அவ்வாறு எனக்குத் தோன்றவில்லை, தோழர் ! "அப்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்கிறாரே ! "அதாவது என்னால் நினைக்க இயலாது" என்பதுதானே பொருள். எய்ப்பு தம்மை வந்து நலியும் போது தாம் நலிந்து போவதாகத்தான் குறிப்பிடுகிறார் எனக் கொள்கிறேன்.1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அடேங்கப்பா.....கள்ளச்சாராயம் குடிச்சு செத்தால் ஒரு லைவ் இன்சூரன்ஸ் செய்து செத்ததுக்கு சமன். 😂1 point- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
தமிழர்பகுதியின் கடல்வள கொள்ளையை ஓரளவாவது தடுக்க வேறு என்னதான் வழி அவர்கள் வசம் இருக்கிறது? காலத்தோடு ஓடுவதை தவிர அவர்கள் கைவசம் ஏதுமில்லை, எம்மீது போர் தொடுத்த இனமென்று அவர்கள் தயவு தேவையில்லை என்று வடதமிழீழ மீனவர்கள் புறக்கணித்தால், இலங்கை கடற்படையும் தமிழர்பகுதிதானே எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று அவர்கள் பாட்டில் இருந்தால் பல ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் நெடுந்தீவு, மணற்காடு, பருத்திதுறை பொலிகண்டி,காங்கேசன்துறை, தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு வலைகளை உலர்த்திவிட்டு சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி புறப்படுவார்கள்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointஇது கொஞ்சம் நல்லமாதிரி இருக்கே ........ செய்துபாருங்கள்.......! 👍1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சுவீஸ் நல்லாய் விளையாடுது ஜேர்மனி பின்னாலையும் முன்னாலையும் ஓடி மல்லுக்கட்டுது எண்டாலும் ஜேர்மனியை ஆராலையும் அசைச்சுக்கூட பாக்கேலாது.😎1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
இந்த நிவாரணம் வழங்கும் செய்தியை எப்படி எடுப்பது என்றே தெரியவில்லை. அழுது தவிக்கும் குடும்ப உறுப்பினர்ளை, சிறு பிள்ளைகள் உட்பட, பார்க்கும் போது, மனம் பரிதாப்படுகின்றது. ஆனால், பொங்கி வரும் உணர்வுகளை ஒதுக்கி விட்டு, நிதானமாக யோசித்தால், இதில் ஒரு பெரும் தவறு நடந்து கொண்டிருப்பதும் தெரிகின்றது. அடிக்கடி நிகழும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இறப்பவர்களுக்கே அரசு இந்த அளவு நிவாரணங்கள் வழங்குவதில்லை. ஒரு இலட்சம் கொடுத்தாலே அது பெரிய விசயம். குடித்து அழிந்து கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இப்படி கொடுக்க வேண்டும் என்பதும், இது என்ன முன்னுதாரணம் என்பதும் சரியான கேள்வியே. எவருமே அவர்கள் கள்ளச்சாராயம் (என்று நினைத்து விஷச்சாராயம்) குடிப்பதை ஒரு தவிர்க்க வேண்டிய செயலாக சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட. மருந்தென்று நினைத்து மாறிக் குடித்து விட்டார்கள், உடம்பு நோவுக்கு குடிப்பார்கள் என்பது போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு விதமான நியாயப்படுத்தல் போன்றே இருக்கின்றன. இங்கிருக்கும் இரண்டு உண்மைகளில் முதலாவது: இவை, கள்ளச்சாரயமோ அல்லது விஷச்சாராயமோ அல்லது பொறுப்பற்ற எந்த வகை குடியுமே, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது. இரண்டாவது உண்மை: இந்த கள்ளச்சாராய தொழிலுக்கு இருக்கும் அரசின் ஆதரவும், நடவடிக்கைகளும். தினமும் அங்கிருக்கும் மலையடிவாரத்தில் காய்ச்சிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். இந்த வியாபாரிகள் கொடுக்கும் மாமூலை வாங்கிக் கொண்டு அரச நிர்வாகமும், காவல்துறையும் எதையும் கண்டும் காணாமலும் இருந்திருக்கின்றனர். ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 60 ரூபா என்றும், அதற்கு இணையானது டாஸ்மாக்கில் 250 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றும் குடிப்பவர்கள் சொல்லியிருக்கின்றனர்....... ஆகவே அரசின் டாஸ்மாக் தொழிலும் ஒரு காரணம் ஆகின்றது. செந்தில் பாலாஜியை வெளியே வர முடியாதபடி உள்ளேயே பாஜக அரசு அடைத்து வைத்திருப்பதற்கு பிரதான காரணம் டாஸ்மாக் மூலம் இவர் புரட்டிக் கொடுக்கும் பெரும் தொகையான பணத்தை தடுப்பதற்காகவே என்று ஒரு செய்தியில் இருந்தது. அந்தப் பணம் இல்லாவிட்டால் திமுக தேர்தல் செலவிற்கு திக்குமுக்காடும் என்று பாஜக கணக்குப் போட்டிருந்தது. டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழ்நாடே இயங்காது போலிருக்குதே....... என்ன ஒரு இழிநிலை... அந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் 10 இலட்சம், 5 இலட்சம் என்று ஆளுக்கு ஆள் கொடுக்கின்றார்களா....... கடந்த வருடத்தை விட இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 1734 கோடி ரூபாய்கள் அதிகரித்திருக்கின்றது.... இந்த வருட மொத்த வருமானம் 45, 855 கோடி ரூபாய்கள்.........!!1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் அப்பவே சொன்னேன் வாக்கு எண்ணும் மிசினில் மோசடி எண்டு. யாரும் நம்பவில்லை🤣 தயவு செய்து ஏனைய போட்டியாளர்கள் பற்றி கதைக்க வேண்டாம் 🤣🤣🤣1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣... ஏதோ ஒரு வழியில் அடாத்தாக கட்டி விட்டு கவனிக்காமல் விட்டால், நியூயோர்க்கில் வீடுகளில் வாழாமல் தெருவில் வாழும் மக்கள் இந்த மைதானத்தில் குடியேறி விடுவார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பு என்று ஒரு கட்சியும், எழுப்பாதே என்று மற்ற கட்சியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே குடியேறி விடுவார்கள்............. இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை எடுத்த விராட் கோலி இந்த மைதானத்தை உடைக்கும் செலவில் 50%ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர்...........😜.1 point - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.