Jump to content

Leaderboard

  1. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      31024


  2. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      1887


  3. Kandiah57

    Kandiah57

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      3371


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      80828


Popular Content

Showing content with the highest reputation on 08/02/24 in all areas

  1. செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில் தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள். அவ்வளவு தான்
    2 points
  2. வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....
    2 points
  3. அநாவசியமான பண விரயம். இதனைப் பராமரிக்கவும் செலவு அதிகம். 266 மில்லியன் டொலருக்கு மிகக் குறைவான செலவில் மழை நீர்த் தேக்கம் ஒன்றை அமைத்திருக்கலாம். வெற்றிலைக்கேணி பகுதியிலுள்ள குடா நீர்த்தேக்கத்தைச் சுத்திகரித்து அணை கட்டி மழை நீரைச் சேமிக்க முடியாதா ?
    2 points
  4. 🤣..... பலகாரத்தை சுத்தி வந்த பேப்பர்ல இருக்கிற செய்தி மாதிரி அவரின் கதை இதுக்குள்ள வந்திட்டுது........
    2 points
  5. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
    1 point
  6. "அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. என்றாலும் ரவி நாளடைவில் ஒரு நம்பிக்கையின் ஒளியைப் பற்றிக் கொண்டான். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எப்ப ஒரு குடையின் கீழ் இணைகிறார்களோ அன்று தான் முழு பலத்துடன் தமது அவலங்களை நெருக்கடிகளை போக்கி, சம உரிமைகளை பெற்று அமைதி கதவு திறக்க முடியும் என்று நம்பினான். இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 4 பெப்ரவரி 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அது பெரும்பான்மை சமூகத்திடம் கைமாறியதில் இருந்து, தமிழ் பேசும் மக்களான இலங்கைத் தமிழர், தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள், மலையக தமிழர்கள் எதோ ஒரு வகையில் கெடுபிடிகளுக்கு ஆளாகத் தொடங்கினார்கள். உதாரணமாக சுதந்திரத்துக்கு சற்று முன்பு 1946 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 69.41% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 28.89% [இலங்கைத் தமிழர் 11.02% , இலங்கைச் சோனகர் 5.61%, மலையக தமிழர்கள் 11.73%, & மலையக சோனகர் 0.53%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்பட்டனர். இன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 74.90% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 24.57% [இலங்கைத் தமிழர் 11.15% , இலங்கைச் சோனகர் 9.30%, மலையக தமிழர்கள் 4.12%, & மலையக சோனகர் 0.00%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர் என இலங்கை அரச தரவு சுட்டிக்காட்டுகிறது. அதாவது தமிழ் பேசும் மக்கள் குறைந்தது கால்வாசிக்கு இலங்கையில் வாழ்ந்தாலும், அவர்கள் பலவழிகளில் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தால் கெடுபிடிகளுக்கு தொடர்ந்து ஆக்கப்பட்டதே உள்நாட்டு கலவரத்துக்கு தூண்டி அது பெரும் போராக வெடித்தது. ஆனால் வடக்கு, கிழக்கு என்றும் தமிழர், முசுலிம்கள் என்றும் பிரிந்து செயல்படத் தொடங்கியது தான் அவர்களை பலவீனமாக்கி, தமிழ் பேசும் மக்களின் அமைதியின் கதவு திறப்பதை தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக ரவி உணர்ந்தான். இந்த பலவீனம் அரச இயந்திரத்தாலும் ஊக்கிவிக்கப் படுகிறது என்பதை பலர் அறிவதில்லை, அந்த வலையில் சிக்கி, தாமே தம் ஒற்றுமையை குலைகிறார்கள் என்பது தான் ரவிக்கு ஒரு கோபத்தையும் ஏற்படுத்தியது. 2009 இல் பெரும் தமிழர்களின் அழிவுக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை அவன் நேரடியாகக் கண்டவன். ஒரு நாள், ரவி கடலில் வலையை வீசியபோது, அவனது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமிருந்து கிசுகிசுப்பு கேட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சொல்லி 9 ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 'அமைதியின் கதவு திறக்கட்டும், சர்வாதிகார ஆட்சி ஒழியட்டும்' என்ற பெரும் முழக்கத்துடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதைப் பற்றி அவர்கள் பேசினர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நல்லிணக்கம் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கெடுபிடி இல்லா பாதுகாப்பான உரிமையுடன் கூடிய வாழ்வு அமைக்க முயலுவேன் என்ற அவரின் பேச்சில் ரவிக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. ஒவ்வொரு ஆட்சியாளரும் தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் தான் இவை என்பது அவனின் அனுபவம். அவை பின்னாளில் தூக்கி எறியப்படுவதை வரலாற்றில் வாசித்தவன் அவன். என்றாலும் அவனுக்கு அது ஒரு ஒரு பலவீனமான நம்பிக்கையை கொண்டு வந்தது. ஆனால் அதுவும் செயலிழந்து போய், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது நாம் கண்டதே! இந்தக் மனக் கொந்தளிப்பின் நடுவே, ரவி ஒரு நல்ல சூரியன் பிரகாசிக்கும் காலை, தனது எளிய குடிசையின் தாழ்வாரத்தில் அமர்ந்து, ஒரு கோப்பை வாசனையான சிலோன் தேநீரைப் பருகும்போது, கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் குழு அவனைச் சுற்றி திரண்டது. "ரவி மாமா , எங்கள் அழகிய நிலத்தில் அமைதி நிலவுமா? இலங்கைக்கு அமைதிக்கான கதவு திறக்குமா?" என்று கேட்டனர். ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொழி. அதனை மறுக்கும் விதமாகவும் இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு வித்திட்ட சம்பவங்களில் ஆரம்பகால நிகழாகவும் இன மேலாதிக்கத்தை மேற் கொண்ட சம்பவங்களில் ஒன்றாகவும் நடந்த தனிச் சிங்கள சட்டம் ஜூன் ஐந்து 1956இல் நிறைவேற்றப்பட்டது ரவி தன் அம்மாவிடம் இருந்து கேள்விப்பட்டுள்ளான். “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.“ என்று லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததையும், ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையும், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் என்று சிவத்த கொடி பிடித்தவர்களின் கையும் சிவத்த இரத்தக் கரை பிடித்ததை முணுமுணுத்துக்கொண்டு ரவி குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்கள் நம்பிக்கையால் நிறைந்து இருக்கவில்லை என்றாலும் அமைதிக்கான பாதை எளிதானது அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். இன்று மே 18, 2024, முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது நினைவு கூறல். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உலகளாவிய தலைவர் மற்றும் மிக மூத்த வெளிநாட்டு பிரமுகர் Agnes Callamard, கலந்துகொள்கிறார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவை ஒரு சம்பிரதாயம் மட்டுமே, என்றாலும் இது ஒரு தொடக்கம், எனவே அது என்றோ ஒரு நாள் சாத்தியம் என்று நம்பினான். கனிவான புன்னகையுடன் அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான். நீண்ட காலத்திற்கு முன்பு, என்று ரவி தொடங்கி "ஒரு காலத்தில் காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தன, பறவைகள் ஒன்றாகப் பாடுகின்றன, விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் ஒரு நாள், ஒரு பெரிய புயல் காட்டில் வந்து, விலங்குகள் மற்றும் பறவைகளை சிதறடித்தன. அவர்கள் ஒருவரையொருவர் பயந்தார்கள், அமைதி அங்கு இழந்தது போல் தோன்றியது." குழந்தைகள் ரவிவின் கதையால் கவரப்பட்டு கவனமாகக் கேட்டனர். அவன் தொடர்ந்தான். காடுகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி புரிதலின் கதவைத் திறப்பதுதான் என்று அவன் குழந்தைகளிடம் கூறினான். குழந்தைகளுக்கு அது சரியாக புரியவில்லை. குழப்பத்துடன் காணப்பட்டனர். எனவே ரவி "புரிந்துகொள்ளும் கதவு மரத்தாலோ கல்லாலோ ஆனது அல்ல. நாம் ஒருவரையொருவர் உண்மையாகக் கேட்கும் போது, ஒருவருக் கொருவர் வலியையும் நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது நம் இதயத்தின் கதவு திறக்கிறது." என்று விளக்கினான். "காடுகளைப் போலவே, நமது அழகிய இலங்கையும் புரிதலின் கதவைத் திறந்தால் அமைதியைக் காணலாம், நாம் ஒருவருக்கொருவர் கேட்க வேண்டும், நம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றாக வேலை செய்ய வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப, அதற்கு நேரம் ஆகலாம், ஆனால் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றும் பொறுமையும் ஞானமும் இருந்தால், நமது மண்ணுக்கு அமைதியின் கதவு திறக்கும்." என்று குழந்தைகளை அணைத்தபடி சொல்லி முடித்தான். ரவி பல தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை பாதித்த உள்நாட்டுப் போரின் வலியையும் துயரத்தையும் அனுபவித்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர் தங்கள் வீட்டை இழந்து அகதிகள் முகாமில் புதிதாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ரவி அவர்களின் கஷ்டங்கள் மற்றும் அமைதிக்கான ஏக்கம் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். எனவே தான் தமிழ் பேசும் எல்லோரும் ஒற்றுமையாகி, எல்லோர் இதயத்திலும் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அது தான் தமிழரின் ஈழ நாட்டில் அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அவன் நம்பினான். இடைப்பட்ட ஒரு காலத்தில் எதிரியாகக் கருதப்பட்ட வடக்கு வாழ் மீனவர்கள் தனது கிராமத்தின் சந்தைகளில் வியாபாரம் செய்யத் தொடங்குவதை அவன் கவனித்தான். அவர்கள் தங்கள் போராட்டங்கள், இழப்புகள் மற்றும் நம்பிக்கையின் கதைகளைப் அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலம், வன்முறை மற்றும் வெறுப்பு இல்லாத எதிர்காலம் பற்றிய தங்கள் கனவுகளைப் பற்றி பேசினர். கிழக்கில் உள்ளவர்களைப் போலவே வடக்கிலிருந்து வந்தவர்களும் அமைதி மற்றும் செழிப்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்து ரவி, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்டான். வருடங்கள் செல்லச் செல்ல, அமைதிக்கான வாக்குறுதி வேரூன்றத் தொடங்குவது போல தெரிந்தது. கடந்த கால காயங்களை குணப்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக அறிவித்தது. ரவியின் கிராமமும் மற்றவர்களைப் போலவே ஒரு மாற்றத்தைக் காணும் என்று அவன் கனவு கண்டான். சாலைகள் சீரமைக்கப்பட்டன, பள்ளிகள் புனரமைக்கப்பட்டன, இயல்பு நிலை திரும்புவது போல இருந்தது. ஆனால் அதற்கிடையில் அரசாங்கமும் அன்று மாறியது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் தீவிரமான தமிழர் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் தொடங்கியது. உதாரணமாக நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உள்ளிட்ட புதிய முறைகளும் பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க தொடங்கின. வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்து மீண்டும் , “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று ரவிக்கு புரிந்தது. தமிழ் பேசும் மக்கள் பிரிந்து இருந்து, அரசை நம்புவதில் பயன் இல்லை. அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழர் தாயகத்துக்கு எதிரான வேலை திட்டங்களை இலகுவாக செய்ய அந்த பிளவுகளை பயன் படுத்தும் என்பதை ரவி உணர்ந்தான் , எனவே மக்களாகிய நாம், மீண்டும், ஆனால் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை ஒற்றுமையாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தான். கடந்த கால பிளவுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் அன்பின் அடையாளமாக ரவி வடக்கிலிருந்து, தமிழ் பேசும் ஒரு சோனக பெண்ணை மணந்தான். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ந்து அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை தழுவி, சமாதான மரபு வரும் தலைமுறைக்கும் நிலைத்திருக்க வழிவகுக்க வேண்டும், அங்கு 'அமைதியின் கதவு திறக்கட்டும். என்ற அவனின் பிரார்த்தனை வெற்றி பெறுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவனின் தமிழ் இஸ்லாம் மனைவியும் அவனின் பிரார்த்தனையில், அமைதிக்காக தன் இதயக் கதவை திறந்து, பங்குபற்றத் தவறவில்லை! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
    1 point
  7. தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...
    1 point
  8. அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு . " தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போறானா?" " ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் " " நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?" "தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது " போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் . "உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "? . . . . . . " ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "
    1 point
  9. தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம் அதாவது தேர்தலில் ரணிலுக்கும் வாக்கு போடோணும், சுமந்திரனுக்கும் வாக்கு போடோணும் எண்டு சுருக்கமா சொல்ல வர்றீங்க? சிறுவயசில் என்னோட வெறிகுட்டி மாமா ஒருத்தர்கூட கொழும்புக்கு அம்மா அப்பா அனுப்பி வைத்தார்கள் கையில நூறூரூபா காசும் தந்து, வவுனியா கடந்ததும் அந்தாள் என்ர காசை வாங்கி என்னமோ செலவு பண்ணிப்போட்டு கொழும்பு வரேக்க தருவன் எண்டு சொன்னார் சிறுவனா இருந்தபடியா அந்த காசு...காசு எண்டு வடிவேலு ஸ்டைல்ல திரும்ப திரும்ப கேட்க இதைவிட கனக்க தருவன் கொழும்பு வந்ததும் ஜோசிப்பாய் மாமா எவ்வளவு நல்லவர் எண்டு ஆசைகாட்டி கொழும்பு வந்ததும் சொந்தகாரர்கிட்ட கொண்டுபோய் விட்டிட்டு அப்படியே ஓடிட்டான். அந்தநிலைதான் இதுவும். தமிழர் பகுதிக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தீ குளிப்பேன் என்று ஒரு தேரர் சொன்னதும் சிங்கள மக்களை திரட்டி மிக பெரும் போராட்டமே நடத்துவோம் என்று ஜேவிபி சொன்னதும்,காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு கொடுத்ததுக்கு சமம் என்று அப்பப்போ மஹிந்த ஆட்களுட்பட பல சிங்கள கட்சிகளும் தலைவர்களும் தேரர்களும் அறிக்கைவிடுவது ஊரறிஞ்ச விஷயம். ஒரு சில சிங்களவர்கள் என்னுடன் பேசும்போது போர் காலத்தில் நீங்கள் தனி தீர்வு கேட்டது நியாயம், இப்போதான் எந்த பிரச்சனையும் இல்லையே வடக்கிலிருந்து தெற்குவரை அனைத்து மக்களும் எங்கும்போய் எங்கும் வரலாம் அப்புறம் எதுக்கு தனியாக உங்கள் பகுதிக்கு மட்டும் தீர்வு என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கிறது அவர்கள் தற்போதைய மனநிலை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதுபோல் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த சிங்களத்துடன் இணைந்து மாஜஜால வார்த்தைகள் பேசி தமிழர் பிரச்சனைகளை இழுத்தடிப்பது காலப்போகில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எவனும் கேட்க வைத்திடும். காணி காவல்துறை அதிகாரம் கிடைத்தால் மகிழ்ச்சி , அதேநேரம் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு கொடுத்த ரணில் பதவியிலிருப்பாரா சிங்கள தேசம் பதவியில் விட்டு வைக்குமா என்பதையும் பார்க்க சுமந்திரனும் ரணிலும் சேர்ந்து அரசியல் தீர்வு தருவார்களென்று நம்பும் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளோம்.
    1 point
  10. நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌
    1 point
  11. நானும் நடுக்கடலில் தத்தளிக்கிற ஆள்தான்...சும்மா இந்த சுமாவை நம்புகிற ஆளில்லை
    1 point
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 6 திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது என்ற தகவலை வழங்கியுள்ளது தமிழ் மொழி அட்லாஸ் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'தமிழ் மொழி அட்லஸ்' (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் இந்தி பேசுவதாகத் தெரிவிக்கிறது மொழி அட்லஸ் தரவுகள். தமிழகத்தில் அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது இந்தோ - ஐரோப்பிய மொழியாக இந்தி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதர மொழி பேசும் மக்கள் தொகை எவ்வளவு? மொழி அட்லஸின் தரவுகள் கூறுவது என்ன? 'மொழி அட்லஸ்' என்றால் என்ன? இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், தமிழகத்தில் பேசப்படும் மொழிகள் பற்றிய விவரங்களை 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். ஆங்கிலத்தில் லாங்குவேஜ் அட்லாஸ் (Language Atlas) என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையில் தமிழகத்தில் பேசப்படும் மொழிகள், அதன் மொழிக் குடும்பங்கள், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் இடம் பெற்றுள்ளன. மாநில வாரியாக மொழி அட்லாஸ் அறிக்கையை வெளியிட்ட இரண்டாவது மாநிலம் தமிழகம். இந்த மொழி அட்லாஸ் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் இதே மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அம்மாநிலத்திற்கான மொழி அட்லஸை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழகத்தில் திராவிட மொழிகளின் தாக்கம் நீடித்து வருவதை சுட்டிக்காட்டும் இத்தரவுகள் மற்ற மொழிகளுக்கான அங்கீகாரத்தையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது மொழி அட்லஸ். திராவிட மொழிகளில் தமிழும், இந்தோ – ஐரோப்பிய மொழிகளில் உருது மொழியும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது என்கிறது இந்த அறிக்கை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாக கொண்ட மொழி அட்லஸ் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. திராவிட மொழிகளே பிரதானம் தமிழகத்தில் 97.03% மக்கள் திராவிட மொழிகளையே பேசுகின்றனர் என்று குறிப்பிடுகிறது மொழி அட்லஸ். இந்தியாவில் பேசப்படும் 17 திராவிட மொழிகளில் 14 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மற்றும் குருக்/ஓரான் போன்ற 6 முக்கிய திராவிட மொழிகள் தமிழகத்தில் பேசப்பட்டு வருகின்றன. இவையின்றி குடகு, கோண்டி, கோண்டு, கிஷான், கோண்டா, குய், மால்டோ, பர்ஜி ஆகிய திராவிட மொழிகளும் தமிழகத்தில் பேசப்பட்டு வருகின்றன. 32 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழகத்தில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 6.4 கோடி (6,37,53,997). தமிழக மக்கள்தொகையில் இது 91.07% ஆகும். தமிழைத் தொடர்ந்து சுமார் 42 லட்சம் பேர் (42,34,302) தெலுங்கு மொழியை பேசுகின்றனர். தமிழக மக்கள்தொகையில் இது 6.05% ஆகும். கன்னடம் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 12.8 லட்சம் (12,86,175) தமிழக மக்கள்தொகையில் இது 1.84% ஆகும். சுமார் 7.3 லட்சம் பேர் (7,26,096 ) மலையாளம் நபர்கள் பேசுகின்றனர். தமிழக மக்கள்தொகையில் இது 1.04% ஆகும். ஓரான் மொழியை 0.001% பேரும், துளுவை 0.004% பேரும் பேசுகின்றனர். படக்குறிப்பு,தமிழகத்தில் திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகின்றன தமிழகத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 8-இல், இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் 15 மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆகும். அதில் ஆங்கிலம் உட்பட 11 மொழிகள் தமிழகத்தில் பேசப்பட்டு வருவதாக அட்லாஸ் தெரிவிக்கிறது. தமிழகத்தில் வங்கம், குஜராத்தி, இந்தி, கொங்கனி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சிந்தி, உருது போன்ற இந்தோ ஆரிய மொழிகளுடன் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கிளைக்குடும்பமான ஜெர்மானிக் பிரிவில் இடம் பெற்றுள்ள ஆங்கிலமும் பேசப்படுகிறது. தமிழகத்தில் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் உருது அதிக மக்களால் பேசப்பட்டு வருகிறது. 12,64,537 நபர்கள் உருது பேசுகின்றனர். இதன் படி தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் நான்காவது மொழி உருதுவாகும். இந்தோ–ஐரோப்பிய குடும்பத்தில் உருதுவை அடுத்து இந்தி மொழியை மக்கள் அதிகமாக பேசுகின்றனர் என்கிறது அட்லாஸ். தமிழகத்தில் 3,93,380 நபர்கள் இந்தி பேசுகின்றனர். குஜராத்தி (2,75,023), மராத்தி (85,454), ஆங்கிலம் (24,495) மொழிகளும் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒடியாவை 21,381 நபர்களும், கொங்கனியை 6,098 நபர்களும், சிந்தியை 8,448 நபர்களும், நேபாளியை 7,575, பஞ்சாபியை 6,565 நபர்களும் பேசிவருகின்றனர். படக்குறிப்பு,தமிழகத்தில் இந்தோ ஐரோப்பிய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழகத்தில் பேசப்படும் இதர மொழிகள் திராவிட, இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழகத்தில் ஆஸ்ட்ரோ - ஆசியாடிக் மொழிகளையும் மக்கள் பேசுகின்றனர். இக்குடும்பத்தின் கீழ் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட 14 மொழிகளில் 13 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவதாக விவரிக்கிறது மொழி அட்லாஸ். இருப்பினும் இம்மொழிகளை பேசும் மக்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கின்றனர். மொத்தமாக 687 நபர்கள் மட்டுமே இந்த 13 மொழிகளை பேசி வருகின்றனர். அதில் அதிகபட்சமாக சந்தாலி மொழியை 156 நபர்கள் பேசுகின்றனர். மணிப்பூரி, திபெத்தன், லுஷாய் (அ) மிசோ, தடோ, போடோ, திமாஷா போன்ற 6 திபத்தோ – பர்மிய மொழிகளை 1972 நபர்கள் தமிழகத்திதமிழகத்தில் பேசி வருகின்றனர். இவற்றில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மணிப்பூரி, போடோ மட்டுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 24,495 நபர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதாக குறிப்பிட்டுள்ளனர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் தமிழகத்தில் ஒரே ஒரு மொழி மட்டும் பேசும் மக்களின் எண்ணிக்கையானது 5,17,30,760 ஆக உள்ளது. தமிழ் பேசும் மக்களில் 4,96,87,022 நபர்கள் தமிழ் மட்டுமே தெரிந்த நபர்களாக இருக்கின்றனர். தெலுங்கு மட்டுமே பேசும் மக்களின் எண்ணிக்கையானது 9,56,866 ஆக உள்ளது. கன்னட மொழி பேசும் மக்களில் 2,80,564 நபர்கள் அந்த மொழி தவிர இதர மொழி பேசுவதில்லை என்றும் அட்லாஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. தமிழகத்தில் இரண்டு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையானது 1,79,69,107ஆகவும், மூன்று மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கையானது 24,47,163 ஆகவும் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது விடுபட்ட மொழிகள் படுக மொழி, சௌராஷ்டர்களின் தாய் மொழி போன்றவை குறித்த தரவுகள் மொழி அட்லாஸில் இடம் பெறவில்லை. 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மொழிக் கணக்கெடுப்பு தமிழ்நாடு தரவுகளில் இம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை இடம் பெற்றுள்ளது. அதன் படி தமிழகத்தில் 2,38,556 நபர்கள் சௌராஷ்ட்ர மொழியை பேசுகின்றனர். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் படுகர்களின் படக மொழியை 1,32,102 பேர் பேசி வருகின்றனர். இவ்விரண்டு மொழிகளையும் கருத்தில் கொள்ளும் பட்சத்தில், தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் 7-ஆவது மொழியாக சௌராஷ்ட்ர மொழியும், 8-ஆவது மொழியாக படுக மொழியும் அமையும். படக்குறிப்பு,மாநில கல்விக் கொள்கை பரிந்துரைகளில், உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சௌராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது பன்மொழி பேசும் மக்களை மதிக்கும் தமிழகம் தமிழகம் என்பது பண்டைய காலம் தொட்டே பல சமூகங்கள், பலமொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பாகவே திகழ்ந்திருக்கிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மட்டுமல்ல, இந்த நிலை சங்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது என்கிறார் எழுத்தாளர் மற்றும் தமிழ் மொழி அறிஞருமான காமராஜன். “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்” என்ற புகார் நகரின் வாழ்வியலை பேசும் பட்டினப்பாலையை மேற்கோள் காட்டும் அவர், பண்டைய காலம் தொட்டே வேற்றிடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள், தமிழக பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து மொழி, இனம் கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பதை அந்த செய்யுள் குறிப்பதாகக் கூறுகிறார். படக்குறிப்பு, எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான காமராஜன் “அந்த நிலை இன்றும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தரவுகள் புலம் பெயர் மக்களுக்கும் சிறுபான்மை மொழி பேசும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசால் மேற்கொள்ள இயலும். குறிப்பாக, கடைமட்ட பணிகளை மேற்கொள்ள வட இந்தியாவில் இருந்து புலம் பெயரும் மக்களின் உரிமைகளை உறுதி செய்திட இந்த தரவுகள் உதவும்,” என்று குறிப்பிடுகிறார். இங்கு சிறுபான்மை மொழியாக இருக்கும் சில மொழிகள், வட இந்திய மாநிலங்களில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கலாம். அந்த மாநிலங்களின் உதவியோடு பள்ளி பாடத்திட்டங்களை வகுத்தல், புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பான உதவிகளை தமிழக அரசால் பெற முடியும் என்று மேற்கோள் காட்டுகிறார் அவர். சமீபத்தில் வெளியான மாநில கல்விக் கொள்கை, உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சௌராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cz7exwrg7geo
    1 point
  13. 👍.......... சில ஆந்திரா முஸ்லிம்களின் பின்புலம் புரிந்துகொள்ளபடக் கூடியதே. ஹைதராபாத் நிசாமின், இவர் முகாலயர் வழி வந்தவர், கீழ் தனி ஆட்சியாகவே சுதந்திரம் வரையும் இருந்தது. அவர்கள் அன்று பாக்கிஸ்தானுடன் இணையக் கூடும் என்ற நிலையும் இருந்தது. பின்னர் இந்தியா நிசாமுடன் சண்டையிட்டே இந்தப் பகுதியை மீட்டெடுத்தது. தமிழ்நாட்டில் இது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு தாக்கமாக இருக்கலாம், இலங்கையில் சில முஸ்லிம்கள் அரபு மொழியில் பண்டித்தியம் பெற்றிருப்பது போல..........
    1 point
  14. சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂 தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣
    1 point
  15. சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். சஜித் ஆளையே இப்ப காணவில்லை. ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............
    1 point
  16. முஸ்லிம்கள் உருது மொழி தான் பேசுகிறார்கள்.(வீட்டில்) தமிழும் அவர்களுக்கு தெரியும். ஆந்திராவிலும் முஸ்லிம்கள் உருது தான் பேசுகிறார்கள். தெலுங்கும் அவர்கள் பேசுவார்கள். இது ஓட்டு மொத்த முஸ்லிம்களுமா என தெரியவில்லை.
    1 point
  17. முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ.
    1 point
  18. ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், கேள்விகளுடன் தான், அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படை த்தான் .... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதி என்றோதுவான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான். ஆமாம், என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக் கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருதுகிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்தார்கள். கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாகக் கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது. மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொருவனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப்படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்ததாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால், அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால், எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ...... குலமு மொன்றே குடியுமொன்றே, இறப்புமொன்றே பிறப்பு மொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட்கிறார். ஆண்டவனோ அல்லது சமயமோ , எதற்க்காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை. ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து, அதன் மூலம் எம்மை, எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும். "உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்... தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால் , இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை, எம்மை பிரிக்கிறது. சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல, அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன. சமயம் பழைமை நெறிவாதத்தையும் சகிப்பு தன்மையின்மையையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிகப் பெரிய பிரச்சனை கொடுக்கிறது. இதனால், மத வெறியர்களை உண்டாக்கி , எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது. ஆகவே, எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும், வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும். எல்லா சமயங்களும் மனிதாபிமானத்தையே அறிவுறுத்தின. ஆகவே அதை அப்படியே பின்பற்றலாமே? அமைதி எமக்குள்ளே தான் உண்டு. அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு. ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு. எனவே கடவுளே அன்பு, அன்பே கடவுள், இதை அறிந்தால், எமக்கு அது உள் அமைதி தரும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே. வெறுப்பு, பொறாமை, பேராசை, ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது? அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே. அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது. ஆனால் சமயம் அப்படி அல்ல. இதை நாம் அறிய வேண்டும். ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும் Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறி யுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கை யில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டே னென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்] It is a fact,God or Religions today no longer serve the purpose for which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:02 Will follow
    1 point
  19. நல்லநாள் பார்க்கவோ........! 😍
    1 point
  20. இது சுமத்திரனின். தொழில் அல்லது வியாபாரம் நாங்கள் இலங்கை என்ற நாட்டில் ஒன்றாக சிங்களவருடன். வாழப் போகிறோம் சுயாட்சி வேண்டாம் பேச்சுவார்த்தையும் வேண்டாம் முடிய அறையிலிருந்து இரகசியமாக தின்று குடித்து பேசவும். வேண்டாம் எதை பேசினாலும். தொலைக்காட்சி முன்னர் அனைவரும் பார்க்கும் படியாக பேசுங்கள் மற்றும்படி வாக்கு போட்டு ஒருவரை ஐனதிபதி ஆக்கி பேச வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை பேச்சுவார்த்தையில் இடுபடும். தமிழ் பிரதிநிதிகளுக்கு பேசமாலே அவர்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும் தமிழ் மக்களுக்கு தான் பேச வேண்டி உள்ளது” ஐனதிபதி ஆனதும் பொலிஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை 13. இல்லை ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் கோடி கோடியாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இன்று சுமத்திரன். தமிழர்களை ஏமாற்றுவார் நாளை சிங்கள ஐனதிபதி ஏமாற்றுவார் .. இதை இந்த சுமத்து ......சொல்லும் எனவே… தமிழர்களே உங்களுக்கு இலங்கையில் வெற்றி ஒருபோதும் கிட்டாது ஆகையினால் பொது வேட்பாளராக தமிழரை நிறுத்தி உங்கள் வாக்குகளை போடுங்கள் நாங்கள் விரும்புவது தோல்வியோ ஒரு சிங்களவனை ஐனதிபதி ஆக்குவதும். தோல்வி தான் படுதோல்வி ஆனால் தமிழன் தோற்பது வெற்றி ஆகும். 🙏
    1 point
  21. அவர் சொன்ன செய்தி சிங்கள பத்திரிகை களில் வராத மாதிரி பார்த்துகொள்வார்கள் நாங்களும் வழக்கம் போல் ஏமாறி துலைவம்.
    1 point
  22. கடந்த 15 வருடமாய் என்ன பிடுங்கி கொண்டு இருந்தவராம் ? இனிமேல்த்தான் தமிழருக்கு தீர்வு பற்றி கதைக்கபோராராம் அப்ப இவ்வளவு நாளும் சிங்கள அரசியல்வாதிகளுடன் என்ன செய்து கொண்டு இருந்தவராம் ?
    1 point
  23. முந்தி என்றால் 'பொங்கலுக்குள்.........' தீர்வு என்று சொல்வார்கள். இப்ப என்னடாவென்றால் இனிமேல் தான், அதுவும் அடுத்த அதிபருடன் தான் பேச்சுவார்த்தையே நடத்த வேண்டும் என்கின்றார்கள். சம்பந்தரைப் போலவே சனங்களும் வயது நல்லா வந்து ஒரு நாள் போய்ச் சேர்ந்து விடுங்கள் போல........
    1 point
  24. பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔
    1 point
  25. நாவலரை பாரதியார் போன்று புரட்சியாளராக நாம் எதிர்பார்தால் அது பிழையான எதிர்பார்ப்பாக அமையும். அவர் தனது காலச் சூழலில், கிறீத்தவ மத மாற்றங்களில் இருந்து சைவ சமயத்தைப் பாதுகாக்க முனைந்தார் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சைவ சமயத்தைப் பாதுகாக்க முற்படும்போது அது அதன் தொடர்ச்சியாக தமிழர் மத்தியில் இருந்த சாதிப் வகுப்பு முறையை பாதுகாக்கிறது என்று கூறுவது ஒருவேளை பொருத்தமானதக இருக்கலாம்.
    1 point
  26. எலி, ஏன்…. ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது. 😂 இந்தப் பயல்… தகப்பன் மகிந்தவையும், சித்தப்பன் கோத்தாவையும் மிஞ்சி விட்டான். 🤣
    1 point
  27. ம்ம்.. இப்படியான சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த இந்தியரும் அப்படித்தான் என்று வன்மம் கட்டத்தேவையில்லை. புதிதாக குடியேறிய இந்தியர்களால் பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சமூக பிரக்ஞய் குறைவாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வசாகா பீச் தொடர்பான கதைகள் இந்தியர்களுக்கு எதிராக ஒரு சில tiktok பதிவுகளின் விளைவுதான் இது என்றும் பேசப்படுகிறது. அங்கே பணிபுரிபவர்கள் யாரும் இப்படியான சம்பவங்களை அல்லது மலக்கழிவுகளை காணவில்லை என்றும் கூட செய்தி சொல்கிறது. பக்கத்தில் போனால் மணக்கும் என்றால்... கீர்த்தி சுரேஷ், நமீதா ரெட்டி, ஹன்சிகா மொட்டவானி நயன், த்ரிஷா வுக்கு ஜொள்ளுவிட்டுக்கொண்டு நாங்க இப்படி பேசலாமா?
    1 point
  28. 1 point
  29. தாங்கள் எங்கு வந்து எதை எழுத வேண்டும் என்ற விவஷ்தை இல்லாதவர். 🤪
    1 point
  30. ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 02 தவளையைப் பற்றி ஒரு பழங் கதை உண்டு. தவளையை ஒரு கொதிக்கும் நீருக்குள் போட் டால், அது உடனடியாக துள்ளி வெளியே போய் விடும் . ஆனால் அப்படி இல்லாமல், சட்டியில் உள்ள நீரில் முதல் தவளையை போட்டு , பின் மெல்ல மெல்ல சூடேற்றினால் , அந்த தவளை, நீர் கொதித்து, அது இறக்கும் மட்டும் அங்கு இருந்து விடும். கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர் கூட இப்படியான ஒரு உவமை பாவிக்கிறார். ஆனால் தவளைக்கு பதிலாக ஆமை. "... உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன் ..."என்கிறார். இப்படியான ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால், எமது சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, சமயம் என்ற அண்டாவில் இருந்து தம்மை விடுவித்து துள்ளி வெளியே வந்து எமக்கு உண்மையை தெளிவாக காட்டி விட் டார்கள். இந்த சித்தர்கள் தம்மை பின்பற்றுபவர்கள் என்று எவரையும் வைத்திருக்க வில்லை, அதே போல எந்த ஆசிரமமும் கட்ட வில்லை. அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் பக்தர்களுடன் தொடர்பு கொண்டார்கள்: இவர்கள் பக்தர்களை எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க விட்டார்கள். எல்லா சித்தர்களும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அலைய விடாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். 'மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்.. கலையின் பெயராலே காமவலை வீசும், காசு வருமென்றால் மானம் விலைபேசும், நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும், நிம்மதி யில்லாமல் அலை போல மோதும்...' என்று சும்மாவா சொல்லி வைத்தான்! அது மட்டும் அல்ல மனம் என்னும் இந்த பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன, அதற்காகப் பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டி ச்சித்தர் ஆவார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே பாடல்களை பாடினார். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன. "சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே." [பாடல்:98] "இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!" [பாடல்:61] "ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே." [பாடல்:94] சிவவாக்கியர் மற்றும் ஒரு முக்கிய சிறந்த சித்தர் ஆவார். இவர் பிராமண சட்டத்திற்கு எதிராக கொதித்து எழுந்தவர்., சாதி அமைப்பிற்கும், உருவ வழிபாட் டிற்கும், ஆலய சடங்குக்கும் எதிராக சமுதாயப் புரட்சி செய்தவர். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன. "பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!" [பாடல்:39] "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா; விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே" [பாடல்:47] "கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே." [பாடல்:34] ஒரு தனிப் பட்டவரை நல்ல மனிதனாக, ஆணவத்தை மையப்படுத்திய இனவாதி அற்றவனாக மாறுவதற்கே, ஆண்டவனோ அல்லது சமயமோ இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிஸ்துவரும் , இஸ்லாமியரும், இந்துவும், சைவனும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வராகவும் இருக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒரே ஆண்டவைத் தான் நம்புகிறோம். ஆக, அந்த தெய்வீக சக்தியை நினைவு கூறும் எமது வழி தான் வேறு பட்டது. ஆனால், சமயத்தின் பெயரில், ஆண்டவனின் பெயரில் சிந்தும் குருதியும், வெறுப்பும் , ஆணவமும் அங்கு எதோ சில ஓட்டைகள் இருப்பதைக் சுட்டிக் காட்டுகிறது. இதனால் மனித சமூகம் துன்பப் படுகிறது. 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்பதை உணர வேண்டும். இந்த உலகம் எல்லை அற்றதாக, யுத்தம் அற்றதாக, சமயம் அற்றதாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . எல்லா அடிப்படையும் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றன . குடும்பம் ஒன்றாய் இருப்பின் அதுவே ஆரம்பம். சகோதர, சகோதரிகள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே ஆரம்பம். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு றையும் தெய்வத்துள் வைக்கப் படும்'. நல்வாழ்வை தேடி இந்த உலகின் அழகான வாழ்வை ரசிப்போம். நாம் சமயம், சாதி, சமூகம், நாடு என்ற எல்லைகளை தாண்டுவோம். இந்த உலகின் மைந்தராக வாழ்வோம். தமிழரின் சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை வழி. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் என்றும் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை . இரண்டும் ஒன்றே! என்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு முழங்கு கிறது. எல்லைகளை தாண்டி எல்லோரையும் அணைக்கிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:03 தொடரும் There was a old story about the frog? They say if you drop a frog into a pot of boiling water that it will immediately jump out, but if you place the frog in a pot at room temperature and gradually raise that temperature, the frog will actually sit there until it boils to death. We are now in this position ,But our Tamil Siddhas even 1500 years ago jump out from the religious pot and show us the real truth ! All of siddhars wanted to subjugate the senses . Winning over the five senses offers an absolute control of the body leading to the control of the wandering mind.One of them refers to the five senses as “five thieves”.The most popular and well known of the siddhar’s is "Pambatti Siddhar" (பாம்பாட்டிச்சித்தர்/the snake character) who may be taken to be a true representation of his tribe. He takes the snake for a symbol to represent the human Soul and uses the expression :"Aadu pampe"(ஆடு பாம்பே/ Dance Snake) as a refrain at the end of each stanza of his poem.The poem of this siddhar is in fewer than six hundred lines and deals with philosophic and spiritual matters in the authentic siddhar pattern with great passion.Three of his poems are given below: "Four vedas, six shastras, several treatises on strategies, Puranas, Agamas espousing arts, Varieties of several other books_ Oh Snake! Dance! Declaring all these as useless books" .--Verse/98 ["சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே."] While the Two gathered mud One built the kiln for ten months. The kiln, though wonderful, Is not worth a fraction of a coin. Dance! Oh Snake! Saying this.--Verse/61 ["இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"] "No one can cook the gourd that is painted on paper. Likewise despite searching in the eight directions there is no refuge.They build a temple for every town and pray ceaselessly. But has never seen the Lord’s feet.Dance! Oh Snake ! Saying this."--Verse/94 ["ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."] Sivavakkiyar [சிவவாக்கியர்] was another great Tamil Poet/siddhar who lived in the period preceding the 10th Century A.D.He was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies.Three of his poems are also given below: "Where is the pariah woman? Where is the high-caste woman? Are there numbers inscribed on the skin and flesh? Is the pariah woman’s delight different from that of a the high-caste woman?Analyse the pariah woman and the high-caste woman in you."-- Verse/39 ["பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"] "Drawn milk doesn’t return to the breast. Churned butter doesn’t return to the butter-milk. The broken conch’s sound and the beings don’t re-enter the body. The blossomed flower and the fallen half-ripe fruit never return to the tree.The dead are never born. Never, never, never."--Verse/47 ["கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"] "Where are the temples? Where are the holy ponds? You loathsome people who worship the temples and ponds! Temples and ponds are in one’s mind. There is neither creation nor destrution. Never, never, never."--Verse/34 ["கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."] The God or religions are there to make person good human and not the ego centric racist. Every christian or Muslim or hindu should be more acceptable and should be ready to appreciate others religion by visiting each others church mosque and temples.We all believe in one god and its just our way of remembering the Divine power is different. but the bloodshed, hatred and ego shows that there are some loops holes present in the religion and because of this the society is suffering .United we stand, divided we fall, imagine if the World could be one, no Religions, no borders, no wars. The basics all begin at home, if the family can stand as one, that will be the beginning. If brothers & sisters learn to love and live in harmony, that is the beginning.Lets strive for well being, for a beautiful life on this planet. Let's break through the lines of religion, caste, community and even country. lets dissolve the borders. Let us be citizens of this planet. Let us care for this earth.Even Saiva Siddhantam[சைவ சித்தாந்தம்] Philosophy of Tamils is a way of life and This does not advise us to practice anything against nature or interfere with freedom and liberty of people. There is no place for superstitions and blind faith.In the name of God and religion, it does not divide or dissect people.They taught us that "God is LOVE and LOVE is God" ["அன்பே சிவம்" "ANBE SIVAM." -"தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி"]Our Saiva view of life is universal even,2000 years ago.Puranaanooru, proclaimed to the whole wide world :"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"/"every country is my own and all the people are my kinsmen."and there by proclaimed universal peace! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:03 Will follow
    1 point
  31. இப்பிடியான ரொய்லட்டுக்கள் தான் சரி
    1 point
  32. அவரை மிஞ்சிய சீடப்பிள்ளை ..சும்மா இருக்கிறார்தானே..?
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.