Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
satan
கருத்துக்கள உறவுகள்6Points10100Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்4Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/04/24 in all areas
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsபுலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂2 points -
தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு
தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு July 31, 2024 — கருணாகரன் — தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். 00 ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள். – ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்டத்துக்குப் பின்னான தற்போதய அரசியலும் தோற்றுப் போனதாகவே உள்ளது. இதிலும் இரண்டு வகை உண்டு. – ஒன்று நம்மைப் பிறர் – எதிராளர்கள் – தோற்கடிப்பது. – மற்றது, நம்மை நாமே தோற்கடிப்பது. அநேகமான சந்தர்ப்பங்களிலும் நம்மை நாமே தோற்கடிப்பதே நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தானுள்ளது, “தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று ஜனாதிபதித் தேர்தலையொட்டிச் சிலர், “சாகிறோம் பந்தயம் பிடி” என்ற மாதிரி, விடாப்பிடியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தேர்தற் திருவிழா ஏற்பாடுகளும். (இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை எழுதிக் கொண்டிருக்கும் நகைச்சுவைகள் ஏராளம்). அதற்குத் தோதாக தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு அமைப்புகளின் உருவாக்கமும் நடக்கிறது. இப்படி இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு (தமிழ் மக்கள் பேரவை, P 2 P… போன்றவைக்கு) என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. இந்த வார வெளியீடான தமிழ்த்தேசியக் கட்மைப்பின் அடுத்த கூட்டம் எப்படி நடக்கும்? அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்றே தெரியாது. அந்தளவுக்குக் குழப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும். இருந்தாலும் இழுத்துப் பிடித்து தலையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் (களப்புலிகள்) இராப்பகலாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 2005 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு நிகரானதே, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பொது வேட்பாளர் விவகாரமும். அதற்குப் பரிசாக முள்ளிவாய்க்கால் முடிவுகள் கிடைத்தன. இதற்குப் பரிசாக…!? நிச்சயமாக இதற்கான எதிர்விளைவுகளையும் தமிழ்ச்சமூகம் சந்திக்கத்தான் போகிறது. “கெடுகுடி சொற் கேளாது” என்பார்களே! அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் சாவுடன், அழிவுடன், பின்னடைவுடன், தோல்வியுடன் விளையாடிப் பார்ப்பது. தமிழ்ச் சமூகத்தின் உளக்குறைபாடு அல்லது சிந்தனைக் கோளாறுதான் இதற்குக் காரணமாகும். எதையும் தவறாகக் கணிப்பிடுவது. அல்லது எதையும் பிழையாகப் பார்க்க முற்படுவது. ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார், “பிழையாகக் கணக்கைச் செய்தால் விடையும் பிழையாகத்தான் வரும்” என்று. இதை உணர மறுத்து, தவறைப் பிறர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வதே தமிழர்களின் வேலையாக (அரசியலாக) உள்ளது. அநேகமான தமிழர்கள் எப்பொழுதும் சொல்லிக் கொள்ளும் தலையான வசனம் ஒன்றுள்ளது, “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என. “காலா காலமாக ஏமாற்றப்பட்டோம். இனியும் அப்படி ஏமாற முடியாது” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் திருவாய் மலர்ந்துள்ளார். சேனாதிராஜா மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்த வேணும் என்று அடம்பிடிக்கின்ற எல்லோரும்தான் அப்படிச் சொல்கிறார்கள். ரணில் ஏமாற்றி விட்டார். ராஜபக்ஸக்கள் ஏமாற்றி விட்டனர். மைத்திரி ஏமாற்றி விட்டார். அதற்கு முன்பு – சந்திரிகா, விஜயதுங்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜெயவர்த்தன, சிறிமா பண்டாரநாயக்க எல்லாம் ஏமாற்றி விட்டார்கள் என்று. போதாக்குறைக்கு இந்தியா ஏமாற்றி விட்டது. சர்வதேச சமூகம் ஏமாற்றி விட்டது என்றும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லோரும் ஏமாற்றி விடக் கூடிய அளவுக்குத்தான் நம்முடைய தமிழ்த் தலைமைகளும் தமிழ் அரசியலும் உள்ளது. ஒரு புள்ளியிற் கூட அவர்களைத் தோற்கடிக்கக் கூடிய – வெல்லக் கூடிய – அரசியலே முன்னெடுக்கப்படவில்லை. ஒரு தலைமைகூட சிங்களப் பேரினவாதப் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு தமிழ் அரசியலை – தமிழ் பேசும் மக்களின் அரசியலை மேற்கொள்ளவில்லை. காரணம், தோற்றுப் போகும் சிந்தனையை – தோற்கடிக்கக் கூடிய அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதேயாகும். அதாவது ஒற்றைப்படைத்தன்மையான அணுகுமுறை. கறுப்பு – வெள்ளைச் சிந்தனை. முக்கியமாக உணர்வு சார்ந்த உணர்ச்சிகரமான அரசியல் முன்னெடுப்பே இதுவாகும். இது அறிவுக்கு எதிரானது. என்பதால்தான் அறிவுசார் அரசியலை மொழிவோரையும் முன்னெடுப்போரையும் உணர்வாளர்கள், துரோகிகள் என்று எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டி நிராகரித்துத் தள்ளி விட முயற்சிக்கிறார்கள். அறிவுசார் அரசியலை நிராகரித்தால் அதற்குப் பிறகு எங்கே இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (strategy), புதிய அணுகுமுறைகள் (New Approaches), மீள் பரிசீலனைகள் (Reconsiderations), திருத்தங்கள் (corrections), மாற்றங்கள் (changes), வளர்ச்சி (Development), புத்தாக்கம் (Innovation) எல்லாம்? இவையெல்லாம் அரசியலின் அடிப்படைகள். அரசியல் ரீதியான விளைவுகளுக்கானவை. இவற்றை நிராகரித்து விட்டுத் தமிழ்ச்சமூகம் தனக்குள் சுருங்கிக் கொள்கிறது. குறைந்த பட்சம் அது இலங்கைத்தீவில் தமிழ்பேசும் சமூகங்களாகக் கூடத் திரள முடியாமல் திணறுகிறது. இந்த லட்சணத்தில்தான் அது பிராந்திய சக்தியாகிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் தன்வயப்படுத்தப்போகிறதாம்! இதெல்லாம் நடக்கிற காரியமா? கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை, களைப்பதுமில்லை. என்பதால்தான் நிரந்தரத் தோல்வியைத் தமிழ்ச்சமூகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வரவேயில்லை என்று சொல்ல முடியாது. அந்த வாய்ப்புகளைச் சரியாகக் கையாளக்கூடிய நம்பிக்கையும் திறனும் நம்மிடம் இல்லாமலிருந்ததே உண்மை. இன்னும் இந்தத் தடுமாற்றம் நீடிக்கிறது. இதை எத்தனை தடவை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுப்பதே நிகழ்கிறது. காரணம், நிலைமையைப் புரிந்து கொள்ளாத, உண்மையை விளங்க மறுக்கின்ற, யதார்த்தத்தை உணரத் தவறும் அதி தீவிரம், அதி புத்திசாலித்தனம், அதி தூய்மைவாதம், அவநம்பிகை என்ற பொருந்தாக் குணங்களே. இது தொடரும் தோல்விகளை உண்டாக்குகிறது. தொடரும் தோல்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலோ – வல்லமையோ – புத்திசாலித்தனமோ, அரசியல் நடவடிக்கையோ எவரிடத்திலும் இல்லை. குறைந்த பட்சம் கட்சிகளை – அரசியலாளர்களை – ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரக் கூடிய திறனும் உணர்வும் யாரிடத்திலும் இல்லை. அப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள் – இரண்டு அடிப்படைகள் – உண்டு. 1. கொள்கை ரீதியாக ஒன்றிணைவது (Unity on principle) 2. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் விதத்தில், அவற்றுக்குத் தீர்வு காணும் அடிப்படையில் ஒன்று திரள்வது (Based on the issues) இவை இரண்டின் அடிப்படையிலும் ஒன்றிணையவோ, அரசியலை முன்னெடுக்கவோ, மக்களுக்கான பணிகளைச் செய்யவோ யாரும் தயாரில்லை. பதிலாக அவ்வப்போது எதையாவது சொல்லித் தண்ணி காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். இது மேலும் மேலும் தோல்விகளைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கப்போகிறது. இதனால் நிரந்தரத் தோல்விக்கு தமிழ்ச்சமூகம் தள்ளப்படப்போகிறது. என்றபடியால்தான் தமிழ்ச்சமூகத்தையும் விட பின்தங்கிய நிலையில் இருந்த ஏனைய இலங்கைச் சமூகத்தினர் இன்று தம்மை முன்னேற்றியுள்ளனர். தமிழர்கள் அவர்களைப் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் அளவுக்கே நிலைமை உள்ளது. அப்படிப் புகைந்து கொண்டிருப்பதால் பயனில்லை. அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தாம் முன்னேறிக் கொள்ள வேண்டியதே அவசியம். அதை விட்டுவிட்டு இப்படியே அடுத்தவரில் பழி சொல்லிக் கொண்டும் உள்ளே புகைந்து கொண்டுமிருந்தால் அதிமுட்டாள்தனமாக வரலாற்றில் முடிவடைய வேண்டியதுதான். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு மட்டுமல்ல, அந்த வழியிற் சிந்திக்கும் அனைத்து முடிவுகளும் அப்படித்தான் உள்ளது. எவர் ஒருவர் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி மாறுகிறாரோ அவரிடம்தான் மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும். அவருடன் மட்டுமே மாற்றத்துக்காக இணைந்து செயற்பட முடியும். தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள், மாற்றத்தை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்காதவர்கள், தமக்குள் வளர்ச்சியடையாதவர்கள்தான் மாற்றங்கள் குறித்து அதிகமாகப் போதனைகளைச் செய்கிறார்கள். பொருளாதாரம், பதவி போன்றவற்றைத் தவிர, இவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் பழக்கத்திலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இவர்கள்தான் வழிமறித்து, மாற்றம் பற்றி தீவிரமாகப் போதிக்கிறார்கள். உன்னை, உன் வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய்? என்று நாம் கேட்க வேண்டும். இப்போது இன்னொரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் அந்த வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான கூர்மையான அவதானிப்போடு, முறையான உரையாடல்களை நிகழ்த்தி, நிதானமான இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியும். சிங்களத் தரப்பிலும் தமிழ்த்தரப்பை நோக்கி இறங்கி வரக்கூடிய – வரவேண்டிய – சூழல் இது. அதற்கான சாத்தியக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம். ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, கதவுகளை மூடும் காரியமல்லவா! தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதே கதவுகளை மூடும் செயலன்றி வேறென்ன? உலகத்தில் இந்த மாதிரி முட்டாள்தனமான வேலையை வேறு எந்தச் சமூகமாவது செய்யுமா? தமிழ் மக்களைத் தமிழ்த் தரப்பினரே தோற்கடிக்கும் முட்டாள்தனத்தை (அவர்கள் இதை அதி புத்திசாலித்தனம், அதி விவேகம் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்) இத்துடனாவது நிறுத்துவது நல்லது. தங்களைப் புத்திஜீகளாகக் கருதிக் கொண்டிருக்கும் இவர்கள் மெய்யாகவே புத்திஜீவிகள் தானென்றால் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்ற அடிப்படையில் வளர்ச்சியை எட்டுவதற்குப் பாடுபட வேண்டும். அதற்குரிய திட்டங்களை வகுத்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து, இந்த மாதிரி பழைய வாய்ப்பனை திரும்பவும் எண்ணைச் சட்டிக்குள் போட்டு எடுக்கத் தேவையில்லை. தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். https://arangamnews.com/?p=110502 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி?
தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்டுப்பட்ட சதைகளின் குவியலுமாகவே மனம் முழுக்க நிரம்பி இருந்தது. மனம் முழுக்க இரத்த சகதி தெறித்தது போன்ற உணர்வு. இந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷிடம் “ஒய் திஸ் கொலை வெறி?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளைக் கூட ரசனையாக அணுகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வன்முறை, ஆபாசம், இரத்த ஆறு ஓடும் கொலைகார சினிமாவாக மாறி நிற்பது ஏன்? சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான சூப்பர் ஸ்டார் படங்கள் அனைத்துமே வன்முறை, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல், போதைப் பழக்கத்தை இயல்பாக்கும் காட்சிகள் என்பதாகவே உள்ளன. விக்ரம், மாஸ்டர், ஜெயிலர், லியோ, மஹாராஜா என்று தொடர்ந்து தற்போது ராயன் அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெரும் வெற்றி இயக்குனர்களாக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நித்திலன் ஆகியோரது வரிசையில் மிகச் சிறப்பான நடிகரான தனுஷும் இந்த வெறியாட்ட ஜோதியில் கலந்திருக்கிறார். நல்ல சினிமாவை நோக்கிய பாய்ச்சலில் தமிழ் சினிமா இடறி அதல பாதாளத்தில் விழுந்தது எப்படி? சற்று தமிழ் சினிமாவின் வரலாற்று இயங்கியலை திரும்பிப் பார்த்தால் ஓரளவுக்கு நமக்கு பிடிபடக்கூடும். ஆரம்ப கால சினிமாவில், எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையான வில்லன் பாத்திரங்களில் நடிக்க அற்புதமான நடிகர்கள் இருந்தனர். எம். என். நம்பியார், அசோகன், டி எஸ். பாலையா, எம். ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர், செந்தாமரை ஆகியோரின் வில்லன் பாத்திர வடிவமைப்புகள் ரத்தம் தெறிக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு அமையவில்லை. பெரும்பாலான படங்களில் வில்லன் மனம் திருந்திவிடக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களை மன்னித்து ஏற்கக் கூடிய நாயகர்களின் பாத்திரங்கள் இருந்தன. வில்லன்கள் “அபூர்வமாகவே” கொல்லப்பட்டனர். திரையில் இரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இல்லை. எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நம்பியார் மோசமான வில்லத் தனத்தை செய்தாலும் இறுதிக் காட்சியில் மனந்திருந்தி மன்னிப்பு கோருபவராகவே இருந்தார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வில்லனாக வந்த பாலாஜி மற்றும் நம்பியார் ஆகியோர் தங்கள் தவறுகளுக்காக மனந்திருந்தி வருந்துபவர்களாகவே இருந்தனர். அப்படத்தில் சிவாஜியின் பாத்திரம் ஹீரோ எனினும், தன் காதலியை உடனுக்குடன் சந்தேகிக்கும் அவரது கறுப்பு பக்கத்தையும் இயக்குனர் காட்டத் தவறவில்லை. எம்.ஆர்.ராதா, டி. எஸ். பாலையா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், மனோகர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் குரூரத்தை விட, மெல்லிய குசும்புத்தனமும் இருந்தது. நாடகங்களிலிருந்து சினிமாக்களுக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களின் வில்லத்தனத்தில் நாடகத்தனம் அதிகம் இருந்தது. ஶ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் வருகைக்கு பிறகு படங்களின் வில்லன்கள் புதிய பரிமாணம் எடுக்கத் தொடங்கினர். காதலிக்க நேரமில்லை படத்தில் டி எஸ் பாலையாவின் நகைச்சுவை வில்லன் பாத்திரம் இன்றளவும் ஒரு சாதனையே. திரைக்கதை, எதிர்பார்த்ததையும் கோரியதையும் கச்சிதமாக செய்தனர் அந்தக் கால வில்லன்கள். 1970களுக்கு பிறகான புதிய அலை இயக்குனர்களின் வரவால், ஹீரோ – வில்லன் என்ற இயங்கியல் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது. யதார்த்தவாத வில்லன்களின் அகவுலகை இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஹீரோ வில்லன்களின் பரிமாணம் புதிய கட்டத்தை அடைந்தது. வில்லன் ரஜினிகாந்த் ஹீரோவானார், ஹீரோ ஜெய்சங்கர் வில்லன் ஆனார். ஹீரோவின் பண்புகளும் வில்லனின் பண்புகளும் புதிய வடிவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் ஏற்று நடித்த பாத்திரம் ஆழமான உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை நமக்கு அறிமுகம் செய்தது. அந்த வில்லன் பாத்திரத்தின் வன்மத்தை காட்சிப் படிமங்களால் நமக்கு கடத்தினார் இயக்குனர் மகேந்திரன். 1980களின் பிற்பகுதியில் உருவான நாயக பிம்ப கதைகள் வில்லனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்தன. நாயகன், தளபதி, தேவர்மகன், அமரன் போன்ற படங்களில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இரத்தம் தெறிக்கும் கொடுர அனுபவத்தை தரத் தொடங்கின. நாயகனில் போலீஸ் அதிகாரியை நாயகன் அடித்தே கொலை செய்யும் காட்சி, தளபதி படத்தில் கையை வெட்டி கொலை செய்யும் காட்சி, தேவர் மகனின் இறுதிக்காட்சியில் நாசர் தலை துண்டித்து கொல்லப்படும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. 1990களில் தொடங்கிய இந்தப் போக்கு மெதுவாக வளர்ச்சியடைந்து, 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படங்களில் முக்கியமான திருப்பத்தை அடைந்தது. பருத்தி வீரன் மிகச் சிறந்த கல்ட் கிளாசிக் என்றாலும், அதன் கிளைமாக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் பேரதிர்ச்சி மதிப்பீடுகளை கொண்டிருந்தன. வன்முறை எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதின் தார்மீக அடிப்படையைக் கூட இப்படம் நிராகரித்திருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திலும் வில்லன் கழுத்தறுத்து கொல்லப்படும் காட்சியில் ரசிகர்கள் பதறுவதற்கு பதில் “கொல், கொல்,” என்று ஆவேசமாக கத்துவதை பார்க்க முடிந்தது. துரோகத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் எல்லை மீறி இருந்தது. கலைக்கப்பட்ட தலைமுடி, லுங்கி, மதுரை வட்டார வழக்கு, நட்புக்காக கொலை கூட செய்வார்கள் என்ற கிளிஷே என இது போல பல படங்கள் வர ஆரம்பித்தன. 2010களுக்கு பிறகு, குறும்படங்கள் எடுத்து இயக்குனர்கள் ஆனவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பீட்சா, பத்மினியும் பண்ணையாரும், சூது கவ்வும் போன்ற படங்கள் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கினர். ஆனால், தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததோ தலை கீழான சம்பவங்கள். குறும்பட இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவதிலும் பெரும் சம்பளம் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி வழிந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கதை தயார் செய்யும் நோக்கத்தில் தங்களது படைப்புத் திறனை வன்முறைக் காட்சிகளை விதம்விதமாக படமாக்குவதில் இவர்களுக்கு வெறியே வந்து விட்டது. மாஸ்டர் படத்தில் அதுவரை ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்தார். ஈவிரக்கம் இல்லாமல் இரத்த வெறி கொண்ட வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் பின்பு மிகப் பெரும் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் போதை, இரத்த வெறி கொண்ட வன்முறைக் காட்சிகள், தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் மனிதர்கள் என்று பெரும்பாலான காட்சிகள் வன்முறை வெறியாட்டத்தையும் போதை கலாச்சாரத்தையும் முன்வைத்தன. அது போலவே லியோ படத்திலும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ய முயலும் தேவையற்ற பாத்திரங்கள், நூற்றுக்கணக்கானோரை வெட்டிச் சாய்க்கும் ஹீரோ, பெற்ற மகளை நரபலி கொடுக்க தயாராகும் வில்லன் என்ற எல்லா கேடுகெட்ட தனங்களையும் லியோ படம் தனக்குள் வைத்திருந்தது. அசுரன், வட சென்னை படங்களை இயக்கிய வெற்றி மாறனும் இந்த வன்முறை காட்சிப்படுத்தலில் சளைத்தவர் இல்லை. விடுதலை படத்தில் இடம்பெற்ற பெண்களை சித்திரவதை செய்யும் காட்சியிலும், ஒரு பெண் தலை முண்டமாக விழும் காட்சியிலும் வன்முறையை ஒரு ரசனையாக வளர்த்தெடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களாக மாறி வருகிறார் வெற்றி மாறன். சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் நல்ல மன நிலையோடு இருப்பவர்களை நிலை தடுமாறச் செய்யக் கூடியவை. விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா படமும், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் வில்லன் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. வில்லன் என்பவன் கொல்லப்பட்டே ஆக வேண்டும். அந்த கொலையை ரசிகர்கள் விரும்பும் அளவு வில்லன்களின் குற்ற செயல் கொடூரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஐயம் நமக்கு எழாமல் இல்லை. தற்போது வெளியாகி உள்ள ராயன் திரைப்படத்தின் கதையே வன்முறை மட்டும் தான். முதல் காட்சியில் துவங்கும் கொலை வெறி இறுதிக் காட்சி வரை வெட்டப்பட்ட தலைகளாகவும், அறுக்கப்பட்ட சதைத் துண்டுகளாகவும், ஆறுகளாக ஓடும் இரத்த ஓட்டங்களாகவும் படம் முழுக்க வன்முறை, வன்முறை. மிகச் சிறந்த நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பார்வையாளர்களை துணுக்குறச் செய்யும் ட்விஸ்ட்களை உருவாக்குவதற்காக அப்பட்டமான கொலைவெறி தாண்டவம் ஆடியிருக்கிறார் தனுஷ். ஏன்? எதற்கு என்று தெரியாமல் எதிர்ப்படும் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார். தங்கையை பாலியல் வன்முறை செய்த வில்லனை கொலை செய்வதன் மூலம் வன்முறைக் காட்சிக்கான நியாயத்தை பார்வையாளர்களிடம் உருவாக்குகிறார். நமக்கு படம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இவையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. அங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்காதா? நீதிமன்றங்கள் இருக்காதா? ஊடகங்கள் இருக்காதா? நாமெல்லாம் ஏதேனும் வேற்று கிரகத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது. குறிப்பாக, இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களின் தன்மை தான் சிக்கலான அம்சமாக மாறுகிறது. கதையோட்டத்தில் நாயகன் அல்லது நாயகியுடன் ஏற்படும் முரண் காரணமாக வில்லன் பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வன்முறைப் படங்களில் வில்லன் எடுத்த எடுப்பிலேயே சமூக விரோத கும்பல் தலைவனாகவோ அல்லது போதைப் பொருள் அல்லது கடத்தல் கும்பல் தலைவனாகவோ இருக்கிறான். வில்லன் பாத்திரத்தின் மீது இன்னும் தீவிரமான வெறுப்பை உருவாக்குவதற்காக சிறுமிகளையோ, குழந்தைகளையோ பாலியல் வன்முறை செய்பவனாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. ஏனென்றால், இந்த வில்லன் திருந்துபவன் அல்ல; இவனையெல்லாம் திருத்த முடியாது, கொல்வதைத் தவிர, ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தை பார்வையாளரின் மனதில் உருவாக்கவே இந்த வகையான வினோத வில்லன்கள் உருவாகிறார்கள். ஜெயிலரின் வில்லன் பாத்திரத்தில் நடித்த விநாயகன் என்கிற அற்புதமான நடிகரை கோமாளி வில்லனாக சித்தரித்திருந்தார் நெல்சன். விக்ரமில் விஜய் சேதுபதி போதை பயன்படுத்தியவுடன் அவருக்கு அசுர பலம் வருவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். இவர்கள் நாயகன் வாழ்வில் குறுக்கிடும் போது அவரால் கொல்லப்படுகிறார்கள். மற்றபடி இந்த வகை வில்லன்கள் சமுக விரோதிகள் இவர்கள் எதிர் நாயகர்கள் அல்ல. பார்வையாளர்களின் ஆர்கசத்தை தூண்டி வன்முறையால் கொல்லப்பட்டு, அதுவும் குரூரமான முறையில் நாயகனால் கொல்லப்படுவதற்காக உருவாக்கப்படும் பிம்பங்கள். வன்முறை கதைக்களம் எடுக்கவே கூடாது என்பதல்ல, அதை எப்படி காட்சியாக முன் வைக்கிறோம் என்பதில்தான் இயக்குனர்களின் கலை ஆளுமையும், பொறுப்பும், கடமையும் அடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற Zone of interest சினிமாவும் வன்முறை குறித்த சினிமா தான். ஆனால், அப்படம் கலை நேர்த்தியுடனும் பொறுப்புணர்வோடும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா முன் வைக்கும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு அறுவெறுப்பானவை என்பது புரியும். சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள். வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள். ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள். இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு யு சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி. கன்னடத்திலும் மலையாளத்திலும் வரும் நல்ல சினிமாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். எனவே, ரசிகர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்ற சாக்கு போக்குகள் இனி செல்லாது. இந்த போக்கு தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி. தமிழ் சினிமா இயக்குனர்களே “என்று தணியும் இந்த கொலை வெறி? சினிமாவை பார்க்கும் மென்மையான மனம் படைத்த குழந்தைகள், பெண்கள், மூத்தவர்கள்.. இவர்களை ஒரு நிமிடம் உங்கள் மனங்களில் நிறுத்திப் பாருங்கள். கலை என்பது மனித நேயத்தை வளர்ப்பதற்கு மாறாக மனித மனங்களில் வெறுப்பை,வன்மத்தை விதைத்து விடக் கூடாதல்லவா? கட்டுரையாளர்;- தயாளன் ஆவணப்பட இயக்குனர் https://chakkaram.com/2024/08/03/தென்னிந்திய-தமிழ்-சினிமா/1 point- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 point👍..... இனி மீதமிருக்கும் போட்டிகளில் அமெரிக்காவிற்கு சீனாவை விட வாய்ப்புகள் அதிகம் தான்.....1 point- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஇன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 19 26 26 71 2 China 19 15 11 45 3 France 12 14 18 44 4 Great Britain 10 12 15 37 5 Australia 12 11 8 31 6 Republic of Korea 10 7 7 24 7 Japan 9 5 10 24 8 Italy 7 10 5 22 9 Canada 5 4 8 17 10 Netherlands 6 5 4 15 11 Germany 5 5 2 12 12 Brazil 1 4 5 10 13 Hungary 3 3 2 8 14 Spain 1 2 5 8 15 Romania 3 3 1 7 16 New Zealand 2 4 1 7 17 Sweden 2 3 2 7 18 Ireland 3 0 3 6 19 Ukraine 2 1 3 6 20 Israel 1 4 1 6 21 Switzerland 1 1 4 6 22 Belgium 2 0 3 5 23 Greece 0 1 4 5 24 Croatia 2 1 1 4 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Poland 0 1 3 4 30 Chinese Taipei 1 0 2 3 30 Uzbekistan 1 0 2 3 32 Jamaica 0 2 1 3 32 Mexico 0 2 1 3 32 DPR Korea 0 2 1 3 35 India 0 0 3 3 35 Tajikistan 0 0 3 3 37 Azerbaijan 2 0 0 2 37 Philippines 2 0 0 2 37 Serbia 2 0 0 2 40 Czech Republic 1 0 1 2 40 Guatemala 1 0 1 2 42 Kosovo 0 1 1 2 42 Turkey 0 1 1 2 44 Dominican Republic 0 0 2 2 44 Moldova 0 0 2 2 46 Algeria 1 0 0 1 46 Argentina 1 0 0 1 46 Chile 1 0 0 1 46 Dominica 1 0 0 1 46 Ecuador 1 0 0 1 46 Norway 1 0 0 1 46 Slovenia 1 0 0 1 46 Saint Lucia 1 0 0 1 46 Uganda 1 0 0 1 55 Armenia 0 1 0 1 55 Denmark 0 1 0 1 55 Ethiopia 0 1 0 1 55 Fiji 0 1 0 1 55 Mongolia 0 1 0 1 55 Tunisia 0 1 0 1 61 Austria 0 0 1 1 61 Cape Verde 0 0 1 1 61 Cuba 0 0 1 1 61 Egypt 0 0 1 1 61 Grenada 0 0 1 1 61 Lithuania 0 0 1 1 61 Malaysia 0 0 1 1 61 Portugal 0 0 1 1 61 Slovakia 0 0 1 11 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை
சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை https://www.facebook.com/share/v/UbpRGcKTUjVACkDS/1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
ராகுலையும் ,சிரேயாசையும் போட்டால் தோல்வி நிச்சயம் ..போதாக்குறைக்கு துபே நேசரிப் பொடியள் மதிரித்தான் விளையாடுது..1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointலங்காஸ்ரீயில் இவரின் மரண அறிவித்தலை காணவில்லை என்ற படியால், ஆள் இன்னும் இருக்கிறார். 😂1 point- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் கிராமங்களில் 300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. Follow On WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaTYF6cKAwEdCSa8cq2J @Kandiah57 அண்ணை சில நாடுகள் தங்கப் பதக்கம் எடுக்காததற்கு இதுக்கும் ஒரு காரணமாக இருக்குமோ. 😂1 point- நானும் கவிதாயினியும்.....💕
1 pointநினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா .. முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ..1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇதோ நான் சொன்னதற்கான அடுத்த கட்டம்: மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஇலங்கையன் என்பதற்கும் சிறீலங்கன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரோடு எல்லாம் பேசுவதே நேர விரயம்.1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
சோமாலிய தாக்குதலில் 32 பேர் பலி சோமாலியா தலைநகரில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த உணவகத்திற்குள் நுழைந்த அல் ஷபாப் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன்போது, சிலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததுடன், தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது https://www.tamilmirror.lk/செய்திகள்/சமலயவல-தவரவத-தககதல-32-பர-பல/175-341524 இந்த செய்தி யாரும் பகிர்ந்ததாய் காணவில்லை அதனால் இத்திரியில் இணைத்தேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointகாத்தோட்டிக் காய்கள்......... ஆடிஅமாவாசை விரதத்தின் திலகம்.......! 👍1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே........! 🙏 இன்று ஆடிஅமாவாசைக்கு ஐயாவுக்கு சமர்ப்பணம்.......! 💐1 point- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஉயரம் பாய்தலில் இலங்கை தமிழர் ஒருத்தர் வெள்ளிப்பதக்கம் ஒன்றை வெற்றி கொண்டாரே? எங்கள் ஆட்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள். இன்னும் உலக அளவில் முன்னணி வீர வீராங்கனைகள் உள்ளார்களா தெரியாது. எதிர்காலத்தில் வரத்தானே வேண்டும்.1 point- தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு
இப்படித் தமது பார்வையில் தெளிவாகத் தோண்டி எடுத்து வெளியேபோடும் எழுத்தர்கள் தமிழினம் இறங்கிப்போய் நின்று எத்தனை ஒப்பந்தங்கள் எத்தனைசுற்றுப் பேச்சுகள் செய்தன. எவற்றைச் சிங்களம் ஏற்றது அல்லது நடைமுறைப்படுத்தியது என்று சிந்திப்பது நன்று. இருநாடுகளின் ஒப்பந்தமான 13ஆவதையே நடைமுறைப்படுத்தாது அதனை படிப்படியாகச் செயலிழக்கச் செய்துள்ளது சிங்கள அரசு. இதனை அறியாமலா எழுதுகிறார்கள். இப்படியானவர்கள் தமிழருக்கான தீர்வு என்ன என்று கேட்டுப்பெற்றுக்கொடுத்துத் தமிழருக்குத் தலைமைதாங்கலாமே. அப்படிச் செய்தால் தமிழரே ஏற்பார்கள்தானே. இப்படி வடையும் வாய்ப்பனுமென்று ஏலம்போடத்தேவையில்லை.1 point- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஅவர் எத்தனை தடவை ஏமாற்றினார் என்றால்; அது யார் தவறு? ஏமார நாம் தயாராக இருக்கும்போது அவர் ஏமாற்றத்தான் செய்வார். நாம்தான் திருப்பி, முன்பும் ஏமாற்றினாய் இப்போ செய்! நாம் நம்புகிறோம் என்று கேட்.பதில்லையே எமது அப்பிராணித்தனத்தை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் புத்திசாலி. முகவர் அதற்கான வெகுமதியை பெற்று பாராட்டப்பெறுவார். நாங்கள் செம்மறிக்கூட்டம்.1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். அதற்கு... சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஅவர் வழி, த.....னி...... வழி! அப்படி நடந்துதான் அவருக்குப்பழக்கம். அப்பதான் தான் நினைத்தபடி அறிக்கை விடலாம். ரணிலோட மட்டுமா பேசுறார்? எல்லோருடனுந்தான் பேசுறார். அவரே வர வேண்டாம் என்கிறார். அவர்கள் தான் ஒருவரையும் கூட்டி வராதேங்கோ, "நாங்க உங்களுடன் மட்டுந்தான், பூட்டிய அறைக்குள்ள பேசுவம்." என்று அடம் பிடிக்கின்றனர். ஆனால் பாவம் அவர்.... பேசியது, பேசாதது எல்லாவற்றையும் அறிக்கையாக வெளிப்படுத்தி விடுவார். இது போதாதா?1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointசிலவேளை உங்க உண்மையான பெயரிலும் பதிவு இருக்கலாம் ஏன் என்றால் சுமத்திரன் தமிழருக்கு எதிராக பிழை செய்கிறார் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது நீங்கள் மட்டும் தானே இதே யாழில் ? சும்மா கொதிக்க வேணாம் பேராண்டி சும் கனடா வந்தவுடன் சில நேரம் ஏன் தனி கார் எடுத்து போகிறார் அதையாவது புரிந்து கொண்டால் காணும் ?1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல் கையாலாகத்தனத்தை விமர்சித்த தலைவர் எமது அரசியல்த் தலைமைகளின் கையாகாலத் தன்மையும், எதிரியின் சூட்சுமங்களை அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்துகொள்ளத் தவறியமையுமே நாம் இன்றிருக்கும் அவல நிலைக்குக் காரணமாகும். அரச பயங்கரவாதம் தனது கொலைநகங்களை கூறாக்கிக்கொண்டும், இனவாதப் பேய் எமதினத்தை அழித்துக்கொண்டும் இருக்கையில் எமது பாராளுமன்ற தலைவர்கள் தமது ஆசனங்களில் இறுக ஒட்டிக்கொண்டும், அற்பச் சலுகைகளுக்காக இனவாதிகளுக்கு சாமரமும் வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்துச் செய்த தவறு வளர்ந்துவரும் தமிழ் இளைஞர்களின் உயிர்ப்பான ஆயுதப் போராட்டத்தினை மலினப்படுத்த முயன்றது. எமது உயிரைக் கொடுத்து நாம் முன்னெடுத்துவரும் தவிர்க்கமுடியாததும், அவசியமானதுமான எமது தேச விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். அரசியல் சலுகைகளுகளுக்காக எமது தியாகம் செறிந்த ஆயுதப் போராட்டத்தினை அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாகப் பாவித்து எம்மை மலினப்படுத்தி வருகிறார்கள். எமக்கான சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்கு நாம் ஆயுதமேந்திப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள மறுத்துவருகிறார்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கை என்பது சற்றும் கிடையாது.அதனால்த்தான் எமது நாட்டை ஆக்கிரமிக்க இந்திய இராணுவத்தினை வரும்படி அழைக்கிறார்கள். எமக்கு இந்தியாவின் உதவி வேண்டும். அவர்களின் ஆதரவு வேண்டும். அவர்களின் நன்மதிப்பு வேண்டும். எமது தனிநாட்டிற்கான ஆதரவினை நல்குவதற்கு இந்தியாவை நாம் வற்புறுத்த வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையினை இந்தியா ஏற்றுக்கொள்ளும்படி நாம் கோரவேண்டும். தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தனித் தமீழீழமே என்பதை இந்தியாவுக்கு நாம் உணர்த்த வேண்டும். ஆனால், இவற்றைச் செய்யாது, எமது பிரச்சினையில் தலையிடுங்கள், தீர்வைத் தாருங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்சுவது அவர்களின் அரைசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகிறது.1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇவர் அதிரடியாக களம் இறங்கியது தவறு. அங்கே போய் நின்று கொண்டு, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அங்கு நின்ற ஒருவர், உங்களுக்குந்தான் இருக்கிறது என்கிறார். இவர் செய்திருக்க வேண்டியது அந்தக்குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், இப்போ என்ன நடந்தது? திடீரென களத்தில் குதித்து, போர்களமாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வேறு மாதிரி கையாண்டு இருந்தால் குற்றவாளியை சிக்க வைத்திருக்கலாமல்லவா? முன் ஆயத்தம், யோசனை இல்லாமல் இப்படி சுடுகுது மடியைப்பிடி என்று எல்லாவற்றயும் ஒரே நேரத்தில் கையிலெடுத்து இப்படி போட்டுடைக்கலாமா? சாவகச்சேரி நீதிமன்றம் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்காக ஆயராகும் சட்டத்தரணிகளுக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை மீறுவதனாலேயே இவர் இப்படி விமர்சிக்கப்படுகிறார். அதை அவர் கடைபிடித்திருந்திருந்தால் இவருக்குப்பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் அல்லவா கைது செய்யப்பட்டிருப்பார்? இப்போ, எதிரிகள் பலரை ஒன்றாக தனக்கெதிராக இணைத்து விட்டிருக்கிறார். இவர் எங்கு போனாலும் துரத்தப்படுவார், தான் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காதவரை!1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointவைத்தியர் அர்ஜுனா அரசியலுக்கு இன்னும் தயாரில்லை என்றே கருதுகிறேன்.இப்போ அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பல அரசியல் கழுகுகள் தங்களுக்கு சாதகமாகவும் அவரின் இருப்பை இல்லாமல் செய்யவும் பயன்படுத்தும். அதற்கு முதல் அவர் தனது நேர்மையையும் பொறுமையையும் காத்து மக்கள் அவர்மேல் வைக்கும் மதிப்பு உண்மையானது, அவர் மக்களுக்கு உண்மையாய் இருப்பார் என்பதை காட்டுவதே இப்போதைய அவரது முதற் கடமை. இவர்களைபோன்றவர்களையே சிங்களம் தேடும். காரணம்; மக்கள் மதிப்பு, வாக்கு வங்கியை உயர்த்தும், மிக எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர், எளிதில் ஏமாற்றி எதிலும் சிக்க வைக்கலாம். அவர் செய்தது சரியாகிலும் வரம்பு மீறி செயற்படுவதனால் தனது தொழிலை, மதிப்பை இழந்து சொல்லவந்த உண்மையை நீர்த்துபோகச்செய்து விடுவார் போலுள்ளது. இவர் இப்போ செய்ய வேண்டியது அரசியலல்ல தான் வைத்த குற்றச்சாட்டு உண்மையானது என நிறுவி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும், தன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபித்து அதிலிருந்து வெளிவரவேண்டும், அதற்கு சட்டத்தரணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இப்போ அவர் ஒரே நேரத்தில் பல தோணிகளில் கால் வைத்து சில நாளில் பிரபல்யமடைந்து அரசியல் செய்யும் கனவை விட்டு ஒன்றொன்றாக கவனமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இந்த தேர்தல் காலத்தை அனுபவமாக கூர்ந்து கவனித்து பின்வரும் நாட்களில் இறங்கலாம், இப்போ அரசியல் முடிவை எடுத்தால் பின்வரும் நாட்களில் மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிப்பார்.1 point- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
அது என்றால் உண்மை தான் உறவே தலையிடி பிடித்த அரசியல் விடியோக்களை பார்ப்பதை விட விளையாட்டு பார்ப்பது மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது 👍1 point- வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
அர்ச்சனா வைத்தியர் தானாகவே தான் அந்த இறந்த பிள்ளையின் குடும்பத்தோடு போண் எடுத்து கதைச்சு எல்லா விபரங்களுக்கும் கேட்டு அறிந்த பின் தான் வருகிறேன் என்று சொல்லி உள்ளதாக அவரது லிங்கிலயே பார்த்திருக்கிறேன்.மக்கள் சும்மா எங்க நியமனம் கிடைக்குதோ அங்கே வாங்களன் என்று சொல்வது வழமை தானே.அது மட்டுமல்ல வேறு யாரும் போய் அந்த குடும்பத்திற்கு உபத்திரவம் குடுக்காதீங்கோ,அப்படி யாரும் வந்தால் அயலவர்கள் யாராவது பார்த்து திருப்பி அனுப்பி விடுங்கோ என்று அர்ச்சனா சொல்லி இருந்தார்..இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம் ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்.அவரை குறை சொல்வதோ அல்லது குறை கண்டு கொள்வதோ என் நோக்கம் அல்ல..ஆனால் நிறைய பிழை விடுகிறார்.எங்க போனாலும் யூருப் வால் பிடியள் .1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஅப்பப்போ வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சில தனிப்பட்ட காணொளிகள் மூலமும் வெளிவந்தன அப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ சமூக ஆர்வலர்களோ நடவடிக்கை எடுத்திருந்தால், தட்டிக்கேட்டிருந்தால் இவ்வளவுதூரம் போயிருக்காது. முன்னர் வன்னிப்பிரதேச சுகாதார ஊழியர் ஒருவர் இதை வெளிக்கொணர்ந்தபோது அவரது தலைமையக்கத்தோடு தொடர்பு கொண்டு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார்கள். இவர்கள் சரியாக நடந்திருந்தால், அவர் வெளிப்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காதே. அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், யார் இந்தக்குறைகளை வெளிப்படுத்த முன்வருவர்? தரங்கெட்டவர்கள், நேர்மையாளரை துரத்துவார்கள் அல்லது அவர்களை சுயமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு திறமை இல்லை அல்லது மக்களுக்கு சேவை செய்யாமல் கள்ள உடம்பு வளர்த்து சம்பளம் வாங்க வேண்டும். இதுவும் ஒரு களவுதான். பலவகை இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் இவர்களுடன் சண்டை இடாமல் பொறுமையாக, தாமதமாகவேனும் பயன் பெற நினைத்து பேசாமல் இருந்திருக்கலாம், கதைத்தால் இப்போ நடப்பதுபோல் தங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் இதனால் அவசர நோயாளர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்து பொறுத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எந்த மனிதனும் நிரந்தரமாக, சுகதேகியாக, அதிகாரத்தோடு, அதே பதவியில் வாழப்போவதில்லையென்கிற உண்மை புரிந்தால் இப்படியெல்லாம் ஆடமாட்டார்கள். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் பேசும் பேச்சு; பரதேசி, நீ, டேய், உன்ர பதிவுகளை நீதிமன்றம் ஏற்குமா? அப்போ நீதிமன்றம் ஏற்காதென்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்று பொருளா? நீதிமன்றத்தில் அதற்கும் இடமிருக்கு என்பது பேசியவருக்கு தெரியாதுபோல் உள்ளது. ஒருவர் தன் பாதுகாப்புக்காக கொலை செய்யலாம் என்றால், ஏன் குரல் பதிவு செய்ய முடியாது? ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தால் இறந்தவரின் தொலைபேசியை போலீசார் சோதனையிடுவதன் காரணம் என்ன?1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஇது சுமந்திரனின் வழமையான செயற்பாடுதான். சிங்களத்துக்கு வாக்கு போடாவிட்டால் நாம் ஒன்றும் தீர்வு காணமுடியாது என்று பயமுறுத்துவது, அப்படி காலம் காலமாய் போட்டு என்னத்தை கண்டோம்? அது சரிவரவில்லையோ .... இதோ! தேர்தல் முடிந்த கையோடு தீர்வு, நான் தனிநபர் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன் என்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் பாக்கி என்றார், பின்னர் ரணில் ஏமாற்றி விட்டார் என புலம்பினார். ரணிலோ தற்காலிக ஜானாதிபதியானவுடன், சுதந்திர தினத்துக்குமுன் தீர்வு என்று வேறு சொன்னார், எதுவும் நடக்கவில்லை. உறுதியளிக்கும்போது தெரியாதா அவருக்கு இது எவ்வளவு அசாத்தியம் என்று? அப்போ பொழுது போக்குக்கு சொன்னாரா? உதெல்லாம் தேர்தற் பேச்சு, தேர்தல் முடிந்தால் போச்சு. அவசரமாக தேர்தல் தீர்வு பொதி தயார்! அவர்களிடம் தமிழருக்கான தீர்வு ஏதும் இருந்திருந்தால் ஏன் இவ்வளவுகாலமாக இழுத்தடிக்கிறார்கள்? இன்னும் ஏன் நமது நிலத்துக்குள் ஊடுருவுகிறார்கள்? தடை ஏற்படுத்துகிறார்கள்? திருப்பித்தரவேண்டாம், இருக்கிறதையே அச்சுறுத்தி பிடுங்குகிறார்கள். சிங்களத்தை நாடிபிடித்துப்பார்க்க சுமந்திரனுக்கு அனுபவமில்லை அல்லது சுயநலம் விடவில்லை. மக்களோடு மக்களின் பிரச்சனையில் பிரசன்னமாகாதவர், அவர்களின் பிரச்சனை என்னவென்று தெரியுமா? சிங்களத்தோடு சேர்ந்து வாழ்வது அவரது இனிய அனுபவத்தில் நமது பிரச்சனை தெரிய வாய்ப்பேயில்லையே. கோத்தபாய தப்பி ஓடும்வரை அரகலியாவை ரசித்தவர் பதவிக்கு வந்தவுடன் அதை எவ்வாறு சிதைத்து தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து தனது காரியத்தை நிறைவேற்றினார். ஆனால் பேரின வாதிகள் தமிழருக்கெதிராக முழக்கமிடும்போது ஏன் அமைதியாக இருந்தார்? அவரால் செய்ய முடியாததல்ல, செய்ய மாட்டார்கள். ஆசை காட்டி தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வார்கள் இந்தப்பிரச்சனை. இல்லாவிடில் அவர்களால் அரசியல் செய்ய முடியாத அனாதையாகி விடுவார்கள். பார்க்கவில்லையா நாமல்த் தம்பி சொன்னதை? தமிழரோடு அதிகாரங்களை பகிரவிரும்பாமல், இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் அடைந்து நிராதரவாய் நிற்கும்போது மன்னிப்பு கேட்க்காதவர், அதிகாரங்களை பகிர முன்வராதவர், ஏன் வெற்றிவிழாக்களில் பெருமிதமாக தோன்றியவர், இவ்வளவு காலமும் இல்லாமல் தேர்தல் வரும்போது, ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ வருவதை விரும்புகிறாராம். அதை ஏன் இவ்வளவு காலமும் அறிவிக்கவில்லை? இது நடக்கக்கூடிய காரியமா? ஒருவேளை சிங்களமக்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க தொடங்கிவிட்டால்; என்கிற சந்தேகம் வர ஆரம்பித்து அதை தடுக்க எடுக்கும் நடவடிக்கையாக இருக்குமோ? அதிகாரங்களை பகிருகிறோம் என்றால் மீள் பரிசீலனை செய்யலாம், இது நடைபெற முடியாத காரியம், வேண்டுமென்றால், சுமந்திரன் டக்கிளஸ் இன்ன பிறர் நம்பலாம். நாங்கள் உங்களை நன்றாகவே கணித்து வைத்துள்ளோம். இவர்களின் தேர்தல் வாக்குறுதி, வடக்கில்; "பிரச்சனையை தீர்க்கிறோம்." தெற்கில்; "தமிழருக்கு உரிமை ஏதும் இந்த நாட்டில் இல்லை." இதுதான் இவர்களின் தேர்தல் மூலதனம். இதை தமிழர் நாம் தெரிந்து இந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து நிலைத்து நிற்போமானால், பின்னாளில் தெற்கும் மாறும்.1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஇன்னுமா... இந்த உலகம் நம்பளை நம்புது. 😂 ஆமா... அது, அவங்க விதி. 🤣1 point- சரத் பொன்சேகா - அமெரிக்க தூதர் கொழும்பில் திடீர் சந்திப்பு
அமெரிக்கா தனக்கு தேவையெண்டால் ஆரையும் எவரையும் தன்ரை கையுக்க போடும்.சரிவராட்டில் போட்டுத்தள்ளும். 😁1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointதமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல...1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointவந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointசிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂 தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1 point- ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔1 point- ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.1 point- மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம். ‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது. காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை. மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது. அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார். அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள். மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே! மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay Sethupathi starrer maharaja movie review - hindutamil.in1 point- ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
எந்தக் குமாரசாமியை சொல்லுகிறீர்கள்.?????? அந்த பலகாரங்கள் . கடத்தியவரையா??🤣1 point- ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது 90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள், இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம், மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம் சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின. பாலஸ்தீன பிரச்சனையில் பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா? இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள். அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட. ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா? ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும் நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது. அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள் அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே. அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா? பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள். நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை. அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே!1 point- மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நானும் அகன்ற திரையில் பார்க்கவில்லை. Netflix இல் வந்தமையால் ரீவியில் தான் பார்த்தேன். மஹாராஜா படத்தின் வெற்றி அது எடுக்கப்பட்ட விதத்திலும் இறுதி twist இலுமே இருக்கின்றது. Dark humor வகைப் படம். @பெருமாள்குறிப்பிட்டுள்ள போன்று படத்தை துண்டு துண்டாக, non linear ஆக எடுத்தமையால் நன்றாக உள்ளது ( இந்த முறையை தமிழுக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம் - அலைபாயுதே படத்தில்). ரயில் படம் இன்னும பார்க்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டு ஆண்கள் குடிகாரர்களாக, சோம்பேறிகளாக இருப்பதால் தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என காட்டியுள்ளனர் என விசனப்பட்டு எழுதப்பட்ட விமர்சனங்களை பார்த்தேன். இது கள யதார்த்துக்கு முரணானது என்கின்றனர்.1 point- மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்தேன். படம் அருமை! இன்னும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை. விஜய் சேதுபதி மீண்டும் மனசில் ஒட்டி விட்டார். நல்ல படம் பார்க்க விரும்புகின்றவர்களுக்குரிய படம்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் : வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா - யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர். அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு ஐம்பது வாகனங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார். 29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார். அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன. தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல் இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள் தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து, 1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள் முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன : கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அளம்பில்.1 point- நானும் கவிதாயினியும்.....💕
1 pointபடைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே...1 point - தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.