Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3054Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்6Points7048Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/06/24 in all areas
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
5 pointsஇது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம். ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம். பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே. தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா? ஆமா. உறுதி கூறினார், இருக்கட்டும். திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க. சரி எப்ப செய்ய வசதி. அட போங்கப்பா இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா? இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ? சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ? கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான்.5 points -
இரசித்த.... புகைப்படங்கள்.
4 points4 points
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர். சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர். இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான். //இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ// கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது. மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது) அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.3 points- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
எதைத் தான் எழுதுவது இந்த கொலைகாரக் கூட்டத்தைப் பற்றி? இப்படியாக பல கேஸ்கள் இருபது ஆண்டுகள் முன்பு கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். லேடி ரிட்ஜ்வேயில் கைக்குழந்தைக்கு கை அகற்ற வேண்டிய நிலை வந்த அசமந்த நிலை, ஒரு புற்று நோய் நிபுணரான மருத்துவருக்கே எச்.ஐ.வி தொற்றிய இரத்தத்தை ஏற்றிய கதை, நோயுற்ற சூலகத்தை விட்டு விட்டு நல்ல சூலகத்தை அகற்றிய கதை என்று சம்பவங்கள் பல, ஆனால் எதற்கும் நடவடிக்கையென்று எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை. ஒரு பட்டத்தை எடுத்து, தங்களுக்கு மேல் மேற்பார்வை செய்யவோ அறிக்கையிடவோ யாரும் இல்லையென்று வந்து விட்டால் எந்த நிபுணரும் இந்த அசமந்த மருத்துவ சேவையாளர்கள் போலத் தான் நடந்து கொள்வர்- complacency?. இலங்கையில் Sri Lanka Medical Council என்ற மருத்துவர்களைப் பதிவு செய்து பணி செய்ய அனுமதிக்கும் அமைப்பும் இருக்கிறது. இவ்வளவு அக்கப் போர் நடக்கிறது, இந்த அமைப்பு இதைப் பற்றி ஒரு மூச்சும் விட்டதாகவோ, தற்காலிகமாவேனும் சம்பந்தப் பட்ட மருத்துவர்களின் அனுமதியை மீளப் பெற்றதாகவோ தெரியவில்லை. இந்த தாயின் மரணத்தினாலாவது ஏதாவது நன்மை நடக்கட்டும்!3 points- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இது "வரும் ஆனால் வராது" என்ற கதையாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். மாகாண அமைச்சுக்கு யார் தவறு செய்தார் என்பது இப்போது தெரியும். அந்தப் பணியாளர்களை மத்திய அரசின் விசாரணை முடியும் வரை சம்பளமில்லாத பணி இடை நிறுத்தம் செய்யலாம், செய்தால் மத்திய அரசின் விசாரணையை பணி நீக்கம் செய்யப் பட்டவர்களே துரிதமாகச் செய்யும்படி மன்றாடுவர். என் கணிப்பு, இப்படி பணி இடை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். மக்கள் மறந்து நகரும் வரை மத்திய அரசின் விசாரணை தொடரும். இறுதியில் யாரும் தண்டிக்கப் பட மாட்டார்கள். சீரழிந்த சிறிலங்காவின் நடைமுறைகளில் இது புதிதல்ல. இதற்கு தீர்வு என்ன? நீதிமன்றில் பாதிக்கப் பட்ட குடும்பம் சிவில் வழக்குப் போட வேண்டும். மன்னார் மருத்துவமனைப் பணிப்பாளரையும் அந்த நேரம் கடமையில் இருந்த மருத்துவரையும் எதிராளிகளாக (respondents) குறிப்பிட்டு வழக்கைப் போட்டு வைக்க வேண்டும். சிவில் வழக்கு இழுபடும், ஆனால் பெயர்கள் வெளியே வரும், ஒரு கட்டத்தில் மாகாண அமைச்சின் அறிக்கையையும் நீதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டி வரும். முகநூலில் நேரம் வீணாக்குவதை தவிர்த்து சட்டத்தரணிகள் இதைச் செய்ய உதவினால் அது பயனுள்ளதாக இருக்கும்.2 points- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.2 points- யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
இனிமேல் காலத்தில் ஒரு பெண் தாய்மை அடைவதற்க்கு உடல் மற்றும் மன நிலையில் தகதி உள்ளவரா என்றும் சோதிக்க வேணும் போல.2 points- தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
ஒரு கூடை முழுக்க முட்டாள்களை போட்டால் என்ன நடக்கும்? எது நடக்குமோ அதுவே இங்கு நடக்கின்றது.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல் எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள். அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும் எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது. எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.2 points- மேட்டூரில் அணை வெள்ளத்திற்கு நடுவே சிக்கிய நாய்கள்: டிரோன் மூலம் அளிக்கப்படும் உணவு - மீட்கப்படுவது எப்போது?
படக்குறிப்பு,நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு கொண்டு செல்லப்படும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பை படம் பிடிக்க சேலத்தை சேர்ந்த ஒருவர் பறக்கவிட்ட டிரோன் கேமராவில், வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்த கருப்பு நாய் ஒன்றின் படம் பதிவானது. இது பலரின் கவனத்தை மேட்டூரை நோக்கி திருப்பியுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய பட்டாளமே மேட்டூர் அணையின் 16 ம் கண் மதகு பகுதியை நோக்கி முகாமிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஜூன் 30ம் தேதி மாலை மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சேலத்தை சேர்ந்த சாய் என்பவர் கடந்த 1ம் தேதி டிரோன் கேமரா மூலம் இதை படம் பிடித்தார். அப்போது 16 கண் மதகு பகுதி அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளுக்கு நடுவே கருப்பு நாய் ஒன்று சிக்கி தவித்தது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால் நாயை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் டிரோன் மூலம் நாய்க்கு உணவளிக்கும் பணியை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர். வெள்ளத்திற்கு நடுவே பரிதவிக்கும் நாய்கள் இந்தநிலையில் பாறைக்கு நடுவே சிக்கியிருந்த நாய் ஆற்றில் குதித்து நீந்தி அருகேயிருந்த மணல் திட்டிற்கு சென்றது. அங்கு இதேபோல் மேலும் பல நாய்கள் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றிற்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கியுள்ள நாய்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி 'விலங்குகளின் சொர்க்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆம் தேதி பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் துறையினர், டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர். படக்குறிப்பு,மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கும் போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்கள் அணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றப்படும் அளவு குறைந்திருப்பதால் நாய்களை மீட்கும் பணியை துவங்க உள்ளதாக தீயணைப்பு துறையினர் நேற்று (ஆகஸ்ட் 5) கூறினர். ''16 கண் மதகு பாலம் அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டில் நாய்கள் சிக்கியுள்ளன. அந்த திட்டு 20 முதல் 25 அடி நீள அகலமுடைய திட்டாகும். மணல் திட்டில் மரங்களும், பாறைகளும் உள்ளன. இதனால் நாய்கள் பாதுகாப்பாகவே உள்ளன.'' ''கடந்த 4 நாட்களாக அவற்றிற்கு உணவு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்திருப்பதால் அவற்றை நீரில் இறங்கி மீட்கும் பணியை துவங்க இருக்கறோம். தீயணைப்பு துறை இணை இயக்குநர் கல்யாண்குமார் ஷெட்டி தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற உள்ளது'' என சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தெரிவித்தார். டிரோன் மூலம் உணவு நாய்களுக்கு உணவளிக்க டிரோன் இயக்கி வரும் தன்னார்வலரான ஜியோ டெக்னோவேலி இயக்குநர் சர்வேஸ்வரன் கூறும்போது, ''1 கிலோ வரை எடுத்து செல்லும் டிரோன்களை பயன்படுத்தவே எங்களுக்கு அனுமதி உள்ளது. 30 கிலோ டிரோன்களை பயன்படுத்த அனுமதி அளித்தால் அதன் மூலம் நாய்களை மீட்கலாம். இதற்கான அனுமதியை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அரசு தரப்பில் அனுமதி வழங்கவில்லை.'' ''நாய்கள் மீட்கப்படும் வரை, மூன்று வேளையும் டிரோன் மூலம் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன்'' என்றார். ''தண்ணீர் குறையும் போது நாய்கள் தானாக நீந்தி வெளியே வந்துவிடும். நாய்களுக்கு நன்றாக நீச்சல் தெரியும். தண்ணீர் அதிகமாக சென்றதால் பயந்து அங்கேயே நின்றுள்ளன. நாய்களுக்கு ஸ்டாமினா அதிகமாக உள்ளது. அவை பசியை தாங்க கூடியவை. நாய்களின் உயிருக்கு பாதிப்பில்லை. நாய்கள் கூட்டமாக இருப்பதால் அவை மனரீதியான நம்பிக்கையோடே இருக்கும்'' என்றார் வனத்துறையில் பணியாற்றிய முன்னாள் கால்நடை மருத்துவர் கே.அசோகன். மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவர் வெங்கடேசன் கூறும்போது, ''நாய்களுக்கு கடந்த 4 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிக்கன் பிரியாணி, ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்பட்டது. நாய்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது. 40 தீயணைப்புதுறை அலுவலர்கள், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார். கருப்பு நாய் எங்கே போனது? ''அணையில் நீர் திறக்கப்பட்டபோது கருப்பு நாய் ஒன்று சிக்கி கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு உணவு அளிப்பதற்காக கேமரா டிரோன் அனுப்பிய போதுதான் மேலும் 6 நாய்கள் அங்கே இருப்பது தெரிய வந்தது'' என்கிறார் ஹெவன் பார் அனிமல்ஸ் அமைப்பின் அறங்காவலர் செந்தமிழ் கிருஷ்ணன். படக்குறிப்பு,நாய்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் குழுவினர் ''இதற்கிடையே எங்கள் அமைப்பின் நிறுவனர் பிரகாஷ் காந்த் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரச வழக்கை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாய்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்'' என்கிறார் அவர். ''நீர் குறைந்தவுடன் நாய்கள் வந்துவிடும் என்று கூறுகின்றனர். அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் மீட்பதே சிறந்த வழியாக இருக்கும்'' என்றார். ''இன்று அல்லது நாளை 16 கண் மதகு பகுதியில் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட உள்ளது. நாய்கள் உள்ள பகுதியில் நீர் செல்ல வாய்ப்பில்லை. நீர் நிறுதப்படும் போது அவையே நடந்து வந்துவிட வாய்ப்புள்ளது. கருப்பு நிற நாய் ஒன்று தானாகவே நீந்தி வெளியே வந்துவிட்டது. மற்ற நாய்கள் மீட்கப்படும் வரை 3 வேளையும் உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்'' என்றார் சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சாமிநாதன். https://www.bbc.com/tamil/articles/cx2xxqw5x0xo1 point- விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!
விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்! விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா். தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் தொிவித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் குறித்தே தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என தான் முன்னா் கூறியிருந்ததாகவும், எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தொிவித்தாா். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் என்பதால், இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1394797 @புலவர்1 point- குட்டிக் கதைகள்.
1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 pointஅடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீழே மூழ்கிப் போய்க் கொண்டிருக்கும் போது தான் சுழியோடும் வித்தையை கற்றுக் கொண்டேன். அன்று அக்கணத்தில் நான் அதைக் கற்றுக் கொள்ளாதிருந்தால், இன்று இருந்திருக்கமாட்டேன், ஆனாலும், உலகத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இருந்திருக்காது. 99.9999999..... வீதமான மனிதர்களின் நிலை இது தான். நாங்கள் இருந்தால் என்ன, போனால் என்ன, பூமி எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாதையில் உருண்டு கொண்டே இருக்கும். பந்தடி என்றால் என்ன, பனையில் ஏறுவது என்றால் என்ன, எல்லாமே அன்று அங்கே நாங்களாகவே கற்றுக் கொண்டது தான். விரும்பியவர்கள் செய்தார்கள், விரும்பாதவர்கள் செய்யாமல் விட்டார்கள். ஆனாலும் இந்த அணுகுமுறை இன்று இங்கு வேலை செய்யவே செய்யாது, ஒழுங்கு மரியாதையாக பிள்ளைகளை சில இடங்களிற்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று பல முனைகளிலும் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்தன. முக்கியமாக ஐந்து வயதிலேயே எந்த ஆங்கிலச் சொல்லையும் எழுத்துக் கூட்டத் தெரிந்த ஒரு பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், கொடியைக் காட்டினால் அந்த நாட்டைச் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், அமெரிக்க ஜனாதிபதிகளை அதே வரிசைகளில் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர் என்று பல வித்தைகளும் தெரிந்தோர் சுற்றிவர இருந்தனர். கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. எப்படியும் மகனுக்கு அது அதுவாகவே வரும், வந்திருக்கும் என்று கால்பந்துப் பயிற்சிக்கு கூட்டிப் போனேன். அந்தப் பயிற்சியாளர் இங்கிலாந்தில் விளையாடினவர் என்றார்கள். அந்த வருடம் முழுவதும் பந்துடனோ அல்லது பந்தின் பின்னாலோ மகன் ஓடவில்லை. பயிற்சியாளரின் பயிற்சியின் படி அவன் எதிரணிகளின் ஒரு வீரரின் பின்னாலேயே ஓடிக் கொண்டிந்தான். மகன் நல்லா ஓடுகின்றார் என்றார் அந்தப் பயிற்சியாளர். அடுத்த வருடம், இந்தக் கொடுமைக்கு நானே பயிற்சியாளராகலாம் என்று அதற்கான வகுப்புகளை முடித்து பயிற்சியாளர் ஆகினேன். எல்லோரையும் விட உயரமாகவும், பருமனாகவும் ஒரு சிறுவனும் அணியில் இருந்தார். அந்தச் சிறுவன் தடபுட தடபுட என்று ஓடினாலேயே மற்ற எல்லா சிறுவர்களும், எதிரணி உட்பட, வழிவிட்டு ஒதுங்கினர். இடிபட்டால் சேதம் எங்கே என்று தெரிந்தே எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர். அந்தச் சிறுவன் மூன்றாம் நம்பர் பந்தை கால் பெருவிரலால் குத்தி ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இப்படி விளையாடுவதில்லை, பந்தை குத்தக் கூடாது, அடிக்க வேண்டும் என்று நான் அச் சிறுவனுடன் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவனின் பெற்றோர்களோ அல்லது மற்ற சிறுவர்களின் பெற்றோர்களோ அந்தச் சிறுவன் நல்லாகவே விளையாடுவதாக நினைத்தார்கள். சிலர் எனக்கு அதை மறைமுகமாக சொல்லக்கூட முயன்றார்கள். நான் எதையும் மாற்றத் தேவையில்லை, மாறாக அந்த பெருவிரலால் பந்தை குத்துகின்ற சிறுவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர். இங்கு பலருக்கும் கால்பந்து விளையாட்டு தெரியாது. அதன் அடிப்படைகள் தெரியாது. மூன்றாம் நம்பர் பந்தை காலால் குத்தலாம், நாலாம் நம்பர் பந்தைக் கூட குத்தி விடலாம், ஆனால் ஐந்தாம் நம்பர் பந்தை குத்த முடியாது என்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், ஒவ்வொரு தூரத்திற்கும் பந்தை அடிக்கும் முறைகளே வித்தியாசமானவை என்றேன். வெளிப்பக்கம், உட்பக்கம், நடுப்பக்கம் என்று பந்தை அடிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை பழக வேண்டும் என்றேன். அது எல்லாம் அனுபவத்தில் வரும் என்றனர். அடிப்படை வேறு, அனுபவம் வேறு. அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் அனுபவத்தில் எதுவும் வராது என்றேன். வெறும் கால ஓட்டம் என்பது அனுபவமே கிடையாது. பதினாலு வயதின் பின் நான் அந்தச் சிறுவனை கால்பந்து விளையாட்டில் காணவேயில்லை. அந்தச் சிறுவனால் இனி இந்த விளையாட்டை விளையாடவும் முடியாது. காலப்போக்கில், அனுபவம் வரவர சரியாவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில மனிதர்கள், அவர்களின் அடிப்படையே தவறாக இருப்பதால், பெரும் ஏமாற்றமாகவே இறுதியில் முடிவார்கள்.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 point👍.... என்னுடைய காலத்தில் ஊரில் இருந்த கழகங்களில் உதயசூரியனின் விளையாட்டுத் திறமை முன் போன்று இருக்கவில்லை. ஆதிசக்தி, ஒற்றுமை, ரெயின்போ என்பன நன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், உதயசூரியன் வீரர்களின் சங்கிலிகளும், மோதிரங்களும் என்றும் மாறவில்லை..........🤣 புளூஸ் எப்போதும் போல நல்ல அணியே, எல்லா ஊர்க் கழகங்களில் இருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்படும் அணி என்பதால். கழகங்களுக்கு விளையாட ஆரம்பித்து, பின் மிக விரைவிலேயே ஊரிலிருந்து வெளிக்கிட வேண்டியதாகப் போய் விட்டது.............😌.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 point🤣............ எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றது போல, சுவி ஐயா........ தலையையும் நீட்டாக வளர்த்துக் கொண்டு, உயரமும் சரியாகவே வரும், மரடோனா என்றிருக்க, இழுத்துக் கொண்டு வந்து ஃபுல் பாக்காக நிற்க வைத்துவிட்டார்கள். விளையாடிய எல்லா இடங்களிலும் இது நடந்தது. இங்கு தென்னமெரிக்கர்கள் தான் அதிகமாக அணிகளில் இருப்பார்கள். ஒரு கடுகதிப் புகையிரதம் போல நேர வந்து மோதுவார்கள்............. உள்ளிருக்கும் ஈகோ, செருக்கு விழ விடாது. அடி எவ்வளவு விழுந்தாலும் வீட்டில் சொல்லவும் முடியாது, அதிகமாக நொண்டவும் முடியாது.........😃.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 point1 point- புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்.
1 pointஇணையத்தளத்தில் பார்த்து சிரித்தவை. இப்படியும் பாடம் எடுக்கிறார்கள்.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 pointஎங்கள் வாழ்க்கையே யாழ் இந்துக்கல்லூரி மைதானத்துக்குள்ளேயே தொடங்கி அங்கேயே வேரூன்றி நாட்டை விட்டு வெளியேறும் வரை வேரோடு பிடுங்கி எறியப்பட்டோம் .......! எங்களிடம் "ஸ்ரீஸ் கந்தா ஸ்போர்ட்ஸ் கிளப்" இருந்தது ........எங்கள் பொடியங்களில் நான்தான் குள்ளம் ........அதனால் கால்பந்து என்றால் நான்தான் கோல்கீப்பர் , கிரிக்கட் என்றால் நான்தான் அம்பயர் ......சிலசமயம் எதிரணிக்கும் நான் அம்பயர் ஆக இருப்பேன் ......(அப்பவே அவ்வளவு நேர்மை என்னிடம் வாழ்ந்து கொண்டிருந்தது) ........பின் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போக கிளப்பில் தவிர்க்கமுடியாத ஆல்ரவுண்டராய் ஆனேன் .......! நினைவுகளை மீட்டியதற்கு நன்றி ரசோ .........! 😂1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 point👍......... மிகவும் சரியான கூற்று, வசீ. அனுபவம் மிக அவசியமானது. பல சிவில் பொறியியலாளர்களுடன் கதைக்கும் போது, இந்த இரண்டுக்கும் இடையேயான சில மோதல்களை சொல்லுவார்கள். 'என்னுடைய அனுபவம் உன்னுடைய வயதை விட அதிகம்.........' என்ற வழமையான வசனத்துடன் நிற்கும் சிலருக்கும், இவர்களுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள் பற்றிச் சொல்வார்கள். வேலை முடிவில், குழாயில் தண்ணீர் எதிர்ப் பக்கமாக ஓடியது, நடுவிலேயே நின்றது போன்ற கதைகளும் உண்டு. நீண்ட கால அனுபவம் இருந்தாலும், அதை இன்னொரு, புதிய சூழ்நிலைக்கும் ஏற்ற விதத்தில் மாற்றும் தகமை வேண்டும். அதுவே திறமை என்று சொல்லலாம். ஆனால், நான் சொல்ல வந்த விசயம் பந்தடி பற்றியோ அல்லது கட்டுமானம் பற்றியோ அல்ல. இன்றைய நாட்டு நடப்பை பற்றியே சொல்ல வந்தேன். ' அவர் புதிசு, அனுபவம் வர சரியாகி விடுவார், .....' என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் அவரின் அடிப்படையே தப்பாகத் தோன்றுகின்றது என்றே சொல்ல வந்தேன்.1 point- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஸ்ரீலங்காவில் மகிந்தவின் தந்தை ராஜபக்சவின் சிலை உடைப்பும், வங்காளதேசத்தில் தற்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை.... முஜிபுர் ரஹ்மானின் சிலை உடைப்பும்... மீண்டும்... ஸ்ரீலங்கா சம்பவத்துக்கும் , வங்காளதேச சம்பவத்துக்கும் உள்ள ஒற்றுமை.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 point❤️............. நீங்கள் விளையாடியதை நான் ஒரு ஓரத்தில் இருந்து கட்டாயம் பார்த்திருப்பேன் என்றே நினைக்கின்றேன், ஏனென்றால் இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரையும் பார்த்திருக்கின்றேன். 'சாராதாஸ் இலவசம்' என்னும் இரண்டாவது குறுங்கதையில் வருவது இதில் ஒருவரே......... அந்தச் சிறுவன் காலணியைப் போட்டுக் கொண்டே பெருவிரல் பகுதியால் குத்திக் கொண்டிருந்தார். பந்தை அடிக்க முன், ஒரு காலை ஊன்றி, உடலை சமநிலைக்கு கொண்டு வரும் அடிப்படை அந்தச் சிறுவனுக்கு கடைசிவரை வரவில்லை.1 point- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இது உண்மையாக இருபதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம். ஏனெனில், ஆஸ்திரேலியா coco island இல், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தளம் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிரது. எல்லாமே, பச்சையாகவே வெளியில் சொல்லப்டுகிறது, (யுத்தம் வந்தால்) சீனாவுக்கான வழங்கலை தடுப்பதற்கு உதவியாக என்று. அனால், பங்களாதேஷ Chita Kong துறைமுகத்தை சீனா பங்கு தரராக அபிவிருத்தி செய்தது, அது முழுமையாக இருப்பது பங்களாதேஷ் இடம். இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 pointஅடிப்படை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுப்வமும் முக்கியம் என்பதனை நீங்களே பல வித்தைகளை நீங்களாகவே கற்றதாக கூறியுள்ளீர்கள் இந்த கதையின் போக்கில் கூறியுள்ளீர்கள். இவ்வாறு பயிற்றுனர்கள் பயிற்றிவிப்பதனை Explicit learning என கூறுகிறார்கள், ஆனால் சொந்த அனுபவத்தில் பயில்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைப்பவர்களாக உருவாகுவார்கள்.1 point- 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்
அப்ப முதல் வாக்கை இன்னாருக்குத்தான் போட வேண்டும் என்று கூறுவது மக்களின் ஜனனாயக உரிமையில் தலையிடுவதாக அமையாதா சார்.1 point- மேட்டூரில் அணை வெள்ளத்திற்கு நடுவே சிக்கிய நாய்கள்: டிரோன் மூலம் அளிக்கப்படும் உணவு - மீட்கப்படுவது எப்போது?
2௦௦9 பக்கத்து நாட்டில் தொப்பிள் கொடி இனம் அழிக்கப்படும் போது இந்த நாய்களுக்கு கொடுக்கப்படும் கருணையில் நூறில் ஒரு பங்காவது கிடைக்கவில்லையே ....................1 point- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
VTX index ஏற்ப சந்தை சல சலப்பிற்கு ஏற்ற வகையிலேயே மற்ற முதலீடுகள் போலவே பிட் கொயினும் செயல்படும், இதன் மூலம் இது ஒரு ஆபத்தான முதலீடாகவே உள்ளது, தங்கம் போலவோ அல்லது நாணயங்கள் போலவோ செயற்படாது என்பது ஒரு புறம் இருக்க USDJPY கூட இரண்டு வாரத்தில் 14% சரிவினை சந்தித்துள்ளது( பிட் கொயினது ஒருவார இழப்பில் பாதியளவு) இது அமெரிக்க டாலரின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டதல்ல, ஜப்பான் தனது பணப்பெறுமதி தொடர் இழப்பு சந்தித்து வரும் நிலையில் அதனை ஈடுகட்டும் முயற்சியினது விளைவு. இரண்டு தசாப்தங்களாக ஜப்பான் எதிர்மறையான வட்டிவிகிதம் மூலம் தனது பொருளாதாரத்தினை வளர்க்க முற்பட்டத்து, உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆபத்து மிகக்குறைந்த carry trade இரண்டு தசாப்தங்களாக செய்து வந்தனர். இறுதியாக பங்குனி மாதம் ஜப்பான் முதலாவது வட்டிவிகித அதிகரிப்பினை மேற்கொண்டலும் யென் தொடர்ச்சியாக அடிவாங்கியநிலையில் ஜப்பான் 150 யென் அமெரிக்க டொலருக்கு எதிரானநிலையில் ஜப்பானிய அரசு தலையிடலை மேற்கொள்ளும் என சந்தையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது 160 வரை சென்றது, இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்டனர் தற்போது பலர் தமது இந்த வர்த்தகத்தினை மூடுவதால் சந்தியில் பெரிய சல சலப்பு ஏற்படுகிறது அத்துடன் பூகோள அரசியலும் இணைந்து கொண்டுள்ளது. அதன் படி 155 இனை யென் நெருங்கிய போது மே மாதத்தில் முதலாவது தலையீட்டினை மேற்கொண்டது அதற்காக செலவழித்த பணம் வீணாகப்போனது, ஏனெனில் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைய ஜூலையில் மீண்டும் வட்டிவிகித அதிகரிப்பு மூலம் ஜப்பான் இதனை எட்டி உள்ளது தற்போது கிட்டதட்ட 141 இல் உள்ளது எதிர்பார்க்கப்படும் இலக்கு 130 இனை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ எட்டுவதே ஜப்பானின் நோக்கம். ஆனால் இந்த நிகழ்வு அமெரிக்க பொருளாதாரத்தின் சவப்பெட்டியின் முதல் ஆணியாக உள்ளது, அமெரிக்க பொருளாதாரத்துடன் உலகப்பொருளாதாரமும் பெரும் நெருக்கடியினை சந்திக்கலாம், சந்தையில் தற்போதய நிகழ்வினை Market correction ஆக நோக்குகிறார்கள், ஆனால் இதனை நான் பொருளாதார சரிவாகவே எதிர்பார்க்கிறேன், அமெரிக்க S&P 500 இரண்டு short நிலைகளை சந்தை மூடும் நேரத்தில் முடியிருந்தேன் பின்னர், சந்தைக்கு பிந்திய நேரத்தில் 2 short நிலைகளை எடுத்துள்ளேன் அதனை சந்தை ஆரம்பிக்கும் முன்னர் விற்கவுள்ளேன் காரணம் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவினை எதிகொள்ளுகின்ற நிலையில் ஒரு அவசரகால வரி விகித குறைப்பு ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (அதனாலேயே அந்த இரண்டுநிலைகளையும் மூடியிருந்தேன்). ஆனால் செப்ரெம்பரில் முதலாவது வரி விகித குறைப்பு என முன்னர் கூறப்பட்டது, அவ்வாறு அவசரகால வரிவிகித குறைப்பு ஏற்படாவிட்டால் சந்தை சரிவு தொடரும் (இதற்கு முன்னர் 3 அவசரகால வரிக்குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியிருந்ததனால் அவசரகால வரி விகிதகுறைப்பு சாத்தியம் மிக குறைவு) அதற்கு பூகோள அரசியல் ஒரு தூண்டல் காரணியாக உள்ளது, அதனாலேயே மத்திய கிழக்கில் தற்போதுள்ள பதற்ற நிலையினை உலக பொருளாதாரம் விரும்பவில்லை, அமெரிக்காவும் விரும்பாது என நம்புகிறேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointநண்பனை கண்டவுடன்... வாயெல்லாம் பல்லாக, கால் நிலத்தில் படமால் துள்ளிக் குதிக்கின்றார். 😂1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 pointAustin Jus 1 j · ஒரே போல் எல்லோரும் பினிசிங் லைனில் கால் வைத்ததால் வெற்றி பெற்றது யார் என்பதில் ஒரு பெரும் குழப்பமே நீடித்த ஓட்டம் .005 செகண்ட் தான் வித்தியாசமாம் 44 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இது போல நடந்தது இல்லியாம் .......! 👍 😂 கொஞ்சம் மெதுவா ஒட்டியிருந்தால் யாருக்கும் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது .........!1 point- ஐந்து பெண்களை திருமணம் செய்து , 49 பெண்களுடன் தொடர்பிலும் இருந்த நபர் ஏமாற்று,மோசடி குற்றச்சாட்டில் கைது.
பிள்ளைகளும் அவரைத்தான் தேடித் திரிகின்றனர் ........ அவரது துப்பாக்கியை வாங்குவதற்கு ........! 😂1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointவெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்! தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. "வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா? 1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா? அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன? 2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது. 3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை? குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. 4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்? மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது. 5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள். 6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்? இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை. விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும். இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம். மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும். நன்றி திருநாவுக்கரசு தயந்தன் 2024.08.06 https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/1 point- கருத்து படங்கள்
1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointபடுகொலை விரிப்புகள் புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: 152-156 நூல் வெளியீட்டு ஆண்டு: 2007 மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் வந்தாறுமூலை படுகொலை - 05, 23/09/1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I வந்தாறுமூலை படுகொலை தொடர்பாக மட்டு. வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் விடுதிக்குப் பொறுப்பாகவிருந்த திரு. வர்ணகுலசிங்கம் என்ற பேராசிரியரின் கண்கண்ட சாட்சியாக கீழ்வருபவை பதிவிடப்படுகின்றன. "............ பல்கலைக்கழக புகலிட இடத்திற்குள் படைத்துறை உள்நுழைய வேண்டாம் என்று ஏற்கனவே சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பலகைகளை வைத்திருந்தோம். உள்ளே இருந்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று படைத்துறைக் கட்டளையாளர் எங்களிடம் வினவினார். வாழைச்சேனை முதல் ஆறுமுகத்தான் குடியிருப்பு வரையிலான 6 ஊர்களிலிருந்து மக்கள் இருந்தனர். இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகள் வந்தன. உள்ளே இருந்த அனைவரையும் வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அப்போது என்னுடன் வாழைச்சேனைச் சேர்ந்த தங்கமணி செட்டியார் இருந்தார். அவர் நல்ல மனிதர். முத்தலி, கலீல் என்ற இரு முஸ்லிம்கள் தரைப்படையினருடன் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் என்னையும் செட்டியாரையும் நன்றாகத் தெரியும். செட்டியாரின் ஊர்தியை கடன் வாங்கி அடிக்கடி ஓட்டி வந்தனர். அவர் தனது இரு கைகளாலும் அவர்களிடம் மன்றாடினார். வரிசையில் நின்றவர்களிடமிருந்து 138 சிறுவர்களை அழைத்து வந்து பேருந்தில் ஏறச் செய்தனர். இரண்டு பேருந்துகளும் புறப்பட்டன. அவர்கள் வாழைச்சேனை நோக்கி செல்வதாக அறிந்தோம், ஆனால் வேறு எதுவும் இல்லை. தாய், தந்தையர் அனைவரும் அலறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. செட்டியார், டொக்டர் ஜெயசிங்கம், தலைமை விரிவுரையாளர் மனோசபாரத்தினம் மற்றும் நானும் 138 சிறுவர்களின் பெயர்களை எடுத்தோம். எங்களிடம் அவர்களின் பெயர்கள் இருந்தபோதிலும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்க யாரைக் கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கேட்ட ஒவ்வொரு படைமுகாமிலும் சிறுவர்கள் இல்லை என்று மறுத்தனர்......." இந்நிகழ்வு நடந்து நான்கு நாட்களில் பேராசிரியரை வாழைச்சேனையிலிருந்த அவருடைய வீட்டிலிருந்து நாவலடி படைமுகாமிற்கு படைத்துறையினர் பிடித்துச் சென்றனர். ஒன்பது நாட்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்: "......அந்த முகாமில் தங்கியிருந்த காலத்தில், சில முஸ்லிம்கள் அந்த முகாமுக்குள் தொப்பியுடன் வருவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த பரப்புகளில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்காக தொப்பிகளை கழற்றி வைத்துவிட்டு தரைப்படையுடன் சென்றனர்....." ".....ஓட்டமாவடி பாலத்தில் சில முஸ்லிம்களின் உதவியுடன் படையினரால் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஓட்டமாவடியிலுள்ள முஸ்லிம்களை யாராவது பிடித்தால், இந்தப் படுகொலைகளின் முழு உண்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இந்த குற்றவாளிகளின் பெயர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை, குற்றங்கள் செய்யப்பட்ட இடங்கள் போன்றவை......" *****1 point- குறுங்கதை 27 -- அடிப்படை அனுபவம்
1 pointகால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. உங்களூர் உதைபந்தாட்ட ஜம்பாவன்கள் .. எனக்கு முன்மாதிரி...வல்வை புளூசில் விளையாடிய ..அருணாசல்ம், கோல்தடுப்பளர் கார்த்தி.. ..யோகச்சந்திரன் (பீலி) ,கட்டியண்ணா... இப்படிப்பலர்...இவர்கள் எமது மைதானத்துக்கு வருவதே ஆடம்பரமாகத்தன்..விளைய்யடுவதும் அழகுதான்..நான் கோல்காப்பளன்..சின்ன வயதிலேயே கார்த்தி என்றுதான் பட்டப்பெயர்...இந்த உதைபந்தாட்ட ஆர்வம் பதின்ம வயதிலேயே ..கோல்காப்பளனக்கிவிட்டது...வடமராட்சி என்ன வடமாகாணம் முழுவதும் விளையாடி இருக்கின்றேன்..வடமராட்சி ஜம்பாவான்கள் றட்ணசிங்கம்..ஜோதிரவி,வேதாபர்ணம், ஜேசுதாஸ்,நேசதுரை,தருமசிறீ...இப்படிப் பலர்..அனைவரிடமும் சிறுவயதிலையே பராட்டும் பெற்றிருக்கின்றேன்...உங்கள் கதையை வாசித்ததும் பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன... கனடாவந்தும் விளையாடினேன்.... பெருவிரலால் குத்தல்....மிக அபாயகரமானது....அது தேவை ஏற்படும் போதும் மட்டும் பாவிக்கலாம் ..ஏன் அந்தப் பையன் காலணி பாவிப்பதில்லையா...இங்குதானே 5 வயதுப் பொடிமுதல் வளர்ந்தோர் வரை பாவிப்பினமே.. என்ன சொன்னாலும் உங்கள் குறுங்கதைகள்.. பழைய நினைவுகளை மீட்டுக் கவலைப்பட வைக்கின்றன..தொடருங்கள்..தொடர்வாசகனாக தொடர்கின்றேன்1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointசும்மா பகிடி விடவேண்டாம் .. ரணில் தேர்தலில் பின் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவேன். என்று கூறியதை உறுதி செய்யுங்கள் ...... ....ரணிலை விட நேர்மையான சிங்களத் தலைவர்கள் எழுதிய உடன்பாட்டை அமுல் செய்யமுடியவில்லை கிழித்து எறிந்து உள்ளார்கள் இது வரலாறு1 point- இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
🤣.......... உலகம் ஈரானை சும்மா உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களே தாங்கள் வைத்திருக்கின்ற பழைய சாமான்களில் பழுதாகப் போய் விட்ட பாகங்களை புதிதாக எங்கே வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்....... இதில சண்டைக்குப் போ, சண்டைக்கு போ என்றால் அவர்கள் எங்கே போவது........1 point- வங்கதேசத்தில் வன்முறை - 25 பேர் பலி
இலங்கையை போல உலக நாட்டாமை வேலை தான் இந்த கரவரங்களும் என்று குற்றசாட்டுக்கள் வர தொடங்கி விட்டன உள்ளூர் நாட்டாமை கையை பிசைத்து கொண்டு பார்க்க வேண்டியது தான்.1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointநாங்கள் செம்மறி ஆட்டை. சாப்பிட்டு தான் பழக்கம் இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம் ஆனால் இங்கே செம்மறி ஆடு எங்களை சாப்பிட பார்க்கிறது 🤣😂 யார் செம்மறி ஆடு ?? என்பதை தெரிந்து கொண்டேனா?? இல்லையா?? 🤣🙏1 point- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
அட ..நம்ம சிறீலங்காவுக்கு .. கடன் கொடுத்த மனுசியை இப்படிச் செய்திடீங்களே..1 point- குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
1 pointஒரு நாள் பின் வளவுக்குள் போட்டிருந்த பனம் பாத்தியை சுற்றி நின்று கொண்டனர். இது என்ன, இதை தோண்டிப் பார்க்கப் போகின்றோம் என்று அவர்கள் ஒரே ஆரவாரம். அப்ப தான் பனங்கிழங்கே பிடிக்க ஆரம்பித்திருக்கும். இது பனம் பாத்தி, இதற்குள்ள பனங்கொட்டைகளை தாட்டிருக்கின்றோம், அவை முளைத்து கிழங்காக வரும், இன்னும் இரண்டு மாதங்கள் போக வேணும்............ இதையெல்லாம் அவர்களுக்கு இங்கிலீசில் சொல் என்று என் வீட்டார் எனக்குச் சொன்னார்கள். இதை இப்ப இங்கிலீசில் சொல்லச் சொன்னாலே அது ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எனக்கு நம்பிகையில்லை.............. 🤣.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointகாத்தோட்டிக் காய்கள்......... ஆடிஅமாவாசை விரதத்தின் திலகம்.......! 👍1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். அதற்கு... சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது. சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?