Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்7Points31968Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்6Points46783Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20012Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/11/24 in all areas
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
4 pointsநான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல் நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற் நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால் மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் இன்னும் சாதி பாப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன் இப்படிக்கு கறுவல் குமாரசாமி4 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
2 pointsமுதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.2 points- ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார் எல்லாமே நமக்காக.2 points- ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார். 😂 🤣2 points- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
ஏற்கனவே எழுத்து மூலமாக 13 வது திருத்தசட்டம் சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானவர்களால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கிடப்பில் போட்டுள்ளார்களே. இதற்கு முன்னரும் எழுதாத ஒப்பந்தங்களா? ஒப்பந்தங்கள் எழுத ஆட்கள் இருப்பது போல் கிழித்தெறியவும் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழருக்கு வேறு வழியும் இல்லை.2 points- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
2 pointsஐயா பாஞ்ச் அவர்களே உங்களுக்கு நாக்கிலும் எழுத்திலும் சனீஸ்வரன் கதகளி ஆடுகின்றான் போல . ...... இவர்களுடைய உசுப்பேத்தலுக்கு ஜொள்ளு விட்டு கடைசீல சோறு வடித்த கஞ்சித்தண்ணிக்கும் ஆபத்து வரும்போல கிடக்கு . ........! 😂2 points- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
2 pointsமன்னிக்கவும், நான் கந்தையாண்ணையோடு நேரடியாக மோதப்போவதில்லை. அவர் எனக்கு புதுப்பெண் பார்க்கும் படலத்தில் இருப்பவர், அதுவும் இளம்பெண்.😆🥰 அதிகமாக நான் அமெரிக்கர்களோடு வேலை பார்த்தவன், அனேகமாக அவர்கள் தங்கள் மனைவியை அறிமுகப்படுத்தும்போது இது இரண்டாவது இது மூன்றாவது என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள், நான் பேந்தப் பேந்த முழிப்பேன்.😳2 points- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
2 pointsசுமட்டிக்கு ரோசம் மானம் எல்லாம் கிடையாது அதுக்கு தமிழர் அரசியல் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்கும் வழி அவ்வளவே அடுத்த முறையும் சிங்கள அரசியல் கட்சி ஆசீர்வாதத்துடன் அது வெற்றி பெரும் ஆள் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் அவர்களின் வாக்குகளை அவர்களின் மூ...தி...த்தை குடித்தாவது தனது சின்னத்துக்கு மாத்தி கொள்ளும் வெற்றி பெறும் அதை வைத்து வடகிழக்கு பகுதி உண்மை யிலே மாற்றம் பெறனும் எனும் நோக்கில் வரும் வெளிநாட்டு ராஜ தந்திரியுடன் இந்த அடிக்கிற யாழ்ப்பாண வெக்கையிலும் கோட் சூட் உடன் மூடிய அறைக்குள் கதைத்து வரும் உதவியை சிங்கள அரசுக்கு கொடுக்க சொல்வார் இதுதான் வழமையாய் நடக்கும் .2 points- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதுவரையில் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்யதற்காக சர்வதேசம் எந்தவகையில் உதவிசெய்திருக்கிறது? அவ்வாறு நடந்தாலும் தமிழர் கள் மேலதிகமாமாக என்ன நட்டம் வரப் போகிறது/ பரீட்சித்துப்பார்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?சிறிலங்காவில் தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தனிச்சிங்களமக்களினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறுகள் பல இருக்கின்றன.தமிழ்மக்கள் அதிக அளவு வாகக்களித்து தெரிவு செய்த சந்திரிகாவும் மைத்திரியும தமிழர்களுக்கு செய்த நன்மைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?யார் வரக்கூடாது என்று மைத்திரிக்கு வாக்களித்தார்களோ அவரைப் பிரதமராக்கியவர் மைத்திரி.யார் வேண்டாமென்று சிங்களமக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் ஜனாதிபதியானவர் ரணில். தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்க ளவேட்பாளர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள்.இவர்களில் யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களை நம்புவதை விட ஒரு பரிசோதனை செய்வதில் என்ன கேடுவரப் போகிறது.ஆனால் இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் கரிசனையாகவுள்ள அரசியல்கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்களால் 13 மேலே போக முடியாது தவறானவர்களால் ஒரு சரியான விடயம் முன்வைக்கப்படும் பொழுது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடுவது தமிழர்களுக்குத்தான் இழப்பாகும்.2 points- உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும் என்றும் கூறுகிறார் அவர். இப்படி சிங்கம் குறித்து இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் விரிவாகப் பேசினோம். இந்தியாவில் சிங்கங்களை எங்கே பார்க்கலாம்? சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே எங்கெல்லாம் வாழ்கின்றன தெரியுமா? இல்லை, இல்லை. ஆசியாவில் எங்கே வாழ்கிறது தெரியுமா? ஆம், எங்கெல்லாம் எனப் பண்மையில் கேட்பதைவிட எங்கே என ஒருமையில் கேட்பதே சரியாக இருக்கும். ஏனெனில், சிங்கங்கள் ஆசியாவிலேயே ஒரேயொரு பகுதியில் மட்டும்தான் காட்டில் வாழ்கின்றன. பல்வேறு நாடுகளில் பூங்கா போன்ற அடைப்பிடங்களில் அவை காணப்பட்டாலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காடுகளைத் தவிர, ஆசியாவில் வேறு எங்குமே சிங்கம் காட்டில் இல்லை. சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு வருவதால் சிங்கங்கள் பாதுகாப்பிற்குப் பிரச்னையா?5 ஆகஸ்ட் 2022 சிங்கங்களுக்காக காலி செய்த 1600 குடும்பங்களுக்கு என்ன பதில்? விஞ்ஞானி ரவி செல்லம் கேள்வி21 ஆகஸ்ட் 2022 சிங்கம் தனித்து வாழுமா? சமூகமாக வாழுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சிங்கம் யானைகளைப் போல் கூட்டமாக வாழும் சமூக உயிரினம்தான் என்கிறார் முனைவர்.ரவி செல்லம். ஆனால் அவரது கூற்றுப்படி, சிங்கத்தின் சமூகக் கட்டமைப்புக்கும் யானைகளின் சமூகக் கட்டமைப்புக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. யானை மந்தையைப் பொறுத்தவரை, ஒரு மந்தையில் இருப்பவை அனைத்துமே பெண் யானைகள்தான். ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மந்தையோடு இணைகின்றன. பிற காலகட்டங்களில் ஆண் யானைகள் தனித்தோ அல்லது 'சிங்கிள்’ யானைகள் ஒரு சில இணைந்து கூட்டமாகவோ சுற்றித் திரியும், இருப்பினும் அந்தக் கூட்டம் ஒரு மந்தையாகக் கருதப்படாது. சிங்கக் கூட்டத்திலும் பெரும்பான்மையாக பெண் சிங்கங்களே இருக்கும். ஆனால், அவற்றின் கூட்டத்திலேயே சில ஆண் சிங்கங்களும் இருக்கும் என்கிறார் முனைவர்.ரவி செல்லம். பட மூலாதாரம்,DR.RAVI CHELLAM “ஆண் சிங்கங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். ஒரு கூட்டத்தில் இருக்கும் அனைத்து பெண் சிங்கங்களும் ஒன்றோடு ஒன்று ரத்த உறவு கொண்டவையாகவே இருக்கும். ஆனால், ஆண் சிங்கங்கள் அவை இருக்கும் கூட்டத்தின் பெண்களுடன் ரத்த உறவு கொண்டவையாக இருக்காது. இருப்பினும், அந்த ஆண் சிங்கங்கள் சகோதரர்களாக இருக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் அவர். அதாவது, ஒரு கூட்டத்தில் பிறக்கும் பெண் சிங்கம், அதே கூட்டத்தில், தாய், பாட்டி, சகோதரி ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து வாழும். ஆனால் ஆண் சிங்கமாக இருந்தால், “அது இனப்பெருக்க வயதை அடையும்போது கூட்டத்தில் இருந்து விரட்டப்படும். அதற்குப் பிறகு அது வேறொரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டுத் தனது இருப்பைச் சம்பாதிக்க வேண்டும்.” “பிறகு அந்தக் கூட்டத்தில் 4-5 ஆண்டுகள் இருந்த பிறகு, வேறு இளம் ஆண் சிங்கம் அதன் இடத்தை நிரப்ப வரும்போது, வயதான சிங்கத்துடன் நடக்கும் மோதலில் வீழ்த்தப்பட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும். சில நேரங்களில் அந்தச் சண்டையில் அவை கொல்லவும் படலாம். ஒருவேளை பிழைத்தால், அதற்குப் பிறகு அந்த ஆண் சிங்கம் இறுதி வரை வேறு கூட்டத்தில் இணைய முடியாது,” என்று கூறுகிறார். ஆண் சிங்கம் உண்மையில் என்ன செய்யும்? அதன் வேலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் சிங்கங்கள் சில நேரங்களில் ஒன்று சேர்ந்து சுற்றித் திரிந்தாலும்கூட, அந்தக் கூட்டம் ஓர் ஒருங்கிணைந்த சமூகக் குழுவாக இருப்பதில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் குழுவாக இருக்கும் சிங்கக் கூட்டத்தில் பெண் சிங்கங்களே அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட “சிங்கக் கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தின் முக்கியமான வேலை, அந்தக் கூட்டத்தின் எல்லையைப் பாதுகாப்பதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும்தான்” என்கிறார் முனைவர். ரவி செல்லம். வேட்டையைப் பொறுத்தவரை, சிங்கம் தனியாக வாழும்போது அவை கட்டாயம் வேட்டையாடித்தான் சாப்பிட்டாக வேண்டும். ஆனால், சிங்கக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அவை பெரும்பாலும் பெண் சிங்கம் வேட்டையாடும் இரையைத்தான் சார்ந்திருக்கும் என்கிறார் அவர். ஆசியாவைவிட ஆப்பிரிக்காவில் சிங்கங்கள் வேட்டையாட, ஒட்டகச் சிவிங்கி, காட்டெறுமை, அளவில் சிறிய யானைகள் போன்ற பெரிய இரை உயிரினங்கள் நிறைய உள்ளன. அத்தகைய வேட்டைகளின்போது ஆண் சிங்கங்கள் உதவுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES “பெண் சிங்கத்தைவிட ஆண் சிங்கத்தின் வாய் பெரிதாக இருக்கும், எடையும் கூடுதலாக இருக்கும். ஆகவே இரையை நீண்டநேரம் இறுகப் பற்றித் தொங்கியபடி கீழே சாய்ப்பதற்கு அவற்றால் முடியும். இருப்பினும், அந்த இரையைக் கண்காணித்து, சுற்றி வளைத்து சிக்க வைப்பது என்னவோ பெண் சிங்கமாகத்தான் இருக்கும்,” என்கிறார் ரவி செல்லம். இருப்பினும் இந்தியாவிலுள்ள சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தப் பழக்கம் சற்று மாறுபடுவதாகவும் அவர் கூறுகிறார். ஆப்பிரிக்க காடுகளில் புல்வெளிப் பரப்பு அதிகமாக இருக்கும். அங்கு அளவில் பெரிதாக இருக்கும் ஆண் சிங்கம் மறைந்திருந்து வேட்டையாடுவது கடினம். ஆனால், “இந்தியக் காடுகளின் தன்மை வேறுபட்டது. இங்கு மரங்களும் புதர்களும் உள்ளன. அவற்றில் அவை மறைந்திருந்து தாக்குவதற்கான சூழல் உள்ளது. அதோடு, இங்கு மனிதர்களுக்கு மிக நெருக்கமாக வாழ்வதால், கால்நடைகளும் எளிதாகக் கிடைக்கின்றன. கால்நடைகளைப் பொறுத்தவரை, மனிதத் தலையீடுகளின் காரணமாகப் பெண் சிங்கங்கள் அவற்றை வேட்டையாடத் தயங்கும். ஏனெனில், ஒருவேளை அவை ஆபத்தில் சிக்கிவிட்டால் அவற்றின் குட்டிகள் அநாதையாக்கப்படும்,” என்கிறார் ரவி செல்லம். உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி9 ஆகஸ்ட் 2024 இந்தியாவில் எத்தனை சிங்கங்கள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டில் 674 சிங்கங்கள் வாழ்கின்றன. இது 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 27% சதவீதம் அதிகம். இருப்பினும், இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கிர் காட்டுக்கு வெளியேதான் வாழ்கின்றன. குஜராத்தில் சிங்கங்கள் 2015ஆம் ஆண்டில் சுமார் 22,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவி வாழ்ந்தன. அந்தப் பரப்பளவு 2020இல் அவை 30,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இவற்றில், 51.04% சிங்கங்கள் காடுகளுக்கு உள்ளேயும், 47.96% சிங்கங்கள் காட்டுப் பகுதிகளுக்கு வெளியேயும் பதிவு செய்யப்பட்டதாக சிங்கங்கள் கணக்கெடுப்பு தொடர்பான குஜராத் மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும், காடுகளுக்கு வெளியேயுள்ள பகுதிகளில், 13.27% விவசாய நிலப் பகுதிகளிலும் 2.04% மனித குடியிருப்புப் பகுதிகளிலும், 0.68% குவாரி, தொழிற்சாலை பகுதிகளிலும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான், இத்தாலி போல இந்தியாவில் நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் என்ன சிக்கல்?4 ஆகஸ்ட் 2024 சிங்கம் இந்தியாவில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் சிங்கங்கள் சந்திக்கும் இரண்டு முக்கியப் பிரச்னைகளாக வாழிடக் குறைபாடு மற்றும் தொற்றுநோய்ப் பரவலைக் குறிப்பிடுகிறார் முனைவர்.ரவி செல்லம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 555 சிங்கங்கள் இறந்துள்ளதாக மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. கடந்த 2019 ஆண்டில் 113 சிங்கங்களும், 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முறையே, 124, 105, 110, 103 சிங்கங்களும் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல், காடு, காநிலை மாற்ற அமைச்சகத்தின் அப்போதைய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கூறினார். இவற்றில் பாதியளவு சிங்கங்கள் கெனைன் டிஸ்டம்பர், பேபியோசிஸ் போன்ற தொற்றுநோய் பாதிப்புகளால் உயிரிழந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுபோக, மனித – காட்டுயிர் எதிர்கொள்ளல் காரணமாகவும் சிங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அதற்கான சான்றாக இருக்கிறது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே வேலியைத் தாண்ட முயலும் சிங்கங்கள். குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே மூன்று சிங்கங்கள் இருப்பதை அந்தப் புகைப்படம் காட்டுகிறது. அவை, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வேலியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதை அந்தப் புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது. இப்படியாக வாழ்விடப் பற்றாக்குறை, தொற்றுநோய் அபாயம், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் போன்ற பிரச்னைகள் சிங்கங்களின் இருப்புக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குத் தீர்வாக கிர் காட்டில் வாழும் சிங்கங்களில் ஒரு பகுதியை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு இடம் மாற்ற வேண்டுமெனக் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது இன்னும் மேற்கொள்ளப்படாதது சிங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் தடையாக இருப்பதாக வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/czxlrpn7z01o1 point- அரியம்: பாக்கியமா, பலியாடா?!
1 pointபுருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் சிலர், ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ திரைப்படத்தில் முரளி – வடிவேலு கூட்டு போண்டா மணியை மணமகனாக அலங்கரித்து முன்னிறுத்தும் படத்தை வெளியிட்டு, அரியநேத்திரனின் அறிமுகத்தோடு ஒப்பிட்டு நையாண்டி செய்திருந்தார்கள். தமிழ்த் தேசியப் பற்றாளராகவும், ஊடகவியலாளராகவும் இருந்த அரியம், தேர்தல் அரசியலுக்கு விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு வந்தவர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் நேரடியாக வெற்றிபெறாத போதிலும், கிங்ஸ்லி இராசநாயகம், தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்ததும், அந்த இடத்துக்கு கூட்டமைப்பினால் நிரப்பப்பட்டவர். அதிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதுவும், மட்டக்களப்பில் கருணா – பிள்ளையான் குழுவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர், தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக நின்றவர். இறுதிப் போர் வெற்றிக்குப் பின்னரான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டிருந்த போது, “போனா வருவீரோ, வந்தா இருப்பீரோ...” என்று தன்னுடைய பாராளுமன்ற உரையொன்றில் அரியம் பாடிய தமிழ்த் திரைப்படப் பாடலொன்று மிகப் பிரபலமானது. ஆனால், அவர், 2015க்குப் பின்னரான காலத்தில் அரசியல் அதிகார பதவிகளை இழந்தார். தற்போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அளவில் மாத்திரமே இருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரியத்தின் மத்திய குழு உறுப்பினர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட்டு, தமிழ் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அதன்மூலம் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர்கள் வேட்பாளர் ஒருவரை கண்டடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். பொதுக் கட்டமைப்பினரை ஆதரித்த பலரும், வேட்பாளராக மாறுவதற்கு தயாராக இல்லை. ஏன், பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளே தயாராக இல்லை. அதிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி, ஜனாதிபதி வேட்பாளராவதில் இருந்து ஒழித்து ஓடினார்கள். இன்னொரு பக்கம், தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளை வழங்கவும் தயாராக இல்லை. இதனால், பொதுக் கட்டமைப்பினர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அவர்களுக்கு முன்னால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேடுவதுதான் இறுதி வழியென்ற நிலை உருவானது. அத்தோடு, தங்களின் சொல் பேச்சை மாத்திரம் கேட்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. அதனால்தான், வேட்பாளராக அரியம் தெரிவாகும் நிலை வந்தது. வேட்பாளர் தெரிவில் இறுதியாக அரியத்தோடு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு மத்திய குழு உறுப்பினரின் பெயரும் சம்பந்தப்பட்டவரின் அனுமதியோடு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக ஒருபோதும் பதவி வகித்தவர் இல்லை என்பதால், அவர் போட்டியிடுவதானால் கட்சியொன்று அவசியம். ஆனால், பொதுக் கட்டமைப்பின் கட்சிகள் எவையும், தங்களது கட்சியை வழங்க முன்வராத நிலையில், சம்பந்தப்பட்டவர் தெரிவாகும் வாய்ப்பும் அற்றுப்போனது. அதனால்தான், அரியம் ஜனாதிபதி வேட்பாளரானார். அவரும் இல்லையென்றால், பொதுக் கட்டமைப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேடிச் சென்றிருக்க வேண்டி வந்திருக்கும். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். ஆனால், அந்த நெருக்கடி நிலையை, அரியம் பொதுக் கட்டமைப்பினருக்கு, குறிப்பாக அந்தக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை. அந்த வகையில் பத்தியாளர்களுக்கு அரியம் பாக்கியம் செய்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி மீது தமிழ் மக்கள் பெருமளவில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். அந்த அதிருப்தியைக் கழைந்து, நம்பிக்கையின் பக்கம் நகர்த்தி, தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் மக்களை ஒன்று திரட்டுதல் என்பது அவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினர், அதற்கான அர்ப்பணிப்பை முழுவதுமாக வழங்க வேண்டும். அதற்கு மாறாக, ‘வேண்டா வெறுப்பாக பிள்ளையைப் பெற்று, அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்தது’ போல, நடந்து கொள்ள முடியாது. பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றுகின்றது. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ என்ற அடையாளத்தோடு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்பினர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது, அதற்கான முக்கியத்துவத்தை வழங்கியாக வேண்டும். அவரின் அறிமுகம், பொதுக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினதும் பங்களிப்போடு, பெரும் சமூக – ஊடக கவனம் பெறும் அளவுக்கு பிரச்சார உத்திகளோடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரியத்தின் அறிமுகத்தின் போது, பொதுக் கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற கட்சிகளான ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், உள்ளக -அயலக பாதுகாப்புப் பிரதானிகள், இராஜதந்திரிகள் என்று எந்த தரப்பு அழைத்தாலும் எந்தவித கேள்வியும் இன்றி, ஓடோடிப்போய் சந்தித்து விட்டு வரும், இந்தக் கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் அறிமுகத்தை பாராளுமன்ற அமர்வுகளைக் காட்டி புறக்கணித்தமை அபத்ததத்தின் உச்சம். அது, போக்கிடமின்றி அமைந்த கூட்டின் பங்காளிகள் தாங்கள் என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது. அரியம் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் உடல்மொழி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை தீர்க்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கவில்லை. அவர்கள், மனதளவில் சோர்ந்து போய் இருப்பதை, முகங்கள் அப்பட்டமாக காட்டின. அதிலும், உடல்மொழி, பேச்சாளர்களின் மனோ நிலை தொடர்பில் எல்லாம் கடந்த காலங்களில் பகுத்தாய்ந்து எழுதிய பத்தியாளர்களின் முகங்களே பெரும் சோர்வாக காணப்பட்டன. அந்த முகங்களில், ஒரு மாதிரியாக ஒருவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தியாகிவிட்டது என்ற ரேகைகள் படர்ந்திருந்தன. அதனைத் தாண்டி எந்த நம்பிக்கையையும் விதைக்கும் உணர்வுகள் யாரிடத்திலும் இருக்கவில்லை. தமிழரின் தாகத்தை தீர்க்க, அரசாங்கத்திடம் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை சலுகைகளாக – இலஞ்சமாக பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம், தமிழ்த் தேசிய அரசியலை தற்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள். தமிழரின் தாகம் என்பதை, தண்ணீர் தாகம் என்று உணர்ந்து கொண்டாலாவது பரவாயில்லை. அரசியல் புரிதல் இல்லை என்று அவர்களை மன்னித்து புறந்தள்ளி விடலாம். ஆனால், தமிழரின் தாகத்தை, சாராய – கசிப்பு தாகம் என்று உணர்ந்து செயற்படுபவர்களை, தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இப்படியான அறமற்றவர்களும், சமூக விரோத சிந்தனைக்காரர்களும் தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்திருக்கும் போது, தமிழ் மக்கள் அரசியலில் நம்பிக்கை இழப்பது இயல்பானது. அதனை, மாற்றியமைத்து, தமிழ்த் தேசிய அரசியலை நம்பிக்கையின் பக்கத்திற்கு நகர்த்துதல் என்பது, மிகப்பெரிய செயற்திட்டங்கள், அர்ப்பணிப்புக்கள் சார்ந்தது. அது பதவி, பகட்டு, பணம், இலஞ்சம், ஊழல், சலுகை சார் நிலைகளுக்கு அப்பாலானது. ஆனால், தற்போதுள்ள அரசியலில் இவைகளைக் கடந்தவர்கள் என்று பெரிதாக யாரையும் அடையாளம் காண முடியாது. முள்ளிவாய்க்காலிலும், மாவீரர் நாட்களிலும் தீபமேற்றிவிட்டால் போதும், தமிழ் மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்கலாம் என்பது, பல அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால், அவர்களின் தென் இலங்கை அரசாங்கங்கள், கட்சிகளுடனான நெருக்கம் என்பது, மிகமோசமான அளவில் இருக்கின்றது. அது, தனிப்பட்ட ரீதியானது என்றால் பிரச்சினையில்லை. ஆனால், அது, தமிழ் மக்களை பலிகடாவாக்கும் போக்கிலானது. அப்படியானவர்களின் கரங்கள், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிறுத்தம் மற்றும் தெரிவிலும் முக்கிய தாக்கம் செலுத்துகின்றதா என்ற சந்தேகம் உண்டு. இறுதி மோதல் காலத்தில் ராஜபக்ஷக்களோடு நெருக்கமாக இருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர், இப்போது யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை நடத்துவதன் மூலம், தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தலைவர்களையும் தன்னுடைய கைப்பாவையாக கையாள நினைக்கிறார். அதற்கு இணங்காதவர்களை நாளும் பொழுதும் விமர்சிப்பதுதான் அவரது வேலையாக இருக்கின்றது. அவரின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இருந்தது. அவர் மீதான விமர்சனம் பொது வெளியில் எழுந்ததும், பொதுக் கட்டமைப்பில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டது போல, காட்டிக் கொண்டார். ஆனாலும் அவரது பிரதிநிதியாக பத்தியாளர் ஒருவர் பொதுக் கட்டமைப்புக்குள் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் தெரிவும் அரியமாக இருந்திருக்கின்றது. அதற்கான காரணமாக, கேள்விகளைக் கேட்காத ஒருவராக அரியம் இருப்பார் என்பதுதான் ஒற்றை வாதம். அரியம், தற்போது செல்வாக்குள்ள அரசியல்வாதியல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குழப்பத்தில், அவர் சிவஞானம் சிறீதரனுக்காக இயங்கியவர். அதன்மூலம் அண்மைய நாட்களில் சற்று ஊடகக் கவனம் பெற்றவர். மற்றப்படி, அவரினால் தேர்தல் – வாக்கு அரசியலில் தற்போது தாக்கம் செலுத்த முடிவதில்லை. மட்டக்களப்பிலேயே அவரினால் சில ஆயிரம் வாக்குகளைக்கூட பெற முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படிப்பட்ட ஒருவரை, வடக்கு கிழக்கு பூராவும் பொது வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எவ்வளவு தூரம் அனுகூலமானது என்பது, பொதுக் கட்டமைப்பின் பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம். ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பாக கருதி செயற்பட வேண்டும் என்ற அறிவித்தலை விடுத்துக் கொண்டு களத்துக்கு வந்த அரசியல் பத்தியாளர்கள், தற்போது பிரிந்துள்ள தமிழ் வாக்குகளை ஒன்றாக திரட்டுவதுதான் இலக்கு என்று தங்களின் கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், அவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வல்லமை அரியத்திடம் இல்லாத போது, அவரை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எதனை நோக்கிய அரசியல்? வேட்பாளர் அறிமுக நிகழ்விலேயே கலந்து கொள்ளாத பொதுக் கட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், அரியத்துக்காக வாக்குச் சேகரிப்பை மனப்பூர்வமாக முன்னெடுப்பார்களா என்பது பிரதான கேள்வி. அரசியல் கட்சிகள், தொண்டர்களின் பங்களிப்பு இல்லாமல், பத்தியாளர்கள் சிலர் மாத்திரம் தமிழ் வாக்குகளை திரட்டும் வல்லமையோடு இருக்கிறார்களா என்றால், அதற்கு வாய்ப்புக்களே இல்லை. ஏனெனில், அந்தப் பத்தியாளர்களில் பலர், செம்மணி வளைவைத் தாண்டியே வெளியில் வராதவர்கள். அப்படியான நிலையில், கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டமைக்கு மாற்றீடான தெரிவாக மாத்திரமே அரியம் இருக்கப் போகின்றார். மற்றப்படி, அவரை பொதுக்கட்டமைப்பினரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பலியாடாகவே தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் காண்கிறார்கள். அதனை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும். -காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_11.html1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா? வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய், சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா?” என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவும் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேவேளை, பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/13953061 point- பாவம் தமிழ் மக்கள்!
1 pointபாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்போரையும் கிண்டலடித்து எழுதுகிறீர்கள். அது கவலையளிக்கிறது. பொதுவாக நீங்கள் எதையும், எவரையும் மதிப்பிறக்கம் செய்யும் உள்நோக்கத்தோடு செயற்படுகின்றவரில்லை. ஆனால், இந்த விடயத்தில் உங்களுடைய எழுத்தும் தொனியும் மாறியிருப்பது ஏன்?… இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?” என்று வாட்ஸப்பில் ஒரு நண்பர் தகவல் அனுப்பிக் கேட்டிருந்தார். என்மீது அப்படியொரு (நல்ல) அபிப்பிராயம் அவரிடமிருப்பதையிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். கூடவே அவர் சுட்டிக்காட்ட விரும்பிய முறைமைக்காகவும். மிகச் சிறந்த முறையில் தன்னுடைய அபிப்பிராயத்தை உரியவாறு – பொறுப்போடும் நட்புக்குரிய பண்போடும் தெரிவித்திருந்தமைக்கு அவருக்கு மீண்டும் நன்றி. இந்தப் பண்பை நாம் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதால் அவருடைய ஒப்புதலோடு பின்வரும் விடயங்களைப் பொது வெளியின் (அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல்) கவனத்திற்காக எழுதுகிறேன். அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் பலவகையானவை. ஜனநாயகச் சூழலில் இது இயல்பானதும் அங்கீகரிக்கப்பட வேண்டிதுமாகும். அதற்கப்பால் மனித வாழ்க்கையில், மானுட இருப்பில், விருப்பில் இப்படிப் பல்விருப்பங்களும் பல்நிலைச் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் இருக்கும். அது இயல்பும் வழமையுமாகும். அதுதான் நியாமும் அழகும் கூட. இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே நமது நியாயமும். ஆகவே தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை ஒரு தரப்பின் அரசியல் நிலைப்பாடு, உபாய முயற்சி என ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், “அதுதான் சரியானது. அற்புதமானது. அதைத்தான் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச்சமூகத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும். அதற்கு மாற்றான அபிப்பிராயத்தை – நிலைப்பாட்டைக் கொண்டோரெல்லாம் சூதானவர்கள், இனவிரோதிகள், தமிழர்களின் ஐக்கியத்துக்கும் விடுதலைக்கும் எதிரானோர், விடுதலை மறுப்பாளர்கள் எனச் சித்திரிக்க முற்படுவதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. அதாவது இனத்துரோகிகள் என்றவாறாக. இது வழமையைப் போல கறுப்பு வெள்ளை அரசியற் சிந்தனைக்குள்ளிருந்து சிந்திக்கும் – செயற்படும் போக்காகும். ஜனநாயகத்தைப்பற்றிப் போதிப்போரும் நவீன அரசியலைப்பற்றிப் பேசுவோரும் அதற்கு மாறாக இப்படி கறுப்பு – வெள்ளை என குறுகிக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் சில முற்போக்காளர்களும் பன்மைத்துவத்தைப் பற்றிப் பேசுவோரும் அடக்கம். அவர்களுடைய தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. கறுப்பு – வெள்ளைச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட – அதற்குப் பெரிய விலைகளைக் கொடுத்த E.P.R.L.F, PLOT, T.E.L.O போன்றவையே இந்தச்சிந்தனைக்கு அடிமைப்பட்டிருப்பதுதான் இங்கே துயரத்துக்குரியது என்பதால்தான் சில முறைகளில் சில விடயங்களைச் சொல்ல முற்பட்டேன். அது சூழலின் தன்மை, அதன் அவசியம் கருதியது. ஒரு கேலிச்சித்திரத்துக்கு (Caricature) அல்லது காட்டூனுக்கு (Cartoon) உள்ள பண்பையும் வலிமையையும் ஒத்தது. இன்னும் சொல்லப்போனால் அங்கத எழுத்து அல்லது அதொரு satiriar column எனலாம். அதை அந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்வது முக்கியம். அதாவது காட்டூனை ரசிப்பது, ஏற்பது என்ற மாதிரி. எனவே இதில் ஜனநாயக மாண்பை மீறாமல், அந்தப் பண்பைக் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என்னுடய பார்வைகளையும் நியாயங்கள், நிலைப்பாட்டையும் தெளிவாகக் கூறி வந்திருக்கிறேன். இனி – 1. தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் மிகப் பலவீனமானவை. 40 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் பழைய, தோற்றுப்போன கருத்துகள். புதிதாகச் சிந்திக்க முடியாத, புதிய அரசியற் சூழலை விளங்கிக் கொள்ள முடியாத, புதிதாக அரசியலை முன்னெடுக்க இயலாத, தோல்வியிலிருந்து விடுபட முடியாததன் வெளிப்பாடு. அந்த இயலாமையை மறைப்பதற்குப் பூசப்படும் சலிப்பான வார்த்தைகள். இதைப்பற்றி விரிவாக – விளக்கமாக எழுதியுள்ளேன். பிறரும் எழுதியுள்ளனர். 2. அதற்கான முயற்சிகள். தமிழ்ப்பொதுவேட்பாளர் (இப்படி எழுதும்போதே ஏனோ சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது – மன்னித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை நிறுத்துவதற்கு அரசியல் ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் (ஆள் ஒருவரைத் தேடிப் பிடிப்பதற்கே படுகின்ற அல்லற்பாடுகள்) எடுக்கப்படும் முயற்சிகள் கூட சிறுபிள்ளைத் தனமானவை. இத்தனை ஆண்டுகால போராட்ட அரசியல், அதற்கான உழைப்பு, தியாகம், கற்றுக் கொண்ட படிப்பினைகள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றதென்ன? எத்தனை அரசியல் ஆளுமைகளையும் தளபதிகளையும் செயற்பாட்டாளர்களையும் கண்டிருந்தோம். இன்று? மெய்யானோரும் சரியாகச் சிந்திப்போரும் உண்மையாகவே மாற்றத்துக்காக உழைப்போரும் ஓரங்கட்டப்பட்டு, நடிகர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இப்படித்தான் கிலிசை கேடாக நிலைமை இருக்கும். இப்படி நாறிப்போயிருக்கும் பலவீனத்தை மக்களுக்கும் (மேலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே நடக்கின்றன) அரசுக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் காட்ட வேண்டுமா? நாம் பலவீனப்பட்ட நிலையில் இருக்கலாம். அதற்காக நம்முடைய வறுமையை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா? உங்கள் வீட்டிலிருக்கும் அல்லது உங்கள் குடும்பத்துக்குள்ளிருக்கும் பலவீனமான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதை விரும்புவீர்களா? அதையெல்லாம் குடும்பக் கௌரவம், சுயமரியாதை எனக் கவனமாக மறைத்துக் கொள்வீர்கள். சமூகப் பலவீனத்தைத் தக்கமின்றிப் பறை சாற்றுவீர்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டை உணர்ந்து நாம் அதிலிருந்து மீண்டெழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தரப்புப் பயன்படுத்துமளவுக்கு வாய்ப்பளிக்கவோ அனுமதிக்கவோ கூடாதல்லவா! செயற்பாட்டு அனுபவமில்லாதவர்களின் வேலை அல்லது முயற்சிகள் இப்படித்தானிருக்கும். கள அனுபவமற்றவையாக. 3. தமிழ்ப்பொது வேட்பாளரரை நிறுத்த வேண்டும் என நிற்போர். இவர்கள் ஒரு முகப்பட்ட சிந்தனைக் குழாத்தினரல்ல. ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டோரும் அல்ல. தவிர்க்க முடியாமல் நெல்லிக்காய்களை ஒன்றாகச் சேர்த்ததைப்போல இவர்களை ஓரணியில் சேர்த்தது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடக நிறுவனமொன்றின் இயக்குநர். இன்னொருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். இதற்கு இணை நின்றவர்கள் பத்தியெழுத்தாளர்கள் இருவர். ஏனையோர் இதில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளடக்கப்பட்டவர்கள். ‘உள்ளடக்கப்பட்டவர்கள்’ என்று அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் தமது விருப்பம் வேறு. தவிர்க்க முடியாமல் நாம் இந்த நிலைப்பாட்டுக்கு சம்மதித்திருக்கிறோம் என்று தொடர்ந்து கூறுவதாகும். அப்படிக் கூறுவது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் அழகல்ல. அது அரசியல் செயற்பாட்டுக்கு நல்லதுமல்ல. இருந்தும் அப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு தரப்பினரோ இந்தப் பொது வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு கிட்டவில்லை என்றால்…? தம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் உண்டு. குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு. ஏனைய சில்லறைத்தரப்புகளுக்கு எல்லாம் ஒன்றுதான். வென்றாலென்ன? தோற்றாலென்ன? ஏதோ நமக்கும் வடையும் தேநீரும் கிடைக்கிறது. அந்தளவே போதும் என்ற நிலைப்பாட்டோடிருக்கிறார்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இந்தப்பிரச்சினை இல்லை. அது ஏற்கனவே மிகச் சிக்கலான நிலையில்தான் உள்ளது. அது முன்னிலை பெறுவதற்கான ஆயிரம் கதவுகளையும் தானாகவே அடைத்துச் சாத்திக் கொண்டு பிடிவாதமாக இருட்டறைக்குள் தியானம் செய்கிறது. ஆகவே அதற்கு வாழ்வும் சாவும் ஒன்றுதான். வென்றால் இன்னொரு சுற்று ஓடலாம். இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது அரங்கில் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான். சிவில் குழுவினர் (Civil society representatives) என்று தம்மை அடையாளப்படுத்துவோர் ஏனைய தரப்புகளை மறைமுகமாக ஆயுததாரிகள் (Armed parties) அல்லது துணை ஆயுதக்குழுவினர் (paramilitaries) என்ற பழைய மனப்பதிவோடு அல்லது அத்தகைய ஒரு உள்ளுணர்வோடு – விலக்கத்தோடுதான் காரியங்களைச்செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் தாம் கலந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையை அவர்களிடம் அவதானிக்க முடிகிறது. இதனால் சற்று விலகி நின்று கொண்டே, “தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்காக சேர்ந்து வேலை செய்கிறோம். கலந்து கொள்ளவும் கரைந்து போகவும் மாட்டோம்” என்று செயற்பாடுகளால் காட்டுகின்றனர். சிவில் தரப்பும் கட்சிகளும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கூட அந்த அடிப்படையிலானதுதான். (பாவம் விக்னேஸ்வரன்). ஆக இப்படியான சூழலில் எப்படி இவற்றைக் குறித்துப் பேசாமலிருக்க முடியும்? அந்தளவுக்குத் தமிழ்ச் சமூகம் மொண்ணையில்லைத்தானே! பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். பாவம் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=110781 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 point1986ம் ஆண்டு கடுமையான குளிர் நேரம். நடுங்கிக் கொண்டு நின்றோம். குளிருக்கு சிகெரெட் இழுக்க இழுக்க இன்பமாக இருந்தது. உடலில் இருந்து வாய் வழியாக வந்த புகையும், சிகரெட் புகையும் சங்கமித்துக் கொண்டிருந்தன. நண்பன் ஒருவன் சேர்ட்டுடன் வந்து நின்றான். நாங்கள் மூடிக் கட்டிக் கொண்டிருந்தோம். ”உனக்கு குளிர இல்லையா?” என்று என்னுடன் கூட இருந்தவன் அவனைப் பார்த்துக் கேட்டான். ”நான் வந்து ஐஞ்சு வருசமாச்சு. குளிர் பழகிட்டுது” என்று பதில் நடுங்கிக் கொண்டு அவனிடம் இருந்து வந்தது ”அப்ப, ஐஞ்சு வருசத்திலையே இப்பிடி எண்டால் இஞ்சை பிறந்த யேர்மன்காரன் வெறும் மேலோடை எல்லோ குளிருக்குள்ளே திரிவான்” என்று இவன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1 point- ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
உழைச்சிடுங்க அய்யா...இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointஅண்ணே இந்த நிறப்பிரச்சினை இன்று நேற்று அல்ல எல்லா நாட்டிலையும் காலம் காலமாக இருக்கிறது. இதை தூக்கிப்படிப்பவர்கள் பகிடியை பகிடியாய் எடுத்தால் எல்லாம் சுபம். எந்த நிறத்தவனுக்கும் ரத்தம் என்னவோ சிவப்பு தான்.1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
வந்து உங்களை புரட்டி எடுக்கப் போகிறார். ரெடியாய் இருங்கோ…. 😂 🤣1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அவரது பெயரில் அல்வா இருப்பதால் அதை எல்லோருக்கும் புகட்டுகிறார். 🤣1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அல்வாயன் அண்மையில்… மட்டக்களப்பில் மௌலவி ஒருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப் பட்ட போது… அவன் விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைத்த ஆயுதம் என்று சொல்வான் என்று அல்வாயன் முன்பே சொன்ன மாதிரியே நடந்தது. 🙂1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அப்ப... ஐயர் தான் தாலியை, ஆட்டையை போட்டிருக்கின்றார் போலுள்ளது. 😂 அல்வாயன் எப்படி,இதை எல்லாம்... முன்பே கண்டு பிடிக்கின்றீர்கள். 🤣1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலர்கள் சிரிக்கின்றது மனசு சிலிர்க்கின்றது . ..........! 😍1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointதம்பி வடிவாய் கேளுங்கோ . ....... நீச்சல் தெரிந்தால் சைக்கிள் போனாலும் ஆள் பிழைத்து வருவார் . ......... இல்லையென்றால் சைக்கிளோடு சமாதிதான் ...........! 😂1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointஐயா ஓணாண்டி அவர்களே! கறுப்பன் வெயிலில் நின்றாலும் கறுப்பன்தான், நிறம் மாறாது. வெள்ளையன் நின்றால்….. ஓணான்போல் நிறம்மாறிவிடுவானே!!🤪1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointகந்தையா57 அவர்களே! எனக்காக இளமங்கை ஒருவரைப் பெண்பார்க்கும் தெய்வமே!! எனக்கு கறுப்பும் வேண்டாம், வெள்ளையும் வேண்டாம், றோஸ்கலரில் ஒன்றைப் பாருங்கள் சாமி.🙏🌸1 point- தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்
தயக்கமின்றி சொல்லலாம், மிக குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டு ஒரு இயக்கத்தை நடத்திய செயல்வீரன், இயக்கங்களிலேயே புலிகளுக்கடுத்ததாக இந்தியாவின் கண்களில் மண்ணை தூவி சர்வதேச கடல் எல்லையூடாக ஆயுதங்களை தனது இயக்கத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையும் மகேஸ்வரனுக்கு உண்டு என்று சொல்வார்கள். இயங்கங்களிலேயே பெரும்பாலும் எண்ணிக்கையில் குறைவானாலும் அனைத்தும் ஒரிஜினல் ஆயுதங்கள் வைத்திருந்ததும் இவர் தலைமை தாங்கிய இயக்கமென்றே பேச்சுண்டு., இயங்கங்களிலேயே ஒரிஜினல் மோட்டார் வைத்திருந்த ஒரேயொரு இயக்கம் தம்பா இயக்கம் என்று சொல்வார்கள். தனியொருவனாக அவர் ஆயுதங்களை கொண்டுவந்து சேர்த்த சர்வதேச தொடர்பு பற்றி புலிகளும் தகவல் எதுவும் பெற்றிருக்கவில்லையென்றும் கதைகள் உலவியதுண்டு. ஏறக்குறைய புலிகளின் B- Team தான் தம்பாவின் இயக்கம் என்றும் கூறுவார்கள். ஒரு கல்விமானாக, பொருளாதார பின்னணி, அக்காலத்திலேயே லண்டன் வாழ்வு என்று அத்தனையும் இருந்தும் அனைத்தையும் துறந்து தாயகத்துக்காக போராட வந்து எதுவும் நனவாகாமல் மீண்டும் மீண்டும் சிறை வாழ்வு, நாடுநாடாக அலைச்சல் என்று போய் கடைசியில் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலைக்கு போய் பட்டமரமாக அவர் வாழ்வு முடிந்தது. தனிமனிதனாக பெரும் திட்டங்களை செயல்படுத்த ஆசைப்பட்டிருந்தார், எதுவும் ஈடேறாமல் காலம் தடுத்து அவரை காலமாக்கிவிட்டது. தமிழர் தரப்பில் அரசியல் ரீதியாகவும், ஆயுதபோராட்ட ரீதியாகவும் பெரும் கல்விமான்கள்,சட்ட வல்லுனர்கள், செயற் திறனாளர்கள்,அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் , மிக நுண்ணிய திட்டமிடலாளர்கள் என அத்தனையும் இருந்தும், எவ்வளவோ முயன்றும் எதுவும் சாதிக்க முடியாமல் எம் கதை முடிந்துபோனது ஏனோ, எம்மீது யாரிட்ட சாபமோ தெரியல. செயல் வீரனுக்கு அஞ்சலிகள்.1 point- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 pointபாவம் பலியாகப்போகும் மக்களும் அவர்கள் வாக்குகளும். தமிழ்த்தேசியம் பேசி வாக்கு சேர்ப்பு, செய்வது சிங்களத்துக்கு சேவை. எல்லாவற்றையும் இழந்து உயிரை துச்சமென நினைத்து ஒருவருக்கு பின்னால் லட்சியத்தோடு திரண்ட மக்கள், அவரின் இழப்புக்கு பின்னால் என்ன செய்வதென தெரியாத மக்களுக்கு ஒரு குள்ள நரியை தலைவனாக காண்பித்து ஒரேயடியாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சமூக சீர்கேடுகள் தாராளமாக விதைக்கப்பட்டுவிட்டன. வாழ்ந்து வீழ்ந்த ஒரு இனம், இலகுவாக எதிரியின் இலக்கில் மாட்டப்படுவது நிதர்சனம். இந்த இலக்கில், பலர் வேறுவழியில்லாமல் நிகழ்காலத்தில் சிக்குகின்றனர், சிலர் வேறு வேறு வழியில்லாமல் நடித்திருக்கின்றனர் கடந்த காலங்களில் என்பதே யதார்த்தம்.1 point- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 pointம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
கனடா கள்வர் கூடாரமாகிவிட்டது என்கிறீர்கள்,.....? யோசிக்க வேண்டிய விடயம்தான்,....🥺1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
இப்ப போயிருப்பினமே!!1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர் விசாவில் வர ரெடியாகிட்டினம்..1 point- காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
இப்ப இரண்டு வருடமாக வெள்ளோட்டத்துடனே நிற்கிறது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கொடுக்க தான் வேண்டும் ஆனால் ஆஸ்பத்திரியிலிருக்கும் சந்தர்ப்பங்களில் நேர்ஸ் மாரையே விட்டு வைக்காதவரை எப்படி இடைத்தரககராக. நியமிக்க முடியும் ?? 😂🙏🤣 --5% அதாவது பணம் கொடுக்கப்படுவதில்லை அறவிடப்படும். 🤣1 point- மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!
உங்கள் கரிசனை மெச்சத்தக்கது. ஆனாலும், முஸ்லிம்கள் உலகின் எந்த வகையான அளவுகோல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். மதம் என்று வந்தவுடன் அவர்கள் எல்லோரும் ஒரே மட்டை ஒரே குட்டை. இது அனுபவம்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?1 point- பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். பல நூறு கோடி பெறுமதி பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது. பொலிஸில் முறைப்பாடு இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது. பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://tamilwin.com/article/thali-theft-of-thirukoneswara-temple-17232764901 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதிரு சபாரட்ணம் அவர்கள் முன்னாள் டெலோ உறுப்பினருக்கு எழுதிய பதில் பங்குனி 30, 2005 நான் எழுதிய செய்தி தவறானது என்று நீங்கள் கருதினால், தற்போதைய டெலோ அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுடன் நீங்கள் அதனை சரிபார்த்துக் கொள்ளலாம். இப்படுகொலைகளை நடத்திய நபரை எனக்கு நன்றாகவே தெரியும். 1986 ஆம் ஆண்டு டெலோ அமைப்பை புலிகள் முற்றாகத் துடைத்தழித்தபோது, புலிகள் அவரைக் கைதுசெய்திருந்தனர். புலிகளால் அவர் பின்னாட்களில் விடுவிக்கப்பட்டபின்னர் அவர் நோர்வேயிற்குச் சென்றுவிட்டார். புலிகளின் முக்கிய உறுப்பினரும் 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் பொன்னம்மானுடன் பலியாகியவருமான வாசு, இப்படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விசாரித்தபோது இப்படுகொலைகள் குறித்து அறிந்துகொண்டார். இதுகுறித்து வாசுவே என்னிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். நான்கூட ஒரு காலத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்தவன் தான். இப்படுகொலைகளைச் செய்துவிட்டு தப்பியோடிய குழுவை புலிகள் துரத்திச் சென்றிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அக்குழு யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமை நோக்கியே வாகனத்தில் தப்பிச் சென்றதாக வாசு என்னிடம் கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஒரு அமைப்பைக் கொண்டு இலங்கை இராணுவமே இப்படுகொலைகளைச் செய்ததாக புலிகள் அன்று நினைத்திருந்தார்கள். ஆனால், இதனை வெளியே சொல்ல அவர்கள் விரும்பவியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குள் இராணுவம் நுழையவே முடியாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்த புலிகளுக்கு, தமது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினர் நுழைந்து, படுகொலைகளில் ஈடுபட்டுப் பின்னர் தப்பிச் செல்வதென்பது கெளரவப் பிரச்சினையாக இருந்திருக்கும். இப்படுகொலைகள் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வினவினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த வாசு, "இல்லை, இன்றைக்கு நீங்கள் அவர்களைக் கொன்றிருக்காவிட்டால், நாங்கள் எப்போதோ ஒரு நாள் அவர்களைக் கொல்லவேண்டி இருந்திருக்கும். ஆனால் சிறீ அவர்களைக் கொன்றதற்கும், நாம் அவர்களைக் கொல்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. சிறீ அவர்களைக் கொன்றது ரோவின் ஆதாயத்திற்காக. நாம் கொல்வதோ எமது (தமிழர்களின்) ஆதாயத்திற்காக" என்று என்னிடம் கூறினார். நன்றி த. சபாரட்ணம்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் திரு சபாரட்ணம் அவர்களுக்கு எழுதிய கடிதம் பங்குனி 26, 2005 அன்பான ஆசிரியருக்கு, உங்களின் முன்னைய அத்தியாயத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பொறுப்பாளர் தாஸ் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். யாழ்ப்பாணத்தில் அன்று வாழ்ந்துவந்த அனைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்லவேண்டும் என்பதே சிறீசபாரட்ணம் எமக்கு விடுத்த கட்டளையாகும். ஆனால், வடமாராட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணத்தையோ, இராஜலிங்கத்தையோ கொல்வதற்கு தாஸ் மறுத்துவிட்டார். மேலும், டெலோவின் யாழ்ப்பாணப் பொறுப்பாளர் பொபி, வடமாராட்சியைச் சேர்ந்த எவரையும் கொல்வதையும் தான் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் எச்சரித்திருந்தார். இவர்கள் இருவரையும் கொன்றது பொபியின் குழுவினர் தான். இந்தத் திருத்தத்தினை உங்களின் பதிவில் இணைப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். நன்றி.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ் நீக்கம் செய்யப்பட்ட திருகோணமலை இரு நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 4 ஆம் திகதி திருகோணமலையில் வன்முறைகள் மீண்டும் ஆரம்பித்தன. இராணுவ வாகனத் தொடரணிகள் முகாம்களை விட்டுப் புறப்படும் முன்னர் வீதிகளைப் பரிசோதிக்கும் நடைமுறையினை இராணுவத்தினர் அப்போது கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தனர். இராணுவத்தினரின் குழுவொன்று வீதியின் இருமருங்கிலும் இருக்கும் பற்றைகள், மதகுகள், பாலங்கள் என்பவற்றை கண்ணிவெடிகளுக்காக பரிசோதித்துக்கொண்டே செல்வர். திருகோணமலை மாவட்டத்தில் வீதி பரிசோதனைகளுக்குப் பொறுப்பாகவிருந்த கடற்படையின் கொமடோர் ஜஸ்ட்டின் ஜயசூரிய வீதிப் பரிசோதனைகளைக் கடிணமான நடவடிக்கை என்று என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார். வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமுறை பேசும்போது, "எமது படையினர் வீதியின் ஒவ்வொரு அங்குலத்தை மிகவும் கவனமாகப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது" என்று கூறினார். புரட்டாதி 4 ஆம் திகதி இவ்வாறான வீதிப் பரிசோதனைக் குழுவொன்று வீதியின் இருமருங்கிலும் நடந்துசெல்கையில் காய்ந்த சருகுகளுக்குக் கீழே மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிமீது காலை வைத்துவிட்டார்கள். கண்ணிவெடி வெடித்தபோது அருகில் நின்ற மூன்று இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். கண்ணிவெடியினைப் புதைத்துவிட்டு அருகிலிருந்த பற்றைக்குள் மறைந்திருந்த போராளிகள் மீதி இராணுவத்தினர் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்த மேலும் நான்கு இராணுவத்தினர் காயமடைந்தனர். தமது இராணுவத்தினரில் மூவர் கொல்லப்பட்டமைக்காக திருகோணமலையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது கூட்டுப் பழிவாங்கலை நடத்த இராணுவம் முடிவெடுத்தது. ஆகவே இப்பழிவாங்கல்த் தாக்குதல்களை கச்சிதமாகத் திட்டமிட்ட இராணுவம், தனது நடவடிக்கைக்கு கடற்படையினர், பொலீஸார், சிங்கள ஊர்காவற்படையினர் மற்றும் சிங்களக் காடையர்கள் என்று பாரிய எண்ணிக்கையில் ஆட்களை ஒழுங்குபடுத்தியது. இராணுவத்தினரின் தலைமையில் இக்குழு திருகோணமலையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலில் இறங்கியது. திருகோணமலை நகரில் இருந்த தமிழர்களின் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. புரட்டாதி 9 ஆம் திகதி திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தனின் வீடு இலக்குவைத்து முற்றாக எரியூட்டப்பட்டது. கொழும்பில் திருகோணமலை தாக்குதல்கள் குறித்து செய்தி வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு சம்பந்தனின் வீட்டை புலிகளே எரித்ததாக கூறியது. இதனை முற்றாக மறுத்த புலிகள், இராணுவத்தினர் தமது நாசகாரச் செயலை தம்மீது சுமத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். அம்மாதத்தின் இறுதி நாட்களில் சம்பந்தனை நான் கொழும்பில் சந்தித்தபோது, தனது வீட்டின் மீது குண்டுகளை எறிந்து தீயிட்டவர்கள் இராணுவத்தினர்தான் என்பதை தனது உறவினர்கள் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகக் கூறினார். திருகோணமலைத் தமிழர்களைப்பொறுத்தவரை புரட்டாதி 9 ஆம் திகதி இரவு என்பது குரூரம் நிறைந்த பொழுதாகக் கழிந்தது என்று கூறினார் சம்பந்தன. கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், குண்டுவெடிப்புக்களும் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்றிரவு முழுவதும் வீதிகளில் வெறியுடன் வலம்வந்த இராணுவத்தினர் கண்ணில் தென்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இராணுவத்தினரின் பாதுகாப்புடன் தமிழர்களின் வீடுகளுக்குள் நுழைந்த சிங்களக் காடையர்கள் அவற்றினுள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்ததுடன் பெற்றொல் ஊற்றித் தீமூட்டியபடியே சென்றனர். புரட்டாதி 22 ஆம் திகதி திருகோணமலைத் தாக்குதல் குறித்து செய்திவெளியிட்ட இந்து பத்திரிக்கை, "இரு மாதங்களில் திருகோணமலையில் 52 தமிழ்க் கிராமங்கள அழித்துத் தரமட்டமாக்கப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தது. கொழும்பில் தங்கியிருந்து செய்திகளை சேகரித்துவந்த பிரெஸ் ஸ்ட்ரஸ்ட் ஒப் இந்தியா மற்றும் யுனைட்டட் பிரெஸ் ஒப் இந்தியா ஆகிய பத்திரிக்கை நிருபர்களின் செய்திகளை ஆவணமாகத் தொகுத்தே இந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இச்செய்தியின் முதலாவது பகுதி பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் நிருபர் திருகோணமலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் செவ்வியெடுத்து வெளியிட்ட ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பகுதி யுனைட்டட் பிரெஸ் ஒப் இந்தியா நிருபர் ஜெயராம் அவர்களின் சம்பந்தனுடனான செவ்வியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்து வெளியிட்ட செய்தி நாட்டிலிருந்து உயிர்காக்க வெளியேறிச் சென்ற தமிழர்களின் செய்திகளின்படி திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 52 தமிழ்க் கிராமங்களை இராணுவத்தினர் முற்றாகத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை நகரிலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றிவிடவென்று இலங்கையரசு எடுத்துவரும் இராணுவ தாக்குதல்களில் தப்பியோடும் தமிழர்கள் சிலருக்கு அரச அதிகாரிகளே தப்பிச் செல்வதற்கான உதவிகள் சிலவற்றை செய்ததாக அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தால் கொல்லப்படுவீர்கள், ஆகவே தப்பியோடுங்கள் என்பதே அவர்களின் செய்தியாகவிருந்தது. இவாறு தப்பி வந்த நடுத்தர வயதுத் தமிழர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகளும், கடைகளும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். திருகோணமலையில் பலவருடங்களாக வாழ்ந்துவரும் சிங்களக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், புரட்டாதி 4 ஆம் திகதி சிங்கள ஊர்காவற்படையினரின் கடுமையான தாக்குதலில் தனது கிராமமும் பாதிக்கப்பட்டதாகவும், தமிழர்களைப்போல தாமும் அங்கிருந்து தப்பியோடவேண்டியிருந்ததாகவும் கூறினார். அப்பகுதியில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்க நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீட்டையும் சிங்கள இராணுவத்தினர் தலைமையிலான ஊர்காவற்படை விட்டுவைக்கவில்லை என்று கூறிய அச்சிங்களவர், தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அகதி முகாம்கள் நோக்கி ஓடியதையும், இன்னும் பெரும் எண்ணைக்கையானோர் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்வதையும் தான் கண்டதாகவும் கூறினார். தமிழர்களின் 12 கோயில்களும் சில பள்ளிவாசல்களும் சிங்களவர்களால் எரிக்கப்பட்டது, அப்பகுதியில் இருந்த பட்டாம்குறிச்சி எனும் தமிழ்க் கிராமம் முற்றாக எரியூட்டப்பட்டிருந்தது. அக்கிராமத்தில் இனிமேல் வாழமுடியாது என்கிற நிலை ஏற்பட்டதால் நாமும் அங்கிருந்து வெளியேறி வந்துவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார். கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், திருகோணமலையில் புரட்டாதி 4 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து அப்பகுதி பாடசாலையொன்று அகதிமுகாமாக மாற்றப்பட்டதாகவும், குறைந்தது 6,000 தமிழர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தமை தனக்குத் தெரியும் என்றும் கூறினார். அங்கு நடக்கு எவையுமே வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அப்பகுதிக்கான அனைத்துத் தொலைத் தொடர்பும், போக்குவரத்துக்களும் இராணுவத்தால் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தன என்றும் அவர் மேலும் கூறினார். இத்தாக்குதல்களின்போது இராணுவத்தினர் கையாண்ட நடைமுறை குறித்துப் பேசும்போது அச்சிங்களவர், "முதலில் சீருடைகள் இன்றி ஒரு பகுதிக்கு வரும் சில இராணுவத்தினர் அப்பகுதியில் குண்டொன்றினை எறிந்துவிட்டோ அல்லது வீடொன்றிற்குத் தீ மூட்டி விட்டோ மறைந்துவிடுவர். பின்னர் அப்பகுதிக்கு பாரிய ஆட்பலத்துடன் வரும் இராணுவத்தினர் அப்பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறிக்கொண்டே தாக்குதலில் இறங்குவார்கள். ஆகவே, தமிழர்களே இராணுவத்தினர் மீது முதலில் தாக்குதல் நடத்தினார்கள், ஆகவேதான் இராணுவம் பதில்த் தாக்குதல்களில் இறங்கினார்கள் என்று அரசாங்கம் கூறுவது பொய். இப்பகுதிகளில் முதலில் குண்டுகளை எறிந்துவிட்டு மறைந்துகொள்வது ஊர்காவற்படையினரும், இராணுவத்தினரும் தான். புலிகளுக்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை. புரட்டாதி 9 ஆம் திகதி சம்பந்தனின் வீட்டை எரித்தவர்களும் இராணுவத்தினர்தான். இப்பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளை எரித்து நாசம் செய்தவர்கள் சிங்களவர்களே, நான் அவர்களின் செயலைக் கண்ணால்க் கண்டேன்" என்று அச்சிங்களவர் தொடர்ந்தார். "தனது இராணுவத்தையும், ஊர்காவற்படையினரையும், சிங்களக் காடையர்களையும் கொண்டு தமிழரின் தாயகப்பகுதியான இலங்கையின் வட கிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர்கள் அகலத்திற்கு தனக்கான பாதுகாப்பான வலயம் ஒன்றினை, தமிழர்களை அப்பகுதியில் இருது முற்றாக அழித்தோ அல்லது விரட்டியடித்துவிட்டோ அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையில் அது முற்றான வெற்றி கண்டிருக்கிறது என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த்துறை உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து நிரந்தரமாகவே துரத்திவிடும் நோக்கில் கடந்த மூன்று மாத காலமாக அரசால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் கரையோரத் தமிழ்க் கிராமங்களான குச்சவெளி, நிலாவெளி, உப்புவெளி, முருகபுரி, திருக்கடலூர், வீரநகர் ஆகியவையும் திருகோணமலை நகரின் பகுதி 10 எனும் கிராமமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல்கள் முடிவடைந்தபின்னர் தமது பகுதிகளுக்குத் திரும்ப முயன்ற தமிழர்களை இராணுவத்தினரும், சிங்கள ஊர்காவற்படையினர் அடித்து விரட்டுகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் முருகபுரி பகுதியில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற சில தமிழர்களை ஊர்காவற்படையினர் வெட்டிக்கொன்றிருக்கின்றனர்" என்று சம்பந்தன் மேலும் தெரிவித்தார் என்று இந்துவின் செய்தி கூறுகிறது.1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கும் செய்யும் துரோகம்..தமிழ்த்தேசியத்தை விட்டு மக்களை சலிப்படையச்செய்து ஒதுங்கப்பண்ண செய்யப்படும் செயல்ப்பாடுகள்தான் இவை... மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல மக்களை சலிப்படையச்செய்யும் வேலை.. நான் எல்லாம் ஒருகாலத்தில் இவர்களுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு சண்டைபோட்ட ஆள்.. இவர்கள் பேய்க்காட்டுவதை பார்த்து பாத்து சலித்து வெறுத்து ஒதுங்கிய பலரும் நானும் ஓராளாகிறேன்.. தொழில்நுட்பத்துடன் நாங்கள் அப்டேற் ஆகாவிட்டால் எப்படி நாங்கள் கணணித்துறையில் நிலைக்க முடியாதோ அதே பழைய ரெக்னிக்குகளை பேசிக்கொண்டு இவர்களாலும் நிலைக்க முடியாது.. வேணுமானால் எழுபது எண்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டி பேசி பொழுதுபோக்க இவர்கள் செய்வது உதவும்.. ஆனால் 2கே கிட்ஸ் பெரும்பான்மையாகப்போகும் அடுத்த தலைமுறை அரசியலில் இது எடுபடப்போவதில்லை.. இவர்களை காலமே காலாவதியானவர்கள் என்று புறங்கையால் தட்டி ஒதுக்கிவிடும்..1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம். ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இந்தியாவை மீறி இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே நடந்துவிடப்போவதில்லை.சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் சுப்பன் நின்றாலென்ன? குப்பன் நின்றாலென்ன? இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கின்றதென நான் நினைக்கின்றேன்.1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointவட அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்குத்தான் சொந்தம் என நான் சொல்கிறேன்.1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointஇந்த செய்தி பொருந்தவில்லையே??? லங்கா புவத்தில் எடுத்தீர்களா???🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசிறீசபாரட்ணத்தின் உத்தரவில் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் சுட்டுக் கொன்ற தாஸ் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் கலந்துகொள்வதற்காக பிரபாகாரன் வெளியே வந்திருந்தார். புரட்டாதி 18 ஆம் திகதியுடன் மூன்று மாத கால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரவிருப்பதனால், அதற்கு முன்னர் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் சந்திப்பொன்றினை நடத்த இந்தியா முயன்று வந்தது. தலைவர் பிரபாகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலக்குமார் பிரபாகரனைப் பார்த்து "உங்களின் பொடியன்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் கொன்றதாக மக்கள் பேசுகிறார்கள்" என்று கூறினார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அதே மக்கள்தான் சிறியின் பொடியன்களே அவர்களைச் சுட்டதாகவும் கூறுகிறார்களே?" என்று பாலக்குமாரைப் பார்த்துக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சிறீசபாரட்ணம் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, "இல்லையில்லை, எனது பொடியன்கள் இதனைச் செய்யவில்லை" என்று மறுதலித்தார். ஆனால், இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்றது சிறீ சபாரட்ணத்தின் டெலோ உறுப்பினர்கள் தான். சிறீசபாரட்ணத்தின் நேரடி அறிவுருத்தலின்படியே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கான உத்தரவு சிறீசபாரட்ணத்தால் பின்வருமாறு வழங்கப்பட்டிருந்தது, "இரண்டு கூட்டணிக்காரர்களுக்கு மண்டையில் போடுங்கள்". டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த தாஸிற்கே சிறீசபாரட்ணத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தாஸ் இரு குழுக்களை இக்கொலைகளைச் செய்ய அனுப்பி வைத்திருந்தார். தர்மலிங்கத்தின் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த புளொட் அமைப்பின் சென்றியில் இருந்த உறுப்பினர்கள் அன்று வீட்டிற்கு வந்த காரினை அடையாளம் கண்டிருந்தனர். புளொட் சார்பாக திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்டவரான தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் தனது தகப்பனாரின் படுகொலையில் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதை முற்றாகத் தவிர்த்திருந்தார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அமைப்புக்களில் ஒன்றே எனது தகப்பனாரைப் படுகொலை செய்தது" என்று மட்டும் கூறினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணி தனது அமைப்பிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அவ்வறிக்கையில் டெலோ அமைப்பும் கைய்யொப்பம் இட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் எதற்காக சிறீசபாரட்ணம் கொல்வதற்கு முடிவெடுத்தார் என்பது இன்றுவரை தெரியாத புதிராகவே இருக்கிறது. சில காரணங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தன. ஒரு தரப்பின் செய்தியின்படி ஏதோ ஒரு உளவுத்துறையின் ஏவலின்படியே சிறீசபாரட்ணம் இக்கொலைகளைச் செய்தார் என்று கூறப்பட்டது. இன்னொரு தரப்போ, புலிகளும் டெலோ அமைப்பும் கலந்துகொள்ளாத நிலையில், ஈழத்தேசிய விடுதலை முன்னணி ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும், கூட்டணி பேச்சுக்களில் கலந்துகொள்ளச் சம்மதித்தமைக்காகவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம், புலிகள் மீது தமிழ் மக்களிடையே ஏற்பட்டு வந்த நன்மதிப்பினையும், அவர்களுக்கான ஆதரவினையும் களங்கப்படுத்தவே இப்படுகொலைகளைப் புரிந்துவிட்டு அவற்றினை புலிகள் மீது சுமத்த சிறீ எத்தனித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்கொலைகளுக்கான காரணங்கள் எவ்வாறானவையாக இருந்தபோதும், இக்கொலைகளை தனது ஆதாயத்திற்காக இலங்கையரசு பாவித்துக்கொண்டது. தில்லி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான ஒற்றைக் காரணமாக ஆளாளசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகளைப் பாவித்த ஜெயார், தமிழர் மீதான யுத்தத்தில் புதிய உத்தியொன்றைனை அறிமுகப்படுத்தினார். புரட்டாதி 2 ஆம் திகதி மாலை பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை காவிச் சென்ற இராணுவ வாகனம் மீது போராளிகள் தாக்குதல் நடத்த எத்தனித்த போது, அண்மையில் வாங்கப்பட்ட புதிய உலங்குவானூர்திகளைக் கொண்டு போராளிகள் மீது இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிகவும் தாழ்வாகப் பறந்துவந்த உலங்கு வானூர்திகள் அப்பகுதியெங்கும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்ட மேலும் பலர் காயமடைந்தனர். பருத்தித்துறையில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டமை அதுவரை நடந்துவந்த போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. போராளிகளுடனான சண்டைகளில் நிலப்பரப்பு மீதான ஆதிக்கத்தைச் சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியிருந்த இராணுவத்தினருக்கு வானில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கிடைத்தமையானது, போராளிகள் மீது தமது ஆதிக்கம் மீள நிலைநாட்டப்பட்டுவிட்டது என்கிற மனோநிலையினை ஏற்படுத்தியது. 1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அரச படைகள் போராளிகளின் நிலைகள் என்று தாம் கணிப்பிட்ட பகுதிகள் மீது தொடர்ச்சியாக வாந்தாக்குதல்களை நடத்துவதை வாடிக்கையாக்கிக் கொண்டன. ஆனால், நிலப்பரப்பு மீதான போராளிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. புரட்டாதி 2 ஆம் திகதி ஏறாவூர் பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய நன்கு ஆயுதம் தரித்த போராளிகள் ஏழு பொலீஸாரைக் கொன்றதோடு இன்னும் 12 பேரைக் காயப்படுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது போராளிகளால் கிர்ணேட்டுக்கள், ஆர்,பி.ஜி உந்துகணைகள், மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாக அரசு கூறியது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவ் வடிவமைத்த தில்லி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகளைச் சாட்டாகப் பாவித்த ஜெயார் பிரபாகரனின் அறிக்கையினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கை உட்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பத்திரிக்கைகள் அதனை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்தன. யாழ்ப்பாணத் தமிழர்களும், பொலீஸாரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக குற்றஞ்சாட்டி வந்தனர். அவர்களின் மரணச் சடங்குகளில் உரையாற்றிய பலரும் புலிகளை இக்கொலைகளுக்குக் காரணம் என்று மறைமுகமாக விமர்சிக்கத் தவறவில்லை. இக்கொலைகளையடுத்து இலங்கை அரசும், இந்தியாவும் தமது அதிர்ச்சியையும், கவலையினையும் வெளியிட்டன. செய்தியாளர்களுடன் பேசிய ரஜீவ் காந்தி "சில தமிழ்த் தீவிரவாதிகள் ஏனைய தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறார்கள்" என்று ஆத்திரத்துடன் கூறினார். ஆனால், இக்கொலைகளை புலிகளே செய்தார்கள் என்று முடிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். ஆனால், கொழும்பில் இலங்கையரசு இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக வெளிப்படையாகவே கூறத் தொடங்கியிருந்தது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி, மலினப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் ஜெயவர்த்தன இறங்கினார். தமிழீழ விடுதலை அமைப்புக்களை, "ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வந்திருக்கும் பயங்கரவாதிகள்" என்று அவர் அழைத்தார். அதுலத் முதலியோ இன்னொரு படி மேலே சென்று புலிகளை "கொலைக்குழு " என்று வர்ணித்தார். ரஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட தில்லி ஒப்பந்தத்திற்கு பெளத்த துறவிகளும், எதிர்கட்சியினரும் கொடுத்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட ஜெயவர்த்தன முயன்று வருகையில், அதற்கான ஆயத்தங்களை லலித் அதுலத் முதலி செய்யத் தொடங்கியிருந்தார். அந்நாட்களில் பிரதான பெளத்த துறவிகளும், சிங்கள இனவாதக் கட்சிகளும் இணைந்து சிங்கள இனத்தையும் நாட்டையும் காப்பதற்கான தேசிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவும் முக்கிய உறுப்பினராக இணைந்துகொண்டிருந்தார். தில்லி ஒப்பந்தத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று செயலில் இறங்கியிருந்த கொழும்பின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிக்கைகள் சிங்களவர்களின் அச்சமான மாகாண சபைகள் எனும் பேயிற்கு உயிர்கொடுத்து, ரஜீவ் காந்தி மாகாண சபைகளூடாக சமஷ்ட்டி ஆட்சியை இலங்கையில் கொண்டுவரப்போகிறார் என்றும், அதனூடாக நாடு இரண்டாக பிளவுபடப் போகின்றது என்றும் புலம்ப ஆரம்பித்தன. மந்திரிசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்காத போதும், புரட்டாதி 4 ஆம் திகதி கூடிய மந்திரி சபையில் ரஜீவின் தில்லி ஒப்பந்தம் குறித்து ஜெயவர்த்தன பேசினார். உடனடியாகப் பேசிய பிரேமதாச மாகாணசபைகளை அமைக்க விடமாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய லலித், அரசியல் தீர்வுகுறித்துப் பேசுவதற்கான சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை என்று கூறினார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து மந்திரிசபையில் இருந்த ஏனைய இனவாதிகள் தமிழர்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று தம் பங்கிற்கு ஆர்ப்பரித்து அமர்ந்தனர். அன்று மாலையே இந்திய தூதர் டிக்ஷிட்டை தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வோர்ட் பிளேசிற்கு அழைத்த ஜெயார் யாழ்ப்பாணத்தில் இரு ஜனநாயக அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டமையானது நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றும் சிங்கள மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் முறையிட்டார். மேலும், தமிழர்களுக்கு அரசியல்த் தீர்வினை வழங்குவதற்கு முன்னர் பயங்கரவாதிகளை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் தனது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே, தனது இளைய சகோதரரும் இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஹெக்டர் ஜெயவர்த்தன தில்லியில் ரஜீவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று தமது அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக டிக்ஷிட்டிடம் தீர்க்கமாக ஜெயார் கூறினார். தில்லி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும், வழங்கப்படவிருக்கும் அதிகாரங்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பிற்கு எதிரானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும் ஆபத்தானது என்றும், ஆகவே அவற்றினை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அன்று இரவு டிக்ஷிட்டுடன் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஜெயாரின் தீர்மானத்தை மீளவும் வலியுறுத்தினார். தான் வடிவமைத்த தில்லித் தீர்மானத்தை ஜெயவர்த்தன உதாசீனம் செய்து நிராகரித்தமை ரஜீவிற்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே, உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு டிக்ஷிட்டடம் அவர் கூறினார். புரட்டாதி 7 முதல் 14 வரையான ஒருவார காலப்பகுதியில் தில்லியில் தங்கியிருந்த டிக்ஷிட், ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடனும் நீண்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். கொழும்பு திரும்பிய டிக்ஷிட்டிடம் ரஜீவ் ஒரு செய்தியை அனுப்பினார். அதாவது, தில்லி ஒப்பந்தத்தினை மேலும் மெருகூட்டி, வரவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் தன்னை ஜெயார் சந்திக்கும்போது ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்று ரஜீவ் கோரியிருந்தார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் ஒன்று ரஜீவினால் வழங்கப்பட்டிருப்பது கண்டு ஜெயார் மகிழ்ச்சியடைந்திருந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல் கையாலாகத்தனத்தை விமர்சித்த தலைவர் எமது அரசியல்த் தலைமைகளின் கையாகாலத் தன்மையும், எதிரியின் சூட்சுமங்களை அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்துகொள்ளத் தவறியமையுமே நாம் இன்றிருக்கும் அவல நிலைக்குக் காரணமாகும். அரச பயங்கரவாதம் தனது கொலைநகங்களை கூறாக்கிக்கொண்டும், இனவாதப் பேய் எமதினத்தை அழித்துக்கொண்டும் இருக்கையில் எமது பாராளுமன்ற தலைவர்கள் தமது ஆசனங்களில் இறுக ஒட்டிக்கொண்டும், அற்பச் சலுகைகளுக்காக இனவாதிகளுக்கு சாமரமும் வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்துச் செய்த தவறு வளர்ந்துவரும் தமிழ் இளைஞர்களின் உயிர்ப்பான ஆயுதப் போராட்டத்தினை மலினப்படுத்த முயன்றது. எமது உயிரைக் கொடுத்து நாம் முன்னெடுத்துவரும் தவிர்க்கமுடியாததும், அவசியமானதுமான எமது தேச விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். அரசியல் சலுகைகளுகளுக்காக எமது தியாகம் செறிந்த ஆயுதப் போராட்டத்தினை அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாகப் பாவித்து எம்மை மலினப்படுத்தி வருகிறார்கள். எமக்கான சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்கு நாம் ஆயுதமேந்திப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள மறுத்துவருகிறார்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கை என்பது சற்றும் கிடையாது.அதனால்த்தான் எமது நாட்டை ஆக்கிரமிக்க இந்திய இராணுவத்தினை வரும்படி அழைக்கிறார்கள். எமக்கு இந்தியாவின் உதவி வேண்டும். அவர்களின் ஆதரவு வேண்டும். அவர்களின் நன்மதிப்பு வேண்டும். எமது தனிநாட்டிற்கான ஆதரவினை நல்குவதற்கு இந்தியாவை நாம் வற்புறுத்த வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையினை இந்தியா ஏற்றுக்கொள்ளும்படி நாம் கோரவேண்டும். தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தனித் தமீழீழமே என்பதை இந்தியாவுக்கு நாம் உணர்த்த வேண்டும். ஆனால், இவற்றைச் செய்யாது, எமது பிரச்சினையில் தலையிடுங்கள், தீர்வைத் தாருங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்சுவது அவர்களின் அரைசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகிறது.1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முகிலோடு முகில் மோதி மழையாய் பொழிந்து கற்பாறைகள் தழுவி பூமியைச் சேர்ந்திடும் அமிர்தமாகும் நீரே ..........! 🙏1 point - நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.