Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2951Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்7Points3054Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்6Points15791Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/23/24 in all areas
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
4 pointsரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே ! இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம். கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க. நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு. "முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை. நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான். அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம். இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ ! ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே ! இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது. https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk4 points
-
சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
மக்கள் உங்கள் எல்லாருக்கும் சேர்த்து சங்கூத ரெடியா இருக்கிறார்கள் பிரேமச்சந்திரன் சார்! ஈழத்தமிழர் வரலாற்றில் நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான காட்டிக்கொடுப்பாக இது இருக்கும்!3 points
-
தமிழ் உலகின் இசையமைப்பாளர்கள்
2 pointsஇது விக்கிபீடியாவில் இருந்து. உருமாற்றம் செய்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/இசையமைப்பாளர்களின்_பட்டியல் பெயர் முதல் படம் வருடங்கள் பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973 ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963 கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992 எம். எஸ். விஸ்வநாதன் பணம் 1945 - 2013 சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952 சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990 டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004 வேதா மர்ம வீரன் 1956 - 1971 ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989 சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது வி. குமார் நாணல் 1965 - 1976 டி. கே. ராமமூர்த்தி பணம் 1966 - 1986 குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008 இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010 கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - 2020 வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது எஸ். ஏ. ராஜ்குமார் சின்னபூவே மெல்லபேசு 1987 - தற்போது எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007 ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது ஆதித்யன் அமரன் 1992 - தற்போது ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது கார்த்திக் ராஜா பாண்டியன் 1992 - தற்போது சிற்பி கோகுலம் 1993 - தற்போது மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002 சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் 1997 - தற்போது பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது பரணி பெரியண்ணா 1999 - தற்போது ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது தினா அன்னை 2000 - தற்போது ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது டி. இமான் தமிழன் 2002 - தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது ஏ. ஆர். ரைஹானா மச்சி 2004 - தற்போது ஜோசுவா சிறீதர் காதல் 2004 - தற்போது விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது பவதாரிணி அமிர்தம் 2006 - 2024 சுந்தர் சி. பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது போபோ சசி குளிர் 100 2009 - தற்போது எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது பேரரசு திருத்தணி 2012 - தற்போது நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போது ஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போது தர்புகா சிவா கிடாரி (2016 திரைப்படம்) 2015- தற்போது வரை அனிருத் ரவிச்சந்திரன் 3 2013-தற்போது வரை யுவன்ஸ்ரீ தயாநிதி உன் நினைவுகள் 2022-தற்போது வரை ஹிப் ஹாப் தமிழா ஆம்பள 2015-தற்போது வரை2 points
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
2 points
- கிருஷ்ணகிரி பாலியல் கொடுமை வழக்கு: அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் - சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை
2 pointsகேடுகெட்ட மனிதர்கள். எல்லாமே அரசியல் இவர்களுக்கு, எங்கேயும் ஆதாயம் தேடுவது தான் இவர்களின் பிழைப்பு. பக்கம் பக்கமாக அறிக்கைகள் விடுவதையும், பாதயாத்திரைகள் போவதையும் விடுத்து, ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையாவது எடுத்திருப்பார்களா.......2 points- சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினை எப்படி தீராது என தெளிவாகச் சொல்லியிருக்கலாம். இந்தியா மற்றும் ஐ.எம்.எப், உட்பட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எவையும் பொருளாதார மற்றும் கடனுதவிகள் வழங்குவதற்கு தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும் என்ற முன் நிபந்தனை எதனையும் முன் வைக்கவில்லை. அப்படி, வைக்க கூடிய அழுத்தங்களைத் தானும் தமிழ் தரப்பால் முன் வைக்க கூடியளவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலமும் இல்லை. சமகால நிகழ்வுகளின் / நிலமைகளின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு போதும் முடிவுகள் எடுப்பதில்லை. உண்மையான கோமாளிகளின் கூடாரம் இது. சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்களின் வாக்குகளின் மூலம், தென்னிலங்கை வேட்பாளர் ஒருவர் சனாதிபதியாகி செப் 21 இன் பின் பதவியேற்பார். அப்படி ஏற்ற பின், இவர்கள் சொல்லும் இந்த 'செய்தி' யை ஏறெடுத்து பார்க்கும் தேவை கூட அவர்களுக்கு ஏற்படாது.2 points- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
ஏன் பேச விரும்பவில்லை? முட்டாள்களின் செயல்களைவிட, நல்லவர்களின் மெளனம் அதிக சேதத்தை விளைவிக்கும். 🤦🏼♂️ கந்தையருக்கு தான் என்ன சொல்கிறேன் என்பதே தெரியாமல்தான் கதை அளக்கிறார். ஜேர்மனியில் ஒருபோத்தல் தண்ணீர் கூட இலவசமாகக் கிடைக்காதபோது சிறீலங்கன் கடவுச்சீட்டு மட்டும் உவருக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டுமாம் 🤣 (கனடாவில் ஒரு Sri Lankan கடவுச்சீட்டு $380 (முன்னைய கடவுச் சீட்டின் பிரதியுடன்.) முன்னைய கடவுச்சீட்டு இல்லாவிட்டால் $480 )2 points- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
ஓரங்கட்டிவிட்டுத் தங்கள் ஆடம்பரங்களைப் படம்போட்டுக் காட்டவும் தவறுவதில்லை.2 points- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points- ‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து
2 points- சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
சேறடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி ஒரு படுகொலையோ அல்லது ஒரு ஆட்சிக்கவிழ்ப்பையோ எதிர்பார்க்கலாம். 😁2 points- தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
தமன் இப்படி கலக்கல் பாட்டுக்கள் போடுவதில் வல்லவர். இசை தெரிவு ஒன்றில் நடுவராகவும் உள்ளார்.2 points- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளுவதுமே. உண்மையில் இது மட்டுமே அவர்களால் செய்யக்கூடியதும். ஆனால் இந்த மண்குதிரைகளை எப்போது புலத்துத்தமிழர்கள் நம்பத்தலைப்பட்டார்கள் என்றால் அது புலிகளின் காலத்தில், உண்மையிலே ஒன்றுக்கும் உதவாத கூத்தாடி மண்குதிரைகள் புலிகளின் பக்கபலத்துடன் பெரும் விசையுடன் மக்களுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் புலிகளின் அரசியல் முகம் என்பதால் மக்களும் இவர்களை ஏற்றுக்கொள்ள இந்த கூத்தடிகளோ தங்களது உண்மையான விசை எது என்பதை அறியாமல் தங்களை பெரிய வீரர்களாகவும் மக்களோ இவர்களை ஏக அரசியல் பிரதிநிதிகளாகவும் வரித்துக்கொள்ள மண்குதிரைகளெல்லாம் பொன்குதிரைகளாயின. என்று விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கூத்தாடிகளின் மாயவிம்பம் கலையத்தொடங்கியது. கூத்தாடிகளுக்கு தலைவர்கள் தரப்பட்டார்கள். கூத்தாடிகளின் பொறுப்பு ஒரு விற்பனை பிரதிநிதியின்(சேல்ஸ் Rep) இன் வேலை, ஆயிரம் பொய்யை சொல்லியாவது தரப்பட்ட தலைவரை ஈழத்தமிழர்களின் தலையில் கட்டிவிடுவது. அதை அவர்களும் சரிவர செய்தார்கள். ஈழத்தமிழர்களும் கூத்தாடிகளை பற்றிக்கொண்டிருந்த மாயவிம்பத்தை கைவிடத்துணியவில்லை. விழைவு கூத்தாடி மண்குதிரைகளை நம்பி இனப்படுகொலை பங்கில் எந்தவிதத்திலும் சளைக்காத பொன்சேகாவிற்கு பெருவாரியாக வாக்களித்து மகிழ்ந்தனர். அதாவது சர்வதேசத்தின் இந்த சோதனை முயற்சியில் ஈழத்தமிழர் சர்வதேசத்திற்கு சொல்லிய செய்தி நாங்கள் ஒரு சிறப்பான எடுப்பார்க்கைப்பிள்ளைகள்என்பதே. இன்று மண்குதிரைகளை நினைத்து அங்கலாய்க்கும் நாம் அன்று இறுதிப்போரில் இந்தியாவில் குப்புறப்படுத்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்ததும் எமக்கு தீர்வு எடுத்து தருவதற்கு திரும்ப களத்திற்கு வந்த கூத்தாடி குதிரைகளை செருப்புத்தேய தேய கும்மியெடுத்திருந்தால் குறைந்தபட்சம் இந்த அரசியல் வெறுமையையாவது தடுத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் ஈழத்தமிழர்களே எடுத்திருந்தினர். அறிவிலிகள், மடையர்கள் தான் ஒருவனால் ஒன்று முடியாது என்று தெரிந்துகொண்டே அதனை அவனிடம் கொடுத்து விட்டு அவன் அதை சரிவர செய்வான் என்று தொடர்ந்து எதிர்பார்ப்பார்கள் என்பது எனது கருத்து. என்னைப்பொறுத்தவகையில் ஈழத்தமிழர்கள் இந்த இரண்டுபதங்களாலும் அழைக்கப்பட சகலவகையிலும் பொருத்தமானவர்கள்2 points- கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் ஹீரோவாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துவரும் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்பதால் கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் இதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. இந்த இரு தரப்பை இப்படம் திருப்திபடுத்தியதா என்பதை பார்க்கலாம். மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். எந்நேரமும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரை, வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு என்ன பிரச்சினை? - இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவதுதான் கிட்டத்தட்ட கதை. மொத்தக் கதையையும் ஒரு சின்ன துண்டுச் சீட்டில் எழுதிவிடக் கூடிய மிக மிக சிம்பிளான ஒரு களம். எனினும் தன்னுடைய முந்தைய படமான ‘கூழாங்கல்’ போலவே ஆழமான, அடர்த்தியான ஒரு படத்தை கொடுத்துள்ளார் பி.எஸ்.வினோத் ராஜ். ஓரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடியும் ஒரு சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல்களை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நிலவும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் இந்த காலத்திலும் செலுத்தும் அதிகாரம் என படம் போகிற போக்கில் பல விஷயங்களை வசனங்கள் வழியே தொட்டுச் செல்கிறது. தெருவில் உள்ள ஒரு ஸ்பீக்கரில் பாடும் ‘ஒத்தையடி பாதையிலே’ பாட்டை அன்னா பென் முணுமுணுப்பதும், அதைத் தொடர்ந்து சூரி, அன்னா பென் தொடங்கி மாமியார், மாமனார், அப்பா என அனைவரையும் அடித்து, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டும் காட்சி இந்த படத்தின் ‘பீக்’ தருணம். அந்த காட்சி முழுவதும் பார்க்கும் நமக்கு பதைபதைப்புடனே நகரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். சூரி, அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிப்பில் ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை காட்டிலும் சூரிக்கு இது மிக முக்கியமான படம். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார். அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும்தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அவரும் ஸ்கோர் செய்கிறார். இவர்கள் தவிர சூரியின் சொந்தக் காரர்களாக பைக்கில் பின்னாலேயே வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். படத்தில் இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகின்றன. பின்னணி இசை இருந்திருந்தால் கூட படத்தோடு நம்மால் முழுமையாக ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. சமரசமே இன்றி பின்னணி இசையை கூட சேர்க்காமல் தன்னுடைய திறமை நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்டலாம். குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. படத்தின் நீளம் வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தான். ஆனால் அதில் முக்கால்வாசி நேரத்தை நீள நீளமாக வைக்கப்பட்ட ஷாட்களே நிரப்பியிருக்கும் என்று தெரிகிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ, கதாபாத்திரங்கள் நடந்து கொண்டே இருப்பதை காட்டுவது, திரையின் ஒரு ஓரத்தில் கிளம்பும் ஆட்டோ மற்றொரு ஓரத்தை அடையும் வரையும், திரையை விட்டு மறைந்த பிறகும் கூட ஷாட் அப்படியே இருப்பது, என அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட நீளமான ஷாட்கள் பல இடங்களில் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. எந்தவொரு தீர்வும் இல்லாமல் சூரியின் கோணத்திலிருந்து முடியும் க்ளைமாக்ஸ் ஆடியன்ஸின் பார்வைக்கே விடப்பட்டாலும், திரையரங்குக்கு வரும் பொதுவான பார்வையாளர்களால் அது ரசிக்கப்படுமா என்று தெரியவில்லை. மொத்தத்தில், நுணுக்கமான காட்சியமைப்புகள், கிராமத்தின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டிய விதம் என ஒரு முக்கியமான சர்வதேச கலைப் படைப்பை எந்தவித சமரசமும் செய்யாமல் கொடுத்துள்ள இயக்குநரையும், இதனை தயாரித்த சிவகார்த்திகேயனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! | Kottukkaali Movie Review - hindutamil.in1 point- நாளைய மாற்றம் திரைப்பட பாடல் பதிவு
பொப் இசைப் பாடகர் பரமேஸ்வரனின் மகள் பிரபாலினி பிரபாகரனின் இசையில்.1 point- ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
1 pointஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே! விடிவு தேடும் உனது துன்பத்தை விட இது சிறியதென்பதால். நாங்கள்.. தாங்கியே வாழப் பழகினோம். வேறொரு மொழி, வேறொரு கலாச்சாரம், வேற்று மனிதர்கள் விபரம் தெரியாத நாம். அரசுகள் எங்களை ஏற்றுக்கொண்டபோதிலும் இங்கு சிலர் எங்களை வேற்ரு கிரக மனிதர்களாகவே பார்த்தார்கள். இப்படி இருந்தும் எங்களின் உழைப்பின் ஒருபகுதியை உனக்கு அனுப்பியே அங்குள்ளேரை வாழவைத்தாயென்பதை அவர்களுக்கு ஞாபகப் படுத்து தாயே! அனால் இன்றோ எங்களின் உழைப்பு பொய் களவில்லா எங்களின் வாழ்க்கை முறை மொழியின் தேர்ச்சி குழந்தைகளின் கல்வியின் உயற்சி பலதையும் பார்த்து மனிதநேயத்துடன் தங்களின் குழந்தைகளாக எங்களை பார்கிறார்கள். தாயா?தத்தெடுத்த தாயா? என்ற குளம்பம் எங்களை இப்போது வாட்டுகிறது. இருந்தாலும்- எம் உயிர் போகும் நிலை வந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? அம்மா.. எங்கள் பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு பூட்டப் பிள்லைகளுக்கு உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி பூட்டியென சொல்லி வளர்கிறோம் தாயே! ஒருகாலம் நாங்கள் வரும்போது-இது எனது பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் எனது பூட்டப் பிள்ளைகளென்று “அங்கிருப்போர்க்கு” சொல்லிவை தாயே அது போதும் எங்களுக்கு! அன்புடன் -பசுவூர்க்கோபி.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சகோதரி ஜெனியின் அருமையான தகவல்கள் . ........! 👍1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
2009 பின்னரும், ஆயுத போராட்ட காலத்திற்கு முன்ன்னரும் ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகளையே சிறுபான்மை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர், ஏதோ ஒரு அரசியல் கட்சிகளுடன் திரைமறைவு உடன்படிக்கையோ அல்லது வெளிப்படையான உடன்படிக்கையினூடாகவோ, இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது, இனியும் மாறப்போவதில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு இதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதனை சதாரண மக்கள் சிந்தித்து அதற்கேற்ப தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.1 point- ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
Python படிக்கும் போது கூட இந்தளவுக்கு என் தலை சுத்தியது இல்லை.1 point- சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
12.10.2013இல் வந்த கருத்துப்படம்1 point- இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
தொடர்ந்து இலங்கை வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்கினம் இல்லை இரண்டாவது இனிங்சில் 1ரன்ஸ் 2விக்கேட்...................இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்வது சிரமம் மழை இடைக்கிட வந்து விளையாட்டு தடை படுது சம நிலையில் முடிய வேண்டிய மைச் இலங்கை தொடக்க வீரர்களின் சுதப்பல் விளையாட்டால் இங்லாந் வெல்ல போகுது...........................1 point- யாழில் ஆரம்பமான மாபெரும் வர்த்தக கண்காட்சி..!
நல்ல முயற்சி. இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி வைத்து இளைய சமூகத்தினரில் பலரை தொழிமுனைவோராக மாற்ற வேண்டும்.1 point- உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
1 pointநேற்று பனிப்போர் என்று சொன்னார்கள், இன்று மூன்றாம் உலகப் போர், நாளை அணு ஆயுதப் போர் என்பார்கள்............... அப்படியே ரிப்பீட்......... ஆதவன் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும், ஐபிசி தமிழ் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும் ஒரே ஆளா................ (இங்கே பிரகாஷ்ராஜ் வரவேண்டும்........😀) 'செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு..........' என்பது என்றும் சாகாத ஒரு சொலவடை.........🤣1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்க்கும்போது தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி ஏலவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தோன்றுகின்றது!😂1 point- உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
1 pointநீங்கள் இப்படித் தான் தொப்பியை தலையில் போட்டு கொண்டு அலைகிறீர்கள் பாவம் யார் பெத்த புள்ளையோ? 😷1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சரி இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன?? நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.1 point- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
என் வீட்டில் இருந்து தள்ளி மூன்றாவது வீட்டில் வசிப்பர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தன் முகனூல் எங்கும் இக் கொலை தொடபான விவரங்களை பகிர்ந்து வருகின்றார். அவருடன் இக் கொலை தொடர்பாக கதைத்ததில், இது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்கின்றார். அப் பெண்ணின் முதுகில் பலரது சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் இருந்தன என்றும், நெஞ்சில் பலர் ஏறி மிதித்து அணுவணுகாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றார். எல்லாவற்றையும் விட, இப் பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இக் கொடூரத்தை நிகழ்த்திய பின் மீண்டும் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஒனறில் போட்டுள்ளனர் என்கின்றார். மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்தின் படியே இது நிகழ்ந்துள்ளது என்றும், இந்த கொலையை மூடி மறைக்க அனைத்து விதமான சாட்சியங்களையும் சான்றுகளையும் அழித்து விட்டனர் என்றும் சொன்னார்.1 point- 385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம்
385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் அழகு நகரமாக விழங்கும் சென்னைக்கு இன்று 385வது பிறந்தநாள் . அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது. சென்னை நகருக்கு அப்பெயரைப் பெரும் முன்பே நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்துள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது புனித ஜோர்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர். அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார். நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து “மெட்ராஸ் மாகாணம்” உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது. அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன. அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது. சென்னையில் தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு. இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/13967901 point- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 pointவிமர்சனத்துக்கு நன்றி. OTT இல் வெளிவரும் போது பார்க்க இருக்கும் படங்களின் வரிசையில் இதனையும் சேர்த்துக் கொள்கின்றேன். இங்கு இப் படம் அரங்கங்களில் திரையிடப்படவில்லை கொட்டுக்காளி, வாழை படங்களைப் பார்க்கும் எண்ணம் உண்டா ?1 point- உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
1 pointஅவசரம்🤣1 point- உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
1 pointIBC Tamil மற்றும் விசுகர் தவிர்ந்த வேறெங்கும் இப்படிசெய்தியை காணக் கிடைக்கவில்லை. @விசுகு உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் எல்லவற்றையும் கவிட்டுக் கொட்டினீர்கள் 😏1 point- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ரனினில் நீண்ட கால அரசியலில் தமிழருக்கு செய்த நன்மைகள் எவை என்று யாராவது சொல்ல முடியுமா? சிங்கள மக்களிடன் சேர்த்து சாம்பார் ஆக்காமல் தனித்து தமிழருக்கு செய்த நன்மைகள் எவை?1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 pointநான் இன்னும் இப் படத்தைப் பார்க்கவில்லை . .........ஆயினும் நல்ல படங்கள் கல்லா கட்டுவதில்லை . .......இதுதான் யதார்த்தம் . ........உங்களின் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது ......பார்க்கலாம் .......! 👍1 point- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 point- நாட்டுக்கோழியை விட 'கடக்நாத்' கோழியில் அதிக ஊட்டச்சத்து உள்ளதா? கருமை நிறம் எப்படி வந்தது?
ஊர்வன, பறப்பனவற்றுகளுடன் உங்களுக்குள்ள ஈடுபாடே தனி.1 point- தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!
1 point- தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!
சுமந்திரனின் கட்சிக்கு என்ன பெயர்?1 point- தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி! இலங்கைக்கான (Sri Lanka) தென்னாபிரிக்கத் (South Africa) தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க் (Sandhill Edwin Schalk), துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி (Renee Everson Varney) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sridharan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள (Colombo) தென்னாபிரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மனித உரிமை இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இந்த விடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறீதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sridharan-mp-met-the-south-african-ambassador-17243182181 point- கருத்து படங்கள்
1 point1 point- பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும்
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?. பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும். அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை. மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே ஜனாதிபதியாகத் தெரிவாவார். . எவ்வளவு அதிகமாக வாக்களிக்கப்படுகின்றதோ அவ்வளவு வாக்குகளில் அவர் 50 வீதத்துக்கு மேல் பெறவேண்டும். ஆனால் பகிஸ்கரிப்பதன் மூலம் குறைந்த வாக்குகளே அளிக்கப்படும் என்பதால் குறைந்த வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் ஒருவர் குறைந்த அளவு வாக்குகளுடன் இலகுவாக ஜனாதிபதியாகிடுவார். எனவே, நாடளாவிய ரீதியாக பதியப்பட்ட மொத்த வாக்குகளில் ஈழத் தமிழர் கொண்டுள்ள பதியப்பட்ட வாக்குகளின் விகிதம் 11 சதவீதத்திற்கு மேலாகும். இந்தப் 11 சதவீதத்திற்கு மேலான ஈழத் தமிழரும் வாக்களிக்காது பகிஸ்கரித்தால் மிகுதி வாக்குகள் 89 வீதமாகும். இந்த 89 சதவீதத்தில் அளிக்கப்பட்டுச் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் என்ற வகையிலேயே முதலாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பு இருக்கும். வாக்கு வீதம் இதன்படி பகிஸ்கரிப்பதன் மூலம் எதிரி பதியப்பட்ட மொத்த வாக்குகளில் அளிக்கப்பட்ட குறைந்த வித வாக்குகளோடு இலகுவாக ஜனாதிபதியாக முடியும். அதன்படி பகிஸ்க்கரிப்பு என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க உதவியதாகவே அமையும். இதன் மூலம் தேர்தல்ப் பகிஸ்கிரிப்பானது வெல்லப்போகும் ஒரு சிங்கள ஜனாதிபதிக்கு திட்டவட்டமாக சேவை செய்யும் ஒரு முறையாகவே அமையும். உதாரணமாக பதியப்பட்ட மொத்த வாக்குகளை 100 என்று எடுத்துக்கொள்வோம். நாடு தழுவிய ரீதியில் மொத்தத்தில் 80 வீதத்தினரே வாக்களித்தனர் என்று எடுப்போம். அப்படியாயின் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 80. இதில் இரண்டு வாக்குகள் செல்லுபடி அற்றவை என்று எடுப்போம். எனவே அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியான 78 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். இதில் 50 வீதம் என்பது 39க்கும் மேற்பட்ட வாக்குகள் ஆகும். அதன்படி 39 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஜனாதியாவார். இந்த அழிக்கப்பட்ட மொத்தம் 80 வாக்குகளில் தமிழரின் வாக்குகள் 10 என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த 10 வாக்குகளையும் அளிக்காது பகிஸ்கரித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 70 ஆகும். இந்த அளிக்கப்பட்ட 70 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை. எனவே செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் 68. இந்த 68 வாக்குகளில் 50 வீதம் என்பது 34 வாக்குகளுக்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் முதலாவது சுற்றிலேயே ஜனாதிபதியாக தெரிவாவார். அதாவது 39 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வேண்டிய ஒருவர், பகிஸ்கரிப்பின் வாயிலாக 34க்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் இலகுவாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். அதேவேளை சிங்கள தரப்பில் பலம்வாய்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு அவருக்கு வாக்களிக்கப்படும் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளராலும் முதல் சுற்றில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியாது. அப்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட மாட்டாது. பின்பு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிகழும். இதிலும் யாரும் 50சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய சூழல் இல்லை. ஏனெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்குகளை சிங்கள கட்சிகள் எதுவும் மக்களிடம் கோருவதும் இல்லை. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படி இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை அளித்த நடைமுறை அரசியல் வரலாறும் இல்லை. இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் எந்த ஒருவரின் வாக்கு அளவிலும் மாற்றமேற்பட இடமில்லை. ஜனாதிபதி பதவி அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்படுகின்ற முதலாவது சுற்று, இரண்டாவது சுற்று ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை (Absolute majority) பெறமுடியாது. அடுத்து அறுதிப் பெரும்பான்மையற்ற சாதாரண பெரும்பான்மை ( Simple majority ) வாக்குகளை மட்டும் கொண்ட ஒரு பலவீனமான ஜனாதிபதியே தெரிவாக முடியும். அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி என்ற அரசியல் யாப்பின் முதலாவது இரண்டாவது விருப்பங்களை இது தோற்கடித்து விடுகிறது. ஆதலால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அளிக்கப்படும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிங்கள அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதியை கொண்டுவர வழிவகுக்கும். மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மலிந்திருக்கும் இலங்கை அரசியலில் ஓர் அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதி பதவிக்கு வருவது என்பது ஈழத் தமிழருக்கு சாதகமானது. எதிரி பலவீனம் அடைவது போராடும் இனத்துக்கு இலாபகரமானது. பகிஸ்கரிக்க கோருபவர்கள் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ளவேண்டும். அதாவது வேறு எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்காது சங்குக்கு மட்டும் வாக்களித்து கொள்வது பெரிய பகிஸ்கரிப்பாகும். தமிழ் வேட்பாளருக்கு முதலாவது வாக்கையளித்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகளை சிங்கள வேட்பாளருக்கு அளிக்காதுவிட்டால் அது சாதாரண பகிஸ்கரிப்பை விடவும் ஓர் உயர்ந்த கட்ட பகிஸ்கரிப்பாய் அமையும். சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் இரண்டாம் மூன்றாம் விருப்பத்தெரிவு வாக்குகளை அளிக்காது சங்கு சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கூறுகிறார். அதனால் சங்குச் சின்னத்தை ஆதரித்து அதற்கு மட்டுமே வாக்களித்து விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்காமல் விடுவது நேர்கணிய ரீதியான ஒரு பலம் பொருந்திய பகிஸ்கரிப்பாகும். இரண்டும் மூன்றும் கூட்டினால் ஐந்து ( 2 + 3 = 5 ), மூன்றில் இரண்டடை கழித்தால் ஒன்று ( 3 - 2 = 1 ) என்பது மூன்றாம் வகுப்பு எண் கணிதம் படித்த ஒரு குழந்தைக்குக்கூடப் புரியக்கூடிய கணக்கு. இதனை தமிழ்த்தேசியம் பேசுவோர் புரியவில்லை என்றால் அவர்கள் சிங்களத்தடன் கள்ள உறவில் உள்ளார்கள் என்பதே அர்த்தம். இவற்றிற்கு அப்பால் தமிழர் தம்மை பலப்படுத்த பொது வேட்பாளர் பெரிதும் துணைபுரிகிறது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பேராதரவுடன் அத்தேர்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22 தமிழ் ஆசனங்கள் கிடைத்தன. தமிழ் மக்கள் இப்பின்னணியில் விடுதலைப் புலிகள் வெறுனே ஓர் ஆயுத இயக்கம் மட்டுமல்ல அது பரந்த மக்கள் ஆதரவை கொண்ட ஒரு இயக்கம் என்பதும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியான தேசிய அபிலாசைகளை கொண்டவர்கள் என்பதும் புலனாகியது. ஆதலால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தால் மட்டும் போதாது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அளிப்பதற்கு ஜனநாயக ரீதியான தமிழ் ஐக்கியத்தை சீர்குலைப்பதை தமது முதன்மையான இலக்காகக்கொண்டு முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் ஈழத் தேசிய ஐக்கியத்தை முதலில் கட்சி ரீதியாக சிதைக்கும் நடவடிக்கையை எதிரி மேற்கொள்ள தொடங்கினார். தமிழ் தேசியத்திற்கு இருந்த 22 ஆசனங்களை சுமாராக அரைவாசியாக வெட்டித் தறிப்பதில் எதிர் வெற்றியீட்டியுள்ளதுடன் தமிழ் தேசியம் பேசும் இருக்கக்கூடிய ஆசனங்களையே எதிரி பல கூறுகளாக உடைத்துள்ளார். இதன் மூலம் பலமற்றதாய் காணப்படுவது மட்டுமல்ல அது அழிந்து கொண்டு போகிறது என்ற ஓர் அரசியல் அலையை உள்நாடாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்துவதில் எதிரிகள் அரைவழி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி, அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான சட்ட சூழலை பயன்படுத்தி அவரது நிர்வாகத்தில் நடக்கும் தேர்தலையே எமக்கு சாதகமான ஒரு களமாக மாற்றுவோம். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு வரப்பிரசாதமாய் உள்ளது. ஈழத் தமிழரால் ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது. களநிலையில் அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆனால் எதிரியின் தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்கள் அவாவுறும் தமிழ்த் தேசியம் - ஐக்கிய - ஒருமைப்பாடு என்ற மூன்றும் ஒன்று திரண்ட அரசியல் வாழ்வியல் பலத்தை வெளிக்காட்ட முடியும். நான் - நீ, அவன் - இவன், அது - இது என்று தன்முனைப்புக் கொண்டு எமக்கிடையே சண்டையிட்டுத் தமிழ் தேசியத்தை பலியிடாது, அது - இது என்று முட்டையில் மயிர்பிடுங்காது தமிழ்த் தேசியத்துக்கான ஒரு பொதுக் குரலாய் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமுகப்பட்டு சங்கச் சின்னத்தை முதன்மைப்படுத்தி பெருவெற்றி ஈட்ட வேண்டும். எதிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பு. ஒன்றுமே பூரணத்துவமாய் ஆரம்பிக்கப்படுவதில்லை. குறைபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அந்த வளர்ச்சி போக்கில் குறைகளை கடந்த முன்னேறும். மேலும் ஒரு தத்துவார்த்த கோட்பாடு உண்டு. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு செயல்பாடு புள்ளியில் அவை இரண்டு அணிகளாகவே பிளவுண்டிருக்கும். இதில் நடுநிலை என்பதும் செயற்படு அர்த்தத்தில் வெல்லும் பக்கமாகவே அமையும். எனவே நடுநிலை என்பதற்கு இங்கு இடமில்லை. பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது என்பது தமிழ் தேசியம் இல்லாவிடில் எதிர்பக்கம் என்கின்ற இரண்டு அணிகளுள் தமிழ் தேசியத்தின் எதிரியோடு கூட்டிச் சேர்வதாகவே அவையும். இதுதான் அரசியல் தத்துவம் சொல்லும் அடிப்படை உண்மை. ஈழத் தமிழ் மக்கள் ஐக்கியம் , ஒற்றுமை , ஒருமைப்பாடு என்ற உன்னதமான தேசிய அபிலாசையை சொல்லிலும், செயலிலும், தோற்றத்திலும் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளரை ஆதரித்து அதனை முன்னெடுப்பதானது முள்ளிவாய்க்காலுக்கு பின்னானகால வீழ்ச்சியில் இருந்து எழப்போகிறோம் என்ற செய்தியை பறைசாற்றுவதாகும். பேரினவாத ஒடுக்குமுறையால் மூன்று இலட்சம் அப்பாவி மக்களை இழந்துள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைகள், தாய்மார் கர்பிணித்தாய்மார், பெண்கள், நோயாளிகள், முதியோர், இளையோர் என இனப்படுகொலைக்கு உள்ளானபோதிலும், 3, 46,000 இராணுவ இரும்பு சப்பாத்திக்கு கீழும், விதைத்து விட்டார் போல் இருக்கும் மேலதிக பொலிஸ் படைகளின் ஒடுக்கு முறைகளுக்கு கீழும்„ பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வுப் படைகளின் கழுகுச் செயற்பாடுகளில் கீழும், எதிரியினாலும் எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழ் தலைவர்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்ன பின்னமாய் உடைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்கள் தம் தேசிய அபிலாசையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழக்கத் தயார் இல்லை என்பதை உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்ட , தம்பலத்தை தாம் உணர்ந்து முன்னேற தமிழ் பொது வேட்பாளரை பெரு வெற்றியடையச் செய்ய வேண்டும். சங்கை தமிழ் தேசியத்தின் நாதமாய் ஒலித்துக் காட்ட வேண்டும். https://tamilwin.com/article/essay-on-sri-lankan-election-17243604611 point- சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
வழமை போல மேற்கின் சொல்லை கேட்காதது தான் முக்கிய காரணம். பங்களாதேசுக்கு நிகழ்ந்தது போல ஒரு நிகழ்வு நிகழலாம்.1 point- சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
MBS க்கு ஆப்பு ஆயத்தம் செய்யப்படுகிறது. 🤣1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- குளியலறையில்
1 pointகிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointபாரிஸில் இருந்து சுமார் 150 கி . மீ ல் இருக்கும் st .michel என்னும் திருத்தலம் .......இங்கு காலையில் இருந்து மாலை 5.00 மணிவரை நிலத்தில் ஒரு சொட்டு நீர் இருக்காது ....... பின்பு நீரின் வரத்து அதிகமாகி அலைகள் கோவிலைத் தாலாட்டிக் கொண்டிருக்கும் . ........நடுநிசியில் அந்த நீர் வடிந்து அடுத்தநாள் நிலம் புழுதி பறக்கும் . .........! 🙏1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஆமா....ஆமா உண்மையான ஒற்றுமை யாதெனில் நீதிமன்று படியேற்றி கட்சியை இரண்டாக உடைத்து விட்டு, மூடிய அறைக்குள் ஒவ்வொரு பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து டீல் பேசி பெட்டியை வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதே ஆகச்சிறந்த உண்மையான ஒற்றுமையாகும்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- கிருஷ்ணகிரி பாலியல் கொடுமை வழக்கு: அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் - சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.