Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    12
    Points
    15791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/28/24 in all areas

  1. CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல, மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது. இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம். இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர். நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை. நிற்க, தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது? ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)
  2. இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣. இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்.
  3. பொய்யான தகவல். இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்குக் கிடைத்த சராசரி தமிழ் வாக்குகள் மொத்தத் தமிழ் வாக்காளர்களில் 72%. அதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலிலேயே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து 18 உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினர். அம்முறை த.ஐ.வி.மு எதிர்க்கட்சியாக வந்தது. அதற்கான ஒற்றைக் காரணம் தனி ஈழமே. சிங்கள பெளத்தத்துடன் சரணாகதியாகி அடையாளம் துரக்கும் ஒருவரின் மன உளைச்சலே இது. கடந்து செல்வோம்.
  4. ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.
  5. தமிழர் தெரு விழாவை பகிஷ்கரிக்கக் கோரியவர்கள்... அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில், தென்னிந்திய பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது முட்டை வீசியிருந்தால்.... மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டும். ஆனால்.. மேலே கூட்டத்திற்கு சென்றவர், அந்த நிகழ்வை மேடையின் முன் இருந்து பார்த்தவர்... கூறும் கூற்றுப் படி எவருமே... முட்டை வீசியதை காணவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கூறுகின்றார். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாடகர் சிறிநிவாசை அழைத்துச் செல்லும் காணொளியில்... அவரின் உடை மீது முட்டை பட்ட அறிகுறியும் இல்லை. அப்படியிருக்க நடக்காத ஒரு செயலுக்கு.. வன்மம் கக்குவது ஏற்புடையது அல்ல. மேடை நிகழ்வை படம் பிடித்துக் கொண்டு எத்தனையோ "யூ - ரியூப்"காரரும், அங்கு சமூகமளித்திருந்த பலரும்... கைத்தொலை பேசியுடன் படம் பிடித்துக் கொண்டு இருந்த நிலையில், முட்டை வீச்சு பதியப் படாமல் இருக்கும் போது... இல்லாத ஒன்றை நாம் ஏன் கற்பனையில் நினைத்து கருத்து எழுத வேண்டும். அத்துடன்... புலம் பெயர் தேசத்தில் தமிழர்களிடம் குழப்பம் ஏற்படுத்த என்றே.. ஸ்ரீலங்கா, இந்திய தூதரகங்கள் தமது புலனாய்வுப் பிரிவை அதிக அளவில் பிரான்ஸ், சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் ஊடுருவ விட்டுள்ளார்கள் என்பதை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும், சில சம்பவங்கள் மூலமும் கண்டு கொண்டோம். அதன் தொடார்ச்சியாகவும் இந்த அந்த அசம்பாவிதங்கள் தோற்றுவிக்கப் பட்டு இருக்கலாம் என்பதும் சாத்தியமே. முட்டை வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும் போட்டு எழுதவும். அப்பதான்... நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கும்.
  6. எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....? அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள் ...? ஏக்கிய ராஜ்ய அதனுடைய மீனிங் எனக்குமட்டுமே தெரியும் என்னிடம் மட்டும் ரணில் சொல்லியிருக்கிறார் போன்ற உதார்களையும், கிழக்கு மாகாணத்தை முற்றாக விட்டுக்கொடுத்துவிட்டு நஸீரின் மாட்டு புரியாணியை கிண்டியதையும், கல்முனை பிரதேசபை பிரிப்பு போராட்டத்திற்கு வந்து செருப்பு விளக்குமாறு கதிரையால் வெழுவை வாங்கியதை தவிர ...?
  7. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும். நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியது கேவலத்தின் உச்சம், நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு. சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில், இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று நம்மவர்கள் கூப்பாடு. இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர் புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும். அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள். புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.
  8. As a perpetual turn-coat, Suren Raghavan is a specialist in public deception. He became a Budhhist to get a big Scholarship to Oxford, Became a Marxist to get closer to SLFP. Allegedly claimed refugee status in Canada and became a Canadian citizen to get the Ontario Studnet Assistance Program (OSAP) scholarship also contributed from the taxes of the Tamil Canadians who are now demanding clarifications from the Government of Onatario. More truth about this shady character will be unveiled soon. https://www.adaderana.lk/news/81922/suren-raghavan-stripped-of-his-positions-in-slfp தமிழாக்கம்: சுரேன் ராகவன் ஒரு சந்தர்ப்பவாதி. பொதுஜனங்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதில் நிபுணர். ஒக்ஸ்போர்டில் பெரிய புலமைப்பரிசில் பெறுவதற்கு அவர் ஒரு பௌத்தரானார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருங்கி வர மார்க்சிஸ்ட் ஆனார். கனடாவில் அகதி அந்தஸ்து கோரி அதன் மூலம் ஒன்டாறியோ மாணவர் உதவித் திட்டம் (OSAP) வழங்கிய புலமைப்பரிசில் உதவித்தொகையைப் பெறுவதற்காக கனேடியக் குடிமகனாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த புலமைப்பரிசில் வழங்கிய உதவித்தொகைக்கு தமிழ் கனடியர்களின் வரிகளில் இருந்தும் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது. இப்போது தமிழ் கனடியர்கள் ஒன்டாரியோ அரசாங்கத்திடம் இருந்து இதற்கு விளக்கம் கோரிவரும் நிலையில் இந்த ஏமாற்றுப் பேர்வழியின் கதாபாத்திரம் குறித்த கூடுதல் உண்மைகள் விரைவில் வெளியாகும்.
  9. சாம்பல் மேட்டு அரசியல்! August 27, 2024 — கருணாகரன் — இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். “ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். “ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன். “அதைப்பற்றிச் சரியாத் தெரியாது. ஆனால், நம்மட்ட வாற ஆக்கள் ரணிலைப்பற்றியும் சஜித்தைப் பற்றியும்தான் கதைக்கினம்” என்றார். “அப்பிடியெண்டால் நீங்கள் என்ன முடிவில இருக்கிறியள்?” எனக் கேட்டேன். “இன்னும் நாட் கிடக்குத்தானே! பொறுத்துப் பாப்பம்” எனச் சொன்னார். நானும் விடவில்லை. “தமிழ்ப்பொது வேட்பாளர் எண்டு ஒருத்தர் நிறுத்தப்பட்டிருக்கிறாரல்லோ! அதைப்பற்றி ஆட்கள் என்ன கதைக்கினம்? நீங்கள் என்ன சொல்லுறியள்?” தொடர்ந்து கேட்டேன். “அதைப்பற்றிச் சிலர் கதைக்கினம்தான். ஆனால், நான் என்ன சொல்லிறது? உங்களுக்கு ஒண்டைச் சொல்லட்டே. உங்களிட்டக் கொஞ்சக் காசிருக்கெண்டு வையுங்கோ. அந்தக் காசை என்ன செய்வீங்கள்? ஏதாவது உருப்படியான வேலையைச் செய்யப் பயன்படுத்துவீங்கள். அல்லது தேவையான பொருள் எதையும் வாங்குவீங்கள். இல்லாவிட்டால், சொந்த பந்தங்களுக்குக் குடுத்து உதவுவீங்கள். அதுமில்லாவிட்டால், ஆராவது உதவி தேவைப்படுகிற ஆட்கள், கஸ்ரப்பட்ட சனங்களுக்குக் குடுப்பீங்கள். ஒண்டுமில்லையெண்டால் கோயில் உண்டியல்லயாவது போடுவீங்களல்லோ. சும்மா றோட்டில போட மாட்டீங்கள்தானே..!” என்றார். இதற்கு மேல் நான் எதுவும் கேட்க வேண்டியிருக்கவில்லை. 00 தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. அதற்காக நேரத்தைச் செலவழிப்பது வீண். இருந்தும் அதைப்பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்றால் – “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேந்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” போன்ற கருத்துகளை முன்வைத்துச் சனங்களைத் திசைதிருப்ப முற்படுவதை காணும்போது பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. காரணம், அத்தனையும் தவறான புரிதலின் அடிப்படையிலானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூடப் பார்க்கலாம். 1. “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” என்றால் அவரென்ன வானத்திலிருந்து குதித்தாரா? அல்லது வாராது வந்த மாமணியா? (இப்படித்தான் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தமிழ் மக்களின் மீட்பர், தமிழ்ச்சமூகத்துக்கு வராது வந்த மாமணி என்றார்கள்! இறுதியில் அரசியலில் அரிச்சுவடியே தெரியாதவர் என்பதை அவரே நிரூபித்தார்). அரியநேந்திரனைப் பொது வேட்பாளராக நிறுத்தியதற்குத்தான் இந்தப் பெரிய அமர்க்களமா? மலையகத்தில் மல்லியப்பு திலகர் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜூம்தான் போதுவேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரும் மலையக மக்களை, அவர்களுடைய பிரச்சினையை வெளிப்படுத்துவதற்காகவே போட்டியிடுகிறார். இரண்டையும் சமப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சிங்களவரல்லாத தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையும் அது சார்ந்த பிரச்சினையும் உண்டு. அப்படியென்றால், தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகள் இணைந்து ஏன் ஒரு பொது வேட்பாளரை அடையாளமாக முன்னிறுத்தவில்லை. அதற்கு ஏன் முடியாமற்போனது? மெய்யாகவே சிங்களத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவும் சர்வதேச சமூகத்துக்கு சிங்கள ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தால் அதைத்தான் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி அரியநேந்திரனைக் கொண்டு வந்து நிறுத்துவதல்ல. பொதுவேட்பாளர் என்பதற்கான அர்த்தம் ஓரளவுக்கு அப்பொழுதுதான் பொருந்தும். இது பொதுவேட்பாளரேயல்ல. தமிழ் வேட்பாளர். அதிலும் ஒருசாராருடைய தரப்பின் வேட்பாளர். அவ்வளவுதான். 2. “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” என்றால் நிச்சயமாக பொதுச்சபையினருக்கும் பொதுச்சபையினரின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பினருக்கும்தான். அவர்களுக்குப் பின்னின்று இயங்கும் சக்திகளின் விருப்பத்துக்குமாக. அதாவது இந்தத் தரப்பினருடைய தேவைக்காகவே தமிழ்ப் பொது வேட்பாளரும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்குள் தங்களுடைய செல்வாக்கு மண்டலத்தை விஸ்தரிப்பதற்கு பொதுச்சபையைச் சேர்ந்தவர்களிற் சிலர் கடந்த காலத்திற் கடுமையாக முயற்சித்தனர். இதற்காக இவர்கள், ஒரு கட்டம் வரையில் மறைந்த சம்மந்தனுடன்கூட நெருக்கமாகப் பழகியதுமுண்டு. அவருடைய மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தம்மைப் பகிர்ந்ததுண்டு. ஆனால், என்னதான் நெருக்கம் காட்டினாலும் எப்படி அறிவுரை சொன்னாலும் எதற்கும் மசியாத சம்மந்தனுடைய நிலைப்பாட்டினால் இறுதியில் கசப்படைந்தனர். அந்தக் காய்ச்சலில் சிறிது காலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சம்மந்தனையும் வழிக்குக் கொண்டு வருவதற்காக – பழிதீர்ப்பதற்காக தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கினர். இரண்டாண்டுகளில் பேரவை சத்தமில்லாமற் படுத்து விட்டது. பிறகு, கஜேந்திரகுமார் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு சமரசத்துக்கு முயற்சித்தனர். ஒரு எல்லைக்கு அப்பால் இவர்களை உள்ளே நுழைவதற்கும் தலையீடுகளைச் செய்வதற்கும் கஜேந்திரகுமார் அனுமதிக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரனைச் சாரத் தொடங்கினார். விக்னேஸ்வரனும் இவர்களுடைய கட்டுக்குள் நிற்கும் ஆளாகத் தெரியவில்லை என்றவுடன் தொடங்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையானது தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பேரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியிலிருந்து) பிரிந்து சென்ற ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. ஏற்கனவே இந்தக் கட்சிகள் பொதுச்சபையினரின் கட்டுப்பாட்டுக்குள் பாதிக்குமேல் வந்து விட்டனர். வரும்நாட்கள் இதை மேலும் நிரூபிக்கும். ஏனென்றால், சம்மந்தன், சுமந்திரன்போலச் சுயாதீனமாகச் சிந்திக்கக் கூடிய, தலைமைத்துப் பண்புடைய ஆளுமைகளாக குறித்த கட்சியினர் இல்லை. என்பதால் பொதுச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் நிற்பது தவிர்க்க முடியாமற்போகும். 3. “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேத்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” என்பது. இதைப்படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் என்பது சரியானதே. ஆனால், இருவரையும் சமனிலைப்படுத்திப் பார்ப்பது தவறு. அநேகமாக வடக்குக் கிழக்கில் அரியநேத்திரனை விட ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவும் கூடும். அப்படியென்றால் நிலைமை? ரணில் தேர்தலில் தோற்றுப்போனால்? அதற்குப் பிறகு நாட்டின் தலைவிதி? சரி, அரியநேத்திரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால், அதற்குப் பிறகு என்ன அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாம் நடக்கும்? அதைத் திட்டவட்டமாக பொதுச்சபையினரோ, பொதுக்கட்டமைப்பினரோ, அரியநேத்திரனை ஆதரிப்போரோ சொல்வார்களா? இந்த மாதிரி மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளோடு தமிழ்ச்சனங்களை உச்சிக் கொப்பில் ஏற்றிய கதைகள் பலவுண்டு. ஒவ்வொரு தடவையும் கொப்பு முறிந்து விழுந்து இடுப்பு உடைந்ததே மிச்சம். 4. “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” என்பது. நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் அப்படித்தான் ஆக்கப்பட்டுள்ளனர். இல்லையென்றால் தங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத, மக்களிடத்திலும் சூழலிலும் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத, எந்த நெருக்கடியையும் தீர்க்காதவர்களையெல்லாம் இன்னும் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து கொண்டிருப்பார்களா? அடுத்தது, தமிழ் மக்களிடத்தில் புதிதாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தெடுப்போரை விட, பழைய பாதையில் பயணிப்போரையே அவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கிறது. என்பதால் இனரீதியாக அடையாளப்படுத்தப்படும் எந்த விடயமும் அவர்களிடத்தில் சட்டெனப் பற்றி எரியும். தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது அப்படிப் பற்றி எரியக் கூடிய ஒரு சங்கதி. ஒரு பொருளே! ஆகவே தமிழ் மக்கள் அவரை ஆதரித்தோ கொண்டாடியோ தீருவர். அதன் விளைவுகள் எப்படியென்று பார்க்கவே மாட்டார்கள். காலம் கடந்த பிறகு வரும் ஞானத்தினால் பிறகுதான் கவலைப்படுவார்கள். ஆகவே வழமையைப்போலத் தாம் முன்னுணரக் கூடியவர்களில்லை என்பதைக் காட்டுவர். 5. “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” என்றால், யாருக்கு வழிகாட்டுவார்கள்? எதற்கு வழிகாட்டுவார்கள்? அந்த வழி எத்தகையதாக இருக்கும்? அது எங்கே செல்லதற்கானதாக இருக்கும்? இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்களா? அப்படியென்றால் அது எத்தகைய வழி? அந்த வழியை சர்வதேச சமூகமும் இந்தியாவும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்களா? மனோ கணேசனே வெளிப்படையாகச் சொல்லி விட்டார், “உந்த விளையாட்டை எல்லாம் வடக்குக் கிழக்கிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். தெற்கிற்கோ கொழும்புக்கோ மலையகத்துக்கோ கொண்டு வரவேண்டாம். அது வேறு உலகம் என்று. ஆகவே தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள் என்று சொல்லித் தாம் தப்புவதற்கு பொதுச்சபையினரும் பொதுக்கட்டமைப்பிலுள்ள கட்சியினரும் முயற்சிக்கலாம். அது வரலாற்று நகைப்புக்குரிய ஒன்றேயாகும். 6. “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” என்பது. இவ்வாறு இப்பொழுது சொல்வோர், அன்று ஈரோஸ் அமைப்பையும் அதனுடைய அன்றைய நிலைப்பாட்டினையும் அது தேர்தலில் நின்றதையும் கடுமையாக மறுதலித்தோரே. சரி, அந்தத் தவறைப் பின்னாளில் உணர்ந்தவர்கள் என்றாலும் அந்தச் சூழலையும் அந்த அமைப்பையும் இன்றைய நிலையோடு தொடர்புறுத்திப் பார்ப்பது தவறு. அப்படிப் பார்க்கவே முடியாது. காரணம், அது போராட்டம் நடைபெற்ற காலம். போட்டியிட்டவர்களும் போராளிகள். என்பதால்தான் மக்களும் அந்த நெருக்கடிச் சூழலிலும் அன்றைய சுயேட்சைகளுக்கு வாக்களித்தனர். மக்களுடைய அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அடுத்து வந்த பொருத்தமற்ற சூழலில் தங்களுடைய பதவிகளைத் துறந்தனர் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். இவர்களோ (அதாவது பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சியினரோ) நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல, இறுதிப்போர்க்காலச் சூழலில் தம்முடைய பதவியை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருந்தவர்கள். தவிர, இன்றைய சூழலானது பல தெரிவுக்குரியது மட்டுமல்ல, யார் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடியதுமல்ல. மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்தும் தரப்புகள் ஒன்றும் மக்களிடம் மாபெரும் செல்வாக்கைப் பெற்றவையும் அல்ல. அதில் உள்ள ஒரு தலைவராவது அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரு நிலைக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு அறிவிப்பையேனும் செய்து காட்டட்டும் பார்ப்போம். ஆகவே இந்தக் கருத்தை ஏற்கவே முடியாது. ஆனால், சிங்கள இனவாதத்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் இயல்பாக வாக்களிக்க முற்படலாம். என்பதால் மேற்படி வார்த்தைகளைப் படிக்கும்போது பாரதியின் பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன. “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்…” உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைத்தான். சொந்த மக்களையே வைத்துச் சூதாடுவதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதற்கு இவர்களுடைய மேலுமொரு உதாரணத்தைச் சொல்லுவது பொருத்தமாகும். “2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு (1939 இல்) யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது.தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது” என்று ஒரு ஒப்புவமை சொல்லப்படுகிறது. போதாதென்று “அந்த பகிஷ்கரிப்பின் (2005 இல் மேற்கொள்ளப்பட்ட ) விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்தப் பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்” என்று வேறு சொல்லப்படுகிறது. ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்? இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல். https://arangamnews.com/?p=11156
  10. எதை வைச்சு 2005 ஆம் ஆண்டு ரணில் வந்திருந்தால் முள்ளிவாய்க்கால்நடந்திருக்காது என்று சொல்லுகினம் எனக்கு விளங்கவே இல்லை. ஏனென்றால் மற்ற ஆய்வுகளில் உலக அரசியல் புலிகளுக்கு தெரியாததாலை தான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கு. ஆகவே யார் வந்தாலும் முள்ளிவாய்க்கால்நிகழ்ந்திருக்கும் தான் (இந்தியா என்ன விலை குடுத்தும் அழிக்கத்தான்நினைத்தது என்று எல்லாருக்கும் தெரியும்)
  11. ஒரு சுதந்திர நாட்டை நிர்வகிக்கும் எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பதை இயற்கை உணர்த்தியதை புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கின்றார்கள். இந்த தலைமுறையில் உள்ள இந்த கழிசடைகள் மரித்த பின்னர், புதிய தலைமுறை புதிய வார்ப்புகளாக வடிவம் பெறும் போதே தமிழருக்கு ஒரு விடியல் பிறக்கும்.
  12. சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த மடைத்தனத்தை தானே திரும்ப திரும்ப செய்கிண்றீர்கள் ...
  13. 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125 தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக) 100/801125* 421594 = 52.62 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக் கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ?
  14. 🤣.......... நீங்கள் சொல்வது புரிகின்றது........ ஆனால் நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே......
  15. முடியாது ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும் 😂. மற்றும் திருமணம் போன்ற விழாக்கள் எப்படி செய்வது?? இரண்டு பேருடன். ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣
  16. இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா ?? படம் எங்கே ?? தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂
  17. ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை ஐக்கியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி சஜித்பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. வேட்பாளராகிய நீங்கள் கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் மூலம் நாட்டின் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வை காணவிளைகின்றீர்கள் என்பதை இந்த நாட்டு மக்களிற்கு நீங்கள் வெளிப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்களை தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் எனதமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது சமஸ்டி குறித்து உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயார் – சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம் | Virakesari.lk
  18. நாமலின் நேர்மையை பாராட்டுகின்றேன். மற்றவர்களின் மனசிலும் இது தான் உள்ளது. முக்கியமாக சஜித், ரணில், அனுர ஆகிய முன்னனி வேட்பாளர்களின் மனசிலும் இது தான் உள்ளது. ஆனால், தமிழ் வாக்குகளிலும் தம் வெற்றி தங்கியுள்ளதால் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். எப்படியும் தான் வெல்லப் போவதில்லை என்பதால், கடும்போக்கு சிங்கள வாக்காளர்களையாவது கவரலாம் என நேர்மையாக கதைக்கின்றார் நாமல்.
  19. ஆப்புகளில் மிகச் சிறந்த ஆப்பு.
  20. கனடிய தமிழ் ஊடகவியளாலர் ரமணனின் பேட்டி இது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மிக தெளிவாக ஆராய்ந்து, பக்கச்சார்பற்று இந்தப் பேட்டி அமைந்துள்ளது. இது தொடர்பான அக்கறை உள்ளவர்கள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு பேட்டி இது. ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும், எம் இரத்ததில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல்களும், உரையாடல்களும் நிறைந்து இருக்கும் தமிழ் சூழலில் இது போன்ற தெளிவான பேட்டிகளை காண்பது மனசுக்கு ஆறுதல் கொடுக்கின்றது.
  21. ஒரு மாற்றமும் வரேலை. தமிழ் மக்கள் யாருக்கு போடவேணும் என்பது தான் இங்கே விவாதம். இலங்கைக்கு யார் சனாதிபதியாக வரவேணும் என்பதல்ல
  22. மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்! ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும்.
  23. நோயாளர் காவு வண்டி அவசரமாக நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல மட்டுமே பாவிக்கப்படவேண்டும். ஆனால் சிறிலங்காவில் உணவு விநியோகத்திற்கும், மருத்துவர்களையும், தாதிமாரையும் ஏற்றி இறக்கவும் பயன்படுத்துகின்றார்கள்.
  24. இது உங்கடையாளுக்கும் (சும்முக்கும்) பொருந்துமா சார்வாள்...? இல்ல படித்த elite தலைக்கட்டு என்பதால் exemption ஆ ....?
  25. இப்ப விளங்குது தலைவர் ஏன் சிலதை மண்டையில் போட்டு அடித்து உட்காரவைத்தவர் என்று படித்தவனாக இருந்தால் சுமந்திரன் போல இருந்திருப்பான், படிக்காதவனாக இருந்தால் இந்த காவலிகள் போல இருந்திருப்பான் என்பது தலைவருக்கு முன்னமே தெரியும். இதில எத்தினை காவலிகள் யாழ்ப்பாணத்தில் தமனாவை காவாலாக்கிய கூட்டத்திற்கு அறிவுரை சொன்னார்களோ ...?. ஆனால் ஒன்றுமட்டும் தெரியுது இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அரபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது. இந்தக்கூட்டம் சிங்கையில் இருந்திருக்கவேணும், புட்டம் வீங்க செமையா கொடுத்து இலங்கைக்கு திரும்ப அனுப்பியிருப்பினம்.
  26. இந்த புண்ணியவான்களை வந்தால் மலை என்று நம்பும் யாழ்கள உறவுகளும் உள்ளனர்
  27. வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...
  28. 🤣......... சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.
  29. உண்மை தான் தமிழர்கள் இரண்டு பகுதியும் நடந்த விதம் பிழை எந்தவித பிரயோஜனம் அற்றது சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள் தமிழனைக்கொண்டு தமிழனை அடிக்கிறார்கள். நாங்களே’ எங்களை பிரிக்கிறோம் கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂 குறிப்பு,......அண்ணை நீங்களும் ஒன்றை உடையுங்கள். 😂🙏
  30. இங்கே யாரும் மக்களுக்கு அறிவுரையோ அல்லது அரசியலோ செய்யவில்லை. அதே மக்களின் ஒரு பகுதியினரின் ஒரு முடிவை அவர்களைப் போலவே செய்து பார்க்கலாம் என்று மட்டுமே எழுதுகிறோம். அவ்வளவு தான்.
  31. அண்ணா இங்கே எழுதப்படுவை பொருத்தமே அற்ற உளறல்கள் மட்டுமே. உதாரணமாக எமது வாக்களிப்பை சர்வதேசத்திற்கு காட்டி இதுவரை எதை சர்வதேசம் கிழித்தது எமக்கு என்று சொல்லும் அதே வாய்கள் தான் தமிழர்கள் தமிழருக்கு வாக்களிக்கவில்லை என்பதை உலகுக்கு காட்டிவிடப்போகிறோம் என்றும் எழுதுகிறார்கள்.
  32. யாருடன் பேரம் பேசுவது? பேரம் பேுசி பெறக் கூடிய ஆகக் கூடிய தீர்வுதான் என்ன? குறைந்த பட்சம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக எந்த வேட்பாளர் சர்வதேச நாடுகளின் துதுவர்கள் சாட்சியாக கஎழுத்து மூல வாக்குறுதி வழங்கத்தயராக உள்ளார். குறைந்த பட்சம் அந்த ஒப்பந்தத்துடன தொடர்புடைய இந்தியத்துதுவராவது நாட்சியாக முன்வருவாரா?
  33. அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது. நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.
  34. IBC Tamil மற்றும் விசுகர் தவிர்ந்த வேறெங்கும் இப்படிசெய்தியை காணக் கிடைக்கவில்லை. @விசுகு உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் எல்லவற்றையும் கவிட்டுக் கொட்டினீர்கள் 😏
  35. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் , கருணாவுக்கு நிகரான துரோகத்தை நிகழ்த்திய இன்னொருவனான கே பி யின் கைங்கரியங்கள் நாம் அறியாதவையல்ல. சிங்கள ராணுவ புலநாய்வுத்த்துறையினருடன் சேர்ந்து இவன் ஆடிய நாடகங்களும், தமிழருக்கெதிரான இனவழிப்புப் போரில் இவன் ஆற்றிய பங்கும் மறக்கப்பட முடியாதவை. சிங்கள அரசின் விருந்தாளியாக, செல்வச் செழிப்பில் வாழும் இவன், புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வியர்வையும் குருதியும் சிந்தி உழைத்த பணத்தை நாட்டின் விடுதலைக்கென்று வழங்கியபோது, அவற்றை இனக்கொலையாளிகளின் கைகளில் கொடுத்து தனது விடுதலை வாங்கிக்கொண்ட துரோகி இவன். இவனாலும் சிங்கள ராணூவப் புல்நயாவுத்துறையினராலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இவனது கைது நாடகத்தின்பின்னர் இலங்கை திரும்பி சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக இவன் வலம்வந்த 2011 காலப்பகுதியில் தமிழர் விரோத பார்ப்பண நாளேடான தி ஹிந்துவிற்கு இவன் வழங்கிய செவ்வியின் தமிழ் வடிவம் கீழே.
  36. புலிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதக் கப்பல்களை தானே காட்டிக்கொடுத்த கே பி மூலம் " லங்கா கார்டியன் காலம் : ஆடி 2, 2010 அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளுக்குச் சார்பான தமிழர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசு தரப்பினருடனும், கே பி யுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. மலேசியாவில் கே பி கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நாடகத்தினை கோத்தாபயவும், கேபியும் இணைந்தே திட்டமிட்டு ஆடியதாகவும், மலேசிய அரசாங்கம் இந்த நாடகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த புலம்பெயர் புலிகள் அணியினரின் கோத்தாவுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய கோத்தாவுக்கு ஆதரவான "புலம்பெயர் புலிகள்" அணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருணகுமார் தனது விஜயம் பற்றியும், அங்கு நடந்த சந்திப்புக்கள் பற்றியும் வெளியில் பேசியிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க அறிக்கையில் தமது குழு இலங்கையில் நடத்திய சந்திப்புக்கள், சந்தித்த மகிந்த - கோத்தா அரசின் தலைவர்கள் பற்றிய விபரங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகளை முற்றாக அழித்துமுடிக்கும் காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக இருந்து செய்துமுடித்தது யாரென்பது ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவுக்கும், ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய ஒத்துழைப்பே புலிகளை அழிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்கூட, புலிகளை முற்றாக அழித்த இன்னொரு நட்பு இருப்பதாகவே தெரிகிறது. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையின்படி இந்த ரகசிய நட்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கலாநிதி அருணகுமார் தனது அறிக்கையில் கூறும்போது, தானும் தனது அரச ஆதரவு - புலம்பெயர் புலிகள் அணியும் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், அரசாங்கத்தின் விருந்தாளியுமான கே பி எனப்படும் குமரன் பத்மனாதனுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராத விதமாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கலந்துரையாடல் நடைபெற்ற அறையினுள் நுழைந்திருக்கிறார். கோத்தாவைக் கண்டதும் மிகுந்த மகிழ்வுடன் எழுந்த கே பி அவரை மிகுந்த மரியாதையுடனும் தோழமையுடனும் ஆரத்தழுவி அழைத்தார் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரும் நட்பாகப் பழகிய விதத்தினைப் பார்க்கும்போது அவர்களுக்கிடையில் நீண்டகாலமாகவே நட்பு இருப்பது அங்கிருந்த அனைவராலும் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிந்தது என்று அவர் கூறுகிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், தம்முடன் பேசிய கோத்தபாய கே பி இற்கும் தனக்கும் இடையிலான நட்புப் பற்றிக் கூறும்போது, "1996 இல் நாம் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்தோம், அன்றிலிருந்து தொடர்பில் இருக்கிறோம் " என்று கூறியமைதான் என்று அருணகுமார் மேலும் தெரிவிக்கிறார். கோத்தா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புலிகளின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனாகக் கருதப்பட்டவருமான கே பி யின் உண்மையான நோக்கமும், அவரது செயற்பாடுகளும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியவையே. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவை என்னவென்றால், 1. மலேசியாவில் நடந்த கே பி யின் கைது, கே பி யினாலும், கோத்தாவினாலும் திட்டமிடப்பட்டு, மலேசிய அரசின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்பது. 2. இந்த திட்டத்தின்படியே கே பி இற்கு கொழும்பின் பிரபல வாசஸ்த்தல இடமான கொழும்பு 7 இல் உல்லாச மாளிகையொன்று அரசால் வழம்க்கப்பட்டமை. 3. நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றினை உருவாக்கியதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலிகளின் அமைப்புக்களைக் கூறுபோட்டு செயலிழக்கப் பண்ணியமை. 4. தானே புலிகளுக்கு அனுப்பிவைத்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை தனது நண்பரான ராணுவப் புலநாய்வுத்துறைத் தளபதி கபில ஹெந்தவிதாரணவூடாக அரசுக்கு வழங்கி, அக்கப்பல்களை நடுக்கடலில் வைத்து அழித்து, புலிகள் ஆயுதப் பற்றாக்குறையால் அல்லற்பட்டு ஈற்றில் அழிக்கப்படுவதை உறுதிப்படுத்தியமை. http://www.srilankaguardian.org/2010/07/did-kp-help-sri-lanka-to-sink-ltte-arms.html
  37. துரோகத்தின் நாட்காட்டி : துரோகிகளை பினாமிகளாக வைத்து இனவழிப்புப் போரை அன்றே திட்டமிட்ட சிங்களம் கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க இலங்கையரசு திட்டமிடுகிறது - அமெரிக்க ஆய்வுக்குழு அமெரிக்காவின் தனியார் ராணுவ, அரசியல் , பொருளாதார புலநாய்வு மைய்யமான (Strategic Forecasting - STRATFOR) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் கருணாவின் பிளவினை அரச - ராணுவ உயர்மட்டத்தினர் ஆதரிப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. "அவர்களின் திட்டம் இதுதான், புலிகளை நிலைகுலைய வைப்பது, தமக்குள் பிளவுகளை உண்டுபண்ணி, பலவீனப்படுத்துவது, இறுதியாக பலவீனப்பட்டிருக்கும் அந்த அமைப்பை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின்மூலம் முற்றாக அழித்தொழிப்பது" என்று அரச உயர்மட்டத்திலிருப்பவர்களால் தமக்குக் கூறப்பட்டதாக இந்த ஆய்வுமைய்யம் கூறுகிறது. "கருணா தொடர்ந்தும் புலிகளிடமிருந்து பிரிந்துநின்று செயற்படுவாரானால், அவரது குழுவுக்கும் புலிகளுக்குமிடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெறும். இவ்வாறான சூழ்நிலையொன்று இலங்கையரசிற்கு மிகவும் உவப்பானதாக இருக்கும் என்பதும், இந்த நிலையினைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க அது கருணா குழுவைத் தொடர்ந்தும் அதிகம் அதிகமாக ஆதரிக்கும்" என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது. "புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையால், அவர்கள் உள்ளுக்குள் மோதி, பலவீனப்படுவதை விரும்பும் அரசு, இதன்மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புவதையும் எதிர்பார்க்கிறது. இதனாலேயே கருணவை அவரது பிளவின்போது காப்பாற்றிய அரசு, அப்பிளவு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்க அவரைத் தொடர்ச்சியாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறது". "சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புமிடத்து புலிகள் மீண்டும் போரை நோக்கித் தள்ளப்படலாம், ஆகவே அதற்குமுன்னர் அவர்களுக்குள் ஏற்படும் பிளவு அவர்களை ராணுவ ரீதியில் கடுமையாகப் பலவீனப்படுத்தும். இந்தச் சூழ்நிலை அவர்களை இலகுவாக அழித்துவிட உதவும் என்று கொழும்பு எதிர்பார்க்கிறது". "தமக்கும் கருணாவுக்கும் இடையே எதுவித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையரசு திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, அரச உயர் பீடத்திலிருப்பவர்களும், ராணுவத் தளபதிகளும் தனிப்பட்ட சந்திப்புக்களில் கருணாகுழுவுக்கான தமது ஆதரவினை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்". புலிகளுடனான 6 வார மோதல்களில் வெட்கக்கேடான தோல்வியினைத் தழுவியிருந்த கருணா 3 மாதகாலத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை அரச வானொலிச் சேவைகளிலும், பி பி சி செய்திச் சேவையிலும் தோன்றிப் பேட்டிகளை வழங்கியிருந்தார். "அவமானகரமான தோலிவியின் பின்னரும் வெளிப்படையாக பேட்டிகளை அளித்திருப்பதன்மூலம் கருணா தனக்கான ஆதரவினை குறிப்பாக, கிழக்கு மக்களிடையே பெற்றுக்கொள்ள முயலலாம். அத்துடன், புலிகளின் தலைமையினை அகற்றும் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபடலாம்" என்றும் அவ்வறிக்கைகூறுகிறது. "தனது பேட்டிகளின்போது அரசியலில் ஈடுபடப்போவதாக கருணா கூறியிருப்பது, தன்னை வேண்டுமென்றே புலிகளின் இலக்காக காட்டுவதற்காகத்தான் என்பதும், இதன்மூலம் தனக்கும் புலிகளுக்குமான பகையினை இலங்கையரசின் விருப்பத்தின்படி அவர் தொடரப்போகிறார் என்பதையும், இவரைப் பாவிப்பதன் மூலம் பலவீனமாக்கப்படும் புலிகளை தனது விருப்பப்படி அழிக்க அரசு முயல்வதும் தெரிகிறது " என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுகளுடன் பல தசாப்த்தங்களாக மோதிவருகின்றனர். ஆகவே, பெருமளவு இரத்தம் சிந்துதலில்லாமல் தீர்வொன்றை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தெரியவில்லை" என்றும் அது கூறுகிறது. "போர் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கும் பட்சத்தில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையினை அடைவார்கள் என்பது திண்ணம். இது பேச்சுவார்த்தைகளில் அவர்களது நிலையினை மிகவும் பலவீனப்படுத்தும் என்பதுடன், அவர்கள் இதுவரை காலமும் முன்வைத்த சுயநிர்ணய உரிமை அடிப்படியிலான கோரிக்கைகளை இலங்கையரசு உதாசீனம் செய்யும் நிலையும் ஏற்படப்போகிறது". "அதேவேளை, காயப்பட்ட புலியினை வலிந்து போருக்கு அழைப்பதும் பாதுகாப்பானது அல்ல. புலிகள் தமது கோரிக்கைகளைத் தளர்த்தினாலோ அல்லது இலங்கையரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலோவன்றி, இப்போது தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்போவதில்லை" என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. “
  38. இருவருக்கும் வயதும் அதிகம் இல்லை. கடலின் ஆழத்திற்கு செல்லும் போது, ஏற்படும் ஆபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லைப் போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.