Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts -
நிலாமதி
கருத்துக்கள உறவுகள்8Points11531Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்6Points14676Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/12/24 in all areas
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
எம்.எல்.எம்.மன்சூர் சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பை கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல்களில் இதுவரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்டியாக மாற்றமடைந்திருப்பது முதலாவது விசேஷம். பலர் நாமல் ராஜபக்சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்முனைப் போட்டி’ என்று சொல்லி வந்தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்பிடத்தக்க போட்டியாளராக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல்களில் இதுவரையில் 5% க்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்டியாளராக எழுச்சியடைந்திருப்பது இரண்டாவது சிறப்பம்சம். 1990கள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது சிங்கள சமூகத்தின் கொடிய எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு வந்த தமிழ் பிரிவினைவாதம், டயஸ்போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற கோஷங்கள் பிரச்சார மேடைகளிலிருந்து தலைமறைவாகியிருப்பது. அடுத்த விசேஷம். அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இது. சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் (Sinhala Heartland) தெளிவாகவே ஒரு ஜேவிபி / என்பிபி ஆதரவு அலை நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெவ்வேறு தரப்புக்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் கூட ‘ஆம் அவர்களுக்கு ஒரு ஆதரவு அலை இருந்து வருகிறது; அதை மறுக்க முடியாது’ என்ற பீடிகையுடனேயே தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்வைத்திருக்கும் பிரச்சார சுலோகங்கள் பெரிதாக வாக்காளர்களை கவரக்கூடியவையாக இருந்து வரவில்லை. சார்புரீதியில், ஜேவிபி / என்பிபி அணிக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அனுகூலம் – ‘எதிரி யார்’ என்பதை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய ஆற்றல். சஜித் அணியை பொறுத்தவரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருப்பது முக்கியமான ஒரு பலவீனம். ராஜபக்சகளின் அரவணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திருடர்களை களை எடுப்போம்’ போன்ற ஜனரஞ்சக சுலோகங்களை முன்வைக்கும் தார்மீக உரிமையை இழந்திருக்கிறார் சஜித். அவருடைய மற்றொரு பலவீனம் இன்றைய இலங்கையின் பொருளாதார யதார்த்தங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத விதத்தில் கோமாளித்தனமான வாக்குறுதிகளை வழங்குவது. சொல்லப்போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்ற நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் SJB முக்கியஸ்தர்களை பெரும் சங்கடத்தில் நெளிய வைக்கும் வாக்குறுதிகள் அவை. ‘அநுர குமாரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்களுக்கும் கொடுத்துப் பார்ப்போமே’ என்பது. அதாவது, ‘இவ்வளவு காலமும் எத்தனையோ பேருக்கு வாக்களித்து ஏமாந்திருக்கிறோம். கடைசியில் இன்றைய வங்குரோத்து நிலைதான் எமக்கு எஞ்சியிருக்கின்றது’ என்ற ஆதங்கமே இந்தப் பேச்சுக்களில் தொனிக்கிறது. அதனையே அதாவது – ‘ இந்தத் தடவை திசைகாட்டிக்கு’ என்று மக்கள் சொல்வதையே – ஜேவிபி/ என்பிபி அணி தனது பிரச்சார சுலோகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, 2022 அறகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னர் நாட்டில் உருவாக்கியிருக்கும் ஜேவிபி/ என்பிபி ஆதரவு அலையின் குடிசனவியல் பண்புகள் (Demographic Features) எவை, புதிதாக ஜேவிபி ஆதரவாளர்களாக சேர்ந்திருக்கும் பல இலட்சக் கணக்கானவர்கள் எங்கிருந்து வந்தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்களைத் தள்ளிய சமூக, உளவியல் காரணிகள் எவை போன்ற கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்நோக்கிச் செல்ல வேண்டும். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உருமய (JHU) கட்சி சார்பில் மேல் மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த பிக்குகள். விடுதலைப் புலிகளுடனான போரை சந்திரிகா – மங்கள அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்கள -பௌத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரே இவ்விதம் திடீர் JHU ஆதரவாளர்களாக மாறியிருந்தார்கள். அவர்களை அவ்விதம் அணி திரட்டுவதில் பாட்டலி சம்பிக்க ரணவக்க முதன்மையான ஒரு பாத்திரத்தை வகித்திருந்தார். கங்கொடவில சோம தேரர் உருவாக்கிய பௌத்த எழுச்சி அலையினால் தூண்டப்பட்டிருந்த ஒரு பிரிவினரின் இன உணர்வுகளை அச்சந்தர்ப்பத்தில் ரணவக்க மிகவும் சாதுர்யமாக தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இந்தச் சமூகப் பிரிவினர் மேல் மாகாணத்தில் – குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் – செறிந்து வாழ்ந்து வருகிறார்கள். 1980 களில் உருவாகிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்று, வெளி மாகாணங்களிலிருந்து வந்து கொழும்பு புற நகர் பகுதிகளில் குடியேறியவர்கள். ஜே.ஆர். அறிமுகம் செய்து வைத்த திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறையினர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கெஸ்பாவ, கடுவெல, கோட்டே, மகரகம, ஹோமாகம போன்ற கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதிகளில் இந்த வகுப்பினரின் பிரசன்னம் அதிகம். சிங்கள மத்திய தர வரக்கத்தின் ஒரு புதிய பிரிவினரின் எழுச்சியாக (Sociological Phenomenon) அப்பொழுது அது பார்க்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் கெஸ்பாவ மற்றும் மகரகம போன்ற தொகுதிகளில் வாக்குகளின் அடிப்படையில் யூஎன்பியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, JHU இரண்டாவது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அப்போதைய சிங்கள பௌத்த அலை வலுவானதாக இருந்து வந்தது. இதேபோல கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் JHU கணிசமான அளவிலான வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இந்தப் பிரிவினர் 21 ஆம் நூற்றாண்டு சிங்கள பெருந் தேசியவாதத்தின் ‘Trendsetter’ களாக உருவாகியதுடன், அவர்கள் தூண்டிவிட்ட அந்த உணர்வு சிங்கள சமூகம் நெடுகிலும் மிக வேகமாக பரவியது. 2010, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் முறையே மஹிந்தவுக்கும், கோட்டாபயவுக்கும் இப்பிரிவினரே அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள். 2022 பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகள் அவர்கள் இதுவரையில் அனுபவித்து வந்த ‘Comfort Zone’ இலிருந்து அவர்களை வெளியில் எடுத்து வந்தன. அந்த நிலையில், ராஜபக்சகளை ஆதரித்த அதே அளவு தீவிரத்துடன் அவர்களை எதிர்க்கவும் தொடங்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பல இலட்சக்கணக்கில் இப்பொழுது திசைகாட்டியின் பக்கம் வந்திருக்கிறார்கள். இந்த அலை ‘கம்யூனிஸ்ட் / சோஷலிச ஆதரவு அலை அல்ல’. என்பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமாரவும், அந்த அணியின் ஏனைய தலைவர்களும் (குறிப்பாக லால் காந்த போன்றவர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஜேவிபி / என்பிபி மேடையில் கழுத்துப்பட்டி அணிந்த கனவான்கள் ஏராளம் பேர் உட்கார்ந்திருக்கும் காட்சி மற்றொரு சுவாரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்திர கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகளின் பிரச்சார மேடைகளில் கூட முன்னர் அந்த மாதிரியான காட்சிகள் தென்படவில்லை. கட்சிக்கு ஒரு கண்ணியமான, மத்திய தர வர்க்க முகத்தோற்றத்தை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் குறியீடு அது. ஒரு பெரும்போக்கு அரசியல் கட்சியாக (Mainstream Political Party) மாற்றமடைவதற்கு ஜேவிபி செலுத்தியிருக்கும் விலையே என்பிபி அணியின் இணைப்பு. 1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்சிகளின் போது நிலவிய இலங்கை சமூகம் – குறிப்பாக சிங்கள சமூகம் – இப்பொழுது பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றது. நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் புதிய மத்திய தர வர்க்கத்தினர் எழுச்சியடைந்திருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் நுகர்வு கலாசாரத்தின் பிரமாண்மான வளர்ச்சியின் பின்னணியில் இருந்து வருபவர்கள் அவர்கள். முன்னைய தலைமுறைகளிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள். இலங்கை பொது சமூகத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உடனடியாக எமக்கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்தியடிப்போம்’ போன்ற கோஷங்களை இச்சமூகப் பிரிவினரே கையில் எடுத்திருக்கிறார்கள். காலிமுகத்திடல் அறகலய பூமியில் குமார் குணரத்னத்தின் ‘பெரட்டுகாமி’ கட்சியினால் முன்வைக்கப்பட்ட சுலோகங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்யூனிஸ்டுகள் காண விழையும் சமூக மாற்றத்தை வலியுறுத்துபவை. ஆனால், இன்றைய இலங்கையில் அச்சுலோகங்கள் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கோஷங்களை முன்வைத்து வருபவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான ‘System Change’ எது? இன்றைய ஊழல் அரசியல்வாதிகளை பிரதியீடு செய்யும் பொருட்டு எந்த வகையான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுடைய ஆதர்ச புர்ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறுமையுடன் கியூ வரிசையில் காத்திருக்கும் ஒரு ஜனாதிபதி. போக்குவரத்து விதி மீறலொன்றை இழைத்து விட்டு அதற்கு அபராதம் செலுத்தும் ஒரு பிரதம மந்திரி. தனது பிள்ளையை பொறுப்புடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையான ஒரு அரச தலைவர் போன்றவர்களை காட்டும் காணொளிகளை புதிய தலைமுறையினர் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். தமது ஆதர்சங்களாக அவர்களை கொண்டாடி வருகிறார்கள். ஆனால், மேற்படி உதாரணங்கள் அனைத்தும் லிபரல் ஜனநாயக நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தான் இங்குள்ள சுவாரஸ்யம். ஊழல், முறைகேடுகள் இல்லாத எவருக்கும் பாரபட்சம் காட்டாத அரச நிர்வாக கட்டமைப்புக்களுக்கான ஆதர்சங்களாகவும் இந்த மேலைய லிபரல் ஜனநாயக நாடுகளையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். “நான் சுதந்திரத்திற்கு முன்னர் பிறந்தவன். வாழ்நாள் முழுவதும் ஒரு தேசாபிமானியாகவே இருந்திருக்கிறேன். எனது வாழ்க்கையின் முதல் 75 ஆண்டுகளை இந்த மண்ணிலேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடியாத நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அளவுக்கு சீரழிந்தவர்களாக இருந்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு முன்னணி சிங்கள நாடகக் கலைஞர். மேற்படி கூற்று இன்று ஜேவிபி / என்பிபி அணியின் பின்னால் திரண்டிருக்கும் சிங்கள மத்திய தர வர்க்கத்தினரின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றின் துல்லியமான ஒரு பிரதிபலிப்பு எனச் சொல்லலாம். சரியாகச் சொன்னால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நவ லிபரல் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள். ஆகவே, இந்தப் பின்னணியில், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்திலும், அவர்களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விடயத்திலும் ஒரு எதிர்கால ஜேவிபி / என்பிபி அரசாங்கம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/177056 points
-
பெண்ணாய் பிறந்து விடடால்....
5 pointsபிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .5 points
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்.. 1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம். 2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம். சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.4 points
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
4 points4 points
- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்சனான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...3 points- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
3 pointsஅவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன. கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டான். வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்பியில் கிடைத்த கொபைன் தந்த உற்சாகம், புகைபிடித்ததால் கிடைத்த நிக்கோட்டின் தந்த இன்பம் இரண்டும் கலந்த நிலையில் கடைக்குள் திரும்பி வந்தான். தனது பையைப் பாதுகாத்த தம்பதிகளுக்கு நன்றி சொன்னான். கூடவே ஒரு காகிதத் துண்டை அவர்களிடம் கொடுத்தான். “வெளியே போய் விடுங்கள். பொலிஸைக் கூப்பிடுங்கள். மிக்க நன்றி” காகிதத்தில் இருந்த வாசகத்தைப் பார்த்ததும், தம்பதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. “நாங்கள் எதற்காகப் போக வேண்டும்?” அவர்கள் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தினார்கள். அவன் தன்னிடம் இருந்த 185 யூரோக்களை எடுத்து அவர்களிடம் நீட்டினான். “பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். காகிதத்தில் எழுதி இருப்பதைச் செய்யுங்கள்” என்றான். மீண்டும் தம்பதிகள் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. “நாங்கள், எங்கள் பணத்தில் ஆறுதலாக இருந்து கோப்பி குடிக்கவே இங்கே வந்திருக்கிறோம். இவன் யார் எங்கள் இனிய மாலைப் பொழுதைக் கலைக்க?” தம்பதிகளின் பார்வைகளிலேயே அவர்கள் நினைப்பதை அவன் விளங்கிக் கொண்டான். பதட்டமே இல்லாமல் தனது ஜாக்கெட்டைத் திறந்து துப்பாக்கியைக் காண்பித்தான். இப்பொழுது தம்பதிகள் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள். இருக்கையில் இருந்து எழுந்து வேகமாகக் கோப்பிக் கடையை விட்டு வெளியேறினார்கள். இப்படித்தான் 26.01.2024 அன்று பணயக் கைதிகள் விவகாரம் Ulm நகரத்தில் ஆரம்பமானது. நீதிபதிக்கு முன்னால் நின்ற சிறிய உருவம் கொண்ட அவனுக்கு இடது முன்கையில் பச்சை குத்தி இருந்தது. முகத்தின் வலது பக்கத்தில், கீழ்த் தாடையில் ஒரு பகுதி இல்லை. வாய் திறந்திருந்தது. வாயில் இருந்து வழியும் உமிழ்நீரை அடிக்கடி துடைத்துக் கொள்ள அவன் கையில் ஒரு துணி இருந்தது. “நான் இறந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டியவன். ஆனால் உங்கள் முன்னால் நிற்கிறேன்” நீதிபதியைப் பார்த்து அவன் சொன்னான்.அவனது தாடையில் ஏற்பட்டிருந்த காயங்களால் அவனது உரையாடலைப் புரிந்து கொள்வது நீதிபதிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. “நான் Iserlohn என்ற நகரத்தில் பிறந்தேன். எலக்ட்ரிக்கல் மெக்கானிக் படிப்பை முடித்து ஒரு வருடம் வேலை செய்தேன். பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். எனது 12 வருட இராணுவச் சேவையில், இரண்டு தடவைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பணிபுரிந்திருக்கிறேன். ஆப்கானிஸ்தானில் இருந்த சூழ்நிலைகள் எனக்கு மிகுந்த அழுத்தங்களைத் தந்தன. இடைவிடாத ரொக்கெட் தாக்குதல்கள், என் கண்களுக்கு முன்னால் தலையில் சுடப்பட்ட ஒரு ஆப்கானிஸ்தானியரின் மரணம், காயமடைந்தவர்கள், இறந்தவர்கள்... என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது, இரவில் தூக்கம் இல்லாது போனது. மனதில் எப்போதும் ஏதோ ஒன்று அழுத்துவது போன்றிருந்தது. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் எங்கிருந்து தொடங்குவது என்ன செய்வது என்று எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது. 2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து எங்கள் படைகள் முற்றாக வெளியேறிய போது நானும் இங்கே வந்து விட்டேன். எங்கேயாவது பலமான சத்தங்கள் கேட்டால் எனது உடல் நடுங்க ஆரம்பிக்கும். ஆப்பானிஸ்தானில் இருந்து இங்கே வந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத பயம் என்னை ஆட்கொள்ளும். எனது மனநிலைக் குழப்பத்துக்காக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிகிச்சை எனது நிலைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் தகுதியையும் நான் இழந்தேன். இராணுவத் துறையால் எனக்குத் தரப்படும் சிறு உதவித் தொகையும் எனது வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இவைகளிலிருந்து எனது கவனத்தை வேறெங்காவது திசை திருப்ப எண்ணிய போது, சூதாட்டமும், போதை மருந்துகளும், மதுவும் இலகுவாக என்னைப் பற்றிக் கொண்டன. எனது மனைவி 2020இல் கர்ப்பமான பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மது, போதை, சூதாட்டம் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, ஒரு இனிமையான வாழ்வைத் தொடங்க முடிவு செய்தேன். ஆனால் இன்று, நாளை அல்லது மறுநாள் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்ற எண்ணத்துடன் நாட்கள் தள்ளிப் போனதே தவிர, எனது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இன்னும் இன்னும் அவற்றுக்கு நான் அடிமையாகப் போய்க் கொண்டிருந்தேன். மகனும் பிறந்து விட்டான். அவன் அழும் போதெல்லாம் என்னால் அமைதியாக இருக்க முடியாதிருந்தது. எனது காதுகளுக்குள் இருந்து யாரோ அலறும் சத்தமாக அவனின் அழுகை எனக்கு இருந்தது. ஏதோ ஒன்று எனது ஆழ் மனதில் இருந்து என்னைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. இதை எவ்வளவு காலங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியாதிருந்தது. செப்ரெம்பர் 2023 என் மனைவியுடனான திருமண ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். மனைவி, மகன் உறவும் போய்விட்டது. டிசம்பரில் எனது பிறந்தநாள். வாழ்த்த யாரும் வரவில்லை. கிறிஸ்மஸ் வந்தது. அதை என்னுடன் கொண்டாட எவரும் இல்லை. என்னை விட்டு எல்லோரும் போய்விட்டார்கள். என்னை ஒதுக்கி விட்டார்கள். இனி வாழ்ந்துதான் என்ன? செத்துவிடலாமா? எனது நகரத்தில்(Iserlohn) இருந்து தெற்கு நோக்கி நெடுஞ்சாலையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். Ulm நகரத்துக்குத் திரும்புவதற்கான அறிவித்தல் தெரிந்தது. அந்த நகரத்துக்கு நான் இதுவரை சென்றதில்லை. Ulm இல் இராணுவ மருத்துவமனை ஒன்று இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். அங்கே எனக்கு மருத்துவ உதவி கிடைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. காரை Ulm நகரத்துக்கான பாதையில் திருப்பினேன். வழியில் கோப்பி குடிப்பதற்காக ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடைக்கு வந்தேன். அங்கே மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைப் பார்த்த போது, எனது மனைவியுடன் மகிழ்வாக இருந்த நாட்கள் மனதுக்குள் ஓடின. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன். ‘இன்று இல்லாவிட்டால் இனி இல்லை’ என்ற முடிவுதான் அது” அவன் சொல்ல வேண்டியதை அவனிடம் இருந்து உள்வாங்கி ஒரு மனநல மருத்துவர் நீதிபதிக்குச் சொல்லி முடித்தார். அனைத்தையும் கேட்ட நீதிபதி, ஒக்ரோபர் 10ம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாகச் சொல்லி எழுந்து கொண்டார். அவன் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் 14 வயதுச் சிறுமியும் சிறுவனும் இருந்தார்கள். அங்கிருந்த சூழ்நிலை, அவர்களைப் பயத்தின் உச்சத்துக்கு கொண்டு போயிருந்தது. இருவரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவன் அந்தச் சிறுவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர்கள் இரண்டுபேரையும் முதலில் வெளியே போக அனுமதித்தான். சிறுவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி தான் பிடித்து வைத்திருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் பயத்தில் இருந்தார்கள். என்ன நினைத்தானோ, கடையின் சொந்தக்காரியைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அனுமதித்தான். ஆக அவன் பிடித்து வைத்திருந்த 12 பணயக் கைதிகளும் ஆபத்தின்றி வெளியேறி விட்டார்கள். கடைக்கு வெளியே சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். உள்ளே கடை உரிமையாளருடன் இவன் நின்றான். பணயக் கைதிகள் விவகாரம் எதற்காக என்பது யாருக்கும் தெரியவில்லை. அவன் அறிவிக்கவுமில்லை. “இப்பொழுது நாங்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகப் போகிறோம். உன் கழுத்தில் என் துப்பாக்கி இருக்கும். வெளியில் இருந்து பொலிஸார் சுட்டால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவற்றைச் செய்துகொள்” என்று சில வழிமுறைகளைக் கடை உரிமையாளருக்குச் சொல்லிக் கொடுத்தான். அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதில் குழப்பமாக இருந்தது. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? இவனுக்கு என்னதான் தேவைப்படுகிறது? என்ற கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும், அதையும் தாண்டி கழுத்தில் அவனது கைத்துப்பாக்கி அழுத்தி நின்ற பயம் மேலோங்கி நின்றது. கடையின் வாசலில் உரிமையாளரின் கழுத்தில் கைத்துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அவன் நின்றான். பத்து மீற்றர் தூரத்தில் சுவருக்குப் பின்னால் நின்ற ஒரு பொலிஸின் இலக்கில் தான் நிற்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். இரண்டு துப்பாக்கிச் சூடுகள். ஒன்று அவனது கையிலும் மற்றையது அவனது தாடையிலும் பாய்ந்தன. நிலத்தில் இரத்தத்தில் தோய்ந்திருந்தான். இராணுவத்தில் அவன் பங்காற்றிய சண்டைகள், அதனால் வந்த விளைவுகள் எல்லாமே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. அதற்கான தண்டனையாக தான் துப்பாக்கிக் குண்டுகளால் இறக்க வேண்டும் என்று நினைத்தவனைக் காப்பாற்ற, அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவனது துப்பாக்கிகளை ஆரய்ந்த சிறப்பு பொலீஸ் அதிகாரி, “இது என்ன? அவனது கைத்துப்பாக்கி விளையாட்டுத் துப்பாக்கியாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டார். ஒக்ரோபர் 10ம் திகதி, நீதிபதி என்ன தீர்ப்பைச் சொல்லிவிடப் போகிறார்? அவனைப் பார்கக விரும்பினால் https://www.swp.de/lokales/ulm/geiselnahme-im-ulmer-starbucks-22-jaehrige-geisel-ich-habe-die-augen-geschlossen-und-gebetet-77514017.html3 points- இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இதனை, இந்த வேலை நிறுத்தத்தை, இவர்கள் காலவரையின்றி தொடர வேண்டும் என்று உள்ளன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.3 points- பஸ் பயணம்!
2 pointsநாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். குடி போதையில் சிலபேரோ அருகில் வந்து அமருறார் கொஞ்சநேரம் போன பின்பு குரங்குப் புத்தியை காட்டுறார். கைபேசி பேசிக்கொண்டு-சில சாரதியோ ஓடுறார். சடும் பிறேக்கு போட்டுப் போட்டு சனத்தை சாவடிக்கிறார். ஐம்பதற்கு மேற்பட்டோர் இருந்த பஸ்சில் ஒருநாள் ஏந்தம்பி மெதுவாயோடு-என எழுந்ந்து நானும் சொன்னேன் என்கருத்தை ஏற்றுக்கொண்டு இருவர் மட்டும் எழுந்தார் ஏன் சோலி என்றதுபோல் மற்றவர்கள் உறைந்தார். விபத்தொன்று நடந்தபின்பு விம்மி அழுதென்ன விளிப்போடு நாமிருந்தால் விடியும் எங்கள் நாடு. தொடரும்… அன்புடன் -பசுவூர்க்கோபி.2 points- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
கடந்த சனாதிபதித் தேர்தலில் கழுகிற்கும் அன்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், ஆரியவன்ச க்கும் நூற்றுக் கணக்கில் வாக்கு போட்டவர்கள் அல்லவா யாழ்ப்பாணத்தினர்!2 points- இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
உலகில் தடை செய்யப்பட்ட ரோலர் bottom trawling. இந்த முறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்களை பிடித்து அவர்கள் பகுதி மீன் வளத்தை இல்லாமல் பண்ணிவிட்டு இலங்கையின் வடகிழக்கு கடலின் மீன் வளத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறார்கள் . படத்தில் உள்ளவாறு கடலின் அடியில் உள்ள சிறு மீன் குஞ்சுகளை கூட விட்டுவைக்காமல் துடைத்து எடுத்து விடுவார்கள் முதலில் இந்த வகை மீன்பிடி முறை மூலம் கடல் வளத்தை அழிகிறார்கள் என்ற விபரம் கூட தெரியாதவர்கள் தான் மீன்பிடிக்க வரும் கூலிகள் ஆனால் மீன் பிடி வள்ள உரிமையாளர்கள் பெரும் பணக்கார அரசியல் வாதிகள் அவர்களுக்கு பணம் ஒன்றே குறி .2 points- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இது ஒன்றும் சிக்கலான விடயம் இல்லை, அமெரிக்க தலையீடுகளில் ஒரே விதமான மாதிரி இருக்கும்; அது பணம் பார்ப்பதுதான். நீங்களே ஒரு வர்த்தகர்தான், உங்களுக்கு தெரியாததா? இலாபமில்லாமல் அமெரிக்கா ஏன் இதில் தலையிட போகிறார்கள்? அமெரிக்க அரசியல்வாதிகள் கூறும் உக்கிரேன் ஒரு சிறந்த முதலீடு என்று அதற்கு அவர்கள் கூறும் காரணி 12 ரில்லியன் பெறுமதியான தங்க சுரங்கங்கள் மேற்கு உக்கிரேனில் உள்ளது அதனை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்து விடும். அதற்கு உக்கிரேனின் நிலையினை மோசமாக்கிய பின்னர் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றன் மூலம் அதனை செய்யலாம், அல்லது வேறு வகைகளில் செய்ய முயற்சிக்கலாம், அதனால் நீண்ட தூர ஏவுகணைகளை கொடுத்து மேலும் உக்கிரேனின் நிலையினை துருதமாக மோசமாக்குவதனூடாக முதலீட்டு இலாபத்தினை விரைவாக பெறமுடியும். இந்த முயற்சியில் அனைவருக்கும் இலாபம் இரஸ்சியாவிற்கு இரஸ்சியர்கள் வாழும் கிழக்கு உக்கிரேனையும், மேற்கு உக்கிரேனில் உள்ள 12 ரில்லியன் வளங்கள் அமெரிக்க மற்றும் மேற்கு கூட்டணிக்கு, உக்கிரேனுக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை.2 points- மனிதம் இன்னும் .....
2 pointsஅந்தளவுக்கு " ஷோ " கா ட்டும் பழக்கம் என்னிடம் இல்லை. இருப்பதில் பிடித்ததை கட்டிக்க கொள்வேன். வருடத்தில் ஒன்று ரெண்டு தடவைகள்தானே கலியாணங்கள் வரும். நெருங்கிய உறவினர் என்றால் மட்டும் புதிது எடுத்துக் கொள்வேன்.2 points- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
1 pointபோரில் நேரடியாக ஈடுபட்டாலோ அல்லது ஒரு கடுமையான போர்ச் சூழலில் வாழ்ந்தாலோ, உளச்சிதைவு, மன அழுத்தம், அதிகப்படியான அதிர்ச்சி என்பன ஒருவரைத் தாக்கும் சாத்தியம் மிக அதிகம் என்று சொல்வார்கள். இங்கு ஒரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், இவை பற்றி பலரும் பல ஊடகங்களில் உரையாடுவார்கள். ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று. இப்படியான முடிவு எடுப்பவர்கள் தனியே தற்கொலை செய்து கொள்ளாமல், அந்தக் கணத்தில் ஏதுமறியாத இன்னும் சிலரையும் எதற்காகக் கொல்கின்றனர் என்றும் யோசித்ததுண்டு. நல்ல காலம், இந்தச் சம்பவத்தில் அவர் எவரையும் கொல்ல நினைக்கவில்லை, ஆனாலும் தனியே தன் கைகளால் சாகவும் விரும்பவில்லை. போன வருடம் என்று நினைக்கின்றேன். கேரளாவில் ஒரு பேராசிரியர், அவர் ஒரு சமூகப் போராளியும் கூட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேந்தவர், தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக இந்தச் சமூகத்தில் இருக்கும் வெறுப்பு என்றே காரணம் எழுதியிருந்தார். அதே வாரம் இங்கு லாஸ் வேகாஸில் அதே வயதுடைய ஒரு பேராசிரியர் இங்குள்ள பல்கலையில் சில மாணவர்களை சுட்டுக் கொன்று விட்டு தானும் இறந்து போனார்.1 point- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
இப்பவும் அவருடைய கைக்குள். தான் 😂🤣. ஜேர்மன்காரனுக்கு ஏன். கறுப்பு டை. ?? இதை சாட்டாக. வைத்து பக்கத்து வீட்டில் எல்லாவற்றையும் வைத்து கொள்ள தான் 😂🙏1 point- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
கொஞ்சம் கொஞ்சமாக உடம்புக்கு பழக்கப்படுத்தினால் எல்லாம் சரிவரும். 😀 பிளீஸ் அனுப்பி விடவும் 🤣1 point- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
சுருக்கு எடுக்க போய் சுளுக்கு வந்தா அதுவும் கண்ட இடங்களில் வந்தா...தாங்கதடா சாமி இந்த பஞ்சு உடல்1 point- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
பாவித்து விட்டு எப்பிடியிருக்கெண்டு சொல்லவும். இஞ்சை பக்கத்து வீட்டு ஜேர்மன்காரனால பெரிய கரைச்சலாய் கிடக்கு1 point- "அமைதியின் கதவு திறக்கட்டும்"
1 pointகந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் கட்டுரைகளை காணவில்லையே என்று நினைத்தேன் சரியான நேரத்தில் சிவப்பு சர்வாதிகாரிகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் புத்தன் அண்ணா1 point- "அமைதியின் கதவு திறக்கட்டும்"
1 pointஇன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம் பகிர்விற்கு நன்றிகள்1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointவிடிய காலை ஆறு மணிக்கே... போண்டா, பஜ்ஜி, வடை என்று போடுகிறீர்களே... இதையெல்லாம் யார் சாப்பிடுவார்கள்? வேறை யார்... வாக்கிங் போறவங்கதான். 😂 🤣1 point- இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
உலகளவில் ஆறு மீன் பிடி முறைகள் தடை செய்யபட்டுள்ளது . 6 Illegal Fishing Methods and Destructive Practices Cyanide fishing. A deadly chemical used by offenders to stun the fish and make them easier to catch. Use of explosives. ... Keeping undersized or oversized fish. ... Overfishing. ... Bycatch. ... Bottom trawling.1 point- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இரண்டு பகுதியும் தங்களின் அரசியல் இருப்புக்கு இனம்களின் சந்தேகத்தை நீக்காமல் இனவாதத்தை வளர்த்து விட்டு இன்று இரண்டு பகுதியுமே வெளிநாடு என்று ஓடித்தப்புகின்றனர் .1 point- இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இதெல்லாத்தையும் அவனுகள் கடற்கொள்ளைக்காரனுகள் அறுத்தெறிஞ்சுபோடுவானுகள்!1 point- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
அவர்களுக்கு இங்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லை, ஆனால் தெற்கே கற்கும் பல்கலைக் கழக மாணவர்கள் ஊடாக பெற்றோர், உறவினரிடம் வாக்கு சேகரிக்க முயலுவதாக சிலர் கூறினார்கள்! வாய்ப்பில்லை என நினைக்கிறேன் அண்ணை.1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointஎன்ன.... சமையல்காரரே, உளுந்து வடையில்... ஒட்டை பெரிதாக இருக்கின்றது? ஆமாம் மன்னா... கைவிரலில் காயம், அதனால்... கால் கட்டை விரலை யூஸ் பண்ணிட்டேன். 😂 🤣1 point- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டி……….1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ............! பெண் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல் வருவதில்லை பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை பெண் : இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் பெண் : பொழுதும் விடிவதில்லை ஆண் : { பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் } (3) பாவை முகமல்லவா ஹோ பாவை முகமல்லவா பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள் பெண் : ஆயிரம் சுகமல்லவா........! --- தொட்டால் பூ மலரும் ---1 point- மனிதம் இன்னும் .....
1 pointசே . ..... புத்தனின் ஆசிபெற நான் இன்னும் ஆறேழு வருடங்கள் கார் ஓட்ட வேணும் போல கிடக்கு . .......! 😂1 point- கல்லறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது யேர்மனியில் சாத்தியமா?
ஹிளவ்டியாவின் தந்தை பயிர்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். தான் இறந்து அடக்கம் செய்யப்படும் கல்லறையைச் சுற்றி எப்போதும் பச்சை பசேல் என காய் கறி மரங்கள் இருக்க வேண்டும், குறிப்பாக தக்காளி மரங்கள் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அவளது தந்தை இறந்த பின்னர் அவளால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், யேர்மனியில் கல்லறைகளைச் சுற்றி காய்கறி மரங்கள் நடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் காய் கறிகள், பழ மரங்கள் நடுவதை கல்லறைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இறந்தவர் அடக்கம் செய்யப்படும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். இறந்தவர் கல்லறையில் உறங்குகிறார். பயிர்ச் செய்கைக்காக, மண்வெட்டி கொண்டு நிலத்தைத் தோண்டுவது அவரது அமைதிக்கு ஊறு விளைவிக்கும். கல்லறைகளின் பாதுகாப்புக் கருதியும், இறந்தவர் அமைதியாக உறங்குகிறார் என்ற நினைப்பைக் கருத்தில் கொண்டும், ஒருவர் வளர்க்கும் பயிரானது அடுத்தவரது கல்லறைக்கு இடைஞ்சலைத் தரும் என்பதாலும் பயிர்ச் செய்கையை அனுமதிக்க முடியாது என யேர்மன் கல்லறைத்தோட்டக்காரச் சங்கத் தலைவர் மைக்கல் பலன்பெர்ஹர் (57) அறிவித்திருக்கிறார். யேர்மனியில் என்னால் முடியாவிட்டாலும் ஒஸ்ரியாவில், வியன்னாவில் என் தந்தையின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது. வியன்னாவில் எனது தந்தையின் கல்லறையில் தக்காளிச் செடிகளை வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறாள் ஹிளவ்டியா. இறந்தவர்கள் தங்கள் கல்லறைகளில் அமைதியாக உறங்க வியன்னாவில் முடியாதா? என்றால், அவர்கள் நாட்டுச் சட்டம் அப்படி.1 point- வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியார் வீதி திறப்பு!
மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கும் ஸ்ரீலங்கா பிக்குகளுக்கும் என்ன சம்பந்தம். கண்ட இடங்களுக்கு எல்லாம் பிக்குகளை ஏன் கூப்பிடுகின்றார்கள். அவங்களுக்கு விகாரையில் வேறு வேலை இல்லையோ... கூப்பிட்டவுடன் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வாறாங்கள். பார்க்க பத்திக் கொண்டு வருகுது. 😡 கூப்பிடுகிறவனும் பைத்தியக்காரன் வாறவனும் பைத்தியக்காரன்.1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 pointஎன்ன கதாசிரியர் நீங்கள், தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதனை குறிப்பிடுவதற்காகவே அந்த ஆரம்ப விபரிப்பு. பாருங்கள் அமெரிக்காவின் தலைவிதியினை; ட்ரம்ப், பைடன் ? ஏன் அமெரிக்காவில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சமா? நான் இரவு வேலை செய்த ஒரு நாள் , நீண்ட நேர வேலை மற்றும் குடும்பத்தினரை ஏற்றி இறக்கும் வேலை என அதிக நேரம் போய்விடும் ஒரு 4 மணிநேரம் நித்திரை கொண்டால் சிறந்த நாளாக இருக்கும் அப்படிப்பட்ட நாளில் எனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு வந்து நித்திரை கொள்ள ஆரம்பித்தேன், பக்கத்து வீட்டுக்கார முதியவர் அழைப்பு மணியினை அடித்தார், என்னவென்று விசாரிதேன் தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை என கூறினார், இது வழமைக்கு மாறான விடயம் என்றார் நான் அவரது மகளுக்கு அவரிடமிருந்து தொலைபேசி இலக்கத்தினை வாங்கி தொடர்பு கொண்டேன் அவர் சொன்னமாதிரி பதீல்லை. என்ன காவல்துறையிடம் புகார் செய்யப்போகிறீர்கலா என கேட்டே (ஒரு பேச்சுக்கு) அவர் ஓம் என்றார், சரி என காரில் அவரினை ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றேன். காவல்துறை அதிகாரி விசாரித்துவிட்டு முதியவரை காட்டி கூறினார் அவருக்கு மாறாட்டம் வந்துள்ளது பார் கையில் வீட்டு தொலைபேசி, ரி வி ரிமோட் என அனைத்தையும் வைத்திருக்கிறார், எனக்கு அப்போதுதான் புரிந்தது. உலக அமைதி விடயத்தில் எரியிறதை எடுத்தால் புகைவது தானாக நின்றுவிடும்.1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 point🤣.......... அப்படி இல்லை, அண்ணா. நூறு சண்டைகள் உலகத்தில் இப்ப நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஒரு சண்டையில் தானே இரு வல்லரசுகள் கிட்டத்தட்ட நேருக்கு நேரே மோதிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பாவனைகளில் ஒவ்வொரு படியாக இருவரும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் அதி தூர ஏவுகணைகளை பாவிப்பதற்கு அமெரிக்கா உக்ரேனுக்கு அனுமதி கொடுப்பது அடுத்த கட்டம். அப்படி நடந்தால், அழியப் போகின்றார்கள். மேலும் ரஷ்யாவிடமிருந்தும், உக்ரேனிடமிருந்தும் உலகத்திற்கு தேவையானவை அதிகம் - தானியங்கள், எரிபொருள் உட்பட. இவை உலகச் சந்தையில் கட்டுப்படியாகும் விலைக்கு கிடைக்கா விட்டால், இன்னும் எத்தனை நாடுகளில் 'அரகலிய' ஆரம்பித்து அமைதி கெடுமோ............1 point- 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள் - ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி
1 pointஇன்னும் ஒரு 30 வருசம் இதை சொல்லியே சிங்கள்த்துடன் உறவாக இருக்கலாம் இந்திய...1 point- பஸ் பயணம்!
1 pointகவி வரிகள் மிக்க நன்று . மீண்டும் பள்ளிக்கு சென்ற நினைவுகள் இரைமீட்டிக் கொண்டன. தொடருங்கள். நன்றி1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
எப்படி? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நடந்த போரை நிறுத்தினமாதிரியா? நல்ல விசயம் 1 இலட்சம் துருப்புக்களை அனுப்பி வையுங்கள்.1 point- பஸ் பயணம்!
1 pointநல்ல கவிதை . ....... பஸ் பயணம் மிக மிக சுவாரஸ்யமானது . ....... தினம் தினம் புதுப்புது சம்பவங்களைப் பார்க்கலாம் .........ஐந்து வருடங்கள் டிப்போவில் வேலை .......அருமையான நினைவுகள் . ......! 😂1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 point🤣....... இது ட்ரம்பை வெல்ல வைப்பதற்கான வசீயின் திட்டம் போலத் தெரிகின்றது......... உலகத்திற்கு ட்ரம்பை பிடிக்கும். இங்கு உள்ளூரில் இன்னும் சரியாகத் தெரியவில்லை யார் வெல்லப் போகின்றார்கள் என்று. ஆனாலும் இருவரும் சும்மா கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இந்த இருவரில் எவர் வந்தாலும் உலக நிலையில் இவர்களால் பெரிய மாற்றம் எதுவும் வராது. இவர்கள் இருவரையும் விட, ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் இன்றே உலகம் கொஞ்சம் அமைதியாகும்.1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
//லவ்லி கிறீம் ஹவுஸ் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்னிசை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் யாழ் சாவகச்சேரி லவ்லி கிரறீம் ஹவுஸ் நிறுவனத்தின் ஆறாமாண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பரிசளிப்பு விழாவும் இன்னிசை நிகழ்வும் 10-09-2024 ( செவ்வாய்க்கிழமை ) மாலை 2 தொடக்கம் 4 மணி வரை யாழ் கொடிகாமம் நட்சத்திரமகால் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஈழத்தின் பிரபல பாடகி கில்மிஷா மற்றும் சாந்தன் இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்.// Kunalan Karunagaran தமிழரசு கட்சியின் (சுமந்திரன் அணி) அடுத்த பிரட்டு வெளிப்பட்டது. ஒரு ஐஸ் கிரீம் கடையின்... ஆறாவது ஆண்டு நிறைவுடன் நடந்த கில்மிஷாவின் இசை நிகழ்ச்சிக்கும், பரிசளிப்பு விழாவிற்கும் ... சஜித் பிரேமதாசாவை கூப்பிட்டு, தேர்தல் பிரசாரக் கூட்டம் என்று அங்கு வந்திருந்த மக்களை காட்டி ஏமாற்றியுள்ளார்கள். அந்த ஐஸ் கிரீம் கடை கொடுத்த விளம்பரத்தில், எந்த ஒரு இடத்திலும்... சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார கூட்டம் என்று குறிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
உங்கள் கருத்திற்கு நன்றி இந்த வகையான கருத்தாடல்களை ஆங்கிலத்தில் "Whataboutism" என அழைப்பார்கள், ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை, நல்ல மாணவன் ஆசிரியர் கூறாத விடயங்களையும் புரிந்து கொள்வான், ஏகலைவன் மாதிரி, நீங்களும் ஒரு ஏகலைவந்தான்! நான் கூற வந்த விடயம் தற்போதய போரினால் உலகம் எதிர்கொள்ளும் அபாயமும், சமாதானதிற்கான சவால்களும் அதில் தென்படும் சில சாதகமான அம்சங்களும். உங்களைப்போல உங்களிடமும் கேள்வி 1. எப்படி அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளை ஆக்கிரமிகும் போது அதனை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என நம்பும் உங்களால்; இரஸ்சியா உக்கிரேனை ஆக்கிரமிக்கும் போது மட்டும் ஆக்கிரமிப்பாக தெரிகிறது? 2. இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கில் இலங்கை படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் இனப்படுகொலையாக தெரிந்த போது தற்போது போர் நிகழும் இரஸ்சியர்கள் வாழும் டொன்பாஸ், லுகான்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேனியர்களின் படுகொலை உக்கிரேனின் இறையாண்மையாகத்தெரிகிறது. நான் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்காக வைக்கப்பட்ட வாதம் அல்ல, இது உங்கள் நோக்கத்தினை புரிந்து கொண்டு (திரிகளை சூடாக்குவதற்கு) வைகும் பதில், அதனால் மனம் கோண வேண்டாம்.1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உங்களுக்கு ஒற்றுமையின் அர்த்தமே புரியவில்லை. கூட்டமைப்பு சார்ந்து நீங்கள் 15 வருடங்களுக்கு முன்னர் நான் நின்ற இடத்தில் நிற்கிறீர்கள். பட்டு வாருங்கள் 2040 இல் பேசலாம். அதற்கிடையில் நீங்கள் பிச்சை எடுக்கும் நிலையிலும் கூட்டமைப்பினர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இருப்பார்கள்.1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுமந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் கூட வரவில்லையா. 😂 🤣 Selvarajah Kalmunai1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். ஆனால் வடமராட்சியில் இப்போது மூன்று லீக்குகள் இருக்கின்றதென்று நினைக்கின்றேன் - வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு. இதில் யாரைக் கூப்பிடுவது, யாரை விடுவது என்று அது வேற ஒரு பிரச்சனை இருக்குது. ஏன் தேவையில்லாத வம்பு என்று தான் உடுப்பிட்டியில் பரிசளிப்பு விழா நடத்தவில்லை போல.........1 point- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நல்லது நிழலி அப்போ யாருக்க வாக்கு போடலாம்? ஏன் போடவேண்டும்? அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.1 point- "அமைதியின் கதவு திறக்கட்டும்"
1 pointஅத்தியடியில் பூத்து யாழ்களத்தில் நறுமணம் வீசும் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே! ஆரோக்கியத்திற்கு. ஓய்வும் அவசியம். எடுங்கள் வேண்டியமட்டும்.🙌1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.