Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3055
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20018
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/19/24 in Posts

  1. ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேயை வளர்த்திருக்கிற... சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது. 😂 Mohan Muthuram
  2. ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது. கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை. தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.
  3. "யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இந்நாளிலும், குறிஞ்சி வாழ்ப் பழங்குடி மக்களுடன் தங்கள் தொன்மையை இழக்காமல் பண்பாட்டைச் சமரசம் செய்து கொள்ளாமல், கால ஓட்டத்தை எதிர்த்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாயன ஒரு மீனவ சமூகத்தில், ரவி என்ற எளிய மீனவன், இலங்கையின் வடக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தின் ஒரு பாரம்பரிய மீனவ கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ரவியின் வாழ்க்கை எப்போதும் அலைகளின் தாளத்திலும் வலைகளின் இழுப்பிலும் சுழன்று கொண்டிருந்தது. என்றாலும் அவனது ஏக்கம் எல்லாம் கொந்தளிக்கும் கடல் அலைகளோ, தூக்கி எறியும் புயல் காற்றுகளோ அல்ல, அதை அவன் எப்படி சமாளிப்பது என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு, அவனின் பரம்பரையின் அனுபவம் அவனுக்கு கற்றுக் கொடுத்து விட்டது. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் புகுந்து, கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுத்தும் இழுவைப்படகு, மீன்பிடியில் அத்துமீறி ஈடுபடுவதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தும் அந்நிய நாட்டு மீனவர்களின் கொடுமை தான் அவனின் முதன்மை ஏக்கம். தன் குடும்பம், தன் சமுதாயம் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான் அவனின் ஒரே கனவு. அதேநேரம் பொதுவாக எல்லா இளம் சமூகத்தினர் போல, காதலிலும் அவன் விழாமல் இருக்கவில்லை. அவனின் காதலியின் பெயர் மீரா, அவள் கூந்தல் ஆற்றின் நீரோட்டத்தால், வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல் இருக்கிறது, நெற்றியோ பிறைநிலா போல் இருக்கிறது, புருவம் வில் போல் வளைந்தும், அழகிய இளமையான குளிர்ந்த கண்ணுடன் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய். அந்த கொஞ்சும் பேச்சுத்தான் அவனின் இதயத்தை நிரப்பியது என்றே கூறலாம்? மீராவுடனான ரவியின் காதல், கடற்கரையின் தாள அலைகளுக்கு மத்தியில், எளிமையாக பகிர்ந்த உணர்வுகள் மற்றும் அவர்களால் திருடப்பட்ட மகிழ்ச்சியின் இழைகளால் பின்னப்பட்ட ஒரு நாடா! அவள் தன் மீனவ தந்தையின் மீன் பிடிப்புகளை, கூடையில் சுமந்து விற்கும் பொழுதுதான் அவன் அவளை முதல் முதல் சந்தித்தான். "நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே" நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடைய அவனின் அதே கிராமத்தில் தான் அவளை சந்தித்தான். சூரியன், தினம் முத்தமிட்ட இதமான தனது தோலுடனும், கடல் மாதாவின் பாடலை எதிரொலிக்கும் சிரிப்புடனும் மீரா ரவியின் மனதில், உணர்வில் ஒரு விறுவிறுப்பைக் என்றும் கொடுத்துக் கொண்டுவந்தார். மணற்பாங்கான கரையில் அவர்களின் காதல் ஒரு மென்மையான நடனம் போல் இருந்தது, அங்கு அலைகளின் ஒலி அவர்களின் காதல் இசையாக செயல்பட்டது. ரவியும் மீராவும் அடிக்கடி தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, கரையோரம் கைகோர்த்து நடந்து, அன்பும் மிகுதியும் நிறைந்த எதிர்கால கனவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் தங்கள் கால்களை அலைகளில் நனைத்தபடி கைகள் உடல்களை அணைத்தபடி, “இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே” ஆக அங்கு கொஞ்ச நேரம் நடந்து இயற்கையின் அழகை ரசித்தனர்; “ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் ” கம்பனின் காதல் காட்சிப் படைப்பு இவர்களில் அப்படியே மாறாமல் இருந்தது. கோதாவரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு, அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் ராமனின் நடையுடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ந்தது ரவியிலும் மீராவிலும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கு அச்சம், மடம், நாணம் ,பயிர்ப்பு என்று ஒன்றுமே இருக்கவில்லை, அவை கவிதைக்கு அழகேற்ற பாவிக்கும் வார்த்தைகளே என்பதை அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், ஆனால், "காதல் என்பது இயற்கை தரும் போதை", அதிலும் " முதல் காதல் என்பது ஒருத்தர் உணர்த்தும் உணர்ச்சிகளை காதலிப்பது" என்பதின் உண்மையை ரவி அன்று உணரவில்லை. அவன் " முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது", அப்படித்தான் மீராவும் என்று தான் எண்ணினான். வங்காள விரிகுடாவின் பரந்த நிலப்பரப்பில், தன் ஊரின் கடற்கரையில், ஒரு பாறைகளின் மீது அமர்ந்து நாளை தான் கடலுக்கு புறப்படும் திட்டத்தைக் கூறி, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வானத்தை வரைந்து, அடிவானத்திற்கு கீழே சூரியன் மறையும் தருவாயில், மீராவின் முத்தத்துடன் வீடு திரும்பினான். ஒரு மகிழ்வு தரக்கூடிய சுறுசுறுப்பான அடுத்தநாள் காலையில், சூரியன் அடிவானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, ரவி தனது காதலி மீராவிடம் விடை பெற்றுக் கொண்டு, இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தன் திருமணத்துக்கு நிறைய மீன்கள் தினமும் பிடிபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் "சூர்யா" என்ற தனது படகில் புறப்பட்டான். ஆனால் இந்த நாள் அவனது வாழ்க்கையில் ஒரு வேதனையான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அவன் மீராவின் அழகில், அவளின் காதலில், அவளின் கொஞ்சும் பேச்சில் எங்கு எங்கேயோ பறந்து கொண்டு இருந்தான். சில வேளைகளில் ரவி தனது படகான "சூர்யா" வில் மீன்பிடிக்க, திறந்த கடலின் நீரில் பயணிக்கும்போது, மீரா சில சமயங்களில் அவனுடன் செல்வாள். படகின் மென்மையான அசைவும் உப்பு நிறைந்த காற்றும் அவர்களிடையே பகிரப்பட்ட சொல்லப்படாத வாக்குறுதிகளுக்கு சாட்சிகளாக இருக்கும். கடல், அதன் பரந்த மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன், அவர்களின் அன்பின் ஆழத்தை பிரதிபலிக்கும். ஆனால் இம்முறை அவன் தனியாவே தன் கூட்டாளிகளுடன் புறப்பட்டான். தாராளமாக மீன்பிடிபடும் என்ற நம்பிக்கையுடன் அவன் தனது கடற் பயணத்தை மேற்கொண்ட போதும் , அவர்கள் எதிர்பாராத சவாலை எதிர் கொண்டனர். இந்திய மீன்பிடி படகுகள், நவீன தொழில் நுட்பத்துடன், கூடிய எண்ணிக்கையில், விலைமதிப்பற்ற இலங்கைக்கே உரித்தான கடற் பரப்பில் தமது இழுவை வலைகளை வீசியது மட்டும் அல்ல, இலங்கையின் மீன் பிடி வளத்தை சேதப்படுத்தியதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப் படுத்தினர். இவர்களின் அத்துமீறிய செயல்களால் தனது மட்டும் அல்ல, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் நழுவுவதைக் கண்டு ரவி விரக்தியும் கோபமும் அடைந்தான். கிழிந்த வலைகள் வெறும் நூல்களும் கயிறுகளும் அல்ல; அவை ரவியின் அபிலாஷைகளின் உயிர்நாடியாக இருந்தன. ஒவ்வொரு முறையும் கிழிந்த வலைகளை சரிசெய்து மீண்டும் மீன் பிடியில் ஈடுபட்டாலும், அவன் தனது நம்பிக்கை மேலும் அவிழ்ப்பதைக் கண்டான். அவனை கடலுடன் இணைத்த ஒரு காலத்தில் துடிப்பான இந்த நூல் வலைகள் இப்போது அவனது சிதைந்த கனவுகளுக்கு ஒரு உருவகமாக மாறியது. ரவி … நான்கைந்து பேருடன் சாதாரண படகில் இரவில் தான் கடலுக்குள் செல்வன். அவர்கள் எல்லோரும் தாய் அல்லது மனைவி கொடுத்து அனுப்பும் கஞ்சியோ அல்லது பழைய சோறோ கையில் வைத்திருப்பர். இரவு முழுக்க கண் விழித்து, வலை வீசுவார்கள். சில சமயம் நல்ல, தேவைக்கு அதிகமாக மீன்கள் கிடைக்கும். உடனே அடுத்த நாளே திரும்புவர். பல சமயங்களில் மீன்கள் கிடைக்காது. அதனால் படகில் சென்ற இவர்கள், இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று செல்வர் மீன்கள் கிடைக்கும் வரை. கையில் இருக்கும் குடிநீரும் தீர்ந்திருக்கும். அரை வயிறுதான் சாப்பிடுவர். இவர்கள் வர இதனால் தாமதிக்கும் பொழுது பெண்கள் எல்லாம் கடல் அன்னையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள் கண்களில் கண்ணீரோடு. இது தான் அவர்களின் வாழ்க்கை. இந்த எளிய வாழ்க்கைக்கு தான் இந்த இந்திய மீனவர்கள் கொடுமை செய்கிறார்கள். அது தான் ரவி கோபத்துடன் இருந்தான். நாட்கள் வாரங்களாக மாறியது, ரவி தனது வாழ்க்கையைச் சந்திக்க சிரமப்பட்டான். அவனது வருமானம் குறைந்துவிட்டது, மேலும் அவனது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சுமை தாங்க முடியாத சுமையாக மாறியது. அவனது வாழ்க்கையின் காதலாக இருந்த மீரா, தொடர்ச்சியான நிதி நெருக்கடியால் அவன் மேல் ஒரு சோர்வு கொண்டாள். அவனின் கனவுகளின் சிதைந்த எச்சங்களில் தனது எதிர்காலத்தைப் பார்க்க முடியாமல், அவள் தயக்கத்துடன் ரவியைப் பிரிந்தாள், அவள் ரவியை காதலித்தாலும், தனது எதிர்காலத்தை நல்ல மகிழ்வான வாழ்வாக அமைக்க வேண்டும் என்பதில், கூடுதலான அக்கறை கொண்டவளாகவும் இருந்தாள். தென்னிந்திய மீனவர்களுடனான அடிக்கடி நிகழும் சம்பவம் ரவியும் மீராவும் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அமைதியைத் தகர்த்தது. சேதமடைந்த வலைகள் மற்றும் குறைந்து வரும் மீன் பிடிப்புகள், ஒரு காலத்தில் அவர்களின் உறவை வரையறுத்த மகிழ்ச்சியை, சிதைக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்த கடல், மீரா விலகிச் சென்ற இந்த நாட்களில், அது இப்ப புலம்புவது போல் ரவிக்குத் தோன்றியது. கரையில் தனியாக நின்று, மீராவின் நிழற்படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மோதிய அலைகள் அவன் இதயத்தின் வலியை எதிரொலித்தன. ஒரு காலத்தில் துடிப்பான கடல் பரப்பும் அதனுடன் சேர்ந்த நிலப்பரப்பும், இப்போது பாழடைந்ததாக அவன் உணர்ந்தான். அவனுக்கு நங்கூரமாக இருந்த மீரா இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் அவன் தவித்தான். அந்தத் தனிமையான இன்றைய தருணத்தில், காற்றில் உப்பு வாசனையோடும், தலைக்கு மேல் கடற்பறவைகளின் அழுகையோடும், ஒரு காதலியை மட்டுமல்ல, அவனுடன் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொண்ட ஒரு தோழியையும் இழந்து, ஆழ்ந்த தனிமையை ரவி இன்று அனுபவிக்க தொடக்கி விட்டான். ஒரு காலத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்த கடல், இப்போது இழந்த காதல் மற்றும் கனவுகள் சிதைந்த கசப்பான நினைவுகளை அவனுக்கு உணர்த்திக் கொண்டு இருந்தது. ஆனால் மீரா இப்ப யாரோ ஒருவனின் மனைவியாக , அதே கடற்கரையில், தன் கணவனின் மடியில் கொஞ்சி செல்லம் பொழிந்து கொண்டு இருக்கிறாள். அவள் ரவியை மறந்தேவிட்டாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. எனக்கே புரியாத அளவுக்கு சிறியர்?? வாழ்த்துக்கள் 🤣
  5. 'முடியல்லடா சாமி............' என்று உடனேயே ஓடமுடியாது........ கந்தையா அண்ணையுடன் ஒரு இரண்டு பதிவுகளாவது நின்று பிடித்து விட்டே அப்படிச் சொல்லிக்கொண்டு ஓடவேண்டும்................🤣.
  6. பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை துரோகிகள் என்று வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம். இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன? தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா? தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா? இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்? இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா?
  7. சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂
  8. ஆறு மாசமா?😍 நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍
  9. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” . பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். . ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். . “பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார். . அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். . முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள். . அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே! . எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார். . “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார். . “ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி. . “பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும். . ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார். . தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து . குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான். Benitto Kumar
  10. யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி adminSeptember 18, 2024 சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/206845/
  11. இனி இவர் அமைதியாக இருப்பார் ....அடுத்த பொது தேர்தலில் சிறிலங்கா தேசிய கட்சியில் வேட்பாளராக நிற்க கூடும்
  12. ஏதாவது விசப்பரிட்சையில் இறங்க போகின்றார் போல ...இனிமேல் இப்படியான் கதைகள் போடும்பொழுது எச்சரிக்கை :இது நகைச்சுவைக்கு மட்டுமே உங்கள் வீடுகளில் முயற்சி செய்யவேண்டாம் என வொர்னிக் கொடுக்க வேண்டும்🤣
  13. வேற ஒரு திரியின் எஃபக்ட் இங்கேயும் பரவுது போல..............🤣.
  14. பிரான்ஸ்ல் வர வேண்டியவர்கள் எல்லாரும் வந்து விட்டார்கள் எண்டு நினைக்கிறன் விசுகர்🤣
  15. என்ரை பிளான் வேற ராசா 🥰
  16. வாழ்வது ஒருமுறை வாழட்டும் தலைமுறை .......! 😂
  17. உலகத்தில இப்படி எத்தனை எத்தனை மாமன்மார் உள்ளார்களோ?
  18. அப்ப இந்தக் கடற்கொள்ளையர்கள் திருந்த வாய்ப்பே இல்லை! அடுத்தவன் வீட்டில் போய்த் திருடுறதுக்கு பேச்சுவார்த்தை நடத்தட்டாம். கேவலம் கெட்ட பிறவிகள்!
  19. bmw கார் அது கிடக்கட்டும் .......பெண் இப்பவும் மாப்பிளையுடன்தானே இருக்கிறா . ........! 😂
  20. மேல் முகநூல் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்று, பலரின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே இணைத்திருக்கிறேன். "...உங்கள் பிரச்சனையே இதுதான் நாலு இளசுகள் மைக்கு முன்னுக்கு பேசின விடையம் உங்களுக்கு இனிச்சுது... ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது அவர்களது கருத்து... (பல்கலையிலேயே பலர் அதை ஏற்கப்போவதில்லை அது வேறு கதை) இப்போது சில விரிவுரையாளர்கள் மைக்குக்கு முன் பேசிய விடையம் கசக்குது... உடனே அருகதை பற்றிப் பேசுகிறீர்கள்... நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் சொகுசாக இருந்து கருத்துவிடும் பலரைவிட...படித்துவிட்டு புலம்பெயராமல் சொந்த நாட்டில் சேவையாற்றும் இந்த கல்வியாளர்களுக்கு அருகதை இருக்கிறது பிடிக்காவிட்டால் பாசிசவாத அவயங்களை மூடிக்கொள்ளுங்கள் குறிப்பு - அவையள் என்ன சொன்னாலும் நாங்க "
  21. யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் வந்திருந்தது. அதன் பின்னர், இதற்கு மாறாக, சில பேராசிரியர்களும், கலாநிதிகளும் தனியே அவர்களின் சொந்த வழியில் சென்று விட்டார்கள் போல. அதற்காக இப்படி அந்த தனிநபர்களை தரம் தாழ்ந்து தாக்க வேண்டுமா............. பொதுவான இன்னொரு அறிக்கை ஒன்றை அதே பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டு விட்டு, முன்னோக்கி போயிருக்கலாம். அந்த நாட்களில் பேராசிரியர் கூல் தலைமையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற பெயரில் கொழும்பிலும், வெளியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்றோம் என்று அறிக்கைகள் விடுவார்கள். ரஜினி திரணகம மரணத்தின் பின். அவர்களின் பல அறிக்கைகள் இலங்கை அரசை விட இயக்கங்களை அதிகம் குறை கூறுவது போன்றும் இருந்தது. ஆனாலும் பாதிப்பு என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னொரு மாற்றுக்கருத்து என்ற அளவில் இருந்தார்கள். அதே போலவே இதுவும். எல்லாவற்றையும் விட, பொது மக்களில் கூட ஒரு பங்கு வாக்குகள் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் போகத்தான் போகின்றது. அந்த பொதுமக்களையும் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்ல முடியுமா............😌. எங்களின் ஒரு பல்கலையை தாங்குவதே எங்களுக்கு பெரும்பாடாக இருக்கின்றது............... அநுரகுமாரவிடம் எத்தனை பல்கலைகள் இருக்கின்றன. 'தெற்கு மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். வடக்கு மக்களும் தயாராக வேண்டும். இல்லையேல் விளைவைச் சந்திக்க வேண்டும்........' என்று அவர் சொன்னதும் இந்த நேரத்தில் நினைவில் வருகின்றது..........🫢.
  22. https://fb.watch/uH_qUE5Veg/ யாழ்ப்பாண புலனாய்வு இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே எனக்கு வேலை செய்யுது. https://fb.watch/uH_YgH4ndP/
  23. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார். நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்! Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல் | Sector 36 Hindi Movie Review in tamil - hindutamil.in
  24. ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A யில் நிற்கிறன். 😂
  25. "உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁
  26. தில்லை நான்கு வரி என்றாலும் நச்சென்று இருக்கிறது.
  27. இன்று காலையில் சிறீதரனின் பேச்சை வாசிக்கும் போது உங்களது எண்ணம்தான் எனக்கும் வந்தது. எழுபதுகளில் எங்கள் நகரத்தில், காலையில ஏழுமணிக்கு ஒருவர் வந்து இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். இடையிடையே சிரித்தும் கொள்வார். அப்படி ஒரு படத்தைப் போடலாம் என எண்ணியிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. மதியம் படத்தைத் தயார் படுத்திவிட்டுப் பார்த்தால் உங்கள் கருத்து, “இந்தாள் என்ன லூசா” என்றிருக்கிறது.
  28. யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏
  29. சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்? சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது. இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
  30. ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசு கட்சி.
  31. புலிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. போரிட்டு இருந்தால்… இன்று நிச்சயம் ஊழலற்ற ஒரு சுபீட்சமான இரு நாடுகள் ஶ்ரீலங்காவில் தோன்றியிருக்கும் என நினைக்கின்றேன். இவரின் கொள்கையை சிங்கள மக்கள் எத்தனை பேர் ஆதரிக்கின்றார்கள், ஜனாதிபதி தேர்தலில் எத்தனை வீதமான வாக்குகளை எடுக்கின்றார் என்று அறிய ஆவலாக உள்ளது.
  32. ""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁"" 👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா 😁
  33. இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எல்லோருடைய (பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தவிர்த்து ஏனென்றால் அவர் தான் ஜனாதிபதியாக வர முடியாது, வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்) பேட்டிகளையும், காணொளிகளையும் பார்த்ததில் இருந்து தெரிவது என்னவென்றால்............. இவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பிதுருதலாகலை மலையிலிருந்து தேனும் பாலும் ஓடி நாட்டை நிரப்பப் போகின்றது என்பதே......🤣. சனம் பாலிலும் தேனிலும் முக்குளிக்கப் போகுது..........😀.
  34. வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்: கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣. கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........
  35. காணொளிக்கு நன்றி, அந்த சிங்கள ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய யாழ்ப்பாணம் எரியூடல் -1981 எனற புத்தகத்தில் யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகளை ஆவணப்படுத்தியுள்ளார், அதனை மனோரஞ்சன் தமிழாக்கம் செய்துள்ளார். குறிப்பாக ரணில் எப்படி முன்னின்று செய்யப்பட்டார் என்று விலாவரியாக கண்கண்ட சாட்சிகளுடன் தந்துள்ளார்.
  36. 👍............. வரலாறு எல்லாம் ஆராய்ந்து தான் உங்களின் புனைபெயரை தெரிந்தெடுத்திருக்கின்றீர்கள்................🤣. புத்தர் ஆரம்பத்திலேயே தெளிந்தார், அசோகன் இடையிலே தெளிந்தார், நாங்கள் போகும் வரை இப்படியே போகட்டும் என்று போய்க் கொண்டிருக்கின்றோம் போல.............
  37. ஆமாம் வன்னியன். சார். கல்லு. முள்ளு. புல்லு இல்லாத ஐந்து ஆறு நல்ல நிலம் பார்த்து பருவத்தில் உழுது விதைகளை போட்டு தண்ணீர் ஊற்றி முளைத்துவிட்டனவா என்று பார்க்க ஆறு மாதங்கள் வேண்டாமா????? 🙏🙏😂 அண்ணை இதென்ன ஒட்டமாற்றிக். .. சுயமாக இயங்கும் கத்தரிக்கோலாக இருக்கிறது பாவிக்கிரவருக்கு அதாவது உபயோகிப்பாளருக்கு வெட்டிப் போடும் வேறு கத்தரிக்கோல் இல்லையா?? 🙏
  38. அனுரா ஆட்சிக்கு வந்து சீனாவின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தால் அமெரிக்கா இந்தியாவுக்கு வேறுவழியில்லாமல் தமிழரின் பக்கம் வரலாம். இலங்கை எப்பஎப்ப எல்லாம் திமுறுதோ அப்பவெல்லாம் தமிழர்களுக்கு சார்பாக கதைத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. சுலபமாக காலடியில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடம் நிறையவே போர்க்குற்ற சாட்சியங்கள் சட்டலைட் படங்கள் என்று உள்ளன.
  39. காவல் காத்து கேரளா கஞ்சாவை மட்டும் உள்ளே அனுப்புவார்கள் 🤣🤣...போதைப்பொருள் மாபியாக்களின் முக்கிய கடத்தல் பாதையே இது தானே இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை
  40. எலே… சண்முகம், வுட்றா வண்டிய ரஸ்யாவுக்கு.... 😂 🤣
  41. இது தமிழ் ஈழத்துக்கும். பொருந்தும் அங்கே மக்களை கொன்று குவிக்க ஏன் உதவினீர்கள்.?? ஆகவே அனுபவிங்ககள்
  42. தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் இருந்த போது இப்படி நடக்கவில்லையே. பிறகேன்.. புலிகள் மீது இப்பவும் காழ்பை கொட்டுவதில் குறியாக அலைகிறீர்கள் நீங்கள் சிலர். பங்கு பிரிப்பதில்.. இந்தக் குழுக்கள் மட்டுமல்ல.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ.. தமிழர் விடுதலை கூட்டணி.. ஈபி.. என்று எந்த தமிழ் குழுவும்.. பாரபட்சமின்றி வெளிநாட்டு வீதிகளில் அடிபட்டதை காணவில்லையோ..! அது உங்கள் இனத்தின் ஜீன். புலிகளின் தவறல்ல. புலிகள் மீதான தடை அடாத்தானது.. அநாவசியமானது.. மொத்த ஈழத்தமிழர்களையும் அடிமையாக்கியது.. இதனை செய்த மேற்குலகம்.. ஏதோ ஒரு வகையில்.. ஈழத்தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்பு அநியாயத்தை செய்யவும் அடக்குமுறை கோலோஞ்சவும் தான் வழி சமைத்துள்ளன. இதில்.. உக்ரைனில்.. நேட்டோவுக்காக.. வக்காளத்து.
  43. கண்கெட்ட பின்னே சூரியனை வணங்குவது என்பது இது தான். ஜஸ்ரின் தன் நாட்டு மக்களையும் ஏமாற்றி, இவர்களை நம்பி கனடாவுக்கு படிக்க வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும் ஏமாற்றி, அடுத்த தேர்தலில் ஏற்படப் போகும் தோல்வியை தவிர்க்க இந்த முடிவை எடுத்து உள்ளார். அண்மைய மாற்றங்கள் மற்றும், தற்காலிக தொழில் அனுமதி பெறுவதற்கான கட்டுப்பாடுகள், நிரந்தர வதிவிட உரிமை பெறுவதில் ஏற்படுத்தி உள்ள புதிய கடுமையான வழிமுறைகளால் கிட்டத்தட்ட 70,000 சர்வதேச மாணவர்கள் மீண்டும் தம் நாட்டுக்கே திரும்பிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு எதிராக PEI, பிரம்டன் போன்ற பகுதிகளில் சர்வதேச மாணவர்களால், முக்கியமாக இந்திய மாணவர்களால், அதிலும் குறிப்பாக சீக்கிய மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதாவது தாம் படிக்க வந்த பின், மீண்டும் தாயகம் போக விருப்பம் இல்லாமல், இங்கேயே தங்கி விட அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதால் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தாம் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலவழித்து இங்கு வந்தமை, வெறுமனே படிக்கமட்டும் அல்ல, இங்கேயே தங்கி தம் எதிர்காலத்தை கனடிய மண்ணில் நிலை நிறுத்தவே என்று இவர்கள் சொல்கின்றனர். இந்த கனவு இனி மெய்ப்படக் கூடிய சாத்தியங்களை இந்த புதிய கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்த போகின்றன என அஞ்சுகின்றனர். தனிப்பட்ட ரீதியில் நான் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்றேன். சடுதியாக பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கி, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை, குடியிருப்பு வசதிகளை, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கக் கூடிய கட்டுமானம் (infrastructure) இல்லாமல், இவ்வாறு அனுமதிப்பது, பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. முக்கியமாக, வீட்டு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் கடும் பற்றாக்குறையை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், கும்பலாய் வந்து இறங்கியவர்களில் பலர் கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடுவதால் இவர்களுக்கு எதிரான மனநிலை குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையாக மாறி வருகின்றது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்ற அதே நேரம், உண்மையான தகமைகளுடன் , பல்லாயிரக்கணகான டொலர்களை செலவழித்து வந்த நேர்மையான, எதிர்காலத்தில் கனடாவுக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யக் கூடியவர்களும் பாதிப்படையப் போவது வருத்தத்தையும் அளிக்கின்றது. மேலும் தகவல்களை அறிய: https://toronto.citynews.ca/2024/08/26/canada-international-students-deportation-protests/ https://www.cbc.ca/news/politics/trudeau-crackdown-temporary-foreign-workers-1.7304819

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.