Leaderboard
-
island
கருத்துக்கள உறவுகள்16Points1744Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87985Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்11Points20007Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்9Points2947Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/29/24 in Posts
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர்பார்பபு.6 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே.. ஆனால் 2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்.. 2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்.. மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்.. உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்.. ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்.. அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. வாழு வாழ விடு… பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏5 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்தியாவுக்கு எதிராக எப்படியெல்லாம் கூக்குரலிட்டார்கள். இந்திய சாமான்களை விற்கவே கடைக்காரர்கள் பயப்பட்டார்கள். இப்போ இந்தியாவே இவர்களைக் கூப்பிட்டு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்கிறது.அவர்களும் யாருக்கும் எதிராக எதுவுமே இன்னமும் சொல்லவில்லை. நீங்கள் எழுதியவைகளை தமிழர்கள் மறக்கவும் கூடாது. முன்னர் புலிகள் பலமாக இருந்த காலங்களில் காலையில் எழும்பினால் இன்று என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று தமிழ்நாதத்தை புரட்டி எடுப்போம். அதே மாதிரி இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் என்பிபி என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது போல உள்ளூர மனம் சந்தோசமடைகிறது. ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும் எமது மக்கள் இவரைத் தேடிப் போவது தவிர்க்க முடியாததாகிறது.அந்தளவுக்கு எமது அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். கீழே வாட்சப்பில் வந்த ஒரு செய்தியை இணைக்கிறேன் பாருங்கள்.காலையில் எழும்பி பார்க்க பிபி தான் எகிறுது. கிளிநொச்சி நகரில் என்னதான் நடக்கிறது*!! *⭕ரணில் விக்ரமசிங்க அரசிடம் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கி அதனை பல கோடி ரூபாக்களுக்கு விற்றதாக பல தமிழ் பேசும் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது*. *⭕இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமை என்று பெயரெடுத்த சிறிதரன் எம்பியின் கோட்டைக்குள் இவ்வளவு சாராயக்கடைகள் எவ்வாறு வந்தது?* *🟣சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்*…. *A9 வீதி கிளிநொச்சி ஊடாக செல்ல வேண்டிய தேவையின் நிமித்தம் சென்ற போது. வீதி சமிக்ஞைக்கு மேலதிமாக பல பச்சை நிறத்தில் வெள்ளை எழுத்துகளால் ஆன பல பெயர்ப் பலகைகள் காணக் கண்டேன். உற்றுக் கவனித்ததில் அவை யாவும் புதிதாக திறக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் என தெரிந்தது.* *அட என்னடா இது பரந்தன் சந்தி தொடக்கம் அறிவியல் நகர் வரையிலான Bar 9 வீதியில் sorry A9 வீதியில் இத்தனை கடைகளா ? அட இவ்ளோ கடையிலும் போய் வாங்கி குடிக்க அங்க ஆக்கள் வேணுமே டா. என்னங்கடா போட்டிக்கு கடை திறந்தது போல……!* *இதில் முதலாவதாக இருப்பது Bar & Restaurant அதாவது வாங்கி அங்கேயே குடிக்கலாம். இது இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது*. *எல்லோரும் அரசியல்வாதிகளை சலுகை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க, போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி Bar ஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் எதிர்கால சந்ததிகள் அழிவடைவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்படுவதையும் பேசவில்லை*. *தேசியம் சுயநிர்ணயம் என்று சொல்லுபவர்கள், திட்டமிட்ட இன அழிப்பு என்று சொல்லுபவர்கள், கருத்துக்களை கோர்த்து அழகாய் பேசி உணர்ச்சி பொங்க பேசுபவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர இருக்கும் அறிவாளிகள், ஆய்வாளர்கள், சமுக சிந்தனைவாதிகள், அன்மீகவாதிகள் என யாருமே இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லைதெரிவிக்கவில்லை.* *யாரோ சலுகை பெற்றுவிட்டனர் என்றே குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இது எல்லா இடத்திலும் இருக்கிறது (Bar) தானே என்பார்கள்.* *ஆனால் பாடசாலைக்கு அருகில் கோவிலுக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் அமைப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை.* *மாறாக பிரதேச மக்களின் எதிர்ப்புகளே இடம்பெற்று இருக்கிறது. அடுத்தவரை குறை கூறி, சாடி பழகிவிட்டோமே தவிர எமது சமுதாயம் சீரழிந்து போவதை தடுப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. சுய லாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்று அவர்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றீர்கள்.* *இது மாற்றப்படல் வேண்டும். “இரத்து செய்யப்பட்ட அனுமதிகள்” என செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். அது செய்தி மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போலவே குறித்த மதுபான விற்பனை நிலைய நடத்துநர்கள் சிரிப்பது தெரிகின்றது.* *10 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கும் உட்பட்ட குறித்த சாலையில் எனது கண்ணில் தென்பட 14 மதுபான விற்பனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டிந்தது.* *இன்னும் எத்தனை இருக்கின்றதோ தெரியவில்லை. (உள் வீதிகளில்)* *பல்கலைக்கழகத்திற்கு அருகில் Bar & Restaurant அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது யாரும் கேட்கவில்லை எதிர்க்கவில்லை. சமுக சேவைகள் திணைக்களமும் அருகில் தான் இருக்கின்றது.* *இது கடந்து செல்லும் விடயமல்ல…..!*!😱😱😱🤔🤔🤔 வாட்சப்பில் வந்தது.5 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
யாரையும் இப்போது நம்புவது கஷ்டம், இந்த கட்டத்தில் அநுரா வந்த து கிறப்பான தெரிவு, அவரின் தமிழ் ஆளுரின் தெரிவு அதைவிட சிறப்பு, எம்மைவிட இந்தியா மேற்குலகுதான் இவரை உன்னிப்பாக கவனிக்கின்ற போகின்றார்கள், அதற்குமுன் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்5 points
-
உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் - பிரதமர்
படிப்பது என்பது பரீட்சையில் பாஸ் பண்ணுவதற்குத் தான் என்பதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும். எங்களால் பரீட்சையில் நல்ல புள்ளிகளை பெற முடிகிறது ஆனால் வேலையில் அதன் பெறுபேறு தெரிவதில்லை. தெற்காசியா மாணவர்கள் எழுதுப் பரீட்சைகளில் திறம்பட செயல்படுகின்றர்கள் ஆனால் critical thinking, research, trouble shooting போன்ற விஷயங்களில் நாம் பின்னடைவு, புதுக் கண்டு பிடிப்புகள் வராமைக்குக் காரணம் பரீட்சையில் 90+ எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் தான்.4 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனாலும் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை தவற விட முடியாது. தற்போது இலங்கையில் இட்பெற்றிருக்கும் மாற்றம் எம் வாழ்நாளில் தற்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான வகையில் பாவிக்க வேண்டும். சிங்களத்தின் பிற்போக்குவாதிகளும் தமிழ்ப் பிற்போக்குவாதிகளும் தங்களுக்குள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள்.4 points
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
வரலாறு முழுவதும் விநோதங்கள் பல. என் இடதுசாரித் தோழர்கள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் (ML) கட்சித் தோழர்கள், எந்தப் பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பார்கள். ஆனால் ML சார்பான JVP அக்காலத்திலேயே, எனக்குத் தெரிந்த வரை, சிங்களப் பேரினவாதக் கட்சி என்றே பெயரெடுத்துள்ளது. இன அழிப்புக்கு ஆட்பட்ட யூதர்கள் தாங்களும் வெறித்தனமாக இன அழிப்பில் ஈடுபடுவது வரலாற்று விநோதத்திற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. அதுவும் தங்களை அழிக்க முற்பட்டவர்களை அல்ல, வேறு ஒரு இனத்தை - தற்காப்பு என்ற பெயரில். அதிலும் கூட தங்களுக்குப் புகலிடம் தர ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத ஒரு இனத்தை.4 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது. இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அநுரவைக் கதாநாயகன் எனும் நிலைக்கு உயர்த்திவைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சிக்கு தாமே முன்னின்று வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆனால், இவர்கள் எல்லோரும் எளிதாக மறந்துவிட்ட இன்னொரு பக்கம் ஒன்று இக்கட்சிக்கும் இன்றிருக்கும் அதன் தலைவருக்கும் இருக்கின்றதென்பதை இவ்விளைஞர்களுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம். நன்கு கட்டமைக்கப்பட்ட சிங்கள இனவாதமும், தமிழரின் இருப்பிற்கெதிரான இக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், தமிழரின் சரித்திரத்தை மாற்றியமைப்பதில் இக்கட்சி செயற்பட்டு வரும் விதமும் இதுவரை இலங்கையை ஆண்ட ஏனைய பெளத்த சிங்களக் கட்சிகள் எவற்றிற்கும் இக்கட்சி சளைத்தது இல்லை என்பதையே காட்டுகிறது.. ஆகவே இக்கட்சி பாராளுமன்றத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய காலத்திலிருந்து அக்கட்சியினால் தமிழருக்கெதிராக செய்யப்பட்ட சில நடவடிக்கைகளை நான் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழ்நெட் இணையத்தளம் மற்றும் சங்கம் இணையத்தளம் ஆகியவற்றிலிருந்தே நான் இத்தகவல்களை பெற்றுக்கொண்டேன் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறேன். தமிழர்களுக்கு வழங்கப்போகும் தீர்விற்கெதிராக வடக்குக் கிழக்கில் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்யப்போகும் மக்கள் விடுதலை முன்னணி - 1997 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியினால் தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கிறார். சிங்கள கிராமப் புறங்களில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் போரில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளால் அவர்கள் அடைந்துவரும் ஏமாற்றம் ஆகியவற்றை பிரச்சாரப் பொருளாக்கி இக்கட்சி அண்மைய தேர்தல்களில் குறிப்பிடத் தக்களவு வெற்றியினைப் பெற்று வருகிறது. தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்க சந்திரிக்கா தயாராகி வருவதாகக் கூறி சிங்கள மக்களிடையே இனவாதம் கக்கும் பிரச்சாரத்தை கடந்த வாரம் சிங்களவர்களின் மதக் கலாசார தலைநகர் என்று போற்றப்படும் அநுராதபுரத்தில் இருந்து இக்கட்சி ஆரம்பித்து வைத்தது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை எக்காரணம் கொண்டும் வழங்கிவிடக் கூடாது எனும் கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைத்து, தமிழருக்கெதிரான சிங்களவரின் இனவுணர்வைத் தூண்டிவரும் இக்கட்சி, சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தமிழரின் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிப் பிராந்தியத்தின் பொலீஸ் மா அதிபராக பிரபாகரன் நியமிக்கப்படப்போகிறார் என்றும் கூறிவருகிறது. தனது கட்சியில் இனவாதம் இல்லையென்று கூறிவரும் இக்கட்சி, தமிழர்களுக்கென்று தனியான இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென்றும் இருப்பது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் என்றும் கூறிவருகிறது. மேலும் தென்னாசியாவை துண்டாட அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ போட்ட திட்டம்தான் தமிழர்கள் கோரிவரும் ஈழம் எனும் தனிநாடு என்றும் அது கூறுகிறது. ஸ்டாலினினது மார்க்ஸியச் சிந்தனைகளைப் பின்பற்றும் இக்கட்சி, தமிழர்களிடையே காணப்படும் சாதிய வேற்றுமைகளே அவர்களுக்கான ஒரே பிரச்சினை என்றும், அவர்களுக்கென்று இனரீதியிலான பிரச்சினைகள் கிடையாது என்றும் கூறி வருகிறது. "எமது நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆசீருடனே ஜே வி பி போன்ற இனவாதிகள் எமது பிரதேசங்களுக்கு வந்து எமக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று வெளிப்படையாகக் கூறமுடிகிறது, புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று தம்மை அழைக்கும் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத சிங்கள இனவாதிகள் தான்" என்று திருகோணமலையில் வசிக்கும் இடதுசாரித் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த நியாயமில்லை. அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே! குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝ ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....? இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கையில் இனபிரச்சனை தீர்க்கப் படக் கூடாது என்று நினைத்து செயல்படும் இரண்டு கூட்டங்கள் உள்ளது. அதில் முக்கியமானது தமிழ் வெறியேற்றி பிள்ளைகளைக் கொலைக்களம் அனுப்பும் கூட்டம். அந்தக் கூட்டம் பின்வரும் பண்புகளைகளை முழுதாகவோ பகுதியாகவோ கொண்டிருக்கும் 1) உள்ளே மறைந்துள்ள கடும் இந்திய விசுவாசம் 2) தமிழர்கள் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் 3) சாதிய அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை, அதனை மேற்கொள்ள தமிழ்வெறி முலாம் பூசும் தன்மை 4) சிங்களாவரோடு சேர்ந்தால் இன்னொரு தமிழனை அடக்கி ஆள முடியாது என்னும் உயர் சாதி மனோபாவம் 5) திருத்தவே முடியாத இந்து மத வெறி 6) ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை அற்ற மேற்புல் மேயும் நிலை 7) திமுக கருணாநிதி அண்ணா ஆகியோரிடம் வன்மம் 8) குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் ஜனநாயகம் அற்ற தன்மை3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள். ‘இனவெறியன்’ என்று சொல்லும் போதே இந்தப் பதிவின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது. உண்மையைத்தானே பதிவிடுகிறார் என்றால், ஜனாதிபதித் தேர்தலிலேயை இவைகளைப் பதிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் அனுரா சொன்னதுக்கு எதிராக ரணில் கேட்டபோதவது போட்டிருக்கலாம். இந்த இடத்தில் சுமந்திரன் ஏன் சுஜித்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்த்திருந்தார் என்பதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்து விடுகிறது. சுமந்திரன் மட்டும் அனுராவை (நேரடியாக) ஆதரித்திருந்தால், சங்கு மட்டுமல்ல முரசும் அடித்திருப்பார்கள். சுமந்திரனின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும் “பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்” இல் வந்துவிடப் போகிறது. இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம். வெண்ணை திரண்டு வர எப்பொழுதும் வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே நாங்கள் சட்டியை உடைத்து விடுவோம்.3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்? வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட. சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம். திரிக்கு நன்றி ரஞ்சித்.3 points
-
யாழ்கள நல்லுள்ளங்கள் கவனத்திற்கு
3 pointsஉடையாருக்கு எனது நன்றிகள் புதிய காணொளி உங்கள் கவனத்திற்கு https://fb.watch/uV2pEeoAN3/3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம் பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன. அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக காட்டும் இந்த ஈனத்தனம். சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.3 points
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
3 points
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார்.3 points
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியதாக இருக்க வேணும் மத்திய அரசாங்கம் தேவையில்லாமல் தலை போடாமல் இருக்க வேண்டும்...தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்த வேணும்....சோசலிச கொள்கையை அவர் சுதந்திரமாக கடைப்பிடிப்பது போல தமிழ் தேசியத்தை தமிழர்கள் பின் பற்ற விட வேண்டும்2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள். அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள். என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான்.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சிங்கள அதிகாரவர்க்கத்தில் கடுமையான இனவாதிகள் இருக்க வேண்டும் என்ற விருப்பில் எப்போதுமே உள்ள தமிழர் தரப்பு செய்த தூண்டுதல்கள், தவறுகள் பலவற்றை இங்கு கூறினால் ஐயோ பழசை கிளறுகினான் என்று ஒப்பாரி வைப்பவர்களும் தாங்களே! கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜஸ்ரின் சில பழைய விடயங்களை ஆதாரத்துக்காக சுட்டிக்காட்டியபோது அவர் அவர் கூறிய வரலாற்று உண்மையை மறுக்க முடியாமல் போனதால் அவர் தேவையற்று பழசு காவி திரிவதாக கூறியவர. தாங்கள் என்பதை மிக சீக்கிரமே மறந்து விட்டீர்கள். ஜஸ்ரின் மிகசிறப்பாக கூறினார், வரலாற்றில் நடந்த பலவற்றை சுட்டிக்காட்டும் போது பூனைப்பாதங்களால் மொள்ள கள்ள மௌனத்துடன் கடந்து போக விரும்புபவர்களே வரலாற்றை நினைவு கூருகிறோம் என்ற போர்வையில் இன குரோதத்தை இலங்கையில் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள்.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும் குரோதத்தையும் விதைப்பது சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை. முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது. அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய அரசியல்வாதிகள் இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.2 points
-
உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் - பிரதமர்
அப்படி ஒரு நிலைமை முன்னர் இருந்தது. எனது தந்தை கல்விகற்ற கல்லூரியில் ஆபிரிக்க நாடுகளில் இருந்தெல்லாம் வந்து கல்வி கற்றிருக்கிறார்கள.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
2 points
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி அதற்கெதிராக அநுர நடவடிக்கை எடுக்கப்போய் அதில் தமிழ் மக்கள் இறக்க வேண்டும் தாம் அதை வைத்து வெளிநாடுகளில் புலம்பி அரசியல் வியாபாரங்களை தொடரவேண்டும் என்பதே இந்த சுயநல கும்பல்களின் நோக்கம். அதற்காகவே கடந்த சில நாட்களாக அநுரவுகெஉ எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பழைய பட்டறிவுகளை வைத்தை மக்கள் தெளிவடைந்து இவர்களின் இந்த அயோக்கியத்தனம் ஈடாறாமல் இனவாதம் ஒழிந்த நாடாக தமிழ் மக்கள் அங்கு மகிழ்வாக வாழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points- சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
நானும் இதே எண்ணத்திலேயே இருக்கிறேன். இதிலே இரட்டை வேடம் போட்ட பலரை வெளியே கொண்டுவர முடிந்துள்ளது. ரஞ்சித் நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள். சிறி அடுத்துவரும் தேர்தலில் தமிழர் பகுதிகளில் என்பிபியும் கணிசமான ஆசனங்களை எடுக்கப் போகுது.2 points- ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும். இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள்2 points- சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
இதுவொரு புதிய ஆரம்பம் என நினக்கின்றேன். ஆளும் புதிசு ஆட்டமும் புதிசாய் இருக்கக்கூடும்.😁 இரு பெரும் கட்சிகளின் ஏமாற்று வேலைகளை பார்த்து அழிந்து விட்டோம். இலங்கை அரசியலில் புதிய முகம். என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம். எதுவும் கெட்டு விடாது. அடுத்த நான்கு வருடங்கள் காத்திருப்போம்.2 points- பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.
யாழ்களத்தில் இரத்த கொதிப்புள்ளவர்கள், இதய பலவீனமானவர்கள் உட் புக வேண்டாம் என ஒரு எச்சரிக்கை பகுதி ஆரம்பிக்க வேண்டுமென கள நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். 😎 ஏனெண்டால் உலக அரசியல் நிலவரங்கள் அந்தமாதிரி குண்டக்க மட்டக்கவாய் போகுது 😂1 point- உலகின் பழமை வாய்ந்த மொழி எது?
1 pointமுற்றிலும் உண்மை. அதிக அமெரிக்கர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கின்றதென்றே தெரியாது. ஏன் அவர்கள் தோழமை நாடுகளான ஐரோப்பாவில் என்ன நடக்கின்றது கூட தெரியாது. உதாரணத்திற்கு நாடுகள் எந்த கண்டத்தில் அமைத்திருக்கின்றது என்பதை கூட சொல்ல மாட்டார்கள். இது ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றில் பார்த்து அறிந்தது.1 point- இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
கரப்பான் பூச்சியை அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎 அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂 போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை . நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது . அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?1 point- சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
உண்மை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராகவே ஜேவிபி நின்றுள்ளது. ஆனால் இன்று இலங்கை தமிழ் பிரதேசங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் நடைபெறுகின்றது. 21 ம் திகதி தேர்தல் வரை தன்மான தமிழனாக நாம் தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன்ரனுக்கே வாக்களிப்போம் ஒரு சிங்களவனுக்கும் எமது வாக்கை வீணாக்க மாட்டோம், சிங்களவன் எமது இடத்தில் எப்படி வாக்கு கேட்க முடியும் என்ற தமிழர்கள் தேர்தல் முடிவு வந்ததில் இருந்து ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவை தங்கள் தவைராக ஏற்று கொண்டதோடு இவர் இவ்வளவு நல்லவர் என்று தெரிந்திருந்தால் இவருக்கே வாக்களித்திருப்போமே தவறு செய்துவிட்டோம் என்கின்றனர்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
//பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள் அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்// இந்த கருத்து இத்திரிக்குள் ஏன் வர வேண்டும்???1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம். அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்? நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில் உங்களைப் போல எனக்கும் தேவை இருக்கிறது.1 point- உலகின் பழமை வாய்ந்த மொழி எது?
1 pointஉலகில் geographic அறிவு கொஞ்சமும் அற்ற சனங்கள் வாழும் நாடு அமெரிக்கா.1 point- இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும் - என்.வி.சுப்பிரமணியம்
29 SEP, 2024 | 07:06 PM இலங்கை கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (28) ஊடகங்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும். எமது நாட்டிலே உள்ள கடற்படையையும் அரசாங்கத்தையும் குறை சொல்வதை விட்டுவிட்டு வெளிநாட்டு அமைச்சு இணையதளத்தில் இருக்கின்ற அந்த சட்டத்தை படித்துவிட்டு அதற்கு தகுந்தாற் போல் செயல்பட வேண்டுமே தவிர, தமிழ்நாட்டு மீனவர்களை காலத்திற்கு காலம் ஏமாற்றுவதை போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் ஒரு கவலைக்குரிய விடயம். இதனை அறியாத தமிழ்நாட்டின் மீனவர்களும் உங்களை நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள் என்றார். https://www.virakesari.lk/article/1950671 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சோசல் மீடியாக்களில் இப்போது இது தான் நடக்குது எம்மவர்கள் பழசை மறந்து நாட்டை கட்டி எழுப்புவதில் இருந்து ஒற்றுமையை தான் விரும்புகினம் இளையதலைமுறை பிள்ளைகள் அனுரா பின்னால் போவத கண் கூடா பார்க்க முடியுது முல்லைதீவு மக்கள் அனுரா புகழ் பாட ஆரம்பித்து விட்டினம் பட்டு நுந்ததுகளுக்கு தான் அதன் வலி தெரியும் அதுகள் இனியாவது நின்மதியாய் வாழட்டும் இதுக்கை இன்னும் எழுதினால் எனக்கும் கல் எறி அதிகம் விழும் இதோட நிறுத்துகிறேன்...........................1 point- உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் - பிரதமர்
முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு…. பிரேமதாசவையும், பியதாசவையும் எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுக்க வேண்டும். 😂 தொலை பேசிக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாத சனம் கொஞ்சம் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. 🤣1 point- கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
1 pointமுதலில் தமிழரசுக் கட்சியில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவின் இனவன்மம் தொடரும்.....1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது. சிங்கள, தமிழ் இனவாதிகளால் கடந்த 75 ஆண்டுகளாக சிதைவடைந்துவரும் தமிழ் மக்களின் வாழ்க்கை இனியும் இந்த இரு பகுதி இனவெறியர்களால் சிதைவடைய அனுமதிக்க கூடாது.1 point- கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
1 pointநல்ல கைராசி. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் போச்சுது. 😂1 point- கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
1 pointபிரிந்தவர்கள் வந்து இணையுங்கள். இல்லாவிட்டால் வழக்கு போடுவேன்னு என்று சொன்னால் பயந்து வந்து இணையலாம் 😂🤣 சுமததிரனின். பழைய கட்சி ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது சுமததிரனின். இப்போதைய கட்சி தமிழரசு கட்சியும. அழிந்துவிடும் அடுத்த பொது தேர்த்தலுடன். 11. ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக. வந்து விட்டது இதுக்கு வழக்கு போடவில்லை 🙏1 point- கருத்து படங்கள்
1 point1 point- கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
1 pointஒன்றாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை... கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர் தான் சுமந்திரன். ஜனாதிபதி தேர்தலுடன்... மக்கள் அவர்களுக்கு கொடுத்த அடியுடன் மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும், "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா? இப்போ.... இருந்த பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக இருக்கலாம். மக்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல. "இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂1 point- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
ஒன்றாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை... கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர் தான் சுமந்திரன். ஜனாதிபதி தேர்தலுடன்... மக்கள் அவர்களுக்கு கொடுத்த அடியுடன் மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும், "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா? இப்போ.... இருந்த பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக இருக்கலாம். மக்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல. "இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂1 point- சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
தமிழர் நலன் சார்ந்து தமிழ் கட்சிகள் செயற்படுவார்கள் என்று அவர்களை பாராளுமன்றம் அனுப்பினால்… தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியோ, காணாமல் போனவர்கள் பற்றியோ, தமிழர்களின் எதிர்கால இருப்பு பற்றிய எதுவித அக்கறையும், அடுத்த நகர்வும் இல்லாமல்… அவர்கள் தமது சுய தேவையை பூர்த்தி செய்ய சிங்களத் தலைவர்களுடன் ஒட்டி உறவாடும் போது… இவர்களை… சிங்கள கட்சிகளிடம் “புறோக்கர்” மாதிரி செயல் பட மேலும் அனுமதிக்காமல், நேரடியாகவே தமிழ் மக்கள்…. சிங்கள கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமது தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்த வழி. தற்போது இருக்கும்… “சீழ்” பிடித்துப் போன தமிழ் தலைமைகளை தமிழ் அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அப்புறப் படுத்தாவிடில், தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி தான்.1 point- சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின் இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது. இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.1 point- ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
அங்கேயும் சிவப்பு ஆட்சி எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்1 point- ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான். இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான்.1 point - அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.