Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1488
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/01/24 in Posts

  1. எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
  2. நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும் போட்டியை நடாத்துகிறேன்.
  3. 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇
  4. கண்ட கண்ட இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று கொச்சைப் படுத்தி, கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள். நன்றி. 🙏
  5. எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன் . ..........! 😂
  6. ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்??? நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல் வாசித்து உள்ளேன். சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான் அதில் உள்ள வசனங்கள். ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏 குர் ஆன் னும் வாசித்து உள்ளேன் இடையில் விட்டுவிட்டேன் ஒரு பகுதியில் கழுதையில். பலவனத்தில். போகும் போது கூட ஆண் விரும்பினால் பெண் உடலுறவுக்கு உடன்பட வேண்டும் என்று இருந்தது அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால் வாழ்க்கையும். அப்படி தான் இருக்க முடியும் 🙏🙏🙏
  7. அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு. அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் ஒரு தொகை பணம் திறைசேரியில் இருந்து (பாராளுமன்றத்தினூடாக) ஒதுக்கப்படும். டக்கியை தவிர வேறு எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை செலவழிப்பது இல்லை என்று. ஏனெனில் அவ்வாறு செலவழித்தால், சிங்கள அரசிடம் இருந்து பணத்தை பெற்றார்கள் என்று சொல்லி, துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயத்தினாலாம். எனவே ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி, மீண்டும் திறைசேரிக்கே சென்று விடுமாம். அவர் சொன்னதில் எத்தனை வீதம் உண்மை என்று தெரியாது.
  8. யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀 (மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)
  9. சுமந்திரன்.... இதனை "இதய சுத்தியுடன்" சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன் வெளியேறி போட்டியிடாமல் விட்டால், மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள். அவர் கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... இவரின் நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  10. பா.அரியனேந்திரனவர்களையே வறுத்தெடுத்தவர்கள் இளையோரை விடுவார்களா? இந்து முதலைகளை அமுக்கி முன்னோக்கிப் பாயும் பலம் உள்ளதா? தமிழரசியல்வாதிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாதுவைத்திருப்பதே தமக்கெதிராக யாரும் எழுந்தவிடக் கூடாது என்ற நன்னோக்கிலேயானபின்னர் மக்களை அணிதிரட்டி .... அல்லது துணிவோடு தற்போது ஒரு இளையோர் அணி வட-கிழக்கெங்கும் களமிறங்கிப் போட்டியிட்டு அதைவைத்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகள் மக்களுக்குத் தெளிவுபடுத்திச் சாதிக்க முயலவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது!
  12. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. ஞாயிறு அன்று போயிருந்தேன், அண்ணை. 3.83 என்று இருந்தது. நம்ப முடியவில்லை. 'கனவா.......... இல்லை காற்றா..........' என்று தான் இந்த ஒரு மாதமும் இருந்தது. எங்களின் கனவுகளுக்குள்ளும் ஏவுகணைகளை விட்டிட்டார்களே............🤣.
  14. 12 நிமிடம் எடுக்கிறதென்றால் 515 மைல்/மணி வேகம். இது போயிங் 747 இன் உச்ச வேகமான 600 மைல்/மணியை விடக் குறைவாக இருக்கே? முறிகண்டியில் நிண்டு ரீ யெல்லாம் குடிச்சு விட்டு வந்திருப்பாங்களோ😂?
  15. அட்ரா ..அட்ரா😂! அருமையான வசனங்கள், சொற்கள் - ஆனால் இந்த சொற்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தமென்று ஒரு சொற்களஞ்சியமும் - Glossary சேர்த்து வெளியிட்டால் மக்களுக்கு வசதியாக இருக்கும்! பொதுக்கட்டமைப்பு என்று ஆரம்பித்த போதே backroom players ஆக இருக்கும் பலருக்கு "பாராளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டு ஆசை" வந்து விட்டது என்ற சந்தேகம் இருந்தது, இப்ப உறுதியாகி விட்டது!
  16. நிலாந்தன் மாஸ்டர் நல்ல வடிவா எழுதியிருக்கிறார்😂 போத்தில் சின்னம் கிடைத்தால் வெல்லலாம்!😂
  17. மூஞ்சூறு தான் போக வழியை காணவில்லை. விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போன மாதிரி மற்றவர்களையும் அழைக்கின்றாராம். நல்ல பகிடியாய் இருக்கு. 😂 சிலரின் நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது. 🤣
  18. தமிழரசுக் கட்சிக்கு இந்தமுறை தான் கடைசித்தேர்தல். இத்துடன் இந்த கபடி விளையாட்டுகள் முடிவுக்கு வரும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல ...
  19. சுன்னாகத்திலுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களுக்கு பாவித்து மாற்றிய கழிவு ஒயில் பாதுகாப்பான முறையில் சேமித்து(நேரடியாக மண்ணுக்குள் சேரவிடப்பட்டதாக) அகற்றப்படவில்லை என்பது தான் நான் அறிந்த செய்திகள். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வழங்கப்படும் சலுகை என நினைக்கிறேன் அண்ணை. மேலதிக விபரங்கள் தேடிப் பார்க்கிறேன்.
  20. நீங்கள் சொல்வது சரியே........ அவர் இங்கு ஏதாவது சிகிச்சை முடித்து அதன் பின்னரே சைக்கிள் ஓடினாரா அல்லது அந்த சைக்கிள் ஓட்டமே சிகிச்சையின் ஒரு பகுதியா என்று தான் சொல்ல வந்தேன். அந்தச் சைக்கிள் கூட கொஞ்சம் புதுமையாக ஓடியது. அதுவாக ஓடியது போலவே இருந்தது........... ஒரு EV போல ஓடியது....😀.
  21. இனி ரஜனி…. இட்லி சாப்பிட்டார், இடியப்பம் சாப்பிட்டார் என்று எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப் போறதை நினைக்கத்தான் வயித்தை கலக்குது. 😂 இன்னும் ஒரு கோஷ்டி… ரஜனி நலம் வேண்டி மண்சோறு சாப்பிடும். கொஞ்சக் காலத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கப் போகுது. 🤣
  22. Bar Licence டீலில் ஈடுபட்ட எம்.பி.க்களின் பெயர்கள் நாளை மறு தினம் 03.10.24 அன்று, வெளியிடப் படும் என NPP யின் பிரதான செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த முடியவில்லை.
  23. இந்த சனம் மட்டுமல்ல பருத்தித்துறையில உள்ள கனபேர் இப்ப NPP பக்கம் மாறி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கணிசமான வாக்குகள் போய்விட்டது. பழைய JVP அனுபவங்களாள் நான் உட்பட அனுரவை விரும்பவில்லை. ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து இனவாதத்தை கையில் எடுக்காமல் ஐனாதிபதியாவது லேசுப்பட்ட விடயமில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம்.
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆம்பர் டான்ஸ் பதவி,‎ 1 அக்டோபர் 2024, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன? நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக்டீரியாக்களை உண்ணக்கூடிய நுண்ணுயிரிகளின் தொகுப்பு. மனித செரிமான மண்டலத்திற்குள் இத்தகைய வைரஸ்கள் பில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் இருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் ஃபேஜியோம். இந்த ஃபேஜியோம் தொடர்பான அறிவியல் புரிதல் சமீபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் கொலராடோ அன்சுட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாக்டீரியாலஜிஸ்ட் ப்ரெக் டியூர்காப். அவற்றின் மகத்தான பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சரியான பாக்டீரிய உண்ணி வைரஸை, அதாவது ஃபேஜை (phage) பயன்படுத்தினால் அல்லது குறிவைத்து சிகிச்சை மேற்கொண்டால், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். “பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமே இருக்கும்” என்று ஸ்டான்ஃபோர்ட் மெடிசனின் தொற்றுநோயியல் மருத்துவரும் ஆய்வாளருமான பால் பொலிக்கி கூறுகிறார். ஆனால், இப்போதைக்கு மனித குடல் நாளப் பகுதியை எத்தனை பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் ஆக்கிரமித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒன்று அல்லது அதற்கும் குறைவாக இவை இருக்கக்கூடும். பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் நபருக்கு ஏற்ப மாறுபடுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸின் மரபணுக்களை கொண்ட பாக்டீரியாக்களும் குடலில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸ்களை தீவிரமாக உற்பத்தி செய்யவில்லை. அந்த பாக்டீரியாக்களின் மரபணுத்தொகுதியில் பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் டி.என்.ஏ.களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இன்னும் நிறைய அடையாளம் காணப்படாத ஃபேஜ்கள் இருக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஃபேஜியோமின் “இருண்ட பொருள்” என்று அழைக்கின்றனர். இது வரையிலான ஃபேஜ் ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி, இந்த வைரஸ்கள் மற்றும் அவை சார்ந்து வாழும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதாக இருந்துள்ளன. நல்ல ஃபேஜ்களின் தரவுத்தளத்தில், சுமார் 1,40,000க்கும் மேற்பட்ட ஃபேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட அளவுதான். அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழக கல்லூரியின் நுண்ணுயிரியலாளர் கொலின் ஹில், "பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் பன்மைத்துவம் அசாதாரணமானது” என்கிறார். விஞ்ஞானிகள் மனித மலத்தின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு வரிசைகளைப் பிரித்தறிவதன் மூலம் இந்த ஃபேஜ் வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள். அதில்தான், ஆய்வாளர்கள் க்ராஸ்ஃபேஜ் (crAsspage) எனப்படும் குடலில் காணப்படும் மிகப் பொதுவான ஃபேஜ் குழுவைக் கண்டறிந்தார்கள். குடலில் பொதுவாகக் காணப்படும் க்ராஸ்ஃபேஜ்கள் மனித ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை குடல் பாக்டீரியாவின் பொதுவான குழுவாக அறியப்படும் பாக்டீராய்டுகளை (Bacteroides) பாதிப்பதால், அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறார் ஹில். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீராய்டுகளை பாதிக்கும் பிற பொதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் குபாஃபேஜ் (குடல் நாள பாக்டீராய்டுகளை தாக்கும் ஃபேஜ்) மற்றும் லோவிஃபேஜ் (பல வைரஸ் மரபணுக் கூறுகள்) ஆகியவை அடங்கும். இத்தகைய பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் தொகுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நுண்ணுயிரியல் துறையின் 2023ஆம் ஆண்டு மதிப்பாய்வில் (2023 Annual Review of Microbiology) ஹில் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் விவரித்ததன்படி, வயது, பாலினம், உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் பொறுத்து, இந்தத் தொகுப்பில் மாற்றங்கள் இருக்கும். வைரஸ் - பாக்டீரியா உறவு ஃபேஜ் எனப்படும் இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாவை பாதித்து, சில நேரங்களில் அவற்றைக் கொல்கின்றன என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி, வைரஸ், பாக்டீரியா இடையே விவரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலான உறவு இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “நாங்கள் முதலில், ஃபேஜ்களும் பாக்டீரியாக்களும் சண்டையிடுகின்றன என்று நினைத்தோம். ஆனால், அவையிரண்டும் எதிர்த்திசையில் இருக்கும் அதேவேளையில், ஒன்றுக்கொன்று நல்லுறவையும் பேணுகின்றன.” புதிய மரபணுக்களை கொண்டு வருவதன் மூலம் ஃபேஜ்கள் பாக்டீரியாவுக்கு பயனளிக்கின்றன. ஒரு பாக்டீரிய உண்ணி வைரஸ் துகள் ஒரு பாக்டீரியாவுக்குள் ஒன்றிணையும்போது, அந்த வைரஸ் சில நேரங்களில் அதன் புரதக்கூட்டிற்குள் அதன் சொந்த மரபணுப் பொருட்களுடன் சேர்த்து பாக்டீரியாவின் மரபணுக்களையும் அடைத்து வைத்துக்கொள்ளும். பின்னர், அந்த மரபணுக்களை ஒரு புதிய ஒம்புயிரி (Host) பாக்டீரியாவாக மாற்றுகிறது. இப்படி தற்செயலாகத் தனது புரதக்கூட்டில் அது சேகரித்த மரபணுக்கள் உதவிகரமாகவும் இருக்கும் என்கிறார் டியூர்காப். ஏனெனில், அவை ஆன்டிபயாடிக் பொருட்களுக்கு எதிர் செயலாற்றும் திறனையும், ஒரு புதிய பொருளை ஜீரணிக்கும் திறனையும் குடலுக்கு வழங்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாக்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரத்தில் அவற்றைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஹில் கூறுகிறார். பாக்டீராய்டுகள் எனப்படும் பாக்டீரியாக்கள், தங்கள் வெளிப்புற மேற்பரப்பில் பல வகையான பூச்சுகளைக் கொண்டுள்ளன. இந்தப் பூச்சுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பது மற்றும் செரிமான மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகல் இருந்து பலவாறான நன்மைகளை செய்கின்றன. ஆனால், “க்ராஸ்ஃபேஜ் வகையைச் சேர்ந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இந்தப் பூச்சுகளை அடையாளம் கண்டுவிடக்கூடும். ஆகையால் பாக்டீராய்டுகள் தங்கள் வெளிப்புற பூச்சுகளைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது,” என்கிறார் ஹில். இதன்விளைவாக, குடலில் வெவ்வேறு வகை வெளிப்புற பூச்சுகளைக் கொண்ட பாக்டீராய்டுகள் உள்ளன. அதோடு, குடலின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வகையிலும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இவற்றின் எண்ணிக்கை அமைகின்றன. வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எல்லை மீறிப் போகாமல் பாக்டீரிய உண்ணி வைரஸ்களான ஃபேஜ்கள் தடுக்கின்றன. நம் உடலிலுள்ள குடல் நாளம் காடுகளைப் போன்ற ஒரு சூழலியல் அமைப்பைக் கொண்டது. ஒரு காட்டில் வாழும் புலிகளும் ஓநாய்களும் எப்படி மான்களை வேட்டையாடுமோ, அதுபோல, ஃபேஜ் வைரஸ்கள் பாக்டீரியாக்களை வேட்டையாடுகின்றன. காட்டிற்கு புலிகளும் ஓநாய்களும் எப்படித் தேவையோ, அதேபோல, நம் குடலுக்கும் இந்த ஃபேஜ்கள் தேவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இதில், வேட்டையாடிக்கும்(ஃபேஜ்கள்) இரைக்கும்(பாக்டீரியாக்கள்) இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும்போது, நமது செரிமான மண்டலத்தில், குடல் அழற்சி(IBS), குடல் எரிச்சல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடலில், வைரஸ்களின் பன்மைத்தன்மை குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குடல் நாள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேணுவதற்காக, அதற்கேற்ற உணவுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுவார்கள். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மருத்துவரீதியாக மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பாக்டீரிய உண்ணி வைரஸ்களை சமாளிப்பது மருத்துவத்தில் மிகவும் நேர்த்தியான அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஹில் கூறுகிறார். அதாவது, வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களை விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இல்லாமல் போனால், “சில வகையான பாக்டீரியாக்கள் குடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அதனால், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல் வாயுப் பிரச்னை மற்றும் வயிறு வீக்கம் ஏற்படலாம்.” ஆகவே, நம் குடலின் சூழலியல் அமைப்பை நிர்வகிக்கும் டிரில்லியன் கணக்கான இந்த ஃபேஜ்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvynzlln95o
  25. ரணிலின் BAR LICENCE " சற்றுமுன் உண்மையை போட்டுடைத்த விக்ணேஸ்வரன்
  26. பையா.... அந்தப் பெயரை வைத்தால்தான், சந்தேகப் பட மாட்டார்கள். "படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என்ற மாதிரி இருக்கு இவர்களின் செயல்கள். 😂
  27. மன்னார் மக்களுக்கு வாழ்த்துக்கள். இதே முன் மாதிரியை மற்றைய மாவட்ட மக்களும் பின் பின்பற்ற வேண்டும்.
  28. அண்ணை இந்த நிதி பெரும்பாலும் பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை ஊடாகத் தான் செலவழிக்கப்படுகிறது. அவர்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே நிதி விடுவிக்கப்படும். இதில் பா.உ கள் கையாடல் செய்வது கடினம்.
  29. இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களது வாக்கு உரிமையை தமிழ் தலைவர்களுக்கு அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? இல்லை தமிழ் தலைவர்களால். தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள். தமிழ் மக்களுக்கு சொல்லாமல் முறைப்படி அறிவிக்காமல் பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும் இல்லையா?? இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது?? ஆகவே நேரடியாக அனுரவுக்கு வாக்கு போட வேண்டியது தான் 🙏👍
  30. இன்று 30ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  31. விக்கியின் நிலைமை பரிதாபமாக உள்ளது, பெயரை நல்லா டேமேஜ் பண்ணீட்டாங்கள். சந்தானத்தின் நகைசுவை மாதிரி போய்விட்டது " அவனவன் பத்து பதினைந்து பார்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறாங்கள், ஒரேயொரு பார் லைசென்ஸ் ஐ கொடுத்துவிட்டு நான் படுகிற பாடு இருக்கே" என்பதுபோல அவரின் நிலைமை .
  32. மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும். பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள். தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது. அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.
  33. ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான் ஒரு முழு சிங்கள இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃
  34. சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட அனுரகுமார திசாநாயக்காவே இப்போது அவர்கள் தலைவராக ஆகிவிட்டார் அவர்களின் தலைவரே அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
  35. அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார். எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  36. பாராளுமன்றம் சென்று கதிரையில் நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்... சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்
  37. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி
  38. உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை...தற்பொழுது உள்ள தமிழ் தேசிய தூண்கள் சோசலிஸ்ட்கள் அல்ல முக்கியமாக தமிழரசு கட்சியினர் ...பக்கா முதாலாளித்துவ சிந்தனையாளர்கள் ...(ஆகவே தான் இந்தியா இவர்களை உற்சாகப்படுத்துகின்றது... ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒற்றுமாயாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புகின்றனர்)... ஏனைய முன்னாள் போராளிகளின்(பாராளுமன்றம் சென்ற) தமிழ் தேசிய கட்சிகள் அன்று சோசலிசம் பேசினார்கள் இன்று அவர்களும் வெள்ளைவேஸ்டி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர்... இளைஞர்கள் வரவேண்டும் சிறிலங்கா தேசியத்தில் தமிழ் அடையாளத்தை (நிலம் மொழி,)இழக்காமல் சோசலிச அரசியல் செய்ய வேண்டும் .... திருகோணமலையில் ஒர் இளைஞனின் (ராஜ்குமார் ரஜீவ்காந்த் ...பெயர் சரியா தெரியவில்லை)பேட்டி பார்த்தேன் ஒரளவு நம்பிக்கையான பேட்டியாக இருக்கின்றது... இருக்கலாம்....இரு இனத்துக்கும் பல கசப்பான அனுபவங்களை வரலாறு விட்டு சென்றுள்ளது...ஆகவே பயம் இருப்பது நியாயமானது..அதிலும் தமிழ் தரப்பு பல விடயங்களில் நிரந்தர இழப்பை சந்தித்துள்ளது. முதளாளித்துவ சிங்கள கட்சிகள் இனாவாதம் பேசி சிங்கள ,சிறிலங்கா தேசியத்தை காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்... சோசலிஸ்ட்கள் இந்த முறை இனவாதம் பேசவில்லை ஆனால் சோசலிசம் பேசி சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பி தமிழ் இன அடையாளத்தை இல்லாமல் பண்ண முயற்சி செய்வார்கள் இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ...😅 இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை.. இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ... இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை..
  39. இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான். போட்ட முதலும் காலியாகும்.
  40. இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம். முற்றும்.
  41. போன 2024 ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணை.
  42. அண்ணா நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது. பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை. ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம். இது தான் அநுர செய்ய விரும்புவதும். இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான்.
  43. உலகத்தில் நான் போக விரும்பாத விமான நிலையம் - மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம். (அதற்காக மற்றய இந்திய விமான நிலையங்கள் திறமோ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் வேறெந்த இந்திய விமான நிலையத்திற்கும் நான் செல்லவில்லை. ) இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 🤮
  44. தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர். ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர். எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு. நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!
  45. ❤️.......... மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍. நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.
  46. 1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே.. ஆனால் 2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்.. 2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்.. மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்.. உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்.. ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்.. அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. வாழு வாழ விடு… பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.