Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20012
    Posts
  2. island

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1747
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1569
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/09/24 in all areas

  1. இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் இந்த முடிவை தான் எடுப்பார். இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார். ராஜீவ் கொலை தொடர்பாக இன்ரபோல் உங்களை தேடுகிறதே, அது தொடர்பாக உங்கள் நிலை என்ன என்று ஒரு நிருபர் கேட்ட போது, “நடக்கிற காரியங்களை கதைப்போம்” என்று கொடுப்புக்குள் சிரித்தவறே கூறிக் கடந்து சென்றவர் அவர். தர்ம நியாயங்களுக்கு அப்பால், இது தான் உலக நியதி. உலக நாடுகளும் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க தமக்கான துரும்பு சீட்டாக மட்டுமே இதை பயன்படுத்துமேயொழிய எந்த விசாரணையையும் நடத்த போவதில்லை. ஆகவே தலைவர் பிரபாகரன் கூறியபடி, நடக்கிற காரியங்களை கதைத்து தமிழரின் இருப்பை வட கிழக்கில் பாதுகாப்பதே உடனடித்தேவை.
  2. எந்த சிங்கள ஜனாதிபதி தனது இனமும் படைகளும் போர் குற்றமிழைத்தது என்று ஒப்புக்கொள்வார் அவர்களை ஐநா விசாரணையின் முன் நிறுத்துவார் என்று எதிர் பார்க்கிறோம்? ஒரு சிங்கள தேச தலைவர் தமிழர் பக்கம் நின்று தீர்வுக்கு ஒத்துழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பை கொண்டிருந்தால் அநுர அல்ல நாம்தான் ஏமாளிகள். சர்வதேச அழுத்தத்தின் மூலமே தமிழர் தீர்வு சாத்தியம் அப்படி ஒரு தீர்வை ஐநா கொண்டுவந்தாலும் வீட்டோ அதிகாரத்தை பாவித்து சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை காப்பாத்தும், உலகத்தையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் உக்ரேன் ரஷ்ய போர் விவகாரத்திலேயே வீட்டோ நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, வீட்டோ அதிகாரமுள்ள ஒரு நாடு எதிர்த்தாலும் எந்த முடிவையும் எட்ட முடியாது என்ற நிலையில் ஏறக்குறைய அனைத்து வீட்டோ நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ள இலங்கையை எவர் சிறைக்கு அனுப்புவார் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்? சிங்களவனை தீர்வை நோக்கி தள்ள உறுதியான தமிழ் தலைமை ஒன்றும் ஒருத்தர் சொன்னால் எல்லோரும் கேட்கும் தலைவனும் உள்ளூரில் இருக்கவேண்டும் அப்படி யார் இருக்கிறார்கள்? மஹிந்த வந்தால் அவனுடன் சேர்ந்து சிங்ககொடி பிடிக்கிறார்கள், மைத்திரி வந்தால் அவனிடமே சிங்கள அதிரடிபடை பாதுகாப்பு கேட்கிறார்கள், ரணில் வந்தால் பங்களா கவுஸ் சொகுசு கார்கள் , சாராய அனுமதிபத்திரம் என்று கையேந்துகிறார்கள் பின்பு தேர்தல் வரும்போது சிங்கள தலைமைகளை சர்வதேசத்தின் முன் நிறுத்துவோம் என்று தமிழர் பகுதிகளில் ரீல் விடுகிறார்கள். இங்கே எம்மை ஏமாற்றுவது அதிகம் சிங்கள தலைமைகளா தமிழ் தலைமைகளா? அநுர சாமானியமக்களின் அடிப்படை தேவைகளையும் அதிகாரமிக்கவர்கள் பொதுமக்கள்மேல் செலுத்தும் ஆதிக்கத்தையும் இன மதம் பாராது வாட்டும் ஊழலையும் தடுத்து வேலை வாய்ப்பு விலைவாசி குறைப்பு , மொழி தொடர்பாடல் என்று பூர்த்தி செய்தால் அனைவரும் அவனவன் வேலையை பார்க்கபோய்விடுவான் இனபிரச்சனை அது இது என்று குரலெழுப்பமாட்டான் , அப்படி குரலெழுப்பினால் குட்டையை குழப்புகிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கெதிராக சொந்த இனமே திரும்பும் என்ற கொள்கை முன்னெடுப்பில் மிக சாதுரியமாக காய் நகர்த்துகிறான், அதில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது, தமிழர்கள் அநுரவை ஆதரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற பதவியை பிடிக்க துடிக்கும் தமிழ்தலைமைகள் அநுரவின் ஆதரவை எப்படி பெறலாம் என்பதற்கு ஓடி திரிகிறார்கள் என்பதே தற்போதுள்ள யதார்த்தம். பொது தேர்தலின் பின்னர் எப்படி அநுரவின் கடை கண் பார்வையை பெறலாம் என்ற சிந்தனையிலேயே ஐயாக்கள் ஆளுக்கொரு பைல்களுடன் ஓடியோடி கட்சிகூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அநுர ஜனாதிபதியான பின்னர் அவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை பார்த்து எந்த தமிழ்கட்சியும் அவர் ஆட்சிக்கெதிராக எந்த கடும் வார்த்தைகளையும் இன்றுவரை உச்சரிக்கவில்லை. எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும். இதனால் சிங்கள ஆதரவு கோஷம் என்று பொருள் கொள்ளவேண்டாம், எம்மிடம் எமது அரசியல்பற்றி என்ன தெளிவுள்ளது என்பதை அறியவே அவா. இனப்பிரச்சனையின் குரலாக எம் தரப்பிலிருந்து கடைசிவரை போர் வடுவின் ஆதாரமாக ஒலிக்கபோவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அழுகுரல்கள் மட்டுமே, அந்த குடும்பங்களுடன் ஒன்றிணந்து அனைத்து தமிழர்தரப்பும் போராட்டம் நடத்தினால் ஓரளவாவது நெருக்கடி கொடுக்கலாம்,அதுமட்டுமே போர்குற்றத்தின் முன் சிங்களத்தை நிறுத்த உதவகூடிய பெரும் துருப்பு சீட்டு, ஆனால் எவனாவது அவர்கள் பக்கம் திரும்பிகிறார்களா என்று பாருங்கள்? சிங்களவன் கொடுத்த சொகுசுகாரில் கண்ணாடியை உயர்த்திவிட்டு போராட்டம் நடத்தும் அவர்களை கடந்துபோகிறார்கள் அந்த அளவில்தான் இருக்கிறது நிலமை. காலம் முழுவதும் எமக்கான தீர்ப்பை வாங்கி தாருங்கள் என்று சொல்லி தமிழர்கள் வாக்களித்து தமிழர் பிரதிநிதிகளை கொழும்பு நோக்கி அனுப்பினார்கள், இந்த தேர்தலில் , தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களுக்கு தீர்ப்பெழுதி வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என்ற நிலமையே நிலவுவதாக தெரிகிறது. சிங்கள அரசியலும் தமிழ் அரசியலும் கொள்கையளவில் ஒன்றேதான் , அது ஏமாற்றுவது.
  3. நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள் தொடர்ந்து நித்திரதேவியை அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂. வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக். வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀
  4. தேர்தல் பதவி இனவாதத்தை விட்டு வெளியே வர அச்சம். (வெளியே வர நினைக்கவே இல்லை என்பது தான் உண்மை)
  5. இன்னொரு அடிமை இந்தியாவுக்கு இதன் மூலம் நிரந்தரமாக கிடைத்து விட்டார். இவரை எப்படியாவது பயன்படுத்தி தமிழர் அரசியலில் மேலும் பிரச்சினைகளை இந்தியா உருவாக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே வருமான வரி இலாகாவின் மூலம் லைகாவின் இந்திய முதலீடுகளுக்கு ஆப்பு வைக்க முனைந்த இந்திய அரசு, இப்ப விருது கொடுக்கிறது என்பதை இலகுவாக ஏற்க முடியவில்லை.
  6. மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்... முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்.... முப்படையினரில் ஜெ.வி.பி இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்
  7. தேசியத்தை உதறிதள்ளிவிட்டு சிங்களவனுடன் சேரவா என்று கேட்கிறீர்கள் தற்கால தமிழர் அரசியலில் தேசியத்தை விசுவாசமாக காவி திரியும் தமிழர் தலைமை எவரும் இல்லையென்றும் நீங்களே பதிலும் சொல்கிறீர்கள். நான் தற்போதைய நிலமைபற்றி சொன்னது தமிழர்கள் இப்படி செய்தால் நல்லாயிருக்கும் என்பதல்ல, இப்படித்தான் செய்யபோகிறார்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆயுதபோராட்டகாலத்தில் தாயகமும் புலமும் சேர்ந்து நின்று எம் தேச அரசியலில் நின்றோம், இன்று அவ்வாறல்ல அங்கு தமிழர் அரசியல் கட்சிகளுக்கு நம்பி வாக்களிக்கும் மக்களே தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் , எம்மால் அந்த கட்சிகளின்மீது எந்த செல்வாக்கும் செலுத்தமுடியாது மனதில் பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுமட்டுமே எம் எல்லை. அதனால்தான் அங்கே கட்சிகள் ஆளுக்கொரு திசையில் ஆடுகிறார்கள். நாம் மக்களில் ஒருவர் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, 2009 இன் பின்னரான இலங்கை தமிழர் அரசியலில் புலம்பெயர்ந்தவர் நாம் என்ன செய்தோம் என கேட்க முடியாது நமது மக்கள் அங்கே நம்பி தேர்வு செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று மட்டுமே கேட்க முடியும், எமது இனம் என்ற ஒன்று அங்கிருக்கும்வரை, அவர்கள் உறவென்று நாம் இங்கிருக்கும்வரை ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொண்டேயிருப்போம். ஆயுதபோராட்ட காலத்தில்தான் நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேட்கமுடியும்,ஏனெனில் புலமும் அகமும் சேர்ந்து செதுக்கியது அந்த காலகட்டம். தன்னால் முடிந்ததை தாயக விசுவாசமுள்ள ஒவ்வொரு தமிழனும் எமது இயக்கத்துக்கும் மக்களுக்கும் தன்னையறியாமல்கூட தன்னால் முடிந்தவரை உதவியிருக்கிறான், உதவியிருப்பான் நீங்களுட்பட. அதனால் நாம் என்ன செய்தோம் என்று இப்படி ஒரு கேள்வியை இன்னொருமுறை எழுப்பாதீர்கள்.
  8. உலகளவில் தடை செய்யப்பட்ட bottom trawling மீன் பிடி முறையை வைத்து கொண்டு ஆ ஊ என்று சத்தம் போடுகிறார்கள் . அந்த முறை மூலம் உலகளவில் அழிந்து வரும் ஆமை இனம்களின் அழிவு கூடுகின்றது என்று போங்கடா உங்க மீன் இறால் வேணாம் என்று அமெரிக்கா தடை விதித்தது அப்ப கூட அவங்களுக்கு அறிவு வரவில்லை . இலங்கையின் கடல் அநேக பகுதி சூரிய ஒளி இலகுவாக எட்டும் ஆழம் குறைந்த கடல் பகுதி மீன்கள் இலகுவாக இனபெருக்கம் செய்யும் கருவறை அந்த இடம்களை கருவறுக்க 5௦ அறுபது bottom trawling வள்ளம்கள் ஒரே நேரத்தில் நாசம் பண்ணுவதை யார்தான் பார்த்து கொண்டு இருப்பார்கள் ?
  9. தலைவர் இனவாதி மகிந்தவை வெல்ல வைப்பதற்காக மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி, இன்னொரு இனவாதி ரணிலை தோற்கடித்தவர் என்பதால், கண்டிப்பாக அனுரவை நோக்கி நேசக்கரத்தை நீட்டி இருப்பார். அவர் ஒவ்வொரு முறையும், இலங்கை தேர்தல்களின் மூலம் ஒரு சில இலக்குகளை எட்டும் வண்ணம், முடிவுகளை எடுத்தவர். பிரேமதாசாவில் இருந்து மகிந்தவரைக்கும் அப்படித்தான் முடிவுகள் எடுத்தார். ஆனால் கடைசி முடிவு, எதிர்பார்த்த விளைவுக்கு பதிலாக எதிர் விளைவைக் கொடுத்தது.
  10. "ஆதிக்க சாதி வெறி" கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும். அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம் என்கிறது . கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் / பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: அதிகாரம்-8 ,சுலோகம்-4,14 , அடிமைத்தனம் சூத்திரருடன் பிறந்தது. அதில் இருந்து எவராலும் அவர்களை விடுவிக்க முடியாது. அதிகாரம்-19 ,சுலோகம்-413 , பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும். அடிமையாகவே வாழவேண்டும். அடிமையாகவே சாகவேண்டும் . "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது இந்த ‘மனுதர்மம்’. "இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எப்படி பட்டவன் என்று கூற இயலும். மனுநீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே.? வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே." -திருநாவுக்கரசர் (தேவாரம்) உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம். இவரது இனத்தை புலையர் என்பார்கள். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார். நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ ?யார் அறிவார் ? நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கருத்து பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மனுதர்மத்தை [மனுஸ்ம்ருதி] நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற மனுதர்மத்தை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும். ஒரு சூத்திரன் சூத்திரருக்கு என வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள், அந்த வர்ண சாத்திர எல்லைக்குள், நல்லவனாக செயல் பட்டால், அவன் அடுத்த பிறவியில் பிராமணனாக பிறக்கலாம். ஆனால் இந்த பிறவியில் ஒரு போதும் இல்லை. இதன் பொருள் என்ன ? இது ஒரு மிகவும் புத்திசாலித்தனமான சமயத்தின் பெயரில் தீட்டப்பட்ட திட்டம் . இன்னும் ஒரு "பிரெஞ்சுப் புரட்சி (French Revolution,]" நடை பெறாமல் தடுக்க ? நன்றி
  11. எல்லா போர்வாதிகளும் அமைதியை விரும்புபவர்களும் அமெரிக்க தேர்தல் முடிவை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். எனவே அமெரிக்கர்களுக்கும் டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியாக வரவேண்டும். உலக அமைதிக்கும் டொனால்ட் ரம்ப் வர வேண்டும். இஸ்ரேலுக்கு நல்ல பேதிமருந்து குடுக்க ரஷ்யாவால் மட்டுமே முடியும். 😎
  12. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ]
  13. சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை
  14. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா த‌மாஸ் ப‌ண்ணாதைங்கோ இந்தியா ஒரு போதும் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆக‌ போவ‌து கிடையாது 2020க‌ளில் இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று வ‌டை சுட‌ தொட‌ங்கின‌வை இன்னும் அதே புளிச்ச‌ மாவில் சுட்டு கொண்டு தான் இருக்கின‌ம் ப‌ல‌ ம‌க்க‌ள் வாழும் நாட்டில் ம‌க்க‌ளுக்கு சரியான‌ க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லை எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இரவு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கினம் இந்தியாவில் த‌மிழ் நாடு தொட்டு ம‌ற்ற‌ மானில‌ங்க‌ள் வ‌ரை ப‌ல‌ ஊர்க‌ளுக்கு மின்சார‌ வ‌ச‌தி இல்லை உத்திர‌பிர‌தேஸ் பாட‌சாலைய‌ க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாது இந்தியா அர‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னைய‌ நேரில் போய் பார்த்தால் தெரியும் அசிங்க‌த்தின் வெளிப்பாடு இப்ப‌டி எவ‌ள‌வோ குறைக‌ள் இருக்கு சொந்த‌ நாட்டை ச‌ரி செய்ய‌ இதில‌ வ‌ல்ல‌ர‌சு விம்ப‌ம் வேர‌...........................இந்தியா ஒரு போதும் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ வ‌ராது..........................ச‌ன‌த்தொகைய‌ பெருக்கி அதுக‌ளை ந‌ர‌க‌ வாழ்க்கை வாழ‌ வைக்க‌ தான் இப்ப‌த்த‌ ஆட்சியாள‌ர்க‌ள் விரும்புகின‌ம்.................. வ‌ல்ல‌ர‌சு ஆகிற‌து இருக்க‌ட்டும் முடிந்தால் உல‌க‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டான‌ ஒலிம்பிக்கில் இந்திய‌ர்க‌ள் சாத‌னை செய்ய‌ முய‌ற்ச்சிக்க‌ட்டும்....................................
  15. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள். இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣
  16. பாலியல் வல்லுறவுச் செய்தி உங்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கின்றதா? 😠
  17. 🤣........ இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........
  18. 'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்.. கொதித்த சாம்சங் நிறுவனம்!' காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். இந்த போராட்டமானது தொழிற்சாலையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொடங்கியது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணியாளர்களை வைத்து சுமார் 60% அளவுக்கு மட்டுமே சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் இதையடுத்து 'போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்தது. மறுபக்கம், "தொழிற்சங்கம் தொடங்கியது சட்டப்படியான நடவடிக்கைதான். தினம்தோறும் 12 மணி நேரம் வேலை கொடுத்து சக்கையாகப் பிழிகிறார்கள். எனவேதான், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும்" எனத் தொழிலாளர்கள் கொதித்தார்கள். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம், 'தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., செய்திருப்பது துரோகம்.. கருங்காலித்தனம்..! இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கோரிக்கைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகத் தொழிலாளர்கள் சென்றனர். அவர்களை காவல்துறை கைது செய்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில், கடந்த 7-ம் தேதி அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதற்குத் தொழிற்சங்கத்தினர் தரப்பிலிருந்து, "தொழிலாளர் வர்க்க வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் முத்துக்குமார், "பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். அப்போது 'உங்களது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்' என அமைச்சர் த.மோ.அன்பரசன் தெளிவுபடச் சொன்னார். பிறகு வெளியே வந்து பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களில் தெரிவித்தோம். இதற்கிடையில் ஏற்கனவே அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை சாம்சங் தொழிற்சாலையிலிருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை வைத்துச் செய்திருந்தார்கள். இரவோடு இரவாகக் கைது! இதன் மூலமாகவே தொழிற்சங்கத்துக்கும் சாம்சங் நிறுவனத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டார்கள். மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி வைரல் செய்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இது தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம், கருங்காலித்தனம். பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். முதலில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். பிறகு அமைச்சர்கள் புறவழியான சதித் திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடன்பாடு ஏற்பட்டதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். இது குழப்பம் ஏற்படுத்தும் செயல். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சி.ஐ.டி.யூ., வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். டி.ஆர்.பி.ராஜா இதற்குத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாகப் பேசியிருக்கிறோம். எதற்காகப் போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்" என்றார். ஆனாலும், பின்வாங்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடுப்பான ஆளும் தரப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எச்சூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலை காவல்துறையினர பிய்த்து எறிந்திருக்கிறார்கள். இரவோடு இரவாகத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பலரது வீடுகளுக்குச் சென்று அவர்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக தொழிலாளர்கள் சென்ற லோட் வண்டி விபத்தில் சிக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது கொடுமையிலும் கொடுமை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்குச் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என வெடித்திருந்தார். அடக்குமுறை.. கொதித்த தலைவர்கள்! இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடித் தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலைக் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சீமான் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது" எனக் கொதித்துள்ளார். இச்சூழலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே களத்துக்குச் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை எனக் காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் முன்னதாக தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது மீட்புப் பணிக்கு வந்த காவல்துறையுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சூர்யா பிரகாஷ், எலன் ஆகியோர் காவல்துறையைத் தள்ளிவிட்டதாக சுங்கவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை அவர்களைச் சிறையில் அடைத்தனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. தற்போது சாம்சங் விவகாரம் அவர்களை மேலும் சூடாகியிருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள் | dmk alliance communist parties condemns dmk in Samsung Employees Strike issue - Vikatan
  19. களுவாஞ்சிக்குடி என்றால்... தமிழராக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அப்ப... அவர்களாகத்தான் இருக்கும். அல்வாயனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🥰
  20. தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣 தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂
  21. இதை வாசிக்கும்போது 2009 சனவரி மாதத்திலிருந்து மே 18 வரை தமிழர்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பேசக்கூட நாங்கள் தயாரில்லை, அப்படி பேசமுற்பட்ட நேரடிச் சாட்சியங்கள் கூட துரோகிகளாக்கப்பட்டு அடக்கப்பட்டுவிட்டனர். மற்றையோர் துரொகப்பட்டத்துக்கஞ்சி அடங்கிவிட்டனர். நிலமை இவ்வாறு இருக்கும்போது தனது இராணுவத்தைக் காட்டிக்கொடுத்து சிங்கள இனவாதிகளிடமிருந்து துரோகிப் பட்டத்தைப்பெற அநுர குமார ஒன்றும் சாலிய குமார அல்ல. பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாதிகளே. குறிப்பு: சாலிய குமார துட்டகெமுனுவின் மகன் பட்டத்து இளவரசன். சண்டாள சாதியைச் சேர்ந்த அசோகமாலாவின் மேல்கொண்ட காதலினால் அரசபதவியை துறந்தவன்.
  22. நமக்குள் ஒற்றுமை இல்லை நமக்கு நல்ல கட்சி இல்லை நாங்க சரியில்லை நாங்க உதவாக்கரைகள் நாங்க நாங்க....??? என்ன இது?? எங்கே போகிறோம்?? என்னவாகப்போகிறோம்??😭
  23. முடிவு எங்கள் கையில் இல்லையே. எல்லாம் மக்கள் கையில். இன்னும் ஒரு மாதம்.
  24. ஒண்ணொண்ணா கொடுத்து அம்மணமாக்குவது தானே அவர்கள் தொழில்.
  25. அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?
  26. நிச்சயமாக அது தான் சரியான வழியும் ஆகும். நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கத்துடனும். பேச வேண்டி இருக்கிறது விரும்பினாலும். விரும்பவிட்டாலும் இது எமது தலைவிதி ஆகும் மாற்ற முடியாது நல்ல விடயங்களை பாராட்டவும் வேண்டும் மகேசன். வேதநாயகம் பாஸ்கரன்,........போன்றோரின். அரசியல் செல்வாக்கு லஞ்சம் அற்ற. திறமைக்கு மதிப்பு அளித்த நியமனங்கள் பாராட்டுக்கு உரியவை அடிபடுவதை விட. பாராட்டு பகழ்ந்து காரியங்களை செய்யலாம் நான் அனுரவின். ஆதரவுக்கரம் இல்லை ஆனால் நல்ல செயல்களை வரவேற்றேன். சில உறுப்பினர்கள் நக்கல் நளினம். செய்தார்கள் கவலையளித்தது 🙏🙏🙏 பாறுவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி தான் 🤣😂
  27. அடியோஸ் அமிகோ
  28. சமாதான புறாவாக புறாவையும் பறக்க விட்டார்களாமே? கடைசியில் கண்டது சந்திரிகாவின் புதைகுழி கலாசாரத்தையே.
  29. இது சார்ந்த செய்தி என்பதால்..... 95காலப்பகுதியில் #சந்திரிக்கா_சாறி #சந்திரிக்கா_bag #சந்திரிக்கா_காப்பு எண்டு எங்கட சனம் கொண்டாடி தீர்த்தது கொஞ்ச நாள்ளையே #சந்திரிக்கா பூரா யாழ்பாணீஸ்சையும் மூட்டை முடிச்சோட கிளபினதும் தான் கண்ணுக்கு முன்னால வந்து போகுது.. இப்ப அதே போலதான் #AKD நம்ம மீட்பர் ரேஞ்சுக்கு வச்சு கொண்டாடுறியள் பாத்து கவவனம் https://www.facebook.com/share/v/3nrnLJoeod7EfSWc/
  30. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம் புதன்கிழமை, 9 ஐப்பசி 2024 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. "மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான். சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. "சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன.
  31. செத்த மாட்டிலிருந்து உண்ணி கழருவதுபோல் ஒவ்வொருவராக தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரம் சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மட்டுமே தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடுவார்கள் போலுள்ளதே. அப்படியானால்; இவர்களுக்கு வாக்களிப்பது யார்? அவரவர் குடும்பத்தினர். உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போலுள்ளதே. அடித்து விரட்டினாலும் போக மாட்டார்கள், மக்கள் இவர்களை விட்டு விலகினால் போய்த்தான் ஆகவேண்டும். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் போய்விட்டது தமிழரசுக்கட்சியின் நிலைமை.
  32. தமிழீழம் எக்காலத்திலும் சாத்தியமாக இருக்க வில்லை. அதை சாத்தியப்படுத்துவதற்கான உலக அரசியலை எமது அரசியல்வாதிகளும் செய்யவில்லை, ஆயுதப்போராளிகளும் செய்யவில்லை. வெற்று கோஷங்களுடனும் மக்களின் பேரழிவுடனும் அது முடிந்து போனது. அப்படி ஒரு மாயையை அன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இளைஞர்களை நம்ப வைத்ததாலேயே தமிழ் மக்ககளுக்கு பேரழிவுகள் ஏற்பட்டது. சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகரக்கூடிய பல சந்தர்ங்கள் தவறி போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஓரளவுக்கு சாத்தியமாக இருந்த சமஸ்டியும் ஆயுத போராட்ட அழிவுடன் சாத்தியமற்று போனது. இப்போதைய நிலையில் பிராந்தியங்களுக்கு அதிகாரபகிர்வு என்ற கோட்பாட்டை இலங்கையில் உள்ள சகல இனமக்களும் இணைந்து வலியுறுத்த கூடிய அரசியலை செய்வதே தற்போதைய சாத்தியமான வழி. பிராந்தியங்களுக்கான அதிகார பகிர்வானது வளர்சசியடைந்த நாடுகளின் வளர்சிக்கு எப்படி காரணமாக இருந்தது, என்பது போன்ற அறிவூட்டல் விழிப்புணர்வு இலங்கை முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும். அரகலய மக்கள் போராட்ட குழு அப்படியான வேலைகளையே செய்து வருகிறது. நாடாளாவிய ரீதியில் அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் அதிகரிக்கும் போது அனுர அரசாலோ அல்லது இதற்கு பின்னர் வரப்போகும் அரசாங்கங்களாலோ அதை புறந்தள்ள முடியாது. வரும் அரசாங்கங்களை எல்லாம் பகைத்து குறுகிய கண்ணோட்டத்துடனான குண்டு சட்டி அரசியலை மேற்கொண்டால் விளைவுகளை அனுபவிப்பவர்கள் எதிர்கால தமிழ் மக்களே. தமிழ் மக்களின் அரசியல் பலம் கடந்த 75 ஆண்டுகால தவறான அரசியலின் விளைவுகளால் எப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பானதோ அது இன்னும் தொடரவே வழிவகுக்கும். தவறான அரசியலை செய்வது, பின்னர் அதன் விளைவுகளை வைத்து புலம்பி அரசியல் செய்வது, அதன் பின்னர் அதே தவறுகளை மீண்டும் செய்வது, இதுவே ஈழத்தமிழர் அரசியல் வரலாறு.
  33. Published By: RAJEEBAN 09 OCT, 2024 | 11:28 AM பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழவில் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொருத்தமான வேட்பாளரை பொதுமக்கள் தெரிவு செய்வதற்கான 10 அம்ச அளவுகோல்களை மக்களிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சுத்தமான கரங்களை கொண்ட ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யவேண்டும் என்பது குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன உள்ளதால் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்கள் வேட்பாளர் தெரிவு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையற்ற ஊழல் அரசியல் பின்னணி கொண்டவர்களை இம்முறை பொதுமக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான அரசியல் கட்சிகள் வரலாற்றின் குப்பைதொட்டிக்குள் தூக்கி வீசப்படும் நிலையை ஏற்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருத்தமான வேட்பாளரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது குறித்து மாத்திரமல்லாமல் பொதுமக்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த சிறந்த அறிவுள்ளவர்களை அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற விரும்பினால் அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை தெரிவு செய்யக்கூடாது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195823
  34. மூழ்கிற கப்பலில் பயணம் செய்ய யார் முன்வருவார்? தப்பிக்கவே வழி தேடுவர். அதையே தவராசா செய்திருக்கிறார். சிறீதரன் நேர்மையற்றவர், சுமந்திரனுக்கு எதிராக செயற்படவேண்டிய நிலை வரும்போதெல்லாம் நழுவி விடுவார். கடந்த ஒரு தேர்தலின் போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், ஆகவே தலைவரை மாற்ற வேண்டுமென சுமந்திரன் கொடி தூக்கியபோது, அதை ஏற்க சிறீதரன் தயாராக இருந்தார். சட்டம் தெரிந்த ஒருவர் தமிழரசுக்கட்சிக்குள் இருப்பதை சுமந்திரன் விரும்புவதில்லை, அவர்களை கண்டால் பயப்படுகிறார். தலைவர்களுக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்கவோ, தட்டிக்கேட்கவோ பயம். அவரை தலைக்குமேல் ஏற்றி வைத்து முன்னுரிமை கொடுத்தார்கள், பின்னாளில் அவரை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. சுக்கான் இழந்த படகுபோல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். முதலில் கேள்வி கேட்கக்கூடியவர்களை, சம்பந்தனை கைக்குள் போட்டு ஒவ்வொருவராக வெளியேற்றினார், பின் வளர்த்த மாடு மார்பிலே பாய்ந்தமாதிரி சம்பந்தனுக்கு எதிராகவே கிளம்பினார். அவர் வந்தவேலை ஓரளவு முடிந்து விட்டது, அவர் வந்த பாதையில் வெற்றியோடு திரும்புவார். ஆனால் இவர் சொற்கேட்டவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? சுமந்திரன் வந்து எதை சாதித்தார்? வீட்டை உடைத்து குட்டிச்சுவராக்கினார். சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் போன்றோரை அப்பப்போ பகைப்பதும் சேர்ப்பதுமாக அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறார்.
  35. தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் ஜோசெப் பராராசசிங்கம் கொலை பல அரசு இயந்திரங்களில் கொள்ளை என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர். மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.
  36. ஹிஹி...... கரட்டி ஓணானுந்தான் நிறம் மாறுது, அது ஏன்? இவர் ஏமாறுகிறாரா, அநுர ஏமாற்றப்படுகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும். மது அனுமதிப்பத்திர பெயர் கேட்டு அனுராவை தேடி ஓடினார், நினைத்தது நடக்கவில்லை, சிறீதரனையும் சாள்ஸ் நிர்மலநாதனையும் கூட்டுச் சேர்த்தார், சிறீதரன் நழுவுவார் போலுள்ளது. எல்லோருக்கும் தெரியும் சுமந்திரனின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதென. அதனால எல்லோரும் அவரை விட்டு விலக தயாராகின்றனர். உந்த நாடகம், வெருட்டல் எல்லாம் இனியும் எடுபடாது.
  37. எலும்புக்கு கூடுகள் என்று சொல்லாமல், ஆயுதங்கள் என்று சொல்லி தோண்டி, காணாமல் போனோரை கண்டுபிடிக்கப்போயினம்!
  38. தில்லை அருமையான கவிதை.
  39. 1993ல் இருந்த சூழல் தற்போது இல்லை. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனை இலகுவாக அடையக்கூடிய வசதிகளும் 1990 களில் இல்லை. அது தவிர தற்பொழுது ஈரானிடம் பத்திற்கும் மேற்பட்ட அணுக்குண்டுகள் இருப்பதாக நம்பபடுகிறது. மற்றயது, கோவிற்றுக்குப் பிந்திய உலக பொருளாதார நிலை. போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய மசகு எண்ணை விலையேற்றம் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கில் முழுமையான ஒரு யுத்தத்தை எவரும் விருமப்போவதில்லை. ஆனாலும் உசார் மடையர்களால் உலகம் நிரம்பியிருப்பதால் எப்பவும் எதுவும் எங்கேயும் நடக்கலாம்.
  40. தமிழ் சிறியின் கருத்துத்தான் எனது கருத்தும் இதில். மாற்றுத்திறனாளிகள், திரு நங்கை / திரு நம்பிகள், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றோரை அரசியல் கட்சிகள் ஒரு போதும் வேட்பாளராக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியல். இந்தியாவிலேயே இவ்வாறான ஆரோக்கியமான விடயம் நிகழ்ந்து இருக்கின்றது. சப்னம் மவுசி (Shabnam "Mausi") எனும் திரு நங்கை எம்.எல்.ஆக இருக்கின்றார்.
  41. தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂
  42. சும்மா ஒரு கதைக்கு எழுதினால் நம்பிவிடுவியளாக்கும்?
  43. ஒவ்வொரு ம‌க‌ளிர் அணியின் விளையாட்டை பார்க்கும் போது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி தான் கோப்பை வெல்ல‌ த‌குதியான‌ அணி.......................
  44. ஜ‌னநாய‌க‌ வாதிக‌ள் வேச‌ம் போட்டு உல‌கை அழிக்கும் சாத்தாங்க‌ளின் செய‌ல் இது.......................
  45. டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார். இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை. எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை. பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை. தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.
  46. ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது? பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் - இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன. 'ஈ'யின் மூளையின் வடிவம் மற்றும் அதன் 1,30,000 செல்கள் மற்றும் 5 கோடி இணைப்புகள் குறித்து முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இதுவரை வளர்ச்சியடைந்த ஈ ஒன்றின் மூளை குறித்து செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சியில் இது மிகவும் விரிவானது. இந்த புதிய கண்டுபிடிப்பு மனித மூளைகள் குறித்த நமது புரிதல்களில் “மிகப்பெரும் முன்னேற்றமாக” அமைந்துள்ளதாக முன்னணி மூளை நிபுணர் ஒருவர் கூறுகிறார். “எண்ணங்கள் எப்படி உருவாகின்றன” என்பதில் இந்த ஆராய்ச்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக, ஆய்வுக்குழு தலைவர்களுள் ஒருவர் தெரிவித்தார். ஈக்களின் வியப்பூட்டும் மூளை கேம்பிரிட்ஜில் மூலக்கூறு உயிரியலுக்கான மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தை சேர்ந்த டாக்டர் கிரேகரி ஜெஃப்ரிஸ் பிபிசியிடம் கூறுகையில், நம் ஒவ்வொருவருடைய மூளை உயிரணுக்களின் வலையமைப்பு, எவ்வாறு ஒருவருக்கொருவர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது என்று தற்போது எங்களுக்குத் தெரியாது என்றார். “அதனுடன் என்ன தொடர்பு உள்ளது? உங்கள் முகத்தை அடையாளம் காணும் வகையில் தகவல்களை அனுமதிக்கவும், என் குரலைக் கேட்கவும், வார்த்தைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றவும் உதவும் சமிக்ஞைகள் இந்த அமைப்பில் எவ்வாறு பாய்கின்றன? ஈ-யின் மூளையின் வலையமைப்பு உண்மையில் வியப்பூட்டுகிறது. இது நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.” ஆய்வு செய்யப்பட்ட ஈயை விட பல லட்சம் மடங்கு மூளை செல்கள் அல்லது நியூரான்கள் நம்மிடம் உள்ளன. ஒரு பூச்சியினுடைய மூளையின் இணைப்பின் (wiring) வரைபடம் எப்படி விஞ்ஞானிகளுக்கு நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை அறிய உதவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈக்கள் பற்றிய இந்த புதிய ஆராய்ச்சி மனித எண்ணங்கள் குறித்து புரிந்துகொள்ள வழிவகுக்கிறது விஞ்ஞானிகள் இதற்காக தயாரித்த படங்கள், ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்கள், எந்தளவுக்கு சிக்கலானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அழகாக இருப்பதையும் காட்டுகிறது. அதன் வடிவம் மற்றும் அமைப்பு, இவ்வளவு சிறிய உறுப்பு எவ்வாறு பல சக்திவாய்ந்த கணக்கீட்டு (computational) பணிகளைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது. இந்த அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய ஒரு கசகசா அளவுகொண்ட கணினியை உருவாக்குவது நவீன அறிவியலின் திறனுக்கு அப்பாற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் மற்றொரு இணை தலைவர்களுள் ஒருவரான, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் மாலா மூர்த்தி, அறிவியல் ரீதியாக கணெக்டோம் (connectome) என அறியப்படும் இந்த இணைப்பின் புதிய வரைபடம், "நரம்பியல் விஞ்ஞானிகளின் புரிதலை மேம்படுத்தும்" என்றார். புதிய ஆய்வுகளுக்கு திறவுகோல் "ஆரோக்கியமான மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவும். எதிர்காலத்தில், நம் மூளையில் ஏதேனும் தவறாக நடக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளரும் இந்த ஆராய்ச்சிக் குழு தலைவருமான டாக்டர் லூசியா பிரீட்டோ கோடோலோ இந்த கருத்தை ஆமோதிக்கிறார். “300 இணைப்புகளைக் கொண்ட ஒரு எளிய புழு மற்றும் 3,000 இணைப்புகளைக் கொண்ட ஒரு மாமிசப் புழுவின் இணைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். 1,30,000 இணைப்புகளைக் கொண்ட ஈ-யின் மூளையை ஆராய்ந்திருப்பது அற்புதமான சாதனையாகும். இதைவிட பெரிய மூளையை கொண்டுள்ள எலி மற்றும் இன்னும் பல தசாப்தங்களில் நம்முடைய மூளையின் இணைப்புகளையும் ஆராய இது வழிவகுக்கும்.” பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, இந்த இணைப்புகள் ஈயின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றை உருவாக்கின்றன பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் பார்வை செயல்திறனுக்கான இணைப்புகள் இவை. பார்வை தொடர்புடைய இணைப்புகளில் இன்னும் பல நியூரான்கள் உள்ளன, ஏனெனில் பார்ப்பதற்கு அதிக கணக்கீட்டு சக்தி தேவைப்படுகிறது ஆராய்ச்சியாளர்கள் பல தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு தனித்தனி சுற்றுகளை அடையாளம் கண்டு, அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட முடிந்தது. எடுத்துக்காட்டாக, இயக்கத்துடன் தொடர்புடைய இணைப்புகள் மூளையின் அடிப்பகுதியில் உள்ளன, அதேசமயம் பார்வை தொடர்பான இணைப்புகள் பக்கவாட்டில் உள்ளன. பார்வை தொடர்புடைய இணைப்புகளில் இன்னும் பல நியூரான்கள் உள்ளன, ஏனெனில் பார்ப்பதற்கு அதிக கணக்கீட்டு சக்தி தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஏற்கனவே தனி சுற்றுகளைப் பற்றி அறிந்திருந்தாலும், அவை எவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது. ஈக்களை அடிப்பது ஏன் கடினமாக உள்ளது? மற்ற ஆராய்ச்சியாளர்கள், ஈக்களை அடிப்பது ஏன் கடினமாக உள்ளது என்பதை கண்டறிய சுற்று வரைபடங்களைப் பயன்படுத்துகின்றனர். உங்களின் சுருட்டப்பட்ட செய்தித்தாள் எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை பார்வை சுற்றுகள் கண்டறிந்து, அவை ஈ-யின் கால்களுக்கு சமிக்ஞையை அனுப்புகின்றன. அவை தங்களுக்கு உடனடி மரணத்தை ஏற்படுத்தவல்ல பொருளிலிருந்து விலகி நிற்கும் வகையில் கால்களுக்கு மிக வேகமாக சமிக்ஞைகளை அனுப்புகின்றன. எனவே ஈக்கள் எண்ண ஓட்டத்தைவிட மிக வேகமாக பறந்துவிடுகின்றன. இந்த கண்டுபிடிப்பு, நம்மால் ஏன் ஈக்களைக் கொல்ல முடிவதில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். பட மூலாதாரம்,GWYNDAF HUGHES/BBC NEWS படக்குறிப்பு, ஈயின் மூளையை துண்டுகளாக்கும் உபகரணம்: ஈயின் மூளை 7,000 மிக மெல்லிய துண்டுகளாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்தது எப்படி? இந்த விளக்க வரைபடம், மிகச்சிறிய மைக்ரோஸ்கோபிக் கருவி மூலம் ஈயின் மூளையை துண்டுகளாக்கி, அந்த 7,000 துண்டுகளை படங்களாக்கி அவற்றை டிஜிட்டல் முறையில் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர், பிரின்ஸ்டன் குழு அனைத்து நியூரான்களின் வடிவங்கள் மற்றும் இணைப்புகளை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பிரித்தெடுத்தது. எனினும், ஏ.ஐ. தொழில்நுட்பம் நேர்த்தியாக இதை செய்யாததால், சுமார் 30 லட்சம் தவறுகளை ஆராய்ச்சியாளர்கள் கைகளால் சரிசெய்ய வேண்டியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இது அளப்பரியது என்றாலும், வேலை பாதிதான் நடந்துள்ளது. ஒவ்வொரு இணைப்பும் என்ன வேலை செய்கிறது என்ற விவரம் இல்லையென்றால் இந்த வரைபடம் அர்த்தமற்றதாகிவிடும் என்கிறார், மூலக்கூறு உயிரியலுக்கான மருத்துவ ஆராய்ச்சி கழக ஆய்வகத்தை சேர்ந்த டாக்டர் பிலிப் ஷ்லேகெல். பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, ஸ்கேன்கள் மனித மூளையின் இணைப்பை காட்ட முடியும் - ஆனால் மிகச் சிறந்த ஸ்கேன்கள் கூட மூளை இணைப்புகளின் சிறிய பகுதியை மட்டுமே காட்டுகின்றன ஈயின் கனெக்டோம், தங்கள் ஆராய்ச்சிக்கு வழிகாட்ட அதைப் பயன்படுத்த விரும்பும் எந்தவொரு விஞ்ஞானிக்கும் கிடைக்கிறது. இந்த வரைபடம் மூலமாக, நரம்பியல் உலகம் "அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளை காணும்" என்று டாக்டர் ஷ்லேகல் நம்புகிறார். ஒரு மனித மூளை ஈயை விட மிகப் பெரியது, அதன் இணைப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லை. ஆனால் இன்னும் 30 ஆண்டுகளில் அதை சாதிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஈயின் மூளை, மனிதர்களின் எண்ணங்கள் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய புதிய, ஆழமான புரிதலின் தொடக்கமாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஃபிளைவயர் கன்சார்டியம் எனப்படும் விஞ்ஞானிகளின் ஒரு பெரிய சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c153pg07215o
  47. அண்ணை, 1 கோடி செலவழிக்கவேணுமாம் தேர்தலுக்கு! நேற்று பாடசாலைக்கருகில் சந்தித்த தம்பி சொன்னான். ஒருத்தர் 30 லட்சம் வைச்சுக்கொண்டு என்ன செய்ய என்று கையை பிசைகிறாராம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.