உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ் நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை. தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!