theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான்.
உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம்.
சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன.
அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது.
இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம்.
ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.