Leaderboard
-
valavan
கருத்துக்கள உறவுகள்20Points1582Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19678Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points88842Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்12Points20373Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/20/24 in Posts
-
கரண்ட் வந்தது
8 pointsஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி8 points
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.5 points
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.5 points
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
நல்ல செய்தி. இதை வரவேற்கும் அதே வேளை, அவர்களே அடாத்தாக தனியார் காணியை பிடித்து விட்டு இப்போ வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. கள்ளன் களவெடுத்ததை மீட்க நாம் போராடியும் முடியவில்லை. இப்போ கள்ளனாக திருப்பி தருவதால் கள்ளன் காலில் விழுந்து நன்றி சொல்ல தேவையில்லை. மீண்டும் இன்னொரு அரசாங்கம் வந்து எமது காணியை மீளப்பறிக்கலாம் - அப்படி பறிக்க முடியாத நிரந்தரத்தீர்வே எமது அபிலாசை.4 points
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.4 points
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவரின் இசைய கேட்டு தான் வளந்தேன் தாத்தா இவர் மிகவும் நேர்மையான மனிதர்.................திறமையான இசையமைப்பாளர்....................இவரின் இசையில் சிறுவயதில் நான் கேட்ட முதல் பாட்டு (முக்காலா முக்கபில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த தமிழர்களையும் தன் இசை மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்......................ஈழத்தின் மேல் அதிக பற்று அதற்க்கு அவர் பாடிய பாடல் ஓன்றே சாட்ச்சி அந்த பாட்டை ஜரோப்பாவிலும் பாடினவர்................... அந்த பாட்டு இதே கேட்டால் கண் கலங்கும்3 points
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதன் பின்னால் இருப்பது பெளத்த சிங்கள மேலாண்மைவாதம் என்றே நான் நினைக்கிறேன். தமிழர்களை அடக்கி ஆகி விட்டது. ஆனால் யுத்தத்தை பாவித்து முஸ்லிம்கள் தம் இருப்பை அதிகரித்ததுடன் மிகவும் உயர் பதவிகளிலும், குறிப்பாக வியாபாரம், வங்கி துறைகளை கையில் வைத்துள்ளார்கள் என்பதும், தமிழரை தட்டி வைத்தது போல இனி இவர்களையும் தட்டி வைக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் அடுத்த இலக்கு. 1. முதலில் அவர்கள் பகுதியில் அவர்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருந்த மலையக தமிழரை நாடு கடத்தி அவர்கள் வாக்குப்பலத்தை பாதிக்கும் கீழாக்கினர். 2. பின்னர் நம் மீது இனவழிப்பு போர் 3. இப்போ முஸ்லிம்களின் முறை. இவர்கள் மீதும் வன்முறையை திணித்தார்கள் ஆனால் அதை அவர்கள் வடிவாக கையாண்டபடியால் - இப்போ மறைமுக ஒதுக்கலில் இறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறை ஒரு சிறுபான்மையை அடக்கும் போதும் - ஏனைய சிறுபான்மைகள் அதை வரவேற்கும் அல்லது காணாமல் இருக்கும்படி செட்டப் செய்வார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை - அறகலவுக்கு ஆக்கி கொடுத்த பிரியாணி எல்லாம் வீணாப்போய்டே என்ற நிலைதான். அமைச்சு செயலாளர்களில் ஒரு தமிழ் பெயர் தென்படுகிறது. மருந்துக்கும் ஒரு முஸ்லிம்மும் இல்லை.3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅3 points
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
2 pointsமுன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html2 points
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃2 points
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
2 points
- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.2 points- கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கங்குவா பார்த்துவிட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள். 1:03 அதிலும் ஒரு சிறுமியை அவரோட அப்பாவோ தாத்தாவோ பாப்பா படம்பத்தி பேட்டியா கொடுக்குற, வாம்மா வீட்டுக்கு ஓடிரலாம்னு இழுத்து போவது கங்குவா கொடூரத்தின் உச்சம், நாம தியேட்டர்லாம் போய் படம் பார்த்து பல வருஷமாச்சு, கடைசியா ரஜனியின் குறை மாசத்துல பொறந்தமாதிரி கதை உள்ள படம் பார்த்தேன் அதுக்கப்புறம் தியேட்டர் பக்கமே போறதில்ல.2 points- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழினம் மொழி சார்ந்த இனம்.மத சார்பு இனமல்ல. முஸ்லீம்கள் மொழி சார்ந்த இனமல்ல. அவர்கள் மதத்தை வைத்து மட்டுமே உலக அரசியல் செய்பவர்கள் .உலக வாழ் முஸ்லீம்களுக்கு மதத்தை தவிர மொழி சார்பு எதுவுமில்லை.கிட்டத்தட்ட பார்ப்பனியர்களைப்போல்.....முஸ்லீம்களுக்கு மொழியும் தேவையில்லை.அந்தந்த நாட்டு வரைமுறைகளும் தேவையில்லை. போற வாற இடமெல்லாம் அல்லஃகு அக்பர். அதுவே அவர்கள் தாரக மந்திரம். நான் மனித அழிவுகளையும் மனித/இன அடக்கு முறைகளையும் விரும்புபவனல்ல. ஆனால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் செய்யும் பொதுமக்கள் அழிவுகளை பார்த்து கண் கலங்கினாலும் முஸ்லீம்களின் வரட்டுக்கர்வம் அழிய வேண்டும் என விரும்புகின்றேன்.2 points- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம். ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும் வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன். 'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம். இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள். அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன்.2 points- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே. அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம். அவர்களும் அவ்வாறே உணர்கிறனர். அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன. இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே. இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர். இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர். இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.2 points- கரண்ட் வந்தது
2 pointsபுன்னகையும் மெளனமும் மிகப்பெரிய ஆயுதங்கள்... புன்னகை பல பிரச்சினைகளைத் தீர்க்கும்... மெளனம் பல பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும்...2 points- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இல்லை வேறு விமான நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறார்கள். லண்டன்வரை வேறு விமானம் பின்னர் எயர்லங்கா.2 points- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒரு சிறுபான்மை இனமாக இருந்து அதனால் ஏற்பட்ட அடக்குமுறைகளால் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய பின்னர் புலிகள் தமிழ் மக்கள் நலன் சார் நிலையில் விட்டுக்கொடுப்பினை என்ற நிலையில் உறுதியாக நின்றார்கள், ஆனாலிஸ்லாமியர் ஆரம்பத்திலிருந்து தனித்துவமான போக்கினை கடைப்பிடிக்கின்றனர், புலிகளின் பின்னர் வந்த அரசியல்வாதிகள் தமது சொந்த நலனில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்யாமல் மறுவளமாக தமது இனத்தினை காட்டி வியாபாரம் செய்கிறவர்களாக இருப்பதால் சிங்கள பேரினவாதத்திற்கு இஸ்லாமியர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அச்சத்தினை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. இப்போது அவர்கள் இலக்கு இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியார்களாக உள்ளார்கள், தமிழ் மக்களின் மீட்கு சிங்கள பெரும்பான்மை தாக்கும் போது அதனை தடுக்க எத்தனிக்காமல் அதனை விட மோசமான நடவடிக்கையாக தாமும் அதில் இணைந்து தவறு செய்தார்கள். தற்போது இஸ்லாமியருக்கு எதிராக திரும்பும் இந்த பெரும்பான்மைக்கு தமிழ் மக்கள் ஆதரவ்ளித்து தவறிழைக்க கூடாது, பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.2 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣. உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.2 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 56) தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) இம்முறை ஓரிடமும் பிடிக்கவில்லை என 11 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாலி - 48 புள்ளிகள் 2)பிரபா- 47 புள்ளிகள் 3)வாதவூரான் - 46புள்ளிகள் 4) நிலாமதி - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6)அல்வாயான் - 41 புள்ளிகள் 7)goshan_che - 41 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 9)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள் 10)வில்லவன் - 40 புள்ளிகள் 11)நிழலி - 40 புள்ளிகள் 12)நூணாவிலான் - 39 புள்ளிகள் 13)ரசோதரன் - 39 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 38 புள்ளிகள் 15) கிருபன் - 38 புள்ளிகள் 16) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 34 புள்ளிகள் 19)வாத்தியார் - 33 புள்ளிகள் 20) புலவர் - 31 புள்ளிகள் 21)அகத்தியன் - 31 புள்ளிகள் 22)குமாரசாமி - 31 புள்ளிகள் 23)புத்தன் - 30 புள்ளிகள் 24) சுவி - 29 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 77)2 points- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsடக்ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)2 points- பைடனை எச்சரிக்கும் புடின்!
2 pointsஉக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.2 points- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
உண்மை . இன்னும் நிறைய காணலாம் இவர்கள் பூம் பூம் மாடுகள் என்று சரியாக சொல்லிவிட்டீர்கள்- முன்பு தமிழர் ஒருவர் தனிபட்ட முறையில் ஒரு புத்த பிக்குவை கும்பிட்டால் அனுரகுமார திசநாயக்கவின் தமிழர் படை எப்படி எல்லாம்பொங்கி எழும்1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழர்கள் மீது பல அடக்குமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தமிழர்கள் தமக்கும் சரிநிகர் உரிமை வேண்டும் என கோரினார்கள் (பெரும்பான்மையின் அடக்குமுறைதான் ஆரம்ப புள்ளி), தமிழ் இளையோர் அதில் கொள்கை பிடிப்புடன் இருந்தமையால் அவர்களை அழித்து தமிழ் மக்களை மீண்டும் ஆரம்ப புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் போல் இல்லை, அவர்கள் தமக்கென தனித்துவமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள், அதில் சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரைஅவர்களை தமிழர்கள் மாதிரி கையாள முடியாது அத்துடன் அவர்கள் எக்காலத்திலும் தமது தனித்துவத்துவத்தினை இழக்கமாட்டார்கள். பெரும்பான்மை இனவாதத்திற்கு மக்கள் தத்தமது நம்பிக்கைகள், உரிமைகளை பேணுவதென்பது ஒரு ஒவ்வாமைக்குரிய விடயமாக உள்ளது, இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள். ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இது அவர்கள் கலாச்சாரம். ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம். நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள். ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
அப்பாடா துணைக்கு இரெண்டு பேரை இழுத்து விட்டாச்சு🤣1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார். இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை. இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம். இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார் ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே. ஆனால்…. இவர்கள் ஆள்….என ஆவதற்கு…. இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான். இது…. இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.1 point- கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ரசோ அண்ணா,அக்பர் விடுதிக்கு பின்னால் இருப்பது தான் நிஷ்மி விடுதி. அக்பர் விடுதியை அக்பர் என்று தான் அழைப்பார்கள்1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் பெண் : உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் பெண் : பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும் உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது ........! --- நின்னுக்கோரி வர்ணம் ---1 point- கரண்ட் வந்தது
1 pointமிக்க நன்றி மோகன் அண்ணா...................🙏. ஒரு பொழுதுபோக்கிற்கு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றே யாழில் இணைந்தேன்............... கடைசியில் இப்போது இது இல்லாவிட்டால் மூச்சு விடுவதே கொஞ்சம் சிரமமாக இருக்கின்றதே..........🤣.1 point- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
கோவண்ணா கப்பிதன் இப்ப தெரிஞ்சிருக்கும் யார் முட்டாள் என்று😂🤣😂1 point- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
காரணம் என்னவாக இருக்கும்? 😎1 point- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தினக்குரலே, அவ்வளவு நலிந்து போயா இருக்கிறார் ஜயதிஸ்ஸ🤣. #நளிந்த.1 point- பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு; மன்னாரில் சோகம்
மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - சுகாதார அமைச்சர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர். இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/1992151 point- கரண்ட் வந்தது
1 pointஉணமைய சொல்லனும் என்றால் இரண்டு நாளும் ஏதோ தனிமையில் இருப்பது போல் உணர்வு🤔...............என்ன தான் பல சோசல் மீடியாக்கள் இருந்தாலும் யாழில் வந்து பிடிச்ச உறவுகளுடன் அன்பை பகிர்வது🙏🥰 சில உறவுகளுடன் மூக்கத்தனமாய் கருத்தாடல் செய்யும் போது பொழுதும் போய் விடும்...........யாழில் தெரியாத பலதை தெரிந்தும் கொள்ளலாம்🙏 இந்த இரண்டு நாளும் தாயக பாடல் சினிமா பாடல்களை அதிகம் கேட்டேன்..................பல முறை யாழுக்கு வர டெனிஸ் மொழியில் காட்டிச்சுது யாழ் இணையத் தொடர்வு கிடைக்காது என்று நல்லதை யாழில் எழுதி நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்......................இது எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம்..................தமிழ் பொக்கிஷ்சம் விக்கியின் வார்த்தையில் வாரத நான் சிறு மாற்றம் செய்து எழுதி இருக்கிறேன்😁...........................1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மத்தியகுழு கேட்டுக் கொண்டற்கு இணங்க புத்தன் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை ஆதரவாளர்களுக்கு அறியத் தருகிறேன். புள்ளிகள் போட்வுடன் தம்பி @கிருபன் எங்கே நிற்கிறார் என்பதே முதலில் கவனிக்கும் விடயம். அப்புறமாவே நான் எங்கே நிற்கிறேன் என்பதைப் பார்ப்பேன்.1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழ்பேசும் மக்களுக்கு அனுரகுமார திசநாயக்க அரசு இரண்டு அமைச்சர்களை தந்துள்ளது.தமிழர்களை பிரித்து அவர் இந்து மதமா கிஸ்துவ மதமா முஸ்லிம் மதமா என்று வேறுபாடுகள் எல்லாம் பார்க்கவில்லை.அரசின் மதம் சாராத இந்த முடிவு வரவேற்கபட வேண்டியது.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
60) புதிய சனநாயக முன்னணி 5 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர்கள் கந்தையா 57, வாலி. இவர்களுக்கு 2 புள்ளிகள் 1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி 1)வாலி - 50 புள்ளிகள் 2)பிரபா- 48 புள்ளிகள் 3)வாதவூரான் - 47 புள்ளிகள் 4) நிலாமதி - 44 புள்ளிகள் 5)அல்வாயான் - 42 புள்ளிகள் 6)வீரப்பையன்- 42 புள்ளிகள் 7) தமிழ்சிறி - 41 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 41 புள்ளிகள் 9)goshan_che - 41 புள்ளிகள் 10)வில்லவன் - 41 புள்ளிகள் 11)நிழலி - 41 புள்ளிகள் 12) சுவைபிரியன் - 39 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 39 புள்ளிகள் 14)நூணாவிலான் - 39 புள்ளிகள் 15)ரசோதரன் - 39 புள்ளிகள் 16)கந்தையா 57 - 38 புள்ளிகள் 17)கிருபன் - 38 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 35 புள்ளிகள் 19)வாத்தியார் - 34 புள்ளிகள் 20) புலவர் - 32 புள்ளிகள் 21)அகத்தியன் - 32 புள்ளிகள் 22)குமாரசாமி - 32 புள்ளிகள் 23)புத்தன் - 31 புள்ளிகள் 24) சுவி - 30 புள்ளிகள் 25) வசி - 23 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59, 69 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 79)1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1 point- கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கங்குவா : விமர்சனம் Nov 14, 2024 15:07PM IST ஷேர் செய்ய : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் ரிலீஸாகும் சூர்யா படம், ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் சூர்யா செய்த பான் இந்தியா புரொமோஷன்ஸ், ரிலீஸ் தேதி மாற்றத்தால் ரசிகர்களிடத்து ஏற்பட்ட அதிருப்தி, நீதிமன்ற வழக்கு முதல் தொடர்ந்த பல்வேறு தடங்கல்கள் ஆகியவைகளைக் கடந்து தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்திற்கான ஏகப்பட்ட ஹைப், அதீத நம்பிக்கையுடன் படக்குழு இருப்பது போலான ஒரு தோற்றத்தையே அனைவருக்கும் அளித்தது. குறிப்பாக, படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் வெற்றி விழாக்கான பாஸை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தது கொஞ்சம் அதீதமாகவே தெரிந்தது. ஆக, இவ்வளவு ஹைப்களைக் கொடுத்த ’கங்குவா’ திரைப்படம் நமது பார்வையில்! ஒன்லைன்: 2024யில் தொடங்குகிறது திரைப்படம். சூர்யா ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது, காவல்துறைக்கு உதவும் ஒரு ’ஷாடோ காப்’ எனச் சொல்லலாம். அவர் இறங்கும் ஒரு மிஷனில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவனைப் பார்க்கும் போது அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்குக் காரணம் என்ன? இங்கு நடக்கும் இந்த கதைக்கும் 1070ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விஷயங்களைக் கூறுவதே ‘கங்குவா’. அனுபவப் பகிர்தல்: தமிழ் சினிமாவில் இத்தகைய மேக்கிங் உள்ள திரைப்படங்களை சமீப காலங்களில் நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஃப்ரேம்ஸ் நம் கண்களுக்கு நல்ல விருந்து. கதைக்களத்திற்குள் நம்மை ஓரளவு ஒட்டவைப்பதும் அதுவே. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு 3டி படம். ஒரு 3டி திரைப்படத்திற்கான தேவை அந்தப் படத்தின் கதையில் இருக்க வேண்டும். அதை விட்டு பொருட்காட்சியில் காண்பிக்கும் 3டி படம் போல் அந்த தொழில்நுட்பத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட கண்ணுக்குள் பாம்பு வருவது, ஜெம்ஸ் மிட்டாய் பறப்பது போன்ற காட்சிகள் சலிப்பே. ஆனால், இந்த அனுபவத்தை தொழில்நுட்பக்குழு நேர்த்தியாகக் கடத்தவே முயற்சி செய்துள்ளதால் அது நமக்கு ஓரளவு நல்ல அனுபவமாகவே இருந்தது. குறிப்பாக சில காட்சிகளில் ஃப்ரேமின் ஒவ்வொரு லேயரையும் நம் கண்கள் முன்னே காண முடிந்தது நன்று. சூர்யாவின் இத்தனை கால உழைப்பை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. ஒரு பெரிய ஸ்டார் நடிகர் ஒரு படத்திற்காக இத்தகைய உழைப்பை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம். கூடவே கொஞ்சம் ஸ்கிரிப்டடை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க ஏகப்பட்ட சப்தங்களும், ரத்தங்களும் இந்தப் படமெங்கும் இருந்தது. அதில் சப்தங்கள் வெறும் இரைச்சல்களாகவும், இரத்தங்கள் அனைத்தும் சினிமா இரத்தங்கள் என்றே கடந்து போகும் படி அமைந்தது. பார்ப்போருக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் வரும் ஃபிளாஸ்பேக் மற்றும் நிகழ்காலத்திற்கான நான் லீனியர் கனெக்ஷன் காட்சிகள் அற்புதமான யுக்தி. ஆனால், அதில் நிகழும் சில அபத்தமான சண்டை காட்சிகள் அதோடு நம்மை ஒட்டவிடாமல் செய்கிறது. படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் ஒரே வார்த்தையில் ‘கிரிஞ்ச் மேக்ஸ்’ ! விரிவான விமர்சனம்: ஒரு அரசனின் அறம், அவன் சத்தியத்தின் வலிமை, போர், வன்முறை, போன்ற விஷயங்களைத் தொட்டு நகரும் இந்தத் திரைப்படத்தில் முன் ஜென்மம், சூப்பர் பவர் போன்ற ஃபேண்டசி படத்திற்கான கூறுகளும் உள்ளன. இதில், மேல் சொன்ன எதையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்தாத இந்த ’கங்குவா’, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் திரைப்படமாகவே உள்ளது. படத்தின் பெரிய பலங்கள் சூர்யா, தொழில்நுட்பக் குழு. இந்தப் படத்திற்காக மேக்கப், உடல் தோற்றம், உடல் மொழி என அனைத்திலும் தன் உழைப்பை அர்ப்பணித்துள்ளார் சூர்யா. ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக வடிவமைக்காததால் அது ஒரு சாதாரண கமர்சியல் ஹீரோவாக மட்டுமே சுருங்கி விடுகிறது. யார் இந்த ’கங்குவா’? அவன் ஏன் இத்தகைய சத்தியத்தை காக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளும், காரணங்களும் வைத்திருக்கலாம். அது இல்லாததால் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மால் சரியாக ஒட்டமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்களும் நாம் ஏற்கனவே கண்ட பல பீரியட் பட கதாபாத்திரங்களையே நியாபகப்படுத்துகிறது. அவர் ஏன் இவ்வளவு பலசாலியாக இருக்கிறார் என்றால் அவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்கிற அளவில் தான் அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பதில் சூர்யாவின் நடிப்பிற்கு முக்கிய பங்குண்டு. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முதலில் குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவாளர் வெற்றியின் காட்சியமைப்புகள். அத்தனையும் அற்புதம். குறிப்பாக, இயற்கையான ஒளிகளை வைத்து அவர் காட்சியமைத்திருந்த பீரியட் காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளர் நிசாத் யூசப் கிளைமாக்ஸ் காட்சிகளில் செய்திருக்கும் நான் லீனியர் கட்ஸ் அற்புதம். ஆனால், படத்தின் முதல் பாதியில் வரும் அந்த காமெடி கிரிஞ்ச் காட்சிகளை நிச்சயம் பாரபட்சமின்றி வெட்டியிருக்கலாம். மறைந்த கலை இயக்குநர் மிலனின் சிறப்பான செட் வடிவமைப்புகள் மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவை. குறிப்பாக ஒவ்வொரு குடிகளுக்கான ஊர், வீடுகள், இடங்கள் எப்படி இருக்கும், அந்த காலத்து ஆடை வடிவமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை சரியாக வடிவமைத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆங்காங்கே காட்சியை மெருகேத்தியது. ஆனால், சில இடங்களில் இரைச்சலாகவும் தோன்றியது. பாடல்களில் ’தலைவனே’ பாடல் இடம்பெறும் காட்சி நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு பாடல் அவரின் பழைய தெலுங்கு பாடல்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் பெரிய பலவீனம், இயக்குநர் சிவாவின் எழுத்து. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் இடம்பெறும் தற்காலத்தில் நடக்கும் அந்த 30 நிமிட காட்சிகள் மொத்தமும் அபத்தமே. ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் பழங்குடி கதாபாத்திரங்கள் சாதாரணமாகவே சப்தமாக பேசும் கதாபாத்திரங்களாக வடிவமைத்தது பெரிய சலிப்பை ஏற்படுத்தியது. திரைக்கதையில் எந்த வித திருப்பங்களோ, ஆழத் தன்மையோ இன்றி நகர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. காரணம், இதுபோன்ற ஒரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு பீரியட் படத்தில் நேர்த்தியான எழுத்து இருக்க வேண்டாவா…? கற்பனை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அந்த கற்பனை மட்டுமே சுவாரஸ்யமான கதையாகி விடாது தானே? இதுவே ’கங்குவா’ சறுக்கும் முக்கிய இடம். விமர்சிக்க வேண்டிய இடமும் கூட. ‘கங்குவா’ கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி, பழங்குடி பெண்கள் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் நடந்தேறும் ஒரு நான்லீனியர் சண்டை காட்சி ஆகிய காட்சிகள் மட்டுமே நமக்கு சுவாரஸ்யமாக இருந்தது. கதாபாத்திர வடிவமைப்பில், திரைக்கதை நேர்த்தியில் கவனம் செலுத்தாததால் இது வழக்கமான கமர்சியல் படமாக மட்டுமே நிற்கிறது. அடுத்தது, இரண்டாம் பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வைத்து முடித்துள்ள யுக்தி. இது வெற்றிகரமான ஃபார்முலா என சமீக கால படங்கள் பெரும்பாதியில் பயனபடுத்துகின்றனர். ஆனால், அதற்கான தேவையைப் பொறுத்தே அது சுவாரஸ்யமாக அமையும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ‘கங்குவா’. மேலும், வில்லன் கதாபாத்திரமான பாபி டியோலே சரியாக வடிவமைக்கப்படாததால் அவரது மகன் என கிளைமாக்ஸில் அறிமுகமாகும் அந்த ’தம்பி’ நடிகரின் கதாபாத்திரம் மட்டும் எப்படி பார்ப்போருக்கு அழுத்தம் தரும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் பழங்குடி அரசன் என்றால் அவனது வசனங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், அழுத்தமாகவும், இடம்பெற்றிருக்க வேண்டும்? இதில் எல்லாம் சரியாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி, மற்றும் ஒரு அழுத்தமில்லா முயற்சி! https://minnambalam.com/cinema/kanguva-movie-review/1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு தெரிந்தே செய்யப் பட்டது. இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது… முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது. அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம், சில வேளை…. 1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது. 2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது. 3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. 4) எவருடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது. 5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன். இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.1 point- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
நன்றி புரோ, தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு. 😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா? அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. Rejected. 🤣 நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.1 point- மூடிய என் முகம்
1 pointமூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.1 point- நடனங்கள்.
1 point1 point- நடனங்கள்.
1 point- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointநன்றி. பார்ப்பாரற்று எங்கோ இருந்த “மூனா என்னும் தோழமைக் கரம்” பதிவை மீண்டும் கொண்டு வந்த மோகனுக்கு நன்றி. இங்கே தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றியை ஒட்டு மொத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். “மூனாவின் கிறுக்கல்கள்” புத்தகத்துக்கு அதிகம் செலவாகி இருக்கும் என கிருபன் கேட்டிருந்தார். உண்மை. ஒரு பதிவாக இருக்கட்டுமே என்றுதான் அதை வெளியிட்டேன். (அதற்கும் ஒரு கதை இருக்கிறது) புத்தகத்தை பார்க்க விரும்பினால் இந்தப் பக்கத்தில் pdf வடிவத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/711/71035/71035.pdf மீண்டும் ஒரு தடவை அனைவருக்கும் நன்றி.1 point- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointமூனாவைப் பற்றி விக்கிப்பீடியாவில்..... https://ta.wikipedia.org/wiki/மூனா1 point - இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.