Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    30
    Points
    88816
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19667
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33807
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/23/24 in all areas

  1. இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு. எனவே போட்டியில் முதலிடத்தைப் பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂
  2. “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம். 😂 🤣
  3. 🤣................ வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி................... வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு வாழ்த்து.............🤣. 🤣...................... சும்மா இருக்கின்ற அந்த மனுசனை போய் வம்புக்கு இழுக்கின்றது................... அப்புறம் அந்த ஆள் வந்து சீமானைத் தான் அடி அடி என்று அடிக்கப் போகின்றார்............ நீங்கள் அந்த சீமான் - ரஜனி திரியில் சேதம் பெரிதாக இல்லாமல் தப்பி இருப்பதே உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்.................🤣.
  4. உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்..பாடகர்கள் விழவைத்தே மானத்தை வாங்குகிறார்கள்... இன்னும் எத்தனையோ விதமான கூத்துக்கள்.. இதனைப் பார்க்கும்போது..கனடாவில் பெற்றொரின் பண்பு கற்காலத்துக்கு செல்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.. நன்றி விசுகர் உங்கள் வீட்டுப்புரட்சிக்கு
  5. அர்ச்சுனா : கற்றுக்கொள்ள வேண்டியது! இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவைச் சட்டமன்றமாகும். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தன்மையைக் கொண்டது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார் என்பது மரபு. 1972 மார்ச் 22 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து முற்று முழுதான இறைமை கொண்ட நாடாகியது. அதாவது குடியரசானது. அதனையடுத்து பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மரபுகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றைப் பேணும் வகையில் நிலையியற் கட்டளைச் சட்டமும் உண்டு. ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நிரந்தரமான இடத்தில் ஆசனங்கள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனைய உறுப்பினர்களின் ஆசன இடங்கள் அவ்வப்போது மாறுபடும். ஒரு உறுப்பினர் இன்னுமொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் குறித்த உறுப்பினர் உரையாற்றும் நேரம் வரும்போது அவருக்குரிய ஆசனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆசனத்துக்குரிய ஒலிவாங்கியில் தான் அந்த உறுப்பினர் பேசவும் வேண்டும். ஆக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நடைபெறும் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாத்தின்போது மாத்திரம் எந்த ஒரு உறுப்பினரும் வேறு ஆசனங்களில் இருந்து உரையாற்ற முடியும். ஆகவே இந்த மரபுசார்ந்த நடைமுறைகள் உறுப்பினர்களுக்குரிய ஒழுக்கங்கள். மற்றும் சிறப்புரிமை என்பது விசேடமானது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எந்த விடயத்தையும் துணிந்து பேசலாம். சுட்டிக்காட்டலாம். ஆனால் தகவல்கள் தவறாக இருக்கக்கூடாது. தகவல்கள் தவறு என்று வேறு யாராவது ஒரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சிஜனை எழுப்பினால் குறித்த அந்த உரையின் சில பகுதிகள் ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்குவார். ஆகவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகள் அவற்றின் கீழ் உள்ள நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வரையறுப்பதாகும் நிலையியற் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் - உரிமைகளை வழங்க மறுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் அதன் கொள்கைத் தீர்மானங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இந்த அரசியல் யாப்பில் இல்லை என்பதும் பகிரங்கமானதுதான். ஆனால் நாடாளுமன்றம் என்பது ஒரு 'அரச சபை' அதற்குரிய 'மாண்புகள்' 'மரபுகள்' பேணப்பட வேண்டும். எந்த ஒரு எதிர்க் கருத்துள்ள நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மரபுகளை பேண வேண்டியது கட்டாயம். அது ஒரு அரசியல் பண்புடன் கூடிய நாகரிகம். எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாதிடும்போதுகூட நாகரிகம் உண்டு. வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒருவர் சபைக்குச் சமூகமளிக்காத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதுகூட நாடாளுமன்ற மரபல்ல. இவ்வாறானதொரு கட்டமைப்பு உள்ள நிலையில் புதிதாகத் தெரிவான உறுப்பினர் அர்ச்சுனா 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அது முதலாவது அமர்வுதான். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட முன்னரே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைக்காக முதலாவது அமர்வு கூடிய முறையும் கேள்விக்குரியதுதான். ஆனாலும் மரபு பற்றிய புரிதல் என்பது மிக முக்கியமானது. 'அரச சபை' என்றால் நிச்சியமாக ஆசன ஒதுக்கீடுகள் இருக்கும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் பிரத்தியேகமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுவும் அனுபவமுள்ள நாடாளுமன்ற படைக்கல உதவி சேவிதர்கள் அது பற்றி விளக்கமளித்தபோதும் அதனை மறுத்துரைத்த அந்த உறுப்பினர், அதற்கு வழங்கிய விளக்கம் அரசியல் பண்பல்ல. பல மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது வேறு. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அரசியல் விடுதலை கோரி மெதுமெதுவாகச் சிதைவடைந்து வரும் ஒரு சமூகத்தின் புதிய பிரதிநிதியாக சபைக்குள் வந்த ஒரு புதிய உறுப்பினர் அநாகரிகமாக நடந்துகொள்வது அச் சமூகத்தை மேலும் தலைகுனிய வைக்கிறது. 1883 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்ட சபைகள் மற்றும் 1948 இன் பின்னரான நாடாளுமன்றங்களில் மாபெரும் தமிழ் சட்ட மேதைகள் உறுப்பினர்களாக இருந்த இடத்தில் சில தமிழ் உறுப்பனர்கள் நடந்துகொள்ளும் முறை அரசியல் பண்பல்ல. 2004 ஆம் ஆண்டு ஈழவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது எதிர்க்கட்சி ஆசனத்தை விட்டு அரச தரப்பு ஆசனங்களிலும் மாறி அமர்ந்த கதைகள் உண்டு. ஆனால் ஈழவேந்தனை அறிவுசார் உறுப்பினராக ஏனைய சிங்கள உறுப்பினர்கள் மதிப்புக் கொடுத்திருந்தனர். ஈழவேந்தன் வயது மூப்பினால் அவ்வாறு செயற்படுகிறார் என்ற வாதங்கள் அன்று இருந்தன. அப்போது சபாநாயகராக இருந்த வி.ஜே.மு லொக்குபண்டார ஈழவேந்தனின் ஆங்கில மொழி உரைகளை செவிமடுத்து அதற்கு மேலும் பொருள் விளக்கம் கேட்டதையும் மறுப்பதற்கில்லை. நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது. அதுவும் புதிய தமிழ் உறுப்பினர்களின் செயற்பாடுகள் முற்போக்கான மற்றும் அரசியல் அபிலாஷை நோக்கில் இயங்க வேண்டியது அவசியமானது. இது ஒவ்வொரு தமிழ் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம். ”ஒருவன்” ஞாயிறு வார இதழின் ஆசிரியர் தலையங்கம் https://oruvan.com/sri-lanka/2024/11/23/what-archuna-mp-needs-to-learn
  6. சிலவேளை அந்தப் பாரிய கல்… இரத்தினக் கல்லாகவும் இருக்கலாம். வடிவாக தண்ணீரில் கழுவி விட்டு பார்க்கவும். 😁
  7. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  8. சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.
  9. பிலிப்பைன்ஸுக்கு...போக இருக்கிற ஆட்கள் இப்பவே, உங்கள் வேலை இடத்தில், லீவுக்கு விண்ணப்பித்து வைக்கவும். பாஸ்போட், விசா, விமான சீட்டு, ஹோட்டேல், சாப்பாடு, மசாஜ்... எல்லாம் எங்களுடைய பொறுப்பு. நீங்கள்... ஒரு சூட்கேசில் உங்கள் உடுப்புக்களையும், வழக்கமாக பாவிக்கிற... பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி குளிசைகளையும் மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள். 😂 எந்த நேரமும் உங்களை விமான நிலையத்திற்கு ஏற்றிக் கொண்டு செல்ல இரண்டு பிலிப்பைன்ஸ் பெண்கள் வந்து, உங்கள் வீட்டு அழைப்பு மணியை... "டிங்... டொங்..." என்று அடிப்பார்கள். ஆயத்தமாக இருங்கள். 🤣
  10. உங்களுக்கு... சமூக ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? சுமந்திரன் பதவியில் இருக்கும் போது, மிதப்பிலை விட்ட அறிக்கைகளைத்தான்.... மேலே உள்ள பிரபல பத்திரிகைகள், தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. அதனை திரட்டிப் போட்டால்... உங்களுக்கு கோபம் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால்... அதற்கு நான் என்ன செய்ய..? அவர் சம்பாதித்து வைத்தது இவைதான். அதனால்தான்... மக்கள் சுமந்திரனுக்கு, ஒய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.😂 அவர் செய்த வேலையாலை... வீட்டில் இருந்து, கொட்டாவி விட வேண்டிய நிலை வந்திட்டுது. 🤣 இல்லாவிடில்... சுமந்திரன் நேற்று, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க முதல் ஆளாக, கோட்டு சூட்டுடன் போய் நின்றிருப்பார். 🤣 காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂 நன்றி வணக்கம். 🙏
  11. என்னிடத்திலும் பிழை இருக்கிறது. 47 கேள்விக்கு சரியான புள்ளிகள் வழங்கியிருந்தேன். ஆனால் இங்கு எழுதும் போது தொகுதி என்பதற்கு பதிலாக மாவட்டம் என்று முதலில் எழுதி விட்டேன். அதனால் ஏற்பட்ட குழப்பம் .
  12. ஓம்…. இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை. அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்…… அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன். மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள். இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.
  13. மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன். எவ்வள்வு நல்ல பார்ட்ஸ் எல்லாம் இருக்கு, exhaust pipe தான் வேணும் என்பது சிலரின் ரசனை போலும்🤣
  14. Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.
  15. முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.
  16. மன அழுத்தம் காரணமாக கஷடபடட மகனைக்கவனித்து உரியசிகிச்சை கொடுத்து அவதானமாக இருந்திருக்க வேண்டும். வீண் பழியை சுமந்து காவலில் வாழப்போகிறார். தந்தைக்கு அஞ்சலிகள்.
  17. எனக்கு மிகவும்பிடிக்கும். இனிப்பான அரைப்பதமான கொய்யப் பழம் பார்சல் பிளீஸ்
  18. அய்யருக்கு நீங்கள் சொன்னது அருமையான பதில் அண்ணர். இந்த சம்பிரதாயங்களை மாற்றுவதில் உங்களை போன்று பல ஆயிரம் பேர் பங்குபெறவேண்டும். ஆனால் இதட்கு எதிர்மறையாக இந்தியாவில் இருந்து சில முறைமைகள் புகுத்தப்படுகின்றமையை நான் காண்கிறேன், அடிமைத்ததனத்தை உறுதிசெய்கின்ற வகையில்!
  19. என்னால் இதை நம்ப முடியவில்லை… நம்ம கப்ஸ் ஆ எழுதியது 🤔
  20. முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது? இலங்கையின் பேரினவாதத்தின் அடிநாதமாக பெளத்த மதம் உள்ளது, எவ்வாறு தமிழர்கள் தமிழ் தேசியத்தினை தமது இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாக பெளத்தம் உள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுவதன் மூலம் வழமையாக இருந்து வந்த தமிழ் தேசிய கோட்பாட்டிலிருந்து வெளியே வந்து சிங்கள பேரினவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் இருக்கலாம் ( இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள்தான் தெரிவு செய்தார்கள், சிங்கள மக்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் ஏன் காலில் விழுந்தார்கள் என்று). இலங்கையில் இரண்டு மதங்கள் பெரும்பாலும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன ஆனால் மற்றய இரு மதங்கள் அரசியலில் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை, ஆனால் தமிழ் அரசியலில் இதுவரை இருந்த தேசிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
  21. "சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து; பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றி யொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும் என புறநானுறு 312 பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன. "ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறம்.312) மகன் எங்கு உள்ளான் என்ற தனக்கு தெரியாதது, ஆயினும் புலி கிடந்து சென்ற கல் குகை போல அவனை ஈன்ற வயிறு இதுவே. போர் ஒன்று நடந்தால் எங்கிருந்தாலும் போர்களத்திற்கு வருவான் என்று கூறும் சங்க தாயை புறநானுறு 86 இல் காண்கிறோம். "......................ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறே இதுவே தோன்றுவன் மாதோ போர்களத் தானே" (புறம்.86) போர்ப் பறை கேட்டுத் தன்னுடைய குலத்தினரும் போர் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவளாய் தனக்கு ஒருவனே யன்றி வேறு மகன் இல்லாத நிலையில் அவன் மிகவும் சிறியவனாதலால் தலைக்கு எண்ணெய் தடவி வாரியும், வெண்மையான ஆடையை உடுக்கச் செய்தும், கையில் வேலைக் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்க என ஏவி,தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,பாடினார் ஒக்கூர் மாசாத்தியார் புறநானுறு 279 இல்: "ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென" (புறம்.279) அது மட்டும் அல்ல, மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை, "வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல்.1003) எனவும், "ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின்" (புறம்.9) எனவும் வரும் சான்றுகள் உணர்த்துகின்றன. பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக என புறநானுறு 71 இல் சூள் உரைத்தான். அதே போல,சோழன் நலங்கிள்ளி ‘பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும் என புறநானுறு 73 இல் கூறுகிறான். சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் 'நடுகல்' எனப்பட்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை. உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவது - சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர். உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற 'நடுகல்' வைப்பது தமிழ் மரபு ஆகும். இதை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது: "காட்சி, கால்கோள் நீர்ப்படை 'நடுகல்' சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்"- தொல்காப்பியம் இனி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும் செய்தி ஒன்றை கீழே தருகிறேன்: "பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட் டார்கொள்ள பாசாற்றூர்ப் பூசல்லிட பூசல் சென்று கோவூர் நாட்டுச் சிற்றிடையாற்று முதுகொன்றை மூக்கின் மீமலை அயங்கயக் கரையில் சென்று முட்டி மலையநூருடைய செம்பர் மகன்னான காரிப்பெருமான் உரையில் அம்பு மாள எவ்வி பத்திரம் உருவி எதிரே சென்று பட்டான்." மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன். தன்னிடமிருந்து சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா இல்லை. இடுப்பில் இருந்த குறுவாளை கையிலே உருவிக் கொண்டான். வெள்ளம் போன்ற மாற்றான் படை மீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன் என கல்வெட்டு கூறும் "காரிப்பெருமான்" என்பது அப்பெரும் வீரனின் பெயர். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்." (குறள் -50), என்பது மனித தெய்வங்கள் பற்றிய வள்ளுவரின் மதிப்பீடு. மாவீரர்களும் மனிதர்களே. எனினும் அவர்கள் தமது ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தமது உடைமை, உயர்வு, உயிர் அனைத்தையும் நல்க முன்வந்தவர்கள். புறநானூறு 221ம் பாடல் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுடைய நடுகல்லைக் குறிப்பிடுகிறது. மன்னனின் உயிர் நண்பரான பொத்தியார் நடுகல்லைப் பரவிய செய்தி இப் பாடலிற் கூறப்படுகிறது. "பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே; அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே; திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அனையன் என்னாது, அத்தக் கோனை, நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று; பைதல் ஒக்கல் தழீஇ, அதனை வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! ‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக், கெடுவில் நல்லிசை சூடி, நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே". அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர் என்கிறார். இதே போல, அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நாட்டி விழாக் கொண்டாடப்பட்டது. அதில் ஒளவையார் கலந்துகொண்டார். அப்போது அவனது பெருமையை நினைத்து ஒளவையார் வருந்திப் பாடிய பாடல் புறநானூற்றில் 232ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. "இல்லா கியரோ, காலை மாலை அல்லா கியர்யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ 5 கோடு உயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே." காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒரு சிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ? என்கிறார் ஒளவையார். இனி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரர்களில் ஒரு பெண் வீரியை மட்டும் இப்போது விரிவாக சங்க பாடல் மூலம் பார்ப்போம். மற்றவர்களை பின் ஒரு நேரம் பார்ப்போம். "அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]": "முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய், இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என, வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் கொண்டல் மா மலை நாறி, அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262] அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்! சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள். இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது? சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள். அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்வளவோ உவகை பூத்திருக்கும்? அது போல என் மனசு பூக்குது! உடம்பெல்லாம் ஆடுது [மெய்ம் மலிந்து ]!ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் என்னவள் ஆக்கிக் கொண்டேன். அவன்! அவ்வளவு ஏங்கிக் கிடந்தவன்; மனசே அத்துப் போனவன்; ரொம்ப நாள் காதல் .. கைகூட மாட்டேங்குது. மனக் களத்தில் உள்ள வெம்மை தீர, அவள் உடல் களத்தில் வெம்மை தீர்த்துக் கொண்டான் இன்றே! மிஞிலி தீர்த்துக் கொண்டது போல்… அந்த அருவிச் சாரலிலே, இருவரும் கூடும் இன்பத்திலே, பட்டுத் தெறிச்சிதாம் இன்பத் துளி. அருமையான பதிவு. காதலன் காதலியோடு புணர்கின்றான், இருவரும் இன்பம் அனுபவிக்கின்றார்கள். எப்படி என்பதற்கு ஒரு புறப்பொருள் கொண்ட உவமை, கிளைக்கதையாக போகிறது. “நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்” என்பது போல, பல கருத்துகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் கிளைக்கதை. இதில் 2 மேற்கோள்களை ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் – one by William Shakespeare and another by Lord Byron. 1. “Sweet is revenge – especially to women” (Lord Byron in Don Juan) 2. “If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?” (William Shakespeare in The Merchant of Venice.) மேற்சொல்லப்பட்ட இரு மேற்கோள்களுக்கும் இந்த அகநானூறு பாடல் பொருந்திப் போகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. தோட்டகார சின்ன மாமா .......! 😍
  23. கப்பல் கவுழுது .......ரயில் புரளுது .......விமானம் விழுந்து நொறுங்குது இவை காலாகாலமாய் நடப்பதுதான் ......அதற்காக யாரும் பிரயாணங்களைத் தவிர்ப்பதில்லை பிரியன் . ...... நாங்கள் தயார் . ......யானையைப் பூனையைப்போல் கையாளுவோம் . ........ பிலிப்பைன்ஸுக்கு போய் நாய் இறைச்சி உண்பதைவிட தாயே மேல் .......!
  24. 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் "வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️ கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣 அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂
  25. அதுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா . .........! 😴 கடைசியாக நிக்கும் மூவரையும் இந்தப் பயணத்தில் சேர்க்கலாமே ......! 😁
  26. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.
  27. அய்யா..காணும் ..திருப்தி...சின்ன சும்மர் வாசித்து முடித்து பதில் எழுத டைம் கொடுக்கணும் சார்...நன்றி ..சிறியர்
  28. திருகோணமலையில் விடுதலைப் புலிகள் கலை விழாவை நடத்தினர் 08/04/2003 உவர்மலை விவேகானந்தா கல்லூரி, திருகோணமலை
  29. வீட்டிலை... யாரும் இல்லையா? படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம் கதவை திறங்க.
  30. இந்தப் பிள்ளை பிலிப்பைனஸ் பிள்ளை மாதிரி இல்லை. பிலிப்பைன்ஸ் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்கள். முதலாவதாக வருபவர் கவனம்.
  31. 44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 60 புள்ளிகள் 2) பிரபா- 60 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) வில்லவன் - 52 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 51 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 50 புள்ளிகள் 9) நிலாமதி - 50 புள்ளிகள் 10) அல்வாயான் - 49 புள்ளிகள் 11) goshan_che = 48 புள்ளிகள் 12) நிழலி - 48 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14)கந்தையா 57 - 46 புள்ளிகள் 15)நூணாவிலான் - 46 புள்ளிகள் 16)கிருபன் - 44 புள்ளிகள் 17) ரசோதரன் - 44 புள்ளிகள் 18) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 19) வாத்தியார் - 42 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)
  32. நான் 30 கேள்வி என்று மாறி நினைத்துவிட்டேன்! மன்னிக்கவும் @கந்தப்பு. திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️
  33. 47) திருமலை தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 58 புள்ளிகள் 2) பிரபா- 58 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) வீரப்பையன் - 50 புள்ளிகள் 5) வில்லவன் - 50 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 49 புள்ளிகள் 7) அல்வாயான் - 49 புள்ளிகள் 😎 ஈழப்பிரியன் - 49 புள்ளிகள் 9 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 49 புள்ளிகள் 10)goshan_che = 48 புள்ளிகள் 11) நிழலி - 48 புள்ளிகள் 12) நிலாமதி - 48 புள்ளிகள் 13) கந்தையா 57 - 46 புள்ளிகள் 14) நூணாவிலான் - 46 புள்ளிகள் 15) சுவைபிரியன் - 45 புள்ளிகள் 16)கிருபன் - 44 புள்ளிகள் 17) ரசோதரன் - 44 புள்ளிகள் 18) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 19) வாத்தியார் - 42 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 43, 45 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 94)
  34. இதை தேர்தலுக்கு. முன்னர் வெளியிட்டுயிருந்தால். சுமத்திரனுக்கு. 15 000 வாக்குகள். விழுந்து இருக்காது
  35. அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.
  36. சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.
  37. 🤣 சரி. உங்களுக்கு வாரம் முழுக்க விரதம் இருக்க வைக்கும் இன்னொரு விசயத்தையும் நினைவு படுத்தி விடுவம். மத்திய நூலகத்திற்கு அருகில், கூட்டுறவுக் கடைக்கு முன்னால் இருக்கும் WUS கன்ரீன் நினைவிருக்கிறதா? காலா காலமாக முஸ்லிம் முதலாளிகளால் நடத்தப் பட்ட இந்த கன்ரீனில் மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். "குடல் கறி" என்று ஒன்று விற்பார்கள். பிளேட்டில் குடல் கறியைப் போட்டதும், அதில் இருக்கும் எண்ணை தனியாகப் பிரிந்து பிளேட்டில் நிற்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!
  38. இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன். 1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும். இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர். இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது. இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம். 2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி. இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும். இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர். யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்). ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல. 3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின். இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்). அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன.
  39. ஆனானப் பட்ட சுமந்திரனே... சுயேட்சை வேட்பாளர்களாக நின்ற ... அர்ச்சுனா, கௌசல்யாவை விட குறைய வாக்குகள் எடுத்த மாதிரி... ஈழப்பிரியன். 😂
  40. கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣
  41. நவீன இயந்திரங்களின் வரவால் வரப்பை இலகுவாக கோதிவிடுகிறார்கள்!
  42. இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..அது சரி அவ்விடத்திலை பள்ளிவாசல் இருக்கே..அங்கு மவுலவியின் காலில் விழவில்லையா...அய்யா நான் கொலிடேக்கு ஊருக்கு போய் வந்துவிட்டென்..
  43. சபாஷ்... பலே... அனுரவுக்கும், டிரம்புக்கும் சரியான போட்டி. 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣
  44. வாழைத்தண்டில் வலு சிறப்பான கறி ......... இவைகளை நீங்கள் நேரம் கிடைக்கும்போது செய்து சாப்பிடலாம் . .....மிகவும் சுலபமாய் ஆக்கக் கூடியவை . ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.