Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    19123
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    2954
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1836
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/05/24 in all areas

  1. கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை கார்த்திகையில தியாக புராணம் போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..
  2. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  3. போன மாதம் வரையில் யாழ் திரிகளில் "ஆதாரம்" கேட்பது ஓரிருவர் தான்! இப்ப எல்லாரும் "ஆதார புருஷர்களாக" 😎மாறி விட்டார்கள். மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂
  4. இந்த திரியை........பார்...பார் ....என்று பார்த்துக் களைத்துப் போனன்..
  5. ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க. பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம், அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது. மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு. தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.
  7. புலர் அறக்கட்டளையால் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/24 பகுதி2 PULAR TRUST Contact +94777775448 (whatsapp, viber, telegram, signal) தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இருந்து பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர். ஒளிப்பதிவு உதவி செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், சகோதரி வனஜா.
  8. பிரித்தானியாவில் பிரதமராக வருபவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் PPE - politics, philosophy and economics படித்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. தொழில்முறை அரசியல்வாதிகள் சகல தகுதியுடனும் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அருச்சுனா உள்ளே தள்ளப்பட்டார். ஒரு 6 மாதங்கள் கொடுத்துப்பாருங்கள். அதற்கிடையில் யாரும் வழக்குப்போட்டு தகுதி நீக்கமடையாமல் இருந்தால் நல்லதொரு அரசியல்வாதியாகப் புடம் போட்டு வருவார்.
  9. சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10 செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது. திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.
  10. விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று. ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்......................
  11. 🤣...................... வெளியால் வந்தால் அரைக் கிலோ கறுப்புச் சாயம் அடித்துக் கொண்டு வருகின்ற மகிந்த, மைத்திரி, துரைமுருகன் அல்லது நாலு விக்குகளை மாற்றி மாற்றிப் போடும் ஸ்டாலின் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன் போல..............🤣. அதை விட்டால் ஜோ பைடன் அல்லது ட்ரம்ப்.................. நம்ம தோஸ்து பரவாயில்லை தானே................😜. இந்த அரசியல்வாதிகள் தினமும் எவ்வளவு நேரம் ஒப்பனைக்காக செலவிடுகின்றார்கள் என்ற ஒரு கேள்வி எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கின்றது............. முக்கியமாக ஸ்டாலின் & மகிந்த.............
  12. நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர். ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த போராளிகளுக்கு ஜேவிபி போல தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். செய்வாரா?
  13. இன்றைய கருத்து நாளைக்கு உதவாது.
  14. காணோளி பற்றிய என் கருத்தை தான் அங்கே பதிந்திருந்தேன், நுணாவிலான். இதே போலவே தான் விக்கினேஸ்வரன் ஐயாவும் முதலாவது உரையை ஆற்றியிருந்தார் என்பதன் மூலம் இவை எல்லாம் கேட்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதி வாசிக்கப்படும் உரைகள் என்று சொல்லியிருந்தேன். இவர்கள் போன்றவர்கள் எந்த காத்திரமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று நான் நம்பவில்லை என்பதும் அதன் பொருள். அது தான் நாம் அறிந்த வரலாறும். இன்னும் இன்னும் அகலமாக தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் அகதிகள், வெளிநாடுகளில் ஒற்றைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு பரந்த பார்வை இருப்பது போல கூட இந்த உரை தெரியலாம். ஆனால் பாரளுமன்றத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளிலேயே அர்ச்சுனா தன்னை மட்டுமே சுற்றி வரும் ஒருவர் என்பது தான் மீண்டும் மீண்டும் தெரிகின்றது. நித்தியின் அல்லது ஜக்கியின் ஒரு பேச்சை கேட்டீர்கள் என்றால், அவையும் அசத்தலாகவே இருக்கும். எல்லாவற்றையும் தொகுத்து, அந்த மனிதர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் ஏமாற்றுகளாகவே தெரியும், முடியும். 'ஒருவரின் கருத்து அவரைத் தாண்டிப் போவதில்லை.................' என்று ஒரு வரி இருக்கின்றது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை தாண்டி, அவர் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பேதும் இல்லை என்று இதைப் பொருள் கொள்ளலாம்.
  15. மிக சரியான பார்வை. மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது. அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார் என முடிப்பார்கள். எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள். தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும். இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம். யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .
  16. 🤣 இதுவாவது பரவாயில்லை. அங்கால அண்ணன் சீமானை, துரைமுருகனை எல்லாம் தம்பிகளே விமர்சிக்க வெளிக்கிட்டார்கள். இனி யாழில் வந்து “காசி யாத்திரை போகும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்” என்ற வகையில் எழுதினால்தான் பொழைக்க முடியும் போல இருக்கு🤣. 🤣 எல்லாரும் நாட்டாமை எல்லோ…அப்படித்தான் இருக்கும்🤣 ஓம் அண்ணை. இதில் ரணில் போன்ற இனவாதிகளுக்கு இரெட்டை இலாபம். 1. இலஞ்சம் கொடுத்து ஆதரவையும் பெற்றாயிற்று. 2. இனி நாம் பையில் போட்ட எலிகள் போல இதைவைத்தே அடிபடுவோம். கவனித்தேன். ——— நன்றி
  17. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை. தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம். ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன்.
  18. பையன் சார், அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்......................🤣. நீங்கள் சொல்வது போலவே இன்றைய வீரர்கள் மின்னல் வேகத்தில் அடிக்கின்றார்கள், எப்படி எப்படி எல்லாமோ அடிக்கின்றார்கள்........ 'லப்பர் பந்து' படம் பார்த்தீர்களா.............👍. அந்த நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்கள், டேவிட் பூன், ஷேன் வார்ன் போன்ற ஓரிருவரைத் தவிர, மிகவும் சிறப்பான உடற்தகுதியுடன் இருந்தார்கள். கரீபியன் வீரர்கள் இயற்கையிலேயே அப்படி இருந்தார்கள்............ எங்களின் அர்ஜூன பந்தைப் பார்த்து பார்த்து நடந்து கொண்டு திரிந்தார், இன்னும் பலரும் அப்படியே. இப்பொழுது பொதுவாக எல்லா நாடுகளின் வீரர்களும் நல்ல உடற்தகுதியுடனேயே இருக்கின்றார்கள்.......
  19. எத்த‌னை பேர் சேர்ந்து அடிச்சாலும் வ‌லிக்காது போல் ந‌டிக்கும் த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டில் இருக்கும் வ‌ரை த‌மிழ‌ர்க‌ளால் பெரிசா ஒன்றும் சாதிக்க‌ முடியாது🫤............. ப‌ஞ்சாப் சீக்கிய‌ர்க‌ளுக்கு இருக்கும் துணிவும் வீர‌மும் த‌மிழ் நாட்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு இல்லாம‌ போன‌து வ‌ருத்த‌ம் அளிக்குது..............................
  20. இன்னும் வ‌ர‌ வில்லை அண்ணா..............கொடுமை ப‌டுத்தாம‌ அந்த‌ அண்ணாவை விடுவிக்க‌னும்......................
  21. அருமையான‌ க‌ருத்து பெரிய‌வ‌ரே இவ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வு த‌மிழீழ‌ம் முக்கிய‌ம் இல்லை சீமானை புது பெய‌ர்க‌ளில் வ‌ந்து வ‌சை பாட‌னும்....................நேற்றுக் கூட‌ வாழும் புல‌ம் திரியில் த‌மிழீழ‌ மீட்ப்பு ப‌ற்றி எழுதி இருந்தேன் இதில் நீங்க‌ள் எழுதின‌ சில‌ வ‌ரிக‌ளை அதிலும் எழுதி இருந்தேன் நேர‌ம் இருந்தால் வாசியுங்கோ ந‌ன்றி.................................
  22. உண்மைதான். அனுர அரசு... ஆரம்பத்திலேயே, அதிரடி நடவடிக்கை மூலம் இவரை கைது செய்து, இனி வரும் காலங்களில்... தேவையில்லாத வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். காலம் காலமாக... இனவாதத்தை வைத்தே... அரசியல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த இப்படியான நடவடிக்கை மூலம்தான் கடிவாளம் போட முடியும்.
  23. பார் அனுமதியை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? சிறிதரன் போன்றவர்களின் பேர்கள் எப்படியும் வராது? அடுத்து என்ன???
  24. எத்தகைய சட்டங்கள் இருந்தாலும் மே.தகு , இறந்த மாவீரர்களை நினைவு கூரல். றோகண விஜய வீர தமிழர்களை கொல்லவில்லை. அவருக்கான வீர வணக்கம் ஒரு அரசியல் வருடல் என கொள்லாமா? இனப்படுகொலை என பா.மன்றத்தில் சொல்ல ஒரு துணிவு வேண்டும். அது மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டும் எமக்கான நீதி கிடைக்கும் வரை. நன்றி மறக்காமல் திரு சுமந்திரனுக்கு நன்றி சொல்லி தான் வைத்தியர் ஆக கடந்து வந்த மிக கடினமான பாதைகளை விபரிக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ( அவர் சுயேட்சையாக இருந்தாலும்) கொடுக்கும் நேரம் கூட இவ்வளவு "பேதி நேரம் " மிகவும் ஆச்சரியமளிக்கிறது.
  25. நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣 வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்… அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣.
  26. சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்களை விட நீதி நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம்……..
  27. 🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣) இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................
  28. ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தும் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன். மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது. மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும். நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.
  29. இவ‌ர்க‌ளே ஒரு புதிய‌ ஆயுத‌க் குழுவை உருவாக்குவின‌ம் பிற‌க்கு இவ‌ர்க‌ளே அவைக்கு வைக்கும் பெய‌ர் தீவிர‌வாதி....................இது தான் அமெரிக்க‌ன் அர‌சிய‌ல்😁................................
  30. "விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்று அங்கு குறைந்து வருகிறது. ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளையும் பிரசித்திபெற்ற சிவன் கோவில், மற்றும் ஜும்மா மசூதி அங்கு காணப்படுகிறது. இங்கு விவசாய குடும்பத்தில் பிறந்த ரமேஷ் என்ற இளைஞன் வாழ்ந்துவந்தான். உயர் வகுப்புவரை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றாலும், அதன் பின் உயர் கல்வியை தொடராமல், தந்தையின் விவசாயத்தில் முழுநேரம் கவனம் செலுத்தினான். அவன் எளிய விவசாயியாக தொடக்கத்தில் இருந்தாலும், தனது நிலத்திற்கான அர்ப்பணிப்பிற்காகவும், தனது பயிர்களின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் அவன் வாழ்ந்த கிராமம் முழுவதும் நன்கு அறியப்பட்டான். என்றாலும் அவனுக்குள் ஒரு குறை. தனது பாடசாலையில் படித்த சக மாணவியும் அந்த கிராமத்து குயவனின் மகள் மீரா, அவன் பாடசாலையில் படிக்கும் மட்டும் மிக அன்னியோன்னியமாக அவனுடன் நெருங்கி பழகியவள், உயர்வகுப்புக்கு பின்பு பல்கலைக்கழகம் புகுந்ததும், ரமேஷ் பல்கலைக்கழகத்தை நிராகரித்து, தந்தையின் பரம்பரை விவசாயத்துக்கு போனதும் மெல்ல மெல்ல விலகியது அவனுக்கு மிக கவலையை கொடுத்தது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கை உணர்வு தான் காதல். அதில் ஈடு கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? என்றாலும் அவனுக்கு இன்று வெறுப்பு வெறுப்பாக உள்ளது. நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள அந்த மீராவை, அவள் இன்று தூர விலகி போனாலும், அவனால் மறக்கமுடியவில்லை. பொதுவாக காதல் தோல்வி அடைந்தாலோ அல்லது காதலி இடையில் விலகிப் போனாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம் ... இப்படி எத்தனை எத்தனையோ, ஆனால் ரமேஷ் இவைகளில் இருந்து வேறுபட்டவன். ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்க அவளின் அழகு தான் பணப்பை விட முதலில் நிற்கிறது என்பதே உண்மை. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி என்பதை உணர்ந்த அவன், எப்படி அவன் மீராவிடம் முழுக்கவனம் கொண்டு காதலித்தானோ, அதைவிட பலமடங்குடன் சூரியன் தினம் தினம் முத்தமிடும் வயல்களைத் காதலிக்கத் தொடங்கினான். சில ஆண்டுகள் கழிய, ரமேஷ் விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, இன்று அந்த கிராமத்தில் இளம் தலைவர்களில் ஒரு பெரும்புள்ளியாக பண்பிலும் செல்வத்திலும் உயர்ந்து, சில விவசாயத்துடன் தொர்புடைய தொழிற்சாலைகளின் அதிபதியாகவும் இருந்தான். என்றாலும் அவன் தன்னை விவசாயி என்று சொல்வதிலேயே பெருமையடைந்தான். ஒரு நாள், பருவமழை இயற்கையை பச்சை நிறத்தில் வர்ணம் பூசும்போது, தன்னிடம் கார் இப்ப இருந்த பொழுதிலும், எந்தவித பெருமையும் இல்லாமல், மாட்டுவண்டி ஒன்றில் ரமேஷ் தனது வயலுக்கு கிராமத்து குயவனின் மகள் மீராவின் வீட்டை கடந்து போனான். அவன் மனதில் இன்றும் மீரா ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு காதல் நினைவும் விசேடமானதுதான் ... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பதட்டம், உணர்ச்சிப் பெருக்கு .. மறக்க முடியாத பசுமையான நினைவுகளே! கிராமத்துப் பாதைகளை அலங்கரித்த மணம் கமழும் மலர்களைப் போல அவளது கதிரியக்கச் சிரிப்பு வசீகரமாக அன்று அவனுக்கு இருந்தாலும், இன்றும் அவன் அந்த முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும், அவளின் பிரிவுதான், அது கொடுத்த வைராக்கியம் தான் இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்ததை அவன் எப்படி மறப்பான்? "உன் முதல் பார்வையே என்னை முட்டாள் ஆக்கியதை இன்றுவரை உணர்கிறேன் ..., உன்னை நினைத்து சிரிக்கிறேன் உன் கடைசி பேச்சு என் மூளையில் நீங்காத அழிக்க முடியாத கல்வெட்டு வாசகம் ... அதுதான் நான் யார் என்று எனக்கு உணர்த்திய வாசகம்!" அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். "அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்" அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும், பசியமரலையையும் களைந்தெறிவைத்து போல மீராவை ஏறிய ரமேஷ் ஆசைப்பட்டாலும், அவனால் முழுமையாக ஏறிய முடியவில்லை. அவன் அவளின் வீட்டை கடக்கும் பொழுது, அவனது கண் அவனை அறியாமலே அவளது வீட்டை நோட்டமிட்டது. அவள் அங்கு முற்றத்தில் தந்தையுடன் எதோ கதைத்துக்கொண்டு நின்றாள். "வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, " மூங்கீலென திரண்ட தோளினையும். மணத்தால் வெறியூட்டும், வளர்ந்த, ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும். மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய, நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும் . கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை அவன் கண்கள் எந்த வெட்கமும் இன்றி நாடிச் சென்றன. 'ஐயா கொஞ்சம் நில்லுங்கள். என்று மீராவின் அப்பா கூப்பிட்டுக் கொண்டு படலைக்கு வெளியே வருவதைக் கண்டான். 'மீரா பட்டம் பெற்றுவிட்டாள், வேலை தான் கிடைக்கவில்லை. உங்க தொழிற்சாலையில் பயிற்சி முகாமையாளர் பதவி வெற்றிடம் என்று அறிந்தேன். அதை ... ' என முடிக்கமுடியாமல் முடித்தார். கொஞ்சம் தூர முற்றத்தில் நின்ற மீராவை, ரமேஷ் வேலிக்கூடாக பார்த்தான். அவள் தலை குனிந்தபடி, கால் விரலால் எதோ மண்ணில் எழுதிக்கொண்டு இருந்தாள். கொஞ்சம் உற்றுப்பார்த்தான். ஆங்கிலத்தில் வெரி சாரி என்று அது இருந்தது. ரமேஷ் கொஞ்சம் உரத்து, மீராவின் காதில் விழக்கூடியதாக, 'என் தொழிற்சாலைகள் விவசாய உற்பத்தியையும், விவசாயத்துக்கு தேவையானவற்றையும் அடிப்படையாக கொண்டவை. உங்கள் மகள் பட்டதாரி, இதற்கு உடன்படுவாரா ?' என்று கேட்டுக்கொண்டு 'அவர் சரி என்றாள், வரும் திங்கட் கிழமை காலை பொது முகாமையாளரை விண்ணப்ப பத்திரத்துடன் அலுவலகத்தில், நேர்முகப்பரீட்சைக்கு சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு, மீராவின் அப்பா அதற்கு பதில் சொல்லமுன்பு ரமேஷ் புறப்பட்டுவிட்டான். மீரா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கொஞ்சம் முந்தியே ரமேஷின் தொழிற்சாலைக்கு போனாள். அங்கு ரமேஷ் இல்லை. பொது முகாமையாளர் அவளின் விண்ணப்பத்தை பெற்றுவிட்டு, கொஞ்சம் காத்திருப்பு அறையில் இருக்கும்படி கூறினார். கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், ரமேஷ் விவசாயிகளுக்கு தலைமை வகுத்து, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யும் முகமாக பேச்சுவார்த்தை ஒன்றுக்கு போய் இருந்தான். என்றாலும், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என்று கொடுக்க மறுத்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதனால் கடும் கோபத்துடன் மதியம் அளவில் அலுவலகம் திரும்பினான். ரமேஷ் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்துடனும் தனது அலுவலகத்துக்குள் நுழைவதை கண்ட மீரா, கொஞ்சம் பதற்றத்துடன் எழும்பி நின்று கவனித்தாள். அவன் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவளின் அலங்காரம், அழகு அவனுக்கு இப்ப ஒரு பொருட்டு அல்ல. அவன் எண்ணம் எல்லாம் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற் கதிர்களே! இன்னும் காத்து இருப்பதா, இல்லை பேசாமல் போவதா என்று மீராவுக்கு புரியவில்லை. அவள் எழும்பிய படியே நின்றுவிட்டாள். திரும்பி மீண்டும் இருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்தின் பின், அவள் இனி பிரயோசனம் இல்லை என்று மனதில் நினைத்தபடி, வீட்டிற்கு திரும்பி போக ஓர் இரு அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பொது முகாமையாளரிடம் இருந்து 'மீரா, நீங்க உள்ளே வரலாம்' என்ற சத்தம் கேட்டது. அவள் உள்ளே வந்ததும், பொது முகாமையாளர், 'உங்களுக்கு தேவையான தகுதி இருக்கிறது, எமது முதலாளியும் சம்மதித்துவிட்டார். நாளையில் இருந்து ஒரு ஆண்டுக்கு பயிற்சி, அது வெற்றிகரமாக முடித்தால், பணி நிரந்தரமாகும். சம்பளமும் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பயிற்சியை பெரும்பாலும் எம் முதலாளி ரமேஷ் தருவார்' என்று சொல்லி, உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று விடைகொடுத்தார். ரமேஸுக்கு தனது நன்றியை கூற மீரா விரும்பினாலும், ரமேஷ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அவன் ஒரு விவசாயியாக, ஓரளவு நீரை வழங்கி, அழியும் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல, மொனராகலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான். அடுத்த நாள், மீரா தனது பயிற்சியை தொடங்க அலுவலகம் வந்தாள் ரமேஷ் அவளுக்கு அடிப்படை பயிற்சிக்கான விளக்கத்தை கொடுத்ததுடன், நேரடியாக விவசாயம், மற்றும் அதனுடன் தொடர்புடையனவற்றை செய்முறையில் அறிவது அவசியம் என்பதை கோடிட்டு காட்டி, வயலில் அவளை கொஞ்ச மாதத்துக்கு பயிற்சி எடுக்க அனுப்பினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தைப்பற்றி அறியத் தொடங்க, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடத் தொடங்கினர், அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் பரந்த பரப்பிற்கு கீழே விவாதித்தனர். அதுமட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமான நிலையில், மீரா நிலத்தின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டதை ரமேஷ் கண்டுபிடித்தார். அவள் அடிக்கடி அவனுடன் வயல்களுக்குச் சென்றாள், அவளுடைய வேகமான விரல்கள் பழுத்த காய்கறிகளைப் பறிக்கவும், செடிகளை மென்மையாகப் பராமரிக்கவும் உதவின. வயல்வெளிகளுக்கும் மண்ணின் நறுமணத்துக்கும் நடுவே அவர்களது காதல் மீண்டும் மலர்ந்து, கிராமத்துச் சுவர்களில் ஏறிச் செல்லும் கொடிகள் போல இதயத்தைப் பின்னிப் பிணைந்தது. நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான் என்பதை அவள் உணர்ந்து, தான் முன்பு விட்ட தவறுக்கு ரமேஷ் இடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்! "சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு" "தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  31. 70 / 80 களில் உங்கள் வீட்டில் இப்படி விசேடம் நடந்தது நினைவில் உண்டா..? ரெல் மீ..
  32. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  33. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
  34. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  35. என்னங்க நான் ஜிம்முக்கு ஒர்க் அவுட் பண்ண போறேன்! கணவன் - ஹலோ! யாருங்க ஜிம் கோச்சா! கோச் - சொல்லுங்க ! என்ன வேண்டும் ! கணவன் - சார்! என் மனைவி ஹேமா! உங்க ஜிம்முக்கு தான் ஆறு மாதமா ஒர்க் அவுட் பண்ணராங்க! ஆனா ஒரு இம்புரூவ்மெண்ட்டும் தெரியலையே! கோச் - ஓ நீங்க ஹேமாவின் கணவரா! கொஞ்சம் இருங்க அவங்க எவ்வளவு சின்சியரா ஒர்க் அவுட் பண்றாங்க என்று நீங்களே பாருங்க!
  36. நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர். இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர். இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள். யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன்.
  37. இதுதான் பொயிட்ன். ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள். ஆனால் பாலச்சந்திரனை? ஏன்? இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது. ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள். ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள். இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள். அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது. ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை. ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது. 89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. ஒரே காரணம் இனவாதம். அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும். விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது. முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை. ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர். இதுதான் இனவாதம்.
  38. வணக்கம் நன்னிச்சோழன்.. நான் உங்களின் எங்கள் மண் பகுதி தொகுப்புகளுக்கு பெரும் ரசிகன். நீங்கள் எங்கள் தமிழீழ மண் தொடர்பாக சத்தமில்லாது பெரும் ஒரு ஆவண தொகுப்பினை செய்து கொண்டு இரக்கிறீர்கள். மிக்க மிக்க நன்றிகள்
  39. ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ? தடுமாறுதோ? என்று சும்மா பகிடிக்கு 😄😄
  40. ஈழத்தமிழர்கள் கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......! சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்- ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்- கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.
  41. இந்தியாவுக்கு எதிரான அரசு இலங்கையில் அமைந்தால் ஐயாவின் வீரவேச அறிக்கைகள் பாய்ந்து வரும் ஊடகங்களில் இது வழக்கமான ஒன்றுதான் . முள்ளி வாய்காலில் ஒன்றரை லட்சம் சனத்தின் அழிவுக்கு நீலி கண்ணீர் விடுவோர் இந்திரா காந்தியின் தவறான வழிகாட்டல் என்பதை இலகுவாக மறைத்து விடுகினம் . கண்ட கண்ட யாழ் சண்டியர்களுக்கும் இராணுவ பயிற்சியை கொடுத்து இலங்கையை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர் . பலர் நினைக்கினம் இந்திரா இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும் என்று அவர் உயிருடன் இருந்தாலும் முள்ளி வாய்க்கால் நடந்து இருக்கும் . கொஞ்சம் முன்னாடியே நடந்து இருக்கும் .
  42. என்னவோ தெரியவில்லை இன்று காலையில் ஒரு நல்ல செய்தி போல் இருக்கிறது...
  43. "சாகும் போது கூட சமைத்து வைத்து விட்டுத்தான் சாகனும்..".. எத்தனயோ பெண்களின் வலியை அழகாக சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல சற்று தரம் பிழைத்தால் ஏச்சு வேறு இவற்றையும் தங்கி பிள்ளகளுக்காக சமுதாயத்துக்காக என்று தியாகம் செய்து ஒன்றாக வாழும் பெணகளும் உண்டு .... ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை. இது சற்று முன்னரான கால நடை முறையாக இருக்கலாம். ஒரு சில இடங்களில் இன்னும் நடக்கிறது . பகிர்வுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.