Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19134
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7051
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/18/24 in Posts

  1. போராட்டத்தின் நிதி நெருக்கடி காலத்தில் கிழக்கு மாகாணத்தைவிட பல மடங்கு அதிகமாக வடக்கில் நிதி அறவீடுகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன, வரிகள் விதிக்கப்பட்டன, வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டன, அப்பிளுக்கு கூட வரி விதிக்கப்பட்டது, அதனால் பலர் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளானார்கள், இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. இந்த நிதி அறவீட்டில் வசதியுள்ள மாவீரர் குடும்பங்களும் தப்பவில்லை. அதற்கு உதாரணமாக ஒரே குடும்பத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்து மாவீரர்களான ஜேம்ஸ் , வாசு, சுந்தரி குடும்பமும் அடக்கம். போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார். ஒரு ஆயுத போராட்ட போர் காலத்தில் தவறுகள் இல்லாமல் எதுவுமே ,எங்குமே அனைவரின் விருப்பப்படியே எல்லாம் நடந்தது என்று உலகின் ஒரு மூலையில்கூட நீங்கள் உதாரணம் காட்ட முடியாது. வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? பயன் படுத்தப்பட்டிருந்தால், உலகிலேயே வசதியானவர்கள் வரிசையில் புலிகளின் அமைப்பும் சிங்களவனுக்கு கால் கழுவியபடி இன்று உயிருடன் இருந்திருக்கும். போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது, சரி ஊர் ஊராக சுற்றி வளைத்து கொத்து கொத்தாக எம்மக்களை சிங்களவன் கொன்று குவித்தபோது என்ன சொல்லி ஆரவாரித்தார்கள்? கண்கண்ட சாட்சியான நீங்கள் இதையும் கண்டிருக்க வாய்ப்புண்டு அதனால் கேக்கிறேன். கப்பம் வசூலித்த போராளி கிழக்கில் எத்தனை பங்களாக்கள் கட்டியுள்ளார் என்று ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பகிர்ந்து கொள்ளூங்கள் அதுவும் உங்கள் சாட்சிகளில் ஒன்றாய் அமையும். ஜேவிபி ஆயுத போராட்டத்தின்போது மிக குறுகிய காலத்தில் வகை தொகையின்றி சிங்கள இளைஞர்கள், அவர்கள் குடும்பங்கள் வகை தொகையின்றி இலங்கை பாதுகாப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர், ஆனால் எந்த சிங்களவனும் புலிகளால் இலங்கை ராணுவம் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழில் வெற்றி வெற்றி என்று முழங்கவில்லை, மாறாய் இலங்கையின் ஆளும்கட்சிகளைவிட ஜேவிபியே தமது ராணுவத்தின் பக்கம் உறுதியாக நின்றது, காரணம் ஒன்றேதான், போராட்டகாலத்தில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் எமது இனம் எமது ராணுவம் என்ற ஒன்றை அவர்கள் எதற்காகவும் விட்டுகொடுக்க தயாரில்லை, சொல்லபோனால் தன்மானத்தில் சிங்களவன் நம்மைவிட சிறிது உயரம் அதிகம்தான். நிதி அறவீட்டில் அவர்களின் பொறுப்பாளர்கள் சொன்னதை தவறானமுறையில் அணுகிய போராளி செய்தது குற்றமே. அதேநேரம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட என்று போனவன் தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிக சிறந்த பழிவாங்கல் என்றால் , அவ்வாறான இனமான போராளிகளின் சாவில் மகிழ்கிறவர்கள், புலிகளால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, ராணுவத்தால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, இனவிடுதலைபோராட்டத்தை நேசித்த மக்கள் , மிக சிறந்த பழிவாங்கல் என்றே எடுத்துக்கொள்வார்கள். அதுதான் கடந்தகால வரலாறு, அதை புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்று தாம் செய்த தவறை வெளியே சொல்லாமல் சாயம் பூசி இன்றுவரை மறைப்பவர்கள் பலர். புலி போராளிகள் கொல்லப்பட்டது சிறப்பான சம்பவம் என்று ரோஷமுள்ள மக்கள் சொல்வதில்லை என்பதற்கு முற்றுமுழுதான ராணுவகட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வருஷம் வருஷம் மாவீரர்நாள் அனுஷ்டிக்கும் பல லட்சம் மக்களே அதற்கு சாட்சி. அதுபோதும் நம்மை விட்டு சென்றவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் சரியான ஒரு இலட்சியத்திற்கு போராடியபோதே ஒரு சில தவறுகளும் இழைத்தார்கள் என்று சாட்சி சொல்ல,
  2. தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.
  3. நீங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தற்கால சந்ததியைச் சேர்ந்தவர் என்றால் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் தமிழினம் மீதான சிங்கள இனத்தின் அடக்குமுறையென்பது பன்முகப்படுத்தப்பட்டது. மொழி என்பது அதில் ஒரு முகம் மட்டுமே. 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தவுடனேயே முதலாவது சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை ஆற்றினை அண்டி உருவாக்கப்பட்ட குடியேற்றமே கல் ஓயாக் குடியேற்றம். 1952 இல் பூர்த்தியாக்கப்பட்ட இக்குடியேற்றத்தில் கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றினார்கள். அப்போது மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் தாயகத்தில் சிங்களவர்கள் குடியேறினார்கள். இப்பகுதிகளில் இருந்த வெளியேற மறுத்த தமிழர்களுக்கும் குடியேற்றச் சிங்களவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அரச ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டும் அடித்தும் விரட்டப்பட்டார்கள். கல்லோயாக் குடியேற்றத்தைத் தொப்டர்ந்து பதவியா (பதவிக்குளம்), மொறவெவ (முதலிக் குளம்), கந்தளாய் ஆகியவையும் 80 களில் முல்லைத்தீவின் வலி ஓய (மணலாறு), கொக்குத்தொடுவார், கொக்கிளாய், தென்னைமரவாடி, கென்ட், டொலர் பண்ணைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிங்களக் குடியேற்றங்களும் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்தன. ஆனால் இவற்றினை தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்பதாலோ அல்லது சிங்களவர் தமிழ் மொழியைக் கற்பதாலோ தடுத்திருக்க முடியுமா? அவர்கள் செய்வதே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இருப்பை அழிப்பதற்காகவே எனும்போது மொழிகளைப் பரஸ்பரம் கற்பது எவ்வாறு இதனைத் தடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நவீன காலத்துச் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அறியப்பட்ட பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார். இலங்கையில் ஒரே உத்தியோகபூர்வ அரச மொழியாக சிங்கள மொழியே இருக்கவேண்டும் என்றும் தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்கள மொழியைக் கற்பது அவசியம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அரச சேவைகளில் சிங்களம் கற்றால் ஒழிய தமிழர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டது, தனியார் துறை பற்றிக் கேட்கவே தேவையில்லை. தாய்மொழியாகிய தமிழ் மொழியிருக்க தம்மை ஆக்கிரமித்து நிற்கும் அந்நிய மொழியான சிங்களத்தைக் கற்குமாறு தமிழர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சட்டமே தமிழர்களை இன்னொரு வழியில் அடக்கியாளத்தான் என்றாகிறபோது நாம் அதனைக் கற்றிருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று எப்படி நினைக்கிறீர்கள்? தமிழ் இனம் தனது தாய்மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழியினைக் கற்கவேண்டும் என்றால் பொது மொழியொன்றைக் கற்கலாம், ஆங்கிலம் இங்கு கைகொடுக்கும். மூன்றாவதாக சிங்களத்தை, விரும்பினால் கற்கலாம். ஆனால் இவை எதுவுமே சிங்களம் எம்மீது நடத்தும் ஆக்கிரமிப்பை தடுக்காது. சிங்களத்தைக் கற்றால் அவர்களுக்கு எமது பக்க நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்று கூறுவதெல்லாம் எம்மை நாமே ஏமாற்றும் வேலை, ஏனென்றால் தாம் செய்வது என்னவென்று நன்கு தெரிந்தே சிங்களவர்கள் செய்கிறார்கள். சகோதர இனமொன்றிற்கு எதிராக தாம் செய்யும் அக்கிரமங்கள் அநீதியானவை என்பதை நாம் சிங்களம் கற்றுத்தான் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை.
  4. ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார். நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும் நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும் உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும் உலகமறியும் இதுஉங்களுக்கில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  5. என்னப்பா அமீரையும் திட்டுறானுவள் சம்பந்தனையும் திட்டுறானுவள் சுமந்திரனையும் திட்டுறானுவள் சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள் சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள் சாணக்கியனையும் திட்டுறானுவள் தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள் ஏன்.... எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்..... அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣
  6. ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள். ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂
  7. கோழிக்குஞ்சு தப்பி விட்டது, silver line! சீரியசாக, 10% ஆன ஆண்களில் விந்துகள் சுக்கிலப் பாய்மத்தில் (semen) அறவே இல்லாமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது விந்து உற்பத்தி குறைவாக இருப்பதால் இருக்கலாம் அல்லது விந்து உற்பத்தியானாலும், விந்தை வெளியே கொண்டு வரும் வழிகள் அடைபடுவதன் காரணமாக இருக்கலாம்.நவீன மருத்துவத்தில் இதைக் கண்டறிவதும், சரி செய்வதும் இலகு. விந்து எண்ணிக்கை குறைந்த ஆண்களில் பெரும்பான்மையானோரின் பிரச்சினை வரிகோஸ் நாளம் (Varicocele) என்ற விதைகளுக்கு வெளியே இருக்கும் பிரச்சினையாகத் தான் இருக்கிறது. கால்களில் இரத்த நாளங்கள் புடைத்திருப்பது போலவே, விதைகளுக்கு செல்லும் இரத்த நாளங்களும் புடைத்து, இரத்த ஓட்டம் குழம்பி, இதனால் விதை வெப்ப நிலை அதிகரிக்கும் - விந்து உற்பத்தி குறையும். இதற்கும் சிகிச்சை இருக்கிறது. அடி வயிற்றில் சிறிதாக வெட்டி, புடைத்திருக்கும் நாளத்தை வெட்டி முடுச்சுப் போட்டு விடுவர். இதையெல்லாம் மருத்துவர்கள் சொன்னாலும் கேக்காமல், மூலிகை மந்திரமென்று போவோர் உரிய விலையைக் கொடுக்கிறார்களென நினைக்கிறேன்.
  8. வழவனுக்கு இன்னொரு திரியில் புலிகளின் கட்டாய ஆட்சேர்பு பற்றி எழுதிய பதிலை கண்டிருப்பீர்கள். அந்தளவுக்கு உறவினருக்கு நடந்தது வரைக்கும் போக தேவை இல்லை… என் தந்தைக்கு சொந்தமான மிக விலை உயர்ந்த வாகனத்தை எடுத்து போனார்கள். நாங்கள் பாஸ் எடுத்து வந்த பின்னும், குடும்பத்தில் ஒருவரும் தமது பகுதியில் இல்லை என கூறி மிக பெறுமதியான எமது வீட்டை எடுத்து கொண்டனர். இரண்டையும் மீட்க போன எனது பெற்றாரை அலைகழித்து, அவர்கள் முகாமில் இருக்கும் போது அது வான் தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இதனால் என் தாயார் உயிரை கூட இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இரு விடயங்களும் அதி உச்ச தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் பயனிருக்கவில்லை. இத்தனைக்கும் பின் சமாதான காலத்தில் ஊருக்கு போன போது, அலுவலகம் அழைக்கப்பட்டு, வெளிநாட்டு விலாசம் தமது பங்களிப்பு ரெஜிஸ்டரோடு சரிபார்க்கப்பட்டே விடப்பட்டேன். இப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றால் அவர்கள் மீது கோவம் வந்தாலும் வன்மம் வரவில்லை - பின்னாளில் சட்டத்துக்கு உட்பட்ட உதவிகள் கேட்டபோதும் மறுக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இதை என்ன குறிக்கோளுக்காக செய்கிறார்கள் என்ற தெளிவு இருந்தபடியால். இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கும் அசாத்துக்கும் உள்ள வித்தியாசம். அசாத் புலிகள் செய்ததை போல் நூறு மடங்கு அநியாயத்தை தன் குடும்ப நலனுக்காக செய்தார். புலிகள் செய்த அநியாயங்கள் அநேகம் இன நலனை நோக்கியே இருந்தது. இதை தவிர்த்து விட்டு ஒத்த கோடு கீற முடியாது. தலைவர் இறந்த போது உலகம் தமிழர் அத்தனை பேரும் (சிலர் நீங்கலாக) துக்கித்தானர். அசாத்? அவரது அலவி சமூகமே ஆர்பரித்து வரவேற்கிறது. இதுதான் வித்தியாசம்.
  9. உண்மையை உரத்துச்சொல்லி உள்ளீர்கள். இவர்களின் தமிழ் எழுத்து பிழைகள் அர்த்தங்களை தவறாக சித்தரிக்கின்றன. நன்றி
  10. குழைக்காட்டர் என்றால் படிக்காதவர்கள் என்ற அர்த்தமும் உண்டு.
  11. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ? இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரையே உருவாக்கி நாட்டை அழிக்காமல் இருந்திருக்கும். அது அனுராவுக்கு நன்கு தெரியும், சிங்கள இனவாதிகளுக்கும் தெரியும். சுடுகாடாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறாராம். முட்டாள் சுயநலவாதிகள் இருக்கிறவரைக்கும் அவர்களுக்கு வெற்றியே.
  12. கவி அருணாச்சலத்தைப் பற்றி.... வீரகேசரி பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று.. //"மூனா" என்கிற தெட்சிணாமூர்த்தி செல்வகுமாரன். ஈழத்தின் கருத்தோவிய உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்// எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததாக அறிகின்றேன். அதனை @ஏராளன், @கிருபன் அல்லது வேறு யாராவது தேடி எடுத்து இங்கு இணைத்து விடும்படி அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி. 🙂
  13. யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதியை" போட்ட... எஞ்சினியரையும், ஓவசியரையும் ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும். அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்... நான் உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன். 🤣
  14. சந்திரிக்கா காலத்தில் criminal defamation சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் அது இப்போதும் உள்ளதா தெரியவில்லை. சிவில் வழக்கில் பணத்தை செலுத்தாவிட்டால் கோர்ட் enforcement action எடுக்கும். இது சொத்ததை பறிமுதல் செய்வது, வருவாயில் பிடிப்பது என பலவகை படலாம். வந்தவரை இலாபம் என எடுப்பார்கள். கேட்க்கும் தொகையை நியாயப்படுத்த வேண்டும். ஆகவே ஒரு மன்னிப்புடன் பலர் சமாதானம் அடைவர். பலதும் out of court settlement. ஆனால் தக்க ஆதாரம் காட்டினால் பணமாக நஷ்ட ஈடு வழங்கப்படும். கேட்கும் தொகை அல்ல. கோர்ட் நிர்ணையிக்கும் தொகை.
  15. அவர் லஞ்ச் பிரேக்கால் வர மூன்று மாதம் ஆகுமே🤣
  16. இலங்கையில் இது ஒரு வகையான அடையாள எதிர்ப்பு என்றே தெரிகின்றது. நஷ்டஈடும் கொடுக்கமாட்டார்கள், சிறைத்தண்டனையும் கிடைப்பதில்லை. இனிமேல் இப்படிச் சொல்லமாட்டோம், செய்யமாட்டோம் என்ற உறுதி மொழிகளோடும், மன்னிப்போடும் வழக்கு முடிந்துவிடும் போல............ ரணிலின் ஆலோசகராக இருந்தவர் அவரின் பெண் தோழியின் நாய்க்குட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வந்த விவகாரத்திலும் இப்படித்தான் 100 மில்லியனோ ஏதோ மான நஷ்டஈடாகக் கேட்டிருந்தார். கடைசியில் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. ஹிருணிகா, டயான, இப்படி பல பல 100 மில்லியன் வழக்குகள் சமீபத்தில் வந்து போயின.
  17. அது தானே பல தடவை சொல்லியாயிற்று? சீமானும் கருணாநிதியும் ஒன்று தான்: சராசரி தமிழக அரசியல் வாதிகள். ஆழமாகப் பார்த்தால், ஈழவர் பிரச்சினையை வைத்து தன்னை வளர்ப்பதால் சீமான் கருணாநிதியை விட மோசமான சராசரி அரசியல்வாதி!
  18. இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.
  19. சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை.
  20. 🤣........................ காவோலை வீதியில் நீங்கள் பதிந்த கருத்துகளில் இருந்தும், இந்தப் பதிவில் இருந்தும் நீங்கள் எந்த பஸ்களில் போய் வந்திருப்பீர்கள் என்று ஓரளவிற்கு தெரிகின்றது...................🤣.
  21. தினம் தினம் பார்த்து.... நல்லதை எடுத்து பொருத்தமற்றதை விலக்குவோம்😄
  22. சாத்திரி நல்ல அனுபவபட்டவர்👍, சாத்திரி மறைமுகமாக இவருக்கு உணர்த்தியுள்ளார், இவருக்கு தான் கோழியை விழுங்க வேண்டுமென்பதை தவறாக நிஜ கோழியை விளுங்கிவிட்டார்😪, இவருக்கு நெருக்காமான பஸ் இரயில் பயணங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
  23. YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மாா்ச் மாத நிலவரப்படி யூ டியூபானது 200 கோடியே 49 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூ டியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது. சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூ டியூப் ஒரு கவா்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரா்கள் மற்றும் பாா்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூ டியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. யூ டியூப் தொடக்கத்தில் புதுப்புது செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நம் தேவைக்கு ஏற்ற வேளையில் குறிப்பிட்ட நேர எல்லையில் நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதுதான் யூ டியூபின் சிறப்பு. நம் தினசரி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் துறை வல்லுநா்களிடம் தகவல்களைப் பெற்று அதை பல்வேறு கோணங்களில் அலசி, அதற்கான விடைகளைச் சுடச்சுட பரிமாறி இருப்பாா்கள். பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு படிநிலைகளில் காலப்போக்கில் தேடப்படும் அத்தனை கேள்விகளுக்கும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு யூ டியூபில் பதிலளித்துக் கொண்டே இருக்கிறாா்கள். காய்கறி நடவாகட்டும், சமையல் செய்முறையாகட்டும் பொருட்களின் பயன்பாட்டு விளக்கங்களாகட்டும், புதுப்புது தொழில்நுட்ப செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு சங்கதிகளாக இருக்கட்டும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள யூ டியூப் பக்கங்கள் உள்ளன. அத்துடன் கல்வி, வணிகம், விளையாட்டு, திரைப்படம், இசை, ஊா் சுற்றுதல், பொழுதுபோக்கு, நகைச்சுவை,கேளிக்கை, மொழி அறிவு, ஆன்மிகம், ராசி பலன், மருத்துவக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், அழகு சாதனங்களை உபயோகிக்கும் முறை, பிரபலங்களுடன் கலந்துரையாடல், தனது அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிப்பது, பொது அறிவு, இலக்கியம், போட்டித் தோ்வுகள், வரி மேலாண்மை, சட்ட ஆலோசனை என எக்கச்சக்கமான யூ டியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்ன ஒரு சௌகரியம் என்றால், நாம் நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடுபொறிகள் மூலம் தேடிப் பிடித்து படித்துப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நாம் இன்னொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஓா் எளிய காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் தனக்கு பிடித்தமான காணொளிகளைக் காண சந்தாதாரா்களாக இணைந்த மக்கள், அதிகப்படியான பாா்வையாளா்களைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டவும் முடியும் என்பதைப் பரவலாக அறிந்து கொண்டு, படைப்பாற்றல் திறனை பக்கபலமாக்கி தினம் ஒரு காணொளியை பதிவிட்டு கலக்குகிறாா்கள். இன்றைய திகதி நிலவரப்படி யூ டியூப் மூலம் உலக அளவில் அதிகம் சம்பாதிப்பது அமெரிக்காவைச் சோ்ந்த ரயான் (Rayyan) என்னும் ஏழு வயதுச் சிறுவன் தான். ஃபோா்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமா்சகரான ரயான் யூ டியூப் மூலம் 22 மில்லியன் டொலா்களைச் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். யூ டியூப் வணிகம் என்றே ஒரு புது வணிக உலகம் புதிய திசையில் பயணிக்கிறது. வாடகைக்குக் கடை தேவை இல்லை, சரக்கு இருப்பு அவசியமில்லை, கையிருப்பை வைத்து ஒவ்வொன்றாக காணொளியில் காண்பித்தால் போதும். அதைப் பாா்த்த பின்பு வரும் எண்ணிக்கைகளை வைத்து , அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இயலும். இப்படி பல யூ டியூப் பக்கங்களை உருவாக்கி வாழ்வில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற பலா், நம் முன் உதாரணங்களாக இருக்கிறாா்கள். மற்றொரு பக்கம், மக்களை மகிழ்விக்க தினம் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ரசிப்புக்குரியதாக படம் எடுத்து அதைப் பதிவிட்டு பிரபலங்களாக வலம் வருகிறாா்கள். திரைப்பட கதாநாயக, கதாநாயகிகளுக்கு இருக்கும் புகழ் இவா்களுக்கும் உருவாகி இருக்கிறது. காணொளிகளாகப் பதிவிட்டு மக்களுக்கு அவா்கள் முகம் பழகி புகழ் வெளிச்சமும் அவா்கள் மீது விழுவதால் யூ டியூப் ஆளுமைகள், இன்றைய தேதியில் அதிகரித்துள்ளாா்கள். நவீன காலத்திற்கு இப்படி வரப்பிரசாதமாக வந்த இந்த யூ டியூப் அதற்கே உண்டான குறைகளையும் கொண்டுள்ளது. ஒருவரைத் தரக்குறைவாக விமா்சித்து அதன் மூலம் இலட்சக்கணக்கான பாா்வையாளா்களைக் கடந்து பெரும் புகழ் பெற வேண்டும் எனும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. யூ டியூபில் தோன்றக் கூடிய நபரைப் பொறுத்து அவா் சொல்லும் செய்திகளின் நம்பகத்தன்மையை அளவிட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதிவிடப்படும் கருத்துகள் பாதிக்கும் மேல் பொய்யும் புரட்டுமாக இருப்பதால், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. யூ டியூப்பில் நேரலை என்ற ஒரு வசதி இருக்கிறது. அதில் மக்கள் ஆா்வமாக ஒன்று கூடி கண்டுகளிக்கிறாா்கள். புடவை விற்பனை, பொருட்கள் விற்பனை என களை கட்டும் அந்தப் பக்கத்தை எட்டிப் பாா்த்தால், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் நேரிடுகிறது. தனிப்பட்ட நபரின் மீது தாக்குதல் நிகழ்த்தும் வகையில் தரம் தாழ்ந்து விமா்சனங்களை முன்வைக்கிறாா்கள். குறிப்பாக நேரலைகளில் இது போன்ற அத்துமீறல்கள் அதிகம். அதே நேரத்தில் பாா்வையாளா்களைக் கலவரப்படுத்தக் கூடிய காணொளிகளை பல யூ டியூபா்கள் தொடா்ந்து பதிவிட்டு வருவதும் கவலையளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் பணத்தை அள்ளி இறைத்து மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைக் காணொளியாக எடுத்துப் பதிவிடுவதும், மனைவியின் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ஆா்வத்தைக் கிளப்புவதும், ரயில் தண்டவாள தடம், மலையுச்சி போன்ற வில்லங்கமான இடங்களுக்கு அருகே நின்று ஆபத்தை விலைக்கு வாங்குவதும், கா்ப்பத்தின் போதே பாலினத்தை அறிவிப்பதும் என சில அரைவேக்காட்டுத்தனங்கள் அதிா்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரமற்ற ஒன்றைப் பற்றி ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்வது, புதிய செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற முனைப்பில் சரிவர ஆராயாது, தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடா்கருமையில் இருக்கிறது. அத்துடன், சமகாலத்தில் திரைப்படங்கள் குறித்தான அவதூறு செய்திகளைப் பரப்புவதாக யூ டியூபா்களை சில திரைப்படத் தயாரிப்பாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதன்படி திரையரங்க வளாகத்தில் யூ டியூபா்கள் விமா்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் வீா்யத்தை நாம் அறியலாம். அவரவரின் தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த யூ டியூபை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக விமா்சனம் அமைந்தால் எல்லாருக்கும் நல்லது. அதே வேளையில் விமா்சனம் இல்லை என்றால் சிறிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய சில நல்ல திரைப்படங்கள் கூட கவனம் பெறாமல் போய்விடும் அபாயமும் உள்ளது. இந்திய ஊடகத்துறையில் கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India)- 1978 என்ற சட்டம் இந்த அமைப்புக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தற்போதைய நிலவரப்படி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் அதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு’ அதிகாரத்தை வழங்கியும் அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல்களும் காணொளிகளும் நம் வேலையைப் பன்மடங்காகக் குறைத்தாலும், அது உண்மைக்கு மிக நெருக்கமாகக் கூட இருக்குமா என்றால் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. இது யூ டியூபிற்கும் பொருந்தும். https://chakkaram.com/2024/12/09/youtube-அமா்க்களங்கள்/
  24. விசர் நாய் கடித்தால் ஏற்படும் விளைவுகள் போல (ரேபிஸ் )இவருக்கும் வைத்திய பரிசோதனைகள் (கவனிப்பு )தேவை . குறிப்பு இவர் இறந்து விடடாரம் என்று தளத்தில் சொல்லப்படுகிறது .வைத்திய சேவையை பாதியில் நிறுத்தி விட்டாராம் இவர் யாரைக் கடித்தாரோ அவர்களுக்கும் சிகிச்சை தேவை. மிருகங்கள் கடித்தால் (அவற்றின் உமிழ் நீர் படடால் ) ஒரு வருடம் பத்தியமும் சரியான மருத்துவ உதவிகளும் தேவையாம்
  25. காரணங்கள் பல 1. சுமந்திரனின் வாய். இனப்படுகொலை வரைவிலக்கணம் முதல், புலிகள் மீது அவர் பொதுவெளியில் முன் வைத்த பல விமர்சனங்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தில் பலர் சுமனை மூர்க்கமாக எதிர்க்க காரணம். இன்று வரை கோஷானை சிலருக்கு யாழ் களத்தில் கண்ணில் காட்ட ஏலாது. காரணம் புலிகளை விமர்சிப்பது. ஆனால் கோஷான் கருத்தாளர். சுமந்திரன் மக்கள் பிரதிநிதி. கோஷானை போல் சுமந்திரன் வாயை விட முடியாது, கூடாது. 2. சுமனின் ஈகோ, நடக்கும் பாங்கு - நீங்களே எழுதியதுதான். கூடவே மாறி மாறி ஆட்களை கவிழ்ப்பது. கட்சிக்குளே சில்லறை பொலிடிக்ஸ் செய்வது. 3. சுமன் ரணில் உள்ளே அனுப்பிய ஐந்தாம் படை என்ற சந்தேகம். மேலே சொன்ன சில்லறை பொலிடிக்ஸ் மூலம், தமிழர் ஒற்றுமையை ரணிலின் ஏஜெண்ட்டாக இவர் குலைக்கிறார் என்ற சந்தேகம். 4. மதம் - மிக சிலருக்கு இது ஒரு பிரச்சனை. கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் இதே ஆட்கள் சாணாக்கியனையும் கட்டம் கட்டுவார்கள். சிலவேளை அவர்களே அறியா unconscious bias ஆக இருக்கலாம் 5. எம்மை போல் அல்லாதவர் - கோட் சூட், நல்ல ஆங்கிலம், கொழும்பு வளர்ப்பு, மீசை இல்லை - இதை ஒரு typical முதல் தலைமுறை புலம்பெயர் தமிழ் மனிதனோடு ஒப்பிட்டால் - பலத்த வித்தியாசம் இருக்கும். இந்த வேற்றுமை சந்தேகத்தை கொடுக்கிறது. 6. ஶ்ரீயின் அடிப்பொடிகள் - அவர் மீதான அட்டென்சனை திசை திருப்ப சுமனை அடிப்பது. 7.மேலே சொன்ன பலதில் ஶ்ரீ அமசடக்கியாக இருப்பதால், சுமன் அளவு மோசமானவராக இருப்பினும் அவர் வாங்குல் அடி குறைவு.
  26. நானும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் சந்திக்கும் நிகழ்வில் மூனாவையும் சிறித்தம்பி அழைத்திருந்தார்.அந்நேரம் அவருக்கு வேறு தனிப்பட்ட நிகழ்வுகள் இருந்ததினால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்சமயம் அவரும் எம்மோடு கலந்து கொண்டிருந்தால் பலகார பை பழி அவர் மீதும் விழுந்திருக்கும்.🤣 நல்லகாலம்.......கடவுள் இருக்காரு குமாரு...😂
  27. உண்மைதான்…2/3, மீதி எல்லோர் மீதும் வெறுப்பு ….இதை வைத்து, இவர்களை கொண்டே வேலையை முடிப்போம் என இந்தியா நினைப்பது போல் உள்ளது. மேற்கின் அரசியலில் only Nixon can go to China. என ஒரு விடயம் சிலாகிக்கப்படும். சீனப்புரட்சிக்கு பின் மேற்கின் குறிப்பாக அமெரிக்க ஒழுங்கில் இருந்து சீனா வெகு அந்நியப்பட்டு நின்றது. 1965 களில் பலரும் அமெரிக்கா சீனாவுடன் நேரடி உறவை ஆரம்பிக்க வேண்டும் என கருதினர். ஆனால் கம்யூனிச சீனாவை ஏற்பது முதலாளிதுவ, பனிப்போர் கால அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் ரிஸ்க்கான விடயம். இடது சார்பு ஜனநாயக கட்சி இதை செய்தால் எதிரிக்கு விட்டு கொடுப்பதாக பிரச்சாரம் செய்யப்படும். ஆகவே கடும் கம்யூனிச எதிர்பாளரான நிக்சந்தான் இதை செய்யமுடியும் என்பதே இதன் பொருள். அப்படித்தான் நிக்சன் அமெரிக்க-சீன உறவை மீள ஸ்தாபித்தார். அதே போல் ஜேவிபி அளவுக்கு புலிகளை தவிர இலங்கையில் இந்தியாவை எதிர்தவர்கள் எவரும் இல்லை. ஆகவே தாம் கேட்பதை அதிக எதிர்பின்றி தர ஜேவிபியால் முடியும் என இந்தியா நினைக்கக்கூடும்.
  28. 🤣............. அடடா, இப்ப இப்படியொரு பிரச்சனை வரப் போகுதே........... அசாத்தை அழிக்கின்றார்களோ, இல்லையோ, என்னை கொளுத்தி விடுவார்களே............. நீங்கள் இல்லாவிட்டால் நான் களத்திலேயே இல்லை, அண்ணா.............❤️. அதே போலவே தான் பெயர் வைத்த நிலாமதி அக்காவும், தமிழ்ப் பெயருடன் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று அவரே இந்தப் பெயரை பொருத்தமாக வைத்தார்............🙏.
  29. தற்போதைய ஊடகங்கள் பற்றி தாங்கள் கொண்ட கோபம் நியாயமானது. கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி. 👍🏽
  30. ஒரு காட்சியை பத்து தலைப்புகளில் போடுகிறார்கள் . ....... அதுசரி காலத்துக்கு ஏற்ற பிழைப்பு .........! கவிதைக்கு நன்றி கோபி ..........!
  31. போகாதே போகாதே என்தலைவா ....... மேலே இருப்பது ஒரு சிறுத்தையின் நிழலல்ல, அவை இரு சிறுத்தைகள் . ......! 😂
  32. தம்பி…. அந்த வடை (பாலசிங்கம் கொடுத்த பேட்டியின் நகல்) இன்னும் வரவில்லை. அது வரும் வரைக்கும் நீங்கள் வாயால் வடை சுடுவது அம்பலம் ஏறாது. புலிகள் தமது இருப்புக்காக அல்ல இனத்தில்ல்ன் இருபுக்ககாகவே மாற்று இயக்கங்களை தடை செய்தனர். அசாத், புட்டின் தம் தனிமனித இருப்புக்காக ஒப்பிடவே முடியாத பெரும் மனித அழிவுகளை உருவாக்கினர். இரெண்டும் ஒன்றே - புலிகளின் தலைவரின் இருப்புக்காகவே அவர்கள் மாற்று இயக்கத்தை தடை செய்தானர் என்பது உங்கள் வாதம். உங்கள் co-conspirator தவிர வேறு யாரும் இதை யாழில் ஆதரிக்கவில்லை.
  33. நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை. ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன். ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது. இப்படி எழுத: 1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது 2. மேற்கின் மீதான வெறுப்பில் எழுத வேண்டும் 3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும். இதில் மூன்றாவது இல்லை என அறுதியாக தெரியும். முதலாவதை ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது, ஆகவேதான் 2வது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இது மட்டும் அல்ல - எமது இழப்பில் மேற்கு அளவுக்கு ரஸ்யா, சீனா வுக்கு பங்கு இருக்கிறது என உங்களை விட வேறு எவருக்கும் தெரிந்ததல்ல. இருந்தும் மேற்கை மட்டுமே பழி சொல்வதுடன், ஒரு படி மேலே போய் ரஸ்யாவுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் - இந்தியா புலிகள் விடயத்தில் நடந்தது கூட சரி என்று எழுதினீர்கள். இதை வேறு எப்படி விளங்கி கொள்வது? புலிகள் விடயத்தில் இந்தியா நடந்தது சரி, என வாதாடும் அளவுக்கு உங்களுக்கு புட்டின் காதல். இப்படி காரைக்கால் அம்மையார் கடவுள் மேல் கொண்டதை ஒப்ப உங்கள் புட்டின் மீதான காதல் ஏன் வந்தது? அவர்தான் மேற்கின் எதிரி நம்பர் 1. அதே போல மேற்கில் எந்த பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது. இது தெரிந்தும், பலதடவை எடுத்து சொல்லியும் நீங்கள் - தமிழருக்கு இரு தரப்பும் ஒன்றே என்ற பொய் சமன்பாட்டை மீள மீள எழுதிவருகிறீர்கள். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் - நீங்கள் மிக மோசமான மேற்கு எதிர்ப்பு மனோநிலையில் அவதிபடுவது தெளிவு. இது அநேகமாக உங்களோடு முரண்படும் நான் மட்டும் கண்ட உண்மை அல்ல. இதை உங்களுடன் மிகுதி அனைத்திலும் உடன்படும் நண்பர்கள் கூட எழுதியுள்ளார்கள். பிகு தனிப்பட்டு உங்களுக்கு தனிமனித துதிபாடும் hero worshipping tendency உள்ளது எனவும் நான் அபிபிராயப்படுகிறேன். தலைவருக்கு முன்பு முட்டு கொடுப்பீர்கள் அது நியாயமானது (இப்போ எல்லாம் இதை கடந்து போய் விடுகிறீர்கள், மினகெடுவதில்லை), ஆனால் அதே வீரியத்துடன் சீமானுக்கும், புட்டினுக்கும், லேட்டஸ்டாக அனுரவுக்கும் முட்டு கொடுக்கும் போது - தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது. இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.
  34. நன்றி ஏராளன். பொலித்தீனுக்குப் பதிலாக ஓலையை நெருக்கடி காலத்தில் பயன்படுத்தியது கூட ஒரு நல்ல மாற்றீடாகத் தெரியவில்லை. துளைகள் கொண்ட தார் ரோட்டின் மேற்படை தண்ணீரை அனுமதிக்கும், அது கீழே சென்று மண்ணை நெகிழ்வாக்கும். இரண்டு விளைவுகள் ஏற்படலாம் இதனால்: பாவனையின் போது வீதி buckle ஆகும், சகல படைகளுக்கும் ஊடாக வெடிப்பு ஏற்படும். மீள வீதி திருத்த வேண்டும். சில சமயம், நெகிழ்வான மண் அடர்த்தியிழந்து அந்த இடத்தை விட்டு அகன்றால் வீதியின் கீழே sinkhole உருவாகும்.
  35. மாப்பிள்ளை... எவ்வளவு சம்பாதிக்கிறாரு. தோராயமா பத்தாயிரம். மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு. சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣
  36. அர்ச்சனாவுக்கும் ..அவர்சார்ந்த யூ டுயூபர்ஸ்க்கும் ஒரு தீன் கிடைத்துவிட்டது...அதோடை நம்ம யாழுக்கும்தான்
  37. மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. முதலில்... உங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளவும். மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.
  38. சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம்
  39. நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ...
  40. இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.
  41. அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன். அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம். கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள். என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல. குருநாகல் வைத்தியர் மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்காக வேண்டியே கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன். மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை. ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.