Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்16Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87990Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்6Points14676Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்5Points31977Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/22/24 in Posts
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அந்த வண்டி லண்டனுக்குத்தான் வருகுது சார் . ....... அங்கிருந்து உங்க வீட்டுக்கு வருவதற்கு பத்து மணித்தியாலம் வேணும் . ........ ஹா . .....ஹா . ...... விரும்பினால் கோஷான் சே யை சந்தித்து ஒரு கோப்பி குடித்துவிட்டுத் திரும்பிப் போகலாம் . ..........! 😂6 points
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........! 😴5 points
-
கடல்வள கொள்ளையர்
3 pointsஇலங்கைக்குள் மீன் பிடித்துவிட்டு , நாங்க மீன் பிடிக்குற இடத்துல இலங்கை நேவி எங்களை துரத்தி வருது எண்டு விளக்கம் கொடுக்கிறார்கள். விளக்கம் கொடுத்தாலும் பொய் பொய்யா சொல்லும்போது அதை ஒரே நேர்கோட்டில் சொல்லிக்கொண்டே போவது கஷ்டம், அதனால அவர்கள வாயாலேயே எப்படி இலங்கை பகுதியில் மீன் பிடிக்கிறோம், எப்படி இலங்கை நேவியின் வருகை பற்றி நமக்குள் தொடர்பாடல் வைத்திருக்கிறோம், எப்படியெல்லாம் அடுத்த நாட்டு மீனவர் பிழைப்பில் மண்ணள்ளி போடுகிறோம் என்று உளறிவிடுகிறார்கள். உளறிட்டோம் என்று தெரிந்துதான்போல வீடியோவுக்கு பின்னூட்டமிடும் பகுதியை இழுத்து மூடிவிட்டார்கள்.3 points
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
இந்தியா சேட்டை விடுறாங்கள் அவங்களுக்கு எதிராக நீங்கள் சிங்கள மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் ....நான் (அனுரா)கண் காட்டும் பொழுது நீங்கள் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்ய வேணும் ...உங்களுக்கு தெரியும் தானே நானும் எனது கட்சிகாரரும் வீதிய்ல் இறங்க முடியாத சூழ் நிலை இருப்பது3 points
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
ஒரு காலத்தில் பாக்கியராஜை இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று சொல்வார்கள். மிகப் பொருத்தமான ஒன்றே. அது போலவே ஜெயராஜூம். நிகழ்வுகளையும், அரசியல் அலசல்களையும் ஒரு கதை போலவே எழுதிக் கொண்டிருக்கின்றார். பெரும் இராணுவத் தாக்குதல் ஒன்றைக் கூட இவர் ஒரு கதை போலவே எழுதியிருந்தார். அதனால் இவரின் எழுத்துகளை வாசிக்கும் போது, 'ஆள் கதை விடுகின்றாரோ...............' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டேயிருக்கின்றது..........🤣. காலம் செல்வம் துன்னாலையைப் பற்றி பகிடியாக அவரின் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த ஒரு துணுக்கு/விடயம் என்று நினைக்கின்றேன். பாடப்புத்தகம் ஒன்றில் இருக்கும் இலங்கைப்படம் ஒன்றில் சில பெரிய நகரங்களின் பெயர் மட்டுமே இருந்தது. அத்துடன் துன்னாலையும் அந்தப் படத்தில் இருந்தது. அது எப்படி என்று யாரோ கேட்டார்கள்.......... அதற்கு 'யாரோ ஒரு துன்னாலை ஆள் கல்விக் கந்தோரில் இதற்கு பொறுப்பாக வேலை செய்கின்றார்கள்......................' என்று காரணம் சொல்லியிருந்தார். இங்கே இரண்டு துன்னாலை ஆட்கள்..................😜. கலாநிதிப்பட்டம் பெற்றவர்களை விட அதை இடையில் விட்டவர்கள் தெளிவானவர்கள் போல...........🤣.3 points
-
நானும் சைக்கிளும் (சிறுகதை)
2 pointsநானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு... சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு. அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது.... இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும். அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான். கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது... கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல.... கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு. எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்... அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்.. அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன் https://www.facebook.com/groups/1617989741545239/posts/9529459303731537/ All reacti2 points
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
2 pointsஅனலைதீவை அபிவிருத்தி செய்வோம் adminDecember 22, 2024 கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர். அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது. அதன் போது , அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் , குறிப்பாக மின்சாரம் , படகு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் எமது அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால் , அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இப்பகுதியை அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார். https://globaltamilnews.net/2024/209504/2 points
-
யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
2 pointsதொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும் அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார் அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்2 points
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
2000 ம் ஆண்டு (மிலேனியம்)>.இந்தா உலகம் அழியப்போகுது என்ற செய்தியில் வாங்கின சாமானில் இப்பவும் அந்த மெழுதிரிகள் கிடந்து சிரிக்குது😁2 points
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சரி . ......சரி ....ஆகட்டும் பார்க்கலாம் . .....! 😁2 points
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
என்ர 75வது பிறந்த நாளுக்கு சேர் @ஈழப்பிரியன் அவர்கள் ஒரு நாளிலையே வந்துட்டு திரும்பி போகலாம் 😎2 points
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
Published By: DIGITAL DESK 7 17 DEC, 2024 | 10:28 AM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும். விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி பட்டத்தை பெறவில்லை என்றும் அதனால் அவர் ஒரு " பாசாங்கு கலாநிதி " என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்தது இதுதான். இளம் பராயத்தில் ஏ.பி.ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்ட பாலசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணி ( B.A. degree ) பட்டம் பெற்றவர்.பிறகு பிரிட்டனுக்கு சென்ற பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பொலிரெக்னிக்கில் முதுமாணி (M.A. degree) பட்டத்தை பெற்றார். மார்க்சிசத்தின் உளவியல் ( Psycology of Marxism ) தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்தது. அதற்கு பிறகு பேராசிரியர் ஜோன் ரெயிலரின் கீழ் சமூகவியலில் உடமை மாற்றம் தொடர்பான மார்க்சின் கோட்பாடு ( Marx's theory of alienation in sociology) குறித்து கலாநிதி பட்டத்துக்காக ஆய்வைச் செய்யத் தொடங்கினார். விடுதலை அரசியலில் ஈடுபடத் தொடங்கியதனால் பாலசிங்கம் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் மதியூகியாக, பேச்சுவார்த்தையாளராக, பேச்சாளராக பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்தார். இந்திய ஊடகங்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் அவரை " கலாநிதி பாலசிங்கம் " என்று குறிப்பிடத் தொடங்கின. அவர் தன்னை " கலாநிதி " என்று ஒருபோதும் அழைத்ததில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தன்னை கலாநிதி என்று அழைத்த ஊடகச் செய்திகளை திருத்துவதற்கு அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பாலசிங்கம் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பது பிறகு நம்பத்தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. அது போட்டிக் குழுக்களை சேர்ந்த எதிர்பாளர்களினால் செய்யப்படவில்லை. பதிலாக விடுதலை புலிகள் மத்தியில் இருந்தவர்களே அதைச் செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் விடுதலை புலிகள் இயக்கம் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது. ஒரு பிரிவு பாலசிங்கத்தின் கீழும் மற்றைய பிரிவு இலங்கையில் மயிலிட்டியைச் சேர்ந்த ஒரு கணக்காளரான சீவரத்தினத்தின் கீழும் இருந்தன. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியான சஞ்சிகை ஒன்றை (Tamil Voice International ) சீவரத்தினம் நடத்தினார். பாலசிங்கத்தின் கலாநிதி பட்டத் தகைமைகள் குறித்து அந்த சஞ்சிகைக்கு "வாசகர் " ஒருவர் கேள்வியை அனுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதில் உண்மை நிலையை தெளிவாக விளக்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த கட்டுரை பாலசிங்கத்தின் 18 வது நினைவு தினத்தை ( டிசம்பர் 14 ) முன்னிட்டு அவர் மீது கவனத்தைச் செலுத்துகிறது. " பாலா அண்ணை " என்று அறியப்பட்ட பாலசிங்கம் கிளர்ச்சியூட்டுகின்ற ஆனால் அதேவேளை சர்ச்சைக்குரிய புள்ளியாக விளங்கினார். அவரை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருந்தார்கள். பாலசிங்கத்துடனான இந்த கட்டுரையாளரின் உறவுமுறையும் கூட நெளிவுசுழிவுகளைக கொண்டதாகவே இருந்தது. பிரச்சினைகளைப் பொறுத்து அவரை நான் கண்டித்ததும் உண்டு, மெச்சியதும் உண்டு. அதேபோன்று அவரும் கூட எனனைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் எழுதியும் பேசியும் இருக்கிறார். இந்த மனிதனைப் பற்றியும் தமிழர் விவகாரங்களில் அவரின் பாத்திரம் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் " பாலா அண்ணைக்கும் " எனக்கும் இடையிலான துறைசார் மற்றும் தனிப்பட்ட உறவுமுறை பற்றி கவனம் செலுத்துகின்ற அதேவேளை முன்னைய எழுத்துக்கள் சிலவற்றில் இருந்தும் விடயங்களை குறிப்பிடுகிறேன். 1938 மார்ச் 4 ஆம் திகதி பிறந்த பாலசிங்கம் பல்வேறு குணப் போக்குகளின் ஒரு கலவை. இந்துவான அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவரான தாயார் வடமாகாணத்தவர். ஒரு கத்தோலிக்கராக பாலசிங்கம் வளர்க்கப்பட்ட போதிலும் விரைவாகவே அவர் ஒரு பகுத்தறிவாளராகவும் உலோகயதவாதியாகவும் மாறிவிட்டார். பாலசிங்கத்தின் முதல் மனைவி புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண தமிழ்ப் பெண்மணி. இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அங்ளோ -- சக்சன் மரபைக் கொண்ட பெண்மணி. பிரிட்டிஷ் பிரஜையாக இருந்த போதிலும், பாலசிங்கம் தனது " தமிழ் ஈழம் " தாயகத்தைக் காண்பதற்கு வேட்கை கொண்டிருந்தார். அது அமைக்கப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருந்ததாக அவர் நம்பினார். பாலசிங்கத்தின் தந்தைவழி பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒரு " சைவக் குருக்கள்." அவரது தந்தையார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மின்சார மேற்பார்வையாளர். யாழ்நகரைச் சேர்ந்த பாலாவின் தாயார் முன்னர் மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவான அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றியபோது பாலாவின் தந்தையாரைச் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். கரவெட்டி அவர் கணவரிடமிருந்து பிரிந்ததுடன் இளவயதிலேயே விதவையாகியும் விட்டார். பாலசிங்கம் தனது தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் சிறுபிள்ளையாக வடக்கிற்கு சென்றார். வடமராட்சி கரவெட்டியில் குடியேறி அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். பாலாவின் தாயார் ' அம்பம் ஆஸ்பத்திரியில் ' மருத்துவமாதாக பணியாற்றினார். நான் வீரகேசரியில் பத்திரிகையாளராக இணைந்த நேரத்தில் பாலசிங்கத்தின் இரு மருமகன்கள் விக்டரும் அன்டனும் அச்சுக்கோப்பாளர் பகுதியில் பணியாற்றினார்கள். எனது தாயாரும் கூட கரவெட்டியை சேர்ந்தவரே. துன்னாலை தெற்கு, கரவெட்டி என்பதே தபால் விலாசம். பிற்காலத்தில் பாலசிங்கம் அதை அடிக்கடி கூறி தானும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே என்று உரிமை கொண்டாடுவார். வீரகேசரி சிறுவர் பராயத்தில் பாலசிங்கம் ஏ.பி. ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்டார். கரவெட்டி திருஇருதயக் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் அவர் கல்வி கற்றார். அந்த நாட்களில் கரவெட்டி ஒரு இடதுசாரிக் கோட்டையாக விளங்கியது. 'ஸ்ரனி ' என்று அப்போது அறியப்பட்ட இளம் பாலசிங்கமும் இடதுசாரி கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார். சுந்தர் என்று அறியப்பட்ட பிரபல்யமான தமிழ் கார்ட்டூனிஸ்ட் சிவஞானசுந்தரம் கரவெட்டியில் இருந்தே ' சிரித்திரன் ' என்ற பெயர்பெற்ற சஞ்சிகையை வெளியிட்டார். சிவஞானசுந்தரத்தின் முயற்சியின் காரணமாக ஸ்ரனிஸ்லோஸ் 1960 களின் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். பெரும்பாலான நேரத்தை வாசிப்புக்கு செலவிடும் ஒரு மனிதனாக ஸ்ரனியை பற்றி பேசும்போது வீரகேசரியில் அவரின் முன்னாள் சகாக்கள் கூறுவார்கள். தனது தோற்றத்தில் அவர் அக்கறை செலுத்துதில்லை. குறிப்பாக உடைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கிரமமாக நேரங்களில் அவர் சாப்படுவதுமில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லோஸ் விரைவாகவே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை பிரதிகளையும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பது அதில் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், பாலசிங்கம் தத்துவத்திலும் உளவியலிலும் கருத்தூன்றிய கவனம் செலுத்தினார். மனதை வசியப்படுத்தும் கலையிலும் ( Hypnotism ) ஈடுபாடு காட்டினார். கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக ஸ்ரனிஸ்லோஸுக்கு நியமனம் கிடைத்ததும் நிலைமைகள் மாறின. நேர்த்தியான முறையில் உடைகளை அணியத் தொடங்கியதும் அவரின் தோற்றத்திலும் ஒரு உருநிலை மாற்றம் ஏற்பட்டது. புதிய தொழிலின் விளைவாக மாத்திரம் முற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. காமனும் கணை தொடுத்தான். பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்துக்கு அருகாக பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றிய அழகான தமிழ்ப் பெண்மணி மீது பாலசிங்கம் காதல் கொண்டார். பருத்தித்துறை ஹாட்டி கல்லூரியில் படிப்பித்த இராசரத்தினம் மாஸ்டரின் மகளான பேர்ள் இராசரத்தினமே அந்த பெண்மணி. அந்த குடும்பம் எனது தாயாரின் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டது. எனது சிறுவர் பராயத்தில் பேர்ள் அரசரத்தினத்தை நான் " பூ அன்ரி " என்று அழைத்தது நினைவிருக்கிறது. அவரின் சகோதரி ரதியின் திருமணத்தில் எனது சகோதரிகளில் ஒருவர் மணப்பெண் தோழியர்களில் ஒருவர். பேர்ளின் மூத்த சகோதரி நேசம் எனது தாயாருடன் பல வருடங்களாக ஒரே பாடசாலையில் படிப்பித்தார். பேர்ளுக்கும் அன்டனுக்கும் இடையிலான காதல் 1968 ஜூலை 16 கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் தேவாலயத்தில் திருமணத்தில் முடிந்தது. இங்கிலாந்து புது மணமகன் பாலசிங்கத்துக்கு மணவாழ்வினை மகிழ்ச்சி நீடித்ததாக இருக்கவில்லை. அவரின் மனைவி பேர்ள் கடுமையாக சுகவீனமுற்றார். அவருக்கு வெளிநாட்டு நவீன சிகிச்சை தேவைப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் அனுதாபமுடையவர்களாகவும் பெருந்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். பாலசிங்கத்தையும் மனைவியையும் இங்கிலாந்துக்கு செல்ல அவர்கள் அனுமதித்தனர். இருவரும் 1971 ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கையை விட்டுச் சென்றனர். இங்கிலாந்தில் பாலசிங்கம் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனால், அவரின் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பாலசிங்கத்துக்கு வாழ்க்கை இடரும் தியாகமும் நிறைந்தாக மாறியது. அவர் வேலைக்கு செல்வதுடன் படிக்கவேண்டியிருந்தது. நோயாளியான மனைவியை பராமரிக்க வேண்டியும் இருந்தது.மனைவி 1976 நவம்பரில் காலமானார். வைத்தியசாலையில் ஒரு தாதியுடன் பாலசிங்கத்துக்கு நன்கு பழக்கமேற்பட்டது. அந்த தாதியும் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த ஒரு " அன்னியரே. மனைவியை இளந்த இளம் பாலசிங்கத்துக்கு தாதி அுடல் ஆன் வில்பியுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. தெற்கு லண்டனில் பிறிக்ஸ்டனில் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் எளிமையான முறையில் 1978 செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டனர். மட்ராஸ் / சென்னை பாலசிங்கம் 1978 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன அணி சேர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு கிரமமாக வருகை தந்த அதேவேளை லண்டனில் இருந்து விடுதலை புலிகளுக்காக பெருமளவில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டபோது பாலசிங்கம் தன்னை பிரபாகரனின் பிரிவுடன் இணைத்துக்கொண்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்கு ( அப்போதைய மட்ராஸ் ) குடிபெயர்ந்தனர். " த ஐலண்ட் " வீரகேசரி தமிழ்த் தினசரியில் 1977 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டதன் மூலம் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த நான், 1981 ஆம் ஆண்டில் " த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். அந்த வேளையில் அதன் ஆசிரியராக இருந்த விஜிதா யாப்பா 1984/85 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இயங்கிய இலங்கை தமிழ்த் தீவிரவாத இயக்கத் தலைவர்களை பேட்டிகாணும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலான தீவிரவாத குழுக்களை சந்தித்த எனக்கு விடுதலை புலிகளை சந்திப்பது சற்று சிரமமாக இருந்தது. இறுதியாக மரீனா கடற்கரையில் கண்ணகி சிலை ஓரமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. நானும் அதற்கு இணங்கினேன். " நான் பாலசிங்கம் " சரியாக 5.30 மணிக்கு அந்த இடத்தில் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதை ஓட்டிவந்த விடுதலை புலிகள் இயக்க முக்கியஸ்தரான " நேசன் " ( முன்னாள் கத்தோலிக்க குரு மாணவன் ) என்னை முன் ஆசனத்தில் வந்து ஏறுமாறு கேட்டார். காரை ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் அவர் நிறுத்தினார். சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் வந்து பின்னால் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிவந்து எமது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நான் திரும்பிப் பார்த்தபோது தனது கையை நீட்டி " நான் பாலசிங்கம் " என்று கூறினார். வாகனத்தை ஓட்டத் தொடங்கிய நேசன் எங்கு போவது என்று தெரியாத மாதிரி பல வீதிகளின் ஊடாக அதைச் செலுத்தினார். பாலசிங்கம் ஒரு மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார். ஒருவிதமான பகைமையுணர்ச்சியுடனான அவரின் கேள்விகள் என்னை அவர் சந்தேகத்துடன் நோக்குகிறார் என்பதை உணர்த்தியது. நான் கதையை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் காலமான அவரின் மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் கூறத் தொடங்கினேன். " உங்களைப் போன்றே நானும் வீரகேசரியில் வேலை செய்தேன்" என்றும் அவரிடம் கூறினேன். பாலசிங்கத்தின் மனநிலை மாறியது. அவர் சிரித்துக்கொண்டு " அப்போ நீங்கள் எங்களில் ஒருவர் " என்று அவர் கூறினார். " நாங்கள் புஹாரி ஹோட்டலுக்கு போவோம் " என்று பாலசிங்கம் நேசனிடம் கூறினார். எனவே நாம் அந்த முஸ்லிம் உணவகத்துக்கு சென்று இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கடந்த்காலத்தை நினைவுகூர்ந்த வண்ணம் சமகால அரசியலையும் பேசினோம். அதுவே பாலசிங்கத்துடனான எனது முதலாவது சந்திப்பு. அதற்கு பிறகு அவரை நான் பல தடவைகள் சந்தித்தேன். கனடா 1988 ஆம் ஆண்டில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஆய்வு மாணவனாக நீமன் புலமைப்பரிசில் பெற்று நான் அமெரிக்கா சென்றேன். பிறகு 1989 ஆம் ஆண்டில் கனடாவுக்கு மாறி ரொரண்டோவில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினேன். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் முறித்துக்கொண்ட பிறகு நான் அவர்களை விமர்சித்தேன். ரொரண்டாவில் நான் ஆசிரியராக இருந்து எனது சொந்தத்தில் நடத்திய " மஞ்சரி " தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவில் விடுதலை புலிகள் ஒரு பிரசாரத்தை தொடங்கியதனால் நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாயிற்று. எனது பத்திரிகையை அவர்கள் " தடை " செய்தார்கள். தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் நான் தளர்ந்துபோகவில்லை. அதையடுத்து விடுதலை புலிகள் தமிழ்ப் பத்திரிகைகளை விற்பனை செய்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான கடைகளையும் முக்கியமான தமிழ் விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினர். 48 பக்கங்களைக் கொண்ட அந்த ஒரு டொலர் ' ரப்லொய்ட் ' பத்திரிகை 22 பக்கங்களில் விளம்பரங்களை கொண்டு வெளியானது. 4,500 -- 5,000 பிரதிகள் விற்பனயாகின. விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக எனது பத்திரிகையை விற்பனை செய்வதை பல கடைகள் நிறுத்திக் கொண்டன. பத்திரிகை 24 பக்கங்களாக சுருங்கியதுடன் இரு பக்கங்களுக்கே விளம்பரங்கள் கிடைத்தன. விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையும் நூறுகளுக்கு கண்டது. விடுதலை புலிகளுக்கு முழந்தாழிட்டு உயிர் வாழ்வதையும் விட எனது காலில் நின்று சாவதற்கு முடிவெடுத்த நான் 1996 ஆம் ஆண்டில் பத்திரிகை வெளியிடுவதை நிறுத்தினேன். ஆங்கிலப் பத்திரிகைத்துறை நானும் எனது மனைவியும் அந்த பத்திரிகைக்காக முழுநேர பணியாற்றினோம். எங்களைத் தவிர, வேறு ஒன்பது பேர் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றினர். பத்திரிகையை நிறுத்தியது அந்த நேரத்தில் பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், கெடுதியின் உருவில் வந்த நன்மையாக, நான் மிண்டும் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன். கொழும்பில் தமிழில் எழுதி வீரகேசரிக்காக பணியாற்றியதன் மூலமாக பத்திரிகைத்துறை வாழ்க்கையை தொடங்கியவன் நான். த ஐலண்டுக்காகவும் பிறகு 'தி இந்து ' வுக்காகவும் பணியாற்றியதன் மூலமாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவன் நான். கனடாவுக்கு வந்த பிறகு முதலில் " செந்தாமரை " வாரப்பத்திரிகையினதும் பிறகு " மஞ்சரி" யினதும் ஆசிரியராக தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு திரும்பினேன். மீண்டும் "த ஐலண்ட்" , பிறகு "த சண்டே லிடர்", "த நேசன்", இப்போது " டெயிலி மிறர்" , " டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் " ஆகியவற்றுக்கு எழுதுவதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகைத்துறைக்கு திரும்பி வந்திருக்கிறேன். என்னை மௌனமாக்க விடுதலை புலிகள் எனது பத்திரிகையை நிறுத்தினாலும் கூட, நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி பதவியில் இருந்த அரசாங்கங்களையும் விடுதலை புலிகளையும் விமர்சித்தேன். புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஒரு தமிழ்த் துரோகி என்று பழிதூற்றினார்கள். புலிகளுக்கு எதிரானவன் என்று எனக்கு பட்டஞ்சூட்டினாலும், எனது பத்திரிகையாளனாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன். பாலசிங்கம் நீட்டிய நேசக்கரம் புதிய மிலேனியம் ஒரு அதிர்ச்சியைக் கொண்டுவந்தது. 2000 ஆண்டு நடுப்பகுதியில் ரொரண்டோவுக்கு வந்த தமிழக் கத்தோலிக்க மதகுரு வணபிதா எஸ்.ஜே. இம்மானுவேல் என்னுடன் தொடர்புகொண்டார். லண்டனில் இருந்த பாலசிங்கம் என்னுடன் பேசுவதற்கு விருப்புவதாக வணபிதா என்னிடம் கூறினார். இது மீண்டும் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டேன். ஆனால், 1999 ஆம் ஆண்டில் பாலசிங்கம் லண்டனில் இருந்து வன்னிக்கு திரும்பவிருப்பதை பற்றிய செய்தியை ஏனைய ஊடகங்களை முந்திக்கொண்டு நானே பிரத்தியேகமாக வெளியிட்டிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடன் பேசிய பாலசிங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஒரு இணக்கத்தீர்வின் ஊடாக சமத்துவமான உரிமைகளுடன் சமாதானத்தை காணவேண்டியது தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது என்ற எனது கருத்துடன் உடன்படுவதாக எனக்கு கூறினார். நோர்வேயின் உதவியுடன் சமாதான முயற்சி ஒன்று தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் எனது எழுத்துக்களின் ஊடாக அதற்கு நான் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில் நான் ' த சண்டே லீடர் ' பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். கலந்துரையாடல் அந்த பத்திரிகையின் ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்கவிடம் அதைக் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெற்றிகரமாக இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாக உறுதியளித்தார். அதற்கு பிறகு பாலசிங்கத்துடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதற்கு அப்பாலான விடயங்கள் பலவற்றைப் பற்றி மணிக்கணக்காக பேசியிருப்போம். அந்த சம்பாஷணைகளின் ஊடாக விடுதலை புலிகளின் அந்தரங்கமான செயற்பாடுகள், அதன் படிமுறை வளர்ச்சி பற்றி பெருமளவு விடயங்களை அறிந்துகொண்டேன். போர்நிறுத்தம் ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர்நிறுததம் 2002 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உண்மையான சமாதான இணக்கத்தீர்வுக்குை அனுகூலமில்லாத முறையில் விடுதலை புலிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதை விரைவாகவே நான் கண்டு கொண்டேன். பாலசிங்கத்திடம் எனது விசனத்தை வெளிப்படுத்தியபோது எனது முறைப்பாடுகளுக்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். சமாதான முயற்சி ஒன்றுக்கு விடுதலை புலிகள் தங்களை பரிச்சியப்படுத்துவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்து நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். அது நடக்கவில்லை என்றபோது நான் விடுதலை புலிகள் செய்த எதிர்மறையான காரியங்களுக்காகவும் செய்யத்தவறிய காரியங்களுக்காகவும் அவர்களைை விமர்சிக்கத் தொடங்கினேன். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலை புலிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை நான் விரைவாகவே புரிந்துகொண்டேன். இந்த சிந்தனை எனது பத்திகளில் பிரதிபலித்தது. பாலசிங்கம் ஆத்திரமடைந்தார். எனது பத்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரித்தால் அதனால் பத்திரிகைக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் உள்ள மதிப்பு கெட்டுவிடக்கூடும் என்றும் லசந்த விக்கிரமசிங்கவுக்கு அவர் " ஆலோசனை " கூறினார். என்னிடம் அதைக் கூறிய லசந்த , மச்சான் வழமைபோன்று எழுது" என்று உற்சாகப்படுத்தினார். நான் தொடர்ந்து எழுதினேன். பிறகு பாலசிங்கம் செய்தியாளர்கள் மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எனது பெயரைக் கூறி தாக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது. என்னை கடுமையாக தாக்கி எழுதுமாறு அவர் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை கேட்குமளவுக்கு எனக்கு எதிராகச் சென்றார். தொலைபேசி அழைப்பு ஒரு சில வருடங்கள் கழித்து 2006 நவம்பர் மூன்றாம் வாரம் லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. பாலசிங்கம் தான் அழைத்தார். எங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமார் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. ஆனால், " பாலா அண்ணை" யுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் நான் கேள்விப்பட்டேன். தனது பழைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பு வைத்திருந்தவர்கள் சிலருடன் தொலைபேசியில் பேசிவருவதாக பாலா அண்ணை தொடக்கத்தில் கூறினார். அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, விரைவில் எம்மிடமிருந்து விடைபெறப் போகின்ற ஒரு மனிதரிடமிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்பு அது என்பதை விளங்கிக்கொண்டேன். அவருக்கு மலவாசலில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. அது ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வைத்தியர்கள் அவர் ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்கே உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள். குதூகலமாக பகிடிவிட்டு பேசுவது பாலசிங்கத்தின் பழக்கம். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் கவலையடைந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவருக்கு இருந்த அந்தக் கவலை தனக்கு நேரப்போகிற மரணத்தைப் பற்றியதல்ல. " தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை. நிலைமை படுமோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்போகுது" என்று பாலா அண்ணை படபடவென்று பேசினார். தம்பி என்று அவர் கூறியது விடுதலை புலிகளின் தலைலர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே. போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில் பிரபாகரன் தம்பி என்றே அறியப்பட்டார். விடுதலை புலிகளின் நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் ஆத்திரமடைந்திருக்கிறது. புலிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முறையில் செயற்பட வில்லையானால் மேற்கு நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லாம் ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்து விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு நிராமூலம் செய்யப்படுவதை உறுதிசெய்யப் போகின்றன என்று பாலசிங்கம் சொல்லிக்கொண்டே போனார். யதார்த்த நிலையை பிரபாகரனுக்கு புரியவைத்து அதன் பிரகாரம் செயற்படவைக்க உங்களால் ஏன் முடியவில்லை என்று நான் அவரை கேட்டேன். பல தடவைகள் தான் முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது என்று அவர் மிகுந்த கவலையுடன் பதிலளித்தார். வடக்கில் வன்னி பெருநிலப்பரப்பில் கேப்பாபுலவில் பிரபாகரனை தனியாகச் சந்தித்து உண்மையான நிலைவரத்தை விளங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் ஆனால் பிரபாகரன் அசையவில்லை என்றும் மிகுந்த வேதனையுடனை பாலா அண்ணை கூறினார். " உனக்கு தெரியும்தானே ' வீரமார்த்தாண்டன் ' ( கோபம் வந்தால் பிரபாகரனை அவ்வாறுதான் பாலா அண்ணை அழைப்பார்) என்னுடன் எப்படி நடந்து கொள்கின்றவன் என்று " தமிழில் கூறியவாறு அவர் தொடர்ந்தார். " உண்மையான நிலைவரம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது பிரபாகரன் திடீரென்று இடைமறித்து தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் சேரன் இயக்கிய " ஆட்டோகிராவ்" படம் பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் இப்போது அந்த படத்தை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.டி.வி.டி.மூலம் தொலைக்காட்சியில் படம் போடப்பட்டு நாம் அமைதியாகப் பார்த்தோம். படம் முடிந்ததும் நான் மீண்டும் அன்றைய நிலைவரத்தைப் பற்றி மீண்டும் பேச முயற்சித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்ப்போமா என்று பிரபாகரன் கேட்டார். அதனால் அதே படத்தை மீண்டும் பார்த்தோம். மீண்டும் படம் முடிந்ததும் பழைய விடயத்தை மீண்டும் நான் பேசத்தொடங்க பிரபாகரன் குறும்புச் சிரிப்புடன் ' இன்னொருக்கா பார்ப்போம் ' என்று கேட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். பிரபாகரன் இவ்வாறு நடந்துகொள்கிறபோது அவரை இறங்கி வரச்செய்ய எதனாலும் முடியாது என்பது எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு தெரியும்." விடுதலை புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நிலைவரத்தை புரியவைக்க முயற்சிக்கவில்லையா என்று நான் கேட்டபோது வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனை நம்பவைத்தும் விட்டார்கள். சூசை, 'பேபி ' சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்ற மூத்த தலைவர்கள் இடர்பாட்டை விளங்கிக் கொண்டார்கள். ஆனால், யதார்த்த நிலையை கண்திறந்து பார்க்க பிரபாகரனை வழிக்குக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கவில்லை என்று பாலசிங்கம் கூறினார். நாமிருவரும் 20 - 25 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் பாலசிங்கம் தொடர்ச்சியாக இரும ஆரம்பித்தார்.அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. உரையாடலை நிறுத்த வேண்டியதாயிற்று. போர் தீவிரமடைவது தவிர்க்கமுடியாததாகப் போகின்றது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், பாலசிங்கத்துடனான உரையாடல் எனக்கு பெரும் கவலையைத் தந்தது. வன்னி மண்ணில் உள்ள அப்பாவி தமிழ்க் குடிமக்கள் ஒரு மனதாபிமான அவலத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று கவலையடைந்தேன். எனது பயம் நியாயமானது என்பதை அடுத்துவந்த நிகழவுகள் நிரூபித்தன. சர்வதேச சமூகம் விடுதலை புலிகளை " மொங்கப் போகிறது" என்ற பாலா அண்ணையின் எச்சரிக்கையும் சரியென்று நிரூபிக்கப்பட்டது. கேவலமான வேலை செய்வதற்கு கொழும்பை அனுமதித்துவிட்டு சர்வதேச சமூகம் இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு விசாரணை நடத்த விரும்புகிறது. தப்பெண்ணம் பாலசிங்கத்துடனான இறுதி உரையாடல் எனக்கு பெருமளவு விடயங்களை தெளிவுபடுத்தவும் செய்தது. அவருடன் நான் கொண்டிருந்த ( மென்னயமாகக் கூறுவதானால்) "தப்பெண்ணம் " அவற்றில் பிரதானமானது. பாலசிங்கம் மெய்யாகவே பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வு ஒன்றில் ஆழமான கரிசனை கொண்டிருந்தார் என்பதையும் ஆனால் ( பின்னர் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் நிரூபித்ததைப் போன்று ) பிரபாகரன் அதை நிராகரித்துவிட்டார் என்பதையும் பாலசிங்கத்துடனான உரையாடல் ஊடாக எனானால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைத் தாக்கி ஏன் பேசினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடர் பத்திரிகைக்கு நான் எழுதுவதை ஏன் தடுக்க முயன்றீர்கள் என்றோ நான் அவரிடம் கேட்கவில்லை. இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதரிடம் அவ்வாறு கேட்பது நயநாகரிகம் இல்லை என்று நான் உணர்ந்தேன். ஆனால், தன்னை விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பாதுகாப்பதற்காகவே எனக்கு எதிராக பாலா அண்ணை பகிரங்கமாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். தமிழ்ச்செல்வனும் காஸ்ட்ரோவும் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த விடுதலை புலிகள் மத்தியில் எனக்கு எதிராக கயமைத்தனமான பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் முன்னைய காலகட்டங்களில் என்னுடன் பாலசிங்கம் வைத்திருந்த நெருக்கமான தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்திருக்கக்கூடியது மிகவும் சாத்தியமே. தேசத்தின் குரல் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை (பிரிட்டிஷ் நேரப்படி ) பிற்பகல் 1.45 மணிக்கும் அமைதியாக காலமானர். பாலா அண்ணை இறுதிமூச்சை விட்ட தருணம் அவரது அன்பு மனைவி அடேல் ஆன் அருகே இருந்தார்.2006 டிசம்பர் 20 ஆம் திகதி லண்டனில் அலெக்சாண்டிரா பலஸில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. விடுதலை புலிகளின் தத்துவவாதியும் மதியூகியுமான பாலா அண்ணைக்கு இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் " தேசத்தின் குரல் " என்ற பட்டத்தை வழங்கி அஞ்சலி செய்தார். நான் பாலா அண்ணையுடன் கொண்டிருந்த உறவுமுறை பற்றிய நினைவுகளும் சிந்தனைகளும் கடந்த 14 ஆம் திகதி அவரது 18 வது நினைவு தினம் என்பதால் மீண்டும் எழுந்தன. https://www.virakesari.lk/article/2014811 point
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
1 pointமுன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .1 point
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள் தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்1 point
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
இந்தியாவின் பினாமியாகச் செயற்படாத தலைவர் என்பது சரி. அதற்காக சுமத்திரன் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கு சும்பந்தன்>சுமத்திரன்>மாவை 3 பேரும் காரணம். சுமத்திரன் பிரதான காரணம். மாவை அவரை சுதந்திரமாக முடெிவடுக்க ஆனமதிதத்தது பிழை. ஏற்கனவே கட்சியாலும் முக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவரான சிறிதரனை தலைமையேற்று நடத்த விடுவததே சிறந்தது.1 point
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
தலைமைப்பதவியை இலக்குவைத்துப் கட்சியின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் 'கோல்' போடாமல் விட்டால் சரி. அத்தோடு ஏலவே சிறிதரன் அவர்களைத் தலைவராக முன்மொழிந்தபோது இவர் என்ன செய்துகொண்டிருந்தார். அந்தத் தெரிவின் முடிவு என்ன? அவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விளத்தத்தையும் இவர் கூறாதிருப்பதேன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இந்த முறை ஆற்றை கலியாணவீட்டு பலகாரமோ…🤣 @Paanch @குமாரசாமி @தமிழ் சிறி சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியமாம். மனித உடல் தாங்குமா?1 point
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.1 point
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சீ சீ அவருக்கு தன்னுடைய பிறந்தநாளுக்கு உங்களை அழைத்து விருந்து அளிக்கத்தான் விருப்பம், இல்லையா @குமாரசாமி அண்ணை?!1 point
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அத்திலான்திக் சமுத்திரத்தில் என்னை முடிக்கிறதென்றே குமாரசாமி திட்டம் போட்டுட்டார்.1 point
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
தேர்தலில் தோல்வியுற்ற, “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்” “சுத்துமாத்து சுமந்திரனுக்கு”, நோர்வே தூதரகத்தில் என்ன வேலை. 😂 கடந்த 15 வருசமாய் புடுங்கின ஆணி காணாது என்று, வெட்கம் இல்லாமல்… இப்பவும் புடுங்க நிற்கிறார். 🤣1 point
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
நல்ல பயங்கரவாதியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். 🤣1 point
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சாணக்கியனும் சுமந்திரனும் நோர்வே தூதரை சந்திப்பதில் ஒரு லொஜிக் இருக்குது. அது சரிதான். அவர்கள் துரோகிகள். ஆனால் பார் சிறிதரன் தான் சிபாரிசு செத்த பார்களின் உரிமம் நிறுத்தப்பட்டாற் கூட நோர்வே தூதரை மட்டுமல்ல வேறு எந்த நாட்டுத் தூதுவரையும் சந்திக்கமாட்டார். அதன் காரணம் பார் சிறிதரனுக்கு இங்லிஷ் தெரியாதது என்பது அல்ல,😂 இறுதி யுத்தத்தில் நோர்வே உள்ளிட்ட சகல நாடுகளும் தமிழருக்கு துரோகமிழைத்துதான் காரணம். 👀 நீதி: (இங்லிஷ் உனக்கு) கிட்டாதாயின் வெட்டென மற.😂1 point
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சுமந்திரன், சாணக்கியனை... "பாட்டா பாத்ரூம்" செருப்பு போட வைத்து, பழி வாங்கிவிட்டார். கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட ஒருவரை... அருகில் வைத்திருப்பதால், ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த நிலை... சாணக்கியனுக்கு ஏற்படப் போகுது.1 point
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...1 point
-
2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி!
2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி! இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 'வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்' என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது. குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல தொழில் முனைவோர் அதிக அளவில் வருடா வருடம் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கில் உள்ள தனிநபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குத் தொடர்ந்தும் ஒரு தளத்தை வழங்கி வருவதாக யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது. https://www.hirunews.lk/tamil/391505/2025-ஆம்-ஆண்டுக்கான-யாழ்ப்பாண-சர்வதேச-வர்த்தக-கண்காட்சி1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
99 வீதமானவர்கள் ஆடையின்றி இருந்தால் அங்கே ஒருவர் ஆடையுடன் போனால் விசர் என்றுதான் சொல்வார்கள்.1 point
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் } (2) பெண் : { ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு } (2) பெண் : { ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி } (2) பூத்தது வாடுது நீ வரத்தான் பெண் : { மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2) { பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா } (2) கெடச்சது மாலையும் மஞ்சளும்தான் ........! --- ராசாவே உன்ன நான் எண்ணித்தான் ---1 point
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
இவருடைய பேச்சு அடிப்படைவாத மதவெறியர்களின் வழமையான பேச்சு போன்று இல்லாமல் இருப்பது நம்பிக்யை தருகின்றது1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- கருத்து படங்கள்
1 point1 point- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வே தூதுவருடனான ஒரு சந்திப்பு... அலுவலகத்திலும், மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣1 point- மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
மாறாது ..வடக்கு கிழக்கு ஜெ.வி.பி தவ்வல்கள் படிக்க கணக்க இருக்கு ....1 point- 15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
அனுரா தானும் ஒரு சிங்களவர் என்று நிருபித்து உள்ளார் இவரால் தமிழர்கள் ஒரு போதும் நிம்மதி அடைய போவதில்லை சிங்கள தொடர் தொல்லை தான் அவர் ஊழல் புரிந்தார் இவர் ஊழல் புரிந்தார் என்று சொல்லுகினமே தவிர இவர்தான் என்று குற்றம் சாட்ட முடியாதளவுக்கு நுண் அரசியல் செய்கிறார் பின்னால் அநேகமா சீனா இருக்கலாம் . இனியும் அந்த ஊழல் இந்த ஊழல் என்று பெரிதாய் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் ஏனென்றால் இது அனுரா அரசியல் அவ்வளவே சிங்களம் மாறவில்லை முகமூடி மாற்றி உள்ளனர் .1 point- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வே பாலஸ்தீன மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை. அதை விளைவித்தவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளும், இஸ்ரேல் கடும்போக்குவாதிகளுமே. நோர்வே வெறும் அனுசரணையாளர் மட்டுமே. இருபகுதியும் யுத்தத்தை விரும்பினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதுவே இலங்கையிலும் நடந்தது. அங்கும் இரு பகுதியும் யுத்தத்தே விரும்பியது உண்மை. தலைவர் எப்ப அடிக்கபோறார் என்று 2005 ல் இருந்து எதிர்பார்த்து காந்திருந்து யுத்தத்திற்கு தூபமிட்ட புலம் பெயர் தேசிக்காய் குஞ்சுளுக்கு நன்கு தெரியும் நோர்வே தமிழ் மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை என. இருப்பினும் தமது குற்றத்தை மறைக்க இந்த பொய்யை தமிழர்களிடையே மட்டும் பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை.1 point- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சிறியரிடம் நோர்வே தூதுவரே தூது போவார் என்ற ஜோக்கை ரசித்து விட்டு மெளனமாக கடந்து வந்தால், அந்த ஜோக்கிற்கு பதிலான எனது ஜோக்கையும் ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான்.1 point- மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
சிலவருடங்களுக்கு முன் ஜேவியின் ஒருவர் பிக்குகள் எல்லோரையும் தாம் ஆட்சிக்கு வந்தால் உள்ளுக்கு போடுவம் என்றது நினைவில் உள்ளது. (??). அது வேற வாயா?1 point- 15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
இதுவும் ஒரு தனி ரகம் என அநுர நினைத்தார் போல.1 point- 15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே அடுத்து வரும் ஐந்து வருடங்களும் ஆட்சியை கொண்டு போகப்போயினம் போல....1 point- 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
இந்த வார ஆரம்பத்தில் சிரிய நகரொன்றில் பகிரங்க மரணதண்டனை ஒன்றுக்காக மக்கள் முண்டியடித்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த மரணதண்டனை அன்று வழங்கப்படவில்லை. எதுவென்றாலும் நீதிமன்றின் ஊடாக, சட்ட்பபடியே செய்வோம் என்று சொல்லிவிட்டனர் புதிதாக வந்தவர்கள். நல்ல ஒரு ஆரம்பமும், அறிகுறியும்........................ என்னுடைய நல்லெண்ணம் காற்றின் ஊடாக கடல்களையும் கண்டங்களையும் தாண்டிப் போய், சிரியாவை அடைந்து, அந்த மக்கள் இன்றிலிருந்தாவது நிம்மதியுடன் வாழ, மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்த எல்லா கடவுள்களும் அருளட்டும்.......................1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- 'வ.உ.சிக்காக நடந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் இப்போது இல்லை' சாகித்ய அகாடமி விருது வென்ற வேங்கடாசலபதி
பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒன்றின் ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வ. உ. சிதம்பரனாரை ஆங்கிலேய அரசு கைது செய்ததை அடுத்து, 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து இந்நூல் பேசுகிறது. அப்போது நடந்த போராட்டத்தில், காவல்துறையின் அடக்குமுறை காரணமாக, நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டனர். ''ஆனால், இந்த மாபெரும் எழுச்சி மறக்கப்பட்டுவிட்டது'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வேங்கடாசலபதி, இந்த எழுச்சிக்கான நினைவு சின்னத்தை அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 'கப்பலோட்டிய தமிழன்' என்றழைக்கப்படும், வழக்கறிஞருமான, சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார், கடல்சார் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் நீராவி கப்பல் நிறுவனத்தை 1906-ஆம் ஆண்டு உருவாக்கி வெற்றி கண்டவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக உள்ள வேங்கடாசலபதி, கடந்த 40 ஆண்டுகளாக வ. உ. சி. குறித்து ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 'ஆஷ் அடிச்சுவட்டில்', 'வ.உ.சி.யும் பாரதியும்' , 'வ.உ.சி : வாராது வந்த மாமணி' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ள அவர், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam என்ற நூலை அவர் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்தவருக்கு என் வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 டைட்டானிக் கப்பலை சுற்றி ஆழ்கடலில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளர்களின் நேரடி அனுபவம்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/@MKSTALIN தமிழக ஆளுநர் ஆர் என் ரவியும் தனது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது டெல்லியில் மார்ச் 8-ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்த வேங்கடாசலபதி, "சாகித்ய அகாடமி விருது கடந்த 40 ஆண்டுகளில் ஆய்வு நூல்களுக்கு வழங்கப்பட்டதில்லை. எந்தவொரு எழுத்தாளருக்கும் சாகித்ய அகாடமி விருது பெறுவது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் ஆராச்சியாளர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் எதிர்பாராதது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது , இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்" என்றார். தமிழர்கள் அனைவருக்கும், வ.உ.சி.க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உண்டு, அதனால் இந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 தலையில் சுட்ட முன்னாள் காதலன் - பாடகியாக மீண்டு வந்த பெண் (காணொளி)17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/@ARV_CHALAPATHY படக்குறிப்பு, இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி வேங்கடாசலபதி மகிழ்ச்சி தெரிவித்தார். 1908ம் ஆண்டு என்ன நடந்தது? 1908-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரை கைது செய்ததை அடுத்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுதேசி இயக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த காலம் அது. சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் விடுதலை அடைந்ததை 'ஸ்வராஜ்ய தினம்' என்று அறிவித்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வ.உ.சி. பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார். அரசின் தடையையும் மீறி அந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அவர் மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள் மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். "காலை 10.30 மணியளவில், திருநெல்வேலிப் பாலம் என்றழைக்கப்பட்ட வீரராகவபுரம் என்ற ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கடைகள் மூடப்பட்டன. மக்களின் நடமாட்டமும் வண்டிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டன. இதற்குள்ளாக மூவாயிரம் நாலாயிரம் பேர் கும்பலாகத் திரண்டு, இந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். பின்னர் பட்டணத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நகர்மன்ற அலுவலகக் கட்டடத்துக்குள் அலுவலக ஆவணங்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொளுத்தப்பட்டன. கட்டடம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அடுத்து அஞ்சலகத்துக்கு தீயிட்டனர், தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, நகர் மன்றத்துக்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கு தீக்கிரையானது. தொடர்ந்து இரண்டு மூன்று நாளுக்கு அது எரிந்துகொண்டே இருந்தது." என்று வேங்கடாசலபதி திருநெல்வேலியில் நடந்தவற்றை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 மேலும் தூத்துக்குடியில் நடந்தவற்றை குறிப்பிடும் போது, "சந்தையிலிருந்த கடைகள் மூடப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர்களும் பெஸ்டு அண்டு கம்பெனியின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். நகர்மன்றத் தோட்டி தொழிலாளர்களும், பிற தோட்டி தொழிலாளர்களும் வேலைக்கு போகாமல் நின்றனர். கசாப்புக் கடைக்காரரும் குதிரை வண்டிக்காரர்களும் கூட வேலை நிறுத்தம் செய்தனர். தெருக்களில் கூடிய மக்கள் தெருவிளக்குகளையும் உடைத்தனர்" என்று எழுதியுள்ளார். தங்களின் ஊதிய உயர்வு, குறைந்தபட்ச கூலி என்று பொருளாதார கோரிக்கைகள் இல்லாமல், கோரல் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தமே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் என்று பேராசிரியர் ஆ. சிவ சுப்ரமணியன் நிறுவியுள்ளதாக, இந்நூலில் வேங்கடாசலபதி சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,X/@ARV_CHALAPATHY படக்குறிப்பு, இந்த நூல் ஆங்கிலத்தில் 'Swadeshi Steam' என்ற பெயரில் வெளியானது இதை ஆங்கிலேய அரசு கலகம் என்று கூறுவது தவறு என்கிறார் வேங்கடாசலபதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கலகம் என்பது கண்மூடித்தனமாக நடைபெறுவது, இலக்கு என்னவென்று தெரியாமல் தாக்குவது, ஆனால் 1908-ஆம் ஆண்டு நடைபெற்றது தன்னெழுச்சியான, தேர்ந்த இலக்குகள் கொண்ட, மக்களின் கொந்தளிப்பாகும். ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், முனிசிபல் அலுவலகம், பதிவாளர் அலுவலகங்களை தாக்கி, தீ வைத்தனர். ஆங்கிலேயர்களை சீண்டினார்கள். ஒரு ஆங்கிலேயர் எதிரில் வரும் போது ஜட்கா (குதிரை வண்டி) ஓட்டுநர் வழி கொடுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை வெறும் சீண்டல்கள் தானே தவிர, அவர்கள் ஆங்கிலேயர்களை தாக்கவில்லை. ஒரு தலைவருக்காக இரண்டு ஊர்கள் ஸ்தம்பித்துபோனது, வரலாற்றில் சாதாரண நிகழ்வல்ல. வ. உ. சி. ஒரு அசாதாரண தலைவராக இருந்தார்" என்று குறிப்பிடுகிறார். கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 தமிழ் பாதிரியார்கள் பிரேசில் காடுகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றுவது ஏன்?17 டிசம்பர் 2024 ஜட்கா (குதிரை வண்டி) ஒட்டுநர்கள், சவரம் செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள், இறைச்சி விற்பவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதனை ஆங்கிலேய அரசு கடுமையாக ஒடுக்கியது. போராட்டத்தில் பங்கேற்ற நான்கு பேர் திருநெல்வேலியில் சுட்டுக்கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். மேலும், மக்களுக்கான 'ஒட்டுமொத்த தண்டனை' என்று திருநெல்வேலியில் ஆறு மாத காலம் காவல்படையினர் முகாமிட்டு இருந்தனர். மக்களிடமிருந்து தண்டனை வரி வசூலிக்கப்பட்டது. "அதாவது, இனி ஒரு முறை இது போன்ற எழுச்சி உருவாகக் கூடாது என்று மக்களுக்கு பாடம் புகட்டுவது அதன் நோக்கமாகும்" என்கிறார் வேங்கடாசலபதி. சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 எத்தனை வகையான செஸ் போட்டிகள் விளையாடப்படுகின்றன தெரியுமா? (காணொளி)16 டிசம்பர் 2024 "நெல்லை எழுச்சி குறித்து அதிகபட்சமாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது குறித்து நூல் எழுதும் அளவு ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் வேங்கடாசலபதி. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரி ஆஷ் உடைய வாரிசுகளை நேரில் சென்று பார்த்து வந்திருந்தார். ஒரு பிராந்திய மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்ற வரலாற்றாசிரியர்களை காண்பது மிக மிக அரிது. அது அவருக்கான முக்கியமான பலமாகும்." என்கிறார் வேங்கடாசலபதியுடன் ஐந்து ஆண்டுகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியரும், வேலூர் புரட்சி மற்றும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த வரலாற்று நூல்களை எழுதியுள்ளவருமான, கே. ஏ. மணிக்குமார் "இந்த எழுச்சி ஆங்கிலேய அரசால் மிக கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு, காந்திய சகாப்தம் தொடங்கியது, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த எழுச்சி அனைவருக்கும் மறந்துவிட்டது" என்று கூறும் வேங்கடாசலபதி, ''இந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் தற்போது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது'' என்கிறார். "ஒரு தூண் அல்லது கல்வெட்டு அமைக்க வேண்டும் என்று 2002-ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இப்போதும் அதே கோரிக்கை வைக்கிறேன். எழுச்சி தொடங்கிய இடங்களான நெல்லையில் இந்துக் கல்லூரி அருகிலும், தூத்துக்குடியில் மசூதிப்பேட்டை அல்லது வண்டிப்பேட்டை என்ற இடத்திலும் இந்த நினைவு சின்னங்களை அமைக்கலாம்" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2v0enll12o1 point- அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
கட்டபொம்மனும் எட்டப்பனும் மாதிரி மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் ஜெயராஜ் உம்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஜஸ்டின், ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர் இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா? முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும். ---------------------------------------------------------------------------------------- முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள், பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன் வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள். அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள் பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது. பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்? யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா? இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது? எதிர்கருத்துக்களை விதைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டால்.. எதுவேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டுபோகலாம் என்ற நிலை எடுத்துவிட்டால், பொத்தாம் பொதுவாய் கருத்தை விதைத்துக்கொண்டே போகலாம், ஆனால் பொட்டில் அடித்தமாதிரி இதுதான், இவர்தான், இப்படித்தான் என்று சொல்லி முடிக்க முடியாது. ஒரு இனத்தின் இருப்புக்காக உயிரை தவிர வேறு எதையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்த ஒரு அமைப்பின்மீது போறபோக்கில் சேறு வீசி செல்வதை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்துவிட்டால் எம் வாழ்வுக்காகவும் சேர்த்தே தம் வாழ்வை அழித்த அந்த போராளிகூட்டம் பிறந்த மண்ணில் உயிராக பிறந்தது மட்டுமல்ல, ஒரு மயிராக காற்றில் பறந்தால் கூட அது பெரும் பாவம். இங்கே புலிகளுக்காக முக்கி முக்கி பேசுவதால் போன புலிகள் வரபோவதில்லை, அல்லது புலிகளுக்கு சார்பாக பேசிவிட்டால் நீ மட்டும்தான் புலிகள் விசுவாசி என்று யாரும் முண்டாசு கட்டிவிட போவதுமில்லை, மாறாக மனசில் உள்ளதெல்லாம் புலிகள் வாழ்ந்தபோது எம் இனத்துக்காக அவர்கள் இறந்தது எம் இனத்திற்கான நன்றிக்கடன். அவர்கள் இல்லாதபோது அவர்களுக்காக நாங்கள் பேசுவது ,,அவர்கள் நினைவாகவே இருப்பது எமக்காக எல்லாம் செய்த பாவத்திற்காக இல்லாமலே போய்விட்ட புலிகளுக்கான எம் நன்றிக்கடன். இதுகூட ஒரு இனம் செய்யவில்லையென்றால், எமக்காக அந்த போராளி கூட்டம், பிறக்காதும் போயிருக்கலாம், பிறந்து இறக்காதும் போயிருக்கலாம்.1 point- காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்படுமா?!
கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல. பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று. அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெங்கிஸ் கான் வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார். அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார். நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்? ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது. இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம் கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான். காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும். பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது. ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2jgv8x520vo1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
பொது வேட்பாளர் தேர்தலில் நின்றார் அதுவும் பிழை என்றார்கள், சரி..... ஒருவரும் வேண்டாம். ஆனால் நாட்டுக்கு ஒரு தலைவர் வேண்டும், நீங்கள் நிற்கிறீர்களா? அல்லது ட்ரம்மை அழைப்போமா? நீங்கள் ஜனாதிபதியானால் கூட ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவரமாட்டீர்கள், கொண்டுவரவும் முடியாது. எழுபத்தாறு ஆண்டுகளாய் இனவாதத்தாலும் ஊழலாலும் கைலஞ்சத்தாலும் நிறைந்து ஊதிப்பெருத்து வெளியேற முடியாமல் நாடு தள்ளாடுது. கீழ்மட்ட ஊழியன் முதல் முதல்கட்ட அதிகாரி வரை ஊழல், அதில் அரசியல்வாதிகளே பெருத்த ஊழல் பெருச்சாளிகள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கவே வந்தவர்கள். அண்மையில் வெளிவந்த படம் உங்கள் கண்ணுக்குபடாமல் போயிருக்காது. அந்தப்படம், மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு ஊழியர்களுக்கு பிரியாவிடை அளித்தார் மாத்தையா. அப்போது எடுத்துக்கொண்ட படம் வெளிவந்தது. ஒரு கிராமமே அங்கு நின்றது, அவ்வளவும் அவரது ஊழியராம். மஹிந்த ஒருவரே அரசியல் செய்தார், அவர் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்கு ஒரு கிராமம் பணிபுரியுது. கொழுத்த சம்பளம், ஓசி ஊழியர்கள், வசதி, அதைவிட ஊழல். நாடு எங்கே போகும், ஒருவருக்கே எல்லாவசதியும். இதென்ன அநிஞாயம்? யார் பணம்? அவர்கள் என்ன சும்மாவா, அல்லது சாதாரண தொழிலாளியின் சம்பளமா பெற்றிருப்பார்கள்? இவ்வாறே ஒவ்வொரு அரசியல்வாதி, அரச உத்தியோகத்தர்கள், அரச இலாக்காக்கள், சும்மாஇருந்து மக்களுக்கு அதிகாரம் செலுத்தி லஞ்சம் பெற்று ஊதிப்பெருத்தவர்கள். அண்மையில் அர்ச்சுனா கலகம் விளைவித்தார் என்றொரு செய்தி வந்தது. அவர் அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டார்? யாரும் இதுவரை கேக்காத, கேட்கக்கூடாது என்று நினைக்கிற கேள்விகளை கேட்டார். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விசரனை கலையுங்கோ என்று கோஷமிட்டார்கள். சிறிதரன் ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது அரச உத்தியோகத்தர் எங்களைவிட கல்வி அறிவில் கூடியவர்கள், அவர்களோடு நல்லதொரு இணக்கப்பாட்டுடன் நாம் நடந்தோம். ம்...... கல்வியறிவில் கூடியவர்கள் செயலில் காட்டவேண்டும் தங்கள் திறமையை. இவர் கேள்விகேட்க்காமல் இருந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குத்தெரியும்? மக்கள் என்ன முட்டாள்களா? அரசியல் வாதிகளும் கவனிப்பதில்லை, மக்களும் கேட்கக்கூடாது என்றால்; இவர்கள் என்னத்துக்கு அரச பணத்தை, இல்லை மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்? ஆகவே இந்த தவறுகளை குறைகளை மாற்ற நினைக்கும் அனுராவை இந்த பெருச்சாளிகள் சும்மா விடுமா? சாதாரண ஏழை மக்களை தவிர யாரும் இவர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்ப மாட்டார்கள். எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத எச்சரிக்கை, சவால் இவருக்கு மட்டும் எதற்கு? அவரின் இந்த ஊழலற்ற அரசியலை அவர் கட்சியை சார்ந்தவர்களே விரும்ப மாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யாத, மக்களை சந்திக்காத அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு சலுகைகள் எதற்கு? அனுராவின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால்; யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள், உண்மையான சேவைசெய்பவர்கள் இனங்காணப்படுவார்கள். யாரும் அரச உத்தியோகத்தில் இணையமுன் யோசிப்பார்கள். பாருங்கள்... அனுராவை கலைக்க எங்கும் வேலைநிறுத்தம், அடாவடி, குழப்பம், புத்த சிலை என்று கிளம்பி அவருக்கு குடைச்சல் கொடுத்து அவரை ஓட ஓட விரட்டவே முனைவார்கள். ஏனென்றால் உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர் யாருமில்லை. இப்போ, நான் விக்கியரை நினைத்துப்பார்க்கிறேன். இதுவே அவருக்கும் நடந்தது. உண்மையான எவருக்கும் இதுதான் நடக்கும். ஒரு கட்சியில்; அதிகாரப்போட்டி, யாரும் தனக்குமேல் வரக்கூடாது என்று திட்டம் போட்டு, ஆசை காட்டி, கூட்டம் சேர்த்து குழப்புகிறார்கள் கட்சிக்குள் இடையில் வந்தவர்கள். அனுராவை சும்மாவா விடுவார்கள் சந்ததி சந்ததியாய் சுரண்டியவர்கள்? அதைவிட அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை வேறு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு, லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்துற வரை நாட்டில் சட்டங்கள் இறுக்கப்படவேண்டும், சாதாரண மக்களும் சில கஸ்ரங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நாடுகள் இவைகளை கடந்தே மீண்டு வந்திருக்கின்றன. கோசானுக்கே, அனுரா மீது இவ்வளவு கடுப்பேறி சன்னதம் ஆடுறாரென்றால்; இதுவரை இனவாதத்தை தூண்டி கொள்ளையடித்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? மாண்புமிகு ஜனாதிபதி, ஆணைக்குள்ழுக்களை அமைத்து கோழி அமத்தினமாதிரி ஊழல் பெருச்சாளிகளை அமுக்க வேண்டும்!1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர்.1 point- குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
ஐயா அவர்கள்! யாழ்களத்தில் இணைந்திருப்பது யாழ்களத்திற்கும் பெருமை. தமிழாய் தமிழருடன் இணைந்திருப்போம்.1 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 pointபாடல்: ஆசை ஒரு புல்வெளி படம்: அட்டகத்தி இசை:சந்தோஸ் நாரயணன் பாடியவர்கள்: பிரதீப்குமார் & கல்யாணொ நாயர் வரிகள்: கபிலன்1 point - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.