Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points87990Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்15Points2956Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46791Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/28/24 in Posts
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
10 pointsஆறுமுகம் இது யாரு முகம்? விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன. யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறு பட்டு இருந்தது. அன்று நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க் குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது. புது இடம், பதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன். பகலில் செய்த வேலை அலுப்பில் அன்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கனவிலா நினைவிலா என்று நான் உணரும் முன்னரே எனது மனைவி என்னை உலுப்பிய வேகத்தில் எழுந்து விட்டேன். என் வீட்டுக் கதவுதான் தட்டப் பட்டுக் கொண்டிருந்தது. நித்திரைக் குழப்பம் அத்தோடு சேர்ந்து விட்ட பயம் இரண்டும் இணைந்து என்னைச் சிறிது நேரம் இயக்கம் இல்லாமல் செய்து விட்டிருந்தன. என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் நான் இருந்த பொழுது, "கதவு உடைஞ்சிடும் போல இருக்கு" என்ற எனது மனைவியின் குரல், "யோவ் எதாவது செய்" என்று என்னை எச்சரித்தது. "mach die Tür auf " (கதவைத் திற) என்று வெளியே இருந்து கர்ஜித்த குரல் மரக் கதவினூடாக புகுந்து காதுக்குள் நுளைந்து செவிப்பறையை உடைத்துக் கொண்டிருந்தது. வெளியே எத்தனை பேர்? ஒருவனா? அல்லது ஒரு குழுவா? நான் தனி ஒருவனாக எப்படி சமாளிக்கப் போகிறேன்? என்று கணக்குப் போட்டுப் பார்க்க பதட்டம் எனக்கு இன்னும் அதிகமாகிப் போனது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வருவதை எதிர் கொள்ளத்தானே வேண்டும். மெதுவாக என்னை நானே தயார் செய்து கொள்ளத் தொடங்கினேன். முதற் கட்டமாக பொலிஸுக்கு அறிவிக்கும்படி மனைவியிடம் சொல்லி விட்டு, பிள்ளைகள் எழுந்து விடாமல் இருக்கவும் அவர்களது பாதுகாப்பைக் கருதியும் அவர்கள் அறைக் கதவுகளை சாத்தி வைத்தேன். கட்டில் மெத்தையை தாங்கும் சட்டம் ஒன்றினை எடுத்து வந்து கதவின் பக்கமாக ஒளித்து வைத்தேன். இப்பொழுது என் நினைவுக்கு வந்தவர் சாண்டோ மணியம் மாஸ்ரர். எண்பதுகளின் ஆரம்பத்தில் எனக்கு தற்பாதுகாப்பிற்கான பயிற்சி தேவைப்பட்டது. சோதி அண்ணனிடம் கராட்டி பயிற்சி எடுக்கலாம் என்று நான் எண்ணி இருந்த வேளையில் ஒருநாள் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வீரவாகு கிட்டங்கிக்குள் அதிரடிப் படை புகுந்து சோதி அண்ணனையும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்களையும் அள்ளிக் கொண்டு போனது. அதன் பிறகுதான் சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சிகள் பெற ஆரம்பித்தேன். நான் பயிற்சிக்குப் போவது எப்படியோ எனது நட்பு வட்டத்துக்குள் கசிந்து விட்டது. "பாத்து மச்சான். கண்டபடி எக்சசைஸ் செய்யாதை. பிறகு எலும்பெல்லாம் மசில்ஸ் வைக்கப் போவுது" என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அன்று சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் நான் பெற்ற பயிற்சியை இப்பொழுது நினைத்துப் பார்த்தேன். "உன்னை விடப் பலசாலியான ஒருவன் உன்னை வேகமாகத் தாக்க வரும் பொழுது இடது அல்லது வலது பக்கமாகவோ சற்று ஒதுங்கி அவனது கையைப் பிடித்து, அவனது வேகத்தோடு உனது பலத்தையும் சேர்த்து இழுத்து கீழே விழுத்தி விட வேண்டும். பின்னர் அவனது முதுகில் இரண்டு முழங்கால்களால் அழுத்தி அமர்ந்து கொண்டு அவனது கழுத்தை நாடியோடு சேர்த்து மேல் நோக்கி இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் திமிரும் பொழுதோ அல்லது உன்னை விழுத்தி எழும்ப முயற்சிக்கும் பொழுதோ அவனது கழுத்தை மேல் நோக்கி இன்னும் பலம் கொண்டு இழுக்க வேண்டும்" சாண்டோ மணியம் மாஸ்ரர் சொல்லித் தந்து, விளையாட்டின் போது பயின்றதை இப்பொழுது நிஜத்தில் செய்யப் போகிறேன். கதவு உடைந்து இப்பொழுது ஓட்டை விழுந்து விட்டது. ஓட்டையினூடாகப் பார்த்தேன். வெளியே ஒரேயொரு முகம்தான் தெரிந்தது. அது எனக்கு கொஞ்சம் தைரியத்தைத் தந்தது. ஆனால் நிலமைதான் அந்தப் பக்கம் தீவிரமாகப் போயிருந்தது. என்னைக் கண்டவுடன் கதவை உதைக்கும் அவனது வேகம் இன்னும் அதிகரித்திருந்தது. எவ்வளவு நேரம்தான் உதைகளைத் தாங்குவது? கதவு தன் வாழ்வை முடித்துக் கொண்டு வாய் பிழந்து நின்றது. சிங்கத்தை எதிர் கொள்ள சிறு எலி வீட்டுக்குள்ளே தயாராக நின்றது. என்ன ஆச்சரியம். முன்பு சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சி பெற்றது அப்படியே எனக்குக் கைகூடி வந்தது. நான் இழுத்து அவனைத் தள்ளி விட்ட வேகத்தில் அவன் கொரிடோரில் விழுந்து விட்டான். விழுந்தவனைப்ப பார்த்தேன். எனக்கு வசதியாக முதுகைக் காட்டிக் கொண்டு தரையில் குப்புறப் படுத்திருந்தான். சாண்டோ மணியம் மாஸ்ரரின் அடுத்த பயிற்சியும் சரியாக வந்திருந்தது. பொலிஸ் வரும் வரை அவனை இப்படியே தரையோடு அழுத்திப் பிடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்த்தது. இதற்குள் எனது மூத்தமகனின் நித்திரையை எனது மனைவி கலைத்திருக்க வேண்டும். நித்திரைக் கலக்கத்தில் தனது அறை வாசலில் வந்து நின்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஓடிச் சென்று பொருட்கள் வைக்கும் அறையைத் திறந்து கூட்டுத்தடி எடுத்து வந்து யேர்மன்காரனின் பின் பக்கம் அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்த அடிகளில் எழுபத்தைந்து வீதமானவை தரையிலே விழுந்தன. தரையில் பட்டு கூட்டுத்தடி உடைந்து போயிற்று. மீண்டும் ஓடிப் போய் அடுத்த கூட்டுத்தடியை எடுத்து வந்து மீண்டும் தரைக்கும், யேர்மன்காரனுக்கும் அடிக்க தொடங்கினான். அவனை எழுந்து தடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். அன்றைய காலத்தில் எனக்கிருந்த பொருளாதரா நிலையில் ஒரு கூட்டுத்தடி வாங்கவே யோசிக்க வேண்டி இருந்தது. மலிவாகப் போட்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கூட்டுத்தடிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கி இருந்தேன். அந்த இரண்டு கூட்டுத்தடிகளும் சிதிலமாக தரையில் இப்போ சிதறி இருந்தன. அவைகளைக் கூட்டி அள்ள இன்னும் ஒரு கூட்டுத்தடி வாங்க வேண்டிய நிலை எனக்கு வந்திருந்தது. கூட்டுத்தடிகள் முறிந்ததால் வேறு ஏதாவது கையில் சிக்காதா என என் மகன் அங்கும் இங்குமாகத் தேடிக் கொண்டிருந்தான். கதவுக்குப் பக்கத்தில் நான் ஒழித்து வைத்த கட்டில் சட்டம் அவனது கண்ணில் பட்டு விடுமோ என்ற பயம் ஒரு கணம் எனக்கு வந்து போனது. அவன் கையில் ஏதும் கிடைப்பதற்கு முன்னர் நல்ல வேளையாக பொலிஸ் வந்து விட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள். பொலீஸைக் கண்டதும் நான் எழுந்து கொண்டேன். யேர்மன்காரனால் எழுந்து கொள்ள முடியவில்லை. தரையிலே அப்படியே படுத்திருந்தான். இரண்டு பொலிஸும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். "Ich habe in die Hose gemacht" (காற்சட்டையோடு போயிற்றேன்) என்று பரிதாபமாக பொலீஸைப் பாரத்துச் சொன்னான். இரண்டு போலிஸ்காரர்கள் முகத்திலும் சிரிப்பு வந்து போனது. மரண பயம் வரும் போது உடல் கழிவுகளை வெளியற்றி விடும் என எனக்குத் தெரியும். அந்தப் பயம் யேர்மன்காரனுக்கு வந்திருந்தது தெரிந்தது. ஒரு பொலிஸ் அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்துப் போனார். மற்றையவர் நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். வெளியே போயிருந்த பொலிஸ் தனியாகத் திரும்பி வந்தார். வந்தவர் எனக்கு ஒரு பிரசங்கமே வைத்தார். "அநேகமான யேர்மனிய ஆண்கள் வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் களிப்பார்கள். அதற்கு Herren Abend (ஆண்களின் மாலைப்பொழுது) என்று சொல்வார்கள். வார விடுமுறை வருவதால் வெள்ளி மாலை ஆண்கள் தங்கள் வேலைக் களைப்பை மறந்து மகிழ்ந்திருக்க Bar இல் ஒன்று கூடி பியர் அருந்தி அளவளாவி களித்திருப்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை அதுதான் அவர் அதிகமாக குடித்திருக்கிறார். அவர் வசிப்பதும் நீங்கள் இருக்கும் இதே குடியிருப்புத்தான். மேல் மாடியில் குடும்பத்தோடு வசிக்கிறார். போதையில் வந்ததால் தன் வீடு என்று நினைத்து உங்கள் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார். உள்ளே ஆள் அரவம் கேட்டும் கதவு திறக்காததால் சினம் கொண்டு பலமாகத் தட்டி இருக்கிறார். அத்தோடு ஒரு ஆண் குரலும் உள்ளிருந்து கேட்டதால், தான் "பாரு"க்குப் போயிருந்த சமயம் பாரத்து தனது மனைவி வேறு ஒருவரோடு உள்ளே இருப்பதாக தவறாக நினைத்து கதவை உதைக்க ஆரம்பித்திருக்கிறார். கதவில் ஓட்டை விழுந்த பொழுது அதனூடாக உள்ளே உங்களைக் கண்டதால் தன் வீட்டில் ஒரு ஆண் இருப்பது உறுதியாகி கோபத்தில் கதவை முழுவதுமாக உடைத்து உள்ளே வந்திருக்கின்றார். மற்றும்படி உங்களைத் தாக்கவோ அல்லது வேறு நோக்கம் கொண்டோ அவர் உங்கள் வீட்டுக் கதவை உடைக்கவில்லை. உங்களுக்கான இழப்புகளை நாளை காலையில் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இல்லை இதைக் குற்றமாகப் பதியத்தான் வேண்டுமானால் சொல்லுங்கள் எழுதிக் கொள்கிறோம்" என்றார். "இனி ஒரு தடவை இந்த மாதிரியான பிரச்சனை இவரால் வராது என்றால் எனக்கு சரிதான்" என்றேன். "நல்லது" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளியே நின்ற யேர்மன்காரனை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். உடைந்திருந்த கதவை தற்காலிகமாக ஒரு பலகை வைத்து மூடி அன்றைய இரவு தூங்கா இரவாகக் கழித்தோம். மறுநாள் காலையிலேயே புதுக் கதவு வந்திருந்தது. உடனேயே பொருத்தி விட்டும் போனார்கள், மதியம் அளவில் அழைப்பு மணி அடித்தது, திறந்து பார்த்தால் பூங்கொத்தோடு புன்னகை தவழ யேர்மன்காரன் நின்று கோண்டிருந்தான். "மன்னித்துக் கொள். மதுபோதையில் நடந்து விட்டது. உனது வீட்டுக் கதவுக்கான செலவை நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பொருத்தி இருக்கும் இந்தக் கதவு முன்னர் இருந்ததைவிட பலமானது" என்றான். "உதைத்தால் உடையுமா, மாட்டாதா என்று இன்னுமொரு தடவை வந்து முயற்சிப்பாயா?" என்று நான் கேட்ட பொழுது சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி மறுத்தான். நடந்து போன நிகழ்வை வழக்கென்று பதியாமல் விடயத்தைச் சுமூகமாக நான் முடித்தமைக்கு மீண்டும் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டுப் போனான். இது நடந்து இப்பொழுது முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்றுள்ள நிலமையில் வெள்ளிக்கிழமைகளில் Herrenabend என்று ஒன்று இருக்கின்றதா என்று எனக்குத் தெறியவில்லை. அன்று கிழக்கு - மேற்கு என பிரிந்திருந்த யேர்மனி இப்பொழுது ஒரு குடைக்குள் பயணிக்கிறது. நான் யேர்மனிக்கு வந்த காலத்தில் யேர்மனியர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்று அகதிகளாக வந்தவர்கள் பயம் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அகதிகளாக வந்தவர்கள் தங்களை தாக்கி விடுவார்களோ என்று யேர்மனியர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் எனது இளைய மகனின் திருமணத்தின் பின் பெண் வீட்டார் தந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தோம். மகனின் மாமனார் ஒரு பொலிஸ் அதிகாரி. அதிகாரிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாக என்னுடன் அகதிகள் பிரச்சனை பற்றி உரையாடினார். விருந்து இருபக்கமும் இருக்கின்றதுதானே? இப்பொழுது எங்களின் முறை. "நாங்கள் உங்களை விருந்துக்கு அழைப்பதற்றகான திகதியை உங்களுக்கு வசதியான நாளைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்" என்றேன். சற்று ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டுக் கேட்டார், "பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு கமரா பூட்டி இருக்கிறீங்கள்தானே?“ யேர்மனியில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு வீடு உடைக்கப்பட்டு களவாடப் படுகிறது என்ற தகவலை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதால் நாட்டில் நடக்கும் களவுப் பிரச்சனையை மனதில் வைத்து கேட்கிறார் என்று நினைத்து, 'கமரா பொருத்தி இருக்கிறேன்" என்றேன். என் பதிலைக் கேட்டு அவரது முகத்தில் சிரிப்பு வந்து போனது. நான் நினைத்தது போல் இல்லாமல் அவரது கேள்விக்கான அர்த்தம் அடுத்து வந்த அவரது வார்த்தைகளில் புரிந்தது. "ஏன் கேட்கிறேன் என்றால் முப்பது வருசத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று இன்னும் என் கண்ணில் நிற்கிறது. எனக்கும் அது போல் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே கேட்கிறேன். முப்பது வருசங்களுக்கு முன்பு, அதுதான் ஒருத்தன் கதவை உடைத்து உள்ளே வர நீங்கள் அவனை நிலத்தில் வீழ்த்தி அவன் முதுகில் ஏறி இருந்தது..., " சொல்ல வந்ததை இடை நிறுத்தி விட்டு என்னைப் பாரத்தார். "அது எப்படி உங்களுக்கு தெரியும்?“ "முப்பது வருடங்களுக்கு முன் நான் ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர். அன்று உங்கள் வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸில் நானும் ஒருவன் " "ஆச்சரியமாக இருக்கிறதே, நாங்கள் முன்னரே சந்தித்துக் கொண்டவர்களா?" சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் , "எதற்கும் பெல் அடிக்கிறேன் கமராவில் பார்த்துவிட்டு கதவைத் திறவுங்களேன்" வாழ்க்கையில் பின்னாளில் சந்தித்துக் கொள்ளப் போகும் ஒருவரை எங்களை அறியாமல் முன்னரே எதேச்சையாக சந்தித்துக் கொள்கிறோம். மீண்டும் அந்த முகம் கண்ணெதிரே வந்து நின்று. "என்னைத் தெரியலையா?" என்று கேடகும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 15.09.201610 points
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂4 points
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
ஏன் வேறு எங்கு நடத்துவதாய் ஐடியா இருந்தது? கடந்தமாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியமாதிரி தெரியவில்லை, அதனை முதலில் செய்யுங்கள் பட்டங்களை கையில் வைத்துக்கொண்டு வேலை வேண்டுமென்று கொளுத்தும் வெயிலில் நின்று போராடும் பட்டதாரிகளுக்கு ஏதாவது வழிகாட்டுங்கள் இரண்டுநாள் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கிபோகும் யாழ்ப்பாணத்தை மீட்க நீர்நிலைகளை தூர்வாரி, வடிகாலமைப்பு செய்து மக்கள் துயருக்கு வழி காணுங்கள் சுகாதார பணியாளர்களின் வேலையை உறுதிபடுத்துங்கள் இதையெல்லாம் ஆரம்பகட்டமாகவாவது பண்ணினால் அரசாங்கம் தேசியபொங்கல் வைக்க தேவையில்லை அங்குள்ள மக்களே அரசாங்கத்தை தங்களுடன் சேர்ந்து தேசிய பொங்கல் வைக்க கூப்பிடுவார்கள். இலங்கையிலேயே இதுவரை இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருகிறோம் என்று சொல்லிவிட்டு, முன்பிருந்த அரசுகள் செய்ததுபோலவே நல்லூர் கோவிலுக்கு போவது, பொங்கல் வைப்பது, தீபாவளி வாழ்த்து சொல்வதென்று பூச்சாண்டி காட்டினால் உங்கள் ஆட்சி அது வழமைபோல அனைவரும் செய்த வாயால் வாணவேடிக்கை காட்டும் ஒரு நிகழ்வுதான்.3 points
-
வாடியிட்டபுலம்
2 pointsவாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் குரலோசை கிராமத்தின் அமைதியை உடைத்து மகிழ்ச்சியை பரப்புகிறது. சேந்தன் தலை நகரத்தில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் கணனி துறையில் வேலை செய்கிறான். இக்கரைக்கு அக்கரை பச்சை போல் பலரும் வரத் துடிக்கும் அதிக வருமானம் கொண்ட தொழில். கார் வீடு என பல வசதிகள் இருந்தாலும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் சேந்தன். 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இளமையை தொலைத்து இரவு பகல் வேலை செய்தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நகரத்தின் கொந்தளிப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு அமைதி தரும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சேந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது. ஒரு நாள் தனது பள்ளி நண்பன் மலரவனை பார்க்க அந்த அழகான கிராமம் வாடியிட்டபுலத்திற்கு புறப்பட்டான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே காதுக்கு இனிமை தரும் பறவைகளின் ரீங்காரம் சேந்தனை வரவேற்றது. கிராமம் என்றாலே இளையராஜாவின் பாடல் இல்லாமலா போகும், எங்களை போன்ற நகரத்து வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அவரின் பாடல்களே. "வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே" . . பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு பச்ச மனசு பத்திக்கிருச்சு கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு” எங்கிருந்தோ வந்த பாடல் வரிகள் செவிக்கு விருந்தளித்தது. மலரவனை அவன் வீட்டில் சந்தித்தான். மலரவனும் உரிய முறையில் உபசரித்தான். மதிய உணவின் பின்பு மாமர நிழலில் சாக்கு கட்டிலில் சரிந்தவாறு தங்கள் பாடசாலை கதைகளை அசை போட்டார்கள். பாடசாலையில் தங்களுடன் படித்த செங்கமலம் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தில் படித்ததாகவும், அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் சேந்தன் சொன்னான். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு "விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது" என்றான். அவள் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டாள், காரணம் தெரியவில்லை. அவளின் சிநேகிதி மூலமாக பல கடிதங்கள் அனுப்பினேன், பதிலில்லை என்றான். சேந்தன் பல்கலைக்கழக படிப்பை முடித்து கணனி துறையில் வேலை செய்ய தொடங்கினான். ஒரு நாள் செங்கமலத்தின் சிநேகிதி ஊடாக ஒரு கடிதம் சேந்தனுக்கு வந்தது. ஆம் அது செங்கமலத்திடம் இருந்து தான் வந்தது. படபடப்புடன் கடிதத்தை திறந்து படித்தான். அன்பின் சேந்தன், நான் நலம், நீங்களும் அது போலவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தன, நான் பதில் போட முடியாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும். உங்கள் உள்ள கிடைக்கைகளை தெளிவாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர், அன்பானவர். நான்தான் உங்களை அடைய கொடுத்து வைக்கவில்லை. கடமையா? காதலா? என்றால், என்னுள் கடமைதான் வென்றது. அன்று உங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் தேசம் காக்க புறப்பட்டுவிட்டேன். சிலவேளை இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இந்த உலகில் இருப்பனோ தெரியாது. என்னை மறந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்றும் அன்புடன் செங்கமலம் சேந்தனின் கதையை கேட்டு மலரவன் கண்களில் நீர் பனித்தது. அவனது வீட்டு வானொலியில் ஸ்ரீனிவாஸின் பாடல் ஒலித்தது. "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" மன்னிக்கவும் எனது சோகக் கதையை சொல்லி உன்னை அழ வைத்து விட்டேன், என்றான் சேந்தன். மூன்று நாட்கள் மலரவனுடன் தங்கி விட்டு, அவனது உந்துருளியில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையம் சென்றான். அவன் பேருந்து படிகளில் ஏறும் போது கால்கள் இயலாத பொண்ணு ஊன்று தடிகளுடன் இறங்க முற்பட்டாள். சேந்தன் அவளுக்கு உதவ போனான் "உங்களுக்கு சிரமம் தந்து விட்டேன் " என்றாள். எங்கேயோ கேட்ட பழகிய குரல், திரும்ப கண்களை பார்த்தான் " ஆமாம் நம்ம செங்கமலம்". தனது நண்பன் மலரவனை அழைத்தான், அவன் மனம் ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. பேச்சு வரவில்லை. மலரவன் அந்த பெண் செங்கமலம் தான் என்று உறுதி செய்தான். அவள் அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருப்பதாக சொன்னாள். தனது சக தோழியை காப்பாற்ற போய் கண்ணி வெடிக்கு கால்களை இழந்ததாக சுருக்கமாக கூறினாள். சேந்தன் கண்களில் நீர் வழிந்தது. என்னவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசமா? இல்லை இந்த நிலையில் அவளை பார்க்கிறேன் என்ற சோகமா? நிச்சயமாக முதலாவதுதான். நகரத்தில் தனது சொத்துக்களை விற்று, தனது வேலையும் ராஜினாமா செய்தான் சேந்தன். அவளையும் அவளைப்போன்று இருக்கும் பலருக்கு தான் உதவி செய்ய போவதாக முடிவெடுத்தான். மலரவனின் உதவியுடன் வாடியிட்டபுலத்தில் 6 ஏக்கர் நிலம் வேண்டி கூட்டு பண்ணை விவசாயம் தொடங்கினான். செங்கமலத்தை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்தான். இன்று இவர்களின் நிழலில் பலர் வாழ்கிறார்கள். ரெண்டு மரங்கள் வைத்தவன் இன்று ஒரு தோப்பையே உருவாக்கினான். நகரத்தில் ஒரு நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த சேந்தன் இப்போ மிகவும் சந்தோசமாக வாழ்கிறான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், மரங்களுக்கு இடையே வரும் குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே தனக்கு பிடித்தவளுடன் வாழ்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவனது இதயத்தை நிரப்புகிறது. முற்றும் அகஸ்தியன்2 points
-
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்! டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருடாந்த 1% முதல் 1.5% வரை பணத்தாள்கள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வீணாக செலவிடப்படுகிறது. பணத்தைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மோசடி மற்றும் ஊழலை அதிகரிப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்பாட்டில் திறமையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளன. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் ‘GovPay’ மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 அரசு நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்கள் ஜனவரி முதல் இணைக்கப்படும். இந்த முன்முயற்சியானது அரசாங்கப் பணம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொதுச் சேவைகளின் செயல்திறன் மேம்படும். டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மனித உழைப்பைக் குறைக்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலை அகற்ற வழிவகுக்கும் என்பதுடன், பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கும்.” என்றார். https://newuthayan.com/article/‘GovPay’_அப்_அறிமுகம்_–_அரச_கொடுப்பனவுகள்_அனைத்தும்_டிஜிட்டல்மயம்!2 points
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அப்போது இருந்த, இப்போது இருக்கும் infant mortality rate ஐ ( சிசு மரண வீதம்)ஒப்பிட முடியுமா? சரி, அப்போது ஏன் அம்மாக்கள் / அம்மம்மாக்கள் மகப்பேறு பார்ப்பது அருகி, இல்லாமல் போய், இப்பொது சொந்த தாய் பார்க்க விருப்பம் என்றாலும், அதை தவிர்த்து, தொழில்சார் சிறப்பு தேர்ச்சி அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர், தாதியர் சிசுவை சிக்கல் இன்றி, தாய் பிரசவிக்க பண்ணிய பின்பே, பிரசவித்த பெண்ணின் தயார் பராமரிப்பு இடது வந்து இருக்கிறார்? இதன் நிலையும் இப்பொது மனிதர்களுக்கு பெலே சொல்லிய நிலைக்கே வந்துள்ளது. நீங்கள் தேவை இல்லாததை ஒப்பிடுகிறீர்கள். வைத்தியர் இல்லாதது உண்மை ஆயினும், தாதிக்கு பொறுப்பு இருக்கிறது தானே? அந்த நிலையில் தாதிக்கு இருக்கும் பொறுப்பு எவ்வாறு நோயாளியை தக்க வைத்து இருப்பது, இந்த நிலைக்கு தான் படிப்பு, பயிற்சி வேண்டும். நீங்கள் சொல்லுவது பொறுப்பற்ற கதை அனால், வைத்தியசாலையில் அவ்வளவு நேரம் ஒரு மருத்துவரும் இல்லை (first inspection) என்பது உண்மையானால், அது மருத்துவ சேவையில் உள்ள பெரும் குறைபாடு (இந்த சொல்ல மிகவும் மென்மையானது நிலையை குறிக்க). மருத்துவ அல்லது தாதி துறையிலா செய்தார்? 3-4 மணித்தியாலத்தில் சாதனை செய்தார்? எவ்வாறு சாதனை செய்தார் - பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் ... இப்படி எல்லோரும் risk ஐ எடுத்து, (அனால் அவர்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்து , ஆனால் risk பொதுவாக நேரடியாக உயிரோடு அல்ல ), தான் சாதானை செய்தார்கள், அதுவும் வேறு பணமுதலைகளின் காசை (opm - other peoples' money) பாவித்து. இப்படி மருந்து கண்டுபிடிப்பது இருக்கிறது (அனால், மருத்துவ கண்டு பிடிப்பு இல்லை). (இதை விடயம் அறிந்த எல்லோரும் try பண்ணலாம். அனால், அப்படி அல்ல மருத்துவம், அதன் கண்டுபிடிப்புக்கள்) அப்படியா, மருத்துவ, தாதி துறை? பல சந்தர்ப்பங்களில் இவ்வளவு நேரம் கூட, 3-4 மணித்தியால கிடைக்காது உயிர் பிழைப்பதற்கு. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் தெரிந்தும் முடிச்சு போடுகிறீர்கள்?2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
அப்படியானால் இது வரை தமிழர்கள் செய்தது என்ன?? மூன்று மதத்தினர் வந்தபோது தமிழ் பொங்கல் தமிழர் திருவிழா. பிக்குகள் வந்தால் தேசியமா? அப்படியானால் இனி பிக்குகள் வருவர். எல்லாம் மாறும்? இனி தேசிய தைப்பொங்கல் தேசிய வருடப்பிறப்பு தேசிய தீபாவளி தேசிய சரஸ்வதி பூஜை. இது தான் தமிழ் மக்கள் கேட்ட உரிமை. நன்றி. வணக்கம். அனுராவின் தமிழர்களின் கச்சையையும் புடுங்கிவிடும் நரித்தனம்.2 points- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
2 pointsஆம் திடமான ஆதாரமில்லை, இன்றும் பல நாடுகளிடம் தம்மிடம் அணுகுண்டு உள்ளதென அவர்களே கூறுகிறார்கள், ஆனால் அமெரிகா போல் அதனை பயன்படுத்தி அணுகுண்டு உள்ளதென இதில் எந்த நாடும் உறுதிப்படுத்தவில்லை (அதற்காக அந்த மிலேச்சதனமான அணுகுண்டு வீச்சை நியாயப்படுத்தவில்லை), நீங்கள் கூறுவது போல இது சீன பட்டாசாக இருக்கலாம். சிறு வயதில் எனது ஆராய்ச்சி ஒன்று தவறுதலாக போய் பக்கத்து வீட்டு கூரை தீ பற்றி எரிந்தது (தீ பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை மிக சிறியளவில் நெருப்பு ஏற்பட்ட போதே அதனை எனது தந்தை அணைத்து விட்டார் பக்கத்து வீட்டு ஓலை கூரை சிறிதாக சேதம் ஏற்பட்டதாக் நினைவுள்ளது) அதனால் எனது தந்தையிடம் முறையாக வாங்கியுள்ளேன். அணுகுண்டை வீசி நாட்டை அழித்துவிட்டு, ஜப்பான் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்களாம், ஆனால் ஆராய்ச்சி செய்த எனக்கு அடி கிடைத்தது , எனக்கு எந்த நட்ட ஈடும் எனது அயல்வீட்டிலிருந்து கிடைக்கவில்லை.😁2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க ஒரு இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு.... அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟2 points- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
அண்ணா வலு சிம்பிள்… ஊரில் நீங்கள் X என்ற ஒருவருக்கு கழிவறை கட்ட உதவ போகிறீர்கள். Y எனும் பக்கத்து வீட்டு உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறுகிறார். இப்போது என்ன செய்வீர்கள்? X உடன் இணைந்து மேல் முறையீடு கோர்ட்டு கேசு என அலைவீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவி செய்வீர்களா?1 point- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
நினைவஞ்சலி. இந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த சர்வதேச நிதி உதவிகளை அந்த மக்களுக்கு போய் சேர்வதை அன்று தடுத்த ஜேவிபி யே இன்று ஆட்சியில். ஜே வி பி சிந்தனையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் சிங்கள ஆட்சியாளர்களை சார்ந்தே வாழ வேண்டும் என்பதே ஜே வி பியின் சித்தாந்தம்.1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சூப்பர் அண்ணா. நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான். தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும். முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣. கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன். ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன். குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்… மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
உங்கள் தலையில் உள்ள நீண்ட, கடும் கறுப்பு நிற முடியின் ரகசியம் இது தானா அண்ணா?😄1 point- ஆறுமுகம் இது யாரு முகம்?
1 pointஎதிர்வரும் காலங்களில் ஆட்சி மாற்றங்கள் வரும் போது தும்புத்தடி முறிக்கும் நிலை எல்லாம் ஏற்படாது என்று நினைககிறேன்.,காரணம்.,பதினெட்டு வயதை கடந்த படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தற்காப்பு பயிற்சிகள் என்று பாடசாலைகள் ஊடாக வரக் கூடும்.அண்மையில் முகப் புத்தகத்தில் எழுதும் சகோதரி ஒருவரின் ஆக்கம் ஒன்று படிக்கும் சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டேன். 🤭🤭1 point- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.1 point- ஆறுமுகம் இது யாரு முகம்?
1 pointஅதிசயமான நிகழ்வுகள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்👍! 2008 இல் பேர்லின் மத்திய பகுதிக்கு வந்து 4 நாட்கள் தங்கியிருந்தேன். உத்தியோகபூர்வமான வேலைகள் 4 மணியோடு முடிந்ததும், U Bahn எடுத்து, சில இடங்களில் இறங்கி, மைல் கணக்காக நடந்து கிழக்கு மேற்கு பேர்லின் பாதிகளை பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டேன் (அந்தப் படங்களில் சில என் "ஓயாத நிழல் யுத்தங்கள்" தொடரில் பயன்பட்டன). நீங்கள் சொல்லும் வெள்ளிக்கிழமை பியர் பார்ட்டிகள் உண்மையாகவே காணக் கிடைத்தன. பல பார்கள் பெரும்பாலும் ஆண்களால் நிரம்பி வழிந்தன. கூட்டம் குறைவான ஒரு பாரினுள் நுழைந்து , ஒரு ஜன்னலோரமாக அமர்ந்து தொலைவில் தெரிந்த Kaiser Wilhelm Memorial Church இனைப் பார்த்தபடி ஒரு பியர் குடித்து விட்டு நள்ளிரவு U Bahn எடுத்து ஹோட்டல் திரும்பினேன். அந்த நேரம் கையில் செல் போன் இருக்கவில்லை. ஒரு தனியார் போன் பூத்தில் இருந்து VOIP மூலம் வீட்டுக்கு போன் செய்யச் சென்ற போது, போன் பூத் உள்ளே பல ஸ்வாதிக்கா சின்னங்கள் வரையப் பட்டிருப்பதைக் கண்டேன். நாசிகள், நவநாசிகள் இன்னும் ஓயவில்லை என நினைக்கிறேன்.1 point- ஆறுமுகம் இது யாரு முகம்?
1 point- ஆறுமுகம் இது யாரு முகம்?
1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள் 1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣 2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும் 3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார் 4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார் 5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌1 point- நத்தார் பரிசு
1 pointநத்தார் பரிசு யேர்மனிய மொழி பேசும் நாடுகளில் "கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 மாலை ஆரம்பமாகின்றது. பெரும்பாலான குடும்பங்களில் "பரிசு வழங்குதல்" மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு நித்திரைக்குப் போன ஒரு பெண்மணி நடு இரவில் விழித்துக் கொண்டார். யேர்மனி ரோசன்ஹைம் (Rosenheim) நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்து இரவு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணிக்கு (47) நடு இரவில் விழிப்பு ஏறப்பட்டது. வீட்டின் கதவை உதைத்து, உடைத்து யாரோ உள்நுளையும் அரவமும் கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்த பெண்மணி பின் கதவால் வீதிக்கு ஓடி வந்து பொலீஸுக்கு அழைப்பை எடுத்து விடயத்தைச் சொன்னார். பொலிஸார் வரும்வரை அந்தப் பெண் தனது வீட்டின் முன் தெருவிலேயே குளிருக்கு நடுங்கியபடி காத்திருந்தார், அவரது கூற்றுப்படி, குற்றவாளி இன்னும் கட்டிடத்தினுள் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்ட பொலிஸார், வீட்டுக்குள்ளே தேடுதலை மேற் கொண்டார்கள். அங்கே அமைதியாக ஆழ்ந்த நித்திரையில் ஒரு இளைஞன் (19) படுத்திருந்தான். பொலிஸார் அந்த இளைஞனை எழுப்பிய போது, “இந்த நேரத்தில் என் வீட்டில் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான். அவனைப் பொலிஸார் பரிசோதித்த போது அவன் நன்றாகக் குடித்திருக்கின்றான் என்பது தெரிய வந்தது. ஆக, அவன் ரோசன்ஹைம் நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் நன்றாகக் குடித்து விட்டு தனது வீடு எது என்று தெரியாமல் இங்கே வந்திருக்கின்றான் என்பதைப் பொலிஸார் புரிந்து கொண்டனர். “இது உனது வீடு இல்லை” என அவனை அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ‘செல்’லில் படுக்க வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற நினைப்புடன் அவன் மீண்டும் நித்திரையாகி இருப்பான். விடிந்த பின்தான் அவனுக்குத் தெரியவந்திருக்கும், ஒரு அந்நியன் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி உள் நுளைந்ததற்காக ஒரு வழக்கு தனக்காகக் காத்திருக்கின்றது என்பது. அது அவனுக்கு மறக்க முடியாத கிறிஸ்மஸ் பரிசாகவும் இருக்கும்.1 point- நத்தார் பரிசு
1 pointகுமாரசாமி, இப்படியான ஒரு விடயத்தை 1986இல் நான் அனுபவித்திருக்கின்றேன். அது சம்பந்தமாக 2016இல் பொங்கு தமிழில் நான் எழுதிய ஒரு பத்தியை இங்கே இணைத்திருக்கின்றேன். தமிழ்சிறி, கிடைக்கிற எல்லாவற்றையும் கலக்கி அடியுங்கள்.2025 பிறக்கும் போது ஏதாவது ஒரு ‘செல்’லில் விழித்துக் கொள்வீர்கள்.😀1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- நத்தார் பரிசு
1 pointநிஜமாகவே நல்லா குடித்திருப்பார் போல ....... நல்ல காலம் படுப்பதற்கு பக்கத்து அறையை தேர்வு செய்யவில்லை . ..........! 😂1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சின்னவயசுல நாம இருந்தபோது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ஞ்சுபோன அந்தகால பெரிசுங்க நமக்கு அந்த ராணுவ ரகசியம் தெரியாம இருக்கணும்கிறதுக்காக குழந்தைகள் பிறப்பது சாமி கும்பிட்டுத்தான் என்று சொல்லி வைத்தார்கள். நாமும் ஆறாம் வகுப்புவரை அப்படித்தான் எல்லோரும் சாமிகும்பிட்டு கும்பிட்டுத்தான் இறக்குமதியானாங்க எண்டு நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பருவ வயதின் எல்லைக்குள் நுழைந்தபோது நம் சொல்வழி கேக்காத மழலை ஒன்று காலம் காத்தாலயே அமெரிக்க ஏவுகணை வானத்தை பார்த்தமாதிரி அதுபாட்டுக்கு தனது கடமையை கவனித்தபோதுதான் , என்னாச்சு இது ஏதோ ஒரு மாற்றம் என்று பள்ளி தோழர்களுடன் விவாதித்தபோது, அனைவரும் படிப்படியாக சிக்கிகொண்ட அந்த அணிவகுப்பு உணர்வுபற்றி, அனைவருடனும் சகஜமா பேசும் சுகாதார ஆசிரியரிடம் பயமறியா ஒரு மாணவன் துணிவா கேட்க மனித உடல்களின் சேர்க்கைதான் இன்னொரு மனிதன், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்கள் சேர்ந்தும் குழந்தைகள் கிடைக்காவிட்டால் இந்த சமுதாயத்தின் அசிங்கப்படுத்தலிலிருந்து தப்புவதற்கான வேண்டுதல் என்று விளங்கப்படுத்தியபோது, முதலில் அதிர்ச்சியாக இருந்தது, பின்பு நம்ம மம்மி டாடி நீங்களுமா என்ற கேள்வியும் எழுந்தது, பின்னாளில் பாலியல் கல்விமுறையை முறையை ஏதோ பாவம்போல் மறைத்து வைத்து தெரியாமல் பொத்தி வைப்பது எவ்வளவு பெரிய விழிப்புணர்வற்ற தன்மை என்றும் தோன்றியது. முடிவாக 7ம் வகுப்புவரை இச்சு இச்சு இச்சு கொடு என்று இரண்டுபேர் வாழ்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்பதை அறியாமல் சாமி கும்பிட்டால் மட்டும்தான் அது எல்லாம் நடக்குமென்று உண்மையென்று நம்பியதை இப்போ நினைச்சாலும் ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலமைதான்.1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 pointஇப்பவெல்லாம் தலையங்கத்தை வைத்து செய்தி வாசிக்கக்கூடாது. தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பே இருக்காது. முதலில் செய்தியை வாசியுங்கள், தலையங்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதனாற்தான் சிலர் தடுமாறுகிறார்கள் செய்தியை விளங்கிக்கொள்வதில். தவறு செய்து பழக்கப்பட்ட ருசிப்பட்டவனே திரும்ப திரும்ப செய்வான். மாட்டினாலும் பயமோ, வெட்கமோ கிடையாது. காரணம்; அரசியலே அங்குதான், அதிற்த்தான் தங்கியுள்ளது. அப்பன் காலத்தில், ஸ்ராலின் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தியதாக செய்தியுண்டு. "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி." ஒருவரின் பின்புலம் தெரியாமல், நெருக்கத்தில் வைத்திருப்பார்களா? தங்களுக்கு வேண்டிய போது, தமது எதிரிகளை தாக்க, மிரட்ட இவர்கள் வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் பிடிபட்டால் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை, எதிர்க்கட்சிகள் தங்கள் மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இணைத்துப்பேசுகிறார்கள் என்று கைகழுவி விடுவார்கள். எங்கள் நாட்டில் நடக்காத விஷயமா? இவர் தன்னைத்தானே அடிக்க விட்டிருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களால் அடிவாங்கியிருக்க வேண்டும். அவரது முதுகை யாராவது பார்த்து, ஒத்தடம் கொடுத்திருந்தால் அடி முதுகை எவ்வளவு தாக்கியிருக்கிறதென தெரிந்திருக்கும். மக்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அரசியலுக்காக பாவிக்கிறார்கள். இவரைப்பார்க்கும்போது, எமது அரசியற்தலைவர் எனகூறிக்கொள்ளும்சாணக்கியனின் நினைவுதான் எனக்கு வருகிறது.1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 pointவிசுகர்! படிப்பிற்கும் மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. படித்தவன் செய்யாத கொடுமைகளையா படிக்காதவன் செய்கின்றான்? போர்களில் பாவிக்கப்படும் ஆயுதங்களை தயாரித்தது யார்? படித்தவன் தானே? அதை ஏன் அழிவுக்காக தயாரித்தான்?1 point- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
🤣.................... சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு......... ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே............... அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்.............. பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்.........1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில் பழைய காத்தில் கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 pointஇப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இதை கடஞ்சாவும் மேலே எழுதியிருக்கிறார், ஆனால் நீளமாக இருப்பதால் யாரும் வாசிக்கவில்லை. வீட்டுக் கராஜில் வைத்துக் கம்பியூட்டர் தயாரித்த பில் கேட்ஸ், ஸ்ரிவ் ஜொப்ஸ், ஸ்ரிவ் வொஸ்னியாக் ஆகியோர் தான் கம்பியூட்டர் உலகின் ஜாம்பவான்களானார்கள். அதே போல கார் மெக்கானிக்குகளும் இருக்கலாம். இவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல, அதீத புத்திசாலிகள். ஆனால்..இது வரை நான் மருத்துவத் துறையில் இப்படி முறைசார் பயிற்சியைக் கடாசி விட்டு மருத்துவ சேவையில் முன்னணி வகித்த எவரையும் பற்றி அறியவில்லை. இதற்குக் காரணம், கார், கம்பியூட்டர் போல அல்ல மனித உடல். சரியான அடிப்படை இல்லாமல் பிழையான நோயை நிர்ணயித்து, பிழையான மருந்தைக் கொடுத்தால் விளைவு பாரதூரமானது. இதனால் தான் தாதிகளும், மருத்துவர்களும், மருந்தாளர்களும் பயிற்சியை தவிர்த்து விட்டு தொழில் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாத படி அரசுகள் licensing system வைத்திருக்கின்றன. மேலே கந்தையா, தாதிய உத்தியோகத்தருக்கும், காயத்திற்கு மருந்து கட்டுபவருக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல் பதிவிட்டிருக்கிறார் என ஊகிக்கிறேன். எந்த வகுப்புப் படித்த ஒருவரையும் காய்ச்சல் மானியைப் பாவிக்க, காயத்திற்கு மருந்து கட்டப் பழக்கலாம். ஆனால், அவர் healthcare provider அல்ல. இப்படிப் பழக்கப் பட்டவர் பிழை விட்டால், அதனால் ஏதும் அனர்த்தம் நிகழந்தால் மருத்துவரின் லைசென்ஸின் கீழ் தான் அந்தத் தவறு சேர்க்கப் படும்.1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே. எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும் ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும் பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று. பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள். குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு. அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம். இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை. முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள். எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி அங்கே போனதும், குழந்தைபிள்ளைபோல் எதிர்கட்சி சிங்களவன் கதிரையில் குந்தபோயி அவங்களோட புடுங்குபட்டதும், தேவையற்ற முறையில் தலைவரையும் போராளிகளையும் இழுத்து பேசியும் சிங்களவனுக்கு பேட்டிகள் கொடுத்தும் எந்த திட்டங்களும் ஆரம்பிக்காமலே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதும், இவருக்கெல்லாம் எதுக்கு அரசியல், வாக்குப்போட்ட மக்களின் கோபத்தை சம்பாதிக்கபோகிறார், இவரெல்லாம் பாராளுமன்றத்துக்கு போனதே தவறு என்று பதிவிட்டதுண்டு, விசனப்பட்டதுண்டு. ஆனால் வெள்ளநிலவரத்தில் வீடுவீடாக சென்று பார்வையிட்டதும், தெருவில் நின்று போராடிய வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து குறை கேட்டதும் அவர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்ததும், இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவா அவர்களை கொழும்புவரை அழைத்து சென்று நீதி கேட்டதும் மெச்சத்தக்க விஷயங்கள். அப்படியே முன்னாள் போராளிகள் நிலவரம் பற்றியும் கவனம் எடுங்கள் மாறிவரும் உங்கள் போக்கு மிகவும் சிறப்பாக அமையும். அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும். தவறு செய்யும்போது தவறென்று சுட்டிக்காட்டுவதும், சரியாக செயல்படும்போது பாராட்டுவதும், மீண்டும் தவறு செய்யும்போது மறுபடியும் திட்டுவதுமே உண்மையான விமர்சனம், இல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே சார்ந்த கருத்துக்கள் என்றால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி என்றாகிவிடும். மருத்துவ தொண்டர் பணியாளர்கள் விடையத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் மகிழ்ச்சியானதே. பெரும்பாலும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை, குடும்ப சுமை, வயிற்று பசி என்பவற்றுடன் எவ்வளவு தூரம் போராடுவார்களென்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு ஒளியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உண்மையாகவே இவரால் ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்றால் அது என்ன நடக்க போகிறதென்று பார்க்காமலே ஏகப்பட்ட விசனங்கள் தெரிவிப்பது முறையல்ல. அது உதவும் உறவுகளுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையிலுள்ள தகராறு, நாம் எதுக்கு முண்டியடிக்கணும்? புலம்பெயர் உறவுகளிடம் காசுவாங்கி பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளும், கார்,அயல்நாட்டு பயணங்கள் உயர்தர பைக்குகள் என்று கொடிகட்டி பறக்கும் யூடியூபர்களுடன் ஒப்பிடும்போது அர்ச்சுனா அப்படியொன்றும் பெரிய தப்பான காரியங்களில் இறங்குவதாய் தெரியவில்லை. மக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பணியாற்றவில்லையென்றே முன்பிருந்த தமிழரசியல்வாதிகளை திட்டி தீர்த்து வீட்டுக்கு துரத்தினோம், இப்போ மக்கள் பிரச்சனைகளில் கரிசனம் காண்பிப்பவர்களையும் திட்டினால், குழப்பம் அவர்களிடமில்லை, நம்மிடம்தான்.1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 point🤣.................. மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜. ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣. அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஇதில் எது யாருடையது என்று சொல்லவும் ... 1 சிறீ 2 சுவி 3 கந்தையா 4 குசா...? 5 பாஞ் 6 ஈழப்பிரியன் ..?1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஒரு சம்பந்தமும் இல்லை. 😀 ஆனால்... நான், சம்பந்தப் படுத்திக் கொண்டேன். 😂 இதனால் கற்றுக் கொள்வது யாதெனில்.... ஏமாற்றுபவர்கள்... எப்பவும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். 🤣1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
90 வயது மனிதன், 50 வயது மனிதனுக்கு சொல்லும் போது... 50 வயசுக்காரனுக்கு, சின்ன வயசுதானே. ஹ... ஹா... ஹா.... 🤣1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இது உண்மை எப்போதும் உண்மை நான் நேரில் பார்த்து உள்ளேன் ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக இருக்க வேண்டும் குடியைக்கூட. விட்டுட்டு ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சுமந்திரனுக்கு இப்போதாவது தெரிந்து இருக்க வேண்டும், அவற்றிலும் பார்க்க தமிழரசு கட்சி game விளையாடும் என்று. கட்சியில் உள்ள அநேகமானவர்கள், குடும்பம் குடும்பமாக, சந்ததி சந்ததியாக இரத்தத்தை ஊற்றி வளர்த்தவர்களின் சந்ததிகள் , அல்லது அந்த சந்ததிகளோடு நேரடி உறவு, தொடர்பு உள்ளவர்கள். எனவே தமிழரசு பிரிவது , விழுவது ஓருவருக்கும் மனம் வராது. ஆயினும், புதியவர்கள் ஆக்கபூர்வமாக செயற்றப்பட்டால், கட்சி வழிவிடும், அப்படி சுமந்திரனும் கட்சியில் முக்கிய அங்கத்தவராக மாறலாம். இப்போதும் வாய்ப்பு சுமந்திரன் கையில் அடுத்து முழுமையாக அகலவில்லை. அனால், செய்த வேலைக்கு பரிகாரம் என்பது இருக்கிறது என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும். அனால் , சகுனி வேலை பார்த்தால், எவர் உள்ளிருந்து கொள்ளும் வியாதி என்பது முடிவிலேயே தெரியும்.1 point- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்1 point- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சுமந்திரன் யாரை வைத்து தனது திட்டங்களை நிறைவேற்ற பாவிக்கிறாரோ, அவர்களை வைத்து நிறைவேற்றிய பின் அவர்களை தூக்கி எறிந்து விடுவார். காரணம்; அவர்கள் சாட்சியாக இருந்துவிடுவார்கள் என்பதற்காக. முதலில் மாவையரையும் சம்பந்தரையும் பாவித்தார், அடுத்து ஆனோல்ட், முறையே சிறிதரன் சி வி கே சிவஞானம். அடுத்து தொடரப்போவது, சத்தியலிங்கம் இறுதி சாணக்கியன். அதற்கிடையில் சுமந்திரனை எல்லோரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே எச்சரித்தோம், அப்போவெல்லாம் மௌனம் காத்தவர்கள், இப்போ காய் தமக்கெதிராக திரும்பும்போது கருத்து தெரிவிக்கிறார்களாம். இவர்கள் சோரம்போகாமல் இருந்திருந்தால்; அவர் தானாகவே வெளியேறியிருப்பார். இந்தியப்புலனாய்வு? இல்லை, அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அர்ச்சுனாவை யாரோ பப்பாவில் ஏற்றி விட்டு இருக்கிறார்கள்; கூத்து பார்க்கிறார்கள். அனால் , அர்ச்சுனாவின் horizon (அறிவு, அனுபவப் புலம், தமிழ் சரி என்று நினைக்கிறன், வர வர ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் தேட அல்லது ஆக்க வேண்டி உள்ளது, என் தமிழ் தேய்கிறதோ?) அவ்வளவு விரிவடையவில்லையா? அல்லது, அர்ச்சுனவின் ஆர்வ அவசரத்தை, சிங்கள அரசு அர்ச்சுனவுக்கு தெரியாமல் பாவிக்கிறதா? புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து.1 point - யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.