Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    10100
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/02/25 in all areas

  1. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு குனிந்தால் இடுப்பு பிடிப்பு இப்படி சிலதை அள்ளி அள்ளி கொடுக்கவும் அளவில்லாத கருணையாளனே இதில் எதுவும் ஒரு போதும் தீரவும் கூடாது எந்தக் கரைச்சலும் இல்லாதவர்கள் உள்நாட்டு பிரச்சனைகள் உலக பிரச்சனைகள் எல்லாப் பிரச்சனைகளையும் தமதென்றாக்கி அடிமுடி தேடி பக்கத்தில் இருப்பவர்களை பாடாய் படுத்துகின்றார்கள் கடவுளே.
  2. இவரது செயற்பாடு, கேள்வி கேட்க்கும் தன்மை, பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஊழல், லஞ்சம், பந்தா, அதிகாரம் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அது பாதிக்கப்படப்போகிறது என்பதால் அவரை பைத்தியம் என்று விமர்ச்சித்தார்கள், இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்விகேட்டார்கள். வழக்கம்போல் வந்து கூடி, உண்டு, கதை பேசி போக முடியவில்லையே எனும் ஆதங்கத்தால். இவர்களை யாரும் இதுவரையில் யாரும் கேள்வி கேட்கவில்லை, அதற்கு இவர்கள் விட்டதுமில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வருமென்று இவர்கள் நினைத்ததுமில்லை. அரசியல் வாதிகள் கூட்டங்களில் போய் ஆசுவாதமாய் இருந்து, கண்ணை மூடி அயர்ந்துவிட்டு கூட்டம் முடிய பத்திரிகை கூட்டங்களை நடத்திவிட்டு பெரிய சாதனை நடத்தியவர்கள்போல் ராஜ நடை நடந்தவர்கள் இப்போ முழிக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். விலகக அல்லது விலக்க வைக்கப்படுவார்கள். அதனால் தமது இருப்பை காக்க வெறுப்பை அவர்மேல் கக்குகிறார்கள், அவர் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் யார் பின்னால் ஒளிந்தால் இவர்களுக்கென்ன? அது அவருடைய பிரச்சினை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடில் இப்படி சேறு பூசுவது வழமை. சிங்களவனிடம் போராடுகிறோம். முதலில் நாம் நம்மிடம் போராட வேண்டிப்பெற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. இவரை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். அதே போல் அனுராவை பதவியில் இருந்து ஒழிக்கவும் ஒரு கூட்டம், தமிழர் பகுதியில் தங்கள் பழைய காரியங்களை தொடர்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி தமிழர். ஆனால், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அர்ச்சுனாவுக்கு. நிதானம், பொறுமை, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு ஆராய்ந்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கலாம், அவர்களை பேச விட்டு பொறுமையுடன் கேட்டால். இல்லையென்றால் கோசம் போட்டு அவரது நிதானத்தை கலைத்து கோபமூட்டி அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவார்கள்.
  3. அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும். இதுவே உண்மையான, நேர்மையான ,தமிழ் மக்களுடைய ஆசையும் கூட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.
  4. கோயில் உண்டியலில் வேண்டுதல் பணம்.. மனோதத்துவ நிபுணர்கள் கூற்று என்ன.? திருமணம் ஆகி 1 வருடம் கழிந்த கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரின் வேண்டுதலா இருக்க கூடும்..
  5. செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!
  6. கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............! 😁
  7. செல்வந்த மேற்குலகார் எப்பவும் காசு கூடக்குடுத்து சாமான் சக்கட்டையள் வாங்கித்தான் பழக்கமாம். 😎 மலிஞ்ச பெற்றோல்,காஸ் எண்டால் எங்களுக்கு வேண்டாம் எண்டு தலையை சுத்தி மூக்கை தொடுற கூட்டம்.🤪
  8. 2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்கிறோம் போய் வா! ஆண்டே 2024. 2025தே வருக! வருக! புலரும் புது ஆண்டே வந்து- நீ உயிர் கொல்லி நோய்களை நீக்கு உலகத்தின் சண்டைகள் போக்கு ஊழல்கள் இலஞ்சத்தை கொழுத்து ஊர்களெல்லாம் அன்பை நிலை நிறுத்து. செயற்கை உணவுகளை பொசுக்கு தேசத்தில் உணவில்லா நிலைதன்னை ஓட்டு ஏழைகள் என்ற சொல்லை எடுத்தெறி இருள் சூழ்ந்த இனங்களுக்கு ஒளி கொடு மதச் சண்டை இனச் சண்டை அகற்று மனிதரெல்லாம் ஒன்றென நீ உயர்த்து இயற்கையவள் அழிவிலிருந்து காப்பாற்று எல்லோர்க்கும் உலகமென்பதை உணர்த்து. அன்பு இதயங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்புடன்-பசுவூர்க்கோபி.
  9. நாங்கள் நினைத்தது, எங்களுக்கு வேண்டியது நடக்காவிட்டால்; அவரை தூற்ற வேண்டியது. இப்பவே படங்களையும் சேகரித்து வைப்போம். வேதநாயகம் சூடு கண்ட பூனை, அதை ஏற்கெனவே அனுபவித்தவர்.
  10. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். " அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? ரசோதரன், இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனை. தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ரன்வெல. ஆனா இன்னும் அதை பிடிச்சு தொங்கிக்கொண்டு, மக்களின் பிரச்சனை, தங்களின் ஊழல் பிரச்சனையை மறைத்து, வளங்களையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு பாராளுமன்றத்தை அவமதிக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்லும் இந்த கரைச்சல் சரிவராது, வேறேதும் வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்கோ! அதோட, நம்ம சுமந்து இந்த வருடத்துக்குள் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவது என்று அடம் பிடிக்கிறார், அவருக்கும் ஏதாவது .....? இருந்தா சொல்லுங்கோ.
  11. இணையவன் குறிப்பிட்டதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர வேண்டும். யேர்மனியில் பயங்கரவாதம் நடந்தால், கன்ஸிலரை முட்டாள் என்கிறார். யேர்மனிய ஜனாதிபதியைக் கேவலப் படுத்துகிறார். அவரது தயாரிப்பான டெஸ்லா காரிலே குண்டு கொண்டு வந்து வெடிக்க வைத்த பயங்கரவாத த்துக்கு யாரை நோவது?
  12. இதெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம், டெஸ்லா காரரின் தொல்லைதான் பொறுக்க முடியாது.
  13. வேல்ஸிலிருந்து அருள் என்பவர் சொல்லியிருக்கின்றார் இந்த வருடத்துடன் அமெரிக்காவின் கதையே முடிந்து விடும் என்று.....................🤣. போன டெஸ்லா திரும்பி வரத்தான் வேண்டும், அண்ணா......... எச் 1 - பி விசாப் பிரச்சனை தான் எலானுக்கும், விவேக்கிற்கும், ஶ்ரீராமிற்கும் மேல் டெக்சாஸில் தொங்குகின்ற கத்தி போல............. அப்படியே வராவிட்டாலும் நஷ்டமில்லை............ இங்கு கலிஃபோர்னியாவில் போய்க் கொண்டிருக்கும் ஆயிரம் முயற்சிகளில் ஒன்றோ இரண்டோ புதிதாக வெற்றிக்கொடி ஏற்றும்.............
  14. இப்பொழுது தான் புதிதாக இணைந்துள்ளேன். தங்களின் வழிகாட்டுதலில் கூடிய சீக்கிரம் சரியான முறையில் பதிவிடுவேன். நன்றி. ஏதேனும் தறவுகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி.
  15. 🤣............. அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........
  16. என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
  17. இவரது நியாயம் என்ன நியாயம் என்று புரியவில்லை. இவரது பாட்டன் தேர்தல்களில் பல முறை தோற்றார். ஆனால், அவர்தான் கட்சி தலைவர். இவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் மக்களால் நிராகரிக்கப்பட்டார். ஒரு முறை கூட பாராளுமன்றம் போகவில்லை. ஆனால் அவர் தான் கட்சி தலைவர். இப்போது தமிழரசுக் கட்சிக்கு வகுப்பு எடுக்கிறார். தனது கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது ஏன் என்று இதுவரை வாய் திறக்கவில்லை.
  18. அன்பே . .... கல்வியை கலவியாக்குவதிலும் ஒரு இன்பம் உண்டு என்ன ........ திரு பாஞ் அவர்களின் அறிவு இவ்வளவு தூரம் பாயும் என்று நான் நினைக்கவில்லை ........! 😂
  19. Chennai விமான நிலைய விழுந்து நொருங்கும் கண்ணாடிகள் நினைவிற்கு வருகிறது. 😁
  20. தற்போது அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, எதிர்காலத்தில் உணவு பொதிகளின் விலைகளின் அதிகரிப்பை தூண்டும் என அநுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார கூறியதாவது, "அரிசி நெருக்கடி காரணமாக, பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதி செய்த 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி மற்றும் 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், அரச வர்த்தக சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, "விநியோக நடவடிக்கைகள் இன்று நிறைவடையும்" என அறிவித்தார். News : https://jettamil.com/risk-of-price-increases-for-packaged-food
  21. இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான். துடைப்ப கட்டைய தூக்குவதல்ல.
  22. ஆளே இல்லாத கடையில், யாருக்கு "ரீ" ஆற்றுகிறீகள். நீங்கள் கெட்ட கேட்டுக்கு, உங்களை யாரும் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கேட்டார்களா? வந்திட்டாங்கள் தாங்களும் ஒரு ஆட்கள் என்று. போய்.... உங்கடை ஆட்களுக்கு, மாறி, மாறி முதுகு சொறிஞ்சு கொண்டு இருங்கோ.
  23. அவர்கள் அனுதாபத்தை தேட முன், அவர்கள் மேல் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களை கைது செய்தாலும் கேள்வி கேட்கும், கைது செய்யாவிட்டாலும் கேள்விகேட்கும் ஒரு கூட்டம். ஊழல் வாதிகளை கைது செய்ய வேண்டுமென்றே மக்கள் அனுரவுக்கு ஆணை வழங்கினர்!
  24. 90ஸ்-கிட்ஸ் :: தமிழீழ தாயகத்தில் எடுத்த சினிமா ரிக்கற்களை நீங்கள் சேகரித்து வைத்துள்ளீர்களா ..?
  25. இன்று மாவையர் வேறு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சகுனி கட்சிக்குள் நுழைந்து, இனத்துக்கு எதிரான சதி வேலைகளை செய்யும் போதே தலையிலடித்துச்சொன்னோம், எச்சரித்தோம். யாரும் கேட்கவில்லை. தலையில் வைத்துக்கொண்டாடினார்கள், சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள், சட்ட நிபுணர் என்று புகழாரம் வேறு சூட்டினார்கள். இப்போ எப்படி துரத்துவது என்று தெரியாமல், அவரின் தன்னிச்சையான அடக்குமுறைகளை தாங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒன்று சட்டப்படி இவரை கட்சியிலிருந்து நிறுத்த வேண்டும். அல்லது கட்சித்தொண்டர், ஆதரவாளர்கள், மக்கள் இவருக்கெதிராக கிளம்பி ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு ஏன் அதிகாரங்களை வழங்குகிறார்கள்? அல்லது அதிகாரம் செலுத்த விடுகிறார்கள்? மற்றய உறுப்பினர் தோற்ற போது அவர்களுக்கு என்ன செயல்முறையை நடைமுறைப்படுத்தினார்களோ அதையே இவருக்கும் செய்ய வேண்டியதுதானே. வலிய வீட்டுக்கை பூந்த ச**னை, குனியை விரட்டுவது கஸ்ரம்.
  26. எடக்குமுடக்கான கேள்வியெல்லாம் புதுவருஷத்தில கேட்கக்கூடாது. வந்த வருஷத்தை வரவேற்று கொண்டாடுகிற வழியைப்பார்க்க வேணும். வருட முடிவில், அதிரடியின் காயங்களை பலபேரின் பதவிகளில், சிறைச்சாலைகளில் காணுவீர்கள்.
  27. இல்லை, முன்பெல்லாம் இந்த சந்திப்புக்களை வடக்கின் வசந்தம் செய்து பிரபல்யம் தேடுவதுண்டு. அவர்தான் தரகுவேலை பார்ப்பவர். இப்போ, இவரை கைலாகு கொடுத்து காக்க பிடிக்கப்பார்கிறார் விமானப்படை தளபதி. ஏற்கெனவே இராணுவத்தினர் மக்களின் காணிகளை விட்டு வெளியேறவேண்டும் என்று இவர் கூறிக்கொண்டிருப்பதால், இவர்கள் கைகொடுத்து, மேலே தங்களை வெளியேற்ற வேண்டாமென கோருவார்கள் போலும். வடக்கின் சாவி இப்போ ஆளுநர் கையில். அவர் பொறுமையானவர், காரியமானவர் போலுள்ளது. அனுர இவரை உடனடியாக கொண்டுவந்தது அவரின் திறமைக்கு கொடுத்த அங்கீகாரம் என்றே சொல்லவேண்டும்.
  28. ஆளுக்கொரு ஊடக சந்திப்புகளை ஏற்படுத்துவது, கருத்து விடுவது. பிறகு நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என நடிக்கிறது. இவர் முந்தா நாள் ஒரு கருத்து வெளியிட்டார், இன்று அதற்கு மாறாக கருத்து சொல்கிறார். எல்லாம் பதவி செய்யிற வேலை. மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
  29. செலவில்லாமல் செய்துவிடும் சிக்கன திட்டம். இல்லாத சுதந்திரத்தை இருப்பதாக காட்டுவது, ஒரு இனம் இன்னொரு இனத்தின் சுதந்திரத்தின் மேல் நின்று கொண்டாடுவதற்கு சுதந்திரம். தமிழில் சுதந்திர கீதம் பாடக்கூடாது, நாம் கொண்டாடுவது சுதந்திரம். இதில், சுதந்திரம் யாரிடமிருந்து, எப்போது, எப்படி, யாரெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்பதையும் விளக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும், அதுதான் உண்மையான சுதந்திரம். அன்று, ஒரு நாட்டிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை பங்குதாரரோடு பகிர்ந்து கொள்ளாமல், பலநாடுகளிடம் அடைமானம் வைத்து கடன் வாங்கி, கடன் கொடுத்தவர்களை அழைத்து, லட்ஷக்கணக்கில் கொட்டி இல்லாத ஒன்றை பந்தா காட்டுவதற்கு பெயர் சுதந்திரம்.
  30. எதிரியானாலும் சிரித்துக்கொண்டே கைகூப்பி, வரவேற்று, விருந்தளித்து, உபசரித்து, உபத்திரவத்தை பெற்றுக்கொண்டோம். அதைத்தான் இப்போ அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள்ளே இருப்பது பொறாமை, எதிரியிடத்தில் காட்டுவது பெருந்தன்மை. இது நமது இனத்துக்கு வந்திருக்கக்கூடாது. வந்தது எமது இனத்தின் துரதிஷ்ட்டம் என்கிறேன் நான்!
  31. எமது பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை காலமாகவும் பொறுப்பாக பேசி செய்த நடவடிக்கைகள் என்று எதுவுமே இல்லை. வடிவேலு போல் துள்ளினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார் என்பது என் கணிப்பு.
  32. நான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃
  33. இடதுசாரிகள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்,மணித்தியாலக்கணக்கில் பேசுவார்கள் ..ஆனால் செயல் வீரர்கள் போல எனது அனுபவத்தில் தெரியவில்லை..
  34. காசு கொடுத்தாலும் பிள்ளை பெற மாட்டார்கள் ....நீங்கள் கூறியது போல பொருளாதார பிரச்சனை ..மற்றது அழகு பிரச்சனை... நயன்தார மாதிரி அழகாக இருக்க வேணும் எண்டு சிலர் நயன்தார +விக்னேஸ் தம்பதிகள் போல பிள்ளைகளை பெற முயற்சி செய்ய வெளிக்கிடியினம்....யாராவது பெத்து கொடுத்தால் வளர்க்கலாம் என்ற‌ யோசனையில் இருக்கினம் ...என்ன செலவு அதிகமாகும் என்பதால் சில தாமதம் நடக்கின்றது ...இந்த திட்டம் மலிவாக சந்தைக்கு வந்தால் நல்ல வசூல் நடக்கும்...
  35. தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம்.
  36. நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார். அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம்.
  37. தமிழ் திரைத்துறை வீழ்சசி என்பது ஒரு இயல்பான சுற்று என்றே கருதலாம். உலக பொருளாதாரங்கள் எப்படி ஏற்ற இறக்கங்களை கொண்டதோ அதை போல் தான் இதுவும் தற்போதைய OTT தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளை பாதிப்பதும் ஒரு காரணம். அதை விட தரமற்ற கதைக்களங்கள். தமிழ் திரை உலக வரலாற்றில் வீழ்சசியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல முறை அது சவால்களை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அதை அடக்கி அது எழுந்தேயுள்ளது. 1980 களில் விசிஆர் களின் வருகை தமிழ் சினிமாவை பாதித்தது. பின்னர் திருட்டு விசிடி ஆகியன முன்னைய காலங்களில் தமிழ் சினிமாவை பாதித்தது.
  38. * சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன். * பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும், எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன். * சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது. * சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது. * அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது. * எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது. * பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது. * வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.
  39. ஊற வைத்த அரிசி சாப்பிட்டால்....கல்யாணத்து அன்று மழை வரும். பாவம் செய்றவங்க... நல்லா இருக்க மாட்டாங்க (இதுதான் மிகப்பெரிய பொய்.) பொன் வண்டு முட்டையை சேகரிச்சா காசு வரும். யானை முடி உள்ள மோதிரம் போட்டால் பணம் கொட்டும். கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான். வேப்பமரத்திலை... இரவில் பேய் இருக்கும். தீபாவளிக்கு.... தீர்வு கிடைக்கும். 😂 🤣
  40. கோவில் சுவற்றில் ஹால் டிக்கட் நம்பரை எழுதி வைத்தால் பரீட்சையில் பாஸாகிவிடலாம். விழுந்த பல்லை சாணி உருண்டைக்குள் வைத்து, வீட்டின் கூரை மேல் போட்டு விட்டால் சீக்கிரம் பல் முளைக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போது.... வெயிலும் அடித்தால், நரிக்கு கல்யாணம் நடந்து கொண்டிருக்கும். யானையின் சாணியை மிதித்தால், படிப்பு வரும். சிவப்பு எறும்பு சாப்பிட்டால், கண் நல்லாய் தெரியும். 2020 ல் இந்தியா வல்லரசாகிவிடும். பென்சில் சீவிய குப்பையை... இண்டு நாள் அரிசி கஞ்சியில் ஊற வெச்சா அழிரப்பர் ஆயிடும். - இணையத்தில் பார்த்து ரசித்தவை. -
  41. அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....! அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........! 12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......! கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!
  42. *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.