Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்14Points46783Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்6Points9308Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/03/25 in all areas
-
கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
3 pointsகனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சைக்கிள் ஒன்றில் வங்கியில் கொள்ளையிட சென்றிருந்த குறித்த நபர், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை தேடியுள்ளார். எனினும், சைக்கிளை வேறு ஒருவர் களவாடிச் செல்லப்பட்ட நிலையில் வங்கிக் கொள்ளையர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும், வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர் மற்றும் சைக்கிளை கொள்ளையிட்ட நபர் ஆகியோரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். https://ibctamil.com/article/thief-s-bicycle-stolen-in-canada-1735891615#google_vignette3 points
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
3 pointsஉண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள். பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.3 points
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
2 pointsமூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள .... தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது .. இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..2 points
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
2 pointssatan சில நேரங்களில் உங்களின் அறிவு கொழுந்து விட்டு எரியுது .....அது எனக்குப் பிடித்திருக்கு . .....! 😂2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
2 pointsஎனக்கென்னமோ யாழ் களத்தில் கூட DMK தனது IT wing (retired) ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 🤣2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
2 pointsசும்மா சிவனே என்று இருந்த பெண்ணுக்கு தேவையில்லாமல் அவவின் நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன சொல்வது . ........! 😂2 points- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
100% ✅ சில இழப்புக்கள் எங்களுடன் முடிந்தால் அதைச் செரித்துக் கொள்ளலாம். இழப்புகள் எங்களுடன் சேர்த்து பிள்ளைகளையும் தாக்கும்போது நாங்கள் கட்டிக்காக்கும் விழுமியங்கள் உண்மையில் எங்கள் இழப்புக்களுடன் ஒப்பிடுகையில் பெறுமதியானவைதானா என எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு அந்தச் செருக்கு இருக்கிறதே,..❤️1 point- தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
தமிழரசு கட்சி இருந்தால் தானே அதை திட்டி திட்டி எனது அரசியல் பிழைப்பை கொண்டு செல்லலாம் அது இல்லை என்றால் எனது பிழைப்பு என்னவாகிறது என்ற கவலை அவருக்கு. இவரை போல வரட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்போதாவது தமிழ் மக்களுக்களின் நன்மைக்காக அரசியல் செய்ததை கண்டீர்களா? யாராவது ஒருவனை வில்லனாக சித்தரித்து அவனை காட்டி மக்களைப் பயமுறுத்தி, அதை வைத்து அரசியல் இலாபமும், புலம் பெயர் நாடுகளில் உண்டியல் கொத்துரொட்டி இலாபமும் பார்த்து தமது வாழ்வை தமது முதுமை வரை வளப்படுத்தி வாழ்வதற்கு பெயர் தான் தமிழர் தேசிய செயற்பாடு. அதை யாராவது அம்பலப்படுத்தினால் கோபத்தில் கண்கள் சிவக்க சிவக்க reaction வரும்.1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இல்லை கபிதன், அதிகாரமும் செல்வாக்கும் தான் எங்களின் செயல்களை தீர்மானிக்கும் என்றில்லை. கூட்டத்துக்குள் சிக்காமல் நாங்கள் நாங்களாகவே வாழலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் சில இழப்புகள் இதனால் ஏற்படும். ஆனாலும், அப்படி வாழும் போது உள்ளுக்குள் இருக்குமே ஒரு செருக்கு........... பாரதியார் கவிதைகள் புனையும் போது, அவர் நிமிர்ந்து, அவரது கண்கள் ஆகாயத்தில் குத்தி சிவந்து இருக்கும் என்பார்கள்.............. அற்ப மாயைகளாகவே அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தெரிந்தார்கள்........1 point- கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
வடிவேலு திரைப்பட காமடியெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது போல…1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள். மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை - சிறுகதை 19 டிசம்பர் 2023 கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி நடந்தது. சட்டி அடிப்பிடித்தது மட்டுமல்ல வீடெல்லாம் பெரும் புகை. பெரும் ஆபத்தில்கூட முடிந்திருக்கலாம். 'அய்யய்யோ..ஏன் பிள்ளை நீ கொஞ்சம் பாத்திருக்கலாமல்லே...' நான் என்னத்தைப் பாக்கிறது. நான் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். அம்மா தன் உதட்டுக்குள் ஒரு புன்னகையோடு கறிச்சட்டடியை சரியை செய்யும் வேலையில் மூழ்கியிருந்தார். இந்த அமளியிலும் கூட அம்மாவின் மூளை எங்கெங்கோ அலைந்து திரிந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. பேரப்பிள்ளைகளுடன்கூட செலவழிக்கும் அம்மாவின் நேரம் குறைந்து விட்டது. சிலவேளைகளில் சினந்து விழுகிறார். அல்லது தூக்கிவைத்து அளவுக்கதிகமாக செல்லம் பொழிகிறார் அம்மாவின் இந்த மாற்றத்தை என்னுடைய கணவருடன் பகிர்ந்துகொண்டபோது அவர் என்னை முறைத்தார். எதுவும் பேசவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன். அக்கா ஏற்கனவே தன் குடும்பத்தகராறில் மூழ்கிக்கிடப்பவள். 'போடி விசரி' என்று என்னைத் திட்டினாள். அண்ணாவுடன் நான் எதையும் பேசமுடியாது. அவன் என் வயசையும் பார்க்காது சிலவேளை எனக்கு கைநீட்டியும் விடுவான். அம்மாவுடன் பேசலாம் என்றால், எப்படிப் பேசுவது? அது சிலவேளை அம்மாவை காயப்படுத்தியும் விடலாம். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அப்போது அம்மாவுக்கு வயது முப்பத்தியெட்டு. தனியாளாக நின்று எங்களை ஆளாக்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார். சந்தோசம் என்றாலே என்ன என்று தெரியாத அளவுக்கு அம்மாவின் காலம் கடந்திருக்கும். நாங்கள் திருமணமாகி ஒரு நிலைக்கு வந்தபின்னர்தான் அம்மாவின் முகத்தில் புன்னகை பூத்திருக்கும். பேரப்பிள்ளைகள் அம்மாவுக்குப் பெரும் வரம். கடந்த ஆண்டு, அம்மாவின் பாடசாலை பழையமாணவர் ஒன்றுகூடலுக்கு அம்மாவையும் அழைத்தார்கள். அம்மா தொடுகிலும் மாட்டேன் என்றே அடம்பிடித்தார். அங்க போனால் தேவையில்லாத கதைகள் வரும். தேவையில்லாத கதைகள் கிளறுப்படும். எல்லாரும் குடும்பமாக வர நான் தனியப்போறது அவ்வளவு நல்லா இருக்காது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார். நான் விடாப்பிடியாக நின்றேன். 'பாடசாலைக் காலங்கள் எவ்வளவு இனிமையானவை. ஏன் அதை மீட்டிப் பார்க்கக்கூடாது. அறுபது வயது என்ன வயதா? இனிதான் வாழவேண்டிய வயது. வாழப்போகும் ஒவ்வொரு மணித்துளிகளையும் மகிழ்ச்சியாக கழிக்கவேணும். நீங்கள் சந்தோசமாக போயிற்று வாங்கோ' என்று நாங்கள் காரில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்தோம். திரும்பி வரும்போது அம்மா தன் நண்பரின் காரில் வந்திறங்கினார். அதன் பிற்பாடு அம்மா தொலைபேசியில் மூழ்கிக்கிடந்தார். தன்னுடைய நண்பர்கள் பற்றி அம்மா சிலாகிக்கும்போது சிவகலா என்பவர்பற்றிய சிலாகிப்பு சற்று மிகையாகவே இருந்தது. மெது மெதுவாக தன் பளளிக் கதைகளை தன்னையறியாமலே அம்மா என்னிடம் கசியவிட்டார். அதிலிருந்து ஒரு முக்கிய புள்ளியை ஊகிப்பது எனக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. பள்ளிக்காதல் படலை வரை மட்டுமென்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடைய அப்பம்மா சொன்னது நினைவில் வந்து போனது. எனக்குப் புதினம் அறியும் ஆவல் அதிகரித்தது. நான் 'பிறகு...பிறகு...பேந்து..'என்று சிரித்துச் சிரித்துக் கேட்டேன். அம்மா வெட்கப்பட்டார். 'சும்மா போடி' என்று என்னைச் செல்லமாக இடித்தார். வெட்கத்தைப்பார். ஓ! இந்த வயதிலும் வெட்கம் வருமா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவை கன்னா பின்னா என்றிருந்தன. ஆனாலும் மகிழ்வூட்டும் பல சொற்கள் கவிதைகளில் தெறித்தன. அம்மா சந்தோசமாக இருப்பது எனக்கு மகிழ்வாய் இருந்தாலும், எங்கேயோ ஏதோ என் மனதுக்குள் இடறிக்கொண்டேயிருந்தது. ஒருநாள் அம்மா தன் நண்பரை வீட்டுக்கு அழைத்திருந்தார். வந்தவரை சிவகலா மாமா என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தலையில் முடியேதும் இருக்கவில்லை. ஆனாலும் வாட்டசாட்டமாக இருந்தார். அவர் எல்லோருடனும் அதிகம்பேசும் பேர்வழியாக இருக்கவில்லை. என்னிடம் பழகுவதற்குகூட சற்று கூச்சப்பட்டதை அவதானிக்கமுடிந்தது. விலை உயர்ந்த கார் வைத்திருந்தார். வரும்போது பெரிய பூங்கொத்துடனும், ஒரு பெரிய சொக்லேற் பெட்டியுடனும் வந்தார். பின்னர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனார். என்னுடைய கணவருக்கு இது அவ்வளாகப் பிடிக்கவில்லை. நான் ஒரு ஐரோப்பிப் பெண்ணாக இருந்திருந்தால் இலகுவாகக் கடந்திருப்பேன். அம்மாவின் மகிழ்சியை எண்ணிப் பூரிப்டைந்திருப்பேன். இன்னும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்! என்ன சொல்வார்கள்! என்று குழம்பியிருக்மாட்டேன். இப்போது அடுத்தவர் பற்றிய வீணான எண்ணங்கள் என் மூளையை நிரப்புகின்றன. சரி, நான் என்னைச் சரி செய்து கொள்ள முயற்சிக்கலாம். முயற்சித்தாலும் என் கணவரை நினைக்க பயம் என்னை இறுகப்பற்றிக் கொண்டே வந்தது. அவரும் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்தாலும் என் அளவிற்குகூட அவரால் மாறமுடியவில்லை. அவர் இன்னும் அதிகமாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பயந்தார். என்னுடைய பிறந்த நாளுக்கு சிவகலா மாமா மடிக்கணினி ஒன்றைப் பரிசளித்தார். அது எனக்கு தேவையில்லாத ஒன்றாகவே பட்டது. என் கணவர் அதை ஒரு அருவெருப்பான தீண்டத்தகாத பொருளாகவே பார்த்தார். அது வீட்டின் ஒரு மூலையில் அனாதரவாகக் கிடந்தது. அம்மாவின் கணினி வைரஸ் பிரச்சினையால் இடறுப்பட்டது. அது பாவிக்கச் சிரமமானதும் பழையதுமான ஒன்று. இனி, அதைத் திருத்திக் கொடுக்குமாறு என் கணவரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. சிவகலா மாமா தந்த கணினியை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா மிக ஆவலோடு வாங்கி பாவிக்கத் தொடங்கினார். அந்தக்கணினி அம்மாவுக்கு பல புதியபுதிய விசயங்களை கற்பித்தது. அம்மாவும் ஆர்வமாய்க் கற்றுக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு மாலைப்பொழுது. சிவகலா மாமா வீட்டுக்கு வந்தார். அம்மா சிரித்த முகத்தோடு 'வாங்கோ' என்றார். என் கணவர் என்னை 'வாரும் வெளியே போவம்' என்றார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும், நான் சற்றுத் தாமதமாக்கிக் கிளம்பினேன் . அம்மா என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். நான் சிரித்துச் சமாளித்தேன். போகும் போது என் கணவர் கதவை அடித்துச் சாத்தினார். நான் திடுக்கிட்டேன். நிலைமையச் சமாளிக்க நான் கதவைத் திரும்பத் திறந்து சாத்தினேன். சாத்தும்போது, 'வெளியில சரியான காத்து' என்று இல்லாத காற்றை வரவழைத்தேன். அம்மா சிரித்தார். அப்பாடா! என்றிருந்தது. நடக்கும்போது 'என்னப்பா கொஞ்சமும் 'மனேஸ்' இல்லாமல் நடந்து கொள்றியள்' என்றேன். அப்போதும் அவர் முறைத்தார். நிலைமையை உணர்ந்து நான் மௌனமானேன். 'வேற வீடு பாக்கிறன்' என்றார். நான் எதுவும் பேசவில்லை. 'கிட்டவாத்தான் பாக்கிறன். இந்த ஏரியா சரியான விலையா இருக்கு'என்றார். 'அப்ப அம்மா?' 'இது அவான்ர வீடு. அவ என்னவும் செய்யட்டும்' 'வயசான நேரத்தில என்னண்டு...தனிய விட்டிட்டு....' நான் இழுத்தேன். 'அவ வயசு போன மாதிரியே நடந்து கொள்றா?' கடுமையானார். நாங்கள் அருகிலுள்ள பார்க்கில் போய் அமர்ந்தோம். பூமரத்து இலைகள் வாடிக்கிடந்தன. வாடிக் கருகிக்கிடக்கும் இலைகளுக்குள்ளும் ஒரு துளிர் மட்டும் எப்படி? 'கொஞ்சம் தள்ளிப்போகலாம். பிறகு வேலைதூரம். பிள்ளைகளுக்கு பள்ளிகுடமும் சிக்கலாப்போகிடும்' என்று மௌனத்தை அவரே உடைத்தார். 'கொஞ்சம் அமைதியாகுங்கோப்பா. இப்ப என்ன அவசரம்?' அவர் அமைதியாகினார். 'அம்மாவின்ர முடிவு, அது அவவின்ர சுதந்திரம்.' இப்போ குரலை அமைதியாக்கி ஆனால் அழுத்தினார். 'இப்ப அவ என்ன முடிவு எடுத்துப்போட்டா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருக்கிறது தப்பா? 'ஒரு தப்பும் இல்லை. எல்லை தாண்டாமல் இருக்கிறது முக்கியம்' 'எது எல்லை?' 'வயதுகள் தாண்டின பிறகும்கூட சபலம் ஏற்படுறது இயல்புதான். ஆனால், அடுத்தவைக்கு பாதிப்பில்லாமல் நடந்துகொள்ளவேணும்.' 'இப்ப ஆருக்கு பாதிப்பு? ஊருலகம் என்னவும் கதைக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படேல்லை' 'உமக்குத் தெரியுமா? சிவகலாவின்ர குடும்பத்துக்க என்ன நடக்குது என்று' உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியவில்லை. 'என்னப்பா அங்க என்ன நடக்குது?' பதகளிப்பட்டேன். 'சிவகலாவின்ர மனிசி ஒரு ஒரு அப்பாவி. அழுது வடிக்குது. ரெலிபோனில எடுத்து எனக்கு முறைப்பாடு வைக்குது' 'என்ன? உங்களோட கதைச்சவவோ?' 'ஓ! என்னோடதான். எனக்குச் சீ எண்டு போச்சு. பிள்ளையள் சிவகலாவோட கதைக்கிறேல்ல' இதற்கு மேல் எனக்கு எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. கதைக்க முடியவுமில்லை. o நாங்கள் வீடுதிரும்பியபோது சிவகலாவும் வீட்டிலிருக்கவில்லை. அம்மா உற்சாகமாக கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தார். இரவு என்னால் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. நித்திரையும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அம்மாவிடம் இதை எப்படி நான் வெளிப்படையாகப் பேசுவது? வீடு பார்க்கிறோம் என்று தெரிந்தாலே அம்மா உடைந்து போய்விடுவார். எப்படியோ சொல்லித்தானே ஆகவேண்டும். சிவகலா மாமாவின் தொடர்பை துண்டித்துவிடும்படி கேட்கலாம்! ஏன் கேட்கக்கூடாது? ஏன் கேட்க வேண்டும்? இன்னொரு குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தை முன்வைத்துக் கேட்கலாம்! அது கூட இன்னொருவர் வாழ்க்கைக்குள் அத்துமீறி தலையிடுவது போல் ஆகிவிடாதா? சனிக்கிழமைக்காகக் காத்திருந்தேன். வீடு பார்க்கப் போகிறோம் என்று அம்மாவின் முகத்தைப் பார்த்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லாதிருந்தது. 'அம்மா, வெளியில போறம் பிள்ளயள ஒருக்கா வெளிக்கிடுத்தி விடுங்கோ' என்றேன். இப்படி ஒரு வழமை எங்களிடம் இருந்தபடியால் அம்மா ஆர்வமாக வெளிக்கிடுத்த தயாரானார். பிள்ளைகள் மகிழ்ச்சியில் 'அம்மா எங்க போறம்?' என்றார்கள். 'புது வீடு பாக்க..' என்றேன். ' யாருக்கு, எங்களுக்கா? என்றார்கள் ஆச்சரியத்தோடு. 'ஓம்' என்று தலையசைத்தேன். 'அ..ய்...எங்களுக்கு புதுவீடு' என்று அவர்கள் துள்ளிக் குதித்தார்கள்;. 'அப்ப இந்த வீடு..? என்றார் அம்மா ஏக்கத்தோடு. 'இது உங்கட வீடு. நீங்கள் இதில இருங்கோ. நாங்கள் கிட்டத்தான். ஆபத்து அவசரம் என்றால் ஓடிவருவம்' என்றேன். அம்மாவின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வரத்தயங்கின. கண்களிலிருந்து மட்டும் ஒரு துளி சொட்டியது. * ஓவியம் - நன்றி: கல்கி https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/8316-2023-12-19-07-35-44?fbclid=IwY2xjawHRczNleHRuA2FlbQIxMAABHW5CUvBJsA1srZo3WUKUR9Cag5DkARKTgrZahM4Ze1nxm-ibSjWaliTFsA_aem_mBTjdXq8QKLekpZlDrtHdQ1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
அம்மா 38 வருடங்களாக தனிமையாக வாழ்ந்துள்ளார். எவ்வளவு கொடுமை? இந்த பிள்ளைகள் ஏன் இவ்வளவு சுயநலமாய் நடந்து கொள்கின்றார்கள்? இந்த வயது போன காலத்திலும் ஒரு companionship தேவைதானே?1 point- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
India 185, Australia 1/9 சிட்னி ஆடுகளம் பச்சை பசேலன காணப்படுகிறது, இந்தியர்கள் அவுஸ்ரேலியா தட்டையான சீமெந்து தரையினை அவுஸ்ரேலியா வழங்கும் என குறை கூறிய நிலையில் இவ்வாறான ஒரு ஆடுகளத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாணய சுழற்சியில் வென்ற இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவினை எடுத்தது, இன்று மேக மூட்டத்துடன் மிதமான வெப்பத்துடன் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேக பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது, எதிர் வரும் 3 நாதள் வெப்பம் அதிகரிக்கும் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படுவது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (தவறாக இருக்கலாம்) எதிர் வரும் நாள்களில் பந்து எதிர் பாராத வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பந்து மேலெழும் நிலை உருவாகலாம். இது வழமையான சிட்னி ஆடுகளம் போல தட்டையாக இல்லை, வழமையாக 2, 3 ஆம் நாள்களில் துடுப்பாட்டத்திற்கு வசததியாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளம் நாள்கள் செல்ல செல்ல மோசமாகலம் என கருதுகிறேன் (எனது தனிப்பட்ட கருத்து) ஆனாலும் பிட்ச் காயும் போது துடுப்பாட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சிட்னி ஆடுகலம் மெல்பேர்ன் ஆடுகளம் போல Drop pitch இல்லை, அதனால் பிட்ச் உடையும் போது சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படும், இவற்றினை பார்க்கும் போது அதிகளவில் இந்தியணிக்கு சாதகமாக நிலை உள்ளது, அதனால் அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்க்ஸில் அதிக ஒட்டங்களை பெற்றாக வேண்டும் 300 ஒட்டங்களையாவது அவுஸ்ரேலியா எடுக்க வேண்டும்.1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point🎧 ஐயப்பா,சபரிசா! ஐயப்பா,சபரிசா! சந்தனம் மணக்கும் ஐயப்ப அணையாத தீபமாய் அருளும் சபரிசா! பந்தளம் மன்னனின் புகழும் நீயே, பார்வதி பரமனின் பொன்னவன் நீயே! தங்க கோலமே தரிசனம் நல்கி, தவமுடன் வாழ்த்திடும் தெய்வமே ஐயா!1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இதேபோல ஒரு இறப்பு ரஸ்யாவிலோ அல்லது சீனாவிலோ இடம்பெற்றிருந்தால் யாழ் களமே அதகளப் பட்டிருக்கும். 🤣1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அரசியலில் நிலைக்க வேண்டுமாயின்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். போற்றல் தூற்றல்களை கடந்து அமைதியாக. இறுதியில் யார் தூற்றினாலும், அவர் மனது சொல்லும்; என்னால் இயன்றதை, நன்றே செய்தேன் என்று மனது அமைதியடையும். இதுவே உண்மையான சேவை. மக்கள் பணி, மகேசன் பணி. ஒன்று, யாராவது ஒரு நல்லது செய்தால்; அதை பொறுக்காதவர்கள் சேறடிப்பார்கள் அல்லது அவரை தொடர்ந்து தாமும் ஏதும் செய்யவேண்டுமென்று செய்வார்கள். மணி, நல்ல துடிப்புள்ள இளையவர். மக்களுக்கு இன்று நிறைய சட்ட உதவிகள் தேவை, ஊழலை அடாவடியை அகற்ற. ஆகவே இவர் நல்ல மனதோடு மக்களுக்கு சேவை செய்ய முன்வருவாரானால் இணைந்து செய்யலாம். நாளடைவில், தமிழரசுக்கட்சியை சிதைக்க, சொந்தமாக்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்து கனவு காணவேண்டியது.1 point- கரைச்சல் வேண்டும்
1 pointரசோதரன், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன், வேறொருவருக்கும் சொல்லிபோடாதேங்கோ. முக்கியமாக கோசானுக்கு சொல்லிபோடாதேங்கோ. அனுரா மாத்தையாவுக்கு மட்டும் எந்த ஒரு கரைச்சலும் குடைச்சலும் வரக்கூடாது! பிரார்த்தனையும் செய்யிறேன். மனுஷன் ரொம்ப சாதுவாய், வாயில்லாப் பூச்சியாய் இருந்திருப்பார். அதனாலேயே சாதிக்க முடிந்திருக்கு. ஆனால் எங்கட சுமந்துக்கு வாய்தான் அதிகம். அதிலும் உளறுவாய், நாறல் வாய்.1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
உவையளின்ரை சேட்டையளை பார்த்துத்தானே அர்ச்சுனா அரசியலுக்கு வந்தவர். கூட்டு அரசியலை விட தனி மனித அரசியல் நிறைய பலன்களை தரும். ஆனால் கூட்டு அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.😀1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointசாதிகள் இல்லையென்றால் தலித் கட்சிகள் எதற்கு? எல்லாவற்றையும் கலைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நிலைக்கு வரலாமே?1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இப்படியான தெருக்கள் .தாக்குதல் நடத்திய நபர்களின் மததில் பாவச்செயல் (ஹராம் )என சொல்லப்பட்டுள்ளது...ஆகவே தான் இவர்கள் தாக்குதல் செய்யும் சகல இடங்களும் இசை நிகழ்ச்சி சம்ப்ந்தப்பட்டதாக இருக்கும்....1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
நேற்று நியூஓர்லியன்ஸில் நடந்து இருக்க வேண்டிய Georgia vs. Notre Dame College Football Playoff போட்டி இதனால் நேற்று நடைபெறவில்லை...............இன்று மதியம் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. இன்று சுவடே இல்லாமல் மக்கள் இந்தப் போட்டியை பார்ப்பார்கள், ரசிப்பார்கள்............ ஊரில் அரசாங்கம் எங்களின் பாடசாலைக்கு குண்டு போட்ட மறுநாளே நான் பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆளாகப் போயிருந்தேன்............ எனக்கும் விசர், எல்லாருக்கும் விசர்..............🫣.1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும். இதுவே உண்மையான, நேர்மையான ,தமிழ் மக்களுடைய ஆசையும் கூட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இறுதியில் இவர்களால் எல்லா அழிவையும் சந்திக்க போவதும் அமெரிக்காதான். எங்கெங்கு எதையெதை விதைத்தார்களோ, எல்லாம் ஒன்றுசேர்ந்து திருப்பி தாக்கும் நேரம் வரும். ஏன், நெருங்கி விட்டது என்றே சொல்லலாம்.1 point- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
1 point90ஸ்-கிட்ஸ் :: தமிழீழ தாயகத்தில் எடுத்த சினிமா ரிக்கற்களை நீங்கள் சேகரித்து வைத்துள்ளீர்களா ..?1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
இவரது செயற்பாடு, கேள்வி கேட்க்கும் தன்மை, பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஊழல், லஞ்சம், பந்தா, அதிகாரம் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அது பாதிக்கப்படப்போகிறது என்பதால் அவரை பைத்தியம் என்று விமர்ச்சித்தார்கள், இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்விகேட்டார்கள். வழக்கம்போல் வந்து கூடி, உண்டு, கதை பேசி போக முடியவில்லையே எனும் ஆதங்கத்தால். இவர்களை யாரும் இதுவரையில் யாரும் கேள்வி கேட்கவில்லை, அதற்கு இவர்கள் விட்டதுமில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வருமென்று இவர்கள் நினைத்ததுமில்லை. அரசியல் வாதிகள் கூட்டங்களில் போய் ஆசுவாதமாய் இருந்து, கண்ணை மூடி அயர்ந்துவிட்டு கூட்டம் முடிய பத்திரிகை கூட்டங்களை நடத்திவிட்டு பெரிய சாதனை நடத்தியவர்கள்போல் ராஜ நடை நடந்தவர்கள் இப்போ முழிக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். விலகக அல்லது விலக்க வைக்கப்படுவார்கள். அதனால் தமது இருப்பை காக்க வெறுப்பை அவர்மேல் கக்குகிறார்கள், அவர் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் யார் பின்னால் ஒளிந்தால் இவர்களுக்கென்ன? அது அவருடைய பிரச்சினை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடில் இப்படி சேறு பூசுவது வழமை. சிங்களவனிடம் போராடுகிறோம். முதலில் நாம் நம்மிடம் போராட வேண்டிப்பெற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. இவரை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். அதே போல் அனுராவை பதவியில் இருந்து ஒழிக்கவும் ஒரு கூட்டம், தமிழர் பகுதியில் தங்கள் பழைய காரியங்களை தொடர்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி தமிழர். ஆனால், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அர்ச்சுனாவுக்கு. நிதானம், பொறுமை, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு ஆராய்ந்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கலாம், அவர்களை பேச விட்டு பொறுமையுடன் கேட்டால். இல்லையென்றால் கோசம் போட்டு அவரது நிதானத்தை கலைத்து கோபமூட்டி அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவார்கள்.1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointகருநாநிதி,எம்ஜிஆர்,ஸ்டாலின்,ஜெயலலிதா,உதயநிதி கதைகள் சொல்லவா? 😁1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointசீமானின் பெற்றோர்கள் என்ன பாவம் செய்தார்கள்?1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointநான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Kerala · Rejoindre Vijayan Nair · tprndsoeSomuufmit261thiah2g9mg2fu8c21i1994a72h11 tc501m304m5 · GoodMorning & Happy New Year1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம்.1 point- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார். அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம்.1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointசெந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointதம்பி ஏராளனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியற்று நலமே வாழ்க.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- வணக்கம்
1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி