Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்13Points46783Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3054Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்9Points34974Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/10/25 in all areas
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த, தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.8 points
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும் சேர்த்தே அணுக வேண்டும். ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அவர் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவரும் அல்லர். அவராலும் சமூகத்துக்கு சில பல நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதால் அவரை சீண்டாமலும் அதே சமயம் அளவுக்கு மீறி துதி பாடாமலும் விடுவதே புத்திசாலித்தனம்6 points
-
குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
4 points4 points
- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
4 pointsஅதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள்.4 points- குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
4 pointsவாங்கப்பா வாங்கப்பா... சிலோனுக்கு இரண்டு .... பேரும் சேர்ந்து.... போவமப்பா.... பிறகு. வெக்கையப்பா... வெக்கையப்பா... உடம்பெல்லாம்... புழுங்குதப்பா... எண்டு. திருப்பியும்.... கத்தக்கூடாதப்பா.....🤣4 points- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சூசை அவர்கள் மட்டுமல்ல, ஏனைய தளபதிகளும், சில வன்னி அரசியல் தலைமைகளும் கூட இறுதி யுத்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த பிரமுகர்கள், செயற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் அறிந்தேன். ஆனால், சீமான் குழுவுக்கு மட்டும் தான் இந்த ரணகளத்திலும் சூசை அவர்களின் உரையாடலை ஒலிப்பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்திருக்கிறது என்றால், அவர்களின் உள்ளே இருந்தது உணர்வா அல்லது இலாப நட்டக் கணக்குப் போடும் மூளையா என்பதை சொந்தமாக மூளை இருக்கும் ஒருவர் யோசிப்பார். சீமான் அடிப்பொடிகள் யோசிக்க மாட்டார்கள் என்பது அதிசயமல்ல😂!3 points- இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது. இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது. இது வீரகேசரியின் இணைப்பு December 20243 points- தேவையானவை
2 pointsதேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அதன் மின்னூட்டியும் மிக அவசியம் மடிக்கணினி தேவையேயில்லை முக்கியமாக வேலைக்கணினி அது வெந்து போகட்டும் குடும்பப் படங்கள் சில கையில் கிடைக்கும் சில உடுப்புகள் இப்படி காரை நிரப்பவும் அவசியப் பொருட்கள் பல இருக்கின்றன என்ன அலைபேசியில் இப்படியொரு பயங்கரச் சத்தம் என்று பின்னுக்கு இருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் என் வீட்டுக்காரி ஆளைக் கண்டவுடன் மிக அவசியமான ஒன்று மறந்தே போயிருந்தது தெரிந்தது இப்ப காரில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பொருட்களை ஏற்ற வேண்டும்.2 points- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.2 points- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
ஆம், 2010 இல் பிறந்தவை Gen alpha! என் பிள்ளையின் தலைமுறை. ஏராளமான செல் போன் செயலிகளில் வீட்டில் இருக்கும் வயசாளிகளை விட அதிக பரிச்சயமுடையவர், இதனால் சில சமயங்களில் என் தொழில் நுட்ப ஆலோசகர்😂.2 points- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் இருவரும் கிளு கிளுப்பூட்டிறியள்....அடுத்த பயண்த்துக்கு அந்த ரூட்தான் எடுக்கவேணும்.. எப்படி பிரியன்சார்..எப்படி உங்கஊர் நிலைமை...உறவுகளூம் நீங்களும் நலம்தானே பேரம் பேசல் தோல்வியில் முடிந்திட்டுது போல..2 points- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அது மிமிக்ரி இல்லை. ஆனால் எடிட் பண்ணப்பட்ட ஒன்று. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சுயநலக் கூட்டம், சீமானுடன் இணைந்து செய்த தில்லாலங்கடி வேலை அது. அண்மையில் முன்னைய செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைக்கும் போது, அவர் நடேசன் அண்ணாவின் நெருங்கிய உறவுகளுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் ஆனால் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியாது என்றும் கூறினார்.2 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
👇 கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு, யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது. 17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு. இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று பச்சைப் பொய் சொல்லி, சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை செய்யாதீர்கள். இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்... "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது. அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல், பார் லைசன்சைப் பற்றி கதைத்து, சுமந்திரனை முச்சந்தியில் வைத்து துகில் உரியப் பண்ணி விட்ட பெருமை, உங்கள் இருவரையுமே சாரும். 😂 நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான் கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது. மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால் உங்களுடன் பலர் கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும். நன்றி. 🙏2 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...2 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .2 points- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
2 pointsதோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.2 points- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
2 pointsபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" [நவாலியூர் சோமசுந்தரப்புலவர்] தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது. தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம். இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும். இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: ஆடிப்பட்டம் தேடிவிதை [உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!] ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும் பொருள்: வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும். உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்? அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்2 points- இங்கிவனை யான் பெறவே
1 pointஇங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது. அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை. இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார். போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது. இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார். மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர். துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது. திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான். “சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர். துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான். “யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான். தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள். “குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான். மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான். “நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான். குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை. திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள். களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான். “உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன். இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள். துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான். குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள். துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான் “விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான். “நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!” குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்” துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான். பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான். பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது. “தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான். “ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும். ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!” துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான். துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான். நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன, சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான். பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான். குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது. துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான். துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான். பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான். இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான். “கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான். துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான். துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர். ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான். மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான். “அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது. “நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான், தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா? சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான். சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான். சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான். துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது. பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது. துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான். “பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான். துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான். “அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?” “இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்” “ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?” “கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…” “அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!” துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை. “சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?” துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?” துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை. பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான். கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள். https://solvanam.com/2024/10/13/இங்கிவனை-யான்-பெறவே/1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஒரு விடுகதை? இங்கே எனக்கு எதிராகவும்,சீமானுக்கு எதிராகவும் எழுதியவர்களுக்கு முள்ளிவாய்கால் இறுதி நிகழ்வுகளும் சீமானைப்பற்றிய உள் விபரங்களும் தெரிந்திருக்கு! 🤣 ஈழத்தமிழர் போராட்ட வரலாறுகளும்/மாவீரர் வரலாறுகளும் தெரிந்திருக்கு.. ஆனால் முக்கியமான ஒரு விடயம் மட்டும் தெரியவில்லை அது என்ன விடயம்?1 point- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
தோட்டம் செய்யிறது அருமையான வேலை. மனதுக்கு சந்தோசம் தரக்கூடியது. ஒவ்வொரு பயிரும் வளர்ந்து வரும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.மழை,வெய்யில்,லீவு நாட்கள் ஏதுமில்லாத வேலை என்றாலும் யாருக்கும் அடிமை இல்லாத தொழில் அது.யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை. தோட்டம் என்றால்..... ஐ மீன் மை கார்,மை பெற்றோல், மை றோட்டு சிஷ்ரம் அது. அனுபவிச்சவனுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும். 😂1 point- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
Iraq 1991 WMD போலத்தான் இதுவும் இருக்கும். 🤣1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இங்கு படம் தொடர்பாக கருத்து வைத்தது தாங்கள். கபிதன் மீண்டும் சொல்கிறேன் இங்கு சும் இன் மீது எவருமே சேறடிக்கவும் இல்லை வன்னமும் இல்லை. சும் மினால் நடந்ததை அல்லது ஏற்படுத்தப்பட்டதையே கூறுகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்து இன்று தமிழரசுக் கட்சியையும் உடைத்து விட்டார். சும் இன் மீதான உங்களின் ஈர்ப்பு இவற்றை / யாதார்த்தத்தை ஏற்க மறுக்கின்றது.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
🤣............... இந்திய இராணுவ காலங்களில் நடந்த ஒரு விசயம். மாரிகாலம் தவிர்த்து மற்றைய நாட்களில் தீருவில் மைதானத்தில் தான் விளையாடுவோம். மாரிகாலத்தில் வெள்ளம் மைதானத்தை நிரப்பிவிடும். மைதானம், அதனை ஒட்டி தெற்குப் பக்கமாக வயலூர் முருகன் கோவில், அதன் பின்னால் குமரப்பா, புலேந்திரன் மற்றும் போராளிகள் ஞாபகத் தூபி அமைக்கப்பட்ட இடம், அதன் பின்னால் பனங்கூடல்கள் என்று தீருவில் வயல்வெளி அந்த நாட்களில் இருந்தது. ஒரு நாள் காலை விளையாடிக் கொண்டிருக்கும் போது, படபடவென்று பல ஜீப்புகள் மைதானத்தின் வடக்குப் பக்கமாக வந்து நின்றன. இந்திய இராணுவத்தின் பரா துருப்புகள். எங்கள் எல்லோரையும் மைதானத்தில் விழுந்து படுக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல முன்னரே நாங்கள் பலர் நிலத்தோடு நிலமாகக் கிடந்தோம். துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டே மைதானத்தின் ஊடாக ஓடி, முருகன் கோவிலைத் தாண்டி, வெளியால் ஓடி பனங்கூடலுக்குள் ஓடினார்கள். சில இராணுவத்தினர் எங்களுடன் நின்றார்கள். ஓடிய இராணுவத்தினர் திரும்பி வரும் போது, ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தனர். அவர் இன்று வேறு ஒரு நாட்டில் மிக நன்றாக இருக்கின்றார். வீட்டில் நாங்கள் சொல்லவேயில்லை. அடுத்த நாள் காலையிலும் அதே மைதானத்தில் விளையாடினோம். ஊரிலிருந்து வெளியே போகும் வரை அதே மைதானத்தில் தான்................ இதைவிட மிக இலகு இங்கு வந்து போகும் நெருப்பு....................1 point- கந்த சஷ்டி கவசத்தை ஒலிப்பதிவு செய்ய... சூலமங்கலம் சகோதரிகள் பட்ட சிரமங்கள்.
இன்று பட்டிதொட்டியெங்கும் ஒவ்வொரு சைவப் பெருமக்களது வீடுகளிலும், கோயில்களிலும், வியாபார நிலையங்களிலும் காலையில் இந்தப் பாடலுடன் தான் பொழுது ஆரம்பமாகிறது. இதற்கு நிகராகவோ அல்லது இதைவிட மேம்பட்ட பாடல்கள் என்று எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.1 point- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
1 pointட்ரம்ப் மீது 34 நியூ யோர்க் மாநில மோச (felony) குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன. வர்த்தக ஆவணங்களை பொய்யாக மாற்றி எழுதிய குற்றச் சாட்டு. இது நியூ யோர்க் மாநிலச் சட்டப் படி Class "E" non-violent felony. இப்படி ஒரு மோசடி செய்தால் "0" முதல் 7 வருடங்கள் வரை சிறை. 34 மோசடிகள் என்பதால், நிச்சயம் சிறை சாதாரண ஒருவருக்குக் கிடைத்திருக்கும். ட்ரம்ப் என்பதால் "0" வருடங்கள் சிறை. ஆனால், நீதித் துறை சும்மா விட்டு விடவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ட்ரம்ப் மீண்டும் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபணமானால், முன்னர் குற்றம் செய்தவர் (Non-violent Predicate) என்ற அடிப்படையில் மீண்டும் தீட்டுவார்கள்😂!1 point- மின்கலம் திருடனை தேடி 4 கிலோ மீற்றர் பயணித்த ஜோனி என்ற மோப்ப நாய்
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார். நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2034121 point- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏. நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.1 point- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
பறக்கின்ற விமானத்தில்... பாலியல் வன்புணர்வு செய்த ஆள் என்றால், எப்படிப்பட்ட கில்லாடியாக இருப்பான். நிச்சயம் சிங்களவனாகத்தான் இருப்பான். தமிழன் என்றால்... பெயர், ஊர், விலாசம் எல்லாம் பத்திரிகையில் போட்டிருப்பார்கள். 😂1 point- தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
வருகின்ற செவ்வாய்க்கிழமை (14.01.2025) அன்று தைப்பொங்கல்.1 point- தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
ஏன் பொங்கல் நாளன்று நடத்தவில்லை? 14 or 15.1 point- பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
அரியம் ஐயாவின் விளக்கம் வட்ஸப்பில் : பாராளுமன்ற ஒன்றியங்கள் பாராளுமன்ற நிலையில் கட்டளைக்கு உள்வாங்கப்படுவதில்லை.. நாடாளுமன்ற குழுக்களின் வகைகள் இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்கள் இரண்டு விரிவான வகுப்புக்களுள் வகைப்படுத்தப்பட முடியும். அவை நிலையியற் குழுக்கள், விஷேட குழுக்கள் என்பன ஆகும். நிலையியற் குழுக்கள், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன் அக்குழுவின் அலுவல் முற்றுப் பெற்றாலும் முற்றுப் பெறாவிட்டாலும் தொடர்ந்து செயற்பட்டவாறிருக்கும். அவைகளின் பதவிக் காலத்தில் சற்று நிரந்தரத்தன்மை காணப்படும். சபையின் குறிப்பிட்ட ஓர் அலுவலை அவை கையாள்கின்றன. விஷேட குழுக்களோ பெரிதும் தற்காலிகமானவையாக இருப்பதுடன் அவற்றின் பணி பூர்த்தியானதும் அவை இல்லாதொழிந்து போகின்றன. இக்குழுக்கள் காலத்திற்குக் காலம் அவற்றுக்கு வழங்கப்படும் இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகச் செயலாற்றுகின்றன. இவற்றை நாம் தெரிகுழுக்கள் என்றும் அழைக்கலாம். நிலையியற் கட்டளைகளின் படி முழுப் பாராளுமன்றக் குழுவுக்குப் புறம்பாக, இலங்கைப் பாராளுமன்றம் ஐந்து வகையான குழுக்களைக் கொண்டுள்ளது விசேட குழுக்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சட்டவாக்க நிலையியற் குழுக்கள் சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் பாராளுமன்ற ஒன்றியங்கள் என்பவை பொதுவான நலன்களையும் / இலக்குகளையும் பற்றிக் கலந்துரையாடி, அவற்றுக்காக ஆதரித்துவாதாடுவதற்கான அல்லது பகிரப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவாகும். ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் கொள்கை விடயங்களைக் கலந்துரையாடுவதும் சட்டவாக்க முன்னுரிமைகள் பற்றிய உபாயமார்க்கங்களைத் தயாரிப்பதுமாகும். ஒன்றியங்கள் பொதுவாக சில குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட விடயங்களிலும், சுற்றாடல், மனித உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி அல்லது ஒரு குறித்த வேறுபட்ட குழுக்கள் (உதாரணம்: பெண்கள் ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், சிறுவர் ஒன்றியம்) போன்ற தலைப்புக்களிலும் கவனம் குவிக்கின்றன. ஒன்றியத்தின் நடவடிக்கைகள், கிரமமான கூட்டங்களை நடத்துதல், நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், சட்டாவக்கத்தினை முன்மொழிதல், ஆலோசனைகளை முன்வைத்தல், நடப்பு விவகாரங்களைக் கலந்துரையாடுதல், மற்றும் பங்கீடுபாட்டாளர்களுடனும் பொதுமக்களுடனும் சேர்ந்து செயற்படல் ஆகியவற்றினை உள்ளடக்குகின்றன. பின்வருவன இலங்கையின் கடந்த 2020,ல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நடப்பு ஒன்றியங்களாகும்: 1 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் 2 பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் 3 திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் 4 இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம். 5 விலங்குகள் நலனுக்கான பாராளுமன்ற ஒன்றியம் 6 தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் 7 மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 8 மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 9 மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 10 இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய ஒன்றியம் 11 காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 12 மருத்துவர்களாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எவ்வாறாயினும், பாராளுமன்ற ஒன்றியங்களுக்கான ஏற்பாடுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிலையியற் கட்டளைகளில உள்ளடக்கப்படவில்லை.. நிலையிற்கட்டளைக்கு உள்வாங்கப்படும் பாராளுமன்ற பதவிகள் அனைத்தும் சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வில் அறிவிப்பார். -பா.அரியநேத்திரன்- 10/01/20241 point- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
😂 சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்1 point- குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
வெறி வெறி கொட்டப்பா வேர்க்குது வாடியப்பா ரயேட்டா இருக்குதப்பா கொம்பிளேன் எகேன் கொட்டப்பா கோ வாக்ரு லண்டன் சூனப்பா இப்படியே கத்தி போட்டு பிளைட் ஏற வேண்டியது தான் குமாரசாமி அண்ணன். நான் குளிருக்கு எழுத நீங்கள் வெக்கைக்கு எழுதுறியள் அப்படி போடுங்கோ நல்லாத் தான் இருக்கு.😂👍1 point- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
எந்தப்பக்கம் போனாலும் வளைச்சு வளைச்சு அடிக்கிறானுகள்....😂1 point- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
அநேகமாக, மாரி காலத்தில் தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சும்மில் இவ்வளவு குற்றம் ஏன் என்றால் இனபடுகொலை என்பது நடந்தது என்பதையே மூடி மறைத்து அப்படி நடக்கவில்லை என்று வெளிநாட்டு துதுவர்களை தனியே சந்தித்து நம்ப வைத்து போர் குற்றம் களில் இலங்கை சிங்கள அரசை காப்பாற்றியது.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் CIA இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார். நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இதற்கான விடை தான் சிறியரின் அந்த சிவப்புசட்டைப் படம்...1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்.. ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣. பிகு ஆம் அது செரினாவேதான்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது வரலாறு…. எல்லாரும் அறிந்த விடயம். இதை தெரிந்து கொண்டே அவரை தலைவர் என ஏற்று, மேடை மேடையாக “தந்தை” பெரியார், நான் அவரின் பேரன் என கூறியவர்தான் இந்த சைமன் செபஸ்டியன். அப்போ 15 வருடத்துக்கு முன் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதை ஏற்று கொள்ளும் நிலைப்பாட்டில் சீமான் இருந்தார்? இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு… மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣. இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு. இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக இருப்பாரென நம்புகிறேன். பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார். "சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சிங்கப்பூர் ஏர்லைன்சில் போவாரே பெரியார் அஃதிலார் சீர்கெட்டு சிங்கியடிப்பார். கட்டாரை கற்றாரே காமுறுவர். எத்திக்கு போனாலும் கத்தே பசிபிக்கில் போ. ஏர்இந்தியா, சிறிலங்கன், பிஐஏ, பீமன் நான்கும் இழுக்கா இயன்றது நற்பயணம். குவைத் எர்வேஸ், சவுதியா “குடி” நாசம். பெயரை நம்பி, சுவிஸ் ஏர்வேசில் ஏறாதே. எதையும் நம்பி பிரிட்டிஸ் ஏர்வேசில் ஏறாதே. குவாண்டசில் போனால் குபேரனும் குசேலனாவான். #நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை🤣1 point- 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
எதுக்கும் பொறுத்துப் பார்ப்போம்... அனுர சீனா போறார்தானே...பால்சோறு செய்யிற அரிசி 50 கிலோ என்றாலும் கொடுப்பினம்தானே...🤣1 point- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
இனிமேல்... உங்களுக்கு கிட்ட வந்து கதைக்க, நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது. 😂1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அண்மையில் பெற்ற இரு அனுபவங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு முட்டாள் தலைமுறையை உருவாக்கி விடுமென்ற அச்சத்தை எனக்குத் தந்திருக்கிறது. 1. ஒரு மாணவர் ஆராய்ச்சி பழகுகிறேன் என்று வந்தார். ஆனால், வரவேண்டிய நாட்களில், நேரங்களில் வருவதில்லை. நானே அவர் சம்பந்தப் பட்ட வேலைகளை முடித்து விட்டு இருந்த போது புள்ளிகள் பெற கடைசி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலம் வந்தது. வேலை செய்யாமல் எப்படி அறிக்கை எழுதுவது? எனவே இரக்கப் பட்டு "ஒரு தியரிப் பேப்பர் எழுது, புள்ளிகள் தரலாம்" என்று சலுகை கொடுத்தேன். மாணவரின் அறிக்கை, கிடைக்க வேண்டிய இறுதி நாளில் வந்தது. ஒரு பிழையுமில்லாமல் திறமாக இருந்த அறிக்கை சந்தேகம் தரவே, 4 வெவ்வேறு AI detectors மூலம் சோதித்துப் பார்த்தேன். நான்கிலும் "இந்த ஆவணம் 98 முதல் 100 வீதம் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப் பட்டது" என்ற தீர்ப்பு வந்தது. அப்படியே அந்த தீர்ப்பை அவரது மேற்பார்வையாளருக்கு அனுப்பி விட்டு "இனி இங்கே வராதே" என்று துரத்தி விட்டேன். 2. சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்க முதல் குறைந்தது 2 பேர், துறை அனுபவம் இருப்போர் (peer reviewers) பரிசோதித்து பிரசுரிக்க தகுதியானதா என்று சோதிக்க வேண்டும். சீனாவில் இருந்து அப்படி அனுப்பப் பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை என்னிடம் பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். ஒரு இலக்கண, எழுத்துப் பிழை கூட இல்லாமல் இருந்த கட்டுரை சந்தேகம் தரவே, சஞ்சிகை இதை பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டேன். சஞ்சிகையின் பரிசோதனையில், "80 முதல் 90 வீதம் செயற்கை நுண்ணறிவு எழுதிய கட்டுரை" என முடிவு வந்தது. என்னுடைய துறை/வேலைப் புலம் சாதாரண உலகத்தில் இருந்து ஒரு மூலையில் (niche) இருக்கலாம். ஆனால், இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை துஷ்பிரயோகம் செய்வதால் வரும் விளைவுகள் பெரும் எண்ணிக்கையானோருக்கு அநீதி விளைவிக்கும். உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.1 point- அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
'யெஸ் சார்..............மார்வலஸ் ஐடியா.........' என்று சுற்றி இருப்பவர்கள் தலையாட்டிக் கொண்டு இருப்பார்கள் போல..................🤣.1 point - உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.