Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்21Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்12Points3054Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்11Points46783Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20012Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/13/25 in all areas
-
தேவையானவை
7 pointsதேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அதன் மின்னூட்டியும் மிக அவசியம் மடிக்கணினி தேவையேயில்லை முக்கியமாக வேலைக்கணினி அது வெந்து போகட்டும் குடும்பப் படங்கள் சில கையில் கிடைக்கும் சில உடுப்புகள் இப்படி காரை நிரப்பவும் அவசியப் பொருட்கள் பல இருக்கின்றன என்ன அலைபேசியில் இப்படியொரு பயங்கரச் சத்தம் என்று பின்னுக்கு இருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் என் வீட்டுக்காரி ஆளைக் கண்டவுடன் மிக அவசியமான ஒன்று மறந்தே போயிருந்தது தெரிந்தது இப்ப காரில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பொருட்களை ஏற்ற வேண்டும்.7 points
-
பொங்கல் சிரிப்புகள்.
4 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
3 pointsஎன்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.3 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
3 pointsஆடி வெள்ளி, தேடி உன்னை வசந்த கால நதிகளிலே இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ... அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை ஆண் : {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2) பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) பெண்: கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} ** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும்3 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
3 points
-
தேவையானவை
2 pointsஅடபாவிகளா கொஞ்ச நேரமென்றாலும் சந்தோசமாக இருக்க விடமாட்டாங்களே. என்ன கந்தையர் காலுக்குள் நெருப்பு இந்த நேரம் முகத்தைப் பார்த்து ஏத்தேலுமோ? வாறதை தள்ளிக் கொண்டு போக வேண்டியது தான்.2 points
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
2 pointsஐயோ, மக்கு பெருமாள். ஐயா! நீங்கள் ஏன் மேடையின் கீழ் பார்வையாளர் வரிசையில் இருத்தப்பட்டீர்கள், எதற்காக சிறீதரனுக்கு முன்னாடியே இந்தியாவுக்கு சென்றீர்கள், சேர்ந்து போயிருக்கலாமே, அங்கு எமது மக்கள் சார்பாக என்ன பேசினீர்கள் என்று கேட்டால், என்ன சொல்வது? அதை தவிர்ப்பதற்காக, சிறீதரனுக்காக அழுகிறார்களாம். அப்படி அக்கறையுள்ளவர்கள், ஏன் அவரை விலத்திவிட்டு சென்றார்கள்? நாங்கள் எங்கே இருந்தோம் என்பதை கேட்கமுதல், சிறிதரன் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டால், அதோடு கதை திசை திரும்பிவிடும். இது ஒரு தந்திரம்! தங்கள் குற்றத்தை, வெட்கத்தை மறைக்க. நீங்கள் ஏன் தோற்றீர்களென்றால்; நாங்கள் நான்கு ஆசனங்களை பெற்று வென்றிருக்கிறோம், இது வெற்றிதான். தமிழ் மக்களுக்கான பிரச்சனையை கதைக்க, விளக்க ஜெனிவா போங்கள் என்றால்; அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்பவர்கள், வைகோ போகிறார் அதுபற்றி பேச. அயலக தமிழர் தினத்துக்கு முண்டியடித்து ஓடுகிறார்களாம். எது முக்கியம் நமது அரசியல் சட்ட மேதைகளுக்கு?2 points
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நலமா பையன் சார்........ பல நாட்களாக உங்களைக் காணவில்லை. அடிக்கடி நினைப்பில் வருவீர்கள்.......... அங்கே நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் நல்லகண்ணு ஐயா, வெங்கடேசன், ரவிக்குமார் மற்றும் இன்னும் சில இடதுசாரிகளையும் சொல்லலாம். பிரபல அரசியல்வாதிகளில் தொல். திருமா, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், பரவாயில்லை என்றே தோன்றுகின்றது....................... ஆனால் கடுமையான நேர்மை என்பது வெறுங்கையால் முழம் போடுவது போல அரசியலில்............... கடந்த ஒரு வருடத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, நாதக இந்த நான்கு கட்சியைச் சேர்ந்தவர்களின் மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளுக்காக நானும், பலரும் பெரியாரை ஆதரிக்கவில்லை. நீங்கள் சொல்வது சரியே........ இவர்களில் எவரும் பெரியாரின் வழியில் நிற்பவர்கள் என்று நானும் நினைக்கவில்லை. திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் போடும் மக்களும் பெரியாருக்காக போடுவதேயில்லை. சமூக நீதி என்பது ஒரு கோட்பாடும், வாழ்க்கை முறையும். பெரியாரின் வழியே தான் அது எங்கும் பரவியது. தமிழ் மீண்டும் பாரதியின் மூலம் உயிர் பெற்றது போல................... பெரியாரையும், பாரதியையும் தெரியாது............ ஆனால், அவர்கள் நட்ட மரங்களின் கீழ் தான் நாங்கள் இருக்கின்றோம்..........2 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 pointsவசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. எம்எஸ்வியின் இசை, ஜெயச்சந்திரன் குரல் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், பாடலை அந்தாதியில் கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டதால் பாடல் மனதில் அழகாகப் பதிந்து விட்டது. இதேபோல்தான் “ஆடி வெள்ளி ஓடி வந்து…” பாடலும், இதை சற்று வித்தியாசமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். நாயகன் பாடி முடிய இறுதிச் சொல்லலெடுத்து நாயகி பாடுவாள். ஆக, நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்தான். ஜெயச்சந்திரனின் குரலை நான் முதன் முதலில் கேட்டது இந்தப் பாடலில்தான்,2 points
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
திராவிட ஆட்சியாளர்களுக்கு நான் இங்கு ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் அதற்கு மாற்று சீமான் வகையறாக்கள் இல்லை என்கிறேன். சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழும் நிலை அது. சமூக பொருளாதார நிலையில் தமிழ் நாட்டு மக்களை அடுத்த கட்டம் நோக்கி உயர்த்தி விட்டதில் திராவிட கட்சிகளின் பங்களிப்பை தமிழ் நாட்டில் உள்ள 80% வீத மக்கள் மறக்கவில்லை. இன்னும் அதிகம் செய்து இருக்கலாம் என்ற குறை எனக்கும் உண்டு தவிர வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? தமிழ் மக்களில் கள்ளு இறக்கி வாழும் மக்களை சொல்கிறீர்கள் என்றால் அவர்களில் நான் இல்லை, ஆனால் உங்கள் சொற்களை கவனமாய்ப் பாவியுங்கள் அது குறிப்பிட்ட அம்மக்களை காயப்படுத்தி விடும்2 points
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் தாசர் சத்தியராஜ் அவர்களும் ஈழத்தமிழர் அபிமானிதான். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அவர் நடிக்கும் படங்களுக்கு ஈழத்தமிழ் எனும் பிரச்சனை வருமாயின் அந்த சிந்தனையும்,ஆதரவையும் தூக்கியெறிய பின் நிற்க மாட்டார். கன்னடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டான் வெட்டுவன் புடுங்குவன் என கர்ஜித்த இவர்.....சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை திரையிட விடமாட்டோம் என்று கன்னடர் போராட்டம் நடத்திய போது தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டவர்தான் இந்த திராவிட தாசர்.2 points
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
எங்கன்ட அப்புகாத்து சுமத்திரன் சர்வதேச நீதிமன்றில் வாதாடி சிரிலங்காநீதியரசர்களின் தீர்ப்பை மாற்றுவார் ..2 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 points
-
கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சங்கர் எ சூசை
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார். காந்திஅவர்கள் பத்தொன்பது வயதையெட்டிய 1982-ம்ஆண்டுகாலப்பகுதி. சிங்கள பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்போராட்டம் முளையிடத் தொடங்கிய காலம். பேரினவாத சக்திகள் தமிழ்மக்கள்மீது திணித்த அடக்குமுறைகள் உயர்தரக்கல்வி கற்றுக்கொண்டிருந்த காந்தி அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான கப்டன் பண்டிதர், கப்டன் றஞ்சன்லாலா, கேணல் கிட்டு ஆகியோர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டுக் காலப்பகுதியில் காந்தி அவர்கள் தன்னையும் ஒரு முழுநேர விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்டார். இயக்கப் பாசறையில்தான் இயக்கப்பெயராக சூசை என்ற பெயரைப் பெற்றிருந்தார். தொடக்கநாட்களில் கேணல் கிட்டு அவர்களின் வழிகாட்டலில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இராணுவ அரசியல் ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார். இதன்பின்னர் 1983-ம்ஆண்டின் பிற்பகுதியில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் இருநூறு போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிஅணியினர் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்றபொழுது அந்த அணியில் சூசைஅவர்களும் சென்றிருந்தார். இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருந்த முதலாவது பயிற்சிப்பாசறையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று ஒரு சிறந்த போராளியாக மட்டுமன்றி சிறந்த ஆளுமைமிக்க பொறுப்பாளராகவும் புடம்போடப்பப்பட்டு தனது பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவுசெய்திருந்தார் சூசை அவர்கள். 1984-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சிப்பாசறை நிறைவடைந்ததையடுத்து தாயகம் வந்த சூசை அவர்கள் அதே காலப்பகுதியில் வடமராட்சிக்கோட்டப் பொறுப்பாளராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். சூசைஅவர்கள் வடமராட்சிக் கோட்டத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முனைப்புப்பெற்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலம்மிக்க ஒரு அமைப்பாக கட்டியெழுப்பும் பொருட்டு பெருமளவு இளைஞர்களை போராட்டத்தில் இணைத்து பயிற்சிகள் பெறுவதற்காக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கை காட்டுப்பகுதியிலும் பயிற்சிமுகாம் அமைத்து அங்கும் புதியபோராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கி இயக்கத்தின் ஆட்பலத்தை விருத்திசெய்து விடுதலைப்போராட்டத்தின் படிக்கல்லாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மத்தியில் போராட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறி போராட்டத்திற்கான மக்கள் ஆதரவினையும் வலுப்படுத்தினார். கிராமங்கள் தோறும் மக்கள்கடை என்ற பெயரில் வணிகநிலையங்களை நிறுவி மலிவுவிலைகளில் பொருடகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். அத்துடன் முதலுதவித் தொண்டர்களை உருவாக்கும் முகமாக கிராமங்களிலுள்ள சில படித்த இளைஞர் யுவதிகளை ஒன்றுசேர்த்து முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியதோடு பின்தங்கிய இடங்களில் முதலுதவி நிலையங்களை நிறுவி பயிற்றுவித்த முதலுதவித் தொண்டர்களை அந்த நிலையங்களில் மருத்துவத் தொண்டர்களாகப் பணிக்கமர்த்தி மக்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்தார். அன்றய நாட்களில் அந்த முதலுதவி நிலையங்களின் சேவையால் அநேகமான மக்கள் பெரிதும் நன்மையடைந்ததுவும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற குடும்பப்பிணக்குகள், காணிப்பிணக்குகள் உட்பட ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணும்முகமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த அறிவில் முதிர்ந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களுமான சிலரை இணைத்து இணக்கமன்றங்களை நிறுவி மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு அந்த இணக்கமன்றங்கள் ஊடாக உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தினருக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்திலும் நேரடியாக பங்கெடுத்திருந்தார். 1987-ம்ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கைமூலமாக வடமராட்சியைக் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்தனர். இந்தப் படைமுகாமை அழிப்பதற்கென விடுதலைப்புலிகள் 1987-ம் ஆண்டு யூலைமாதம் 05-ம்திகதி முதன்முதலாக கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தை கொன்றொழித்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப்படைமுகாமை வெற்றிகொண்டனர். இந்த தாக்குதலில் படைமுகாமின் பிரதான தடையை உடைத்து, கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய வாகனத படைமுகாமின்;தை முகாமிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு சூசை தலைமையிலான அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று சரியாக இரவு 7மணி 2நிமிடத்திற்கு சூசை தலைமையிலான அணியினர் முகாமின் தடையை உடைத்து பிரதான பாதையை ஏற்படுத்திக்கொடுக்க 7மணி 5நிமிடத்திற்கு கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து வாகனத்தை முகாமிற்கு உள்ளே கொண்டுசென்று கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டார். கரும்புலி கப்டன் மில்லர் அவர்களும் சூசை அவர்களின் ஆளுகையின் கீழ் வடமராட்சி அணியில் செயற்பட்டிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னரான காலப்பகுதியில அதாவது தமிழீழத்தில் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மணலாற்றுக் காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டவேளையிலும் சூசை அவர்களும் இன்னும் சில போராளிகளும் வடமராட்சிப் பகுதியிலேயே மக்களின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இந்தக்காலப்பகுதியில் இந்தியப்படையினருக்கெதிரான கெரில்லா முறையிலான பல தாக்குதல்களை மேற்கொண்டதோடு தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக படகுகளில் கொண்டுவரப்படுகின்ற படைக்கலங்களையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்து அவற்றை மணலாற்றுக்காட்டுக்கு அனுப்பிவைப்பது உட்பட அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போராட்டப்பாதையில் மிகவும் நேர்மையுடன் பயணித்தார் சூசை. இதன்பின்னர் ஒரு கட்டத்தில் தேசியத்தலைவரின் அழைப்பையடுத்து தேசியத்தலைவரை சந்திப்பதற்காக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடர்மிகுந்த பயணத்தை; தொடர்ந்து தேசியத்தலைவரைச் சந்தித்தார். அதன்பின்னர் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழகம் சென்றார். அங்கு காயத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு காயம் குணமடைந்து உடல்நிலை தேறியபின்னர் தாயகம் வந்து தேசியத்தலைவருடன் மணலாற்றுக் காட்டில் செயற்பட்டார். 1990-ம்ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தமிழீழத்திலிருந்து முற்றாக வெளியேறியவுடன் மீண்டும் வடமராட்சிக ;கோட்டத்தைப் பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வகித்தார். இந்தக்காலப்பகுதியில் கலை கலாச்சாரப்பிரிவை உருவாக்கி அதனூடாக போராட்டக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து கணிசமான இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைத்து பலமானதொரு வடமராட்சி அணியைக் கட்டிவளர்த்திருந்தார். அந்தக்காலப்பகுதியில் மண்டைதீவில் தேசவிரோதக்கும்பல் மீதான தாக்குதல,; யாழ்-கோட்டை முகாம் மீதான தாக்குதல் மண்டைதீவுப்படைமுகாம் மீதான தாக்குதல் 1991-ம்ஆண்டு யூலைமாதம் ஆனையிறவுப்படைத்தளம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட அனைத்து தாக்குதல்களிலும் சூசை தலைமையிலான தாக்குதலணி பங்கெடுத்திருந்தது. ஆகாயக்கடல்வெளிச்சமர் முற்றுப்பெற்றதையடுத்து சூசை அவர்களுக்கான திருமணம் நடைபெற்றது. முதல் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் சகோதரி சத்தியதேவி(சுதா) அவர்கள்தான் சூசையின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். தனது இல்லறவாழ்க்கையில் சிந்து என்ற ஒரு பெண்பிள்ளைக்கும் மணியரசன், சங்கர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த கடற்புறா அணி 1991-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19-ம்நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் என்ற கட்டமைப்பாக பரிணமித்தபோது அதன் சிறப்புத்தளபதியாக சூசை அவர்கள் நியமிக்கப்பட்டார். கடற்புலிகளென்றால் சூசை சூசையென்றால் கடற்புலிகள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரினுடய செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதாவது கடற்புலிகளினுடய நடவடிக்கைகள் அனைத்திலும் சூசை அவர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமாகவிருந்தது. கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலத்தை கடற்புலிகள் நிர்வகிப்பதற்காக கடற்புலிகளின் அரசியல்துறை உருவாக்கப்பட்டு மக்களுக்கும் கடற்புலிகளுக்கும் மத்தியிலான ஒரு நெருக்கமான உறவுநிலையை ஏற்படுத்தியிருந்தார். யாழ்.குடாநாட்டுக்கான பாதைகள் தடைப்பட்டு கிளாலிக் கடல்வழியாக மக்களின் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற பொழுது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கடலில் இறக்கி மக்களுக்கான பாதுகாப்புக்களை வழங்கி நிறைவான போக்குவரத்துப்பணியை நெறிப்படுத்தினார். 1993-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி-நாகதேவன்துறை படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் எதிரியின் ஐந்து நீரூந்து விசைப்படகுகளை கைப்பற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இதன்பின்னர் ஓயாதஅலைகள் நடவடிக்கையில் முல்லைத்தீவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டமை, ஓயாதஅலைகள் மூன்றில் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மீட்புச்சமர், குடாரப்புதரையிறக்கம, தொடராக ஏற்படுகின்ற கடற்சமர்கள், ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகள் என அவரின் நெறிப்படுத்தல்கள் தொடர்ந்துகொண்டே சென்றன. 2002-ம்ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதானகாலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும், சமாசங்களின் பிரதிநிதிகளை தென்மராட்சி-பளைப்பிரதேசத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.; அத்துடன் முல்லைத்தீவு, வடமராட்சிக்கிழக்கு, மன்னார்மாவட்டம் ஆகிய அனைத்து கரையோரப் பிரதேசங்களிலுமுள்ள பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடரான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவைகளுக்கெல்லாம் சுமூகமான முறைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். நித்திகைக்குளத்தில் காயப்பட்டபோது ரவையின் சிறிய பாகமொன்று அவரின் உடலில் புதைந்திருந்தது. அது உபாதைக்கு உட்படுத்தியதால் சிகிச்சைக்காக 2004-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் சிங்கபபூர் நாட்டிற்குச் சென்று சிகிச்சைபெற்று ஒரு வாரத்தில் நாடு திரும்பியிருந்தார். 2004-ம் ஆண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்கள் நிறையவே அழிவுகளைச் சந்தித்திருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் சூசை அவர்கள் நேரடியாக களத்தில் நின்று மீட்புப்பணிகளை நெறிப்படுத்தினார். சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு தொடராக மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவிலும் வடமராட்சிக்கிழக்கிலும் ஒவ்வொருவாரமும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடாத்தி சுனாமி மீளகட்டுமானப்பணிகளை நெறிப்படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் தொடங்கியபோது படையியல் ரீதியான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டியவராகவிருந்தார். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம் நாளன்று பகல்வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகு ஒன்றைக் கடலில் பரீட்சித்துப் பார்த்தபோது தூரதிஸ்டவசமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சூசை அவர்கள் கடுமையாக காயமடைந்ததோடு அவரது ஐந்து வயது நிரம்பிய மகன் சங்கரும் அவரது மெய்ப்பாதுகாவலர் லெப்ரினன்ட் சீலனும் அந்தச்சம்பவத்தில் சாவடைந்தனர். படுகாயமடைந்த சூசை அவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதனால் ஒரு மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறியும் அவர் தனது பிரத்தியேக முகாமிற்குத்தான் வந்தார். அங்கிருந்தவாறு கடற்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். என்னதான் வேலைச்சுமைகள் இருந்தாலும் பொதுமக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் வருகின்ற கடிதங்களை உடனுக்குடன் பார்வையிட்டு அதற்கான பதில்களை சமபந்தப்பட்ட பொறுப்பாள் ஊடாக அனுப்பிவைப்பார். போராளிகளை பலதுறைகளிலும் பயிற்றுவித்து ஆளுமைமிக்க போராளிகளாக வளர்த்தெடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துடன் போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும,; வீரச்சாவு நிகழ்வுகளில் எந்தவிதமான தவறுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் வலுகண்டிப்பாகச் செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் போராளிகளின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பிலும் மிகவும் கண்டிப்பாகச் செயற்பட்டதோடு தனிப்பட்ட ஒழுக்கம் தவறியவர்கள் அவரது தண்டனைகளுக்கு உள்ளாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. 2009-ம்ஆண்டின் முற்பகுதிகளில் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை ஏற்றிச்செல்வதற்கும் போர்வலயத்திற்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருவதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் கப்பல் சேவை மேற்கொண்டிருந்தனர். இந்த கப்பல் சேவையை வன்னிக்கு எடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலமாகத்தொடர்பு கொண்டு கடமையான பிரயத்தனம் மேற்கொண்டார். வன்னியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த இனவழிப்புப்போர் தொடர்பாகவும் மக்கள்படும் துன்பங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கூறி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்திருந்தார். இயக்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் பொதுமக்களை பாதிக்கக்;கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். போரின் இறுதிநாட்களிலும் எங்களது போராட்டம் தர்மத்துக்கான போராட்டம். அது நிச்சயம் வெற்றிபெறும். என்ற அசைக்கமுடியாத உறுதி அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. 2009 மேமாதம 15-ம் நாளன்றும் அவர் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தபோதிலும் அவர் தளர்வடையவில்லை. மேமாதம் 16-ம்நாளன்று இரவு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் உறுதிதளராத குரலில் வன்னியின் இறுதிநேர நிலைமைகள் தொடர்பாக அறிவித்துக்கொண்டிருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. மறுநாளான 17-ம் நாளன்று அதிகாலைப்பொழுதிலும் அவரது மெய்ப்பாதுகாவலர் புரட்சியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அவரது கம்பீரமான கட்டளையை கேட்கமுடிந்தது. அதுதான் இறுதியாக எனது செவிகளில் கேட்ட அவரது குரலாக இருந்தது. அந்த உறுதியானகுரல் மூன்று ஆண்டுகளாகியும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ1 point
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில், உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம். ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால், வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது கடற்றொழிலாளர்களின் வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள்” என்றுள்ளார். https://tamilwin.com/article/jaffna-fishermen-criticize-tamil-mp-s-17367817031 point
-
பொங்கல் சிரிப்புகள்.
1 point1 point
- மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
ஓம் அண்ணா அவர்கள் கம்யனிச தமிழ் தனி நாடு உருவாகி அங்கிருந்து தான் மேற்குலநாடுகளுக்கு கம்யுனிச தீ பரவி அந்த நாடுகளும் மாற போகின்றது என்றார்களாம். இறுதியில் அவர்களே கப்பிட்டலிஸ்ட்டுகளாக மாறி அங்கேயே குடியேறிவிட்டார்கள். இப்போ கோவிலிலும் சேர்ச்சிலும் நின்று ஆன்மிக வரவேற்பு கொடுப்பதும் அவர்கள் தான்.1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு. அழைப்பிதழில் ஒருவரது பெயர் போட அவரது அனுமதி பெறவேண்டும். ஒரு விழாவில் பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர், விழாத்தலைவர் என்பதெல்லாம் அதற்கேற்ப விழா ஒழுங்கமைப்பாளர்களால் படிநிலை மரியாதை கொடுக்கப்படல் வேண்டும். இதெல்லாம் தெரியாமலா நீங்கள்??? அப்புறம் வாசலில் காவலில் நிற்பவர்களுக்கு இன்னன்னாரை வாசலில் நிறுத்த வேண்டும் என்றும் விழா ஒருங்கிணைப்புக்குழு ஆணையிடுதலும் உண்டு. அதை சிரட்டை என்று நீங்கள் நினைத்தால் அதுவே. கடைசியாக என் மீதான உங்கள் கோபக்கணல் என் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவதில் வந்து நிற்கிறது. என்ன செய்வது அறப்படிச்சவர் எல்லாம் இப்ப இப்படி தான் திரிகிறார்கள் இங்கும் பாராளுமன்றத்திலும். ஆனால் இந்த சீண்டுதல் மற்றும் இழிவு படுத்துதல் என் ஊர் மற்றும் தேசம் மீதான பற்றை அதிகப்படுத்தவே இதுவரை உதவி இருக்கிறது. தொடருங்கள். நன்றி.1 point- மகளிர் பிரீமியர் லீக் 2025 - செய்திகள்
ஏற்க்கனவே தமிழ் நாட்டை சேர்ந்த சகோதரி இந்தியா மகளிர் அணிக்காக விளையாடுகிறா..................கஸ்ரப் பட்ட குடும்பத்தில் இருந்து வந்த பிள்ளைகள் தங்களின் திறமைய வெளிக்காட்டி சாதனை பல படைத்து இருக்கினம் இந்தியாவில்..................................1 point- தேவையானவை
1 point🤣............... பார்க்க எல்லாம் தேவையேயில்லை, அண்ணா........ அங்கே பட்டு இங்கே படுகின்ற காற்றிலேயே நம்ம வீட்டுப் புயல் என்ன வேகத்தில் வருகின்றது என்று சொல்லிவிடுவமல்ல................🤣.1 point- தேவையானவை
1 point🤣 அருமை வந்தவர். உங்கள் வீட்டுக்காரரி. தானா ?? அல்லது பக்கத்து வீட்டுக்காரியா??? வடிவாகப். பார்த்தீர்களா???🤣1 point- தேவையானவை
1 pointநீங்கள் காருக்கு driver உங்களுக்கு மனைவி தானே driver 😁 அவவை விட்டிட்டு சுதந்திரப் பறவை ஆகலாம் எண்டு பாத்திங்களோ? உங்கள் பக்கம் நெருப்பு பரவாமல் இருக்க இறைவன் துணை இருக்கட்டும்.1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஅழைப்புக்கும் கதவை தட்டிஅனுமதி பெற்று வருவதும் ஒரே படிநிலை????1 point- தேவையானவை
1 pointஉண்மையைச் சொல்லுங்கள். இத்தோடு தொலைந்தது என்றுதானே எண்ணியிருந்தீர்கள். கண்ணதாசன் அனுபவித்து எழுதியிருந்தார். ..இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் எதிலும் மயக்கமடா..”1 point- இங்கிவனை யான் பெறவே
1 pointஇங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது. அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை. இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார். போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது. இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார். மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர். துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது. திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான். “சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர். துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான். “யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான். தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள். “குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான். மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான். “நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான். குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை. திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள். களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான். “உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன். இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள். துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான். குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள். துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான் “விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான். “நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!” குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்” துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான். பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான். பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது. “தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான். “ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும். ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!” துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான். துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான். நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன, சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான். பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான். குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது. துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான். துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான். பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான். இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான். “கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான். துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான். துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர். ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான். மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான். “அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது. “நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான், தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா? சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான். சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான். சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான். துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது. பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது. துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான். “பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான். துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான். “அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?” “இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்” “ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?” “கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…” “அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!” துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை. “சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?” துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?” துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை. பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான். கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள். https://solvanam.com/2024/10/13/இங்கிவனை-யான்-பெறவே/1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 point1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
அண்ணன் மகள்... தங்கை மகன்...இரு வீட்டார் ஒப்புதலுடன் நடந்த காதல்...இடையில் பெண்ணின் தகப்பன்...ஒப்புதலில் மறுக்கவே..காதல்ர் கலங்கி ஆடிய நாடகம்..கடைசியில் கப்பம் கேட்டதாக நாடகம்...இதில் ஒரு விசயம் க்வனிக்க ..கூடுதல் செய்திகளில்..என்ன இனம் பெயர் வெளியிடப்படவில்லை...நாம இலங்கையில் சுத்தமான இனமுங்கோ1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமானின் கட்சி, "புத்திசாலிகளால் முட்டாப் பீசுகளுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சி" என்ற விம்பம் வலுவாக உருவாகி வருகிறது. "யாரும் பெரியார் நூல்களைப் பதிப்பிக்கலாம்" என்ற திறந்த பதிப்புரிமை இருக்கிறதாம். ஆனால், "பெரியாரின் வெளிப்படுத்தல்களை அரசுடைமையாக்கி வெளியிட்டால் தான் அதை ஏற்போம்!" என்று உடும்பாவனம் கார்த்திக் சொல்லியிருக்கிறாராம்😂. பிபிசி, விடுதலை பத்திரிகை மூலப் பிரதியை அப்படியே வெளியிட்ட பின்னரும், சீமானின் பொய்யை முரட்டு முட்டுக் கொடுத்து தாங்கும் வேலையைச் செய்வோர், 'தமிழ் மொழிக் காதலர்கள்" என்று நம்ப முடியவில்லை!1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
முல்லைத்தீவில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு! தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்று முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாளுக்கான இந்த உதவி 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பார்த்தீபனின் ஒழுங்குபடுத்தலில் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சனால் முன்பள்ளி ஆசிரியர்கள், மாவீரரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பத்திற்கு இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/14162141 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சாப்பிட்டபின் வயிற்றை தடவினால் வயிறு பெருக்கும்😂 பெண்கள் பச்சையாக அரிசி சாப்பிட்டால் கல்யாண தினமன்று நல்ல அடை மழை பொழியும் (எந்த மழை😂)1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- இந்தியாவின் ரோ ஒற்று சேவையைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ
200... ரோ ஒற்றர்கள்... யாழ்ப்பாண இந்திய தூதரகத்திலும், மிகுதி 200 கொழும்பு இந்திய தூதரகத்திலும் இருக்கின்றார்கள் என ஊர்க்கிழவி சொல்லுது. 😎 😂 🤣1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு. பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை. 😝😜😂😃🤣🤭😁☝1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது? ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்? வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.1 point- அநுர அரசாங்கத்தில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன!
நல்ல கட்டுரை ...என்ன கடைசில தமிழர் தரப்பில் பிழையை போட்டுவிட்டார்கள்...காலம் என்று ஒன்று இருக்கடா செல்லம் ...அது சில நன்மைகளை செய்யும் அதுவரை காத்திருக்கட்டும் தமிழினம்1 point- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இது தான் தூரப்பார்வை மற்றும் எதிரியை எதிர் கொள்ள களத்தை தயாராக்குதல் என்பது. சிங்களம் அதில் பல நூறு வருடங்களாக அனுபவம் கொண்டது. உதாரணமாக இனி மேல் நீதிமன்றத்தில் எதையாவது முயலலாம் என்ற நினைப்பு தமிழர்களுக்கு வருமா என்ன??1 point- சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
அரசியல்வாதிகளுக்கு லஞ்சம், கொமிஷன் என்று பணம் வரும் போது... தமது சட்டைப் பையை நிரப்பத்தத்தான் பார்ப்பார்கள். எல்லாம் மக்களின் வரிப்பணம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.1 point- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
1 point- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
👍.............. ரஷ்யாவின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துகின்றது. எங்களுக்கு உதவியாக வட கொரியாவில் இருந்து 11 ஆயிரம் வட கொரிய துருப்புகள் வந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன என்று ரஷ்யா சொன்னால் எவரும் எதுவும் செய்ய முடியாது................அது அவர்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்........... ஆனால் ரஷ்யா அப்படிச் சொல்லாது............... 'கெத்து' ஒன்று இருக்கின்றதல்லவா.............. இலங்கையிலிருந்து பிடித்து, உக்ரேன் எல்லைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கும் இலங்கை இளைஞர்களை, 500 அல்லது அதற்கு மேலே??, ரஷ்யா விடுதலை செய்து விடலாம்............. அந்த இலங்கைக் குடும்பங்கள் பாவம் தானே.......... பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே........... மற்றபடி, உலக ஒழுங்கில், உக்ரேன் மேற்கு நாடுகளின் ஒரு சின்னக் கருவியே. முடிவில் உக்ரேன் என்னவானாலும் எவரும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ரஷ்யாவை கொஞ்சமாவது பலவீனமாக்கினால் அதுவே அமெரிக்காவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் போதும்............ இவர்கள் அதற்காக செலவழிக்கும் தொகை அப்படி ஒன்றும் பெரிது கூட இல்லை.............. பொல்லாத உலகமும், பொல்லாத மனிதர்களும்...............1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம். சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 2) மத வெறியர்கள் இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள்1 point- தேவையானவை
1 pointநல்லவேளை! தக்க சமயத்தில் ஓடி வந்து நினைவூட்டியிருக்கிறார். இல்லையேன்றால் இந்த கலேபரத்தில் நிரந்தரமாகவே மறந்திருப்பியள் அவரை. பாவம், அப்பாவி மனுசி போல. அதுதான் அவ்வளவு இலகுவாக மறந்து விட்டார். இல்லையென்றால்; செய்தி கேட்ட உடனேயே, வேக வேகமாக எடுத்ததும் எடுக்காததுமாக ஓடி மறைந்திருப்பார்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த, தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
கடவுள் கைவிடமாட்டார்...நம்பிக்கையுடன் இருங்கள்..1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
எம்.ஜி.ஆரின் சமாதிக்குள் இருந்து, மணிக்கூடு "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக... இன்றும் ஒரு நம்பிக்கை உள்ளது ரசோதரன். 😂 ####### ########### ##### எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-11369511 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, 55,000 வீடுகள் கட்டித் தரப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பை... மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட மூவர் இராமேஸ்வரத்தில் கைது.1 point - மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.