Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19122
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7048
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/20/25 in all areas

  1. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி @suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா @நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan கைபேசியில் இருந்து த‌மிழ் சிறி அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ந்த‌ப்பு அண்ணா இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு............... ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாரு அழையுங்கோ🙏👍...........................
  2. 2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். 2020 ஓய்வெடுத்த பின்பு பயணம் செய்யத் தொடங்கி இப்போது கடந்த 2-3 வருடங்களாக குறைந்தது வருடத்துக்கு 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்ளுகிறேன்.முதலில் மகளின் American Express Platinum Card காட்டில் இருந்து Additional Card எடுத்து தந்தார்.பயணம் செய்யும் போது கூடுதலான விமானநிலையங்களில் Airport Lounge இருக்கிறது.அங்கு இலவசமாக சாப்பிடலாம் குடிக்கலாம் (நான் குடிப்பதில்லை)பொழுதை கழிக்க நல்லதொரு இடம். American Express Platinum Card க்கு கூடுதலான பணம் என்று Capital One Venture X இல் இப்போ எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு வருடாவருடம் 400 டாலர்கள் சந்தாவாக கட்ட வேண்டும். ஆனால் விமான ரிக்கட் 300 க்கு மேல் எடுத்தால் வருடம் ஒருதடவை அதைக்கழித்து விடுவார்கள். இதைவிட வேறுவேறு வழிகளிலும் நிறைய சலுகைகள் தருவார்கள்.நாங்கள் கட்டும் பணத்துக்கு அதிகமாக சலுகைகளை அனுபவிக்கலாம். இந்தக் காட்டை எடுத்தவுடன் Priority Pass காட்டுக்கு கோல்பண்ணினால் அந்தக் காட்டை வைத்து ஒரே நேரத்தில் 3 பேர் Airport Lounge க்குப் போகலாம். இலங்கையிலும் Airport Lounge இருக்கிறது.சிறியதாக இருந்தாலும் தரமாக இருந்தது. கடைசியாக இலங்கையில் இருந்து வரும்போது துருக்கியில் 10 மணிநேரம் இடைத்தங்கல்.எப்படித் தான் நேரம்போகப் போகுதோ என்று போனால் நல்ல சாப்பாடுகள் பழச்சாறுகள் என்று மாறிமாறி பசிக்கும் போது சாப்பிட்டோம். அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இன்னும் ஒரு சலுகை இருக்கிறது. இலவசமாக Global Entry க்கு விண்ணப்பிக்கலாம். இது இருந்தால் அமெரிக்காவில் எந்த விமானநிலையத்திலும் TsaPre என்ற விசேடமாக உள்ள இடத்தால் உள்நுழையலாம். சப்பாத்து கழட்டத் தேவையில்லை கணனி எடுக்கத் தேவையில்லை. சர்வதேச பயணம் முடிந்து உள்நுழையும் போது பிரத்தியேகமாக உள்ள இடத்தில் பல கணனிகள் இருக்கும்.ஏதாவது ஒரு கணனியில் முகத்தைக் காட்டினால் Proceed என்று அறிவுறுத்தும்.குடிவரவு உத்தியோகத்தரிடம் போனால் கிட்ட போகும்போதே போகச் சொல்லி கையைக் காட்டுவார். இத்தனையும் 2-3 நிமிடங்களில் முடிந்துவிடும். இதுபற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.நான் சொல்லி இங்கு பலர் எடுத்து அனுபவிக்கிறார்கள்.பலரும் வருடாவருடம் பயணம் செய்பவர்கள் இருந்தால் இப்படியான சலுகைகளை உங்கள் நாடுகளில் ஈருந்தால் நீங்களும் அனுபவிக்கலாம். நன்றி.
  3. சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திகள், விடயங்கள் அலசப் படுவது தவிர்க்க முடியாதது! வைரவன் போலித் துவாரகா விடயத்தையும் இங்கே இணைத்து வாசகர்களுக்குத் தெளிவூட்டிய ஒருவர் என்பதை மறக்கக் கூடாது: Don't shoot the messenger!
  4. செந்தமிழன் சீமான் அண்ணா தன் சொந்த தாயையே கெட்ட வார்த்தையில் திட்டுவாராம் என்று கொளத்தூர் மணி தன் பேட்டி ஒன்றில் கூறுகின்றார்! செந்தமிழன் அண்ணா ஒரு நாறவாயன் என்று அவரது உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் சான்று பகருகின்றன!
  5. இது பைரவன்-விசுகு சண்டைக்கான பழி தீர்த்தல் இல்லைதானே அண்ணை. அந்தாள் போலி-துவாரகா நேரம் முதலில் திறந்த மனதுடன் அணுகுவோம் என சொன்னதுக்காக என்னையும் போட்டு வாங்கினவர். ஆனால் செக்ஸ் சைக்கோ சீமான் பற்றி அவர் எப்போதும் சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். இங்கே சீமான் பற்றி பல விடயங்களை இணைத்தும் உள்ளார். இதில் அவதானமாக இருக்க எதுவும் இருப்பதாக எனக்கு படவில்லை.
  6. நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள்
  8. எனக்கு இது நல்லா பிடிச்சிருக்கு............... எவ்வளவு பணிவு, அடக்கம்...............
  9. காலத்திற்குக் காலம் மக்களிடையே இருக்கும் மருத்துவ, விஞ்ஞான அறிவின்மையையும், குழப்பங்களையும் மூலதனமாக வைத்து சில கம்பனிகள் உருவாகும். Venture capitalists எனப்படும் பண முதலைகளிடமிருந்து முதலீட்டைப் பெற்று சில போலி விஞ்ஞான செயல்பாடுகளைச் செய்து போக்குக் காட்டிய பின்னர், கம்பனியை நல்ல விலைக்கு விற்று விட்டு, அடுத்த கோல்மால் வேலைக்குப் போய் விடுவர்😎. "உலக அழிவு - Armageddon வரப் போகிறது" என்று பயத்தை ஊட்டி, தப்பி வாழக் கூடிய நிலக்கீழ் வீடுகளைக் கட்டி விற்கும் கம்பனிகள் இன்றும் அமெரிக்காவில் இருக்கின்றன. கோடீஸ்வரர்கள் இந்த நிலக்கீழ் மாளிகைகளை வாங்கி விட்டிருக்கிறார்கள். அதே போன்ற ஒரு கோல்மால் தான் இந்த உயிர் மீட்கும் கம்பனியும். "இது வேலை செய்யாது" என்பதற்கான காரணங்கள் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கின்றன: மூளையை ஒருவர் இறக்கும் இறுதிக் கணத்தில் காப்பாற்றினாலும், அதை மீளச் செயல்படும் வகையில் உயிர்ப்பிப்பது இயலாத காரியம் - உயிரியல் ரீதியில் சாத்தியமற்றது. கீழே இணைப்பில் உள்ள படி, இறந்த பன்றிகளின் மூளையை உடனடியாக உயிர்ப்பிக்கும் ஒரு ஆய்வை பொஸ்ரனில் செய்திருக்கிறார்கள். https://www.bu.edu/articles/2019/did-researchers-bring-dead-pigs-back-to-life/ மூளையின் கலங்கள் சில கலத் தொழிற்பாடுகளை (cellular functions) மீளப் பெற்றன. ஆனால், நினைவாற்றல், சிந்தனையாற்றல், உணரும் ஆற்றல் போன்ற சிக்கலான மூளைத் தொழிற்பாடுகளை மீளப் பெற்றதற்கான அறிகுறிகள் இல்லை. உடனடியாக மீட்டாலே இது கிடைக்கவில்லையானால், வருடக் கணக்காக உறை நிலையில் வைத்த பின்னர் என்ன மூளை மீட்சியை எதிர்பார்க்க முடியும்?
  10. மேலே தெளிவாக சொல்லி உள்ளேனே எ.பொ.த. காசா, மேற்குகரை, கிழக்கு ஜேருசலேம் என்பன இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள் என்பதுதான் உலகத்தின், சர்வதேச சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் இதில் காசாவை பலவருடமாக, ஆக் 2023 வரை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவில்லை. மேற்குகரையில் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. கிழக்கு ஜெருசலேமை முழுவதும் ஆக்கிரமித்து, ஒன்று பட்ட ஜெருசலேம் தம் தலைநகர் என்கிறது. ஜெருசலம் சிக்கலான விடயம். ஆனால் ஏனைய பகுதிகள் ஒரு பலஸ்தீன நாடு உருவாக்கும் போது அதன் பகுதிகளாக வேண்டியன. இதை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதும், குடியேற்றுவதும் அடாத்து. ஆனால் அதேபோல் இஸ்ரேல் என்பது இருக்கவே கூடாது என ஹமாஸ் சொல்லுவதும் நில அபகரிப்புத்தான். இதத்தான் வாலி கூறினார். பிகு கோலான் குன்றுகள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியமானவை, அதில் இருந்து இஸ்ரேலை தெளிவாக நோட்டம் விடலாம். இஸ்ரேலை வழித்தொழிப்போம் என சொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவின் கையில் இப்படியான இடங்கள் விழக்கூடாது என்பது இஸ்ரேலின் வாதம்.
  11. எனக்கு ஒரு விபரீத ஆசை. இப்படி நடக்ககூடாது, ஆனால் ஒரு சிலருக்கு தாம் கொப்பில் இருந்து மரத்தை வெட்டியதன் பலனை பார்த்து…கோஷான் ராசா நீங்கள் சொன்னது சரிதான் அப்பு என ஏற்கும் ஒரு நிலை வரவேண்டும் என என் மனது சில சமயம் விபரீதமாக சிந்திப்பதுண்டு. அது இதுதான். AfD ஆட்சிக்கு வரவேண்டும். ஜேர்மனியை ஈயுவில், ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் இருந்து AfD விலக்க வேண்டும். AKD ஆட்சிமாற்றம் அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் திரும்பி விட்டது என அறிவித்து, ஜேர்மனியில் இருந்து மீள வருவோர் அனைவருக்கும் இலங்கையில் நிபந்தனை அற்ற பொதுமன்னிப்பு என AfD, AkD ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் படி 1945 க்கு பின் ஜேர்மனி வந்த அனைவரும், அவர்களின் வம்சாவழியினரும், ஜேர்மன் பாஸ்போர்ட் இருப்பினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட வேண்டும். ஜேர்மன் கலப்பின பிள்ளைகள் மட்டும் தங்கலாம். இலண்டன் லூட்டன் ஏர்போட்டில் சனம் அலை மோதும். அப்போ நான் அங்கே போய் I told you so என சொல்ல வேண்டும். இந்த விபரீத ஆசை நடக்கவே கூடாது. ஆனால் சிலசமயம் நடந்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றும். பிகு மேலே விபரித்த விடயம் அப்படி ஒண்டும் நடக்கவியலாத கற்பனை அல்ல. யூதருக்கு ஒரு final solution கொடுக்கபட்ட நாட்டில், அதே நிலை ஏனைய இனங்களுக்கு ஏற்படலாம். History doesn’t repeat itself but it often rhymes - Mark Twain -
  12. இத மாடுனு சொன்ன எரும மாடு கூட நம்பாது🤣|🙈பொங்கலில் நடந்த மொரட்டு காமெடி சம்பவங்கள்🔥|பொங்கல் கோலங்கள்
  13. யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.
  14. <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid02WcwAYA5cBNJWAj4DCFWjxJ5j9aYqNLq8vbzs7a17ihzTiuSZvuc57P78qHUdvAgUl%26id%3D100083192907322&show_text=true&width=500" width="500" height="0" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
  15. கொளத்தூர் மணி ஜயா மீது எனக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது எமது போராட்டம் மீது நீங்கள் செய்தவைக்கு.. உங்களுக்கும் சீமானுக்குமான சண்டை இருக்கட்டும்.. அது உங்கள் பிரச்சினை.. ஆனால் புலிகள் பின்நாட்களில் பாதுகாப்பு கருதி தலைவர் தங்குமிடங்களில் பின்னுக்கு ஸ்ரூடியோவில் இருப்பதுபோல் திரைச்சீலை கட்டித்தான் எடுப்பார்கள் எதிரிகளுக்கு அடையாளம் தெரியக்கூடாது இருக்குமிடத்தினது என்று.. உதாரணத்துக்கு ஒன்று..👇
  16. அனுர விசிறிகள் எதிர்பார்த்த மாற்றங்கள் இவைபோலும்... இன்னும் வரும். தமிழ்மொழிப் பிராந்தியங்களில் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுப்பதையே விரும்பாதவர்கள்தான் தமிழருக்குத் தீர்வுதரப்போகிறார்களாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. இவ‌ர்க‌ள் விளையாட‌ போகின‌ம் குருநாதா ரோகித் ச‌ர்மா ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் அவுஸ்ரேலியா தொட‌ரில் இவ‌ரின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்😁.................................. இவ‌ர்க‌ள் விளையாடும் அனைத்து விளையாட்டும் டுபாயில் ந‌ட‌த்த‌ ப‌டும் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் பாக்கிஸ்தான் மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்🙏👍...................................................... ம‌ன்னிக்க‌னும் பிரோ என்ர‌ கைபேசியில் இருந்து எல்லாருக்கும் அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருந்திச்சு அது தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவிட‌ன் சொன்னேன் எல்லாரையும் அழைக்க‌ சொல்லி👍........................
  18. தலிவா உன்ட சந்தேகமும் என்ட சந்தேகமும் ஒரே மாதிரி இருக்கு ...நானும் நீங்களும் நண்பேன்டா... ஒர் பெயர் மாற்றத்தை மாநகர சபைக்கு தெரியாமல் இந்தியா மாற்றுகிறது என்றால் சிறிலங்காவின் இறையாண்மை எங்கே போகின்றது ...யாழ்ப்பாணம் இந்தியாவின் யூனியன் டெரிட்டரியா...
  19. @வீரப் பையன்26வந்துட்டேன்💪✌️ ஏற்கனவே தூக்கிற்றாங்கள் அண்ணை! இலங்கை தகுதி பெறவில்லை. 8 அணிகள் பங்குபற்றுகின்றன. @தமிழ் சிறி அண்ணை வந்தால் தான் களைகட்டும், ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும்.
  20. 1988 இல் பிரபாகரன் இறந்தார் என்ற பத்திரிகை செய்தியை தலைவரே வாசிப்பது போல நக்கீரன் அட்டைபடம் போட்டது. பின்னாளில் அந்த படம் போலியானது என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என நம்பகமாக தெரிந்தபின், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் அப்படி செய்ததாக கோபால் ஒத்துக்கொண்டார். அதேபோல் ஒரு நல்லெண்ணத்தில்தான் சங்ககிரிராஜ்குமாரும் உதவியுள்ளார். இப்போதுதான் தான் பால் வார்த்தது பாம்புக்கு என்பது உறைத்துள்ளது.
  21. ம்ம்ம்…அவசரப்பட்உ. .முட்டு கொடுக்க முடியாதளவுக்கு சங்ககிரி ராஜ்குமார் வசம் ஏதோ இருக்க கூடும் என யோசிக்கிறீர்கள் போலும்🤣
  22. வேறு நாடுகளில் இன்னும் சிக்கல்............... அங்கே தேனீர், ரோல்ஸிற்கு கூட இலங்கை காசை எடுக்கமாட்டார்கள்....🤣. ** இலங்கைக்கு கீழே இருப்பவர்களும் இருப்பதால், இப்படியான நடைமுறை பல நாடுகளில் இருக்கக்கூடும்............ நான் எடுக்கவில்லை, அண்ணா. ஆனால் நண்பர் ஒருவர் எடுத்து வைத்திருக்கின்றார். அவருக்கு உதவுகின்றது என்கின்றார். LAX விமானநிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு வரிசை எப்போதும் நீண்டது, அத்துடன் கேள்விகளும் கொஞ்சம் கூடத்தான். ஆனால் எங்களுக்கு, குடிமக்களுக்கு, அப்படியில்லைத் தானே.......... அடிக்கடி வெளிநாடு போய் வருகின்றவர்களுக்கு உதவியாக இருக்கின்றது போல.
  23. ஜேர்மனிக்கு கூப்பிட்டு விடுங்கள்” எந்த வேலையும் செய்வார்கள் பட்டதாரிகள். என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள்
  24. தனியார் ஓய்வூதியம் இல்லாதது தான் உண்மையான பிரச்சினை. மற்றது அரச உத்தியோகம் எண்டால் வேலையால் இலகுவில்நிறுத்த முடியாது. ஒப்பீட்டளவில்நோகாமல்நொங்கு (நுங்கு) குடிக்கலாம்
  25. இல்லை. நீங்கள் 1967 borders ஐ சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த 1967 எல்லைகளோடு கூட இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இருக்க கூடாது என்பதே ஹமாசின் கொள்கை.
  26. வாடகைவாயன் செந்தமிழன் அண்ணா விடயம் புரியாமல் வாங்கின காசுக்கு அதிகமா பெரியாரைப் பற்றிக் கூவிவிட்டார். அடிபலமா இருக்குதுபோல!
  27. போலி துவாரகாவினதும் அருணா வினதும் எடுபிடியாக யாக யாழில் ஆதரவு தந்து அவர்களுக்கு முதுகு சொறிந்த தமிழ் தேசிய வியாபாரி நீங்கள் சீமான் எனும் தலைவரின் பெயரை பயன்படுத்தி தன் வயிற்றை வளர்க்கும் ஒரு பிறவிக்கு வக்காளத்து வாங்குவது ஒன்றும் ஆச்சரியமும் இல்லை அதிசயமும் இல்லை
  28. ஓம் நானேதான் எழுதியது. சிரியா விடுவிக்கபட முன்பே இதை எழுதினேன். ஆனால் இடையில் துருக்கி புகுந்தது எதிர்பாராத ட்விஸ்டு. உக்ரேன்-சிரியா டீல் தன்னை வெளியால் விட போகிறது என உணர்ந்த துருக்கி, முந்தி கொண்டது. நான் சொன்னபடி உக்ரேன்-சிரியா டீல் டிரம்ப்-புட்டின் இடையே நடந்து முடிந்திருப்பின், சிரியாவின் தலைமை வேறு ஆட்களிடம் போயிருக்கும்.
  29. ஜிங்சாங் போடாமலா அவர் ஒருமையில் எழுதியதைக் கடந்து வந்து இங்கே முரட்டு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் தாத்தா ஒன்றும் அப்பழுக்கில்லாத வெள்ளையுள்ளத்தினர் அல்ல! அவருக்கு சிங்சாங் போட நீங்கள் உட்பட பலர் இருப்பதால் அவர் ஒருமையில் எழுதினாலும் அவரை யாரும் ஒன்றும் செய்யாமல் பாதுகாப்பு இருக்கிறது. சாதாரணமாக இப்படி ஆதரவு கிடைப்போர், காலப் போக்கில் அதை உணர்ந்து திருந்துவர், இவரிடம் அந்த வாய்ப்புகள் இல்லை. எனவே, நேர்மையாக நடந்த விடயங்களை அவரிடம் போன் போட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள்! *****
  30. இதில் வெறிக்கதை ஏதும் இல்லை. நடக்ககூடியதைதான் எழுதுகிறேன். சில நேரம் சொறிக்கதை என்பதை வெறிக்கதை என பிழையாக எழுதி விட்டீர்களோ🤣. ——- நான் மட்டற்ற குடிவரவின் ஆதரவாளன் அல்ல. அதே போல் குற்ற செயல்களின் ஆதரவாளனும் அல்ல. ஆனால் குடியேறிகள் அதிகம் வராத காலத்தில் கூட இந்த அமைப்பின் முன்னோடிகள் இதே கொள்கையுடந்தான் இருந்தார்கள் இல்லையா? இவர்களுக்கு இனவாதம் ரத்தத்தில் ஊறியது. அண்மைய குடிவரவு அதிகரிப்பு ஒரு நல்ல ஊன்றுகோல். அவ்வளவே. ஏதோ நேற்று வரை ஜேசு, புத்தர் போல் இருந்தவர்கள், கடந்த 10 வருடத்தில் இனவாதிகளாகி இந்த கட்சி பலமானது என்பது போல் நீங்கள் எழுதுகிறீர்கள். அது மட்டும் அல்ல, புட்டினும், ஏர்டோகனும், அசாத்தும் குடிவரவை ஒரு ஆயுதமாக பாவித்தமை கூட நீங்கள் அறியாததல்லவே? குற்ற செயல்கள் எவர் செய்தாலும் தண்டிக்கபடவேண்டும். உள்ளூர்வாசி செய்தால் ஓக்கே, பழைய குடியேறி செய்தால் பாதி ஓக்கே, அண்மைய குடியேறி செய்தால் பிழை என்பதல்லவே. அப்படி நடந்தாலும் அது எம்போன்றோருக்கு ஒரு pyrrhic victory ஆகவே அமையும்.
  31. 80 களிலேயே தமிழ் நாட்டில் திரிந்த பிரபாகரனை, 90 களில் நெடுமாறன் வந்து சந்தித்த பிரபாகரனை , அவர் இல்லாத 2010 இல் சீமான் தமிழ் நாடில் பிரபலமாக்கினார் என்ற சின்னத்திரை கதையை நீங்கள் நம்பலாம்! ஏனையோர் இதைப் பார்த்து சிரித்துக் கடப்பர்! ஆனா, நீங்கள் நம்புங்கள், தம்பி! வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்பவரல்ல நீங்கள்😎!
  32. கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂
  33. இணைப்புக்கு நன்றி. இது பேசாப்பொருளல்ல. 'நலமோடு நாம் வாழ' பகுதியில் போடலாம். இது பெருகிவரும் பிரச்சினையாக உள்ளது. பெற்றோர், குறிப்பாக இளம் தாய்மாரது நிலை சிக்கலானது. தனிக்குடித்தனம். இருவரும் வேலை. பிள்ளைகளைக் கவனிப்பதைவிட சமூக ஊடககங்களோடு செலவிடும் நேரம் என ஒரு நெருடலான சூழலில் பெண் பிள்ளைகள் வளரும் நிலையை அவதானிக்க முடிகிறது. இது விழிப்பூட்டலுக்கான கட்டுரையாக உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  34. நன்று. நடப்பவை நல்லவையாக நடந்தால் நன்மையே. ஆனால், எப்படி இவளவு உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஆயுதமற்ற தமிழர்களோடு ஒரு சத்தமற்ற இன அழிப்பை சிறிலங்கா தொடர்கிறது. தமிழர் பிரதேசங்கள் ஊடறுக்ப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் சூழலில் அரசுதான் புதிதே தவிர அதனது இனவாதமுகம் புதிதல்லவே. அவர்கள் 13ஐயே ஒழித்தக்கட்டும் திட்டத்தோடு, நீங்களோ இப்படிக் கூறுகின்றீர்கள். யார் குத்தியாவது அரிசியானால் சரி. ஆனால், உமியைத் தந்துவிட்டு அரிசையைக் கொடுத்தோம் என்று சிங்களத்தோடு சேர்ந்து உலகு சொல்லாதவரை நன்மையே. ஏதோ சட்டுபுட்டெண்டு முடிந்தால் AfD காரன் அனுப்பமுதல் ஊருக்குக் கிளம்பிவிடலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  35. விதை போட்டது பைடன். பழம் சாப்பிடுறது ரம்ப். அப்புறம் நாளைக்கு நம்ம ரம்ப குறை சொல்லப்படாது.😎
  36. இது ஜேர்மன் மொழியில் இருக்கின்றது. இதன் திட்டவரைவுகளின் படி ஒரு கிழமையில் நிவாரண உதவிகள் தொடக்கம் அதில் இருந்து கைதிகள் தொடராக விடுவிப்பும் இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா நிலப்பரப்பிலிருந்து விலகல்களும் 5 வருட திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  37. இந்தியாவில் தற்போது மோடி ஆட்சி இருப்பதால் எதுவுமே சொல்ல முடியாது.ஆனால் அனுரவிற்கு தாரை தம்பட்ட வரவேற்பு இருக்காது எண்டு இப்பவே அடிச்சு சொல்லுறன்.😃
  38. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣 அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப அந்த நல்லநாள் பெருநாள்ள சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎
  39. நீங்கள் சொல்வது மிக சரியானதே. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்.
  40. யாழ் கள உறவுகளே... வணக்கம் இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுவதற்கும் மட்டுமே. எனவே அவதானமாக இருங்கள். நன்றி. (யாழ் களத்தின் நிர்வாகத்திற்கு இது தொடர்ந்து இங்கே நடப்பது தெரிந்திருந்தும்????)
  41. இதுக்கு நான் கன டாக்கரன் சப்போட்டு..ஒரே நாட்டுக்காரர் ஆகிடுவோமில்ல. இது காணாவிட்டால்.. வடக்கையும் சேர்த்து எடுங்கோ....என்னைவிட்டால் காணும் என்றூ..எழும்பி ஓடி வந்திடுவார்...🤣
  42. வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான்.
  43. அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் .... வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?
  44. விருந்துக்கு அழைக்கும் பொழுது கொஞ்சம் பிந்தி கடைசி ஆளாகப் போனால்த் தான் எல்லோருக்கும் முன் நாம் தனியாகத் தெரிவோம், கொஞ்சம் பெரிய ஆள் மரியாதை கிடைக்கும். முகத்தை தொடர்ச்சியாக காட்டிக்கொண்டே இருந்தால் அல்லது எப்பொழுதும் வெளியே சீமான் போல் வறட்டுத் தொண்டையால் கத்திப் பேசிக்கொண்டே இருந்தால் எதிர்பார்ப்பு தானாகக் குறைந்து விடும், you tubers, meams போடுவோர் இவரை இப்பொழுதே கீழ் இழுத்து விடுவார்கள். 2026 தேர்தல் சமயத்தில் வெளியே எல்லோரும் வரும்பொழுது மட்டும் இவரும் வரும்பொழுது தான் எதிர்பார்ப்பு இவர் மீது அதிகரிக்கும். வேட்டை ஆரம்பிக்கும் பொழுது தான் புலிக்கு மரியாதை.
  45. நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் முன் வைத்தது. அதைப் பரிசோதித்துப் பார்த்த போது நாய்க்குட்டியின் இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தோம். நாங்கள் அதற்குத் தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றி இருக்கிறோம். தனது குட்டிகளுக்கு ஊட்டுவதற்கு தாய் நாயின் பால் போதாது. அது பலவீனமடைந்திருக்கிறது. தற்போது அந்த நாயின் இரு குட்டிகளுக்கும் மருத்துவ உதவி கொடுத்து பராமரிக்கின்றோம்” என்று கால்நடை மருத்துவரான Baturalp Oghan துருக்கிய ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். https://www.instagram.com/omotolanky/reel/DE5luBbRgHQ/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.